Tuesday, June 25, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம்...

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

-

vbf11

அன்பார்ந்த நண்பர்களே !

வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

முன்னுரை:

எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சிலர் இணையத்தில் வினவு எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார்கள். பொதுவில் பொழுது போக்கும், அரட்டையும் நிறைந்திருக்கும் இணைய உலகில் சமூக மாற்றத்திற்கான விசயங்களை பேசுவதும், எழுதுவதும், விவாதிப்பதும் சற்று சிரமமான விசயம்தான். இந்த முயற்சியில் வினவுத் தோழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சட்டக்கல்லூரியில் நடந்த ஆதிக்கசாதி வன்முறை குறித்து அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளுக்காக வந்த பல தரப்பட்ட வாசகர் கடிதங்களையும் இங்கே வெளியிடுகிறோம். இந்த இரண்டு கட்டுரைகளில் முதல் கட்டுரை சம்பவம் நடந்த மறுநாள் வெளியானது. இரண்டாவது கட்டுரை அடுத்த ஒரு சில நாட்களுக்குள் எழுதப்பட்டது. இரண்டு கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பலர் தங்களது கருத்துக்களை எழுதியிருந்தனர். இக்கருத்துக்களின் மூலம் சாதியம் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதோடு பரபரப்பான இந்த சம்பவத்தைத் தாண்டி ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதை சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதையும் இந்த மறுமொழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கட்டுரையை விட மறுமொழிகளின் பக்கங்கள் அதிகம் என்றாலும் தமிழில் இது புதிய முயற்சியாகும். இக்கட்டுரைகளையும், மறுமொழிகளையும் வெளியிட அனுமதி கொடுத்த வினவுத் தோழர்களுக்கு நன்றி.

சட்டக் கல்லூரியின் வன்முறை வெடித்த அன்றே பு.மா.இ.மு தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு சென்று மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்குறிய வேலைகளைத் துவக்கினோம். தமிழகத்தின் பிற சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் சென்னையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கி, ஆதிக்க சாதி வெறி சக்திகள் மாணவர்களிடையே தலையெடுக்காமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் எமது தோழர்கள் ஈடுபட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் பொத்தம் பொதுவாக வன்முறையைக் கண்டிப்பாதாக ஆபத்தில்லாத பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எமது அமைப்பு மட்டும் தேவர் சாதிவெறியையும் அதற்கு துணை நின்ற ஆதிக்க சாதிவெறி இயக்கங்களையும் குறிவைத்து பிரச்சாரம் செய்தது. பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களிடம் கூட தலித் மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை கொண்டு சேர்த்தோம்.

தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்பத் காண்பிக்கப்பட்ட காட்சியின் மூலம் கட்டியமைக்கப்பட்ட பொதுக்கருத்து எனும் உணர்ச்சிகரமான நிலையில் ஆதிக்க சாதி  வெறியைக் கண்டிப்பதும், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதும் அவ்வளவு எளிமையானதாக இல்லை.  ஆயினும் இந்த இடரை பு.மா.இ.மு சந்தித்து வெற்றி கண்டது. பல கல்லூரிகளில் இதைப் பற்றிய பிரச்சாரமும், விடுதிகளில் அறைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தும் உண்மையை விளக்கினோம். இரு தரப்பு மாணவர்களும் இந்தக் கூட்டங்களுக்கு வந்தனர். இந்த பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக சென்னையில் அப்போது வெளியிடப்பட்ட பிரசுரத்தையும்      இந்நூலில் வெளியிட்டிருக்கிறோம்.

பொதுவில் தலித் மாணவர்களுக்கெதிரான கருத்தே கோலேச்சிக் கொண்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் அதற்குப் பணிந்து அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியைத் திறக்கக்கூடாது என்று தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக மாணவர்களிடையே பிரச்சாரம் செய்து விடுதியை செப்பனிட்டு விரைவில் திறக்கவேண்டும் என கோரிக்கையை வைத்து போராடினோம். இதன் விளைவாக நீதிமன்றமும் விடுதியைத் திறப்பதற்கு உத்தரவிட்டு தற்போது விடுதியை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு புறம் சட்டக்கல்லூரி பிரச்சினையை வைத்து மாணவர்களுக்கு அரசியல் கூடாது, சங்கங்கள் கூடாது, கல்லூரி தேர்தல்கள் கூடாது என மொத்தமாக ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கோரிக்கைகளும் பலத்த குரலில் பேசப்பட்டன. மாணவர்களிடையே சாதிய ரீதியான பிளவை ஏற்படுத்தி இறுதியில் அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சதியை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தோம்.

காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என தனியார் மயம் கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கும் பாதகமான சூழ்நிøலையில் மாணவர்கள் சாதி ரீதியாக பிரிந்து நிற்பதில் உள்ள இழப்பையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்தோம். வர்க்கமாக அணிதிரண்டு போரடவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாக இருக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் இந்த சாதிவெறியும், ஆதிக்க சாதி மனோபாவமும் களைந்து கொள்ளப்படவேண்டிய கழிவுகள் என்பதை மாணவர் உலகம் கற்றுக் கொள்ளவேண்டும். பார்ப்பனியம் விதித்திருக்கும் சாதியத் தடைகளை அகற்றுவதற்கான போரில் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் இந்த நூல் உங்கள் பார்வைக்கு வருகிறது. ஆதரவு தருக.

தோழமையுடன்
-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

பக்கம் – 88, விலை ரூ.35
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும்.
கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்  vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 1. சிறப்பானதொரு செய்தி இது,
  சமூக பிரச்சினையில் நடுநிலை என்று கூறிக்கொண்டு ஈனத்தனமான நிலை எடுத்த பலருக்கும் சாட்டையடி கொடுத்த இந்த கட்டுரை தான் கலகத்தையும் தொடர் கட்டுரைகள் எழுதத்தூண்டியது என்பது தான் உண்மை,தமிழகமெங்கும் சாதி வெறி பரப்பி வந்த ஊடகங்களின் பொய்த்திரையை கிழித்து மெய் நிகர் உலகில் புரட்சி பணி ஆற்றி வரும் வினவின் அனைத்து கட்டுரைகளும் புத்தக வடிவில் கண்டிப்பாய் வர வேண்டும்.இது ஏதோ புகழ்வதற்காக கூறப்படும் வார்த்தைகள் அல்ல,

  வலை உலகு என்பது மிகச்சிறியது,அதையும் தாண்டி மக்களையும் சென்றடையும் பணி சிறக்கட்டும்

  கலகம்
  கலகம் செய்

 2. வாழ்த்துக்கள்!

  சட்டக்கல்லூரி பிரச்சனை எழுந்த பொழுது, தமிழகமே கொதிப்பாய் இருந்தது.

  உங்கள் கட்டுரைகள் சரியான பார்வையை முன்வைத்து போராடியது.

  புத்தக வடிவில் பார்க்கும் பொழுது, இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  நூலக கண்காட்சியில் பல புத்தகங்கள் சமையல், ஆன்மீகம், சுய முன்னேற்ற நூல்களும் தான் இந்த முறையும் முன்னிலை வகிக்கும் என நினைக்கிறேன்.

  ஆகையால் லட்சகணக்கான புத்தகங்கள் விற்றாலும் அதில் கிடைக்கும் சமூக பலன் பயமாகத் தான் இருக்கிறது.

  இந்த மாதிரி முற்போக்கு நூல்கள் நிறைய மக்களால் வாங்கப்படவேண்டும். அப்பொழுது தான் சமூகம் உண்மையிலேயே ஆரோக்கியப்படும்.

 3. வாழ்த்துக்கள் வினவு

  எந்தப்பக்கமும் சாராமல் நடுவில் நிற்கிறோம் என்று பாடம் காட்டுபவர்களெல்லாம் ஆதிக்கவெறியின் பக்கம் சாயாமல் இருந்ததில்லை. உங்களின் கட்டுரைப்பொருளை ஏற்க தலித்துகளே தயக்கம் காட்டிய நிலையில் சரியானதை சரியான நேரத்தில் உறுதியாய் சொன்ன உங்களின் எழுத்துகள் நூல்வடிவம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அது அவசியமானதும் கூட.

  தோழமையுடன்
  செங்கொடி

 4. // இக்கட்டுரைகளையும், மறுமொழிகளையும் வெளியிட அனுமதி கொடுத்த வினவுத் தோழர்களுக்கு நன்றி.//

  மறுமொழி எழுதியவர்கள் அனைவரிடமிருந்தும் அனுமதி பெறப்பட்டாதா என்று தெரிந்து கொள்ளலாமா

  அப்படி பெறவில்லை என்றால் –> நீங்கள் செய்வது சரியா என்று சிந்தித்து பாருங்கள்:

 5. //மறுமொழி எழுதியவர்கள் அனைவரிடமிருந்தும் அனுமதி பெறப்பட்டாதா என்று தெரிந்து கொள்ளலாமா

  அப்படி பெறவில்லை என்றால் –> நீங்கள் செய்வது சரியா என்று சிந்தித்து பாருங்கள்://

  அய்யா டவுசர், இனையம் என்பது ஒரு கட்டற்ற வெளி. இனையத்தின் இயக்கமே இதன் கட்டற்ற தன்மையில் தான் இருக்கிறது. நீங்கள் இப்போது உதிர்த்திருக்கும் இந்த வசனங்களுக்குக் கூட இனையத்தில் வெளியான மறுநொடி உங்களால் சொந்தம் கொண்டாட முடியாது – ”திரிக்காமல்” ஒருவரின் கருத்தை எவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  ”விஜயகாந்த் இன்னின்ன பிரச்சினைகளில் இன்னின்ன கருத்து வெளியிட்டிருக்கிறார்” என்று ஒருவர் கோட் செய்து எழுதுகிறார் என்று வைத்துக் கொண்டால், விஜயகாந்த் வந்து நான் சொன்ன வார்த்தைகளை நீ ஏன் கோட் செய்தாய் அந்த வார்த்தைகள் எனக்கே சொந்தமானதல்லவா? என்று உரிமை கோர முடியாது. ஒருவர் தமது கருத்து / வார்த்தை தமக்கே சொந்தம் என்று சொல்லிக் கொள்வாரானால் அந்த வார்த்தைகளை / கருத்துக்களை தன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள வேண்டியது தான் – அதை பொதுவில் வைக்கவோ / நாளிதழில் பேட்டி கொடுக்கவோ கூடாது / முடியாது.

  இது இனையத்தில் எழுதும் / கருத்து வெளியிடும் சாதாரணர்களுக்குக் கூட தெரிந்த ஒன்று தான் – ஒரு கம்யூனிஸ்ட் ( நீங்களும் சிபிஎம் கும்பல் தானே !?) என்று பிரஸ்தாபித்துக் கொள்ளும் நீங்கள் இப்படி லூசுத்தனமாக பேசுகிறீர்களே?

 6. //மறுமொழி எழுதியவர்கள் அனைவரிடமிருந்தும் அனுமதி பெறப்பட்டாதா என்று தெரிந்து கொள்ளலாமா

  அப்படி பெறவில்லை என்றால் –> நீங்கள் செய்வது சரியா என்று சிந்தித்து பாருங்கள்:
  //

  பத்திரிக்கைகளில் வாசகர்கள் எழுதும் விவாதங்கள்/ கடிதங்களைத் தொகுத்துப் போடுவதோ, அல்லது பத்திரிக்கை ஒன்றில் வந்த பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகளை தலைப்புவாரியாகப் பிரசுரிப்பதோ புதிய விசயமில்லை. அவ்வாறு செய்யும்போது ஒவ்வொருவரிடமும் அனுமதி கேட்பது மரபில் இல்லை. மேலும் தானாக முன்வந்துதான் வாசகர்கள் கடிதம் எழுதுகிறார்கள். அதை இணையத்தில் ஏற்கெனவே பிரசுரித்து விட்டனர். அதனை நூல்வடிவம் மட்டும்தானே செய்கின்றனர். இதற்குத் தனியாக அனுமதி எதற்கு?

  இப்படியே விவாதித்துக்கொண்டிருந்தால் வினவின் பக்கத்தில் வந்த பின்னூட்டங்களை பிரிண்ட் அவுட் எடுக்க நான் ஒவ்வொருவரிடமும் அனுமதி கேட்க வேண்டுமா? டவுசர்?

 7. லவ்வர் பாய் மற்றும் பாரி

  நான் கேள்வி கேட்டது வினவிடம்

  கேட்ட கேள்வி

  அனுமதி வாங்கப்பட்டுள்ளதா

  அதற்கு பதில் : அனுமதி வாங்கப்பட்டுள்ளது அல்லது இல்லை

  அதை கூறினால் நன்றாக இருக்கும்

  //பத்திரிக்கைகளில் வாசகர்கள் எழுதும் விவாதங்கள்/ கடிதங்களைத் தொகுத்துப் போடுவதோ, அல்லது பத்திரிக்கை ஒன்றில் வந்த பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகளை தலைப்புவாரியாகப் பிரசுரிப்பதோ புதிய விசயமில்லை. //
  புதிய விஷயமா பழைய விஷயமா என்று நான் கேட்கவில்லை

  அது சரியா என்று சிந்தித்து பாருங்கள் என்று தான் நான் கூறினேன்

  சிந்தனைக்கும் ம.க.இ.கவிற்கு தூரம் அதிகம் என்று நான் நினைக்கவில்லை. மன்னிக்கவும்

 8. சொந்தமாக எழுதி வெளியிடாமல் வாசகர்களின் மறுமொழியை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடும் நிலையில் ம.க.இ.க இருக்கிறது என்றும்

  அந்த இயக்கத்தில் சுயபுத்தி அற்றி போய் விட்டது என்று தெளிவாக எடுத்துரைத்த லவ்வர் பாய் மற்றும் பாரி ஆகியோருக்கு நன்றி

 9. //சொந்தமாக எழுதி வெளியிடாமல் வாசகர்களின் மறுமொழியை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடும் நிலையில் ம.க.இ.க இருக்கிறது என்றும்

  அந்த இயக்கத்தில் சுயபுத்தி அற்றி போய் விட்டது என்று தெளிவாக எடுத்துரைத்த லவ்வர் பாய் மற்றும் பாரி ஆகியோருக்கு நன்றி//

  அய்யா டவுசர்.. நீங்கள் ஆத்திரத்தில் என்ன சொல்கிறீர்கள் என்பதை உணராமல் சேம் சைடு கோல் போட்டு விடுகிறீர்கள்..

  //சொந்தமாக எழுதி வெளியிடாமல்//

  – பிறகு என்ன எதிர் வினையையும் கூட நாமே எழுதிக் கொள்ள வேண்டுமா? அதாவது பத்திரிகையும் நானே வாசகர் கடிதமும் நானே.. அப்படித்தான் ”தீக்கதிர்” நடக்கிறதா?? அது தான் சிபிஎம் நடைமுறையா?

  //அனுமதி இல்லாமல் வெளியிடும் நிலையில் //

  “இன்னார் இப்படிச் சொன்னார் “ என்று மாற்றுக் கருத்தை உங்கள் புத்தகங்களில் வெளியிட்டதே இல்லையா?

  ஆமாம் இப்படித்தான் நீங்கள் கடந்த சில பதிவுகளாக ”விவாதிக்கிறீர்களா”?

  வினவு தோழர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.. இப்படிப்பட்ட “அறிவார்ந்தவர்”களோடு தான் சில நாட்களாக பேசி வருகிறீர்களா? ஐய்யோ பாவம் நீங்கள்.. நான் ஏற்கனவே க்ளீன் போல்ட்!!!!

  தல டவுசர்…. நான் இப்படியே உத்தரவு வாங்கிக்கறேன்.. நம்மாள தாங்க முடியாது..

 10. >> இணைய உலகில் சமூக மாற்றத்திற்கான விசயங்களை பேசுவதும், எழுதுவதும், விவாதிப்பதும் சற்று சிரமமான விசயம்தான். இந்த முயற்சியில் வினவுத் தோழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

  புரட்சிகர வாழ்த்துக்கள்!

 11. நல்ல முயற்சி!

  பயனுள்ள வெளியீடுகளுக்காக நன்றி!
  ———————-

  டவுசர் ! மெண்டல் தலையா ! உங்களுக்கு இதேதான் வேலயா
  இததான் சீபீஎம் ல சொல்லி தறாங்களா!

  இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது
  இது அடி வாங்கறதுக்குனே வருது
  ————————————–

  தீக்கதிர் படிச்சா எல்லாரும் டவுசர் மாதிரி மெண்டல் ஆக வேண்டியதுதான்

  சூப்பர் ஐயர் & கோ

 12. ஹாய் லூசு போலி விடுதலை.

  உன்னோட‌ டவுசரை அவுத்து இணையத் தெருக்களில் ஓடவிட்ட பிறகும் இன்னுமா உனக்கு புத்தி வரல??
  என்னால நம்பவே முடியலடா சாமி!!!

 13. வினவு தோழர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்.. இப்படிப்பட்ட “அறிவார்ந்தவர்”களோடு தான் சில நாட்களாக பேசி வருகிறீர்களா?

  என்னங்க பண்ணறது,
  இந்த லூசுங்க எல்லாம் மக்கள் கிட்ட போயி நாங்க தான் கம்யூனிஸ்டுன்னு கத வுடுதுங்க.அதை உடைக்கனும்னா இதுமாதிரி மரை கழண்டவன்கிட்டயும் பேச வேண்டி இருக்குதே.மர கழண்டவன் எல்லாம் சேர்ந்து கட்சி வச்சிருக்காங்க இவனுங்களை புரட்சி பண்ண வச்சுருவோனு சில பேர் நப்பாசை வச்சிருக்காங்க.இந்த லூச கொஞ்சம் பேச விட்டா தானே அவங்களுக்கும் புரியும்(புரட்சிகரம்ன்னு சொல்லுறாங்களே அந்த அணிக்கு), நம்ம தலைமைதான் துரோகின்னு.

  கலகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க