Description
கொள்ளை, கொலை, பாலியல் வக்கிரங்கள், கருப்புப்பண பரிமாற்றம், புரோக்கர்கள் என தேர்ந்த ஆன்மீகக் கிரிமினல்கள் பற்றிய கட்டுரைகளை இந்த மாதத்திற்கான புதிய கலாச்சாரம் இதழ் தொகுத்துள்ளது.
ஆன்மீகக் கிரிமினல்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- ‘புனிதமும்’ வக்கிரமும் : திருச்சபையின் இரு முகங்கள்
- 5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள்!
- தில்லு தொர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
- ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !
- ஆசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்து வெறியர்கள் !
- 3-ம் வகுப்பு பாடத்தில் ”ரேப் குரு” ஆசாராம் பாபு !
- நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு?
- போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு !
- குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
- விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !
- சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!
- அடங்கமாட்டியா நித்தியானந்தா ?
- பரகால ஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள் !
ஆன்மீக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்தும் இந்த கிரிமினல் சாமியார்கள், இறுதியில் தம்மிடம் நிவாரணம் தேடிவரும் பக்தர்களையே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சிதைக்கின்றனர். ஜெயேந்திரன், ஆசாராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா, கிறித்தவ பாதிரியார்கள்… என்று இந்தப் பட்டியில் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுலாபிதீனும் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகக் கிரிமினல்களை அடையாளம் காட்டுகிறது இந்த தொகுப்பு!
பதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்