முகப்புசமூகம்சாதி – மதம்தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

-

ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி!

“தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்!
தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை
தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!”

என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு தீட்சிதர்கள் கோரினர்”

“ஒரு நிமிடம் கூட நிறுத்தி வைக்க முடியாது” என்று மறுத்து விட்டார் நீதிபதி.

சுமார் 20 ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த இந்த வழக்குக்கு உயிர் கொடுத்து இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள்தான். “அர்ச்சகனின் உரிமை அல்ல, வழிபடுபவரின் உரிமைதான் முதன்மையானது” என்ற எமது வாதம்தான் இந்தத் தீர்ப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறோம்.

யாரும் சாதிக்க இயலாது என்று கூறிய வெற்றியை எமது அமைப்புத் தோழர்கள் சாதித்திருக்கின்றனர்.  முதலில் சிற்றம்பல மேடையில் தமிழின் உரிமையை நிலைநாட்டினோம். இன்று கோயிலின் மீது தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கிறோம். எம்முடைய விடாப்பிடியான போராட்டத்திற்கும், எமது தோழர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தியாகம் செய்த இந்த காலத்தில், தமிழ் மக்களை தலைநிமிரச் செய்துள்ள இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. தமிழுக்கென்று உயிரையும் கொடுப்போமென வெற்றுச் சவுடால் அடிக்கும் திராவிட, தமிழினவாதிகள் இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாத செயலை புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் செய்திருக்கிறோம். கம்பீரமாக இந்த வெற்றியை அனைவருக்கும் அறிவித்து கொண்டாடுமாறு தோழர்களையும், பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

பல்லாயிரம் ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும், பொன்னோடு வேய்ந்த கருவறையும் கொண்ட தில்லை நடராசர் கோயில், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி பழனி, திருச்செந்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பெருங்கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆனால் தில்லைக் கோயிலை மட்டும் 300 தீட்சிதர் குடும்பங்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

இந்தியாவில் எந்தக் கோயிலாக இருந்தாலும் மடாதிபதியாக இருந்தாலும் அவர்களைக் கணக்கு கேட்கும் அதிகாரமும் கண்காணிக்கும் அதிகாரமும் இந்து அறநிலையத்துறைக்குத உண்டு. தில்லைக்கோயில் தீட்சிதர்களின் தனிச்சொத்து அல்ல என்று 1888 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வழக்கிலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் 1952 இல் பெற்ற ஒரு காலாவதியான தீர்ப்பை வைத்துக் கொண்டு, நீதிமன்றத்தை ஏமாற்றியும், அரசாங்கங்களை அவ்வப்போது சரிக்கட்டிக் கொண்டும் நடராசர் கோயிலையும் அதன் சொத்துகளையும் தீட்சிதர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

கோயிலில் அம்மனின் கழுத்தில் உள்ள தாலியையே காணவில்லை. கோயில் கலசத்தில் உள்ள தங்கத்தை சுர்டி விற்றுவிட்டார்கள். கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நகைகள் கணக்கில் வரவில்லை. தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் உண்டியலே கிடையாது; பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தீட்சிதர்களே தமக்குள் பங்கிட்டு எடுத்துக் கொள்கிறார்கள்..

கோயிலுக்குள் தீட்சிதர்கள் மது, மாது, அசைவ உணவு, காமக்களியாட்டங்கள், கிரிமினல் குற்றங்களை கேட்பாரின்றி நடத்துகிறார்கள். கோயிலுக்கு உள்ள ஜிம் வைத்திருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோயிலை இழுத்து மூடிவிட்டு அதனை விடுதியாக மாற்றி கும்மாளமடிக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோயிலுக்கு உள்ளே நாய் வளர்க்கிறார்கள். காலையில் கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் அங்கே இரைந்து கிடக்கும் பான்பராக் பாக்கெட்டுகளையும் சீமைச்சாராயப் புட்டிகளையும் பார்த்துப் பதறுகிறார்கள். இந்த அநீதிகளைத் தட்டிக் கேட்ட ஒரு தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கோயிலுக்குள் மர்ம்மான முறையில் இறந்திருக்கிறார்கள். தீட்சிதர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற புகார் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இவர்களுக்கு எதிராக இதுவரை மொத்தம் 15 கிரிமினல் வழக்குகள் சிதம்பரம் காவல்நிலையத்தில் இருக்கின்றன. திருட்டு, அடிதடி குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தீட்சிதர்கள் இன்னுமும் ‘பகவானுக்கு’ பூசை செய்து கொண்டிருக்கிறார்கள். நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்களே கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இத்தனைக்குப் பிறகும் அரசாங்கம் ஏன் தீட்சிதர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை, கோயிலின் நிரவாகத்தை அறநிலையத்துறை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். இந்தக் கோயிலை அரசாங்கத்தால் ஏன் மேற்கொள்ள முடியவில்லை, தீட்சிதர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். எனினும் இதுதான் உண்மை.

பல முறைகேடுகள் நடந்து, தீட்சிதரக்ளிலேயே ஒரு பிரிவினர் இந்த அயோக்கியத்தனங்களைச் சகிக்க முடியாமல் போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் புகார் கொடுத்த்தன் அடிப்படையில் 1997 இல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இக்கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை நியமித்த்து. அந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். இது தொடர்பான கிரிமினல் வழககு கூட இன்று வரை நிலுவையில்தான் இருக்கிறது அதிகாரிகளையும் அரசாங்கங்களையும் சரிக்கட்டிக் கொள்வதன் மூலம்தான் தில்லைக் கோயிலில் தமது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள தீட்சிதர்களால் முடிந்திருக்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள்தான் தீட்சிதர்களின் கொட்டத்துக்கு முடிவு கட்டினோம்.

8 ஆண்டுகளுக்கு முன் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து கையை முறித்து வீசினார்கள் தீட்சிதர்கள். தேவாரமும் திருவாசகமும் பாடப்பட்ட அதே சிதம்பரத்தில் அந்த தமிழிலக்கியங்களை அன்று கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள், அவற்றைப் பாடுவதற்குக் கூட தடை விதித்தார்கள். இந்தத் தடைக்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமின்றி, பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை வழிபடலாம் என்ற ஆணையைப் பெற்றோம்.

அந்த அரசாணையின் அடிப்படையில் திருவாசகம் பாடச்சென்ற சிவனடியாரையும், அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை உயரதிகாரிகளையும் தடுத்துத் தாக்கிய தீட்சிதர்களையும் அவர்கள் நடத்திய காலித்தனங்களையும் தொலைக்காட்சியில் இந்த நாடே கண்டது. சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடி வழிபடும் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தும், அதை மீறி பக்தரக்ளிடம் 50, 100 என்று பணம் வசூலிக்கிறார்கள் தீட்சிதர்கள். அரசாணை பிறப்பிக்கப் பட்ட பிறகும், சிற்றம்பல மேடையில் நின்று தமிழ்பாட ஆறுமுகசாமி அன்றாடம் தீட்சிதர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

பக்தர்களின் தமிழ் பாடி வழிபடும் உரிமையை ஆமல்படுத்துவதற்கே ஆலயத்தை அறநிலையத்துறை மேற்கொண்டால் மட்டும்தான் முடியும். அது மட்டுமல்ல, கோயில் சொத்துக்கள் களவு போவதைத் தடுக்கவும் இது ஒன்றுதான் வழி. சிதம்பரம் நகரப் போருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கள்ளத்தனமான விற்றிருக்கிறார்கள் தீட்சிதர்கள். இதற்கான ஆதாரங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். தீட்சிதர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு போட்டிருக்கிறோம்.

மக்களுடைய பக்தி உணர்வைப் பயன்படுத்தி தமது சொந்த ஆதாயத்துக்காக கோவிலில் வழிப்பறிக் கொள்ளை நடத்தும் தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராசர் கோயிலை அரசு கைப்பற்ற வேண்டும். கொள்ளையடிக்கும் உரிமையை மத உரிமை என்ற பெயரில் நிலைநாட்டிக் கொள்ள அரசு அனுமதிக்க்கக் கூடாது. ஒரு தனிச்சட்டம் இயற்றி இக்கோயிலை  அறநிலையத்துறையின் கீழ் அரசு கொண்டுவர வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கோருகிறோம்.

 1. அன்பரசு, விஜய், போங்கடா, ஆழிக்கரையான், கரிகாலன் உள்ளிட்ட தமிழினவாதிகளே!!!!!
  இங்க வச்சுக்கலாம் கச்சேரிய…!!!!
  சீக்கிரம் வாங்க!!

 2. முன்குறிப்பு;
  பார்ப்பான்னு சொன்னா சாமி கண்ண குத்திடுமின்னு பயந்துகிட்டு ஓடிப்போன சீபீஎம் விடுதலை, சந்திப்பு வகையறாங்களும் வரலாம்… சீபீஎம்முக்கு அனுமதி இலவசமோ இலவசம்!

  பின்குறிப்பு
  தயவு செய்து பச்சை சட்டை போட்டுக்கொண்டு வரவும். ஜெயலலதிதா இந்த பக்கமா வாகிங் போறாங்களாம்.

 3. வணக்கம் தோழர் வினவு,

  தற்போது வந்துள்ள தீர்ப்பு அறநிலையத் துறை கோயிலை எடுத்துக் கொள்வதாக வந்துள்ளதா அல்லது நிர்வாக அதிகாரியை நியமிப்பதாக உள்ளதா? ஏனேனில் 1997லேயே நிர்வாக அதிகார ஒருவர் நியமிக்கப்பட்டார் என்று பதிவில் உள்ளது. எனக்கு பின்னூட்டத்தில் இடப்பட்ட தகவல் மொத்தமாக கோயிலை அறநிலையத்துறை எடுக்கும் என்று கூறியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பதிவு இட்டுவிட்டேன். தெளிவு படுத்தினால் சரி செய்து விடுவேன்.

  நன்றி,
  அசுரன்

 4. தோழர் அசுரன்

  நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவது என்பதன் பொருள் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் கோவிலை கொண்டு வருவது தான். அந்த வகையில் ஏற்கனவே நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்திருந்த ரிட் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

  அரசாங்கத்தை கையில் போட்டுக்கொண்டு இந்த வழக்கை விசாரனைக்கே கொண்டு வராமல் தீட்சிதர்கள் இழுத்தடித்து வந்தார்கள் இவ்வழக்கில் நாம் தலையிட்டதன் விளைவாகத்தான் இது முடிவுக்கு வந்துள்ளது.

  தோழமையுடன்
  வினவு

 5. சமரசத்துக்கு இடம் தராத அமைப்பு, தொடர் போராட்டம், மக்களின் ஆதரவு – இறுதியில் வெற்றி நிச்சயம் உண்டு.

  தில்லைப் போராட்டம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

 6. இந்த வெற்றியை பெற்றுத்ததந்த ‘மனித உரிமை பாதுகாப்பு மைய’த்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும், ம க இ க விற்கும், புரட்சிகர வாழ்த்துக்கள்…

  பெரியவர் ஆறுமுகச் சாமிக்கு, நன்றி நன்றி நன்றி….

  பார்ப்பனீய மேலாதிக்கத்தை கருவறுக்கும் பணி தொடரட்டும்!

 7. @chittu

  From your response I can come to a conclusion that you think dikshitar brahmins are the only hindus around. Do you mean that? If yes then I feel Sorry for you… If no then try to understand what had happened! Actually the human rights Protection Council has now restored the right to worship and pray to the HINDU DEVOTEES. So whats your problem with that?

 8. இந்த வெற்றியைஇட்டு தமிழகத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  முத்துக்குமார் இழப்பின் பின்னரான நிலையில் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டிய முக்கிய தேவையும் இருக்கின்றது. ஒட்டுக் கட்சிகள் இளைஞர்களுக்கு வழிகாட்ட அழையா விருந்தாளிகளாக வந்திருக்கின்றனர். இவர்களை லாவகமாக தவிர்த்துக் கொண்டு புரட்சிகர சக்திகள் தலைமை கொடுக்க வேண்டும்.

 9. தீட்சிதர் குடுமி சும்மா இருக்காது நாளைக்கே சுப்ரீம் கோர்டுக்கு போகும்…அதற்கு முன் ஒரு நாளேனும் அவர்களை தெருவில் நிறுத்தி பார்க்க வேண்டும்

 10. உங்கள் அமைப்புகள் விஷயம் எனக்கு கொஞ்சம் குழப்பம்தான். இதில் உங்கள் நேரான பங்கு இருக்கிறது போல் தெரிகிறது. இருக்கிறதோ இல்லையோ, கேஸ் போட்டு சாதித்த அமைப்பு/தனி மனிதர்/வக்கீல்களுக்கும் என் பாராட்டுகள்! வாழ்த்துக்கள்! இத்தனை வருஷமாக இது நடக்காததால் ஏதோ பெரும் சட்ட சிக்கல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மிக சிம்பிளான பாயிண்டை – வழிபடுபவர்களின் உரிமை – வைத்து வென்றிருக்கிறீர்கள். இத்தனை நாள் அரசு இப்படி கோட்டை விட்டது ஏனோ தெரியவில்லை.

  கோவிலுக்குள் மது மாது என்று எழுதி இருக்கிறீர்கள். இது பெரிய குற்றச்சாட்டு. ஆதாரம் இருக்கும் என்று நம்புகிறேன்.

  பெரிய விஷயத்தை சாதித்திருக்கிறீர்கள். இப்போது போய் ஒரு சின்ன வருத்தத்தை தெரிவிக்கலாமா என்று கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது. தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம் என்று எழுதி இருக்கிறீர்கள். தீட்சிதர்களை மட்டுமே பார்ப்பனர்கள் என்று தீட்சிதர்கள் கூட நினைப்பதில்லை. தீட்சிதர் தவிர்த்த மற்ற பார்ப்பனர்கள் இதை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் ஒரு நொடி கூட யோசிக்க வில்லையா? சட்டக் கல்லூரியில் விழுந்தது தேவர்கள் ஆதிக்கம் என்று நீங்கள் எழுதவில்லை, ஒரு நாளும் எழுதப்போவதுமில்லை. என்னைப் போன்ற பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் நாங்கள் பிறந்த ஜாதிக்காக காலம் பூராவும் உங்கள் திட்டுகளை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? நூறு ஆண்டுகளுக்கு முன் பறையன் என்று திட்டினார்கள், நீங்கள் பார்ப்பான் என்று திட்டுகிறீர்கள். என்ன வித்தியாசம்?

  மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், சின்ன (ஆனால் நீண்ட கால) வருத்தம்தான். பெரிய விஷயத்தை சாதித்தற்கு வாழ்த்துகள்.

 11. //என்னைப் போன்ற பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் நாங்கள் பிறந்த ஜாதிக்காக //

 12. //
  அன்பரசு, விஜய், போங்கடா, ஆழிக்கரையான், கரிகாலன் உள்ளிட்ட தமிழினவாதிகளே!!!!!
  இங்க வச்சுக்கலாம் கச்சேரிய…!!!!
  சீக்கிரம் வாங்க!!
  //

  டேய் அரடிக்கெட்டு டவுசர் கழண்டுடும் ஜாக்கிரதை! ஏன்டா முண்டம் இரயாகரன் கேட்ட கேள்விக்கே இதுவரை வினவுல ஒரு மசுரும் புடுங்கல. ம.க.இ.க. தமிழ் இனவாதம்தான் நாறுதே! அப்புறம் ஏன்டா உனக்கு வீராப்பு! முன்னாலேயும் – பின்னாலேயும் கார்க்க வைச்சி அடச்சிக்கோடா நாயே!

  பாப்பான் மயிலப் புடுங்கலன்னா ஒரு நாளும் உங்களுக்கு தூக்கமே வராதே அப்புறம் ஏன்டா வல்லபேசன் பார்ப்பன தலைவனா வச்சி சாமி கும்புடுறீங்க போங்கடா போக்கெடுத்த பசங்களா

 13. ஹேய் இங்க பாரேன் அன்பரசு டவுசர் கழட்டறதுல பீஎச்சுடி பட்டம் வாங்குன மாதிரி பேசுறத… அந்த வேலதான் தெனோம் பாக்குறீங்களா பாசு…
  இந்தாளு தமிளுன்னு நெனச்சா அவாளு போல கீதே
  ஏதோ
  பார்ப்பனீயமின்னா இன்னா?
  அப்புடீன்னு ராமராஜன் பட ஈரோயின் கணக்கா கேட்டியே இங்க பேசிக்கலாமின்னு தந்தியடிச்சேன். பேச முடியலன்னா விடு இப்ப தீட்சிதரெல்லாம் வினவுல வந்து பேசிகிட்டா இருக்கானுங்க?

 14. டேய் ! அன்பரசு பார்ப்பன பன்னியே! என்னடா ஒவரா சவுண்டு உடர

  தீட்சிதன்களோட மயிர மட்டுமில்ல இந்துத்வாவோட உயிரயும் புடுங்குவோண்டா
  பரதேசி!

  “தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!”

  “தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனியஆதிக்கம்!

  தீட்சித நயே வெளியேறு!

  பார்ப்பன பண்டார பரதேசி கும்பலே வெளியேறு!

  தீட்சித நய்களுக்கு கழுவ போன மூசா நாயே வெளியேறு!

  சீபீஎம் நாயே வெளியேறு!

  தீட்சித நய்களுக்கு துது போன இனதுரோகி தா.தே.பொக கீ.வே பார்ப்பன கும்பலே வெளியேறு!

  சித்தாளும், கொத்தாளும் நம்மாளு கருவறையில மட்டும் எதுக்குடா பூணுலு!

  உழைக்காமல் சுரண்டி திண்ணும் பார்ப்பன பயங்கரவாத கும்பலை வேரறுப்போம்!

  அனைத்து மக்களும் அர்ச்சகராகட்டும் !

  உழைக்காமல் பிச்சை எடுத்து பொழைக்கும் பார்ப்பன வந்தேறி கும்பல் வெளியேறட்டும்.

  இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நட்த்திய மக இக , மனித உரிமை பாதுகாப்பு மய்யம் ஆகிய அமைப்புகளுக்கும் ஆதரவு நல்கிய வேற்று கட்சி நண்பர்களுக்கும் பகுத்தறிவு ஆர்வலர்கள் சார்பில்
  நன்றி! நீங்கள் அனைவரும் இத்துடன் மட்டும் நிற்காமல் தமிழகம் முழுவதும் பார்ப்பன நாய்களை வெளியேற்ற போராட்டத்தை தொடர வேண்டும்.

 15. இதற்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடக்கம் தான் இன்னும் நிறைய பணிகளிருக்கின்றன.

  தோழமையுடன்
  செங்கொடி

 16. தோழர் யார் இவன்,அன்பரசுன்னு பேர வச்சிக்கிட்டு இப்படி நாய் மாதிரி வள்லு வள்ன்னு கடிக்கிறான்.

  ஏன்டா முட்டா..
  நல்லா வாயில வருது..
  உன்ன இங்கே யாராவது வாடா போடான்னு பேசினாங்களா நீதான முதல்ல மரியாத இல்லாம பேசின அதுக்குதான் தான் உனக்கு இந்த டோசு.
  ஏன்டா வீனா வாய விட்டுட்டு நல்லா வாங்கிக்கட்டிக்கிறீங்க.

  தோழர் இவனையெல்‌லாம் ஒரு ஆளுன்னு ஏன் தோழர் மதிக்கிறீங்க. இவனையெல்லாம் விவாதத்திற்கு கூட அழைக்காதீங்க இவனெல்லாம் பாப்பான் கூட சேர்ந்துக்கிட்டு கூத்தடிக்கிற கூட்டம் தான்.

 17. ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின் குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன் நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல் கோயிலை விட்டு முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ அதுதான் “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம் வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?

  http://kalagam.wordpress.com/

 18. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்!! நான் ரொம்ப நாளாக சொல்ல தயங்கிய கருத்தை திரு. ஆர்வி சொல்லியுள்ளார்!! முதலில் அவருக்கு என் நன்றி!! தேவர்கள் அடித்தாலும் அது பார்ப்பனிய ஆதிக்கம்! இளையராஜா குடும்பத்தை யார் ஒதுக்கிவைத்தாலும் அது பார்ப்பனிய ஆதிக்கம்! (எங்கள் ஊரில் கவுண்டர்கள் தான் அதிகம்! நீங்கள் அவர்கள் தான் நாட்டாமை.. இளையராஜா ஊரில் பார்ப்பனிய மக்கள் தான் நாட்டாமையா?? நிஜமாக எனக்கு தெரியவில்லை! ).. ஈழ பிரச்சனயில் காங்கிரஸ் சொல்லும் சொந்த கருத்தை பார்ப்பனிய ஆதிக்கம் என்று சொல்லுகறீர்கள்!! ஒரு முப்பது நாப்பது வருடம் முன்பு வரை காங்கிரஸ் என்பது ஒரு சில சமூகத்தின் கட்சி (ராஜாஜி காலம்!).. இன்று எல்லா சமூகமும் காங்கிரஸில் உள்ளது! இருந்தும் அது சொல்லும் கருத்து பார்ப்பனிய ஆதிக்கம்!! எனக்கு புரியவில்லை!!

  ஆனால் உங்கள் பல புரட்சி கருத்து எனக்கு புடிக்கும்! அதனால் தான் “பார்ப்பனிய ஆதிக்கம்” என்பது கொஞ்சம் வருத்தம் தந்தாலும் , மீண்டும் மீண்டும் உங்கள் தளத்தை வந்து பார்கிறேன்!!

  நான் என் வருத்தத்தை பதிவு செய்துள்ளேன்.. அவ்வளவே!!

 19. இது சூப்பர்லிங்ஸ்க்காக….
  முத்துக்குமார் இறுதிப் பயண பதிவின் பின்னூட்டம் ரிப்பீட்
  …………………………………………………………………

  ஜனங்களே,
  இந்த போலி கம்மூனிஸ்டு சிபீஎம் விடுதலையின் டாப் 10 காண்டுகள்…

  1)அவனால சொந்தமா எழுத முடியாதுஅதனால நல்லா எழுதறவன பாத்தா காண்டு

  2)சந்திப்பு ஈமெயில் அனுப்றத அப்படியே படிக்காம பின்னூட்டம் போடனும். ஏன்னா இவனுக்கு சரியா படிக்கவறாது அதனால படிக்கறவன கண்டா காண்டு

  3) சந்திப்பு அளவுக்கு இவனுக்கு கூலி கொடுக்கறதில்ல அதனால சந்திப்பு மேல காண்டு

  4) ம.க.இ.க வுக்கு கூட்டம் வந்தா காண்டு

  5) ஆசையிருந்தாலும் முத்துக்குமார் பிணத்தை வைத்து ஓட்டு பொறுக்க முடியலையே அதனால காண்டு

  6) சிதம்பரம் போராட்டத்துல ம.க.இ.க ஜெயிச்சதுல காண்டு

  7) வினவு தளத்தை ஒருநாளைக்கு ஆயிரக்கணக்குல மக்கள் பாக்கும் போது இவன் பிளாக 9 பேர் மட்டும் பாக்கறதுல காண்டு

  8.) ம.க.இ.க தோழர்கள் இணையத்தெருக்களில் இந்த போலி கம்யூனிஸ்டு சீபீஎம் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்பதால் காண்டு

  9) ஈழப் பிரச்சனையில ம.க.இ.க தமிழ்நாடு பூரா ஆர்பாட்டம் நடத்தும் போது சீபிஎம் காரங்க பச்ச சட்ட போட்டுகிட்டு போயஸ் தோட்டத்துல புல் புடுங்கத பாத்து மக்கள் வாயால மட்டுமில்லாம பல வழிகளில் சிரிப்பதால் காண்டு

  10) ஒரளவுக்கு சொரணையிருக்குற இவங்க கட்சி அணிகள் பின்னங்கால் புடனியில இடிக்க ம.க.இ.க பக்கம் ஓடிவர்ரதால காண்டு…

  இன்னும் எத்தன காண்டுகளோ
  யப்பா விடுதலை எனப்படும் சந்திப்பு எனப்படும் காண்டு கஜேந்திரங்களே எப்படிடா சமாளிக்கிறிங்க… நம்பவே முடியலடா சாமி!

  அப்புறம் அன்பரசு, செம்புலம், போலி லவ்வர்பாய், போலி விடுதலை, திருப்பூர் விஜய், சந்திப்பு, டவுசர், பாப்பு…. இப்படி எந்த பேருல வேணுமின்னா வாங்க ஆனா தயவுசெஞ்சு டவுசர போட்டுகிட்டு வாங்கடா…ஆபாசம் தாங்கல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  மகா ஜனங்களே வேஸ்டு பண்ண நெறைய நேரம் இருந்தா இந்த பதிவுல இந்த தறுதலை ச்சி விடுதலையோட கமெண்டெல்லாம் படிச்சு விவரமாயிகங்க
  கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

 20. வந்துருக்குறது யாருன்னு தெரியலியா?

  பதில்கள் கீழே பிடித்தமான வற்றை டிக் செய்யவும்

  1. பிரகாசு காரட்

  2.வரதராசன்

  3.சோம் நாதர்

  4.சிதம்பரம் மூசா

  5……….மாரி விடுதல

  6.அறிவாளி சந்திப்பு

  7. பாண்டி அண்டு கம்பேனி

  8.யார் கூப்பிட்டாலும் போகும் நெடுமாறன்

  சரியான பதில் சொல்வோருக்கு சீபீஎம் உறுப்பினர் கார்டு இலவசம், பிராமணாராயிருப்பின் மத்திய குழு உறுப்பினர் சீட்டும் இலவசமாக கிடைக்கும்

 21. ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின் குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன் நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல் கோயிலை விட்டு முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ அதுதான் “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம் வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க

 22. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை இயக்கங்களுக்கும் பாராட்டுக்கள்.

  நித்தில்

 23. Mr. Vinavu,

  This judgement is not a CONCLUSIVE judgement. It is only an endorsement on the previous verdict given in Ramalingam case of 1983. This can be challenged further in apex court.
  Moreover, the verdict underlines the rights of Dikshithar hereditory in worship related items. This means that it still belongs to them for setting and directing the way that rituals are conducted. The board’s rights are limited to just admin and maintenance (clerical)

  By the way, you guys must act to free lot of churches and mosques in Tamilnadu which are used for family welfare of limited group. Example is Eruvadi Dharga Haqdar Committtee, Kilavasal CSI Nemudi Family Church, etc. There are lot of complaints of anti-social actions like prostitutions, drinking, happening in these places in the disguise of religious properties

  PARAMS

 24. It is heartening to read the new developments in Thillai Natarajar temple. The spirit of this judgement should be taken closer to the hearts of all people who are depressed by the sufferings of Elam Tamils to get a renewed power. The aura of hope and confidence that this victory instils in the minds of all is important to revert and smite the Hindutva forces. Hope the DMK government would do well here upon to speed up the process of taking over the temple fully.

 25. வினவு,

  இதை பார்ப்பன-பார்ப்பனீய சொல் etymology பற்றிய விவாதமாக திசை திருப்ப விரும்பவில்லை. இந்த வார்த்தை பிரயோகம் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இதே போஸ்டுக்கு கலகம் எழுதி இருக்கும் மறுமொழியை பாருங்கள். என்னுடைய ஒரு போஸ்டை இங்கே – http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ/
  அரை டிக்கெட், நீங்கள் இப்படி டவுசர் பற்றியெல்லாம் பேசுவீர்கள் என்று நினைக்கவில்லை. 🙁

 26. Vinavus explanation is bizzare. Since most of the terrorist attacks around the world are done by bad muslims, can we term terrorism as islamic terrorism from now onwards? If Vinavu is right, this is right too.

 27. “தில்லையில் தீட்சிதர்களிடமிருந்து நடராசரை காப்பாற்ற வாருங்கள்!” என்றதும் மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள்.

  தீட்சிதர்கள் யாரென்றால்… கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்கள் பூமிக்கு வந்து, சிதம்பரத்தை அடையும் பொழுது, எண்ணிப்பார்த்தார்களாம். 2999 பேர் தான் இருந்தார்களாம். 1 ஆள் மிஸ்ஸிங்.

  அந்த மிஸ்ஸிங் ஆள் தான் நடராசராம். தீட்சிதர்கள் நடராசரின் நெருக்கமான உறவினர்களாம்.

  எப்பேர்ட்டப்பட்ட உடான்ஸ் கதை. எனக்கென்னமோ, இந்த கதையில் கூட, மிஸ்ஸிங் என்பது சந்தேகம் தான். தீட்சிதர்களின் பண்பைப் பார்க்கும் பொழுது, அப்பொழுதே, ஒரு தீட்சிதரை போட்டுத்தள்ளி விட்டு, காணாமல் போனவர் நடராசர் என கதைவிட்டு விட்டார்கள் என நினைக்கிறேன்.

 28. Parpan and parapanisim, same old tired story, started by the SERIYAN paedophile EVR, being continued ad nausem by the current mob, as confirmed by the comments above. WHEN ARE YOU GUYS GOING TO GROW UP? HAVE YOU BEEN ALL BRAIN WASHED? I PRESUME THERE IS A BRAIN TO BE WASHED!! WHERE IS YOUR PROTEST ABOUT CHURCHES AND MOSQUES NOT COMING UNDER THE GOVT? BEING AN ATHEIST IS ONE THING AND ACCEPTABLE, BEING AN IDIOT AND FOLLOWING SOME OLD SENILE SEXUAL PERVERT IS IDIOTIC AND IGNORANCE. ( SIMILAR TO THE MOB MENTALITY AS SHOWN BY THE GERMANS AGAINST JEWS DURING HITLER TIME.) HEAVENS SAKE, OPEN YOUR EYES, LOOK AT THE WORLD AROUND YOU. IF YOU BELEIVE THAT A SMALL TINY % OF THE POPULATIONS ( BRAHMINS ) CAN CAUSE ALL THE MISERY AND ALL THE PROBLEMS? EITHER THEY MUST BE A FANTASTIC INTELLIGENT PEOPLE OR YOU GUYS ARE SO STUPID THAT THEY CAN RULE YOU OVER LIKE YOU ALL CLAIM!!!!
  BLAMING PARPANS IS BECOMING STALE AND TIRESOME

 29. தம்பரம் நடராசன் கோயிலைத் தமிழ்நாடு அரசு ஏற்றது!

  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முரண்டு பிடித்த
  தீட்சதர்ப் பார்ப்பனர்கள் இறுதியில் பணிந்தனர்

  தமிழ்நாட்டில் நடந்துள்ளது அமைதிப் புரட்சி!
  தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம்!

  சிதம்பரத்தில் வரலாற்றுக் கல்வெட்டை கழகம் நிறுவும்

  தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

  சிதம்பரம் நடராசன் கோயில் தங்கள் சொந்த உடைமையென்று கூறி, அதன் சொத்துகளை அனுபவித்துக் கொழுத்த தீட்சதர்ப் பார்ப்பனர்களின் பிடியிலிருந்து, கோயில் மீட்கப்பட்டு, இந்து அறநிலையத் துறையின் நிருவாகத்தின்கீழ் வந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்பே இதற்குக் காரணம்.

  மிக நீண்ட காலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை வரவேற்று, தமிழ்நாட்டில் நடந்துள்ள அமைதிப் புரட்சி இது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அறிக்கை வருமாறு: தீட்சதர்கள் அடித்த கொள்ளை

  சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அதன் திரண்ட சொத்துகளை அவர்களே அனுபவித்து வந்தனர்.

  1925 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத் துறையின்கீழ் கோயில்கள் கொண்டு வரப்பட்டன.

  ஆனால், அதனை ஏற்க தில்லைவாழ் கோயில் தீட்சதர்கள் மறுத்துவிட்டனர். அதுமுதல் இந்தப் பிரச்சினை நீதிமன்றங் களுக்குச் சென்று பல வகையான தீர்ப்புகளால் அரசுக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வராமல் தடுக்கப்பட்டது.

  முத்துசாமி அய்யர் அளித்த தீர்ப்பு

  1888 ஆம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குச் சென்றது (ஏ.எஸ். அப்பீல் 108, 159/1888).

  இந்த வழக்கினை முதல் இந்திய நீதிபதி என்று பெருமையாகக் கூறப்படும் சர்.டி. முத்துசாமி அய்யர் மற்றும் ஷெப்பர்டு ஆகிய இரு நீதிபதிகளும் விசாரித்தனர்.

  முற்காலந்தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக் குரிய இடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. மேலும், இக்கோயிலானது தீட்சதர்களுக்குச் சொந்த சொத்து என்று சொல்வதற்கு சிறு துளியளவுகூட ஆதாரம் கிடையாது என்று ஆணி அடித்தாற்போல தீர்ப்பு வழங்கப்பட்டது.

  அதற்குப் பிறகும்கூட தீட்சதர்ப் பார்ப்பனர்கள் அடாவடித்தன மாக தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டதே – ஏகபோக அனுபவக் கொள்ளை பறிபோகிறதே என்கிற தன்மையில் தொடர்ந்து நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி தடைகளை வாங்கிக்கொண்டு காலம் தள்ளி வந்தனர்.

  தமிழ்நாடு அரசின் உத்தரவும் – நீதிமன்ற தடையும்!

  1987 ஆம் ஆண்டில் பொது தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கோயிலை, இந்து அறநிலையத் துறைக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வரவும், நிருவாக அதிகாரியை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

  அதன்பின், சென்னை உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டனர். நீதிமன்றத்தின் தடையை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலைகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சியில் – கலைஞர் ஆட்சியில் நிர்வாக அதிகாரியை நியமித்தனர். அது கூடாது என்று வழக்குப் போட்டனர்.

  நீதிபதி பானுமதி அவர்களின் மகத்தான தீர்ப்பு

  அதன் தீர்ப்பு நேற்று வெளிவந்தது (2.2.2009). நீதியரசர் பானுமதி அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வழங்கினார். அத்தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

  கோவிலை நிர்வகிப்பது, காணிக்கைகள் மற்றும் கட்டளைகள் நிர்வகிப்பது போன்றவை ஒரு மதத்துடனும், மதத்தின் நடை முறைகளுடனும் தொடர்பு கொண்டதல்ல.

  அரசியல் சாசனத்தின்படி கோவிலின் நிருவாகம், பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், பொது தீட்சதர்கள் எந்தப் பாதுகாப்பும் கோர முடியாது. ஆகவே, தனி அதிகாரி நியமித்து, பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானதல்ல.

  அறநிலையத்துறை ஆணையர், தனது அதிகாரத்தைப் பயன் படுத்த முடியாது எனக் கூற முடியாது. கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்தவே ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு என்பது முழுக்க முழுக்க மதச்சார்பற்ற விஷயம். இதில் தலையிட அரசுக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது.

  பெருமளவு சொத்துகள் கொண்டுள்ள இந்தக் கோவிலின் சொத்துக்கள் இனிமேலாவது முறையாகப் பராமரிக்கப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. அதேபோல, தனி அதிகாரிக்குப் பொது தீட்சதர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் எனவும் நம்புகிறது. மேலும், கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பது குறித்து, தனி அதிகாரிக்கு ஆணையர், சட்டப்படி தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும்.

  – இவ்வாறு நீதிபதி சிறப்பாகத் தீர்ப்பளித்துள்ளார்.

  சட்டம் என்ன கூறுகிறது?

  இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ற பகுதியின் பிரிவு 25, 26 ஆகியவை மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும்,

  25 ஆவது பிரிவு, மத நிறு வனங்களில் சமூக சீர்திருத்தம் பயன்படுத்துவதை அங்கீகரிக் கவே செய்துள்ளது என்பதும், அதன்படி தவறுகள், ஊழல்கள் எந்த மத நிறுவனங்களில் நடை பெற்றாலும், அதனை அரசுத் துறையின்கீழ் (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் அதிகார வரம்புக்குட்பட்ட நிர்வாகத்தின்கீழ்) கொண்டு வர அதிகாரம் உண்டு என்பதை உணர்ந்து நீதியரசர் ஜஸ்டீஸ் திரு. பானுமதி அவர்கள் துணிவுடனும், சட்டத் தெளிவுடனும், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி புரிந்து, சுமார் 150 ஆண்டுகால வழக்குப் பிரச்சினைக்குச் சரியான தீர்ப்பை வழங்கி வரலாறு படைத்துள்ளார்.

  தில்லையம்பலத்துப் பக்தர்களும் இதனைப் பாராட்டி வர வேற்கவே செய்வர் என்பது உறுதியாகும்!

  தீர்ப்பின் அடிப்படையில் அரசுத் தரப்பில் அதிகாரிகள் கோயிலுக்குச் சென்றபோது, நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட மறுத்தனர் கோயில் தீட்சதர்கள்; கடைசியில் வேறு வழியின்றிப் பணிந்தனர். நேற்று இரவே நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  இதன்மூலம் மிக நீண்டகால பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது.

  பார்ப்பன ஆதிக்கக் கோட்டையைச் சிதறடித்த நியாயமான- சட்ட ரீதியான நிலைப்பாடு இது என்பதில் அய்யமில்லை.

  அன்று ஆறுமுகசாமி

  தில்லை சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதப்படக் கூடாது என்பதில் தீட்சதர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். தேவாரம், திருவாசகம் பாடல்களை ஓதச் சென்ற ஆறுமுகசாமி என்பவரை தீட்சதர்கள் கடுமையாகத் தாக்கினர். ஏன் காவல்துறை அதிகாரியைக்கூடத் தாக்கினர்.

  கடைசியில் அதிலும் தீட்சதர்கள் தோற்றுப் போகும் நிலையை இந்து அறநிலையத்துறை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து, அதற்கு மேலான மரண அடி பார்ப்பன ஆதிக்கத்திற்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுவிட்டது.

  நமது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது

  சிதம்பரம் நடராஜன் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கையும் வலியுறுத்தலுமாகும். சிதம்பரத்திலேயே பேரணி, மனு கொடுத்து, விளக்கிப் பேசி, அது சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில் நூலாகவும் வந்துள்ளது!

  முட்டுக்கட்டை போட்டவர்கள்

  இப்படிப்பட்ட ஓர் அருமையான அமைதிப் புரட்சியினை சட்ட ரீதியாக, மற்றவர்கள் அஞ்சியும் அல்லது விலை பேசப்பட்டும் இதற்குமுன் இருந்த அரசுகள் அல்லது சில பெரிய மனிதர்கள் முன்வந்து முந்தைய அரசுகள், அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுக்க ஒட்டாமல் முட்டுக்கட்டை போட்ட நிலை இருந்தது!

  அமைதிப் புரட்சி

  துணிச்சலுக்குப் பெயர் பெற்ற முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இத்தகைய சிறந்த செயலைச் செய்ததுடன், உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்ற முத்திரையையும், ஒப்புதலையும் பெற்று, தமது ஆட்சியின் அறநிலையத் துறையின் ஆணை அதிகாரம் சரியே என்று உலகுக்கு உணர்த்தியும் விட்டார்கள் – ஓர் அமைதிப் புரட்சி இதன்மூலம் நடைபெற்றுள்ளது.

  அவர்களுக்கு உறுதுணையாக முதல்வர் – ஆட்சியின் கொள்கை அறிந்து செயல்படும் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரிய கருப்பன், அறநிலையத் துறை ஆணையர் அமைதியான ஆற்றலாளர் திரு. பிச்சாண்டி அய்.ஏ.எஸ்., இதற்கு உறுதுணையாக, தொடக்கமுதலே சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை எடுக்கத் தூண்டி வந்த முன்னாள் அமைச்சர்கள் வி.வி. சாமிநாதன், இராம. வீரப்பன் மற்றும் ஊர் மக்கள் குழு ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

  கழகத்தின் சார்பில் கல்வெட்டு

  இந்த வரலாற்று நிகழ்வை வருங்காலம் அறிந்துகொள்ள சிதம்பரத்தில் முதலமைச்சர் கலைஞர் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதியில் ஒரு கல்வெட்டுத் திறப்பு விழாவும் விரைவில் இம்மாத இறுதிக்குள் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தி, மேலும் ஊர் மக்களாதரவு இந்த அரசுக்கு உண்டு என்று காட்டும் முயற்சிகளைக் கழகம் உருவாக்கும்.

  சீறுவார்கள் – ஜாக்கிரதை!

  அடிபட்ட பாம்பாக தீட்சதர்ப் பார்ப்பனர்கள் சீறுவார்கள்; மேலும், உச்சநீதிமன்றம்வரை சென்று ஒரு கை பார்ப்போம் என்று முனைப்பாகச் செயல்படுவார்கள். தீட்சிதர்களுக்குப் பல மேல்மட்டங்களிலும் பார்ப்பன உணர்வோடு உதவி செய்யக் கூடியவர்கள் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இந்து அறநிலையத்துறை அதிலும் கண்ணும் கருத்துமாகவிருந்து அதனை முறியடிப்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

  சென்னை
  3.2.2009

  தலைவர்,
  திராவிடர் கழகம்.

 30. ஜனங்களே,
  இந்த போலி கம்மூனிஸ்டுகள் மகஇகவின் டாப் (5 பகுதி -1) காண்டுகள்…

  1)இவனுங்களாள சொந்தபேர்ல எழுத முடியாது அதனால சொந்தபேர்ல எழுதறவன பாத்தா காண்டு

  2)வினவு என்ற பெயரில் ஈமெயில் அனுப்றத அப்படியே படிக்காம அவனே பலபெரே போட்டு பின்னூட்டம் போடனும். சிபிஎம் இதுமாதிரி இனையதளத்தில புரட்டுவேல செய்யாம மக்களோட இருப்பதபாத்தா காண்டு

  3) மருதயைன் விராசாமி பேர்ல இருக்கிற அம்பிகள் மாவாவேலை பாத்தும் அமெரிக்க ஏவல் காசு வந்தும் கூலி பத்தல ஆனால் சிபிஎம்ல 1000 பேர் முழுரே ஊழியர்கள் இருப்பத பார்த்தா காண்டு

  4) சிபிஎம்க்கு கூட்டம் வந்தா காண்டு

  5) புலிக்கிட்ட காச வாங்கினு முத்துக்குமார் பிணத்தை வைத்து மார்க்சியத்தை வித்துட்டு கத்தறமே ஆனா சிபிஎம் மட்டும் கொள்கை தெளிவோட இருப்பதை பொறுக்க முடியலையே அதனால காண்டு

 31. ஏன்டா அர டிக்கெட் அம்பி பார்ப்பானயே தலைவனா வச்சிக்கின்னு திருட்டு புரோகித வேல செய்ய யோக்கியன் நீ

 32. வீரமணி எனும் மாமாவின் அறிக்கையை வெளியிட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறேன். சிதம்பரம் போராட்டமும் அதன் வெற்றியும் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் முயற்சியால் நடந்த்து, துளியளவாவது நேர்மையிருந்தால் வீரமணி அவரது அறிக்கையில் இதை எழுதியிருக்கவேண்டும். ஆனால் உண்மையை தவிர அனைத்தும் எழுதப்பட்ட ஒரு குப்பை இது.

 33. மாமா வீரமணியின் அறிக்கை, அவரின் மோசடித்தனத்தைக் காட்டுகிறது..

  இதனை சும்மா விடக்கூடாது.. கஷ்டப்பட்டு மக்களுடன் வேலை செய்து வெற்றி பெறுவது ஒரு இயக்கம். அந்த வெற்றியை அப்படியே திருடிக் குளிர்காய்ந்து கொள்வதோ இந்த வெண்ண வெட்டி சிப்பாய். நோகாம நொங்கெடுக்கிற இந்த ஜால்ரா மணியைத் தோலுரிக்கணும்..

  மானமுள்ள தமிழர்கள் பெரியார் திடலுக்கு போன் செய்து அவர்களிடம் இதனை விமர்சிக்கனும்.. மன்னிப்புக் கேட்க வைக்கனும்..

  போன் நம்பர்: 044- 26618163..

  இந்த நம்பருக்கு பேசினா ‘வணக்கம்..பெரியார் திடல்’ அப்படிம்பாங்க.. அங்கிருந்து ‘விடுதலை செய்திப் பிரிவு’க்கு இணைப்புக் கேட்டு வீரமணியாரின் அடிப்பொடிகளுக்கு பூசை வைப்போம்…வாருங்கள் தமிழர்களே..

  சுந்தர்

 34. மகஇக திருடர்களே சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழ்க்காக, அங்கு நடக்கும் தவறுகளை கண்டித்தும் நடத்திய போராட்டங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை நீங்க மட்டுமே சேஞ்சதா வார்த் பொறிக்கி வேல செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை அந்த போராட்த்திற்கு தமிழகத்தில் உள்ள இந்திய ஜனநாயகவலிபர்சங்கத்திற்கும் விடுதலைச்சிறுத்தைகள், பாமக,திக.திமுக ,சிபிஎம்,போன்ற கட்சிகளுக்கும் இனையா என்னத்த புடிங்கிட்டிங்க .

 35. 2008 ல சிதம்பரம் நடராசர் ஆலயத்துல் அரசு ஆணை பிறப்பித்த பிறகும் தீட்சிதர்கள் தமிழ்ல பாட விடாம சண்டைக்கு வந்து தாக்கினப்ப எத்தினி சிபிஎம், திமுக, திக வாலிபர் சங்கம் எல்லாம் வந்தீங்க கைது ஆனிங்கன்னு விளக்குப்பா…தெரியலன்னா சிபிஎம் நகர செயலர் மூசா விடம் நாம ஏன் கூட்டு இயக்கத்துல இருந்து விலகிட்டோம்னு கேட்டு தெரிசஞ்சுக்கோ. கைதானதுல சிறுத்தைகள் மற்றும் பாமக எத்தினி பேருன்னு சொன்னாக்கூட உதவியா இருககும்பா

 36. 1. ஏப்பு முழு டிக்கட் ங்கறது உங்க அப்பன் ஆயி வச்ச பேராப்பு…அப்படின்னாங் காட்டி உங்க அப்பாரு பேரு என்ன..புள்ள பேரு என்ன வைக்கிறதா உத்தேசம்?

  2. இணையத்துல புரட்டா…இணைய்த்துல மட்டுமா ஒலகத்துக்கே புரட்ட க்த்துத் தந்தது யாரு … சந்திப்பு விடுதலை இன்னும் என்ன என்ன பேரு வச்சு வந்தாலும் நீ பேசுற லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட் தான் ஒன்ன சிபிஎம் னு காட்டிக் குடுத்துருதே

  3. எங்க இடத்துல பாப்பானா பொறந்தவுங்க அதுக்கு எதிராப் போராடிதான் ஆகணும். உங்களாட்டம் பூணூல் கல்யாணம் நடத்துனா விரட்டிருவோம். அவாள் ன்னு கலைஞர் சொல்லிட்டாருங்கிறதுக்காக மாநிலக்குழுவுல வரிஞ்சு கட்டுன ராசாக்களே டிகே ஆர் பூணூல கழத்திட்டாரா ரொஷப்பட்டு….

  4. கூட்டத்தப் பாத்தா காண்டா அதுவும் உங்களுக்கு வர்ற கூட்டமெல்லாம் ஒரு கூட்டம். அதப் பாத்து மத்தவுங்க பொறாமப் படணுமா…ஒரு ஊருக்குள்ள போவீங்க … எல்லாருக்கும் அறிமுகமான ஒரு இளைஞரப் பாப்பீங்க… என்ன தோழர் அப்படின்னுட்டே 25 ஒரு ரூபா மதிப்புள்ள DYFI உறுப்பினர் அட்டைகள திணிப்பீங்க… எப்படியாச்சும் கிச்சுகிச்சு மூட்டி 25 ரூபா வாங்கிருவீங்க. ஒன்றிய அலுவலகத்துல போயி இந்த கிராமத்துல் DYFI கிளை ஆரம்பிச்சாச்சும்பீங்க…25 அட்டைய வாங்குனவன் ஊருக்குள்ள போலீஸ் தேடுற கள்ளச்சாரய வியாபாரி, ரௌடி ன்னு தனக்கு வேண்டியவனுக்கெல்லாம் கார்டு போட்டு குடுத்து பயப்படாதீங்கண்ணா… போலீஸ் வந்தா தோழரு வருவாங்க தைரியமா நடங்கம்பாங்க… காய்ச்சிக்கிட்டிருந்தவரும் தன்னையும் தான் தொழிலையும் புரட்சிகரமானதுன்னு நம்பிக்கிட்டு கார்டு போட்டுத் தந்த தம்பி வந்தா நயம் சரக்கா தருவாரு… இது கற்பனையல்ல. தென்மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 1995 ல் நடந்த சம்பவம். எனக்கு கூட ஒரு கார்டு தந்தாங்க. காசு பாக்கி இருக்கு.
  இதுக்கு பேரு கூட்டமா. இத்தன லட்சம் உறுப்பினர்களுனு சொல்ற லச்சணம் இதுதான…என்ன கொள்க அப்பிடினு கூட தெரிஞ்சுக்காத உறுப்பினர்கள மக.இக போன்ற அமைப்புகள்ல தலைகீழே நின்னு தண்ணி குடிச்சாக் கூட நீ கண்டுபிடிக்க முடியாது. உங்கள் அமைப்புல் vice versa ப்பு.
  5. ஈழத்தப் பத்தி ஒரு கருத்து சொல்றதுக்கு கட்சியோட மத்திய குழு கூட என். ராம் என்ன சொல்றாருன்னு எதிர்பாத்து அவர் நலனுக்கு உட்பட்டு கொள்கையை முடிவு செய்த ஒரே கட்சி உலகத்திலே நீங்கள் மட்டும்தான். அப்புறம் எப்படி மக்கள சாந்திருக்கீங்க. சின்ன ரிக்வஸ்டு. மக்கள் தமிழின உணர்வுக்கு ஆட்பட்டு இருக்கும் போது அவுங்கள சந்திச்சு உங்க கொள்கைய அதாம்பூ ஈழத்தப் பத்தி சொல்லுங்களேன். அத உட்டுட்டு நெட்டுல நொட்ட வந்துட்டீங்க..

 37. மணி,

  ஜனநாயக வாலிபர் சங்கம், பெரம்பலூர் மாவட்டத்திலே நடத்தின ரிக்கார்டு டான்சு போட்டி, அதுக்கு அவுக கொடுத்த முதப்பரிசு பத்தி இந்த மாச பு.ஜ.விலே வந்திருக்கத விட்டுட்டீகளே..

  டைபி விழாவுக்கு பஸ்பிடிச்சு வந்து வாழ்த்து சொன்ன விவசாயி அணி தோழர் ‘இங்க ஆடுனதல்லாம் பாக்கப்பதான் மன இறுக்கம் குறைஞ்சிருக்கு..நயந்தாரா மாதிரியே பிள்ளைக ஆடுது..நல்லாருக்கு அடுத்து விடப்பிடாது..மானாட மயிலாடயிலயும் போயி பரிசு வாங்கனும்’ என்று வாழ்த்தி தனது கழிசடை சிந்தனையைக் கக்கினதை விட்டுப்புட்டீக..

  இப்பேர்ப்பட்ட ஆபாச நடனத்தை போஸ்டர் போட்டு நடத்தின முற்போக்கு அமைப்பு ஒலகத்திலே எங்கியாச்சும் உண்டா?

  தியாகு

 38. […] கீழே கொடுக்கப்பட்டுள்ளன.‌   பார்ப்ப‌ன‌ கும்பல் த‌மிழ‌க‌த்தில் தâ…  பார்ப்ப‌ன‌ கும்ப‌லின் தோலை உரித்து […]

 39. பொய்யும், புரட்டும் பிராடு தனத்தையுமே அரசியாலாகவும் , வாழ்க்கையுமாக கொண்ட இந்த போலிகள்
  தாங்கள் சுய அறிவில்லத எச்சில் கால் நய்கள் என்பதை தொடர்ச்சியாக நிருபித்து வருகிறார்கள்.

  தோழர்.கலகத்தின் பெயரி பின்னூட்டம் இட்டுள்ளார்கள் வினவு இதை அனுமதிக்க கூடாது,

  (மேலே உள்ள என் கருத்துக்களையும் அவ்ர்களின் கருத்து போல இது போன்ற தளங்களில் பதிவிடுவார்கள் சந்திப்பு, போலி விடுதலை , கீற்றில் விஜய் கார்க்கி )

 40. யோவ் சும்மா இருக்கவே வுட மாட்டீங்களா
  பேரில்லாத கபோதி ஏண்டா,எதுக்கு மத்தவன் பேர வச்சுக்கிட்டு வரீங்க,ஏண்டா இதுக்கு உங்கப்பன் வரதராஜன் தான் துண்டு சொன்னாரா?,இல்ல வீர மணி சொன்னாரா,செயலலிதா வூட்ல (அ) கர்ணாவோட வூட்ல கழுவிகினு இருக்குற வேலய நீங்க பொறுமயா பாருங்க அப்பதான் எதாவது எலும்பு துண்டு தருவாங்க புரியுதா.
  வினவு அவர்களுக்கு :மன்னிக்கவும் இது போல பன்னாடைகளுக்கு இப்படி சொன்னால் கூட புத்தி வராது

 41. தோழர் கலகம்,

  சொந்தமா எழுதாம காப்பியடிக்கும்போதே அடையாளம் தெரியலியா இந்த சீபீஎம் கொளுகை குன்று போலி விடுதலையை?

 42. இந்த சீபீஎம் அனானிகள் ஒரே ஆளு ஒரு டஜன் பேருல எழுதுரதுக்கு காரணமே ம.க.இ.க வ திட்டினா ஒரு கமென்டுக்கு 12ருபா 50 பைசா அமௌன்டாம்,
  அதிமுக ஜால்ரா கமென்னுட்டு போட நெகோசியேசன் நடக்குதான்…..
  நான் சொல்லல
  ஜனங்க பேசிக்கிறாங்க!!!!
  ………………………
  இதே டயலாக்க இந்த ஜந்து காப்பியடிக்கும் பாரேன்!!!!

 43. தோழர்களுக்கு

  முக்கிய செய்தி

  தில்லையில் கோயில் அரசின் கீழ் கொண்டுவரப்பட்டதன் முதன் படியாக இன்று உண்டியல் வைக்கப்பட்டுளது,
  கோடிகோடியாய் கொள்ளையடித்த பார்ப்பன தீட்சித ஓநாய்களுக்கு தட்டில் எதுவுமே விழவில்லையாம்.பாவமா இருக்காம் பார்ப்பானுங்க முகத்த பார்ப்பதற்கே.

  நேற்று பத்திரிக்கையில் பேட்டி கொடுத்த தீட்சிதன் “எங்களுக்கு ஏதும் தெரியாது கோயில் தான் எல்லாம் அதை நம்பிதான் 400 குடும்பம் இருக்கோம்”
  வேலை தான வேண்டும் உனக்கு, உங்களை கோயில விட்டு துரத்தின ம க இக வ கேளு அருமையான வேல தருவாங்க,ஆனா உழைக்கனும் கொஞ்சமாவது!!!!!!!!

 44. தி.க. தனது தவறை இன்று திருத்திக் கொண்டது. இன்று கூடிய செயற்குழுவின் தீர்மானம் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் பங்களிப்பை அங்கீகரித்துப் பாராட்டி உள்ளது..

  **************************************
  தீர்மானம் எண் 3:

  சிதம்பரம் நடராசன் கோயிலை அரசு
  நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தமைக்குப் பாராட்டு

  சிதம்பரத்தில் உள்ள நடராசன் கோயில், ஒரு பொதுக்கோயில். தீட்சதர்களின் தனிச் சொத்தல்ல என்று கி.பி. 1888-லேயே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர்.டி. முத்துசாமி அய்யர், ஜஸ்டீஸ் ஷெப்பர்டு ஆகியோர் கொண்ட “பெஞ்ச்” (ஏ.எஸ். அப்பல் 108, 159/1888) வழக்கில் தீர்ப்புக் கொடுத்தும், கடந்த 121 ஆண்டுகளாகத் தொடர்ந்து, சிதம்பரம் தீட்சதர்கள் தங்களது செல்வம், செல்வாக்கு மூலம் நடராசன் கோயில் தங்கள் வசமே இருக்கும் வண்ணம் நீதிமன்ற நடவடிக்கைகள் பல ஆட்சி களின் ஆதரவு பெற்று தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்திருந்தனர்.

  பொதுமக்கள், தமிழர் அமைப்புகள், திராவிடர் கழகம் போன்றவை – பல பக்தர்கள் உள்பட பலரும் வற்புறுத்தியதை ஏற்று (எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த காலத்தில்) சிதம்பரம் கோயில் நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது – அதற்கு சென்னை – உயர்நீதிமன்றம் சென்று தீட்சதர்கள் தடை ஆணை வாங்கிவிட்டனர்.

  இதன் பிறகு கலைஞர் அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு நடத்தி, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். அது செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று நடத்திய வழக்கில், (மனித உரிமை பாதுகாப்பு மய்யம் என்ற அமைப்பும் வழக்கில் தன்னை இணைத் துக் கொண்டது (Implead) ஜஸ்டீஸ் பானுமதி அவர்கள் வழங்கிய தீர்ப் பின்படி, அது பொதுக்கோயில் என்றும், அதில் தவறுகள் ஏற்படாமலி ருக்க, கண்காணிக்க இந்து அறநிலையப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி நியமனம் செல்லும் என்றும், அதுபோலவே, ஆறுமுகசாமி போன்ற பக்தர்கள் கோயிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாடலாம் என்றும் தீர்ப்பில் தெளிவாகக் கூறி, ஒரு வாரத்திற்குள் உடனே கோயில் நிர்வாகத்தை ஏற்று இந்து அறநிலையத் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டதையொட்டி, உடனடியாக அதன் நிர்வாகத்தினை ஏற்று சிதம்பரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்கும் நிலையை உருவாக்கிய கலைஞர் ஆட்சியின் கடமை தவறாத செயலைப் பாராட்டி, அறநிலையப் பாதுகாப்பு அமைச்சர், ஆணையர் முதலிய அனைவரும் துரிதமாக செயலாற்றியமைக்காகவும், இச்செயற் குழு பாராட்டுகிறது. இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், வழக்கு மன்றம் நாடியும் ஒத்துழைத்தவர்களுக்கும் இக்கூட்டம் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 121 ஆண்டுகளாக இருந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் நடுநிலையோடு தீர்ப்பைத் தந்த மாண்புமிகு ஜஸ்டீஸ் திரு. பானுமதி அவர்களுக்கு இச்செயற்குழு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது
  —————
  பாரி

 45. தகவலுக்கு நன்றி பாரி:

  உண்மைதான் நீதிபதி பானுமதியின் பங்கு மிக
  மிக முக்கியமானது.

 46. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
  இதற்கு அயராது உழைத்தவர்கள் மிக உயர்ந்தவர்கள். தமிழனையும் தமிழையும் மக்களே காத்துக் கொள்வதற்கு இது ஒரு ஊக்கியாக இருக்கும்.

  ஈழச் சோகம் மக்களைக் கப்பிக் கொண்டிருப்பினும் உள்ளூர இது தமிழர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. இதனை பெரிய திருவிழாவாக இணையத்தில் கொண்டாட வேண்டும்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

 47. வாழ்த்துக்கள் தோழர்களே!!!!!

  தோழமையுடன்
  நிதீயின் போராளி

 48. ///From your response I can come to a conclusion that you think dikshitar brahmins are the only hindus around. Do you mean that? If yes then I feel Sorry for you… If no then try to understand what had happened! Actually the human rights Protection Council has now restored the right to worship and pray to the HINDU DEVOTEES. So whats your problem with that?///

  Dear Comrade,
  HRPC stands For Human Rights Protection Center.

 49. தில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவிமுறை!

  தில்லை தீட்சிதர்கள் நடராஜர் கோவிலை அரசுடையாக்கியதை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். நீதிமன்றம் தீட்சிதர்களின் நம்பிக்கையை கவிழ்த்து விட்டது. அடுத்து, உச்ச நீதி மன்றத்தை நோக்கி ஓடியிருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையமும் இனி தில்லி கிளம்பும்.

  வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம்… இப்பொழுது கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்திருக்கிறது. நேற்று இந்து அறநிலைய துறை ஆணையர் கோவிலுக்கு வந்து வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக பணிகள் குறித்தும் சில அறிவிப்புகள் செய்திருக்கிறார்.

  அதில் முக்கியமானது. தீட்சிதர்களிடம், செயல் அலுவலரிடமும் இரண்டு சாவிகள் இருக்க ஏற்பாடு நடக்கிறதாம்.

  மேலும்..

  http://socratesjr2007.blogspot.com/2009/09/blog-post_20.html

 50. நண்பர் ஆர்வி, புவனேஷ்,

  என்னுடைய கருத்து : பார்ப்பான், பார்ப்பனியம் என்பது, யார் எந்த ஜாதியாக இருந்தாலும், மற்றவர்களை சுரண்டி சாப்பிடுவர்களைக் குறிப்பது. இது பிராமணர்களை மட்டும் குறிக்காது. மாறாக தேவர், கள்ளர், நாயக்கர்,செட்டியார் இன்னபிற ஆயிரத்தெட்டு ஜாதிகளில் ஜாதி வெறி பிடித்தவர்களை மட்டும், பார்ப்பனியம் என்பது சுட்டும்.

  ஆனால் பிராமணர்கள் என்பது பிராமணஜாதியைச் சுட்டும். நீங்கள் ஆர்வி, புவனேஷ் ஆகியோர் பிராமணர்கள் அவ்வளவே, பார்ப்பனியர்கள் அல்ல.

  மாறாக ஜாதி வெறி, சுரண்டல் வெறி பிடித்து திரிந்தால் மட்டுமே நீங்கள் பார்ப்பனியர்கள் ஆவீர்கள்.

  இது என்னுடைய புரிதல் மட்டுமே. பெரியாரும் இந்த கருத்தில்தான் பார்ப்பனியத்தை கிழி கிழியெனக் கிழித்து இருப்பதாக எனக்குப் படுகிறது.

  • அறிவுடைநம்பி,

   உங்கள் கருத்தின் மையப்புள்ளி என்ன என்று எனக்கு புரிகிறது. ஆனால் பழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு நான் வேறு பொருள் கொள்கிறேன் என்றால் நீங்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று யாருக்கு புரியும்? நீங்கள் தெருவில் சென்று நான் பார்ப்பானையும் பார்ப்பனீயத்தையும் எதிர்க்கிறேன் என்றால் எப்படி புரிந்து கொள்ளப்படுவீர்கள்? இல்லை யாராவது “அவாள் நமக்கு சவால்” என்றால் அய்யா அவாள் என்றால் என்ன, நீங்கள் எந்தப் பொருளில் இதை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?

   ஒரு உதாரணம் தருகிறேன்; நான் தலைநகரங்களில் வசிப்பவர்களை capitalist என்று வரையறுக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். capitalist இல்லாதவர்களும் capitalist ஆகும் ஒரு tendency இருக்கிறது என்று சொன்னால் அது எப்படி புரிந்து கொள்ளப்படும்?

   ஜாதி வெறி பிடித்தவர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று சொல்லுங்கள்; ஜாதீயவாதிகள் என்று சொல்லுங்கள்; பார்ப்பனன் என்றுதான் சொல்வேன், பார்ப்பனீயம் என்றுதான் சொல்வேன், கேட்பவந்தான் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எப்படி?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க