privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்மன்மோகன் - ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு

மன்மோகன் – ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு

-

திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. நூற்றுக்கணக்கில் கூடி நின்ற மக்கள் மத்தியில் தோழர்கள் உரையாற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் திருச்சி மலைக்கோட்டை வாசலில் உள்ள காங்கிரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் வாயிலில் மன்மோகன், ராஜபக்சே ஆகியோரின் “திருவுருவப் படங்களை” நிறுத்தி வைத்து அவற்றைச் செருப்பால் அடித்து மண்ணெண் ஊற்றி கொளுத்தினார்கள் தோழர்கள். ம.க.இ.க கிளைச் செயலர் தோழர் ராமதாசு தலைமையில் நடைபெற்ற இந்த செருப்படி வைபவத்தில் பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். மன்மோகன் சிங் செருப்படி பட்ட இடம் நகரின் மையமான கடைவீதிப் பகுதி என்பதால் அந்தக் காட்சியைக் காண கூட்டம் அலை மோதியது. மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் இந்நிகழ்ச்சிகள் அரங்கேறின. அனைத்தும் தொலைக்காட்சிகளின் படம் பிடித்து ஒளிபரப்ப பட்டன. மன்மோகனின் கொடும்பாவி கொளுத்தப்படும்போது காங்கிரசுக் கட்சி அலுவலகத்திலிருந்து அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு கேட்க தைரியமில்லை. பிறகு போலீசு வந்து கைது செய்து தோழர்களைக் கொண்டு சென்றனர். போராட்டம் உள்ளுர் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்ப பட்டது. இதற்கு மேலும் கேட்காவிட்டால் மானக்கேடாகிவிடும் என்பதாலோ என்னவோ, 20,30 ஆட்களைத் திரட்டிக் கொண்டு ம.க.இ.க வுக்கு எதிராக தங்கள் கட்சி ஆபீசு வாசலிலேயே மறியல் நடத்தினார்கள் காங்கிரசுக்காரர்கள். “ம.க.இ.க வைத் தடை செய்! குண்டர் சட்டத்தில் கைது செய்! காங்கிரசு காரர்களுக்கு போலீசு பாதுகாப்பு கொடு” என்பவையே அவர்கள் எழுப்பிய முழக்கங்கள்.

இந்தக் கேலிக்கூத்தை போலீசுக் காரர்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் மிகப்பெரும் நகைச்சுவை. “மறியலில் ஈடுபட்ட காங்கிரசு போராளிகளை” கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். “ம.க.இ.க வினர் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்கள் அவனை ஆதரித்து போராடுகிறீர்களா?” என்று ஒரு போலீசுக்காரர் காங்கிரசுக் காரர்களைக் கேட்க, கதர் சட்டைகளுக்கு ரத்தக் கொதிப்பு கூடி விட்டது. “அவர்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தினார்கள்” என்று கூச்சலிட்டார் ஒரு கதர்ச்சட்டை. காங்கிரசுக்காரர்களின் கேவலாமான நிலைமையைக் கேள்விப்பட்டு நகரின் காங்கிரசு மேயர் சாருபாலா தொண்டைமான் (கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்த அதே தொண்டைமான் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்) போன்ற பிரமுகர்கள் திரண்டு விட்டனர்.

அதன் பிறகும் தோழர்களை சிறைக்கு அனுப்ப போலீசுக்கு மனமில்லை போலும். “நாங்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தவில்லை. ராஜபக்சேயைத்தான் கொளுத்தினோம். என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போங்களேன். எதற்காக அனாவசியமாக ஜெயிலுக்குப் போகிறீர்கள்?” என்றார் ஒரு போலீசு அதிகாரி. “நாங்கள் மன்மோகனைத்தான் கொளுத்தினோம். இனியும் கொளுத்துவோம்” என்றார்கள் தோழர்கள். முடிவு மூன்று பெண் தோழர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு திருச்சி மத்திய சிறை!

திருச்சியில் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் ஏற்கெனவே கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மீண்டும் மாணவர்கள் போராடி அந்த நீக்கத்தை ரத்து செய்தனர். இப்பதோது சட்டக்கல்லூரியில் போராட்டத்தை பு.மா.இ.மு தொடர்கிறது. 27 மாணவர்கள் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படங்கள்:

1

2

3

4

6

7

8

9

a

b

c

d

cong1

cong2

cong3

cong4

cong05

 1. இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே
  இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை.

  இந்தியப் படை அதிகாரிகள் – வன்னிப் போர் முனையில் – வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி – நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

  இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.

  இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.

  இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது.

  இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும் கூட – அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி – சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.

  ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு – மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா.

  பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு – இந்தியா இந்தப் போரை நடத்தும்.

  ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்.

  தனக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே இவன் சிரிக்கின்றான்

 2. பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக “சாஸ்திரி பவன்” முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி – அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.

  தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை – காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை.

  பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை – சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை.

  என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக – நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.

  சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி – மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா.

  நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் – மிக அண்மையில் – புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், “இப்போது எமது கையில் எதுவுமே இல்லை”, என்று.

  உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!

  எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து – உலகத் தமிழர்கள் நாம் – எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

 3. தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்
  ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.

 4. ஓவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும், எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது.

  செயற்படுவோம், இப்போதே!

 5. http://santhipu.blogspot.com/2009/01/blog-post_31.html

  தோழர்களே!

  சிபிஎம் கட்சியில் கூலிக்கு எழுதிக் கொண்டிருக்கும் செல்வப்பெருமாள் தனது ‘சந்திப்பு’ எனும் வலைதளத்தில் பதிந்துள்ள அசிங்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

  குறிப்பாக அதில் பதியப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் சேர்த்தே பாருங்கள். நம்முடைய பின்னூட்டங்களை துணிவோடு வெளியிட்டு விவாதிப்பதற்கு சிபிஎம் கம்பேனி கொடுக்கும் கூலி போதாததால்; நம்முடன் அவன் விவாதிப்பதில்லை.

  இருப்பினும், அந்த அசிங்கத்தை இங்கு தோழர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தோன்றியதாலேயே இதனைப் பதிவிட்டிருக்கிறேன்.

 6. தோழர் ஏகலைவன்,

  இந்த சந்திப்பு பதிவையெல்லாம் அவரையும் சேத்து 32 பேர் படிச்சா அதிகம்…
  சீரியஸா எடுத்துக்காதீங்க
  வாங்குன காசுக்கு மேல கூவுரான்னடா கொய்யாலே ன்னு நெனச்சுகிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்

 7. வாழ்த்துக்கள் தோழர்களே. உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை

 8. காங்கிரஸ் கூட்டத்தின் டான் இங்கே இணையத்தில் உலாவுகிறாறே…. அவரை யாரேனும் கண்டீர்களா?

 9. More than 5,000 shells fired on civilians, casualties uncountable
  [TamilNet, Monday, 02 February 2009, 16:47 GMT]
  Sri Lanka Army (SLA) fired artillery shells throughout the whole day on Monday from all directions into civilian refuges. At least one hundred civilians would have been killed or maimed in the indiscriminate barrage. The casualties are uncountable as the whole population is forced to reside inside the bunkers throughout the whole day, reports TamilNet correspondent from the safety zone. “Monday was the worst day of SLA shelling so far within the safety zone.”

  More than 5,000 artillery shells and Multi Barrel Rocket Launcher (MBRL) rockets have been fired by the SLA.

  Both the hospitals at Puthukkudiyiruppu (PTK) and Udaiyaarkaddu have been hit by the shelling also on Monday.

  Thousands of shells have hit Theavipuram, Va’l’lipunam, Chuthanthirapuram, Udaiyaarkaddu and Puthukkudiyiruppu.

  Heavy fighting was reported in all the frontiers.

  AN URGENT APPEAL TO EVERY ONE
  Srilankan army is right now shelling and killing tamil civilians,latest news says within a short period they have fired nearly 10,000 shells towards civilians.
  please tamil nadu people ! do something to stop this killing spree by srilankan army ,ask indian government which is helping srilankan govt for justice.

  UN has a duty to protect civilians when their own govt is not doing it.
  In srilanka’s case it is killing it’s own civillians which is a war crime.
  I herewith let you know what the UN charter says about R2P- RESPONSIBILITY TO PROTECT.

  UN R2P
  The Responsibility to Protect populations from genocide, ethnic cleansing, war crimes and crimes against humanity is an international commitment by governments to prevent and react to grave crises, wherever they may occur. In 2005, world leaders agreed, for the first time, that states have a primary responsibility to protect their own populations and that the international community has a responsibility to act when these governments fail to protect the most vulnerable among us.

  The Responsibility to Protect-Engaging Civil Society (R2PCS) project works to advance Responsibility to Protect (R2P) and to promote concrete policies to better enable governments, regional organizations and the U.N. to protect vulnerable populations.

 10. தம்பி கன்ஸ் இரண்டு தரப்பு படங்களையும் பார்த்தீர்கள்தானே நெஞ்சை தொட்டு செல்லுங்கள் யார் குன்டாக இருக்கின்றனர்.

 11. paavam manmohan…what will he do?… you shud have BURNT SONIA kodumbaavi….
  This white woman is showing her cunning hatred on poor EELAM TAMILS
  our “thamilina Thalaivar” is licking her boots…

  Until Sonia and her FAMILY is in Politics,,,,there is NOT going to be a SOLUTION to EELAM….we shud make sure that this lady is SENT BACK to ITALY

 12. ஒரு வேண்டுகோள்

  இனி மத்திய அரசை நம்பி பயன் இல்லை.,அவர்கள் நமக்க்காக பேசுவார்கள் என்ற நம்பிக்கை அற்று போய்விட்டது
  அவர்கள் நம் உணர்வுகளை புரிந்து கொள்ள் மாட்டார்கள்.

  ஆகவே,தமிழ்கத்தில் உள்ள ஈழ தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ண உள்ள் தலைவர்கள்
  ஒரு குழு அமைத்து,இலங்கைக்கு சென்று,ராஜபக்ஷே விடம் பேச வேண்டும்

  அங்கு போர் நிறுத்தம் ஏற்பட செய்து,பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும்.
  இங்குள்ள சில தலைவர்களுக்கு விடுதலை புலிகளிடத்தில் உள்ள தொடர்பை பயன்படுத்தி,அவர்களை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இணங்க செய்து ஒரு தீர்வு காண வேண்டும்.

  புலிகள் மேல் உள்ள இந்தியாவுக்கு உள்ள தனிபட்ட கருத்தை ஒதுக்கி வைத்து விட்டு,அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப ,இலங்கை அரசை ,புலிகளுடன் பேசு வைத்து ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

  இது முடியும்.மனமிறந்தால் மார்க்கம் உண்டு.

  தமிழக தலைவர்களை விட் இதற்கு சரியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

  சிங்களவர்களுக்கும்,ஈழ தமிழர்களுக்கும் உள்ள பகைமை போக்கி ஒரு இணக்கமான சுழல் கொண்டு வரவேண்டும்.

  மனித நேயம் சிறிதேனும் இருந்தால்,இது நிச்சயம் நடக்கும்

  குறிப்பாக,நெடுமாறன்,வை.கோ,திருமாவளவன் போன்றோர் அங்கு சென்று பேச வேண்டும்.

  வெறும்,இங்கிருந்து போராடினால் பயன் கிட்டாது.

  நார்வே குழு வைவிட நாம்,சிறந்த நடுவராக இருந்து தீர்வு காணமுயலலாம்.

  செய்வார்களா நம் தலைவர்கள்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க