30.06.2025

திருப்புவனம் இளைஞர் அஜீத்குமார் போலீசால் கொட்டடிப் படுகொலை!

படுகொலை செய்த போலீசு மீது கொலை வழக்கு பதிவு செய்து
கைது செய்து சிறையில் அடை!

கண்டன அறிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்தரகாளியம்மன் கோவிலில் காவலராக பணியாற்றும் அஜித்குமார், போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அஜித் குமாரையும் அவரது தம்பி நவீனையும் மிகக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளது போலீசு.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் கொட்டடிப் படுகொலைகள் தமிழ்நாட்டை உலுக்கிய போதிலும் இப்போது வரை நிற்கவில்லை. ஜெயராஜ் – பென்னிக்ஸ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்கள் இப்போது வரை விசாரணைக்கு வரும் பொழுது உரிய மரியாதை பெறுகிறார்கள் என்றும் விசாரணையின் போது இறந்து போன (ஜெயராஜ் – பென்னிக்ஸை கருணையின்றி படுகொலை செய்த) எஸ்.ஐ-யின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெயராஜின் மகள்.

அவருடைய கடந்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில் லாக்கப் படுகொலைகள் பல நடைபெற்றுள்ளன. அஜித் குமாரின் படுகொலைக்கும் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

தொடர்புடைய போலீஸ்காரர்கள் மீது இப்போது வரை கொலை வழக்கு பதிவு செய்யவோ அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவோ இல்லை. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மேலும் அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க