Wednesday, October 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 4

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 3 | ஜனவரி 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குஜராத்: பார்ப்பன – பனியா பயங்கரவாதியின் வெற்றி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • டிசம்பர்-6 பாதுகாப்பு கெடுபிடிகள்: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • முசுலீம் பயங்கரவாத பீதி
    ஈரைப் பேனாக்கும் போலீசு பேனைப் பெருமாளாக்கும் பத்திரிக்கை
  • தருமபுரியில் நக்சலைட்டு ஒழிப்பு வேட்டை: போலீசுக்குத் துப்பாக்கி பத்திரிக்கைக்கு பேனா
  • குஜராத்தில் நடந்தது மதக் கலவரமல்ல
    மோடி தலைமையிலான நடந்த இனப்படுகொலை
  • ஜெயா – கிருஷ்ணா
    காவிரி பிரச்சினையில் பகையாளிகள் நாகப்பா கொலையில் பங்காளிகள்
  • சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை
  • ஓட்டுக்கு மக்கள்! உத்தரவுக்கு உலக வங்கியா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை

“ஆப் கி பார், ட்ரம்ப் சர்கார்”, “ட்ரம்ப் என்னுடைய நண்பர்” என்றெல்லாம் தம்பட்டம் அடித்தவாறு சுற்றிக்கொண்டிருந்தார், இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இன்றோ, இந்தியா மீதான ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசாமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். “மோடி ஓர் உலகத் தலைவர்”, “விஸ்வகுரு” என்றெல்லாம் சங்கிக் கும்பல் ஊதிப்பெருக்கி வந்த பிம்பம் சுக்குநூறாக உடைந்துக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, உள்நாட்டிலும் பிற நாடுகளின் மீதும் ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் சரிந்துவரும் நிலையில் அதனை எப்படியாவது தக்கவைத்துக் கொள்வதற்காக வெறிபிடித்தது போல நடந்து வருகிறார். உலக நாடுகளிடத்தில் வக்கிரமாகவும் திமிர்த்தனமாகவும் வெறிகூச்சலிட்டு வருகிறார்.

குறிப்பாக, அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்ற பெயரில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளை அடிமையாக்கி, அந்நாடுகளின் சந்தையை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கும் அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் இடையே இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது) நீக்குவதாகக் கூறி பரஸ்பர வரி (Reciprocal Tariff) விதிப்பை அறிவித்தார். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை விகிதத்திற்கேற்ப விதிக்கப்பட்ட இவ்வரி, வர்த்தகப் பற்றாக்குறை நீடிக்கும் வரை தொடரும் என அடாவடித்தனமாக அறிவித்தார்.

அந்தவகையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவிகித வரி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவிற்கு அபராதமாக 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்தக் கூடுதல் வரி ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதலாக அமலுக்கு வர உள்ள நிலையில், தற்போது இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த அநியாயமான வரிவிதிப்பினால், இந்தியாவின் சில முக்கியமான துறைகள் பேரழிவுக்குள் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இவ்வளவு அதிக வரிவிதிப்பால், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, அவை சந்தையிலிருந்து ஓரங்கட்டப்படும். இதனால், இந்தியாவில் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிலை உருவாவதோடு, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.

பேரழிவுக்குள் தள்ளப்படும் ஏற்றுமதி தொழில்கள்

ட்ரம்பின் வரிவிதிப்பால் ஜவுளி மற்றும் ஆடைகள், கம்பளங்கள், இறால் உள்ளிட்ட கடல் உணவுகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஆட்டோ பாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் கடுமையாக பாதிப்படைய போகிறது. ஏற்கெனவே, பாசிச மோடி அரசின் ஜி.எஸ்.டி. வரி எனும் பாசிச தாக்குதலால் நொடிந்து போயிருக்கும் சிறு, குறு வணிகர்கள் ட்ரம்பின் வரிவிதிப்பால் முற்றிலும் நொடிந்து போகும் அபாயம் உள்ளது.

ட்ரம்பின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீதான ஒட்டுமொத்த வரி கிட்டத்தட்ட 60 சதவிகிதமாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறாலின் மதிப்பு தோராயமாக ரூ.42,768 கோடியாகும். இது மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 66 சதவிகிதமாகும். குறிப்பாக, ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் இறாலில் 70 சதவிகிதம் அளவிற்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் அம்மாநிலம் ட்ரம்பின் வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பை சந்திக்கும். இறால் ஏற்றுமதியில் அதிகளவு ஈடுபடும் மேற்குவங்கம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பாதிப்பை சந்திக்க உள்ளன.

அடுத்ததாக, அமெரிக்காவின் வரிவிதிப்பால் அதிகம் பாதிப்படையும் தொழிலாக ஜவுளி, ஆயத்த ஆடை தொழில் உள்ளது. இந்திய அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் ஆடைகளில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், லூதியானா, பானிபட் உள்பட நாட்டின் ஜவுளி நகரங்களில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்துறையில் வேலை செய்கின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். இந்தியாவில் விவசாயத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய வேலை வழங்கும் துறையாக இத்துறை உள்ளது.

இந்நிலையில் ட்ரம்பின் வரிவிதிப்பால், பின்னல் ஆடைகள் மீதான வரி 63.9 சதவிகிதமாகவும் கைத்தறி ஆடைகள் மீதான வரி 60.3 சதவிகிதமாகவும் உயர உள்ளது. இந்த வரி உயர்வால், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே தங்கள் அமெரிக்க ஆர்டர்களை நிறுத்திவிட்டதாக “எகனாமிக் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளுக்கான “வடிவமைப்பு உரிமை” அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளதால், உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை வேறு நாடுகளுக்கும் விற்க முடியாத சூழல் நிலவுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் இந்த வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 30 சதவிகிதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அங்கு பணிபுரியும் 10 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதேபோல், ட்ரம்பின் வரிவிதிப்பால் ரத்தினக் கற்கள் மற்றும் நகைக்கான வரி 52.1 சதவிகிதமாக அதிகரிக்க உள்ளது. இதனால், சூரத்தில் உள்ள 25 இலட்சம் வைரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளுடன் போட்டிப்போட முடியாமல் இந்திய பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிவிதிப்பு தொடர்ந்தால், இந்தியாவின் ஏற்றுமதி முழுமையாக பதிப்படைந்து, இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும்.

மோடி அரசின்
அமெரிக்க அடிமை விசுவாசம்

உலகில் எந்த நாட்டின் மீதும் இந்தளவிற்கு வரி விதிக்கப்பட்டதில்லை, ட்ரம்பின் நடவடிக்கை முட்டாள்தனமானது என சர்வதேச ஊடகங்களே விமர்சித்துவரும் நிலையில், மோடி அரசு இந்த வரிவிதிப்பிற்கு பெயரளவிற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல் வாய்மூடிக் கிடக்கிறது. குறிப்பாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சீனாவும் பிரேசிலும் ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில் மோடி அரசு அமெரிக்காவிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க மறுக்கிறது.

அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது தொடங்கி, இந்தியாவின் ‘இறையாண்மையைக்’ கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான போர்நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்தது வரை பல்வேறு சம்பவங்களில் தனது அமெரிக்க அடிமைத்தனத்தை மோடி அரசு வெளிக்காட்டி வருகிறது.

ட்ரம்பின் இந்த வரி பயங்கரவாதத் தாக்குதலையும் அவ்வாறே அடிமைத்தனமாக கையாண்டு வருகிறது. வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்குத்தான் வரிவிதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.8 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், சீனாவுடன் அமெரிக்கா 24.7 சதவிகித வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவை விட அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவிற்கு மட்டும்தான் இந்தளவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், ஆயுதங்கள் வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா உதவுகிறது என்று குற்றஞ்சுமத்தி 25 சதவிகிதம் அபராத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். ஆனால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதிலும் இந்தியாவை விட சீனாவே முதலிடம் வகிக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கின்றன.

இவ்வளவு ஏன், அமெரிக்காவே ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், பல்லேடியம், உரங்கள், கனிம இரசாயனங்கள் போன்ற பல பொருட்களை இறக்குமதி செய்கிறது. மேலும், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதற்கும், சீனாவுடனான அணிச்சேர்க்கையிலிருந்து ரஷ்யாவை பிரித்தெடுப்பதற்கும் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினிடம் கூடிகுலாவுவதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்ற புதினுக்கு ட்ரம்ப் அளித்த வரவேற்பே அதற்கு சான்று.

ஆகவே, ட்ரம்பின் அநியாய வரிவிதிப்பிற்கு காரணமாக சொல்லப்படும் வர்த்தகப் பற்றாக்குறை, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது போன்றவை எல்லாம் முற்றிலும் அயோக்கியத்தனமானது என்பது அம்பலமாகிறது. மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது; மீறினால் இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டுவது இந்தியாவின் பெயரளவிலான இறையாண்மையை புதைக்குழிக்குள் தள்ளும் நடவடிக்கை.

ஆபரேஷன் சிந்தூரின் உண்மைத் தன்மையை விளக்கி கட்டுரை வெளியிட்டதற்காக “தி வயர்” இணையதளத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன் மற்றும் பத்திரிகையாளர் கரன் தாப்பர் மீது இந்திய இறையாண்மையை, ஒற்றுமையை சீர்குலைப்பதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது, பாசிச பா.ஜ.க. அரசு. ஆனால், உலக அரங்கில் இந்தியாவின் ‘இறையாண்மையை’ காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கும் ட்ரம்பிற்கு எதிராக மோடி கும்பல் மூச்சுக்கூட விடுவதில்லை.

நாங்கள்தான் ‘தேசத்தின் உண்மையான பாதுகாவலர்கள்’ என்று தேச பக்த வேடம் போடும் பா.ஜ.க. கும்பல், ட்ரம்ப் எவ்வளவுதான் காறி உமிழ்ந்தாலும் அதனை துடைத்துக்கொண்டு தனது அமெரிக்க அடிமை விசுவாசத்தைக் காட்டி வருகிறது.

எங்கும் அம்பானி – எதிலும் அதானி

மோடி அரசு ட்ரம்பின் மிரட்டலுக்கு வாய்திறக்காமல் இருப்பதற்கும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் வாங்குவதற்கும் பின்னணியில் அம்பானி – அதானியின் நலனே பிரதானமாக அடங்கியுள்ளது.

குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் அதிக இலாபம் அடைவது அம்பானிதான். “ரஷ்ய எண்ணெய் இறக்குமதி இந்தியாவில் உள்ள சில பணக்கார குடும்பங்களுக்குத்தான் பயனளிக்கிறது” என அமெரிக்க செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுவது அம்பானி குடும்பத்தைத்தான்.

2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியது. நாளொன்றுக்கு ரஷ்யாவிடம் இருந்து சராசரியாக 15 இலட்சம் பீப்பாய் எண்ணெயை இந்தியா வாங்குகிறது. இதில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோஸ்நெஃப்ட் (Rosneft) நடத்தும் நயரா எனர்ஜி (Nayara Energy) ஆகிய நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது.

குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, அதை குஜராத் மாநிலம் ஜாம்நகரிலுள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளுக்கு அம்பானி நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் வெறும் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 2025-ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் தோராயமாக சுமார் ரூ.6,850 கோடி லாபமடைந்துள்ளது என்று “எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம்” (CREA) தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோஸ்நெப்ஃட் நிறுவனத்திடமிருந்து நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டுள்ள மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தமாகும்.

ஒருபுறம், ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு எண்ணெயை இறக்குமதி செய்து அம்பானி நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கொஞ்சமும் குறையவில்லை. இது, இந்த இறக்குமதியால் இந்திய நாட்டு மக்களுக்கு துளியும் பயனில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

அதேபோல், ட்ரம்பை எதிர்த்து மோடி வாய் திறக்காமல் இருப்பதற்கு பின்னணியில், அதானியின் நலனும் அடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதானியின் லஞ்ச ஊழல் மோசடியை அம்பலப்படுத்தி குற்றப்பத்திரிகையை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு கைது ஆணையை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையிலிருந்து அதானியை காப்பாற்றுவதற்கு ட்ரம்பின் தயவு மோடிக்கு தேவைப்படுகிறது. எனவே, மோடியின் நாயகனான அதானியை காப்பற்றுவதற்காக கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பலிக்கொடுக்க மோடி அரசு தயாராக உள்ளது.

மொத்தத்தில், பாசிச மோடி அரசுக்கு அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின் நலன்தான் முக்கியமே தவிர உழைக்கும் மக்களின் நலன் அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.

அடிமையாக்கப்படும் இந்தியா

இந்திய சந்தையை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற வெறியே ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு காரணம். வரிவிதிப்பை ஆயுதமாக பயன்படுத்தும் ட்ரம்ப், மோடி அரசை பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நிர்பந்தித்து வருகிறார்.

குறிப்பாக, “அமெரிக்க – இந்திய காம்பாக்ட்” என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்களில் மோடி அரசு கையெழுத்திட்டு வருகிறது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாத புதிய ஜனநயகம் இதழில் வெளிவந்த, “அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம்: மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

சமீப மாதங்களாக, இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு ஒப்பந்தத்திற்கான (Bilateral Trade Agreement) பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்துவது இதன் இலக்காகும். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு துறைகள் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்பட உள்ளன. அதில் குறிப்பாக, விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான இந்திய சந்தையை அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்துவிடக் கோரி ட்ரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

ஏற்கெனவே, மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்திய விவசாயம் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க விளைப்பொருட்களுக்கு இந்திய சந்தை திறந்துவிடப்பட்டால் இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அதனுடன் போட்டிப்போட முடியாமல் மிகப்பெரும் நட்டத்தை எதிர்கொண்டு நொடிந்து போவர்.

அதேபோல், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக திகழும் இந்தியாவிற்குள் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் பால் பொருட்களை அனுமதித்தால், இங்குள்ள எட்டு கோடி சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஏனெனில், அமெரிக்காவின் பால் உற்பத்தித்துறை மிகப்பெரும் தொழிற்சாலை, பால் பண்ணைகளை நடத்தக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும். இக்கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இந்திய சிறு உற்பத்தியாளர்களால் நிச்சயம் போட்டிபோட முடியாது.

எனவேதான், இந்த இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். “இந்திய விவசாயிகளின் நலனில் சமரசம் செய்ய மாட்டோம்” என மோடி அரசு வெற்றுச் சவடால் அடித்தாலும், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு அடிபணிந்து இந்திய சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நோக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மத்திய தொழிற்சங்கங்கள்

சான்றாக, சமீபத்தில் பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் அதிகம் பாதிப்படைவதால், இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக மோடி அரசு அப்பட்டமாக பொய்யுரைக்கிறது. ஆனால், மோடி அரசின் இந்நடவடிக்கையால், இந்திய பருத்தி விவசாயிகள்தான் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர். ஏனெனில், இறக்குமதி வரி ரத்தால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை பருத்தியுடன் போட்டி போட முடியாமல் இந்தியாவின் சிறு, குறு பருத்தி உற்பத்தியாளர்கள் நொடிந்து போவர். தற்போது இந்தியாவில் பருத்தி விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகியிருக்கும் நேரத்தில் அவர்கள் தலையில் குண்டைத்தூக்கிப் போட்டுள்ளது மோடி அரசு.

பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை ரத்து செய்யும் முடிவை கண்டித்துள்ள “அகில இந்திய கிசான் சபா” (AIKS), “இதுபோன்ற விவசாய விரோத முடிவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை விவசாயிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தாவிட்டால், மோடி அரசாங்கம் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மற்ற பயிர்களுக்கும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும். எனவே, இம்முடிவைத் திரும்பப்பெற அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து தீவிர போராட்டத்தைத் தொடங்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஒருபுறம் ட்ரம்பின் வரி பயங்கரவாதத் தாக்குதலால், இந்தியாவில் ஏற்றுமதி தொழில்கள் பாதிப்படைந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து மோடி அரசு, இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்துறை மற்றும் பால் உற்பத்தித்துறை, அணுசக்தித்துறை, கல்வித்துறை, இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் அடகு வைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது.

மேலும், நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடங்கி, சட்டத்திட்டங்கள் இயற்றப்படுவது வரை அனைத்தையும் அம்பானி – அதானி கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்தே மோடி அரசு தீர்மானித்து வருகிறது. இக்கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் சூறையாடுகிறது.

எனவே, மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் இந்திய விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்பதுபோல், ட்ரம்ப் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் வணிகர்களும் தொழிலாளர்களும் மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போராட்டங்கள், அமெரிக்காவிற்கு அடிபணிந்து நாட்டை அடிமைப்படுத்திவரும் பாசிச மோடி கும்பலை வீழ்த்தும் போராட்டங்களாக கட்டியமைக்கப்பட வேண்டும்.


மதி

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 01-31, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 2 | டிசம்பர் 01-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சங்கராச்சாரியின் வாய்க்கொழுப்பு தலைவிரித்தாடுகிறது பார்ப்பனிய ஆதிக்கம்
  • “கம்யூனிசமே வெல்லும்!” நம்பிக்கையை விதைத்த நவம்பர் புரட்சி விழா
  • ஆப்கானிஸ்தான்… ஈராக் எனத் தொடரும் அமெரிக்காவின் பயங்கரவாதம்
  • தனியார் கல்லூரி மாணவர்கள் கொத்தடிமைகளா?
  • சீனா: போலி சோசலிச வேடமும் கலைந்தது
  • ஆப்கான் பெட்டகச் சாவுகள்: அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்
  • கைக்கூலி எழுத்தாளரின் எஜமான விசுவாசம்
  • பட்டினிச் சாவின் பிடியில் இந்தியா
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வாக்குத் திருட்டு: இந்துராஷ்டிரத்திற்குள் நியாயமான தேர்தல் சாத்தியமில்லை

டந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, மோடி அரசானது தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோசடிகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். “மோசடிகள் மூலமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது, தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த மோசடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே, “தி குயிண்ட்” இணையதளம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்றிருந்த மோசடிகளை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேர்தல் நிதிப்பத்திரங்கள், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை, சிறப்பு தீவிர மறு ஆய்வு உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகள் மூலம் பெயரளவிலான தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் விதமாக, தேர்தல் கட்டமைப்புகளை இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்து வருகிறது. தற்போது அம்பலமாகியுள்ள இந்த வாக்குத் திருட்டு மோசடியையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் “வாக்குத் திருட்டு”

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு மத்திய (Bangalore Central) தொகுதியில் பா.ஜ.க. 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இத்தொகுதியானது ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. அவற்றில் ஆறு தொகுதிகளில் பா.ஜ.க-வை விட காங்கிரசு அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் காங்கிரசை விட பா.ஜ.க. 1,14,000 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறது.

காங்கிரசு வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றதற்கு மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் கிடைத்த அதிக வாக்குகளே முக்கிய காரணம். எனவே, மகாதேவபுரா தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை மட்டும் எடுத்து காங்கிரசு கட்சி ஆய்வு செய்திருக்கிறது.

அந்த ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்காளர்கள் முறையான விவரங்களின்றி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. மகாதேவபுரா தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 11,965 வாக்காளர்கள் வெவ்வேறு பூத் எண்களில், பிற மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்; 40,009 வாக்காளர்களின் முகவரிகள் “0”, “#” என்று பதிவாகியுள்ளது; 10,452 வாக்காளர்கள் ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வசிக்கக் கூடியவர்களாக உள்ளனர்; 4,132 வாக்காளர்கள் செல்லாத புகைப்படங்களுடன் இடம்பெற்றிருக்கின்றனர்; 33,692 வாக்காளர்கள் படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இம்மோசடித் தரவுகளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, “இது ஒரு தொகுதியில் மட்டும் நடைபெறவில்லை. பல இடங்களில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று பிரதமரானதற்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கும் தேர்தல் மோசடிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மோடி அரசின் கைப்பாவையாக
தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தார்மீகப் பொறுப்பெடுத்துக் கொண்டு, பதிலளிக்க வேண்டிய தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி தன்னுடைய குற்றச்சாட்டுகளை பிரமாணப் பத்திரமாக முன்வைத்தால்தான் அவற்றை விசாரிக்க முடியும் என்று கூறியது. ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று “இந்தியா டுடே”, “ஆல்ட் நியூஸ்” ஆகிய செய்தி ஊடகங்கள் தங்களுடைய கள ஆய்வில் நிரூபித்துள்ள போதிலும், அக்குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தேர்தல் ஆணையம் பொய்யுரைத்து வருகிறது.

மேலும், “ராகுல் காந்தி, பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுங்கள் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று மிரட்டுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நாட்டு மக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக திசைதிருப்புகிறது. ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்று பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் இருக்கிறது.

அதேசமயம், அம்பலமான தேர்தல் மோசடிகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறைப்பதற்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதி புது டெல்லியிலுள்ள தேசிய ஊடக மையத்தில் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள எந்தவித குற்றச்சாட்டுக்கும் நியாயமான முறையில் பதிலளிக்காமல், மிகவும் திமிர்த்தனமாக எதிர்க்கட்சிகளையும் நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தும் விதமாக பேசினார்.

மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உள்ளிட்டு பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கடந்து சென்றார். சாலையோரங்களில், பாலத்தின் கீழ் வசிப்பவர்களுக்கும் நகரங்களில் அங்கீகரிக்கப்படாத ‘காலனி’களில் வசிப்பவர்களுக்கும் வீட்டு முகவரி பூஜ்ஜியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று ஞானேஷ் குமார் முட்டுக்கொடுத்து பேசியது ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதேபோல், பகுப்பாய்வு செய்வதற்கேற்ப வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும்; வாக்குப் பதிவின்போது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் மூலம் தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் மிகவும் துல்லியமாகவும் குறுகிய காலத்திலும் கண்டறிய இயலும்.

இதுகுறித்து பதிலளித்த ஞானேஷ்குமார், “கமல்நாத் எதிர் தேர்தல் ஆணையம்” வழக்கை மேற்கோள் காட்டி இயந்திரத்தால் பகுப்பாய்வு செய்யக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்காளர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் நடத்தை சட்டவிதிகளை காரணம் காட்டி வாக்குப் பதிவின் போது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட முடியாது என்று மறுத்தார்.

ஆனால், “கமல்நாத் எதிர் தேர்தல் ஆணையம்” வழக்கில், இயந்திரத்தால் பகுப்பாய்வு செய்யக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்காளர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் வாதிட்டதே தவிர அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அம்பலப்படுத்தியுள்ளார்.

அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா, சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அவ்வழக்கில், வாக்குப் பதிவின் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு வந்த சில வாரங்களிலேயே, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குப் பிறகு சி.சி.டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டுவிடும் என்று 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை சட்டத்தின் விதி 93-ஐ, மோடி அரசு திருத்திவிட்டது.

அதேபோல், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால் மட்டுமே அதனை விசாரிக்க முடியும் என்கிறது தேர்தல் ஆணையம். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசத் தேர்தலில் மோசடிகள் நடந்ததாக அகிலேஷ் யாதவ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும் அதனடிப்படையிலேயே மறுத்திருக்கிறது.

மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியல் இயந்திரத்தால் பகுப்பாய்வு செய்யக்கூடிய டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படாததால் அதனை ஆய்வு செய்வதற்கே காங்கிரசு கட்சிக்கு ஆறு மாதங்களாகின. எனில், 45 நாட்களுக்குள் யாராலும் மோசடிகளை கண்டறிந்து புகார் தெரிவிக்க இயலாது.

எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலானது தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தல்களில் மோசடிகளில் ஈடுபடுவதுடன், தேர்தல் கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதன் மூலம் அம்மோசடிகள் குறித்து விசாரணை கூட நடத்த முடியாது என்பதை நிலைநாட்டியுள்ளது. அதாவது, தேர்தல் கட்டமைப்பை சட்டப்பூர்வ வழிகளிலேயே இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்துள்ளது.

இதன் உச்சமாக, தற்போது பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சிறுபான்மையினர், பெண்கள் என பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய பல இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்து வருகிறது. சிறப்பு தீவிர மறு ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், மூன்று தொகுதிகளில் 80,000 வாக்காளர்கள் போலி மற்றும் தவறான முகவரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதை “தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” (The Reporters Collective) என்ற இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இது சட்டப்பூர்வமாக தேர்தல் மோசடிகளை நிகழ்த்துவதற்கான ஏற்பாடாகவே சிறப்பு தீவிர மறு ஆய்வு இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்துராஷ்டிர கரசேவை

மோடி அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டு வைத்துக்கொண்டு ‘தேர்தல் ஜனநாயகத்தை’ சிதைத்துக் கொண்டிருக்கும் போதும், அதனை உச்சநீதிமன்றம் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் தெருநாய்க் கடியால் ரேபிஸ் நோய்த்தொற்று பரவுவது குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் மோசடிகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க மறுக்கிறது. தேர்தல் கட்டமைப்பு மீதான மோடி அரசின் தாக்குதல்களை வேடிக்கைப் பார்ப்பதுடன் அதற்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.

2023 மார்ச் மாதத்தில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய குழுதான் தேர்தல் ஆணையர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அத்தீர்ப்பை செல்லாக்காசாக்கும் வகையில் மோடி அரசானது “தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்” என்ற பாசிச சட்டத்தை நிறைவேற்றி, தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவிலிருந்து தலைமை நீதிபதியை வெளியேற்றியது. ஆனால், இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மோடி அரசு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.

அதேபோல், 2019-ஆம் ஆண்டில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற அமைப்பு தேர்தல் முடிந்தவுடன் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கையை கொண்ட படிவம் 17சி-யை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. தேர்தல் மோசடிகளை அம்பலப்படுத்தக்கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்த உச்சநீதிமன்றம், இறுதியில் அதனை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

தற்போது கூட, பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்வு என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக மட்டும் 65 லட்சம் மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் மோசடியாக பறித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளார்கள் என்பதை பல்வேறு ஊடகங்களும் அம்பலப்படுத்தியுள்ளன. அப்படியிருந்தும் சிறப்பு தீவிர மறு ஆய்வை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் உள்ளிட்ட பல பாசிச நடவடிக்கைகளின் வரிசையில் தேர்தல் மோசடிகளிலும் உச்சநீதிமன்றம் இந்துராஷ்டிர கரசேவையாற்றிக் கொண்டிருக்கிறது.

நியாயமான தேர்தல்
எப்போது சாத்தியம்?

எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல, பா.ஜ.க. தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றி பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், மோசடிகளினால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலை அணுகுவதில்லை. மாறாக, இஸ்லாமிய வெறுப்பு, இந்துமதவெறி, தேசவெறி, சாதிவெறியூட்டும் பிரச்சாரங்கள், கலவரங்கள், இலவச-கவர்ச்சிவாத அறிவிப்புகள், சாதி-மத முனைவாக்கங்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனக்கான மக்கள் அடித்தளத்தை பாசிச கும்பல் உருவாக்குகிறது. தேர்தல் மோசடிகள் கூட பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு மக்கள் அடித்தளம் உள்ள பகுதிகளில்தான் அரங்கேறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், எதிர்க்கட்சிகள் தாங்கள் தோற்பதற்குத் தேர்தல் மோசடிகள் மட்டும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் மக்களிடையே தனக்கான அடித்தளத்தை எதிர்க்கட்சிகளால் உருவாக்க முடியவில்லை என்பதை சாதுரியமாக மறைத்துவிடுகின்றன. தேர்தலில் தோற்ற பிறகு தேர்தல் மோசடிகள்தான் தோல்விக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் அதனை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதில்லை. உண்மையில், எதிர்க்கட்சிகள் அத்தகைய மக்கள் அடித்தளத்தை உருவாக்குவதற்குத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்.

தற்போது கூட பா.ஜ.க-வின் வாக்குத் திருட்டு மோசடி குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து பாசிச கும்பலின் மக்கள் அடித்தளத்தை சரிக்கும் வகையிலான போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது; தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தங்களை வரம்பிட்டுக் கொள்கின்றனர்.

அதேபோல், பீகாரில் சிறப்பு தீவிர மறுஆய்வு மூலம் பா.ஜ.க-வை வெற்றிபெற வைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலாளித்துவவாதிகள் சிலரே பீகார் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று பேசிவரும் நிலையில், “வாக்குத் திருட்டு” விவகாரத்தைப் பயன்படுத்தி ராகுல்காந்தி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.

அதாவது, “உங்கள் வாக்கை தேர்தல் ஆணையமும் பா.ஜ.க-வும் திருடுகிறது. எனவே எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று பிரச்சாரம் செய்கிறார் ராகுல்காந்தி. கேட்பதற்கே கேலிக்கூத்தாக இல்லையா?

மொத்தத்தில் தேர்தல் வெற்றி, தோல்வியை கடந்து பாசிச பா.ஜ.க. வீழ்த்துவது குறித்து எதிர்க்கட்சிகள் எதையும் சிந்திப்பதில்லை. மக்களையும் சிந்திக்கவிடுவதில்லை.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலானது தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, சிறப்பு தீவிர மறு ஆய்வு, தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சொல்லிக்கொள்ளப்படும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கொண்ட தேர்தல் கட்டமைப்பை பாசிசமயமாக்கி வருகிறது.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் மக்கள் அடித்தளத்தை உடைக்கும் வகையிலும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க நோக்கத்திற்கு சாதகமாகவும் தொகுதிகளை மறுவரையறை செய்வது என்ற அபாயகரமான திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருகிறது. 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதை பாசிச கும்பல் தன் திட்டமாகக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கூட, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றங்களில் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பாசிச மோடி அரசு தாக்கல் செய்திருக்கிறது. இம்மசோதா சட்டமானால், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கூட அவர்களின் ஆட்சி சட்டப்பூர்வமாகவே கலைக்கப்படும்.

இச்சூழலில்தான் எதிர்க்கட்சிகள் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டும், பாசிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள வரையிலும், நியாயமான தேர்தல் என்ற கோரிக்கை பகற்கனவே ஆகும். அத்தேர்தல் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமையும்.

தேர்தல் ஆணையம் பாசிச கும்பலின் கைப்பாவையாக மாறிவிட்டது என்பதை சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய அமைப்பாக மாற்ற வேண்டும்” என்று பேசுகிறார். ஆனால், இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவ்வாறான நிலைப்பாட்டுக்கு வரவில்லை.

உண்மையில், பாசிசமயமாகியுள்ள இத்தேர்தல் கட்டமைப்பிற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலில் பங்கேற்பதற்குத் தடைவிதிக்கும் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றுக் கட்டமைப்பிலேயே நியாயமான தேர்தலை நடத்த இயலும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 1 | நவம்பர் 01-30, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்துமதவெறியர்கள்தாம் பயங்கரவாதிகள்
  • காவிரி: ரஜினியின் உண்ணாவிரதம் ஒரு கபட நாடகமே!
  • தமிழக முதல்வர் ஜெயா
    சூழ்நிலைக் கைதியா? உலக வங்கிக் கைக்கூலியா?
  • காசுமீர் சட்டமன்றத் தேர்தல்
    ‘தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியா?
  • குஜராத் தேர்தல்: முசுலீம் வேட்டையோடு ஓட்டு வேட்டை
  • கள்ளச் சாராய மாஃபியாக்களோடு சி.பி.எம். கூட்டு: சீரழிவில் புதிய பரிமாணம்
  • புதிய ஜனநாயகத்தின் மீது தமிழினவாதிகளின் அவதூறு:
    பொய் நெல்லைக் குத்தி பொங்க முடியுமா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



சுதந்திரமாக சுற்றித்திரியும் பயங்கரவாதமும் சிறைக் கொட்டடியில் முடக்கப்படும் சமூக உணர்வும்!

டந்த 2008-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாஷிக் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாலேகான் பகுதியிலுள்ள மசூதியருகே குண்டுவெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இச்சம்பவத்தில் ஆறு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இப்பயங்கரவாதத் தாக்குதலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை 31 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கைச் சுற்றி பல கதைகளும் பொய் செய்திகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், இத்தீர்ப்பு குறித்துப் பார்ப்பதற்கு முன், இவ்வழக்கின் உண்மை பின்னணியை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

காவி பயங்கரவாதத்தின் கோரமுகம்

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையானது 2008-ஆம் ஆண்டில் “பயங்கரவாதத் தடுப்புப் படை” (ATS – Anti-Terrorism Squad) தலைவர் ஹேமந்த் கர்காரே தலைமையில் தொடங்கப்பட்டது. இவ்வழக்கில் பெண் சாமியாரும் முன்னாள் பா.ஜ.க. மக்களவை உறுப்பினருமான (இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பிறகு பா.ஜ.க-வால் மக்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார்) சாத்வி பிரக்யா என அறியப்படும் பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் இராணுவ அதிகாரிகளான ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 11 பேர் மகாராஷ்டிரா குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் 4,528 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்த பயங்கரவாதத் தடுப்புப் படை, பல முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 11 பேர் மீதும் குற்றஞ்சாட்டியது. குறிப்பாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய பிரக்யா, “ஏன் கொஞ்சம் பேர்தான் இறந்தார்கள்? நீ ஏன் கூட்டம் நிறைந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை?” என்று கேட்ட கேட்பொலி வெளியாகி கேட்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மாலேகான் குண்டு வெடிப்பு இந்து மதவெறியர்களால் திட்டமிட்டே‌ இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்பதை இது நிரூபித்தது.

மேலும், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தின் முழுநேர ஊழியர்கள், முக்கிய இந்துமதத் தலைவர்கள் மற்றும் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் ஒன்றிணைந்து, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இவர்கள் அனைவரும் “அபினவ் பாரத்” எனப்படும் இந்துமதவெறி அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதும் இந்த அமைப்பானது நேபாளம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலுள்ள மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதக் குழுக்களுடன் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு வருகிறது என்பதும் அம்பலமானது.

மேலும், இந்திய இராணுவத்தின் முக்கியப் பொறுப்புகளிலிருந்த பிரசாத் புரோகித், ரமேஷ் உபாத்யாய் ஆகியோர் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்ததுடன், அதிநவீன ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் வழங்கியுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமாகி இந்திய இராணுவத்தின் யோக்கியதையை திரைக்கிழித்துக் காட்டியது.

2008 மாலேகான் குண்டுவெடிப்பு போன்று, 2006-இல் மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல், 2007-இல் சம்ஜௌத்தா விரைவு ரயில் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு மே மாதத்தில் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, நவம்பரில் ராஜஸ்தானின் அஜ்மர் தர்கா குண்டுவெடிப்பு உட்பட பல குண்டுவெடிப்புச் சம்பவங்களை காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சிகர உண்மையும் அம்பலமானது.

இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் அம்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், இஸ்லாமிய வெறுப்பு தீவிரப்படுத்தப்பட்டு, எவ்வித ஆதாரமுமின்றி இஸ்லாமியர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

ஆனால், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு காவி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல்களையும், அவர்களின் இராணுவ மற்றும் சர்வதேச வலைப்பின்னலையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்திய முக்கிய வழக்காக அமைந்தது. அந்தவகையில் இவ்வழக்கானது “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற ஒருதலைபட்ச பார்வையைத் தாண்டி “காவி பயங்கரவாதம்” என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இவ்வாறான முக்கியத்துவம் பெற்ற வழக்கை விசாரித்துவந்த பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரி ஹேமந்த் கர்காரே, 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் காவி கும்பலால் திட்டமிட்டு படுகொலைச் செய்யப்பட்டார். அதன்பிறகு காவி கும்பலின் ஆதிக்கத்தால் பயங்கரவாதத் தடுப்பு படையின் விசாரணை நிறுத்தப்பட்டு, 2011-இல் தேசிய‌ புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இவ்வழக்கு மாற்றப்பட்டது.

அரசின் துணையுடன் காவி பயங்கரவாதிகள் விடுதலை

2014-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிய‌ பிறகு, பாசிசத்தை அரங்கேற்றுவதற்கு ஏதுவாக அரசுக் கட்டமைப்பு முழுவதையும் மறுவார்ப்பு செய்து வருகிறது. அந்தவகையில், தன்னாட்சி அதிகாரமுடையதாகச் சொல்லப்படும் என்.ஐ.ஏ-வும் பா.ஜ.க-வின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர்

இதன் விளைவாக, பிரக்யா சிங் தாக்கூர், பிரசாத் புரோகித் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று என்.ஐ.ஏ. புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இது, 2016-இல் பயங்கரவாதத் தடுப்பு படை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கும், ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனான சுவாமி அசீமானந்த் (மேற்குறிப்பிட்ட குண்டுவெடிப்புகளுக்கு இலக்குகளை தீர்மானித்து வழிகாட்டியவன்) அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் முரணாக இருந்தது.

இந்நிலையில்தான், கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதற்கும், மோட்டார் வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி “சந்தேகத்தின் பலனின்” அடிப்படையில் பிரக்யா சிங் தாக்கூர், பிரசாத் புரோகித் உள்ளிட்ட குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார் (ஏற்கெனவே நான்கு பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்).

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பேசிய பிரக்யா சிங் தாக்கூர், “பகவான், சனாதனம் மற்றும் ராஷ்டிரியத்திற்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள பா.ஜ.க. தலைவர்கள் பலரும், “எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல காவி பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லை”, “ஒரு இந்து ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது” போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாசிச மோடி ஆட்சியில் கலவரங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் இந்து மதவெறியர்கள் நீதிமன்றத்தின் ஆசியுடன் விடுதலையாகி வெளியே வருவதும், அக்குற்றவாளிகள் சங்கிகளால் சாதனையாளர்கள் போல மாலையிடப்பட்டு மேளத்தாளத்துடன் வரவேற்கப்படுவதும் ஒரு போக்காக உருவெடுத்துள்ளது.

காவி குண்டர்களை விடுதலை செய்வது ஒருபுறமிருக்க, எந்தவொரு குற்றமும் செய்யாத சிறுபான்மையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலடைத்து சித்தரவதை செய்வதும் படுகொலை செய்வதும் பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் உமர் காலித்

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான உமர் காலித், ஊபா கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் சதித்திட்டத்துடன் கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அணித்திரட்டி போராடியதுதான் உமர்காலித் செய்த ‘குற்றம்’.

2020-இல் சி.ஏ.ஏ-விற்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தில், திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியது காவி கும்பல். ஆனால், கலவரத்தைத் தூண்டினார்கள் என்ற பொய் குற்றச்சாட்டில் மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட 18 பேரை ஊபா கருப்புச் சட்டத்தில் கைது செய்தது டெல்லி போலீசு. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித், காலித் சைஃபி, சர்ஜீல் இமாம், குல்ஃபிஷா ஃபாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேர் பிணை கூட கிடைக்காமல் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், ஐந்து ஆண்டுகளாகியும் இதுநாள்வரை இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கூட தொடங்கப்படவில்லை.

நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டு வரும் சர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித்

உமர் காலித் இஸ்லாமியர் என்பதைத் தாண்டி, சமூகத்தை நேசிக்கக்கூடிய, உண்மையான ஜனநாயகத்தை விரும்பக்கூடிய முற்போக்காளர் என்பதுதான் காவி கும்பலை மிகவும் அச்சுறுத்துகிறது. இளைஞர்களிடத்தில் சமூக உணர்வு பற்றிப் படருவதானது, பாசிச அரங்கேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், உமர் காலித் போன்ற செயற்பாட்டாளர்களை சிறைக்குள் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது, பாசிச மோடி அரசு.

2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில், ஊபா கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 8,719 பேரில் 223 பேர் மட்டுமே குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊபா வழக்கின் குற்ற விகிதம் வெறும் 2.8 சதவிகிதமே ஆகும். அப்படியெனில், கைது செய்யப்படும் 100 பேரில் அதிகபட்சம் 3 பேர் மட்டுமே‌ குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். (அதாவது 97 சதவிகித கைது நடவடிக்கைகள் சட்டவிரோதமாகவே மேற்கொள்ளப்படுகின்றன).

இந்தப் புள்ளிவிவரத்திலிருந்தே மோடி கும்பல் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே ஊபா கருப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறது என்பது புலனாகிறது.

இதற்கு நீதிமன்றங்களும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றன. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு, உமர் காலித் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் நீதிமன்றம் கையாளும் முறையே இதனை மெய்பிக்கிறது. அரசுக் கட்டமைப்பு பாசிசமயமாகிவரும் சூழலில், நீதிமன்றங்கள் சனாதனத்தின் விதிகளையே தீர்ப்புகளாக வழங்கி வருகின்றன.

000

இதன் அடுத்தக்கட்டப் பாய்ச்சலே, கடந்தாண்டு இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள். இப்பாசிச சட்டங்கள் போலீசுக்கு கட்டற்ற அதிகாரம் அளிக்கிறது. அதாவது, இனிமேல் ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் போலீசின் கரங்களில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை எந்தவொரு விசாரணையுமின்றி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போலீசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது போன்ற வரம்பற்ற அதிகாரங்கள் போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இந்துராஷ்டிரத்தைக் கட்டியமைக்கத் துடிக்கும் பாசிச கும்பலின் பாதையில் தடையாக இருக்கும் – சமூகத்தை நேசிக்கக் கூடியவர்கள், செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி சாதாரண உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் – அனைவரும் எந்தவொரு தகுந்த காரணமுமின்றி எந்த நேரத்திலும் போலீசால் கைது செய்யப்படுவதற்கான பேரபாயம் உள்ளது.

மறுபுறம், தற்போது உள்ளதை விடவும் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் எந்தத் தங்குதடையுமின்றி செயல்படுத்த அனுமதிக்கப்படும். இதனால், முன்னெப்போதையும்விட இஸ்லாமிய, கிறிஸ்தவ, தலித் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மதவெறி, சாதிவெறிக் கலவரங்கள் ஆர்‌.எஸ்.எஸ்-ஆல் மூர்க்கமான வகையில் தீவிரப்படுத்தப்படும். ஒருபுறம் பயங்கரவாதப் பேய் தலைவிரித்தாடும், இன்னொருபுறம் உரிமைக்குரல் நசுக்கப்பட்டு கிடக்கும்.

இந்த அபாயகரமான நிலைமை பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. “ஊபா கருப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்”, “என்.ஐ.ஏ. போன்ற அடக்குமுறை கருவிகள் கலைக்கப்பட வேண்டும்”, “மூன்று குற்றவியல் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும்”, “எந்த ஒரு குற்றமும் செய்யாத, குற்றம் நிரூபிக்கப்படாத இஸ்லாமியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மக்கள் போராட்டங்களை கட்டிமையக்க வேண்டும். அப்போராட்டங்களை சமூக – அரசியல் – பொருளாதார ரீதியாக ஒரு மாற்று கட்டமைப்பான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு உருவாக்குவதை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும்.


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காவிரி: தொடரும் துரோகம்
    மைய அரசின் ஆணை, அதிகாரங்களை ஏற்க மறுப்போம்!
  • புலிகளின் இலட்சியம் புதை குழிக்குப் போனது
  • பட்டினியில் விவசாயிகள் பகற்கொள்ளையில் ஒட்டுண்ணிகள்
  • தனியார்மயத்தின் படுதோல்வி
    பிரிட்டிஷ் இரயில்வே தரும் படிப்பினை
  • இரண்டாவது தொழிலாளர் ஆணையப் பரிந்துரை: தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகள்தான்!
  • உ.வ.க. – உலக வங்கி – ஐ.எம்.எப். – பன்னாட்டு நிறுவனங்களின்
    மறுகாலானியாதிக்க பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



எஸ்.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: கார்ப்பரேட்மயமாகிவரும் அரசுக் கட்டமைப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் எஸ்.எஸ்.சி. தலைமையகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டம்

எஸ்.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்:
கார்ப்பரேட்மயமாகிவரும் அரசுக் கட்டமைப்பு;
தேவை, இன்னொரு சுதந்திரப் போராட்டம்!

ன்றிய அரசின் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர்வாணையம் (Staff Seleciton Commission – SSC) ஜூலை 24 முதல் ஆகஸ்டு 1-ஆம் தேதி வரை நடத்திய 13-ஆம் கட்டத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. இதனையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தின் தலைமையகத்தை தேர்வர்களும் ஆசிரியர்களும் முற்றுகையிட்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குப் பதிலாக, ஆகஸ்டு 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசைக் கொண்டு தடியடி நடத்தியது ஒன்றிய மோடி அரசு.

இதனையடுத்து இத்தேர்வை நடத்திய “எடுகுயூட்டி” (Eduquity) எனும் தனியார் நிறுவனத்துடனான (Exam Conducting Agency) ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், நேர்மையான தேர்வு முறை வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து, பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்டு 6-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் “டெல்லி சலோ” போராட்டத்தை நடத்தினர்.

தேசிய ஊடகங்களில் ஒருசிலவற்றைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டத்தை மூடிமறைத்து பாசிச மோடி அரசுக்கு தமது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது தனிக்கதையாகும்.

தற்போது மட்டுமல்ல, இந்த ஆண்டு ஏப்ரலில் கூட மேற்குவங்கத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வில் குளறுபடிகள் – முறைகேடுகள் நடந்ததையொட்டி, தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி, ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட் (NEET), க்யூட் (CUET) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னர், தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

தேர்வு மையத்தை பல நூறு கி.மீட்டர் தொலைவில் அமைப்பது; தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் இருப்பது; தேர்வு மையத்திற்கு வந்த பின்னர், தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பது; வினாத் தாள்கள் முறையற்று இருப்பது, வினாத்தாள்கள் கசிவது, பாடத்திற்கு வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது… போன்ற பல குளறுபடிகள், முறைகேடுகள் இத்தேர்வுகளில் அரங்கேறுகின்றன. இவ்வாறு தேர்வு முறைகேடுகள் அதிகரிப்பதன் பொருள் என்ன?

ஒன்றிய அரசின் முக்கியமான துறைகளுக்கு பணியாளர்களை உருவாக்கும் இத்தேர்வுகளில் முறைகேடுகள், குளறுபடிகள் நடப்பதை எப்படி புரிந்துகொள்வது?

பொதுவில் நுழைவுத் தேர்வுகளாக இருக்கட்டும் அல்லது மேற்கண்ட பணியாளர் தேர்வுகளாக இருக்கட்டும். இவை அந்தத் துறைக்கு பொருத்தமானவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகள் என்று குறிப்பிடுகின்றன. சான்றாக, “நீட்” நுழைவுத் தேர்வானது, நாடு தழுவிய அளவில், பொதுவான தேர்வு முறையைப் பின்பற்றி மருத்துவம் படிப்பதற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு எனக் குறிப்பிடுகிறது.

ஆனால், ஆண்டுந்தோறும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அதனுடன் அத்தேர்வில் நடந்த முறைகேடுகளும் சேர்ந்தே அம்பலமாகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதுவும், பா.ஜ.க. ஆளும் ஹரியானா மாநிலத்தில் ஒரே பள்ளியில் தேர்வெழுதிய ஆறு பேர் முதலிடம் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாஃபியா கும்பல் ஒன்று நீட் தேர்வு வினாத்தாளை இலட்சக்கணக்கில் விற்று கொள்ளையடித்த சம்பவம் அம்பலமானது.

இவ்வாறு மோசடி செய்து வெற்றிபெறுபவர்கள் எப்படி தகுதியான மாணவர்களாக இருக்க முடியும். அதேபோல், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால்தான் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்த முடியும் என்று கற்பிக்கப்படும் நியாயவாதமும் இங்கு அடிபட்டுவிட்டது. உண்மையில், இவ்வாறான நுழைவுத் தேர்வுகள் என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கிறதே ஒழிய, திறைமையான மாணவர்களை தேர்வு செய்வதற்கல்ல.

உண்மையில், மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு நுழைவுத் தேர்வே தேவையில்லை. அவர்களின் பள்ளிப் படிப்பே அதற்கு போதுமானது. அது போலவே, ஒன்றிய பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கும் மையப்படுத்தப்பட்ட ஒன்றிய தேர்வு முறைகள் தேவையில்லை. எனில், இத்தேர்வுகளை கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டு நடத்துவதன் நோக்கம் என்ன?

கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்தும் வணிகமாக்கப்பட்டு கார்ப்பரேட் ஆதிக்கம் கோலோச்சும் சூழலில், அரசுக் கட்டமைப்பே கார்ப்பரேட்மயமாகி வரும் சூழலில், வேலையின்மை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துவரும் சூழலில், இத்தேர்வுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நடத்துவதற்கு அரசு முன்வைக்கும் காரணம் உண்மையானது அல்ல. அது மக்களிடையே பொய்யான மாயையை ஏற்படுத்துவதற்கானதாகும்.

சமூகத்தின் பொது நிலையில் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் சராசரி வயதானது 50-60 என்ற நிலைக்குச் சென்றுள்ளது. பழங்குடி மக்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படை, கார்ப்பரேட் ஆதிக்கம்தான்.

உற்பத்தித் துறையில் ஆதிக்கம் புரிந்துவரும் இந்த கார்ப்பரேட்மயமாக்கமானது, டிஜிட்டல்மயமாக்கமாக மேலும் முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, இத்துறைகளில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பின் அளவும் குறைந்து வருகிறது. இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் அன்றாடம் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்; பணியில் இருப்பவர்களின் வேலை நிலைமையானது மிகவும் கொடுமையானதாக, அடக்குமுறைகள் நிறைந்ததாக மாறிவருகிறது.

இந்த கார்ப்பரேட்மயமாக்கத்தை, டிஜிட்டல்மயமாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் ஊக்குவித்து வளர்ப்பதைத்தான் இன்றைய அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. அதன் அங்கமாகத்தான் அரசுக் கட்டமைப்பும் கார்ப்பரேட் ஆதிக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தை எதிர்கொண்டிருப்பதாகும்.

இதன் அடிப்படையிலேயே, அரசுத் துறைகளில் ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணிமுறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு ஆகியவை திட்டமிட்டு நடந்தேறி வருகின்றன. இந்த டிஜிட்டல்மயமாக்கத்தின் மூலம் “அலுவலகம் இல்லா அரசு நிர்வாகம் – ஊழியர்கள் இல்லாத பணி முறை” என்ற நிலையை ஒன்றிய-மாநில அரசாங்கங்கள் சத்தமின்றி உருவாக்கி வருகின்றன.

ஆனால், அதனை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காக தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதனால்தான் மிகச் சொற்பமான அரசுப் பணியிடங்களுக்கான போட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, மிகச் சொற்பமான இடங்கள், மிக அதிகமான போட்டியாளர்கள் என்ற இந்த அராஜக நிலைமை – நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மேலும், கல்வி-வேலைவாய்ப்பு வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்வதைப் போல அதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொண்டு அதில் கார்ப்பரேட்டுகளை உள்நுழைக்கிறது. இதனால், நுழைவுத் தேர்வு என்பதே இந்தியாவில் மிகப்பெரிய சந்தையாக மாற்றப்பட்டு அதில் மோசடி-முறைகேடுகள், ஊழல், கொள்ளை உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஆகவே, பணியாளர் தேர்வுகளின் நோக்கமும் முதன்மையான இலக்கும் வேலை தருவதாக இல்லை; நீட் போன்ற தேர்வுகளின் முதன்மையான நோக்கம், மருத்துவக் கல்விக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதாக இல்லை. இவற்றை சந்தைமயப்படுத்துவதற்கு ஏதுவாக இந்தத் தேர்வை நடத்தும் பணிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழலில் ஈடுபடுகின்றன. தற்போது, பணியாளர் தேர்வுகளை நடத்தும் எடுகுயிட்டி நிறுவனம் வியாபம் போன்றதொரு ஊழலுடன் தொடர்புடையது என்பது இதற்குத் தக்கச் சான்றாகும்.

000

“திறமைக்குரிய வேலைவாய்ப்பு” என்ற முழக்கமானது முதலாளித்துவ ஜனநாயக உரிமையாகும். உரிமைக்கான போராட்டங்களை நடத்தி விழிப்புணர்வு பெற்றுள்ள நாடுகளில் இந்த உரிமையானது ஓரளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தினாலும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்திய அரசும் பல ஆண்டுகளாக மாறிமாறி நிலவிய ஆட்சிகளும், நீண்டகாலமாகவே, “திறமைக்குரிய வேலைவாய்ப்பு” என்ற ஜனநாயக முகமூடியை அணிந்து மக்களை ஏமாற்றியே வந்தன. 2014-இல் இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்புவரை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொள்கை ரீதியாக இந்த முகமூடியைத் தக்கவைப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், 2014-இல் இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், இந்தக் கொள்கையானது கொஞ்சம் கொஞ்சமாக மறைமுகமாக கைகழுவப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான், ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் பணியாளர் தேர்வுகள், மருத்துவம் உள்ளிட்ட கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரித்துவருவதும், முறைகேடுகள் மலிந்திருப்பதும் ஆகும்.

“திறமைக்குரிய வேலைவாய்ப்பு” கிடைக்காது என்று இந்த இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. வேலைவாய்ப்பு இருப்பதைப் போன்ற தோற்றத்தை நிலைநிறுத்திக் கொண்டே, உழைக்கும் மக்களை ஒடுக்குவதுதான் அதன் இலக்காகும்.

அதேபோல், இசுலாமியர்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர், அவர்களால்தான் வேலையின்மை உருவாகிறது, அவர்களால்தான் இந்துக்களின் தொழில்களும் வியாபாரமும் நசிகிறது என்ற இந்துமதவெறிப் பிரச்சாரத்தை பாசிச கும்பல் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

ஆனால், என்னதான் பாசிஸ்டுகளின் இந்துமதவெறிக்கு பலியாகியிருந்தாலும், தங்களது வாழ்வாதாரம் என வரும்போது, திறமைக்கேற்ற வேலை, உயர்ந்த ஊதியம் வேண்டுமென்ற உணர்வானது, பெரும்பான்மையான படித்த இளைஞர்களிடம் ஆதிக்கம் செலுத்தவே செய்கிறது.

திறமைக்கேற்ற வேலைவாய்ப்பும் மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசுக் கட்டமைப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் இந்துராஷ்டிர – கார்ப்பரேட் அடிமைத்தனத்தை நோக்கி வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், திறமைக்கேற்ற வேலைவாய்ப்பையும் மக்களுக்கு பொறுப்பு கூறும் ஜனநாயகக் கட்டமைப்பையும் எதிர்பார்க்க முடியாது; இந்த அரசுக் கட்டமைப்பை சீர்த்திருத்தி, அவற்றை நிலைநாட்டிவிடவும் முடியாது.

தேர்வில் நேர்மையான அணுகுமுறை வேண்டுமென்று கருதுபவர்கள் தேர்தலில் நேர்மையான முறை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வில் மட்டுமல்ல, தேர்தலிலும் நேர்மையான முறையில்லை.

ஆகஸ்டு 6-ஆம் தேதி நேர்மையான தேர்வு முறை வேண்டுமென்று எஸ்.எஸ்.சி. தேர்வர்கள் டெல்லி சலோ போராட்டம் நடத்தினர்; ஆகஸ்டு 11-ஆம் தேதி, நேர்மையான தேர்தல் வேண்டுமென்று (ஓட்டுத் திருட்டுக்கு எதிராக) எதிர்க்கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்; தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென்று தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் கட்டடத்தை முற்றுகையிட்டுப் போராடினர்.

இவை அனைத்தும் வேறு வேறு விசயங்கள் அல்ல, இவை அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் கார்ப்பரேட்மயமாகி வருவதன் சான்றுகளாகும்.

விவசாயத்தை அழித்தல், காடுகளை ஆக்கிரமித்தல், சிறுதொழில்களை நாசம் செய்தல், அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடுதல் போன்றவற்றையே கொள்கையாகக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பு, தனக்கான பணியாளர் தேர்வுகளை மட்டும் எப்படி நேர்மையாக, முறைகேடுகள் இல்லாமல் நடத்த முடியும்?

ஆகையால், உழைக்கும் மக்களின் நலன், தற்சார்ப்பு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்தரவாதம், இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகும்; இவற்றை உண்மையான ஒரு ஜனநாயகக் குடியரசால்தான் உத்தரவாதப்படுத்த முடியும். அதனை உருவாக்குவதற்கு மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.

ஆகஸ்டு 6-ஆம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, “டெல்லி சலோ” போராட்டத்தை நடத்தியவர்கள் இதனை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை!


நந்தன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: திறந்தவெளிச் சிறைச்சாலையாகும் தமிழ்நாடு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஊழலின் மறுபெயர் பா.ஜ.க.
  • ஜார்கந்து: இந்து மதவெறியர்களின் பிர்த்தாளும் சூழ்ச்சி
  • முதலாளிகள் அடித்த வங்கிக் கொள்ளை
  • வறட்சி தேசியமயம் தண்ணீர் தனியார்மயம்
  • உரிமையில் சட்டத் திருத்தம்: பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் சட்ட மறுவார்ப்பு
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 19
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாசிச ஜெயாவின் “பொடா” பாய்ச்சல் சந்தர்ப்பவாதிகளின் வெற்றுக் கூச்சல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • துணைப் பிரதமராக அத்வானி அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். ஆட்சி
  • குஜராத்: முசுலீம் பிணங்களின் மீது தேர்தல் திருவிழா
    இந்து மதவெறி பாசிச வக்கிரம்
  • போபால் விஷவாயுப் படுகொலை: கொலைகாரனுக்குக் கவசமாக இந்திய ஆட்சியாளர்கள்
  • “கிரிமினல்கள் வேட்பாளராகலாம்!” இந்து வெறியர்கள் தொடங்கி ‘இடதுசாரிகள்’ வரை ஒரே கொள்கை
  • முதலாளிகளுக்குத் தரிசு நிலம்! விவசாயிகளுக்குத் திருவோடா?
  • பண்ணைச் சுரண்டலுக்கு எதிராகக் குத்தகை விவசாயிகளின் போராட்டம்
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 18
  • நேபாளம்: இமயத்தில் உயரும் செங்கொடி அரசு பயங்கரவாதிகளுக்குப் பேரிடி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி

கிரேட் நிகோபார் திட்டம்:
கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 01-31, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 9 | ஜூலை 01-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காவிரியில் தண்ணீர் விடாத கிருஷ்ணா நெல்லைக் கொள்முதல் செய்யாத ஜெயா
    எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அப்துல் கலாம்: அரசுத் தலைவராகும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசி
  • “பேசி முடிச்சுவுடு தலைவா!” கொல்லைப்புறத்தில் கெஞ்சல் எல்லைப்புறத்தில் கூச்சல்
  • திண்ணியத்தில் வன்கொடுமை
    சட்டப்பூர்வ வழிமுறைகள் இனியும் சாத்தியமா?
  • தோலிருக்க சுளை முழுங்கிய டாடா
  • பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு வலது கம்யூனிஸ்டுகள் விருது: ஓம் சக்தியும் ஜனசக்தியும்
  • காலச்சுவடு கருத்தரங்கம்: பச்சோந்தியின் நிறம் படிப்பாளிகளின் திறம்
  • பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
  • கோகோ கோலா: குளிர்பான நிறுவனமா? கொலைக்காரக் கூடாரமா?
  • அழுகி நாறும் ஜனநாயகம் அத்தர் பூசும் ‘சேரிப் புயல்’
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காலம் உருவாக்கியத் தலைவர் மலைச்சாமி

“வரலாறு தனக்கு தேவையானவர்களை தானே உருவாக்கும்” என்கிற கூற்றிற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய “மாவீரன் மலைச்சாமி”.

ஏனெனில், அவர் பிறந்த காலத்தின் சூழல் அவ்வாறு இருந்தது.

இதற்கு சான்றாக, டிசம்பர், 1930-இல் தேவகோட்டையில் நடைபெற்ற நாட்டார் மாநாட்டை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அம்மாநாட்டில் அங்கு வாழும் பட்டியல் சமுதாய மக்களின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. பட்டியலின மக்கள் படிக்கக்கூடாது; மேலாடைகள் எதுவும் அணியக்கூடாது; பெண்கள் வெள்ளி தண்ணீர்க் குடங்கள் பயன்படுத்தக் கூடாது; பெண்கள் பித்தளை பாத்திரங்களை தலையில் சுமக்கக் கூடாது; தங்கச் சரிகை முலாம் பூசப்பட்ட எந்தவொரு ஆடையையும் அணியக்கூடாது; தலையில் தலைப்பாகை கட்டக்கூடாது போன்ற பல கட்டளைகள் அம்மாநாட்டில் போடப்பட்டன. ஆரம்பக் காலங்களில் எட்டு கட்டளைகளாக இருந்த அவை, பின் 1931-இல் மேலும் விரிவடைந்து, 12-ஆக மாற்றப்பட்டன.

இது ஏதோ அந்த ஒரு இடத்தின் சூழல் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தென்மாவட்டங்களிலும் இதுதான் சூழலாக இருந்தது.

இப்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த சாதியம் எனும் தமிழ் மரபுக்கு எதிரான மரபினை, மதுரை மண்ணில் மட்டுமல்லாமல் தமிழ் நிலமெங்கும் அழித்தொழிக்க முனைந்தவர்தான் மாவீரன் மலைச்சாமி.

11 மார்ச், 1954 அன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இருளாயி-அழகப்பன் இணையருக்கு மகனாக பிறந்தார் மலைச்சாமி.

பெரியாரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மலைச்சாமி, சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திராவிடர் கழகத்தில் இணைந்து, 1978-இல் திராவிடர் கழகத்தின் மதுரை மாவட்ட இளைஞரணியின் துணைத் தலைவரானார். ஊர் பெயர்களில் சாதிய அடையாளங்களை துடைத்தெறிவதற்காக சக மாணவர்களை இணைத்துக்கொண்டு போராடினார். பச்சேரி-யை (பள்ளர் மக்கள் வசிக்கும் பகுதி) இமானுவேல் நகர், பெரியார் நகர் என்றும், பறச்சேரி-யை டாக்டர் அம்பேத்கர் நகர் என்றும், சக்கிலியச்சேரி-யை விடுதலை நகர் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக போராட்டங்களை முன்னெடுத்தார்.


படிக்க: தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!


அதேபோல், “மாணவர் எழுச்சி மன்ற”த்தை தொடங்கி மாணவர்களின் கல்வி உரிமைக்கானப் போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக, 1980-களில் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வந்த தமிழீழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பட்டியல்-பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகையை பெறுவதற்கு 90 சதவிகித வருகைப் பதிவை கட்டாமாக்கியது எம்.ஜி.ஆர். அரசு.  அதற்கெதிராக மலைச்சாமி மதுரையில் போராட்டங்களை நடத்தினார். இது பின்னர் தமிழ்நாடு முழுக்க பரவியதையடுத்து அந்த அறிவிப்பு இரத்து செய்யப்பட்டது.

அச்சமயத்தில், மலைச்சாமி அம்பேத்கரிய கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மறுபுறம், “பாரதிய தலித் பேந்தர்ஸ்” (DPI – Dalit Panthers of India) அமைப்பு மகாராஷ்டிராவில் வளர்ந்து வந்தது. இதனையடுத்து, 1983-ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் மலைச்சாமி தலைமையில் “பாரதிய தலித் பேந்தர்ஸ்” அமைப்பு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

செப்டம்பர் 14, 1989 அன்று மலைச்சாமி (33 வயதில்) உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து,  தொல். திருமாவளவன் தலைமையேற்ற தலித் பேந்தர்ஸ் இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, “விடுதலை சிறுத்தைகள் கட்சி”யாக செயல்பட்டு வருகிறது.

அருந்ததியர்களை கூர்மைப் படுத்தியவர்

“சாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்றால், முதலில் ஒழிக்கப்பட வேண்டியது பட்டியல் சமுதாய மக்களிடமுள்ள வேற்றுமைகளைத்தான்” என்றார் மலைச்சாமி.

இதை சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அம்மக்களிடம் பரவியிருந்த சாதிய முரண்பாட்டை அவர் எதிர்த்து நின்றார். அதற்கு சிறு சான்றுதான் ஐந்து வீடு கிணறு போராட்டமாகும்.

அவனியாபுரத்திற்கு அருகில் ஐந்து வீடு மற்றும் சோமநாதபுரம் கண்மாய் ஆகிய பகுதிகள் உள்ளன. அங்கு கள்ளர் சமுதாய மக்கள்தான் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்றாலும், அவ்வூரைச்  சுற்றியுள்ள சில பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர்களும் அருந்ததியர்களும் வசித்து வந்தனர்.

இதில் தேவேந்திரர்கள் உழவுத் தொழில் செய்து வந்தனர். இதனால் அவர்கள் கொண்டுவரும் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு குடிநீருக்காக அருகிலிருந்த கள்ளர்களின் கிணற்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறு செல்லுகையில், ஒருவேளை அவர்கள் மற்றவர்களைவிட விரைவாகச் சென்றாலும், அங்கிருக்கும் சாதி இந்து பெண்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். இது அந்த ஊரிலிருந்த எழுதப்படாத விதியாகும்.

ஏனெனில், தாமாக தண்ணீர் எடுத்து குடிக்கக்கூடிய உரிமை அப்போது அங்கிருந்த தேவேந்திரர்களுக்கு கிடையாது. இப்படி, சாதி இந்துக்களால் கொடுமைகளை அனுபவித்து வந்த அம்மக்கள், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தண்ணீர் குடிப்பது தமது உரிமை என்று போராடாமல், சாதி இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு, அமைதிக் காத்தனர்.

ஒரு பக்கம் அங்கிருக்கும் சாதி இந்துக்களின் ஆதிக்க சிந்தனை தேவேந்திரர்களை அடிமையாக்கி வைத்திருந்தது என்றாலும், தேவேந்திரர்களிடம் படிந்திருந்த சாதியம் தாழ்த்தப்பட்ட மக்களில் மற்றொரு பிரிவினரான அருந்ததியர்களை சீண்டிப் பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில், மயானத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளர்களும் தங்கள் வீட்டிற்கு அருகில் வரும் பட்சத்தில், மலைச்சாமியின் ஊரான பெரியார் நகரைச் சேர்ந்த தேவேந்திரர்கள், அவர்களுக்கு குவளைகளில் தண்ணீர் கொடுக்காமல், கையில் தண்ணீர் ஊற்றும் இழி-வழக்கத்தை  பின்பற்றி வந்தனர்.

இதனை உணர்ந்த மலைச்சாமி, தாழ்த்தப்பட்ட மக்களிடையே நிலவும் இப்பாகுபாடு ஆக மிக ஆபத்தானது என்று உணர்ந்து அதனை ஒழிக்கத் துணிந்தார்.

அதன் முதல் கட்டமாக, ஊரில் இருந்த மூன்று கிணறுகளிலும் அருந்ததியர்களை கொண்டு தண்ணீர் இறைக்கச் செய்து, சாதிய மனோபாவத்திற்கு சவுக்கடிக் கொடுத்தார் மலைச்சாமி!

மணிக்குறவன் எனும் மாவீரனும்
மேலவாசல் பாக்கியம் படுகொலையும்

இன்றைய காலகட்டத்திலும் பட்டியல், பழங்குடியின மக்கள் பேருந்து, பேருந்து நிறுத்தம் வேண்டி போராடும் அவலங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல், மதுரை மேலவாசலில் வசிக்கும் பட்டியல் சமுதாய மக்கள் வாழும் பகுதிகளுக்கு பேருந்துகளை கொண்டுவர அம்மக்கள் செய்த தியாகம் முக்கியமானது.

அதில் ஒன்றுதான் மணிக்குறவனின் தியாகம்.

அவர் வாழ்த்த காலகட்டத்தில் “டி.வி.எஸ்” என்ற பேருந்து கம்பெனி ஒன்று இருந்தது. அது பல இடங்களில் அடித்தட்டு மக்களை அனுமதிக்காமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதே நிலை அவர்கள் ஊரிலும் இருந்தது.


படிக்க: தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!


இதனை எதிர்த்த மணிக்குறவன், பேருந்தில் ஏற விடாமல் தடுத்த ஓட்டுநரை எதிர்த்துக் கலகம் செய்தார்.

மேலும், பட்டியல் சமுதாய மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பெண்களை அவமானப்படுத்துவது அக்காலத்தில் வாடிக்கையாக இருந்தது. அவர்கள் யாராக இருந்தாலும் அதைச் செய்தவர்களை அவர் இழுத்துபோட்டு அடித்தார். யார் யாரெல்லாம் சாதிய மனோபாவத்துடன் குடியிருப்புகளுக்குள் நுழைகிறார்களோ, அவர்களை எல்லாம் எதிர்த்து நிற்கும் வல்லமையும் அதீத வீரமும் அவருக்கு இருந்தது. இதனை நன்றாகப் புரிந்துகொண்ட சாதி இந்துக்கள் சமயம் பார்த்து அவரைத் தீர்த்துக் கட்டினர்.

வீரம் நிறைந்த மணிக்குறவனின்  வம்சாவழியில் வந்தவர்தான் மேலவாசல் பாக்கியம்.

அவருடைய சமகாலத்தில் அங்கிருந்த சாதி இந்துக்கள் கஞ்சா வியாபாரம் செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சமூக விரோதச் செயல்களை ஊருக்குள்ளேயே செய்து வந்தனர். இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்களை ஆள் வைத்து அடித்ததுடன், வீடு தேடிச் சென்று வெட்டிக் கொன்றனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, செருப்பு தைக்கும் இளைஞரான மேலவாசல் பாக்கியம், தன் தலைமையில் “மேலவாசல் இளைஞர்கள்” என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். பின்னர், அதனை மலைச்சாமி தலைமையில் இயங்கிவந்த தலித் பேந்தர்ஸ் அமைப்போடு ஒருங்கிணைத்து, அதன் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சாதிவெறியை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தார்.

இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியர்கள் அவரையும் அவரின் நண்பர்களையும் தாக்கினர். இச்செய்தி மலைச்சாமியின் செவிகளை எட்டியவுடன், பெரும் படையுடன் சென்று சமூகவிரோதியான பருத்தியூரானை தாக்குவதற்காகத் தேடினார். அவர் எங்கும் கிடைக்காததால் பாக்கியத்தின் மூலம் போலீசுதுறைக்கு ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவினை சிறிதும் பொருட்படுத்தாத போலீசுதுறையினர், சமூகவிரோதிகளை வெளியில் நடமாடவிட்டனர்.

இதனைக் கண்ட மலைச்சாமி மேலவாசலில் ஒரு கூட்டம் போட்டு, “சமூகவிரோதிகள் யாராவது ஊருக்குள் நுழைந்தால், அவர்களை போலீசுதுறையின் உதவியின்றி நாமாக அடித்து விரட்டுவோம்” என்றார். அத்துடன், சாதி மனோபாவத்துடன் செயல்பட்டு வந்த போலீசுதுறையினருக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு, அச்சமூகவிரோதிகள் பிடிக்கப்பட்டு போலீசுதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், வெளியே வந்து மேலவாசல் பாக்கியத்தை திட்டமிட்டு படுகொலை செய்தனர். “ஒரு சக்கிலிப் பய நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் வந்திருச்சா…” என்று கூறிக்கொண்டே சாதிய வன்மத்துடன் பாக்கியத்தின் கழுத்தை அறுத்து கொன்றனர்.

இதற்கெதிராக தலித் பேந்தர்ஸ் மதுரையில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தது. இது அக்காலகட்டத்தில், தலித் பேந்தர்ஸ் முன்னெடுத்த போராட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

உத்தப்புரம் சாதி எதிர்ப்புப் போர் – 1989

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே சேட்டப்பட்டி ஒன்றிய பகுதியில் உள்ள ஊர் உத்தப்புரம். இங்கே பல்வேறு சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள் என்றாலும், பெரும்பான்மையாக தேவேந்திரர்களும் பிள்ளைமாரும்தான் வாழ்கிறார்கள்.

அந்த ஊரின் மையத்தில் முத்தாலம்மன் என்ற ஒரு கோவில் உள்ளது. அக்கோவிலில் பட்டியல் சாதி மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், அவ்வூரில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கவும் பிள்ளைமார் சமூகத்தினர் மறுத்து வந்தார்கள். ஒருவேளை நிழற்குடை அமைந்துவிட்டால் தேவேந்திரர்கள் அதில் அமர்ந்து விடுவார்கள், அதனால் பிள்ளைமார்களின் ‘கௌரவம்’ குறைந்துவிடும் என்ற அப்பட்டமான சாதிய மனநிலையே அதற்கான காரணமாகும்.

மேலும், அங்கிருந்த பிள்ளைமார் சமூகத்தினர் தேவேந்திரர், பறையர் மக்களை ஒதுக்கி வைப்பதற்காக 12 அடி உயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட நீண்ட தீண்டாமை சுவரை உருவாக்கி வைத்திருந்தனர்.

மேற்கண்ட இம்மூன்று பிரச்சினைகளையும் எதிர்த்து, பல தருணங்களில் சாதியக் கலவரங்கள் நடந்துள்ளன.

இறுதியாக, 2008-ஆம் ஆண்டு “சாதி ஒழிப்பு முன்னணி” போன்ற பல்வேறு இயக்கங்களின் தொடர் போராட்டதால் அத்தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் தேவேந்திரர் சமுதாய இளைஞர் ஒருவர் மீது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்தது. அப்படுகொலையை எதிர்த்து தேவேந்திரர்களும் இதர பட்டியல் சமுதாயத்தினரும் நடத்திய உரிமை போராட்டத்தில் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு என அனைத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டன. அதில், ஐந்து தேவேந்திர குல வேளாளர் மக்களும், இரு சாதி இந்துக்களும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீண்டாமை சுவர் எனும் இந்த அநீதியை எதிர்த்து தோழர் மலைச்சாமி அவர் வாழ்ந்த காலத்தில் அங்கு கண்டனக் கூட்டம் நடத்தியிருந்தார்.

ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களை ஒன்றிணைத்து அருகிலிருந்த எழுமலை எனும் ஊரில் கண்டனக் கூட்டத்தை நடத்தினார். அக்கூட்டத்தில், “சாதி இந்துக்களின் மனநிலையில் மாற்றம் ஏதும் வரவில்லை என்றால், இந்நிலை இப்படியே நீடித்தால், ஒவ்வொரு பட்டியலின இளைஞர்களும் தீரன் சுந்தரலிங்கத்தை போன்று, வீரத்தமிழச்சி குயிலியைப் போன்று மனித வெடிக்கிடங்காய் மாறுவோம்” என்று கடுமையாக எச்சரித்தார்.

தென்மாவட்டங்களில் இன்றைய நிலையும்
மலைச்சாமியின் தேவையும்

மலைச்சாமியின் காலகட்டத்தை போலவே தற்போதும் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய அடக்குமுறைகள் தீவிரமடைந்து வருகின்றன.

தேவேந்திர குல வேளாளர் மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்ட ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இன்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு கருங்காலிகளாக செயல்பட்டு வருகின்றனர்.  சான்றாக, “நான் இந்துக்களின் பாதுகாவலர்” என்கிறார் கிருஷ்ணசாமி. தென் மாவட்ட படுகொலைகள் அனைத்தும் “கஞ்சா போதையால் நடந்தது” என்கிறார் ஜான் பாண்டியன்.

ஆனால், தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்குமான மூலக் காரணம் கஞ்சா, மது பழக்கங்கள் கிடையாது. மாறாக, பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும், ஆதிக்கச் சாதி சங்கங்களில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்தான். மறுபுறம், தேவேந்திர குல வேளாளர் மக்களின் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி அம்மக்களையும் அணித்திரட்ட விழைகிறது.

இதன் மூலம் தென் மாவட்டங்களில் சாதி-மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி மதக்கலவரங்களை தூண்டுவதற்கு காவி கும்பல் திட்டமிடுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய மாபெரும் இழிவுக்கும், நீங்காத் துயருக்கும் காரணமாக உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை இத்தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க மலைச்சாமியின் வழியில் ஒன்று சேர்வோம்.

நாம் பிறப்பதற்கு முன் இருந்த சாதியை,
இறப்பதற்கு முன் கண்டிப்பாக அழித்தொழித்திட வேண்டும்…


இரா.சே கருணாகரன்,
சமூக செயற்பாட்டாளர்.

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 8 | ஜூன் 01-30, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: புலிகளின் இன விடுதலை துரோகம் ஈழம் மறுகாலானியாகிறது
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பா.ஜ.க.வின் பாசிசத் திணிப்பு பக்க மேளமாக எதிர்த் தரப்பு
  • வேலை நிறுத்தத் தடைச் சட்டம்: சட்டபூர்வ பாசிசம்
  • உ.பி.யில் மாயாவதி ஆட்சி: பிழைப்புவாதத்தின் வெற்றியா? தலித்தியத்தின் வெற்றியா?
  • போராட்டத்தில் ஊழியர்கள் உல்லாசத்தில் தலைவர்கள்
  • “தனியார்மயமும் தாராளமயமும் மறுகாலானியாக்கம்தான்!”-தோழர் அசோக்ராவ்
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 17
  • வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு மூக்கறுத்த அமெரிக்கா!
  • பஞ்சாப் சி.பி.எம். கட்சியில் பிளவு: புரட்டல்வாத சாக்கடையில் இன்னுமொரு புழு!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01-31, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 7 | மே 01-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாசிச ஜெயாவின் அதிரடி அரசியல் செய்வதறியாமல் எதிர்க்கட்சிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • சுயநிர்ணய உரிமைக்குப் புலிகளின் புதிய வியாக்கியானம்
  • ஆறு மாதங்களில் ரூ. 5000 கோடி வரி: பாசிச ஜெயா அரசின் பகற் கொள்ளை
  • பொய் வழக்கு, கைது, அடக்குமுறைகள்: “தடா”வை விஞ்சும் “பொடா”
  • பாப்பாபட்டி – கீரிப்பட்டி உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை
  • போலீசு வெறியர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகம்
  • தாராளமயத்தின் பத்தாண்டு கால ‘சாதனை’: மரணத்தின் விளிம்பில் மகாராஷ்டிரா
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 16
  • அடிப்படைக் கல்வியுரிமை கானல் நீரா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram