privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

-

ஈழம்: ஜெயாவின் “புலி” பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

rajapaksar_228x3371“கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள்  என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை என்று கொக்கரிக்கிறார், இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இலங்கை, சிங்கள நாடு என்பதை ஏற்றுக் கொண்டுதான் சிறுபான்மையினரான தமிழர்கள் வாழ வேண்டும் என்று வெளிப்படையாக பாசிச இனவெறியைக் கக்குகிறார், இராணுவத் தளபதி பொன்சேகா. தமிழ்த் தலைவர்களில் துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படும் கர்னல் கருணாவை எம்.பி.யாக நியமனம் செய்திருக்கிறது, ராஜபக்ஷே அரசு.

சிங்கள அரசின் இந்தத் திமிருக்கும் இனவெறிக்கும் மிக முக்கியமான காரணம், இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்தியா நேரடியாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ள உண்மை உலகுக்குத் தெரிந்தது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும் போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, இலங்கை அரசுக்குக் கடனுதவியாக ரூ. 400 கோடியைக் கொடுத்துள்ளது.

இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. பஜாரி அரசியல் நடத்தும் பாசிச ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.

20040618002903301மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று பாசிச ஜெயா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார். அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது என்பதை கருணாநிதியின் பேச்சும் செயலும் நிரூபித்தன.

இதற்கிடையே ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் பேரணிபொதுக்கூட்டம் நடத்திய திரைப்படத் துறையினர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக காங்கிரசு கழிசடை எம்.எல்.ஏ. ஞானசேகரன் உசுப்பி விட்டார். உடனே பாசிச ஜெயா, “பொடா சட்டம் இல்லாததால்தான் இப்படி புலி ஆதரவு  பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் ஆட்சியிலிருந்தால் இத்தேசத் துரோகிகளைக் கைது செய்திருப்பேன்” என்று பெருங்கூச்சல் போட, அதற்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு துக்ளக் “சோ”, சுப்ரமணிய சாமி, பா.ஜ.க., காங்கிரசு, இந்து நாளேடு எனப் பார்ப்பனபாசிச கும்பல் பிரிவினைவாதப் பீதியூட்டி பேயாட்டம் போடத் தொடங்கின. புலிகளை ஆதரித்து தனித் தமிழ்நாடு கோரிப் பேசிய ம.தி.மு.க. தலைவர் வைகோவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசு கழிசடைகள் ஊளையிட்டன. ஈழ விடுதலையை ஆதரிப்பதையும், சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதையும்கூடத் தேசவிரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாத  பயங்கரவாத பீதியூட்டி, 90களில் நடந்தது போல, மீண்டும் ஜெயா தலைமையிலான பாசிச ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் பார்ப்பனபாசிசக் கும்பல்கள் ஓரணியில் திரண்டு புலி பூச்சாண்டி காட்டி பீதியூட்டி வருகின்றன.

அவ்வளவுதான்! தொடை நடுங்கிய கருணாநிதி உடனடியாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்து சிறையிலடைத்தார். திரைப்பட இயக்குனர்களான அமீர், சீமான் ஆகியோரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாசிச ஜெயா கூச்சலிட்டதும், அவர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்ஷே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கைக்கு இந்தியா 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்புவது; ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்; அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அரசியல் சட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்தல் ஆகியவற்றைக் கொண்ட கூட்டறிக்கை இலங்கைஇந்திய அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டு, பிரணாப் முகர்ஜியும் கருணாநிதியைச் சந்தித்தார். “மத்திய அரசை வேதனைக்குள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம்” என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிவித்து விட்டார், கருணாநிதி. ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப் போல, இப்போதும் பார்ப்பனபாசிசக்  கும்பலுக்கு அஞ்சிப் பம்மிப் பதுங்கிவிட்டார்.

இந்தக் கூட்டறிக்கை எவ்வளவு மோசடியானது என்பதற்கு கிளிநொச்சியில இன்னமும் இலங்கை அரசு நடத்திவரும் போர்த்தாக்குதலே சாட்சியம் கூறப் போதுமானது. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வு; ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு” என்பதே தமது அரசின் கொள்கை என்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது பற்றி இந்த அறிக்கையில் எதுவுமே இல்லை.

இவ்வளவுக்குப் பின்னரும் ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். “சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்து இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிங்களனை நம்புவதைவிட ஈழத் தமிழனை நம்புவதுதான் இந்திய நலனுக்கு ஏற்றது. எனவே ஈழ விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்கிறார் பழ.நெடுமாறன். இந்த வாதம் சரியானதென்றால், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா செய்த சதிகளும் நியாயமாகி விடும். ஏனென்றால், நேபாள பிற்போக்கு மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், அவர் சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு ஆபத்தாகி விடும் என்று கூறித்தான் நேபாள மன்னராட்சியை இந்திய அரசு முட்டுக் கொடுத்து ஆதரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று நம்பி ஏமாற முடியுமா?

2909-karuநெடுமாறன் கதைப்பதைப் போலின்றி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமும் நலனும் வேறானதாக இருக்கிறது. தென்கிழக்காசிய நாடுகளின் “ஏசியான்” (ASEAN) ஐரோப்பிய நாடுகளின் “ஐரோப்பிய ஒன்றியம்” (EU) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (SAARC) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார  வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய ‘அமைதிப்படை’ இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.

இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.

தற்போது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது சிங்கள இனவெறியர்களால் உறுதி செய்யப்படும. தெற்காசியப் பிராந்தியத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்கி அழிப்பது என்ற இந்திய அரசின் நோக்கமும் நிறைவேறும். தமிழினத்தின் நியாய உரிமைக்கு வாய்திறக்கக் கூட முடியாதபடி பிரிவினைவாத  பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்களும், ஒடுக்குமுறையும் ஏவப்படும். எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

__________________________________

 

 1. Dear publisher & all user,
  Absolutly things are correct without doubt,I also in a clear vision, that India never ever help us.
  I couldnt understand ,why the tamils even still expecting help from them?
  If the tamil nadu tamilan is an original tamils ,then they wont see the match.
  When the people of tamilnadu ignore Karunathi or Jeyalalitha ,then only they can be safe them self too.
  Does he know the life,family,relation,rights ( Manmo,Jeya,Karuna,and etc.?

 2. மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நாற்காலிகளைத் தக்கவைத்துக்கொள்ள அரசியல்வாதிகள் அடிக்கும் பல்டிகளைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. ஈழத்தமிழர்கள் தங்களையன்றி யாருமற்றவர்கள்தான் போல… உணர்ச்சி மேலீட்டால் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு என்ன பொருள், அவ்வார்த்தைகள் செயல்வடிவம் பெறாதவரையில் அவை பொருளற்றவையே.

 3. சார்!
  நீங்க தமிழ்நாட்டிலதான் இருக்கிறீர்களா? இன்னும் உங்க மேல பொடாவோ தடாவோ பாயலியா? உண்மையை சொல்லாதீங்க சார்! அப்புறம் தமிழன் புரட்சிக்கு தயாராகிடுவான்.( இது நடக்கும்னு நான் கனவு காணுறதையே நிறுத்திவிட்டேன்!)
  பிற்பாடு இந்திய தேசியம் அழிந்துவிடும்! அதிகார வர்க்கம் ஒழிந்துவிடும்! இது நம்ம அரசியல்வாதிகளுக்கு பெரிய ஆபத்து!

  தமிழன் எப்பவுமே முட்டாள் கூ* … சாரி கூலியாகத்தான் இருக்கணும் சார்…

 4. கருணா (நிதி) என்ற பெயர் இருப்பதனாலோ என்னமோ முதல்வரும் பல்ட்டி அடித்திருக்கலாம்

 5. நீங்கள் சொல்வது சரி தான். இருப்பினும் தமிழ் தேசியவாதிகளுக்கும் பொருளாதார நலன்கள் இருக்கின்றன. இந்திய மைய அரசு அல்லது வெளிநாடுகள் சிங்கள அரசுடன் கொண்டிருக்கும் அதே இராஜதந்திர,இராணுவ, பொருளாதார உறவுகளை தம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆரம்பம் முதலே கேட்டு வருகிறார்கள். தமிழீழ அரசு அமைப்பு, சிறி லங்கா அரச அமைப்பை போல் அதன் பிரதியாக தான் இருக்கப் போகின்றது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

 6. //எனவே இன்று புலிகள் அழியாது இருப்பதனால் மட்டும் தமிழ் சமூகத்திற்கு எதுவும் சாதகமாக கிடைத்துவிடப் போவதில்லை என்பதே யதார்த்தம். புலிகள் அழிந்தால் தமிழர்களும் அழிந்து விடுவர் என்பது வெறும் மாயை என்பது அம்பலப்பட்டு வருகிறது. புலிகளை இல்லாது தமது அரசியல் பயணத்தை தமிழ் சமூகம் தொடர்வதற்கான சகல வழிகளையும் புலிகளே திறந்து விட்டுள்ளார்கள் என்று சொன்னால் அது இவ்விடத்தில் மிகையாகாது.//

  புலிகள் அழிந்தால் தமிழர் அழிவார்கள் என்று யார் சார் சொன்னது.?
  உங்களைப் போல நாலு தமிழர் காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் அடிமை வாழ்வு வாழமாட்டானா! கூலித் தமிழன் தானே சார் நீங்க! திங்கிறதுக்கு சோறும் படுக்குறதுக்கு படுக்கையும் கொடுத்தால் சிங்களன் காலை நக்கிட்டே இருப்பிங்கதானே!

 7. நீங்கள் சொல்வது சரிதான்…

  அதே சமயம் , ஈழத்திற்கு கலைஞர் கண்ணீர் விடவாவது செய்கிறார்…..

  இன்றைக்கு கலைஞர் ஆட்சியை உதறிவிட்டு மீண்டும் மக்கள் மன்றத்தில் போய் நின்றால் கலைஞரின் தமிழீழப் பாசத்தையும் , தியாக உணர்வையும் எண்ணி மீண்டும் அவரை அரியணை ஏற்றுவார்களா இந்த மக்கள்???

  அவர் இரண்டுமுறை அதையும் பரிசோதித்து விட்டார்…வாய்ப்பேதுமில்லை…..

  இன்றைக்கு கலைஞரின் நிலையை எதிர்த்து பலவாறாக குரல் கொடுக்கும் பலரும் , ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பைப் பற்றி துளியும் சிந்தித்ததாகக் காணோம்….

  ஏன் இன்றைக்கு கலைஞரைக் கண்டித்துப் போராடும் பலரும் தங்களது போராட்டத்தை ஜெயல்லிதா பக்கம் திருப்பி அவர் தனது நிலையை மறுபரீசீலனை செய்யும் வகையில் வலியுறுத்தினால் கலைஞரும் மனமுவந்து முழுமுயற்சிகளையும் எடுப்பாரே???

  எல்லோருக்கும் இங்கே அரசியல்தான் முக்கியம்…அடுத்த ஆட்சிதான் முக்கியம்..இதில் கலைஞரை மட்டும் கைகாட்டுவதென்பது அவர்தவிர நமக்கு வேறு கதியில்லை என்பதால்தான்…ஆகவே , நமது பொராட்டக்களம் இன்று கலைஞரை நோக்கி இருப்பதை விட ஜெயலலிதாவின் தமிழர் எதிர்ப்பு போக்கை கண்டிக்கும் நோக்கில் இருப்பதே சாலச்சிறந்தது..

  இதை தமிழரும் , தமிழ்நாட்டு அரசியல் சக்திகளும் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை….

  அவ்வாறின்றி , இன்றைய கலைஞர் ஆட்சியையும் காவு கொண்டோமானால் ஒருவேளை இடிஅமீன் ஜெயல்லிதா ஆட்சிக்கு வந்தால் இப்படி கட்டுரை கூட எழுத முடியாது….

  புரிந்து அறிந்து கலைஞருக்கு வலு சேர்ப்போம்!!!

  வாழக தமிழினம் , வளர்க தமிழ்நாடு!

 8. கோழைத்தனம் அல்ல
  அது பிழைப்புவாதத்தின் கோட்பாடு
  கருணாநிதி பதவிக்காக
  மிச்சமிருந்த கோவணத்தையும்
  அவிழ்த்து காட்டி
  தான் காயடிக்கப் பட்டதை
  காட்டி விட்டார்

  தமிழின தலைவர்களும்
  டெல்லிக்கு செல்ல
  வரிசையில் நிற்கிறார்கள்

  ஆம்

  அங்கு தான் வலி
  தெரியாமல் சுரணை
  புரியாமல்
  காயடிப்பர்கள்.

  புரட்சிகர போராட்டத்தை முன்னெடுத்து
  இந்திய மேலாதிக்கத்தின் கழுத்தை நெறிக்கும்
  போது தான்
  அதன் கையிலிருக்கும் ஈழத்தை விடுவிக்க முடியும்.

 9. ஈழம் – தமிழர்களின் கோழைத்தனம்!!!!

  இந்தப் பதிவானது , புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த “புலிப் பூச்சாண்டியும் , கலைஞரின் கோழைத்தனமும்” என்ற கட்டுரையின் சில முரண்பட்ட கருத்துக்களைச் சுட்டும் வகையிலும் , ஒவ்வொரு முறையும் நமது இன எழுச்சி ஏன் பாழ்பட்டு போகிறது , நமது போராட்டம் ஏன் திசைமாறிப்போகிறது என்பதையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது!!!!
  ……..
  http://baluindo.blogspot.com/2008/11/blog-post_4110.html

 10. what is the resolution for this Mr.Vinavu tell us. you are telling clearly and in a laser eye sharp judgement words. but tell us wat can we do if both these kinds of politcal parties are trying to make their party safe and want to rule tamil people but not helping the tamil people.. if both these big parties didnt come front(D.M.K & A.D.M.K) then who is there to help our tamil people. we the people cant do nothing for sure because people having full power itself not doing nothing but how people like us can do for our people. even india itself not trying to help our people means only god should come down and help but it too wont happen…

 11. இக்காலத்திலும் ஏன் வருங்காலத்திலும் பொருந்தகூடிய அவசியமான கட்டுரை!

 12. கருத்தியல் ரீதியான ஆய்வாக இருக்கிறது. தமிழினம் முதலில் தன்னை, தனது நிலையை உணரவேண்டும். சேலைக்கும் சட்டைக்கும், கலர்ரீவீக்கும் வாக்களிக்கும் நிலை மாற வேண்டும்.வலுவான தமிழகத்தை, தமிழக மக்களின் நல் வாழ்வை, தமிழ்த் தேசியத்தின் இருப்பை முன்மொழிவோரை ஆட்சியில் அமர்த்துங்கள் தமிழகத்து உறவுகளே !

  உண்மைகளைப் பேசுவோரை உலகம் ஏற்பதில்லை. உலகம் உருண்டை என்றவரையே கொளுத்திய உலகிலல்லவா நாம் பிறந்துவிட்டோம். காலம் கடந்து உண்மைகள் விளங்கும்போது, இந்தியாவை சுற்றிப் பகைநாடுகளாக இருக்கும். ஆனால் அப்போது, பிராந்தியத்தைக் கடந்த ஒரு வேறுவிதமான ஒழுங்கு இருக்கும். இது இந்தியா தானாகத் தனக்கு வரித்தக் கொள்ளும் விலங்கு. ஏனென்றால் பாக்கிஸ்தான், தானே பிரித்து நிறுவிய பங்களாதேஸ், சீனா, மாற்றம் கண்டிருக்கும் நேபாளம், என ஒரு பகைப்பின்புலம் கொண்ட சூழலில், தமிழினத்தை அழிக்க முனைவதனூடாகத் தமிழகத்தையும் பகைப்புலம் கொண்டதாக மாற்ற முனையும் நடுவணரசு மீது , நாளைய இளைய தமிழகம் கொதிக்கும் எரிமலையாகிப் பாயும். தற்போதையதைவிட மிகவும் அதிகமாகும். ஏனென்றால் தனது சகோதர்கள் அழிகின்ற நிலை வரும்போது கடல்தாண்டிக் காப்பாற்றவே துடிக்கும்.சுற்றிவர அரபுநாடுகளை எதிர்கொண்டவாறு இஸ்ரேலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டவாறு கியூபாவும் தமது மக்களது பலத்தில் நின்று நிலைக்கவில்லையா? தமிழகமே கடலை எம்முடலால் நிரப்பிக் கடந்தாவது தமிழனுக்காய் உலகிலே ஒரு நாடு, அது தமிழீழத் தாயகமே.

  கொடை வள்ளல் எம்.ஜீ.ஆர் அவர்கள், தம்பியின் முடிவே தன் முடிவென்று அமைதியானார். ஆனால் அவரது மனதிலே ஈழத் தமிழினம் மீதிருந்த அன்பினை செயலால் காட்டினார். ஆனால் இன்று கதைத்தே கொல்கிறார்கள். ஒரு கவலை அப்படிப்பட்ட ஒருவரது கட்சியில் ஒருவரும் தன்மாமுள்ள தமிழர்களாக இல்லையா என்பதுதான் வியப்பாக இருக்கிறது. எல்லாத் தொண்டர்களும் ஒன்றாக விலகிப்போய் எம்.ஜீ.ஆர் அவர்களின் கொள்கையை முன்னெடுக்கும் முன்னணியை அமைத்தால் அம்மாவுக்கு அறிவு வரலாம். ஏனென்றால் அவர் மக்கள் திலகத்தையே ஏலம் போட்டுவிட்டார். ஈழத்தமிழர் என்று சொல்வதே பாவம் என்பவருடன் எப்படி மக்கள் திலகத்தின் பாச உறவுகள் வாழாதிருப்பது. புரியவில்லை. வேண்டுமென்றால் புரட்சித் தலைவி(எதிலோ, டக்ஸி டைவர் முதல் எதுவரையோ) இரட்டை இலைச் சின்னத்தை விட்டு தேர்தலில் நின்றால் புரியும் தனது வண்டவாளம்.கன்னடத்துச் சிங்காரி தமிழின அழிவுக்கு ஆதரவுக் குரலாகச் செயற்படத் தமிழகம் அனுமதித்துள்ளதே! கொடுமையிலும் கொடுமையாகும் !

 13. ஆம் நண்பர்களே நாம் அனைவரும் இப்போது தான் தமிழர்களிற்கு உரித்தான தலைவன் யார் என்பதை தேர்வு செய்யவேண்டியகாலம் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது கருணாநிதி ஜெயலலிதா இருவரும் பதவிக்காலத்தில் ஒருவரைஒருவர் ஆண்டார்களே தவிர தமிழர் எம்மை மறந்துவிட்டார்கள்
  என்னைபொறுத்தவரை தமிழ்நாட்டின் விடிவிற்கு மூண்றாம் தலைவன் வேண்டும் இவர்கள் இருவரையும் ஒதுக்கி வையுங்கள் ஆதரிக்கவேண்டாம்…….

 14. தமிழ் நாட்டுமக்களே தொலைகாட்சி வேட்டி சேலை
  இவைகளிர்க்காக உம் எதிர்கால சந்ததியா எமார்த்திவிடாதீர்கள் வரும் தேர்தலில்…

 15. http://vinavu.wordpress.com/
  u are dooing wonderfull job
  kindly write about infosys narayanamoorthy

  இந்திய தொழிலதிபர் மகிந்தவின் ஆலோசகர் ஆகின்றார்: தொழில்நுட்ப வட்டாரங்களில் பேரதிர்ச்சி அலை

 16. ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி

  ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.

 17. கருணாநிதி பதவிக்காக
  மிச்சமிருந்த கோவணத்தையும்
  அவிழ்த்து காட்டி
  தான் காயடிக்கப் பட்டதை
  காட்டி விட்டார்

  டேய்! கருணாநிதி தமிழின் துரோகியே ஈனப்பயலே இங்கு நீ அம்பலப்பட்டு நிற்கிறாயடா கிழட்டு பன்றியே.

 18. விஸ்வமடு படை நடவடிக்கையில் சிப்பாய் கொள்ளையடித்த தமிழரின் நகைகள் தம்புத்தேகமவில் சிக்கியது : 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் பறிமுதல்.

  [Thursday, 2009-03-19 04:30:00] Seithi-News

  தம்புத்தேகம சோதனைச் சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது இராணுவ சிப்பாயொருவரிடமிருந்து சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

  முல்லைத்தீவு, விஸ்வமடுவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தமிழ் மக்களது வீடகளில் கொள்ளையில் ஈடுபட்டு சேகரித்து வைத்திருந்த பெமருந்தொகை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே தம்புத்தேகம சோதனைச் சாவடியில் வைத்துச் பொலீசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

  இவரிடமிருந்து தங்க மாலைகள், வளையல்கள், காதணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.

  கைதுசெய்யப்பட்டுள்ள இவர் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்மதுள்ளார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க