முகப்புஉலகம்ஈழம்ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் !

ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் – கருத்துப்படம் !

-

fasicst1

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து  கொண்டிருக்கின்றன….!

மேலும் கருத்துப்படங்களுக்கு: http://vinavu.wordpress.com/cartoon/

 1. புதிய ஈழவன் சொல்வது போல ஒழிப்பது என்பது சரியல்ல! அது சாத்தியமுமில்லை. அது தனிநபர் உணர்ச்சிவசப்பட்ட சிந்தனை.

  மக்களிடம் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தலாம். இது சாத்தியமானது. இது அமைப்புச் சார்ந்து செயல்பட வேண்டியது.

 2. நிஜம்….
  அதிகாரப்பசிக்கு, இரத்தவெறிபிடித்து அலையும் இந்த சிங்கள ஓநாய்கள், பாப்பனிய நரிகள், மிக விரைவில் மக்கள் முன் தோல் உரிக்கப்படும்.

 3. பிணம் தின்னிகளுக்கும் கயவர்களுக்கும் காலம் விரைவில் பதில் சொல்ல வேண்டும். வரும் தேர்தல்களில் ஜெயலலிதா தமிழ்நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும். சோ, ராம், சுப்பிரமணியன் போன்ற நாய்கள் எல்லாம் முறையான மானத் தமிழனுக்குப் பிறக்காதவர்கள் போலும்…………. சிங்கள இனத் தோற்றமே மிருகத்தை அடியொற்றியது தானே. பிணம் தின்னுவதில் தப்பில்லை.

 4. பிணம்தின்னும் மனிதக்கழுகுகள் இன்று நேற்று தோன்றியவை அல்ல பலநூற்றாண்டுகளுக்கு முன்பே தோற்றம்பெற்று விட்டது இவற்றிற்கு தங்களையே உணவாகக் கொடுத்து பாதுகாத்து வருவது தமிழர;கள்தான். முன்பு இவைகள் தமிழரை உயிரோடு மறைவில் நின்று தின்றுவந்தது, தற்போது கொன்றுவிட்டு கூடியிருந்து தின்னுகின்றது, இது நாகரீகத்தின் முன்னேற்றமல்லவா!

 5. தமிழையும், தமிழினத்தையும் அழித்துதான் நம் இந்தியாவின் இறையாண்மையை காட்ட வேண்டும் என்றால் அப்படி பட்ட இறையாண்மை நமக்கு தேவையில்லை
  ஆதலில்,இந்தியாவின் குடியரசு தின விழா அன்று தமிழர்களுடைய வீட்டில் கருப்பு கொடி ஏற்றுவோம்

 6. இது போன்ற சிறந்த பிரச்சார படங்களை மேலும் வரையுங்கள் சில பிரச்சனைகளை சொல்லில் புரியவைக்கும் உணர்ச்சியைவிட காட்சியாய் கண்டால் அதன் புரிதல் அதிகமாகிறது…

 7. மனிதத்தன்மை அற்ற கழுகுகள் நன்கே இனங்காணப்பட்டுள்ளன. இந்தப்படம் தமிழக மக்களைச் சென்றடையவேண்டும்.

 8. என் இனிய தமிழக மக்களே ….தயவுசெய்து இப்படத்தினை நீங்கள் பார்த்து புரிந்து கொண்டு உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் ….ஒட்டுமொத்த தமிழனிடமே இந்த செய்தி போயி சேரவேண்டும். நன்றிகள்

 9. விக்கிரமாதித்தன் ,புதிய ஈழவன் சொன்னது புலி சிந்தனை. தங்களுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் ஒழிப்பது தான் அவர்களுக்கு தெரிந்தது.

 10. தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும்
  இந்திய அரசின் நிலை மாறவே மாறாது

 11. திவிரவாதத்தினால் ,தீர்வு கிடைக்காது.என்று சொல்கிறார்கள்.சரி.அது ஆயுதம் ஏந்தி போராடும் ஒடுக்க பட்ட மக்களுக்கு மட்டும் தானா?அதை ராணுவம் மூலம் அடக்க நினைக்கும் அரசாங்கம்,திவிரவாதி இல்லையா? அகிம்சையோ,ஆய்த போராட்டமோ இரண்டும் தீர்வு தராது.அவை நம் எதிர்ப்பை காட்டும் வழி அவ்வள்வு தான்.பலம் இல்லாதவன் அகிம்சை வழியில் போராடுகிறான்.பலம் உள்ளவன்,மிதவாதம் தோற்று போன நிலையில் ஆயுதம் ஏந்தி போராடுகிறான். எந்த போராடமானலும்,தீர்வு போராடுபவர்களிடம் இல்லை.அது யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களிடம் தான் உள்ளது. ஒரு நாயை கல்லால் அடித்தால்.அது மீண்டும் நம்மை பார்த்து குறைக்கிற்து.அவ்வாறு குறைப்பதால்,அந்த நாய்க்கு தீர்வு கிடைத்திட போவதில்லை.அதற்காக்,குறைக்காமல் இரு என்று சொல்லமுடியுமா?என் மீது ஏன் கல்லை எறிகிறாய் என்று தன் எதிர்ப்பை காட்ட அது குறைக்கிற்து.குறைப்பது அதன் உரிமை.அதுபோல் தான் ,ஒடுக்கபட்ட மனிதன் தன் எதிர்ப்பை,மிதவாதம் மூலமோ,திவிரவாதமூலமோ தெரிவிக்கிறான்.மிருகம் கூட ,தன்னை தாக்க வரும் மிருகதிடம் இருந்து தன்னை காத்துக்கொல்ல போராடும் போது,ஆறு அறிவு படைத்த மனிதன் தன் உரிமக்காக் போராடுவது எப்படி தவறாகும். விடுதலை வேண்டி போராடும் புலிகலை நான் மதிக்கிறேன்.அவர்கள் தமிழர்கள் என்ப்தற்காக் அல்ல.அவர்கள் எந்த மொழி பேசினாலும்,உரிமைக்காக் போராடும் ஒரு இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.

 12. செந்தமிழ் நாடெனும் போதினிலே….இன்ப தேன்வந்து பாயுது காதினிலே……. …………………….. சிங்களம் புட்பகம் சாவக…….மாதிய‌ தீவு பலவினுஞ் சென்றேறி…….அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்‍‍‍‍‍……நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு… …..
  மகாகவி பாரதியார்.

  நம் தமிழ்ர்கள் அந்த காலத்தில் இருந்தே இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழ தமிழர்களுக்கும் இலங்கையில் வாழ உரிமை உண்டு, பிரிட்டிஷ் அட்சியில் ஒரே நாடாக ஆனது.அவன் விடுதலை கொடுக்கும் போது சிங்களவர்களிடம் கொடுத்துவிட்டான், சிங்களவர்கள்,தாங்கள் பெரும்பாண்மையாக இருக்கிறோம் என்று ஈழ தமிழ்னை ஒடுக்க ஆரம்பித்தான்.அன்று தோன்றியது இப்பிரச்சனை.

 13. கருணாநிதியின் பதவி ஆசை,அதனால் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்ய சொல்லி மத்திய அரசை வலியுறுத்தாமல் காலதாமதம் செய்தது தமிழ் சமுகம் மறக்காது.
  தன் ஆட்சியை தக்க வைத்து கொள்ள,உடனடி நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்கிறார்.
  முதுகு வலி என்று சொல்லி மருத்துவ மனையில் படுத்து கொண்டது,ஒரு ஏமாற்று வேலை.
  பிப்ரவரி 15 செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்பது ஏமாற்று வேலை.அதற்குள்,போர் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
  காங்கிரஸின் துரோகத்தையும்,தி.மு.க வின் கையாளாகதனத்தையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

  ஒரு விடுதலை போராட்ட இய்க்கத்தை மறுபடியும் மறுபடியும் பயங்கரவாத இயக்கம் போல் சித்தரித்து,அதில் ஒரள்வு வெற்றி பெற்று விட்டார்கள்.

  ஆனால்,60 ஆண்டுகள் போராடிய ஈழ தமிழர்களின் போராட்டத்தை அழித்ததை வரலாறு மன்னிக்காது.

  ………………………கலியின் வலியை

  வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்

  நாசம் கூறும் நாட்டு வைத்தியர்

  இவராம் இங்கு இல் இருதலை கொள்ளியின்

  இடையே நம்மவர் எப்படி உய்வர்?

  விதியே!விதியே!தமிழ்சாதியை

  என்செயக் கருதி இருக்கின்றாயடா?

  ‍‍‍‍……….மகாகவி பாரதியாரின் கேள்வி நமக்கும் எழுகிற‌து

 14. விடுதலை புலிகளை அழித்துவிட்டு ,தமிழர்களுக்கு சம உரிமை தருவோம் என்று சொல்கிற்து.
  அப்படி யாரும் போராடாமல்,நாங்களே,தமிழரை சமமாக நடத்துவோம் என்று இப்போது சொல்கிறீர்கள்.
  அதை 60 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருக்கலாமே.

  எத்தனை போராட்டம்,எத்தனை பேர் உயிர் இழப்பு,எத்தனை பேர் அகதியாக சென்றது,சொந்தங்களை பிரிந்தது இவை எல்லாவற்றையும் தவிர்த்திருக்கலாமே.அதுமட்டும் அல்ல விடுதலை புலிகள் என்ற ஒரு அமைப்பே தோன்றியிருக்காதே.

  சிங்களே அரசே இனியும் தமிழர்களை வஞ்சிக்காதே.உன் பொய் பிரச்சாரத்தை நம்பி உலகம் மட்டும் அல்ல இந்திய தமிழனும் பல்ர் விடுதலை புலிகளை எதிரியாக பார்கிறார்கள்.

  பரவாயில்லை.புலிகள் ஈழ தமிழர்களுக்காகவும்,அவர்களின் மண்ணுக்காகவும் போராடினார்கள்.இனியாவது,எம் ஈழ தமிழர்களுக்கு சம உரிமை கொடு.

  தமிழ் நாட்டு தமிழன் ,இப்போது சிங்கள அரசே உன்னை தான் நம்புகிறான்.

  அதனால்,தான் போராடுபவர்கள் தமிழர்கள் என்று தெரிந்தும் ,சிங்கள படையால் அவன் அழிவதை பார்த்து தினமுன் மகிழ்ச்சி கொள்கிறான்.மகிழ்ச்சி கொள்ளட்டும்..அது தான் தமிழர்கள்.

  வேறு எந்த இனமும்,தன் இனமே தவறு செய்தாலும் ,தன் இனத்தை விட்டு கொடுக்கமாட்டார்கள்.இது தான் உல்கில் பார்க்கலாம்.

  ஆனால்,தமிழர்கள் அப்ப்டி அல்ல,தன் உரிமைக்காக போராடும் புலிகளை,தமிழ்னே பயங்கரவாதி என்று பட்டம் கட்டி அவன் அழிவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

 15. துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள

 16. ராஜிவகாநதி கொலையை பற்றி மட்டும் பேசுபவர்கள்,ஏன் தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை பற்றி பேசுவதில்லை.
  தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி கொல்கிறது.ஆகவே,இராணுவத்திற்கு தலைமை ஏற்கும் அந்நாட்டு ,குடியரசு தலைவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏன் கோரிக்கை வைக்கவில்லை.

  ராஜிவ்காநதி கொலையுண்ட போது அவர் பிரதமர் அல்ல,அவரும் ஒரு இந்திய பிரசை.அதுபோல் தான் தமிழக மீனவர்களும் இந்திய பிரசை.அந்த மீனவர்களுக்கும் குடும்பம் உண்டு,குழந்தை,மனைவி உண்டு.அவர்கள் துன்பம் இந்தியாவிற்கு புரியாதா?

  ராஜிவ்காந்தி கொலைக்காக ,இந்தியா ,தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வது எந்த விதத்தில் நியாயம்.

  ராஜிவ்காந்தி கொலையுண்டது வருத்தம் தான் .ஆனால்,அதற்காக ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை ,பயங்கிரவாத இயக்கம் போல் சித்தரிப்பது தவறு.

  இந்தியா,தமிழர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காமல் இருப்பதில் இருந்தே தெரிகிற்து ,தமிழர்களை இந்தியர்களின் ஒரு பகுதியாக இந்தியா கருதவில்லை என்பது.

  எப்படி இலங்கை,சிங்களவர்களுக்கு தான் இலங்கை சொந்தம் என்று எண்ணுகிறதோ,அதுபோல்,இந்தியா இந்தி பேசுபவர்களுக்கு மட்டும் என்று எண்ணுகிற்து.

  இலங்கையில்,தமிழர்களுக்கு பதில் இந்தி பேசுபவர்கள் வாழ்ந்திருந்தால்,இந்தியா அவர்களுக்கு ஆதரவாக செயல்படும்.
  ஆனால்,அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் அல்லவா?

  நம் இந்திய சுதந்திர போராட்டத்தில் யாரும் செய்யாத,பிரிட்டிஷ் க்கு எதிர்த்து கப்பலோட்டிய வ.உ.சி பெயரை ஒரு கப்பலுக்கு கூட வைத்து கவுரவபடுத்தாத இந்திய அரசு.பள்ளி பாடங்களில் தமிழ சுதந்திர போரட்ட வீரர்களை இருட்டடிப்பு செய்யும் இந்திய அரசு எப்படி தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும்

  ராஜிவ்காந்தி கூட‌ இலங்கைக்கு ,இந்தியா இராணுவத்தை அனுப்பினார்.ஆனால்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு எதிராக,புலிகளுக்கு எதிராக அல்லவா போர் புரிந்தார்கள்.அங்குள்ள ஈழ பெண்களின் கற்பை அல்லவா சூறையாடினார்கள்.

  இந்தியவும்,சிங்கள அரசும் எத்தனை பொய் பிரச்சாரம் பண்ணினாலும்,உலக் தமிழர்கள் புலிகளையும்,அதன் தலைவர் பிரபாகரனையும் போற்றுவார்கள்.உலகம் உள்ள வரை அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.இப்போது அவர்கள் இலட்சியத்தை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ச்சி அடைந்தாலும்,வருங்காலத்தில் அவர்கள் கன்வு நிறைவேறும்.
  வாழ்க தமிழர் தலைவர் பிரபாகரன்,வாழ்க புலிகள்,வாழ்க தமிழ் ஈழம்.

 17. காங்கிரஸ்காரன்,சோனியா காந்தி இனி தமிழகத்தில் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்ப்போம்.இனி காங்கிரஸ் தமிழக்த்தில் அடியோடு அழிப்போம்.இங்கிருக்கும் காங்கிரஸ்காரன் தன் சொத்தையும்,அதிகாரத்தையும் காத்து கொள்ளவே காங்கிற்ஸில் இருக்கிறான்.இத்தகைய தமிழ விரோதிகளை தமிழக மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும்.

 18. ஊரோடு ஒத்துவாழ் என்றொரு பழமொழி உண்டு.
  தமிழன் உலகத்தோடு கூட ஒத்துவாழவில்லையோ? என எண்ணத்தோன்றுகிறது.
  எவன் ஒருவன் மனிதகுலத்துக்கு எதிரான கேடுகெட்ட செயல்களை செய்கிறானோ அவனையே தலைவனாக இவ்வுலகம் கொண்டாடுவது இன்று கண்கூடு. அதுதான் ஜனநாயகம்………..
  புலிகள் புறநாநூற்று வழியில் நின்று போராடியது மாபெரும் தவறு!!!!!
  உலக நெறியைப் பின்பற்றி இனிவரும்காலம் தமிழன் போராடினால் நிச்சயம் வெற்றியுண்டு.
  குடும்ப வளர;ச்சிக்கு மறைந்திருந்து பிணம் தேடும் கழுகு ஒன்றை விட்டுவிட்டீர;களே…?????

 19. ராஜிவ்காந்தியை கொன்றது யார்,அதற்கு மூலக்காரணம் யார் என்பதில் இப்போது எனக்கு கவனம் இல்லை.என் என்னை போன்றோர் எண்ணமெல்லாம்,ஈழ தமிழனுக்கு தன்னாட்சி உரிமை, கிடைக்க வேண்டும். பல‌ இலட்சம் தமிழர்களை பற்றி நாங்கள் கவலை படுகிறோம்.அதற்கு போராடும் விடுதலை புலிகளை அதரிக்கிறோம்.

  ராஜிவ்காந்தியின் கொலையை காரணம் காட்டி புலிகளை,அதை வழி நடத்தி செல்லும் பிராபாகரனை அழிக்க நினைப்பது 60 ஆண்டுகள் ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை அழிக்க நினைப்பதாக மாறிவிடும்.

  அது தான் எங்கள் கவலை.ராஜிவ்காந்தியா? பல் இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போரா? என்று பார்க்கும் போது எனக்கு பல‌ இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போர் தான் பெரிதாக தெரிகிற்து/

  மேலும்,என்னை போன்றோர் திவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல.ஆயுத போராட்டம்,ஈழ தமிழர்கள் அந்நாட்டின் சூழலுக்கு எடுத்த முடிவு.ஆதரவு தருவது நம்மை பொன்றோர் வேலை.அவர்கள் அற வழியில் போராடினாலும் எங்கள் ஆதரவு உண்டு.ஆனால்,அவர்களின் அற வழி போராட்டத்தை தான் நசுக்கி விட்டதே

  சிங்கள அரசு, சன் டிவியில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி பேட்டி போட்டார்கள்.புலிகளை அழிப்பதாலோ,பிராபாகரனை கொல்வதாலோ,பிரச்சனை தீர்ந்து விடாது.ஈழ தமிழர்களின் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறினால் மட்டுமே பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார்.

  காஷ்மீரில்,நாம் வருடம் முழுவதும் திவிரவாதிகளை கடந்த 50 வருடங்களாக ,கொன்றுவருகிறோம்.ஆனாலும் திவிரவாதம் குறையவில்லையே.ஒரு திவிரவாதி இறந்தால்,மற்றொரு மனிதன் திவிராதியாகிறான்.அவனும் பொது மக்களில் ஒருவனாக இருந்து தான் மாறுகிறான்.திவிரவாதி தனியாக வானத்தில் இருந்து வரவில்லை. போராட்டத்தின் காரணம் கலைய்ப்படும் வரை,திவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் வரும்

 20. u have done a great insult to Dinamalar Ramesh?
  He is Standing in the Q as No:1 to see the fall of Tamil community!
  This MAMA Ramesh will sell Dinamalar in Tamilnadu,but write abuses of Tamil community:So many hedless “MUNDAMS” will read Dinamalar

 21. இந்தியத் தமிழ் உறவுகளே ஈழத்தமிழனின் ஓர; அவசர வேண்டுகோள். தொழில் நுட்பத்துறையிலும், பொருளாதாரத்துறையிலும் அதீத வளர;ச்சிகண்டு முன்னணியில் இருப்பது தமிழ்நாடுதான். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல் கட்டுப்படுத்த, அல்லது அழித்துவிட வடக்கே அதிகாரத்துடன் இருப்பவர;கள் தருணம்பார;த்து காத்திருக்கிண்றனர;. தமிழரின் வளர;சியை உங்கள் அருகேஇருக்கும் மாநிலங்கள்கூட விரும்பவில்லையென்பது, சமீபகாலமாக அவர;களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நீங்கள் உற்றுநோக்கினால் புலப்படும். ஆகவே வன்முறையை நீங்கள் எள்ளளவும் எண்ணவேண்டாம். அரசாங்க சொத்தென்று நீங்கள் அழிக்கமுற்படுவது தமிழ்நாட்டுடைய உங்களுடைய சொத்துகள் என்பதை மறக்கவேண்டாம். இன்றைய தமிழ்நாட்டு அதிகாரிகள் பலரும் தமிழுணர;வு கொண்டவர;களல்ல. இந்திய இராணுவத்தை தமிழ்நாட்டு பாதுகாப்புக்கு கொண்டுவரும் நிலைக்கு நீங்கள் வழிகோலி அழிந்துவிடவேண்டாம். கலைஞர; இன்று நடந்துகொள்ளும் செயற்பாட்டை பார;க்கும்போது மிகப்பெரும் இழப்பொன்றை தடுக்கும் முயற்சியோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. சாதகமான நிலமை வரும்வரை பொறுமை அவசியம்.

 22. its a pity tat an innocent live has been burned for eelam makkal. my deep condolences for it. i dono y u ppl do not speakup for malaysian tamils too?? because they are hindus??

 23. I condemn Vinavu for excluding Sonia, Italian born Indian Citizen and current Congress Party leader, in this picture.

  I always wonder what is Congress Party and its leader’s Foreign Policy about Ezham Tamils in this current humanitarian crisis. Is it Personal Revenge or Geopolitical Strategy??????????????

  In my opinion, she might think that “ALL IS FAIR IN LOVE AND WAR (Personal Revenge?)”.

  P.S. Please forgive me for writing in English. I am not a computer savvy. I really do not know how to get Tamil Font.

 24. தூரப் பறந்துவிட்ட துணிவு பறவைகளே!

  நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்
  கண்களிளே
  பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர்
  எங்களுடன்
  பேசிக்களித்தீர் போய்விட்டீர்
  தாயகத்தில்
  வீசிவரும் காற்றில்
  விரிந்து சிறகெடுத்து
  தூரப் பறந்துவிட்ட துணிவு பறவைகளே!
  ஈரவிழிங்கு எமக்கின்னும் காயவில்லை
  ஊரறியோம்
  உங்கள் உறவறியோம்
  தந்தையிட்ட பேரறியோம்
  ஆனாலும் புகழளிந்து நிற்கின்றோம்
  நெஞ்சினிலே உங்கள் நிறைவுக்கு மாலையிட்டு
  நஞ்சணிந்தோம்
  நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்
  தம்பியென்றும்
  அண்ணன் தங்கையென்றும்
  எங்களுக்கோர்
  வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே
  ஒன்றாகி
  வந்தபகை வீழ்த்த
  வரிசையிட்டு போனோமே
  செங்குருதி பாய்ந்து திசை சிவந்து
  எதிரிகளின்
  தங்ககங்கள் யாவும் தணலிற் கருக்கியபின்
  வென்ற களிப்பில் வீடு வந்தோம்
  அன்றிருந்து
  இன்றுவரை உம்மை எவ்விடத்தும் காணலையே
  கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய்
  சொல்லுகிறார்
  உங்கள் தேகம் தூங்காதே
  மொட்டவிழம் பூவினிலே முகம் தெரியும்
  கல்லறைக்குக்
  கிட்டவர் உங்கள் கண் தெரியும்
  வீசுகின்ற
  எம்மை உயிர்ப்பிக்கும்
  இனிக்
  கூற்றெனவே வறும்பகையைக்
  குடிப்போம்
  வென்றிடுவோம்………………….

  ஈழத்தமிழ்ர்களுக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை-யின் கவிதை தொகுப்பிலிருந்து……..

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 25. அன்புள்ள ஈழ சொந்தங்களே,

  உங்கள் போராட்டத்திற்க்கு தமிழக மக்களின் சார்பில் எங்கள் அழுத்தமான ஆதரவை தெரிவித்துகொள்கிறோம்.

  நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
  நின்றது போதும் தமிழா – உந்தன்
  கலைகள் அழிந்து கவலை மிகுந்து
  கண்டது போதும் தமிழா – வரிப்
  புலிகள் எழுந்து புயலை கடந்து
  போர்களம் ஆடுது தமிழா – இன்னும்
  உயிரை நினைத்து உடலை சுமந்து
  ஓடவா போகிறாய் தமிழா

  சாவா இலையொரு வாழ்வா எனப்பெரும்
  சமரே எழுந்தது தமிழா – உடன்
  வாவா புலியுடன் சேர்சேர் எனும்குரல்
  வரையைப் பிளக்குது தமிழா – இனி
  ஆகா அழைப்பிது போபோ எனவொரு
  மகனை அனுப்பிடு தமிழா – நீ
  பூவா இலைப் பெரும் புயலாய் எழுந்துமே
  புறப்பட்டு வந்திடு தமிழா…

  கவிஞர் புதுவை இரத்தினதுரை-யின் உணர்ச்சிமிகு கவிதை தொகுப்பிலிருந்து………….

  இப்போதுள்ள நிலையில் மக்களும் உங்களோடு ஆயுதங்களை எடுத்து போராடியே ஆகவேண்டும். மக்கள் ஆயுதங்களை எடுத்து போராட ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய ராணுவமும் எதிர்நிற்க முடியாதுங்கிறதுதான் வரலாறு. சோவியத் யூனியனாகட்டும், செஞ்சீனமாகட்டும், வியட்னாம் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்த அடியாகட்டும். மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வரலாறு.

  கசக்கி பிழிய தமிழன் ஒன்றும் காகிதங்கள் அல்ல! ஆயுதங்கள்!

  முத்தமிழ் வேந்தன்
  நாட்றம்பள்ளி
  வேலூர் மாவட்டம்
  தமிழ் நாடு

 26. தமிழனத்தை அழிக்க………………

  குழந்தைகளை கொன்றுவிட்டால் எதிர்காலத்தில் இளைஞர்கள் இல்லாமல் போராட்டம் வலு இழந்துவிடும்.

  இளஞிகள், இளைஞர்களை கொன்றுவிட்டால் போராட்டம் வலு இழந்துவிடும்.

  உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கிடைக்காமல் செய்வதன் மூலம் பட்டினி மரணத்தை தொழ செய்து படி படியாக தமிழனத்தை வேரோடு அழிப்பது

  மீதம் இருப்பவர்களை போர் முனையில் குண்டு வீசி கொன்று குவிப்பது

  தமிழனத்தை வேரோடு அழிப்பது என்பதே வெறிபிடித்த சிங்கள ஓனாய்களின் கொடுர திட்டம்

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 27. ஏ தமிழக அரசியல்வாதிகளே,

  நீங்கள் தமிழர்களுக்காக உழைத்தது போதும்.

  எதிர்கட்சிகளே உங்கள் தெருசண்டையை வீட்டோடு வைத்துகொள்ளுங்கள். உங்கள் அரசியல் சுயலாபத்துக்காக பத்து கோடி உலக தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.

  மத்திய அமைச்சர்களே இன்னும் மத்திய அரசில் உங்களுக்கு என்ன வேலை. டெல்லி நாய்கள் போட்ட “அமைச்சர் பதவி” என்ற “எலும்பு துண்டை” தின்றுகொண்டு இந்தியா ஆயுதங்களையும், ஆலோசனைகளையும், ராணுவத்தையும், பீரங்கிகள் மற்றும் விமானங்களையும் கொடுத்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்…..எலும்பு துண்டின் ருசி உங்களுடைய குரலை தின்றுவிட்டதா?…யாரை ஏமாற்றுகிறாய்….

  ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்…

  அங்கே கொல்லப்படும் குழந்தைகள் உங்களுடையதாக இருந்தால்…

  அங்கே கடத்தி, சித்ரவதைப்படுத்தப்பட்டு கொடுரமாக கொல்லப்பட்டும், உயிரோடு எரிக்கப்படும் இளைஞர்கள் உங்களுடையதாக மகனாக இருந்தால்…

  அங்கே இளம் பெண்களை கடத்தி, கற்பழித்து கொடுரமாக கொல்லப்பட்டும், உயிரோடு எரிக்கப்படும் பெண்கள் உங்களுடையதாக உடன்பிறப்பாக, பெண்டு பிள்ளைகளாக இருந்தால்…

  உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லாமல் உயிரோடு அவதிப்படும் மக்கள் உங்களுடையதாக உடன்பிறப்பாக, பெண்டு பிள்ளைகளாக இருந்தால்…

  இனி நீங்கள் மத்திய அமைச்சவரையில் இருந்து வெளியே வந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. காலம் கடந்துவிட்டது.

  எப்படியோ நாடாளுமன்ற தேர்தல்வரை காலம் தாழ்த்திகொண்டு வந்துவிட்டீர்கள்.

  இனி ஒருத்தர் மேல் ஒருத்தர் சொல்லாலும் செயலாலும் மாறி மாறி தூற்றிகொள்வீர். இலங்கை பிரச்சனை திசை திருப்பப்பட்டு அனாதையாக நட்டாற்றில் கிடக்கும்.

  அரசியல்வாதிகளே உயிர்களைவிட உயர்ந்தனவா நாற்காலிகள்?

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 28. வீர தமிழன் முத்துகுமரனே!

  ஈழ தமிழர்களின்
  நிலை கண்டு
  மனம் நொந்தாய்!
  தீயில் வெந்தாய்!
  எழுச்சி தந்தாய்!

  உன்
  வீர தியாக மரணம்
  தமிழர்களின் உள்ளத்தில்
  தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது!

  உன்
  உயர்ந்த நோக்கம்
  நிறைவேறவும்!

  உன்
  ஆத்மா சாந்தியடையவும்
  வேண்டுகிறேன்!

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 29. உலகத் தமிழர்களே!

  ஒன்றுபடுங்கள்!

  போராடுங்கள்!

  சிங்கள
  இனவெறியை
  வேரோடு
  வெட்டி சாய்ப்போம்!

  ஈழத்தில்
  சுதந்திர விதையை
  நட்டு வைப்போம்!

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 30. இப்போதுள்ள நிலையில் மக்களும் உங்களோடு ஆயுதங்களை எடுத்து போராடியே ஆகவேண்டும். மக்கள் ஆயுதங்களை எடுத்து போராட ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய ராணுவமும் எதிர்நிற்க முடியாதுங்கிறதுதான் வரலாறு. சோவியத் யூனியனாகட்டும், செஞ்சீனமாகட்டும், வியட்னாம் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்த அடியாகட்டும். மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வரலாறு.

  கசக்கி பிழிய தமிழன் ஒன்றும் காகிதங்கள் அல்ல! ஆயுதங்கள்!

  முத்தமிழ் வேந்தன்
  நாட்றம்பள்ளி
  வேலூர் மாவட்டம்
  தமிழ் நாடு

 31. எல்லா வழிகளிலும் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, மூச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்ட ஈழ மக்கள் வேறு வழியின்றிப் போராடுகிறார்கள்.

  அதே போல்தான் இஸ்ரேல் நாட்டின் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஏற்றிருப்பது “ஹமாஸ்” என்ற விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்கிறது.
  ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பறைசற்றுகிறது.

  பாலஸ்தீனிய “ஹமாஸ்” இயக்கத்தை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கம்தான் தங்கள் தானைத் தலைவன் என்று வாக்கெடுப்பின் மூலமே பாலஸ்தீனிய மக்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த அரசை நாமும் மதிக்கிறோம். ஈழத்தில் அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால் ஈழமும் இன்னொரு பாலஸ்தீனமாகும். அதற்கு சிங்கள இனவாத அரசு தயாரா?

  காடுகளையும் மலைகளையும் நடந்தே கடந்து சீனத்தை விடுதலை செய்த “மாவோ” அவர்களும் சில தேக்கங்களைச் சந்தித்தார். சில தடைகளை எதிர்கொண்டார். சில இடங்களில் தாற்காலிகமாகப் பின்வாங்கவும் செய்தார். அப்போது தமக்கு பின்னே அணிவகுத்து வரும் செஞ்சேனையைப் பார்த்துச் சொன்னார்.

  “இப்போது நிலத்தை இழ. போராளிகளை காப்பாற்று. இப்போதைக்கு நிலத்தை இழக்கத் தயங்கினால் பின்ன்ர் நிலத்தையும் இழந்துவிடுவாய், போராளிகளையும் இழந்துவிடுவாய்” என்றார் மாவோ.
  இன்றைக்கு வன்னி காடுகளில் ஈழப் போராளிகள் நிலங்களை இழக்கலாம். ஆனால் நாளை கொழும்பிலேயே மையம் கொள்ளும்.

  “கிளி” வேண்டுமானால் வீழும் ஆனால் “புலி” வீழாது என்பதனை அவர்கள் விரைவிலேயே அறிந்து கொள்வார்கள்.

  இலங்கையில் சம உரிமை மறுக்கப்பட்டதால் அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சம உரிமை என்பது நியாயமான கோரிக்கையாகும். இதற்காக அறவழியில் போராடிப் பார்த்தனர். எந்த முடிவும் ஏற்படவில்லை. மனித நேயத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் அரசுக்கு எதிராக வேறு வழியின்றி ஆயுதப்போராட்டம் நடத்தும் அளவிற்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்படிருக்கிறார்கள்

  ஏமாளித் தமிழினத்தை ஏமாற்ற அரங்கேற்றப்படும் இந்த அவல நாடகத்தில்தான் எத்தனை நடிகர்கள்!

  இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையின் உறவு எந்த நிலையிலும் பழுதுபடாமல் பராமரிக்கப்படவேண்டும் என்று கருதும் மத்திய அரசு “இந்தியர்” நலன் காக்க! ஈழத்தமிழரை பலியிடுகிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

  ஒற்றுமைக்கு ஒருபோதும் அர்த்தம் தெரியாத தமிழினத்தை புறக்கணிப்பதால் எந்த தலைவலியும் தங்களுக்கு வந்து சேராது என்பதை மத்திய அரசு நன்கு புரிந்துவைத்துள்ளது.

  இலங்கைத் தமிழர் லீக் கூட்டத்தில் பொன். அருணாசலம் குறிபிட்டதுபோல என்றாவது இலங்கைத் தமிழர் ஒன்றாக நின்றதுண்டா?

  ஆயுதங்களைத் கையிலெடுத்த ஈழ இளைஞர்களாவது ஒரே பாசறையில் நின்று போர்க்குரல் கொடுத்ததுண்டா?

  அன்று ஒன்றுபடாத இலங்கைத் தமிழரின் உரிமைகளைக் காக்க இன்று நம் தமிழினத் தலைவர்களாவது தமிழகத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்களா?.
  எத்தனை மேடைகள்!
  எத்தனை வேடங்கள்!
  எத்தனை கோஷங்கள்!

  முதலுக்கே மோசம் வந்த பின்ன்ர் – முயலாக, ஆமையாகக் கிடத்தல் நன்றோ? – ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக் கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் – கனமான பாறையொன்றை அவன் தலையில் உருட்டிவிட எத்தனைக்கும் உலுத்தர்களைக் கண்டால் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் – ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் – ஆனால் ஆகட்டுமே – இந்த ஆட்சித்தான் போகட்டுமே – மகுடமின்றி வாழமுடியாத மனிதர்களா நாம்? – சிசுவாக பிறக்கும்போதே சிம்மாசனத்துடனா பிறந்தோம்? – கொற்றக்குடையா? கொள்கையா? – எது வேண்டும் எனில்…கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பார் என்போம்.

  என்று கவியரங்கத் தலைமையேற்றுக் கவிதை பாடிய கலைஞர் தான் அன்று எழுதிய ஆவேசக் கவிதையை இன்று திரும்பிப் பார்ப்பாரா?

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 32. அன்று ஒன்றுபடாத இலங்கைத் தமிழரின் உரிமைகளைக் காக்க இன்று நம் தமிழினத் தலைவர்களாவது தமிழகத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்களா?.
  எத்தனை மேடைகள்!
  எத்தனை வேடங்கள்!
  எத்தனை கோஷங்கள்!

  முதலுக்கே மோசம் வந்த பின்ன்ர் – முயலாக, ஆமையாகக் கிடத்தல் நன்றோ? – ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக் கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் – கனமான பாறையொன்றை அவன் தலையில் உருட்டிவிட எத்தனைக்கும் உலுத்தர்களைக் கண்டால் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் – ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் – ஆனால் ஆகட்டுமே – இந்த ஆட்சித்தான் போகட்டுமே – மகுடமின்றி வாழமுடியாத மனிதர்களா நாம்? – சிசுவாக பிறக்கும்போதே சிம்மாசனத்துடனா பிறந்தோம்? – கொற்றக்குடையா? கொள்கையா? – எது வேண்டும் எனில்…கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பார் என்போம்.

  என்று கவியரங்கத் தலைமையேற்றுக் கவிதை பாடிய கலைஞர் தான் அன்று எழுதிய ஆவேசக் கவிதையை இன்று திரும்பிப் பார்ப்பாரா?

  நன்றி!
  முத்தமிழ் வேந்தன்
  98411 03463
  muthamil78@gmail.com
  சென்னை

 33. உலகம் முழுவதும் தமிழினம் தன் இருப்புக்காக, வாழ்வுக்காக, உரிமைக்காக, மாபெரும் போராட்டங்களையெல்லாம் நடத்திவிட்டது’ நடத்திக்கொண்டும் இருக்கிறது. ஆனாலும் தமிழினம் ஏன் வெற்றிபெறமுடியவில்லை? தமிழனிடம் இல்லாதது என்ன?
  கல்வியா?
  செல்வமா?
  வீரமா?
  விவேகமா?
  இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்பமா? எது இல்லை?

  தமிழனுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றூரில்கூட ஒரு தமிழ்த் தலைவன் இல்லை.
  உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மேடைகளில், தமிழன், தமிழனாக இல்லை.
  எலலாவற்றையும்விட தமிழில் புலமைபெறும் தமிழனை தமிழன் போற்றுவதில்லை.
  வேற்று மொழிக்காரன் தமிழ்ப் புலமைபெற்றால். தாழ்வணங்கி தலைவனென்று போற்றுகிறான்.
  கல்வியும், செல்வமும் வந்தவுடன் தமிழன் தன் இனத்தைவிட்டே பறந்துவிடுகிறானே ஏன்?.

  இலங்கையில் சிறீலங்காசுதந்திரக் கட்சி, ஐக்கியதேசியக் கட்சி என தேசியக் கட்சிகள்.
  இந்தியாவில் காங்கிரஸ் கட்சி. பாரதியஜனதா கட்சி என தேசியக் கட்சிகள்.
  இங்கும் தமிழரென்று இருக்கிறார;களே, அவர;கள் ஏன் தமிழனாக இல்லை?.

  யு+த இனம் தன் இருப்புக்காக போராடியபோது….ஒரு பாதையில் நின்று போராடியது.
  மாற்றுப்பாதை அமையவுமில்லை, அமைக்க முயன்றவர;களும் அழிக்கப்பட்டார;கள்.
  யு+த இனத்திற்கு உருவான யு+தத் தலைவனை யு+தமக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார;கள்.
  உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மேடைகளில், யு+தன் யு+தனாக இருந்தான்.
  யு+தனே யு+தமொழியை வளர;த்தான்.
  யு+த இனத்தோடு வளர;ந்த மாற்றானும் யு+தனாகவே வளர;ந்தான்.

  தமிழர;களே சிந்தித்துப் பாருங்கள்; இலங்கை சுதந்திரமடைந்தபோது 36லட்சம் தமிழர;களும், 78லட்சம் சிங்களரும் இருந்ததாக கணிப்பீடு சொல்கிறது. இன்று 176லட்சம் சிங்களரும் 34லட்சம் தமிழர;களுமே உள்ளார;கள். எப்படி நாங்கள் அழிக்கப்பட்டோம்? இப்போது நடைபெறும் அழிவுதான் எங்களுக்கு பெரிதாகத் தெரிகிறது. நாங்கள் தமிழர;கள், எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள முயற்சிசெய்யவில்லை என்பதே வேதனையான உண்மை. இருந்தும் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு தமிழர; விடுதலைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளை பலப்படுத்தாமல், கிடைத்தவரை அனுபவிப்போம் என வாழ்வுதேட முற்படுவோமானால் இன்னும் சில காலத்தில் ஈழத்தில்மட்டுமல்ல உலகத்திலேயே தமிழினம் இல்லாதொழியும் இது நிச்சயம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க