privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமூடு டாஸ்மாக்கை - அதிரையில் மக்கள் அதிகாரம் போராட்டம்

மூடு டாஸ்மாக்கை – அதிரையில் மக்கள் அதிகாரம் போராட்டம்

-

  • மூடு டாஸ்மாக்கை
  • மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையில் தடுக்க முடியாது
  • ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம் நகரம், கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடு
மூடு டாஸ்மாக்கை - அதிரை ஆர்ப்பாட்டம்
“டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினால், கடை மீது கல் வீசுவார்கள். கடையை மக்கள் தாக்குவார்கள்.” – காவல்துறை.

என்ற கோரிக்கையை முன் வைத்து அதிரை நகரம், பட்டுக்கோட்டை நகரம், மதுக்கூர், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, ஏரிப்புறக்கரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பிரசுரம் வினியோகித்தும், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகவும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இரண்டு மாத காலமாக தொடர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இறுதியாக 15-10-2015 அன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கு, “டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினால், கடை மீது கல் வீசுவார்கள். கடையை மக்கள் தாக்குவார்கள். எனவே டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தில் உங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக அதிரை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பட்டம் நடத்துங்கள்” என்று அனுமதி அளித்தனர்.

மூடு டாஸ்மாக்கை - அதிரை ஆர்ப்பாட்டம்
பெண்கள் முன்வந்து தாலிக் கயிற்றை காண்பித்து “வெறும் கயிறுதாங்க கிடக்குது, இந்த டாஸ்மாக்கால” என்று குமுறினர் – பிரச்சாரத்தில்

குறிப்பாக, முக்கிய சாலையான கிழக்குக் கடற்கரை சாலையில் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. இரண்டு முக்கிய கல்லூரிகள், கோவில், மசூதி, சர்ச், மற்றும் குடியிருப்பு அருகில் இயங்கும் இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்களிடம் சென்றபோது நல்ல வரவேற்பு இருந்தது. பெண்கள் முன்வந்து தாலிக் கயிற்றை காண்பித்து “வெறும் கயிறுதாங்க கிடக்குது, இந்த டாஸ்மாக்கால” என்று குமுறினர். கடையை மூட வருகிறோம் என்றனர்.

பலர் டாஸ்மாக் கடை அருகிலேயே இறந்து கிடந்துள்ளனர்.

தோழர்கள், “அதிகாரிகளை நம்பி நமது வாழ்க்கையை காப்பாற்றவும், டாஸ்மாக்கையையும் மூட முடியாது. மக்கள் அதிகாரத்தால்தான் டாஸ்மாக்கை மூட முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பிரச்சாரம் செய்தனர்.

மூடு டாஸ்மாக்கை - அதிரை ஆர்ப்பாட்டம்கடை அருகில் போராட்டம் நடத்தினால் மக்கள் திரளாக வருவார்கள் என்று உணர்ந்த காவல்துறை வேறு இடத்தில் அனுமதி கொடுத்தது.

ஆர்ப்பாட்டம், மக்கள் அதிகாரம் தோழர் நடராஜன் தலைமையில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கிராமங்களில் இருந்து பெண்கள், கிராம கமிட்டி தலைவர்கள், பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். சமூக ஆர்வலர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், சி.பி.ஐ, வி.சி.கட்சி, தி.மு.க, ம.தி.மு.க, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உழைக்கும் மக்கள் கட்சி போன்ற அமைப்பினரும், தமிழ்தேச கூட்டமைப்பு தோழர் இராமசாமி, தமிழக மக்கள் விடுதலை இயக்கம் பொதுச்செயலர் தோழர் தங்க குமரவேல், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து ஆகியோர் கண்டனை உரையாற்றினர்.

“டாஸ்மாக் கடை அருகில் பார் வைத்துள்ளது, அரசு. 24 மணி நேரமும் டாஸ்மாக் சாராயத்தை பல இடங்களில் விற்பது அ.தி.மு.க.தான். டாஸ்மாக்கை மூடினால் அ.தி.மு.க கலைந்து விடும்.

கள்ளச்சாராயம் விற்றால் மக்களே தண்டனை வழங்க வேண்டும். கள்ளச் சாராயத்திற்கு துணை போகும் காவல்துறையை அம்பலப்படுத்துவது மூலமும், நாம் மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கவும், நீதித்துறை போலீஸ், அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள் போன்ற இத்துப் போன அமைப்புகளுக்கு மாற்று மக்கள் அதிகாரமே என்று நிறுவவும் வேண்டும்” என்று தோழர் காளியப்பன் உரையாற்றினார்.

செய்தி
மக்கள் அதிகாரம்,
பட்டுக்கோட்டை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க