privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவரைகலை கேலிச்சித்திரங்கள்....ஒரு ஆயுதம் !

வரைகலை கேலிச்சித்திரங்கள்….ஒரு ஆயுதம் !

-

ஊடகங்களில் கேலிச்சித்திரங்களுக்கு என்று ஒரு தனி இடமுண்டு. ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு ஓவியரின் நேர்த்த்தியான கோடுகள் ஓரிரு நொடிகளில் உணர்த்தி விடும். ஆனால் அதைச் சாதிப்பதற்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், ஓர் அரசியல்வாதிதயின் சாராம்சமான பண்பையும் புரிந்து கொள்ளும் அரசியல் கூர்மதி ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு வேண்டும்.

அரசியல்வாதியிடம் அந்தப் பண்பு வெளிப்படும் தருணத்தை சிக்கெனப் பற்றி தனது கோடுகள் மூலம் வாசகன் மனதில் அதை வரைந்துவிடும் ஆற்றல் கொண்ட பிசிறற்ற தூரிகை வேண்டும்.

கதைகள், உவமானங்கள், உருவகங்கள், தொன்மங்கள், பழமொழிகள், மக்கள் வழக்குகள் ஆகியவற்றைச் செறிவாகக் கையாளும் சொல் திறனும், கலைத்திறனும் இணைந்திருக்க வேண்டும்.

எல்லாம் இருந்தாலும் பத்திரிக்கை முதலாளி நாசுக்காகத் தரும் நிர்ப்பந்தங்களையும், கேலிக்குள்ளான ஓட்டுப் பொறுக்கிகள் விடுக்கும் மிரட்டலையும், அன்பளிப்புகளையும் நிராகரித்து நிற்கின்ற நேர்மையும் துணிவும் வேண்டும். ஆனால் இன்றைய ஊடகங்களின் கேலிச்சித்திரக்காரரகள் எவரும் இந்த துணிச்சலைத் தம் தூரிகைகளில் வரைவதில்லை.

அரசியல்வாதிகள், முதலாளிகளின் தோற்றத்தையே கேலி செய்வதையே ஆளுமையைக் கேலி செய்வதாகக் கருதிக் கொள்ளும் பாமரத்தனம்; ஆரம்பப் பள்ளிகளில் பாடநூலின் விளக்கப் படத்தையொத்த விமரிசனமற்ற ஆளும் வர்க்க்க் கருத்துப் படங்கள்; சூத்திர அரசியல்வாதிகள் மீதான பார்ப்பன மேட்டுக்குடியின் வெறுப்பையும், அந்த வர்க்கத்தின் அரசியலற்ற அகம்பாவத்தையும் வெளியிடும் மதனின் கேலிச் சித்திரங்கள்; பத்திரிகை முதலாளி வழங்கும் சம்பளம் எனும் கத்தரிக்கோலை மூளையில் வைத்துத் தைத்துக் கொண்ட தூரிகைக் கையாட்கள்….

இதுதான் இன்றைய முதலாளித்துவப் பத்திரிகையுலகின் பின்புலம். அரசியல் உலகில் இருக்கும் சந்தர்ப்பவாதமும், பிழைப்பு வாதமும், கோழைத்தனமும்தான் இன்றைய பத்திரிகை உலகின் கார்ட்டூன்களை வடிவமைக்கின்றன.

இதற்கு மாற்றாய் வினவு, வரையுருவக்கலையின் மூலம் உயிருள்ள கேலிச்சித்திரங்களை வாசகரின் இதயத்தில் தைப்பதற்கு முயல்கிறது. எமது தோழர் ஒருவரின் முயற்சியில் வாரத்திற்கு இரண்டு சித்திரங்களாவது உங்கள் பார்வைக்கு கொண்டு வருவோம். கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தருவதின் மூலம் நீங்களும் இந்த முயற்சியில் பங்கேற்கலாம்.

வினவில் வெளியாகும் கருத்துப்படங்களைப் பயன்படுத்த விரும்புபவர்கள்  https://www.vinavu.com/cartoon/ அல்லது அந்த குறிப்பிட்ட இடுகையின் யூ.ஆர்.எல் முகவரிக்கு இணைப்பைக் கொடுக்கவும். இந்தப் படங்களை அச்சிடுவதற்கு முன் கண்டிப்பாக அனுமதி பெறவேண்டும்.