Thursday, December 12, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா? (பாகம்- 3 )

பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா? (பாகம்- 3 )

-

குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.

அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2001இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும்  என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன? இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? ற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?

இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?

இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?

அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.

ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!

சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?

புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்? இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.

இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்?

– தொடரும்

 

 

  1. I agree with your comments on POTA 100%. Such draconian laws have no place in civilized society. Our leaders will tend to misuse them….

    However, I think the misuse will be against the political enemies, period. The religion of the enemies wouldn’t matter. It is easy to imagine somebody like Kalaignar, Lallu or Mulayam – who all always angle for the muslim vote – not arresting muslims, but misusing it against the hindu political enemies. Can you imagine the Jumma Masjid Imam or Syed Shahabuddin using POTA against muslims? Or Kalaignar wanting to use it against LTTE supporters? (He may reluctantly use it if he thinks the public opinion is against LTTE) The real reason why it is being misused against muslims is that BJP, Shiv Sena etc. are in power and are in general have more political muscle than the muslims at this point.

  2. There are some questions being raised about Qasab and his claims. The so-called security camera shot of Qasab, who is being billed by the media as the “lone surviving gunman,” at Chatrapathi Sivaji train terminal in Mumbai, appears fake. The angle is too narrow for a train station which would have a wider angle and be shot from higher up than the photo being shopped by the Indian police. However, according to Asian intelligence sources, Qasab may have been trained by Hindu militants and was rushed to the scene of the attack for a photo opportunity hastily arranged by the Hindu right-wing Bharatiya Janata Party (BJP) propaganda team.
    http://www.prisonplanet.com/mumbai-attacks-more-complicated-than-corporate-press-reports.html

  3. நீங்க ஒன்னு பண்ணுங்க.
    தமுமுகவின் அதிகார்வப்பூர்வ அடிமை அ மார்க்ஸ், ராஜ்குமார் கடத்தல் புகழ் சுகுமாறன், நம்ம PUCL நக்ஸலைட் ஜிஞ்ஜா கோஷ்டி

    இவங்களை மும்பைக்கு கூட்டிட்டு போய் ‘பொய் புனைசுருட்டுக் குழு’ அப்படின்ற பேர்ல ஒரு அறிக்கை குடுங்க.

    ஆனால் இதனை கமுக்கமாக செய்ய வேண்டும். தப்பித்தவரி சுரணையுள்ள மராட்டியர்களிடம் சிக்கி விடாதீர்கள்.

  4. சுரணையுள்ள மராத்தியன்னா என்ன அர்த்தம்?அதாவது தாக்கரேக்கள் என்ன சொல்லறானுங்களோ அப்படியே மதவெறி,இனவெறியில் இறங்கி பலரையும் கொல்வது,அது சரி . சுரணையுள்ள இந்து எனில் அவன் முசுலீமைகொல்லவேண்டும்.சுரணையுள்ள தமிழன்னா தாழ்த்தப்பட்டவர்களை துன் புறுத்த வேணும்.இதுதான் உங்கள் சுரணை இல்லையா?எப்படி ஒரு அடியாரு சிவன் வந்தவுடனே தன்னோட மனைவியவே கூட்டிக்கொடுத்தானே அதை பெருமையா சொல்லிவைச்சானே அதுக்கும் பேரு சுரணை தானோ.
    அய்யா அதுக்கு பேரு சுரணை இல்லீங்கோ அது தான் கொழுப்பு.பார்ப்பன கொழுப்பு,உங்க கொழுப்பகுறைக்க எங்களை விட்ட யாரு தான் இருக்காங்க?

    யாரையும் மரியாதை குறைவாக திட்டும் நோக்கம் நமக்கில்லை.ஆனால் Donthateanyone, கொழுப்பெடுத்து பேசினால் எப்படித்தான் பதில் சொல்வது.பார்ப்பன் கருத்துக்களை குமரன் போன்றவர்கள் சொல்வத்ற்கும் இவர் சொல்வதற்கும் வித்யாசமிருக்கிறது.

    கலகம்

    http://kalagam.wordpress.com/

    pls reject previous comment because it has mistake

  5. It is unfortunate Hindu terror groups had the last laugh in the recent attacks with the death of Hemant Karkare, the ATS chief who valiantly brought into custody all those Hindutva thugs involved in Malegon blasts. POTA like draconian laws serve no purpose except for fulfilling BJP’s political vindictiveness on Muslims and secular Hindus. The PM-in-waiting Advani might be of all smiles with the developments. BJP was actually gifted a five year long of its effort in just one incident.

  6. இங்கே தேசபக்த‌ கோபம் பொத்துக்கொண்டு வர ஒவ்வொரு பதிவிற்கும் வெறித்தனமாக பின்னூட்டமிடும் தேசப்கத தெய்வங்கள் அனைத்திற்கும் தேசபக்தி தொடர்பாக‌ சில எளிய கேள்விகள் மட்டும்.

    இந்த‌ நாட்டில் தான், நீங்கள் கூடிக்கூடி அழுவதற்கு காரணமான‌ அதே ம‌காராட்டிர‌த்தின் வித‌ர்பா ப‌குதியில் தான் இதுவ‌ரை ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்துகொன்டிருக்கிறார்க‌ள் !

    இந்த‌ அதிர்ச்சிக‌ர‌மான பச்சைபடுகொலை செய்தி உங்களின் மென்மையான‌ தேச‌ப‌க்த‌ உள்ள‌த்தை என்றைக்காவது வாட்டி வ‌தைத்திருக்கிறதா ?

    அதே மும்ப‌யிலும்,உங்கள் தேசபக்த தலைநகர் டெல்லியிலும்‌ முதலாளிகளுக்காக‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ குடிசைக‌ளை அள்ளி வீசினார்க‌ளே அவையெல்லாம் உயிர்க‌ள் இல்லையா ?அவையெல்லாம் உங்க‌ள் தேச‌ப‌க்த‌ ப‌ட்டிய‌லில் இட‌ம் பெறுமா ?

    எங்க‌ள் நாடு,எங்க‌ள் நாடு என்று நீங்க‌ள் தேச‌ப்ப‌ற்றை டன்டனாக‌ கொட்டும் இந்த‌ நாட்டில் தான் 83கோடி ம‌க்க‌ள் தின‌மும் 20ரூபாய் கூட‌ செல‌வ‌ளிக்க‌ வ‌க்கில்லாமல் பிராணிகளை போல‌ அநாதைக‌ளாக‌ விட‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ ள்
    இதையெல்லாம் உங்க‌ள் தேச‌ப‌க்த‌ உண‌ர்ச்சி க‌ண்டுகொள்ளாதா ?

    இதற்கெல்லாம் என்றைக்காவது நீங்கள் ஒரு சொட்டு கண்ணீராவது சொட்டியதுண்டா அல்லது இப்போது ஆடுவது போல ஆட்டம் போட்டதுண்டா ?
    முதல்ல இதை பேசுங்க‌ப்பா அப்புறமா பார்க்கலாம் உங்கள் தேச‌ப‌ற்று எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்ப‌தை.

  7. Muralikrishna,

    I don’t think Vinavu’s blog is the right forum to air my opinions on Advani & Cho, so a short answer. Advani’s path to PMship is consolidating Hindus as a vote bank, and he and BJP clearly feel that strong condemnation of Hindu terrorism would make the consolidation difficult. Cho is convinced about the patriotism of people like Advani compared to Sonia and he strongly feels that BJP should come to power. He has compromised his journalistic integrity for this. (When Vajpayee & Advani had no chance at all, Cho was quite fair)

  8. தோழர்களுக்கு வணக்கம்

    தடா, பொடா முதல் அனைத்து அடக்குமுறை சட்டங்களும் தீவிரவாத ஒழிப்பு என்பனபோன்ற மக்கள் நலனுக்கானது அல்ல. மக்கள் நலன் என்ற போர்வையில் வரும் மக்கள் நலனுக்கு எதிரானவைகள் தான். அந்த மக்கள் நலன் என்பதிலேயே பொதுவாக மக்கள்நலன் என்ற பொருள் யாருடைய நலனை முக்கியப்படுத்துகிறது என்று உய்த்துணரும் யாரும் தடா, பொடா என்று கூப்பாடு போடமாட்டார்கள்.

    சூப்பர்லிங்க்ஸ் கேட்டிருக்கும் கேள்விக்கு தேசபக்தர்கள் ஒன்று நேர்மையான பதில் கூறவேண்டும் அல்லது தங்கள் தேசபக்தியை பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.
    செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி
    http://www.senkodi.multiply.com

  9. 9/11க்குப்பின் அமெரிக்காவில் இன்னொரு தாக்குதலை அல்கொய்தாவால் செய்ய முடியவில்லை. 2001க்குப் பின் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அங்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் வாலாட்ட
    முடியவில்லை.இங்கும் அது போல் செய்தால்
    இஸ்லாமிய தீவிரவாதிகள், அவர்களது ஆதரவாளர்களின் கொட்டம் அடங்கும்.
    அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச்
    அரசு செய்யட்டும்.

  10. godzilla,kingkongs,dinosours etc have space to spit their venom in idlyvadai or anyother thayirsatham blogs you will never try to understand what vinavu or rudhran are saying bcoz u people are shielded(either by your caste) you are never going to understand the hardship of underprevileged & minorities.

  11. Rabiya perhaps does not understand the hardship created by islamic terrorism all over the world,
    from Indonesia to UK. Muslims are also its victims whether it is in Mumbai or elsewhere.

  12. உலக உத்தமர் சூப்பர்லிங்ஸ் –

    ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டதால் பதில்கள் சில…

    தீவிரவாதம் நம் நாட்டின் மீது போர் அறிவித்து பல வருடங்கள் ஆகின்றன. என் இறைவனை வழி படாதவனை அழிப்பது எங்கள் முதல் கடமை என அறிவித்துள்ளனர் தீவிரவாதிகள். (ஆதாரம்: http://itunes.apple.com/WebObjects/MZStore.woa/wa/viewPodcast?i=40475273&id=73802620 – இலவசமாக கேட்கலாம்)

    இந்நிலையில் நீர் பேசும் வர்க்க வேற்றுமை தர்க்க நியாயங்கள் எல்லாம் இது அல்ல களம். இந்தியா என்ற நாடு இருந்தால் தானே நீர் இந்த கேள்விகளை முதலில் கேட்க முடியும் நாளை தலை சிதரி இறந்த பின் விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவாசியிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பாயா ? நாடு என்கிற அடிப்படை விஷயத்திற்கே பங்கம் வரும் பொழுது, அந்த விவசாயிகளும் முதலில் நாட்டைக் காப்பாற்ற முன் வர மாட்டார்களா ?

    எனக்குத் தெரிந்து தீவிரவாதிகள் தான் எந்த வித பேதங்களும் இல்லாமல் கொன்று சமத்துவத்தை நிலைநாட்டுகின்றனர். இங்கு தான் பாடுபட்டு இந்த மனித நேயமற்ற, அப்பாவிகளை கொல்லும் செயலுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டும் நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்!

  13. pota or tada they have not touched the sections to which godzillas belong . pota has kept thousands of innocents behind the bars for years,and they are all not Pragya for whom Advani or Rajnath will defend or Dr Haneef where media ran behind.They are the weaker sections.you will never or even try to understand their real issues.

  14. உள்ளூர் உத்தமர் முரளி அய்யா அவர்களுக்கு.

    நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை
    நேரடியாக கூறுங்கள் அதை விட்டுவிட்டு
    நிங்கள் பழைய கதைகளையெல்லாம் பேசினால்
    நானும் என்னுடைய பாட்டன்,முப்பாட்டன்
    கதைகளையெல்லாம் இங்கே பேச வேண்டி வரும்..

    அப்படி நான் பேசுவேனாயின் உலகத்தின்
    கேவலமான,கொடூரமான,பயங்கரவாதங்களுக்கே
    பயங்கரத்தை[டெரருக்கே டெரர்]காட்டிய‌
    “பார்ப்பன பயங்கரவாதம்” பற்றி தான் முதலில்
    பேச வேண்டிருக்கும்,ஆதிகாலத்திலேயே
    தோன்றிய பயங்கரவாதம் அது தான் எனவே
    நீங்கள் பெரிய பயங்கரவாத எதிர்ப்பாளர்,
    மனித நேயமுள்ளவர் என்றால்
    முதலில் பார்ப்பனியத்தை பற்றி தான்
    பேசியிருக்க வேண்டும்.
    எனது பாட்டன் முப்பாட்ட‌ன்களின்
    நாக்கை அறுத்தது,குடலை உருவியது
    இன்று வரை எம்மை வேசி மக்கள் என்றும்
    எமது மொழியை நீக்ஷ பாக்ஷை என்றும்
    இழிவு படுத்தி வைத்திருக்கும் இந்த
    “பார்ப்பன பயங்கரவாதத்தை” பற்றி
    நீங்கள் எங்கேனும் மனித நேயத்துடன்
    அதற்கெதிராக பேசியுள்ளீர்களா ?

    நீங்கள் பேச மாட்டீர்கள் ஏனென்றால் நீங்க
    தான் தேசபக்தராயிற்றே! எனவே நீங்கள்
    அந்த கேள்விகளுக்கு மட்டும் பதில்[நேரடியாக] சொல்லுங்கள் அய்யா

  15. உள்ளூர் உத்தமர் முரளி அய்யா அவர்களுக்கு.

    நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்களை
    நேரடியாக கூறுங்கள் அதை விட்டுவிட்டு
    நிங்கள் பழைய கதைகளையெல்லாம் பேசினால்
    நானும் என்னுடைய பாட்டன்,முப்பாட்டன்
    கதைகளையெல்லாம் இங்கே பேச வேண்டி வரும்..

    அப்படி நான் பேசுவேனாயின் உலகத்தின்
    கேவலமான,கொடூரமான,பயங்கரவாதங்களுக்கே
    பயங்கரத்தை[டெரருக்கே டெரர்]காட்டிய‌
    “பார்ப்பன பயங்கரவாதம்” பற்றி தான் முதலில்
    பேச வேண்டிருக்கும்,ஆதிகாலத்திலேயே
    தோன்றிய பயங்கரவாதம் அது தான் எனவே
    நீங்கள் பெரிய பயங்கரவாத எதிர்ப்பாளர்,
    மனித நேயமுள்ளவர் என்றால்
    முதலில் பார்ப்பனியத்தை பற்றி தான்
    பேசியிருக்க வேண்டும்.
    எனது பாட்டன் முப்பாட்ட‌ன்களின்
    நாக்கை அறுத்தது,குடலை உருவியது
    இன்று வரை எம்மை வேசி மக்கள் என்றும்
    எமது மொழியை நீக்ஷ பாக்ஷை என்றும்
    இழிவு படுத்தி வைத்திருக்கும் இந்த
    “பார்ப்பன பயங்கரவாதத்தை” பற்றி
    நீங்கள் எங்கேனும் மனித நேயத்துடன்
    அதற்கெதிராக பேசியுள்ளீர்களா ?

    நீங்கள் பேச மாட்டீர்கள் ஏனென்றால் நீங்க
    தான் தேசபக்தராயிற்றே! எனவே நீங்கள்
    அந்த கேள்விகளுக்கு மட்டும் பதில்[நேரடியாக] சொல்லுங்கள் அய்யா

  16. உலக உத்தமர் சரவணன் –

    உன் சிந்தினை ஓட்டம் அடமானத்தில் உள்ளதால் எந்த விளக்கமும் விடைகளும் உன் “பகுத்தறிவில்” ஏறப்போவதில்லை! எது வேண்டுமானாலும் பேசு, எழுது நிஜ உலகம் வேறு, புரிதல் அவசியம். எது பழைய விஷயம். சரித்திரமும் தெரியாது, நிகழ்கால உண்மைகளும் புரியாத உன்னிடன் பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை.

    அது தான் நடத்திறீங்களே தளம்

    http://brahmanicalterrorism.wordpress.com

    எத வேண்டுவென்றாலும் எழுதலாம் என்பதிற்கு மேல் குறிப்படத் தளம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

    உன் கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகாது. கலகம் செய்பவரிடம் அறிவை இழந்தே இன்று 21 வயது கூட நிறப்பாத ஒருவன் அப்பாவிகளை புன்னகையுடன் கொல்கிறான். இந்நிலையில் உனக்கு பார்ப்பனர்களைப் பற்றி பேசி உன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு அப்பாவிகளைக் கொல்வதில் எனக்கு வருத்தமில்லை என்றும் சொல்கிறான். இம்மிருகச் செயலுக்கு வக்காளத்து, நியாயங்கள்!

    உன் கேள்விகள் போல் என்னாலும் கேட்க முடியும். இதே அடங்காத தீவிரவாதத்தால் பற்பல காஷ்மீரி பண்டிட்டுகள் குடும்பத்தை இழந்து தவிக்கின்றனரே அன்று எங்கே போனது உனது கண்ணீர் அஞ்சலி. இப்படி ஏட்டிக்குப் போட்டி பேச வைத்துவிட்டாயே என்னையும்! வெட்கம் வெட்கம்…

    இன்று மன்மோகன் சிங் மேற்கு வங்கத்தில் சாந்திநிகேத்தன் அறக்கட்டளையில் பேசும் பொழுது இன்றைய இந்தியாவில் சகிப்புத்தன்மை, வன்முறை மற்றும் கோபம் எல்லைகளை மீறியுள்ளதையும் குறிப்பிடுள்ளார். வருந்தத்தக்க விஷயம்!

  17. murali sir

    poogambam varumkirathaal kadarkarai orathula veedu kattuna (ie, naadu) yaarum kudumbam nadathaama illa. avanga seekiram sethuduvom nu nenaichukittu veetla mollamaria kudiamathi vipacharath thozila nadathala (class struggle, parpaneeyam).

    avanga appo kuda yarutta kadan vangi pozaikirathunnu yosichaa athukkaana values m, pazaiya values m onnavum, ora nerathilaiym avartta nelavuthu.

    uru kadana (ie, terrorism) adaitha piraguthaam veetla nadakkira vipachaaratha niruthuvenu enakku therincha puthiyulla yarum yosikkala. athu eppadi mudiyuthunnu sollunga sir.

    my basic doubt is below;

    neenga entha thesatha kaapatha poringa. vazha vazhi seithu kondavarkalin india vaia or vazha vazhi marukkapattavarkalin india vaia.
    what is the diff betwn our siyachin soldiers and private securities in front of operai/taj hotels. Bcause they had tied for last week operation also.

  18. Sorry for posting in english.
    I am following “vinavu” for past 2 months. It looks to me (i may be wrong) that we can sum-up the mindset of vinavu in following words:

    Anti-brahminical
    Anti-american
    Anti-high caste (which is okay!)
    Anti-india
    (little)pro-communist
    pro-dalit( which is praise worthy. )
    (note: many people who say they r “pro-dalit” are ONLY anti-high caste or anti-brahminical. There is a diffeence between the two. Pro-dalit means u have SOMETHING CONSTRUCTIVE in you. Anti-anything is pure hatred!)

    When ur mind runs based on certain well established ideology you will not be able to think freely. That shows up in this series (part1,2,3) of article. The title itself said it all!.
    its TRUE that TALIBAN etc are fed by USA once upon a time to counter soviet. But we shud also agree that there is lot of OIL MONEY from middle east that goes into JIHADI organisations. (please dont say bomb blasts are “paarpana sadhi”!!…)
    US will ALWAYS be happy if INDIA and PAK fight. NO DOUBT. Only then they can flourish by selling arms. But we also NEED BRAINS.
    So what do we do for terrorist attacks(i hope u will agree for teh term terrorists). We blame US and keep quiet??.
    If we say US is sponsoring these JIHADIs why we DONT find any BOMB BLAST in PAKISTAN due to HINDU(okay ..paarpana) ORGANISATIONS?..US has enuf money to fund RSS ,VHP etc. So WHY no HINDU terror in PAKISTAN?. Vinavu can answer this.
    We know RAW is funding seperatist groups in baluchistan. I dont think we can call it HINDU TERROR.
    Next, Vinavu seem to say all MUSLIMS in INDIA are good. they have NO connection with ANY attacks. Even if they attack its their “natural reaction” to hindu attacks.
    To answer this we need to divide india into SOUTH and NORTH and muslims as URDU speaking and non-urdu speaking. I have friends from allover india. its not wrong to say both muslims and HINDUS are RELIGIOUS fanatics in NORTH. In south among muslims ONLY some URDU speaking muslims are FANATIC. tamil muslims are like tamil hindus (until may be 1996! i hear that many tamil muslims are starting to feel “more muslim” than tamil). Coimbatore bomb blast was mainly the work of MALAYALI muslims who are PRO-PAK!.
    In short we can say the concept of RELIGIOUS FANATISM is speading into SOUTH from NORTH. Some muslims are whole heartedly supporting the so called terrorist attacks..we dont need to have ANY DOUNT about that. If we close our eyes and say all is due to to “paarpaniyam” we are ideologically BLIND. (at this point i need to say im not a “paarpaan”!.)
    JIHADI terror is a by product or WAHABIism that is sweeping the muslim world. Except few places in world..like TAMILNADU, muslims dont feel anything for the SOIL they live in. Many Indian muslims who land in SAUDI with hindu friends will treat hindus like “secondary” citizens. (the ARABS treat non-arabs as nothing…thats different story!). Today if full fledged war breaks out between INDIA-PAK many (north) muslims will support PAK. I dont know whom to blame but atleast muslims deserve PART of blame. Because many of them BLINDLY believe the MULLAS. We dont believe “kovil poosaari” or “iyers” or even the “god”!!

    So we need to accept that JIHADI terror exists in INDIA. and concept of INDIA needs to be PREVENTED to counter it. We have lessons to be learnt from BANGLADESH etc. Until BANGLADESH was born everyone was BENGALI there . Within one year of formation of BANGLADESH it beccomes an ISLAMIC STATE. (Bengali)Hindus were driven out,persecuted. We dont need to say anything about PAKISTAN. MALAYSIA is another example.
    BUT in INDIA muslims have their own LAW (not CRIMINAL LAW only civil, maybe bcas muslim criminal law is very BRUTAL!! if u want SHARIA law u shud have GUTS to accept CRIMINAL LAW as well.). Muslim population has continuously INCREASED. Business centers in BANGALORE,HYDRABAD and CHENNAI are controlled by muslims (the cities i have lived). Still if u speak to ordinary muslim he will say muslims are suppressed. This is becas of MADARASSA education and the MULLAS.

    I request people in Vinavu to “shed” the ideological lenses they r wearing and see the mumbai blasts in a fresh and IMPARTIAL look. If we keep ranting “anti-US” “anti-brahminical” vocabulary we wont get any where.

  19. We might abuse aand accuse USA for looting the world. Any country will do the same SOVIET UNION was using INDIA ,Afghanistan etc. Today WESTERN POWERS need OIL in middle east. Only for this reason they invade IRAQ,AFGAN. The MUSLIM WORLD can PROSPER as a whole with the oil resources. SAUDI ARABIA has nearly 30-40% of world OIL RESOURCES. With such wealth even a big country like INDIA okay lets not take “paarpana INDIA” lets take CHINA. With such wealth China would have become super power long long ago. Saudi today still lives in 700AD!. Look at the laws they have. US and EUROPE just suck the oil from them and pay peanuts!..
    If JIHADIS really want to spread the “message”(!!) of allah they shud “finish off” the PRO-USA rulers of SAUDI ARABIA and use the OIL for development of muslim world. That would be CONSTRUCTIVE.

    We cannot find fault with USA. They are doing good for THEIR CITIZENS..if we want to save ourselves we need to he CAREFUL. AGRICULTURE is the backbone of INDIAN ECONOMY. We shud concentrate in developing it. The SONS and DAUGHTERS of farmers who r sitting in AC rooms of MULTINATIONAL companies as software engineers have the responsibility to do SOMETHING. (how many girls today are willing to marry a farmer- even if he has 15 acres of land with water facilities?).

    Even if OIL WEALTH is depleted VILLAGES in INDIA wont suffer. We can sustain with AGRICULTURE. Main sufferers will be WESTERN COUNTRIES.
    (lets hope ppl find out alternatives for OIL). IF not for OIL industrial revolution would be long dead. No technological development ,no industries, no workers..and NO MARXISM. We owe our today ideologies to INDUSTRIAL REVOLUTIION which started in UK and EUROPE. Most of our thoughts are BORROWED from EUROPE. Nothing wrong in it. We need to adapt it to INDIAN( or tamil) situation.

    Vinavu can initiate a discussion on this: how oil wealth is affecting the NATIONS,NATIONALITIES ,ideologies and RELIGION

  20. The percentage of muslims in india is 16-20%. The percentage of following communities is much lesser than muslims:

    JAINS
    SIKHS
    ZORASTERS
    Christians (im not sure abt this)
    Buddhists

    We cant keep saying muslims are minority forever. They know very well that “aludha pillai paal kudikkum”.The crying baby gets maximum attention.

    I do not have anything against poor muslims. But if a dalit of someone who wants to go out of hinduism asks my advice i would suggest him to convert to BUDDHISM,jainism,sikism or Christianity (in that order). I would NEVER recommend someone to convert to islam. If you want to escape “saathi” you can always find a good alternative in BUDDHISM.(anyway buddhists will not become slaves of buddhist MONKS, China..or even theravada buddhist SRILANKA!!)
    There is a story (it may just be a story!) that PERIYAR advised AMBEDKAR ..NOT to convert to ISLAM. Vinavu can verify and give an account on this. I shudder to imagine what wud have happened if Ambedkar had converted to islam. Ayyaaaa…..kodi punniyam. Ambedkar kadavule!..aayiram vanakkangal!

  21. //There is a story (it may just be a story!) that PERIYAR advised AMBEDKAR ..NOT to convert to ISLAM. //

    Indeed it is Periyar’s Conviction that Islam is the one can stood against Castism… I stop this here as it deviated from the Main discussion….

    Ilango tries to give a impression that Muslims are far better than other sections of the people in India due to their Minority slogan. Indeed they are the worst treated citizens of India. That is what Sachar Committee finding. May he read those reports as well. As compared to their Population percentage their representation in the State or any establishments in India is very less. And as compared to their Population percentage to their contribution to Freedom struggle it is much more postive than any other section(not to mention about the Upper Caste Hindus. Who boot licked the British)

    Prognostic Sage

  22. I do not mind deviating from topic as long as it is straight forward and truthful and open hearted discussion. “Vinavu” also would not mind i think. So I think its okay to eloborate here about islam-castism and buddhism.

    I am not wellversed in islamic scriptures. I know little bit of buddhism,hinduism,and islam.

    Lets for sometime agree that Periyar felt “Islam is the one to stand against CASTISM”. Why didnt PERIYAR ask all dalits to convert to ISLAM?. We didnt find any MASS CONVERSIONS to ISLAM as AMBEDKAR did for BUDDHISM…WHY?
    Buddhism is more “Rational” religion than any other religion in the world.Buddha never “ordered” his disciples. Nor was he engaged in any WAR. Buddhism accepts so called (hindu) practices like YOGA,meditation. There was “fight” between hindus(brahmins mainly) and buddhists but it was not WAR WITH WEAPONS like CROSS-CRESENT wars or shia-sunni wars. Buddhist scholars “argued and discussed” philosophy in the court of Kings and settled the PHILOSOPHIC DISPUTES. Buddhism (and also hinduism) got STRENGTHENED due to such healthy dialogues. Einstein was 100% perfect when he said “INDIA completely conqured CHINA without sending a soldier across the border”. Buddhism swept CHINA,JAPAN etc just with its “rational strength”. They did not convert anyone by showing sword or money.

    In fact many people throughout the history of indian subcontinent have repeatedly stressed one fact: ”
    TRUTH(God) is WITHIN you. Find it YOURSELF. DONT BLINDLY believe others”
    …the teachings of
    BUDDHA,UPANISHANDS,THIRUMOOLAR (other sittars), OSHO, J.Krishnamoorthy etc can be summed up with above words.

    I would “lump” all ABRAHAMIC religions in one bunch. PHILOSOPHICALLY there is little difference between the three religions.(JUDAISM,ISLAM,CHRISTIANITY).All three are based in ONE-and-ONLY god concept. Its no secret that they HATE pagans etc. its a historical FACT.
    Islam is a simple religion that was born to reform the wandering tribes of ARABIA. Prophet did remarkably transform the tribe into a thriving culture. (Note: in thamil ilakkanam we have read the “tholil” for PAALAI nilam as “kalavu”. Thats what was happening in deserts of ARABIA before PRophet. He reformed the tribes to a great extent.). But apart from simple rules islam does not venture into PHILOSOPHY like BUDDHISM or the teachings of UPANISHADS.

    Buddhism( and Hinduism,jainism as well) offers wide spectrum of opportunities for all people. You can pray your own god if u r simple uneducated. if u r interested in philosophy you have definite set of RECOMMENDATIONS how you can sharpen your intellect. (food-yoga-meditation-samaadhi etc). There are no CASTES in BUDDHISM. it doesnt ask you to obey anyone…not even BUDDHA.it has created many versions of buddhism ZEN buddhism etc. it encourages MULTICULTURALISM (so is hinduism)
    in short we can say broadly BUDDHISM is HINDUISM minus CASTE and is much more VIBRANT than hinduism.

    But this does not mean ALL BUDDHISTs are GREAT,good and excellent human beings. Whetever i said above is true only for BUDDHISM not for buddhists. One glaring example is SRILANKA.

    Lets come to present day ISLAM. In Sunni muslim world islam means WAHABIism. we wont find a more VIOLENT,RIGID and inhuman belief than WAHABIism in this world. Atleast I havent seen. It asks its followers to obey allah word by word. It asks to wage JIHAD on NON-BELIEVERS (of islam!). (Periyar was a NON-BELIEVER!!!). We hear of RELIGIOUS TAX (can you deny that?) slapped on people of other belief. Its dead against MULTICULTURALISM. It forces ARAB CULTURE into muslims. (burqa,kulla,beard..etc).

    When compared to this to me CHRISTIANITY (and christians) today (note: today) are far far better than ordinary muslims. JESUS preached “karunai”. He not only preached but practiced it in his life. He DIED for his belief. Today christians also live allover the world. They also conqured INDIA. They didnot slap RELIGIOUS TAX. Infact, many BUDDHIST,HINDU monuments (ajanta etc) were PRESERVED by Christians (BRITISH). Christians are more open. (we dont find YOGA being banned in USA,UK by religious order…unlike EGYPT or MALAYSIA!)

    So if someone asks me “CONVERSION ADVICE” i would prescribe religions in following order:

    BUDDHISM-JAINISM-SIKHISM-CHRISTIANITY

    (history says SIKHISM was a REACTION to the violence of ISLAM!)

    MAny people say BOMBINGS in india is a REACTION to HINDU BRAHMINISM…lets AGREE to that. What caused BALI bombings? again brahmins?. madrid bombings? again brahmins?. iran-iraq war again brahmins? karachi,lahore bombings –brahmins?(Lets agree or pretend to agree attack on USA and UK are 100% JUSTIFIED as reactions of “muslim anger”).
    I agree that i hate BRAHMINISM. I can understand the “dalit fury” as the reaction of 5000 years of suppression. I would justify the “ambedkar college” incident and would argue for dalits. BUT I WOULD NOT agree for Coimbatore bomblasts or mumbai bomb blasts. What the JIHADIS achieved in Coimbatore?. more than 50% of the population in Coimbatore is now “Saffronised”. BJP wins in coimbatore. As a tamil nationalist i hang my head down when BJP wins in TN. But RSS,VHP and also the muslim MULLAs are HAPPY!. These people want FIGHTS between hindus and muslims. I dont wait for the words of religious leaders to do something. But many muslims believe the MULLAs word by word. If we want to live peacefully..like good hindus the good muslims also shud come out of the “mulla mentality”.

    I also would commend FRENCH govt for banning “religious symbols”.

  23. PROGNASTIC SAGE,
    Lets come to your statement:
    “Indeed they ( muslims) are the worst treated citizens of India”

    You should support it with details.
    Does Indian Law discriminate muslims?. If so WHICH law? can you show us?
    You are allowed to have your own civil law. So in law you cant ask for better.
    In education you are not suppressed. The mullas force you to have 10-15 kids knowing very well that you cant support them. Poor muslim who has 10-15 kids ( or 5,6) will not be able to send it to college. Mullas take this in their hand and say government is not giving education to muslims. The govt. says DONT have more than 2 kids. Why dont u think about it?. The communists who praise CHINA dont even open mouth about ONE CHILD NORM in CHINA. China had benefitted a LOT from it. in another 10 years they are going to be much richer than indians. We indians keep increaing our population and use it for fighting among us!. Can your mullas in CHINA open mouth against the CHINNESE GOVERNMENT?.

    Are muslims discriminated in Jobs?.i dont think so. WIPRO has both hindus and muslims. Infosys has both hindus and muslims. Look at BOLLYWOOD..MOST super stars and actors,scriptwriters are MUSLIMS…did not the (north)Indian public see their movies?.

    Mohammed Azharuddin, after serving as captain of Indian cricket team for nearly 7 years said he is being discriminated because he is a MUSLIM. Dont people have something called “manasatchi”?.

    As last argument (tho it has least strength!)……..have you ever thought about HOW PEOPLE from OTHER religions are treated in MUSLIM DOMINATED countries? Why all (or most) MUSLIM DOMINATED countries are ISLAMIC STATES?. I would say BANGLADESH is a classic case of MUSLIM BETRAYAL!. Unti independence everyone was BENGALI soon after independence it becomes an ISLAMIC STATE. What would happen to INDIA if muslim population goes up to say 50%. Can you PROMISE on ALLAH that you wont make it an islamic state.?!!!…
    Arent there poor people in muslim countries? yes. there are. Arent there WORKERS in these countries? yes there are …HOW many ISLAMIC STATES have COMMUNIST PARTY in them or have COMMUNIST IDEOLOGY in them?..I request VINAVU to answer this….
    the point is: When muslim number increases be ALARMED.
    I am not ready to buy the concept that BRAHMINS are behind EACH and EVERY catastrophe happening in this world.I would better be a “SUDRAN” in a BRAHMIN country than a “KAFIR” in an ISLAMIC state!..

  24. I request “prognastic sage” to answer my questions and comment on my post.
    Vinavu can also do that..vinavu needs to answer atleast one question: HOW MANY ISLAMIC STATES have COMMUNIST PARTY in them?. Why arent there communists in these countries?.
    Everytime RIOTS happen in BANGLADESH one of the first places to be ATTACKED in office of CPB(communist party of bangladesh!)..thats what my BENGALI friends say.
    In GULF our brothers die and commit suicide. It would be good if there are COMMUNISTS in GULF. They wud voice for us…WHY THERE ARE NO COMMUNIST VOICES in GULF?

    Vinavu would do a GREAT SERVICE to DALITS if it popularises personalities like “AYOTHIDASA Pandidhar”. Ayothidasar was true DALIT INTELLECTUAL. I would RATE him HIGHER than PERIYAR. Periyar had backing of “saadhi hindus”. Ayothidasar had none except BRITISH SUPPORT.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க