Saturday, July 13, 2024
முகப்புசெய்திஅஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!

அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!

-

len1

நவம்பர்-7, 1917

ரசிய சோசலிசப் புரட்சி:

நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகள்!

“ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்

ஒழிக்க வரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்…..” “பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது!…”

“தனிச்சொத்தை ஒழித்த்தும் எல்லாச்செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது. இது மெய்யானால் முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சுமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை…”

“தற்போதுள்ள உங்களுடைய சமூதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச்சொத்து ஏற்கெனவே இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலரிடத்தே தனிச்சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்த்துதான்.”

“ஆக, சமுதாயத்தின் மிகப்பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாது ஒழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம்.

சுருங்கச் சொல்வதெனில் உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்…”

“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்ய்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.

அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!

பாட்டாளிகள் தமது அடிமைச்சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலிருந்து…
1848

 

 1. ஆண்டைகளின் சிரிப்பு
  சத்ததில் எங்களின்
  அழுகுரல்கள்
  தேய்கின்றன…

  சென்ட்களின் “வாசத்தால்”
  வியர்வைகள் நாற்றம்
  அடிக்கதொடங்கி விட்டன….

  நாளை மீண்டும்
  சத்தம் எழுப்புவோம்
  அது அழுகுரலாய் இல்லை…

  “புரட்சி ஓங்குக
  கம்யூனிசமே வெல்லும்
  முதலாளித்துவம் இற்று
  வீழும் ” என்ற
  போர்க்குரலாய் இருக்கும்.

  http://kalagam-therebellion.blogspot.com/

 2. பிழைப்புக்கான உழைப்பு நினைவுகளைத்
  தின்னும் இந்த நாட்களில் இம்மாதிரி நினைவூட்டல்கள் மிக அவசியம்.

  நன்றி சகா

 3. உழைக்கும் மக்கள் ஒன்று கூடுகின்றனர்… புதிய உத்வேகத்துடன், மிக உயர்ந்த நோக்கத்துக்காக .. சமத்துவ சமூகத்தை கட்டி அமைத்திட…

  முதலாளித்துவமே… நீ ஒரு பிரச்சினை அல்ல.. நீ தோண்டிய சவக்குழிக்குள் நீயே அடக்கம் ஆவாய்.. மார்க்ஸ் ஆய்வு செய்து கூறிய வாரத்தைகள் இன்று முதலாளித்துவம் தனது வாயினாலேயே உண்மை என்று ஒத்துக்கொள்கிறது..

  “முதலாளித்துவம் தனக்குச் சவக் குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாக உற்பத்தி செய்கிறது. இவ்வர்க்கத்தின் வீழ்ச்சியும் அதே போல் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவொண்ணா தவை”

  புரட்சிக்காக பாடுபட்ட, பாடுபடும் அனைத்து தோழர்களுக்கும் செவ்வணக்கங்கள்.

 4. முதலாளித்துவம் மிக கொடுமையானது என்று சொன்னால் நம்மை மேலும் கீலும் பார்ப்பார்கள். ஆனால் இன்று விலைவாசி, வேலை இன்மை, போன்ற பிரச்சனைகளால் அவர்களே இன்று கம்யுனிசம் பேசுகிறார்கள்.

  இந்த நவம்பர் 7 நிச்சயம் உலக பாட்டாளி வர்க்கத்திற்க்கு நல்ல ஆரம்பம்.

 5. ஏனுங்க… கம்யூனிசப் புரட்சி வருவது இருக்கட்டும்ங்க. கன்னியாகுமரி மாவட்டத்தில விளவங்கோடு தாலுகாவில கேரளாவில் இருக்கக்கூடிய அணைக்கட்டுலருந்து பாசனத்துக்கு தண்ணி வருமாங்க முதல்ல…
  அங்கயும் கம்யூனிசம் தானுங்க ஆளுது… இங்கயும் கம்யூனிசம் தாங்க மக்களவை உறுப்பினர்.

 6. //அங்கயும் கம்யூனிசம் தானுங்க ஆளுது… இங்கயும் கம்யூனிசம் தாங்க மக்களவை உறுப்பினர்.//

  Is it? Dear selva may I know what in your dictionary means a Communists? Just the Name shake? If that is the case Hitler and Mosoulini are Socialists.

  Those who role in Kerala and WB and helping Globalisation are definitely not Communists

  Prognostic Sage

 7. //Those who role in Kerala and WB and helping Globalisation are definitely not Communists//

  அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள். கேரளாவிலும் மேற்கு வஙங்கத்திலும் ஆள்பவர்கள் கம்யூனிசத்தவர்கள் அல்ல. அதாவது கம்யூனிசக் கட்சியின் பெயரைத் தாங்கியவர்கள் ஆனால் கம்யூனிசத்தவர்கள் அல்ல.

  அப்படி என்றால் வரும் புரட்சி முதலில் கம்யூனிசக் கட்சிக்குள் தான் வரவேண்டும். கம்யூனிசச் சித்தாந்தத்தை வைத்து அரசியல் நடத்துபர்களுக்குள் மாற்றமும் புரட்சியும் ஏற்படவேண்டும்.

  உங்களது பதிவுகளும் அவற்றை முதல் நோக்கமாகக் கொள்ளவேண்டும் அல்லவா?
  ஊரில் உள்ள மற்றவர்களை ஒழுங்காக இருக்கச் சொல்லும் முன் நம் வீட்டில் எல்லோரும் ஒழுங்காக இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்வது தேவையானது என நான் கருதுகிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ?

  தடம்புரண்ட கம்யூனிசக் கட்சிகளைத் தட்டிக்கேட்டோ அல்லது… தவறுகள் நடக்கும் போது கண்டும் காணாமலும் விடும் கம்யூனிச ஆட்சியையோ சரிப்படுத்த நெறிப்படுத்த ஆக்கபூர்வமான எந்த வேலையை நீங்கள் செய்கிறீர்கள் அன்பர்களே…

  வெறுமனே திட்டிக்கொண்டிருப்பதால் எந்தத் தீர்வும் வரப்போவதில்லை..

  ஆரம்பியுங்கள்…!
  முதலில் கம்யூனிசக் கட்சியிலிருந்து புரட்சி ஆரம்பிக்கட்டும்.

 8. இதை பாருங்க மொதல்ல..

  லெனின் சிலையை தகர்த்தெறியும் இளம்பெண். ஜேம்ஸ்பாண்ட் என்ற ஒரே ஆயுதத்தை வைத்து அமெரிக்காசின் திமிர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க