privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-கலாச்சாரம்-அக்டோபர்-2012

புதிய கலாச்சாரம் அக்டோபர்  2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1. டூனாயுதம்
ரவியின் கேலிச்சித்திரங்கள்!

2. அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!
நிலப்பிரபுத்துவக் கொடுங்கோல் நிறுவனமான காப் பஞ்சாயத்து, பெண் சிசுக்கொலை, ஜாட் திமிர், பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைச் சுரண்டல் மீது கட்டப்பட்ட தொழில்துறை வளர்ச்சி – போன்ற பலவற்றுக்கும் இழிபுகழ் பெற்றது அரியானா மாநிலம்.

3. டி.வீ.சீரியல்கள்: எண்ணி மாளாத பன்றிக் குட்டிகள்!
தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை.

4.தேவனின் திருச்சபை! மாஃபியாக்களின் கருப்பை!!
தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், குஷ்டரோகிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?

5. திரை விமரிசனம்: ‘தி சால்ட் ஆஃப் த எர்த்’: மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!
குப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?

6. மண்ணிற் சிறந்த மலர்கள்! பு.மா.இ.முவின் போராட்டப் பெண்கள்!!
தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது.

7. வாழ்க்கை: மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.  அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது.

8. பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!
பழனி எனும் திருஆவினங்குடி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாம். இருந்த போதிலும் வருமானத்தில்  இதுதான் முதல் இடமாக இருக்கும். இங்கே முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.

9. டி.ஆர்.பி.ரேட்டிங்கும் கல்லாப் பெட்டிச் சண்டையும்!
இது என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு மட்டும் அல்ல.  தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்குக்காகவும் மக்கள் கணிசமான நேரத்தைச் செலவிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது. ’எத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்? அதை யார் தயாரிக்க வேண்டும்? எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்?’ என்பன போன்ற  முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது.

10. உண்மைச் சம்பவம்: மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம்!
முடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது? எப்படி பணக்காரன் ஆவது? என்ன தொழில் செய்வது? எப்படி வேகமாக வளர்வது? சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு.  குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.

11. மரணப் படுக்கையில் ஒரு அருவி!
கரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய்  நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம்.  அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை.  அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.

12. அழிபடல் சரியோ அண்ணாச்சிக் கடைகள்?
பசி, நீர் ஒடுக்கி

சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’

புதிய கலாச்சாரம் அக்டோபர்  2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க