நண்பர்களே
இணையத்தின் வீச்சு அதிகரிப்பதற்கேற்ப ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் குவிகின்றன. குவிதலிலும், குவிந்தவற்றில் நம் கவனத்தை திருப்புவதையும் ‘அவர்கள்’ திட்டமிட்டு செய்கிறார்கள். இந்நிலையில் நாம் எதை படிப்பது, எதை தெரிவு செய்வது என்பதில் கவனமாயிருந்தால் கூட குழப்பம் வரும். வினவு தளத்தில் கட்டுரைகள், செய்திப் பதிவுகள், ரிப்போர்ட்டுகள், சிறப்புக் கட்டுரைகள், புதிய ஜனநாயகம் கட்டுரைகளைத் தாண்டி அன்றாடம் எழுத வேண்டிய செய்திகள் பல விடுபட்டுப் போகின்றன. அதில் குறைந்தபட்சமாவது சில செய்திகளை குறுஞ்செய்திகளாக தர இயலுமா என்று முயல்கிறோம்.
கூடுமானவரை தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரை உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், சினிமா, டிவி, ஊடகம், உரைகள் போன்ற தலைப்புகளில் குறைந்தது பத்து செய்திகள் வெளி வரும். இருப்பினும் இது ஒரு சோதனை முயற்சியே. உங்கள் ஆலோசனைகள், பங்களிப்புகளையும் தெரிவிக்கலாம். நன்றி
தொடர்ந்து இணைந்திருங்கள் – (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)
- வினவு