privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!

ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!

-

சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணிய சாமிக்கு முட்டையடி !
வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி !
ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை!

“சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தவறு” என்று தீட்சிதர்கள் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியசாமி.

எதிர் மனுதாரராக அதே நீதிமன்றத்தின் அறைக்குள் நின்று கொண்டிருந்தார் ஆறுமுகசாமி.

அந்தப் பக்கம் சுப்பிரமணியசாமியும் தீட்சிதர்களும்.

இந்தப் பக்கம் ஆறுமுகசாமியும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும்.

வெளியே ஈழப்பிரச்சினைக்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம்.

கொந்தளித்துக் கொண்டிருந்த நீதிமன்ற வளாகத்துக்குள் கறுப்புப் பூனைகளும் நூற்றுக் கணக்கான போலீசாரும் புடைசூழ அசட்டுத் தைரியத்துடன் நுழைந்தார் சு.சாமி.

நீதிமன்ற அறைக்குள் போலீசு நுழையக்கூடாது என்பதால் பூனை, எலியெல்லாம் வெளியே நின்றன. உள்ளே சாமி நுழைந்த்துதான் தாமதம், சு.சாமியின் மூஞ்சியை நோக்கிப் பறந்தன முட்டைகள். எழுந்தன முழக்கங்கள்.

“வேசம் போடுறா ஜெயல்லிதா

கொம்பு சீவுறான் இந்து ராம்

ஊளையிடுறான் சு.சாமி

ஊதிவிடுறான் துக்ளக் சோ

கொழுப்பெடுத்த பார்ப்பனக் கும்பல்

கொக்கரிப்பது கேக்கலியா

பார்ப்பனக் கும்பலின் கொட்டமடக்க

கொதித்தெழுவாய் தமிழகமே !”

ஜனவரி 26 அன்று ம.க.இ.க சென்னை வீதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள், நீதிமன்றத்தின் அறைக்குள் எதிரொலித்தன. கொதித்தெழுந்த்து தமிழகம்.

மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.

பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.

“என்ன நடக்கிறது இங்கே? கீப் தி டெகோரம்” என்று சத்தம் போட்டார்கள் நீதிபதிகள் மிஸ்ராவும் சந்துருவும்.

பூனைகளை உள்ளே அனுப்புங்கள் யுவர் ஆனர், என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.
பூனைகள் நுழைந்தன.

“என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று சு.சாமியைக் கேட்டார்கள் நீதிபதிகள்.
“சிதம்பரம் வழக்கில் என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார் சு.சாமி.
“சிதம்பரம் வழக்கின் மனுதார்ருடைய (தீட்சிதர்களுடைய) வக்கீல் எங்கே?” என்று கேட்டார்கள் நீதிபதிகள்.
அவர் ஏற்கெனவே எஸ்கே…ப். தீட்சிதர்களோ ஒரு ஓரமாக பம்மிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்கள் நீதிபதிகள். நீதிமன்றத்தின் உள்ளே முறைகேடாக நடந்து கொண்ட வக்கீல்கள் மீது விசாரணை நடத்துமாறும் போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

“கான்ஸ்டிடியூசனல் பெயிலியர். 356 இல் ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் அலறிக் கொண்டிருந்தார் சு.சாமி.

கடவுளே பெயிலியர் ஆகும்போது கான்ஸ்டிடியூசன் அப்பப்போ கொஞ்சம் பெயிலியர் ஆவதில் ஒண்ணும் தப்பில்லையே!

tail piece:

dsc_0147dsc_0148

அது என்னான்னு கேட்டா…

சென்ற வெள்ளிக்கிழமையன்று சு.சாமி, சந்திரலேகா, விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு போனார்களாம்.
dsc_0149வழக்கில் சுப்பிரமணியசாமி ஜெயமடைவதற்காக
தில்லை நடராசப் பெருமானுக்கு
ஒரு மணி நேரம் ஸ்பெசல் பூஜை நடத்தி
பிரசாதமும் கொடுத்தார்களாம் தீட்சிதர்கள்.dsc_0155
ஈஸ்வரனே கைவிட்டுட்டானே…

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பூஜை போடலாம்.
ஹை கோர்ட்டில் தமிழ்மக்கள் பூஜை போடக்கூடாதா?

brokenegg1

இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.

இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி

 

 1. முட்டை மட்டுமல்ல.. அவன் மூஞ்சியில ம்லத்தையும் கரைச்சு அடிச்சிருக்கணும்..
  பார்ப்பன நச்சுக்கிருமியை இன்னமும் விட்டு வச்சிருக்கமே!

  தியாகு

 2. ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி,இந்துமக்கள் கட்சி போன்ற பயங்கரவாதிகள் சிதம்பரத்தில் களமிறங்கி விட்டார்கள்,சுப்பிரமணிய சாமியோ உங்களுக்கு நான் கோயிலை மீட்டே தருவேன் எனக் கூறுகிறார். வேதாந்தியின் வருகைக்கு கூட நாள் குறிக்கப்படலாம்.எல்லாம் நடக்கலாம் .நாம் என்ன செய்யப்போகிறோம் .

 3. \\பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.ஹை கோர்ட்டில் தமிழ்மக்கள் பூஜை போடக்கூடாதா?\\

  \\இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.

  இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி!\\

  இதற்கு பெயர் சுயமரியாதை பூசை,

  எப்போதும் கடவுளுக்கு பூசை செய்து தன் வாழ் நாள் முழுவது சேவை செய்யும் பிராமணாளுக்கு ஏதோ தமிழனால முடிஞ்சது இவ்வளவுதான்.

 4. //என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.
  //

  முட்டையாலே அடிச்சாலே இந்த கூமுட்டை தலையன் செத்துடுவாரா?? அய்யோ, அய்யோ..
  ஒரு தடவை அ தி மு க அன்டர்க்ர்வுன்ட் தரிசனம்.. இப்போ முட்டை அபிஷேசம்.. சாமி சாமி

 5. Hi

  உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

  உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

  வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

 6. மக்களுக்கு போராடினால் இது தான் கதி. காந்திக்கும் இது மாதிரி ஆயிருக்கு.

 7. தட்டிக் கேட்க்க ஆளில்லாத தமிழகம்னு மெதப்பில்தானே காங்கிரஸ் காவாளிகளும், ஆர் எஸ் எஸ் பன்னாடைகளும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதிலும் இந்த கோமாளி வில்லன் சு.சுவாமியின் திமிருக்கு நியாயமாக ஆசிட் அடைத்த முட்டையை வீசிறியிருக்க வேண்டும்.

  புரச்சி

 8. இவன் காமெடியன்யா!! நெசமான வில்லனுங்க சோவு, ராமு மாமா, அம்சா, தங்கபாலு, மாலனு, தின மலக்காரன் இவனுங்கள விட்டுப் புட்டீங்களே அப்பு! அதுவும் மோடின்னு ஒருத்தன் தெகிரியமா தமிழ் நாட்டுக்கே வந்துபுட்டு போயிருக்காய்ன், மதுரை, சென்னைன்னு ரெண்டு எடத்துல பேசிட்டு வேற போயிருக்காய்ங்கறாங்க, அந்த வில்லனயும் மொட்டைத் தலயனயும் மேடைல வெச்சே அடிச்சிருக்க வேணாமா? அதுவும் புஷ்சுக்கு கொடுத்த மாரி.. சான்ஸ விட்டுப் புட்டீங்க அப்பு, விட்டுப் புட்டீங்க!!!

 9. // மக்களுக்கு போராடினால் இது தான் கதி. காந்திக்கும் இது மாதிரி ஆயிருக்கு.//

  என்னது மக்களுக்கு போராடினானா? சரிதான்!

 10. /*மக்களுக்கு போராடினால் இது தான் கதி. காந்திக்கும் இது மாதிரி ஆயிருக்கு.*/

  Semma Commedy

  Commediyala utcha katta commedy

 11. முட்டையால் சு.சாமியை அடித்த வழகறிஞர்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். முட்டை ஒரு நல்ல உணவு அதை சு.சாமி மீது அடிக்கலாமா?
  சு.சாமி போன்ற கிரிமினல்களுக்கு மலத்தை கரைத்து ஊற்றியிருக்கவேண்டும் அதுதான் சரியானது!

  சமிபத்தில் ஈழத்திற்காக மாணவர்கள் நடத்திய போராட்டதை “போராட்டம் நடத்துவதெல்லாம் கல்லூரிக்குப் போகாத ரவுடிகள், பொறுக்கிகளின் வேலை.”
  என்றும் தியாகி முத்துகுமரனின் தியாகத்தை கொச்சை படுத்தி பேட்டி கொடுத்தவந்தான் இந்த அயோக்கியன்.

  இந்த பார்ப்பன நாய்கள் தெருவில் மக்களால் அடித்து விரட்டபட வேண்டும் .

 12. சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வக்கீல்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

  தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.

  இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.

  இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.

  இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.

  இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது ஹாலுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த போலீசாரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.

  பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.

  சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் ஹாலுக்குள் வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.

  இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

  உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.

  நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 13. //பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.//

  சூப்பரப்பு….

 14. wow………
  சூப்பர்….சு.சாமி……சூ…சாமி..ஆக்கிட்டீங்களே….!
  இப்படியெல்லாம் அடிபட்டாலும் இவனுகளுக்கெல்லாம் புத்திவருமா ….?
  சீ….மானங்கெட்ட பொறப்புகள்.
  பொங்கும் தமிழகமே, தணிக்காதே உன் வேகத்தை.
  போ இன்னும் போ, …..உன் முதுகில் ஏறியிருக்கும் சனியன்களையெல்லாம் சாக்கடையில் தள்ள சரியான தருணமிது.

 15. மதுரையில் பிரேம்குமார் என்ற காவல்துறை எஸ்.பி.க்கு விழுந்த அதே செமத்தியான அடி இப்பொழுது சு.சாமிக்கும் கிடைத்திருக்கிறது. போனசாக, தக்காளி, முட்டையால் அடி.

  அடி வாங்கிய சு.சாமிக்கு குழம்பி போயிருப்பார். இந்த அடி எதுக்காக! ஈழ போராட்டத்தில் கருத்து சொன்னதற்காகவா! அல்லது தில்லை விசயத்தில் தலையிட்டதற்காகவா! அதுக்கு பாதி அடி! இதுக்கு பாதி அடியோ!

  ஆனா, நீங்க போட்டிருக்கிற படத்தப் பார்த்த,
  இவன் எவ்வளவு அடிச்சாலும், எங்க வச்சு அடிச்சாலும் தாங்குவான்யா! என்று தான் சொல்ல தோன்றுகிறது.

  அடித்து துவைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பான நன்றிகள்!

 16. உரிமைகள் மறுக்கப்படும்போதும், பரிக்கப்ப்படும்போதும்
  அவற்றை மீட்டெடுக்க,
  ஆயுதம் எந்துவதே உரிமையாகிறது…
  அங்கே தீவிரவாதம் தலையெடுக்கிறது….

  இதை நான் சொல்லவில்லை…..
  உண்ணாவிரத மேடையில் கமல் சொன்னார்…..

 17. கம்ப்யூட்டர திறந்ததும் ஒரு திவ்யமான செய்தி..

  சூப்பர்.. தூள்.. அருமை… ம்ம்ம்ம் வேறென்ன சொல்றதுன்னே தெரியலயே கலக்கிட்டேள் போங்கோ..

 18. தமிழக சட்ட வல்லுனர்களே , தணிக்காதே உன் வேகத்தை.
  தமிழினத்தின் முதுகில் ஏறியிருக்கும் சனியன்களையெல்லாம் சாக்கடையில் தள்ள சரியான தருணமிது.

  ஒற்றுமை காப்போம்! வெல்வோம்!!!

 19. இந்த செல்லாக் காசு சூப்பிரமணிகளை தமிழ்நாட்டிலிருந்தே அடித்துத் துரத்த வேண்டும். நன்றி வழக்குரைஞர்களே. நானே அடித்தமாதிரி ஒரு பீலிங்.

 20. Sun TV crew held in Vavuniya

  P K Balachandran First Published : 17 Feb 2009 05:23:46 PM ISTLast Updated : 17 Feb 2009 06:35:32 PM ISTCOLOMBO: Four Sri Lankan nationals allegedly employed by the Chennai-based SUN TV, were taken into custody together with their equipment in Vavuniya in North Sri Lanka, for suspected links with the LTTE ,the police said on Tuesday.

  Police spokesman Ranjith Gunasekera told Daily Mirror that the arrests had been made by the army on Monday, and the detainees were handed over to the Vavuniya police for further investigations.

  SUN TV, the police said, had been operating in Sri Lanka without a valid license. It is also probable that the SUN TV crew were trying to video the high security refugee camps in Vavuniya. The LTTE and those sympathetic to it, have been alleging that the refugee camps are but “concentration camps” with the inmates not being allowed to come out or interact with any outsiders except those allowed by the Security Forces and the government. The government has been vigorously denying that the camps are concentration camps, with certificates from the international aid agencies to vouch for this, But it has not allowed independent media institutions and journalists to meet the refugees, despite persistent requests, especially from the foreign media.

 21. \\இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.

  இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி!\\

  இதற்கு பெயர் சுயமரியாதை பூசை,

 22. முத்துக்குமார் தீக்குளித்தது உலகம் அறிந்ததே! சுப்பிரமனிய சுவாமி அதை ஒரு கொலையாக இருக்கவேண்டும் என காவற்துறை விசாரிக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருந்தார்.

  ஒன்றில் அவர் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது,
  ஒரு சமூக விசமியாக இருக்கவேண்டும்.

  பேச்சுரிமை அவருக்கு உண்டு என்றால், முட்டை எறிதல் ஒன்றும் கொலை முயற்சி இல்லை.

  அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை முட்டாளாக்குவ‌தை ஜ‌ன‌நாய‌க‌ம் தொட‌ர்ந்து பார்த்துக்கொண்டிருக்காது.
  முட்டை எறிந்த‌வ‌ர்களை அட்க்க‌ முற்ப‌ட்டால், நாளை அவ‌ர்க‌ள் க‌டும் தீவிர‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள்.
  விச‌மிக‌ள்தான் தீவிர‌வாதிக‌ளை உருவாக்குகின்றார்க‌ள்.

  புள்ளிராஜா.

 23. மனிதர்களிடம் பேசலாம்:
  விவாதிக்கலாம்:

  சில ஜென்மங்களிடம்
  முட்டையால்
  பேசுகிற பேச்சு!
  அழுகிய தக்காளியால்
  பேசுகிற பேச்சு
  அடி, உதையால்
  பேசுகிற பேச்சு தான் சரி!

 24. முகிலின் நல்ல பகிடி
  ++++++++++++++++++++++++++++++
  கோழிகளின் கவனத்துக்கு!

  இது ஐஎஸ்ஐ கோழிகளின் சதி
  – சு.சுவாமி கொக்கரிப்பு

  நாமக்கல், பிப். 17 – தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது –

  ‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

  எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

  நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

  இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

  http://www.writermugil.com/?p=380
  ++++++++++++++++++++

  நன்றி முகில்

 25. தமிழகத்தில் சூடு, சொரணை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் தான் இந்த நிகழ்வு.

  மாப்பு….

  வெச்சிடான்கய்யா… ஆப்பு…..

  சுப்பு அம்பி… ஜெயா மாமிக்கிட்ட கம்லைனட் பண்ணிடேளா.. இல்லையா…..

  மொகத்த கழுவிக்கோங்கோ… கவுச்சி வாட அடிக்கறது….

  – சென்னைத்தமிழன்

 26. கருத்து வேறுபாட்டை கருத்தால் மோதி வெல்லுங்கள் – வாதம் செய்ய முடியாதவன்தான் வன்முறையில் ஈடுபடுவான். சுப்ரமணிய சாமி ஒரு கோமாளிதான் – அதற்காக அவர் மேல் முட்டை அடிப்பது சரியாகிவிடுமா? நாளை வினவு கருத்து எனக்கு பிடிக்கவில்லை என்று நானும் முட்டை அடிக்கலாமா? பிறகு முட்டை யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் சொல்வதுதான் சரி என்று ஆகிவிடாதா? புள்ளி ராஜா முட்டை எரிந்தது கொலை முயற்சி இல்லை என்று பெருமைப்பட்டுக்கொல்கிறார். அப்புறம் சீமானின் டயர் எரிந்தது என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறை சொல்வது?

  பதிவும் மறுமொழிகளும் மிக கேவலமாக இருக்கின்றன. வினவு தளத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

  நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, அதனால் மீண்டும் குறிப்பிடுகிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். பார்ப்பன திமிர், குடுமி, அம்பி போன்ற பல கருத்து பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்.

 27. அய்யா ஆர்.வீ , நீர் பார்ப்பனர் என்பதனால் தானே சூசாமிக்காக பேச வந்திருக்கிறீர்கள். இதில் என்ன அப்ரூவர்போல ஆக்டிங் வேறு. சூசாமி கோமாளி மட்டுமல்ல அதிகார வர்க்கத்திலுள்ள வலுவான தொடர்பு மூலமாக மக்களின் வயிற்றிலடிக்கும் கொடூரன். அவனிடத்தில் பணமும் அதிராகமும் உள்ளது. கருத்தை கருத்தால் மோதுவது போல பணத்தாலும் அதிகாரத்தாலும் மோத நாங்க ரெடி… ஆனால் எங்களை போன்ற ஏழைகளிடம் பணமும் இல்லை அதிகாரமும் இல்லை முட்டை இருக்கிறது.
  பிறகு, சூசாமி ஒரு கூமுட்டை என்று மனதின் ஓரத்தில் கருதியதால் தான் முட்டை…..

 28. ஆர்.வி பார்பனர் என்பதர்காக வந்தாரா இல்லை முட்டை சுப்புவை பற்றி தெறியாமல் வந்தாரா. அவரு அமெரிக்காவுல இருந்து படிக்குறாரு இங்க தமிழ்நாடே கொண்டாடுது. முட்டை சுப்பு எத்தன பேர் வயத்தெறிச்சல கொட்டிருக்கான்னு இப்பதான் புரியுது.

 29. இவர் போன்ற வங்குரோத்துக் கோமாளி அரசியல்வாதிக்கு இதை விட மேலும் கிடைக்கும்.. பேசாமல் சினிமாப் பக்கம் வந்தால் வடிவேலுவுக்கு சவால் விடலாம்..

  கோழிகள் பாவம்.. 😉

  வினாவுக்கு வாழ்த்துக்கள்.. tamilstudioவழங்கும் முதலாவது விருது உங்களுக்கு என அறிந்தேன் .. கலக்குங்கள்..

 30. அய்யா முரளிகிருஷ்ணன்,

  நீர் பார்ப்பனர் இல்லை என்பதால்தானே சு. சாமியை எதிர்க்கிறீர்? இதில் என்ன சு. சாமியின் கோமாளித்தனம், அதிகார வர்க்கம் என்று வேஷம் வேண்டிக்கிடக்கிறது?

  முரளி அவர்களே, இது உங்கள் வரிகள். சும்மா மாற்றி எழுதி இருக்கிறேன். அந்த காலத்தில் பறையன் என்று திட்டினார்கள், நீங்கள் பார்ப்பான் என்று திட்டுகிறீர்கள். என்ன வித்தியாசம்? சு. சாமியிடமும் முட்டை வாங்க பணம் இருக்கும், அதனால் அவர் உங்கள் மீது முட்டை வீசுவது சரியாகிவிடுமா?

  ஏனய்யா விவாதத்தில் ஜாதி பார்க்கிறீர்கள்? நான் கருப்பா சிவப்பா குட்டையா நெட்டையா என்பதை விட்டுவிட்டு விவாதிக்க முயற்சி செய்யுங்களேன்! சு. சாமி சொல்வது சரி இல்லை. ஆனால் தவறான வாதம் செய்பவர்கள் மீது முட்டை வீசுவது சரி என்றால் நீங்கள் கூடத்தான் தவறாக ஜாதியை இழுக்கிறீர்கள். உங்கள் மீது நான் முட்டை வீசலாமா?

 31. கருத்தைக் கருத்தால் மோதுவதுன்னா என்னங்கிறதை பத்தி ஷோபா சக்தி ஒரு புதினத்தில் எழுதி இருப்பார்..

  ‘எதுடா கருத்து.. ஆயிரம் பேருக்கு முன்னாடி..உன் பெண்டாட்டியை நான் …ணும்னு ஒருத்தன் சொல்லுவான். அதைக் கருத்துன்னு சொல்லிக்கிட்டு கருத்தைக் கருத்தாலே மோதுவீயா” சொன்னது ஷோபா சக்தி..

  கடைந்தெடுத்த கிரிமினல் கூடாரமான தீட்சிதப் பார்ப்பன வெறியனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கிட்டு வந்த இந்த சூனா.சாமி முத்துக்குமாரின் சாவையே கொச்சைப்படுத்திப் பேசினவன்.. அதை எல்லாம் கருத்துன்னு கருதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

  ஆர்.வீ..! ஷோபா சக்தி சொன்ன அதே உதாரணத்தை உனக்கும் பொருத்திப்பாரு.. சூடு இருந்தா உனக்கும் கோபம் கொப்பளிக்கும்..இல்லைன்னா நீ மானங்கெட்ட பெய..

  குப்பன்

 32. அருமையான கருத்து ஆர்வி,

  நீங்கள் என்ன சாதி என்று யாருக்கும் தெரியாது ஆனால் ஒவ்வொருமுறையும் நான் பிராமணன் என்று விளக்கு பிடித்து சொல்லுகிறீர்களே எதற்காக?

  பார்ப்பனீயம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பீர்களே அதுதான் உங்களின் பதில்.”நான் பிராமணன் ஆனாலும் சாதி பார்ப்பதில்லை”

  ஆர்வி எதற்காக இந்த நாய்க்கு ஆதரவாய் பேசுகிறீர்கள்? ஈழத்திலே செத்துக்கொண்டிருக்கும் மக்களை கொச்சை படுத்தும் இந்த சொறிநாய்மேல் தங்களிடம் ஏன் கரிசனம்?

  உங்கள் கோயிலை விபச்சார விடுதியாக்கிய தீட்சிதருக்கு ஆதரவாய் உறுமுகிறாரே ஏன் அவர் மேல் உங்களுக்கு பாசம்?

  சாதியைத்தவிர வேறென்ன.

  உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போது யாரும் மனித உரிமைகளை பற்றி பேச மாட்டீர்கள் ஆனால் அதிகாரவர்க்கத்தின் மீது காயம் பட்டால் பலரது மனமும் துடிக்கும் .

 33. இவ்வளவு செஞ்சவங்களுக்கு அடி வாங்கிய மூஞ்சியை செல்போனில் ஒரு போட்டோ பிடிக்க தோணலியா ? முன்யோசனை போதவில்லை.

 34. RV: “மீண்டும் குறிப்பிடுகிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். பார்ப்பன திமிர், குடுமி, அம்பி போன்ற பல கருத்து பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்.”

  RV: “ஏனய்யா விவாதத்தில் ஜாதி பார்க்கிறீர்கள்? நான் கருப்பா சிவப்பா குட்டையா நெட்டையா என்பதை விட்டுவிட்டு விவாதிக்க முயற்சி செய்யுங்களேன்!”

 35. மன்னிக்கவும் ஆர்.வீ நான் பிறப்பால் பார்பான் தான்.
  ஆனால் அதை நான் சொல்லிக்கொள்ளவில்லை நீங்கள் சொல்லிக்கொண்டீர்கள். அதை தவிர்க்காமல் என்னை கடிந்து என்ன பயன். இப்பவும் சொல்கிறேன் சு.சாமியை முட்டையால் அடித்தால் முட்டைக்குத்தான் கேவலமே தவிர சு.சாமிக்கு அல்ல ஏனென்றால், அவன் வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை என முற்றும் துறந்தவன். புஷ்ஷின் மேல் ஷூ எறிந்தார்கள், பில் கேட்சின்/ சார்லஸ் மேல் ‘பை’ எரிந்தார்கள் இதெல்லாம் உலகெங்கிலும் உள்ள கலக நடைமுறை இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
  இந்து மத்தஃதில் ஹோலி என்ற பண்டிகை உண்டு தெறியுமல்லவா?

 36. கலகம் அவர்களே,

  ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன் – நீங்கள் கேள்வி கேட்டதால் பதிவே எழுதி இருக்கிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று சொல்வது ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே – நான் அதை சொல்லாவிட்டால் தமிழ் ப்ளாக் உலகில் பலரும் நீ குடுமியாக இருக்க வேண்டும், அதனால்தான் எதிர் கருத்து சொல்கிறாய் என்று கிளம்புகிறார்கள். அது எனக்கு மிகவும் கடுப்பை கொடுக்கும் விஷயம். அதனால் நானே முன் எச்சரிக்கையாக சொல்லி விடுகிறேன்.

  அது சரி, கலகம் நீங்கள் என்ன தருமி பரம்பரையா? கேள்வி மட்டும் கேட்பீர்கள், பதில் சொல்ல மாட்டீர்களா? பல கேள்விகள் கேட்டீர்கள், பொறுமையாக பதில் சொன்னேன். நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட நீங்கள் பதில் சொல்ல வில்லையே, அது ஏன்?

  சு. சாமி கோமாளிதான், முட்டாள்தான், கண்டிக்கப்பட வேண்டிய பல வாதங்களை வைப்பவர்தான். நான் அவரது வாதங்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக அவருக்கு வாதம் செய்யும் உரிமை மறுக்கப்படக்கூடாது. முட்டாள்தனமான கருத்துகள் சொல்பவர்களை எல்லாம் அடிக்கலாம் என்றால் நீங்கள் சொல்லும் பல கருத்துகள் எனக்கு முட்டாள்தனமாக தெரிகிறது. உங்களை அடிக்க வேண்டும் என்று நான் சொன்னதில்லை, சொல்லவும் போவதில்லை. உங்களுக்கு ஒரு value system, சு. சாமி பார்ப்பனர் என்பதால் அவருக்கு வேறு ஒரு value system என்று நான் வைத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்களும் அப்படி வைத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் தலை தலையாக அடித்துக் கொள்கிறேன்.

  தீட்சிதருக்கு ஆதரவாக உறுமுகிறார், அவர் மேல் என்ன கரிசனம் என்று கேட்டீர்கள். காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர் மீது உங்களுக்கு கரிசனம் உண்டா? பார்ப்பானையும் பாம்பையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி என்று ஜாதி வெறி பிடித்து பேசியவர் நல்ல கருத்துகளை சொன்னதே இல்லையா? கீழ் வெண்மணியில் கூலி கேட்ட கம்யூனிஸ்ட்கள்தான் குற்றவாளிகள் என்று சொன்னதற்காக அவர் சிலை மீது முட்டை அடிப்பீர்களா? பாம்பையும் என் ஐந்து வயது பெண்ணையும் பார்த்தால் என் பெண்ணை முதலில் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் மீதே கரிசனம் இருக்கும்போது சு. சாமியின் கருத்து சுதந்திரத்துக்காக நான் வாதாடக் கூடாதா என்ன?

  உழைக்கும் மக்கள் மீது எனக்கு கரிசனம் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நான் என்ன உட்கார்ந்து சாப்பிடும் வர்க்கமா? நீங்கள் என் செலவுக்கு பணம் கொடுக்கிறீர்களா என்ன? மேலும் உழைக்கும் மக்களுக்கு மட்டுமே உரிமைகள் உண்டு, அதிகார வர்க்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுதான் ஃபாஸிஸத்துக்கு செல்லும் சாலை.

 37. குப்பன்,

  ஷோபா சக்தி சொன்னதை விட ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ் என்பவர் நல்ல உதாரணம் சொல்லி இருக்கிறார் – ஆயிரம் பேர் உள்ள தியேட்டரில் தீ, தீ என்று கத்துவது என்று கருத்து சுதந்திரம் இல்லை என்று.

  உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்கள். சு. சாமி சொல்வது அவரது கருத்து இல்லாமல் வேறென்ன?

  பிரபா,
  கழகத்துக்கு எழுதிய மறுமொழியை படிக்கவும். இது பற்றி பல முறை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் இதே தளத்தில் பேசியதால் இந்த முறை முழு விளக்கமும் அளிக்கவில்லை.

  முரளி,
  சு. சாமிக்கு வெட்கம் இல்லை என்பதற்காக அவர் மீது முட்டை வீசுவது சரியாகிவிடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

 38. எது வன்முறைங்க ஆர் வீ ஐயா? நந்தன எரிச்சதா, வள்ளலாராப் போட்டுத் தள்ளியதா, ஒரு மொத்த இனத்தையே பல நூற்றாண்டுகளா
  கறுப்பன், கடையன், கீழானவன், பாலியல் தொழிலாளி மவென்னு கதை புனைஞ்சு தீண்டத்தகாதவென்னு ஒதுக்கி வெச்சதா, அவனுங்க சகோதரனுங்கள விட்டே அவனுங்க கூட சண்ட போட வெச்சு ஆண்டாண்டுகளா சாதிப்போரை மூட்டி விட்டது வன்முறை இல்லீங்களா ஐயா? நாங்க குனிஞ்சு குனிஞ்சு நடந்து துண்டக் கக்கத்துல வெச்சுக் கிட்டே போனோமே ஐயா? எங்க பெண்டுக வெத்து மாரோட போனாகளே ஐயா? படிக்கவே உடலீங்களே ஐயா? போங்க ஐயா!
  இதுலாம் வன்மொற இல்ல.. கூமுட்ட அடிச்சாத் தான் வன்முற… ?!!?
  எனக்கும் இதுல உடன்பாடு இல்லீங்க ஐயா. ஏன்னா அடிபட்டிருக்க வேண்டியது ‘hanibal’ மோடியும் ரெம்பா நாளா காட்டிக் கொடுப்புகள்ள ஈடுபட்டு வரும் சோவும் (80களிலேயே ஈழப் போராளி பயிற்சி முகாம்கள் எஙெங்க இருக்குன்னு போயி ஜெயவர்த்தனனுக்கு வரை படம் வரெஞ்சு கொடுத்துட்டு வந்தவென் ஆச்சே), மேட்டுக் குடி திமிரன் ராமும் தானுங்க ஐயா.. ஆஃப்டர் ஆல் நம்ம கூ.மு.சாமி வெறும் கோமாளி தானுங்களே!!

  மேல போட்டா பட்டியலு சின்னதுங்க ஐயா, நீளமா ஒரு பட்டியல் தமிழங்கிட்டவும் இருக்குங்கையா. ஆனாலும் அம்புட்டையும் மறக்கத் தேன்யா விரும்புறோம். ஆனாலும் பாருங்கைய்யா, நிகழ் காலத்துலயும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரா, தமிழ் மொழிக்கு எதிரா, ஈழ விடுதலைக்கு எதிரா, தமிழரு ஒண்ணாவதுக்கு எதிரா கெளம்பிருக்கரெங்க யாருன்னு பார்த்தா எவன்லாம் எங்களா வரலாற்றுல அடக்கி ஆண்டானோ , சூழ்ச்சி பண்ணானோ அவனு தானுங்களேய்யா!!!

  பார்ப்பனியத்தை காக்கும், பார்ப்பனியத்துக்காக உருவான ‘இந்து’யா, அதன் தேசியம், அசிங்கம் புடிச்ச செயக்கை மொழி சமசுகிருதத்த மையமா வெச்சு, அருவருப்பானா பொராணங்களோட ஒற்றை ஓரினத்த, மதத்த புனைய, காக்க முற்படும் அரசு கிட்ட அதிகார வருக்கத்துக் கிட்ட நாயமோ, முறையீடோ செய்ய முடியாதுங்க ஐயா.. ஆகவே முடிஞ்சது உள்ளே கனலும் நூற்றாண்டுக் கோவத்த குறைஞ்ச பச்சம் கூமுட்டை, தக்காளில மட்டும்
  தானுங்களே காட்டா முடிது…

 39. // ஷோபா சக்தி சொன்னதை விட ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ் என்பவர் நல்ல உதாரணம் சொல்லி இருக்கிறார் – ஆயிரம் பேர் உள்ள தியேட்டரில் தீ, தீ என்று கத்துவது என்று கருத்து சுதந்திரம் இல்லை என்று.//

  இருந்தாலும் குப்பனுக்கு நல்ல ஷொட்டுங்கைய்யா..
  ‘சோ’பா செக்திலாம் ஒரு ஆளுன்னு அவன் ஒதாரணத்தோட வந்ததுக்கு!!

 40. ஆப்பு ஃபார் பாப்பு அவர்களே,

  பேசுகிற விஷயத்தை விட்டு எங்கெங்கோ போகிறீர்கள். பல நூறாண்டுகளாக என் முன்னோர்களுக்கு, ஏன் எனக்கே பல கொடுமைகள் நடந்திருக்கின்றன, அதனால் சு. சாமிக்கு அவர் கருத்தை முன் வைக்க உரிமை கிடையாது என்கிறீர்களா? நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன, சாமி அந்த சட்டத்தை மீறாத வரையில் அவர் எந்த முட்டாள்தனமான கருத்தையும் முன் வைக்கலாம். அது முட்டாள்தனம் என்று கை கொட்டி சிரிப்போம், போடா கேனையனே என்று அவரை ஒதுக்குவோம், கடுமையான மொழியில் மாற்று கருத்துகளை வைப்போம். அவர் மீது முட்டை அடிக்கலாம் என்று சொன்னால் நாளை சீமானின் கார் டயரை எரித்தும் சரி என்று ஆகி விடும். உங்கள் வீடு புகுந்து ஒருவர் உங்களை அடிக்கலாம், ஏனென்றால் நீங்கள் அவர் ஜாதியை, மதத்தை, குடும்பத்தை, மனைவியை, குழந்தைகளை, தாத்தாவை, குல தெய்வத்தை, பள்ளியை ,கல்லூரியை, மொழியை, மாகாணத்தை, கேவலப்படுத்திநீர்கள் என்று அவர் நினைக்கிறார். கவனிக்கவும், நீங்கள் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாம். அவர் கேவலப்பட்டுவிட்டேன் என்று நினைத்தால் அதுவே போதும்.

  இது சரி அல்ல. வினவு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

 41. நானு இது வரை படர்க்கையில தானுங்க ஐயா பேசிட்ருக்கேன். நீங்க அத முன்னிலையா எடுதுக்கிட்டு தன்னிலையாச் சொல்லுறீங்க எங்க முன்னோருன்னு. உங்க முன்னோருக்கு ஆத்தங்கர வழிய நெறைய பிரம்மதேயங்கள் கெடச்சிருக்கும் ஐயா, எங்க முன்னோருக்கு மலமும், சூடும் தானுங்க ஐயா கெடச்சுது.
  போகட்டும் நானு ஏன் இவ்வளோ பட்டியல் போட்டு எழுதியிருக்கேன்னு புரியாதது வருத்தம் தானுங்க ஐயா. பார்ப்பனியருக்கு எங்கைய்யா சட்டம் திட்டம் ? அவங்களக் காக்கத் தானுங்கைய்யா இந்த தேசமே?
  ரெம்ப நாள் சூழ்ச்சியால தன்ன அடிமயா வெச்சிருந்து பிழிஞ்செடுத்து, ஒண்ணு சேர உடாமத் தடுத்து பிரித்தாண்ட ஒரு எசமான, இறுதில தெகிரியம் வந்து அடிமையாளு மூஞ்சில ஒரு அறை வுட்டுட்டு வெளியேறுறது
  மாரித் தானுங்க ஐயா.. அடிமையோட ஆண்டாண்டூ கோபத்துக்கு ஒரு அறை நாயம் ஐயா, அவன் இதுவர பண்ண தமிழர் எதிர்ப்பு செயல்களுக்கு கூமுட்ட, தக்காளி நாயமுங்க ஐயா.

  மத்தப் படி சட்டப் படி தப்பாவே இருக்கட்டுமுங்க ஐயா. அறச்சீற்றமுனு ஏதும் கேளிப்பட்டிருக்கீங்களா ஐயா? அத்தோட சீமான், பாண்டியன் காரைலாம் எரிச்சவெங்க இப்ப உள்ள தேன் கம்பி எண்ணிட்டு இருக்காங்க போல..! :-p ஆனா கு.முட்ட அடிச்ச வக்கீலுங்கள உடனே உள்ள போட்ட்ருவாங்க ஐயா. அதன் மூலம் நீதி நிலைச்சிடும்! மனு நீதி!

 42. ஆர்.வி ஐயா,

  குமுட்டைங்க என்ன கருத்து வேணா உளறலாம். மெத்த படித்த மேதாவி சு.சாமி பேசலாமா?

  அதுக்குத்தான் முட்டை அடி. இனி கொஞ்சம் யொசிப்பான் தாயொளி

 43. ஆர்.வி,

  நீர் என்ன சொல்ல வருகிறீர்? வன்முறை கூடாது என்கிறீர் அல்லவா? சரிதான் – புரிகிறது.

  எது வன்முறை? எது எதிர் வன்முறை ? அதனதன் வடிவங்கள் என்ன வென்று புரிந்து கொள்ள நீங்கள் முயல்வது நல்லது..

  சுப்பிரமணியசாமி, சோ, இந்து ராம், ஜெயா, காங்கிரஸ் – போன்றோர் கொண்டிருக்கும் கருத்தியல் ரீதியிலான வன்முறையின் தாக்கம்
  அவரை முட்டையால் தாக்கிய தோழர்கள் செய்த வன்முறையை விட பலப் பல மடங்கும் வீரியமும் தாக்கமும் கொண்டது. பல தமிழ் மக்களின் வாழ்க்கை சம்பந்தப் பட்டது.

  உங்க ஊட்ல எழவு விழுந்து நீங்களெல்லாம் மனசொடிந்து உட்காந்திருக்கும் போது ஒரு நாதாறி நாய் உள்ளே வந்து, சமய சந்தர்ப்பம் பாராமல் டமுக்கு டிப்பா டப்பா என்று ஆட்டம் போட்டால் அவன் சங்கை அறுத்து எறியும் வெறி உங்களுக்கு வரும் தானே? அட…. குறைந்தது அவன் பொடனியில் ஒன்று போட்டு வெளியே தள்ள மாட்டீர்கள்?

  அய்யா.. அங்கே எங்கள் உறவுகள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… எங்கள் பெண்களின் கருப்பைக்குள் கைய்யை விட்டு குழந்தைகளை கொல்கிறான் சிங்கள வெறியன்… எங்கள் இனமே கருவறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற ராஸ்கல்களின் சிங்கள ஆதரவுப் பேச்சு எங்கள் மனதில் எந்தளவுக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று உங்களால் உணர முடியவில்லையா?

  //வினவு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது வருத்தப்பட வேண்டிய விஷயம்.//

  ஆம்…. பலரின் சந்தோஷம் சிலரின் வருத்தமாய்த்தான் இருக்கும். எல்லோரையும் எல்லா நேரத்திலும் சந்தோஷப்படுத்தி விடமுடியாது தான். இன்றைக்கு தமிழ் நாட்டில் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்ற முப்பது லட்சம் தமிழர்களிடம் போய்க்கேளுங்கள் – இந்த சம்பவத்துக்காக அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.. உங்களைப் போல் “லாரி லோடுக்கு நாலு பேர் குறையர” கூட்டம் ஒன்றிரண்டு பேர் வருத்தப் படுவீர்கள் தான்.. ஆனால் அதற்கும் சேர்த்து நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்.

  கருத்துரிமை பற்றிச் சொன்னீர்கள் அல்லவா? எங்கள் மக்கள் உயிரோடு வாழும் உரிமையைக் கேலி பேசுவதற்கு எங்களிடமே கருத்துரிமை கேட்கிறீர்கள் அப்படித்தானே?

  எனக்கு ஏனோ சம்பந்தமில்லாமல் சில வருடங்களுக்கு முன் அக்யூஸ்டு ஜெயேந்திரன் ஜெயில் ப்ரவாஸம் போயிருந்தபோது அதைப் பற்றி பத்திரிகைகள் எழுதியதற்கு குடுமிகள் தங்கள் பத்திரிகைகளில் ”பத்ரிகா தர்மம்” குறித்து நீட்டி முழக்கியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. உரிமைகளில் ஆர்வம் கொண்டவரல்லவா நீங்கள்? உங்களுக்கு நினைவில்லையென்றால் அப்போது வந்த ( உங்கள் கலெக்‌ஷனில் இருக்கும் ) துக்ளக் இதழ்களையெல்லாம் வாசித்துப் பாருங்கள்.

  //சு. சாமிக்கு வெட்கம் இல்லை என்பதற்காக அவர் மீது முட்டை வீசுவது சரியாகிவிடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்//

  உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். வெறும் முட்டை வீசியது சரியில்லை என்று தான் நானும் நினைக்கிறேன் – அமில முட்டை வீசியிருக்க வேண்டும். கவலையை விடுங்கள் அடுத்த முறை சரி செய்து விட்டால் போகிறது.

 44. ஆப்பு ஃபார் பாப்பு அவர்களே,

  என்றோ படித்த படர்க்கை என்ற வார்த்தை எல்லாம் பயன்படுத்துகிறீர்கள். தமிழ் அறிந்தவர் போலிருக்கிறது.

  ஆனால் நான் ஒன்றை பற்றி பேசுகையில் நீங்கள் இன்னொன்றைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சு. சாமிக்கு தன் கருத்தை முட்டை அடி பயம் இல்லாமல் தெரிவிக்க சுதந்திரம் இருக்க வேண்டுமா இல்லையா என்பதுதான் கேள்வி. பிரம்ம தேயங்களும் மலம் சுமப்பதும் பேச வேண்டிய விஷயங்கள்தான் – ஆனால் இந்த பதிவும் சரி, இதில் உள்ள மறுமொழிகளும் சரி, அவற்றை பற்றி பேசவில்லை. சு. சாமி பார்ப்பனர், முட்டாள், தீசிதர்களுக்காக வாதிடுகிறார், தமிழ் சரியாக தெரியாது, அதனால் அவர் மீது முட்டை அடிக்கலாம், முட்டை பத்தாது என்றுதான் இருக்கின்றன. இதை நினைவில் கொள்ளுங்கள். அவருக்கு அந்த சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  சீமானின் காரை தாக்கியவர்கள் சிறை சென்றார்களா என்று கேட்டிருந்தீர்கள். உறுதியாக தெரியாது, ஆனால் சென்றிருக்க மாட்டார்கள். சு. சாமியை, கவனிக்கவும் அவரது காரை அல்ல, ரோட்டோரத்தில் தாக்கவில்லை, நீதி மன்றத்தில், நீதிபதியை சாட்சியாக வைத்துக்கொண்டே தாக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒரு எஃப். ஐ. ஆர். இது வரை போட்டு விட்டார்களா? தெரிந்தால் சொல்லுங்கள்.

  சிறை சென்றார்களோ இல்லையோ, சீமானின் காரை தாக்கியவர்கள் சிறை செல்ல வேண்டியவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதே போல்தான் சு. சாமியின் மேல் முட்டை அடித்தவர்களும் சிறை செல்ல வேண்டியவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்ன, முட்டை அடித்தவர்களுக்கு ஒரு நாள், இரண்டு நாள் சிறை போதும். காரை தாக்கியவர்களுக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் ரேஞ்சில் சிறை தண்டனை இருக்க வேண்டும்.

  சீமானுடனும் எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

 45. ஆர்.வி. பாக்கிஸ்தானும் லூசனுங்கதான் அதுக்காக அடிக்காமல் இருக்கலாமா? பிராமண ஆளும் வர்க்கங்களின் ஊடக சுதந்திரங்களுக்கும் கருத்துச் சுதந்திரங்களுக்கும் மிக அண்மையான உதாரணம் சொல்கிறேன். ராஜஸ்தானில் (இந்தியா) ஒரு முஸ்லீம் விவசாயி வீட்டடில் விமானக்குண்டுவீச்சு. சொந்த நாட்டு விமானம் குண்டு வீசியதாக அவர் பொலிசில் புகார் சொல்ல விமானப்படை சொல்லிவிட்டது தாங்கள் வீசவில்லை என்று. இவ்வளவற்றிக்கும் விமான குண்டு வீச்சுப் பயிற்சி தளத்திற்கு அருகிலே நடந்துள்ளது. அது சரி அப்ப இந்தியாவிற்குள் வந்து குண்டு வீசியது யார் என்று எந்த பத்திரிகையோ எந்த தொலைக்காட்சியோ சந்தேகம் தெரிவிக்கவில்லை. ஒரு மயிரும் கிடையாது. இந்திய அரசாங்கமே சொல்லிவட்டது தாம் வீசவில்லை என்று. அப்ப பாக்கிஸ்தான் தானே உடனே சொல்லுவீர்களே? என் மெளனம். காரணம் இந்திய விமானப்படையின் தவறு தெரிந்துவிடும் என்பதற்காக சொந்த நாட்டில் குண்டு வீசி தவறு செய்துவிட்டு இன்றுவரை எந்த ஊடகமும் இதைப்பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்க வில்லை. இதுதான் இந்தியாவின் ஊடக சுதந்திரம். பார்ப்பன ஊடக சுதந்திரம். சும்மா சாமிக்காக பரிந்து பேசவேண்டாம். (என்கொரு சந்தேகம். வன்னியில் மக்களுக்கு குண்டுவீசுவதற்கான பயிற்சிதான் ராஜஸ்தானில் நடந்ததோ தெரியாது. இருக்கட்டும்.

 46. // ஷோபா சக்தி சொன்னதை விட ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ் என்பவர் நல்ல உதாரணம் சொல்லி இருக்கிறார் – ஆயிரம் பேர் உள்ள தியேட்டரில் தீ, தீ என்று கத்துவது என்று கருத்து சுதந்திரம் இல்லை என்று.//

  மாப்பு

  சோபா சக்திய கருத்துச் சுதந்திரத்திற்கு உதாரணம் காட்டுக் கொண்டு வருகிறீரா? நல்ல காமெடியப்பா!

  சில மாதங்களுக்கு முன் தமிழச்சி சோபாசக்தியை கருத்துச்சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கிறாயா பேடின்னு கிழிகிழி என்று கிழித்தது தெரியாதா?

 47. So sad to hear this and this should be condemned, please lawyers don’t repeat this next time, just replace the rotten egg with acid egg. He should not open his mouth here after..

 48. மானமுள்ள தமிழா… நீ வாழ்க… ஆனால் இது மட்டும் போதாது. வேட்டியையும் உருவியிருக்க வேண்டும். வரும் காலங்களில் நாம் இந்த இனிய நாளைக் கொண்டாடவேண்டும். உன் இன உணர்வு தொடரவேண்டும்.

 49. ஆர்.வீ ஐயா நீங்க சொல்றதுக்கு நேர்கோட்டுல தான் ஐயா பதிலு சொல்லிட்டு இருக்கேன். நீங்க தான் ஐயா புரிஞ்சுக்க மட்டெங்குறீங்க.
  (இப்ப கூட அவங்கன்னு தான்யா பேசிட்ட்ருகேய்ன், நீங்க தாம்யா அந்த அவனுங்க’ல உங்களையும் வலுக்கட்டாயமாத் திணிச்சுக்கறீங்க!)
  கூ.மு.சாமி முட்டாள், பார்ப்பனர் (பார்ப்பனியத்துல பார்ப்பனர் இருக்கணுங்கர அவசியம் இல்ல ஐயா!), தமிழ் சரியா பேசத் தெரியாது இதெல்லாம் ஒரு வெசயமா நாங் கருதல ஐயா! அவர் அடி வாங்கினதே அவர் இம்புட்டு நாளுஞ் செஞ்சு வந்த தமிழ் இன எதிர்ப்பு ஈனசெயல்களுக்கும், இப்போ எங்க தமிழினத்துக்கு எதிரா கெளம்பலாம்னு காத்துகெடந்து ஆவலா வந்த அந்த மனப் பான்மைக்கும் தான்யா. அவருக்கு அவரொட கும்பலின் (பொந்து ராமு, சோவு & co.) பிரதிநிதியாத் தாமுயா அடி கெடச்சிருக்கு. இந்த ஆளு பாவம்யா. அடி வாங்க வேண்டியதே வேற வகையறா தொகயறாக்க.. அத மேல சொல்லிருக்கறேன்யா.

  இந்த மேட்டுக் குடி கும்பல் தங்கள் உயர் சாதி மனநிலையோட தமிழ்க் குடி மீது நிகழ்த்தி வரும் கருத்தாடல் தளத்திலான வன்முறை, செய்திமறைப்பு வன்முறை, ஈழப் படுகொலை ஆதரவு என்ற ஒரு வன்முறை இத எல்லாம் விடவா ஐயா ஒரு முட்டை வீச்சு வன்முறையாப் போயிட்டு? இதெல்லாம் வன்முறை இல்லன்னு நென்னச்சுட்டு இருந்தீங்களா ஐயா? இதெல்லாம் அவங்க சொதந்திரம்பீங்க ஐயா! இது அவனுங்க சொந்தந்திரம்னா அவனுங்களுக்கு முட்டை வீசுறது எங்க சொதந்திரம் தானுங்க. வன்மொறைக்கு வன்மொற சரியாகாதும்பீங்க ஐயா. மொதல்ல சொதந்திரம், வன்மொற எது எதுன்னு வரயற செஞ்சு சொல்லிபுடுங்க ஐயா!
  அசைக்க முடியாத, சட்டம் கிட்டம் எதுவும் பண்ண முடியாத ஒரு கும்பலுக்கு எங்களாலான சிறு அன்பளிப்புங்க ஐயா, நாங்க அதிபலம் மிக்க இஸ்ராயேல் இராணுவத்த எதிர்ப்புக் காட்ட முன்ன வந்து கல்லு உட்டு அடிச்சுச் செல்லும் பாலஸ்தீனச் சிறுவர்களாவே இருந்துட்டுப் போரோமுங்க ஐயா! ஆனா எதிர்ப்பு வந்துட்டே இருக்குமுங்க ஐயா! இன்னைக்கு கூ.மு. சாமிக்கு, நாளை சோவு, மாலனு, ராமு, தின மலக்காரனுங்களுக்கு..

 50. லவர்பாய்,
  வன்முறை கூடாது என்பதல்ல, கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அநேகம் பேர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக கருத்தை சொல்ல பயப்படும் நிலை வரக்கூடாது. அப்படி பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு மாறான கருத்தை சொல்வதற்காக ஒருவர் முட்டை அடி வாங்குவது நம் எல்லாருக்கும் கேவலம். அதை ஆதரித்து வினவு தளத்தில் ஒரு போஸ்ட் வந்திருப்பதும், அதற்கு இத்தனை பேர் வக்காலத்து வாங்குவதும் மகா கேவலம்.
  இலங்கை தமிழர்கள் விஷயத்தை பொருத்த வரையில் உங்கள் வீட்டுக்குள் சாமி நுழைந்து அட்டூழியம் செய்கிறாரா? மாறான கருத்து சொல்லும் சாமிக்கே அப்படி என்றால் படைகளை அனுப்பும் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அந்த அரசில் பங்கு வகிக்கும் டி.ஆர். பாலு, அந்த அரசை தாங்கிப் பிடிக்கும், சீமானை ஜெயிலில் போடும் கலைஞர், யார் மீதும் முட்டை வீசக் காணோமே? சாமிக்கு திருப்பி அடிக்க பலம் இல்லை என்ற ஒரே காரணம்தானே?
  // பலரின் சந்தோஷம் சிலரின் வருத்தமாய்த்தான் இருக்கும்.// சரி தவறு என்பது பலர் ஆதரிக்கிறார்களா இல்லை சிலரா என்பதை பொறுத்து இல்லை. ஏன், இலங்கை தமிழர்கள் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கால்வாசி இந்தியர்கள் புலிகளை எதிர்க்கிறார்கள், அந்த எதிர்ப்பினால் அவர்கள் இலங்கை அரசு என்ன செய்தாலும் இந்தியா தலையிடக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள். அதனால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்களா?
  இதில் ஜயேந்திர சரஸ்வதி எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் புரியவில்லை. ஆனால் இந்த குடுமி, அம்பி வார்த்தைகள் இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன், எழுதிவிட்டீர்கள்.

  வெங்கட்டன்,
  வன்முறைக்கு பதிலாக வன்முறை பயன்படுத்தப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டியதுதான்.
  இந்த ராஜஸ்தான் சமாசாரம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் அதற்கும் சாமியின் கருத்து சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்?
  அப்புறம் அது என்ன பார்ப்பன ஊடக சுதந்திரம்? ஒரு பார்ப்பனன் தவறு செய்ததாக வைத்துக் கொள்வோம். அதனால் ஒரு ஜாதியையே குறை சொல்வீர்களா? சரி ஒசாமா பல தீவிரவாத செயல்களை செய்தவர். முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவீர்களா?

  ஆப்பு ஃபார் பாப்பு,
  என்ன நேர் கோடோ, என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. சு. சாமிக்கு பெருவாரியானவர்களுக்கு எதிரான கருத்து சொல்ல உரிமை உண்டா இல்லையா? நேராகவே சொல்லிவிடுங்களேன்!

  அனைவருக்கும்,
  சாமியின் கருத்துகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன். வடிவேலு ஒரு படத்தில் சிரிப்பு போலீசாக வந்தது போல் சாமியும் என்னை பொறுத்த வரை ஒரு சிரிப்பு அரசியல்வாதி. அவரை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஆனால் அவர் நினைப்பதை பயம் இல்லாமல் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு. அவர் கருத்தை அவர் சொல்வது தவறு என்று சொல்வதை கடுமையாக எதிர்க்கிறேன்.

 51. கூ.மு.சாமியின் கருத்துரிமை பத்தி யாரும் எதும் சொல்லல இங்க!
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா, இப்ப்பவே கண்ணக்கட்டுதே. முடியல.. சொல்ல வேண்டியதத் தெளிவா மேல சொல்லியாச்சு எல்லாரும்! புரிஞ்சுக்கற நெலைல நீங்க தான் இல்ல! முடிஞ்சா இன்னொருவாட்டி படிச்சுப் பார்த்து தெளிவடையவும்!

 52. எய்யா ஆப்பு ஃபார் பாப்பு,

  நானும் ஒரு ஆறேழு மறுமொழி எழுதி இருக்கேன், எல்லா மறுமொழியிலும் சாமியின் கருத்து சுதந்திரம்னு தலை தலையா அடிச்சுக்கறேன். நீர் அதைப் பத்தி பேசாம வேற எதையோ பேசுரீர்னு திருப்பி திருப்பி சொல்லறேன். அப்படி சொன்னா இல்லே, நான் நேர் கோட்டிலதான் பேசுறேன்ன வேண்டியது. அப்புறம் இங்கே சாமியின் கருத்து சுதந்திரத்தை பத்தி யாரும் பேசலேன்னு சொல்ல வேண்டியது. எய்யா, அப்பு, நான் அதை பத்திதான் கரடியா கத்திக்கிட்டிருக்கேன். அதனால அட் லீஸ்டு நான் பேசலேன்னு சொல்லாதீரும். நீர் பேசலியா, ரொம்ப சரி. இப்பவாவது நேர் கோடு, குறுக்கு கோடுன்னு கதை அடிக்காம ஒத்துக்கிட்டீரே! அந்த மட்டிலும் சந்தோசம்.

  சரி இது வரைக்கும்தான் சொல்லலே. இப்பவாவது சொல்லும். சாமிக்கு முட்டை அடி பயம் இல்லாம தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கா இல்லியா? இருக்கு இல்லேன்னு தெளிவா சொல்லிப் போடும்.

 53. ///வன்முறை கூடாது என்பதல்ல, கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அநேகம் பேர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக கருத்தை சொல்ல பயப்படும் நிலை வரக்கூடாது. அப்படி பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு மாறான கருத்தை சொல்வதற்காக ஒருவர் முட்டை அடி வாங்குவது நம் எல்லாருக்கும் கேவலம். அதை ஆதரித்து வினவு தளத்தில் ஒரு போஸ்ட் வந்திருப்பதும், அதற்கு இத்தனை பேர் வக்காலத்து வாங்குவதும் மகா கேவலம்.///

  RV

  நீங்கள் எதை கருத்துச் சுதந்திரம் என்கிறீர்கள்? அப்படிப்பார்த்தால் ஹட்லர், ஸ்டான்லீன், முசோலினி, ராஜபட்சே போன்றவர்களின் கருத்துக்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள்?

 54. //நீதிமன்ற அறைக்குள் போலீசு நுழையக்கூடாது என்பதால் பூனை, எலியெல்லாம் வெளியே நின்றன. உள்ளே சாமி நுழைந்த்துதான் தாமதம், சு.சாமியின் மூஞ்சியை நோக்கிப் பறந்தன முட்டைகள்.//

  என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. சுப்பிரமணியசுவாமிக்கு நல்லதொரு படிப்பினை.

  நன்றி வினவு அவர்களே

 55. RV let me make one thing clear to you no one is born a brahmin, muslim, christian, indian or anything for that matter. all are moulded into one and all we are trying to do is rise above these man-made identities which enslave and exploit mankind. with regards to right to speech why is the popular media and certain sections of society are selective about this thing. this incident is certainly wrong but it is evident from this incident when the establishment does not heed to its own patrons things will tend to go out of hand which is bad but becomes inevitable.

 56. தோழர்களே
  இது சுப்ரமணியசாமி க்கு ஆதரவான வாதமல்ல. ஆனால் அதே சமயம் நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் நாளைய நீதிபதிகள். எண்ணிப்பாருங்கள் தற்போது வழக்கறிஞர்களின் செயலின் நியாயத்தை
  சித்ரகுப்தன்

 57. பென் அவர்களே,

  // no one is born a brahmin, muslim, christian, இந்தியன்…//
  நான் மறுக்கவில்லை. ஆனால் கருத்து சுதந்திரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் புரியவில்லை. அது வேறு டாபிக்.

  // why is the popular media and certain sections of society are selective about this thing. this incident is certainly wrong…//
  எனக்கு இந்த விஷயம் தெரிந்தது வினவின் பதிவு மூலம்தான். வினவு கருத்து சுதந்திரத்தை மதிக்கும் குழு என்று நான் நினைத்திருந்தேன். இருந்தாலும் இந்த ஒரு பதிவை வைத்து அவர்கள் செலக்டிவ் என்று சொல்லக் கூடாது என்று தோன்றுகிறது. ஏதோ தடுமாற்றம் என்று நினைக்கிறேன்.

  // …things will tend to go out of hand which is bad but becomes inevitable…//
  உண்மை. ஆனால் அப்படி தவறுகள் நடக்கும்போது அவை கண்டிக்கப்பட வேண்டும் அல்லவா? வினவும் சரி, இந்த பதிவில் மறுமொழி எழுதி இருப்பவர்களும் சரி, அது தவறு என்று கூட ஒத்துக்கொள்ளவில்லையே? மகிழ்ச்சியில் கூத்தல்லவா ஆடுகிறார்கள்? நீங்களே ஏதோ அரை மனதாக சொல்வது போல்தான் இருக்கிறது.

  சித்திரகுப்தன், நன்றாக சொன்னீர்கள்.

 58. சுப்பிரமணியம் சுவாமி யார் ?
  முதலில் அவன் ஒரு பாப்பான் .இரண்டாவது அவன் ஒரு அமெரிக்கா வின் உளவாளி .மூன்றாவது அவன் ஒரு சமூக விரோதி .நான்காவது அவன் ஒரு அழுக்கு புத்தி கொண்ட ஒரு அயோக்கியன் .
  தமிழர்களே எப்படி இந்த சாமி மாதிரி நாலாந்தர பார்ப்பான்கள் இன்றும் கோலோச்சிகிறார்கள் .கொஞ்சம் யோசிக்கனும்.நம்முடய தமிழர்கள் காலம் காலமாய் பல பிரிவுகளாய் சிதரடிக்கப்ட்டிருகிரர்கள்.அவர்கள் அனைவரும் ஒன்ர்டு பட்டு ஒரு நோக்கங்களை வேன்ற்றேடுக்கும் பலமில்லாமல் போய்விட்டார்கள்.
  “ப்ப்ரம்ம்மாநோமம்மம தேவதாஹா ” இதுக்கு என்ன விளக்கம் தெரியுமா .பிராமணர்கள் தாம் தெய்வம் என்பதாகும்.அவர்கள் இப்போவும் தங்களை தெய்வம் என நினைத்து கொண்டிருகிறார்கள் இந்த சாமி ,சோ,ஜெயலலிதா ,ராம் ,தினமலம் போன்ற மனித கழிவுகள்.
  இந்த சபாநாயகர் கோயில் என்கிற தில்லை சிதம்பரம் கோயில் நம்முடைய முன்னோர்கள் கட்டிய கோயில்.ஆதித்த சோழன் ,ராஜா ராஜா சோழன்,முதலாம் பராந்தகன்,பாண்டிய மன்னர்கள் எல்லாம் கட்டிய கோயில்.இதில் எங்கே வந்தார்கள் இந்த பிராமணர்கள்.
  இதில் சுப்ரமணிய சாமி போல அய்யோகிய பய சாமி க்கு என்ன வேலை .கொஞ்சம் யோசிக்கணும்.
  மானமுள்ள எவரும் ஏதாவது ஒன்றை முதலீடு செய்தே வருமானம் ஈட்டுவார்கள் .ஆனால் இந்த மானகெட்ட பார்பான்கள் முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்ட கூடியவர்கள் .அதில் கோயில் முதலிடம் .கோவிலை கைப்பற்றிவிட்டால் இந்த அறிவிழந்த தமிழ் மக்களிடம் இருந்து காலம் காலமாய் நோகாமல்,உழைக்காமல்,வருமானம் ஈட்டலாம். அதன் மூலம் யாரையும் அடிமை படுத்தலாம்.சி த காஸ்மிக் டான்ஸ் ஆப் த லார்ட் ன்னு பொய் சொல்லி பிழைக்கலாம்.டாலேர் ல் அள்ளலாம்.சாமி மாத்ரி நாய்களுக்கு கொடுக்கலாம்.இதான் உண்மை தமிழர்களே.
  அவனை முட்டை யால அடிச்சிருக்க கூடாது .அவனை செருப்பால அடிச்சிருக்கணும். தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து அவனுக்கு ஒரு பாடவா(FATWA ) அதாவது ஒரு சரியான MUDIVAANA தண்டனை கொடுக்கணும்.

  அதுதான் நாம் நமக்கு செய்து கொள்ளும் பரிகாரம்.அவனை அடித்த வக்கீல் கைகளுக்கு என்னுடைய கோடி வணக்கங்கள்.

  உமா ,தாய்லாந்து

 59. தமிழச்சி அவர்களே,

  அது ஹிட்லராக இருந்தாலும் சரி, அவரது கருத்துகளை நிராகரிக்க வேண்டுமே தவிர அவருக்கு பேச சுதந்திரம் மறுக்கப்படக்கூடாது என்று நினைக்கிறேன்.

  இங்கே தாய்லாந்து உமா எழுதி இருக்கும் மறுமொழியை பாருங்கள்
  // சுப்பிரமணியம் சுவாமி யார் ?
  முதலில் அவன் ஒரு பாப்பான் // மிச்ச எல்லாம் அப்புறம்தான்.

  பாம்பையும் என் ஐந்து வயது பெண்ணையும் பார்த்தால் யாரை முதலில் அடிக்க வேண்டும்? பெரியாரின் விடை தெரிந்ததுதான்.

  இந்த மாதிரி கருத்துகளை சொல்ல முடியும்போது, அவற்றை யாரும் கண்டிக்காதபோது, ஏன் ஹிட்லரை மட்டும் தனியாக பார்க்க வேண்டும்? இந்த வாதங்களை நான் நிராகரிப்பது போலதான் ஹிட்லரின் யூத எதிர்ப்பு வாதத்தையும் நிராகரிக்கிறேன். இந்த வாதங்களை சொல்ல உரிமை இருக்கும்போது ஹிட்லருக்கு மட்டும் ஏன் வேறு விதிகள்?

  இதனால் பெரியாரை நான் நிராகரிக்கிறேன் என்று பொருளில்லை. முடிந்தால் என் கூட்டாஞ்சோறு ப்ளாகை பாருங்கள். (ஆளுமைகள் பக்கம்)

 60. ur the one who keeps on saying that ur brahmin which is a typical brahminical or hindu mentality wherein a person is born a brahmin, a person is born bad or good and so on which is constant. i feel that maybe u need that identity. With regards to this Swamy incident whatever happd is regrettable but when the establishment is flawed, when the judiciary is prejudicial and when there are no avenues left this is what is bound to happen no matter whether one condones it or condemns it. In a land where to even to speak against certain things like Tamil nationalism, communist revolution, Ltte and so on whatelse do you expect. I again reiterate not to be selective.

  P.S: Remove ur poonool ur one of us but if we wear one do we become one of yours.

 61. We are talking about violence quite often here. Not acting against violence itself is a violence.

  Srilanka is acting violently against innocent Tamils. By way of keeping quite, India is commiting the equal sin.

  Congress govt in the centre and DMK in the state take the full responsibility for the violence. Not acting against Srilankan govt is a big violence.

 62. Ben,

  Perhaps you should read my replies before jumping to conclusions – I said I was born in the brahmin caste – Did I say anything about my being born good or bad? If you make such deductions, the problem is with you.

  Swamy incident is bound to happen whether one condones it or condemns it? Maybe. Why is it not being condemned? Is vinavu condemning it? Are the people who are replying here condemining it? They are praising it! Is that not clear to you?

  Whether you were a poonool or cross or a naamam or pattai or kottai is irrelevant to me. I wish it were the same for you as well.

 63. ஆர் வீ ரசிகர் மன்றம்

  தலீவா சும்மா நொக்கி எடுக்குற போ,
  இத இத இதத்தான் எதிர்பாத்தேன்.எங்கெ பிராக்டீசு செஞ்சீங்கோ
  ஐய்யர் சாரீரீரீ ஐகோர்ட்டிலயா?

  மாவாட்டுற செயலாளர்
  ஆர் வீ ரசிகர் மன்றம்

 64. ஆகா…. மிகவும் மகிழ்ச்சியான விடயம்… உதையும், முட்டை அடியும் வாங்கிய பின் அந்த மூஞ்சியை பார்க்க ஆவலாக உள்ளேன்.. எந்த நாளிதழிலாவது வந்திருக்கிறதா? சாத்தியப்படுத்திய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. என்றைக்கு சோ(மாரி)க்கு இந்த மாதிரி “பாராட்டு”க்குள்ளாக்க போகிறோம்?

 65. //பாம்பையும் என் ஐந்து வயது பெண்ணையும் பார்த்தால் யாரை முதலில் அடிக்க வேண்டும்? பெரியாரின் விடை தெரிந்ததுதான்.//

  ——————————————???????????????

 66. First things first it is you who always said that ur born a brahmin(being born into something is not a crime but clinging on to it is surely one. the hindu texts doesnt allow a person to change a man’s caste and thats what i said)

  Some questions i want to ask you

  1) Are you a brahmin,do you wear poonool or do you support the brahminical ideology?
  2)Does S.Swamy supports freedom of speech in this so called democratic land?(I’m afraid he doesnt which y he is not getting any sympathy from anybody except ofcourse….)

  Periyar is a different subject altogether and one needs to rise above all prejudices to understand him. He was against all kinds of injustice.

 67. நண்பர் ஆர்.வி அவர்களே.. அங்கு யாரும் சுப்ரமணிய சாமியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காக அவனை தாக்கவில்லை… மாறாக அவனைப் போன்ற நசுக்கிருமிக்கு ஒரு எச்சரிக்கை விடுவதற்கு தான் இந்த முட்டை அபிசேகம்.. அவன் கோவிலை அரசிடம் இருந்து தீட்சிதர்களிடம் திரும்ப ஒப்படைக்க மனு கொடுக்க வந்து இருக்கலாம்.. ஆனால் அவனின் ஈழ மக்களுக்கு எதிரான நச்சு வார்த்தைகளுக்குத்தான் இந்த அடி..
  இவ்வளவு பேசும் நீங்கள்.. ஆறுமுகசாமி என்ற வயது முதிர்ந்த பெரியவர்.. தேவாரம், திருவாசகம் பாட, தில்லை கோவிலுக்குள் சென்ற போது, அங்கு இருந்த தீட்சிதர்களால் அடித்து விரட்டப்பட்டார்… ஒருவன் தனது சொந்த பாட்டன் முப்பாட்டன் கட்டிய கோவிலுக்குள் தமிழில் பாடுவதற்கு எதிராக வன்முறை ஏவப்படும் என்றால்.. எதற்காக தமிழ் இனத்துக்கு எதிராக செயல்படும் இந்த கேனப்பயல் சு.சாமிக்கு எதிராக வன்முறையை கையாளக்கூடாது…

  நீர் பிறப்பால் பார்பான் அல்லது ஏதாவது உயர் சாதி என்றால்..
  வருணத்தை ஆதரிக்கிறாயா? மக்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்கு தனிந்தனியான சமூக அந்தஸ்தை வழங்குவதை ஆதரிக்கிறாயா? பார்ப்பான் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்லலாம் என்பதை ஆதரிக்கிறாயா? இதற்க்குஎல்லாம் பதில் “இல்லை” என்றால் உங்களை பெரியார் பார்பான் என்று குறிப்பிட வில்லை… உங்கள் 5 வயது பெண்ணையும் பார்ப்பான் என்று குறிப்பிடவில்லை.. அந்த தருணத்தில் கண்டிப்பாக பாம்புதான் தாக்கப்படும்…

  பெரியார், உலகில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவர், அவர் 5 வயது குழந்தையையும் பார்பான் என்று பிரித்து பேச, மனித நேயம் அற்ற “பார்பான்” இல்லை.. பார்ப்பனியம் தான் வேதத்தால், மதத்தால், சாதியால், தொழிலால் மக்களை பிரித்து அடிமை படுத்துகிறது.. இதனை ஆதரிப்பவன் எல்லோரும் பார்பான் தான்..
  நீர் சாதியை ஆதரிக்கவில்லை என்றால், அதை எதிர்கிறீரா? அதனால் துன்பப்படும் மக்களுக்கு அதரவு அதரவு அளிக்கிறீரா?

  “நான் சாதியை ஆதரிக்கவில்லை ஆனால் நான் பார்பான்” என்ற வாக்கியம் மிகவும் முரண்பாடானது..

 68. I am really getting tired. I must have posted a dozen replies today. All I keep saying is that:
  a. Swamy should be free to voice unpopular opinions without worrying about lawyers pelting him with eggs, that too in a court of law in front of justices.
  b. If you don’t like what Swamy says, argue with him; ignore him; reject him. But that doesn’t give anyone the right to pelt him with eggs.
  c. Pelting him with eggs should be condemned.
  d. The glee of Vinavu, and most of the people who have replied here is deplorable.

  If you disagree with any of the points, then I am willing to talk. I am tired of people like Appu_for_pappu telling me about the exploitation of lower castes, Ravi explaining to me about violence, Kalagam acting as if he has never heard the Periyar quote about paarppaan and paambu, and Ben explaining the workings of my inner psyche and how it clings to brahmin identity. Yeah, right – Ben knows more about my inner psyche than I do.

 69. தேசத்துக்காகவே உழச்ச அந்த மனுசாள,

  குழந்த முகத்த எப்படியா அடிக்க மனசு வந்துச்சு?

  எல்லாத்துக்கும் ஆண்டன் கூலி கொடுப்பான்.
  (ஏழைகளோட கூலி உயர்வ பத்தி பேச மாட்டான்)
  இந்த சுட்டிய பாருங்கள் மாமா சாமி முட்டாபிசேகத்தோட(பட்டாபிசேகம்னா பல்ல காட்டுவேளே) நிக்குறாரு

  http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3037&cls=row4

 70. karuththai mun vaithaal… karuthaadlam or vaathaadalaam. visanaththaai maddume mun vaippathai vazvaka konadavrukku. visanaththai kadaamal ivalavu naalum thamilaka makkal vaztharkale? avarkalukku unkal karuthurimai enna paddam kuthuchu? maraka intha vesaimaknukku oru vazvaithaan athu koduthuchu. enge saathi illai vanmuraikku ethirana poorthaan irukku.

  “naam entha ayuthathai kayil eduppathu enpathai emathu ethiriye theermanikkiraan”
  Methaku, Velupillai Pirabakaran.

 71. // naam entha ayuthathai kayil eduppathu enpathai emathu ethiriye theermanikkiraan”
  Methaku, Velupillai Pirabakaran.//

  ஐயோ, அத அவரு சொல்லலிய்யா! அவலத்தைத் தந்தவனுக்கே அவலத்தைக் கொடுப்போம் ! இத்தாம்லே அவருது.
  இங்க குழப்பம் கூடிருச்சு, நம்ம ஆர் வீ ஐயா புண்ணியத்துல.. போதும்யா

 72. கருத்தை முன் வைத்தால்.. கருத்தாடலாம் அன்றி வாதாடலாம். விசனத்தை மட்டுமெ முன்வைப்பதை வாழ்வாக கொண்டவா;களுடன் இவ்வளவு நாளும் கருத்தாடியதே மேல். மிருகமே நீ மனித வடிவில் பிறந்ததால்தான் கேட்கிறோம் கொஞ்சம் ம னி த த் தை பழகி கொள் என்று இவ்வளவு நாளும் சொல்லி வந்தது அந்த மிருகத்துக்கு ஒரு அரசியல்வாழ்வைதான் கொடுத்துச்சு. இதை நீங்கள் புடணீயாதவராக நடித்தால் உங்கள் நல்ல நடிப்புக்கு ஆஸ்காட; பாணீந்துரைக்க நான் வேண்டுகிறேன். விசனத்தையும் வன்முறையையும் வளா;த்வா;களுக்கு இதுவே பதில் அடியாக இருக்கமுடியும். மேலே ஒருவா; தமிழக மக்கள் விழிப்ர்ணா;வு அடைவதை கடுமையாக சாடுகிறாட;. சுவாமி குட்ட குட்ட தொடா;ந்தும் குனியாமல் கேள்விகேட்பதை கண்டித்து கருத்தெழுதுகிறாட;. இவரும் இப்படியான கீழ்தரமான வாழ்வுக்காக காத்திருப்பவா;போல்தான் தொணீகிறது அதனால்தான் அலறுகிறாட;. இங்கே சாதியை சுமாமியும் கருத்தெழுதுபவரும்தான் இழுக்கிறாட;கள் பின்பு தமிழக மக்கள் மேல் பழியை போடுகிறாட;.
  “நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எமது எதிடணீயே தீட;மானிக்கிறான்”
  மேதகு. வேலுபிள்ளை பிரபாகரன்

 73. I ask a question. Why in a big democratic nation, Police beat the people, shooting the crowd, being violent againt peaceful agitation, dening police permission for protests, arrests for undefinite fasting, lock-up deaths, POTA / TADA arrests on opposite party? Every people have their own views, we should respect it, correct? (this is most of discussion in this post.) But WHY indian (both state and central) government doing all these violence agaist thier own people? Please think, the Govt itself taught people how to face people those have different opinions, that is violance, by using Police or army. Behind the scenes somewhat Brahmins are the resposible as they were in top posts for long period of time in independent India. Now they are getting it back what they did for people. All these violence from the Govt and they should stop it first before people stop. (Remember Kamal’s dialouge in Nayagan). Therefore, egg throwing, slapping SuSami is acceptable. Thanks for reading.

 74. மீண்டும் ‘சத்தியமூர்த்தி’ காலத்துக்கு திரும்புகிறது, தமிழக காங்கிரஸ்

  தமிழ்நாட்டில் மக்கள் விரோத அமைப்பாக பார்ப்பனர்களுக்கான கட்சியாகவே காங்கிரஸ் இருந்தது. சுயமரியாதை இயக்கம் காங்கிரசின் தமிழின விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் தோலுரித்தது. காங்கிரஸ் கட்சியில் சுயமரியாதை இயக்கத்தை ‘தரம் தாழ்ந்த’ மொழிகளில் பேசி வந்தவர் சத்தியமூர்த்தி எனும், காங்கிரசுப் பார்ப்பனர்; அவரது பெயர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன சத்தியமூர்த்தி கோயில்களில் பெண்களை தேவதாசிகளாக்கும் கொடுமையை ஒழிக்க சட்டம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். இது ஒரு உதாரணம் தான். அவ்வளவு மோசமான வைதீக வெறியர்.

  இந்தப் பார்ப்பனரைப் பற்றி குத்தூசி குருசாமி ஒரு முறை ‘குடிஅரசு’ ஏட்டில் ஒரு நையாண்டி கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு “அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு” என்பதாகும். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிட மாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்டைகளை வீணாக்கக் கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையால் அடிக்கலாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செயல்வீரர்களாச்சே? எப்படி இருந்த போதிலும் சத்தியமூர்த்தியை அடித்து விடாதீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்”. – என்று எழுதினார்.

  அடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசியபோது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தே விட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த இளங் குத்தூசி, “அண்ணா முதுகு எப்படி இருக்கிறது” என்று மீண்டும் கிண்டலாக எழுதினார். குத்தூசி குருசாமியின் வரலாற்று ஆசிரியர் குருவிக்கரம்பை வேலு தனது நூலில் – இதைப் பதிவு செய்துள்ளார்

  (நன்றி: புரட்சிப்பெரியார் முழக்கம்)

 75. இது ஒரு மாதிரி(sample) தாக்குதல் மட்டும்தான். இதனினும் கூடுதலான நியாயமான தண்டனைகளை இனி தொடர்ச்சியாக மக்கள் வழங்குவார்கள். சு.சாமியை அவமானப்படுத்துவதும் எச்சரிப்பதும் தான் இத்தாக்குதலின் நோக்கமாக இருந்திருக்கிறது. மாறாக நையப் புடைக்க வேண்டும் என்கிற நியாயமான எண்ணத்தின் அடிப்படையில் இன்னும் சற்று கூடுதலாக தாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தபோதிலும், வழக்கறிஞர்கள் இத்தோடு நிறுத்தியிருப்பதிலிருந்து நாம் இதனை யூகிக்க முடிகிறது.

  இது சு.சாமியின் மீதான தாக்குதல் மட்டுமன்று. பார்பன திமிரெடுத்து பிறரை இழிவுபடுத்தும் கொழுப்போடு செயல்பட்டுவரும் ‘ஹிந்து’ராம், சோ, ஜெயலலிதா போன்ற பயங்கரவாதிகளின் மீதான மக்களின் தீர்ப்பின் துவக்கமே இத்தாக்குதல் நடவடிக்கை.

  நீதிபதிகளால் விற்கப்படும் நீதியும் சட்டமும், நேற்றையதினம் வழக்கறிஞர்களால் நேர்மையாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இத்தாக்குதல் நடவடிக்கை நீதிபதிகளுக்கும் ஒரு சரியான பாடத்தை வழங்கியிருக்கிறது.

  நீதி மன்றத்துக்குள் நுழைந்து அதிரடியாக மக்கள் தீர்ப்பை வழங்கிய அந்த நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவண்,
  ஏகலைவன்.

 76. பகத் எழுதுகிறார். // ுப்ரமணிய சாமியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காக அவனை தாக்கவில்லை… அவனின் ஈழ மக்களுக்கு எதிரான நச்சு வார்த்தைகளுக்குத்தான் இந்த அடி //

  அதாவது சாமி பகத்திடம் இனி மேல் அய்யா இப்படி சொல்லாலாங்களா என்று கேட்டுக்கொண்டு கருத்து சொல்ல வேண்டும். பகத் எதை எல்லாம் நச்சுக் கருத்து என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் சாமி சொல்லக்கூடாது. ஆனால் சாமியின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படவில்லை என்று பகத் சொல்லுவார். அட போங்கய்யா!

  பகத், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி கருத்து சுதந்திரம் பற்றி மட்டுமே இங்கே இனி மேல் பேச விரும்புகிறேன்.

  வினவு எழுதுகிறார். // எது கருத்து சுதந்திரம்? அதற்கென்ன அளவு கோல்? அதன் வரம்பென்ன? // சரி அய்யா இதையும் யோசிப்போம். எங்கே கருத்து சுதந்திரம் முடிவடைகிறது? அதன் முடிவுகளை தீர்மானிப்பவர் யார்? சாமி இது வரையில் பேசலாம், இதற்கு மேல் பேசக்கூடாது என்றால், அந்த வரையறையை தீர்மானிப்பவர் யார்? சாமி என்ன ஐயா எந்த கருத்துகள் உங்களுக்கு ஏற்புடையவை, எது வரையில் நான் வேறு கருத்து சொல்லலாம் என்று உங்களை கேட்டுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டுமா? சாமியோ, அட நானோ, உங்கள் மனைவியோ, தோழர்களோ உங்களிடமிருந்து எவ்வளவு தூரம் வேறுபடலாம் என்று நீங்கள் தீர்மானிப்பீர்களா? நீங்கள் சர்வாதிகாரியாக இது என்ன குறுக்கு வழியா? இல்லை நீங்கள் நடமாடும் கடவுளா? அதை விட ரூப் கண்வாரை எரிக்கலாம் என்று பேச உரிமை இருப்பதே நல்லது. அட நீ இவ்வளவு கேவலமானவனா என்று நாலு பேர் அப்படி பேசுபவனை கேள்வி கேட்பார்கள்.

  சட்டத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள். கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் நல்ல சட்டம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தடாவையும் பொடாவையும் நீங்களும் எதிர்க்கிறீர்கள் என்று ஞாபகம். அப்புறம் சீமானுக்கு கருத்து சுதந்திரம் இல்லை, சீமானை சிறைப்படுத்துவது தவறு என்று எப்படி எல்லாரும் பொங்குகிறீர்கள் என்று புரியவில்லை. சட்டம் பேச்சுரிமையை சில இடங்களில் கட்டுப்படுத்தினால் அது விதிவிலக்கு மட்டுமே.

  சாமி ராமர் பாலத்தை நிறுத்தினார், தீட்சிதர்களை ஆதரிக்கிறார் என்று எழுதி இருந்தீர்கள். அதனால் அவருக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? சரி தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரிந்து போனார்கள். அழகிரிக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? தர்மபுரியில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்கள். ஜெவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? கலைஞர் ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்து போன விஷயம் என்று வெளிப்படையாக சொல்கிறார். அவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? இல்லை சு. சாமிக்கு மட்டும்தான் இந்த விதிகளா?

  அழுகிய முட்டை வீசுவது ஜனநாயக முறை என்று நீங்கள் சொல்வது மிகவும் வியப்பை அளிக்கிறது. சரி, நீங்கள் அம்பத்தூரில் நடத்திய மாநாட்டில் நான் வந்து பேச்சாளர்கள் மீது முட்டை வீசி இருந்தால் ஆர்வி ஜனநாயக முறைப்படி தன் எதிர்ப்பை காண்பிக்கிறார், கை தட்டுங்கள் என்று பதிவு எழுதி இருப்பீர்களா என்ன? அமெரிக்காவிலோ ஆஃப்ரிக்காவிலோ நடப்பதுதான் என்று எழுதி இருந்தீர்கள். அதனால் அது சரி ஆகிவிடுமா? அங்கே நடக்கிறது, இங்கே நடந்தால் என்ன என்று கேட்பது முட்டாள்தனம். அப்புறம் ராணி பத்மினி உடன்கட்டை ஏறவில்லையா, ரூப் கன்வார் ஏறினால் என்ன தவறு என்று கூட எந்த கேனையனாவது கேட்கலாம்.

  மீண்டும் பார்ப்பனீய புராணத்தை ஆரம்பிக்கிறீர்கள். நான் இங்கே கருத்து சுதந்திரம் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.

  டிஎன் தமிழ் அவர்களே, என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை. விசனம் என்றால் கவலை என்றுதானே அர்த்தம்? இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உண்டா?

 77. eaapa RV,
  PERIYAR nu solla kuuuthchama erukka? pora pokkula appadiea keela venmani pathi thappu thappa solrathu thanya nee parppan,,,,,,,, periyar thanya sathi veri muthuramalinganukku ethira avana kaithu panna sonna orea thalaivarnu varalaru,,,,

 78. RV

  தாய்லாந்து உமா கருத்துக்கள் எனக்குத் தேவையில்லை. உங்களுடைய கருத்துக்களுடனே என்னுடைய விவாதத்தை தொடர நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது ஒரு மனிதன் சிந்தனை பேச்சுக்கள், அதன் விளைவாக எழும் செயல்கள் என தொடர்ச்சியான செயல்பாடுகளை இனம் காண மறுக்கிறீர்கள். பேச்சு சுதந்திரம்/ கருத்து சுதந்திரம் என்னும் கண்ணோட்டத்திலேயே பிரச்சனையை மேலோட்டமாக அணுகிறீர்கள். பேச்சுக்களின் செயல்பாடுகள் அதுவும் அதிகாரங்கள் குவிந்துகிடக்கும் ஒருவனிடம் இருந்தால் அவனுடைய அணுகுமுறை எப்படி இருக்கும்? குடும்பத்திலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி.

  “வினவு” தளம் மாறுபட்டது. சமூக அநீதிகளை அம்பலப்படுத்திச் செல்லும் கூரிய எழுத்துக்கள் எல்லலுடன், ஆவேசத்துடன் வெளிப்படுத்துகிறது. இத்தளத்திடம் சு.சாமியைப் பற்றி இப்படியொரு பதிவை போட்டிருக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லும் போது வினவு கருத்து உரிமையையும்/ பேச்சு உரிமையையும் நீங்கள் முடக்குவதாக விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக இருக்கிறதே? இது எந்த வகையில் நீங்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் கருத்து / எழுத்து சுதந்திரத்திற்கு பொறுந்திப் போகிறது என்பதே எமது கேள்வி?

  //பாம்பையும் என் ஐந்து வயது பெண்ணையும் பார்த்தால் யாரை முதலில் அடிக்க வேண்டும்?//

  உங்களுடைய ஒப்பிடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் போல் இதுவும் சொதப்பலாக இருக்கிறது. 5 வயது குழந்தையை பாம்புடன் ஒப்பிடுகிறீர்கள். இதை உங்கள் கருத்துச் சுதந்திரம் என்பதா? உங்களுக்கு சிந்திக்கும் திறன் இந்த அஙவில் தான் இருக்கின்றதா?

  //இந்த மாதிரி கருத்துகளை சொல்ல முடியும்போது, அவற்றை யாரும் கண்டிக்காதபோது, ஏன் ஹிட்லரை மட்டும் தனியாக பார்க்க வேண்டும்? //

  பெரியார் இதை மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொரு தமிழனையும் கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னார். அப்படி சொல்வதற்கு என்ன காரணமென்றால்….

  மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிடப் பெருங்குடி மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் வசிகிறார்கள். “பார்ப்பானின் வைப்பாட்டி மகன்” என்ற பொருளையுடைய “சூத்திரன்” என்ற இழிபட்டத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்யப்பட்டதுடன், அதை அம்மக்கள் நம்பும்படியும் செய்யப்பட்டுள்ளனர். வேத சாஸ்திர, இதிகாச புராணங்கள் அத்தனையும் திராவிடர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே பார்ப்பனர்களால் எழுதப்பட்டனவாகும்.

  பார்ப்பனர்கள் திராவிடர்களிடையே பல்வேறு சாதிகளை உண்டாக்கி அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளார்கள். திராவிடர்கள் கீழே அமிழ்ந்து கிடந்த உழலும் நிலையில், பார்ப்பனர்கள் மாத்திரம் உயர்ந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் சாதி முறையேயாகும். திராவிடர்கள் மிகக்குறைந்த ஊதியம் பெறும் சாதாரண ஊழியர்களாக இருக்கும் போது, பார்ப்பனார்கள் உத்தியோக மண்டலம் முழுவதையும் தங்கள் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.

  அதுவும் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இந்த நாட்டைவிட்டுப் போனபிறகு நிலைமை இன்னும் மோசமாயிற்று. சாதிமுறை ஒழிந்தாலெழிய, திராவிடர்களின் இழிநிலை மாறாது. சாதிமுறையைப் பலப்படுத்தியும், அதன்மூலம் பார்ப்பன ஆதிக்கம் என்றென்றும் நீடித்து நிலைபெறும் வண்ணம் செய்வதற்கே இந்திய அரசியல் சட்டம் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது அவ்வளவ எளிதல்ல. பிரதம் மந்திரி திரு. நேரு பார்ப்பனரும், குடியாட்சித் தலைவர் திரு. இராசேந்திர பிரசாத் பார்ப்பனரும் ஆட்சிப் பொறுப்பைப் பலமாகப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இராஜ்ய அரசாங்கமோ சாதியை ஒழிக்க எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கச் சக்தியில்லாத அதிகாரமில்லாத ஒன்றாக இருக்கிறது.

  எனவே, சட்ட வரம்புகளுக்குட்பட்ட முறைகளைக் கையாண்டு, சமூக பேதங்களைப் போக்க சாதியை ஒழிப்பதற்குச் சரியான வழிவகை கண்டுபிடிப்பதென்பது இயலாத காரியம். திரு.ஜின்னா அவர்கள் இஸ்லாமியர்கக்குத் தனி நாடு வேண்டுமென்றார். ஆரம்பத்தில் திரு. ராஜகோபாலாச்சாரியார் அதைக் கிண்டல் செய்தார். ஆனால் ஜின்னா அவர்கள் கத்தியைக் காட்டிப் பாகிஸ்தானைப் பெற்றார்.

  திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் பள்ளிப் பிள்ளைகளை அவரவர் குலத் தொழிலைக் கற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டார். எதிரி (பெரியார்) இதைக் கண்டித்து, பல கிராமங்களில் சென்று பேசி பலமான எதிர்ப்பைத் திரட்டினார்.

  ஆனால், திரு. ஆச்சாரியார் அவர்கள் 30- நாட்களில் அக்குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால் பார்ப்பனர்களைக் குத்தும்படி எதிரி பொதுமக்களைப் பார்த்துச் சொன்னார். 30- நாட்கள் முடிவடைவதற்கு முன்பே திரு. ஆச்சாரியார் அவர்கள் பதவியை விட்டு விலகினார்.

  ஆகவே, சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒரே வழி இந்நாட்டில் உள்ள பார்ப்பனர்களைப் பலாத்காரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டை விட்டு விரட்டுவதாகும். ஆனால், இந்த அதி தீவிர நடைமுறையைக் கையாளுமுன்பு இந்திய அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும். அதன் மூலம் சாதியை ஒழிப்பதற்குப் பலன் ஏற்படவில்லையானால் காந்தியாருடைய படத்தை எரிக்க வேண்டும். அதற்கும் பலன் இல்லையானால் காந்தியாருடைய சிலைகளை உடைத்து நொறுக்க வேண்டும். இவை அத்தனையும் செய்தும் ஒன்றும் வழிபிறக்கவில்லையானால், நேருவின் கொடும்பாவியைக் கட்டி இழுக்க வேண்டும். அதற்கடுத்த காரியமாக நேருவின் படத்தைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டும்.

  இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்குமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடபெற வேண்டும்.

  இந்த மாதிரி இரண்டொரு நிகழ்ச்சிகள் நடந்தால் போதும். அதுவே தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை வெளியேறச் செய்து, தமிழர்களின் நீண்டநாள் அடிமை வாழ்வு அகல அடிகோலும். எதிரிக்கு வயது 78-ஆகிறது; அவர் “இன்னும் நீண்டநாள் தாம் வாழ்வோம்” என்று நினைக்கவில்லை. பொதுவாழ்வில் இருக்கும் அவருக்கு வயது ஏற ஏற விரைவில் இலட்சியத்தை அடையத் துடிக்கும் அவரது உணர்ச்சியும் பெருகிக் கொண்டே வருகிறதென உணர்கிறார். இந்த 79- ஆம் வயதில் இலட்சியத்தைப் பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை அடைந்தே தீர வேண்டுமென்றும் அதில் வெற்றி – தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இறுதிக்கட்டத்தை அடைந்து இரண்டிலொன்று பார்த்தே ஆக வேண்டுமெனவும் நினைக்கிறார்.

  இதற்காக தந்தை பெரியார் மீது வழக்குத் தொடரப்பட்டது.

  05-10-1957- குளித்தலையிலும், 13-10-1957- பசுபதிபாளையத்திலும், 20-10-1957- திருச்சியிலும் தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சுக்களுக்காக இ.பி.கோ. 302, 436, 117- ஆகிய பிரிவுகளின் கீழ்த் தொடரப்பட்ட வழக்கில் திருச்சி ஜில்லா நீதிபதி உயர் திரு. எஸ்.சிவசுப்பிரமணிய நாடார் அவர்கள் மூன்று பேச்சுகட்கும் முறையே ஆறு ஆறு மாதத் தண்டனை விதித்து இதை ஏககாலத்தில் அனுபவிக்கும்படி 14-12-1957-ல் தீர்ப்பளித்தார்.

  தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு தமிழ்மக்களிடம் இருந்து வந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் இட்லரையும் பெரியாரையும் நீங்கள் ஒப்பிட்டது தவறு. இட்லர் தன் அதிகாரத்தை மக்களிடம் காட்ட நினைத்தான். அதன் விளைவு இன்றும் ஐரோப்பாவில் இட்லர் என்றால் உலகில் தோன்றிய மனிதர்களில் மிக மோசமானவன் என்ற அடையாளம் உண்டு. பெரியார் என்றால் சமூதாயத் தொண்டில் ஈடுபட்டு மக்களுக்காக பாடுபட்டவர் என்று போற்றப்படுகிறார்.

  உங்கள் வாதப்படி இட்லரின் கருத்து சுதந்திரத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதும் அவர்கள் இட்லரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் பொருள் கொள்ளலாமா?

 79. /////////////சாமி ராமர் பாலத்தை நிறுத்தினார், தீட்சிதர்களை ஆதரிக்கிறார் என்று எழுதி இருந்தீர்கள். அதனால் அவருக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? சரி தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரிந்து போனார்கள். அழகிரிக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? தர்மபுரியில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்கள். ஜெவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? கலைஞர் ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்து போன விஷயம் என்று வெளிப்படையாக சொல்கிறார். அவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? இல்லை சு. சாமிக்கு மட்டும்தான் இந்த விதிகளா?///////////////

  ஆர்.வி.மாமா, நீங்க சு.சாமிக்கு ஆதரவாக இங்கே மல்லுக்கு நின்று கொண்டிருப்பது வியப்பிற்குரிய விசயமல்ல. அதுதான் சரி. பார்ப்பனியத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவன், பாசிஸ்டுகளின் கருத்து சுதந்திரத்திற்காக வாதிடுபவனின் வாயிலிருந்து எந்தெந்த வார்த்தைகள் வரவேண்டுமோ அத்தனையும் சுதி சுத்தமாக உங்கள் பதிவுகளில் வெளிப்பட்டிருக்கின்றன. உங்களை நீங்கள் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்திக் கொண்டு வாதிட்டு வருவதற்காக முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ”உன்னை எவனாவது சூத்திரன் என்று சொன்னால் ஆத்திரம் கொண்டு அடி…” என்றார் பெரியார். சூத்திரன் என்று ‘கருத்து சுதந்திரத்தோடு’ம் பார்ப்பன திமிரோடும் பேசிய உன் அப்பன் பாட்டன்களுக்கு பெரியார் கொடுக்கச் சொன்ன தண்டனை அது. ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவனை இழிவுபடுத்தும் அயோக்கியத்தனம்தான் இருக்கிற சமூகக் கொடுமைகளிலேயே, ஆகக் கொடியது என்பதால்தான் பெரியார் ஆத்திரம் கொண்டு அடிக்கச் சொன்னார்.

  இப்போ உங்க கருத்து சுதந்திரத்துக்கு வாருங்கள். மொழித்தீண்டாமையையும், சாதித்தீண்டாமையையும் வெளிப்படையாகக் கடைபிடித்து வந்த தில்லை தீட்சித பொறுக்கிக் கும்பலுக்கு ஆதரவாக நிற்பவனுக்கு சுதந்திரம் வேண்டும் என்று நீங்கள் வேண்டுவதுபோல, ஆயிரமாண்டுகளாக அடிமைத்தனத்தில் கிடந்த எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வேண்டியிருக்கும்?! நாங்கள் இன்னும் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு ‘சுதந்திரத்தை’ எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மைநிலை.

  இதனை ஏன் நீங்கள் சு.சாமியின் ‘கருத்து சுதந்திரத்தின்’ மீதான தாக்குதல் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்?! எங்கள் ஆறுமுகசாமியை தமிழ் பாடியதற்காக, பிறப்பையும் மொழியையும் சொல்லி இழிவுபடுத்தி கையை உடைத்த தீட்சிதர்களிடம் போய், ஆறுமுகசாமியின் ‘கருத்து சுதந்திரத்திற்காக’ இதுவரை வதிடாத உங்களைப் போன்ற ‘நடுநிலை’யான அம்பிகளின் மீதான தாக்குதலாக எண்ணிக்கொண்டு மீண்டுமொருமுறை நன்றாக யோசித்துப் பாருங்கள்.

  ஆறுமுகசாமிக்கு ஆதரவாக நாங்கள் கடைபிடிக்கும் ‘கருத்து சுதந்திரத்தை’ ஆதரித்து நீங்களே எழுதவேண்டிய வாய்ப்பு உங்களுக்கு அப்போதுதான் கிட்டும்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 80. தமிழச்சி அவர்களே,

  நன்றாக கவனியுங்கள் – வினவு தளத்தில் இது போன்ற ஒரு போஸ்ட் வருவது கேவலம் என்று சொல்லி இருக்கிறேன். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லி இருக்கிறேன். deplorable என்று சொல்லி இருக்கிறேன். வினவு இது போன்று எழுதக் கூடாது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. (ஆனால் எதிர்காலத்தில் வினவு தளத்தின் தரத்தை பற்றிய ஆதங்கத்தில் நான் இப்படி சொல்லக்கூடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.) கேள்வி கேட்க வேண்டியதுதான், ஆனால் கொஞ்சம் கவனமாக கேளுங்கள்.

  கருத்து சுதந்திரத்தை நீங்கள் வரையறுக்க விரும்புகிறீர்கள். உங்கள் கருத்துகளுடன் எவ்வளவு தூரம் மாறுபடலாம் எனபதை நீங்களேவா சொல்ல முடியும்? அப்புறம் என்ன கருத்து சுதந்திரம் வேண்டிக் கிடக்கிறது? பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்தது அவர் கருத்து சுதந்திரம் இல்லையா? உங்களை போன்று அப்போதும் பல பேர் பொங்கி எழுந்திருப்பார்கள். அவரை எதிர்த்தவர்கள்தான் பெரும் மெஜாரிடியாக இருந்திருப்பார்கள். அதனால் பெரியார் அப்படி செய்திருக்கக்கூடாதா?

  சுருக்கமாக சொல்லப் போனால் உங்கள் நிலை இதுதான். சில விஷயங்கள் holy cows. அவற்றை எதிர்க்க யாருக்கும் சுதந்திரம் இல்லை. இந்த பக்கங்களில் மறுமொழி எழுதும் பலரை பொறுத்த வரை பார்ப்பனர்களுக்கு இதை பற்றி வாயை திறக்கக் கூட அருகதை இல்லை. சரி, இந்த புனித பசுக்களை யார் நிர்ணயிப்பது? நீங்களா? வினவா? நானா? தாய்லாந்து உமாவா? இல்லை சாமியா? இல்லை தீட்சிதர்களேவா? உதாரணமாக சேது சமுத்திர திட்டம் நடக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை ராமர் பாலம் உடைந்தால் மயிரே போச்சு. ஆனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும், இந்த திட்டம் நிறைவேற ஆகும் செலவுக்கு ஏற்ற பலன் கிடைக்காது என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் பெருவாரியான மக்கள் சேது திட்டம் வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். பலருக்கும் இது ஒரு holy cow. அதனால் என் மீது முட்டை அடிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

  சரி இவ்வளவு சொல்கிறீர்கள், உங்கள் கருத்துப்படி தாய்லாந்து உமாவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? கூடாதா? நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லவும் வேண்டுமா?

  நான் பெரியாரை பற்றி இங்கே பேச விரும்பவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இத்தனை digressions என்னை களைப்படைய வைத்து விட்டன. ஆனால் நீங்கள் கோட் செய்திருக்கும் பேச்சை படித்த பிறகு பிராமண வெறுப்பு பெரியாரின் பலவீனம் என்பது எனக்கு மேலும் உறுதி ஆகிறது.

 81. ஆர்வீ,

  உங்கள் 5 வயதுபெண்ணையும் பாம்பையும் பார்த்தால் உங்கள் பெண்ணை யார் அடிக்க சொன்னது? தயவு செய்து தப்பா எடுத்துக்கொள்ளாதீர்கள் யாரோ வெறி பிடித்த பார்ப்பான் தான் இப்படி உங்களிடம் சொல்லியிருக்கான்,

  திண்ணியத்திலே மலம் திணிக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும் .அந்த ஆதிக்க சாதிக்காரனை பார்த்து வாயில் மலத்தை துடைத்து விட்டு நீங்க செய்யறது தப்பு என சொல்ல வேண்டுமா?

  தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்கா எதையும் பேசாதீர்,ஆறுமுக சாமியின் கையை உடைத்த தீட்சிதரை என்ன செய்யலாம்? அதுக்கும் மனுவ போட்டுட்டு கம்முன்னு உட்கார வேண்டுமா?

  மலத்தி திணித்தவனுக்கும் தின்ன வைக்கப்பட்டவனுக்கும் ஒரே கருத்துரிமையா? எப்படி நீங்கள் வாங்கிதருவீர்களா?

  சாதிவெறிபிடித்து எங்காத்து பொண்ண தான கெடுத்தார் ஸ்வாமி நோக்கு என்ன என மயிலையிலே மறியல் செய்தவர்களை பார்ப்பன கொழுப்பு என்காமல்
  என்னவென க்கூறுவது அது கூட கருத்துரிமை மீறிய செயலா?

  கருத்துரிமை அது ஆளும் வர்க்கம் பாதிக்கப்படும் போதுதான் பலமாக எழுப்பபடுகிறது.1 லட்சம் விவசாயிகள் கொல்லப்பட்டார்களே அவர்கள் எதற்கு செத்தார்கள் எனத்தெரியாது என சொல்பனும் கருத்துரிமையா இல்லை திமிரெடுத்த் பேச்சா?

  ஒரு முசுலீம் பெண்ணின் வயிற்றை கிழித்து மார்பை வெட்டி சிசுவை கிழிப்பதும் உரிமையாகவும் அதை செய்யச்சொல்வது கருத்துரிமையாகவும் சொல்லுவீர்களோ?ஆனால் எங்களுக்கு அழ மட்டும் தான் உரிமை இருக்கிறது

  நாங்கள் பாதிக்கப்படும் போது பேசினால்,அடிப்பவனை திருப்பி அடித்தால் மட்டும் தவறா?

  சின்ன குழந்தை போல என்னிடம் கோவிக்காதீர்கள்.

  தந்தை பெரியார் வழிவந்தவர்களோ நாங்களோ எப்போது ஒரு குழந்தயினை பார்ப்பனனாக கருதுவதில்லை,ஆனால் பார்ப்பனர்கள் தான் “வீட்டுக்கு வாங்கோ வரும் போது அப்படியே காலை நனச்சிண்டு வாங்கோ” வீ ஆர் ஆச்சாரம் என்பார்கள் வாயை கழுவாமல்.

  அது தனது தீண்டாமையை பரப்பும் கருத்திரிமை எனில் நான் என்ன செய்ய வேண்டும்.
  அவனை திட்டினால் கருத்துரிமை சிதைக்கிறேன் என்பீர்கள் ,

  வாழ்நாள் முழுக்கா ஒரு சூத்திரன் தே.மவனாக வாழ்வது மட்டும் தான் பார்ப்பனனின் கருத்துரிமையை பாதிக்காது,

  ஏன் ஆர்வி இப்படி ஒரு நாள் மலத்தை வாரிப்போடுங்கள் அல்லது மலம் திங்கவைக்கப்பட்ட ராமசாமியாக இருந்து பாருங்கள் அல்லது சூத்திர பட்டத்தை சுமந்து பாருங்கள்.(சூத்திரன் எனில் என்ன அர்த்தம் மேலே சொல்லியிருக்கிறேன்.)

  னான் இப்படி சொல்வது கூட உங்கள் கருத்துரிமையை பாதிக்கப்படுவதாக கருதுவீர்கள்.

  கலகம்

 82. சுப்ரமணிய சாமியை முட்டை அடித்ததற்கான காரணத்தை மறைத்துவிட்டு மற்ற எல்லாவித சாகசத்தையும் எழுதியுள்ளீர்கள். இந்தியாவின் ஆக்கிரமிப்பு கொள்கையை எதிர்த்து போட்ட முழக்கங்கள் உங்களுக்கு தெரியாமல் போயிற்றா அல்லது வசதியாக மறந்துவிட்டீர்களா. இந்தியாவின் ஈழத்தின் மீதான ஆக்கிரமிப்பை வலியுறுத்தி போடப்பட்ட முழக்கங்களை நீங்களும் அறிவீர்கள் நானும் நேரடியாக களம் வழக்கறிஞர்கள் மூலமாக அறிவேன். தயவு செய்து எது அரசியலோ அதை கற்றுக் கொடுங்கள் அரசியலற்ற விசயங்களை முக்கியத்துவப் படுத்தி மக்களுக்கு அதே திராவிடப் பாரம்பரியத்தை வளர்க்காதீர்கள். இந்தியாவின் ஆக்கிரமிப்பு பங்கை மறந்துவிட்டு விட்டுவிட்டு பேசுவதோ, அதே நேரத்தில் அங்கே உண்மையிலேயே போராடுபவர்களின் பங்கை அங்கீகரிக்காமல் பேசுவதோ நேர்மையற்ற திராவிட அரசியலின் தொடர்சியாகத்தான் பார்க்கிறேன். உணர்த்தி அங்கே அந்த முழக்கம் மட்டுமல்ல முக்கியமாக ஈழவிடுதலைப் போராட்டத்தைதான் மையப்படுத்தி போராட்டத்தை எடுத்தார்கள் . அதே போல் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு என்றும் முழக்கமிட்டார்கள். அவரை பல காரணங்களுக்காக முட்டையால் அடிக்க பல பேர் நினைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அங்கு கருத்துப் பதிவாக ஈழ விடுதலை போராட்டத்தில் நேரெதிரான நிலை எடுத்து ஈழமக்களை கொல்வதற்கும் துணை போயிருக்கிறார். அதற்காக பல முறை அதை எதிர்த்தும் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியும் பேசியிருக்கிறார். ஆகையால் இந்த போராட்டம் அதை மையப்படுத்தித்தான் நடத்தப்பட்டது என்பது நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஆகையால் உங்கள் விளக்கங்களை மாற்றி நேர்மையாக மறுபதிவு செய்வீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் பங்கு அதில் இருந்ததாக நீங்கள் நினைத்தால் அந்த போராட்டத்தில் உங்கள் பங்கை பதிவு செய்யுங்கள் . அதை விடுத்து நீங்கள் மட்டும் இதை செய்தது போல் பதிவு செய்யாதீர்கள். ஏனென்றால் அனைவரும் கலந்து கொண்டு செய்த அவர்களை கொச்சை படுத்தியது போல் ஆகிவிடும். உங்கள் உங்களுடைய பங்கை விட அதன் நோக்கத்தை நேராக அறிவியுங்கள். அது தான் மக்களை சரியான திசையில் வழிகாட்டும் ஒன்று சேர்க்கும். இல்லையென்றால் இங்குள்ள திராவிட தொல்லைகாட்சிகள் போல் தனக்கு தேவையானதை மட்டும் காண்பித்து தனக்கு தேவைப்பட்டது போல் திரித்து வெளியிடும் குற்றத்தையே நீங்களும் செய்தவர்கள் ஆவீர்கள். இனியும் ஏதோ நாங்களும் இணையதளப்பதிவு நடத்துகிறோம் என்று ஒப்புக்கு செய்யாமல் எந்த அரசியலை மக்கள் மத்தியில் அழுத்தமாக பதிவு செய்யுங்கள். விவாதம் அரங்கம் என்பது அரட்டை அரங்கமல்ல. அது அரசியல் அறிவை வளர்க்கும் அரங்கமாக மாற்றுவீர்கள் என்று எதிர்ப்பாக்கிறேன். இல்லை என்றால் விசுவின் அரட்டை அரங்கிற்கும் நீங்கள் நடத்துவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே கருதிறேன்.

 83. நண்பர்களே,

  நண்பர் ஆர்.வியுடனான விவாதத்தில் கருத்துரிமை என்றால் என்ன, அதன் அளவு கோல் எது, அதை யார் முடிவு செய்வது; இன்று சுப்பிரமணி சுவாமியின் மீது முட்டை வீசியவர்கள் மீது நாளை வெரொருவர் முட்டை வீசினால் அதையும் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்வீர்களா ? என்பதுதான் மையமான விசயம்.

  பார்ப்பனியம் குறித்தும் அதன் நடைமுறை யதார்த்தம் குறித்தும் ஆர் விக்கு உடன்பாடு இல்லை அல்லது அது குறித்து அவருக்குத் தெரியவில்லை என்றாலும் அவர் தான் நம்பும் கருத்துக்கு நேர்மையாக இருந்து விவாதிக்கிறார். அதை அவ்வாறே எடுத்துக் கொண்டு அவருடன் பல கோணங்களில் விவதிப்பதன் மூலம் முடிவுகளை எட்ட முடியவில்லை என்றாலும் எல்லாக் கேள்விகளையும் தீர்த்து விடலாம். கேள்விகள் தீர்ந்து போகும் நிலை வரும்போது கண்டிப்பாக பதிலுக்கான தேவையும், முடிவுக்கான சாத்தியமும் வரும்

  மற்றபடி இதை தனி ஒரு பார்ப்பனருடனான விவாதம் என்று புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டாம் என்று கோருகிறோம். அதே போல ஆர்.வியும் அவரை பார்ப்பனியத்தின் பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு வரும் கேள்விகளையும் பொறுமையுடன் பரிசீலிக்குமாறும் அதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இந்த விவாதத்தின் மூலம் நாம் நமது கருத்து வேறுபாடு என்னென்ன என்ற அளவிலாவது புரிந்து கொண்டு தெளிவுகளை நோக்கி முன்னேறுவோம். இந்த விவாத்த்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டு செல்வதற்கு வாழத்துக்கள் !

  நட்புடன்
  வினவு

 84. இந்தக் கொண்டாட்டச் செய்தியை வெளியிடாத ஒரே இதழ் எது தெரியுமா?

  தமிழர் துரோகி வீரமணியின் ‘விடுதலை’.

 85. ஹேய் இன்னுமா முடீல. கர்ணாநிதி ஆச்சிய கல்சா எல்லாம் சர்யாடும்

 86. விடுதலை இச்செய்தியை வெளியிடாததற்குக் காரணம் என்ன?

  தற்போது ஐ.நா. சபைக்கு ஈழப்பிரச்சினையைக் கொண்டு செல்லக்கோரி பிரதீபா பாட்டீலிடம் மனுக்கொடுக்கும் ஏமாத்து வேலை செய்கிறது திமுக, திக. எந்த பிரதீபாவிடம்? ஈழத்தில் ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் இந்திய ராணுவத்தின் தலைவர் பிரதீபாவிடம்.. கோரிக்கை என்ன? ஆக்கிரமிப்புப்போரை இந்தியா நடத்தக்கூடாது என்று அல்ல.. இந்தியா இலங்கையில் ஐநா சபை தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்த.

  இந்தத் துரோகத்தனத்தை திக காரனே நல்லா புரிஞ்சுருக்கான்.. தமிழர் தலைவர் இந்த செய்தியைப்போடப் போக, திகவில் இருப்பவன் எல்லாம், தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் வரும்போது எங்கே முட்டைகளோடு வந்துவிடுவரோ என்ற அச்சம்..

  முட்டை என்றால் சு.சாமியுடன் பல துரோகிகளுக்கும் இந்நேரம் அலர்ஜி ஏற்பட்டிருக்கும்..

 87. நன்பர் ஆர்.வி,

  எது கருத்து சுதந்திரம் – எது வன்முறை என்பதெல்லாம் அந்த சம்பவம் எந்தவிதமான சமூகப்பின்புலத்தில் இருந்து எழுகிறது என்பதிலிருந்தே முடிவு செய்ய முடியும். மேல்நாடுகளில்
  சாலைவிதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவது கூட ஒரு வித வன்முறையாகக் காணப்படும். இந்தியா போன்ற நாட்டில் அதுவும் சென்னை போன்ற ஒரு ஊரில் காலை நேர
  போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிச் சின்னாபின்னமாகி வேலைக்குச் செல்லும் ஒருவனிடம் மேல்நாடுகளில் காணப்படும் அதேவிதமான சாலை ஒழுக்கத்தை எதிர்பார்ப்பதே ஒரு
  வன்முறை தான். இங்கே தற்சமயம் உள்ள சூழ்நிலையில் இப்போது இருக்கும் குழப்பங்கள் / ஒழுங்கீனங்கள் எதார்த்தமானது தான் – புரிந்து கொள்ளத்தக்கது தான்.

  நீங்கள் முட்டையடியை வன்முறை என்கிறீர்கள் அல்லவா? அதை விட சுவாமியின் தமிழர் விரோத பேச்சுக்களும் எழுத்துக்களும் பெரிய வன்முறை என்பதை உணர மறுக்கிறீர்கள். நீங்
  கள் சொல்ல வருவது – “அப்படியே அவன் தப்பாவே பேசியிருந்தாலும் அப்படிப்பேசும் உரிமை இருக்கே – அந்தக் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கே” என்கிறீர்கள். ஒப்புக்
  கொள்கிறேன் – சுவாமிக்கு இருக்கும் அதே உரிமை முட்டை வீசியவர்களுக்கும் இருக்கிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும். உடல் ரீதியிலான எதிர்ப்பு தவறு – கருத்தை
  கருத்தால் தான் முறியடிக்க வேண்டும் என்பீர்கள்.

  இந்தியாவில் கருத்தை / அரசியல் போராட்டத்தை எவ்வாறு அரசு எதிர்கொள்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வடகிழக்கில் ராணுவ சிறப்புச் சட்டத்தை எதிர்த்து
  ஐரோம் ஷர்மிளா என்ற பெண் 2000ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை அரசு எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்..
  ஏன் சத்தீஸ்கர் மாநிலத்தின் பினாயக் சென்னின் கதியென்னவென்று நீங்கள் ஊடகங்களில் வாசித்திருக்கலாம். மேதா பட்கரின் அமைதி வழிப் போராட்டங்களின் கதி என்ன?
  மொத்தத்தில் இங்கே கருத்து ரீதியிலான போராட்டங்களை / எதிர்ப்புகளை அரசு மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை என்பதே நிதர்சனம். அம்மாதிரிப் போராட்டங்கள் வயிற்றுப் பா
  ட்டுக்கே அல்லாடும் சாதாரண இந்தியர்களிடம் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

  ஒருவேளை சுப்பிரமணியம் சாமிக்கு எதிராக சாலையோரத்தில் கூடி நின்று கோஷம் போட்டிருந்தால் அது நாளிதழ்களில் கள்ளக்காதல் செய்தியளவுக்குக் கூட முக்கியத்துவம்
  பெற்றிருக்காது. இப்போதோ தமிழகம் தழுவிய அளவில் இந்த செய்கை ஒரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

  அப்போ தனிப்பட்ட சு.சுவாமியின் கருத்துரிமையின் கதி? ஐரோம் ஷர்மிளாவின் அமைதிப் போராட்ட உரிமைக்கு என்ன கதி ஏற்பட்டதோ அது தான்… பினாயக் சென்னின்
  கருத்துரிமைக்கு என்ன கதியானதோ அதே கதி தான். சீமானின் கருத்துரிமைக்கு என்னவானதோ அதே கதி தான். வரலாற்றின் பழிவாங்கும் உணர்ச்சி மிகக் கொடூரமாய்த்தான்
  இருக்கும் – அப்போது மனித உரிமை / கருத்துரிமை / எழுத்துரிமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் – கண்ணுக்குக் கண் தான் பல்லுக்குப் பல் தான்! இத்தனை நாளாய்
  சு.சுவாமி பேசிய பேச்சுக்களும் / இயங்கிய தன்மையும் அவருக்கு எதிராய் உண்டாக்கிய எதிர்வினையின் பௌதிக வடிவத்தின் முதல் வெளிப்பாடு தான் முட்டையடி.

  நாளை ஒரு நாள் மக்களும் அரசும் பூர்ணமாக ஜனநாயக உணர்வு பெற்ற பின் நீங்கள் சொல்வது போல் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம். அதுவரைக்கும் மக்கள் விரோத
  கருத்துக்கு பதில் அழுகிய முட்டை தான். ( எனது கருத்து என்னவென்றால், அது அமில முட்டையாக இருந்திருக்க வேண்டும் என்பது தான் )

  நீங்கள் தனிப்பட்ட ஒரு மனிதரின் மேல் ஏவப்பட்ட வன்முறை குறித்து இத்தனை அக்கறை கொள்கிறீர்களே, ஏன் பெருந்திரளான மக்கள் மேல் ஏவி விடப்பட்டிருக்கும் வன்முறை மேல்
  அக்கறை கொள்ள மறுக்கிறீர்கள்? எது தடுக்கிறது? கோடிக்கணக்கான மக்கள் பசியும் பட்டியோடும் வாட விட்டிருப்பது அரச வன்முறை என்கிறேன் நான். சப் சஹாரா
  பாலைவனக் குழந்தைகளை விட ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் நம் நாட்டில் உருவாக விட்டிருக்கும் அரச நடவடிக்கைகளை வன்முறை என்கிறேன் நான்… நீங்கள்
  என்ன சொல்கிறீர்கள்? இந்த வன்முறைக்கு எதிர் நடவடிக்கை வன்முறையாகத்தான் இருக்க முடியும். யாருக்கு எந்த மொழி புரியுமோ அவருக்கு அந்த மொழியில் தான்
  பதில் அளிக்க முடியும். லட்சக்கணக்கில் விவசாயிகளை தற்கொலைக்குள் தள்ளும் அரசின் வன்முறையான கொள்கைக்கு எதிராக அவர்களை என்ன
  செய்யச் சொல்கிறீர்கள்?

  எதிர்ப்பு எப்படியிருக்கும் என்பதை எதிரி தான் தீர்மாணிக்கிறான். தனக்கு எதிராய் இப்படியொரு எதிர்ப்பு வடிவம் உருப்பெறுவதற்கு சுவாமி தான் காராணம்.

 88. நண்பர் ஆர்.வி,

  கருத்துரிமை பற்றிய விவாதத்தில் இப்போதுதான் மையமான பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்கள் வாதப்படி இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் கருத்துரிமை வேண்டும் என்று பொருள் வருகிறது. இதை தடுப்பது கருத்துரிமை மீதான தடை அல்லது பாசிசம், சர்வாதிகாரம் என்று விளக்குகிறீர்கள். இந்த அணுகு முறையின் படி சுப்ரமணிய சுவாமிக்கு ராமர் பாலம் குறித்தும், தீட்திதர் கோவில் குறித்தும், ஈழம் குறித்தும் அவர் விரும்பியபடி கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. சு.சுவாமியின் கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும் அது தவறு என்று சுட்டிக்காட்டினாலும் அவருக்குள்ள கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். அதை முட்டை வீசி தடுப்பது என்பது அநாகரிகமானது.. ஜனநாயக விரோதமானது. ஆர்.வி சாரமாக சொல்ல விரும்பும் கருத்து இதுதான் என நம்புகிறோம்.

  ஆனால் இந்த உலகில் இதற்கு முன்னரும் சரி இப்போதும சரி இனிமேலும் சரி அப்படி எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் கருத்து சொல்லும் சுதந்திரம் என்பது இல்லை, இருக்க முடியாது. ஆர்.விக்கு பிடிக்காத கம்யூனிச மொழியில் விளக்குவதாக இருந்தால் ஒரு நாட்டை எந்த வர்க்கம் ஆளுகிறதோ அதற்குத்தான் கருத்துச் சுதந்திரம் இருக்கும். எந்த வர்க்கம் ஆளப்படுகிறதோ, அடக்கப்படுகிறதோ அந்த வர்க்கத்திற்கு கருத்து சுதந்திரம் கிடையாது. இது அமெரிக்காவிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். அவ்வகையில் கருத்துச்சுதந்திரம் என்பது பெயரில் மட்டும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் ஒரு சர்வாதிகாரமான கருத்தின் வெளிப்பாடுதான்.

  ஆர்.வி நினைப்பது பால தூய, அன்பான, முற்று முழுதான கருத்து சுதந்திரம் என்பது உண்மையற்ற மாயமான கற்பனை உலகில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஆசை. அமெரிக்காவில் லெனின் படம் போட்டு ஒரு கம்யூனியஸ்ட் கட்சியை ஆர்.வி ஆரம்ப்பித்தாரானால் அவர் அமெரிக்க சிறையில் பல ஆயுள் தண்டனை பெற்று வாழ நேரிடும். அமெரிக்காவின் கருத்து சுதந்திரம் என்பது அமெரிக்கமுதலாளிகளுக்குள்ள உரிமைதான். அதனால்தான் ஈராக் மீது தொடுக்கப்பட்ட அநீதீயான போரை வீர்ர்கள் கொல்லப்படுவதை வைத்து மட்டும் பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்க்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் கருத்து ரீதியாக பயிற்று விக்க்ப்ப்ட்டிருக்கிறார்கள். வியட்நாமில் வீரர்கள் கொல்லப்படுவதையும் அதில் அமெரிக்க இளைஞன் அடையும் உளவியல் துன்பத்தையும் சித்திரிக்கும் ஆலிவர் ஸ்டோனின் பிளாட்டூன் திரைப்படம் ஒன்றும் அமெரிக்க கொள்கையை விமரிசனம் செய்து எடுக்கப்படவில்லை. ஆனால் இதற்குக் கூட ஹாலிவுட் முதலாளிகள் தயாராக இல்லை என்பதால் இறுதியில் இங்கிலாந்து முதலாளிகளை வைத்து படத்தை எடுத்தார் ஸ்டோன்.

  புஷ் மூது காலணி வீசிய அல் சைய்தி உடனேயே பாதுகாவலர்களால் கைகால் முறிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டார். இன்றும் சிறையில் வாடுகிறார். ஈராக் மக்களை அநாதைகளாக்கிய கொலைகாரனே என்று உண்மையைத்த்தான் அவர் எடுத்துரைக்க விரும்பினார். அந்த சுதந்திரம் ஈராக் மக்களுக்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஜால்ரா போடும் கூட்டத்திடம்தான் ஈராக்கின் கருத்து சுதந்திரம் உள்ளது.

  இந்தியாவிலும் இதுதான் நிலமை. இங்கே பார்ப்பன இந்து மதவெறியர்கள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், இவர்களின் பிரதிநிதிகளான ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் இவர்களுக்குத்தான் கருத்து சுதந்திரம் உள்ளது. அதனாலர்தான் ஆறுமுகசாமி என்ற தொண்டுக் கிழவரை அடித்து நொறுக்கிய தீட்சிதர்கள் எந்த வழக்கும் இல்லாமல் சுதந்திரமாய் உலவுகிறார்கள். கற்பனையில் கூட சாத்தியமற்ற ராமர் பாலப் புரட்டை வைத்து சு.சுவாமி சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியிருக்கிறார். 2000 முசுலீம்களை இனப்படுகொலை செய்த கூட்டத்தின் தலைவன் மோடி குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக போற்றப்படுகிறார். ஈழத்தில் தினம் தினம் தமிழ் மக்கள் செத்து மடிந்தாலும் போரை நிறுத்த முடியாது என பிரணாப் முகர்ஜி பேச முடிவது யாருடைய சுதந்திரத்தை குறிக்கிறது?

  ஆகவே இந்த சமூகத்தில் மக்களுக்கும் அவர்களுக்காக போராடும் எங்களைப் போன்ற அமைப்புக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இல்லை. நெல்லை மாவட்டத்தில் கொக்கோ கோலாவுக்கு எதிராக எந்தப் பிரச்சாரமும் செய்ய விடாமல் நெல்லை போலீசு இன்று வரை தடுத்து வருகிறது. தரும்புரியில், கோவையில் எந்தப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் எங்களுக்கு இன்று வரை அனுமதியில்லை.

  எனவே நாளை எங்களைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களைத் தெரிவு செய்யும் மக்களுக்கு மட்டும் கருத்து சுத்ந்திரம் இருக்கும். முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்காது. அந்த வகையில் சுப்ரமணிய சுவாமிக்கும், சோவுக்கும், அத்வானிக்கும், ஜெயல்லிதாவுக்கும், ஏன் கருணாநிதிக்கும் கூட கருத்துச் சுதந்திரம் இருக்காது. அல்லது மக்களை மதம், சாதி, மொழி, இனம் ரீதியாக பிரித்து ஆதாயம் அடையும் அத்தனைபேரும் சட்டப்படி தண்டிக்கபடுவார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை என்பது அப்போது இருக்கும் மக்கள் மன்றம் தீர்மானிக்கும். எங்களைப் பொருத்தவரை சு.சுவாமி, சோ முதாலான பார்ப்பன வெறியர்களாகவும், கோமாளிகளாகவும் இருக்கும் அற்பங்களை ராஜஸ்தானில் புல் வளர்க்கும் உழைப்பு முகாமிற்கு அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை வைப்போம்.

  இன்று சு.சுவாமியை தண்டிப்பதற்குரிய அதிகாரம் மக்களிடமில்லை என்பதால்தான் முட்டை வீச்சு நடந்திருக்கிறது. இல்லையேல் கம்பிகளுக்கு பின்னே அந்த கயவன் திருந்தும் வரை வாழ ஏற்பாடு செய்திருக்கலாம். கருத்துச் சுதந்திரம் எங்களுக்கில்லை என்பதால்தான் தக்காளியும், முட்டையும், செருப்பும் எங்களுக்கு தேவைப்படுகிறது. எமது மக்கள் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் இந்த வீச்சுக்கு வேலையே இருந்திருக்காது. அதனால் நாங்கள் எங்களுக்கு பிடிக்காதவர்களை சுட்டு விடுவோம் என்று வறட்டுத்தனமாக நினைக்க வேண்டாம். ஆயுதம் என்பது ஆளும் வர்க்கத்தின் இருப்பை உத்திரவாதம் செய்யும் பௌதீக கருவி. அந்த கருவி இருப்பதால்தான் இன்று சு.சுவாமிக்கு பின்னே கருப்பு பூனைகளும் காக்கி பாதுகாவலர்களும் பாதுகாப்பாய் வலம் வந்து முத்துக்குமாரை யாரோ சிலர் கொன்று விட்டார்கள் என இந்த அற்பம் திமிருடன் பேச முடிகிறது.

  மக்களிடம் ஆயுதம் இருந்தால் இது போன்ற அற்பங்கள் வாலை சுருட்டிக் கொண்டு அடக்க ஒடுக்கமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நாங்களும் அந்தக் காலத்தில் இருந்து கம்யூனிசத்தை ஆதரித்துள்ளோம என்று வாலை ஆட்டியபடி இந்த அற்பங்கள் ஜால்ரா கூட போடலாம். ஏனெனில் அதுதான் பார்ப்பனியம் காலத்திற்கேற்ப மாறுவது என்பதன் பொருள்.

  நட்புடன்
  வினவு.

 89. ///நன்றாக கவனியுங்கள் – வினவு தளத்தில் இது போன்ற ஒரு போஸ்ட் வருவது கேவலம் என்று சொல்லி இருக்கிறேன். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லி இருக்கிறேன். deplorable என்று சொல்லி இருக்கிறேன். வினவு இது போன்று எழுதக் கூடாது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. (ஆனால் எதிர்காலத்தில் வினவு தளத்தின் தரத்தை பற்றிய ஆதங்கத்தில் நான் இப்படி சொல்லக்கூடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.) ///

  RV

  வினவு தளத்தில் இச்செய்தி வருவதற்கு ஏற்றுக்கொள்ள இயலாமையாக உங்களுடைய மனப்பக்கும் இருக்கிறது என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் செய்திகள் வரும்போது இதே விமர்சனத்தை வைக்க மாட்டீர்கள் இல்லையா? இந்த கருத்தைத்தான் கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் அனைவருக்கும் தோன்றுவது. அதை எப்படி கையாண்டாலும் சரி.

  ///கேள்வி கேட்க வேண்டியதுதான், ஆனால் கொஞ்சம் கவனமாக கேளுங்கள்.///

  எந்தக் கேள்வியை கவனக்குறைவாக கேட்டிருக்கின்றேன் என்று சுட்டிக்காட்டினால் தவறை திருத்திக் கொள்வேன். நீங்கள் சுட்டிக் காட்டும் வார்த்தைகளில் தவறில்லாத பட்சத்தில் என்னுடைய நிலைப்பாட்டை விளக்கவோ மாற்றிக் கொள்ளவோ தயாராக இருக்கிறேன்.

  ///கருத்து சுதந்திரத்தை நீங்கள் வரையறுக்க விரும்புகிறீர்கள். உங்கள் கருத்துகளுடன் எவ்வளவு தூரம் மாறுபடலாம் எனபதை நீங்களேவா சொல்ல முடியும்? அப்புறம் என்ன கருத்து சுதந்திரம் வேண்டிக் கிடக்கிறது?///

  கருத்துச் சுதந்திரம் என்பது என்ன? என்னும் கோட்பாட்டுக்குள் தான் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதில் கருத்துச் சுதந்திரத்தை நானோ நீங்களோ நிர்ணயிக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருப்பதால் என்நிலைப்பாட்டை உங்களுக்குள் திணிக்க முற்படுகின்றேன் என்கிற உங்கள் வாதம் தவறானது.

  ///பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்தது அவர் கருத்து சுதந்திரம் இல்லையா?///

  பெரியாருக்கும் பிள்ளையாருக்கும் என்ன பகை? கடன் பிரச்சனையா? பங்காளி பிரச்சனையா? எதற்காக அடித்தார் பிள்ளையாரை?

  எவனோ ஒரு பார்ப்பான் மானவாரியாக விநாயகனைப்பற்றி ஆபாசமான கதைகளை சொல்லி வைத்துவிட்டு போய்விட்டான். யானை தலை மனித உடல் முதல் கடவுள் பல அதற்கு உருவான கதைகள் ஆபாசமானவை என்கிறார் பெரியார். நாமெல்லாம் விந்துக்களில் பிறந்திருக்கிறோம். விநாயகனோ தாயின் அழுக்கை உருட்டி வைத்து பிள்ளையாக்கி இருக்கிறாள். அந்த அழுக்கைவிட நாம் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டோம். அதை கும்பிடுவதும் சாணியை பிடித்து பிள்ளையார் என்பதும் தேவையில்லாமல் உணவுப்பண்டங்களை அதன் மீது கொட்டி பாழ்செய்வதும் என அறிவு வளர்ந்துக் கொண்டிருக்கும் சமூதாயம் என்றோ எவனோ சொல்லி வைத்த கதையைக் கேட்டுக் கொண்டு பகுத்தறிவு சிந்தனையை மறந்து போய் மண்டையில் கொட்டிக் கொண்டு அதனிடம் நின்றால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது என்று தமிழ்சமூதாயத்திடம் விழிப்புணர்வை உண்டாக்க முனைந்தார்.

  ஏன் யாருக்கும் வராத யோசனை பெரியாருக்கு வந்தது? ஓர் முட்டாள்தனமான சமூதாயமாக ஒரு சிலரால் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு சிலரின் கருத்துக்கள் அப்படி இருந்தன. தாங்கள் மட்டும் புத்திசாலிகளாகவும் தங்களுக்கு ஏவல் செய்ய ஒரு பெருங்கூட்டத்தையும் தங்களுடைய கருத்து என்னும் சூழ்ச்சிக்குள் அடிமைகளாய் வைத்திருந்ததாலே தானே பெரியார் பொங்கியெழுந்தார்.

  ///சில விஷயங்கள் holy cows. அவற்றை எதிர்க்க யாருக்கும் சுதந்திரம் இல்லை. இந்த பக்கங்களில் மறுமொழி எழுதும் பலரை பொறுத்த வரை பார்ப்பனர்களுக்கு இதை பற்றி வாயை திறக்கக் கூட அருகதை இல்லை. சரி, இந்த புனித பசுக்களை யார் நிர்ணயிப்பது? நீங்களா? வினவா? நானா? தாய்லாந்து உமாவா? இல்லை சாமியா? இல்லை தீட்சிதர்களேவா?///

  RV
  யார் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். விவாதத்திற்கு வரட்டும் நல்லதுதானே! முட்டடி மேட்டர் நடந்து முடிந்திருக்கிறது. முட்டையடி அறை வாங்கிய சு. சாமிக்கே என்ன சொல்வதென்று புரியாமல் முட்டை இங்கே விழுந்தது அங்கே விழுந்தது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னென்னமோ உளறுகிறார். ஏன்?

  போட்ட ஆட்டம் அப்படி. வாங்கிக்கட்டிக் கொண்டுதான் போக வேண்டும். சு.சாமி பொண்டாட்டிக்கு கூட இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பதே நல்லது. கேள்வி கேட்டால் 1008 பதில்களை சாட்சியோடு தூக்கிப்போட ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

  ///என்னை பொறுத்த வரை ராமர் பாலம் உடைந்தால் மயிரே போச்சு. ஆனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும், இந்த திட்டம் நிறைவேற ஆகும் செலவுக்கு ஏற்ற பலன் கிடைக்காது என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் பெருவாரியான மக்கள் சேது திட்டம் வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். பலருக்கும் இது ஒரு holy cow. அதனால் என் மீது முட்டை அடிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?///

  ராமர் பாலம் பற்றி உங்களுடைய கருத்துக்கு எதிர்விணை செய்ய ஆரம்பித்தால் மீண்டும் விவாதம் திசை திரும்பிவிடக் கூடும். அதனால் அதை தவீர்த்து விட்டு உங்கள் மாற்றுக் கருத்துக்காக மக்கள் உங்கள் மீது முட்டை வீசுவார்களா என்ற கேள்வியை பார்ப்போம்.

  இதை நீங்கள் மேடை போட்டு மைக் வைத்து உங்களுடைய கருத்துக்களை பொதுவில் சொல்லிப் பாருங்கள். மக்களிடமிருந்து என்ன ரியாக்ஷன் வருமென்று நாம்ப எப்படி கணிக்கிறது? முட்டை மட்டுமா வரும்? எது எது வரும்னு யாருக்கு தெரியும்?

  ///சரி இவ்வளவு சொல்கிறீர்கள், உங்கள் கருத்துப்படி தாய்லாந்து உமாவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாமா? கூடாதா? நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லவும் வேண்டுமா?///

  தாய்லாந்து உமாவுக்கோ தந்தைலாந்து பாமாவுக்கோ கண்டிப்பாக கருத்து சுதந்திரம் உண்டுங்கோ. ஆனா எதிர் விணை செய்ய எங்களுக்கும் உரிமை உண்டுங்க.

  ///நான் பெரியாரை பற்றி இங்கே பேச விரும்பவில்லை. ///

  நானும் இங்கே பெரியாரைப் பற்றி பேச வரவில்லை. நீங்கள் தான் என்னிடம் பெரியாரைப்பற்றி கேள்வி வைத்தீர்கள்.

  ///உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இத்தனை digressions என்னை களைப்படைய வைத்து விட்டன.///

  அவை உங்களுடைய கருத்தியல் சார்ந்த பலவீனத்தை குறிக்கிறது.

  ///ஆனால் நீங்கள் கோட் செய்திருக்கும் பேச்சை படித்த பிறகு பிராமண வெறுப்பு பெரியாரின் பலவீனம் என்பது எனக்கு மேலும் உறுதி ஆகிறது.//

  RV

  பெரியாரை ஒரு பக்க தாள்களில் கணித்துவிட முடியாது. பெரியாரைப் பற்றி நீங்கள் அப்படி கருதுவீர்களானால் பெரியாருக்கு பார்ப்பனீயத்தில் எதானால் வெறுப்பு ஏற்பட்டது என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டு விமர்சனங்களை வைப்பது நலம். இந்த இணைப்பில் இருக்கும் பதிவை தயவு செய்து வாசிக்க வேண்டுகிறேன்.

  நன்றி

  http://tamizachiyin-periyar.com/index.php?article=884

 90. நீங்கள் சாமர்த்தியமாக எழுதுவதிலும் நழுவதிலும் வல்லவர் என்பதில் நீங்கள் கொடுத்த பதிலிலும் உள்ளது. உங்கள் கட்டுரையை மீண்டும் படிக்கவும். நீங்கள் எழுதியது உங்களுக்கே புரியவில்லை என்றால் யாரையாவது துணைக்கு வைத்துக்கொண்டு படிக்கவும். அதில் எந்த இடத்திலாவது இந்தப் போராட்டம் ஈழப்பிரச்சனைக்காக நடந்தது என்று பதியப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளவும். ஏன் என்றால் நீங்கள் எதை பதியவைத்துள்ளீர்கள் என்பதை அதைத் தொடர்ந்தார் போல் மற்றவர்கள் எழுதிய கருத்தும் அதைத் தொடர்ந்து நீங்கள் கொடுக்கும் விளக்கமும் எதொ நோக்கியுள்ளது என்பதை அரிச்சுவடி தெரிந்தவன் கூட புரிந்துகொள்ளமுடியும். அங்கே மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது அதை மையப் படுத்தி நடந்த விசயத்தை ஒருமுகப் படுத்தி விவாதம் நடத்தாமல் ஏதோ ஜெயா டிவி போல் வேறு ஏதோ விசயத்திற்கு விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் மக்கள் பிரச்சனை என்று சொல்லி தப்பிக்கவேண்டாம். மீண்டும் கூறுகிறேன். ஈழப்பிரச்சனையை மையப் படுத்தி அந்த சம்பவத்தை எழுதுங்கள் வரவேற்கிறேன். உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதில் ஒரு நேர்மையும் ஜனநாயகமும் இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும். ஏதோ சினிமா காட்சியமைப்புப் போல் வெளியில் அவர்கள் ஈழப்போராட்டம் என்பது போலவும். உள்ளே வந்து போராடியவர்கள் வேறு பிரச்சனைக்காக போராடியவர்கள் என்றும் நாசூக்காக பதியவைத்துள்ளீர்கள். நீங்கள் நடத்தும் சட்டப் போராட்டம் தேவையானது அவசியமானது வெல்லப்பட வேண்டியது என்றாலும். இன்று பதிய வைக்கவேண்டியது உயிர்போகிற பிரச்சனையாக இருப்பது இந்த ஈழப் போராட்டத்தைத் தான். ஆகையால் இந்தப் போராட்டம் எதை மையமாக நடத்தப்பட்டது என்று சராசரி பத்திரிக்கையில் வந்த செய்தியின் அளவுக்காவது பதியவும். அதைவிடுத்து உணர்ச்சிவசப் படுவதாக கூறி தப்பிக்கவேண்டாம். நீங்கள் வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு போராட்டத்தை எடுத்திருக்கலாம். ஆனால் எதை எப்போது செய்யவேண்டும் உண்மையிலேயே செய்த விசயத்தை சொல்ல வேண்டும் என்றே எந்தவொரு ஜனநாயக வாதியும் விரும்புவான். எல்லாப் போராட்டமும் மக்களுக்கான போராட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த போராட்டம் ஏதோ சினிமா காட்சியமைப்பு போல பக்கத்தில் ஏதோ நடந்தது அந்த இடத்தில் ஏதோ நடந்தது என்று காட்சி கோப்புகள் கோர்த்து உண்மையான தன்மையை மக்களுக்கு கொண்டுவராமல் மறைத்ததும் நான் அனுப்பியதை பிரசுரிக்காமலும் உங்கள் பதிலை மட்டும் பிரசுரித்ததிலிருந்தே தெரிகிறது. உங்களுக்கு ஏதோ கொட்டியது போல் நழுவிக்கொண்டிருக்கிறீர்கள் என்று. நேர்மை இருக்கும் பட்சத்தில் எனது கருத்தையும் பதித்து உங்கள் பதிலையும் போடவும். அது உங்களுக்கு சங்கடமாக இருந்தால் இரண்டையும் எடுத்துவிடுங்கள். நாம் உள் அரங்காக விவாதிக்கலாம். ஈழப்போராட்டத்தில் உங்கள் தோழர்கள் பங்குகொண்டதை படத்தை பார்த்து தெரிந்து கொண்டிருந்தால் படம் பார்த்து கதை சொல்வதை தவிர்த்துவிட்டு உங்கள் தோழர்களை அழைத்து என்ன கோரிக்கைக்காக போராடினார்கள் என்று தெரிந்து கொண்டு தகவல்களை திரட்டி இல்லை என்றால் குறைந்த பட்சம் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த சம்பவங்களை சேகரித்து அதிலிருந்தாவது அரைகுறை செய்திகளை அறிந்து நீங்கள் பதிப்பிக்க முயற்சிக்கவும்.

  • நண்பர் ஆர்.வி

   எது கருத்து சுதந்திரம்? அதற்கென்ன அளவு கோல்? அதன் வரம்பென்ன? ரூப் கன்வரை உடன்கட்டை ஏற்றிக் கொன்ற இந்து மதவெறி ரஜபுத்திர சாதிவெறி கூட்டம் உடன்கட்டை ஏற்றிக் கொல்வது தங்கள் கொள்கை என அறிவப்பதற்கு உரிமை உண்டென அறிவித்தால் அப்படி கருத்து தெரிவிப்பதற்கு உரிமை வேண்டுமென ஆதரிப்பீர்களா? மேலவளவில் தலித் முருகேசனைக் கொன்ற தேவர் சாதி வெறியர்கள் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராக வந்தால் கொல்வது தங்கள் உரிமை என வாதிட்டால் இங்கும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பீர்களா?

   கருத்து சுதந்திரத்தின் மேல் உங்களுக்கிருக்கும் காதலால் அநேக குற்றவியல் தண்டனைச்சட்டங்களுக்கு வேலையில்லாமல் போகிறது. அப்படி அந்த சட்டங்களை ரத்து செய்யவேண்டுமென்பது உங்கள் கோரிக்கையா? எடுத்துக் காட்டாக ஒரு தலித்தை ஒரு மேல்சாதிக்கார்ரர் சாதியின் பெயரால் இழிவு படுத்தி பேசினாலே அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குத் தொடர முடியும். உங்கள் வாதப்படி பார்த்தால் ஒருதலித்தை இழிவு படுத்தும் உரிமை ஒரு மேல்சாதி வெறியருக்கு உண்டு என்றாகிறது. அப்படி மக்களை துன்புறுத்தும் கொடுமையாளர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசும் அபாயத்தை உங்களது அறியாமை நிரம்பிய கருத்துச் சுதந்திரக் காதல் கொண்டு வருகிறது. அதன்படி ஹிட்லருக்குக் கூட பேசுவதற்கு உரிமை உண்டு என வாதிடுகிறீர்கள். இந்த வாதத்தில் உணர்ச்சி வசப்பட்டு உங்களிடம் இருக்கும் நல்ல மதிப்பீடுகளை இல்லாமல் செய்கீறீர்கள்.

   தில்லை கோவிலை அரசு மீட்டெடுத்த்தை நீங்களும் ஆதரிக்கீறீர்கள். ஆனால் சுப்பிரமணிய சுவாமி தீட்சிதர்கள் தரப்பில் நின்று இதை எதிர்ப்பதற்கும் வழக்கு தொடருவதற்கும் என்ன காரணம்? இது பார்ப்பான் என்ற சாதிப் பாசத்தை தவிர வேறென்ன? ராமர் பாலம் என்ற புராணப் புரட்டுக் கதையை வைத்தே இந்த சு.சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சேது சமுத்திரத் திட்டத்தையே நிறுத்தியிருக்கிறார் எனில் இந்த நாடும் அதிகார வர்க்கமும், நீதிமன்றமும் பார்ப்பனியத்திற்கு வக்காலத்து வாங்குகிறது என சொன்னால் அதில் என்ன தவறு? சு.சுவாமி எனும் ஒரு பாசிசக் கோமாளியே ஒரு புராணப் புரட்டை வைத்து இந்த நாட்டின் ஒரு திட்டத்தை முடக்க முடிகிறது என்றால் அவருக்க அந்த பலம், எங்கிருந்து கிடைத்த்து?

   எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மீது அழுகிய முட்டை, தக்காளி வீசுவது நீங்கள் வாழம் நாட்டை உள்ளிட்டு மேற்கத்திய நாடுகளில் கருத்து வேறுபாட்டை தெரிவிப்பதற்கான ஒரு ஜனநாயக முறைதான். இதில் வன்முறை ஏதுமில்லை. அவர் மீது ஆசிட் அடித்தால்தான் அது வன்முறை. ஒரு வேளை அப்படி நடந்தால் கூட எவரும் வருத்தப் படப்போவதில்லை. ஏனெனில் முத்துக் குமாரின் தியாகத்தைக் கூட யாரோ அவரை கொன்று விட்டார்கள் என்று திமிராக பேசியவர்தான் அவர். இந்தக் கொழுப்பை பார்ப்பனக் கொழுப்பு என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

   உங்களிடம் மீண்டும் நினைவு படுத்த விரும்புவது பார்ப்பனியத்தை ஒருவர் எதிர்க்கும் போது அதை வெறும் சாதி ரீதியாகக் குறுக்கிப் பார்க்காமல் ஒரு கருத்தியல் வன்முறையின் உருத்திரண்ட வடிவமாக அதிகாரம் மிக்க நிறுவனமாக புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அந்த சாதியில் பிறந்திருப்பதாலேயே சு.சுவாமியை பார்ப்பான் என்று விளிப்பதால் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் அது சரியல்ல. பார்ப்பனியத்தை நிராகரிப்பதற்கு பிறப்பால் பார்ப்பனராக இருக்கும் ஒருவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை எனக்குத் தேவையில்லை சாதிதான் முக்கியம் என்றால் அது உங்களிடம் இருக்கும் நல்ல விழுமியங்களை தின்று செரித்து விடும். வாதத்திற்கு எதிர்வாதம் என்று போகமால் இதை நிதானமாக பரிசீவிக்க வேண்டுகிறோம்.

   நட்புடன்
   வினவு

 91. உங்களுக்கு யூ.பாண்டியனா தா.பாண்டியனா என்ற சந்தேகம் வருவது போல் எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதாவது இன்று ஈழப்பிரச்சனை பேசும் போது ஈழப்பிரச்சனை சாதிப் பிரச்சனையால் பிளவுண்டு கிடப்பதால்தான் ஈழப் பிரச்சனை தீரவில்லை என்று கவிதை கருணாநிதி வகையராக்கள் கூறுகிறது. இனப் பிரச்சனை பற்றி பேசும்போது அவர்கள் சாதி பிரச்சனை பற்றி பேசுகிறார்கள். ஆகையால் இந்த நேரத்தில் நீங்கள் கவி.கருணாநிதியாக இருக்காதீர்கள் என்றும் அதைவிட ஏதொ பெயரளவுக்கு பேசும் தா.பாண்டியனாகவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

 92. // நான் அனுப்பியதை பிரசுரிக்காமலும் உங்கள் பதிலை மட்டும் பிரசுரித்ததிலிருந்தே தெரிகிறது. //

  பாண்டியன் உங்கள் பின்னூட்டம் மேலே வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே வினவின் பதில் உள்ளது. அதற்கு கீழே மீண்டும் உங்கள் பதில்கள். இதில் எதுவும் மறைக்கப்ப்ட்டது போல தெரியவில்லையே தொடர்ச்சியாகத்தானே இருக்கிறது. ஏன் இந்த அவதூறு.
  ++++++++++++
  ஈழப் பிரச்சனையை நோக்கி விவாதம் செல்லவேண்டும் என்பது நல்ல கருத்துதான் ஆனால் நீங்கள் கருத்து பதியும் முன்னரே இந்தப்பிரச்சனை வேறு தளத்துக்கு சென்று விட்டது. நீங்கள் ஆதங்கப்படலாம், உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் ஆனால் ஆத்திரப்பட்டு தூற்றுவது தவறு.
  அது விவாதிக்கும் முறையும் அல்ல.
  +++++++++++
  வக்கீல்கள் சாமி மீது முட்டையடித்த்து ஈழப்பிரச்சனை ஒட்டித்தான் என்பது இந்த பதிவின் தலைப்பிலேயே உள்ளது. பதிவிலும் உள்ளது. விவாத்ததில் அது இல்லையென்றால் அதற்கு வினவை குறை கூறி என்ன பயன் சாமி என்றவுடன் அனைவருக்கும பார்ப்பான் நினைவுதான் முதலில் வருகிறது போலும்.
  +++++++++++
  ஈழப் பிரச்சனையை ஒட்டி இந்த பதிவின் கவனம் திரும்ப நீங்கள் முயற்சிப்பதை போல தெரியவில்லை, உங்கள் கருத்தில் அதைப்பற்றி நீங்கள் எதுவும் எழுதவுமில்லை. உங்கள் விவாத முறையில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல உள்ளது. முடிந்தால் தெளிவு படுத்துங்கள்.
  ++++++++++++

 93. தோழர்களே
  மிக குறுகிய நாட்களுக்கு முன்பாக ஐ டி துறை நண்பா புத்தகத்தை படிக்கும் போது வினவு தளத்தை பற்றி தெரிய வந்தது. மிக அற்புதமாக விவாதங்கள் இருப்பதை அறிந்து மகிழ்வுற்றேன். ஆனால் இந்த சு சாமீ விவகாரத்தில் மட்டும் ஆரோக்கிய கருத்து பரிமாற்றத்துக்கு பதில் தரக்குறைவு வார்த்தைகள் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். எம் எல் உணர்வுள்ள தோழர்களில் சிலர் ம க இ க வின் கருத்துக்கள் சிலவற்றால் முரண்பட்டு ஏகதிபத்திய எதிர்புணர்வு இயக்கம் என பிரிந்திருப்பதை காண்கின்றோம். சில மாதங்களுக்கு முன்பாக தேனீ முருகமலையில் பிடிபட்ட தோழர்களின் போராட்ட வழிமுறையை கூட ம க இ க விமர்சித்திருக்கிறது. ஆனால் இந்த விவாதத்தில் பார்பன எதிர்ப்பு மட்டுமே பிரதானமாக இருப்பதுடன் மிக கொட்சையகவும் இருக்கிறது. அரசு ஊழியர்கள் லட்சம் பேர் பாசிச ஜெயாவால் வேலை நீக்கம் செய்யப்பட போது உலக மயமாக்கலின் முக்கிய காரணகர்த்தா சிதம்பரம் அரசு ஊழியருக்காக வாதாடினார். நீதிபதியின் தீர்ப்பை பாசிச ஜெயாவின் மறு வடிவம் என்றோம். இது எதனால் வருகிறது. வழக்கறிஞர்களாக இருக்கும் போது அய்யா கட்சி, அம்மா கட்சி, நடிகர் கட்சி, அன்னை கட்சி என ஒட்டு கட்சி சார்பு தன்மையால் அவர்கள் நீதிபதிகள் ஆகும் போது பிரதிபலிக்கிறது. எனது வாதம் இதுதான் வழக்கரிஞ்கர்கள் போராட்ட முறை வேராக இருந்திருக்கலாம்.
  சித்ரகுப்தன்.

 94. பாண்டியன் அவர்களே,

  ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தற்போது பார்ப்பனன் தாக்கப்பட்டவுடன் கருத்துரிமை
  கருத்துரிமை என கூவுகிறார்கள்.ஏன் ஆர்வீ என்னசொல்லுகிறார் சீமான் கைது செய்யப்பட்டதையும் சாமிக்கு அடி விழுந்ததையும் ஒன்று என்கிறார்.

  மொட்டை சோ ,செயா ராம் போன்ற வர்கள் பார்ப்பனர்கள் பாதிக்கப்படும் போது கருத்துரிமை பற்றி கூப்பாடு போடுகிறார்கள்.கேட்கும் கேள்விகளுக்கு அதாவது அவன் தப்பு செஞ்ச அடிக்க நீயார் என்று தான் கேட்டு கருத்துரிமைக்குள் புகுந்துகொள்கிறார்கள்,எனவே அதை நாம் உடைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
  ஈழப்பிரச்சினையில் அந்த சாமியை அடிக்கத்தான் வேண்டுமா? என்போர் திருச்சி கோயில்ல பூந்தாளே அவாள மாதிரி போலீஸ் அடிக்காம ஏன் வுட்டுச்சு தில்லயில? அங்கே போ பொழைக்கபோனவன் ஏன் தனி நாடு கேக்குறான்?
  இதற்கு என்ன பதில் சொல்லுவது?

  நாங்கள் பதில் சொன்னால் . ஏன் புலம்புகிறீர்கள்?

  ——————————————————————————-

  //இந்த நேரத்தில் நீங்கள் கவி.கருணாநிதியாக இருக்காதீர்கள் என்றும் அதைவிட ஏதொ பெயரளவுக்கு பேசும் தா.பாண்டியனாகவது இருக்க முயற்சி செய்யுங்கள்.//

  மீண்டும் ஒரு சந்தேகம் பேசுற தொணிய பாத்தா எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே?

  (தோழர் அரடிக்கெட் ரொம்ப சந்தேகமா இருக்கு)

 95. இதோ வந்திட்டேன்!
  அய்ய்யயோ இந்த யூடியூப் பாண்டியன எல்லாரும் சீரியஸ எடுத்துக்கிட்டீங்களா?
  அய்யோ அய்யோ இவன் ஒரு
  நம்ம பருப்பூர் பசையோட தோஸ்து,
  வம்பரசோட சகா, தாரதி பம்பியோட பிரண்டு,
  கோழிகரையாரோட தோலர் சுருக்கமா சொல்லனுமின்னா இவன் ஒரு
  வியாதிக்காரன். தமிழின வாதிக்காரன்.
  அது ஏன்தான் இவனுங்களுக்கு ம.க.இ.க மேல இத்தினி காண்டோ…. வினவு தளத்துல எங்க நல்ல விவாதம் நடக்குதோ அங்க போய் சீர்குலைவு வேல செய்யறது தானே உங்க வேலையே. ….. நான்சென்ஸ்!

 96. // சு ுப்ரமணிய சுவாமிக்கு ராமர் பாலம் குறித்தும், தீட்திதர் கோவில் குறித்தும், ஈழம் குறித்தும் அவர் விரும்பியபடி கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. சு.சுவாமியின் கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும் அது தவறு என்று சுட்டிக்காட்டினாலும் அவருக்குள்ள கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். அதை முட்டை வீசி தடுப்பது என்பது அநாகரிகமானது.. ஜனநாயக விரோதமானது. //
  வினவு என் நிலையை இங்கே சுருக்கமாக எழுதி இருக்கிறார். இங்கே இனி மேல் நான் கருத்து சுதந்திரத்தை பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். எனக்கு மறுமொழி எழுதும் பலரும் எங்கெங்கோ போகிறார்கள், எல்லா digressions -களுக்கும் பதிலளித்து மாளவில்லை.

  கலகம் அவர்களே,
  வடிவேலு ஏதோ ஒரு படத்தில் சொல்வது போல பேச்சு பேச்சாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். கை நீண்டால் கையை நீட்டுபவனின் கையை ஒடிக்கலாம், தவறே இல்லை. ஆனால் கை நீட்டுபவனின் கையை மட்டும் ஒடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது கொள்கை அளவிலாவது இருக்க வேண்டும். உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் நம் வாயில் யாராவது மலத்தை திணிக்க வந்தால் அவன் கையை உடைத்து அவன் வாயில் நாமும் மலத்தை திணிப்போம். மலம் திணிப்பது கருத்துரிமை அல்ல. இதை கூடவா நான் சொல்ல வேண்டும்? உன் வாயில் மலத்தை திணிக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் போடா புண்ணாக்கு என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்; திணிக்க வரும் கையை உடைப்பேன் என்று மிரட்டலாம். ஆனால் சொன்ன ஒரே காரணத்துக்காக அவன் வாய் நிரம்பக் கூடாது.
  சு. சாமி யார் மீதும் முட்டை வீசியதாக தெரியவில்லை, அதனால் அவர் மீது முட்டை வீசியது ஒரு கேவலமான, கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் சம்பவம்.

  வினவு,
  நான் என்னை “பார்ப்பனீயத்தின்” பிரதிநிதியாகவும் கருதவில்லை, பார்ப்பனர்களின் பிரதிநிதியாகவும் நினைக்கவில்லை. சு. சாமியின் ஜாதியை பற்றிய பிரக்ஞை இங்கு மறுமொழி எழுதும் பலரிடம் இருப்பதே எனக்கு அருவருப்பான விஷயம். சாமி தலித் ஆக பிறந்திருந்தால் நாம் வணங்க வேண்டியவராக ஆகி விடுவாரா என்ன?

  மற்றும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் யாருக்கு கருத்துரிமை உண்டு, யார் புல் வெட்ட போக வேண்டும் என்றெல்லாம் எழுதி இருந்தீர்கள். அதே நேரம் இந்த ஆட்சியில் எல்லாருக்கும் கருத்துரிமை இல்லை என்றும் குறைப்பட்டுக் கொள்கிறீர்கள். நான் எல்லாருக்கும் கருத்துரிமை வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது தெளிவு. ஆனால் நீங்கள் சு. சாமி உங்களுக்கு முட்டை அடிக்கவும் உரிமை தர வேண்டும், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சு. சாமி சாப்பிட கூட வாயை திறக்க கூடாது என்று சொல்கிறீர்கள். ஹிட்லரும், முசோலினியும், ஸ்டாலினும் கூட இப்படித்தான் தங்கள் எதிரிகளை – நில சுவான்தார்களை, குலாக்களை, யூதர்களை, தங்களை எதிர்த்து ஏதாவது சொன்னவர்களை -கான்சன்ட்ரேஷன் காம்புகளுக்கு அனுப்பினார்கள். அப்படிப்பட்ட சர்வாதிகார ஃபாஸிஸம்தா ஆன் உங்கள் எதிர்கால லட்சியம் என்றால் நான் இன்றைய நிலையையே விரும்புகிறேன். குறைந்த பட்சம் வினவு ஒரு தளமாவது நடத்த முடிகிறது. சீமானுக்கு ஆதரவாக குரலாவது எழுப்ப முடிகிறது. இன்றைய நிலை நல்ல நிலை இல்லைதான், மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நிகழ்கின்றன, பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைய நிலையை விட உங்கள் எதிர்கால லட்சிய உலகம் எந்த விதத்தில் சிறந்தது? குறை சொல்பவர்கள் எதிரிகள் ஆகிவிடுவார்கள். power corrupts, absolute power corrupts absolutely என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது.

  லவர்பாய்,
  உங்கள் இரண்டாவது பாரா என்னை சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று காண்பிக்கிறது. பல அநீதிகள் நடப்பதால், இது போன்ற சில குழப்பங்கள் நடக்கலாம் என்று சொல்கிறீர்கள். சரிதான். ஆனால் அவை குழப்பங்கள் என்று சுட்டப் பட வேண்டும் இல்லையா? இந்த குழப்பம் நடக்கிறது என்று குஷிப்பட்டால் எப்படி? சு. சாமியின் மீது முட்டை வீசியது தவறு, ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய தவறு என்றா வினவு எழுதி இருக்கிறார்? இல்லை இங்கே மறுமொழி எழுதி இருக்கும் பலரும் அப்படித்தான் நினைக்கிறார்களா?
  ஐரோம் ஷர்மிளா பற்றி எனக்கு தெரியாது. பினாயக் சென், மேதா பட்கர் ஆகியோருக்கு நடந்தது/நடப்பது பெரிய அநியாயம்தான். ஒரு பெரிய அநியாயம் இன்னொரு (சிறிய) தவறை நியாயபடுத்தாது என்று நினைக்கிறேன். மேலும் சு. சாமி மேல் வீசப்பட்ட முட்டைகள் அரசாங்கம் குழந்தைகளை பசி பட்டினியோடு அலைய விட்டிருப்பதை எப்படி தடுக்கும் என்றும் புரியவில்லை. குறைந்த பட்சம் மன்மோகன் மீதோ, கலைஞர் மீதோ வீசப்பட்டிருந்தால் அது ஒரு புரிந்து கொள்ளக்கூடிய தவறாக இருக்கும். சு. சாமி அரசாங்கம் இல்லையே? நீங்களே சொல்கிறீர்கள் அவர் தனிப்பட்ட மனிதர் என்று.
  நீங்கள் தனிப்பட்ட மனிதர் மீது ஏவப்பட்ட வன்முறை மீது ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறீர்கள் என்று கேட்டிருந்தீர்கள். கண்ணில் பட்டது, அவ்வளவுதான். ஒரு தனிப்பட்ட மனிதர் மீது வன்முறை ஏவ பல பேருக்கு அக்கறை இருக்கிறதே? அதை நியாயப்படுத்த உங்களுக்கும் இவ்வளவு அக்கறை இருக்கிறதே? இதெல்லாம் ஏன் என்று நீங்கள் ஏன் கேட்கவில்லை, யோசிக்கவில்லை? அப்போது பெருந்திரளான மக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் வன்முறை உங்கள் கண்ணில் படவில்லையா?

 97. //இதற்கு பெயர் சுயமரியாதை பூசை,

  எப்போதும் கடவுளுக்கு பூசை செய்து தன் வாழ் நாள் முழுவது சேவை செய்யும் பிராமணாளுக்கு ஏதோ தமிழனால முடிஞ்சது இவ்வளவுதான்.//
  திரு.கலகம் அவர்களே
  இந்த பார்பனர்கள் எப்போது இல்லாத கடவுளுக்கு பூஜை செய்தார்கள் .நீங்க வேற புரியாம பேசுறிங்க .
  உங்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா.இந்த நாரயணீயம் எழுதிய நாராயண படத்திரி என்ன செய்தான் தெரியுமா ?அவனோட காதலியை இரவு பூஜை முடிந்த பிறகு அந்த கிருஷ்ணர் சன்னதி யை பூட்டி விட்டு கலவி செய்தான் . இதான் அவாளோட யோக்கயதை .கருமம் ங்க
  .இந்த கூறு கெட்ட தமிழர் கிட்ட இந்த கருமத்தை எல்லாம் எடுத்து சொல்ல வேண்டிய தலை எழுத்து.

  திரு மது குமார் அவர்களே

  இந்த பாப்பார்கள் உயிர் எவ்ளோ பெரிசு .இந்த சுப்ரமணியம் சாமி இருக்கானே அவன் செத்தா பாரத் ரத்னா இல்லை சிங்கள ரதன விருது கொடுத்திருவோம்.ஒன்னும் கவலை பட வேண்டாம்.

  சொல்லிடுங்க
  விருது நிச்சயம் .

  அய்யா வெண்ணை அவர்களே
  ஆமா இந்த அவா கோஸ்டி எவ்ளோ போராடி இருக்கா நம்மளோட சுதந்திரத்திற்கு .அம்மா ஒரு காந்தி ய கொல்லாம் .என்னா காந்தி ஒண்ணுமே செயல்ல .இந்த ராஜாஜி ,ராஜேந்திர பிரசாத் ,நேரு போல பார்பன கும்பல் தான் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள்.ஒண்ணுமே செய்யாத காந்தி பெயர் தட்டி போறதை எப்படி உலகத்தின் ஒன்னாவது சாதி நாங்கள் அனுமதிப்போம் .அதனால சுட்டு கொன்னோம் .என்ன தப்பு .சரியா .சரி ன்னு சொல்லை ன்ன நாங்க சுப்பிரமணியம் சாமி இடம் சொல்லி சுப்ரீம் கோர்ட் ல வழக்கு போடுவோம்
  புரியுதா
  அய்யா புரச்சி அவர்களே
  நீங்க எங்க கொதிகுறிங்க
  ஆசிட் முட்டை எல்லம் எதுக்குங்க .அது ஒரு பழைய வரைமுறை .அதை தான் இந்த பார்பன மனித கழிவு ஜெயலலிதா திருமதி சந்திரலேகா சுப்ரமணியமா சாமிக்கு செஞ்சி பாத்தா.ஒன்னும் வேலைக்கு ஆகல.அதனால நாம வேற ஒன்னு முயற்சி பண்ணலாம்
  சரியா
  .அது கண்டிப்பா ஒரு அருமையான் முடிவா இருக்கும் .போதுமா புரச்சி அவர்களே
  அய்யா சுகனி அவர்களே
  இதுவா இவ்ளோ பெரிய அய்யோக்கிய பயலுக்கு தண்டனை போதுமா ???
  ஒங்களுக்கு பெரிய மனசு
  ஆனா இந்த தமிழர்களுக்கு போதாது.
  இன்னும் பெரிய தண்டனை கொடுப்போம்
  ஆனா நீங்க தமிழர் தான் .
  அய்யா Aapu_for_Paappu,
  இந்த மொட்டை 0 தலை வெறி , கிறுக்கு பிடிச்ச சோ (மாறி) நாய்க்கு புஷ் க்கு கொடுத்த தண்டனை யை விட நல்ல நியாமான தண்டனை நாம் கொடுப்போம்.கவலை படாதிங்க

  உமா ,தாய்லாந்து

  என்னும் எழுதுவேன்

 98. தமிழச்சி,

  நீங்கள் கேட்டது:
  // இத்தளத்திடம் சு.சாமியைப் பற்றி இப்படியொரு பதிவை போட்டிருக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லும் போது வினவு கருத்து உரிமையையும்/ பேச்சு உரிமையையும் நீங்கள் முடக்குவதாக விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக இருக்கிறதே? இது எந்த வகையில் நீங்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் கருத்து / எழுத்து சுதந்திரத்திற்கு பொறுந்திப் போகிறது என்பதே எமது கேள்வி? //
  என் பதில்:
  // நன்றாக கவனியுங்கள் – வினவு தளத்தில் இது போன்ற ஒரு போஸ்ட் வருவது கேவலம் என்று சொல்லி இருக்கிறேன். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லி இருக்கிறேன். deplorable என்று சொல்லி இருக்கிறேன். வினவு இது போன்று எழுதக் கூடாது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. (ஆனால் எதிர்காலத்தில் வினவு தளத்தின் தரத்தை பற்றிய ஆதங்கத்தில் நான் இப்படி சொல்லக்கூடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.) கேள்வி கேட்க வேண்டியதுதான், ஆனால் கொஞ்சம் கவனமாக கேளுங்கள். //
  உங்கள் எதிர்வினை:
  // எந்தக் கேள்வியை கவனக்குறைவாக கேட்டிருக்கின்றேன் என்று சுட்டிக்காட்டினால் தவறை திருத்திக் கொள்வேன். நீங்கள் சுட்டிக் காட்டும் வார்த்தைகளில் தவறில்லாத பட்சத்தில் என்னுடைய நிலைப்பாட்டை விளக்கவோ மாற்றிக் கொள்ளவோ தயாராக இருக்கிறேன். //
  வினவின் கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் நான் கட்டுப்படுத்துகிறேன் என்று நீங்கள் எழுதியது தவறு, நான் வக்காலத்து வாங்கும் கருத்து/எழுத்து சுதந்திரத்துக்கு consistent ஆகவே எழுதி கொண்டிருக்கிறேன். வினவுக்கு எழுத எல்லா சுதந்திரமும் உண்டு, அதை கேவலம் என்று விமர்சிக்க எனக்கும் எல்லா சுதந்திரமும் உண்டு என்பதை தெளிவாக்க விரும்பிகிறேன்.
  நீங்கள் கேட்ட கேள்வியை நீங்களே அதற்குள் மறந்துவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இல்லாவிட்டால் கட்/பேஸ்ட் செய்திருப்பேன்.

  நீங்கள் பெரியாரின் முரட்டு பக்தை போலிருக்கிறது. எங்கெங்கோ போகிறீர்கள். பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்ததற்கு விளக்கம் தர ஒரு அவசியமும் இல்லை. பிள்ளையாரை மாலை போட்டு கும்பிட எனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை பிள்ளையாரை செருப்பாலடிக்க பெரியாருக்கு இருக்கிறது. என் வீட்டுக்குள் நுழைந்து நான் வணங்கும் விக்ரகத்தை அடிக்காமல் இருந்தால் சரி. அந்த உதாரணத்தை நான் எடுத்தது பெரியாரின் செயலின் நியாய அநியாயங்களை அலச இல்லை – இன்று சு. சாமி பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு எதிராக கருத்து தெரிவிப்பதை போல அன்று பெரியாரும் பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு எதிராக செயல் புரிந்தார் என்று சுட்டவே. அதே போல்தான் சேது சமுத்திர உதாரணமும். மாற்று கருத்துகளை பரிசீலிக்கும் – அட் லீஸ்ட் சகித்துக் கொள்ளும் – மனப்பான்மை வேண்டும். பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு மாற்று கருத்து சொன்னால் முட்டை அடி என்றால் அன்று பெரியார் மீது எவனாவது முட்டை வீசி இருப்பான், அதுவும் சரி, ஜனநாயக முறைப்படி நடந்து கொண்டான் என்று சொல்ல வேண்டி வரும்.

  // யார் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். விவாதத்திற்கு வரட்டும் நல்லதுதானே! முட்டடி மேட்டர் நடந்து முடிந்திருக்கிறது. //
  இந்த் முறை ஞாபகமாக கட்/பேஸ்ட் செய்து விட்டேன். முட்டை அடி விவாதம் என்று சொல்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

  // தாய்லாந்து உமாவுக்கோ தந்தைலாந்து பாமாவுக்கோ கண்டிப்பாக கருத்து சுதந்திரம் உண்டுங்கோ. ஆனா எதிர் விணை செய்ய எங்களுக்கும் உரிமை உண்டுங்க. //
  ஆனால் சு. சாமிக்கு இல்லையா? அவர் மீது மட்டும் முட்டை வீசுவீர்களா? இல்லை, உங்கள் மீது முட்டை வீசினால் கை தட்டி வரவேற்பீர்களா?

  பின்குறிப்பு: அருமையான பெரியார் பதிவை சுட்டியதற்கு நன்றி. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு போலித்தனம் இல்லாததுதான். அது இந்த பதிவிலும் தெரிகிறது. மேலும் அவரது சுய சரிதை பக்கங்கள் கிடைக்குமா?

 99. இது நடக்கும் விவாத பொருளுக்கு சற்று தொடர்பில்லாத்து. நண்பர் அரை கடவுச்சீட்டு 🙂 உங்கள் தகவலுக்கு நன்றி. எனக்கும் அந்த சந்தேகம் இருந்த்து. வே.மதிமாறன் தளத்தில் 3 வாரங்களுக்கு முன் இவர்களிடத்தில் நான் கேட்ட கேள்விக்கு பதிலில்லை. அதை இங்கே இடுகிறேன்.
  ++++++++++++++++++
  ஈழத் தமிழன் பெயரையும் புலிகள் பெயரையும் சொல்லிக்கொண்டு சினிமா காரனுக்கும் அரசியல்வாதிக்கும், மில் ஓனருக்கும் சொம்பு தூக்கும் தமிழினவாதிகளே உங்கள் வருத்தம் புரிகின்றது….முத்துக்குமார் செத்த மேட்டர வச்சு மாணவரகள தூண்டிவிட்டு, ஒப்பாரிவச்சு கூட்டம் போட்டு கலெக்ஷன் பாக்கலாம்னு நீங்க நெனச்ச வேளையில இந்த ம.க.இ.க காரன் உள்ளார பூந்து சரியான அரசியல் பாதையில் மாணவர்களை கொண்டு போயிட்டானேன்னு நீங்க வெக்ஸ்ஆகி இருப்பது புரியுதுமா ஆனா இன்னா செய்யறது இன்றைய தமிழக இளைஞர்கள் உங்க செல்லரிச்சு போன அரதப் பழசான தத்துவத்துக்கு வர மாட்டாங்கம்மா ஏன்னா இந்த உலகமய கால கட்டத்துல அவங்க வாழறதே ஒரு சர்வதேசிய வாழ்க்கை அதுல உங்க இனவாத்ததுக்கு இடமே இல்லை. இன்னிக்கு வால்ஸ்டிரீட் கிரேஷ் ஆச்சுன்னா வால்டாக்ஸ் ரோடுல வேல போவது இந்த நேரத்துல நீங்க போயி தனிதமிழ்நாடு வந்தா நம்ம பிரச்சனையெல்லாம் தீந்துடூமின்னு போசுனா அவன் வாயால சிரிக்கமாட்டான்!
  அடுத்த பரச்சனை ஈழத்தை பற்றியது… ம.க.இ.க காரங்க ஒரு பொது முழக்கத்துக்கு கீழ தமிழகம் பூரா ஆர்பாட்டம்/ மறியல் நடத்தராங்க இங்க வந்து வக்கன பேசும் விஜய் மற்றும் பேரில்லா பிச்சையான போங்கடா போன்ற கேசுகளெல்லாம் எத்தன போராட்டம் நடத்துனீங்க, எங்க எத்தன பேர் கைதானீங்க போன்ற விவரங்களை சொல்லுங்க. ஜனங்க ரெண்டையும் கம்பேர் செஞ்சு பாத்துகட்டும். அத உட்டுட்டு பொலம்பறது, திட்டறது, கிண்டலடிகிறது போன்ற வேலைகளில் இறங்கினால் அம்பலப்படப் போவதென்னவோ நீங்கதான்.
  ஏன்னா கூச்சல் போடறது, அப்புறம் கலைஞரே தமிழின காவலரேன்னு கூஜா தூக்கறதுன்னு உங்க அரசியல் நடவடிக்கை முடிஞ்சு போச்சு. இன்னிக்கு முத்துக்குமார் சாவலன்னா நீங்க இன்னமும் கலைஞர் காலடியிலதானே கிடந்திருப்பீங்க. இப்ப அடுத்த தமிழன காவலருக்காக நீங்க வெயிட்டிங். ஏன்னா கூச்சலும் கூஜாவும்தான் உங்களுக்கு தெறிந்த அரசியல். அத வச்சு நீங்க இதுவரைக்கும் ஈழத்துக்காக சாதித்த்தை பட்டியல் போட முடியுமா?
  ம.க.இ.க புலிகள ஆதரிக்கல அதனால அவங்க தமிழர்களுக்கு எதிரின்னு நீங்க கூச்ச்ல் போடுறீங்க, சரி. புலிகள்=தமிழர்கள் அப்பிடீங்கறீங்க, சரி, ஈழ விடுதலை உங்க சொத்து மாதிரியும் ம.க.இ.க காரன் அத திருடிட்ட மாதிரியும் பேசுரீங்க சரி அப்ப உங்களுக்கும் உங்க தலைவர்களும் இங்க என்ன வேலை. போங்க வன்னிக்கு, ஆளுக்கு நாலு டஜன் சிப்பாய சுட்டு விடுதலையை வாங்க வேண்டியதுதானே. சீரியஸா கேக்குறேன்….
  +++++++++++++++
  ஈழப் பிரச்சனைக்கு போய் பார்ப்பனியம், தரகு முதலாளியம் என்றெல்லாம் ம.க.இ.க பிதற்றுவதாக ஏசினார்கள். இன்று நாராயணமூர்த்தி படத்துக்கு செருப்பாலடிக்க கிளம்பிவிட்டனர். இவர்களின் செல்லாக்காசு அரசியலின் துரோகத்தை தமிழர்கள புரிந்து கொள்வது அவசியம்

 100. அய்யா, இது சுப்ரமணிய சாமிக்கு ஆன பூஜையா மட்டும் பார்க்க கூடாது. கருணாநிதி, வீரமணி போன்ற தமிழின துரோகிகளுக்கும் சிதம்பரம், ஞானசேகரன் போன்ற பரம தமிழின எதிரிகளுக்கும் இது தொடரணும்னு எல்லாம் வல்ல சர்வ சக்தி படைத்த மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
  ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை காண சகிக்காமல் இருந்த வேளையில் சுப்பிரமணி மீது நடத்திய அர்ச்சனை மனசுக்கு இதமா இருந்தது. இதன் எல்லையை இந்து ராம், தினமலர் முதல் சோ வரை விரிவு படுத்த வேண்டிகொள்கிறேன்.

 101. நண்பர் ஆர்.வி. பெரியார் மீது வீசப்படாத முட்டை, செருப்பு, கல், துடைப்பம் ஏதாவது உண்டா. அதை வீசியவர்களும் பார்ப்பனர்களே,
  ஆனால் பார்ப்பனர் மட்டும் அல்ல.

  தமிழச்சி சமூக விரோதியல்ல சாமி சமூக விரோதி, சமுக விரோதி தண்டிக்கப்படுவது தவறில்லை. அவருடைய கருத்து பிடிக்காததால் மட்டும் அவரை அடிக்கவில்லை அவரையே பிடிக்காத்தால்தான் அடித்தனர்.
  எனக்கு கூடத்தான் உன்னை பிடிக்கவில்லை அதற்காக அடிப்பதா என கேட்டால் ஒருவரை அடிப்பது மட்டுமா வன்முறை அடிக்க வேண்டும் என நினைப்பது கூட வன்முறைதானே. அது கருத்துக்கு மதிப்பளிக்காத செயல் தானே. வன்முறை மனதில் இருந்தால் சரி செயலில் இருந்தால் தவறா.

  அந்த நீதிமன்றத்துக்கு எத்தனையோ வழக்குகள், வாதி பிரதிவாதி, மாற்றுக்கட்சி, சாதி என பலர் தினமும் சந்தித்து கொள்கிறார்கள் ஏன் சாமிக்கு மட்டும் அடி விழுந்த்து என நீங்கள் ஏன் யோசிக்க கூடாது.

 102. மா. சே.

  // ெரியார் மீது வீசப்படாத முட்டை, செருப்பு, கல், துடைப்பம் ஏதாவது உண்டா. //
  அதை நீங்கள் சரி என்று சொல்கிறீர்களா? நான் அப்படி சொல்ல மாட்டேன். நீங்கள் அப்படி நினைப்பதாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள். இல்லை பெரியார் மீது முட்டை வீசினால் தவறு, சு. சாமி மீது வீசினால் சரியா?

  // சாமி சமூக விரோதி, சமுக விரோதி தண்டிக்கப்படுவது தவறில்லை. அவருடைய கருத்து பிடிக்காததால் மட்டும் அவரை அடிக்கவில்லை அவரையே பிடிக்காத்தால்தான் அடித்தனர். //
  1952 -இல் இதையே யாராவது எழுதி இருப்பார்கள். சாமி என்பதற்கு பதிலாக பெரியார் என்று பேர் மட்டும் மாறி இருக்கும். பெரியாரை பற்றி அப்படி எழுதப்பட்டால் தவறு என்று நானும் சொல்வேன், நீங்களும் சொல்வீர்கள். சாமி என்றால் உங்கள் லாஜிக் மாறி விடுகறது. எனக்கு அதே லாஜிக்தான்.

  // வன்முறை மனதில் இருந்தால் சரி செயலில் இருந்தால் தவறா. //
  தவறுதான். இதை எல்லாம் கூட நான் சொல்ல வேண்டுமா? வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனிடம் உன்னை கொலை செய்யப் போகிறேன் என்று சொல்லுங்கள். ஒரு மாதம் கழித்து கொலையும் செய்து பாருங்கள். எப்போது நீங்கள் தண்டிக்கப் படுவீர்கள்?

  // அந்த நீதிமன்றத்துக்கு எத்தனையோ வழக்குகள், வாதி பிரதிவாதி, மாற்றுக்கட்சி, சாதி என பலர் தினமும் சந்தித்து கொள்கிறார்கள் ஏன் சாமிக்கு மட்டும் அடி விழுந்த்து என நீங்கள் ஏன் யோசிக்க கூடாது. //
  இந்த மாதிரி ஒரு மோசமான வாதத்தை நான் பார்த்ததில்லை. சரி ஒரு தின்னியத்துக்காரன் உங்களிடம் வந்து இப்படி சொல்கிறான்.
  // எங்க ஊரில எத்தனையோ தலித்துங்க இருக்காங்க, வந்து போறாங்க. ஏன் இவன் வாயில மட்டும் மலத்தை திநிக்கனும்னு நீங்க யோசிக்க கூடாது? //
  நீங்க என்ன சொல்வீங்க? ஏங்க இவ்வளவு கேவலமா யோசிக்கறீங்க? இதெல்லாம் ஒரு வாதம், இதுக்கெல்லாம் நான் வேலை மெனக்கெட்டு பதில் எழுதறேன். என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்.

 103. //என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்.//

  எங்கேயோ இடிப்பது போலில்லையா ஆர்வீ

 104. //கட்/பேஸ்ட் செய்திருப்பேன்.//

  RV

  பேசாமல் அதையே செய்யுங்கள்! நீங்கள் எதை குறித்து விவாதிக்கிறீர்கள் என்பதையாவது உணர்த்த முயற்சிக்கிறேன்.

  ///நீங்கள் பெரியாரின் முரட்டு பக்தை போலிருக்கிறது. ///

  பக்தி என்றால் கண்மூடித்தனமான நம்பிக்கையாகிவிடும். பெரியாரிஸ்ட்டுக்கள் பெரியார் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையையோ, பக்தியையோ வைக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

  ///பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்ததற்கு விளக்கம் தர ஒரு அவசியமும் இல்லை.///

  பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த மேட்டரை நீங்கள் தொடங்கியதால் தான் காரணங்களை குறிப்பிட்டேன்.

  ///என் வீட்டுக்குள் நுழைந்து நான் வணங்கும் விக்ரகத்தை அடிக்காமல் இருந்தால் சரி.///

  ஒரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்த விரும்புறேன். பெரியார் செருப்பால் அடித்தது கோயிலுக்குள் உள்ளே இருந்த பிள்ளையாரை அல்ல. சொந்த செலவில் சிலைகளை வாங்கி செருப்பால் அடித்தார். நாகரிகம் தெரிந்தவர்கள் தான் பெரியாரிஸட்டுக்கள். அநாகரிகமானவர்கள் இல்லை அடுத்தவன் வீட்டுக்குள் நுழைந்து செருப்படி கொடுக்க.

  ///இன்று சு. சாமி பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு எதிராக கருத்து தெரிவிப்பதை போல அன்று பெரியாரும் பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு எதிராக செயல் புரிந்தார் என்று சுட்டவே. ///

  பெரியாரையும் சு.சாமியையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. இன்னும் இனம் காண மறுக்கிறீர்கள். பெரியார் அடுத்தவன் குடியை கெடுக்கவில்லை.

  ///அவர் மீது மட்டும் முட்டை வீசுவீர்களா? இல்லை, உங்கள் மீது முட்டை வீசினால் கை தட்டி வரவேற்பீர்களா?///

  ஏம்பா நா எவன் குடியை கெடுத்தேன். என் மீது முட்டை வீசுவதற்கு? செவிட்டில் ஓங்கிவிடுவேன். (என் மீது முட்டை வீசுபவனுக்கு) சு.சாமி அரசியல்வாதி நான் சமூகவாதி. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

 105. நன்பர் ஆர்வி,

  வினவுவின் மறுமொழி “கருத்து சுதந்திரம்” என்றால் என்ன? என்று தெளிவாகச் சொல்லிவிட்டது. மேற்கொண்டு நீங்கள் அதனை மறுத்து உங்கள் கருத்தை வைப்பீர்கள் என்றே நான்
  எதிர்பார்த்தேன் – ஏமாற்றம் தான்.

  உங்கள் பிரச்சினை நீங்கள் நடக்கும் ஒரு சம்பவத்தை அதன் முன் நடந்த மற்றெல்லாவற்றிலிருந்தும் பிரித்துப் தனியே எடுத்து, இதற்கு மட்டும் பொதுபுத்தியில் நின்று விமர்சிப்பது
  / விளக்கம் கொடுப்பது தான் என்று நினைக்கிறேன். சரி இப்போ உங்கள் ரூட்டுக்கே வருகிறேன். வினவுக்கு நீங்கள் அளித்த பதிலில் “சுப்பிரமனியம் சாமி மேல் முட்டை வீச
  நீங்கள் உரிமை கேட்கிறீர்கள் ” என்று சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா – அது கேட்டுப் பெற்றதல்ல, தானே எடுத்துக் கொண்டது

  சோசலிச கட்டமைப்பில் இருக்கும் சர்வாதிகாரம் / ஜனநாயகம் /கருத்து சுதந்திரம் பற்றி நிறைய கவலைப்படுகிறீர்கள். இப்போதைய நிலைமை தொடர்வதையே விரும்புவதாக
  குறிப்பிட்டிருக்கிறீர்கள். நல்லது உங்கள் வர்க்கத்தன்மை எத்தகையது என்பதை இன்னுமொரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி. இன்றைய ஜனநாயகம் / கருத்து
  சுதந்திரம் யாருக்கானது? அம்பானிகளுக்கும் அவர் போன்ற தரகு முதலாளிகளுக்குமானது. இன்றைய சமுதாயத்தில் எந்த ஜனநாயகமும் இல்லாத / சுதந்திரமும் இல்லாத மக்கள்
  பிரிவு தான் 99% இருக்கிறது. நீங்கள் அந்த மீதமுள்ள ஒரு சதவீத பிரிவுக்குள் உங்களை நீங்களே அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள். இங்கே வினவு தோழர்கள் 99% மக்களுக்கு
  விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் என்கிறார்கள் – அப்படி ஒரு நிலை எட்டப்படும் போது மீதமுள்ள 1% பேர் ஒடுக்கப்படுவார்கள் என்கிறார்கள். நீங்கள் இப்போது இருக்கும்
  1% பேரின் விடுதலையும் சுதந்திரமும் மட்டும் அப்படியே மாற்றமில்லாமல் நிலைத்து நின்றால் போதும் என்கிறீர்கள்.

  உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொண்டதற்கு மீண்டும் நன்றி.

  நான் முதல் பத்தியின் உதாரணத்தில் சொல்லியிருந்ததை இரண்டாம் பத்தியில் சொன்னவற்றோடு முடிச்சுப் போடுகிறீர்கள். சரியாகக் கவனியுங்கள் சு.சுவாமிக்கு எதிரான நடவடிக்கையை நான் “குழப்பம்” என்று சொல்லவில்லை. நான் சொன்னது –

  // அப்போ தனிப்பட்ட சு.சுவாமியின் கருத்துரிமையின் கதி? ஐரோம் ஷர்மிளாவின் அமைதிப் போராட்ட உரிமைக்கு என்ன கதி ஏற்பட்டதோ அது தான்… பினாயக் சென்னின்
  கருத்துரிமைக்கு என்ன கதியானதோ அதே கதி தான். சீமானின் கருத்துரிமைக்கு என்னவானதோ அதே கதி தான். வரலாற்றின் பழிவாங்கும் உணர்ச்சி மிகக் கொடூரமாய்த்தான்
  இருக்கும் – அப்போது மனித உரிமை / கருத்துரிமை / எழுத்துரிமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் – கண்ணுக்குக் கண் தான் பல்லுக்குப் பல் தான்! இத்தனை நாளாய்
  சு.சுவாமி பேசிய பேச்சுக்களும் / இயங்கிய தன்மையும் அவருக்கு எதிராய் உண்டாக்கிய எதிர்வினையின் பௌதிக வடிவத்தின் முதல் வெளிப்பாடு தான் முட்டையடி. //

  இப்போ நான் சொன்னதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் கொடுத்த விளக்கத்துக்கு வருவோம்,

  //ஐரோம் ஷர்மிளா பற்றி எனக்கு தெரியாது. பினாயக் சென், மேதா பட்கர் ஆகியோருக்கு நடந்தது/நடப்பது பெரிய அநியாயம்தான். ஒரு பெரிய அநியாயம் இன்னொரு (சிறிய) தவறை நியாயபடுத்தாது என்று நினைக்கிறேன். மேலும் சு. சாமி மேல் வீசப்பட்ட முட்டைகள் அரசாங்கம் குழந்தைகளை பசி பட்டினியோடு அலைய விட்டிருப்பதை எப்படி தடுக்கும் என்றும் புரியவில்லை. குறைந்த பட்சம் மன்மோகன் மீதோ, கலைஞர் மீதோ வீசப்பட்டிருந்தால் அது ஒரு புரிந்து கொள்ளக்கூடிய தவறாக இருக்கும். சு. சாமி அரசாங்கம் இல்லையே? நீங்களே சொல்கிறீர்கள் அவர் தனிப்பட்ட மனிதர் என்று.//

  நீங்கள் குறிப்பிடும் “பெரிய அநியாயமான” வழியில் தான் கருத்து சுதந்திரத்தையும் அமைதி வழிப் போராட்டங்களையும் இங்கே டீல் பன்னுகிறார்கள். அப்படியிருக்கும் போது
  அவர்களிடம் தான் நீங்கள் போய் முதலில் கருத்து சுதந்திரம் குறித்து லெக்ச்சர் கொடுத்திருக்க வேண்டும். நான் கேட்டது –

  //ஏன் பெருந்திரளான மக்கள் மேல் ஏவி விடப்பட்டிருக்கும் வன்முறை மேல்
  அக்கறை கொள்ள மறுக்கிறீர்கள்? எது தடுக்கிறது? கோடிக்கணக்கான மக்கள் பசியும் பட்டியோடும் வாட விட்டிருப்பது அரச வன்முறை என்கிறேன் நான். சப் சஹாரா
  பாலைவனக் குழந்தைகளை விட ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் நம் நாட்டில் உருவாக விட்டிருக்கும் அரச நடவடிக்கைகளை வன்முறை என்கிறேன் நான்… நீங்கள்
  என்ன சொல்கிறீர்கள்? இந்த வன்முறைக்கு எதிர் நடவடிக்கை வன்முறையாகத்தான் இருக்க முடியும். யாருக்கு எந்த மொழி புரியுமோ அவருக்கு அந்த மொழியில் தான்
  பதில் அளிக்க முடியும். லட்சக்கணக்கில் விவசாயிகளை தற்கொலைக்குள் தள்ளும் அரசின் வன்முறையான கொள்கைக்கு எதிராக அவர்களை என்ன
  செய்யச் சொல்கிறீர்கள்? //

  நன்றாக கவனியுங்கள் – ஒரு சுப்பிரமனிய சாமியின் கருத்து சுதந்திரத்தில் இத்தனை அக்கறை கொள்ளும் நீங்கள் / எல்லாவகையில் நியாயமான நடவடிக்கையான முட்டையடியை விமர்சிக்கும் நீங்கள் – இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் சுதந்திரத்தில் ( கருத்து சுதந்திரம் கிடக்கட்டும் குப்பையில் – முதலில் பெரும்பான்மை மக்கள் வாழவே சுதந்திரமற்று இருக்கிறார்கள் ) அக்கறை கொள்ளாததற்குக் காரணம் – உங்கள் வர்க்கம். நீங்கள் சு.சுவாமியோடு / அவர் சார்ந்த வர்க்கத்தோடு ( அவரை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டாலும் ) உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதனால் தான் உங்கள் இந்தச் சம்பவம் ஒரு வன்முறையாக தெரிகிறது – கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆம்
  நானும் ஒப்புக்கொள்கிறேன் – கருத்து சுதந்திரம் சுப்பிரமனிய சாமிக்கு மறுக்கப்பட்டிருக்கிறது – ஆனால் அது அப்படித்தான் மறுக்கப்படும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் இது பெரும்பான்மை தமிழ் மக்களின் சுதந்திரமல்ல; மாறாக சிறுபான்மை துரோகிகளின் சுதந்திரம்.

  நீங்கள் எனது மறுமொழியில் குறிப்பிட்டிருந்த ஒரு உதாரணத்தில் பயன்படுத்திய ஒரு வார்த்தையை மட்டும் கத்தரித்து எடுத்து (குழப்பம்) ஒட்டுமொத்தமாக சாராம்சமாக நான்
  சொன்னதே அது தான் என்று திரிக்கிறீர்கள்.

 106. //1952 -இல் இதையே யாராவது எழுதி இருப்பார்கள். சாமி என்பதற்கு பதிலாக பெரியார் என்று பேர் மட்டும் மாறி இருக்கும். பெரியாரை பற்றி அப்படி எழுதப்பட்டால் தவறு என்று நானும் சொல்வேன், நீங்களும் சொல்வீர்கள். சாமி என்றால் உங்கள் லாஜிக் மாறி விடுகறது. எனக்கு அதே லாஜிக்தான்.//

  1952ல பெரியாரை சமூக விரோதி என்று சொன்வர்கள் இன்று கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் 2009ல் நமக்கு தெறியும் பெரியாரின் பங்களிப்பு என்னவென்று. அதனால் அப்படி செய்வது, சொல்வது தவறு என சொல்ல்லாம்.

  சாமியின் பங்களிப்பை விவாதிப்போமே
  நானே துவங்குகிறேன்
  1) அரசியல் தரகன் – கிரிமினல்
  2) அமெரிக்க கைக்கூலி – உளவாளி
  3) பார்ப்பனியத்தை உயர்த்தி பிடிப்பவன் – சாதி வெறியன்

  நீங்கள் சொல்லுங்கள்…

 107. ///பின்குறிப்பு: அருமையான பெரியார் பதிவை சுட்டியதற்கு நன்றி. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு போலித்தனம் இல்லாததுதான். அது இந்த பதிவிலும் தெரிகிறது. மேலும் அவரது சுய சரிதை பக்கங்கள் கிடைக்குமா?///

  RV

  தந்தை பெரியாருக்காக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தின் இணைப்பை இதில் பதிவு செய்திருக்கிறேன். பெரியார் எழுதிய நுhல்கள் கட்டுரைகள் சொற்பொழிவுகள் என பெரியார் குறித்த அனைத்தையும் இந்த இணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். வேலைகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

  பெரியாரின் சுயசரிதை வாழ்க்கை வரலாறு என்னும் பிரிவுக்குள் பதிவு செய்யப்படுகிறது. வாசித்து பார்க்கவும்.

  http://tamizachiyin-periyar.com/

  • Let alone the political joker Subramania Swamy, satellite connectionaiyum, TV channelkalai vaithhtirukkum oru perum tamil thalaivar siladaiyaaha “thamiz paRRu” vaendum enkiRaar, angae ilankaiyil “Tamil Selvan” meethu kundu vizhukiRathu. PurikiRathaa “yaar suththirathaari enRu, S.Swamykkum intha thalaivarukkum enna uRavenRU”.

   thimukavai kaakkaththan paRanthu vanthirukiRaar s.swamy.

 108. // ெரியார் மீது வீசப்படாத முட்டை, செருப்பு, கல், துடைப்பம் ஏதாவது உண்டா. //
  அதை நீங்கள் சரி என்று சொல்கிறீர்களா? நான் அப்படி சொல்ல மாட்டேன். நீங்கள் அப்படி நினைப்பதாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள். இல்லை பெரியார் மீது முட்டை வீசினால் தவறு, சு. சாமி மீது வீசினால் சரியா?////

  RV

  நீங்கள் பெரியார் மீது செருப்பு வீசியது சரியா? தவறா? என்பதைவிட பெரியாரே அதைக் குறித்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள் :

  29-07-1944- இல் கடலூர் மாவட்டத்தில், மஞ்சள் குப்பம் என்ற ஊரில் தந்தை பெரியார் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. “தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு” என்று அந்நிகழ்வுக்கு பெயர் வைக்கப்பட்டது. அன்று பெரும் மழை. இருப்பினும் தொண்டர்களும், பொது மக்களும் பெரியாரின் பேச்சைக் கேட்பதற்காக காத்திருக்கிறார்கள்.

  பொதுவாகவே பெரியாரிடம் ஒரு குணம் உண்டு. குறிக்கப்பட்ட நாட்களில் கூட்டத்தில் பேசவேண்டும் என்றால் என்ன நடந்தாலும் சரி கண்டிப்பாக வந்துவிடுவார். தன்னுடைய 93- வது வயதில் இறப்பதற்கு 15- நாட்களுக்கு முன்பு கூட்டத்தில் பேசும் போதுகூட கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது தான் அறுவவை சிகிச்சையைக் செய்யப்பட்டிருந்த உடல். தாங்குமா? வலி பொறுக்க முடியாமல் துடித்த பெரியாரை ´பேச வேண்டாம் அய்யா´ என்ற போதும்; தோழர்களின், பொது மக்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பேசி முடித்துவிட்டே சென்றார் பழுத்த போராளி.

  அப்படிப்பட்டவர் தனது இடைப்பபட்ட வயதில் மழைக்கெல்லாம் பயந்துக் கொண்டு இருப்பாரா என்ன? மழையிலும் எழுச்சியுடன் பேசுகிறார். கூட்டம் முடிந்த பின்பு திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ரிக்ஷாவில் தொண்டர்களுடன் செல்கிறார் தந்தை பெரியார். நல்ல இரவு; எங்கும் ஒரே இருட்டு; ´கடிலம் நதி´ என்ற பாலத்தைக் கடக்கும் போது எங்கிருந்தோ ஒன்று தொப்பென்று விழுகிறது. பார்த்தால் பாம்பு. பெரியார் உடன் வந்த தோழர்கள் ´பாம்பு´ ´பாம்பு´ என்று அலற பெரியார் சமாதானப்படுத்துகிறார். தண்ணீர் பாம்பு தான் என்று அறிந்த பின் ஒரளவு பயம் போய்விட்டது. மீண்டும் பயணத்தை தொடருகிறார்கள். பாலத்தைக் கடப்பதற்குள் மீண்டும் பெரியார் மீது ஏதோ ஒன்று விழுகின்றது. இம்முறை விழுந்தது செருப்பு.

  செருப்பைக் கண்டெல்லாம் பயப்படும் கூட்டமா அது? மீண்டும் பயணம் தொடருகிறது. கிட்டத்தட்ட ரெயில் நிலையத்திற்கு அருகே வந்தாகிவிட்டது. தந்தை பெரியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வண்டி ஓட்டுபவரிடம் மீண்டும் அந்த பாலத்திற்கு அருகே போகச் சொன்னார். அதே போல் போய்விட்டு, மீண்டும் ரெயில் நிலையம் வந்தார். தோழர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருட்டில் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.

  ரெயில் நிலையத்திற்கு வந்தபின்பு பெரியாரிடம் தோழர்கள் கேட்டார்கள். ஏன் அய்யா சம்பவம் நடந்த இடத்திற்கு மீண்டும் போகச் சொன்னீர்கள்?

  பெரியார் சொல்கிறார் :

  “நாம் பாலத்தைக் கடக்கும் போது, என் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. அது நல்ல புது செருப்பு. ஆனால் ஒன்று தான் வீசப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு நானும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னொரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு வீசியவரும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன். மீண்டும் போனபோது, அந்த இன்னொரு செருப்பையும் வீசிவிட்டார். இதோ இப்போது ஒரு ஜோடி செருப்புக் கிடைத்துவிட்டது”.

  தன் மீது வீசப்பட்ட செருப்பைக் கூட அவமரியாதையாக எண்ணாத சிந்தனை பெரியாருடையது. பெரியார் என்ன அரசியலா செய்தார்? “திராவிட மக்களே! அடிமை வாழ்க்கை வாழாதீர்கள். மனிதர்களுக்குள்ள உரிமைகளுடன் உலகில் இருக்கும் மற்ற மக்களை போல் வாழுங்கள்” என்று இனஇழிவுக்கு எதிராகவும், மூடத்தனத்திற்கு எதிராகவும் சுயநலமில்லாமல் போராடிய போராளியல்லவா அவர்! அவர் மீதும் தான் செருப்பு விழுந்தது.

  அந்நிகழ்வு நடந்து சரியாக 23- வருடங்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் 13- ஆம் நாள் 1972- ஆம் ஆண்டில் அதே ஊரில் அன்றைய தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு தலைமையில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநீதி கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக தந்தை பெரியார் அழைக்கப்பட்டிருக்க சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. யாருடைய சிலை என்றால் தந்தை பெரியாருக்காக எழுப்பப்பட்ட சிலை அது. அதில் இருக்கும் கல்வெட்டில் :

  சரித்திரக் குறிப்பு

  29-7-1944 அன்று தந்தை பெரியார் மீது
  செருப்பு, பாம்பு வீசப்பட்ட இதே இடத்தில்
  இன்று 13-8-1972 அவருக்கு சிறப்புடனும்,
  அன்புடனும் சிலை எழுப்பப்படுகிறது

  வாழ்க பெரியார்!
  வளர்க பகுத்தறிவு!!

  என்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

  இந்நிகழ்வில் தான் கவிஞர் கருணானந்தம் “செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்” என்ற கவிதையை வாசித்தார்.

  இப்படி தலைவர்கள் மீது விழும் செருப்பு வீச்சுக்களை மக்கள் எந்த மனோபாவத்துடன் அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் தலைவனின் மதிப்பு தீர்மானிக்கப்படுகின்றது.

  செருப்பு விழுவது பிரச்சனை அல்ல. என்ன காரணத்திற்காக எதற்காக என்பது தான் ஆராயப்பட வேண்டிய விஷயம். யார் கண்டார்கள் நாளை நம் மீதும் செருப்புக்கள் வீசப்படலாம். அவை அவமரியாதைக்காகவா அல்லது நம் கொள்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரமா என்பது நம் நடத்தையைப் பொறுத்து அல்லவா இருக்கின்றது?

  0000000000

  நாளை தமிழ்சமூகம் சு.சாமிக்கு முட்டை அடித்த இடத்தில் சிலை வைக்குமா?

 109. முட்டையை மேலே அடித்ததற்கே என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி. ஈழத்தில் இப்படுகொலை எப்படி நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ஈழமக்களை எவ்வளவு கேவலமாக விமர்சித்தார் சு.சாமி? தன்னுடைய உயிருக்கு மட்டும் பாதுகாப்பு கோரும் மிருகத்தனத்தை முட்டையால் அடித்தது தவறு. மலத்தால் அடித்திருக்க வேண்டும்.

 110. ஒன்று மட்டும் நிச்சயம்.

  தாலிபானிஸ பாதையில் தமிழகம் சீரழிந்துகொண்டு வருகிறது. இதற்கு அலங்கார வார்த்தைகளில் வாதமிடும் “அறிவுஜீவிகள்” கருத்தியல் ரீதியான காப்புச்சுவரெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

  “கெடுக இந்நிகழ்வு” என்றுமட்டும் சொல்லிவைக்கிறேன்.

 111. //தாலிபானிஸ பாதையில் தமிழகம் சீரழிந்துகொண்டு வருகிறது. இதற்கு அலங்கார வார்த்தைகளில் வாதமிடும் “அறிவுஜீவிகள்” கருத்தியல் ரீதியான காப்புச் சுவரெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.//

  முத்துக்குமரன் அறிவு ஜீவுகள் கருத்துக்களை முன்வைத்து விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் தலீபானை இழுக்க வேண்டும். இந்தியா ஈழத்துக்கு ஆயுதங்களையும் இராணுவத்தையும் அனுப்பியதை எதில் சேர்ப்பது? சிதம்பரம் கோவிலில் தமிழில் மந்திரம் ஓதிய முதியவர் கையை உடைத்த தீட்சதர்களின் நன்னடைத்தையை எதில் சேர்ப்பது?

 112. முத்துக்குமார் நீங்கள் பெரிதும் மதித்த முத்துக்குமாரின் தீக்குளிப்பை கொலை என்று சொன்னவன் இந்த சாமி.

  நீதிமன்றத்தில் நடந்த்து வன்முறையல்ல, அது சாமி என்ற ‘தாலிபானுக்கு’ எதிரான வன்முறை.

 113. தமிழச்சி,

  // //கட்/பேஸ்ட் செய்திருப்பேன்.//
  RV
  பேசாமல் அதையே செய்யுங்கள்! நீங்கள் எதை குறித்து விவாதிக்கிறீர்கள் என்பதையாவது உணர்த்த முயற்சிக்கிறேன். //
  இதை படிக்கும்போது நீங்கள் கேட்ட கேள்வியை நீங்களே மறந்தது என் தவறு போல தொனிக்கிறது.

  // பெரியாரையும் சு.சாமியையும் ஒப்பிட்டு பேசுவது தவறு. //
  பெரியாரையும் சாமியையும் ஒப்பிடக் கூடாது என்று சொன்னீர்கள். பெரியாருக்கும் இரண்டு கால், சாமிக்கும் இரண்டு கால் என்று சொன்னால் அது ஒப்பிடுதல் அல்ல. பெரியாரும் பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்தார், சாமியும் அப்படி தெரிவிக்கிறார். பெரியாருக்கு என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அதே அளவுகோல்கள் சாமிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் அது ஒப்பிடுதால் ஆகாது. பெரியாரின் பல கருத்துகள் வரவேற்கத் தக்கவை, சாமி இது வரையில் (எனக்கு தெரிந்து) ஒரு உருப்படியான கருத்து கூட சொன்னதில்லை என்று சொல்வோம். அது அவர்கள் கருத்தை அளவிடுவது. பெரியாருக்கு unpopular, controversial கருத்துகள் சொல்ல உரிமை உண்டு, சாமிக்கு இல்லை என்று சொல்லாதீர்கள். அது பெரியாரை தரம் தாழ்த்தும் செயல்.

  // ஏம்பா நா எவன் குடியை கெடுத்தேன். என் மீது முட்டை வீசுவதற்கு? செவிட்டில் ஓங்கிவிடுவேன். (என் மீது முட்டை வீசுபவனுக்கு) சு.சாமி அரசியல்வாதி நான் சமூகவாதி. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. //
  என்ன வித்தியாசம்? யார் யார் மேல் முட்டை வீசலாம், யார் யார் மேல் வீசக்கூடாது? வேறொரு இடத்தில் செருப்பு விழுவது பிரச்சினை அல்ல என்று வேறு சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மீது முட்டை வீசினால் உங்களுக்கு பிரச்சினை என்று புரிகிறது. அந்த பிரச்சினை சாமிக்கு இருக்காதா என்ன?

  லவர்பாய்,
  கருத்து சுதந்திரம் சு. சாமிக்கு மறுக்கப்பட வேண்டியதுதான் என்று சொல்லி இருக்கிறீர்கள். இனி நமக்குள் விவாதிக்க ஒன்றுமில்லை.

  மா.சே.
  இது சாமியின் பங்களிப்பு பற்றிய விவாதம் இல்லை, அவருக்க பங்களிக்க இருக்கும் உரிமையை பற்றிய விவாதம். அவர் பங்களிப்பு மோசமானது என்பது பற்றி இங்கே யாருக்கும் கருத்து வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

  முத்துக்குமார்,
  மிக சரியாக சொன்னீர்கள்.

  பின்குறிப்பு: தமிழச்சி, பெரியாரின் வார்த்தைகளை பதிவில் ஏற்றும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

 114. // இது சாமியின் பங்களிப்பு பற்றிய விவாதம் இல்லை, அவருக்க பங்களிக்க இருக்கும் உரிமையை பற்றிய விவாதம். //

  ஒரு கூலிப்படையின் பங்களிப்பு கொலை என்பதால் அதை அனுமதிக்கலாமா?
  சட்டத்தை பொருத்தவரை கொலை செய்வதை விட கொலை செய்ய தூண்டியது தான் பெரிய குற்றம். தூண்டுதல் வெறும் கருத்து என்று விட்டு விடுவார்களா என்ன?

 115. ///இதை படிக்கும்போது நீங்கள் கேட்ட கேள்வியை நீங்களே மறந்தது என் தவறு போல தொனிக்கிறது.///

  இணையத்தில் 5 வருட சர்வீஸ்ல இப்படி ஒரு மகா குழப்பவாதியை (RV) நான் பார்த்ததேயில்லை.

  ///பெரியாருக்கும் இரண்டு கால், சாமிக்கும் இரண்டு கால் என்று சொன்னால் அது ஒப்பிடுதல் அல்ல. பெரியாரும் பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்தார், சாமியும் அப்படி தெரிவிக்கிறார். பெரியாருக்கு என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அதே அளவுகோல்கள் சாமிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் அது ஒப்பிடுதால் ஆகாது.///

  அளவுக்கோலை மட்டும் எடுத்துக் கொண்டு வெத்து வேட்டுத்தனமாக பார்க்கக் கூடாது என்கிறேன். எதைக் குறித்து கருத்து தெரிவித்தோம், எதைக் குறித்து பேசினோம் என்ற வார்த்தைகளில் அர்த்தங்கள் கருத்துக்கள் வேறுபடும். அளவு கோலை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு விவாதத்தின் உட்பொருட்களை ஆராய்ந்து பாருங்கள்.

  //சாமிக்கு இல்லை என்று சொல்லாதீர்கள். அது பெரியாரை தரம் தாழ்த்தும் செயல்.//

  அது சரி

  அப்ப சு.சாமி எதுக்கு தமிழ்நாட்டுக்கு வந்தார்? எதற்கு மனுதாக்கல் செய்யப் போனார்? தனி மனித கருத்துக்களில் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறதா? சட்டத்தின் கட்டுப்பாட்டில் இல்லையா? சட்டத்திற்கு எதிராக சு.சாமிக்கு கருத்தியல் சிந்தனை பீறிட்டுக் கொண்டு வந்தால் சட்டமும் மதிப்பளிக்க வேண்டுமா?

  ///என்ன வித்தியாசம்? யார் யார் மேல் முட்டை வீசலாம், யார் யார் மேல் வீசக்கூடாது? வேறொரு இடத்தில் செருப்பு விழுவது பிரச்சினை அல்ல என்று வேறு சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மீது முட்டை வீசினால் உங்களுக்கு பிரச்சினை என்று புரிகிறது. அந்த பிரச்சினை சாமிக்கு இருக்காதா என்ன?///

  என் மீது முட்டையடித்தால் பொது இடத்தில் பொதுப் பிரச்சனையில் ஏடாகூடமாக உளறி வைத்ததால் வந்த விணை என்று போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். ஆனால் ஒன்றும் செய்யாமல் இருந்து முட்டை அடித்தால் தன்னெழுச்சி இயல்பாக வெளிப்படுவது தானே! அதற்காக சு.சாமியின் தன்னெழுச்சிக்கு போய்விடாதீர்கள் தமிழ்நாட்டில் தமிழனுக்கு எதுக்கு உரிமை கேட்டுக் கொண்டு வந்து வாங்கிக் கட்டிக் கொண்டு போயிருக்கிறார்.

 116. இந்த தளத்தை பாத்தா சு. சாமி ரொம்ப சந்தோஷப்படுவார். என்னவோ சு. சாமி நாளைக்கு இலங்கையில போர நிறுத்தனும்னு சொல்லிட்டா உடனே ராஜ பக்ஷே கேட்டுர்ற மாதிரி மா.சே. எழுதறார். என்னங்க சு. சாமி கூலிப்படை மாதிரி கொலையும் செய்யலே, அவர் நாளைக்கு பேசறத நிறுத்திட்டா ஒண்ணும் உருப்படவும் போறதில்லே. என்னங்க, அவர் சொல்றது அவருக்கே காமெடி. இதுல அவர் கொலை செய்ய தூண்டினார்னு வேற சொல்லறீங்களே!

  சட்டப்படி சாமி எந்த தப்பும் செய்யலே. ஹிட்லருக்கே கருத்துரிமை உண்டுன்னா இந்த உதவாக்கரைக்கு இருக்கக் கூடாதா என்ன?

 117. தமிழச்சி,

  // இணையத்தில் 5 வருட சர்வீஸ்ல இப்படி ஒரு மகா குழப்பவாதியை (RV) நான் பார்த்ததேயில்லை. //
  பாத்தாலும் பாத்தேன், இந்த மாதிரி சமாளிக்கரவரை பாத்ததில்லை.

  // / எந்தக் கேள்வியை கவனக்குறைவாக கேட்டிருக்கின்றேன் என்று சுட்டிக்காட்டினால் தவறை திருத்திக் கொள்வேன். நீங்கள் சுட்டிக் காட்டும் வார்த்தைகளில் தவறில்லாத பட்சத்தில் என்னுடைய நிலைப்பாட்டை விளக்கவோ மாற்றிக் கொள்ளவோ தயாராக இருக்கிறேன். //
  நீங்க விளக்கவும் இல்லை, மாற்றிக் கொள்ளவும் இல்லை, தவறு என்று ஒத்துக் கொள்ளவும் இல்லை. இதில் நான் குழப்புகிறேன் என்கிறீர்கள்.

 118. ///ஹிட்லருக்கே கருத்துரிமை உண்டுன்னா இந்த உதவாக்கரைக்கு இருக்கக் கூடாதா என்ன?///

  ஐயா ராசா!

  இட்லரின் கருத்துரிமைப்பற்றி பற்றி பேசினால் ஐரோப்பாவில் ஜெயிலில் போட்டுவிடுவார்கள். இட்லரின் சின்னமான சுவஸ்திக் சுவற்றில் வரைந்து வைத்தால் கூட உளவுப்படை பிடித்துவிடும். இட்லரின் செய்கையான ஒன்று. கையை நீட்டி HAI சொல்வார்கள் இல்லையா? அப்படி செய்தால் கூட இனவெறியன் என்று பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். இவ்வளவு ஏன்? இணையத்தில் இட்ல ரின் கருத்து ரிமையைப் பற்றி பேசும் நீங்கள் ஐரோப்பாவில் வந்து சொன்னீர்கள் என்றால் வாப்பான்னு கழுத்தை பிடித்து இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ஏந்தாருன்னா கோந்தாருன்னு பேசிக்குன்னு இருக்கிறீங்களே! கொஞ்சம் கவனமா இருங்க.

  ///நீங்க விளக்கவும் இல்லை, மாற்றிக் கொள்ளவும் இல்லை, தவறு என்று ஒத்துக் கொள்ளவும் இல்லை. இதில் நான் குழப்புகிறேன் என்கிறீர்கள்.///

  நீங்கள் சொல்லவும் இல்லை.
  சொல்லும் நிலையிலும் இல்லை.
  சொல்லாமல் நான் மாற்றிக் கொள்ளவுமில்லை என்கிறீர்கள்.

 119. அம்மா தாயே தமிழச்சி,

  கொஞ்சம் எழுந்திருங்கம்மா! இப்படி தூங்கிக்கிட்டே எழுதாதீங்க!

  மீண்டும் ஒரு முறை:

  நீங்கள் கேட்ட கேள்வி:
  // // இத்தளத்திடம் சு.சாமியைப் பற்றி இப்படியொரு பதிவை போட்டிருக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லும் போது வினவு கருத்து உரிமையையும்/ பேச்சு உரிமையையும் நீங்கள் முடக்குவதாக விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக இருக்கிறதே? இது எந்த வகையில் நீங்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் கருத்து / எழுத்து சுதந்திரத்திற்கு பொறுந்திப் போகிறது என்பதே எமது கேள்வி? //
  கேள்வி கேட்டுட்டீங்களா?

  என் பதில்:
  // நன்றாக கவனியுங்கள் – வினவு தளத்தில் இது போன்ற ஒரு போஸ்ட் வருவது கேவலம் என்று சொல்லி இருக்கிறேன். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லி இருக்கிறேன். deplorable என்று சொல்லி இருக்கிறேன். வினவு இது போன்று எழுதக் கூடாது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. (ஆனால் எதிர்காலத்தில் வினவு தளத்தின் தரத்தை பற்றிய ஆதங்கத்தில் நான் இப்படி சொல்லக்கூடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.) கேள்வி கேட்க வேண்டியதுதான், ஆனால் கொஞ்சம் கவனமாக கேளுங்கள். //
  நான் பதில் சொல்லிட்டேனா?

  உங்கள் எதிர்வினை:
  // எந்தக் கேள்வியை கவனக்குறைவாக கேட்டிருக்கின்றேன் என்று சுட்டிக்காட்டினால் தவறை திருத்திக் கொள்வேன். நீங்கள் சுட்டிக் காட்டும் வார்த்தைகளில் தவறில்லாத பட்சத்தில் என்னுடைய நிலைப்பாட்டை விளக்கவோ மாற்றிக் கொள்ளவோ தயாராக இருக்கிறேன். //
  இப்ப எந்த கேள்வி கவனக் குறைவா கேட்டிருக்கீங்கன்னு தெளிவாயிடுச்ச்சா? பெரிசா “எமது கேள்வி” அப்படின்னு எழுதி இருக்கீங்களே, அதே கேள்விதான். இல்லே வினவின் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் நான் முடக்குகிறேன்ன்னு இன்னும் சொல்லறீங்களா? முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கறீங்களே?

  உங்க நிலைப்பாட்டை விளக்கரீங்களா? இல்லை மாற்றி கொள்ளரீங்களா? குறைந்த பட்சம் தப்பை ஒத்துக்கறீங்களா?
  இல்லை இன்னும் இதேதான் சொல்லப் போறீங்களா?
  // நீங்கள் சொல்லவும் இல்லை.
  சொல்லும் நிலையிலும் இல்லை.
  சொல்லாமல் நான் மாற்றிக் கொள்ளவுமில்லை என்கிறீர்கள். //

  இதுக்கு முன்னாலே இதை எங்கே சொல்லி இருக்கேன்னு பாக்கணும்னா கொஞ்சம் தேடிப் பாருங்க, கிடைக்கும்.

 120. egg through is wrongful accident.
  I love to kiss mr Swamy. I respect his speech power.
  if he can and he comes to or visit toeelam we are waiting to showering him with kisses. if he could bring his friends that will be a great.

 121. ///அம்மா தாயே தமிழச்சி,

  கொஞ்சம் எழுந்திருங்கம்மா! இப்படி தூங்கிக்கிட்டே எழுதாதீங்க!///

  இதுவரை 141 பின்னூட்டம் இருக்கு. உங்களோட பின்னூட்டம் 21 இருக்கு. இந்த 21 பின்னூட்டத்தில கருத்துச் சுதந்திரம் பற்றி உங்களுடைய பொன் மொழிகள் :

  * RV = கருத்து வேறுபாட்டை கருத்தால் மோதி வெல்லுங்கள் – வாதம் செய்ய முடியாதவன்தான் வன்முறையில் ஈடுபடுவான்.

  RV = கருத்து சுதந்திரத்தை நீங்கள் வரையறுக்க விரும்புகிறீர்கள். உங்கள் கருத்துகளுடன் எவ்வளவு தூரம் மாறுபடலாம் எனபதை நீங்களேவா சொல்ல முடியும்? அப்புறம் என்ன கருத்து சுதந்திரம் வேண்டிக் கிடக்கிறது?

  —————————————————————————

  *RV = சுப்ரமணிய சாமி ஒரு கோமாளிதான்

  RV = நீர் பார்ப்பனர் இல்லை என்பதால்தானே சு. சாமியை எதிர்க்கிறீர்? இதில் என்ன சு. சாமியின் கோமாளித்தனம், அதிகார வர்க்கம் என்று வேஷம் வேண்டிக்கிடக்கிறது?

  ————————————————————————–
  *RV = நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். பார்ப்பன திமிர், குடுமி, அம்பி போன்ற பல கருத்து பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்.

  RV = ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன் – நீங்கள் கேள்வி கேட்டதால் பதிவே எழுதி இருக்கிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று சொல்வது ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே – நான் அதை சொல்லாவிட்டால் தமிழ் ப்ளாக் உலகில் பலரும் நீ குடுமியாக இருக்க வேண்டும், அதனால்தான் எதிர் கருத்து சொல்கிறாய் என்று கிளம்புகிறார்கள். அது எனக்கு மிகவும் கடுப்பை கொடுக்கும் விஷயம். அதனால் நானே முன் எச்சரிக்கையாக சொல்லி விடுகிறேன்.

  ————————————————————————–

  *RV = சு. சாமி கோமாளிதான், முட்டாள்தான், கண்டிக்கப்பட வேண்டிய பல வாதங்களை வைப்பவர்தான். நான் அவரது வாதங்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக அவருக்கு வாதம் செய்யும் உரிமை மறுக்கப்படக்கூடாது.

  RV = காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர் மீது உங்களுக்கு கரிசனம் உண்டா? பார்ப்பானையும் பாம்பையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி என்று ஜாதி வெறி பிடித்து பேசியவர் நல்ல கருத்துகளை சொன்னதே இல்லையா? கீழ் வெண்மணியில் கூலி கேட்ட கம்யூனிஸ்ட்கள்தான் குற்றவாளிகள் என்று சொன்னதற்காக அவர் சிலை மீது முட்டை அடிப்பீர்களா? பாம்பையும் என் ஐந்து வயது பெண்ணையும் பார்த்தால் என் பெண்ணை முதலில் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் மீதே கரிசனம் இருக்கும்போது சு. சாமியின் கருத்து சுதந்திரத்துக்காக நான் வாதாடக் கூடாதா என்ன?

  ————————————————————————–

  RV = சு. சாமி சொல்வது அவரது கருத்து இல்லாமல் வேறென்ன?

  RV = சாமியின் கருத்துகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன். வடிவேலு ஒரு படத்தில் சிரிப்பு போலீசாக வந்தது போல் சாமியும் என்னை பொறுத்த வரை ஒரு சிரிப்பு அரசியல்வாதி. அவரை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஆனால் அவர் நினைப்பதை பயம் இல்லாமல் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு. அவர் கருத்தை அவர் சொல்வது தவறு என்று சொல்வதை கடுமையாக எதிர்க்கிறேன்.

  RV = வன்முறை கூடாது என்பதல்ல, கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அநேகம் பேர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக கருத்தை சொல்ல பயப்படும் நிலை வரக்கூடாது. அப்படி பெருவாரியான மக்கள் நினைப்பதற்கு மாறான கருத்தை சொல்வதற்காக ஒருவர் முட்டை அடி வாங்குவது நம் எல்லாருக்கும் கேவலம். அதை ஆதரித்து வினவு தளத்தில் ஒரு போஸ்ட் வந்திருப்பதும், அதற்கு இத்தனை பேர் வக்காலத்து வாங்குவதும் மகா கேவலம்.

  —————————————————————————

  RV = இது சரி அல்ல. வினவு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  RV = எனக்கு இந்த விஷயம் தெரிந்தது வினவின் பதிவு மூலம்தான். வினவு கருத்து சுதந்திரத்தை மதிக்கும் குழு என்று நான் நினைத்திருந்தேன். இருந்தாலும் இந்த ஒரு பதிவை வைத்து அவர்கள் செலக்டிவ் என்று சொல்லக் கூடாது என்று தோன்றுகிறது. ஏதோ தடுமாற்றம் என்று நினைக்கிறேன்.

  —————————————————————————

  RV = பதிவும் மறுமொழிகளும் மிக கேவலமாக இருக்கின்றன. வினவு தளத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

  RV = அவருக்கு அந்த சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

  —————————————————————————

  RV = முட்டாள்தனமான கருத்துகள் சொல்பவர்களை எல்லாம் அடிக்கலாம் என்றால் நீங்கள் சொல்லும் பல கருத்துகள் எனக்கு முட்டாள்தனமாக தெரிகிறது. உங்களை அடிக்க வேண்டும் என்று நான் சொன்னதில்லை, சொல்லவும் போவதில்லை

  RV = பகத், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி கருத்து சுதந்திரம் பற்றி மட்டுமே இங்கே இனி மேல் பேச விரும்புகிறேன்.

  RV = நன்றாக கவனியுங்கள் – வினவு தளத்தில் இது போன்ற ஒரு போஸ்ட் வருவது கேவலம் என்று சொல்லி இருக்கிறேன். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லி இருக்கிறேன். deplorable என்று சொல்லி இருக்கிறேன். வினவு இது போன்று எழுதக் கூடாது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. (ஆனால் எதிர்காலத்தில் வினவு தளத்தின் தரத்தை பற்றிய ஆதங்கத்தில் நான் இப்படி சொல்லக்கூடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.)

  ————————————————————————–

  RV = அந்த காலத்தில் பறையன் என்று திட்டினார்கள், நீங்கள் பார்ப்பான் என்று திட்டுகிறீர்கள். என்ன வித்தியாசம்?

  RV = பிராமண வெறுப்பு பெரியாரின் பலவீனம் என்பது எனக்கு மேலும் உறுதி ஆகிறது.

  —————————————————————————

  இப்படி உங்க பின்னூட்டத்திலேயே உங்களுடைய பதிலை எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கலாம். இதையும் தூங்கிக் கொண்டே செய்வதாக சொல்லி விட வேண்டாம்.

  சும்மா கருத்து சுதந்திரத்துக்கு குரல் உடுவதாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரங்களின் செயல்பாடுகள் எப்படியாக இருக்கும் என்பதை தான் மீண்டும் மீண்டும் எல்லோரும் உங்களிடம் பலவிதங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் கருத்துச் சுதந்திரத்திலேயே நிற்காமல் அடுத்த கட்டத்துக்கு வாருங்கள்.

  00000000000000

 122. அன்புள்ள vaichno !

  நான் தாலிபானை இழுத்ததற்குக்காரணம் ‘தன் கொள்கைகளை விமர்சிப்பவனோ, எதிர் கொள்கை கொண்டிருப்பவனோ, ஒத்துக்கொள்ளாதவனோ தன் எதிரி, அவனை வன்முறை மூலம் மூர்க்கமாக அடக்கி ஒடுக்க எல்லா வகையிலும் முயல்வேன்’ என்ற மனப்போக்கு தாலிபானிஸ மனப்போக்கு என்பதே. (எப்படி பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனப்போக்கு பிராமணீயம் எனப்படுகிறதோ அப்படி)

  நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்ப்பினும் ; அதில் எவ்வளவு நியாயம் இருப்பினும் ;

  தன் தரப்பை சட்டபூர்வமாக பதிவு செய்து வாதிக்க நீதிமன்றம் வந்திருக்கும் ஒருவரை தாக்கியது – அதுவும் நீதிபதிகள் முன்னிலையிலேயே தாக்கியது – அதுவும் நீதியை பெற்றுத்தருபவர்கள் என்று நம்பப்படுபவர்களே தாக்கியது – அதுவும் பாதுகாப்புக்கு வந்திருந்த மற்றும் தாக்கப்பட்டபோது மீட்க முனைந்த பாதுகாவலர்களை விரட்டியடித்துவிட்டு துரத்தித் துரத்தித் தாக்கியது தாலிபானிஸத்தின் உச்சகட்டம் என்றே மறுபடியும் சொல்வேன்.

  “கண்ணுக்குக் கண் என்பது உலகை குருடாக்கும்” என்று சொன்னவன் கேனையன் அல்ல.

  திரு.ஆறுமுகசாமியின் உரிமை பறித்த கொழுப்பெடுத்த தீட்சிதர்களை நான் எங்கும் ஆதரிக்கவில்லை. என் எதிர்வினையை அது தொடர்பாகவும் எங்கோ பதிந்திருக்கிறேன். திரு.ஆறுமுகசாமி அவர்களுக்கு ஆதரவாக சளைக்காமல் போராடிய ம.க.இ.க போராளிகளை வணங்குகிறேன்.

  பாருங்கள், இங்கே கூட ம.க.இ.க அன்பர்கள் ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். தீட்சிதர்களை வன்முறை மூலம் அடக்கி ஒடுக்கி தீர்ப்பு வரவில்லை. கொஞ்சமும் சளைக்காமல் தளராமல் சட்டப்படி பலகாலம் போராடியே நியாயத்தை வென்றெடுத்திருக்கிறார்கள்.

  அதேமுறையில் சுப்பிரமணியசாமியை வெல்ல என்ன தடை ? ஏன் தடியெடுக்கவேண்டும் என்பதே என் ஆதங்கம்.

  அதுவும் யார் ? சு.சாமியைப்போலவே சட்டம் படித்தவர்களே ! அப்படியாயின் தாம் கற்ற சட்டக்கல்வி பயனற்றது என்று அவர்களுக்கே தோன்றிவிட்டதா அல்லது சு.சாமியை தங்களால் சட்டரீதியாக வெல்லமுடியாது என்ற தன்னம்பிக்கை குறைவா ?

  சு.சாமி என்பவர் தமிழகத்தை பொறுத்தவரை ஒரு அரசியல் கோமாளி, அவ்வளவே. அதிகாரத்தில் இல்லாதவரையில் அவரால் ஒன்றும் கிழிக்க இயலாது.

  அவருக்கு இப்படி வன்முறை மூலம் இவர்கள் தேவையற்ற அனுதாபமும் விளம்பரமுமே தேடித்தருகிறார்கள்.

  இந்தியா இலங்கைக்கு ராணுவ/ஆயுத உதவி செய்வதை இதே தளத்தில் வைத்துப்பேச இயலாது என்பது என் எண்ணம்.

  “முத்துக்குமார் நீங்கள் பெரிதும் மதித்த முத்துக்குமாரின் தீக்குளிப்பை கொலை என்று சொன்னவன் இந்த சாமி.”

  அன்புள்ள மா.சே !

  சரி, சொல்லட்டுமே, அவர் சொல்லிவிட்டதாலேயே திரு.முத்துக்குமாரின் செயல் தியாகமல்ல என்று ஆகிவிடுமா ? தன் செயல் மூலம் சமூகத்தை – நமது மனசாட்சியை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கும் திரு.முத்துக்குமாரின் தியாகம் சு.சாமி போன்றதொரு அரசியல் விதூஷகரின் ஒரு முட்டாள்தனமான அறிக்கையால் கொச்சைப்படுமென்றா நினைக்கிறீர்கள் ?

  அப்படி சொன்னதாலேயே சு.சாமி முட்டையடிக்கு ஆட்படத்தான் வேண்டுமா ? ஒரு ஜனநாயகத்தில் உங்களுக்கு உவப்பானதில்லை என்பதால் மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாதா ? இது என்ன ‘இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்’ என்று நிகழும் சர்வாதிகார ஆட்சியா ?

  தமக்கு பிடிக்காத விமர்சனங்கள்/அறிக்கைகள்/கருத்துக்களுக்கு முட்டைவீச்சுத்தான் பதில் என்றால் நாம் நீதிமன்றங்களை கலைத்துவிட்டு முட்டைக்கடைகள் வைக்கலாம்.

  இதற்கு பக்கம் பக்கமாய் பெருகும் ஆதரவு கருத்துக்களும் நாம் போகும் பாதை குறித்த அச்சத்தையும் கலவரத்தையுமே ஊட்டுகின்றன.

  “நீதிமன்றத்தில் நடந்த்து வன்முறையல்ல, அது சாமி என்ற ‘தாலிபானுக்கு’ எதிரான வன்முறை”

  தீவட்டியின் பிடி இரும்பால் இருந்தால் என்ன மரத்தால் இருந்தால் என்ன ? விளைவு சாம்பல்தான். அதற்குத்தான் ஆசை என்றால் இனி சொல்வதற்கொன்றுமில்லை.

  வேதனையுடன்
  பொன்.முத்துக்குமார்

  பி.கு : திரு.ஆர்.வி, நன்றி. உங்கள் பொறுமைக்கு தலை வணங்குகிறேன்.

 123. தமிழச்சி,

  என் பொன் மொழிகளை தொகுத்ததற்கு மகிழ்ச்சி. அதுவும் இந்த மறுமொழியிலிருந்து ஒரு பொன்மொழி, அங்கிருந்து ஒன்று என்று தொகுத்திருக்கிறீர்கள். What is the point? அதையும் சொன்னால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

  21 மறுமொழி என்று எண்ணி இருக்கிறீர்கள். கடைசி இரண்டு/மூன்று தடவை உங்கள் தவறை சுட்டி காட்டி இருந்தேன். அதற்கு ஏதாவது பதில் உண்டா? அதற்கு உங்கள் பதிலை இது வரை எத்தனை முறை கேட்டிருக்கிறேன்? அதையும் அடுத்த முறை எண்ணி விடுங்கள். இல்லை கவனமாக அதை மட்டும் தவிர்த்துவிட்டு ஏதாவது எழுதுவீர்களா?

 124. தமிழச்சி தொகுத்த பொன் மொழிகளில் ஒன்று out of context ஆக இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு தான் என்ன கேள்வி கேட்டேன் என்றே நினைவிருப்பதில்லை. இதில் இப்படி out of context ஆக வேறு எழுதி என் உயிரை வாங்குகிறார். அந்த ஒரு பொன் மொழி இன்னும் கொஞ்சம் விரிவாக கீழே:

  தமிழச்சி எடுத்தாண்ட வரிகள்:
  // நீர் பார்ப்பனர் இல்லை என்பதால்தானே சு. சாமியை எதிர்க்கிறீர்? இதில் என்ன சு. சாமியின் கோமாளித்தனம், அதிகார வர்க்கம் என்று வேஷம் வேண்டிக்கிடக்கிறது? //

  அதற்கு அடுத்த வரி:
  // முரளி அவர்களே, இது உங்கள் வரிகள். சும்மா மாற்றி எழுதி இருக்கிறேன். //
  முரளி எழுதி இருந்த வரிகளை மாற்றி பகடி செய்திருந்தேன். முரளியின் ஒரிஜினல் வரிகள் கீழே:
  // அய்யா ஆர்.வீ , நீர் பார்ப்பனர் என்பதனால் தானே சூசாமிக்காக பேச வந்திருக்கிறீர்கள். இதில் என்ன அப்ரூவர்போல ஆக்டிங் வேறு. //

 125. saga eligale,

  yedarkkaga namadhu nerathhai indha komaligalodu vennadikkindrom.

  oru theepotti, oru bottle krishnail vangi koluthikkolvom. eligalin eelam malarum,

  kalaingar irukkum varai nammai yarum asaikka mudiyadhu. Viraindhu Delhi sella thittam vaguthukondirukindrar.

  nalla nal parthu purappaduvar.

  • நண்பர் யூ. பாண்டியன்,

   சுப்ரமணிய சுவாமி மீது முட்டையடிப்பு நிகழ்வை நடந்த்து போலத்தான் பதிவு செய்திருக்கிறோம். ஈழப் பிரச்சினைக்காக வெளியே வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் என்றும் சு.சுவாமி எந்த வழக்கிற்காக வந்தார் என்ற விவரமும் பதிவில் உண்மையாகத்தான் பதியப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் அன்று போட்ட முழக்கம் ஈழப் பிரச்சினைக்காக ம.க.இ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கம்தான். மற்றபடி வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை நாங்கள்தான் நடத்தியது போல எங்கேயும் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் புகைப்படங்களில் எங்கள் தோழர்கள் முன்னிலை வகித்தும் அப்படி எழுதவில்லை. ஈழத்தில் இந்தியாவின் துரோகத்தையும் ஆதிக்கத்தையும் அம்பலப்படுத்தி வினவில் பல கட்டுரைகள், போராட்டச் செய்திகள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் எதையோ மறைப்பது போல நீங்கள் புனைவது ஆச்சரியமாக உள்ளது. மற்றபடி வினவில் அரசியல் அறிவை வளர்க்குமுகமாகத்தான் எல்லா விவாதங்களும் நடைபெறுகின்றன. இங்கே அரட்டையடிப்பதற்காக யாரும் வரவில்லை. உங்கள் பிரச்சினை என்னவென்றும் புரியவில்லை.

   நட்புடன்
   வினவு

 126. நமக்கு இந்த கம்யூனிசம், பெரியாரிசம், மாதிரி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் தெரியதுப்பா….
  தப்பு பண்ணா தண்டனை கொடுக்கணும். சுப்ரமணியசாமி தப்பு பண்ணதால இந்த சின்ன தண்டணை.
  RV அண்ணே உங்களுக்கு எங்க வலி புரியாது. புரியலென்னா விட்டுடுங்க.
  எங்க சனங்க ஈழத்துல துடிச்சி சாகுறாங்க. அத பாத்து அந்த சூனா பான சு.சாமி அசிங்கப் படுத்துற மாதிரி அறிக்கை கொடுப்பான், நாங்க அதைப் பாத்து சகிச்சிக்கிட்டு இருக்கணுமா? அவன் பேசுறது பேச்சு சுதந்திரம் இல்ல… திமிர். அதிகார வர்கத்து திமிர்.

  அய்யா இந்த கொடும வேற எந்த ஊர்ல நடக்கும். தமிழ்நாட்டுல தமிழ்ல பாடுனா கைய ஒடிச்சு அடிசிருக்காங்க இந்த தீட்சிதருங்க….
  தேவாரமும் திருவாசகமும் சிவன் கோயில்ல பாடாம அவன் வீட்டு விஷேசத்துலயா பாடுவாங்க???இதுக்கு அந்த சுனா பான ஆதரவு வேற….
  எங்கயோ இருந்து வந்த சமஸ்கிருதம் தமிழை ஆதிக்கம் செய்யுது..என்ன கொடும சார் இது

  அந்த ஆளுக்கு முட்டையெல்லாம் பத்தாது. வெளக்குமாரு பிஞ்சு போற வரைக்கும் ஆத்திரம் தீர அடிக்கணும்.
  அப்போதான் அடுத்த அறிக்கை கொடுக்கும்போது யோசிப்பானுங்க….

  அப்புறம் RV அண்ணே, பெரியார் எல்லா பிராமணனையும் அடிக்க சொல்லல. எந்த பிராமணன் எங்க தமிழ் சமுதாயத்தை அடிமைப் படுத்த நினைக்கிறானோ அவனை அடிக்க சொன்னார். எந்த பிராமணன் என் இனத்தின் வளர்ச்சியை தடுக்கிறானோ அவனை அடிக்க சொன்னார். எந்த சாதிக்காரன் அல்லது மதத்தை சேர்ந்தவன் ஆதிக்கம் செய்ய நினைத்திருந்தாலும் அவர் அதைத்தான் சொல்லியிருப்பார். பிராமணர்களின் ஆதிக்கம் இருப்பதால் அவர் பிராமணனை அடிக்க சொன்னார்.
  பாரதியார் போன்ற பிராமணர்களை அடிக்க சொல்லவில்லை என்பதையும் மறக்க வேண்டாம்…
  புரிந்து கொள்ளுங்கள் அவர் வார்த்தையின் அர்த்ததை…
  ஒர் உதாரணத்திற்க்கு சொல்கிறேன் உங்கள் 5 வயது குழந்தை என் சமுதாயத்தை அடக்க முயன்றால், எங்களை இழிவு படுத்தினால் அடிக்கவும் தயங்க மாட்டோம். 🙂

 127. this will go on and on. there is just one thing to get out of all the comments- people like rv just want to keep their baton up, side-tracking issues are not new to them. i hope comrades do not waste energy on comments that are not relevant to this post. if you are trying to make rv understand you are wasting time, but if you are going to use his comments to expose people who think like him, i think it is already done. rotten eggs ought to be disposed not kept in reverence.

 128. கல்கி,

  சு. சாமிக்கு உங்களுக்கு பிடிக்காத கருத்துகளை சொல்ல சுதந்திரம் உண்டா இல்லையா என்பதை பற்றி பல முறை பேசியாயிற்று. நீங்கள் புதிதாக ஒன்றும் சொல்லாதபோது நான் மட்டும் என்ன புதிதாக சொல்ல முடியும்?

  ருத்ரன்,
  கருத்து சுதந்திரம் தவிர வேறு எதுவும் இனி மேல் இங்கே பேச நான் தயாராயில்லை. வாதத்துக்கு பதில் வாதாட துப்பிருந்தால் துணிவிருந்தால் பேசுங்கள். இல்லை என்றால் genotype என்று உங்கள் வழக்கம் போல ஆரமிக்கலாம். நான் பதில் சொல்வதாக இல்லை, அதனால் தைரியமாக பேசலாம்.

 129. நன்றி வினவு தோழர்களுக்கு ,

  பார்பன கும்பல் திராவிடம் எங்கு தோற்றாலும் கொக்கரிக்கிறது

  இது தனிநபர் மேல் நடத்தப்பட்ட தாக்குதாகவும் வன்முறையாகவும் பார்பவர்களுக்கு தவறு என நினைக்கிறார்கள்

  சிதம்பரம் கோவிலுள் தேவாரம் பாட முயன்ற ஆறுமுக சாமி தாக்கப்பட்ட போது அது வன்முறையாக ஏன் தெரியவில்லை

  தங்கள் வருணம் தங்கள் சாதி என்றது முட்டி கொண்டு வரும் கோபம் தான் இது

  ஜார்ஜ் புஸ் மேல் எறியப்பட்ட செருப்பும்

  சு.சாமி மேல் எறியப்பட்ட முட்டையும் என்ன சொல்கிறது

  அதிகார வர்க்கத்துக்கு செருப்படி இந்த நூற்றாண்டில் என சொல்கிறது

 130. RV,
  //நான் எல்லாருக்கும் கருத்துரிமை வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது தெளிவு.//
  இந்த கருத்து ஒரு மாயை மட்டுமே.. ஒரு சமூகத்தில் கருத்து உரிமை என்பது எந்த காலத்திலும் அதை ஆளும் வர்க்கமிடம் மட்டுமே இருக்கும்… இதை வினவு தெளிவு படுத்தி இருந்தபோதும்… எதோ குருட்டு நம்பிக்கையில், நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்… அறிவியல் ரீதியாக இது சாத்தியமே இல்லை..

  // இன்றைய நிலை நல்ல நிலை இல்லைதான், மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நிகழ்கின்றன, பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைய நிலையை விட உங்கள் எதிர்கால லட்சிய உலகம் எந்த விதத்தில் சிறந்தது? //

  இந்த சமூக கட்டமைப்பில் குறைகள் இருக்கும் என்றும், அதை அனுசரித்து நடக்கவும் என்றும் நீங்கள் கூறுவது.. மிகப்பெரிய துரோகம்.. நீங்கள் மேற்கூறிய வார்த்தைகள் உங்களிடம் இருந்து வருவதற்கு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கை பிரச்சினைகளை உங்கள் பணத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ நீங்கள் தீர்த்துக் கொள்கிறீர்கள்… உதாரணத்திற்கு , உங்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் , கொஞ்சம் அதிக செலவில் சிகிச்சை செய்வீர்கள்.. இதுவே ஒரு சாதாரண எழைக்கு நிகழ்ந்தால், அவனுடைய சிகிச்சைக்கு அவன் அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுத்து காத்துக்கொண்டு இருக்கவேண்டும்..
  நீங்கள் இது போன்ற துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கலாம் , ஆனால் உங்களின் வார்த்தைகள் பல கோடி ஏழை மக்களை துன்பத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டு என கோரிக்கை வைப்பது போல் உள்ளது..
  நான் உறுதியுடன் கூறுகிறேன்.. உங்களின் இந்த வார்த்தைகள் கண்டிப்பாக ஒரு நாள் மாறும், அந்த நாளில் உங்களின் பணமோ , அதிகாரமோ உங்களின் லாபத்திற்காக செயல் படாத போது … !
  உங்களுக்கு ஒரு சவால், இந்தியாவில் இன்று நீங்கள் லஞ்சம் கொடுக்காமல் வாழ முடியுமா..? கண்டிப்பாக உங்களால் முடியாது, ஏன் என்றால் உங்களின் லாபம், நலன் லஞ்சதினாலும் கிடைக்கிறது.. ஆனால் பல லட்சம் உழைக்கும் மக்கள் , லட்சம் கொடுக்க மறுப்பதாலோ அல்லது இயலாலதாலோ .. பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர்…
  இந்த சமூகத்தில் எவ்வளவு அரசியல்வாதி ஊழல் குற்றத்துக்காக சிறை சென்று உள்ளான்… ? ராஜிவ், கருணாநிதி, ஜெயலலிதா, லாலு, அனேகமாக அனைத்து அரசியல்வாதிகளும் ஊழலை மறைமுகமாக செய்தோ, ஆதரித்தோ வருகின்றனர்.. ஆனால் உங்களின் இந்த சமூகம் அவர்களை தண்டித்து இல்லை… தண்டிக்கவும் செய்யாது…
  இந்த சமூக அமைப்பு அனைத்து அதிகாரங்களையும் பணபலத்தை கொண்டு நிர்ணயிக்கிறது… ஆனால் எங்களின் எதிர்கால சமூகத்திலோ அதிகாரங்கள் உழைக்கும் மக்களிடம் மட்டுமே இருக்கும்…
  இந்த சமூக அமைப்பில் எமது தோழர்கள் கோகோ கோலாவிற்கு எதிராக பேசவே தடை எனும் நிலை உள்ள போது, கொதிக்காத உங்கள் உள்ளம் சு.சாமி புல் வெட்ட செல்வான் என்றால் உங்களின் உள்ளம் கொதிப்பது ஏனோ..?

 131. ஆர் வீ அவர்களே,

  ஏன் அடிக்கடி கோபப்படுகிறீர்கள் ?

  வாயில் மலத்தை திணிப்பேன் என சொல்லுவதால் அவனுக்கு தண்டனை தரக்கூடாது எனில் என்ன சொல்லவருகிறீர்கள்.
  ஒரு சந்தேகம் ஒருவன் ஒரு சண்டையின் போது ” டே தே.மவனே” என்கிறான் ஒருவன் என்ன செய்ய வேண்டும் திருப்பி”” டே தே.மவனே”” என சொல்ல வேண்டுமா

  இல்லை பெண்ணினத்தை கேவலப்படுத்துவதற்காக அவனை அடிக்க வேண்டுமா? எல்லோருக்கும் கருத்துரிமை வேண்டுமெனில் திருடனுக்கும் உரிமை வேண்டும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை கேலி செய்பவனுக்கும் உரிமை தரலாமா? வீட்டு பெண்ணை தகாத வார்த்தையால் ஆபாசமாக கிண்டலடித்து அவன் பேசுவதால் என்ன செய்யலாம் அதுக்காக அவன் அடிக்க ரைட்ஸ் கிடையாது என்பீர்களா?

  எல்லோருக்கும் கருத்துரிம ,உரிமை கேக்கபோனால் சங்கராச்சாரி அனுராதா ரமணன்கிட்ட பண்ணுனது தான் தெரியுமே.

  நமக்குத்தேவை எல்லாம் உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடுவதற்கு உரிமை வேண்டும், ஊர் மேய்வதற்கோ, அவிழ்த்துபோட்டு ஆடுவதற்கோ அல்ல.

  நாஙள் கேட்பது எங்கள் உரிமையை ஆதிக்கத்துக்காக அல்ல,அடங்கிப்போவதை மறுப்பதற்கே.

  மருத்துவரை இப்படி திட்டுகிறீர்களே இதை மருத்துவரின் கருத்துரிமையை நீங்கள் சிதைப்பதாக சொல்லலாமா ?

  //அன்று பறை என்று திட்டினார்கள் இப்போது பாப்பான் என திட்டினார்கள்//

  அய்யா உங்களுக்கௌ இது அதிகமா தெரியல

  அப்புறம் கலகத்துல இருந்து தங்களுக்க் 3 பதில் சொல்லியாச்சு அப்ப்புறமும் அவன் பதில் சொல்லல இவன் பதில் சொல்லலன்னு ஏதாவது பதிவ எழுதாதீங்க

  கலகம்

 132. Finally RV is going to focus only on freedom of speech. But everyone should give a pat on his back for his unrelenting campaign even through all this barrage of criticism.

  1) With regards to freedom of speech not everyone is entitled to it. Swamy has just got a taste of his own medicine.
  2) Swamy being a brahmin is a reason to oppose him is right because we feel that it should be exterminated(brahminism not brahmins).

  and thats about it RV. Cant go on any further

 133. நண்பர் ஆர்.வி அவர்களின் கருத்துக்கள் …

  நான் சாதியை ஆதரிப்பது இல்லை, ஆனால் நான் பார்ப்பனன்..

  முதியவர் ஆறுமுக சாமியின் கையை உடைத்த பொறுக்கி தீட்சிதர் இன்றும் சுதந்திரமாக உலவுகிறான், ஆனால் கேனப்பயல் சு.சாமியின் மீதான முட்டை வீச்சை கண்டிக்கிறேன்..

  நான் கருத்து சுதந்திரத்தை அனைவருக்கும் ஆதரிக்கிறேன், அதனால் அமெரிக்காவில் சென்று ஒசாமா வாழ்க என்று கருத்தை கூறுவேன்… இஸ்ரேலில் சென்று ஹிட்லர் வாழ்க என்று கூறுவேன்…

  வினவின் எதிர்கால சமூக கட்டமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன், இந்த சமூகத்தில் குறைகள் உள்ளது, ஆனால் அதை மாற்ற முயலமாட்டேன்.. (எனக்கு பாதிப்பு வராதவரை ! ) பல லட்சம் மக்கள் உழைக்கும் மக்கள் துன்பங்களை அனுசரித்து போக கோருவேன்..

 134. Mr RV, periyar had said bhramanical idealogy (insisting manu sastram) is much poisonous than a snake, but u r saying that according to periyar ur 5yr old child will not be spared bcos she is a brahmin . We tamilians are not so ruthless to kill an innocent, but at the sametime u have to think abt the hindutva goons who took away an unborned child from the foetus only bcos it was a muslim.These goons were also inspired by the speeches of the fanatics (in ur view freedom of expression) & DR Swamy is mere reprsentative of such fanatics and these type of outrage is unavoidable.

 135. சு.சாமிக்கு முட்டை அபிஷெகம் எல்லாம் சரி. அடித்த முட்டையை உதவிக்கு அனுப்பி இருந்தால் தமிழ் வ்யிறு பசி ஆறி இருக்கும்.

 136. வினவு அவர்களே,

  நீங்கள் முன்வைக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் பார்ப்பனிய, தரகு முதலாளிய ஏகாதிபத்திய சக்திகளின் கருத்துரிமை மறுக்கப்படும். மாறாக புதிய ஜனநாயக அரசின் ஆளும் வர்க்கங்களான உழைக்கும் மக்கள், தேசியமுதலாளிகளின் கருத்துரிமை பாதுகாக்கப்படும். இவ்வாறுதான் எனக்குப் புரிகிறது.

  எதிரிகளின் கருத்துரிமையை மறுப்பதற்கு ஏன் நாம் புதியஜனநாயகப் புரட்சி வெற்றி பெறும் வரை காத்திருக்க வேண்டும்?

  புரட்சியின் ஆரம்பநிலை (மக்கள் திரளாவது)யிலேயே படிப்படியாகத் தொடங்கிவிடுவதுதானே சரியானது?

  அப்படிப் பார்த்தால், சு.சுவாமியின் கருத்துரிமையை நம் சக்திக்கு தக்கவாறு நசுக்கிவிடுவதுதானே சரியானது?

  விளக்கம் தேவை.

  சுடரொளி

 137. நண்பர் ஆர்வி, தங்களுடைய அத்துனை பின்னுட்டங்களிலும் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்;கள் அது கருத்து சுதந்திரம். ஆந்த கருத்து சுதந்திரத்தை பற்றியும் அதன் அளவீடுகள் பற்றியும் தோழர்கள் நளினமாக எவ்வளவு சொல்லியும் விளங்காது போல் பின்னுட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்;கள். மரம் விழும் போது நிலம் அதிரத்தான் செய்யும் என்று சீக்கிய படுகொலையை நியாயப்படுத்திய ராஜீவை அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று சொல்வீரா? அல்லது செருப்பால் அடிப்பீரா? இங்கு சுவாமியைப்பற்றி சொல்வதானால் ஏன் தமிழர்களுக்கு எதிரான எந்த விசயமானாலும் தானாக வந்து ஆஜராகிறான். அது சேது பாலமாக இருந்தாலும் சரி அல்லது எம் மூதையார்கள் கட்டிக்கொடுத்த கோயிலானாலும். காரணம் உங்கள் வார்த்தையில் சொல்வதானால் உங்கள் 5 வயது மகள் தெளிவாக சொல்லும் இனப்பாசம் என்று. ஏன் இந்த சுவாமி காவேரிக்கு வரிந்து கட்டிக்கொண்டு வாதாடி தண்ணீர் கொண்டு வரவில்லை, முல்லை பெரியாரை ஏன் கொண்டு வரவில்லை. ஆந்;திராவுக்கு எதிராக ஏன் வரவில்லை. குஜராத் இன அழிப்புக்கு எதிராக ஏன் வரவில்லை. தோழர்கள் தங்களால் ஆன சிறு எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள். தோழர்கள் மற்றும் தோழி சொன்னது போல் முட்டையால் அடித்து இருக்க கூடாது மலத்தால்; மற்றும் அமிலத்தால் அடித்து இருக்க வேண்டும். மீண்டும் தோழர் அசுரனின் வார்த்தையை மீள் செய்கிறேன். சுவாமியை போல் பிறந்ததிற்கு பன்றியாக பிறந்து சாக்கடையில் மலம் தின்னலாம்.

  தோழமையுடன்

 138. சு.சுவாமியின் கருத்துக்கள் ஏற்க்கமுடியாதவையாக இருக்கலாம். அதை மறுக்க ஜனனாயாக ரீதியான வழிகள் உள்ளன. மறுபிரச்சாரம் மற்றும் வழக்குகள்
  உபயோகிப்பதே முறையானது / நியாயமானது.

  சரி, வன்முறைதான் வழி என்றால், அதை அனவைரும் பின்பற்றினால எப்படி
  இருக்கும் ? சு.சுவாமி, பணம் கொடுத்து, ஒரு பெரும் கூலிப்படை அனுப்பி, தன்னை தாக்கிய வக்கில்களை நைய்ய புடைக்க ரகசியமாக ஏற்பாடு செய்து, அதை செயல்
  படுத்தினால் எப்படி இருக்கும்.

  இதே போல் ரிலையன்ஸ் ஃப்ரெஸ் கடைகளை தாக்கிய வெள்ளையன் போன்ற
  ‘சுதேசிகளையும்’ பதிலுக்கு குண்டர்கள ஏவி ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கினால். (அவர்களுக்கு அன்று அப்படி ஒரு யோசனை தெரிவித்து மின்மடல் எழுத வேண்டும் என்று தோன்றியது !!).

  வலுத்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் அதற்கு பெயர் ஃபாசிசம். அதன் விளைவாகத்தான்
  இலங்கையில் கடும் பிரச்சனை. ஜனனாயகம், மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை…

 139. நடக்கட்டும், நடக்கட்டும்.

  எதிர்காலத்தில் ‘அம்மா’ அட்சி வரும் போது, அவர்கள் இதை விட அருமையாக இந்த கோஸ்டிகளை குண்டர்கள் வைத்து தாக்குவார்கள். ஆசிட் வீச்சு, பொய் கேசுகள் மீண்டும் நடக்கும்.

  தன்க்கு நியாயம் என்று படுவதால், ‘எதிரியை’ எப்படி வேண்டுமானுலும் தாக்கலாம் என்ற தத்துவத்தின் விளைவே இவை. அடியாள் பலத்தில் வலுத்தவன் வெல்வான், இளைத்தவன் கேனையனாவான். அதுதானே சித்தாந்தம்.

 140. //இந்த உரிமைகளுக்குள் முதலாளித்துவத்தின் சொத்து சேர்க்கும் உரிமை, அதை அனுபவிக்கும் உரிமை, அதை அதிகப்படுத்தும் உரிமை என்பது பத்தோடு பதினொன்றாய் மறைந்திருக்கும். உண்மையில் இந்த உரிமையாக் காப்பாற்றத்தின் மற்ற உரிமைகள் போலியான அளவில் கொடுக்கப்படுகின்றன.
  ///

  then it may justify if poor person robs a rich while the poor is robbed by an even more poorer person.
  rioght to property is not a tool for exploitation but the core requirement for prosperity and development.

  violation of this right by mafia and goondas in Bihar areas has driven all new investement from that excellent region and the poor Biharis are forced to migrate all over India for manual labour.

  violation of property rights usually leads to poverty and stagnation as repeatedly proved in the past.

  De Soto, a famous Peruvian economist has proved in practise the use of this right :

  http://en.wikipedia.org/wiki/Hernando_de_Soto_(economist)#Need_for_private_ownership

 141. ஓ நீங்களா,

  தர்மபுரியில ஊர் சொத்த தூக்கி கொடுத்து பேர் வாங்கினவரு தானே,போயி யாராவது கிழவிய ஏமாத்தி நெல்லிக்கா வாங்கி தின்னுங்க, சரியா?

  இங்கே என்னா பேசறீங்கன்னு தான் புரியல

 142. //அடியாள் பலத்தில் வலுத்தவன் வெல்வான், இளைத்தவன் கேனையனாவான். அதுதானே சித்தாந்தம்.//

  இலங்கையில் அதுதானே நடக்கிறது.
  கருத்து சுதந்திர புடுங்கிகள் ஆயுதம் கொடுத்து வலுத்தவனை தாங்குவதன் ரகசியம் என்ன?

 143. வினவு,

  உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் பதில் சொல்ல போகிறேன். ஒரே கேள்வியை திருப்பி திருப்பி எத்தனை முறைதான் கேட்பார்கள், எத்தனை முறைதான் பதில் சொல்வது?

  // ுதலாளித்துவம் தனது சர்வாதிகாரத்தை மறைத்துக் கொள்ளும் தந்திரம்தான் எல்லோருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது என்றும், எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமையென்றும், அனைவருக்கும் கருத்து சுதந்திரம் எனவும் காட்டிக்கொள்ளும் சைவப் புலி வேடம். //
  சரி வேஷம் என்றே வைத்துக் கொள்வோம், உங்கள் ஆட்சியில் இந்த வேடமும் இருக்காது. நீங்கள் கை காட்டுபவருக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம். இதுதானே நீங்கள் கனவு காணும் லட்சிய உலகம்? தயவு செய்து இந்த புரிதல் சரியா இல்லையா என்று சொல்லுங்கள்.

  // இரண்டாம் உலகப் போருக்கு பின்னாள் பதவியேற்ற எல்லா அமெரிக்க அதிபர்களும் சர்வதேச சட்டப்படி போர்க் குற்றவாளிகளாய் தண்டிக்கப்படுவதற்கு தகுதி பெற்றவர்கள் //
  அப்படியா? மாவோ பற்றியும், கலாசார புரட்சி பற்றியும் நோம் சொம்ஸ்கி ஏதாவது சொல்லி இருக்கிறாரா? ஸ்டாலின், பெரியா, 1956 ஹங்கேரி புரட்சி ஒடுக்கப்பட்டது, 1968 செச்கொச்லவகியா புரட்சி ஒடுக்கப்பட்டது, போலந்தின் சாலிடாரிடி இயக்கம் ஒடுக்கப்பட்டது, ரஷியாவில் யூதர்கள் ஒழிக்கப்பட்டது, இன்றும் செசென்யா, அர்மீனியா, பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா? அது என்ன கம்யூனிஸ்ட் தலைவர்களை சவுகரியமாக மறந்துவிடுகிறீர்கள்? ரஷிய தலைவர்கள் வேறு எந்த நாட்டிலும் தலையிட்டதே இல்லையா? கேஜிபி என்ன மதிய உணவு திட்டத்தை நிறைவேற்றும் ஏஜென்சியா? ரஷியாவுக்குள் மட்டுமே செயல்பட்டதா? இன்று அமரிக்காவுக்கு இராக் என்றால் ரஷியாவுக்கு 1980இல் ஆஃப்கானிஸ்தான். கிழக்கு ஜெர்மனியில் பிடி தளர்ந்ததும் அந்த நாடே கம்யூனிசத்தை உதறிவிட்டு மேற்கு ஜெர்மனியுடன் இணைந்ததே? ரஷியாவில் பிடி தளர்ந்ததும் எஸ்தொநியாவும், லாத்வியாவும், உக்ரைனும், என் ரஷ்யாவே கூட என் மார்க்சும், லெனினும், ஸ்டாலினும், குருசேவும், ப்ரேஷ்நேவும் காட்டிய வழியை உதறியது? பெருவாரியான மக்களுக்கு கருத்து சுதந்திரம் என்று ஒன்று இருந்திருந்தால், உங்கள் லட்சியமான சர்வாதிகாரம் அந்த நாடுகளில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த தலைவர்கள் உண்மையிலேயே மக்களின் விருப்பத்தை மனதில் வைத்து நடந்திருந்தால் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? சரி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சரி இல்லை என்றால் நிக்சனும் உத்தமர் இல்லை. எந்த தலைவனும் உத்தமன் இல்லை என்றால் ஏதோ வாயை திறக்க உரிமை இருக்கும் நாடு கொஞ்சம் பெட்டர் இல்லையா? வினவு காட்டும் வழியில் வாயை திறக்காமல் நடக்க வேண்டும், ஒபாமா காட்டும் வழியில்தான் நடக்க வேண்டும், ஆனால் வாயை கொஞ்சம் திறக்கலாம் என்றால் கொஞ்சமாவது அறிவுள்ளவன் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்? கிழக்கு ஜெர்மனி, லாட்வியா, எஸ்தோனியா, உக்ரெய்ன், ரஷியா, அர்மீனியா மக்கள் இந்த இரண்டு வழிகளில் எதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்? இனப் படுகொலைகள் நீங்கள் சொல்லும் கால கட்டமான இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் எந்த நாடுகளில் அதிகமாக நடந்திருக்கின்றன? உங்கள் பாஷையில் “போலி” கருத்து சுதந்திரம் உள்ள அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளிலா? இல்லை உங்கள் வழியில் தலைவர் கை காட்டுபவருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் வழங்கிய ரஷியா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலா?

  // வெள்ளை மாளிகை முன்னே காட்டுக்கத்தலாய் ஈராக் போரை எதிர்த்து முழக்கமிடுவதற்கு அமெரிக்க மக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அதை செயல் படுத்தும் வண்ணம் நேரடியாக அமெரிக்கா ஆயுதக்கூடத்தை கைப்பற்றி அழிக்க அந்த மக்கள் கூட்டம் முனைந்தால் என்ன நடக்கும்? // உங்கள் லட்சிய ஆட்சியில் கத்தவே உரிமை கிடையாது. ஆனால் ஆயுதக் கூடத்தை கைப்பற்ற முயன்றால் தட்டிக் கொடுத்து ஆட்சியை மாற்றி விடுவீர்கள், அப்படித்தானே? அட ஏன் சார்?

  // கருத்துரிமையின் உண்மையான அருகதை என்பது அதை வாயளவில் பேசுவதனால் அல்ல. செயலளவில் காட்ட முடியுமா என்பதுதாதன். இதைத்தான் ஆளும் வர்க்கங்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம் இருக்க முடியும் என்பதை முந்தைய பதிலில் விளக்கினோம். //
  உங்கள் லட்சிய ஆட்சி இதை விட மோசமாக அல்லவா இருக்கிறது? ஆளப்படும் வர்க்கத்துக்கு வாயளவில் பேசக்கூட உரிமை கிடையாதே? அப்புறம் என்ன கருத்துரிமை வாழ்கிறது?

  // இதில் ஒன்றுக்கு மட்டும் அவர் நேரடியாக பதிலளிக்க வேண்டும். நாங்கள் ஸடாலினிஸ்டுகள் என்ற கதையெல்லாம் இருக்கட்டும். இன்றைய சமூக அமைப்பில் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென்கிறோம். //
  // இன்றைய சமூக அமைப்பில் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென்கிறோம். // இது ஓரளவுக்கு உண்மையே. மேதா பட்கரும் பினாயக் சென்னும், நந்திக்ராமமும் இவற்றுக்கு சாட்சி சொல்லத்தான் செய்கின்றன. ஆனால் நந்திக்ராமத்தில் அரசு பின் வாங்கி இருக்கிறது என்பதும் உண்மையே. வினவின் லட்சிய ஆட்சியில் நந்திக்ராமம் போன்று ஒரு சம்பவம் நடந்தால் அது வெளியே தெரியவே தெரியாதே? அப்புறம் அரசு பின் வாங்க செய்வது எப்படி?

  // அதாவது தமது உரிமைகளை செயல்படுத்தும் அதிகாரம் மக்களுக்கில்லை என்பதால் அதை பேசுகின்ற வாய் உரிமையையே உரிமை என்று மாய்மாலம் செய்யக்கூடாது. உரிமை என்பது வாயிலியே கரைந்து விடும் எச்சில் அல்ல.அது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கும் வாழ்வதற்கான சூழலை மறுக்க்கவோ அளிக்கவோ பயன்படும் யதார்த்தம். இதை நாக்குப் பிரச்சினையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது பாமரத்தனம். //
  இதற்கான பதிலை நானும் சொல்லி இருந்தேன். மீண்டும் இங்கே கட்/பேஸ்ட் செய்கிறேன்.
  // இன்றைய நிலை நல்ல நிலை இல்லைதான், மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நிகழ்கின்றன, பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைய நிலையை விட உங்கள் எதிர்கால லட்சிய உலகம் எந்த விதத்தில் சிறந்தது? குறை சொல்பவர்கள் எதிரிகள் ஆகிவிடுவார்கள். power corrupts, absolute power corrupts absolutely என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது. //

  இன்று இருக்கும் நிலை அருமையான நிலை, எந்த மாற்றமும் வேண்டியதில்லை என்பதில்லை. அப்படி நான் எழுதவும் இல்லை. ஆனால் நீங்கள் காட்டும் லட்சிய உலகம் ஒரு சர்வாதிகார உலகமாக, நீங்கள் கை காட்டுபவருக்கு மட்டுமே உரிமைகள் இருக்கும் உலகமாக இருக்கிறது. வரலாற்றை பார்க்கும்போது இப்படி சர்வாதிகாரிகளாக இருந்த யாருமே ஆளப்படும் வர்க்கத்தை அடிமைகளாகத்தான் நடத்தி இருக்கிறார்கள். நீங்கள் ஆளும் வர்க்கமாக ஆசைப்படுகிறீர்கள், அந்த உலகத்தில் நீங்கள் வைத்தது சட்டம். மாற்று கருத்து யார் சொல்லலாம், எவ்வளவு தூரம் சொல்லலாம் என்பதை நீங்களே நிர்ணயிக்கலாம். அதனால் அந்த உலகம் உங்கள் லட்சிய உலகமாக இருக்கலாம். ஆனால் ஆளப்படும் வர்க்கமான எனக்கு இன்றிருக்கும் அடிமைத்தனத்தை விட அதிகமான அடிமைத்தனம் நிறைந்த அந்த உலகம் சிறப்பானதாக தெரியும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? என்னை பார்த்தால் அவ்வளவு மாங்கா மடையனாக தெரிகிறதா?

  ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே ப்ராக்டிகலாக எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அதனால் நான் ஆளும் வர்க்கம் ஆகிவிடுகிறேன். உனக்கு சும்மா லுலுலாயிக்கு இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளும் நான் ஆளும் வர்க்கம் ஆனால் பறிக்கப்படும், என்னுடன் சேர்ந்து அந்த லட்சிய உலகுக்கு போராடு என்கிறீர்கள். குறைந்த பட்சம் கனவாவது நல்ல கனவாக இருக்க வேண்டாமா?

  இப்போதிருக்கும் உலகில் மார்க்சின் குரலும் கேட்கிறது, எய்ன் ராண்டின் குரலும் கேட்கிறது. எது சரி, எது தவறு என்று என்னால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. அதை எப்போதுமே செயல்படுத்த முடியாவிட்டாலும் கூட. இந்த நிலை மாறி மார்க்சின் குரல் மட்டுமே கேட்கும் உலகம் என் லட்சிய உலகம் இல்லை.

 144. //தன் தரப்பை சட்டபூர்வமாக பதிவு செய்து வாதிக்க நீதிமன்றம் வந்திருக்கும் ஒருவரை தாக்கியது – அதுவும் நீதிபதிகள் முன்னிலையிலேயே தாக்கியது – அதுவும் நீதியை பெற்றுத்தருபவர்கள் என்று நம்பப்படுபவர்களே தாக்கியது – அதுவும் பாதுகாப்புக்கு வந்திருந்த மற்றும் தாக்கப்பட்டபோது மீட்க முனைந்த பாதுகாவலர்களை விரட்டியடித்துவிட்டு துரத்தித் துரத்தித் தாக்கியது தாலிபானிஸத்தின் உச்சகட்டம் என்றே மறுபடியும் சொல்வேன்.//

  அடிபட்டுக் கொண்டிருந்தால் பொறுமைவாதி எதிர்த்து அடித்தால் தலீபான். நல்லா இருக்கு தோழர் உங்களுடைய சித்தாந்தம். இதே இந்தியா தானே ஈழத்தில் பாசிசம் செய்கிறது. அவர்களையும் தலீபான்களாக சொல்ல முடியுமா?

 145. ///What is the point? அதையும் சொன்னால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.///

  உங்களுடன் விவாதித்ததில் மண்டை குழம்பி போய்விட்டது என்று சொல்லமாட்டேன். தூங்காமல் தான் உங்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய கருத்துஉரிமையில் உங்களுடைய வார்த்தைகளிலேயே எதிர்ப்பும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மெளனக்கெட்டு வெட்டி வேலை பார்த்தேன் என்றும் எடுத்துக் கொள்ளுங்கள்.

  /////////// அதற்கு அடுத்த வரி:
  // முரளி அவர்களே, இது உங்கள் வரிகள். சும்மா மாற்றி எழுதி இருக்கிறேன். //
  முரளி எழுதி இருந்த வரிகளை மாற்றி பகடி செய்திருந்தேன். முரளியின் ஒரிஜினல் வரிகள் கீழே:
  // அய்யா ஆர்.வீ , நீர் பார்ப்பனர் என்பதனால் தானே சூசாமிக்காக பேச வந்திருக்கிறீர்கள். இதில் என்ன அப்ரூவர்போல ஆக்டிங் வேறு. /////////////

  நீங்கள் சும்மா உல்லலாய்க்கு செய்ததாக சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களின் ஆழ்மனத்தில் தான் பார்ப்பான் என்ற உணர்வு இருப்பதால் தான் உங்களை பார்ப்பான் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். பாம்பையும் என் 5 வயது மகளையும் கண்டால் பாம்பை விட்டுவிடு என் மகளை அடி என்று சொன்ன பெரியாரின் கருத்துச் சுதந்திரத்தையே ஏற்றுக் கொள்ளும் எனக்கு சு.சாமியின் கருத்து சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்குவது தவறா என்கிறீர்கள்.

  இப்போது தெளிவாகவே உங்களுடைய கருத்துச் சுதந்திரத்தின் உள்குத்து தெரிகிறது.

  அதனால் தான் சொல்கிறேன் பெரியாரின் கருத்தையும் சு.சாமியின் கருத்தையும் ஒரே தட்டில் வைக்கக்கூடாது என்று.

 146. karunanithi state ment

  //தமிழகத்தில் எங்கும் சுமுகமான சூழ்நிலையே நிலவ அவர் விரும்புகிறார். அதற்கு மாறாக, நீதிமன்றத்துக்கு உள்ளேயே வழக்கறிஞர்களில் சிலர் சுப்பிரமணிய சாமி போன்றவர்களிடம் நடந்து கொண்ட விதமும் (இது தொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.) பொதுக் கூட்டங் களில் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக சிலர் பேசியதும் முதல்வருக்கு மனச்சங்கடத்தை கொடுத்துள்ளன//

 147. // இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் கொல்லப்படும் தமிழ் மக்களைப் பற்றிய செய்திகளை எந்த சர்வதேச ஊடகமும் வெளியிடக்கூடாது என இலங்கை அரசு உத்திரவு போட்டிருக்கிறது. அதை அமல் படுத்தவும் செய்கிறது. //
  எனக்கு எழுதும் பதிலில் இதை ஏன் சொல்கிறீர்கள்? என்ன நான் இதை ஆதரித்து ஏதாவது எழுதி இருக்கிறேனா? இலங்கை அரசு செய்வது மகா தவறு.

  // இந்த இனப்படுகொலையில் சுப்பிரமணிய சுவாமிக்கும் பங்கு உண்டு என்பது எங்கள் குற்றச்சாட்டு. இல்லை என மறுப்பவர்கள் அதை விளக்கவேண்டும். //
  அய்யா, அழுவதா சிரிப்பதா? குற்றம் சாட்டுபவர் இல்லையா விளக்க வேண்டும்? இது என்ன புது விதியாக இருக்கிறது? அப்புறம் நாளை யாராவது வினவு என் பக்கத்து வீட்டுக்காரனை கொலை செய்தார், இல்லை என்று மறுப்பவர்கள் விளக்க வேண்டும் என்று எழுத நேரிடலாம்.
  சு. சாமியால் அவர் வீட்டுக்குள் ஒரு கரப்பான் பூச்சியை கூட கொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு இவ்வளவு தாக்கம் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் சந்தோஷப்படுவார்.

  // இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களில் ஒருவரான சு.சுவாமி தண்டிக்கப்படவேண்டும். அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் மக்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குள்ள கருத்துச்சுதந்திரம் என ஆர்.வி சான்றிதழ் வழங்கலாம். இல்லையென்றால் மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை அது சுப்பிரமணிய சுவாமிக்கும் மட்டும் உள்ள சுதந்திரம் என்றே கருதப்படும். //
  இந்த மக்கள் யார்? நான் இந்த மக்களில் உண்டா? என் கருத்துக்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா? எத்தனை சதவிகிதம் பேர் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்ல வேண்டும்? 51%? 67%? 90%? 100%? எத்தனை பேரை கேட்டீர்கள்? ஒரு நூறு வக்கீல்கள் இருந்திருப்பார்களா? இந்த தளத்தில் ஒரு பத்து பேர் ஆதரவு தெரிவித்திருப்பார்களா? இந்த நூற்றுப்பத்து பேர்தான் மக்களா? யார் யாரை எல்லாம் கேட்க வேண்டும்? வக்கீல்களை மட்டுமா? ம.க.இ.கவினரை மட்டுமா? தமிழக மக்களையா? தமிழ் பேசும் எல்லாரையுமா? இந்திய மக்கள் எல்லாரையுமா? யாரை கேட்டீர்கள்? இல்லை உங்களுக்கு ஏதாவது ஞான திருஷ்டி உண்டா?

  // ஈழப்படுகொலைக்கு காரணமான இலங்கை அரசு இங்கில்லை என்பதால் இலங்கை அரசுக்கு கூஜா தூக்கும இந்தியக் கிரிமனல்களைத்தான் நாங்கள் இங்கிருந்து எதிர்க்கமுடியும். அதனால் சு.சாமியை தண்டிப்பதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை என்பதால்தான் முட்டையை வீசினோம். உண்மையில் முட்டை வீச்சு என்பது எங்களிடம் கருதுரிமையை செயல்படுத்தும் அதிகாரமில்லை என்பதன் குறியீடு. அதையே கருத்துரிமையை களங்கப்படுத்தும் நீதியாக சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம். கருத்துரிமையை தீர்மானிக்கும் சக்தி யாரிடம் ஆயுதங்கள், போலீசு, இராணுவம், நீதிமன்றம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் சொந்தமான விசயம். அது இல்லையென்பதால்தான் மக்கள் இத்தகைய அடையாள எதிர்ப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு ஏதோ கொஞ்சம் திருப்தி அடைகிறார்கள்.//
  வினவு, உங்களுக்கும் எனக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. உங்களை தண்டிக்க எனக்கு அதிகாரமில்லை. என்னை தண்டிக்க உங்களுக்கு அதிகாரமில்லை. நீங்கள் என் மீதும் நான் உங்கள் மீதும் முட்டை வீசிக் கொள்ள வேண்டுமா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? சீமானின் கார் டயரை எரித்தவர்களும் இதே வாதத்தை சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா? அம்பத்தூர் மாநாட்டில் நான் வந்து முட்டை வீசி இருந்தால் பச்சை அயோக்கியனான ஆர்வி இன்று யோக்கியனாக மாறிவிட்டார், அவருக்கு கருத்துரிமையை செயல்படுத்த அதிகாரமில்லை என்பதை உணர்த்திவிட்டார், கை தட்டுங்கள் என்று பதிவு எழுதுவீர்களா?

  // சு.சுவாமி அவரது கிரிமினல் பேச்சு நடவடிக்கைகளுக்ககாக நீதி மன்றத்தால் தண்டிக்கப்டும் சூழ்நிலை இருந்தால் முட்டைகளுக்கும் தக்காளிகளுக்கும் தேவையிருக்காது. //
  கிரிமினல் பேச்சா? அப்படி என்றால் கேஸ் போடலாமே? நீதி மெதுவாக கிடைத்தாலும் உங்கள் எதிர்ப்பையாவது ஆக்க பூர்வமாக காட்டி இருக்கலாமே? தீட்சிதர்களை எதிர்த்து வெல்ல வில்லையா?

  // உடனே உங்களுக்கு எதிர்கருத்து யாராவது சொல்லிவிட்டால் அவர்களை உள்ளே தள்ளி விட்டால் அது சர்வாதிகாரம் என ஆர்.வி மீண்டும் துள்ளிக் குதிக்கலாம். அதுதான் இப்போது இருக்கிறது என்பதுதான் எங்கள் வாதம். இப்போது ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாக சொன்னால் அதற்கு ஆதரத்தைக் காட்டுங்கள். மாஞ்சோலையில் கலெக்டரிடன் மனுக்கொடுப்பதற்கு சென்றதற்காகவே பதினைந்து பேர் போலீசால் தாமிரபரணி ஆற்றில் முக்கிக் கொல்லப்பட்டார்கள். நாக்பூரில் அமைச்சரிடன் மனுக்கொடுக்க சென்ற பழங்குடி மக்கள் போலீசின் தடியடி, துப்பாக்கி சூட்டால் நூற்றுக்கணக்கில் இறந்திருக்கின்றனர். மனுக்கொடுப்பதற்கு கூட உயிரை தானமாக கொடுக்கும் நாட்டில் கருத்துரிமை வெங்காயம் எங்கே இருக்கிறது? //
  நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் நீங்கள் கை காட்டும் லட்சிய உலகு இதை விட மோசமாக இருக்கிறதே? மான்சொலையிலும் நாக்பூரிலும் மனு கொடுக்கலாமா வேண்டாமா என்று நீங்கள்தானே தீர்மானிப்பீர்கள்?

  // ஆர்.வி தன்னை விருப்பு வெறுப்பற்ற எந்தச்சார்பும் இல்லாத நடுநிலைமையாளனாக கருதிக்கொள்கிறார். உண்மையில் இந்த நடுநிலைமை என்பது நடுத்தரவர்க்கத்தின் புகழ்பெற்ற ஹிப்போக்கிரசி பண்பு. இந்த உலகில் நடுநிலைமை என்று ஒன்று கிடையவே கிடையாது. எந்தப் பிரச்சினையும் பரந்துபட்ட மக்கள் சார்பில் இருக்கிறதா அல்லது எதிராக இருக்கிறதா என்பதுதான் சமூக யதார்த்தம். ஒருவர் குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களின் நலனுக்காக பேசுகிறாரா இல்லை எதிராக பேசுகிறாரா என்பதுதான் உண்மை. தங்களை நடுநிலைமையாளர்கள் என கருதிக் கொள்ளும் யோக்கியவான்கள்கூட இந்த இரண்டில்தான் வரமுடியும். இதைத்தாண்டி மூன்றாவது என்பதோ எந்தச்சார்புமில்லாத நடுநிலைமை என்பதோ உண்மைக்கு மாறானது. அப்படிக் காட்டிக்கொள்வதுதான் முதலாளித்துவத்தின் தந்திரம். அதற்கு காலனியமனப்பான்மையில் உருவெடுத்த அறிவு ஜீவிகள் பலியாவதும் உலகெங்குமுள்ள யதார்த்தம்தான். ஆர்.வியின் கருத்துரிமை வாதம் என்பது முதலாளித்தவ அறிவாளிகளால் நெடுங்காலம் பேசப்பட்டு வரும் கருத்து மோசடிதான். அதனால் ஆர்.வி பற்றி மட்டும் நொந்து கொள்வதில் பயனில்லை. //
  உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி! ஆனால் நான் விருப்பு வெறுப்பு உள்ளவன். அறிவு ஜீவியும் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை consistent application of an value system, அவ்வளவுதான். பெரியாருக்கு ஒரு நீதி, சாமிக்கு ஒரு நீதி, வினவுக்கு ஒரு சட்டம், ஆர்விக்கு ஒரு சட்டம் என்று இருக்கக் கூடாது, அவ்வளவுதான்.

 148. தமிழச்சி,

  சிரிப்பு போலீஸ் வடிவேலு, சிரிப்பு அரசியல்வாதி சு. சாமி போல நீங்கள் சிரிப்பு மறுமொழியாளர். ஒரு பக்கம் பெரியாரை பற்றி அருமையாக பதிவு செய்கிறீர்கள், இன்னொரு பக்கம் இப்படி மறுமொழி எழுதுகிறீர்கள்.

  // உங்களுடைய கருத்துஉரிமையில் உங்களுடைய வார்த்தைகளிலேயே எதிர்ப்பும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் //
  நானும் மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தேன். என் சிற்றறிவுக்கு ஒரு எதிர்ப்பும் தெரியவில்லை. ஏதோ ஒரு பகுதியை எடுத்து கொஞ்சம் விளக்கலாமே?

  // உங்களின் ஆழ்மனத்தில் தான் பார்ப்பான் என்ற உணர்வு இருப்பதால் தான் உங்களை பார்ப்பான் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். //
  இலவச மனோதத்துவ ஆராய்ச்சிக்கு நன்றி!

  இது எத்தனையாவது முறையாக கேட்கிறேன் என்று நீங்கள் கணக்கு வைத்திருப்பெர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கேட்ட கேள்வி தவறா, சரியா? அதை விளக்க போகிறீர்களா இல்லை சவுகரியமாக இப்படியே ignore செய்யப் போகிறீர்களா?

 149. ///சிரிப்பு போலீஸ் வடிவேலு, சிரிப்பு அரசியல்வாதி சு. சாமி போல நீங்கள் சிரிப்பு மறுமொழியாளர். ஒரு பக்கம் பெரியாரை பற்றி அருமையாக பதிவு செய்கிறீர்கள், இன்னொரு பக்கம் இப்படி மறுமொழி எழுதுகிறீர்கள்.///

  என்னத்த சிரிப்பைக் கண்டு சிரிப்பாய் சிரிக்கிறீர்கள்.

  பெரியாரைப்பற்றி அருமையாக எழுதுவதாக சொல்கிறீர்கள். அதே பெரியாருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம் தான். அவருடைய நகைச்சுவையான நிகழ்ச்சிகளை தொகுத்து சிறு நுhல் கூட வெளிவந்திருக்கிறது.

  வடிவேலு ரேஞ்சிக்கு எங்களை ‘காமெடி’யாக ஆக்கிவிட்டு நீங்க ‘ஹீரோ’வாக முற்பட்டால் அந்த அதிரடி தாக்குதலுக்கும் தயாராக வேண்டியது தான் போலிருக்கு. சிரிப்பாய் பேசுவது இழுக்கானதா?

  சரி இன்றைய என் பதிவில் சீரியசாய் பேசி இருக்கிறேன். படித்து பாருங்கள்.

  http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=967

  ///இலவச மனோதத்துவ ஆராய்ச்சிக்கு நன்றி!///

  படிச்ச சப்ஜெக்ட்ட வைத்து தானே பேச முடியும். ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தையில் தந்திரமாக ஜகா வாங்கி விட்டீர்களே!

  ///இது எத்தனையாவது முறையாக கேட்கிறேன் என்று நீங்கள் கணக்கு வைத்திருப்பெர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கேட்ட கேள்வி தவறா, சரியா? அதை விளக்க போகிறீர்களா இல்லை சவுகரியமாக இப்படியே ignore செய்யப் போகிறீர்களா?///

  நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருங்கள். கருத்துச் சுதந்திரத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி நீங்கள் பேசாத வரையில் நான் கேட்ட கேள்வி சரியா தவறா என்ற வாதத்தை அடுத்து வைத்துக் கொள்வோம்.

 150. தமிழச்சி,

  // ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தையில் தந்திரமாக ஜகா வாங்கி விட்டீர்களே! //
  என்ன செய்யலாம், ஒவ்வொரு digression-உக்கும் பதில் சொல்லி மாளவில்லை. அப்புறம் உங்கள் தவறை நீங்கள் டீல் செய்யும் விதத்தில் இல்லாத தந்திரமா?

  // கருத்துச் சுதந்திரத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி நீங்கள் பேசாத வரையில் நான் கேட்ட கேள்வி சரியா தவறா என்ற வாதத்தை அடுத்து வைத்துக் கொள்வோம். //
  உங்கள் தவறை ஒத்துக் கொள்ள நிபந்தனை போடுகிறீர்கள். சிரிப்பு மறுமொழியாளர்தாந்.

 151. ///அப்புறம் உங்கள் தவறை நீங்கள் டீல் செய்யும் விதத்தில் இல்லாத தந்திரமா?///

  ஓ! தீர்மானமே செய்து விட்டீர்களா? நான் பேசுவது தவறு எழுதுவது தவறு இங்கே உங்களுடைய கருத்து உரிமைக்கு மாற்றுக் கருத்துக்கள் வைத்தவர்கள் சொன்னது அனைத்துமே தவறு நேர்மையாளனான நடுநிலைப்பார்வை உங்களுக்கு என்று மெச்சிக் கொள்ளவும் உங்களுடைய கருத்து உரிமையையே
  தொடர்ந்து கோந்து போன்று இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  இங்கே நீங்களும் நானும் மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். வாசிப்பவர்கள் தீ ர்மானிக்கட்டும். எது தவறு எது சரி என்பதை.

  //உங்கள் தவறை ஒத்துக் கொள்ள நிபந்தனை போடுகிறீர்கள். //

  அப்படியென்றால் வினவு தளத்தில் மூட்டையடி மேட்டர் வந்ததை ஏற்க முடியவில்லை என்று புலம்புகிறீர்களே.. அதுவும் நிபந்தனை போன்று தானா?

 152. நண்பர் ஆர்வி…
  தங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

  நீங்கள் அமைக்கவுள்ள உலகம் எனக்கு உவப்பாக இல்லாத போது நான் எப்படி உங்களுடன் கைகோர்த்து போராட முன்வர முடியும் என்ற கேள்வியும்

  இருக்கின்ற ஜனநாயக முறைகளிலேயே நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற முடிவும்

  உஙகளது தீர்வில் ஆளப்படும் ம்ககளுக்கு ஜனநாயகம் இல்லை என்றும், ஏன் கம்யூனிச நாடுகள் தோற்றன அல்லது தமது நிலைமையிலிருந்து தவறின என்றும் விமர்சனமும்

  இன்று அனைத்து தரப்பையும் தெரிய முடிகினற்து நாளை உங்களது ஆட்சியியல் ஒற்றைத் தன்மை உடையதாக இருக்கும எனற விமர்சனமு இருக்கின்றது

  ….இதுதான் உங்களது வாதத்தின் மையப்பொருளா அல்லது வேறு பாயிண்ட உளள்தா தெரிவித்தால் விவாதிப்போம்

 153. அன்புள்ள திரு முத்துகுமார் அவர்களே
  நீங்கள் தலிபான்களை இங்கே கொண்டு வந்து ஒங்களுடைய கருத்தை நியாப்படுத்தி இருக்க வேண்டியது இல்லை .தலிபான்கள் இஸ்லாமிய மதபள்ளிகளில் பிறந்தவர்கள்.போரினால் சீரழிந்த, எல்லா உள் கட்டமைப்புகளும் சிதைந்து போன ஒரு தேசத்தின் அதிகார அமைப்பிடம் போய் எங்களுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்ர்டு கேட்டால் என்ன நடந்திருக்கும். அவர்களுடைய நோக்கம் ஒன்றுதான்.ஒரு மகத்தான இஸ்லாமிய அதவும் கலிபாக்களின் பொற்கால ஆட்சியை நிறுவவேண்டும் அவர்களுடைய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ர்டு தான் போராடி ஆட்சி அமைத்தார்கள்.பிறகு தவறினார்கள் .எதனால் .உலகத்தின் குரலுக்கு செவி சாய்க்க மறுத்ததினால் . அங்கே தலிபான்களின் நோக்கம் சரி .வழிமுறைகளும் சரிதான் . செயல் படுத்துவதில்தான் தவறினார்கள் அது அவர்களின்தேசம் .ஆனால் சிதம்பரம் கோயில் தமிழர்களுடைய உழைப்பால் உருவாக பட்ட கோயில்.அது எந்த ஒரு பொது( ) அமைபினருக்கும் சொந்தமானதல்ல.”கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதை போல் ” இந்த பார்ப்பான்கள் வந்து குடிபுகுந்தார்கள்.தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடி வழிபடக்கூடிய உரிமைகள் கூட நமக்கு மறுக்கபட்டன .அப்போது எங்கே போனார்கள் இப்போது வாய்கிழிய பேசும் இந்த மானமுள்ள மரத் தமிழர்கள்.
  நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்க ஒரு சன்னியாசியை தாம் நாம் முன்னிறுத்தி போராடினோம் .அங்கே ம.க.இ.க தினர் முன்னின்று போராடியிருந்தால் அது வேறு விதமாக திரித்து காட்டப்பட்டிருக்கும் .இப்படிப்பட்ட ஒரு நய வஞ்சக கூட்டத்தை நாம் எப்படி எதிர் கொள்வது .அவைகளுடைய நய வஞ்சகத்தை எப்படி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது .மனம் திறந்து சொல்லுங்கள்.நீதி மன்றத்தில் ஒரு சில வக்கீல்கள் கோசம் போட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்.இந்த தினமலம் வக்கில்கள் அராஜகம் .சுப்ரமணிய சாமியை ghero செய்தார்கள் என்ர்டு போட்டிருக்கும். அங்கு அவர்களுடைய நயவஞ்சக நரித்தனம் மறைக்கப்பட்டிருக்கும் நம்முடைய வக்கீல்கள் மேல் ஒரு பொய்யான குற்றம் சுமத்த பட்டிருக்கும். மதிப்பு மிக்க ஒரு நீதி மன்றம் உத்தரவிட்டபோதும் ஒரு சந்நியாசி சபாநாயகர் சபையிலே நம்முடைய உயிரினும் மேலான தமிழில் தேவாரம் பாட எத்தனை போராட்டங்கள் போராட வேண்டியது இருந்தது.அந்த ஏழை சந்நியாசியின் கைகளை உடைத்தார்கள். அப்போது எங்கே போயிற்று சட்டம் ,தீர்ப்பு எல்லாம் . பிராமணர்கள் தங்களின் இன நலன்களை பாது காத்து கொள்வதற்கும் தங்களுடய தனி உரிமைகளை நிலை நாட்டி கொள்வதற்கும் என்ன vendumaanulum செய்வார்கள். நாட்டின் உயரிய அமைப்பான இந்த நீதி மன்றம் பிறபித்த உத்தரவையே காலில் போட்டு மிதிக்ககூடிய தைரியம் இந்த சிதம்பரம் பார்பனர்களுக்கு இருக்கிறது என்றால் சுப்பிரமணியம் சாமி,ஜெயலிதா ,சோ போல பார்ப்பார்கள் தாம்.எனவே அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு கேடுகெட்ட நயவஞ்சக நரியை நீதி மன்றத்தில் முட்டையால் அடித்ததில் தவறில்லை.
  நீங்கள் தலிபான்களை இங்கே சுட்டிகாட்டியதால் இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
  இந்த புத்த மார்க்கம் தோன்றியதே பிராமணியம் செய்த அளவில்லா கொடுமைகளை எதிர்த்துதான் அனால் பிரமணர்களை அல்ல. இந்த தலிபான்களை உலகமே மன்றாடி கேட்ட் போதும் பாமியன் புத்தர் சிலைகளை உடைத்தார்கள் .ஆனால் நீங்கள் பழைய பார்பன ஏடுகளின் பதிவுகளை திரும்பி எடுத்து பார்த்தால் ஒங்களுக்கு அவர்களின் மன ஓட்டம் புரியும்.இப்படி பட்ட ஒரு நச்சு எண்ணம் கொண்ட பார்பனர்களை என்னசெய்தாலும் தகும்.
  இந்த பிராமணர்கள் தங்களின் இன நலன்களைப் பாதுகாத்து
  கொள்வதற்கும் தங்களுடைய உரிமையை நிலை நாட்டி கொள்வதற்கும் எதை வேண்டுமானலும் செய்வார்கள் .இங்கே கருத்துரிமை என்கிற பேச்சுக்கே இடமில்லை எனென்றால் நீங்கள் பெரிதும் மதிக்கும் முத்துகுமார் அவருடய நான்கு பக்க சாசனத்தை ஒரு தினமலர் இல்லை ஒரு ஹிந்து இல்லை ஒரு தினமணி பத்திரிகைக்கு அனுப்பி இருந்தால் பிரசுரிப்பார்கlaa . சொல்லுங்கள் முத்துக்குமார் அவர்களே.அந்த மானமுள்ள வீர தமிழன் தனைthதானே மாய்த்துகொண்டான் .அதை அவன் நியாயப்படுத்தியும் விட்டான் .அவன் உண்டாக்கிவிட்டு போன அதிர்வுகள் எவளவு பெரிய மாற்றங்களை உண்டு பண்ணியது .அது போல நீதி மன்றத்தில் சுப்ரமணியம் சாமி மீது வீசபட்ட முட்டை ஒரு பெரிய சமூகத்தின் எதிர்ப்பு அவளோதான்.
  இந்த சுப்ரமணியம் சாமிய விட தேர்ந்த சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள் .ஆனால் அவனை சட்டத்தினாலும் நாம் சந்தித்து விட்டோம் இனியும் சந்திப்போம் .
  என்று சொல்லி முடிக்குறேன் .”பாம்பின் விஷம் கூட மருந்தாகும் அனால் பார்பானின் விஷமோ பாம்பை கூட கொல்லும்.

  உமா ,தாய்லாந்து

 154. தமிழச்சி,

  தீர்மானமா? இதில் ஏதாவது சந்தேகம் உண்டா?

  இன்னொரு முறையும் கட்/பேஸ்ட் செய்ய முடியாது. இதற்கு மேல் இது பற்றி பேசவும் முடியாது.

  நீங்கள் நான் வினவின் பேச்சுரிமையை முடக்குகிறேன், இது சரியா என்று கேட்டீர்கள். இது fact.

  நான் வினவின் கருத்தை விமர்சித்திருக்கிறேன், அவரது பேச்சுரிமையை எங்கேயும் கட்டுப்படுத்தவில்லை என்று காண்பித்தேன். கவனமாக கேள்வி கேளுங்கள் என்று சொன்னேன். இதுவும் fact.

  நீங்கள் என்ன கேள்வி தவறாக கேட்டுவிட்டேன், சொன்னால் விளக்குகிறேன்/திருத்திக் கொள்கிறேன் என்று சொன்னீர்கள். இதுவும் fact.

  நீங்கள் நான் வினவின் பேச்சுரிமையை முடக்குகிறேன் என்று சொன்னது தவறு என்று பல முறை எடுத்துக் காட்டி விட்டேன். நீங்கள் திருப்பி திருப்பி என்ன என்று கேட்கிறீர்கள்.

  இதற்கு மேல் இது பற்றி பேச முடியாது. கருத்துகளை விவாதிக்கலாம். இங்கே பேசுவது facts பற்றி. முதிந்தால் பதில் சொல்லுங்கள். நான் இது பற்றி இனி மேல் பேச விரும்ப வில்லை. சொன்னதையே எத்தனை முறை திருப்பி திருப்பி சொல்வது?

 155. ///fact.///

  fact. என்பதை எப்படி பொருள் கொள்கிறீர்கள் என்பதில்தான் பிரச்சனையே தொடங்குகிறது. திரும்பவும் நீங்கள் அதையே குறிப்பிட முற்படுகிறீர்கள்.

  /// நீங்கள் என்ன கேள்வி தவறாக கேட்டுவிட்டேன், சொன்னால் விளக்குகிறேன்/திருத்திக் கொள்கிறேன் என்று சொன்னீர்கள். இதுவும் fact.///

  அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் சரியானவை அல்ல என்பதால் உங்களுடைய வாதங்களை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டேனே. திரும்பவும் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்! இவை தான் கொண்ட கருத்திலேயே பிடிவாதமாக நிற்பதாகும்.

  கருத்து உரிமை பற்றி பேசுபவருக்கு கருத்துஉரிமையின் செயல்பாடுகள் பற்றி பேசத் தெரியவில்லையென்றால் கூமுட்டைக்குள் இருந்து என்றாவது ஒரு நாள் உயிர் ஒன்று வரும் என எதிர்பார்ப்பதற்கு சமமானது. எல்லோரும் நிறைய கேள்விகளை வைத்துவிட்டார்கள். இதோ மணி என்பவர் விவாதிக்க விரும்புகிறாராம். உங்கள் விவாதத்தின் ‘மையப் பொருள்’ என்னவென்று கேட்கிறார். நீங்களும் ‘கருத்து உரிமை’ என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்தால்…. என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.

 156. மணி அவர்களே,

  // நண்பர் ஆர்வி…
  தங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
  நீங்கள் அமைக்கவுள்ள உலகம் எனக்கு உவப்பாக இல்லாத போது நான் எப்படி உங்களுடன் கைகோர்த்து போராட முன்வர முடியும் என்ற கேள்வியும்
  இருக்கின்ற ஜனநாயக முறைகளிலேயே நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற முடிவும்
  உஙகளது தீர்வில் ஆளப்படும் ம்ககளுக்கு ஜனநாயகம் இல்லை என்றும், ஏன் கம்யூனிச நாடுகள் தோற்றன அல்லது தமது நிலைமையிலிருந்து தவறின என்றும் விமர்சனமும்
  இன்று அனைத்து தரப்பையும் தெரிய முடிகினற்து நாளை உங்களது ஆட்சியியல் ஒற்றைத் தன்மை உடையதாக இருக்கும எனற விமர்சனமு இருக்கின்றது
  ….இதுதான் உங்களது வாதத்தின் மையப்பொருளா அல்லது வேறு பாயிண்ட உளள்தா தெரிவித்தால் விவாதிப்போம் //

  சிறு மாற்றங்கள்:
  இந்த லட்சிய ஆட்சியில் இன்று “நச்சு கருத்துகளை பரப்பும்” சு. சாமி பேசக் கூடாது, நாளை “பார்ப்பன” சோ புல் வெட்ட போக வேண்டும், என்றால் நேற்று ஒத்துயழையாமை இயக்கம் நடத்திய காந்தியின் கதி என்ன ஆகி இருக்கும்?

  ஆளப்படும் வர்க்கத்துக்கு இருக்கும் உரிமைகளும் பறிக்கப்படும் என்றால் அந்த உலகம் எப்படி ஆளப்படுபவருக்கு உவப்பாக இருக்க முடியும்?

  ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பேசலாமா கூடாத என்பதையும் ஆளும் வர்க்கமே கட்டுப்படுத்தும் என்றால் சர்வாதிகார துஷ்ப்ரயோகம் செய்வதை எப்படி கட்டுப்படுத்த முடியும்?

  மக்களின் விருப்பப்படி நடக்கிறோம் என்றால் அந்த மக்களின் விருப்பத்தை எப்படி தெரிந்து கொள்கிறீர்கள்? ப்ராக்டிகலாக பார்த்தால் ஆளும் வர்க்கத்தின் விருப்பம்தான் மக்களின் விருப்பம். This will be truer in the dream world of Vinavu. அப்படி என்றால் இன்றைய உலகத்துக்கும் உங்கள் லட்சிய உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?

  கம்யூனிச நாடுகளின் வரலாறு சொல்லும் பாடம் மக்களின் கருத்து, விருப்பம் ஆகியவற்றை ஆளும் வர்க்கம் ஒரு வேஷத்துக்காக கூட பொருட்படுத்தியதில்லை. வினவின் லட்சிய ஆட்சி மட்டும் எப்படி விதிவிலக்காக அமையும்?

  கருத்துரிமை அதிகமாக இருக்கும் நாடுகளில் அதிகார துஷ்ப்ரயோகம் மட்டுப்படுத்தப் படுகிறது என்பதும் வரலாறு. ஒரு பத்திரிகைக்காரர் நிக்சனை கீழே இறக்க முடிந்தது. மக்களை அலட்சியப்படுத்துவது ஒரு அளவுக்கு மீறினால் ஜனநாயகா நாடுகளில் ஆள்பவர் மாறுகிறார். ஸ்டாலினையும் மாவோவையும் யார் மாற்ற முடியும்?

  இன்று அனைத்து தரப்பையும் தெரிய முடிகினற்து நாளை உங்களது ஆட்சியியல் ஒற்றைத் தன்மை உடையதாக இருக்கும

 157. நணபர்களே
  கீழே காண்பது கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் திரு பத்ரி என்பரின் பதிவும். அதற்கு நான் இட்ட பின்னூட்டமும். அந்த பின்னூட்டம் ஆர்.விக்கும பொருந்தும்
  நன்றி
  ++++++++++++++++++++++++++
  சுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்

  கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது இந்தச் செயல். நீதிமன்றத்தில் புகுந்து வக்கீல்களே அடாவடியாக இதுபோன்ற ரகளைகளில் ஈடுபட்டுள்ளது குடியாட்சி முறை மீது நம்பிக்கையுள்ள அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல். இந்த ரவுடிச் செயலுக்கும் மங்களூரில் மதுவகங்களில் பெண்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

  ஆனால், இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர் கைகொட்டி இதனைக் கொண்டாடுவது அவர்களது முதிர்ச்சியின்மையையும் அவர்கள் பின்பற்றிவரும் பாதையின் அரைவேக்காட்டுத் தன்மையையும் மட்டுமே காட்டுகிறது.

  ஒருவருடைய கருத்துகள் ஏற்கமுடியாதவையாக இருந்தாலும், அதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு என்பதையும், வன்முறையைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அடுத்தவருக்குத் தீர்ப்பு வழங்க நமக்கு எந்தக் கட்டத்திலும் அதிகாரம் இல்லை என்பதையும் ஏற்காத கருத்துத் தீவிரவாதிகள், இடதாக இருந்தாலும் சரி, வலதாக இருந்தாலும் சரி, நம் நாட்டுக்கு மிகவும் கேடு செய்யக்கூடியவர்கள். இந்த ஒரு விஷயத்தில் ஸ்ரீராம சேனையும் வினவும் மதிமாறனும் ஒன்றுசேர்ந்து ஓரணியில் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
  +++++++++++++++++++++++++++++++++
  எனது மறுமொழி
  +++++++++++++++++++++++++++++++++
  பத்ரி உங்களிடம் சில கேள்விகள் +++++++++++++++++++++++++++++++ தீட்சிதர்களிடம் தமிழில் பாடும் உரிமைக்காக போராடிய 70 வயது கிழடான சிவனடியார் ஆறுமுகசாமியின் கருத்துரிமையை மதிக்காத தீட்சிதர்கள் அவரை உதைத்து கையை உடைத்து வெளியேற்றிவிட்டார்கள். அவர்கள் மேல் வழக்கு தொடுத்து அந்த வழக்குக்குக்காக நீதி மன்றத்தில் ஆஜரான சிவனடியார் தனியாக சிக்க பயந்து தனது ஆதரவாளர்களுடன் சென்றார். தீட்சிதர் தரப்பில் சு.சாமியும் வந்தார், தீட்சிதரை அடித்த சம்பவத்துகாக பழி தீர்க்கும் வகையில் அவர்களுடன் வந்த சு.சாமியை அடித்த்தில் என்ன தவறு. (இதோடு இலங்கை பிரச்சனையில் சு.சாமியின் தமிழர் விரோத போக்கு ஒரு கிளை கதை) வழக்குறைஞர்கள் அடிக்கலாமா என விவாதித்தால் அரசியல்வாதிக்கு தீட்சிதர்களுடன் என்ன வேலை என்பதையும் சேர்த்து விவாதிக்க வேண்டும். தீட்சிதருக்கு துணை அரசியல்வாதியென்றால் சிவனடியாருக்கு துணை வக்கீல்கள். நீதிபதி முன்னிலையில் நடந்த்து என்றால் அன்று போலிசு முன்னிலையில் தீட்சிதர் தாக்கப்பட்டார். அடிக்கு பதில் அடியா என்றால் கருத்துக்கு பதில் கருத்து எனும்போது அடிக்கு பதில் அடிதானே. +++++++++++++++++++++++++++++++
  இன்று வினவு மற்றும் மதிமாறன் சு.சாமியை அடித்த சம்பவத்தை கண்டித்து எழுதும் நீங்கள் ஏன் தீட்சிதர்களை கண்டித்து எழுதவில்லை சு.சாமியின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் ஆறுமுகசாமியின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. சு.சாமியை அடித்த்து உங்களுக்கு மங்களூரை நினைவு படுத்தும் அதே நேரத்தில் அவர் ஆதரவு பெற்ற தீட்சிதர்கள், ஆறுமுகசாமியின் கையை உடைத்த்து ஏன் நினைவுக்கு வரவில்லை ஏன் எழுதுவில்லை என கேட்பது தவறு என்றால் ஏன் எழுதுகிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் தவறாகிவிடும் +++++++++++++++++++++++++++++++
  ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நடந்த வழக்கு அதன் பிண்ணனி ஆகியவையை திட்டமிட்டு மறைத்து எழுதுவது கருத்து தீவிரவாதமில்லையா? +++++++++++++++++++++++++++++++
  வினவு மற்றும் மதிமாறன் பின்பற்றி வரும் பாதை அரை வேகாட்டுதனமானது என்றால் இந்த அரைவேக்காட்டு த்ததுவங்களாகிய மார்க்சிய, பெரியாரிய கருத்துக்களையும், அதன் தலைவர்களையும் புத்தகமாக நீங்கள் போட்டு பணம் சம்பாதிப்பது ஏன். அதை பிழைப்புவாதம் என நான் கருதுவது தவறா? தவறென்றால் விளக்கவும்
  +++++++++++++++++++++++++++++++
  உங்கள் பதிவையும் எனது கருத்தையும் நான் வினவு தளத்திலும் பின்னூட்டமாக வெளியிடுகிறேன். நன்றி
  http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_19.html

 158. ஆர்.வி,

  திறமையாக லாவனிக்கச்சேரி நடத்துகிறீர்கள் 🙂

  //உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் பதில் சொல்ல போகிறேன்// — > அப்படியெல்லாம் விடமுடியாது சாமீய்ய்… பொதுத் தளத்தில் விவாதம்னு வந்தா எல்லாரும் தான் கேள்வி கேட்பார்கள்.

  //ஆட்சியில் இந்த வேடமும் இருக்காது. நீங்கள் கை காட்டுபவருக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம். இதுதானே நீங்கள் கனவு காணும் லட்சிய உலகம்? தயவு செய்து இந்த புரிதல் சரியா இல்லையா என்று சொல்லுங்கள்.//

  வினவுவின் மறுமொழியில் கருத்து சுதந்திரம் என்பதே போலித்தனமான ஒரு வார்த்தை என்று நிறுவி விட்டே சோசலிச கட்டமைப்பில் அந்தச் சுதந்திரம் எந்த வர்க்கத்தாருக்கு இருக்கும். இப்போது யாருக்கு இருக்கிறது என்று சொன்னார்.

  நீங்கள் என்ன செய்தீர்கள்? – நேராக தற்போதைய கருத்து “சுதந்திரத்தின்” தன்மையை விடுத்து வினவு விளக்கிய எதிர்கால சமூகத்தில் இருக்கக்கூடிய கருத்து “சுதந்திரத்தின்” தன்மையை போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  நீங்கள் நேர்மையாக என்ன செய்திருக்க வேண்டும்?

  தற்போது கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் ( பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ) இருக்கிறது என்று நிறுவிய பின்னரே எதிர்காலத்துக்குத் தாவியிருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை.

  இப்போதும் ஒன்றும் மோசமில்லை – தற்காலச் சமூகத்தில் எல்லோருக்கும் எல்லா கருத்துக்களையும் சொல்லும் உரிமையை இப்போதைய ஆளும் வர்க்கம் விட்டு வைத்திருக்கிறது என்பதை முதலில் நிறுவுங்கள் – பிறகு எதிர்காலத்துக்குத் தாவலாம்.

  ”ஆமாமா ஏதோ கொஞ்சம் பிரச்சினை இருக்கு… ஆனா எல்லாம் மெதுவா மாறிடும்” என்று குன்ஸாக அடித்து விட வேண்டாம்… என்னைப் போன்ற Lay manகளுக்கும் புரியும் விதமாய்,

  1) இப்போது யாருக்கு கருத்து சுதந்திரம் இருக்கு?

  2) யாருக்கு கருத்து சுதந்திரம் இல்லை ?

  3) சுதந்திரம் அதிகமா இல்லாதவர்கள் அதிகமா?

  4) சுதந்திரம் இல்லாதவர்கள் அதைப் பெற இன்றுள்ள சமூக அமைப்பில் இருக்கும் ஏற்பாடு என்ன?

  5) அந்த ஏற்பாடு சரியாக வேலை செய்கிறதா?

  6) ஏன் பெரும்பாலானவர்க்கு சுதந்திரம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது? ஏன் சிலருக்கு மட்டும் அது அபரிமிதமாக இருக்கிறது?

  7) அப்படி சுதந்திரம் இல்லாத பிரிவினர் யார் யார்?

  இப்படி பிரித்துப் பிரித்து விளக்கமாக சொல்ல வேண்டும்…

  மொத்தத்தில் அம்பானிக்கும் டாடாவுக்கும் இருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அத்தனை சுதந்திரமும் தூக்கநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்த கூலிக்காரனான எனக்கும் கிடைக்கும் நாள் எப்போ வரும்? எப்படி வரும்? நானும் அவர்களும் சரி சமமாய் இந்த சமூகத்தில் நடத்தப் படும் நாள் எப்போது வரும் எப்படி வரும்? என்று விளக்கக் கடமைப்பட்டவராகிறீர்..

  மீண்டும் சொல்கிறேன்… குன்ஸாக அடித்து விட வேண்டாம்.

  //இன்றைய நிலை நல்ல நிலை இல்லைதான், மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நிகழ்கின்றன, பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைய நிலையை விட உங்கள் எதிர்கால லட்சிய உலகம் எந்த விதத்தில் சிறந்தது? குறை சொல்பவர்கள் எதிரிகள் ஆகிவிடுவார்கள். power corrupts, absolute power corrupts absolutely என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது//

  power corrupts.. absolute power corrupts absolutely… ம்ம்ம்ம் ஆமா இப்போ அந்த பவர் யாரிடம் இருக்கிறது? அவர்கள் யாரின் பிரதிநிதிகள்? ( மக்கள் பிரதிநிதிகள் என்று காமெடி கீமெடி பண்ணிடாதீங்க ) அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் தேறுவார்கள்?

  விளக்கம் ப்ளீஸ்..

 159. தமிழாச்சி,

  விட்டு விடலாம் என்று பார்த்தால்…

  1. நான் வினவு கருத்து எழுதக்கூடாது என்று எங்கே சொல்லி இருக்கிறேன்? ஒரு வாக்கியத்தை காண்பியுங்கள்.

  2. நீங்கள் 13:58 போது எழுதிய பதிலில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று நினைவிருக்கிறதா? உங்களுக்கு மறதி அதிகம், அதனால் நானே கட்/பேஸ்ட் செய்கிறேன்.
  // நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருங்கள். கருத்துச் சுதந்திரத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி நீங்கள் பேசாத வரையில் நான் கேட்ட கேள்வி சரியா தவறா என்ற வாதத்தை அடுத்து வைத்துக் கொள்வோம். //
  ஆனால் 15:42 போது இப்படி எழுதுகிறீர்கள்.
  // அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் சரியானவை அல்ல என்பதால் உங்களுடைய வாதங்களை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டேனே. //
  13:58 போது நீங்கள் கேட்டது சரியா தவறா என்ற வாதத்தை பிறகு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். 15:42 க்கு விளக்கம் சரி இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள். எங்கே? இதற்கு நடுவில் 14:32 மணிக்கு ஒரு பதில் எழுதி இருக்கிறீர்களே, அதிலா? அதிலிருந்து உங்கள் விளக்கத்தை ஏற்கவில்லை என்று பொருள் உள்ள ஒரு வாக்கியத்தை காண்பியுங்கள்.

 160. கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறீர்களே
  ஆர். வீ

  ஆதிக்கம் என்பது கருத்துச் சுதந்திரத்தை எப்படி முடக்கி வைத்திருக்கிறது என்பதற்கு ஆதாரமான கணக்கிடுகள் இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறேன். இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

  ***

  இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின்
  ஆதிக்கம் – ஆராய்ச்சி முடிவு! (2005)

  இந்திய ஊடகங்கள், இடவொதுக்கீட்டினை எதிர்த்து நடைபெறும் வெறியாட்டங்களை ஓங்கி ஒலித்தும், இடவொதுக்கீடு சார்பான நிகழ்வுகளைப் புறக்கணித்தும் வருவதை நாம் அறிவோம். இதன் காரணம் ஊடகங்களின் அதிகாரம் ‘உயர்’சாதியினரின் கைகளில் இருக்கின்றது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

  இந்த எளிய உண்மையை அறிந்திருந்தாலும் வம்படிக்காகவே புள்ளிவிபரம் கேட்கும் சில புள்ளிகளை நாம் எதிர்கொண்டே வருகிறோம். அவர்களுக்காக இந்தப் பதிவு. வழக்கம்போல இதிலும் அவர்கள் குறை கண்டுபிடிக்கக் கூடும்.
  டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் உயர்ந்த 10 இடங்களில் இருந்தபடி அந்தந்த நிறுவனங்களின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களின் மதம், சாதி, பால் உட்பட பல விபரங்கள் சேகரிக்கப்பட்டன.இந்நிறுவனங்களின் பட்டியல் கீழே. இவற்றில் 37 -நிறுவனங்களிலிருந்து விபரங்கள் கிடைத்தன.

  ***பத்திரிகைகள்:

  Hindustan Times, The Times of India, The Economic Times, The Hindu, The Indian Express, The Financial Express, India Today, Outlook, Outlook (Hindi), Dainik Hindustan, Navbharat Times, Jansatta, India Today (Hindi), Rashtriya Sahara, and Dainik Jagaran.

  ***தொலைக்காட்சிகள்:

  NDTV 24×7, NDTV Profit, NDTV India, Star News, CNBC, CNBC AWAZ, CNN-IBN, Sahara Samay, Times Now, S-1, Janmat, Aaj Tak, Headlines Today, DD News, Zee News, and IBN-7.

  ***இதர செய்தி நிறுவனங்கள்:

  PTI, PTI Bhasha, UNI, Univarta, ANI, and BBC Radio Hindi.

  கீழ்க்கண்ட மூன்றிலிருந்து விபரங்கள் கிடைக்கவில்லை:

  All India Radio, the Pioneer, and Tehelka.

  மொத்தம் 315- பேர்களைப் பற்றிய விபரங்கள் இதிலே சேகரிக்கப்பட்டன. இவை அந்தந்த நபரிடமிருந்து நேரிடையாகப் பெறப்படாமல் அலுவலக நண்பர்கள் மூலமாகவும், தகவலளிப்போர் மூலமாகவும் பெறப்பட்டிருப்பதால் இதில் சில பிழைகள் இருக்கலாம் என்று புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.

  சரி, புள்ளி விபரம் என்ன சொல்கின்றது:

  எந்த மதம்?

  *** இந்துக்கள் :

  இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 81%

  மொத்த நிறுவனங்களில் இந்துக்கள் 90%

  இந்தி அச்சுப் பத்திரிகைகளில் 97%

  இந்தி மின்னணு ஊடகங்களில் 90%

  ஆங்கில அச்சுப் பத்திரிகைகளில் 90%

  ஆங்கில மின்னணு ஊடகங்களில் 85%

  ***முஸ்லிம்கள்:

  இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 13%

  மொத்த நிறுவனங்களில் 3% மட்டுமே முஸ்லிம்கள்.

  இந்தி மின்னணு ஊடகங்களில் 6%

  இந்தி அச்சுப் பத்திரிகைகளில் 2%

  ஆங்கில மின்னணு ஊடகங்களில் 0%

  ஆங்கில அச்சுப் பத்திரிகைகளில் 3%

  ***கிறிஸ்தவர்கள்:

  மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 2%

  மொத்த நிறுவனங்களில் 13%

  இந்தி மின்னணு ஊடகங்களில் 1%

  இந்தி அச்சுப் பத்திரிகைகளில் 0%

  ஆங்கில மின்னணு ஊடகங்களில் 13%

  ஆங்கில அச்சுப் பத்திரிகைகளில் 4%

  ***சீக்கியர்கள்:

  மொத்த மக்கள் தொகையில் 2%

  சீக்கியர்கள் மொத்த நிறுவனங்களில் 1%

  இந்தி மின்னணு ஊடகங்களில் 0%

  இந்தி அச்சுப் பத்திரிகைகளில் 0%

  ஆங்கில மின்னணு ஊடகங்களில் 2%

  ஆங்கில அச்சுப் பத்திரிகைகளில் 0%

  எந்தச் சாதிகள்?

  உயர் சாதிகள் (பிராமணர்கள், கயஸ்தா, ராஜ்புத், வைசியர்கள், காத்ரி)

  இவர்கள் இந்தியாவில் 16%

  மொத்த ஊடகங்களில் இவர்கள் 86%

  பிராமணர்கள் (புமிகார், தியாகி உட்பட)

  பிராமணர்கள் மொத்த ஊடகங்களில் 46%

  இந்தி மின்னணு ஊடகங்களில் 49%

  இந்தி அச்சுப் பத்திரிகைகளில் 59%

  (ஒரு இந்திப் பத்திரிகையில் தலை 10 – இடங்களிலும் பிராமணர்களே இருக்கிறார்கள்)

  ஆங்கில மின்னணு ஊடகங்களில் 52%

  ஆங்கில அச்சுப் பத்திரிகைகளில் 44%

  *** பிற்படுத்தப்பட்டோர்:

  மொத்த மக்கள் தொகையில் 34%

  ஊடகங்களில் 4%

  அட்டவணைச் சாதியினர் (SC) மற்றும் தொல்குடியினர் (ST)

  மொத்த மக்கள் தொகையில் SC -16%, ST-8%

  எந்த ஊடகத்திலும் இவர்கள் இருவரும் முக்கிய பதவியில் இல்லை.

  ***இடைப்பட்ட சாதியினர் (அதாவது ஜாட், ரெட்டி, மரதா, படேல் ஆகியோர்)

  மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 8%

  ஊடகங்களில் இவர்கள் 3%

  ***ஆணா, பெண்ணா?

  மொத்தத்தில் வெறும் 17% இடங்களில்தான் பெண்கள் இருக்கிறார்கள்.

  இந்தி பத்திரிகைகளில் ஆண்கள் 86%,

  பெண்கள் 14% இந்தி மின்னணு ஊடகங்களில் ஆண்கள் 89%,

  பெண்கள் 11% ஆங்கில அச்சுப் பத்திரிகைகளில் ஆண்கள் 84%,

  பெண்கள் 16% ஆங்கில மின்னணு ஊடகங்களில் ஆண்கள் 68%,

  பெண்கள் 32%

  *** இந்த ஆய்வைச் செய்தவர்கள்:

  அனில் சமாரியா – பத்திரிகையாளர் (தன்னிச்சை)

  ஜிதேந்திர குமார் – தனியார் ஆராய்ச்சியாளர், Media Study Group

  யோகேந்திர யாதவ் – மேநிலை ஆய்வர், Centre for the Study of Developing Societies (CSDS).

  ***ஆய்வர்களின் முடிவு:

  இந்தியாவில் 8% உள்ள இந்து உயர்சாதி ஆண்களே 71% இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தியாவில் தேசிய அளவில் இயங்கும் செய்தி நிறுவனங்களில் சமூகப் பன்முகத் தன்மை இல்லை. அது நாட்டின் சமூக அளவைப் பிரதிபலிக்கவில்லை.”

  தற்போது நாம் கண்ட இடவொதுக்கீட்டுப் பிரச்சினை என்றில்லை, எல்லாச் சமூக நடப்புகளுமே இத்தகைய ‘உயர்’சாதியினரின் ஊடகத்தின் வழியே வடித்தெடுக்கப்பட்டுதான் நம்மை வந்தடைகின்றன. அவர்கள் எவ்விதமான செய்திகளை நீங்களும் நானும் அறிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்வோராய் இருக்கிறார்கள்.

 161. லவர்பாய்,

  // தற்போது கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் ( பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ) இருக்கிறது என்று நிறுவிய பின்னரே எதிர்காலத்துக்குத் தாவியிருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை.//
  நீங்கள் மாற்றத்தை வேண்டுகிறீர்கள். உங்கள் விருப்பப்படி மாறும் எதிர்காலம் இன்றைய நிலையை விட எந்த விதத்தில் சிறப்பானது என்று நீங்கள்தான் முதலில் சொல்ல வேண்டும். வினவு சொல்வதிலிருந்து இருக்கும் உரிமையும் போய்விடும் என்று தெரிகிறது. இப்ப சரியில்லை, அதனால் இன்னும் மோசமான நிலைக்கு போவோம் என்றால் என்ன சொல்வது?

  // மொத்தத்தில் அம்பானிக்கும் டாடாவுக்கும் இருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அத்தனை சுதந்திரமும் தூக்கநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்த கூலிக்காரனான எனக்கும் கிடைக்கும் நாள் எப்போ வரும்? எப்படி வரும்? //
  வினவின் ஆட்சியில் ஆளும் வினவுக்கும் உள்ள அத்தனை சுதந்திரமு ஆளப்படும் எனக்கும் எப்போ வரும்? எப்படி வரும்? இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வினவு ஒரு நாளும் வராது என்று சொல்லி இருக்கிறார். – அட் லீஸ்ட், அப்படித்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். நான் தவறாக புரிந்த கொண்டிருந்தால் அவர் மேலும் விளக்கலாம்.

  பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். நான் பதில் எழுதி களைத்துவிட்டேன். எனக்கு நீங்கள்தான் ஒரு உதவி செய்யுங்களேன். இன்றைய ஜனநாயக நாடு (அமேரிக்கா என்று வைத்துக் கொள்வோமே), ஒரு கம்யூனிச நாடு (சோவியத் ரஷியா என்று வைத்துக் கொள்வோமே), உங்கள்/வினவின் லட்சிய ஆட்சி ஆகியவற்றில் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் என்று எழுதுங்களேன்? நானே ஆரம்பித்து வைக்கிறேன்.

  // 1) இப்போது யாருக்கு கருத்து சுதந்திரம் இருக்கு? //
  அமேரிக்கா: பேச்சுரிமை சட்டத்தில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. First amendment is almost a sacred principle. பதவி, பணம் இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.
  சோவியத் ரஷியா: அதிகார வர்க்கத்துக்கு மட்டும்.
  வினவு: வினவு கை காட்டுபவர்களுக்கு

 162. ///விட்டு விடலாம் என்று பார்த்தால்…///

  ஏதோ பெரிய தியாகம் செய்வது போல் பேசுகிறீர்கள்? நீங்கள் எதையும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.

  ///1. நான் வினவு கருத்து எழுதக்கூடாது என்று எங்கே சொல்லி இருக்கிறேன்? ஒரு வாக்கியத்தை காண்பியுங்கள்.///

  ஐயோய்யோ ஐயோய்யா யாராவது
  ஆர்.வீ. க்கு விளங்க வைப்பார்களாக.

  ////2. நீங்கள் 13:58 போது எழுதிய பதிலில் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று நினைவிருக்கிறதா? உங்களுக்கு மறதி அதிகம், அதனால் நானே கட்/பேஸ்ட் செய்கிறேன்.
  // நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருங்கள். கருத்துச் சுதந்திரத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி நீங்கள் பேசாத வரையில் நான் கேட்ட கேள்வி சரியா தவறா என்ற வாதத்தை அடுத்து வைத்துக் கொள்வோம். //
  ஆனால் 15:42 போது இப்படி எழுதுகிறீர்கள்.
  // அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் சரியானவை அல்ல என்பதால் உங்களுடைய வாதங்களை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டேனே. //
  13:58 போது நீங்கள் கேட்டது சரியா தவறா என்ற வாதத்தை பிறகு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். 15:42 க்கு விளக்கம் சரி இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள். எங்கே? இதற்கு நடுவில் 14:32 மணிக்கு ஒரு பதில் எழுதி இருக்கிறீர்களே, அதிலா? அதிலிருந்து உங்கள் விளக்கத்தை ஏற்கவில்லை என்று பொருள் உள்ள ஒரு வாக்கியத்தை காண்பியுங்கள்.///

  தேவையான வரிகளை எடுத்து சொதப்பிக் கொண்டிருக்கிறீர்கள். இவை விவாதத்திற்கான அறிகுறி இல்லை. இப்படியே தொடர்ந்துக் கொண்டிருந்தால் கருத்து உரிமைக்கு அர்த்தம் கண்டுப்பிடிக்க முடியாது. கருத்து உரிமையின் செயல்பாடுகளை பற்றி சொல்லுங்கள்.

 163. தமிழாச்சி,

  சவால் விட்டிருக்கிறேன். முடிந்தால் சவாலை எதிர் கொள்ளுங்கள். இல்லை என்றால் தோல்வியை கண்ணியமாக ஒத்துக் கொள்ளுங்கள். வீணாக வார்த்தைகளை வளர்த்தாதீர்கள்.

 164. ///சவால் விட்டிருக்கிறேன். முடிந்தால் சவாலை எதிர் கொள்ளுங்கள். இல்லை என்றால் தோல்வியை கண்ணியமாக ஒத்துக் கொள்ளுங்கள். வீணாக வார்த்தைகளை வளர்த்தாதீர்கள்.///

  சவாலா எது சவால்?

  ரொம்ப கேவலமா இருக்கு அட்டைக்கத்தி வீரனின் சொல்லாடல்கள் போன்று….

 165. தோழர் வினவு அவர்களே

  ஆர்.வி. யின் பின்னூட்டங்கள் தொடங்கத்தில் எவ்வாறு வெளிவந்தன? அதை நீங்கள் எந்த முறையில் எதிர் கொள்ள முனைகிறீர்கள்? இது தேவையான பதிவு, இது தேவையில்லாதது என்று சொல்லும் கருத்துக்களும் கருத்துஉரிமையை முடக்க நினைக்கும் சிந்தனையைச் சார்ந்தது இல்லையா?

  தெளிவுபடுத்தவும்.

 166. தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்?

  நேற்றுவரை ஆர்வீ பேசியதெல்லாம் புரிந்தது, அவருகீட்ட பிடித்ததே தெளிவாகேள்விய புரிய வைக்கறதுதான் ஆனா இன்னைக்கு மதியத்துலர்ந்து ஆர் வீ எழுத்து ஒண்ணும் புரியலயே கேக்குற கேள்விக்கு முன்னாடி கொஞ்சமாவது பதில் சொல்லுவாறு
  இப்ப அவரு குழம்பி குழம்பிபோயிருக்காரா?

  இல்ல அவரு எழுதுனத பாத்து எனக்குதான் புரியலீயா

 167. kalagam, மேல் பெப்ரவரி 19th, 2009 இல் 12:36 சொன்னார்:
  ///ஓ நீங்களா,

  தர்மபுரியில ஊர் சொத்த தூக்கி கொடுத்து பேர் வாங்கினவரு தானே,போயி யாராவது கிழவிய ஏமாத்தி நெல்லிக்கா வாங்கி தின்னுங்க, சரியா?

  இங்கே என்னா பேசறீங்கன்னு தான் புரியல////

  இப்படி தனிமனித தாக்குதல் செய்யும் உங்களுக்கு, சில அடிப்படை விசியங்கள் / பொருளாதார உண்மைகள் புரியாதுதான்.

 168. நண்பரே.. நான் வரையறுத்த உங்களது பார்வை சரிதான். அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

  மாற்றங்களாக தாங்கள் குறிப்பிட்டவற்றுக்கு பதில் இதோ

  1. நேற்று போராட்டம் நடத்தியது போல பாசாங்கு செய்த என்ஜி ஓ க்களின் தந்தையான காந்திக்கு சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லுகின்றது என்பதை புரிந்து கொண்டு அதற்கு எதிராக பேசாமல் இருக்க வகுப்பு எடுக்கலாம். பிர்லா மந்திர் ல் உட்கார்ந்து கொண்டு இந்திய மேல்சாதி மக்களின் நன்மதிப்பைப் பெற விழையுமாறு தலித்களுகுகு கூற