முகப்புசெய்திகம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா !

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

-

காரப்பட்டில் எமது தோழர்களின் குருதியைச் சுவைத்த சிபிஎம் குண்டர்களின் கோரப்பற்களில் ஒட்டிய உதிரம் உலர்வதற்குள், சென்னை பல்லாவரத்தில், அக்கம்யூனிஸ்டுக் கட்சியின் காலிகள் தமது வெறியாட்டத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்திகிராம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலை வெறியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இதுகாறும் காணாத வகையில், ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் தாரக மந்திரத்தோடு, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் சகல ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளாலும், கட்சி வேறுபாடின்றி அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை, நமது நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது வாழ்க்கையை அழித்து, அவர்களை வீதிகளில் சக்கைகளாக வீசியிருக்கிறது. குறிப்பாக நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஈவிரக்கமற்றது. நூற்றுக்கணக்கான அரசுடைமை ஆலைகள், தொழில் நிறுவனகங்கள் இழுத்து மூடப்பட்டன. அறுபதாண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குகிறது. அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளர்கள் கிளர்ந்து போராடினால்,ஹூண்டாய் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைப் போல கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி ஒடுக்கி வருகிறது. மறுபுறமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக் கையகப்படுத்தல்கள், தொழிற்சங்கச் சட்டங்களை திருத்துதல், வரிச் சலுகைகள் என முதலாளிகளின் தாள் பணிந்து, குறிப்பறிந்து வேசித்தனம் புரிகிறது.

எனவே, நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இம்முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தையும், பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் நோக்கத்தோடு, எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று சென்னை அம்பத்தூரில் ‘முதலாளித்து பயங்கரவாத எதிர்ப்பு  மாநாடு’என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(22-12-08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதிவசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த நமது தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம், DYFI கும்பல், தோழர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தோழர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். ‘கண்ணியமான’ ஜோதிபாசு, சுர்ஜீத், காரத் வழி வந்த அக்குலக்கொழுந்துகள் கேட்போர் கூசக் கூடிய கெட்ட வார்த்தைகளால் தமது அர்ச்சனையை துவங்கியுள்ளனர்.

“மரியாதையாக பேசுங்கள் தோழர்” என்று சொன்ன தோழர் ஜெயராமனை, “என்னடா தோழர்ரு, பூலுன்னுகிட்டு” (என்ன ஒரு பாட்டாளி வர்க்க பண்பாடு!) என்றவாறு கும்பலாக தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றி வேல் செழியனை ஒருவன் மிகக் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டை கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது. பொறுத்துக் கொண்டிருந்த இளம் பு.ஜ.தொ.மு. தோழரொருவர் உருட்டுக் கட்டையை பிடுங்கி திருப்பித் தாக்கியுள்ளார்.காயம்பட்ட நிலையிலும் அவரை தடுத்த தோழர் ஜெயராமன், “இவர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்கிறார்கள். திருப்பித் தாக்கினால் பிரச்சினை திசை திரும்பி விடும். வேண்டாம்” எனக் கூற, அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். உடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி் சி.பி.எம் செயலாளர் ஜீவா என்பவர் தலைமையில் திரண்டு வந்த காலிக் கும்பல், நக்சலைட்டுகள் தங்களை தாக்கி விட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்தது. அந்த ஜீவாவிற்கும், இந்த ஜீவாவிற்கும் ஒரு வித்தியாசம்தான். அவர் கம்ப ரசம் குடிப்பார். இவர் எல்லா ரசமும் குடிப்பார். குடித்த கையோடு புரட்சியாளர்களை தேடிப் பிடித்து அடிப்பார். எல்லாம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நலனுக்காகவே! சப் – இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் எனும் சி.பி.எம் கைத்தடி அவர்களுக்கு ஒத்தூத, நீண்ட நேரம் வாதங்கள் நடந்துள்ளன. “திருட்டு வசூல் பண்ணி ஏண்டா எங்கத் தாலியறுக்கிறீங்க”  என ஒரு பெண் எஸ்.ஐ சலித்துக் கொள்ள, “யார் திருட்டு வசூல் பண்றது, சிக்னலுக்கு சிக்னல் வசூல் பண்ணி பொழப்பு நடத்துறவங்க யாருன்னு ஊருக்கே தெரியும். நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் நலனுக்காக, அவர்களது கோரிக்கைகளுக்காக, வெளிப்படையாக நிதிவசூல் செய்கிறோம்.” என காவல் நிலையத்தில் வைத்தே செருப்பாலடித்தது போல் பதில் கூறியுள்ளார் நமது தோழர். காலை 8 மணிக்கு தாக்கப்பட்ட தோழர்கள், மதியம் 1 மணி வரை அடிபட்ட நிலையிலேயே, போலிசின் கைக்கூலித்தனத்தை எதிர்த்து வாதிட்டுள்ளனர். பின்னரும் கூட தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்து விட்டார் கைத்தடி பஞ்சாட்சரம்.

அடிபட்டால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம், நிலைமை முற்றுவதை உணர்ந்து சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த தோழர்கள், குற்றத்தை பதிவு செய்யாமல் ஓய மாட்டோம், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலிசை அம்பலப்படுத்தாமல் விட மாட்டோம் என தீர்மானகரமாக தெரிவித்துள்ளனர். அடுத்த நாளே சென்னை முழுதும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விட்டன. மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசின் கைக்கூலித்தனத்தை தோலுரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படவுள்ளது.

குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொமுவில் உணர்வுள்ள சி.பி.எம் அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என அறிய வருகிறோம். எங்க ஏரியா உள்ள வராதே!” என வெறியாட்டம் போடும் பல்லாவரம் குத்தகையாளர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறோம். நந்திகிராமில் வெளியாட்கள்‘ (OUTSIDERS) நடமாட்டத்தை தடுக்க, துப்பாக்கிச் சூடுகளும், குண்டுவெடிப்புகளும், கற்பழிப்புகளும். நடத்தி ஏரியாக்களை கைப்பற்றிய காலித்தனம் இங்கே எடுபடாது. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உள்ள நாங்கள் உங்களைப் புழுக்களைப் போல ஒதுக்கி விட்டு, எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வழி மறித்து வம்பிழுப்பதே உங்கள் வேலையாக வைத்துக் கொள்வீர்களேயானால், காலால் மிதித்து நசுக்கி விட்டு கடந்து செல்ல கிஞ்சித்தும் தயங்க மாட்டோம். வார்த்தைச் சவடால்களில் எமக்கு நம்பிக்கையில்லை.உங்களை எரிச்சலில் தள்ளும், நீங்கள் புரியாதது போல் நடிக்கும் எமது சமரசமற்ற புரட்சிகர அரசியலோடும், உங்களுக்கு புரியக் கூடிய பொருட்களோடும் களத்தில் சந்திப்போம்.

பின்குறிப்பு:

புரட்சிகரப் பொழுதுபோக்கிற்காக அமைப்பு நடத்தும் சிபிஎம்மின் கலை இலக்கிய கதம்பம் தமுஎச, அதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் தனது சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்து கலை இரவொன்றை நடத்தியுள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு தோழர் சாலையில் கடை பரப்பி வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 ‘குடிமகன்கள்’ – DYFI, சி.பி.எம் குண்டர்கள், போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி, காலித்தனம் செய்துள்ளனர். தள்ளுமுள்ளை தடுக்க வந்த SFI தோழர்கள், இவர்களை ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இவர்கள் பத்திரிக்கைகள் நல்ல பத்திரிக்கைகளாகத்தானே தெரிகின்றன” என்றதற்கு, இல்லை, இல்லை, இவர்கல் நக்சலைட்டுகள், நமது எதிரிகள்” என ஆவேசக் கூச்சல் போட்டுள்ளன சிபிஎம்மின் குடிமகன்கள். பின்னர் தோழர் பத்திரிக்கைகளை எடுத்தும் கூட ஆத்திரம் அடங்காத கும்பல், தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளது. சாராயம் குடித்து விட்டு சலம்பும் ‘தோழர்களுக்கு’ உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து பெறப்பட்ட நிதியில் தயாரிக்கப்பட்ட பிரசுரங்களின் வாசனை தெரியும் என நம்புவது மடமை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, கூடியிருந்த சிபிஎம் அணிகளும், SFI மாணவர்களும் நமது தோழரிடம் பின்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்வினையில்லாத வருத்தம் குற்றத்திற்கு ஒப்பாகும் என்பதை நேர்மையான சிபிஎம் அணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இம்மாதம் போயஸ் தோட்டத்தில் அம்மாவை சந்தித்து பொக்கே கொடுத்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பணிந்து தோழர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எல்லாம் காங்கிரசு, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான தேர்தல் உத்திகளாம். மதமாற்ற தடைச்சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை சட்டம், சேதுசமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டின் மூலம் எதிர்ப்பு என்று இந்துத்வ வாதிகளை விட அதிக வேகத்தில் செல்லும் அம்மா மதசார்பற்ற சக்தியாம். மேலும் தேர்தல் முடிந்து அம்மா பா.ஜ.க பக்கம் சாயலாம் என்பதையும் “தோழர்கள்” உணர்ந்திருக்கிறார்களாம். அதேபோல தேர்தலுக்கு பின் சி.பி.எம் கட்சி மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுக்கு ஆதரவு தருவதையும் தோழர்கள் மறுக்கவில்லை. இடையில் தமிழ்நாட்டில் இரண்டு சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி கொடுக்கும் அரசியல் விளக்கத்தைப் பார்த்தால் சந்தர்ப்பவாதத்தின் இலக்கணத்தை புரிந்து கொள்ளலாம். போயஸ் தோட்டத்தின் ஆசியில் போலிக் கம்யூனிஸ்டுகள் புரட்சியை முடிப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். தலைமையே இப்படி பிழைப்பு வாதத்தில் புரளும் போது அணிகள் ரவுடித்தனம் செய்வதில் என்ன வியப்பு? இல்லையென்று மறுக்கும் நேர்மை உள்ள சி.பி.எம் அணிகள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், புரட்சிகர அமைப்புக்களில் அணிதிரளுங்கள், இல்லையேல் வரலாற்றில் போலிக்கம்யூனிஸ்டுகள் என்ற பட்டத்தோடு நீங்கள் இடம் பெறவேண்டியிருக்கும்.

 1. தலைப்பைப் பார்த்ததும், ஒரு மாதிரியாய் இருந்தது.

  படித்து பார்த்ததும் அதன் உள்ளர்த்தம் தெரிந்தது.

  நந்திகிராம் விசயத்தில்

  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (டாடாயிஸ்ட்)

  இப்பொழுது

  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (ரவுடிஸ்ட்)

  எப்பொழுதுமே

  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மார்க்சிஸ்ட்) யாக மட்டும் நடந்து கொள்ளவே மாட்டார்களா!

 2. அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்தவுடன் தமிழகத்தில் பெரும்பாலும் மறை முகமாக செய்து வந்த காலித்தனங்களை இன்று நேரடியாகவே செய்ய தொடங்கி விட்டனர் இந்த போலிக் கம்யுனிஸ்டுகள்.. தங்களுடைய சிவப்பு காவியாய் மாறியதில் மகிழ்ச்சி கொண்டு போயஸ் தோட்டத்துக்கு விசுவாச அடியாள் படையாக செயல் படுவதில் பெருமிதம் அடைகின்றனர்… தேர்தலில் வெற்றி அடைந்தால் அம்மாவின் கால்களுக்கு பாத பூசை செய்ய இப்பொழுது இருந்தே தயாராகிக் கொண்டு உள்ளதாக செய்தி…
  இந்த பொழப்புக்கு … த்த்த்தூ நாலு முழ கயிறில தொங்கலாம்…

 3. //. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உள்ள நாங்கள் உங்களைப் புழுக்களைப் போல ஒதுக்கி விட்டு, எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வழி மறித்து வம்பிழுப்பதே உங்கள் வேலையாக வைத்துக் கொள்வீர்களேயானால், காலால் மிதித்து நசுக்கி விட்டு கடந்து செல்ல கிஞ்சித்தும் தயங்க மாட்டோம். வார்த்தைச் சவடால்களில் எமக்கு நம்பிக்கையில்லை.உங்களை எரிச்சலில் தள்ளும், நீங்கள் புரியாதது போல் நடிக்கும் எமது சமரசமற்ற புரட்சிகர அரசியலோடும், உங்களுக்கு புரியக் கூடிய பொருட்களோடும் களத்தில் சந்திப்போம்.
  //

  Excellent… They are already in trouble that is why they resort to Violence… Because we hit at their balls, they react…..

 4. தோழர்களே,
  போலிகளின் ரவுடிதனத்தை முகத்திரையை பதிவில் நன்கு கிழிக்கப்பட்டுள்ளது.

  ஆனால் ரவுடிகளின் வசவுகளை அப்படியே நமது பதிவில் பயன்படுத்துவது தவறு தோழரே.

  மோகன்

 5. ஒரு ஆண்டுக்கு முன்னடந்த சம்பவம் இது “புதிய ஜனநாயகம் புத்தகத்தை தோழர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.எதிரில் CPM காரர்கள் வசூலுக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தது.அவர்களிடம் சென்று நாங்க புதிய சனநாயகம்……… என ஆரம்பித்த வுடனே
  அந்த CPM ரசிகர் ஓ நீங்கலா எங்களை போலின்னு சொல்லூவீங்க,ஓட்டுப்பொறுக்கின்னு சொல்லுவீங்க, நாடாளுமன்றம் பன்றித்தொழுவம்ன்னு சொல்லுவீங்க என்று எழுத்துக்கொண்டே போனார்.நந்திகிராமில் நடந்ததை பற்றி கேட்டதற்கு தம்பி உங்களுக்கு தெரியாது அத்வானிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருக்கு ஒரே மேடையில பேசுனாங்க,மக்கள் ஆட்டு மந்தைகள் அவனுங்களுக்கு சோசலிசம் புரியாது.
  தோழரோ புரிய வைக்கறது தானே உங்க வேலை என்றார்.அதற்கு CPM ரசிகரோ நாங்க எங்கயாவது சோசலிசம் வரும்ன்னு சொல்லி ஓட்டு கேட்டு இருக்கின்றோமா? என தன் நிலையை உரைத்தார்.கூட இருந்த இன்னொரு ரசிகர் இது விவாத நேரமீலை என்று அவரை காப்பாற்றி கொண்டு போனார்.

  இளந்தோழர்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத காம்ரேடுகள் மூடிக்கொன்டே இருக்கின்றார்கள் .

  “பாசிஸ்டுகளின் வாலை ஒட்ட நறுக்கும் வேலையை புரட்சிகர அமைப்புகளாலேயே சாதிக்க முடியும்.

  கலகம்

 6. கருத்து என்றால் கருத்து, கருவி என்றால் கருவி
  எதற்கும் தயார் என்ற நிலையில் களத்தில் நிற்கிறோம் என புரியாத அல்லது புரியாததுபோல் நடிக்கின்ற பேடிகளுக்கு கடைசிக்காலம் நெருங்கிவிட்டது.

  தோழமையுடன்
  செங்கொடி

 7. அது சரி நைனா நீங்கள் எல்லாம் அந்த ஏரியா பசங்கள் இல்லையாமே! நீங்கதான் வேணும்னே சி.பி.எம். செயல்படுற அந்த ஏரிக்குள்ளேப் போய் கலகம் பண்ணிங்களாமே! உங்க வீடுங்க இருக்குற இடத்த தவிர மத்த இடத்துலதான் உங்க செயல்பாடெல்லாம் நடக்குதாமே! அதுவும் நீங்க கூட போலி டோண்டு மாதிரிதான் செயல்படுறீங்களாம்? உங்க ஒருத்தனுக்கு கூட உண்மையான பேரு இல்லையாமே! கேட்ட நீங்கள் நக்சல்னு சொல்றீங்க! ஆனா துப்பாக்கி மட்டும் தூக்க மாட்டோம்னு சொல்றீங்க. துப்பாக்கி தூக்கி உயிர விடுற நக்சல்களைப் பாத்து ஏளனமா சிரிக்கிறீங்க? ஏம்பா இது ஒரு பொழப்பா உங்களுக்கு! அது சரி… உங்கத் தலைமை கூட பாப்பனத் தலைமையாமே! அவரு கூட போலி டோண்டுவோட கூட்டு வைத்திருக்கிறாராமே!

  —————————————————————————–

  Monday, July 21, 2008
  காரப்பட்டு: (விவிமு) மகஇக அழித்தோழிப்பு வெறியாட்டமும்: இனையத்தில் பொய்பிரச்சாரமும். சாதிவெறி தலைமையும்! கிரிமினல் தொண்டர்களும்!
  தலித் மக்களான உழைக்கும் வர்க்கத்தினர்கள் மீது இரக்கமின்றி நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அராஜகம்.! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு போலி மக்கள் புரட்சி!

  http://soccpiml.blogspot.com/

 8. மகஇக சொம்பைகளும் அவர்களின் போலி வார்த்தை புரட்சியும்?

  மகஇக உள்ளவர்கள் யார்?

  புத்தகத்ததை படித்துவிட்டு புரட்சி செய்ய வந்தவர்கள்
  சிபிஎம் கட்சியில் இருந்து நீக்கபட்டவர்கள்
  மார்க்சிய லெனிய கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்கும் நோக்கோடு முதலாளித்து சிந்தாந்தவாதிகளின் சிந்தனைபோக்கில் ஊரி திளைப்பவர்கள்
  வேலைவெட்டி இல்லாத உழைத்து உண்ண தெரியாத மற்ற கட்சியில் இருந்து வந்தவர்கள்
  மார்க்சியம் குறித்து மக்கள் மத்தியல் பீதியை உண்டாக்கி அதன் மூலம் முதலாளித்துவ சத்திகளுக்கு சேவகம் செய்பவர்கள்
  போதிய வழிகாட்டல் இல்லாத ஒன்று இரண்டு தோழர்கள்

  1967 இல் இளம்பிள்ளவாத கோளாரின் காரணமாக சீர்குலைவாளர்களின் நக்சல்பாரி சிபிஐ எம் எல் இயக்கம் துவக்கப்பட்டது. அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்பது அவர்களது கொள்கையாகும் . இந்த அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். அந்தப் பகுதியின் நிலைமை என்ன , பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே கிடையாது. கண்மூடிதனமான வழியில் தான் அழித்தொழிப்புக்கு ஆட்களைத் தயார் செய்தார்கள். அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது.

  இந்தியாவின் ஓர்ஜினல் புரட்சியாளர்கள் இவர்கள்தான் என்று இந்த இயக்கத்திற்கு வந்த அப்பாவி தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும் , சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள் புரட்சிகரவாய்வீச்சில் உள்ள வேகம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள். அழித்தொழிப்பு யாரை எதிர்த்து என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத காரணத்தினால் உணர்ச்சிகராமக வேலைசெய்த பல தோழர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

  ஆனால் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கைகூலியாக செயல்பட்ட சிபிஐ எம் எல் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிந்து அழித்தொழிப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற கேவலமான சீர்குலைவு நடவடிக்கைகளை புரட்சி என்ற லேபில் ஒட்டி செயல்பட்டு வருகின்றனர்.

  விடுதலை

 9. ம.க.இ.க. தத்துவ வித்தகர்களின் சமீபத்திய போஸ்டர் நகைப்பை வரவழைத்தது. “இந்தியாவை மறு காலனியாக்குவதை எதிர்க்கிறார்களாம்”. ஏலே சின்னச்சாமி இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி ஏமாத்தி திரியப் போறீங்கள்? ஏற்கனவே இந்தியா அரை காலனி என்று அடாவடி அடித்துள்ளீர்கள். அதாவது யாருக்கோ அடிப்படைப்பட்டுள்ளதாக கூறி விட்டு அது மீண்டும் காலனியாகப் போகிறது என்று தாமஷ் பண்ணுரிங்க…. சூப்பர் தத்துவம்.

 10. இந்தியாவில் மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி போராடக்கூடிய ஒரே அமைப்பு என்றால் அது இடதுசாரிகள் தான் இது போன்ற சில சம்பவங்கள தான் இந்த கட்சி தோழர்களால் நடைபெறுகிறது.மற்ற கட்சிகளில் இது தான் முழு நேர பணி.இதை ஒப்பிட்டு பதிவு எழுதி இருந்தால் உங்களுடைய பதிவு சரியானதாக அமைந்திருக்கும்.இந்த பதிவு எதையோ நினைத்து எதையோ தின்றது போல் உள்ளது.தோழருக்கும் அவர் மனைவிக்கும் நடக்கும் சண்டையை கூட பதிவாக எழுதுவீர்கள் போலும்.இனி இடதுசாரிகளை குறையாக சொல்லாதீர்கள்

 11. puthagathai padithuvittuthaan lenin puratchi paathaikku vanthaar. mla seat vaanga puratchi thalaivi veetuku pachai saddai pottuk kondu pogavillai.

  katchi (ie cpm) ean, yaarai neeki avargal poi makaeeka vil sernthullargal.? ithu unmai illai. ungalathu paathai, latchiyam muulam vidivu illai enpathai purinthavargal veliyeri varugirargal. i can give lot of examples.

  india oru sem-colonized naa ungalukku puriaathu. yaenna antha unmai ungala sadda manra paaralumantrathukkulla poga anumathikkaathu. thozil munnera salim kudumpatha, tata va vaza vaikka mudiyaathu. itha vida makkal mukkiyamnu ungalukku paadala.

  ml thoughts ai makkalta eppadi paruppureenga. atha makaeeka eppadi vanthu thaduthaanga. mathamaa vuuzalaa ethu kuuda sernthaa sarinnu ungalai neengalae convince panna mudiyaatha neenga mathavangalukku (ie, makkalukku) etha soli azuveenga?

  velai vetti illathavargal rss il iruppargal allathu poligalidam irunthu nalla per vaanga muiyarchippaargal. ml movement il serntha piraguthaan oruvar uzaippai magilchiyaagavum athu tharum puratchiyin valarchiyai velaiin vilaivai enni meendum meendum suiya vimarsanam seithu kolpavargal.
  \அந்தப் பகுதியின் நிலைமை என்ன , பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே கிடையாது. /
  ithuthaan ungal kotpaadu. ml kotpadu enpathu avatrai mothathudan (revoluton) eppadi enaippathu enpathai kandu maatri amaippathu.

  ml movement thontriyathu ungalathu savadaalthaan. ippavum history ai maraikkureenga. allathu saru vidamirunthu thuvangiyathaaga peela viduveergal. ungalathu siliguri vatta commitee ilirunthuthaan athu thuvangiyathu. engellam class struggle kuurmai adaigiratho angelleam cpm udaikirathu/makkalidam ambalamaagirathu.

  /அழித்தொழிப்பு யாரை எதிர்த்து என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத காரணத்தினால் உணர்ச்சிகராமக வேலைசெய்த பல தோழர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.
  / ithai oru rightist ai paarthu kuuda solla mudiyaathu. ithu ungalidam ullathu. naan santhitha sfi in chennai college (famous aana college) ondrin poruppaalar “kadai kal vaithull annaachigalum muthalaaligalthaan. aagave avargalai ethiriyaagathaan paarkka vendum ” endraar. ethaal sirippathu endru theriyavillai.
  /தோழருக்கும் அவர் மனைவிக்கும் நடக்கும் சண்டையை கூட பதிவாக எழுதுவீர்கள் போலும்./ nanparae (kavanikka..thozar alla) oru thozar entraal samuugathin oru angamae thanathu veedu ena mudiveduthu samuga maatrathirkkaaga athika neram vuzaippavar. athanaal avarathu kudumpathil sandai vanthe theerum. ithu pothunazamaa or suiyanazamaa enpatharkku idail nadakkum poraatam. ithil vetri kaanpathu mukkiyam. ithai pattri ezuthuvathu ungalukku avasiyamaaga padaatu. because athukku samukathirkkaaga velaiai seivathu nipanthanai

 12. பல்லாவரத்திலும், தமுஎச கூட்டத்திலும் ரவுடித்தனமாய் நடந்ததை ஆதாரத்தோடு பதிவாய் போட்டால், இது குறித்து தனது அமைப்பிடம் நடந்தது என்ன? எனக் கேட்டு, சிந்தித்து பதில் சொல்லாமல்…

  சிபிஎம் காரர்கள் அல்லது ஆதாரவாளர்கள் அனாமதேயங்களாக, அனானிகளாக உலா வந்து உளறிக்கொட்டுகிறார்கள்.

  சிபிஎம். தலைமை தனது அணிகளுக்கு தாங்கள் சரியென கருதும் சந்தர்ப்பவாத, திரிபுவாத அரசியலை கூட சரியாக சொல்லித்தர மாட்டார்கள் போலும்.

 13. //சிபிஎம். தலைமை தனது அணிகளுக்கு தாங்கள் சரியென கருதும் சந்தர்ப்பவாத, திரிபுவாத அரசியலை கூட சரியாக சொல்லித்தர மாட்டார்கள் போலும்.//

  போலும் என்ற சொல்லை பயன்படுத்தியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் பொலிட்பீரோவுக்குத்தான். தலையாட்டி பொம்மைகளான அணிகளுக்கு கொடியே ஜாஸ்தி என்பதுதான் அன்னாரின் கொள்கை முடிவு.

  நடந்த விசயத்தைப் பற்றி ஒன்றுமே பேசாமல், வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டும் முண்டங்கள், குறைந்த பட்சம் இலக்கணப் பிழைகள் இல்லாமலாவது எழுதித் தொலைக்கலாம்… கெட்ட கேட்டுக்கு வரலாறெல்லாம் எதுக்குமா?

  யாராவது அதிமுககாரங்க வந்து தூக்கிட்டுப் போங்கப்பா…உங்க கூட்டணிக்காரனுங்க இங்க வலிப்பு வந்து கத்திகிட்டு கிடக்கிறானுங்க…

  சி.பி.எம்மின் பொம்மைகளைத் தெரிந்து கொள்ள இதையும் படித்துப் பாருங்கள்சி.பி.எம், தமுஎச பொம்மைகள்!

 14. நாடு முழுக்க உங்களை போன்ற வார்த்தை புரட்சியாளர்கள் வர்க்க போராட்டத்தை சிபிஎம் தோழர்கள் மீதுதான் நடத்தி உள்ளீர்கள் என்பதற்கு எந்த சாட்சியமும் தேவையில்லை .
  தமிழகம் முழுவதும் உங்களை போன்ற சொம்பைகள்தான் சிபிஎம்யை நக்கி பிழைப்பு நடத்த

  * நீங்கள் ஒட்டு போஸ்ட்டரில் உலகமயமாக்கலை எதிர்போம் என்று ஒரு வார்த்தையும் சிபிஎம்யை கிழிப்போம் என்று பத்து வார்த்தையும் எழுதுவது.
  * சிபிஎம் அணிகள் நிறைந்த பகுதியில் பிரச்சாரம் என்ற பெயரில் முதலாளித்துவத்திற்கு ஆதரவு திரட்டுவது.
  * தோழர்களை நோக்கி கடுமையான முறையில் பொய் பிரச்சாரம் செய்வது.வேண்டும் என்றே அவர்களை சீண்டுவது.
  * நேரம் பார்த்து கடுமையாக தாக்கி விட்டு அழித்தொழிப்பு நடத்தி விட்டதாக விளம்பர படுத்திக்கொள்வது .
  * உண்டி வசூல் செய்யும்போது மட்டும் ஏன் சிபிஎம் தோழர்கள் வரவில்லை என்று பொதுமக்கள்கேட்டால் நாங்கதான் என்று நாய் வாய்யில் இருந்து எச்சி ஒழுகும் வகையில் குழைந்து காசுகளை பொறிக்கி தின்பது.

  இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம் .சிபிஎம்யை நக்கி பிழைப்பு நடத்திக்கொண்டு வார்த்தையில் புரட்சி கோசங்களை போட்டு செங்கொடி பிடித்து திருட்டு அரசியல் நடத்தும் உங்கள் யோக்கியதையை அனைவரும் அறிவர்.

 15. விடுதலை நீங்கள் நிறைய பதட்டப்படுகிறீர்கள். அதனாலாயே உளறியும் கொட்டுகிறீர்கள்.

  கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நிதானமாய் வாருங்கள். விவாதிக்கலாம்.

 16. விடுதலை, சில கேள்விகள்

  1) ம.க.இ.க வை நீங்கள் திட்டியதைவிட கேவலமாக திட்டிய ஜெயல்லிதாவுடன் கூட்டனி வைத்துள்ளது ஏன்?

  2) கடந்த தேர்தலில் வங்கத்திலும் கேரளத்திலும் காங்கிரஸை ஆதரித்துவிட்டு மற்ற இடத்தில் கூட்டனி வைத்த்து ஏன்..பல

  3) நாளை ம.க.இ.கவுடன் கூட்டனி என சொல்லமாட்டீர்கள் என எப்படி நம்புவது?

  சி.பி.எம் தளங்களில் முதல் 2 கேள்விகளை கேட்டு யாரும் வெளியிடவில்லை…வினவு வெளியிடும் என நம்புகிறேன்
  மூன்றாவது கேள்விக்கு வினவு கூட பதில் சொல்ல்லாம்

 17. நீ இன்னா வேணா கேளு… எனக்கு இன்னா தோணுதோ அத்ததான் நான் பேசுவேன்னு கங்கணம் கட்டிக்கினு பேசுற விடுதலை நைனா… என்ன கைய புடிச்சி இழுத்தியேங்கற ரேஞ்சுலயே பேசுறியேம்மா, எனக்கு மெய்யாலுமே டவுட்டாகீது… மத்தவுங்க எழுதுனத படிச்சிக்கினுதான் பேசுறியா, இல்ல தபா தபா பத்து வார்த்தைய மாத்திப் போட்டு எழுதுறியா? குரைக்காதமே, பேசு. பதில் பேசு. நீ பாட்டுக்கு லூசு மாறி பெணாத்தாத.

  அப்றம் அது இன்னாப்பா சொம்பை சொம்பைங்கற… பம்பைக்குப் போற ஐயப்ப சாமித் தோயருங்க காதுல தப்பா விழப் போகுது.

  பி.கு:
  வாய்ல வர்றத வாந்தியெடுக்கிறதெயல்லாம்
  பப்ளிஷ் பண்ணி இன்னாத்துக்கு ‘தோயருங்களுக்கு’ பப்ளிசிட்டி குடுக்கிறீங்கோ?

 18. தோழர்,
  விடுங்க CPM காரங்களுக்கு இப்பதான் ரோசம் கொஞ்சமாவது வருது.

  “சொல்லிக்கொண்டேபோகலாம் .சிபிஎம்யை நக்கி பிழைப்பு நடத்திக்கொண்டு வார்த்தையில் புரட்சி கோசங்களை போட்டு செங்கொடி பிடித்து திருட்டு அரசியல் நடத்தும் உங்கள் யோக்கியதையை அனைவரும் அறிவர்.”

  ஆகா கேட்கவே காதுல தேனா பாயுதே.இவ்வளவு நாளா சிபிஎம் காரங்க புரட்சி தான் பண்ணுனாங்களாம் அட நம்புங்க. இவ்வளவு நாள் நமக்கு தான் தெரியலை.பட்டியலைப்பாருங்க

  1.லெனின் சொன்னாரே நாடாளுமன்றம் பன்றி தொழுவம்ன்னு அதில் போய் நீச்சல்டிச்சு

  2.தஞ்சையில தாழ்த்தப்பட்ட பெண்ணை கட்டியதற்காக சொந்த மகனையே கொன்றது

  3.காரப்பட்டுல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடறாஙளாம் (அந்த மக்களுக்கு தெரியாமல்)

  4.எப்படி டைபி மாநாட்டிலே சிவக்குமாரவச்சு பாரதிக்கு பாலாபிசேகம் பண்ணுணாங்களே அப்படியா? மோகன்லாலை வைcசு சீன் காட்டுனாங்களே அப்படியா?

  5.கேரளாவுலே சங்கராச்சாரிக்கு அரசு விருந்தாளின்னு பதவி கொடுத்தாங்களே
  அப்படியா?

  6.ஆந்திராவிலெ சிரஞ்சீவியையும் இங்கே அம்மாவையும் புடிச்சுகினு தொங்கு றாங்களே அப்படியா?

  7.டாடாவுக்காக பாலியல் ரீதியா தாய்மார்களை கொடுமைசெஞ்சானுக்களே அப்படியா?

  எல்லாம் புரட்சிதான்,ஏற்கனவே கேரளா,வங்கத்துல புர்ர்ர்ர்ட்சி வந்துடுத்து. தமிழகத்துல ஏன் வரலைன்னு யோசிச்சு இப்பதான் அம்மாவோட கூட்டணி சேர்ந்திருக்காங்க.

  அய்யா இங்கே வந்து படம் காட்டாதீங்க உங்களை நம்பறதுக்குன்னே இருக்கெ புரட்சி கர அணியின்னு சிபிஎம்ல

  கலகம்

 19. நந்திகிராமில் நடைபெற்றதைப் பேசினாலும், சிங்கூரில் நடைபெற்றதைப் பேசினாலும், காரப்பட்டில் நடைபெற்றதைப் பேசினாலும், கோட்டயத்தில் நடைபெற்றதைப் பேசினாலும் இதுதான் உங்கள் பதிலாக இருக்கிறது.
  அப்புறம் எதற்கு விமர்சன-சுயவிமர்சனக் கோட்பாட்டை வலியுறுத்தும் கம்யூனிசம் கட்சிப் பெயரில் மட்டும்? பட்டுக் குஞ்சமா? கட்சிப் பெயரை மாற்றி விடுங்கள். ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் நாங்கள் விவாதித்துக் கொண்டிருப்பதில்லை.

  //நீங்கள் ஒட்டு போஸ்ட்டரில் உலகமயமாக்கலை எதிர்போம் என்று ஒரு வார்த்தையும் சிபிஎம்யை கிழிப்போம் என்று பத்து வார்த்தையும் எழுதுவது.//

  ஆம். அப்படித்தான் எழுதுவோம். வங்காளத்தில் முதலாளிகளை வா, வா என்று அழைப்பது, தமிழகத்தில் ஏகாதிபத்தியத்திய எதிர்ப்பு என உதார் விடுவது.. என்ற இரட்டை வேடத்தை கிழிக்கத்தான் செய்வோம். பத்து வார்த்தையென்ன, நூறு வார்த்தை கூட எழுதுவோம்.

  // * சிபிஎம் அணிகள் நிறைந்த பகுதியில் பிரச்சாரம் என்ற பெயரில் முதலாளித்துவத்திற்கு ஆதரவு திரட்டுவது.//

  முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு எனப் பிரச்சாரம் செய்வது முதலாளித்துவத்திற்கு ஆதரவு திரட்டுவது இல்லையா? கலக்குற சந்துரு!

  //* தோழர்களை நோக்கி கடுமையான முறையில் பொய் பிரச்சாரம் செய்வது.வேண்டும் என்றே அவர்களை சீண்டுவது. //

  பொய்ப் பிரச்சாரம் என்ற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தையும் ஏற்கிறோம். விமர்சனம் என்றால் என்னவென்றே தெரியாத கற்பூரங்களுக்கு சீண்டுவதாக மட்டும்தான் தெரியும். மக்களின் எதிரிகளை தொடர்ந்து சீண்டுவோம். திரிபுவாதத்தை ‘சீண்டுவதுதான்’ உண்மையான வர்க்கப் போராட்டம் என லெனின் எங்களுக்கு அவ்வாறுதான் கற்பித்துள்ளார்.

  // * நேரம் பார்த்து கடுமையாக தாக்கி விட்டு அழித்தொழிப்பு நடத்தி விட்டதாக விளம்பர படுத்திக்கொள்வது .//

  நந்திகிராமிலும், காரப்பட்டிலும் அழித்தொழிப்பு நடத்திய அகிம்சாமூர்த்திகள் யார் என்பதை நாடறியும்.

  //* உண்டி வசூல் செய்யும்போது மட்டும் ஏன் சிபிஎம் தோழர்கள் வரவில்லை என்று பொதுமக்கள்கேட்டால் நாங்கதான் என்று நாய் வாய்யில் இருந்து எச்சி ஒழுகும் வகையில் குழைந்து காசுகளை பொறிக்கி தின்பது. //

  அது சரி. ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியோட கூட்டணி வச்சு, அதுக்கு மதச்சார்பற்ற கூட்டணின்னு பேர் வக்கிற பிரகஸ்பதிங்க இங்க எப்ப வருவாங்க, சாணியக் கரைச்சுகிட்டு காத்துகிட்டிருக்கோம்னு. போயி நீங்களே பொறுக்கித் திங்கலாம்.

  கம்யூ. கட்சிக்கு காசு போடுங்கன்னு கூசாமல் உழைக்கும் மக்களை ஏய்ப்பவர்களுக்கு நிதிவசூல்தான் பிரச்சாரம். அதனால்தான் தோழர் பொள்ளாச்சி மகாலிங்கம், தோழர் நல்லி குப்புசாமி, தோழர் என்.ராம் என கணக்கற்ற புரவலர்கள்தான்.

  எங்களுக்கு குழையவும் தெரியாது. பொறுக்கவும் தெரியாது. அதனால் எங்களுக்கு நிதி எப்பொழுதுமே பற்றாக்குறைதான்.

 20. தோழர்
  உங்களுக்கு விசயம் தெரியாதா ?

  இது ஒரு பினாத்தல் கேசு தோழர், இந்த ‘விடுதலை’ வீரனோடு யாரும் வாதம் பன்னி ஜெயிக்க‌‌ முடியாது,ஏன்னா மனுசன் என்ன தின்னாலும் காத்தால‌ என்ன போகுமோ அது மாதிரி‌ நீங்க என்ன சொன்னாலும் இதுகள் காதில் விழாது என்ன வர்றதோ அது வந்துட்டே இருக்கும்.

  வார்த்தைகளின் வலிமை தெரியாமல் அள்ளி வீசும் இந்த கிறுக்கனோடு ஒப்பிடும் போது உண்மையிலேயே சந்திப்பு தெய்வம்.

 21. சி.பி.எம் முக்கு
  டாட்டா இப்ப கூட்டாளி
  ஜே.பி.யார் கூட‌ பாட்டாளி

  அத்வானி கூட‌ பங்காளின்னா
  அப்ப‌ ச‌ங்க‌ராச்சாரி என்ன‌ ஏமாளியா ?

  அவா கேட்கிறாடா கேள்வி
  ப‌தில் சொல்லுடா போலி

  பாசிச பேயோடு கூட்டணி!
  அய்யோ
  அவ கொன்னு போட்ட‌ மக்க‌ளை
  நீ மறந்தியா ?
  உண்மைத் தோழா
  உன் பொலிட் பீரோவை கேளு நீ

  அத்வானி ஒரு சாக்க‌டை
  அவ‌ளும் ஒரு சாக்க‌டை
  இர‌த்த கவிச்சு வீசும் சக்க‌டை

  இந்த‌ இர‌த்த‌ம் குடிக்கும் கும்பலோடு
  சோசலிச பேசும்
  உன் க‌ட்சிக்கென்ன‌
  கூட்ட‌ணி ?

  துரோக‌மே கொடியிலிருந்து அரிவாளை எடுத்துவிடு
  இல்லையெனில் அது உன்னை துண்டுத்துண்டாய்
  அறிந்து வீசும்..

  சுத்தியலையும் எடுத்து விடு இல்லையெனில்
  பாட்டாளி வர்க்க‌ம் உன் ம‌ண்டையை பிளந்தெரியும்.

 22. தோழர்களே என்னை மண்ணிக்கவும் இங்கே இவன் பேசும் பேச்சுக்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவே தான் சற்று கடும் வார்த்தைகளை பிரயோகிக்க போகிறேன்.

  மக்கள் ஜனநாயக புரட்சி பேசும் இந்த பொறுக்கி கும்பலை நான் நன்கறிவேன்.
  தொழிலாளிகளை சுரண்டி சந்தா சேர்த்து அதில் குடிக்கும் இந்த‌ அயோக்கிய‌ நாய்க‌ளின் செய‌லை க‌ண்டு நான் ப‌ல‌ முறை வேதனை அடைந்துள்ளேன் ஆனால் எப்போதுமே அதிர்ச்சியடைந்ததில்லை.
  ஏனெனில் இவர்களோடு இருந்ததால் கிடைத்த கொடை அது.

  அங்கே தலைகள் அத்தனையும் பெரும்பாலும் பொறுகிக்த்திங்கும் கும்பலாகத் தான் இருக்கும்.
  அது மட்டுமல்ல இந்த கட்சியின் கொம்முனிஸ்டு தலைவர்களை பற்றியும் அவர்களை விட பெறிய கொம்பர்களான அனிகளை பற்றியும் பல ரகசிய கதைகள் உண்டு தேவை படும் எனில் அவை ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.

  இப்போது பல பன்றிகள் விஜய்காந்த் விட்டை நன்றாய் இருக்கிறது என்பதை கேள்வி பட்டு அங்கே ஒடி போய் விட்டன என்பது செய்தி.

  இவர்களுக்கு எழுத்து என்கிற ஆயுதம் புரியாது,
  அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் அவர்கள் முடிவு செய்வார்கள்.

 23. தோழரே

  இந்த நாட்டில் உண்மையான காம்முனிசமும், ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மை கிடையாது. எல்லாம் நேரத்துக்கு நேரம் மாறுபடும். இன்னும் 5 ஆண்டு கழித்து நீங்களே கூட அம்மாவுடன் கூட்டு வைத்து கொள்ளலாம். பணம் நிரம்ப நாள் நின்னு விளையாடும். கொள்கை ஈரவெங்காயம் எல்லாம் ரத்தம் ஸிகரம் சுண்டினவுடன் காய்ந்துவிடும் ஒகேவா? இதை புரிச்சுகிட்டு போய் விட்டுல அடுபெரிய எதாவது பொழப்ப பாருங்க.. இல்லேன்னா உங்க வாரிசுங்க உங்க முஞ்சில காரிதுப்பும் நாளும் உங்க புரச்சி கிரச்சி கட்சி அம்மாவுடன் கூட்டணி வைக்கும் நாளும் ஒன்றாக இருக்கும்.

  நன்றி.

  தமிழ் உதயன்.

 24. சிறிது நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நினைவு கூற விரும்புகிறேன், சென்னையில் கே.கே நகர் பகுதியில் தோழர்கள் சிலர் புதிய ஜனநாயகம் பத்திரிக்கை விற்பனை செய்து கொண்டிருந்த பொழுது, அங்கே வந்த ஒருவர் தோழர்களை புத்தகம் விற்கக் கூடாது என மிறட்டினார். கேட்டதற்கு இது எங்க ஏறியா வேறு எங்காவது போ எனக் கூறினார். அட இப்படி ரவுடி மாதிரி பேசுரியே நீ யாருயான்னு கேட்டா நான் ‘காமராசு’ DYFI ல முக்கிய தலைன்னு சொன்னாரு. இதப் பத்தி அப்போ நம்ம சி.பி.எம். தோலருங்க கிட்ட கேட்டப்போ காமராசுக்கு வறிந்து கட்டிக்கிட்டு பேசுனாங்க. ஆனா இப்போ அதே காமராசு CPMல செய்கிற புரட்சி பத்தாதுன்னு விஜயகாந்த் கட்சிக்குத் தாவிட்டாரு. இப்பவும் நம்ம CPM தோலருங்க அவரையே ஆதரிச்சுப் பேசுனாங்க. என்னையா இது உங்க கட்சிய விட்டு ஓடுனவன ஆதரிச்சா உங்க கட்சியில பிரச்சனை வராதானு கேட்டா, CPMலிருந்து ஓடிப்போய் ML கட்சிக்காரங்க கூட சேர்ந்தவங்களை ஆதரித்தால்தான் கட்சில கண்டிப்பாங்க, மற்றபடி தேர்தல்ல நிக்கற கட்சிகளில் இப்படி ஒரு ‘நண்பர்’ இருப்பது, கூட்டணி சமயங்களில் நல்லதுதானே என்று கூறினார். CPM தலைமையின் சந்தர்ப்பவாதம் அணிகளிடமும் பரவி வருகிறதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. புரட்சியை நேசிக்கும் அணிகள் யாரும் CPM கட்சியில் சேர்வது இல்லை. அங்கே இருப்பவர்கள் எல்லோரும் எப்படி MLA ஆகி ஓட்டு சேர்க்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள். இவர்களைப் பற்றி நாம் என்னதான் எழுதினாலும் அதையெல்லாம் படிக்காதது போலப் பேசும் காரியக் குருடர்கள் இவர்கள்.

 25. CPM கட்சிக்கு இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் விடுதலை போன்றவர்கள் தற்போது ஜெயலலிதாவுடன் கூட்டணி எனத் தலைமை முடிவெடுத்தது குறித்து சிந்தித்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். நேற்றைக்கு வரை அவரை எப்படியெல்லாம் வசை பாடினோம் இப்போது அவரிடமே 2 சீட்டு கேட்டு வழியரொமே என்றெல்லாம் அவர்கள் நினைக்க மாட்டார்கள். நாம் மக்களிடம் பிரச்சாரம் செய்து வசூல் செய்தால் தடுக்கும் அதே கட்சியினர் தமுஎச மட்டும் சென்னை சில்க்ஸிடம் வசூலித்துத் தனது அணிகளுக்கு பை வாங்கிக் கொடுப்பது பற்றிக் கேள்வி கேட்கத் தெறியாது. எல்லாம் பிழைப்புவாதம், காரியவாதம்.


 26. சி.பி.எம் கட்சியினர் அரசியல் ரீதீயாக ம.க.இ.கவை முறியடிக்க முடியவில்லை என்பதற்காகத்தன் ரவுடித்தனத்தில் இறங்கியிருக்கின்றனர் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளோம்.

  வினவு முதல்ல ஒரு விசயத்தை தெளிவுபடுத்தவும். ம.க.இ.க. ஒரு அரசியல் கட்சியா? விளக்கவும்.

  அப்படி இல்லை என்றால் அது எந்த அரசியல் கட்சியின் வால்?

  தங்களை நக்சலைட்டுகள் என்று மார் தட்டிக் கொள்ளும் வினவு? உங்கள் கட்சியின் பெயரில் ஏன் ஒரு போஸ்டர் போடக்கூடாது?

  உங்களை அரசியல் ரீதியாக முறியடிப்பதற்கு நீங்கள் என்ன தமிழகத்தின் ஆளும் கட்சியா? அல்லது எதிர் கட்சியா?

  கம்யூனிச அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வதையே தங்களது பத்திரிகையிலும், போஸ்டரிலும் தினந்தோறும் பார்க்கிறேன்? சி.பி.எம். போன்றவர்கள் உங்களை எப்போதும் சீண்டியது கூட கிடையாது? அப்படியென்றால் நீங்கள் யாருக்கு காவடி தூக்குகிறீர்கள்?

  உங்களது புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்றவற்றிலும், நீங்கள் அச்சடிக்கும் நோட்டிசிலும் பா.ஜ.க. – சங்பரிவாரம் போன்ற பாசிஸ்ட்டுகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், தி.மு.க. – அதிமுக போன்ற மாநில கட்சிகளை எதிர்ப்பதை விடவும் அதிகமான வார்த்தைகளை சி.பி.எம்.க்கு எதிராக பயன்படுத்துவது ஏன்?

  முதலில் இதற்கு யோக்கியமாக பதிலுறைக்கவும்.

 27. //ரவுடிகளின் வசவுகளை அப்படியே நமது பதிவில் பயன்படுத்துவது தவறு//

  I agree with this comment. Please avoid this in your future posts.

  Nithil


 28. போலீசின் கைக்கூலித்தனத்தை தோலுரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படவுள்ளது.

  அன்பு தோழர் வினவு! இந்த அரை காலனி நாட்டில் செயல்படும் உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு எப்போது முதல் நம்பிக்கை வந்தது?…. இந்த நீதிமன்றங்கள் எல்லாம் முதலாளிகளுக்கு சேவகம் புரியும் ஏவல் கூட்டம் என்று ஏசியதை எல்லாம் மறந்து விட்டீங்களா?

 29. கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!

  தமிழ் மக்களிடையே மிகப் பிரபலமாக இயங்கும் பழமொழிகளில் ஒன்றுதான், “கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்!” என்பது. இந்த பழமொழிக்கு உரியவர்கள் வேறு யாரும் சாட்சாத் ம.க.இ.க.வினர்தான். ஆம்! மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில், நாங்களும் கம்யூனி°ட்டுகள் என்று கூறிக் கொண்டு, கம்யூனிச எதிர் பிரச்சாரத்தை நடத்தி வரும் திண்ணை நக்சலிசவாதிகள், இவர்களின் தற்போதைய பிரதான புரட்சிகர தொழில் இணையம் மூலம் புரட்சி நடத்துவது.
  ம.க.இ.க.வின் பிரதான வேலை என்ன தெரியுமா? யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே! கொஞ்சம் உங்கள் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு, அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக் கதவைத் தட்டி, தங்களது பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவார்கள். குறைந்தது ஒருவாரமாவது இந்த பிரசங்கம் இருக்கும். இவர்களது பேச்சு எடுபடாது என்று தெரிந்த பின்னர், அடுத்த நபர்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
  மேலும், இவர்களது முகவர்கள் (புரட்சிக்காரர்கள்!) ஒரே பெயரில் இயங்குவதில்லை. சமீபத்தில் இப்படிப்பட்ட முகவர்கள் நான்கு பேர் குரோம்பேட்டையில் சீர்குலைவு வேலையில் ஈடுபட்டதை பெருமையடித்துக் கொண்டிருந்தனர். எதேச்சையாக இவர்களின் விவாதம் என்னுடைய காதில் விழ, என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. ஐயா, புரட்சி வீரர்களே! உங்களுக்கெல்லாம் வீடு எங்கன்னு கேட்டதுதான் தாமதம். ‘அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, என்று கூறிவிட்டு பேந்தப் பேந்த முழித்தாhர்கள்.’ இவர்களுக்கு குரோம்பேட்டையில் என்ன வேலை தெரியுமா? சி.பி.ஐ.(எம்) செயல்படுற இடத்துல போய் குட்டையை குழப்புவதும், சீர்குலைவு வேலையில் ஈடுபடுவதும்தான். உங்க பெயர் என்ன என்று கேட்டதுதான் தாமதம். ஒரு புரட்சிக்காரரின் முகத்தில் ஈயோடவில்லை. என் பெயரா? என்று முழிக்கத் துவங்கி விட்டார்! இவர்களைப் பொருத்தவரை தங்கள் சொந்தப் பெயரைக் கூட தைரியமாக சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் வேலை செய்யத் துணியாத புரட்சிக்காரர்கள்.
  இவர்களது நடவடிக்கை தலைமறைவு காலங்களில் செயல்படுவதுபோல் இருந்தது. நான் இவர்களிடம் கேட்டது இப்படித்தான். ஐயா, நீங்கள் எந்த ஊர் என்று தெரியாது, உங்களது புரட்சிகர வேலைகளை நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள மக்களிடம் செய்வதுண்டா? அவ்வளவுதான். உங்களுக்கு சுந்தரய்யாவைத் தெரியுமா?… என்று ஆரம்பித்து விட்டார்கள். இவர்களது செயல்பாட்டை நினைத்தவுடன் மேலே கண்ட பழமொழி நினைவுக்கு வராமல் இருக்குமா?
  தங்களது செயல்பாடுகளால் மட்டுமே இந்திய நாட்டில் புரட்சியை கொண்டு வர முடியும் என்று கனா கண்டுக் கொண்டிப்பவர்கள் தான் இந்த ம.க.இ.க.வினர். இதர கம்யூனிச கட்சிகள் எல்லாம் போலி கம்யூனி°ட்டுகள், ஓட்டுப் பொறுக்கிகள்….. பக்கத்து வீட்டுக்காரனிடம் தான் நக்சல் என்று கூறி அரசியல் நடத்த முடியாத வீரர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
  ஒரு வருடத்தில் நான்கு இயக்கம் நடத்துவர்கள். கோக் எதிர்ப்பு, கருவறை நுழைவு, தமிழ் மக்கள் இசை விழா, இத்தியாதி… இத்தியாதி…. ஐயோ, இவர்கள் நடத்தும் இத்தகைய கும்பமேளாவுக்கு நான்கு மாதம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். அப்புறம் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு 500 பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டு ஜல சமாதியில் கலந்து விடுவார்கள்… புரட்சி நடவடிக்கையல்லவா? மேலும் நக்சலிசம் என்று பேசிக் கொண்டு, தங்களை எதிர்ப்பவர்களை தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இவர்கள் கண்ணோட்டத்தில் ஓட்டுப் பொறுக்கிகள்தான். ஆனால், மம்தாவின் முந்தானையில் தங்களை மறைத்துக் கொள்வதில் வெகு கில்லாடிகள்… ஒருவேளை ஜெயலலிதா மேற்குவங்கத்தில் இருந்தால், அவரது பின்னால் ஒளிந்துக் கொண்டு புரட்சிப் பேசுவார்கள்.
  தமிழகத்தில் எந்த பகுதியிலாவது, இவர்கள் ஜனநாயக ரீதியாக மக்களை வென்றெடுத்திருக்கிறார்களா? அல்லது மக்களைத்தான் அரசியல் படுத்தியிருக்கிறார்களா? ஒன்றுமில்லை சிரங்கெடுத்தவன் சொறிவது போல், தேர்தல் நேரத்தில், அதுவும் சி.பி.எம்., சி.பி.ஐ. நிற்கும் இடங்களில் மட்டும் புரட்சி பேசுபவர்கள். இவர்களது திண்ணை வேதாந்தும் ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களை பிற பகுதிகளில், நக்சலிச பயங்கரவாதத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் பலியாவதற்கு மட்டுமே பயன்படுகிறது. 1967 இலிருந்து நக்சலிசம் பேசியவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட நக்சலிச நடைமுறையற்றவாதிகளாய் பிரிந்து கிடப்பதும், ஒடுங்கிக் கிடப்பதும்தான் இவர்களது பிரதான சாதனை! இவர்களின் நவீன வடிவமாய் உருவெடுத்திருப்பது இணைய வேதாந்தம், இங்கும் பல பெயர்களில் உலா வருகிறார்கள். நேபாளத்தில் உள்ள மாவோயி°ட்டுகள் கூட இவர்களை அங்கீகரிப்பதில்லை என்பதுதான் சமகால உண்மை.
  இது குறித்த மேலும் சில விரிவான கட்டுரைகள்
  நக்சலிசம் வர்க்கப் போராட்டமா? பயங்கரவாதமா?
  மாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி!
  Fatalities in Left-wing Extremism

 30. ம.க.இ.க.வின் தலைவர் மருதையன் என்பது ஒரு புனைப்பெயர்தான். அவர் ஒரு பார்ப்பனர்தான். அவரின் உண்மையான பெயர் ஒரு பார்ப்பனபெயர்தான்.

  http://www.makkalarankam.com/node/43

  இப்படி அந்த தளத்தில் கொடுத்துள்ள தகவல் உண்மையா? தோழரே!

 31. ஏம்ப்பா விடுதலை இந்த ”கூரையேறி……” பதிவுக்குள் எமது தோழர்கள் நுழைந்து உங்க சந்திப்பை துவைத்து தொங்கவிட்டார்களே, அந்த பின்னூட்டங்களையும் சேர்த்து வெளியிடத் தயாரா?

  அசுரன், கேடையம், அரசு போன்ற தோழர்களின் கேள்விகள் ஒன்றுக்குக் கூட பதில் சொல்லமுடியாமல் உங்க சந்திப்பு அம்மனமாக நின்றது இங்கே அம்பலமாகிவிடும், அப்பின்னூட்டங்களை இங்கே பதிவிட்டால்…….பதிவிடுவோமா?

 32. ஏகலைவன் அண்ணா – விடுதலை, விடுதலை முழக்கம் மற்றும் நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதில் கூறாமல், ஏதோ சந்திப்பில் நாங்கள் கிழித்து விட்டோம். அதனை வெளியிடத் தயாரா? என்றால் அதனை நீங்கள் சந்திப்பிடம்தான் கேட்க வேண்டும். அல்லது அந்த பதில்களை நீங்களே எடுத்து வெளியிடுங்கள் அது உங்கள் வேலை? எனக்குத் தேவை மேற்கண்ட கேள்விகளுக்கான விளக்கம். இதனை நான் வினவிடம் கேட்டால் – உங்கள் முதிர்ந்த மீசை துடிப்பது ஏனோ? இப்படித்தான் விவாதிக்க வேண்டும் என்று உங்கள் அமைப்பில் சொல்லிக் கொடுத்தார்களா என்று நான் கேட்க மாட்டேன். சரி இத்தோடு கடையை நீங்களே மூடிக் கொள்ளுங்கள்…. டைம் வேஸ்ட்…

 33. விடுதலை, விடுதலை முழக்கம், காவலன், ராமகோபா..மன்னிக்கவும் நீங்களே எல்லா பெயரிலும் வருவதாக சொல்லுகிறார்களே உண்மையா?

 34. விடுதலை முழக்கம், உங்க ஒன்னு விட்ட சித்தப்பாவோட மைத்துன்னுடைய மாமாவோட தம்பி மாப்பிள்ளை ஆர்.எஸ்.எஸ் கார்ராமே
  அதனாலதான் நீங்க ஜெவை ஆதரிக்கிறீங்களாமே

 35. விடுதலை, இன்னமும் முப்பது வருசம், நாலரை மாசம் , ஏழு நாள், பதினைந்து நிமிடம், மூன்று நொடியில் நீங்க புரட்சி நடத்தப்போரீங்களாமே?

 36. மேலே போட்ட மூனும் ஏன் பின்னூட்டம்தான், நீ எழுதுன கிசுகிசுக்கு அந்த பாணியிலேயே பதில். ஆனா நீ ரொம்ப பாவம்யா, இவ்ளோஓஓஓஓஓஓஓஓஓ பெரிய அகில இந்திய பாரம்பரியம் வாய்ந்த பழம் பெரும் புரட்சிகர கட்சியின் சார்பா விவாதம் செய்ய நீ ஒருந்தன்தானா இருக்கா…என்ன கொடுமை விடுதலை இது!

 37. நான் அந்த ஒட்டு பொறுக்கி விடுதலை அல்ல.

  உண்மையான விடுதலை
  ————————————————————————————–

  மிஸ்டர் ஒட்டு பொறுக்கி விடுதலை!

  ம.க.இ.க மேல இருந்த வயித்தெரிச்சல் எல்லத்தையும் கொட்டிட்டியா!

  உன்னுடய வயித்தெரிச்சல் எல்லாத்தையும் படிச்சேன் (ஆமா சரக்கு அடிச்சீருக்கியா இல்ல கஞ்சாவா)

  உங்க கட்சிய பத்தி பெரியார் அன்னிக்கே சொன்னர் “இவனுங்க காசுக்காக என்ன வேணா செய்யற பசங்க”-னு

  உங்க மானமெல்லாம் அவுந்து நாறி போயி ரொம்ப நாளயிடுச்சி.

  ரொம்ப முக்கதிங்க ஒட்டு பொறுக்கி விடுதலை அப்புறம் புரட்சி ஒடனே வந்துடும்.

  ————————————————————————————————————–
  சி.பி.எம் காவலன் இந்த வேலைய விட்டுட்டு போயி எம்.ஜீ.ஆர். மாமா-ஜெயா மாமி படம் பார்க்கவும்
  பிரச்சரத்திற்கு உதவும் (ஜெயா மாமி பாத்து ஏதாவது போட்டு கொடுப்பாங்க)

  ————————————————————————————————————-

  ஏனுங்கோ! புதிய ஜனநாயகத்துக்கு ” சி.பி.எம், தீக்கதிர்” போட்டியா

  ஹே! காமெடி பண்றாம்பா ஒட்டு பொறுக்கி !!!!!

 38. விடுதலை, காவலன் உஙளுக்கு பெயர் பற்றாக்குறையா?

  கீழ்கண்ட பெயர்களை பயன்படுத்தி கொள்ளவும்

  ஓட்டு பொறுக்கி

  டாடயிஸ்ட்

  நந்திகிராம் கில்லர்ஸ்

  கம்யூனிச வியாபாரிகள்

  இந்து கம்யூனிஸ்ட்

  பிராமண கம்யூனிஸ்ட்

  கருங்காலிகள்

  பெனாத்தல் பேர்வழிகள்

  காரப்பட்டு கேப்மாரிகள்

  சூப்பர் ஐயர் & கோ

 39. //பழம் பெரும் புரட்சிகர கட்சியின் சார்பா விவாதம் செய்ய நீ ஒருந்தன்தானா இருக்க//

  அதானே வழக்கமா ரத்தம் குடிக்க வரும் சங் பரிவார கூட்டத்தையும் காணோம் ஒரு வேள நீங்க ஜெவுடன் வைத்திருக்கும் புனர்ச்சிகரு இல்ல இல்ல புரட்சிகர கூட்டனியை கண்டு காண்டாகி கவுத்துட்டாங்களோ? வாட் எ பிட்டி விடுதலை வாட் எ பிட்டி

 40. https://www.blogger.com/comment.g?blogID=19174518&postID=5559571828222396826

  மேற்கண்ட இந்த சுட்டியில் சந்திப்பு என்கிற அந்த சிபிஎம் கோமாளியின் தளத்தில் அவனது வெற்று வாதங்களை தோழர்கள் அசுரன், ஸ்டாலின் போன்றவர்கள் துவைத்து தொங்கவிட்டிருக்கிறார்கள்.

  இவையெதுவும் படிக்கும் எவருக்கும் எளிதில் புரிந்துகொண்டு சிபிஎம் குறித்து ஒரு தெளிவான முடிவெடுக்க உதவும் வகையில் இருக்கின்றன. பாவம் அந்த பாண்டிச்சேரி குடிகார கும்பலின் தலைவன் ரமேசுபாபு(அவந்தான் விடுதலை, காவலன், இன்னும் பிஞ்சசெருப்பு போன்ற பேருல எழுதுறவன்) வின் ‘பேரறிவுக்கு’ சிறிதும் எட்டுவதேயில்லை.

  இனி அசுரனின் பதிலுக்குச் செல்லலாம்…..
  ******************************************************************

  At 5:02 PM, அசுரன் said…
  போலி கம்யுனிஸ்டு ஒருத்தர் இருந்தார். அவர்ட்ட போய் என்னாபா இப்படி அப்பட்டமா ஏகாதிபத்தியத்துக்கு சேவை
  செய்யுறியே என்ன விசயம்? இதுக்கு மார்க்ஸியத்துல என்ன வியாக்கியனம் கொடுக்கப் போற என்று கேட்டேன்?

  அந்த போலி கம்யுனிஸ்டுக்கோ ஒரே கோபம். என்னாடாதி நம்மள பாத்து கேள்வி கேட்டுட்டானே என்று தமது தத்துவ வியாக்கியானத்தை புரளி வடிவில் கொடுத்துள்ளனர்.

  இவர்களின் இதே கட்டுரையை ஒரு அதிமுக அல்லது ஒரு திமுக காரர் இவர்களை தாக்கி எழுதுவதாகக் கொண்டால்
  அப்படியே பொருந்தும். அதாவது இவர்களின் கட்டுரைப் படி இவர்களை விட சிறந்த கட்சி திமுக, அதிமுக உள்ளிட்ட
  வோட்டுப் பொறுக்கி கட்சிகள்தான். வோட்டுப் பொறுக்கி என்று திமுக அதிமுக கட்சிகளை குறை கூறுவதை இந்த போலி
  கம்யுனிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. என்ன செய்ய இந்த வரையறை அவர்களுக்கு பொருந்துகிறதே. இப்படி இவர்கள் காபந்து
  செய்யும் ஆட்கள் நிறைய பேர் – சங்கராச்சாரி, டாடா, ஜார்ஜ் புஷ் etc.

  மக்கள் பிரச்சனை, பொருளாதார கொள்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால், அதில் என்ன தத்துவ அடிப்படை
  உள்ளது என்று கேள்வி எழுப்பினால், அது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் புரளி பேச விழைந்து தாம் உண்மையிலேயே
  போலி கம்யுனீஸ்டுதான் என்று நிரூபிக்கிறார் இவர். ஏனேனில் மார்க்ஸியத்தை நடைமுறையில் கொண்டவர்கள் இல்லை
  இவர்கள். அதனால்தான் தமது நடவடிக்கைகளுக்கு எந்த தத்துவ வியாக்கியானமும் கொடுக்க வழியின்றி இப்படி பொருமி
  கொட்டுகிறார்கள்.

  எண்ணிக்கைதான் அளவு கோல் எனில் அன்றைக்கு பகத்சிங் திண்னை புரட்சியாளந்தான். இன்றைக்கு அதிமுகதான் புரட்சிகர
  கட்சி.

  ஆனால் பகத்சிங்கை கண்டுதான் ஏகாதிபத்தியம் நடுங்கியது. மக இக வைக் கண்டுதான் இந்துத்துவம் தமிழக்த்தில் கதறியது
  பின்வருமாறு, “தமிழக்த்தை பொறுத்த வரை மக இக தான் நமது முதன்மை எதிரி’ என்று. இந்திய அளவிலும்
  நக்சல்பாரிகளையே தமது முதல் எதிரிகளாக வரையறுத்துள்ளனர் இந்துத்துவாதிகள்.

  ஏனேனில் மார்க்ஸிஸ்டுகளுக்கும், இந்துத்துவாதிகளுக்கும் அதிகார போட்டி தவிர்த்து சித்தாந்த போட்டி என்று ஏதுவுமில்லை
  என்று இந்துத்துவவாதிகளுக்கு தெரியும். CPM தலைவர் ஒருவர் தன்னை பார்ப்பனன் என்ற பொழுதும், தீபாவளி, ரமலன்
  விழாக்களுக்கு சிறப்பிதழ் வெளிய்யிட்ட போதும், சஙக்ராச்சாரிக்கு அரசு விருந்தினர் மரியாதை கொடுத்த போதும், CPM கூட
  இந்த இந்துத்துவ கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியது. ஏன் நக்சலிசம் குறித்த இன்னுமொரு துரோக
  நடவடிக்கையில் நமது திரு போலி அவர்கள் கூட வஜ்ரா எனும் இந்துத்துவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரினார்.

  மகஇகவைக் கண்டுதான் தாமிரபரணி கோக் பிரச்சனையில் போலிஸ் பேச்சு சுதந்திரத்தையே மறுத்து தொலைக்காட்சியில்
  அம்பலமாகியது. மக இக அந்த பிரச்சனையில் இறங்கியாராவிடில் CPMன் அடையாள போராட்டத்தின் வீச்சு என்ன்வென்று
  தெரிந்த அரசும், போலீசும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். இந்த சம்பவத்தில் தெரிய்வருவது ஒரு கட்சியின்
  பலம் என்பது புரட்சிகர சித்தாந்தம் தான் என்பது மிகத் துலக்கமாக தெரிந்தது.

  லெனின் ஒரு கட்சியின் பலம் என்பதாக புரட்சிகர சித்தாந்தையே சொல்கீறார். நானும் பல முறை இந்த போலிகளிடம்
  உங்களின் புரட்சிகர சித்தாந்தம் என்னவென்று கேட்டுவிட்டேன். பதில் இல்லை. கடைசியில் MBA படிப்பில் சொல்லித்
  தரப்படும் பிழைப்புவாதமே இவர்களின் புரட்சிக்ர சித்தாந்தம் என்று புரிந்து கொண்டேன். அது மார்க்ஸியம் அல்ல
  என்பதுதான் எனது நிலைப்பாடு. அவர்களோ MBA படிப்புதான் மார்க்ஸியம் என்றூ சொல்லாமல் சொல்கிறார்கள்.

  ஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போது பௌதீக சக்தியாகிறது – மக இக வின் புரட்சிகர
  சித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது
  கொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM? வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாக பொறுக்கிக்
  கூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில்
  மூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.

  முதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட
  வேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும்
  நக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அர்சியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கல் மக இகவினர். திரு போலி அவர்கள் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ?

  ஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புர்ட்சி செய்வது யார்? இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு – நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் நில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.

  அப்புறம் மாவோயிஸ்டுக்ள் குறித்த இவர்க்ளின் கொள்கை முரன்பாடுகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் வந்து பதில் சொல்ல வேண்டும். ஆனால் மாவோயிஸ்டுகளை விமர்சிக்க இவர்களுக்கு தகுதியில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். மம்தாவின் பின்னால் மக இக ஒளிவாதாக கூறுகிறார் மேலும் ஜெயலலிதா மே.வாவில் இருந்தால் அவர் பின்னாலும் ஒளிவோம் என்கீறார். உண்மையில் ஜெயலலிதா முதலானவர்களின் பின்னால் ஒளிந்து வோட்டு அரசியல் நடத்திய பிழைப்புவாதிகள் யார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  சரிதானே நான் சொன்னது. இவர்கள் இன்னும் ஏன் மார்க்ஸிஸ்டு என்று பெயர் தாங்கி அழைகிறார்கள் என்று தெரியவில்லை.
  அதற்க்கு இது வரை திரு போலியிடம் இருந்து விளக்கம் வரவேயில்லை.

  About Singur:
  http://tamilarangam.blogspot.com/2007/03/blog-post_01.html

  ******************

  இதற்க்கு முன்பே ஒரு முறை இந்த போலிகள் தங்களது தத்துவ ஓட்டாண்டித் தனத்தை விளம்பரப்படுத்தி அசிங்கப்பட்டுள்ளனர். அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,

  //////
  சல்வாஜூடம் போன்ற துரோக இயக்கங்களை சந்தித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளிருந்து கழுத்தறுத்து அரசின் குரலாக ஒழிக்கும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது?

  அதுவும் ஒரு இந்துத்துவவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரிய தங்களை போலி கம்யூனிஸ்டு என்று விமர்சனம் செய்வது எந்த வகையில் தவறு?

  Maoist-னுடைய அரசியல் செயல்/போர் தந்திரம் சரியா, தவறா என்பது விவாதத்திற்க்கு உரியது. மாறாக கற்பிதமான அவதூறுகளைப் பரப்பி அரசியல் செய்தது CPM. அது CPMனுடைய தராதரம்.

  Maoist பற்றி சொல்லுவத்ற்க்கு தங்கள் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா. Maoist னுடையது இடது சகாசவாதம் எனில் தங்களுடையது வல்து சந்தர்ப்பவாதம்.

  மற்றபடி தங்களது பதிவிலேயே கிசு கிசு ரேஞ்சில் சில குற்றச்சாட்டுகள் வைத்துள்ளீர்கள். அதே போல் என்னால் ஆயிரம் உதாரணங்கள் தங்களது CPM மீது வைக்க முடியும். ஆனால் ‘உலகின் மற்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு உள்ளது’ என்ற வரிகளுக்கு நான ஆதாரம் கேட்டால் தங்களால் தரமுடியாது என்பதால்தான் கிசு கிசு பாணியில் அதை சொல்லியுள்ளீர்கள்.

  ************

  உங்களது ஆதரவு பெற்ற சல்வஜூடம் இயக்கத்தைப் பற்றி நான் என்ன சொல்லுவது அந்த பகுதியின் போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரே கூறிவிட்டார். ஒரு வேளை மாநிலத்துக்கு மாநிலம் மக்களை ஏமாற்ற கூட்டணி கட்டும், ஒரே விசயத்தை இரண்டு விதமாக விமர்சிக்கும் அணுகுமுறை இந்த விசயத்திலும் வேலை செய்கிறதா?(அதாவது சட்டீஸ்கரில் சல்வஜூடம் சரியில்லை என்று கூறுவது, இங்கு அதுதான் சரி என்று கூறுவது. இந்தியா முழுவது ஸ்டைரக், மே.வ. தில் முதலமைச்சரே ஸ்டைர்க்குக்கு தடை, மே.வா தனியார்மயம், உலகமயம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்ற மாநிலங்களில் எதிர்த்து பேச(மட்டும்) செய்வது).

  CPM: வோட்டு சார் வோட்டு……

  நாம்: அப்போ மக்கள்?

  CPM: அவிங்க கிடக்கிறாங்க விடுங்க சார். ஜனநாயகம் என்றால் என்னானே அவிங்களுக்கு தெரியாது. அவங்ககிட்ட வைச்சு என்னாத்த விவாதம் செய்ய… நம்ம குறுக்கு வழியில சட்டமன்றத்த பிடிச்சு புரட்சி பன்னுவோம். அதுக்கு கொள்கையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு மத்த வோட்டு பொறுக்கி மாதிரியே நாமலும் மக்கள ஏமாத்தனும். இன்னைக்கு கருணாநிதின்னா நாளைக்கு ஜெயலலிதா.. ஆனா என்னைக்கும் நமக்கு 10 MLA சீட்டு உறுதி..

  ************

  அப்புறம் இது வர்க்கப் போராட்டமா என்று கேட்டிருந்தீர்கள் வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. துரோகிகள் காக்கி உடையிலும் வரலாம், இதுபோல தத்துவ மயக்கத்தில் சொந்த வர்க்கத்தில் இருந்தும் வரலாம். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு வர்க்கப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

  மே.வவின் முதல் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக்கு கூஜா தூக்கி- நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த விவசாயிகள் புரட்சியை ஒடுக்கிய CPM-ன் நடவடிக்கை வர்க்கப் போராட்டமா?

  இதற்க்கு தங்களிடம் பதில் இருக்காது. நானே சொல்கிறேன், அது வர்க்கப் போராட்டம்தான். அரசியல் தரகு வர்க்க CPM க்கும் வறிய விவசாயிகளுக்கும் நடந்த போராட்டம்தான் அது.

  அங்கு ஒரு அரசின் கடமையை கிஞ்சித்தும் கவலையின்றி செய்த பாட்டாளி வர்க்க கட்சி?? – CPM.

  பலியான விவசாயிகள் – உரிமைக்காக போராடியவர்கள்.

  இங்கு சல்வாஜூடமில் போராடுபவர்கள் யாருடைய உரிமைக்காக போராடுகிறார்கள்? அரசு, ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு முற்போக்கு சக்திகள் சல்வாஜூடம் அமைப்பை கண்டிக்கும் பொழுது நீங்கள் ஆதரிப்பதில் உள்ள உள்நோக்கம் அவதூறு கிளப்பியே மாற்று தத்துவங்களை நிர்மூலமாக்கும் தந்திரம்தான் என்பது தங்களது அடிப்படையற்ற ஒரு கிசு கிசு பாணி குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகிறது.

  அதுசரி இன்னோரு விசயத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கேராளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யுனிஸ்டு அரசு களைக்கப்பட்டதே. அந்த அனுபவம் என்ன? நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எதையும் மக்கள் முன் வைத்து விவாதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களே. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பதை – மக்களிடமிருந்து பிற்போக்குத் தனத்தை கற்றுக் கொள், மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடு என்று புரிந்து கொண்ட அமைப்புதானே CPM என்ற போலி கம்யுனிஸ்டு கட்சி.

  கேரள அரசு கவிழ்ப்பின் படிப்பினையாக CPM எடுத்துக் கொண்டது – நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், பன்னி வேசம் போட்டால் சாக்கடையில் சவக்….சவக்…தான். அதாவது அரசு என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்ட CPM அந்த அரசின் வேலைகளைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் எல்லாம் கோமனத்தை கழட்டி காயப் போட்டிருக்கிறோம் புரட்சிக்கான சூழல் வரும் பொழுது கட்டிக் கொள்வோம் என்ற அளவில்தான். இதைத்தான், அதாவது கேரள அனுபவத்தின் படிப்பினையைத்தான் மேற்கு வங்கத்தில், எந்த வர்க்கதின் பலத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ அந்த விவசாயிகளை நசுக்க அமல்படுத்தியது. அதாவது அரசின் அடக்குமுறை.

  ****************

  புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.

  புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.

  அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சி பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்(இங்கேயும் நீங்கள் வக்ராவுடன் கொஞ்சிப் பேசி அணுகிய விதம் அந்த பண்பாட்டின் எச்சம்தான்).

  எடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கியமான முரன்பாட்டை இவர்கள் கையாளும் விதத்தை பாருங்கள்.

  தனிஉடைமை அரசு என்பது மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஒரு அமைப்புதான், ஆனால் தனது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொள்ள அது மக்களுக்கான அரசு என்பது போல தோன்றச்செய்யும் நடவடிக்கைகளையும் அது செய்யும்.

  அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, முரன்பாட்டை(அதன் உண்மையான மக்கள் விரோத இயல்பு Vs மக்களை ஏமாற்றும் அதன் மக்கள் நல நடவடிக்கைகள்) சரியாக கையாள்வதன் மூலம் அதை மக்களிடம் அம்பலப்படுத்துவதும். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு இடையில் அரசு சிக்கி தவிப்பதில் தனது ஜீவிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் என்பதாகத்தான் ஒரு புரட்சிகர கட்சியின் நடவடிக்கை இருக்க வேண்டும்.

  தங்களது அமைப்பு என்றைக்காவது இந்த முரன்பாடுகளுடன் விளையாண்டுள்ளதா? எங்கே விளையாட முரன்பாடுகளை கண்டாலே சம்ரசம் என்ற நியுட்ரல் கியர் போட்டு அங்கேயே ஐக்கியமாகிவிடும் அமைப்பல்லவா அது.

  ***********

  அப்புறம் ஆயுதத்தை, சூழல் தீர்மாணிக்கும் என்று ஒரு வரி போட்டு நாங்கள் அசைவ புலிதான் என்ற ஒரு போலியான உண்ர்வை ஏற்படுத்த முயன்றிருந்தீர்கள். மாவோ சொல்கிறார் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரி தீர்மாணிக்கிறான்.

  புரட்சியின் தருவாயில் CPM மும் ஆயுதம் எடுக்கும் ஆனால் ஒரு அரசாக – அந்த புரட்சியை ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்க கைக்கூலியாக ஆயுதத்தை எடுக்கும்.

  ********

  வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறேர்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டேர்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும். நான் சில தத்துவ அடிப்படை கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றுகிறது.

  மக்களுக்கு ஜனநாயகமே அறிமுகமாகாத போது இடது தீவிரவாதம் பேசுவது ஆபத்து என்று முன்பொருமுறை சொன்னீர்களே? யாருக்கு ஆபத்து?

  இந்த ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தினாலேயே காஸ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை களாவானித்தனமாக இந்தியாவுடன் இணைப்பதை ஆதரிக்கிறேர்களே இது எந்த மார்க்ஸிய புத்தகத்தில் உள்ளது?(அய்யா, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.)

  இந்திய புரட்சிக்கான தங்களது புரட்சிகர செயல் தந்திரம் என்ன?

  இந்திய சமூகத்தைப் பற்றிய தங்களது வரையறை என்ன?

  இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா? அதன் அளவு, வீச்சு என்ன?

  ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை என்ன?

  சரி, தங்களுக்கு CPI க்கும் என்னதான் வித்தியாசம்? சும்மா புத்தகத்தில் உள்ளதை ஒப்பிக்காமல் நடைமுறையில் உள்ள வேறுபாட்டுடன் சொல்லவும்.

  *********

  ஸ்டாலினை இன்னும் ஆதரிக்கிறீர்களா அல்லது ஆள் செர்க்கவும், தட்டி போர்டில் போட்டோ போடவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறீர்களா?

  இந்த கேள்வி ஏனென்றால்….. இங்கே ஒருத்தன் ஸ்டாலினை கொலைகாரன் என்று மட்டமாக எழுதினான் அப்பொழுது தங்களது சுயமரியாதை ஒழிந்த இடம் எங்கே?

  அல்லது மனிதருள் மிருகம் என்று ஸ்டலினை எழுதியவருக்கு விருது கொடுத்த பொழுது இனாமாக தங்களது கட்சி சுயமரியாதையையும் சேர்த்து கொடுத்து விட்டதா?

  மனிதருள் மிருகம் எழுதியவரை கௌரவித்த CPM வர்க்க ஸ்தாபனம், மனிதருள் மிருகம் எழுதிய மிருகத்தையும் அதை வெளீயிட்ட பத்திரிக்கையையும் மன்னிப்பு கேட்க வைத்த நக்சல்பாரி ம.க.இ.க பயங்கரவாத அமைப்பு. பலே…. தங்களது கட்சியின் தனி சிறப்பு வாய்ந்த ஆய்வு முறை-வர்க்க பகுப்பாய்வு முறை, வக்ராவிடம் அங்கீகாரம் கோரியபோது மட்டுமல்ல மாறாக இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களில் பளிச்சென்று அப்பட்டமாக வெளிவருகிறது.

  ***************

  கோக்கோலா பிரச்சனையில் தங்களது வெகு ஜன நடவடிக்கை என்ன? ஒரு சிறிய நக்சல்பாரி அமைப்பான ம.க.இ.க மக்களை அங்கு திரட்டியதில், மாநிலம் முழுவதும் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதை வெகுஜன இயக்கமாக தங்களால் பார்க்க இயலாது. தங்களது பார்வையில் ஜனநாயாகத்தின் சுவை அறியாத மக்களுக்கு ஜனநாயகம் தேவையில்லையே. அதனால் சட்டமன்ற நாடாளுமன்ற நடவடிக்கையே ஜனநாயகம், தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்து மாற்றுக் கட்சி அன்பர்களுடன் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே வெகுஜன இயக்கம் போலும்.

  தங்களது த.மு.எ.ச வெளியிட்ட மூழ்கும் நதி திரையிட தடை செய்யப்பட்டதே அதை என்ன சொல்கிறீர்கள்?

  ஒரு ஜனநாயகத்துக்கு உரிய எல்லா அம்சங்களிலும் இந்த சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு அம்பலப்பட்டு நிற்க்கும் பொழுதும் அதை முட்டுகொடுத்து அதில் இன்னும் எதோ பாக்கி இருப்பது போல் உணர்வு கிளப்பும் நீங்கள் இந்தியாவின் சாலச் சிறந்த முகமூடி என்பதில் தங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.

  இந்துத்துவ எதிர்ப்பில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறீர்கள். இந்துத்துவம் BJP, RSS மட்டுமல்ல. அது அனைத்து கட்சி தழுவிய ஒரு தத்துவம்(CPM அதில் உண்டு). இதை பற்றி உங்களது ‘மார்க்ஸீயம்’ இதழிலிலேயே விரிவான கட்டுரைகள் வந்துள்ளன. சட்டமன்ற நாடாளுமன்ற வழிமுறை சும்மா பம்மாத்து என்பது உங்களுக்கு அப்பனான இந்துத்துவ சக்திகளுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.

  இந்துத்துவம் பற்றி அப்படியொரு ஆழ்ந்த புரிதல் இருப்பதினால்தானோ தீபாவளி, ரம்ஜான் சிறப்பு இதழ்கள் ஆயுத பூசையன்று ஆட்டோ க்காரர்களுடன் சேர்ந்து சாமி படம் வைத்து கொண்டாடுவது, நாடாளுமன்ற கற்பின் காவலர் சோம்னாத சேட்டர்ஜியின் பேரனுக்கு பூணுல் கல்யாணம் செய்ய அவர் வருவது, தங்கள் கட்சி அணிகள் சாதி வெறியுடன் இன்னும் நிலபிரபுத்துவத்தை தாங்கி நிற்க்கும் பூத உடல்காலாக வலம் வருவது(சமீபத்திய புதிய ஜன நாயகம் இதழில் இந்த சாதி வெறி பற்றிய கட்டுரை வந்துள்ளது) என்று பல புதிய உத்திகளை கையாள்கிறேர்களோ. இந்துத்துவ எதிர்ப்பிற்க்கு நல்ல நடைமுறை, நல்ல வெகுஜன இயக்க தந்திரம்.

  மாறாக இந்துத்துவ எதிர்ப்பில் முன்னனியில் இருக்கும் ஒரு அமைப்பு ம.க.இ.க. இங்கு வந்த பிரவீன் தோகாடியா சொன்னது தமிழ் நாட்டில் நமது முதல் எதிரி ம.க.இ.க என்றுதான்.

  அய்யா, உங்களால் இந்த சமூகத்துக்கு விளைந்த ஒரே நன்மை பாட்டாளியின் போராடும் உணர்வை மழுங்கடித்து, பேரம் பேசுவதுதான் பாட்டாளி வர்க்க புரட்சி என்ற புரிதலுக்கு இட்டு சென்றதுதான். அதனால்தான் ஒரு தொழிற்சங்கத்தில் சேருவதற்க்கு அடிப்ப்டையாக ஒரு தொழிலாளி அந்த சங்கத்தின் பேரம் பேசும் திறமையை பார்க்கிறான். மிக நல்ல உதாரணம் அசோக் லேலான்ட் தொழிற்சாலை. பாட்டாளிகளுக்கு பிழைப்புவாதத்தையும், மற்ற வெகுஜனங்களுக்கு தொழிற்சங்கம் என்றால் கோமாளித்தனம் என்ற புரிதலையும் ஏற்படுத்தியதை தவிர்த்து என்ன செய்து விட்டீர்கள்.

  தங்களது பதிவிலும் புரட்சி, பாட்டாளி என்று பல வார்த்தைகள் உள்ளன. ஆனால் நடவடிக்கையில் இவற்றை கோரும் போது வோட்டு போடு அத்தோடு நிறுத்திக் கொள். அரசை நிர்பந்திக்கும் போராட்டம் நடத்தாதே என்று இன்னோரு புதிய வகை புரட்சி பேசுவது தங்களது அமைப்பின் வாடிக்கை.

  உங்களது குறைப் பிரசவ தத்துவத்தின் வறுமை கேரளாவின் வேலைவாய்ப்பில் தெரிகிறது. சீர்திருத்தவாதத்தின் அவலம் அப்படித்தான் இருக்கும். தங்களது நடவடிக்கைதான் கம்யூனிசம் பற்றி தவறான, கம்யூனிஸ்டுகள் என்றால் கோமாளி, ஸ்திர புத்தியில்லாதவன், வற்ட்டு சூத்திரதாரி, இழிச்சவாயன் என்ற பார்வையை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

  கேரளா, மே.வத்திலும் கட்சியின் பலம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான். அங்கேயும் அந்த கட்சியின் அடிமட்டம் அதிகார படிக்கட்டில் ஆதாயம் தேடும் போட்டிகள் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளது.

  ********

  நக்சலிசம் என்றால் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற தங்களது புரிதல் உண்மையிலேயே கம்யுனிசம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது.

  ம.க.இ.க போன்ற அமைப்புகள் என்ன துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டா திருநெல்வேலியில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்?

  ஒஹோ… ஒரு வேளை அரசை அம்பலப்படுத்துவதே வன்முறை என்று தங்களது கட்சி தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதோ?

  அய்யா… நக்சல்பாரிகளை நல்வழிப்படுத்தும் முன்பு அந்த தத்துவத்தை படித்து அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யவும். அப்புறம் தங்களது அமைப்பு ஆட்களிடம் தத்துவத்தை நடைமுறையுடன் படிக்கச் சொல்லி ஒரு விண்ணப்பமிடவும்.

  மற்றபடி இந்திய நிலைமகளுக்கேற்ற மாவோ வழி புதிய ஜனநாயக பாதை எப்படி நடைமுறைக்கான பாதை என்பதை புரியவைக்கத்தான் இந்த வலைப்பூ உலகில் வலம் வருகிறேன். அது போன்ற எனது பதிவுகளை வாதம் செய்யுங்கள். பிறகு நானும் எனது புரிதலை திருத்திக் கொள்கிறேன்.

  தோழமையுடன்,
  அசுரன்
  ///////

  அதே பதிவிற்க்கு தோழர் கட்டபொம்மன் என்பவர் அளித்த பின்னூட்டம்,

  /////
  நாடு மறுகாலனியாதிக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், அரசின் அடக்குமுறை எல்லை மீறும்போதும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை நமக்காக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு போராடும் வர்க்கப்போராளிகளின் கீழ்க்கண்ட பாதைகளைப் பின்பற்றினால்தான் மக்களின் போராட்டம் வெல்லும்.

  சதீஸ்கர் தீவிரவாதிகள், சென்னைப் போராளிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

  1) போயஸ் தோட்டத்துக்குப் புல்லறுக்கப் போய், அடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு மணியாட்டப் போய் விட்டு, இடையில் ஓய்வு கிடைக்கும் வேளையில், மெமோரியல் ஹால் அருகே பஸ்ஸே வராதபோது ‘வெல்லட்டும்!
  வெல்லட்டும்!’ எனக் கத்தியபடியே கலைந்து போய்த் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தலாம்.

  2) சதீஸ்கரில் அரசின் அடக்குமுறைகளையோ, உலகமயமாக்கலின் கெடுபிடிகளையோ தீர்க்க, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் (இதனை உச்சிக்குடுமி மன்றம் என்று பெரியார் கட்சிக் காரர்கள் சொல்லினால் சொல்லட்டும் காம்ரேட்.) ஆகிய இரும்புக்கோட்டைகளில் ஏறி இறங்கி, மக்களுக்கு தெம்பூட்டலாம்.

  3) அரசின் அனுமதியுடன் மக்கள் திரளைக் கூட்டி, மொட்டை அடிக்கும் போராட்டம், மணி அடிக்கும் போராட்டம், வாயில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம், ஒப்பாரிப் போராட்டம், அல்லது ஆளே நடக்காத ரோட்டில் (என் ஹெச் 7 மாதிரி) மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை திறம்பட நடத்தி விட்டால், மக்கள் விரோதிகள் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டார்களா?

  4) பகத் சிங் படத்தை போஸ்டரில் போட்டுக் கொண்டு, பார்லிமெண்ட் தொழுவில் பஜனை பாடிக் கொண்டே வர்க்க எதிரிகளைப் பந்தாடி விடலாம், தோழர்!

  துரோகிகளை உருவாக்கி அரசு கூலிப்படைகளை உருவாக்கும். நம் தோழர்களை அக்கும்பலே அரசுப் படையுடன் அழிக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும்போது மீடியா அரசுடன் சேர்ந்து கொண்டு ‘அப்பாவிகள்’ படுகொலை என்று ஊளையிடும். உடனே ‘பார்த்தீர்களா! தோழர்! இடது தீவிரவாதம் இதுதான்.! காலம் இன்னும் கனியலை தோழர்! (செங்காயா இருக்கும் போல)” எனப் பிதற்றுவது. இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்க மக்களை அரசியல்மயமாக்குவதுடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.

  kattabomman
  http://www.blogger.com/profile/26954504
  //////

  அசுரன்

 41. ///////////ம.க.இ.க. ஆதரவாளன்?, மேல் டிசம்பர் 25th, 2008 இல் 15:10 சொன்னார்:
  ம.க.இ.க.வின் தலைவர் மருதையன் என்பது ஒரு புனைப்பெயர்தான். அவர் ஒரு பார்ப்பனர்தான். அவரின் உண்மையான பெயர் ஒரு பார்ப்பனபெயர்தான்.
  http://www.makkalarankam.com/node/43
  இப்படி அந்த தளத்தில் கொடுத்துள்ள தகவல் உண்மையா? தோழரே!///////////////

  இதற்கெல்லாம் பக்கம் பக்கமாக பதிலெழுதி அலுத்தும் விட்டது நண்பரே! ஒருவரின் பிறப்பை மட்டும் வைத்துக் கொண்டு, அவர் புரட்சிகர அரசியலில் இருந்தாலும் சிறிதும் சமரசமின்றி பார்ப்பன எதிர்ப்பாளராகவும் இருந்தாலும் அவரது பிறப்பையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் உங்களது ‘முற்போக்கு’ புல்லரிக்க வைக்கிறது. இதற்கும் பார்பணியம் சாதியம் குறித்து வைத்திருகும் அளவுகோலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

  மேலும் இரயாகரன் அவர்களை துரோகி என்று தூற்றும் பதிவு ஒன்றின் சுட்டியை இங்கே பதிவிட்டிருந்தீர்கள். விடுதலைப்புலிகளின் கொட்டடி முகாமிலிருந்து உயிரைப் பனையம் வைத்து தப்பிவந்தவர்தான் இரயாகரன். பிரபாகரனை வெறும் போஸ்டரில் பார்த்து இருப்பவிசிலடிக்கும் நபர்களுக்கு, தோழர் இரயாகரனின் ஈழ அரசியல் மீதான விமர்சனங்கள் புரிய வாய்ப்பில்லை.

  நீங்கள் இங்கே அறிமுகம் செதிருக்கின்ற சுட்டிக்குச் சொந்தக்காரர் வெறும் விசிலடிச்சான் குஞ்சுதான் என்பது அவருடைய பதிவிலேயே நன்றாகத் தெரிகிறது. முடிந்தால் அவரிடத்தில் தோழர் இரயாகரனின் கருத்துக்களுக்கு அரசியல் ரீதியிலான மறுப்பை, பதில்களை எழுதி வெளியிடச் சொல்லுங்கள். அப்போது தெரியும் யார் துரோகி என்று.

  புலியாதரவு ஒன்றுதான் உச்சபட்ச ’புரட்சி’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் காரியக் குருடர்களின் மதிப்பீடு இப்படியில்லாமல் வேறு எப்படியிருக்க முடியும்?

 42. மேலும் தோழர்களுக்கு!

  நந்திகிராமத்தில் அம்பலமாகிய சிபிஎம் காலிகளின் பொறுக்கித்தனம் சிறிது சிறிதாக விழுப்புரம் காரப்பட்டுவரை நீண்டு, இன்று பல்லாவரம், வடபழனி என்று தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ”ஆயுதமேந்திய புரட்சிப்பாதை அபாயகரமானது” என்று தமது அணிகளுக்கு போதிக்கும் அந்த கிரிமினல் கூட்டம் புரட்சியாளர்களை அரசியலால் எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக ஆயுதங்களையே கையிலெடுத்துக் கொண்டு அம்மனமாக நிற்கிறது.

  அவர்கள் மீது இங்கே பதியப்பட்டிருக்கின்ற அரசியல் ரீதியிலான விமர்சனங்களை, முகம் தெரியாத இணையத்திலேயே இந்தக் கோழைகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதனை நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டவே விடுதலை, காவலன் என்ற பெயர்களில் எழுதும் நபர் பெருமுயற்சி செய்திருக்கிறார்.

  விடுதலை என்கிற அவதூறுவாதியின் எழுத்துக்கள் நம்முடைய விமர்சனங்களுக்கு மேலும் மேலும் வலுச்சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது. மேலும், அவர்களுடைய இயலாமையையும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

  சிபிஎம் கட்சியில் இருக்கும் நேர்மையான நபர்கள் வெட்கித் தலைகுணியவேண்டிய நிர்பந்தத்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இதுபோன்ற செயல்கள் மிகவும் அவசியமானதாக இருக்கின்றன. அந்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிபிஎம் கட்சியின் பிழைப்புவாத கூட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

 43. //எனக்குத் தேவை மேற்கண்ட கேள்விகளுக்கான விளக்கம்.//
  – காவலன்

  தோழர்களே! கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த காவலன், கோவலன், விடுதலை, தறுதலை போன்ற தருமிகளுக்கு, நாம் ஏன் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்க வேண்டும்? கொஞ்சம் இறங்கி, அதிகமில்லை பாஸ், இரண்டே இரண்டு கேள்விகள் கேட்போம்.

  1. ஒன் ஆளு எங்க ஆள அடிச்சிட்டான். இது உண்மையா, பொய்யா?

  2. ஒன் ஆளு தண்ணியப் போட்டுட்டு, பொதுமக்களுக்கு முன்னிலையில கெட்ட வார்த்தை சொல்லி ஏசி, பக்கா பொறுக்கியா நடந்துகிட்டான். இது நடந்துச்சா, நடக்கலியா?

  மேற்கண்ட கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று துவங்கி பதில் கூறி விட்டு, அதற்குப் பிறகு நீங்கள் திரும்ப திரும்ப கேட்கும் கேள்விகளை திரும்பவும் கேட்கலாம்.

  அதை விட்டு விட்டு, இந்த “ஓடறான் பிடி, ஓடறான் பிடி” என விவாதத்தை திசை திருப்பி ஓட்டும், அழுகுணி ஆட்ட விதியை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். எனவே, அறிவு நாணயமும், விவாத நேர்மையும் இருந்தால் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள். அதன் பின்னர் யார் கூரை மீது ஏறி கோழி பிடிப்பவர்கள், யார் போயஸ் தோட்டத்தில் காலைப் பிடிப்பவர்கள் என்பது பற்றியெல்லாம் பேசலாம்.