Wednesday, February 28, 2024
முகப்புஉலகம்ஈழம்வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!

-

நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் தலைப்பு ‘சத்யமேவ ஜெயதே’.

தமிழ் உணர்வு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகிய கருத்துகளை எதிர்ப்பதும், சுப்பிரமணியசாமி போன்ற ‘ஜனநாயகவாதிகளை’ ஆதரிப்பதும்தான் வழக்குரைஞர் விஜயனின் கொள்கை. தனது கொள்கையை நிலைநாட்டுவதற்காகவும், சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் போலீசு ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகவும் அவர் வரலாற்றைப் புரட்டுகிறார். மிகவும் தரம் தாழ்ந்த முறையில் கண் முன்னால் நடந்த உண்மைகளையும் திரிக்கிறார்.

தமிழ் உணர்வின் வரலாறு குறித்த அவரது பார்வை துக்ளக் பார்வை. அதற்கு இப்போது நாம் பதில் சொல்லவில்லை. நிகழ்காலம் குறித்து அவர் கூறுவனவற்றில் சத்தியம் உள்ளதா என்பதை மட்டும் பார்ப்போம்.

“17ம் தேதியன்று சு.சாமி மீது முட்டையை வீசியது மட்டுமின்றி, சுமார் 20 வழக்குரைஞர்கள் அவரை சாதிப்பெயர் சொல்லிக் கீழ்த்தரமாகத் திட்டினார்கள். அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சி தொடங்கியவுடன், சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் கொடுத்தார்கள்” என்கிறார் விஜயன்.

17ம் தேதியன்று ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்தது. சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்திருந்த மேல் முறையீட்டு மனு, அனுமதிக்காக (admission)  அன்று விசாரணைக்கு வந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை அனுமதிப்பதா என்பதையே உயர்நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் அரசும், சிவனடியார் ஆறுமுகசாமியும். party in person  ஆக வந்திருந்த 80 வயதான எதிர்மனுதாரர் ஆறுமுகசாமி, நீதிமன்ற அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தம்மையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி implead செய்த ஒரு வைணவப் பெரியவரும் இன்னொரு மூலையில் நின்று கொண்டுதானிருந்தார். வழக்கம் போல பல வழக்குரைஞர்களும் நின்று கொண்டுதானிருந்தார்கள்.

இந்நிலையில், அரசுக்கு எதிராகத் தன்னையும் அந்த வழக்கில் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார் சு.சாமி. மூத்த வழக்குரைஞர்கள் அமரும் நாற்காலியில் அவருக்கே உரிய முறையில் தெனாவெட்டாக உட்காரவும் செய்தார். நீதிமன்றம் துவங்கியவுடனே, அன்றைய பட்டியலில் 54ஆவது இடத்தில் இருந்த தீட்சிதர் வழக்கை முதலில் விசாரிக்கவேண்டும் என்று கோரினார் சாமி.

“வக்கீல்களையும் தண்டிக்கவேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறாரே விஜயன், சுப்பிரமணியசாமி மட்டும் கொஞ்சம் அதிகமாக சமமா? வக்கீல் அல்லாத வேறு யாராவது ஒரு குப்பனோ சுப்பனோ வக்கீல்களுக்கான நாற்காலியில் அமர்ந்து காலாட்ட முடியுமா? அல்லது admit ஆகாத ஒரு மேல்முறையீட்டில், சம்மந்தமில்லாத யாரோ ஒரு நபர் தன்னையும் implead செய்யவேண்டும் என்று மனுப் போட்டு, கோர்ட் தொடங்கியவுடனே “என் வழக்கை எடு” என்று கேட்பதை நீதிமன்றம்தான் அனுமதித்திருக்குமா?

சு.சாமிக்கு வழங்கப்பட்ட இந்த ஸ்பெசல் சலுகைகளுக்கு காரணம் என்ன?

இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூசை நடத்த பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை மாலை சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்தார் சு.சாமி. அன்று சுமார் ஒரு மணி நேரம் சிற்றம்பல மேடை சுப்பிரமணியசாமி மேடையானது. பக்தர்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை.

நடராசன் கோயிலிலும், நீதியின் கோயிலிலும் சு.சாமிக்கு சட்டவிரோதமாகவும், மரபுகளுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்ட இந்த சிறப்பு மரியாதைகளுக்குக் காரணம் அவரது சாதியா, அல்லது அவரது அரசியல் தரகுத் தொழிலா அல்லது அம்மாவின் உருட்டுக் கட்டையாக அண்மையில் அவர் எடுத்திருக்கும் அவதாரமா? உருட்டுக் கட்டை உணர்த்திய சத்தியம் நம்மைவிட விஜயனுக்குத்தானே அதிகமாகத் தெரியும்!

முட்டை எறிந்த 20 வழக்குரைஞர்கள் யார் என்ற விவரம் விஜயனுக்குத் தெரிந்திருக்கிறது. சி.பி.ஐ விசாரணை, பெஞ்சு விசாரணையெல்லாம் தொடங்குவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் பட்டியலைக் கையில் வைத்திருக்கிறார் விஜயன். ஆனால் அன்று அங்கே அமர்ந்திருந்த நீதிபதிகளுக்கு அது தெரியவில்லையே! அவர்கள் விசாரணைக்கு அல்லவா உத்தரவிட்டிருக்கிறார்கள். விஜயன் கூறும் சட்டத்தின் ஆட்சியில் விசாரணையே இல்லாமல் தண்டித்துவிடவேண்டும் போலும்!

சுப்பிரமணியசாமிக்கு எதிரான வன்கொடுமைப் புகாரும் பொய்ப்புகார் தானாம். அதுவும் விஜயனுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஏனென்றால், “தன் மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் பெயரோ அல்லது சாதியோ சு.சாமிக்குக் கண்டிப்பாகத் தெரியாது” என்கிறார் விஜயன். அந்த அரிச்சந்திரனுக்கு இந்த விஜயன் வக்காலத்து! பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தனக்குத் தெரியாத, ஆதாரமில்லாத எதையும் எந்தக் காலத்திலும் பேசாதவரல்லவா சு.சாமி! ” என்னைக் கொலை செய்வதற்கு புலிகளுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஜெயல்லிதா” என்று 1992 வில் குற்றம் சாட்டினார் சு.சாமி. உடனே சு.சாமிக்கு எதிராக ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

‘புனிதமான’ உயர்நீதி மன்ற அறைக்கு வெளியே அம்மாவின் மகளிரணியினர் அம்மண டான்ஸ் நடத்தியதும் ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயன்றதும் அப்போதுதான். வெளியே ‘டான்ஸ்’ ஆடுவதைக் காட்டிலும் ‘உள்ளே’ முழக்கமிடுவதுதான் பெரிய நீதிமன்ற அவமதிப்பு போலும்! நீதிமன்ற அறைக்கு வெளியே அன்று வீசப்பட்ட அரிவாளைக் காட்டிலும், இன்று உள்ளே வீசப்பட்ட முட்டைதான் அதிபயங்கரமான ஆயுதம் போலூம்! அன்று டான்ஸ் ஆடியவர்களோ, அவர்களை ஆடவைத்தவர்களோ இன்றுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. அந்தப் பிரச்சினையை ஃபுல் பெஞ்சோ ஆஃப் பெஞ்சோ விசாரிக்கவும் இல்லை.

இதே சுப்பிரமணியசாமிக்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்கிறது என்று பிரமாண வாக்குமூலம் கொடுத்தார் ஜனதா கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி. அதனை ஆதரித்து அதே ஜெயின் கமிசனில் வாக்குமூலம் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இன்று அதே சாமியும், அதே மாமியும் சேர்ந்துகொண்டு முட்டையின் கவிச்சு வாடை நீதிமன்றத்தின் புனிதத்தைக் கெடுத்து விட்டதாகக் கூக்குரலிடுகிறார்கள். இந்த “356 ஆர்க்கெஸ்டிரா”வில் சம்மந்தமில்லாதவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்ளும் விஜயன் “சட்டத்தின் ஆட்சி” என்று சுருதி மாறாமல் ஒத்து ஊதுகிறார்.

சுப்பிரமணியசாமியின் மீது வழக்குப் பதிவு செய்ய வற்புறுத்தித் தொடங்கிய விஷயம் வன்முறையைத் தூண்டிவிட்டதாம்! ஒரு வாதத்துக்காக அது பொய்ப் புகார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் புகார் பொய்யானது என்று அன்றைக்கு நீதிமன்றத்திலேயே இல்லாத விஜயனுக்குத் தெரிந்திருப்பதைப் போலவே, அன்று வெளியில் தள்ளி கதவு சாத்தப்பட்ட போலீசுக்கும் அது பொய்ப்புகார் என்பது தெரிந்திருக்கிறது. என்ன ஆச்சரியம்?

அய்யா, அது பொய்ப்புகாராகவே இருக்கட்டும். அந்தப் புகாரைப் பதிவு செய்து கொண்டு, விசாரணை நடத்தி, அது பொய்ப்புகார் என்று முடிவு செய்யும் உரிமை போலீசுக்கு இருக்கிறதே! ஒரு வேளை போலீசே புகாரைப் பதிவு செய்துவிட்டாலும், அதனை சட்டப்படி எதிர்கொண்டு முறியடிக்கும் உரிமையும் சு.சாமிக்கு இருக்கிறதே! அப்படியிருக்கும்போது, ‘வழக்கைப் பதிவு செய்ய வற்புறுத்தினால்’ அதன் காரணமாகவே எப்படி வன்முறை வெடிக்கும்?

தனக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யுமாறு ஒருவரை வற்புறுத்தினால் அவ்வாறு வற்புறுத்தப்படுபவருக்குத்தான் கோபம் வரும். வற்புறுத்தப் படுபவர்கள் சட்டத்தின் காவலர்கள் அல்லவா? போலீசாவது, பொய்வழக்குப் போடுவதாவது? அந்தப் பொய்ப்புகாரைக் கண்டு விஜயனைப் போலவே சத்திய ஆவேசத்தில் துடித்து, பின்னர் வெடித்து விட்டார்கள் போலிருக்கிறது!

விஜயனின் வாதப்படி வன்முறையைத் தொடங்கியவர்கள் போலீசுதான் என்ற முடிவுக்கே யாரும் வரமுடியும். எழுதுவது பொய், அதற்கு சத்யமேவ ஜெயதே என்று தலைப்பு போட்டு விட்டால் எல்லோரும் நம்பிவிட வேண்டுமா?

முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாகத் தான் சந்தேகிக்கும் வழக்குரைஞர்களுடைய வீடுகளுக்கு இரவு நேரத்தில் சென்று, வழக்கம்போல அவர்களது குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறது போலீசு. எனினும் ஒருவரை மட்டுமே கைது செய்ய முடிந்திருக்கிறது. மற்றவர்களை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் வைத்தே கைது செய்வது என்பதே போலீசின் திட்டம். அவ்வாறு கைது செய்யும்போது மற்ற வழக்குரைஞர்கள் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தால், அதனைக் கையாள்வதற்குத் தேவையான அதிரடிப்படை முதல் ஐந்தாம்படை வரை அனைத்தையும் போலீசு தயார் நிலையில் வைத்திருந்தது. இது போலீசால் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட தாக்குதல்.

இப்படி ஒரு தாக்குதல் தொடுப்பதற்குப் பொருத்தமான சூழ்நிலைக்காக மட்டும்தான் அவர்கள் காத்திருந்தார்கள். ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள் என்பது மட்டும் போலீசின் கோபத்துக்குக் காரணம் அல்ல. வழக்குரைஞர்கள் என்ற பிரிவினருக்கு எதிராக போலீசு துறையைச் சேரந்த உயரதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை வன்மம் வைத்திருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. குறிப்பிட்ட போலீசு அதிகாரிகளுக்கு விசேட காரணங்களும் இருக்கலாம். முட்டை வீச்சு சம்பவம், அதைத் தொடர்ந்து சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா கூட்டணியால் எழுப்பப்பட்ட “356 கோரிக்கை”, ஊடகங்கள் அரசுக்கு எதிராகப் போட்ட கூச்சல், இவையனைத்தையும் கண்டு திமுக அரசு பீதியடைந்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் “எதை வேண்டுமானாலும் செய், ரிசல்ட்டு காட்டு” என்று அரசாங்கம் போலீசுக்கு வழங்கியிருக்கக் கூடிய அனுமதியைத் தனது கொலைவெறியாட்டத்துக்கான லைசன்சாக மாற்றிக் கொண்டுவிட்டது போலீசு.

வழக்குரைஞர்களின் மண்டையை உடைத்தது, எலும்பு நொறுங்கும் வகையில் அடித்தது, சேம்பர்களில் புகுந்து அடித்தது, நீதிமன்ற அலுவலக ஊழியர்களையெல்லாம் அடித்து நொறுக்கியது, நீதிமன்ற அறைகளையும், வழக்குரைஞர்களின் வாகனங்களையும் நொறுக்கியது.. இவையனைத்தும் காட்டுவது என்ன? நீதித்துறை என்ற நிறுவனத்துக்கு எதிராக போலீசு துறையின் மனதில் கொழுந்துவிட்டு எரியும் வெறிதான் அது. 20 பேரைக் கைது செய்ய வேண்டும் என்பது ஒரு முகாந்திரம் மட்டும்தான். அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் தெரிவிக்க விரும்பிய செய்தி. அதனால்தான் நீதிபதிகளைத் தாக்குவதற்குக் கூட அவர்கள் தயங்கவில்லை.

17ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் போலீசின் இந்தக் கொலைவெறியாட்டத்தை லைவ் ஆக ஒளிபரப்பிய சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சி, இது குறித்து தொலைபேசியின் மூலம் சுப்பிரமணிய சாமியிடம் கருத்து கேட்டது. “சட்டத்தை நிலைநிறுத்த இந்த தடியடி அவசியம்தான்” என்றார் சாமி. “அதற்காக உயர்நீதி மன்றத்திற்கு உள்ளேயே தடியடி நடத்தலாமா? என்று நிருபர் கேட்டதற்கு “அதிலென்ன தவறு, சட்டத்தை போலீசு எந்த இடத்திலும் நிலைநாட்டலாம்” என்று பதிலளித்தார் சாமி. “என்ன இருந்தாலும் அவர்கள் வழக்குரைஞர்கள் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார் நிருபர். “இவர்களெல்லாம் வழக்குரைஞர்களே அல்ல, மாமாப்பயல்கள் (Touts). வழக்குரைஞர் சமூகத்தையே இவர்கள் பிளாக்மெயில் செய்கிறார்கள்” என்று திமிராகப் பதில் சொன்னார் சாமி.

மாமாப்பயல்கள் என்ற சொல்லைக் கொஞ்சம் மாற்றி, “தொழில் இல்லாத வழக்குரைஞர்கள்” என்று போராடுபவர்களை நக்கல் செய்கிறார் விஜயன். “திறமையில்லாதவர்கள், சட்டம் தெரியாதவர்கள், வக்கீல் தொழிலின் கவுரவத்தைக் கெடுப்பவர்கள்” என்று வெவ்வேறு சொற்களில் இவர்கள் சொல்ல விரும்பும் கருத்து என்னவோ ஒன்றுதான். “கோட்டா பேர்வழிகள்” என்பதுதான் அது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குப் போட்டவரல்லவா விஜயன்? அன்று இவர் உருட்டுக் கட்டை அடி வாங்கியபோது ‘நீதிமன்றப் புறக்கணிப்பு’ செய்தார்களே வழக்குரைஞர்கள், அவர்களெல்லாம் தொழில் உள்ள வழக்குரைஞர்களா அல்லது இல்லாத வழக்குரைஞர்களா என்பதை விஜயன் விசாரித்தாரா?

பிப் 19-ஆம் தேதி நடந்த வன்முறையின் சாபக்கேடு என்னவென்றால், சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கு சம்பந்தமாக வன்முறை செய்த வழக்குரைஞர்களோ அல்லது அதைத் தூண்டிய தலைவர்களோ அடிவாங்கவில்லை… இந்த சம்பவத்துக்காக போலீசு மீது மட்டுமல்லாது மற்ற காரணகர்த்தாக்கள் மீதும் நாம் கோபம் கொள்ள வேண்டும்” என்கிறார் விஜயன்.

அதாவது, “நீ ஏன் சு.சாமியை முட்டையால் அடித்தாய், உன்னால்தான் நான் தடியடி வாங்க நேர்ந்தது” என்று போலீசிடம் அடிபட்ட வழக்குரைஞர்கள், சு.சாமி மீது முட்டை எறிந்தவர்களுடன் சண்டைக்குப் போகவேண்டும் என்கிறார் விஜயன்.

அப்படியா, சு.சாமி முட்டையடி பட்டால், நீதிபதிகளும் கூட கட்டையடி படவேண்டுமா? எந்தச் சட்டம் அப்படிக் கூறுகிறது?

கொலைக்குற்றவாளி சங்கராச்சாரியைக் கைது செய்தபோது, அவரைப் பாதுகாப்பதற்கு ‘தொழில் உள்ள’ வழக்குரைஞர்களும் ஆடிட்டர்களும் மருத்துவர்களும் அணிவகுத்து நின்றார்களே, அவர்களைக் கலைப்பதற்கு ‘லேசான’ தடியடி கூட நடத்தப்படவில்லையே. கொலைக்குற்றத்தை விடக் கொடியதா, முட்டை வீசிய குற்றம்? விஜயன் விரும்பும் ‘சட்டத்தின் ஆட்சியில்’ மனுமருமச் சட்டத்தின் நாற்றமடிக்கிறதே!

முட்டை வீச்சு நடந்தது உண்மைதான். வீசியவர்களை யாரென்று கண்டுபிடிக்கத்தான் விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையே சரியா தவறா, நீதிபதிகள் நீதிமன்றத்தில் பதிவு செய்த விவரங்கள் சரியா தவறா என்பன போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீசே அந்த 20 பேர் யார் என்பதை இன்னும் வெளியிடவில்லை. எனினும் “முட்டை வீச்சு தொடர்பாக இன்னின்ன வழக்குரைஞர்களை விசாரிக்க வேண்டும்” என்று போலீசார் நீதிமன்றத்தையே அணுகியிருக்கலாம். பார் கவுன்சிலை அணுகியிருக்கலாம். சம்மந்தப்பட்ட வழ்க்குரைஞர்களுக்கே சம்மன் அனுப்பி அழைத்திருக்கலாம். நள்ளிரவில் அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதற்கும், உயர்நீதிமன்ற வளாகத்திலேயே வளைத்துப் பிடிப்பதற்கும் அவர்கள் முகவரி இல்லாத கேடிகளா? மேற்கூறிய வகையிலான சட்டபூர்வமான வழிமுறைகளைப் போலீசு பின்பற்றியிருந்தால், இந்த மோதலுக்கே இடமில்லையே. சட்ட அறிவு இல்லாத ஒரு பாமரனுக்குக் கூட புரியக்கூடிய இந்த உண்மை மூத்த வழக்குரைஞர் விஜயனுக்குப் புரியாமல் போனது ஏன்?

ஏனென்றால் ‘சக சுப்பிரமணியசாமி’ மீது முட்டை வழிந்ததற்கே பதறித் துடிக்கும் விஜயனின் இதயம், ‘சக வழக்குரைஞர்களின்’ முகம் முழுவதும் ரத்தம் வழிவதைக் கண்டபிறகும் துடிக்காதது ஏன்?

உள்ளே சு.சாமியை அடித்தால் கருத்துரிமைக்கு ஆபத்து! சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து!! வாசலில் வைத்து வழக்குரைஞர்களை அடித்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதலா? அதென்ன, நீதிமன்ற அறை மட்டும்தான் புனிதமானதா? அதன் தாழ்வாரங்கள் சாக்கடைகளா? இது எந்த ஊர் நியாயம்?

“சாமியையே அடித்துவிட்டார்கள்” என்பதுதான் இவர்களது குமுறல். அதை மறைத்துக் கொள்ளத்தான “உள்ளேயே அடித்துவிட்டார்கள்” என்று கண்ணீர் விடுகிறார்கள். “நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டதனால் நீதியின் புனிதம் கெட்டுவிட்டதாக” இவர்கள் யாரும் அலறவில்லை. ஏனென்றால், மண்டை உடைக்கப்பட்டவர்களெல்லாம் சு.சாமி அளவுக்குப் புனிதமானவர்கள் அல்லவே!

விஜயன் முதலானோரின் பார்வையில் சிலருடைய உரிமைகள் புனிதமானவை. வேறு சிலரின் உரிமைகள் அவ்வளவாகப் புனிதமற்றவை. தடியடிக்கு ஆளான வழக்குரைஞர்களின் உரிமை மட்டுமல்ல, குண்டு வீச்சுக்கு ஆளாகும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளும் கூட அவரைப் பொருத்தவரை புனிதமற்றவைதான்.

ஈழத்துக்கு எதிரான ‘கருத்தைக் கொண்டிருப்பவர்’ என்ற காரணத்துக்காக சு.சாமி மீது முட்டை வீசியவர்களை பாசிஸ்டுகள் என்கிறார் விஜயன். “வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம்” என்பது கூட ஈழத்தமிழ் மக்களின் கருத்துதான். அந்தக் ‘கருத்தின் மீதுதான்’ குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது சிங்கள இராணுவம்.

தனக்கு நேரடியாகத் தொடர்பில்லாத வழக்காக இருந்தாலும் அதில் தலையிடும் புனிதமான உரிமையை அரசியல் சட்டம் சு.சாமிக்கு வழங்குகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் தங்களுக்கு நேரடியாகத் தொடர்புள்ள, தாங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணில் தாங்கள் விரும்பும வகையிலான ஒரு அரசை அமைத்துக் கொள்ளும் ‘புனிதமான’ உரிமையை சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கிறதே, என்ன செய்யலாம்?

“வழக்கறிஞர்களுக்கு சர்வதேசச் சட்டம் தெரியும். இந்திய அரசின் இறையாண்மை, தலையீட்டின் முன் விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் தெரியும். இவை அனைத்தும் தெரிந்தும்.. நீதிமன்றப் புறக்கணிப்பும், அது தொடர்பாய் வன்முறையும் அதன் தொடர் விளைவாய்ப் போலீசு வன்முறையும் நேர்ந்ததற்கு வழக்குரைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் விஜயன்.

தெரிந்த்தனால்தான் வழக்குரைஞர்களை இந்தப் போராட்டத்தில் முன் நிற்கிறார்கள். 80 களில் ஈழப் போராளிக்குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்ததும், பின்னர் இலங்கையின் இறையாண்மையை மீறி ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைத் திணித்ததும், இந்தியப் படையை அனுப்பியதும், அது தோல்வியுற்றதால், சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்வதுடன், இன்றைய போரை சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்று வழிகாட்டி இயக்குவதும் வழக்குரைஞர்களுக்குத் தெரியும். “இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது” என இன்றைக்கு  கற்புநெறி பேசும் மத்திய அரசின் கயமைகள் அனைத்தும் வழக்குரைஞர்களுக்குத் தெரியும். அதனால்தான் வழக்குரைஞர்கள் போராடுகிறார்கள்.

போராடும் வழக்குரைஞர்கள் யாரும் இலங்கையில் தலையிடச் சொல்லவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் தற்போது இந்திய அரசு தலையிட்டுக் கொண்டிருக்கிறதே, அந்தத் தலையீட்டை நிறுத்தத்தான் சொல்கிறார்கள். “இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்று” என்று யாரும் கேட்கவில்லை. “ஒரு இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த குரல் கொடு” என்றுதான் இந்திய அரசைக் கோருகிறார்கள்.

ஈழத்தில் நடப்பது இரு தரப்பினருக்கு இடையிலான போர் அல்ல. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை சிங்கள இனவெறி அரசு நடத்தும் படுகொலை.

19 ஆம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் நடந்ததும் வக்கீல்-போலீசு மோதல் அல்ல. வழக்குரைஞர்களுக்கு எதிராக போலீசு நடத்திய கொலைவெறித் தாக்குதல்.

சிதம்பரத்தில் நடந்ததும் தீட்சிதர் – சிவனடியார் மோதல் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகத் தீட்சிதர்கள் தொடுத்துவரும் பார்ப்பனியத் தாக்குதல்.

கம்யூனிஸ்டுகளான ம.க.இ.க வினர் போன்ற வெளியாட்கள் ஆத்திகர் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறார்கள் தீட்சிதர்கள். ஆனால் ‘ஹார்வர்டு சு.சாமி’ தில்லைவாழ் அந்தணர் சார்பாக வழக்கில் தலையிடுகிறார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சினையை பிரபாகரன் பார்த்துக் கொள்வார். அதில் நாம் தலையிட அவசியமில்லை” என்கிறார் விஜயன். ஆனால் சுப்பிரமணிய சாமி பிரச்சினையில் விஜயன் தலையிடுகிறாரே – அது எப்படி?

அது அப்படித்தான். எப்படியென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இருந்தாலும் சில விஜயன், சு.சாமி மாதிரி சில பேர் மட்டும் கொஞ்சம் அதிகமாகச் சமம்.

தனது கட்டுரைக்கு பொருத்தமாகத்தான் தலைப்பிட்டிருக்கிறார் விஜயன் – சத்யமேவ ஜெயதே…! ராமலிங்க ராஜு வழங்கும் ‘சத்யம்’ மாதிரி இது விஜயன் வழங்கும் சத்யம் போலும்!

தோழர் மருதையன்

பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

 1. Hi

  உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

 2. வணக்கம்,

  கீழுள்ள சிறப்புக் கட்டுரை, பிப்ரவரி 19ன் நிகழ்வால் தோன்றிய மூத்த வழக்கறிஞர்
  – திரு.கே.எம். விஜயன் அவர்களின் எண்ணங்கள். எதிர்மாறானக் கருத்துக்கள்
  இருப்பினும், சிந்திக்கத் தூண்டும் வெளிப்பாடுகள்!

  தமிழன்பகலா,
  கண்ணன் நடராசன்

  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடந்த வழக்கறிஞர்கள்,
  காவல்துறையினர் மோதலை ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக நிகழ்வாகப்
  பதிவு செய்வதே, இதுபோன்ற பிரச்னைகள் பின்னாளில் தோன்றாமல் இருக்க வழிவகுக்கும்.

  இந்தப் பிரச்னையின் ஆரம்பம் “தமிழ் இன மான உணர்வே” ஆகும். அதனடிப்படையில்,
  இலங்கைத் தமிழர்பால் யார் அதிகம் உணர்வு கொண்டுள்ளனர் என்பதை அரசியல்
  ஆதாயமாக்க;

  – இராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் ஒருபுறமும்
  – தமிழினத் தலைவர், பாதுகாவலர் என்கிற தனது சுயபிரகடனத்தைக் காப்பாற்றிக்
  கொள்ள முயலும் முதல்வர் கருணாநிதி மறுபுறமும்

  நடத்தும் நிழல் யுத்தங்கள்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்.

  பிரிட்டிஷ் அரசு நம்மை ஆளும் வரை மொழிவாரி மாநிலங்கள் இல்லை. எனவே, மொழியோ
  அல்லது தமிழின மான உணர்வோ அரசியலில் ஒரு பகுதியாக இருப்பதற்கான சாத்தியமும்,
  தேவையும் இருக்கவில்லை. 1935க்குப் பிறகு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தேசம்
  முழுவதும் ஒரே கட்சியாக இருந்ததால், வெள்ளையருக்கு எதிராக தேசியவாதமே அரசியலின்
  கூறாக இருந்தது; இனமான உணர்வு இல்லை. 1950ம் ஆண்டு அரசியல் சட்டம் வந்து,
  இந்தியக் கூட்டாட்சியில் மொழிவாரி மாநிலமாகத் தமிழகம் மாறியவுடன், திராவிட
  முன்னேற்றக் கழகம், “தமிழ் மொழி” உணர்வைத் தூண்டியதால் ஆட்சியைப் பிடித்தது.

  அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ்காரர்களும் தமிழர்கள்தான். தமிழ்
  உணர்வில் அவர்கள் எந்த வகையிலும் கழகத்தினருக்குப் பின்தங்கியவர்கள் அல்ல.
  ஆயினும், தமிழ் உணர்வின் ஒட்டுமொத்த காவலர்களாய் தங்களை மட்டுமே முன்னிறுத்தி,
  தமிழின உணர்வை அரசியலாக்கி அதில் தி.மு.க.வினர் அனுகூலம் அடைந்தார்கள். இதர
  கட்சியினர் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட்) தமிழினக் காவலர்கள் அல்ல என்ற பிரமையை
  ஏற்படுத்தி 1967லிருந்து 40 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க தமிழின
  உணர்வை அரசியல் ஆக்கியுள்ளனர் இந்த திராவிடக் கட்சியினர்.

  1990க்குப் பின்னால், கருணாநிதி மட்டுமல்ல நாங்களும் தமிழ் உணர்வில்
  சளைத்தவர்கள் அல்ல என்று இராமதாஸ், திருமாவளவன் போன்றோரும் தமிழ் உணர்வைத்
  தூக்கிப் பிடித்தனர். தாங்கள்தான் உண்மையான தமிழினப் பாதுகாவலர்கள் என்றும்
  தமிழின அரசியலை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கருணாநிதியை விடத் தாங்கள்
  மேலான தமிழினக் காவலர்கள் என்று காட்டிக் கொள்ள அரசியலையும், சமூகத்தையும்
  அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழகத்தின் அரசியல் மற்றும்
  சமூகச் சீர்கேட்டின் ஒரு முன்னுரை.

  இலங்கைப் பிரச்னையை எடுத்துக் கொண்டால், இலங்கையில் முதலில் சிங்களர்களின்
  அரசியல் எதேச்சாதிகாரத்தை எதிர்த்த பல தமிழ் குழுக்கள் 1980களுக்குப் பின்னால்
  ஒவ்வொன்றாக மறைந்து, இன்று இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் சர்வ அதிகார குழு
  பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மட்டுமே என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.
  இதர குழுக்களை பிரபாகரனே அழித்துவிட்டார்.

  1990களில் இந்திய அமைதிகாப்புப்படை இராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்
  அடிப்படையில் இலங்கைக்கு சென்றது. தமிழர்களுக்கு ஒரு மாநில அந்தஸ்து அளிக்கும்
  ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல், அன்று பிரேமதாஸாவுடன் கைகோர்த்து இலங்கைத்
  தமிழர் பிரபாகரன், “நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள், இந்திய ஏகாதிபத்தியம்
  இங்கு தலையிட முடியாது”,என்று கூக்குரலிட்டு, இந்தியத் தமிழர்களின்
  வேண்டுகோளுக்கிணங்க, தலையிட்ட இந்தியாவை அவமானப்படுத்தித் திரும்பச் செய்த
  சரித்திரத்தைத், தமிழினத் தலைவர்கள் சௌகரியமாய் மறந்து விட்டார்கள்.

  தற்போது பிரபாகரன் வலுவிழக்கும் நிலையில், தமிழகத்தில் “தமிழின உணர்வுக்
  காவலர்கள்” என்று கூறிக் கொள்ளும் இராமதாஸ், வை.கோ, திருமாவளவன், கருணாநிதி
  உள்பட அனைவருக்கும் சர்வதேச சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு இந்தியா
  இதில் எந்த வகையிலும் தலையிட முடியாது என்று தெரியும்.

  இருந்தும், தேர்தலுக்கு “தமிழின பாசிச உணர்வு” உதவும் என்பதற்காக, இலங்கைத்
  தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் அனைவரும் இந்த நிகழ்வின் முதல்
  குற்றவாளிகள்.

  ஆரம்பத்தில் திரைப்பட கலைஞர்கள் மூலமாகவும், பிறகு வழக்கறிஞர்கள் மூலமாகவும்
  தேர்தல் வரும்வரை இந்தப் பிரச்னையை சூடாக வைத்திருப்பதற்காக, தொழில் இல்லாத பல
  வழக்கறிஞர்களை தூண்டிவிட்டு, நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுத்திய
  கட்சிகளும், வழக்கறிஞர் சங்கங்களும் இரண்டாவது குற்றவாளிகள்.

  இதைத் தவறு என்றால் “தமிழின விரோதி” பட்டமும், வன்முறையும் ஏற்படும் சூழ்நிலை
  உள்ளது. நீதிமன்றப் புறக்கணிப்பு சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றம்
  கூறியுள்ளது. இது எல்லா வழக்கறிஞர்களுக்கும் தெரிந்தும் செய்தது அடுத்த
  குற்றம்.

  வெறும் நீதிமன்றப் புறக்கணிப்பு என்றால் ஊடகங்களில் செய்தி வராது, எனவே
  வழக்கறிஞர்கள் இது சம்பந்தமான சில ஊர்வலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
  ஒருநாள் “பந்த்” என்று அறிவித்த போது, கருணாநிதி கூட கண்துடைப்புக்காக
  தமிழகத்தில் “பந்த்” இல்லை அது சட்டப்படி தவறு என்று சொல்லி விட்டார். ஆனால்,
  சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் அன்று திறந்து வைத்திருந்த சைக்கிள் கடையை,
  வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்று நாசம் செய்ததை எந்த வகையிலும் தடுக்கவும்
  இல்லை; தண்டிக்கவும் இல்லை.

  இதன் உச்சக்கட்டமாய் “Party in Person”ல் நீதிமன்றத்திற்கு வாதாட வந்த ஜனதா
  கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை முட்டையால் அடித்தும் அவர் சாதிப்
  பெயரான “பிராமணர்” என்பதைக் கீழ்த்தரமாகத் திட்டியும், அநாகரிகமாக சுமார் 20
  வழக்கறிஞர்கள் நடந்து கொண்டனர். தங்களை ஜாதிப்பெயரால் அழைப்பதே குற்றம் என்று
  கருதுபவர்கள் அடுத்தவர்களை ஜாதியின் பெயரால் திட்டுவதும் நையாண்டி செய்வது
  மட்டும் நியாயத்துக்கும், பகுத்தறிவுக்கும் ஏற்புடையது என்று கருதுவதுதான்
  வேடிக்கை!

  அந்த செயல் கண்டனத்துக்குள்ளாகி, அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள்
  மேற்கொள்ளப்பட்டன. தவறு செய்த வழக்கறிஞர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்
  என்று, சுப்பிரமணியன் சுவாமியின் மீது இரஜினிகாந்த் என்ற வழக்கறிஞர் வன்கொடுமை
  சட்டத்தில் பொய்ப் புகார் கொடுத்து பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளார். என்மீது
  வழக்குப் போடுவதாக இருந்தால் அவர் மீதும் வழக்கு போடவேண்டுமென்று
  வற்புறுத்துவதும், எதுவும் கிடைக்காவிட்டால் வன்கொடுமை சட்டத்தின் மூலம்
  வழக்குப் பதிவு செய்வதும் அதைவிட விசித்திரமான, வேடிக்கையான
  வாடிக்கையாகிவிட்டது.

  சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குப் பதிவு செய்ய வற்புறுத்தித் தொடங்கிய விஷயம்
  வன்முறையைத் தூண்ட, அது கலவரமாகிறது. முதலில் சுப்பிரமணியன் சுவாமிக்கு தன்
  மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் பெயரோ அல்லது ஜாதியோ கண்டிப்பாகத்
  தெரியாது. அவர் அன்று ஜாதிப் பெயர் சொல்லி திட்டவில்லை; மாறாக சுப்பிரமணியன்
  சுவாமியைத்தான் ஜாதிப் பெயர் சொல்லி திட்டியதாக நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி
  கே. சந்துரு ஆகியோர் பதிவு செய்த தீர்ப்பில் உள்ளது.

  மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால், தமிழகத்தில் வன்கொடுமைக்கு உள்ளாகும்
  ஒரே ஜாதி பிராமணர் ஜாதிதான். பிராமணரைத் திட்டுவதுபோல் வேறு யாரையும் எந்த
  ஜாதியினரையும் திட்டுவதில்லை. அவர்களுக்குத்தான் நிஜமாகப் பாதுகாப்புத்
  தரப்படவேண்டும். தமிழகத்தில் இருக்கும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்,
  மற்றவர்களைச் ஜாதி பெயர் சொல்லித் திட்டியதாக சமீப வரலாறு இல்லை. இந்த
  நிகழ்வைப் போல, தவறாகப் பிரயோகிக்கப்படும் வன்கொடுமை சட்டத்துக்கு முதலில்
  திருத்தம் வேண்டும்.

  பிப்ரவரி 19ம் தேதி நடந்த வன்முறையின் சாபக்கேடு என்னவென்றால், சுப்பிரணியன்
  சுவாமியின் வழக்கு சம்பந்தமாக வன்முறை செய்த வழக்கறிஞர்களோ அல்லது அதைத்
  தூண்டிய தலைவர்களோ அடி வாங்கவில்லை. சம்பந்தமில்லாத அப்பாவி வழக்கறிஞர்களும்,
  அவர்களின் கார்களும், சில நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலரும் அடி
  வாங்கினார்கள்; நீதிமன்றச் சொத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

  இந்த சம்பவத்திற்காக, போலீஸ் மீது மட்டுமல்லாது, மற்ற காரணகர்த்தாக்கள் மீதும்
  நாம் கோபம் கொள்ள வேண்டும். போலீஸின் அத்துமீறலை நியாயப்படுத்துவதற்காக இதைக்
  கூறவில்லை.

  பிப்ரவரி 19ம் தேதி போலீஸ் தரப்பில் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்ற
  பதிவுகள் தற்போது விசாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில்,

  – பிப்ரவரி 19ம் தேதிக்கு முன்னால் வழக்கறிஞர்களின் எதேச்சாதிகார
  போக்குகளையும்
  – 19க்குப் பின்னால் பஸ், கார் எரிப்பு போன்ற சம்பவங்களையும் மூடி மறைக்கவோ
  அல்லது அது போலீஸின் அத்துமீறலுக்கு பதிலடி என்று கூறி தப்பித்துக் கொள்ளவோ
  கூடாது.

  சட்டத்தின் ஆட்சியில் அத்துமீறல்கள் யார் செய்தாலும், போலீஸ் அல்லது
  வழக்கறிஞர்கள் ஆகிய யாராக இருந்தாலும் அது அவர்களின் சங்க அல்லது அதிகார
  பாதுகாப்பால் சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக மாறக்கூடாது.

  போலீஸ்காரர்களின் ஒருநாள் சட்ட அத்துமீறல், வழக்கறிஞர்களின் பல நாள்
  அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது. அத்துமீறல்கள் சட்டத்தின் ஆட்சியில்
  ஒட்டு மொத்தமாக களையப்பட வேண்டும்.

  அத்துமீறலைத் தூண்டிய அரசியல் தலைவர்கள், அதற்குப் பகடைக்காயான வழக்கறிஞர்கள்,
  இவர்களை எல்லாம் தனியே விட்டுவிட்டு, ஒரு சம்பவத்தில் வரம்பு மீறிய போலீஸ்காரரை
  மட்டும் தண்டிப்பது முழு நீதியாகாது.

  தேவையில்லாமல் அடிவாங்கிய, பொருள் நஷ்டமடைந்த வழக்கறிஞர்கள் இந்த
  சம்பவத்திற்குக் காரணமான எல்லோர் மீதும் கோபப்படவேண்டும். நீதிமன்றப்
  புறக்கணிப்புக்கு வேண்டுகோள் விடுத்தவர்களில் தொடங்கி, வழக்கறிஞர் சங்க
  நிர்வாகிகள் வரை அவர்களது கோபம் படர வேண்டும்.

  இதர சமூகப் பிரிவினர் இனமான உணர்வுக்கு உள்ளாகி, இலங்கைப் பிரச்னைக்கு
  போராட்டம் செய்தால் அவர்களுக்கு சட்டம் தெரியாது என்று கூறலாம்.

  – வழக்கறிஞர்களுக்கு சர்வதேசச் சட்டம் தெரியும்
  – இந்திய அரசின் இறையாண்மை, தலையீட்டின் முன் விளைவுகள் மற்றும் பின்
  விளைவுகள் தெரியும்

  இவை அனைத்தும் தெரிந்தும் தமிழினத் தலைவர்கள் சொன்னார்கள் என்று நீதிமன்றப்
  புறக்கணிப்பும், அது தொடர்பாய் வன்முறையும், அதன் தொடர் விளைவாகப் போலீஸ்
  வன்முறையும் நேர்ந்ததற்கு, வழக்கறிஞர்களும் பொறுப்பேற்க வேண்டும்!

  இந்திய உணர்வு என்பது, தமிழ் உணர்வை விட மேலானது.

  இதை நான் கூறுவதால், “நான் தமிழினத் துரோகி, வழக்கறிஞர் ஒற்றுமைக்கு எதிரானவன்”
  என்று மறுவினை எழலாம். ஆனால் நான் ஒட்டுமொத்த மனிதகுல ஒற்றுமையை விரும்புவதால்,
  அதற்கு ஆக்கப்பூர்வமான சர்வதேசச் சூழலை உருவாக்க முயலவேண்டும் என்று
  விரும்புவதால், அதுகூட வழக்கறிஞர்கள் மூலம் உருவாக வேண்டும் என்பதால்தான்
  இப்பதிவு.

  எனவே, நான் என் வழக்கறிஞர் சகோதரர்களுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால்,
  புதன்கிழமை (25/02/09) உயர் நீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கி எந்தவொரு
  அசம்பாவிதமோ, பொருள் சேதமோ, வன்முறையோ இல்லாமல் வழக்கறிஞர்கள் சட்டத்தின்
  ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தங்களுடையக் கட்சிகாரர்களுக்கான கடமையையும்,
  நீதிமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் மனதில் கொண்டு,
  தொடர்ந்து அமைதியான முறையில் நீதிமன்ற செயல்பாடு தொடர முன்வர வேண்டும்.

  இலங்கைப் பிரச்னையை இலங்கைத் தமிழர்களே பிரபாகரனுடைய வீரத்தினால்
  பார்த்துக்கொள்வார்கள். அதில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

  போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும். உணர்ச்சி வசப்படுவதால் நீதி
  நிலைகுலைந்துவிடக்கூடாது.
  சட்டம் சட்டமே; நியாயம் நியாயமே; சத்யமேவ ஜெயதே!

  கட்டுரையாளர்:- கே.எம்.விஜயன், மூத்த வழக்கறிஞர்

  நன்றி: தினமணி

 3. வினவு தோழர்களுக்கு,

  எனது வலைத்தளத்தில் தோழர் மருதையனின் இந்தக் கட்டுரையை உங்கள் அனுமதி இல்லாமலேயே மீள் பதிவு செய்திருக்கிறேன்.

  தோழமையுடன்
  சூன்யம்

 4. தோழர் மருதையனின் கட்டுரை மிகச்சிறப்பு,

  காலையில் தினமணி படித்ததுமே இதுவரை யோக்கியன்(செயாவிடம் அடி வாங்கியதால்) என தவறாக நினைத்த விஜயனின் முகமுடி கிழிந்து தொங்கியது.

  மேலும் அவர் சொல்லியிருந்தார் காங்கிரசு காரனும் தமிழர்களாம் திராவிடக்கட்சிகள் தான் இந்த மோசமான நிலைக்கு காரணமாம்.ஈழத்தில் நடப்பதை பிரபாகரன் பார்த்துக்கொள்வார் நீங்கள் பேசாதீர்கள்.

  பக்கத்து வீட்டில் கொள்ளையடித்தால் என்ன கொலை நடந்தால் என்ன கவிழ்ந்து படுத்து பேசன் டீவியில் ரசித்துக்கொண்டிடிரு இது தான் அவர் உதித்த தத்துவம்.

  ஒரு வழக்கு இவரிடம் வந்தால் எப்படி துருவி துருவி ஆராய்ந்து வாதாடுவார்,ஆனால் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் தாக்கப்பட்ட வழக்கில் சர்வாதிகார நாட்டாமையாகி தீர்ப்பு சொல்லுகிறார்,எதுக்கு நீதிமன்ற மாண்ப கெடுத்தீர்கள்?ஏன் சாமியை அடித்தீர்கள்?

  விஜயன் அப்போது சிக்கியிருந்தால் டின் கட்டி அனுப்பியிருப்பார்கள் போலீசுகள். அவரி சிக்காமல் போனது தான் அவரை இவ்வளவுதூரம் பேச வைத்திருக்கிறது,

  வினவு தோழர்களுக்கு,
  தினமும் அவதூரை பரப்பும் பார்ப்பன மணிக்கும் அவரது அடி பொடிகளுக்கும் சவுக்கைதரும் இக்கட்டுரை பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி

 5. ஹலோ மைக் டெஸ்டிங்

  மருதய்யன் அய்யரும், சுப்பிரமணிய சாமி அய்யரும் நடத்தும் கூத்துதான் ஹைகோர்ட்டு சம்பவங்கள்.

 6. //அவ்வாறு கைது செய்யும்போது மற்ற வழக்குரைஞர்கள் திரண்டு நின்று எதிர்ப்பு தெரிவித்தால், அதனைக் கையாள்வதற்குத் தேவையான அதிரடிப்படை முதல் ஐந்தாம்படை வரை அனைத்தையும் போலீசு தயார் நிலையில் வைத்திருந்தது//

  இவ்வாறு செய்யம்மால் என்ன செய்ய வேண்டும்??????

  நல்ல ஜால்ரா

  நல்ல இருங்க

 7. //சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் தலைப்பு ‘சத்யமேவ ஜெயதே’.
  //

  மருதய்யன் மிஸ்டர் விஜயன் தமிழ் மக்களுக்கு எதிராக எதையும் கூறாதபோது, நீங்களாக கயிறு திரிப்பது பாசிச புத்தியாக இல்லையா. அவர் என்ன சொல்ல வர்றார் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு புலிகள் மட்டும் கார்டியன் இல்லை என்கிறார். நீங்கள் புலி ஆதரவாளராய் மாறியதன் நோக்கம் என்னவோ.

  //17ம் தேதியன்று ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்தது. சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்திருந்த மேல் முறையீட்டு மனு, அனுமதிக்காக (admission) அன்று விசாரணைக்கு வந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை அனுமதிப்பதா என்பதையே உயர்நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.

  இந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் அரசும், சிவனடியார் ஆறுமுகசாமியும். party in person ஆக வந்திருந்த 80 வயதான எதிர்மனுதாரர் ஆறுமுகசாமி, நீதிமன்ற அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தம்மையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி implead செய்த ஒரு வைணவப் பெரியவரும் இன்னொரு மூலையில் நின்று கொண்டுதானிருந்தார். வழக்கம் போல பல வழக்குரைஞர்களும் நின்று கொண்டுதானிருந்தார்கள்.

  இந்நிலையில், அரசுக்கு எதிராகத் தன்னையும் அந்த வழக்கில் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார் சு.சாமி. மூத்த வழக்குரைஞர்கள் அமரும் நாற்காலியில் அவருக்கே உரிய முறையில் தெனாவெட்டாக உட்காரவும் செய்தார். நீதிமன்றம் துவங்கியவுடனே, அன்றைய பட்டியலில் 60ஆவது இடத்தில் இருந்த தீட்சிதர் வழக்கை முதலில் விசாரிக்கவேண்டும் என்று கோரினார் சாமி.

  //

  மேற்கண்டவாறு சுய வாக்குமூலம் கொடுக்கும் மருதய்யன் அந்த சம்பவம் நடக்கும் போது கோர்ட்டுக்குள் இருந்தாரா. அவரது கூற்று அப்படித்தான் இருக்கிறது. மருதய்யனின் கூற்றுக்கூட ஒருவேளை சி.பி.ஐ. விசாரணைக்கு உதவலாம்.

 8. தோழர்களுக்கு

  வேண்டுகோள் மிகச்சிறப்பான இக்கட்டுரையை மற்ற தோழர்களும் படியெடுக்க அனுமதி தர வேண்டும்

  ————————————————————————-

  விடுத்ல்லே

  இங்கெ எதுக்கு கும்மி அடிக்குற போயி உங்கப்பன் நொல்லக்கண்ணு,வர்தராசன், அவங்க கிட்ட போயி எதுக்கு செயா வூட்டுல கெதுக்கு அடிக்கடி போறீங்க கழிவறயை சுத்தம் செய்யவான்னு கேக்க்க வேண்டியது தான? அப்புறம் அச்சுக்கும்,விச்சுக்கும் சண்டயாமே ஏண்டாஅம்பி உங்க மாமன் சங்கரன கூட்டிட்டு போடா அம்பி நாறுது சீபீஎம் யோக்கியத

 9. உண்மையை சொன்னா ஒடம்பு எரிதுன்னு சொல்லுவாங்க. இப்பதான்யா தெரியுது எல்லாத்தையும் தூண்டி விட்டுட்டு மாமியாத்து அடுப்பங்கறையில போய் பதுங்கிக்கிட்டு இருப்பேள்னு மருதய்யர் மூலம் தெரியுது. அதான் பூணை குட்டி வெளியில வந்துடுதுப்பா. அடுத்தவன மாட்டிவிட்டுட்டு வேடிக்கை பாக்குறதுதான் உங்க வேலை.

  • விடுதலை மருதியை பார்ப்பன் என்பதற்கான ஏதேனும் ஆதாரம் தரவும் (வெறும் பிறப்பின் அடிப்படையில் சொல்லக்கூடாது அப்படி சொல்லுவதுதான் பார்ப்பனியம் யாரும் சுய விருப்பத்துடனே எங்கும் பிறப்பது இல்லை birth is an அச்சிதேன்ட் அவ்ளோதான்) அப்படி சொல்லவில்லையென்றால் விடுதல உங்க பேர தறுதலைன்னு மாத்திக்கோங்கோ

 10. அதானே, போலிசை ஓநாய்களாக கருத்துப்படம் போட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு… அதெப்படி வக்கீல்களை வில்லனாக கூட யாராவது சித்தரிக்கலாம்.. அடி பின்னிட வேண்டாமா அவர்களை.. வினவு சார், நீங்க அடுத்த கருத்துப்படும் ரெடி பன்னுங்க
  ரொம்ப பாவப்பட்ட புனித ஆத்மாக்கள், அடிதடினா என்னனு கூட தெரியாது.. எந்த வம்பு தும்புக்கும் போகாத நிஜ கதாநாயகர்கள், புனிதர்கள் வக்கீல்கள், அவர்களை போய் இந்த தினமனியும், விஜயனும் இப்படி அநியாயத்துக்கு வில்லனா சித்தரிக்க நினைச்சா.. விடலாமா என்ன.. விடாக்கூடாது வினவு.. நமக்கு தான் தெரியாத தமிழ சொல்லா, தெரியாத போட்டோ ஷாம் டெக்னிக்கா.. உடனே, கருத்து படம் ரெடி பண்ணுங்க சொல்றேன்.. ஒரு வழி பன்னிடலாம்.. பாவம் வக்கீலுங்க

 11. எதுக்குங்க எல்லாம் திட்டுறீங்க பாவம் சீபீஎம்-ல புஜதான் யாரும் படிக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கு,வினவயாவது படிக்க ஆள் போட்டிருக்காங்களே,
  தினமும் புள்ள என்னமா படிச்சு மாஞ்சு மாஞ்சு பதில் போடுது. எல்லாம் ஏசுறீங்களே!

  விட்த்ல கண்ணு சரி,
  சரி டவுசர் கிழிஞ்சு போச்சுன்னு ஒண்ணும் கவலப்படாதே,
  போயி நல்ல டவுசரா தொல்லர் வருதுகுட்டிகிட்ட கேட்டு வாங்கிகிட்டு வா,அப்படியே குப்பத்தொட்டி சந்திப்புலேயும் இதப்பத்தி ஏதாவது கட்டுரை எழுதச்சொல்லு,

  எனக்கு நல்லா தெரியும் நீயும் வுடமாட்ட,மேல எழுதுனதயே திருப்பி திருப்பி மாத்தி மாத்தி எழுதுவ,எப்புடி

  கலகத்தோட பரப்பிரம்மம் கவிதய காப்பியடிச்சு சொந்த சரக்கு மாதிரி கீற்றுலயும் உன்னோட பிளாக்குலயும் வெளிவுட்டியோ எல்லாத்தையும்a காப்பியடிச்சு எழுது,உன்னதிட்டுனாலும் அத வெற அதயும் மாத்தி எங்கியாவது எழுது.

 12. ஏய் விசயா அடுத்து அம்மா ஆட்சிதான்டி மவனே ஆட்டோவும் இருக்கு உருட்டுகட்டையும் இருக்கு… இப்ப வாலாட்டுர மாதிரியே எப்பவும் வாலாட்டனும் ஓகே

 13. ஒரு சந்தேகம் – வக்கீல் விஜயன் தி.மு.க ஆதரவாளர் தானே?

  தினமணி மட்டுமல்ல சம்பவத்திற்கு அடுத்த நாள் வந்த தினத்தந்தியிலும் சம்பவங்களை வக்கீல்களுக்கு எதிரான பொருள் வரும் வகையில் விபரித்திருந்தனர்.

  ரமேஷ் பன்ற காமெடி போக்கிரியில் வரும் வடிவேலுவின் கொண்டை காமெடியை நினைவூட்டுகிறது.

 14. இந்த பதிவில் எனக்கு சில பகுதிகளில் இசைவும், சில பகுதிகளில் வேறுபாடும் இருக்கிறது. போலீஸ் அத்துமீறல் என்று எழுதுவது சரிதான், ஆனால் வக்கீல்கள் புனிதர்கள் என்று சித்தரிக்கப்படுவது தவறு. நேரம் இல்லாததால் முழுதாக எழுத முடியவில்லை.

  // விஜயன் கூறும் சட்டத்தின் ஆட்சியில் விசாரணையே இல்லாமல் தண்டித்துவிடவேண்டும் போலும்! //
  ஆனால் இந்த வரியை படித்து புன்முறுவல் வந்தது. சாமியை மட்டும் விசாரணை இல்லாமல் தண்டித்துவிட வேண்டும் போலும்!

  // மாமாப்பயல்கள் (Touts). //
  டௌட் என்ற வார்த்தையை தரகன் என்று மொழி பெயர்ப்பதுதான் சரி. மாமாப் பயல்கள் என்றால் ஒரே ஒரு தரகு வேலை செய்பவர் என்று பொருள் வருகிறது.

  வினவு நீங்களும் மணியும் ஒருவரா என்று கேட்டதற்கு என் இப்படி கோபப்பட்டார் என்று பல பேரில் எழுத்பவரை பார்த்தால்தான் புரிகிறது.

 15. *******
  இங்கயே என்டா கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கீங்க. உங்கள்ள ஒரு சே குவேராகூட இல்லையா?
  வரலாறு சொல்லட்டும், தமிழக படையும் சேர்ந்து சிங்களனை ஈழத்திலிருந்து ஓட ஓட விரட்டியது என்று.
  ********

 16. வழக்குரைஞர்கள் மத்தியில் சுசாமி என்ற கூமுட்டை மீது முட்டை வீசியதற்கு ஆதரவு இல்லை. வீசியவர்கள் வீடுகளுக்கு போலீஸ் நள்ளிரவில் சென்றது என்பது மருதையன் கட்டுரையில்தான் தெரிய வருகிறது.வழக்குரைஞர்கள் மத்தியில் தெரியாது.அது சரி.அவர் கட்சிக்காரர்கள் மீதான போலீஸ் தேடல் அவருக்குத்தானே தெரியும்.

 17. /////////வினவு, மேல் பெப்ரவரி 25th, 2009 இல் 21:08 சொன்னார்:
  நண்பர்களே,
  தினமணி, வேதாளம், அதிரடி, விடுதல்லே என்ற பெயர்களில் வந்து கழித்திருக்கும் இந்த அரை லூசு யாரென்றால் சி.பி.எம் நியமித்திருக்கும் இணையத்தளபதி சந்திப்புவின் சீடன் ரமேஷ்பாபு. மகன் செத்தாலும் மருமகள் தாலியறுக்கவேண்டும் என்ற கதையாக ம.க.இ.கவைத் திட்டவேண்டும் என்பதற்காக சி.பி.எம்மையும் சேர்த்தே திட்டுகிறது இந்த பிராணி. ///////////

  சி.பி.எம். கும்பலில் நம்ம ரமேசுபாபு, செல்வப்பெருமாள் போன்ற கேனைகளை எதிர்கொள்ளும்போதுமட்டும் நம்முடைய மொழி கொஞ்சம் (நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி) தடித்ததாக வெளிப்படுகிறது. அதற்கு காரணம் மேற்கண்ட கேனைகளின் தோல்தடித்திருப்பதுதான் என்பது தொடர்ச்சியான நமது அனுபவங்களிலிருந்து புரிகிறது.

  தனக்கென்று யோக்கியமான அரசியல் ஏதும் இல்லாததால், எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்று அவனது பொலிட்பீரோவே தடுமாறும்போது இவனுகளுக்கு இந்தத் தடுமாற்றம் இருப்பது இயற்கைதான்.

  சி.பி.எம்.மின் பத்திரிக்கையான ’இளைஞர் முழக்கம்’, சுரணையற்ற தமிழினத்தைத் தட்டியெழுப்புவதற்காக தனது உடலை தீக்கிரையாக்கிக் கொண்ட மாவீரன் முத்துக்குமாரின் மரணத்தை ஏளனப்படுத்தி எழுதியுள்ள தலையங்கம், கீற்று இணையதளத்தில் காட்சிக்கு உள்ளது.

  “முத்துக்குமாரின் செயல் பகுத்தறிவற்றது..” என தினமணியின் பார்ப்பன வார்த்தைகள் அப்பத்திரிக்கையின் அத்துனை பக்கங்களும் நிறைந்துள்ளன. அந்த தலையங்கம் குறித்த விமர்சனங்கள் பதிவுசெய்யப்பட்டு பலநாட்களாகியும், இங்குவந்து வெவ்வேறு பெயர்களில் ஆட்டம்போடும் சி.பி.எம்.கோமாளிகள் அவ்விமர்சனக்களுக்கு சுரனையோடு பதிலேதும் இதுவரை தெரிவிக்கவில்லை.

  இங்கே தினமணி, வேதாளம், அதிரடி, மயிறு, மட்டை….ன்னெல்லாம் பேரு வச்சிக்கிட்டு எழுதுறானே பாண்டிச்சேரி ரமேசுபாபு, அவந்தான் அந்த பத்திர்க்கைக்கு ஆசிரியர்வேற. இவனோட கோவனம் அறுந்து தொங்குவதுகூட தெரியாமல் இங்கவந்து புலம்புறான்.

  இவனுக உடம்பில் இன்னும் சுரனையேதும் மிச்சமிருந்தால், கீற்று தளத்தில் பதியப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்து நம்மோடு விவாதிக்கட்டும். இதற்குமேல் இவனுகளைப்பற்றி கருத்து எதுவும் சொல்வதற்கில்லை, தோழர்களே!

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 18. //முட்டை வீச்சு சம்பவம், அதைத் தொடர்ந்து சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா கூட்டணியால் எழுப்பப்பட்ட “356 கோரிக்கை”, ஊடகங்கள் அரசுக்கு எதிராகப் போட்ட கூச்சல், இவையனைத்தையும் கண்டு திமுக அரசு பீதியடைந்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் “எதை வேண்டுமானாலும் செய், ரிசல்ட்டு காட்டு” என்று அரசாங்கம் போலீசுக்கு வழங்கியிருக்கக் கூடிய அனுமதியைத் தனது கொலைவெறியாட்டத்துக்கான லைசன்சாக மாற்றிக் கொண்டுவிட்டது போலீசு.
  /////

  இல்லை. 365அய் (எஸ்.ஆர் பொம்மை வழக்கு) 1994க்கு பிறகு இனி இந்தியாவில் பிரியோக்க முடியவில்லை. அதவாது பெரிய காரணி இல்லாமல் ஒரு மாநில அரசை கலைக்க முடியாது. அப்படியே கலைத்தாலும், உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை மறுதேர்தல் நடத்த முடியாது. கலைக்க பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வேண்டும். மேலும் பல கட்டுபாடுகள்.

 19. கல்வீச்சுகளுக்கு பின் தான் போலிஸாரின் வன்முறை நடந்தது. தோழர் மருதையன் கல்வீச்சுகளை பற்றி எழுதவில்லையே ? கடுமையாக கல்வீச்சு நடக்கும் போது, போலிஸார் இதுபோல் அராஜகமாக திருப்பித்தாக்குவது ஒன்றும் புதிதல்ல. இரு தரப்பும் வரம்பு மீறி வன்முறையில் இறங்கினர். ஆரம்பித்தது வழக்கறிஞர்கள் தாம்.

 20. //இதுபோல் அராஜகமாக திருப்பித்தாக்குவது ஒன்றும் புதிதல்ல. இரு தரப்பும் வரம்பு மீறி வன்முறையில் இறங்கினர். ஆரம்பித்தது வழக்கறிஞர்கள் தாம்.\\

  நீங்க அங்க இருந்து அடி வாங்கியிருந்தா தெரிஞ்சிருக்கும்!!!!

  எப்டி சார் இப்படி எழுதறீங்க?
  (நீதிமான்னு நெனப்பு)

 21. /கல்வீச்சுகளுக்கு பின் தான் போலிஸாரின் வன்முறை நடந்தது. தோழர் மருதையன் கல்வீச்சுகளை பற்றி எழுதவில்லையே ? கடுமையாக கல்வீச்சு நடக்கும் போது, போலிஸார் இதுபோல் அராஜகமாக திருப்பித்தாக்குவது ஒன்றும் புதிதல்ல. இரு தரப்பும் வரம்பு மீறி வன்முறையில் இறங்கினர். ஆரம்பித்தது வழக்கறிஞர்கள் தாம்.//

  ஆரம்பிச்சது போலீசுதான்னு நான் சொல்லுறேன். மறுக்க முடியுமா அதியமான்?

 22. இந்த “மானு”,
  யாருன்னு தெரியுதுங்களா? மெய்யாலுமே பொள்ளாதார மேத,பெரிய அருவாளி,ஆமா அவரு பிளாக்கு யாமே வரதில்லயாம் .ஒரே கவலயா உக்காந்துகீனு இருக்கும் போது அவுரோட தோஸ்தூ நம்ம டமில்மணி தான் சொன்னாராம் ” ஒண்ணும் கவுலப்படாத நாமெல்லாம் வலது சாரி சிந்தனையாளரு அதால எங்கனயாவது போயி யாரயாவது திட்ட் பத்து பேரு வந்து பார்ப்பாங்க”

  அத அபாடியே செய்யராறுப்பா இங்கே, ஆகா அவோர்ட கட்டுர ஒவ்வொன்னும் நம்ம மெண்டல் விட்த்ல மாதிரியே இருக்க ,அத்தான் மறுக்கா மறுக்கா சொல்லுதேன் ,மாண் பக்கம் போயிடாதீக அப்பால பிரச்சனதான் நேரா கீழ்ப்பாக்கத்துக்கு போக வெண்டி வரும்.

 23. நீங்க சொன்ன வாதப்படி பாத்தா கலவரத்துல அதிகப்படியா வன்முறை செஞ்ச போலீசுக்காரங்கள கைது செஞ்சி உள்ள போட்டுறுக்கனுமே? ஒருத்தன் மேலயும் கை வைக்க முடிய்ல? அதியமானின் நடுநிலைமை இங்கு என்ன பதில் சொல்லும்?

 24. //இந்த பதிவில் எனக்கு சில பகுதிகளில் இசைவும், சில பகுதிகளில் வேறுபாடும் இருக்கிறது. போலீஸ் அத்துமீறல் என்று எழுதுவது சரிதான், ஆனால் வக்கீல்கள் புனிதர்கள் என்று சித்தரிக்கப்படுவது தவறு. நேரம் இல்லாததால் முழுதாக எழுத முடியவில்லை///

  இதைத்தான் நானும் சொல்லவரேன் ஆர் வி.. ஒரு வேளை எனக்கு சரியா சொல்ல வரலயோ என்னவோ… எப்படியோ. நீங்க சொல்றது சரிதான்.. வினவு ஆர் வி யும் விஜயகாந்த ரசிகராக இருப்பார் போலும்.. என்ன சொல்றீங்க??

  வினவு சார் , நீங்கள் சொல்வது உண்மைதான் , என் பதில் இனித பதிவுக்கானது அல்ல.. கடந்த 4 பதிவுகளாகவே நீங்கள் எழுதிவருக் காவல்துறை காட்டுமிராண்டிகள், கருப்பு கோட்டு வக்கீல்கள் கனவான்கள் என்ற ரீதியில் போடும் கருத்துப்படமும், எழுத்துக்களுக்கும் சேர்த்துதான்.. உங்களின் கடந்த 3, 4 பதிவுகளுக்கு நான் போட்ட பதிலிலிருந்தே தெரிந்திருக்கும்… விஜயகாந்த் போலிஸ் வேஷம் பார்த்து போலிஸ் சூப்பர்பவர் என்று சொல்லவும் முடியாது.. ராதிகா வக்கீலாக நடித்த படங்களை பார்த்து வக்கீல் எல்லாம் அமைதியானவர்கள் என்றும் சொல்லவதும் கூடாது. நீங்களும் நிறைய நல்ல வக்கீல்கள் படங்களை பார்த்துவிட்டீர்கள் போல.. போலிசை பார்க்க போலிஸ் ஸ்டேஷன் போகலாம்.. வக்கீல்களை பற்றி பார்க்க கோர்ட்டுக்கு கூட போகவேண்டாம்..

  சட்டக்கல்லூரி வாசலில் பாருங்கள் நாளைய வக்கீல்கள் நடத்திய லீலைகளை.. சாதி பெயர் கொண்டு ஆடித்தீர்த்தவர்கள் தானே.. ! அது எந்த சாதி வக்கீலாக இருந்தாலும்…

  உங்களின் சட்டக்கல்லூரி அடிதடி ரவுடியிஸம் பதிவுகளில் தேடினேன் நரி , ஓநாய் முகங்களை.. கிடைக்கவே இல்லை… உள்ளது உள்ளபடியான புகைப்படங்கள் தானே அன்றி வினவு கருத்துப்படம் இல்லை.. ஒருவேளை உங்களுக்கு நேரமிருந்திருக்காது படம் போட.. சரி விடுங்க..

  பாவம் இப்படி ஒரு அமைப்பில் இருந்து பழகியதால். ஒரு பக்க சார்ப்பாகவே இருக்கின்றீங்களே வினவு..

  அனுதாபங்களுடன்..
  வினோத்

 25. சு.சுவாமி மீது முட்டையடித்தாக சுமார் 20 வக்கில்களை கைது செய்ய போலிஸ் முனைந்த போது, சுவாமி மீது ஒரு சாதி பெயர் திட்டிய (பொய்) கேஸை பதிவு செய்தால், கைதாகிறோம் என்ற வக்கில்கள், பின்பு போலிஸ் அது போல் ஒரு கேஸ் பதிவு செய்த பின், கைதாக மறுத்து கல் எறிந்து ரகளையை ஆரம்பித்தனர்.
  கைதாவ‌தில் என்ன‌ த‌ய‌க்க‌ம் ? ப‌ய‌ம் ? உட‌னே பெயிலில் வெளிய‌ வ‌ர‌ முடிந்த‌ சாதார‌ண‌ கேஸ்தான் அது.

  ம‌.க‌.இ.க‌ ம‌ற்றும் இத‌ர‌ தோழ‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ள் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தியுள்ள‌ன‌ர். கைதாகும் சூழ‌ல் வ‌ந்தால் த‌ய‌ங்காம‌ல் சிறை செல்ல‌ தயாராக‌வே அவ‌ர்கள் இருப்ப‌ர். அவ‌ர்க‌ளின் தியாக உணார்வையும், தைரிய‌த்தையும் எப்போதும் நான் ம‌திக்கின்றேன். (க‌ருத்து வேறுபாடுக‌ள் வேறு விசிய‌ம்).

  ஆனால் இந்த‌ வ‌க்கில்க‌ளுக்கு அது போன்ற‌ moral courage எதுவும் கிடையாது.

 26. //ஆரம்பிச்சது போலீசுதான்னு நான் சொல்லுறேன். மறுக்க முடியுமா அதியமான்?

  //

  டாஸ்மார்க்,

  எப்படி ? போலிஸாரின் வரம்பு மீறல், அராஜகம் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வக்கில்கள் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதே இங்கு விசியம்.

  கலகம்,

  கலகம்னு பேர வச்சுகிட்டா, பெரிய புரட்சியாளானாகிவிட முடியாமா ? போலே…
  உருப்ப‌டியா எதாவ‌து என‌து பிளாக் / ப‌திவுக‌ளுக்கு மறுப்பு எழுத துப்பில்லாம சும்மா வெத்து வேட்டு மாதுரி
  இங்க வந்து உளர்ரது மட்டும் தான் உம்மால முடியும் போல.

 27. //பாவம் இப்படி ஒரு அமைப்பில் இருந்து பழகியதால். ஒரு பக்க சார்ப்பாகவே இருக்கின்றீங்களே வினவு//

  இன்னும் வ்வுஜயகக்காந்து படம் பார்த்த பித்து தெளியலயா?

  வினோத் நீர் தான் ஒரே பக்கமா பாத்துட்டு இருக்கிறீர்!

  தோழர் இதெல்லாம் திருத்த முடியுமா???

  வக்கீல்ங்க எல்லாம் புனிதர்னு யாரும் சொல்லல.

  ஆர்.வீ, வினோத், கின்டி போன்றவர்க்ளெல்லம் தெளிவா பேசி குழப்புற கூட்டம்.

  விஜயனும் வக்கில்தான் அவரை தாக்கிதான் கட்டுரையே எழுதப்படிருக்கு.

 28. அதியம்மானு பேர வெச்சிகிட்டா நீ பெரிய நீதிமானா?

  போய்ய்ய்யா !

  வலதுசாரி வலதுசாரி வலதுசாரின்னு பந்தா பண்ணுரியே
  முதலாளித்துவம் பத்தி வினவுல வந்ததுக்கு எதுக்காவது பதில் சொல்லமுடியுமா?
  அதுக்கு துப்பில்லாமா ஏய்ய்யா நாயாட்டம் கத்துற.

  http://vinavu.wordpress.com/2008/10/13/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/

 29. சூப்புறமணிசாமியும் வக்கில்தான்யா !

  மறந்துடாதிங்க ஆர்வீய்ய்ய், கின்னி, தொண்டைமேன்

 30. “…போலீஸ்காரர்களின் ஒருநாள் சட்ட அத்துமீறல்…”

  பொய்யும் புனுகும் என்று ஏதோ சொல்வார்களே, அது இதைத்தானோ?

  “…இன்று இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் சர்வ அதிகார குழு
  பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மட்டுமே என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது….”

  ஐயா, நீங்கள் எப்படி சொன்னாலும் சொல்லாவிட்டாலும், விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தான் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த சகல தகுதிகளையும் கொண்டவர்கள்.

  Whether you acknowledge it or not, the world is accepting the fact that they CAN NOT FIND an alternate for LTTE to represent eelam tamils.

 31. //எப்படி ? போலிஸாரின் வரம்பு மீறல்,//

  அதாகப்பட்டது ஸ்ரீமான் சு. சாமியின் முகத்திலே ஆசிட்…. இல்ல இல்ல முட்டையடித்த தேசத் துரோக குற்றத்திற்கு கைது செய்ய வேண்டிய பயங்கரவாதிகளான வக்கீல்கள் தலைமறைவாக காட்டுக்குள் இருந்தாங்க. அவிங்க வீட்டுக்கு போயி தேடுன போலீஸ்காரய்ங்க அங்க எவனும் இல்லனு கண்டுகினாங்க. அந்த பக்கமா பறந்து வந்த சிட்டுக் குருவி சொன்ன உளவுச் செய்தி படி வக்கீல்கள் என்ற பயங்கரவாதிகள் மறுநாள் நீதிமன்றத்தில் வருவதாக தெரிந்தது. அக்யூஸ்டுகள என்கவுண்டர்ல போடுறதுக்காக அங்க வந்து பெசல் போர்ஸோட இறங்குனாங்க போலீசு. என்கவுண்டர் செய்ய தயார் ஆன போது போலீசுக்கு மனிதாபிமானம் பொத்துக்கிட்டு வந்து லேசா தடியடியோட நிறுத்திக்கிட்டாய்க்ங்க…

  வக்கீல் போலீசு மோதலை இப்படியும் வாசிக்கலாம்.ஆனா படிச்சுப் பாக்குற போலீசே கூட ஆசன வாயால சிரிப்பாங்க.

  உண்மை என்னவென்றால், எல்லா வக்கீலும் ஒப்பனா அலுவலகம், வீடு மனைவின்னுதானே இருக்காங்க.? வீட்டுக்கு போயி தேடுன போலீசு வக்கீல்கள கைது செய்யமா என்னத்த புடுங்குனாங்க? நீதிமன்றத்துக்குள்ள போலீசு நுழைஞ்சா பிரச்சினை வரும் என்பதுதான் இதுவரையான அனுபவம் எனும் போது பெரும் படையுடன் தயாராக சென்று நீதிமன்றத்தில் மட்டும்தான் வக்கீல்களை கைது செய்யுவோம் என்று ரவுடியிசம் செய்து பிரச்சினையை திரி கிள்ளி போட்டது யார்? வக்கீல்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்று தெரிந்தால் விட்டு விட்டு பிறகு தனித் தனியாக போய் கைது செய்ய வேண்டியதுதானே? சட்ட ஒழுங்கு பிரச்சினை என்ற பெயரில் ரவுடிகளையும், தலைவர்களையும் கைது செய்யும் போது போலீசு சொல்லும் சாக்கு இதுதானே?

  வக்கீல்களுக்கு மட்டும் இந்த யதார்த்தம் பொருந்தாதோ?

  போலீசு என்ன பெரிய புடுங்கியா? அவன் இழுத்த இழுப்புக்கேல்லாம் என் இடுப்பு வலைய? எந்த சுயமரியாதை உள்ளவனும் போலீசின் வேண்டாத அடவடியை தட்டிக் கேட்கவே செய்வான். வக்கீல்கள் என்றால் கேட்க்கவே வேண்டாம். இப்படியிருக்க நீதிமன்ற வளாகத்தில் முரண்டு பிடித்தது வக்கீல்களா போலிசா?

  வம்பிழுத்து அடிக்கும் மூன்றாம் தர ரவுடிகள்தான் போலீசு என்பது எங்களுக்கு தெரிந்ததுதான். நீதிமன்ற ரவுடித்தனத்தில் இந்த விசயம இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறது என்பதுதான் புதிது.

  ஆக, பிரச்சினையை ஆரம்பித்தது போலீசுதான் என்பதும் போலீசுக்கு கைக்கூலி கொடுத்து அனுப்பியது சு.சாமிதான்.

  போலீசை கைது செய்ய வேண்டும் என்ற எனது கருத்துக்கு அதியமான் கருத்து சொல்ல வசதியாக மறந்து விட்டார்.

  //ஆனால் வக்கில்கள் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதே இங்கு விசியம்.//

  தொலைக்காட்சியில் வீடியோ ஆதாரங்களாக பதியப்பட்டுள்ளவை போலீசுக்காரர்கள்தான் வாகனங்களையும், பொதுமக்களையும் அடித்து நொறுக்குவதை காட்டுகிறது. வக்கீல்களின் வன்முறை எதிர்வினை மட்டுமே. அதுவும் மிக சரியாக போலீசு ஸ்டேசனைத்தான் எரித்துள்ளனர். உள்ளே இரண்டு போலீசுக்காரர்களை வைத்து எரித்திருந்தாலும் தவறில்லை. அது எதிர்வன்முறை மட்டுமே. அராஜகமும், திமிர்த்தனமும், ரவுடியிசமும், மாபியாத்தனமும் போலீசு நாய்களிடம்தான் வெளிப்பட்டுள்ளது என்பது தொலைக்காட்சி பெட்டிகளிலேயே நாறியுள்ளது.

  டாஸ்மாக்.

 32. கட்டுரையாளர்:- கே.எம்.விஜயன், மூத்த வழக்கறிஞர்…. என்பதால் மட்டும் அவரின் பார்ப்பனிய வாதத்தை முன்னிருத்தும் இக்கட்டுரை ஏற்புடையதல்ல.

  இதேதான் இதேதான் ஒரு தலைபட்சமான பார்ப்பணிய பார்வையும் சக பார்ப்பனியருக்கு (சு.சாமிக்கு) வக்காலத்து வாங்கியும் எழுதப்படிருக்கிறது. திரு.விஜயன் பார்ப்பனர் அல்லாவிட்டாலும் அவரின் பார்வைகாக நாம் பார்ப்பனர் என்று சொல்லுவது பொருந்தும்.

  இந்தியாவில் பார்பனர்கள்தான் அதிகம் பாதிக்கபடுகிறார்களாமே…
  அது சரி மதக்கலவரங்களை தூண்டிவிட்டு பின்னால் இருந்து செயல்படும் பார்பனன் எந்தவிதத்தில் பாதிக்கபடுகிறான் என இவர் கடைவிரிக்கிறார் தெரியவில்லை.

  ஈழப்பிரச்னைக்கான வழக்கறிஞர்களின் சனநாயக முறையான போராட்டத்தை ஒரு சு.சாமி என்கிற மானங்கெட்டவனுக்காக கலவரமாக மாற்றிய தமிழக அரசு கண்டனத்திற்குரியதே.

  கட்டுரையாளர் தான் சார்ந்த வழக்கறிஞர் சமுகத்திற்கு ஆதரவாக பேசவேண்டாம் நேர்மையாக பேசலாமே?

  ஈழத்தமிழர்களை பிரபாகரன் பார்த்துக்கொள்வார் என்பது தெரியும். அதற்காக இன அழிப்பை முன்னின்று நடத்தும் இந்தியாவை கேள்விகேட்கவில்லை எனில் வன்முறையை நாம் ஆதரிக்கிறோம் என்று தானே பொருள்.

  “பிரச்சனையாக இருக்கும் ஒரு இடத்திற்கு செல்பவர் கண்டிப்பாக ஒரு திட்டத்தோடு சென்றிருக்க வேண்டும்”

  என்று மேற்கோள்காட்டுகிற அய்யா இப்படி உணர்ந்தபிறகும் நீங்கள் சில சொதப்பலான வாதங்களை வைப்பதேன் என்பதே நம் கேள்வி. அம்மாவிடம் வாங்கிய அடியில் மண்டை கலங்கிவிட்டதா

  படித்தவர் அதுவும் சட்டம்????

  கவிமதி
  துபாயிலிருந்து
  ==============================
  வெட்டியெறிய ஆடுகள் அல்ல
  நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள்

 33. //மரண அடி, மேல் பெப்ரவரி 26th, 2009 இல் 19:40 சொன்னார்:
  அதியம்மானு பேர வெச்சிகிட்டா நீ பெரிய நீதிமானா?

  போய்ய்ய்யா !

  வலதுசாரி வலதுசாரி வலதுசாரின்னு பந்தா பண்ணுரியே
  முதலாளித்துவம் பத்தி வினவுல வந்ததுக்கு எதுக்காவது பதில் சொல்லமுடியுமா?
  அதுக்கு துப்பில்லாமா ஏய்ய்யா நாயாட்டம் கத்துற.

  /////

  ஏன் வலதுசாரியாக (பொருளாதார விசிய்னக்களில் தாம், மதவாததில் அல்ல) இருக்கக்கூடாதா ? ஃபாசிஸ்டுகள் தாம் இப்படி பேசுவர்.

  முதலில் ஒழுங்கா பேசக் கற்றுக்கொள். எனது பதிவில் ஏதாவது மறுக்க முடிந்தால், ஆதரத்துடம் அங்கு வாதடாலமே.

  வினவு பதிவுகளில் யாம் இட்டது :

  http://vinavu.wordpress.com/2008/12/19/thavib2/

 34. வணக்கம் தோழர் வரவர வினவு திசைமாறிப் போதான்னு தோணுது விஜயனுக்கு பதில் சொல்ற அளவுக்கு நம்ம மருதய்யன் தோாருக்கு நேரம் இருக்கும் போது அந்த மாங்கா மடையன் விடுதலை இராசேந்திரனுக்கு ஏன் பதில் குடுக்கல எவ்வள நாளிக்குத்தான் நம்ம கட்சிய வெளிய காட்டமே இருக்கனும் தோழர் ஈலப் பிரச்சனையில அவர் நம்மகூட இருக்காரேன்னு வாய் மூடிக்குனு இருக்கறமான்னு தெரியல. ஏ.ஆர்.ரகுமானுக்கு எழுதுன கவிதை மக்ள் உணர்வுக்கு எதிரானது. அத தவிர்த்திருக்கலாம் தோழர்.

 35. //ஏ.ஆர்.ரகுமானுக்கு எழுதுன கவிதை மக்ள் உணர்வுக்கு எதிரானது. அத தவிர்த்திருக்கலாம் தோழர்//

  அப்புடியா

  விடுத்ல கண்ணு,

  என்னா எப்ப பாத்தாலும் காமெடி பண்ணிகீணு,உன்ன மாதிரி தான் நம்ம மானும்,
  நீனு எந்த பேருல வந்தாலும் ஒரே கொண்ட போட்டுகிட்டு வராத,
  எனா புரியுதா?
  அப்புறம் சிதம்பரத்துல நாட்டியாஞ்சலி விழாவுக்கு போனீயா? டேன்ஸ் பாத்த கிறக்கத்துல யே இருக்காத?. ஆமா கிளைஞர் முலக்கம் நல்லா போவுதா? இங்க வந்து எழுதுறத அங்க எழுதுனா கூட நாலு பேரு வாங்கி படிப்பான் அப்படியே காம்ரேடு வசயி,மம்முட்டி,ரசினி,விசிய காந்து அவுங்க படத்தயும் போட்டா சும்மா யாவாரம் பிச்சுகினு போவும்,

  என்னா புரியுதா,புரியலனா பெரம்பலூர் மாவட்ட கமிட்டிய கேளு

 36. இங்கே ஒரு கொண்டை வெளியே தெரிகிறது. மாறுவேசத்தில் வரும் எதிர் தரப்பு அன்பர்கள் தமது கொண்டைகளை முழுமையாக மறைத்துக் கொண்டு வருமாறு வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  நண்பர் அதியமான் எனது கருத்துக்கு எதிர்வினை செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

 37. சு.சுவாமி மீது முட்டையடித்தாக சுமார் 20 வக்கில்களை கைது செய்ய போலிஸ் முனைந்த போது, சுவாமி மீது ஒரு சாதி பெயர் திட்டிய (பொய்) கேஸை பதிவு செய்தால், கைதாகிறோம் என்ற வக்கில்கள், பின்பு போலிஸ் அது போல் ஒரு கேஸ் பதிவு செய்த பின், கைதாக மறுத்து கல் எறிந்து ரகளையை ஆரம்பித்தனர்.
  கைதாவ‌தில் என்ன‌ த‌ய‌க்க‌ம் ? ப‌ய‌ம் ? உட‌னே பெயிலில் வெளிய‌ வ‌ர‌ முடிந்த‌ சாதார‌ண‌ கேஸ்தான் அது.

  No one is justifying the actions of police in damaging vehciles or lathi charging indiscrimately all in front of them. but no one here seems to care about the fact that a group of lawyers FIRST started pelting stones simply because they were not willing to get arrested.

  The public don’t give a damn about these lawyers and their agitation. Most of the public feel that the lawyers deserve what they got. that is my impression from interacting with people daily.

  or you may continue all this arguments. the public is indifferent.

 38. leave it athiyaman.. here people are brain washed to bring out the issues of one particular group and they are not ready to accept the mistake is from both the side..!

 39. //The public don’t give a damn about these lawyers and their agitation. Most of the public feel that the lawyers deserve what they got. that is my impression from interacting with people daily.//

  நாங்க interact எல்லாம் செய்யிறது இல்ல. நல்லா கலந்து பேசுவோம் (சும்மா நக்கலுக்கு கோவிச்சுக்காதீங்க).

  நாங்க பேசுன வரையில போலீசின் பொறுக்கித்தனத்தை திட்டுவதற்கு மக்கள் தயங்கவில்லை. வக்கீல்கள் விசயத்தில் மாறுபட்ட கருத்துள்ள்வர்கள் உள்ளனர் என்பது உண்மைதான்.

  இங்கு அது குறித்து பேசப்படவில்லை.

  இதோ கீழே இருக்கிறதே அதுதான் விசயம். நடுநிலைமை குறித்து சாமியாடும் யாருமே போலீசை கைது செய்யச் சொல்லி ஒரு வார்த்தை இதோ இந்த நிமிடம் வரை இடவில்லையே? ஏன்

  /போலீசை கைது செய்ய வேண்டும் என்ற எனது கருத்துக்கு அதியமான் கருத்து சொல்ல வசதியாக மறந்து விட்டார்.//

  இதற்கு கருத்துச் சொல்லுங்கள் முதலில். அப்புறம் உங்களது நடுநிலமை கோவணம் மறைகக் வேண்டியதை விட்டு விட்டு வேறெதையோ மறைப்பது தெரியவரும்.

  டாஸ்மாக்
  (நான் தெளிவா இருக்கம்ப்பா..)

 40. தமிழக காவல் துறைக்கு புதிய அமைச்சர் நியமனம்,

  காவல் துறை பொறுப்பை சரியாக கவனிக்க முடியாத காரணத்தால் அப்பொறுப்பு முதல்வரின் உடல் நிலை தேறும் வரை அமெரிக்க முனைவர் சுப்ரமணிய சாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

  அவர் பதவி யேற்றவுடன் வெளியிட்ட முதல் அறிக்கை பின்வருமாறு:

  வழக்கறிஞர்களின் விவரங்களைகமிட்டியிடம் போலீஸôர் முறையிட வேண்டும்’

  சென்னை, பிப். 27: வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களின் விவரங் களை ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியிடம் போலீஸôர் முறையிட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பி ரமணியன் சுவாமி தெரிவித்துள் ளார்
  இதுதொடர்பாக அவர் வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் பிப்ரவரி 17-ம் தேதி, என் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது
  இதுதொடர்பாக உதவி கமிஷனர் காதர் மொய்தின் கொடுத்த புகாரின் பேரில் 20 வழக்கறிஞர்கள் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டது. வன்மு றையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தொடர்பான விவரங்களை, ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியிடம் போலீ ஸôர் முறையிட வேண்டும்
  உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்க றிஞர்களில் 5 சதவீதம் பேர் நக்ஸ லைட், விடுதலைச் சிறுத்தைகள் மற் றும் விடுதலைப் புலிகள் அமைப் பின் மீதான நம்பிக்கை கொண்டவர் களாக உள்ளனர்
  அவர்களை தனித்து விட வேண் டும். மேலும் வழக்கறிஞர் பணியில் இருந்து தகுதி நீக்க செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரி வித்தார்.

 41. சுப்பிரமண்ய சாமி பற்றி :

  தமிழக / இந்திய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் யாரும் சுப்பிரமண்ய சாமி பற்றி எதிர் விமர்சனம் அல்லது பதிலடி கொடுப்பதில்லை. சில காரணிகள் :

  1.சு.சாமி ஒரு பக்கா பிளாக்மெயிலர். பலரின் ஊழல்கள் மற்றும் இதர அந்தரங்க தவறுகளை ஆதராத்துடன் திரட்டி வைத்துள்ள கள்ளன். அதனால் ஒரு பயம். கடந்த 1991-96 ஜெ ஆட்சியில், ஜெவிடம் பகையானவுடன்,
  தொடர்ந்து பல வழக்குகள், புகார்கள் சாமி செய்து போராடினார். அவரின் தைரியத்தையும் சும்மா சொல்லக்ககூடாது.

  2.சாமிக்கு பெரிதாக மக்கள் ஆதரவோ, ஆள்பலமோ, கட்சி செல்வாக்கோ, mass base கிடையாது. அதனால் அவரை கண்டுக்காம விடுவதே லாபம் என்று ஒரு கணக்கு.

  3. ஒரு திறமையான power broker / அதிகாரத்தரகர். உலக அளவில், இந்திய அளவில் பெரும் புள்ளிகள் மற்றும் சர்வ கட்சியிலும் பல முக்கிய புள்ளிகளிடம் தொடர்பு / அறிமுகம் உண்டு. எதிர்காலத்தில் ஏதாவது ஒரு டீலில்
  அவரின் பயன் கருதியும் அவரை ‘எதிர்க்காமல்’ இருக்க வாய்புண்டு.

  ஈழப்பிரச்சனையில் மற்றும் பார்பானிய எதிர்ப்பு / சிதம்பரம் கோயில் விவகாரம் போன்ற விசியங்களில், சாமியின் செயல்களால் பெரிய பாதிப்போ அல்லது பெரும் மாற்றமோ வர வாய்ப்பு இல்லை. கொசுத்தொல்லை போல் தான் அவரின் லீலைகள். கண்டுகாம விட்டால் ஒன்னும் ஆகிவிடாது. உயர் நீதி மன்ற அடிதடிகள் பிரச்சனை பற்றிய அவசரத்தை திசை திருப்பிவிட்டது தான் பலன்.

  எதிரி சாமி அல்ல ; வேறு முக்கிய அரசியல் தலைவர்களில் சுயனலம் மற்றும் தமிழர்களின் மனோபாவம் / ஒற்றுமையின்மைதான் உண்மையான எதிரிகள்.

 42. //போலீசை கைது செய்ய வேண்டும் என்ற எனது கருத்துக்கு அதியமான் கருத்து சொல்ல வசதியாக மறந்து விட்டார்.//

  இதற்கு கருத்துச் சொல்லுங்கள் முதலில். அப்புறம் உங்களது நடுநிலமை கோவணம் மறைகக் வேண்டியதை விட்டு விட்டு வேறெதையோ மறைப்பது தெரியவரும்.

  டாஸ்மாக்

  ///

  தாரளாமாக கைது செய்யபட்டட்டும். முக்கியமாக சரியான முறையில் விசாரணை நடந்து தவறாக நடந்த போலிஸார் தணடிக்க பட வேண்டு. வாகனங்களை நொருக்கி, நீதிபதிகள் மீதும் தடியடி நடத்தி, கல்லெறிந்தும் அராஜகம் செய்த போலிஸார் தண்டிக்கபட வேண்டும் தான். அதை நான் மறுக்கவில்லையே.

  போலிஸ் அராஜம் பற்றி தெரியம்தான். ஆனால் வழக்கறிஞ‌ர்கள் எதோ செம்படை புரட்சியாள்ர்கள் போல, மக்கள் நலனுக்காக தியாகம் செய்யும் வீரர்கள் போல இங்கு ஒரு சித்தரிப்பு. இரு தரப்பினரும் திருட்டு பயல்கள் தாம் என்பதே அனுபவம் தரும் பாடம்.

  உங்க பாசையில சொல்லனும்னா, வக்கில்களும் “ஏகாதிபத்திய, முதலாளித்துவ வர்கத்தின் கைக்கூலிகள்” தாம்.

 43. வழக்கறிஞர் விஜயன், ‘வார்த்தை’ இலக்கிய மாத இதழில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்கட்டுரைகள் எழுதி வருகிறார். அவற்றுக்கு யாரும் முறையான எதிர்வினை செய்வதில்லை. அதனால் அவர் எழுதுவதெல்லாம் சரி என நினைத்துக் கொள்கிறார். வினவு குழுவினரான நீங்களாவது எதிர்வினை எழுதி அந்த இதழுக்கு அனுப்புங்கள்.

 44. இடஒதுக்கீட்டின் பார்ப்பன சூத்திரதாரியே இந்த ம.க.இ.க. – புதிய ஜனநாயக பேர்வழிகள்தான் என்பதை ஐயா விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கத்தில் கிழித்திருக்கிறாரே – பார்ப்பனத் தலைமையை வைத்திருக்கும் இந்த போலி நக்சலிசவாதிகளிடம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான குரலை கேட்கலாமா கீழே ஐயா இராசேந்திரனின் கட்டுரையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ஐயாவின் மறுப்பு கட்டுரைக்கு இதுவரை எந்த பதிலையும் சொல்ல முடியல இந்த பார்ப்பனீய கும்பலால்.

  ——————————————-

  ஐயா விடுதலை இராசேந்திரனின் கட்டுரை

  வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் ‘புதிய ஜனநாயகம்’
  விடுதலை இராசேந்திரன்

  ‘மக்கள் கலை இலக்கியக் கழக’த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக ‘இந்து’ எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் – இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் ‘புதிய ஜனநாயகம்’ ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை – ‘புதிய ஜனநாயகத்தின்’ பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

  ‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, “குற்ற”ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை ‘துக்ளக் சோ’, ‘சு.சாமி’ கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். ‘பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது’ என்று “அவாள்”கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

  இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் ‘அவாள்’ ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் ‘இருட்டடிப்பு’ செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் ‘கள்ள மவுனத்தால்’ வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் ‘புதிய ஜனநாயகம்’ பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

  காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை ‘பூமி தான’ இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று ‘புதிய ஜனநாயகம்’ கேள்வி எழுப்புவது – அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி – காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

  ‘இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி’ என்பது ‘புதிய ஜனநாயகத்தின்’ கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே ‘கடைந்தெடுத்த அயோக்கியர்கள்’ தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் – பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் – கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு – ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

  வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

  பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் – சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் ‘புதிய ஜனநாயக’ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை – தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு ‘மண்டலாக்கம்’ வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

  ‘புதிய ஜனநாயகத்தின்’ இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

  1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, “அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை” என்று எழுதிய ‘புதிய ஜனநாயகம்’ “மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை” என்றும் எழுதியது. (‘புதிய ஜனநாயகம் – மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று ‘அருண்சோரி’களும், ‘சோ’க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் ‘புதிய ஜனநாயகம்’ அன்று இவ்வாறு ஒலித்தது. “நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக.” (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

  மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய ‘புதிய ஜனநாயகம்’ அதைச் செய்யவில்லை. மாறாக – இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

  “இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன” என்று எழுதியதோடு “அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்” என்று அறைகூவலும் விடுத்தது.

  வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, ‘புதிய ஜனநாயகம்’ இவ்வாறு எழுதியது. “இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி – இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் – நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று எழுதியது (‘புதிய ஜனநாயகம் 1993 – செப். 16-31, அக் 1-15)

  ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான “புரட்சிப் புயல்”, “இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது” என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. (‘புரட்சிப் புயல்’ – 1985 டிசம்பர்)

  “ஒரு அரசியல் தலைவரை – எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே” என்று, எழுதும் ‘புதிய ஜனநாயக’த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் ‘புதிய ஜனநாயகம்’ இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை ‘புதிய ஜனநாயக’த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

  போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை ‘புதிய ஜனநாயகம்’ மறைத்து – “கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்” என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

  போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து ‘முதல் தகவல் அறிக்கையே’ பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகா