privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவிருதை : ஒரேயடியாய் மூடு டாஸ்மாக்கை !

விருதை : ஒரேயடியாய் மூடு டாஸ்மாக்கை !

-

“நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது” என்ற முழக்கத்தை முன் வைத்து மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிந்த வேளையில், ஐயா சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து, மக்கள் அதிகாரம் தலைமையில் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அடித்து உடைத்தனர். அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

shutdown-tasmac-demo-4இந்த நிகழ்ச்சி அன்று தீ போல் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. அதன் தொடர்ச்சியாக விருத்தாசலத்தில் காட்டுக்கூடலூர் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டது. அடுத்தநாள் மேலப்பாளையூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் தலைமையில் அங்கிருந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கடையின் முன்பு கிராம மக்கள் அனைவரும் முற்றுகை இட்டதன் விளைவாக அந்தக் கடை நிரந்தரமாக அகற்றப்பட்டது. இவை அனைத்தும் மக்களின் போர்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.

shutdown-tasmac-demo-1அன்று அனைத்துக் கட்சிகளும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று ஒருமித்த கருத்து பரவலாக இருந்த போதிலும் வாய்திறக்க மறுத்த ஜெயா, தேர்தல் வாக்குறுதியில் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்தார். இன்று 500 டாஸ்மாக் கடை மூடல் என்று ஜெயா அரசு உத்தரவிட்டிருப்பது மக்களை திசை திருப்பும் முயற்சி மட்டுமே. விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இலக்கு வைத்து மூட வேண்டும் என்று போராடிய மற்றும் போராட இருந்த கடைகள் உட்பட 7 கடைகளுக்கும் மேலாக அரசு மூடியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இது மட்டும் போதாது. தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு இடையுறாக உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்  என்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்களை மீட்க மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் தலைமையில் 21-06-2016 அன்று பஸ்டாண்டு மற்றும் பாலக்கரை, கடைவீதியில் மக்கள் மத்தியில் ஆர்ப்பாட்டமும், இந்த டாஸ்மாக் மூடல் என்பது மக்கள் அதிகாரம் தலைமையில் போராடிய போர்க்குணமிக்க மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அதை வெடி வைத்து கொண்டாடியது பார்த்தவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வண்ணம் இருந்தது.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“நம்ம பகுதியில் உள்ள கடைகளை அகற்ற நாமும் இவர்களுடன் சேர்ந்து போராடலாம்” என்று மக்கள் பேசியவாறு கலைந்து சென்றனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம்.

shutdown-tasmac-completely

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க