Thursday, May 1, 2025
முகப்புசெய்திஇந்தியாபுனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி

புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி

முஸ்லீம் மாணவரை தாக்கிய சங்கிக்கும்பல்  ”உனது சேர்க்கையை (Admission) ரத்து செய்துவிடு. அப்படி ரத்து செய்யவில்லை என்றால் உனது சடலத்தை உன் கிராமத்திற்கு  அனுப்பிவைப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்தது.

-

டந்த ஏப்ரல் 4 அன்று சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழக வளாகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் 19 வயது முஸ்லீம் மாணவர் ஒருவரை, ‘லவ் ஜிகாத்’ செய்ததாக கூறி ஏ.பி.வி.பி (ABVP) சங்கிக் கும்பல் தாக்கியது. அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியது.

’லவ் ஜிஹாத்’ என்பது  இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக சங்கிகள் கண்டறிந்த சதி கோட்பாடு.

பாதிக்கப்பட்ட மாணவர், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4)  அன்று தனது நண்பர்களுடன், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் அவர்களின் ஆதார் அட்டைகளைக் கேட்டு, தடுத்து நிறுத்தியுள்ளனர்.

”அவர்கள் எங்களது ஆதார் அட்டைகளைப் பார்த்த பிறகு, லவ் ஜிகாத் செய்வதாகக் கூறி என்னை தாக்கத் தொடங்கினர்; எனது நண்பரை அறைந்தனர். என்னுடன் பேசக்கூடாது என்று எனது பெண் நண்பர்களை எச்சரித்து அனுப்பினர்” என்று தாக்கப்பட்ட அந்த மாணவர் கூறினார்.


படிக்க: காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்


முஸ்லீம் மாணவரை தாக்கிய சங்கிக்கும்பல்  ”உனது சேர்க்கையை (Admission) ரத்து செய்துவிடு. அப்படி ரத்து செய்யவில்லை என்றால் உனது சடலத்தை உன் கிராமத்திற்கு  அனுப்பிவைப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்தது.

மேலும் அங்கிருந்த ஒரு முஸ்லிம் மாணவியையும் அச்சுறுத்தியது அக்கும்பல். அந்த  மாணவியின் குடும்பத்தினர் உடனடியாக புனே சென்று சம்பவம் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர், பின்னர் போலீசிடம் சென்று புகாரும் அளித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசு யாரையும் கைது செய்யவில்லை. தாக்கிய நபர்களை அடையாளம் காண் இயலவில்லை என்று கூறிவிட்டது.


படிக்க: JNU பல்கலைக்கழக தேர்தல்: வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் | தோழர் தீரன்


இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்றில் இந்து கடவுள்களை அவமதித்துவிட்டதாகக் கூறி ஏ.பி.வி.பி சங்கிக் கும்பல் இப்பல்கலைக்கழகத்தில் பிரச்சினை செய்தது. சங்கிக் கும்பல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐந்து மாணவர்களையும் ஒரு பேராசிரியரையும் போலீசு கைது செய்தது.

ஆனால் தற்போது முஸ்லீம் மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மட்டும் தாக்கியவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று போலீசு கூறியுள்ளது.

பாசிச மோடி ஆட்சியில், பல்கலைக்கழகங்களில்  ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவாகவே இது போன்ற பாசிச தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பல்கலைக்கழகங்களில் ஜனநாயகம் நிலவ வேண்டும் என்றால் ஏ.பி.வி.பி உள்ளிட்ட பாசிச அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.


‌ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube