Sunday, April 5, 2020
முகப்பு உலகம் ஈழம் ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !

ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !

-

பிரபல ஓவியரான மருது வினவு தளத்திற்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியத்தை இங்கே பதிவு செய்கிறோம். அவர் புதிய கலாச்சாரம், மற்றும் ம.க.இ.க அரசியல் இயக்கங்களுக்காக பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த ஓவியத்திற்கு அவர் கொடுத்த தலைப்பு ஈழமும் இந்திய தமிழக அரசியல்வாதிகளும். ஓவியர் மருதின் தூரிகையில் தீட்டப்படும் ஓவியங்கள்  வினவில் தொடர்ந்து இடம்பெறும்.

eelam_marudhu

ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழரும் ஓவியருமான முகிலன் ஈழம் குறித்து பல ஓவியர்கள் வரைந்த கூட்டு நிகழ்வில் அவர் தீட்டிய ஓவியத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்தப் படத்திற்கு விளக்கம் தேவையில்லை. வினவில் அவரது ஓவியங்களை தொடர்ந்து பதிவு செய்வோம்.

eelam_mukilan

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ஆம் உண்மைதான்
  சொல்வதற்கு வார்த்தைகள்
  இல்லை
  இருக்கின்ற வார்த்தைகள்
  எல்லாம்
  சொல்லுகின்றன
  திமுக அதிமுக பாமக
  பாஜக காங்கிரஸ்………

  வார்த்தைகள் அடமானம்
  வைக்கப்பட்டிருக்கின்றன
  உலக வங்கியில் அல்ல
  உள்ளூர் தேசியத்தில்……

  உன்னில் தூங்கி கிடக்கும்
  வார்த்தைகளை எழுப்ப
  இன்னும் எத்தனை பேர்
  கருகிப்போகவேண்டும்……

  வேறு வழியே இல்லை
  இன்று ஈழம்
  நாளை உன் இல்லம்
  கண்டிப்பாய் நீயும்
  கருக்கத்தான் படப்போகிறாய்

  போராட்டத்தை தவிர வேறு
  வழி இல்லை

  இனியும்
  குப்புறப்படுத்து கிரிக்கெட்
  ஸ்கோருக்காக நீ காத்திருந்தால்
  நாங்கள் காத்திருக்கப்போவதில்லை
  இந்தியத்தை முறியடிக்க
  கூடவே உன்னையும் சேர்த்து

  கலகம்

 2. படங்கள் அருமை.

  ஓவியர்கள் மருது, முகிலனின் ஓவியங்களைப் பார்த்து வெகுநாட்களாயிற்று.

  தொடர்ந்து வெளிவருவது குறித்தும் மகிழ்ச்சி.

  குறிப்பு : தமிழ்மணம் வாக்களிப்பத்தில் லிங்க் இல்லை என நினைக்கிறேன்.
  படங்களில் vinavu.com என இருக்கிறது. அது சரியா?

 3. சிறப்பான ஓவியங்கள்!
  மருதுவின் ஓவியம் அரசியல்வாதிகளின் முகமுடிகளை அம்பலப்டுத்துகிறது,
  (ஓவியம் எழுத்தை விட வலிமையாக இருக்கிறது சில பக்கக்ங்கள் எழுத வேண்டியவறின் உணர்ச்சியை ஒரே படத்தில்….. அருமை!)

  தோழர் முகிலன் பற்றி சொல்லவேண்டியதேயில்லை

  தோழர் முகிலன் செயலலிதாவின் கொடுர முகத்தை பழைய புதிய கலாச்சரத்தில்
  வரைந்ததை யாரும் மறந்திருக்கமுடியாது (அதே போல் சங்கராச்சாரியை தனது தூரிகையால் கிழி கிழியென கிழித்ததையும்) நான் தோழர் முகிலனின் ஓவியத்தின் ரசிகன் அவருடைய படங்கள் தொடர்ந்து வரைய வேண்டும்

  விடுதலை

 4. முகிலன் மற்றூம் மருது அகியோரின் ஒவியங்கல் துரிகை மூலம் நெருப்பை உமிழிந்துஉள்ளது…

 5. ஓவியர் மருது மிகத்துல்லியமாக இந்திய அரசியல் சூழலை வரைந்துவிட்டார். சமூகத்தில் புகழ் பெற்ற கலைஞர்களெல்லாம் அடையாளத்துக்குக் கூட ஈழத்துக்காக எதையும் செய்ய முன்வராத போது ஓவியர் மருது, மருத்துவர் ருத்ரன் போன்றவர்கள் தொடர்ச்சியாக தங்களை பாதிக்கப்பட்ட மக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வது மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு என் நன்றிகள்.
  …………………….
  அன்று வரையப்பட்டிருந்த ஓவியங்களில் மற்றவை வெறும் உணர்ச்சியை மற்றுமே பிரதிபலிப்பதாக அமைந்த்து, தோழர் முகிலனின் ஓவியம் மட்டமே ஒரு அரசியல் கருத்தை பலமாக முன்வைத்த்து. உணர்ச்சிகளைவிட அரசியலுக்குதான் பயன்பாடு அதிகம். தோழர் முகிலன் இது போன்ற அரசியல் சித்திரங்களை, சமகால அரசியல் நிகழ்வுகளுக்காக எப்போதும் வரைந்து கொண்டு இருத்தல் வேண்டும். ஒரு ஓவியராக அது அவரது சமூக கடமையும் கூட.
  அருமையான சித்திரத்துக்கு வாழ்த்துக்கள் தோழரே!

 6. முகிலனின் ஓவியங்கள் அர்புதம். அவர் வரையும் போது நானே அவரை விதம் விதமாக படம் எடுத்தேன். அவளவு ஈடுபடாக இருந்தது.

 7. அருமையான படங்கள் ஓவியர் மருதுவுக்கும் தோழர் முகிலனுக்கும் நன்றிகள். வரவிருக்கின்ற நாடாளுமன்றத் ஓட்டு சீட்டு அரசியலின் அறுவறுப்பான வண்ணச் சிதறல்களுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் எண்ணச் சிதறல்களை உங்கள் தூறிகைகள் ஒருங்கினைக்க உதவட்டும்.

 8. வார்த்தைகளே இல்லாமல் இந்திய அரசின் மேலாதிக்க வெறியை, தமிழக அரசியல் வாதிகளின் கையாலாகதனத்தை / துரோகத்தை , ஈழ மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இதைவிட யாரும் கூர்மையாக ஓவியத்தில் கொண்டு வரமுடியாது… தோழர் மருதுவுக்கும் தோழர் முகிலனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

 9. நச்சென்ற ஓவியங்கள்! நறுக்கென்ற அரசியல்
  மிக்க நன்றி

 10. ஈழம் இப்போது தமிழக-இந்திய தேர்தலில் ஓட்டு பிரச்சனையாகும அளவுக்கு மலிந்து விட்டது. தமிழர்களின் பிணத்தின் மேல் நின்று தமிழர்கள் ஓட்டு கேட்கிறார்கள். மக்களே, ஓட்டுக்கேட்டு வருபவர்களை என்ன செய்வதாய் உத்தேசம்?

 11. Congrats Comrades. Simple but effective Pics. I am seeing your site for the first time. Its very good

 12. கடலை சுருக்கி கோப்பையில் தந்தது போலிருக்கிறது ஓவியங்கள். மருதுவின் ஓவியத்தில் மறை பொருளாக இருக்கும் அரசியல், தோழர் முகிலனின் முகிலனின் ஓவியத்தில் பார்த்த நொடியில் சட்டை உலுக்கி கேள்வி கேட்கிறது.

  தோழமையுடன்
  செங்கொடி

 13. தோழர் மருது மற்றும் முசிலன் ஓவியங்கள் மிக அருமை. பல பக்க கட்டுரையை படிக்கும் உணர்வை இரு படங்கள் உணர்த்தியது வாழ்த்துக்கள். சித்ரகுப்தன்

 14. happy to know that marudhu is going to regularly draw here. please put mughilan’s drawings regularly too. these two artists can make many think.

 15. happy to know that marudhu is going to regularly draw here. please put mughilan’s drawings regularly too. these two artists can make many think.

  ரிப்பீட்டேய்ய்ய்!

 16. தோழர்களுக்கு ஒரு கோரிக்கை:
  கோக் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு செய்த்தை போல தோழர் முகிலன் ஈழத்துக்கான ஒரு ஓவிய்க்காட்சியை அமைக்க வேண்டும். அதை தமிழகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும். அணிதிரட்ட வேண்டும். தமிழக மக்கள் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அனையவிடக்கூடாது.

 17. how to express my feelings…….the drawings brings out the real situation shameless face of the so called tamil leaders …it touch my heart and ordered me to do something….i can not sleep…simply superp…

 18. அன்புள்ள ஓவியர் முகிலன்
  ஈழத்துமக்கள் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கும் தீயை
  ஓவியமாக வரைந்ததற்கு
  பலகோடி நன்றிகள்.

  தமிழ்வாழட்டும்!

 19. பிரெஞ்சு புரட்சிக்கு மூலாதாரமாக எழுத்து,ஓவியம் இன்னும் பல அறிவுபூர்வமான சிந்தனைகள் உதித்து வரலாறு மாற்றங்கள் கண்டது.அதே உக்கிரமான பிரதிபலிப்பாய் தமிழர்களிடையே ஒரு எழுச்சி தென்பட்டது.அரசியல் முட்டுக்கள் தமிழகத்தில் ஈழத்தின் வேகத்தைக் குறைக்கவே செய்திருப்பது வருத்தத்தை தருகிறது.

 20. அன்புள்ள ஓவியர் முகிலன்
  ஈழத்துமக்கள் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கும் தீயை
  ஓவியமாக வரைந்ததற்கு
  பலகோடி நன்றிகள்.

Comments are closed.