privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சியில் " மூடு டாஸ்மாக்கை " சிறப்பு மாநாடு - சுவரெழுத்து பிரச்சாரம்

திருச்சியில் ” மூடு டாஸ்மாக்கை ” சிறப்பு மாநாடு – சுவரெழுத்து பிரச்சாரம்

-

போதையிலிருந்து தமிழகத்தை மீட்க , சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட சுவரெழுத்து பிரச்சாரம்.

shutdown-tasmac-campaign-dmp-5சென்ற ஆண்டு ஜூன், சூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலமாக “மூடு டாஸ்மாக்கை” என்ற இயக்கம் தமிழகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. இவ்வியக்கம் அரசியல் சக்திகள், மக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக எழுந்து டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது மக்கள் மனதில் கனலாக கனன்று கொண்டிருக்கிறது.

நீதிமன்ற பாசிசம், தமிழகத்தையே புரட்டி போட்ட மழைவெள்ளம் போன்ற சில அரசியல் நிகழ்வுகளால் தற்காலிகமாக இந்த இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும், ஜனவரி 1-லிருந்து “ஊருக்கு ஊர் சாராயம்…கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கத்தோடு டாஸ்மாக்கை மூடியே தீருவது என்ற உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கிறது, இந்த இயக்கம். வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்த திட்டமிருக்கிறது மக்கள் அதிகாரம். இதை  பிரகடனப்படுத்தும் அறிவிப்பாக, தமிழகம் முழுதும் சுவரெழுத்து பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

அதனுடைய ஒரு பகுதியாக தருமபுரி, ஓசூர் பகுதிகளில் சுவரெழுத்து பிரச்சாரம் வீச்சாக நடந்து வருகிறது.

shutdown-tasmac-campaign-dmp-1சுவரெழுத்து எழுதத் தொடங்கும் போதே “மூடு டாஸ்மாக்கை “என்ற முழக்கத்தை பார்த்த உடனே மக்கள் “மக்கள் அதிகாரமா எழுதுங்கள்” என்று கூறினர். சிலர், “எங்க வீட்டு சுவரிலும் எழுதுங்க” என்று கூறும் அளவுக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்திருக்கிறது. பள்ளிகள், நூலகம், வங்கி,பேருந்து நிறுத்தம், நெடுஞ்சாலைகள் என மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுவர்களில் எல்லாம் எழுதப்பட்டுவருகிறது.

பிரச்சாரத்துக்கு செல்லும்போது, எல்லோரும் சுவரெழுத்தை பார்த்ததாக கூறி நிதிஅளித்தனர். இவ்வாறு எல்லா பிரிவு மக்களிடமும் வமற்பை பெறும்வகையில் சுவரெழுத்து பிரச்சாரம் சிறப்பாக நடந்து வருகிறது.

இன்று பற்றி எரிகிற பிரச்சனையாக இருப்பது டாஸ்மாக் பிரச்சினை. இதை பற்றி எந்தக் கட்சியும் பேசாமல் இருக்க முடியாது என்ற அலையை உருவாக்கும் வகையில் மக்கள் அதிகாரம் செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் இதனை தங்களின் பிரச்சினையாக கருதி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது வெறும் சுவரெழுத்து மட்டுமல்ல, இதனால் மாறப்போவது அ.தி.மு.கவின் தலையெழுத்து. பெரும்பான்மை மக்களின் டாஸ்மாக் எதிர்ப்பு உணர்வுகளை மதிக்காமல், டாஸ்மாக்கை மூடாமல் ஊத்திக்கொடுப்பதைத் தொடர்ந்தால், வரும் தேர்தல் மட்டுமல்ல, அ.தி.மு.க ஆட்சியையும், அக்கட்சியையும் நிரந்தரமாகவே மக்கள் ஊத்தி மூடும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பு.ஜ செய்தியாளர்
தருமபுரி.

திருவாரூர் மாவட்டத்தில் சுவரெழுத்து பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க