அமெரிக்க – இந்திய காம்பாக்ட் எனப்படும் இராணுவக் கூட்டணி, துரித வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் (US-India COMPACT – Catalyzing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology) என்ற திட்டத்தை கடந்த சில மாதங்களாக பாசிச மோடி அரசு இந்தியாவில் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள், நிதிமூலதனக் கும்பலின் சூறையாடலுக்காக இந்தியாவின் விவசாயம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் திறந்துவிடும் வகையில் இத்திட்டத்தின் கூறுகள் உள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றவுடன், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அப்போதுதான் இந்தக் “காம்பாக்ட் திட்டம்” இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க-இந்திய கூட்டுத் தலைவர்களின் அறிக்கை (United States – India Joint Leaders’ Statement) என்ற பெயரில் இத்திட்டத்தின் விவரங்கள் வெள்ளை மாளிகையால் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்தியா
காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்துவது என்ற இலக்கின் அடிப்படையிலேயே, சமீப மாதங்களாக இரு நாடுகளும் இருதரப்பு ஒப்பந்தத்திற்கான (Bilateral Trade Agreement) பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தில் விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான இந்திய சந்தையை அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்துவிடக் கோரி அமெரிக்க அரசு மோடி அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்க அரசின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொண்டால் கோடிக்கணக்கான விவசாய மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் மோடி அரசுக்கு உள்ளது. இதனால் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், இந்திய விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு படிப்படியாகவும் மறைமுகமாகவும் திறந்துவிடுவது என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும், விலை அதிகமாக உள்ள போதிலும் அமெரிக்காவிடமிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு கொள்முதலை அதிகரிக்கக்கோரி மோடி அரசை காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசு நிர்பந்தித்து வருகிறது. இதற்கு மோடி அரசும் அடிபணிந்துள்ளது. இதனால் 2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் 1.69 மில்லியன் டன்னாக இருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி, 2025 ஜனவரி–ஏப்ரல் மாதத்தில் 6.31 மில்லியன் டன்னாக அதிகரித்து இருக்கிறது. 2026-ஆம் ஆண்டுக்குள் எல்.பி.ஜி. எரிவாயு இறக்குமதியில் 10 சதவிகிதத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய மோடி அரசு இலக்கு வைத்துள்ளதாகவும், எரிவாயுக்கான இறக்குமதி வரியை நீக்குவதற்கு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதேபோல, இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்து இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பதற்கு மோடி அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்கு சாதகமாக சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள உள்ளது. மேலும், தொலைதொடர்புத் துறையில் எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு இணைய சேவை வழங்க அனுமதியளித்திருப்பது போன்றவையும் காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவின் காடுகள், மலைகள், கடற்பரப்புக்கு அடியில் புதைந்து கிடக்கும் லித்தியம், கிராஃபைட், கோபால்ட் உள்ளிட்ட அரிய வகைத் தனிமங்களையும் பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயுக்களையும் கையகப்படுத்தும் வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து புதிய கூட்டிணைவுத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரிய வகைத் தனிமங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்காக சீனக் கார்ப்பரேட்டுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, பாசிச மோடி அரசு அம்பானி-அதானிகளின் கனிமவளக் கொள்ளைக்காக, “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை)” திருத்தச்சட்டம், வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு சட்டத் திருத்தங்களையும் சுரங்கத்துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும், நாடு முழுவதும் எங்கெல்லாம் அரியவகைக் கனிமங்கள் புதைந்துள்ளன என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அக்கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்க ஏலங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் கூட, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை அறிவித்து மக்களின் போராட்டத்தினால் மோடி அரசு அதை நிறுத்தி வைத்திருக்கிறது. சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்குத் தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளையும் பழங்குடியின மக்களையும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் நரவேட்டையாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக காம்பாக்ட் திட்டத்தை மோடி அரசு ஏற்றுக்கொண்டிருப்பதானது, இந்தியாவில் கனிமவளக் கொள்ளை மேலும் தீவிரப்படுத்தப்படுவதற்கான பேராபயத்தைக் கொண்டிருக்கிறது.
அதேபோல, அமெரிக்காவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்று காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள அமெரிக்காவின் பொருளுற்பத்தி மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்களை அமெரிக்காவிற்கு திருப்பி அழைக்கும் ட்ரம்ப் அரசு, அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்குவதற்கு மட்டும் அனுமதிக்கிறது.
பாசிச மோடி அரசோ, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வித் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் தன்னுடைய நோக்கத்திலிருந்து அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை மோடி அரசு அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்தே, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதித்து வருகிறது. இப்பல்கலைக்கழகங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் சூறையாட உடந்தையாக இருக்கிறது.
அதாவது அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒருபுறம் மூடுவிழா நடத்திக்கொண்டு, பணம் படைத்தவர்கள் மட்டும் தனியார், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயில முடியும் என்ற நிலைமையை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மேலும், அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்காக அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து இராணுவக் கூட்டணியை உருவாக்குவது; அதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது; அமெரிக்காவிலிருந்து ஆயுத ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் “சர்வதேச ஆயுத போக்குவரத்து விதிமுறைகள்”-ஐ (ITAR) மறு ஆய்வுக்கு உட்படுத்துவது; கப்பல் மற்றும் டாங்கிகளை தாங்குவதற்கான ஏவுகணைகளையும் போர்க் கப்பல்களையும் இந்தியா கொள்முதல் செய்வது; அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் இந்தியாவின் மகேந்திரா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!
அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் கார்ப்பரேட் கும்பலின் மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப இந்தியாவை மறுகாலனியாக்குவது என்ற நோக்கத்திலிருந்து அமல்படுத்தப்படும் காம்பாக்ட் திட்டமானது, மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனமாகவே உள்ளது. அந்தவகையில், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காம்பாக்ட் திட்டத்தில் உள்ள கூறுகளை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது.
அதாவது, அமெரிக்க அரசின் அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட சிறிய நாடுகளே எதிர்ப்பு தெரிவித்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் போது, ‘56 இன்ச் மார்பு’ கொண்ட மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசோ, அமெரிக்க அரசின் செல்லப்பிராணியைப் போல அதன் காலில் விழுந்து கிடக்கிறது.
கடந்த ஜூலை 30 அன்று கூட, “ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அரசு அடாவடித்தனமாக அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டியிருக்கிறது. ஆனால், எப்போதும் போல இந்த வரி விதிப்பிற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் பேச்சுவார்த்தையின் மூலம் வரியைக் குறைக்கும் நடவடிக்கையிலேயே மோடி அரசு ஈடுபடும்.
மேலும், காம்பாக்ட் திட்டத்தை மோடி அரசு இந்தியாவில் செயல்படுத்தி வருவதில் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின் நலன் அடங்கியிருக்கிறது. சான்றாக, அமெரிக்காவிலிருந்து விவசாய மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, உரத் தட்டுப்பாடு, விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்காததால் நொடித்துப் போயிருக்கும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவது பன்மடங்கு அதிகரிக்கும். அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலங்களை கைப்பற்றி கார்ப்பரேட் விவசாய பண்ணையார்களாக உருவெடுக்க வேண்டும் என்ற சதித்திட்டம் அம்பானி-அதானி கும்பலுக்கு உள்ளது.
ஆகவே, “காம்பாக்ட் திட்டத்திலிருந்து வெளியேறு”, “அமெரிக்காவுடனான அடிமை ஒப்பந்தங்களை கிழித்தெறி” உள்ளிட்ட முழுக்கங்களை முன்வைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அத்தகைய போராட்டங்களே இந்திய, அமெரிக்க அரசுகளை பணிய வைக்கும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 10-12 | ஏப்ரல் 01-30, மே 1-15, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 8-9 | மார்ச் 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா என்பவர் வரதட்சணைக் கொடுமைத் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ரிதன்யா தன்னுடைய தந்தைக்கு அனுப்பிய குரல் பதிவில், “மனதளவிலும் உடலளவிலும் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன். எல்லோரும் சகித்துக்கொண்டு வாழ சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை” என்று கதறி அழுந்துகொண்டே கூறும் வார்த்தைகள் கேட்போரின் மனதை உலுக்குகிறது.
ரிதன்யாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வரதட்சணைக் கொடுமை சம்பவங்களும் வழக்குகளும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இச்சம்பவங்கள் மறுகாலனியாக்கக் காலகட்டத்தில், வரதட்சணைக் கொடுமைகளும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் புதிய பரிமாணம் எடுத்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை
இந்தியாவில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மறுகாலானியாக்கக் காலகட்டத்தில் ஆபாச திரைப்படங்கள், போதைக் கலாச்சாரம் காரணமாக ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உச்சநிலையை அடைந்துள்ளன. இதன் விளைவாக, பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் மிகவும் கொடூரமானதாக மாறியிருக்கின்றன.
சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவன் வரதட்சணைக் கேட்டு தன் மனைவியை சித்திரவதை செய்ததை சிரித்துக்கொண்டே தன்னுடைய சகோதரியிடம் பகிர்ந்துகொள்ளும் குரல் பதிவு சமூக ஊடகங்களில் பரவி அனைவரிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய குரூர மனநிலைக் கொண்ட பூபாலன் ஒரு போலீசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வேலூரில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் வீட்டை எழுதி வாங்கி வரச் சொல்லியும் கணவனே மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
இவ்வன்முறைகளில் பெண்களை அடித்து துன்புறுத்துவது மட்டுமின்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது. 2019-2021 இடையிலான ஆண்டுகளில், 31.2 சதவிகிதப் பெண்கள் இந்தியாவில் குடும்ப வன்முறையை எதிர்கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில், 5.7 சதவிகிதம் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். உண்மை நிலவரமோ இதனைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
ரிதன்யா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் தன் தந்தைக்கு அனுப்பிய குரல் பதிவில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். கணவன் குடும்பத்தாரின் கொடுமை தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு வந்த ரிதன்யா, நொண்டி நொண்டி நடந்ததாகவும் இடுப்பு அமைப்பே மாறியிருப்பதாகவும் அவருடைய அப்பா கூறியிருக்கிறார். இது இயற்கைக்கு மாறான பல வழிகளில் ரிதன்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
அதேபோல், கடந்த ஜூலை மாதம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் வரதட்சணைக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தனது வாக்குமூலத்தில், மாமனாரும் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கும் அளவிற்கு கூட, குடும்பத்திற்குள் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்படுவதில்லை.
ஏனெனில், பெரும்பான்மையானோர் கணவன் தனது மனைவியிடம் அத்துமீறுவதை வன்முறையாகவோ வல்லுறவாகவோ கருதுவதில்லை. குறிப்பாக, “பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள். அவளுக்குத் தனி உரிமைகள் கிடையாது. அவளும் அடிமையும் ஒன்றே.” என்ற பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்துகள் பெண்களை தனது உடைமையாக கருதுவதற்கும் வன்முறையை ஏவுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது.
திருமணம் என்பதே பெண்கள் மீது பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களைத் தொடுப்பதற்கு ஆணுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமாகத்தான் கருதப்படுகிறது.
எனவேதான், இத்தகைய அத்துமீறல்களை சகித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களே பெண்களை வற்புறுத்துகின்றனர். ரிதன்யா தனக்கு நேர்ந்த கொடுமைக் குறித்து, பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் ரிதன்யாவை சகித்துக்கொள்ள சொன்னதற்கும், ரிதன்யாவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய தந்தை “ஒருவனுக்கு ஒருத்தி என்று என்னுடைய மகள் இருந்துவிட்டாள்” என்று கூறியதற்கும் இந்த பார்ப்பனிய ஆணாதிக்க மனநிலையே அடிப்படை காரணம்.
மேலும், பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்துவிட்டோம், பெண் கணவனுடன் வாழாமல் பிரிந்து வந்துவிட்டால் “குடும்ப கௌரவம்” பறிபோய்விடும் என்ற ஆணாதிக்க-சொத்துடைமைக் கண்ணோட்டத்திலிருந்தும் இத்தகைய குடும்ப வன்முறைகளை பெண்களும் அவர்களது பெற்றோர்களும் சகித்துக் கொள்கின்றனர்.
இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை எந்தளவிற்கு தீவிரமாக இருந்தது என்பதற்கான சாட்சியம்தான் பெண்சிசுக் கொலை. பெண் குழந்தையை வளர்த்து வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியாது என்று பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிடுவர். 1970-களில் தமிழ்நாட்டில் பெண்சிசுக் கொலை தலைவிரித்தாடியது. தற்போதும் அவ்வப்போது பெண்சிசுக் கொலை நடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை வரதட்சணைக் கொடுமை குறைந்து விட்டதால் பெண் சிசுக்கொலை குறைந்துவிட்டது என்று பார்க்க முடியுமா? உண்மையில், பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.
படித்த இளைய சமுதாயம் உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக குறைவதற்குப் பதிலாக, வரதட்சணை என்பது திருமணத்திற்கான நிபந்தணையாக மாறியிருக்கிறது.
இன்றைய காலத்தில் வரதட்சணையாக நகை, பாத்திரங்கள், பெட்டிப் பணம் கொடுப்பதைத் தாண்டி, பெண்ணின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைப்பது, நிலம்-வீடு என்ற வகையில் சொத்தாக எழுதிக் கொடுப்பது, மாப்பிள்ளை தொழில் செய்பவராக இருந்தால் அவருக்கு தொழில் ஏற்படுத்திக் கொடுப்பது என்று இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவையெல்லாம் வரதட்சணை இல்லையாம் திருமணப் பரிசாம். ஆம், இன்றைய காலகட்டத்தில் வரதட்சணையானது திருமணப் பரிசாகப் பரிணமித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவரும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகள் கனிஷ்கா, கணவர் வீட்டில் இருட்டுக் கடை உரிமையை வரதட்சணையாக கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகாரளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மையில், வரதட்சணை என்பதே பெண்களை ஆடு, மாடுகளைப் போல பேரம் பேசி விற்கும் பெண்ணடிமைத்தனமாகும். இதனை சுயமரியாதையுடன் எதிர்த்து நிற்க வேண்டிய பெண்கள் இன்றைய திருமண சந்தையில், தங்களுக்கான வரதட்சணையைத் தாங்களே கேட்டு பெறும் இழிநிலை உருவாகியிருக்கிறது. மேலும், இந்தியாவில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்று சட்டமிருந்தாலும், நடைமுறையில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. இதனால் தங்களுக்கான குறைந்தபட்ச சொத்தாக வரதட்சணையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கும் பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
திருமண சந்தை பகாசுரமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாளுக்கு நாள் திருமணங்களில் குடி-கூத்தின் பரிணாமங்கள் விரிவடைந்துக் கொண்டு செல்கின்றன. இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுப்பதற்கென பல நிகழ்ச்சி மேற்பார்வை நிறுவனங்கள் (Event Management) செயல்படுகின்றன. திருமண அரங்குகள், ஆடைகள், நகைகள், உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆடம்பர பரிசுப் பொருட்கள், சாராயம் என திருமணத்தையொட்டி மிகப்பெரிய வர்த்தகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் திருமணங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.10.7 லட்சம் கோடி என்று கணக்கிடப்படுகிறது.
இந்தத் திருமணச் சந்தையை ஊக்குவிப்பதற்காகவே “இந்தியாவில் திருமணம்” என்ற திட்டத்தை மோடி அரசு தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்திற்கான விளம்பரமாகவே அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற்றது.
பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் இந்தியத் திருமணச் சந்தையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கார்ப்பரேட்டுகள் போட்டிபோடுகின்றன. தங்களுடைய இலாபவெறிக்காக, வன்னியர், நாடார், செட்டியார் என ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனியாக “மேட்ரிமொனி” (Matrimony) செயலிகளை நடத்துவது தொடங்கி, வரதட்சணையை ஊக்குவிக்கும் வகையிலான நகை, ஆடை விளம்பரங்களை பரப்புவது வரை பார்ப்பனிய சாதி-ஆணாதிக்கப் பிற்போக்குத்தனங்களை கார்ப்பரேட்டுகள் ஊக்குவிக்கின்றன.
பாசிச கும்பலாட்சியில் தீவிரமாகும் பெண்கள் மீதான வன்முறைகள்
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகளை தடுக்கப்பதாகக் கூறிக்கொள்ளும் போலீஸ், நீதித்துறை, இராணுவம் முதலிய அரசு நிறுவனங்கள்தான் பெண்கள் மீதான வன்முறைகளை பாதுகாக்கும் அமைப்பாக உள்ளன என்பதுதான் இந்திய சமூகத்தின் அவலநிலை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 2017-2022 இடையிலான காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 7,000 வழக்குகள் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படுகின்றன. இதில் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளில் உத்தரப்பிரதேசம் (4,807) முதலிடத்திலும், பீகார் (3,580) இரண்டாம் இடத்திலும், கர்நாடகா (2,224) மூன்றாம் இடத்திலும் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. உண்மையில், பல பெண்கள் குடும்ப மானம், குடும்பத்தினர் மிரட்டல் காரணமாக தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை வெளியில் சொல்வதே இல்லை. அப்படியே சொன்னாலும் அது குடும்பதிற்குள்ளேயே பஞ்சாயத்து செய்து முடித்து வைக்கப்படுகிறது. அதனை மீறி சிலர்தான் வழக்கு தொடுக்க முன்வருகின்றனர். அப்படி முன்வரும் பல வழக்குகளிலும் போலீசுத் துறையினர் – அது மகளிர் போலீசாக இருந்தாலும் – தம்முள் ஊறியுள்ள ஆணாதிக்கப் புத்தியைக் கொண்டு அக்குடும்பத்திற்கு அறிவுரைக் கொடுத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி அனுப்பி வைக்கின்றனர் என்பதே எதார்த்தம்.
தற்போது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்துவருகிறது. இது, பெண்கள் மீது அரசு நிறுவனங்கள் தொடுக்கும் வன்முறைகளை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சான்றாக, 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை விகிதம் வெறும் 26.5 சதவிகிம்தான். அதேபோல், ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் திட்டமிட்டு புகுத்தப்படுவதால் காவிமயமாகிவரும் நீதிமன்றங்கள், பெண்களுக்கு எதிராக மனுநீதி அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கி பெண்களை வஞ்சிக்கின்றன.
கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறையை (Marital Rape) குற்றம் என்று அறிவிக்கக்கோரி நடந்த வழக்கில், திருமண பாலியல் வன்முறையை குற்றமாக்குவது மிகக் கடுமையானது என்றும் திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக போதுமான சட்டங்கள் உள்ளன என்றும் கூறி ஒன்றிய பா.ஜ.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில், 25 பெண்களில் ஒருவர் தங்களது கணவனால் பாலியல் வன்முறையை அனுபவிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில், திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறையைக் குற்றமாக்கக் கூடாது என பா.ஜ.க. அரசு வாதிடுவது அதன் பெண்கள்-விரோத சித்தாந்தத்தைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.
அடிப்படையிலேயே பெண்களுக்கு விரோதமான பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சியில், பாசிசமயமாகிவரும் அரசு கட்டமைப்பானது அப்பட்டமாக பெண்களுக்கு எதிரானதாக மாறி வருகிறது. இதனால், பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள், பாலியல் வன்முறைகள் மென்மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது.
[ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவையொட்டி ”புதிய ஜனநாயகம்” டிசம்பர் 2016 இதழில் வெளியிடப்பட்ட இக்கட்டுரை கியூபா தேசிய விடுதலைப் புரட்சியையும் ஃபிடல் காஸ்ட்ரோவின் பங்களிப்பையும் ஆராய்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு துவக்கத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 7, 2016 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட இக்கட்டுரை தற்போது மீள்பதிவு செய்யப்படுகிறது]
***
ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி !
கியூபா தேசிய விடுதலைப் புரட்சியின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.
காஸ்ட்ரோ மறைந்து விட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற தேச விடுதலைப் போராளி என்ற முறையில் அவரை நாம் நினைவு கூர்கிறோம். உலக மக்களின் இன்றைய முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடியோடு வெறுக்கின்ற உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாட்டு மக்கள் காஸ்ட்ரோவின்பால் விசேடமான ஈர்ப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்கின்ற அதே நேரத்தில், காஸ்ட்ரோவின் பாத்திரத்தை அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்வது அவசியம்.
தமது தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் கியூபா மக்கள்.
1959−இல் பாடிஸ்டா என்ற அமெரிக்க கைக்கூலி சர்வாதிகாரியின் ஆட்சியைத் தூக்கியெறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய காஸ்ட்ரோவின் தலைமையிலான ‘‘ஜூலை−26 இயக்கம்’’ என்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட ஒரு ஆயுதக்குழு. இது ஒரு விவசாயிகள் இயக்கமோ, தொழிலாளர் இயக்கமோ அல்ல. காஸ்ட்ரோவின் கூற்றுப்படியே ‘‘சிறுமுதலாளித்துவ வர்க்கத்துக்குரிய தவறான கருத்துகளும் குறைபாடுகளும் கொண்ட, பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவது என்பதற்கு மேல் தெளிவான கொள்கைகள் எதையும் கொண்டிருக்காத’’ ஒரு இயக்கமாகவே அது இருந்தது. [இத்தாலிய கம்யூனிஸ்டு கட்சி பத்திரிகைக்கு (லா யூனிடா) காஸ்ட்ரோ அளித்த பேட்டி, பிப். 1, 1961,]
இருப்பினும், பாடிஸ்டாவின் ஆட்சிக்கும் அதற்கு துணை நின்ற நிலப்பிரபுக்கள் மற்றும் அமெரிக்க முதலாளிகளுக்கும் எதிராக குமுறிக் கொண்டிருந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் புரட்சியை ஆதரித்தனர். கியூபா பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த கரும்புத் தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள் ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க முதலாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்கியதால் ஆத்திரம் கொண்ட அமெரிக்க அரசு, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அமெரிக்காவில் குடியேறிய கியூபாவைச் சேர்ந்த பிற்போக்குவாதிகளைக் கொண்டு படை திரட்டி, ஏப்ரல் 1961−இல் சி.ஐ.ஏ. தொடுத்த இந்தப் போரில் (Bay of Pigs War) கியூபா வென்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கியூபா மக்களின் தேசிய உணர்வை இது தீவிரப்படுத்தியது.
சோவியத் ரசியாவைத் திருத்தல்வாதப் பாதையில் தள்ளிய குருச்சேவுடன் பிடல் காஸ்ட்ரோ. (கோப்புப் படம்)
காலனியாதிக்கத்துக்கும், ஏகாதிபத்திய கைக்கூலி அரசுகளுக்கும் எதிராக உலகம் முழுவதும் தேச விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த இந்த காலத்தில், பிற்போக்கு அரசுகளையும் இராணுவ சர்வாதிகாரங்களையும் ஆதரித்து வந்த அமெரிக்கா, சீனாவுக்கும் ரசியாவுக்கும் எதிரான அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் தொடங்கியிருந்தது. ரசியாவைக் குறிவைத்து துருக்கியிலும், இத்தாலியிலும் அணு ஆயுத ஏவுகணைகளை அமெரிக்கா நிறுவியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்காவை குறிவைத்து, 1962−இல் கியூபாவில் அணு ஆயுத ஏவுகணைகளை நிறுவியது, முதலாளித்துவம் மீட்கப்பட்ட நாடான ரசியா.
சமூக ஏகாதிபத்தியமாக உருவெடுத்திருந்த சோவியத் யூனியனுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான பனிப்போரின் துவக்கமாக அமைந்த இந்த காலகட்டத்தில், அமெரிக்கத் தாக்குதல் அபாயத்தை நிரந்தரமாக எதிர்நோக்கியிருந்த காஸ்ட்ரோ, ரசிய ஏவுகணைத் தளத்தை, கியூபாவுக்குக் கிடைத்த பெரும் தற்காப்பாகக் கருதினார். கென்னடி – குருசேவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பதின்மூன்றே நாட்களில் இருதரப்பும் அணு ஆயுதத்தை அகற்றிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தன. அணு ஆயுத தளத்தை அகற்ற வேண்டாமென்ற காஸ்ட்ரோவின் கோரிக்கையை குருசேவ் பொருட்படுத்தவும் இல்லை; இந்த முடிவு குறித்து காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்கவும் இல்லை. அமெரிக்காவுடனான குருசேவின் இந்த சமரசத்தை மாவோ வெளிப்படையாக விமரிசித்தார். கியூபாவைச் சதுரங்கக் காயாக குருசேவ் பயன்படுத்திக் கொண்டதை சீரணிக்க இயலவில்லையென்ற போதிலும், காஸ்ட்ரோ இது குறித்து வெளிப்படையாக விமரிசிக்கவில்லை.
000
1960−களின் தொடக்கமான இந்த ஆண்டுகளில்தான், குருசேவ் கும்பல் ரசியாவில் முதலாளித்துவ மீட்சியை அமல்படுத்தத் தொடங்கியிருந்தது. சோசலிச முகாமுக்கும் ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையில் சமாதான சகவாழ்வு, ஆயுதப் புரட்சிக்கு பதிலாக அமைதி வழி மாற்றம் என குருசேவ் முன்வைத்த திருத்தல்வாதக் கொள்கைகளை எதிர்த்து, மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சி, ரசிய கம்யூனிஸ்டு கட்சியுடன் தீவிரமான கருத்துப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. கட்சிகளுக்கு இடையில் நடந்து வந்த இந்த விவாதம், அடுத்து வந்த ஆண்டுகளில் வெளிப்படையான கருத்துப் போராட்டமாக மாறியது. சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தில் பிளவும் ஏற்பட்டது.
வியட்நாமின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 1973−இல் வியட்நாமுக்குச் சென்ற பிடல் காஸ்ட்ரோ விடுதலைப் போராளிகளுடன்….. (கோப்புப் படம்)
உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த வியத்நாம், கொரிய கம்யூனிஸ்டு கட்சிகள், சீன – ரசிய பிளவைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்து, நடுநிலை வகித்தன. ஆனால், கியூபா அப்படி நடுநிலைகூட வகிக்கவில்லை. மாறாக, ரசிய ஆதரவு நிலையையே எடுத்தது.
நவம்பர் 1960−இல் சே குவேராதலைமையிலான கியூபா தூதுக் குழுவினர் மாவோ மற்றும் சூ என் லாயுடன் நடத்திய உரையாடல், லத்தீன் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கும் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களின் மீது அக்கறை காட்டுவதாகவே அமைந்திருந்தது. இதற்கு மாறாக, அமைதி வழி மாற்றம் என்ற குருசேவின் நிலையை ஆதரித்து காஸ்ட்ரோ எடுத்த முடிவு, சர்வதேச பாட்டாளி வர்க்க நலனைக் கருத்தில் கொண்டோ, ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்கான பாதை குறித்த அக்கறையிலிருந்தோ எடுக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் அச்சுறுத்தலிலிருந்து கியூபாவைத் தற்காத்துக் கொள்வதற்கும், அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியாக தாக்குப்பிடித்து நிற்பதற்கும் ரசிய சார்பு நிலையே உகந்தது என்ற கோணத்தில் காஸ்ட்ரோ சந்தர்ப்பவாதமாகவே முடிவெடுத்தார். சீனத்துக்கு தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் திடீரென்று நிறுத்திய குருசேவ் கும்பல், அந்நாட்டை திடீரென்று நெருக்கடியில் தள்ளிய சூழலிலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலனை முன்னிறுத்தி, திருத்தல்வாதத்துக்கு எதிராக மாவோ உறுதியான நிலை எடுத்ததை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ரசிய ஆதரவு நிலையின் தொடர்ச்சியாக, ரசியாவின் செக்கோஸ்லோவாக்கிய ஆக்கிரமிப்பு, எத்தியோப்பிய தலையீடு முதல் ஆப்கன் ஆக்கிரமிப்பு வரையிலான சமூக ஏகாதிபத்திய நடவடிக்கைகள் அனைத்தையும் காஸ்ட்ரோ ஆதரித்தார். அமெரிக்காவும் ரசியாவும் மேல்நிலை வல்லரசுகள் என்றும், உலகப் போரின் ஊற்றுக் கண்ணாக ரசிய சமூக ஏகாதிபத்தியம் இருக்கிறது என்றும் வரையறுத்த மாவோவின் மூன்றுலக கோட்பாட்டை (1974) நிராகரித்தது மட்டுமின்றி, கூட்டுச்சேரா இயக்கத்தில் சில மூன்றாம் உலக நாடுகள், ‘‘அமெரிக்காவைப் போலவே ரசியாவும் ஏகாதிபத்தியமே’’ என்று குறிப்பிட்டு விமரிசித்தபோது, அதனை காஸ்ட்ரோ கடுமையாக எதிர்த்தார். ‘‘கோமேகான்’’ (COMECON) என்ற ரசிய சார்பு நாடுகளின் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் அங்கம் வகித்தது மட்டுமின்றி, பனிப்போர் காலத்தில் ரசியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலும் கியூபாவை ஈடுபடுத்தினார்.
அங்கோலா தேசிய விடுதலைப் போரில் பங்கேற்ற கியூபாவின் இராணுவ வீரர்கள்.
இருந்த போதிலும், கியூபாவுக்கும் ரசியாவுக்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றாமல் இல்லை. அமெரிக்க கைப்பாவை சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களை ஆதரித்து காஸ்ட்ரோவும் சே குவேராவும் தெரிவித்த கருத்துகள், ‘‘அமைதி வழி மாற்றம்’’ என்ற குருசேவின் திருத்தல்வாதக் கொள்கைக்கும், அந்த நாடுகளைச் சேர்ந்த போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயல்பாட்டுக்கும் எதிரானதாக இருந்தது. 1975−இல் அங்கோலாவின் சோவியத் ஆதரவு எம்.பி.எல்.ஏ. படைக்கு எதிராக தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு போர் தொடுத்தபோது, ரசியாவின் ஆட்சேபத்தையும் மீறி, ஆயிரக்கணக்கான கியூபா துருப்புகளை அங்கோலாவுக்கு அனுப்பினார் காஸ்ட்ரோ. இதன் விளைவாக தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு போரில் முறியடிக்கப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் ஆதரவை மட்டுமின்றி, கியூபாவிலும் பல்வேறு நாடுகளிலும் நிறவெறி அரசுக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த கருப்பின மக்களுடைய பேராதரவையும் காஸ்ட்ரோவுக்குப் பெற்றுத் தந்தது. கியூபாவுடனான ரசிய உறவில் இத்தகைய முரண்பாடுகள் இருந்தபோதிலும், பூகோள ரீதியில், அமெரிக்காவுக்கு அருகில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கியூபா இருந்த காரணத்தினாலும், காஸ்ட்ரோ பெற்றிருந்த சர்வதேச செல்வாக்கின் காரணமாகவும், ரசிய சமூக ஏகாதிபத்தியம் இவற்றையெல்லம் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
பனிப்போர் காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் கியூபா மேற்கொண்ட பல நடவடிக்கைகளில், அது ஒரே நேரத்தில் சமூக ஏகாதிபத்தியத்தின் தொங்குசதையாகவும், உணர்வு பூர்வமான அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அன்றைய சர்வதேச சூழலில், வியத்நாம், இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரங்கள் அனைத்துக்கும் அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அந்த வகையில் அமெரிக்கா பல நாட்டு மக்களுக்கு எதிரியாக இருந்தது. இத்தகைய சூழலில், அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களை ஆதரிப்பது, சாத்தியமான இடங்களில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்துவது என்ற நடவடிக்கைகள் மூலம் ரசிய சமூக ஏகாதிபத்தியம், மூர்க்கமான முறையில் உலக மேலாதிக்கத்துக்கு முயன்று கொண்டிருந்தது.
கியூபாவைப் பொருத்தவரை, வாயிற்படியில் ஒவ்வொரு கணமும் சி.ஐ.ஏ.வின் சதிவேலைகளை எதிர்கொண்டிருந்த காஸ்ட்ரோவுக்கு, அமெரிக்காவை சாத்தியமான இடங்களிலெல்லாம் பலவீனப்படுத்தவதென்பது, சர்வதேசக் கடமையாக மட்டுமின்றி, கியூபாவின் உடனடி தேசிய நலனுக்கு அவசியமான தேவையாகவும் இருந்தது.
000
1980−களின் இறுதி மற்றும் 1990−களின் துவக்கத்தில் நேர்ந்த ரசிய, கிழக்கு ஐரோப்பிய போலி சோசலிசங்களின் வீழ்ச்சி, தனியாக அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியை காஸ்ட்ரோவுக்கு உண்டாக்கியது. அதுநாள் வரை மாவோவின் சோசலிச சீனத்துக்கு செல்லாத காஸ்ட்ரோ, 1995−இல் முதலாளித்துவம் மீட்கப்பட்ட சீனத்துக்கு சென்றார். சர்வதேச உறவுகளில் வன்முறையைப் பயன்படுத்தாமல் இருந்ததற்காக கன்பியூசியஸ் சமாதானப் பரிசை சீன அரசு காஸ்ட்ரோவுக்கு வழங்கியது. முன்னர் ரசியாவை முதன்மையான வணிகக் கூட்டாளியாக கொண்டிருந்த கியூபாவுக்கு, இப்போது சீனா முதன்மையான வணிகக் கூட்டாளி ஆகிவிட்டது.
1960−களில் மக்கள் சீனத்திற்குச் சென்ற கியூபா தூதுக் குழுவின் தலைவரான சே குவேரா தோழர் மாவோவுடன்…. (கோப்புப் படம்)
போலி சோசலிச வீழ்ச்சிக்குப் பின்னர், காஸ்ட்ரோ, எல்லா லத்தீன் அமெரிக்க பிற்போக்கு அரசுகளுடனும் நெருக்கமான உறவைப் பேணினார். அந்த அரசுகளுக்கு எதிரான இடதுசாரி கொரில்லாக்களின் போராட்டங்களை எதிர்த்தார். ‘‘கொரில்லாப் போராட்டங்களின் சகாப்தம் முடிவடைந்து விட்டது’’ என்றும், ‘‘மைய நீரோட்ட அரசியல்தான் ஒரே தீர்வு’’ என்றும் பிரகடனம் செய்தார்.
கொலம்பியாவில் அமெரிக்க கைக்கூலியான அதிபர் யூரிப்−இன் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிவந்த, எஃப்.ஏ.ஆர்.சி.(FARC) புரட்சியாளர்களையும், சுமார் 20,000 பேரைக்கொண்ட அவர்களது விவசாயிகள் படையையும் விமரிசித்தது மட்டுமின்றி, அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் பாதைக்கு வரவேண்டும் என்றும் கூறினார். ஏற்கெனவே ஒருமுறை தேர்தல் பாதையை தெரிவு செய்தபோது, நூற்றுக்கணக்கான போராளிகள், சி.ஐ.ஏ. வால் பயிற்றுவிக்கப்பட்ட கொலம்பிய கொலைப்படையினால் கொன்று குவிக்கப்பட்ட அனுபவம் இருந்த போதிலும், இப்படியொரு தற்கொலைப் பாதையை கொலம்பிய புரட்சியாளர்கள்மீது காஸ்ட்ரோ திணிப்பதற்கு காரணம் இருந்தது.
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது. இயற்கைப் பேரழிவுகள், கொள்ளை நோய்கள் போன்றவற்றிலிருந்து ஏழை நாடுகளின் மக்களைக் காப்பாற்றுவதற்கு கியூபாவின் மருத்துவர் குழுக்களை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பியது போன்ற நடவடிக்கைகளை நாம் இந்தக் கண்ணோட்டத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 1990−க்குப் பிந்தைய காலத்தில், லத்தீன் அமெரிக்காவின் விடுதலை இறையியலில் தொடங்கி, 21−ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம் என்ற பெயரிலான தன்னார்வக்குழு அரசியலையும், அமெரிக்க சார்பு மையவாத அரசியலையும் அவர் ஆதரித்தார்.
000
காஸ்ட்ரோவின் இந்த நிலைப்பாடுகள் பிறழ்வுகள் அல்ல. இவற்றின் வேர்கள் கியூபா புரட்சியின் வரலாற்றிலேயே உள்ளன. கியூபாவின் புரட்சி என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலில், ரசிய – அமெரிக்க பனிப்போரின் பின்புலத்தில் வெற்றி பெற்றது. காங்கோ, சிலி, கவுதமாலா, நிகராகுவா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ரசியாவின் ஆதரவுக்கிடையிலும் இத்தகைய வெற்றி கிட்டவில்லை. அமெரிக்காவின் இடையறாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளையும் எண்ணற்ற கொலை முயற்சிகளையும் மீறி கியூபா தாக்குப்பிடித்து நிற்க முடிந்ததற்கு காஸ்ட்ரோவின் ஆளுமையும், அவருடைய மக்கள் செல்வாக்கும் தனிச்சிறப்பான காரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இதன் காரணமாகவே கியூபாவை சோசலிச நாடென்று அங்கீகரித்துக் கொள்ளவியலாது.
பாடிஸ்டா அரசைத் தூக்கியெறிய தோளோடு தோள் நின்ற போராளிகளுடன் பிடல் காஸ்ட்ரோ. (இப்படம் 1952−இல் இரகசியமாக இயங்கிவந்த தளமொன்றில் எடுக்கப்பட்டது.)
வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை, ரசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் தம்மைத்தாமே முதலாளித்துவ நாடுகள் என்று பிரகடனம் செய்யும் வரையில், அவற்றை சோசலிச நாடுகள் என்றே கூறிவந்தனர். அவ்வண்ணமே சீனத்தையும், வியத்நாமையும்கூட இன்னமும் சோசலிச நாடுகள் என்று கூறிவருகின்றனர். இன்னொருபுறம், சோசலிசத்துக்கான மார்க்சிய−லெனினிய வரையறைகளை எதிர்ப்பவர்களான புதிய இடதுகளும் மற்றும் இடதுசாரி அறிவுத்துறையினர் என்று அறியப்படுவோரும், ரசிய − சீனத் தோல்விகளுக்குப் பின்னர், ‘‘எதார்த்தத்தில் நிலவும் சோசலிசம்’’ (actually existing socialism) என்றொரு புதிய வரையறையை − அதாவது இலக்கணமே கிடையாது என்றொரு இலக்கணத்தை − உருவாக்கியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, ‘‘இன்னொரு உலகம் சாத்தியமே’’ என்ற உலக சமூக மன்றத்தின் (WSF) முழக்கத்தை முன்வைக்கும் தன்னார்வக் குழுக்களும், பிரேசில், ஈக்வடார், சிலி, வெனிசூலா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளையும், ‘‘சோசலிசம்’’ என்று சித்தரிக்க வசதியாக, ‘‘21−ஆம் நூற்றாண்டு சோசலிசம்’’ என்றொரு புதிய சிவப்பு வண்ணத்தைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.
மொத்தத்தில், இவையனைத்தும் உலக முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்கொள்ளவியலாத, அல்லது எதிர்கொள்ள விரும்பாத செயலின்மையின் விளைவுகளே ஆகும். முதலாளித்துவ சீர்திருத்தத்தையே சோசலிசம் என்று கொண்டாடும் அரசியல் கண்ணோட்டமும், சே குவேரா – காஸ்ட்ரோ போன்றோரை நாயகர்களாகக் கொண்டாடி ஆறுதலடையும் வழிபாட்டு மனோபாவமும் இத்தகைய செயலின்மையிலிருந்தே பிறக்கின்றன.
இத்தகையோரைப் பொருத்தவரை மார்க்சியம் என்பது செயலுக்கான வழிகாட்டியாக இல்லை. எனவேதான் காஸ்ட்ரோவைக் கம்யூனிசத் தலைவராக கொண்டாடுபவர்கள் யாரும், அவர் வகுத்துத் தந்த ‘‘புரட்சிக்கான பாதை என்ன’’ என்பது குறித்துப் பேசுவதில்லை. காஸ்ட்ரோவால் அமல்படுத்தப்பட்டு, ‘‘புரட்சிக்கான புதிய பாதை’’ என்று ரெஜிஸ் டெப்ரே (Regis Debray)யால் கொண்டாடப்பட்ட ‘‘ஃபோக்கோ’’ (FOCO) என்ற கொரில்லா குழு நடவடிக்கை, எல்லா நாடுகளிலும் தோல்வியையே தழுவியிருக்கிறது. பாட்டாளி வர்க்க அரசியலையும் மக்கள் திரள் பாதையையும் நிராகரிக்கின்ற அந்த சாகசவாத வழி, புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, புரட்சியின் தோல்வியை உத்திரவாதப்படுத்தும் என்கிற காரணத்தினால்தான், தீவிர அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான சே குவேராவை அமெரிக்க ஏகாதிபத்தியமே தயங்காமல் பிரபலப்படுத்துகிறது.
கியூபாவின் புரட்சி வெகுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, ‘‘மார்க்சிய−லெனினியம்தான் தனது வழிகாட்டும் சித்தாந்தம்’’ என்று காஸ்ட்ரோ அறிவித்துக் கொண்ட போதிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அரசியல் உள்ளடக்கமாக கொண்ட, சோவியத்துகளைப் போன்ற அதிகார உறுப்புகள் அங்கே உருவாக்கப்படவில்லை. போலி சோசலிச ரசியாவைப் போன்ற அரசு முதலாளித்துவ, அதிகார வர்க்க ஆட்சியை ஒத்த இன்னொரு வடிவமாகவே அது இருந்தது. சே குவேரா, காஸ்ட்ரோ ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதும், காந்திய அறத்துடன் ஒப்பிடத்தக்கதுமான, அரூபமான ‘சோசலிச அறம்’, தனது பாதுகாப்புக் கவசத்தின் கருணையில் வாழவேண்டிய நிலையில்தான் கியூபாவின் பாட்டாளி வர்க்கத்தை வைத்திருந்தது. வர்க்கப் போராட்ட நடைமுறையில் பாட்டாளி வர்க்கத்தை ஈடுபடுத்தவோ, அதிகாரம் என்ற ஆயுதத்தை ஏந்தவோ பாட்டாளி வர்க்கத்தை அது பயிற்றுவிக்கவில்லை.
ஆகவே, போலி கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவ தாராளவாதிகளும் முன்வைப்பது போல, காஸ்ட்ரோவை ஒரு கம்யூனிசப் புரட்சியாளர் என்றோ, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க தலைவரென்றோ வரையறுக்கவியலாது. கியூபாவில் அவர் நிகழ்த்திய புரட்சியை பாட்டாளி வர்க்கத் தலைமையிலான சோசலிசப் புரட்சி என்று கருதவும் முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளியாகவே அவரைக் கருத முடியும். தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்குரிய ஊசலாட்டமும் சமரசமும்தான் காஸ்ட்ரோவின் பிற்கால வாழ்க்கையில் அவரிடம் வெளிப்பட்டன.
‘‘கம்யூனிஸ்டு கட்சியிலும் சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடக்கும்’’ என்ற மாவோவின் கருத்தையும் கலாச்சாரப் புரட்சியின் அவசியத்தையும் காஸ்ட்ரோ ஏற்கவில்லை. ‘‘மாவோ தனது தலையால் சாதித்ததை காலால் அழித்துவிட்டார்’’ என்று 1977−இல் அமெரிக்க நிருபர் பார்பரா வால்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார் காஸ்ட்ரோ. கலாச்சாரப் புரட்சி குறித்த காஸ்ட்ரோவின் இந்த விமரிசனம், அவர் ஃபோக்கோ கோட்பாட்டின் சித்தாந்த செல்வாக்கிலிருந்து விடுபடாததையும், திருத்தல்வாத அரசியலில் ஊன்றி நின்றதையுமே காட்டுகின்றன. அதிகார வர்க்க அரசாக இருந்த போதிலும், கியூப அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அதற்கு ஒரு நற்பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன.
பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் கியூபா மருத்துவத் துறையில் அடைந்துள்ள மாபெரும் பாய்ச்சலின் ஒரு பதிவு.
தொழில்மயமாக்கத்தையோ, வளர்ந்த பொருளாதாரத்தையோ கொண்டிராத நிலையிலும், அமெரிக்காவின் தலையீடுகள், தடைகள் போன்றவற்றால் நிரந்தரமாகத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், முன்னேறிய நாடுகளால்கூட சாதிக்கவியலாத மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை கியூபா அமல்படுத்தியிருக்கிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் தரமான இலவசக் கல்வி, மக்களின் ஆரோக்கியத்தை பேணும் விதத்திலான தரமான மருத்துவம், மருத்துவத்துறை அறிவியல் முன்னேற்றம், கருப்பினத்தவர், கலப்பினத்தவர் உள்ளிட்ட பல்வேறு இன மக்கள் வாழுகின்ற சமூகத்தில் பேணப்படும் சமத்துவப் பண்பாடு – என முதலாளித்துவ நாடுகளே அங்கீகரிக்கும் வகையிலான சாதனைகள் பலவற்றை காஸ்ட்ரோவின் தலைமை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தாங்கி நிற்பதற்குத் தேவையான தற்சார்பு பொருளாதாரத்தை கியூபா பெற்றிருக்கவில்லை. கரும்பு உற்பத்தி – சர்க்கரை ஏற்றுமதி என்பதையே தனது முதுகெலும்பாக கொண்டிருந்த கியூபா, புரட்சிக்குப்பின் அமெரிக்காவுக்குப் பதிலாக ரசியாவுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்தது. சந்தை விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு சர்க்கரையை வாங்கிக் கொண்டதுடன், எண்ணற்ற உதவிகளையும் ரசியா செய்தது. ரசியாவின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, காஸ்ட்ரோவின் அரசு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது. சுற்றுலாத் தொழில் அதற்கேயுரிய பண்பாட்டுச் சீரழிவுகளான இரவு விடுதிகள், போதை மருந்து, விபச்சாரம், ஊழல் ஆகிய அனைத்தையும் கொண்டு வந்ததுடன் சமூக ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கச் செய்தது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் அதிபரான சாவேஸ் கணிசமான அளவுக்கு உதவிய போதிலும் பொருளாதார தற்சார்பை கியூபாவால் எட்ட இயலவில்லை.
தற்போதைய கியூபா அதிபரும் பிடலின் சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ, தனிச்சொத்துடைமையை அங்கீகரிக்கும் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், தாராளமயக் கொள்கைகளையும் அமல்படுத்த தொடங்கியிருக்கிறார். அமெரிக்காவுடனான உறவைப் புதுப்பித்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் கியூபாவுக்கு ஒபாமா வருகை தந்திருப்பது முக்கியமானதொரு திருப்புமுனையாகும். மூன்று நாட்கள் கியூபாவில் தங்கியிருந்த ஒபாமா, காஸ்ட்ரோவைச் சந்திப்பதையோ, தனது உரைகளில் காஸ்ட்ரோவின் பெயரைக் குறிப்பிடுவதையோ கவனமாகத் தவிர்த்தார். கடந்த அக்டோபர் மாதம் கியூபாவுக்கு எதிரான வணிகத் தடைகளையும் ஒபாமா நீக்கியிருக்கிறார். அமெரிக்கப் பொருட்களும், பண்பாடும் இனி தடையின்றி கியூபாவுக்குள் நுழையும்.
1961−இல் பன்றிகள் வளைகுடாவில் (Bay of Pigs) வீரஞ்செறிந்த கியூப மக்களால் தடுத்து விரட்டப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், இன்று அதிகார பூர்வமாக கியூபாவுக்குள் நுழைகிறார்கள். காஸ்ட்ரோ விடை பெறுகிறார். ஒபாமாவின் கியூபா வருகையையொட்டி அவருக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியிருந்தார் காஸ்ட்ரோ. அக்கடிதத்தில் கியூபாவின் 55 ஆண்டுகாலப் போராட்டத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கும் காஸ்ட்ரோ, ‘‘பேரரசு எங்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை’’ என்று அதில் குறிப்பிடுகிறார்.
துயரம் தோய்ந்த அந்தச் சொற்கள், காயம்பட்ட அவருடைய தன்மான உணர்வையும், தள்ளாத முதுமையிலும் அடங்க மறுக்கும் சுயமரியாதை உணர்வையும், தன்னுடைய உணர்வுடன் ஒன்றாத கியூபாவின் சமுகத்திலிருந்து தனித்து விடப்பட்ட அவரது கையறு நிலையையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன. இந்தத் துயரம் தனிநபரின் துயரமன்று. கியூபா கடந்து வந்த பாதையை, தயக்கமற்ற விமரிசனப் பார்வையில் பரிசீலிப்பதன் வாயிலாக மட்டுமே இந்தத் துயரிலிருந்து விடுபடமுடியும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 6-7 | பிப்ரவரி 1-29, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 4-5 | ஜனவரி 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல. பொறுக்கி அரசியல். இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் – வசவுகள், பேசும் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித் தாள்கள்-பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!
“நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது” என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும் மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழ்வும், அதையே ரசிக்கவும்கூடப் பழகி விட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர் (Crowd Pullers) – கவர்ச்சி நிறை தலைவர்கள் (Charismatic Leaders) தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
“பொறுக்கி அரசியல்” என்று சொல்லும்போது இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு – விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்லுகிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்தாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல் நான்.
பொறுக்கி அரசியலின் சமூக அடிப்படை – உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புறப் பாமர மக்கள்:
காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்திய கிராம சமுதாயத்தில் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத் தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கொடுத்து குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையாயிருந்தது. காலனிய ஆட்சியும், அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
வருடத்தில் பல நாட்கள் வேலை வாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரை குறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள். படித்தும் வேலை வாய்ப்பின்றி சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கனவே நகரத்து குடிசைப் பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.
பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்புற சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோத சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களை பொறுக்கி அரசியலும் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள்.
பிற்போக்கு சிந்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன.
ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடி மறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.
பொறுக்கி அரசியலின் தமிழக கதாநாயகி; தொண்டர்களுக்கு பால்கனியிலிருந்து தரிசனம் தருகிறார்.
கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர் உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய ”அண்ணாயிசம்” பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். “முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்” மூன்றும் இணைந்ததுதான் ’அண்ணாயிசம்’ என்று எம்.ஜி.ஆர் அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து ‘அண்ணாயிச’த்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தரகு அதிகார முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது, அதே சமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிக மிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதுதான் எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுபடுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீ, நிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமுகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் “அன்பளிப்பு”களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால் அரசாங்க “இலவச – அன்பளிப்பு”த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது – இதுதான் எம்.ஜி.ஆரின் ‘அண்ணாயிசம் – கவர்ச்சிவாதம்’.
பொறுக்கி அரசியல் வேர்விட்டுப் பரவுகிறது. ஜானகி கட்சிக் கூட்டத்துக்கு ரயில் கூரை மீதேறி தொண்டர்களின் யாத்திரை.
பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்:
காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேதகாரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை – அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால் பிழைப்பு வாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் – அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயக்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.
தலைவர்கள் மட்டுமல்ல நகர வட்டங்கள் – கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்பு வாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எத்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதை பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்பு வாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள்.
தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்ளுகிறார்கள். மற்ற காலங்களில் சத்துணவுத் திட்டம் போன்ற இலவசத் திட்டங்கள், வெள்ளம் – வறட்சி – தீ விபத்து ஆகியவற்றுக்கு முன்னின்று அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்ளுகிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீஸ் நிலைய வழக்குகள், வேலைவாய்ப்புகள் – சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் ”அங்கீகரிக்கப்பட்ட” தரகர்களாக இருக்கிறார்கள்.
கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்பு வாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி எம்.எல்.ஏக்-கள், எம்.பி-கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியில் கோவில்கள், வாரியங்கள், பள்ளி – கல்லூரிகள் போன்ற சகலமட்டங்களிலும் கட்சி பிழைப்பு வாதிகளுக்கு “பொறுப்புகள்” பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு “ஏற்பாடு” செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் – அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார் எம்.ஜி.ஆர்.
பொறுக்கி அரசியல், தமிழகத்துக்கு ஒரு பாரம்பரியம் உண்டு:
பொறுக்கி அரசியலை அறிமுகப்படுத்தி, நிறுவி வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கு ஒரு பாரம்பரியப் பெருமை உண்டு, அதன் பிதாமகனும் பெருமைக்குரியவரும் கருணாநிதிதான்! மூப்பனார், வாண்டையார், தென்கொண்டார், மன்றாடியார் போன்ற நிலப்பிரபுக்களின் பண்ணை வீடுகளிலும், கோவை நாயுடுக்கள், வடபாதி மங்கலம் முதலியார், சென்னை டி.டி.கே – சிவசைலம், மதுரை டிவிஎஸ் போன்ற முதலாளிகளின் விருந்தினர் மாளிகைகளிலும் காமராஜர் தேர்தல் அரசியல் நடத்தி வந்தார். வோட்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சாதி அரசியல் பேரங்கள் மூலமே ஆட்சி நடத்தினார்.
அந்த சாதி அரசியலை வீழ்த்த பொறுக்கி அரசியலால்தான் முடிந்தது. “பேரறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர்” போன்றவர்கள் மட்டுமே இருந்திருந்தால் காமராஜரின் சாதி அரசியலை வீழ்த்தியிருக்க முடியாது. அதை முறியடிக்க மாவட்டத்துக்கு ஒரு பொறுக்கி அரசியல் தலைமையை உருவாக்கினார் கருணாநிதி. நெல்லைக்கு ஒரு தூத்துக்குடி சாமி, மதுரைக்கு ஒரு முத்து, திருச்சிக்கு ஒரு அன்பில், தஞ்சைக்கு ஒரு மன்னை, கோவைக்கு ஒரு ராஜமாணிக்கம், சேலத்துக்கு ஒரு வீரபாண்டி, ஆற்காடுக்கு ஒரு ப.உ.ச என்று பொறுக்கி அரசியலுக்குரிய சகல தகுதிகள் கொண்ட தலைமையை உருவாக்கியவர் கருணாநிதி.
அவர்கள் திராவிட அரசியலின் ”பழக்கதோஷம்” உள்ளவர்கள் – கருணாநிதிக்கு விசுவாசமாக நின்று விட்டவர்கள் – என்ற நிலையில் முழுக்க முழுக்க தமது ரசிகர்களை மட்டும் கொண்ட புதிய பிழைப்புவாதக் கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர். இன்று வீரப்பன் கும்பலின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மந்திரிகள், ஜேப்பியார் போன்றவர்கள், ஜெயலலிதா கும்பலின் கருப்பசாமி பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சென்னை மதுசூதனன், திருநாவுக்கரசு.போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் பொறுக்கி அரசியலின் செல்லப் பிள்ளைகள். இவர்களில் எவருக்கும் திராவிடம், தேசியம் என்கிற பேதமில்லை. “எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்”தான் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம். பிழைப்பு வாதம்தான் இவர்களின் லட்சியம். பொறுக்கி அரசியல்தான் இவர்களின் கொள்கை!
பொறுக்கி அரசியலில் தேசியவாதிகளும் தஞ்சம் புகுந்தார்கள்.
காங்கிரசின் ஜனநாயக சோசலிசப் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி 1987 தேர்தலில் பல மாநிலங்களில் தோற்கடித்தனர். மத்தியிலும் சொற்பப் பெரும்பான்மையே பெற்றது. கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த இந்திரா மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமை, அரசுத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் போன்ற போலி சோசலிச நாடகமாடத் துவங்கினார். மொரார்ஜி, காமராஜ், பாடீல், சஞ்சீவரெட்டி, அதுல்யாகோஷ், சி. பி. குப்தா போன்ற பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகளுக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது போன்ற பிழைப்புவாதத் தலைவர்களை அணிசேர்த்தார். இந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுக்கி அரசியல் வழிமுறைகளில் கூட்டம் சேர்க்கத் தலைப்பட்டார். 1921 வங்கதேசப்போரும், தேர்தல் வெற்றியும் ஏற்படுத்திய செல்வாக்கு மங்கி அரசியல் பொருளாதார நெருக்கடிகள் முற்றியது. நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது அரசு எந்திரத்தைக் கொண்டு அவற்றை அடக்கிய அதே சமயம் பிழைப்புவாதிகளைக் கொண்டு அரசியல் முட்டுக் கொடுத்து காங்கிரசைத் தூக்கி நிறுத்தினார்.
குஜராத், பீகார் போராட்டங்கள் வெடித்து, வளர்த்து கடைசியாக இந்திரா தேர்தல் செல்லாது என்கிற தீர்ப்பு வந்து அவரது ஆட்சியே ஆட்டங்கண்டபோது, நாடாளுமன்றத்துக்கு வெளியே நேரடியான மோதலில் எதிர்க்கட்சிகள் இறங்கின. இந்திரா காங்கிரசு முழுக்க முழுக்க பொறுக்கி அரசியலில் தஞ்சம் புகுந்தது. பணத்தை வாரி இறைத்து லாரிகளில் ஆள் பிடித்து வந்து இந்திரா வீட்டு முன்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சஞ்சய் காந்தி இந்திராவின் வாரிசாக மட்டுமல்ல,பொறுக்கி அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிழைப்புவாதிகளின் குண்டர்படை கட்டினார். அவசரநிலை ஆட்சியின்போது உள்ளூர் அதிகாரம் அவர்களின் கைகளில்தான் இருந்தது.
அவசரநிலை ஆட்சிக்குப்பிறகு பிரச்சாரங்கள், கூட்ட ஏற்பாடுகள் உட்பட எல்லாத் தேர்தல் வேலைகளும் தொழில் ரீதியில் நடத்துபவர்களுக்கே ஒப்படைத்தது காங்கிரசு. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின. டெல்லி, பம்பாய் போன்ற பெரும் நகரங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு (ஆள் சப்ளை) மக்களைத் திரட்டித் தருவதையே தொழிலாகக் கொண்டே கும்பல்கள் உள்ளன. பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிரிமினல் குற்றவாளிகளே எம்.எல்.ஏக்-கள் மந்திரிகளாகும் அளவுக்குப் பொறுக்கி அரசியல் வளர்த்து விட்டது.
பொறுக்கி அரசியலுக்குப் பலியான நடுத்தர வர்க்கம் ராஜீவின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறது.
சஞ்சய் காந்தியின் பொறுக்கி அரசியலை எதிர்ப்பதாகவும், அரசியல் தரகர்களை ஒழிக்கப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தபோது சவடாலடித்தார் ராஜீவ். ஃபேர் பேக்ஸ், போபார்ஸ் விவகாரங்கள் அம்பலமாகி ராஜீவின் யோக்கியதைகள் தெரிந்துவிட்ட நிலையில் அவரும் பேரணிகள் நடத்தத் துவங்கி விட்டார். நவீனப்படுத்துவது, தொழில் மயமாக்குவது, திறமை -நிர்வாகத்துக்கு முதலிடம் தரப் போவதாக சவடாலடித்தவர் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் தமது கொள்கையென்று சஞ்சம் புகுந்து விட்டார். பிழைப்புவாத அரசியல் கும்பலிடம் சரணடைந்து விட்டார். எம்.ஜி.ஆர் பாணியிலான “இலவச அன்பளிப்பு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி தேர்தலைக் குறிவைத்து செயல்படுகிறார். எம்.ஜி.ஆர் பாணியிலே சினிமா நடிகர்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில் இறங்கியுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதி நிலை பொறுக்கி அரசியல்:
காமராஜரின் காலத்தில் பண்ணையார் – முதலாளிகள் மாளிகையில் நடந்த சாதி அரசியல் வீழ்த்தப்பட்டு கருணாநிதியின் பொறுக்கி அரசியல் முன்னுக்கு வந்தபோது “பழுத்த ஜனநாயகவாதிகள்” அருவருப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் அண்ணாத் துரையின் ”பெருந்தன்மை”, கருணாநிதியின் ”நிர்வாகத் திறமை”, பிறகு எம்.ஜி.ஆரின் ”மனிதாபிமானம்” ஆகியவற்றைச் சொல்லிச் சகித்துக் கொண்டார்கள். சஞ்சய் காந்தியின் அவசரநிலை ஆட்டங்கள் அந்தப் பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு பீதியூட்டினாலும் ராஜீவ் பதவிக்கு வந்தபோது “பரிசுத்தம்” வந்ததென்று மகிழ்ந்து போனார்கள். இப்போது தமிழ்நாட்டில் வீரப்பன் – ஜெயலலிதா கும்பல்களும், டில்லியில் ராஜீவும் பொறுக்கி அரசியலை முழு வீச்சில் நடத்துகிறார்கள். அது “பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு” பீதியூட்டுகிறது.
“உலகிலேயே சிறந்தது, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை; சில பிழைப்புவாதிகள் அரசியலில் புகுந்து கெடுத்து விட்டார்கள்; அரசியல் தரம் தாழ்ந்து போய்விட்டது” என்று ‘சமாதானம்’ சொல்லுகிறார்கள், போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா, காங்கிரசிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசியலுக்கு வெளியிலுள்ள “பழம் தேசபக்தர்கள்” ஆகிய “பழுத்த ஜனநாயகவாதிகள்”. ஆனால் பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்க ரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசியவாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைத்ததைப் போல கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) பாசிச ராஜீவ் கும்பலுக்கு உதவும். நாஜிக் கட்சியைப் போல பிழைப்பு வாதிகளைக் கொண்ட காங்கிரசு, எம்.ஜி ஆர், கருணாநிதி கட்சிகள் அரசியல் – அமைப்பு அடிப்படையைக் கொடுக்கும்.
ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரவாதத்தின செல்வாக்கில் இருக்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளின் பிழைப்பு வாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதார வாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து பாமரத்தனமான சோசலிச சித்தாந்தத்தைப் போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதனால்தான் பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டை சமூக அடிப்படையாகவும், மார்க்சிய – லெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக இருந்து அதை முறியடிக்க முடியும்.
[மார்ச் 01 – 15, 1988 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரை பிப்ரவரி 28, 2025 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்டது. இக்கட்டுரை தற்போது மீள்பதிவு செய்யப்படுகிறது]
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 24 | நவம்பர் 1-15, ஆண்டு 15, இதழ் 1-3 | நவம்பர் -16-30, டிசம்பர் 1-31 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 22-23 | அக்டோபர் 1-31, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 19-21 | ஆகஸ்ட் 1-31, செப்டம்பர் 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 16-18 | ஜூலை 1-31, ஆகஸ்ட் 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர், 26 வயதான கவின் செல்வகணேஷ். இவர் சென்னை டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சார்ந்த கவினும், திருநெல்வேலி கே.டி.சி. நகரில் வசித்துவரும் மறவர் சாதியைச் சார்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும், பள்ளிப்பருவம் முதலே நட்பாக பழகி அதன்பிறகு பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
போலீசு துணை ஆய்வாளர்களாக பணியாற்றிவரும் சுபாஷினியின் பெற்றோர்களான சரவணக்குமார், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் கவின்-சுபாஷினியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கவினின் தாயார் தமிழ்ச்செல்வியை தொடர்புகொண்டும் மிரட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில், ஜூலை 27-ஆம் தேதி கவினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தன் குடும்பத்தினருடன் அவரை அழைத்துக்கொண்டு, சுபாஷினி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கவின் சென்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனைக்கு சென்று, “நீங்கள் என் அக்காவை காதலிப்பது எனக்கு தெரியும். இதுகுறித்து உங்களிடம் பேசுவதற்காக என் அப்பா, அம்மா காத்திருக்கின்றனர். நீங்கள் என்னோடு வாருங்கள்” என்று கவினிடம் நைச்சியமாக பேசியிருக்கிறான். அவன் கூறியதை நம்பி கவினும் அவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரின் ஓரிடத்தில் சுர்ஜித் வண்டியை நிறுத்திவிட்டு, கவினை கீழே இறங்க சொல்லியிருக்கிறான். “உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் அக்காவ காதலிப்ப பள்ளத் தேவடியா மகனே” என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினின் கழுத்து, தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறான் மறவர் சாதிவெறியனான சுர்ஜித். படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கல்லூரியில் தங்கப் பதக்கம், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் என கல்வி, வேலை அனைத்திலும் சிறந்து விளங்கினாலும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
கல்வி கற்றால் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளிவந்து விடலாம், சமூகத்தில் மரியாதையுடனும் பாதுகாப்பாகவும் வாழ்ந்துவிடலாம் என்ற கருத்து பொதுச் சமூகத்தில் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கவினின் சாதி ஆணவப் படுகொலை இந்த சாதிய கட்டமைப்பின் கோரத்தை நம் முகத்தில் அறைந்துள்ளது.
மேலும், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, ஆதிக்கச் சாதி பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதாகவும் நாடகக் காதல் செய்வதாகவும் ஆதிக்கச் சாதி வெறியர்கள் செய்துவந்த பொய் பிரச்சாரத்தின் மீது கவினின் ஆணவப் படுகொலை காறி உமிழ்ந்துள்ளது.
திசைதிருப்பப்பட்ட விவாதம்
கவின் சாதி ஆணவப் படுகொலை அரசியல் தளத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவாதங்களை தொடங்கிவைத்த நிலையில், ஆளும் தரப்பும் ஆதிக்கச் சக்திகளும் அதனை திட்டமிட்டே திசைதிருப்பின.
தி.மு.க. ஆதரவு நாளிதழான தினகரனின் ஜூலை 29 தேதியிட்ட செய்தித்தாளில், சுபாஷினி கவினை காதலிக்கவில்லை என்று போலீசிடம் கூறியதாக பொய்யான செய்தியை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுபாஷினி மீது தனிநபர் தாக்குதல் தொடுக்கும் வகையில் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டன. 2023 மழைவெள்ளம் தொடங்கி அஜித் குமார் லாக்கப் படுகொலை வரை அனைத்து சம்பவங்களிலும் தி.மு.க. மீதான அதிருப்தியை மடைமாற்றும் வகையில் விவாதங்களை திசைதிருப்பிவரும் தி.மு.க. ஆதரவு சமூக ஊடகப் பக்கங்கள் இதிலும் முன்னின்று செயல்பட்டன.
அதேபோல், கவின் தனது பெண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் சமூக ஊடகங்களில் பரப்பிய ஆதிக்கச் சாதிவெறியர்கள் கவினின் நடத்தையை கொச்சைப்படுத்தத் தொடங்கினர். இதன்மூலம் ஆணவப் படுகொலை, ஆதிக்கச் சாதிவெறி குறித்தான விவாதம் தனிநபர் ஒழுக்கம் சார்ந்ததாக மாற்றப்பட்டது.
அதுமட்டுமின்றி, கோகுல்ராஜை ஆணவப் படுகொலை செய்த சாதிவெறியன் யுவராஜை கொண்டாடுவது போல, கவினை ஆணவப் படுகொலை செய்த சுர்ஜித்தை, தங்கள் சாதியைக் காக்க வந்த நாயகனைப் போல சித்தரித்து ஆதிக்கச் சாதிவெறி கும்பல் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பரவச் செய்தது. ஹரி நாடார் போன்ற ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்த மிருகங்கள் கவினின் ஆணவப்படுகொலையை நியாயப்படுத்தி பேசின.
ஆனால், இவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது தமிழ்நாடு போலீசு.
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசு
கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவனின் பெற்றோர்கள் இருவரது பெயரும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. ஆனாலும், சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியது போலீசு.
பல வழக்குகளில் சந்தேகம் என்ற பெயரில் அப்பாவி மக்களை விசாரணைக்கு அடித்து இழுத்துச் செல்லும் போலீசு, சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நாடகமாடியது.
ஆனால், ஜூலை 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் சுர்ஜுத், கவினை படுகொலை செய்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் சுர்ஜித்தை அவனது தந்தை சரவணக்குமார் தானே அழைத்துச் சென்று போலீசு நிலையத்தில் சரணடைய வைத்திருக்கிறார். இது, சரவணக்குமாருக்கு தெரிந்துதான் கவின் ஆணவப் படுகொலை செய்ப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. அப்படியிருந்தும் சரவணக்குமாரை போலீசு உடனே கைது செய்யவில்லை.
மேலும், குற்றவாளியான சுர்ஜித்தின் புகைப்படத்தைக்கூட வெளியிடாமல் போலீசும் ஊடகங்களும் கொலைகாரனை பாதுகாத்தன. ஜனநாயக சக்திகள்தான் சுர்ஜித் அரிவாளுடன் நிற்கும் புகைப்படங்களையும் அவனது பெற்றோர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
ஆனால், சுர்ஜித்தின் பெற்றோர்களை கைது செய்தால்தான் மருத்துவமனையிலிருந்து கவினின் உடலை வாங்குவோம் என்று கவினின் குடும்பத்தினர் ஐந்து நாட்களாக உறுதியாக போராடினர். கவின் ஆணவப் படுகொலைக்கு நீதி கேட்டும் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாகவே சுர்ஜித்தின் தந்தை சரவணக்குமாரை மட்டும் ஜூலை 30 அன்று போலீசு கைது செய்தது. ஆனால், இன்றுவரை சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்யவில்லை.
அதிகரிக்கும் சாதியத் தாக்குதல்கள்
சமீபத்தில், கவினின் சாதி ஆணவப் படுகொலை மட்டுமே பொதுச் சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் 65 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதை சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் ஏழு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.
இதனைக் கண்டும் காணாமல் இருக்கும் தி.மு.க. அரசு, அவை சிறிதளவு பேசுபொருளானாலும் மூடிமறைப்பதற்கான வேலையை செய்கிறது. சான்றாக, “தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை இல்லை. திருநெல்வேலியில் இல்லவே இல்லை” என்று தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேசியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தென்மாவட்டங்களில் சாதியக் கொலை-தாக்குதலுக்கு உள்ளாகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்பட்டமாக துரோகம் இழைத்து வருகிறது.
ஆனால், தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறித் தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகள் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துவருவது குறித்தும் அதற்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம் உள்ளதையும் “புதிய ஜனநாயகம்” தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் இயங்கும் தேவர் (முக்குலத்தோர்) மற்றும் நாடார் சாதி சங்கங்கள் மக்களிடத்திலும் குறிப்பாக இளைஞர்கள்-மாணவர்களிடத்திலும் சாதிவெறியூட்டி வருகின்றன. இதன்விளைவாக இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே அரிவாள் கலச்சாரம் அதிகரித்துவருகிறது. நாங்குநேரி சின்னதுரை, தூத்துக்குடி தேவேந்திரராஜா போன்ற பள்ளி மாணவர்கள் சக மாணவர்களாலேயே வெட்டப்பட்டது இதனை உணர்த்தியது.
கவினை படுகொலை செய்த சுர்ஜித்திற்கும் 24 வயதுதான். ஆங்கிலப் புலமை, படிப்பு, பணம் இருந்தும் கேடுகெட்ட சாதிவெறியனாக சுர்ஜித் இருந்திருக்கிறான் என்று எவிடென்ஸ் கதிர் தன்னுடைய கள ஆய்வில் தெரிவிக்கிறார். சுர்ஜித்தின் அரிவாள் வெட்டுகள் கூலிப்படைக் கும்பல் போன்று இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும், சுர்ஜித் தன்னுடைய சமூக வலைத்தளங்களில், அரிவாளுடன் கூடிய தன்னுடைய புகைப்படங்களை ஆதிக்கச் சாதிவெறி பாடல்களுடன் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான். “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் எப்படி தன் அக்காவை காதலிக்கலாம்” என்ற சுர்ஜித்தின் ஆதிக்கச் சாதிவெறியே கவினை படுகொலை செய்வதற்கான அடிப்படை. இந்த ஆதிக்கச் சாதிவெறியை சுர்ஜித் போன்ற இளைஞர்களிடையே ஊட்டிவரும் வேலையைத்தான் ஆதிக்கச் சாதி சங்கங்கள் மேற்கொண்டுவருகின்றன.
அதிலும், ஆதிக்கச் சாதிவெறியனான திருமாறன் ஜி போன்ற ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் தமிழ்நாட்டில் இந்து முனைவாக்கத்தின் மூலம் மதக்கலவரங்களை தூண்ட முடியவில்லை. இதனால், ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி சாதியமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்களையும் ஆணவப் படுகொலைகளையும் கலவரங்களையும் நிகழ்த்தி, தன்னுடைய அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் திட்டமிடுகிறது.
மறுபுறம், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற கருங்காலிகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களையும் தன்னுடைய அடித்தளமாக திரட்டிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயல்கிறது. இந்த கருங்காலிகள் தேவேந்திர குல வேளாளர் மக்களிடத்தில் சுயசாதி பெருமையையும் சாதிவெறியையும் ஊட்டி வருகின்றனர். தற்போது கூட கவினின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணசாமியின் மகனான ஷியாம், “உன் அரிவாள் மட்டும் பேசாது; எல்லார் அரிவாளும் பேசும்” என்று இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலோ தனது ஊடுருவலை தீவிரப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் இத்தகைய சாதியக் கொடூரங்களை கட்டவிழ்த்துவிட முயற்சித்து வருகிறது.
ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு ஜனநாயக சக்திகளும் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளும் கூட வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவோம் என்று வாக்குறுதியளித்திருந்த மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து முதல்வரான பிறகு, “தனிச்சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே இருக்கும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுகிறார். இது தி.மு.க. அரசின் அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும்.
“கடந்த 30 ஆண்டுகளில் ஏழு ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்துள்ளது. அதிலும் குற்றவாளிகள் மேல் முறையீடு செய்து தண்டனையிலிருந்து விடுதலை ஆகிவிடுகின்றனர் அல்லது தண்டனையை குறைக்கச் செய்து விடுகின்றனர். இதனால், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு இதுபோன்ற சிறப்புச் சட்டம் தேவையாக உள்ளது” என்று எவிடென்ஸ் கதிர் கூறுகிறார்.
இவ்வாறு இயற்றப்படும் சிறப்பு சட்டங்களில், ஆணவப்படுகொலைகளில் ஈடுபடும் குடும்பங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது; ஆணவப் படுகொலைகளை ஊக்குவிக்கும் வகையில் பேசும், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஆதிக்கச் சாதிவெறியர்களை கைது செய்து சிறையிலடைப்பது; ஆணவப் படுகொலைகளுக்கு மூளையாக செயல்படும் ஆதிக்கச் சாதி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வைக்கவும் வலியுறுத்த வேண்டிள்ளது.
அதேசமயம், களப்போராட்டங்களே இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, கவினின் ஆணவப் படுகொலையில் ஈடுபட்டுள்ள, சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் போலீசுதுறையை சார்ந்தவர்கள். அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் உள்ளவர்களே ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்தவர்களாக உள்ளனர்.
மேலும், தென்மாவட்ட போலீசுதுறையில் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு நிரப்பப்பட்டு வருகின்றனர். போலீசுதுறையில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த அதிகார வர்க்கத்தின் பலத்துடன்தான் தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
எனவே, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுவது என்பதுடன், ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதற்கான போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கிவரும் இச்சூழலில் இக்கட்டமைப்பானது முன்னெப்போதும் இருந்ததைவிட தலித் மக்களுக்கு விரோதமானதாக மாறி வருகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் உண்மையான ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் வழங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.