நேற்று ஒரு முக்கியமான உரையாடல் :

அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று என்னை கேலி செய்தார்.

அவருக்கு தெரிந்த வேறொரு ஆண் மனநலமருத்துவரை பற்றி சொன்னார், “அவரு ஹிந்துத்வாவை ஆதரிக்கிறாரு. முஸ்லிம் நடத்துற கடையில நாம சாப்பிடக்கூடாதுனு சொல்லுறாரு. நீங்களும் தான் சைக்கியாறிஸ்ட், நீங்க முஸ்லிம்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க…. ஒண்ணும் புரியல!” என்றார்.

மனநல மருத்துவர் ஷாலினி

நான் சொன்னேன், “1925-ல் இரண்டு பெரிய இயக்கங்கள் உருவாயின. ஒன்று ஒரு டாக்டர் உருவாக்கியது. சாதா டாக்டர் இல்லை, பிரிட்டிஷ் முறைப்படி படித்து இங்கிலிஷ் மெடிசன் பட்டம் வாங்கிய டாக்டர் ஆரம்பித்த இயக்கம் ஒன்று. அதிகம் படிக்காத ஒரு சாமானியன் ஆரம்பித்த இயக்கம் இன்றொன்று.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், இந்து ராஜியம், இந்து மேலாதிக்கம் பேசியது.
பாமரன் ஆரம்பித்த இயக்கம், “அறிவு விடுதலையே எங்கள் குறிக்கோள்” என்றது.

இதற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் அம்மா ஒரு பக்தி பழம். எங்கள் வீட்டில் அரசியல், சமூகம் மாதிரி பெரிதா யாரும் பேசியதில்லை. ஒரு கிளீன் ஸ்லேட் மனதுடன் இருக்கும் எனக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள்:

1) டாக்டர் ஆரம்பித்த இயக்கம், தொடந்து பரவி, பள்ளி பருவம் முதல் மாணவர்களை cultivate செய்து இயக்கத்திற்கு உட்படுத்தியது.
2) பாமரன் ஆரம்பித்த இயக்கம், யாரையும் இயக்க ரீதியாய் cultivate செய்யாமல் மானாவாரியாய் விட்டது.

படிக்க :
தன்னார்வ மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை !
♦ கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி

இந்த இரண்டில் நான் எதை தேர்வு செய்வது?

யார் ஆரம்பித்த இயக்கம் என்பதை விட, ஒரு பெண்ணாய் எனக்கு எது survivalளுக்கு fit-டான இயக்கம் என்று நான் கூட்டி கழித்து பார்க்கிறேன்.

டாக்டர் ஆரம்பித்த இயக்கம், மத அடிப்படைவாதம் பேசுகிறது.

 • இவர்கள் தான் பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்க வேண்டும் என்ற போது, எலி விநாயகரின் வாகனம், அதை கொல்லக்கூடாது என்று மருத்துவர்களை தடுத்து, சில மில்லியன் மனிதர்களை காவு கொடுத்தார்கள்!
 • இவர்கள் தான் சதி ஏறுவதை ஆதரித்தவர்கள்
 • இவர்கள் தான் பாலிய விவாக தடை சட்டத்தை எதிர்த்தவர்கள்
 • இவர்கள் தான் தேவதாசி முறையை ஆதரித்தார்கள்
 • இவர்கள் தான் பெண்ணின் சொத்துரிமையை எதிர்த்தவர்கள்
 • இவர்கள் தான் பெண்ணுக்கு வங்கி கணக்கு கூட இருக்க கூடாது என்றவர்கள்
 • இவர்கள் தான் ஆணுக்கு பெண் அடங்கி போவதே நம் தர்மம் என்றவர்கள்!!

இதற்கு நேரெதிராய் அந்த சாமானியன் ஆரம்பித்த இயக்கம், பெண்ணை ஒரு சரிநிகர் சமானமான பிரஜை என்கிறது. பெண்களுக்கான எல்லா உரிமைக்காகவும் போராடியது. விதவை மறுமணம், கல்வி உரிமை, சொத்துரிமை. பெண்களுக்கான கல்வி கூடம், அபலை இல்லம், அனாதை ஆசிரமம் என்று women friendly -யான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது….

இது இப்படி இருக்க, கொஞ்சமாவது அறிவிருக்கும் பெண் இந்த இரண்டு இயக்கத்தில் எதை தேர்வு செய்வாள்?

டாக்டர் ஹெக்டேவர் ஆரம்பித்த பிற்போக்கான ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்ணடிமை அமைப்பா?

அல்லது பெரியார் எனும் பெண்ணியவாதி ஆரம்பித்த முற்போக்கான சுயமரியாதை அமைப்பா?”

நான் இவ்வளவு பேசியதும் அந்த லேடி எழுந்து என் கையை குலுக்கி, “இதை பத்தி இனிமே நானும் பேசுறேன்” என்றார்….

அது!!!

நன்றி : ஃபேஸ்புக்கில் மனநல மருத்துவர் ஷாலினி

18 மறுமொழிகள்

 1. ஈவேராவுக்கு கொஞ்சமாவுது சுயமரியாதை என்ற ஒன்று இருந்திருந்தால் அடிமை சிந்தனையோடு ஆங்கிலேயனுக்கு கைக்கூலியாக இருந்திருக்க மாட்டார்.

  பெரியார் என்ற பெயருக்கு தகுதியிள்ளவர் ஈவேரா

  • பெரியார் என்ற பெயருக்கு தகுதியுள்ளவர் தான் ராமசாமி. உனது புழுகு மூட்டைகளால் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது. தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி மூச்சு உள்ள வரை போராடியவர். உனது சவர்க்கர் போல வெள்ளையனுக்கு தெண்டனிட்டு, அவன் தொடர்ந்து ஆள மத ரீதியாக மக்களை மோதவிட்டவர் அல்ல பெரியார்.

  • ஆங்கிலேயரின் ஆட்சியில் தான் பாப்பான் அல்லாதவருக்கும் கல்வியும் மரியாதையும் கிடைத்தது அதனால் ஆங்கிலேயன் இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவை ஆண்டாள் பாப்பான் அல்லாத மக்களும் தன்னிறைவு அடைவார்கள் என்றுதான் பெரியார் சொன்னார் , இதை தவறு என்று சொல்பவர்கள் ஒட்டுமொத்த இந்திய பூர்வகுடிகள் எதிரி மட்டுமல்ல பாப்பானின் காலை கழுவிக்குடிக்கும் சுயமரியாதை அற்றவர்கள்

   • ஈவேராவை போல் அடிமை சிந்தனை உங்களிடம் ஊறி இருக்கிறது, உங்களின் இந்த அடிமை சிந்தனையை மாற்ற முடியாது.

 2. பெண்ணிற்கு குடும்பம் ஒரு அடிமைத்தனம், பெண்ணிற்கு கற்பு எதற்கு, பெண்ணிற்கு குழைந்தைகள் எதற்கு… கள்ளக்காதல் அடுத்தவன் மனைவியை தூக்கி செல்லுதல் சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன வக்கிர மனம் படைத்த ஈவேரா கொள்கைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

  • பெண்களை குடும்பம் என்று வட்டத்துக்குள் அடிமைப்படுத்த வேண்டாம் என்றுதான் பெரியார் சொன்னார் , மற்ற கதைகள் பொய் , ஆனால் இன்று உச்ச நீதி மன்றமே அதை ஆதரிக்காது

 3. பெரியார் ஆங்கிலக்கல்வி எல்லாம் படிக்காதவர். அதனால் அவருடைய அணுகுமுறை கரடுமுரடாக இருந்தது. மற்றபடி அவர் தனது மனசாட்சிப்படி நடந்துகொண்டார். மேற்கத்திய உலகில் பல நல்ல விடயங்கள், அறிவியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் அவற்றை முன்னுதாரணமாக கொண்டார். அதில் தவறில்லை. அம்பேத்கர் மாதிரி வெளிநாடு எல்லாம் போய் ஆங்கிலத்தில் உயர்கல்வி எல்லாம் பெற்றிருந்தால் ஒருவேளை கரடுமுரடாக பேசாமல் sophisticated அணுகுமுறையை பெரியார் மேற்கொண்டு இருப்பார். பெரியாரை ஆங்கில கைக்கூலி என்று சொல்லக் கூடியவர்கள் அனைவரும் ஐஐடி போன்ற இந்திய மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் நிறுவனங்களில் படித்துவிட்டு வெளிநாடு போய் வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து சலாம் போட்டு சம்பளம் வாங்குபவர்கள்.

  • ஏன் சார் ஈவேரா அடிமையை போலவே சிந்திக்கிறீர்கள்… வெளிநாடுக்கு சென்று படித்தால் தானா எங்களுக்கு நாகரிகம் வரும் ? இப்படி ஒரு வார்த்தையை சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

   உலகத்திலேயே முதல் பல்கலைக்கழகம் எங்கள் நாட்டின் நாளந்தா பல்கலைக்கழகம்.
   காஞ்சி பல்கலைக்கழகத்தில் படிக்க சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து எல்லாம் வந்து கல்வி கற்று சென்றார்கள்.

   உலகத்திற்கு கல்வி மருத்துவம் ஆன்மிகத்தை கொடுத்த நாடு எங்கள் நாடு.

   ஈவேராவை போல் மூட ஆங்கிலேய நம்பிக்கையில் வாழாதீர்கள்.

   • இதைப் பற்றிப் பேச. என்ன அருகதை இருக்கிறது உங்களுக்கு? ஒரு புத்த பிட்சுவின் தலைஉஐக் கொண்டு வந்தால் ஒரு தங்கக் காசு இனாம் என்று சொல்லி புத்த பிட்சுகளைப் படுகொலைகள் செய்து, புத்த மதத்தையே அது தோன்றிய மண்ணிலிருந்து மொத்தமாக, முற்றிலுமாக அழித்தொழித்து விட்டு, அவர்கள் உருவாக்கிய பழ்கலைக் கழகங்களைப் பற்றி சொந்தம் கொண்டாட பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு இருக்கும் கூச்ச நாச்சச்சமற்ற இந்தத் துனிச்சல் வேறு யாருக்கும் இருக்காது. இன்றைக்கும் நாகமலையின் உச்சியில் உள்ள. கழு மரம், அனல் வாதம், புனல் வாதம் என்ற மோசடி மூலம் மூவாயிரம் சமனர்களைக் கழுவில் ஏற்றி, உடலை இரு கூறாக்கி செய்த படுகொலைகளின் சாட்சியமாய் நிற்கிறது.

    • உங்களை போன்ற கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தை பற்றி தவறான கருத்துக்களையே பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

     வந்தேறி கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்கள் வருவதற்கு முன் இந்தியாவில் மதம் அடிப்படையில் ஒரே ஒரு போர் நடந்ததாக சொல்லுங்கள் பார்ப்போம்… சவாலாகவே சொல்கிறேன் சைவ மதத்தை பரப்ப அல்லது வைணவ மதத்தை பரப்ப நடந்த போர் என்று ஒரே ஒரு போரை சொல்லுங்கள் பார்ப்போம்.

     இங்கே மதங்கள் கத்தி முனையில் மாற்றப்படவில்லை… சைவ மதமாக இருந்தாலும் வைணவ மதமாக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஒருவர் ஊர் முன்னணியிலோ அல்லது அரசர் முன்னணியிலோ வாதங்கள் மூலம் தான் தங்களின் மதங்களை பற்றிய பெருமைகளை பரப்பினார்கள், வாதத்தில் வெற்றி பெற்றவர் மதத்திற்கு தோல்வி அடைந்தவர்கள் மாறினார்கள், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நேர்மையும் இங்கே இருந்தவர்களிடம் இருந்தது… ஆதற்கு ஆதி சங்கரர் முதல் ஸ்ரீ ராகவேந்திரர் வரையில் பல ஆதாரங்கள் உள்ளது.

     இந்த நாட்டில் விவாதத்தில் உயிரை பணயமாக வைத்தவர்கள் சமணர்கள், தாங்கள் விவாதத்தில் தோல்வி அடைந்தால் தங்களின் உயிரை விடுகிறோம் என்று சவால் விட்டு விவாதங்களில் கலந்துகொள்வார்கள்.

     இப்படிப்பட்ட உட்சபட்ச நாகரிகம் எங்கள் நாட்டில் இருந்ததால் தான் ஈவேரா போன்ற ஆங்கில அடிமைகள் எங்கள் ஹிந்து கடவுளை இழிவு செய்த போதும், பெருவாரியான ஹிந்து மக்கள் அமைதி காத்தார்கள்.

     இதே ஈவேரா இஸ்லாமிய கடவுளை பற்றி இதே போல் இழிவு செய்து பாக்கிஸ்தான் ஊர்வலம் கூட போக வேண்டாம், சும்மா பேசினாலே போதும், ஈவேராவிற்கு என்ன நடந்து இருக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

     முதலில் எங்கள் நாட்டின் வரலாறு பற்றி அதன் பெருமைகளை பற்றியும் தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.

 4. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியா கல்வியில் கலைகளில் தலை சிறந்து இருந்தது உலகின் மற்ற பகுதிகளில் இருந்து எல்லாம் இங்கே வந்து கல்வி கற்றனர் எல்லாம் சரி ஆனால் கடந்த இருநூறு முன்னூறு வருடங்களில் மேற்கத்திய நாடுகள் கல்வியிலும் சமூக முன்னேற்றத்திலும் அறிவியல் வளர்ச்சியிலும் எல்லோரையும்விட முன்னேறி விட்டனர் இன்றைக்கு அவர்களைப் பின்பற்றுவது தான் முறை அதைத்தான் பெரியார் செய்தார் என்னுடைய முப்பாட்டன் யானைமேல் பந்தாவாக போனார் உலகிலுள்ள மற்றவர்களெல்லாம் கால்நடையாக தான் போனார்கள் என்பது அந்த காலத்துக்கு சரியானதாக இருக்கலாம் ஆனால் இன்றைக்கு மற்றவர்கள் ஜெட் விமானத்தில் பறக்கும்போது என் தாத்தா போல் யானை மேல் தான் நான் பயணம் செய்வேன் அதுதான் பாரம்பரியம் என்றால் அது மூடத்தனம் பெரியார் என்றைக்கும் தன் மனசாட்சிப்படி நடந்துகொண்டார் அவர் மிகுந்த பக்தி கொண்ட தெலுங்கு பின்னணி கொண்ட பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். யாருடைய பிச்சையும் அவருக்கு தேவையில்லை தன்னுடைய பிழைப்புக்காக யாருடைய காலை நக்கக்கூடிய நிலையும் அவருக்கு இல்லை இதை முதலில் புரிந்து கொள்ளவும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் உயிர் பிழைப்பதற்காக பிரிட்டிஷ்காரர்களின் காலை நக்கி கிடந்தவர்கள் யார் யாரைப்பற்றி பேசுவது என்பதே இன்றைய அரசியல் நிலையில் இல்லாமல் போய்விட்டது

  • RSS பற்றி அவ்வுளவாக எனக்கு தெரியாது அதே போல் நீங்கள் RSS இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தார்கள் என்று சொல்வதையும் என்னால் ஏற்க முடியவில்லை காரணம் உங்களை போன்றவர்கள் (வினவு கூட்டங்கள்) ஒரு வித வக்கிர மனநிலையில் இருந்து கொண்டு RSS மீது வெறுப்பை விதைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

   அதனால் உண்மை தெரியாமல் RSS தலைவர்களை பற்றி என்னால் கருத்து சொல்ல முடியவில்லை.

   ஆனால் இன்று RSS இந்தியாவின் ஒற்றுமை வலிமை மற்றும் கலாச்சாரத்தை பற்றி பேசுகிறது.

   வினவு போன்றவர்கள் இந்தியாவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதும் எல்லோருக்கும் தெரியும்.

   என் RSS அல்லது கம்யூனிஸ்ட்டா என்று கேட்டால் நான் RSS பக்கம் நிற்ப்பேன்.

   ஒரே காரணம் RSS எங்கள் நாட்டிற்காக எங்கள் நாட்டு மக்களுக்காக நிற்கும் இயக்கம், கம்யூனிஸ்ட்கள் மிக வெளிப்படையாகவே எங்கள் நாட்டின் எதிரிகளோடு கைகோர்த்து கொண்டு நிற்பவர்கள்.

   என்னால் எந்த சூழ்நிலையிலும் கம்யூனிஸ்ட்களை ஆதரிக்க முடியாது.

   • //ஆனால் இன்று RSS இந்தியாவின் ஒற்றுமை வலிமை மற்றும் கலாச்சாரத்தை பற்றி பேசுகிறது.

    Best comedy of this century. ROFL…

  • ஈவேரா என்றைக்குமே மனசாட்சிப்படி நடந்துகொள்ளவில்லை. அவர் மட்டும் அல்ல பல திராவிட அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒரு வித வக்கிர மனநிலையின் பிம்பம் தான் ஈவேரா

   மனசாட்சிப்படி நடந்து கொண்டு இருந்தால் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க சொல்லியிருப்பாரா ?

   மனசாட்சிப்படி நடந்து கொண்டு இருந்தால் ஆங்கில கலாச்சாரத்தில் மூட நம்பிக்கையில்லை தமிழ் வேண்டாம், தமிழ் கலாச்சாரம் வேண்டாம், ஆங்கிலம் படி என்று சொல்லியிருப்பாரா ?

   அமெரிக்காவில் நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருக்க முடியாது, அரசு பதவி ஏற்பதற்கு உங்களுக்கு கடவுள் (கிறிஸ்துவ) நம்பிக்கை உண்டு என்று உறுதி மொழி ஏற்க வேண்டும்.

   அமெரிக்காவில் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க பைபிள் டெஸ்ட் வைக்கிறார்கள்.

   ஈவேரா இந்த நாட்டின் பெருமைகளை இழிவு செய்து வெளிநாட்டு கலாச்சாரம் உயர்ந்தது என்ற மூட நம்பிக்கையில் வாழ்ந்து இருக்கிறார்.

  • என்ன தான் வினவு கூட்டங்கள் எங்கள் நாட்டிற்கு துரோகம் செய்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம் சொல்வேன், மீண்டும் எங்கள் நாடு உலகின் தலை சிறந்த நாடாக மாறும். அதை ஆயிரம் வினவு கூட்டங்கள் வந்தாலும் தடுக்க முடியாது.

 5. மணி சார் “வீர”த்துறவி உங்கள் சாவர்க்கர் போல் வெள்ளையனின் காலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் உயர்ந்த தகுதியை எல்லாம் பெரியார் எனும் சுயமரியாதைக்கிழவனிடம் எதிர் பார்த்தால் எப்படி?போங்க போங்க போயஸ் தோட்டத்துல குருமூர்த்தி போட்ட ரசினி எனும் கழுதை “விட்ட ” ஒன்று கெடக்குது..அதைப்போயி உசுப்பேத்திக்கிட்டே இருங்க…பாவம் சிங்கப்பூர் காரன் பொத்துனாப்ல அனுப்ச்சி வச்சிருக்கான்..அடி வாங்க “வச்சிருங்க”…கட்டாயம்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க