privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

உண்மையில் அமித் ஷா சொன்னதுபோல, அவர்கள் பொறுமை இழக்கவில்லை. மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை நரக வேதனையில் தள்ளிய அரசாங்கத்திடம்தான் பொறுமையோடு நடந்துகொண்டனர்.

-

சி.என்.என்-நியூஸ் 18 க்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெயர் தொழிலாளர்களின் பொறுமையின்மை குறித்து பேசினார். கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்த பின்னர், சிலர் “பொறுமையை இழந்து நடக்கத் தொடங்கினர்” என்று அவர் அந்தச் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

ஆனால் அரசாங்கம் இன்னும் விரைவாகச் சென்று, பேருந்துகள் மற்றும் ரயில்களில் வீட்டிற்கு செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு உதவியது எனவும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் அவை “ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு” மட்டுமே என அமைதியான வார்த்தைகள் மூலம் ஊரடங்கு காலத்தில் ஏழைகளின் நிலையில் அரசாங்கத்துக்கு இருந்த பரந்த அக்கறையை அமித் ஷா எடுத்துச் சொன்னார்.

ஆனால், அமித் ஷா, மத்திய அரசாங்கமும் கண்டுகொள்ள விருப்பாத உண்மை இருக்கிறதில்லையா?

முதலாவதாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொறுமையிழந்ததால் நடக்கவில்லை. அவர்கள் வேலையில்லாமல் இருந்ததால், அவர்கள் உண்ண உணவு இல்லை, வாடகை செலுத்த முடியவில்லை. பலர் தினசரி கூலித் தொழிலாளர்களாக இருந்தவர். அவர்கள் ஒரு நாளில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்ந்தார்கள். அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஒரு கணக்கெடுப்பின்படி, ஊரடங்கு காலத்தில் 80% நகர்ப்புற தொழிலாளர்கள் வேலை இழந்தனர், 61% நகர்ப்புற குடும்பங்கள் ஒரு வார மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களைகூட வாங்குவதற்கான வழி இல்லாத நிலையில் இருந்தனர்.

இரண்டாவதாக, பசி அதிகரித்தபோதும், உணவு மற்றும் வருமான ஆதரவை வழங்குவதற்கான அரசாங்க நடவடிக்கைகள் மிக மோசமான அளவில் குறைந்துவிட்டன. இடம்பெயர் தொழிலாளர்களின் அவலங்கள் பட்டவர்த்தனமாக வெளியே தெரிய ஆரம்பித்தபின், தற்போதுள்ள நலத்திட்டங்களுடன் சற்றே கூடுதலாக நிதி ஒதுக்கி, நிவாரண நடவடிக்கை என்ற பெயரில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஆயிரக்கணக்கானோர் பட்டினியால் தவித்துக்கொண்டிருக்க், தானியங்கள் அரசாங்க கிடங்குகளில் அழுகிக் கொண்டிருந்தன.

படிக்க:
♦ கோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன ? மருத்துவ நிபுணர்கள் அறிக்கை
♦ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !

மூன்றாவதாக, ஷ்ராமிக் ரயில்களையும் பேருந்துகளையும் தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் அனுமதித்தபோது, ஒரு இடத்தைப் பெறுவது ஒரு கொடுங்கனவாக அவர்களுக்கு இருந்தது. ரயில்களில் ஏற முடிந்தவர்கள் தங்களை நரக நிலையில் கண்டனர், தாமதமாக நாட்களில் உணவு மற்றும் தண்ணீர் குறைவாக இருந்தது. மே 9 முதல் மே 27 வரை, சிறப்பு ரயில்களில் கிட்டத்தட்ட 80 பேர் பட்டினி மற்றும் வெப்ப நோயால் இறந்ததாக ரயில்வே பாதுகாப்பு படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் ஏற்பாடு செய்யும் போக்குவரத்துக்காக காத்திருப்பதைக் காட்டிலும், பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு ஊர் திரும்பும் வாகனத்துக்கான வாடகைக்கு செலவழித்தனர்.

இறுதியாக, இடம்பெயர்ந்தோர் துன்பம் அமித் ஷா சொல்வது போல ஐந்தாறு நாட்களில் முடிந்துபோன விசயம் அல்ல. ஐந்து வாரங்களுக்கு, அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கிடையிலான பயணங்களையும் தடைசெய்தது. வீட்டிற்கு பலர் நடக்க முயன்றபோது போலீசு அடிதடிகளை எதிர்கொண்டனர். டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு இடையிலான மாநில எல்லையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பல தொழிலாளர்கள் அப்போதே வெளியேறவில்லை. சிலர் அரசாங்கத்தை நம்பி, பட்டினி கிடந்தனர். மற்றவர்கள் மே வரை காத்திருந்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும், அவர்களின் சேமிப்பு முடிந்ததும், அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தனர். மே மாதத்தில்தான் இடம்பெயர் தொழிலாளர்கள் வீட்டிற்கு நடந்து செல்லத் தொடங்கினர்.

கடந்த இரண்டரை மாதங்களாக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்க வேண்டிய அசாதாரண இழப்புகள் இருந்தபோதிலும், சில எதிர்ப்புக்கள் மட்டுமே அவர்கள் வெளிப்படுத்தினர். தொற்றுநோயியல் வல்லுநர்கள் கூட “கடுமையான” மற்றும் “பொருத்தமற்றது” என்று கருதும் ஒரு ஊரடங்கின் தர்க்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒரு வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கான விலையை அவர்கள் அமைதியாக செலுத்தினர், அது ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. உண்மையில் அமித் ஷா சொன்னதுபோல, அவர்கள் பொறுமை இழக்கவில்லை. மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை நரக வேதனையில் தள்ளிய அரசாங்கத்திடம்தான் பொறுமையோடு நடந்துகொண்டனர்.

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட 45 நாட்களுக்கும் மேலாக, ‘காணாமல் போயிருந்த’ உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போது மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, ஊடகங்களிடம் தலைகாட்டி வருகிறார். மக்கள் அவலங்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது காணாமல் போய்விடும் அவர், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூக வல்லுநராக, இப்போது ஓட்டுக்கேட்க வந்துள்ளார். அதனால்தான் தாங்கள் தூங்கிய பொழுதுகளுக்கு எல்லாம் இவர்கள் விளக்கம் தர வேண்டியிருக்கிறது.

செய்திக்கட்டுரை: இப்சிதா சக்ரவர்த்தி
– கலைமதி
நன்றி : ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க