privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்அனைத்து சாதி அர்ச்சகர் - சிதம்பரம் கருத்தரங்கம் - செய்தி

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரம் கருத்தரங்கம் – செய்தி

-

archagar-case-madural-prpc-hall-meeting-07க்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சிதம்பரம் அனந்தம்மாள் சத்திரத்தில் 23-01-2016 அன்று “ஆகமம் பெரிதா? அரசியல் சட்டம் பெரிதா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. ம.உ.பா.மைய கடலூர் மாவட்ட துணை செயலர் சி. செந்தில் கூட்ட்த்துக்கு தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் தாழை. கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், ம.உ.பா.மைய மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில் குமார் ஆகியோர் “இந்தத் தீர்ப்பு எத்துணை மோசமானது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது” ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசினர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.அரங்கநாதன், மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் பாலகுரு ஆகியோர் இந்த வழக்கு நடந்த காலத்தில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏற்படுத்தியுள்ள மன உளைச்சலையும் வெளிபடுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன் பேசியதாவது : “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும், சரத்து 14- சட்ட்த்தின் முன் அனைவரும் சமம் என்றும், சரத்து 16- சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பாகுபாடு பார்க்க்க்கூடாது என்றும் கூறுகின்றன. இதற்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதைத்தான் செய்தது.
  • அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்ப்பது அரசு, மக்களின் கடமை என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 51-க்கு அதை மீறி புராண கட்டுக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு உச்சநீதிம்னறம் சேது சமுத்திர திட்டம் வழக்கில் தீர்ப்பு வழ்ங்கியுள்ளது. அந்தத் திட்டம் இப்போது மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படுகிறது.
  • ஒரே சட்ட்த்தையும், சாட்சிகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஜெயல்லிதாவை குன்ஹா தண்டிக்கிறார், குமாரசாமி விடுவிக்கிறார்.
  • இந்திய கூட்டுமனசாட்சிக்கு திருப்தியளிக்கும் வகையில் சாட்சிகள் இல்லாதபோதும் அப்சல் குருவுக்கும், யாகூப் மேமனுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்து. ஆனால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை, தாழ்த்தப்பட்டவர்களை கொன்ற இந்து மதவெறியர்கள், ஆதிக்க சாதி வெறியர்கள் யாருக்கும் இது வரை தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்தில்லை.

இது தான் இந்திய அரசியல் சட்ட்த்தின் இரட்டைத் தன்மை. அர்ச்சகர் தீர்ப்பிலே கூட அப்படிபட்ட நயவஞ்சகமான இரட்டை தன்மைதான் எச்.ராஜா, இராம.கோபாலன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி என இரு எதிர் கருத்து உள்ளவர்களையும் இத்தீர்ப்பை வரவேற்க செய்கிறது. உண்மையில் இந்தத் தீர்ப்பு சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு போராடுபவர்களுக்கு 100% தோல்வி தான். 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்பில் ஆகமப்படி தான் அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்பது உட்கிடையாத்தான் சொல்லப்பட்ட்து. ஆனால் இன்று 40 வருடங்கள் கழித்து இன்று இந்த தீர்ப்பில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் அந்தந்த கோயில்களின் நடைமுறையை முன்னிறுத்தி ஒவ்வொரு நியமனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடரலாம் எனக்கூறியதன் மூலம் இந்த பிரச்சினையை இன்னும் 40 வருடங்கள் இழுக்க்கடிக்கும் திட்டமிட்ட சதி இது. archagar-case-madural-prpc-hall-meeting-10

இந்த வழக்கில் முக்கியமானது 206 அர்ச்சக மாணவர்களின் வேலைவாய்ப்பல்ல, கருவறை தீண்டாமையை ஒழிப்பது தான் முக்கியமானது. அது நிறைவேறியிருக்கிறதா? என்றால் இல்லை. அதற்கு நேர் எதிராக கருவறை தீண்டாமை சரி என்றே தீர்ப்பு கூறியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பின் அடிப்படை இந்திய அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உள்ள தனிமனித உரிமை, மத நிறுவனங்களின், மதங்களின் உரிமை ஆகிய இரண்டையும் வழங்குகிறது. அவற்றுக்கிடையே முரண்பாடு வரும்போது மத நிறுவனங்களின், மதங்களின் உரிமையே மேலானது என நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது மத சார்பற்றது அல்ல. அதை மதசார்பற்றதாக மாற்ற K.P.ஷா உள்ளிட்டவர்கள் கொண்டுவர முயன்ற திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. பின்னர் இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் 42வது சட்ட்த்திருத்த்த்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டதே. இங்கு இந்து மத ந்டவடிக்கைகளை அரசே ஊக்குவிப்பது நடந்து வருகிறது. அது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 48-ன் படி நடக்கிறது. மேலும், நீதிபதிகள் அதிகாரத்தில் உள்ளவர்களின்

மனநிலைக்கு ஏற்றவாறே தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இந்த நீதிபதிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். அவர்கள் கூறுவதே சட்டமாக கருதப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் பார்ப்பனிய சிந்தனையை கொண்ட நீதிபதிகளை நியமிக்கும் RSS –பார்ப்பன நிதிபதிகளின் முயற்சியை தடுத்த தமிழக வழக்கறிஞர்களின் போராட்டமும், பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் தமிழக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களும் தான் 42 வழக்கறிஞர்கள் இடைநீக்கம், உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளிட்ட வழக்கறிஞர்களின் மீதான அடக்குமுறை ஊழல் நீதிபதிகளுடன் கரம்கோர்த்து பார்ப்பன நீதிபதிகளின் நட்த்திய திட்டமிட்ட அடக்குமுறையே. இது வழக்கறிஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை.நீதிமன்றம் மட்டுமல்ல பல்கலைகழகம், அறிவியல் கழகங்கள், உயர் அதிகார பீடங்கள் அனைத்தையும் கைப்பற்றும் RSS- BJP யின் சதியின் ஒரு பகுதி.

இந்த பார்ப்பன பாசிச அபாயத்தை எதிர்த்து ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராடி முறியடிக்க வேண்டியுள்ளது.

மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.ராஜூ

“தீண்டாமையை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்ட சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் அதை பார்ப்பன உச்சநீதிமன்றம் செல்லாக்காசாக்கி விடுகிறது. அப்படித்தான் 1972-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு போட்ட அரசாணையை செயலிழக்க செய்துள்ளது. 1972 சேசம்மாள் வழக்கில் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமை செல்லாது, ஆனால் ஆகமப்படி தான் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு அர்ச்சகர் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை நிலைநாட்டியதே தவிர அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

அன்று இது தீண்டாமை, சமத்துவத்துக்கு எதிரானது, சிவில் சட்ட உரிமைக்கு எதிரானது போன்ற வாதங்கள் வைக்கப்படவில்லை, 206 அர்ச்சகர் பயிற்சிபெற்ற சூத்திர மாணவர்கள் வேலைக்காக காத்திருக்கவில்லை. ஆனால் 2016-ல் இவை அனைத்தும் இருந்தன. நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்பதை தீண்டாமை என ஏற்கமுடியாது. ஏனெனில் அவர்கள்”இன்னின்னார் தான் வரவேண்டும் என்கிறார்களே தவிர இன்னின்னார் வரக்கூடாது” என சொல்லவில்லை என்று நரித்தனமாக வியாக்கியனம் செய்கிறது. இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் இடமளிக்கிறது. இப்படி தான் இரட்டைக்குவளை முறையும், மற்ற தீண்டாமை பழக்கங்களும் நடைபெறுகின்றன. அவற்றையும் இந்தத் தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.

தமிழக அரசு இயற்றிய எந்த இந்துவும் அர்ச்சகராக பயிற்சி பெற்றிருந்தால் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை இந்தத் தீர்ப்பு ரத்து செய்யவில்லை. அதனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம், இது வெற்றி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஆகம விற்பன்னர் சக்திவேல் முருகனாரும் கூறி வரவேற்கின்றனர். தீர்ப்பின் இன்னொரு பகுதி ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராகவும் நீதிமன்றம் செல்ல்லாம் என சொல்லியிருப்பதையும், உண்மையில் வெற்றி என்றால் தமிழக அரசாணைக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புறக்கணிக்கின்றனர்.

மேலும் இந்த தீர்ப்பு ஆகமத்தை கடைபிடிக்க சொல்கிறது. ஆகமம் என்பது மூணு சீட்டு விளையாட்டு போல, ஒரு மோசடி. அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பார்ப்பனர்கள் சொல்வது ஆகமம் என்ற நிலை உள்ளது. 2002-ல் ஆதித்தன் வழக்கில் நம்பூதிரிகள் தான் அர்ச்சகராகலாம் என்ற மரபை மீறி ஈழவர் சாதியை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராகலாம் என தீர்ப்பளிக்கப்பட்ட்து. அதை சுட்டிக்காட்டி வாதிட்டால் அது சாதி தீண்டாமை பிரச்சினை. இந்த வழக்கில் அப்படியில்லை என நீதிபதிகள் மறுக்கின்றனர். ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் தான் அர்ச்சகராக வேண்டும் என்று இல்லை. ஆகமம் மாற்றப்படக்கூடாது என்கிறது. ஆகமம் என்பது கோயில் கட்டமைப்பை, வழிபாட்டுமுறையை குறிப்பிடுவது. அந்த ஆகமம் இப்போது ஆகமக் கோயில் என சொல்லக்கூடிய எந்தக் கோயிலிலும் கடைபிடிக்கவில்லை. உதராணமாக கருவறையில் மின்விளக்கு போடுவது, கோயிலை நள்ளிரவிலும் திறந்து வைப்பது. என சொல்லிக்கொண்டே போகலாம்.

archagar-case-madural-prpc-hall-meeting-01மேலும் 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தீர்ப்பு தமிழக வெற்றியா? இல்லையா? என ஆராய நீதிபதி கமிட்டி போடும் அவலம் நடந்தது. அப்படிபோட்ட மூன்று கமிட்டிகளும் ஆகமம் எந்த கோயிலிலும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ள 116 பார்ப்பனர்களில் 28 பேர் தான் அர்ச்சகராக பயிற்சி பெற்றவர்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த்து. இது தான் மற்ற கோயில்களின் நிலையும்.

இந்துக்களின் ஒற்றுமை, சமத்துவம் பேசுகின்ற ராம.கோபாலனோ, இல. கணேசனோ இந்த 206 அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் உரிமைக்காக கருவறை தீண்டாமையை ஒழிக்கவும் போராடவில்லை. இந்து மத நம்பிக்கையில்லாத, அதன் புராணங்களை எரிக்க வேண்டும் எனக்கூறுகின்ற மக்கள் கலை இலக்கிய கழகமும் பெரியாரிய அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. முன்பு தாழ்த்தப்பட்டவர்கள், சூத்திர்ர்கள் கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற தீண்டாமையையும் எதிர்த்து கோயில் நுழைவு போராட்டங்களை நட்த்தியது அம்பேத்காரிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தான்.

ஆகமம் இந்து மத நம்பிக்கை அதன்படி செயல்படவேண்டும். அதை மீறுவது அரசியல் அமைப்பு சட்டம் கொடுக்கும் மத நிறுவனங்களின் உரிமை பறிப்பது என வாதிடுகின்றனர். நம்பிக்கை என்பது நடைமுறைக்கு வரும் வரை தான், வந்துவிட்டால் அந்த செயல் சட்டத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும். ஒருவரை கொலை செய்ய வேண்டும் என எண்ணுவது குற்றமல்ல. அதுவே அரிவாளை எடுத்து ஓங்கிவிட்டால் அது தண்டனை சட்டம் 307-படி கொலைமுயற்சி குற்றச் செயலாகும். அது காஞ்சி கோயிலில் வைத்து சங்கராச்சாரி செய்தாலும் பொருந்தும்.

பார்ப்பானை தவிர யாரும் அர்ச்சகரானால் சாமி தீட்டு ஆகிவிடும். மற்ற சாதியினர் அர்ச்சகராகக் கூடாது என்றால் சரி அப்படியே இருந்துவிட்டு போகட்டும். எங்களுக்கு தட்டும் வேண்டாம் மணியும் வேண்டாம். பார்ப்பன அர்ச்சகர் வேலையை தவிர IAS ,IPS, வெளிநாட்டு வேலை என எதற்கும் போகக்கூடாது. அனைத்து பார்ப்பனர்களும் அர்ச்சகராக மட்டுமே இருக்க வேண்டும் என நாங்கள் கூறினால் உரிமை பாதிக்கப்பட்டதாக வர மாட்டார்களா? 63 நாயன்மார்கள் விதவிதமாக கடவுளை வணங்கினார்கள் எனக்கூறுகிறது புராணங்கள். அதை மட்டும் எப்படி ஏற்கிறார்கள்?

ஆகமம் தான் பெரிது என இராம.கோபாலன், எச். ராஜா சொன்னால் பிரச்சினையில்லை. இந்திய மக்களின் சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியேற்ற நீதிபதிகள் பேசுவது தான் பிரச்சினை. நீதிபதி மக்களுக்காகவா? மக்கள் நீதிபதிகளுக்காகவா? என்ற கேள்வி எழுகிறது.

மக்களுக்காக தான் நீதிபதிகள் அது தான் மக்கள் அதிகாரம் என்கிறோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கத் தான் மாவட்ட ஆட்சியர் காவல் துறை அதிகாரி, MLA, MP, அமைச்சர்கள். இதற்கெதிராக உங்களை தூக்கியெறியும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.

நீங்கள் அரசு இறையாண்மை பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் மக்களின் இறையாண்மை பற்றி பேசுகிறோம்.

ஏனெனில் நீதிம்ன்றம், சட்டமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை திருத்தி விளை நிலங்களாக மாற்ற உதிரத்தையும் உயிரையும் கொடுத்த்து உழைப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளிகள். அந்த மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள், மக்கள் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

உரிமைகளை காவுவாங்குகின்ற இது போலி ஜனநாயகம். உரிமைகளை பாதுகாக்கிற உண்மையான ஜனநாயகத்தை அடைய மக்கள் அதிகராத்தை கையில் எடுத்தே தீரவேண்டும்.

இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் கலைசெல்வன் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க