21.08.2025
ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான
தேச துரோக வழக்கை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி
பாசிச மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது தி வயர் நிறுவனம். அதைப் போலவே ஆபரேஷன் சிந்தூரில் நடைபெற்ற உண்மையை விளக்கி அத்தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அதனால் வரதராஜனுக்கு எதிராக ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்’ செய்ததாக அசாம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கிட்டார் சித்தார்த் வரதராஜன். கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் அவரை கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில் அசாம் மாநில போலீசு, தேசத்துரோக சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் பி.என்.எஸ் 152 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் தி வயர் நிறுவனத்தின் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. என்ன குற்றங்கள் செய்தார்கள் என்பது தொடர்பான இந்த விவரமும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முதல் தகவல் அறிக்கை கொடுக்கவில்லை. ஆக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்றே தெரியாமல், போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன், கரன் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram