ஏழையின் கண்கள் என்ன விலை?

-

கண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட்டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத கண்கள்.

கண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இவ்வுலகம். கண்கள் உறைந்து போய் கருத்தைக் கருத்தரிப்பதற்காக நகரில் பிரம்மாண்டமாய் வளரந்து நிற்கும் விளம்பரப் பலகைகள். விழி வழித் தூண்டி உமிழ் நீர் சுரப்பதற்கு வண்ணச் சிதறலாய் இறைந்து கிடக்கும் விதவிதமான உணவு வகைகள். எதிர் பால் விழிகளை மறித்து ஆளுமையை அறிவிப்பதற்கு சரம் சரமாகத் தொங்கும் உடை வகைகள். கண்களின் நீர் வேண்டி விளம்பரங்களுக்கிடையில் கதை சொல்லும் தொலைக்காட்சியின் நிழல் வாழ்க்கை சீரியல்கள். விழிகளின் பிரமிப்பிற்காகப் பெரிய திரையில் அணிவகுக்கும் திரைப்படங்கள். கண்களின் பரபரப்பிற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஊடகங்களின் செய்திக் கதைகள். காதலின் துவக்கமோ, கவிதையின் இயக்கமோ, கண்களின்றி இல்லை. விழிகளுக்காகவே இவ்வுலகம். விழிகளின்றி இல்லை இவ்வுலகம்.

ஆயினும் ஏழைகளின் கண்களுக்கு இந்த படிமங்கள் எதுவுமில்லை. கழுத்தை நெறிக்கும் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு ஒரு உழைப்புக் கருவியாய் மட்டும் கண்கள். எழில்மிகு உலகத்தை இந்தக் கண்கள் அனுபவிப்பதற்கு எப்போதும் வழியில்லை. ஏழ்மையுடன் முதுமையும் சேரும்போது மங்கிப்போகும் கண்கள் மிச்சமிருக்கும் வாழ்வைக் கடனே என்று கழிக்கின்றன. அந்த மங்கிய கண்களையும் இரக்கமின்றி பறித்திருக்கிறார்கள் சில சதிகாரர்கள்.

திருச்சியிலும், பெரம்பலூரிலும் இருக்கும் ஜோசப் கண் மருத்துவமனை ஒரு பிரபலமான தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கடுவனூரில் 28.7.08 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த இலவச முகாம்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மனிதாபிமான முகமூடிகள். இந்த முகமூடியிலும் கூட அவர்களுக்கு அபரிதமான பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அரசின் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், இலவச முகாம்கள் நடத்துவதற்காக இம்மருத்துவமனைக்கு ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இது போக ஜோசப் நிர்வாகம் இலவச முகாம்களைப் படம் பிடித்து வெளிநாட்டு மிஷினரிகளுக்கு அனுப்பி நன்கொடைகளையும் அளவில்லாமல் திரட்டி வந்தது.

வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும் இந்த இலவசத்திற்கு இலக்கு வைத்த நிர்வாகம் அவ்வட்டாரத்தில் உள்ள மக்களைக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிப்பது போல பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென அம்மருத்துவமனை காட்டிய தீவிரம் சந்தேகத்திற்குரியது. முகாமிற்கு வந்த 180 நபர்களில்- பெரும்பாலும் கூலி வேலை செய்யும் முதியவர்கள்- 45 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சிகிச்சைக்காக சில ஆயிரங்கள் செலவு தேவைப்படும் வசதி இல்லாத அம்முதியவர்கள் இந்த இலவசமில்லையென்றால் சதை வளர்ந்த கருவிழிகளுடன் மங்கிய பார்வையோடு மிச்சமிருக்கும் வாழ்வைக் கழித்திருப்பார்கள். ஒரு வேளை அப்படி விட்டிருந்தால்கூட இருக்கும் குறைந்த பட்சப் பார்வைத் திறனாவது மிஞ்சியிருக்கும்.

அந்த 45 ஏழைகளுக்கும் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையில் ஆடுமாடுகளுக்கு செய்வது போல அறுவை சிகிச்சை நடந்தது. இலவசம்தானே என்ற அலட்சியத்துடன் போதிய பாதுகாப்பின்றி, பயிற்சியற்ற மருத்துவர்களால், சோதித்த்தறியப்படாத மருந்துகளுடன் ஈவிரக்கமின்றி அந்த சிகிச்சை நடந்து முடிந்தது. ஊர் திரும்பிய மக்கள் சிகிச்சை நடந்த கண்களில் தாளமுடியாத வலியுடன் தெளிவில்லாத பார்வையுடன் அவதிப்பட்டனர். திரும்பிச் சென்று மருத்துவமனையில் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால் ஒரு சொட்டு மருந்தைக் கையில் கொடுத்து விட்டு இனி பார்வை கிடைக்காது என்று அலடசியமாக கைவிரித்து விட்டது ஜோசப் மருத்துவமனை. ஏன்ன ஏது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே சாலை மறியல் செய்தபோது விசயம் வெளியே தெரியவந்தது.

இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. அதற்காக ஆளுக்கொரு இலட்சம் கொடுத்து சமாதனம் செய்ய முயல்கிறது அரசாங்கம். எத்தனை இலட்சம் கொடுத்தாலும் இழந்த பார்வை கிடைக்காதே என்று கதறுகிறார்கள் அந்த ஏழைகள். இனி ஓட்டை விழுந்த ஒற்றைக் கண்ணுடன் எப்படி வாழமுடியும் என்று நிர்க்கதியாக அழுகிறார்கள் அம்மக்கள். முதுமையோடு குருடும் இணைந்த பயங்கரத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.

ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இந்த பயங்கரவாதத்தை மருந்துகளின் குறைபாடு, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம், மருத்துவமனையைச் சோதனையிட்டோம் என்று மேலோட்டமாக விசாரணை நடத்துகிறது அரசு. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும். ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.

தனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது. அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே? அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது? மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.
திருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன. பணமிருப்பவனுக்குத்தான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தின் அந்த ஏழைகள் பார்வையிழந்து வாழப்போகிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களின் கண்களைப் பிடுங்கியிருக்கும் இந்தச் சம்பவத்தை ரம்பாவின் தற்கொலைக் கிசுகிசு குறித்து கவலைப்படும் நாட்டில் எத்தனைபேர் கவனிக்கப் போகிறார்கள்?
எது எப்படியோ நாம் பார்த்து நுகரத்தான் இந்த உலகில் அழகானவை ஏராளமிருக்கிறதே!

ஆனால், “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அ்தின்றேல் /புண்ணென்று உணரப் படும்.” என்கிறது குறள்.

 

 1. நியாயமான கேள்வி. மருத்துவ வசதி அனைவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும். பிரித்தானியாவில் வருமானம் குறைந்தவர்களுக்கான அரச மருத்துவமனைகள் சிறப்பாக இயங்குகின்றன. ஐரோப்பாவில் மருத்துவமனைகள் தனியார் நிறுவனங்கள் நடத்தினாலும், அனைத்து பிரசைகளுக்கும்(வருமானமற்றோர் உட்பட) மருத்துவ காப்புறுதி உண்டு. இதனால் தனியார்துறை பணத்தை பற்றி கவலைப்படுவதில்லை. எப்படியோ காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். மாதாந்த காப்புறுதி கட்டணத்தில் மூன்றில் இரண்டு பகுதியை அரசாங்கம் பொறுப்பு எடுப்பதால், மக்கள் சிறு தொகையை கட்டிவர கடமைப்பட்டுள்ளனர். இந்தியா போன்ற நாடுகள், மேற்குலகில் இருந்து ஆடம்பரங்களை மட்டுமே இறக்குமதி செய்வதை விட்டு விட்டு, இது போன்ற நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

 2. Another day in Paradise – Phil COllins
  ……………………………………………….
  She calls out to the man on the street
  sir, can you help me?
  Its cold and Ive nowhere to sleep,
  Is there somewhere you can tell me?

  He walks on, doesnt look back
  He pretends he cant hear her
  Starts to whistle as he crosses the street
  Seems embarrassed to be there

  Oh think twice, its another day for
  You and me in paradise
  Oh think twice, its just another day for you,
  You and me in paradise

  She calls out to the man on the street
  He can see shes been crying
  Shes got blisters on the soles of her feet
  Cant walk but shes trying

  Oh think twice, its another day for
  You and me in paradise
  Oh think twice, its just another day for you,
  You and me in paradise

  Oh lord, is there nothing more anybody can do
  Oh lord, there must be something you can say

  You can tell from the lines on her face
  You can see that shes been there
  Probably been moved on from every place
  cos she didnt fit in there

  Oh think twice, its another day for
  You and me in paradise
  Oh think twice, its just another day for you,
  You and me in paradise

  just another day for you and me in paradise
  just another day for you and me in paradise
  just another day for you and me in paradise
  ……………………………………………….

  This is not just a song but an image of my criticism / self-criticism.
  Whenever i am not moved by things around me i criticize myself singing this.
  Now I sing for ALL THOSE WHO HAVE VISITED THIS PAGE AND VANISHED WITHOUT A TRACE.
  NOT COMMENTING IS NOTHING BUT APATHY….
  Remember it’s just another day for you and me in paradise…

 3. முழுவதும் முட்டாள்தனமும் காழ்ப்புணர்வும் சிறிது கூட உண்மையை எழுத வேண்டும் என்ற அக்கரையும் இல்லாமல் எழுதும் உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்

  //அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும்.//
  அட மூடனே. நீ ஒரு இஸ்திரி கடை நடத்துகிறாய். உயர் மீன் அழுத்தத்தால் நீ இஸ்திரி போட்ட துணி கருகிவிட்டது என்றால் உன்னை கைது செய்ய வேண்டுமா.

  //இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். //
  இங்கும் அதே லாஜிக் தான்

  //மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும்.//
  முட்டாளே. ஒரு மருந்தினால் ஏற்படும் தவறிற்கு மருத்துவமனையை பொருப்பாக்குகிறாயா. வோர்ட்பிரஸ் வழங்கி ஒரு நாள் சரியாக செயல்பட வில்லை என்றால் உன்னை கைது செய்ய முடியுமா

  //ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.//
  இல்லையடா அறிவற்றவனை. தவறு மருந்தினால் என்றால் மருத்துவரை ஏன் கைது செய்ய வேண்டும். உனக்கு மூளை கிடையாதா.

  //தனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது.//
  ஏனென்றால் அது அரசு திட்டம். புரியவில்லையா.
  கண்புரை அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் இங்கு 1 கோடி நபர்கள் குருடாகத்தான் வாழ வேண்டும்

  //அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. //
  தவறு யார் மேலோ அவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட வேண்டும். உன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்ட முடியாது.

  //மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே? அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது?//
  கண்டிப்பாக தண்டிக்கத்தான் வேண்டும்

  //மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.//
  இது மட்டும் உண்மை !!

  //திருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.//
  ஆதாரம் இருக்கிறதா. நடந்தது என்னவென்று தெரியுமா.

  // டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன.//
  இது முழுப்பொய்.

  //பணமிருப்பவனுக்குத்தான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.//
  இது உண்மை

  • பெயரை கூட தைரியமாக சொல்ல முடியாத நீ எல்லாம் ஒரு மனிதன். நீ எல்லாம் கருத்து சொல்லவே லாயக்கு இல்லை.

 4. அனானி,
  // அட மூடனே. நீ ஒரு இஸ்திரி கடை நடத்துகிறாய். உயர் மீன் அழுத்தத்தால் நீ இஸ்திரி போட்ட துணி கருகிவிட்டது என்றால் உன்னை கைது செய்ய வேண்டுமா.//

  உனக்கு ஒரு துணி கருகுவதும் ஒரு மனிதன் கண் பாதிக்க படுவதும் ஒன்னா?
  உனக்கு வோர்ட்பிரஸ் வழங்கி ஒரு நாள் சரியாக செயல்பட வில்லை என்பதும் ஒரு மனிதன் கண் பாதிக்க படுவதும் ஒன்னா?

  //இல்லையடா அறிவற்றவனை. தவறு மருந்தினால் என்றால் மருத்துவரை ஏன் கைது செய்ய வேண்டும். உனக்கு மூளை கிடையாதா.//

  மருத்துவருக்கு அவார்டு குடுக்கலாமா? என்ன அவார்டு குடுக்கலாம்? தவறான குருப்பு ரத்தம் குடுத்து உன் அப்பவோ அம்மாவோ இறந்தால் என்ன பண்ணுவாய்? இது யாருடைய தவறு? என்ன பண்ணலாம்?

  //ஏனென்றால் அது அரசு திட்டம். புரியவில்லையா. கண்புரை அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் இங்கு 1 கோடி நபர்கள் குருடாகத்தான் வாழ வேண்டும்//

  ஒரு கோடிக்கு ஒரு 10000 பேரை குருடக்கலமா?

  //தவறு யார் மேலோ அவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட வேண்டும். உன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்ட முடியாது.//

  ஒரு பத்து வருஷம் அப்பறம் 50000 ரூபாய் அல்லது 100000 ரூபாய் அபராதம் போடலாமா?

  //இது முழுப்பொய்.//

  http://www.thehindu.com/holnus/002200808181655.htm
  http://www.rediff.com/news/2008/aug/18aiims.htm

  இந்த லிங்கு எல்லாம் என்ன சொல்லுது? என்ன உன் சொந்தத்தை எல்லாம் காப்பத்த நினைப்போ? அடுத்த நாள் கேசை திசை மாத்தினா தவறு சரி ஆகிடுமோ?

  //முழுவதும் முட்டாள்தனமும் காழ்ப்புணர்வும் சிறிது கூட உண்மையை எழுத வேண்டும் என்ற அக்கரையும் இல்லாமல் எழுதும் உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்//

  என்ன உங்க அப்பவோ அம்மாவோ பாதிக்கப்படவில்லை என்கிற ஆணவமோ? இல்லை பணம் இருக்கிற ஆணவமா?

  நந்தன்

 5. அன்புள்ள அனானி ,
  //அட மூடனே. நீ ஒரு இஸ்திரி கடை நடத்துகிறாய். உயர் மீன் அழுத்தத்தால் நீ இஸ்திரி போட்ட துணி கருகிவிட்டது என்றால் உன்னை கைது செய்ய வேண்டுமா.//
  அப்படியா.. சரி இலவசமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில் மட்டும் மருந்து கோளாறு வருமாம்… அதே சமயம் பணம் கொடுத்து செய்யப்படும் அறுவை சிகிச்சையில் எந்த கோளாறும் வராதாம்…. அப்படியானால் இது மருந்தின் கோளாறா? அல்லது மருத்துவமனையின் கோளாறா?
  //முட்டாளே. ஒரு மருந்தினால் ஏற்படும் தவறிற்கு மருத்துவமனையை பொருப்பாக்குகிறாயா. வோர்ட்பிரஸ் வழங்கி ஒரு நாள் சரியாக செயல்பட வில்லை என்றால் உன்னை கைது செய்ய முடியுமா//
  மருந்தினால் ஏற்படும் பிழை என்பது இரு வகை 1. மருந்து உற்பத்தியிலேயே கேட்டு இருக்க வேண்டும் 2. மருந்து வாங்கியபின் அதை உபயோகிப்போர் தவறான முறையில் / காலம் தாழ்த்தி உபயோகித்து இருக்க வேண்டும்…
  இந்த இரண்டில் எது நடந்தது என்பதை யாரடா விசாரிக்க வேண்டும்….
  மருந்தினால் ஏற்படும் தவறுக்காக அரசாங்கம் ஏனடா நிவாரணம் அளிக்கிறது… இந்த அரசாங்கம் மருந்து கம்பெனியிடம் இருந்தல்லவா பணம் பெற்று தந்து இருக்க வேண்டும் முட்டாளே…
  //இல்லையடா அறிவற்றவனை. தவறு மருந்தினால் என்றால் மருத்துவரை ஏன் கைது செய்ய வேண்டும். உனக்கு மூளை கிடையாதா.//
  அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் கோமாளியே… ஏன் இலவசமாக நடக்கும் சிகிச்சையில் மட்டும் இந்த மருந்து தவறு நடக்கிறது… இலவசமான அறுவை சிகிச்சையின் தரம் தெரியுமா உனக்கு…?
  //தவறு யார் மேலோ அவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட வேண்டும். உன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்ட முடியாது.//
  இன்று வரை எத்தனை பேர் உன் அரசாங்கத்தால் தண்டிக்க பட்டு உள்ளனர் முட்டாளே…
  அரசாங்கத்தால் உருபடியாக அரசு மருத்துவ மனைகளை மக்களுக்கு வழங்க முடியவில்லை… நீ எல்லாம் இங்கு வந்து வீம்பு செய்கின்றாய்.. இந்த வீம்பை அரசிடம் காட்டடா…
  // டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன.//
  அதற்க்கு ஆதாரம் இங்கு உள்ளது…
  http://poar-parai.blogspot.com/2008/08/blog-post_21.html

  இந்தியாவில் மருத்துவ சோதனை செய்ய மேற்குலக நாடுகளை போல இந்தியாவில் எந்த ஒரு கட்டுப்படும் இல்லை என்பதை நான் சொல்லவில்லை….
  //Dr Ambujam Nair Kapoor, a senior scientist of the Indian Council of Medical Research (ICMR), states the problem bluntly: “Unless we put in place systems that ensure safety of patients and good quality of trials, people will get away with whatever they can get away with.”//

 6. if i am running a laundry i have to take responsibility for the clothes that come to me. in this case i dont see the hospitals or the agencies declaring their sympathy or apology for the tragedy. they have got their space in media, only in the wrong way.
  anony you may belong to the community of doctors or the corporate NGOs, but your silly argument shows who you really are. how long are you guys going to show your cheapness and get away with it?

 7. வினவு –

  ரமணா படத்தில் காட்டியது போல் உள்ளது. பேராசை எவரை விட்டது.

  சற்று சம்மந்தமில்லாத சிந்தனை…

  நீஙகள் அன்புமணி ராமதாஸின் இரட்டை நிலையைப் பற்றி எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

  புகை பிடிக்கக் கூடாதுனு சீன் போடுறார் ஆனா புகையிலை ஆலைகளுக்கு அரசு தாராளமா லைசன்ஸ் கொடுக்கறாஙக. நம்ம ஆளு வெளியூர் பயணம் செய்துட்டு அங்க என்னெல்லாம் ”எதிர்ப்பு” என்ற வேலையில் செய்கிறார்களோ இவர் இங்கு கண் துடைப்பாக “காந்திகிரி” என்ற பெயரில் செய்து வருவதை எடுத்து விளம்பினால் நலம்.

  நிதானமற்ற அனானி – அனானியாவே இறு…

 8. //அப்படியா.. சரி இலவசமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில் மட்டும் மருந்து கோளாறு வருமாம்… அதே சமயம் பணம் கொடுத்து செய்யப்படும் அறுவை சிகிச்சையில் எந்த கோளாறும் வராதாம்…. அப்படியானால் இது மருந்தின் கோளாறா? அல்லது மருத்துவமனையின் கோளாறா?//

  கோளாறு எல்லா இடத்திலும் வரும். ஆனால் பணம் பிடுங்கும் பேய்கள் சில இடங்களில் தான் இருக்கிறார்கள்

  //மருந்தினால் ஏற்படும் பிழை என்பது இரு வகை 1. மருந்து உற்பத்தியிலேயே கேட்டு இருக்க வேண்டும் 2. மருந்து வாங்கியபின் அதை உபயோகிப்போர் தவறான முறையில் / காலம் தாழ்த்தி உபயோகித்து இருக்க வேண்டும்…//

  மூடனே. இது அரசாங்க திட்டம். கண் குருடாண 100 பேரில் 10 பேராவது பார்வை பெற வேண்டும் என்பதற்காக அரசு பணம் செலவழிக்கிறது.

  அதில் சில நேரம் மருந்து உற்பத்தியில் தவறு இல்லாவிட்டால் கூட பார்வையை திரும்ப பெற முடியாது.

  மருந்தை சரியாக உபயோகித்தால் கூட பார்வை திரும்ப பெற முடியாது.

  பார்வை திரும்ப வராவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். யாரோ செய்த தவறு மட்டும் தான் காரணம் என்று கூறுவது முட்டாள் தனம்.

  //இந்த இரண்டில் எது நடந்தது என்பதை யாரடா விசாரிக்க வேண்டும்…. மருந்தினால் ஏற்படும் தவறுக்காக அரசாங்கம் ஏனடா நிவாரணம் அளிக்கிறது… இந்த அரசாங்கம் மருந்து கம்பெனியிடம் இருந்தல்லவா பணம் பெற்று தந்து இருக்க வேண்டும் முட்டாளே…//

  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணம் அளிப்பது போல் தான் இதுவும். புரிகிறதா. முட்டாளே.

  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஏன் பணம் அளிக்கிறது என்று கேள்வி கேட்டாயா மூடனே. அப்படி யில்லாமல் உன் முட்டாள் தனத்தை ஏன் பறை சாட்டுகிறாய்

 9. //அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் கோமாளியே… ஏன் இலவசமாக நடக்கும் சிகிச்சையில் மட்டும் இந்த மருந்து தவறு நடக்கிறது… இலவசமான அறுவை சிகிச்சையின் தரம் தெரியுமா உனக்கு…?//

  எனக்கு நன்றாக தெரியும். எனென்றால் மருத்துவமனையை பொருத்த வரை எதுவும் இலவசம் இல்லை. உனக்கு தான் தெரியவில்லை. ஒன்று அவர்கள் நோயாளியிடம் பணம் வாங்குவார்கள். அல்லது அரசிடம் பணம் வாங்குவார்கள். என்வே மருத்துவருக்கோ நர்சுக்கோ யார் பணம் செலுத்தியவர்கள் யார் அரசு பணத்தில் வைத்தியம் பார்க்கிறார்கள் என்றே தெரியாது

  இலவச வைத்தியத்தில் மட்டும் தான் பிரச்சனை என்பது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் குற்றச்சாட்டு

 10. //if i am running a laundry i have to take responsibility for the clothes that come to me.//

  உண்மை. சோப்பை அதிகம் போட்டு விட்டாய். அல்லது வேறு சாயம் உள்ள துணியுடன் துவைத்து விட்டாய் என்றால் அது உன் தவறு.

  ஆனால் திடீரென சுனாமி அல்லது நிலநடுக்கம் வந்து அந்த துணிகள் பாதிக்கப்பட்டால் நீ குற்றவாளியா. அது உன் தவறா

  உன்னை கைது செய்ய வேண்டுமா.

  புரிகிறதா.

  பார்வை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து பார்வை திரும்பவில்லை என்றால் அது மருத்துவரின் தவற்றினால் மட்டும் தான் என்பது முட்டாள்தனமான, சிறுபிள்ளைத்தனமான, காழ்ப்புணர்ச்சி யுள்ள வாதம்

  // in this case i dont see the hospitals or the agencies declaring their sympathy or apology for the tragedy.//

  அவர்கள் தவறு செய்ய வில்லை என்றால் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  ஒரு விஷயம் – அறுவை சிகிச்சை செய்து கொண்ட யாரும் 6/6 பார்வை உள்ளவர்கள் கிடையாது.

  பார்வை பாதிக்கப்பட்ட 10000 பேர் அறுவை சிகிச்சை செய்ததில் 50 பேருக்கு பார்வை வரவில்லை. 9950 பேருக்கு பார்வை வந்துள்ளது. புரிகிறதா

  // they have got their space in media, only in the wrong way.//
  உன்னை போன்றவர்கள் இங்கு இடம் பிடித்துள்ளீர்களே.

  தவறான் த்கவலகளுடன்.

  //anony you may belong to the community of doctors or the corporate NGOs, but your silly argument shows who you really are. how long are you guys going to show your cheapness and get away with it?//

  என் வாதங்கள் ஆதாரப்பூர்வமானவே. நீதான் ஆதாரம் இல்லாமல் உளறுகிறாய்.,

  உன்னைபோன்ற பொய்யர்கள் இருக்கும் வரை நாங்கல் உண்மை சொல்லிக்கொண்டே இருப்போம்.

 11. அண்ணன் அனானி,

  //ஆனால் திடீரென சுனாமி அல்லது நிலநடுக்கம் வந்து அந்த துணிகள் பாதிக்கப்பட்டால் //நீ குற்றவாளியா. அது உன் தவறா..

  ஆமாம் சுனாமிக்கும் தவறானா அறுவை சிகிச்சைக்கும் என்னையா சம்மந்தம்..
  ஏன் எப்படி உளருகிறாய்?.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க