privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை மூடு - பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !

டாஸ்மாக்கை மூடு – பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !

-

டாஸ்மாக்கை மூடு என பிரசுரம் கொடுத்தால் பொதுஅமைதிக்கு பங்கமாம்! மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆறு பேர் கைது!

ல்வி, மருத்துவம், இயற்கைவளம் எல்லாம் தனியாருக்கு! சாராயம் மட்டும் சர்க்காருக்கு!’ எனும் தாரக மந்திரத்தை உயிராய்க்கொண்டு, ‘தமிழகமே சாராயம் குடித்து நாசமாய் போக வேண்டும்’ என்ற பேயுள்ளத்துடன் ஆட்சி புரியும் பொற்தாரகை ஜெயா அவர்களின் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் டாஸ்மாக்கை மூடு! கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31 என்ற முழக்கங்கள் வேலை செய்ய ஆரம்பித்த்தன் விளைவாய் அம்மாவும் போலீசும் சும்மா இருக்க முடியாமல்…….

உசிலம்பட்டியில் கடந்த இரண்டு மூன்று தினங்களாய் டாஸ்மாக்கை மூடு சுவர் விளம்பரத்தை ஆள்   வைத்து காக்கிகள் காவல் நின்று அழித்தனர்.

நோட்டீசு வினியோகித்தவர்கள் கைது
பத்திரிகையில் வெளியான செய்தி

“ஏன் எங்கள் விளம்பரத்தை அழிக்கிறீர்கள்” என டி.எஸ்.பி.யிடம் கேட்ட போது “மேலருந்து உத்தரவு! நான் என்ன செய்யட்டும்? எனக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட பகையா என்ன?” என ஜகா வாங்கினார்.

இரவில் ஐந்தாறு போலீசார் ஒன்றாய் சேர்ந்து கொண்டு தோழர்கள் வீட்டில் சென்று நேரடியாய் விசாரிக்கத் துப்பின்றி அக்கம்பக்கம் உள்ளவர்களிடம், “அவ்ர் எங்க இருக்கார்? இவர் எங்க இருக்கார்?” என விசாரித்தனர். (பீதியூட்ராங்களாம்!)

29-08-2015 சனிக்கிழமை மதியம் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் டாஸ்மாக்கை மூடு! கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31 மற்றும் போதையும் போலீசும் ஒழிக! மக்கள் அதிகாரம் வெல்க! என்ற பிரசுரங்களை கடைகளில் விநியோகம் செய்து கொண்டிருந்த போது தோழர்கள் சந்திரபோஸ், கோட்டை, தென்னரசு, ஆண்டவர், பரமன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோரை ‘அனுமதி இன்றி பிரசுரம் கொடுக்கின்றீர்கள்’ எனக்கூறி கைது செய்தனர். எந்த ஊரில் பிரசுரம் கொடுப்பதற்கு அனுமதி வேண்டும்?

tasmac-people-powerபின்பு 143,188,353,505(1)(P) என பொது அமைதிக்கு பங்கம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர்.

ஆக

நாட்டை காப்பாத்தணும்னு கிளம்புனா சட்டத்துல இருக்கிற எல்லா நம்பரையும் எழுதி உள்ள தள்ளு!

நாட்டை களவாண்டா சொத்துக்கணக்கு நம்பரை எல்லாம் அழிச்சுப்புட்டு வெளில விடு!

இனிமே இப்புடித்தானாம்.

அப்புறம், மது விலக்குன்னு எவன் பேசினாலும் மட்டுமல்ல அந்த கொள்கையோடு குசு விட்டாலும் நுகர்ந்து பார்த்து சொல்லுமாம் உளவுத்துறை! உள்ளே தள்ளுமாம் சட்டம் ஒழுங்கு! அப்படியே ஜால்ராவாம் நீதித்துறை!

எதிர் கொள்வோம்! இலக்கை அடைவோம்! என்கிறார்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

கொசுறு செய்தியாக  இரவு முழுவதும் உசிலையின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காக்கிகள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு காவல் இருந்தது. அருகில் இருந்த இரவு வாட்ச்மேனிடம் “என்னங்கய்யா சாராயக்கடைக்கு போலீஸ் காவல் எல்லாம் பலமா இருக்கு” என்ற போது, “இவனுங்க நல்ல நேரம் கவர்மெண்ட் சாராயக்கடையோட நின்னுச்சு, விபச்சாரத்தையும் கொண்டு வந்துருச்சின்னா போயி விளக்கு பிடிப்பானுங்க போல மானங்கெட்ட பயலுக” என அலுத்துக் கொண்டார்.

போலீசுக்கு உறைக்குமோ என்னவோ?

பு.ஜ செய்தியாளர்கள்
உசிலம்பட்டி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க