privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க - தலைமை பூசாரி பேட்டி

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

-

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என  எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?

ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்.
ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்.

அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.

ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?

பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை

குழந்தை ராமனின் கொட்டகை. அருகில் செல்ல இயலாத காரணத்தால் பின்புரத்திலிருந்து எடுத்த படம்
குழந்தை ராமனின் கொட்டகை. அருகில் செல்ல இயலாத காரணத்தால் பின்புரத்திலிருந்து எடுத்த படம்

வைக்க வேண்டியதாயிற்று. பாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது.  மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்பதில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.

இயல்பான மதச்சாபின்மை: இந்துக்களுக்கு தனிச்சிறப்பான கண்ணாடி வளையல் மற்றும் வழிபாட்டுக்கான பொருட்களை விற்கும் அயோத்தியிலுள்ள முஸ்லிம் கடை.
இயல்பான மதச்சாபின்மை: இந்துக்களுக்கு தனிச்சிறப்பான கண்ணாடி வளையல் மற்றும் வழிபாட்டுக்கான பொருட்களை விற்கும் அயோத்தியிலுள்ள முஸ்லிம் கடை.

எப்போது  ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்?

எப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் “உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா – சாரே ஜஹான் சே அச்சா” எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.

அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின்  நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா?

அவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.

யார் ராமர்கோவிலை நிர்வகிக்கின்றனர்?

பைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி “குழந்தை ராமனின்” பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.

அயோத்தி ராமஜென்ம பூமி அருகே இந்து சன்னியாசிகளுக்கு பாதரட்சைகளை தயாரித்து விற்கும் முஸ்லிம்: அயேத்தியின் உண்மையான குடிமகன்.
அயோத்தி ராமஜென்ம பூமி அருகே இந்து சன்னியாசிகளுக்கு பாதரட்சைகளை தயாரித்து விற்கும் முஸ்லிம்: அயேத்தியின் உண்மையான குடிமகன்.

அயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே?

அவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த  முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே! ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை; இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை.  இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.

இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2009

 1. indha poosari pondravarkalal manitha neyathai valarkka mudiyum,hindu muslim christin,mathathavarkal anaivarum othulaikkavendum,
  idhu pondra seithikal makkalai mulumaiyaka sentradayavendum,vinavukku thanks solli valthukindren.

 2. இந்த தலைமை பூசாரியை மீண்டும் ஒருமுறை நன்றாக பார்த்துக்கொள்கிறேன்
  இவர் இப்படி பேசிக்கொண்டேயிருந்தால், விசுவ இந்து பரிஷத் வெறியர்கள் இவரை உயிரோடு விடமாட்டார்கள். ஏனென்றால், அவர்களுடைய அரசியல் லாபத்துக்காக, என்ன செய்யவும் துணிபவர்கள் இவர்கள்! காட்டுமிராண்டிகள்.

 3. அருமையான கட்டுரை, சிறியதாக இருந்தாலும் பூசாரியின் பேட்டி யதார்த்தமாக இருந்தது. மாற்று மதத்தினரை மதிக்கும் பன்பாடு நம்மிடம் எப்போதும் உண்டு. சில Fringe Elements தான் கலவரம் செய்கின்றனர். மந்தை மனோபாவத்தில் மக்கள் சிக்கினாலும் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பியே வருகின்றனர்.

 4. உங்கள் கருத்துக்கள் தலிபான் கருத்துக்களுடன் ஒன்று படுகின்றன. நல்ல முயற்சி. தொடரவும். வாழ்த்துக்கள்.

 5. ஆர்.வீ அண்ணே எங்க போயிட்டிங்க ? வாங்க !
  இங்க கருத்த சொல்லுங்க நான் ஆவலா இருக்கேன்!

 6. May be the hindu movement activists could have been a deterrent in this pujari’s effort to earn from this temple. there is always another side to a story.

  how many sadhus and pujaris voiced concerns against hindu activists..? This guy must be odd one out

  PARAMS

 7. அந்தக் கோவில் பூசாரியை இந்துத்துவ பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். பால் தக்கரே தனது “சாம்னா”வில் பத்வா கொடுக்கப்போகிறான். ஏனென்றால் இந்து தீவிரவாதிகள் உருவாக வேண்டும் சொல்லி இந்திய இறையான்மையை காத்தவன் அவன் தான்.

 8. “நமக்கு மரியாதை தேவை என்றால் கேட்டு வாங்க கூடாது. தேடி வர வைக்க வேண்டும். போராட வேண்டும். அதை விடுத்து இரட்டை டம்ளர் முறை, கோவில் அனுமதி மறுப்பு என்று இதில் போராடுவதால் எந்த பயனும் இல்லை.

  பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீடு பற்றி எதற்கு குறிப்பிட்டுள்ளீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு கிடைத்த cut off mark ஒரு வேலை நான் MBC ஆகா இருந்தால் எனக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடம் வாங்கி குடுத்திருக்கும். நான் BC தான் . ஆனால் தனியார் கல்லூரியில் லட்சங்களை கொட்டி படிக்க வைக்கிற அளவு வசதி எல்லாம் இல்ல. அப்படி இருக்க அரசாங்க சட்டத்துக்கு எதிரா போராடுறது எப்படி ஒரு சாதிக்கு எதிரா என்று நீங்க சொல்றீங்க…

  பாபர் மசூதியை பற்றி பேசினா இங்க அவ்வளவு நல்லா இருக்காது. எனக்கும் இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். நீங்க மட்டும் இல்லாம உங்க நண்பர்களும் பின்னூட்டம் மூலம் அவர்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளார்கள்.

  உங்களது தனிப்பட்ட கருத்துகளுக்காக புராணங்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்துங்கள். இரண்டு கைகளும் நமது உடலில் தான் உள்ளது. வலது கையால் சாப்பிடவும் இடது கையால் கழுவவும் செய்வோம். அது எல்லாம் முடியாது நான் கழுவுற கைலதான் சாப்பிடுவேன், காலுக்கு கீழ போடுற செருப்பை தலைக்கு மேல தான் வச்சு நடப்பேன் என்றால், தாராளமாக…. உங்களை தடுப்பவர் யாருமில்லை…. ஆனால் ஒன்று எங்களது பிரச்சனையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.”

  • எனது தந்தையின் நண்பர் ஒரு தாழ்த்தப்பட்டவர் அவர் கோட்டாவின் பயன்கலை அனுபவித்து மிக பெரிய பதவிகள் வரை சென்றார் அடுத்தது அவரின் பிள்ளைகள் ஐந்து பேர் கோட்டாவின் பயன்களை அனுபவித்து அரசு வேலைகளை பெற்றுவிட்டனர் அடுத்து அவர்களின் பிள்ளைகளும் அனுபவிக்க போகின்றனர் , நாளை எனது மகன் கேட்பான் அப்பா சாதின என்ன அவர்களக்கு மட்டும் ஏன் சலுகை என்று என்ன பதில் சொல்வது
   இவர்களுக்கு சாதி கூடாது அனால் சலுகைகள் வேண்டும் கிறித்துவத்திற்கு செல்வர்கள் சமஉரிமைக்கு ஆனால் தாழ்த்தபட்டவர்களின் சலுகைகள் மட்டும் வேண்டும் என்ன கொடும சார் இது 

   • நண்பர் விஜய்
    உங்கள் தந்தையின் நண்பர் உங்களின் பார்வையில் தாழ்த்தப்பட்டசாதியராக தெரிகிறாரா இல்லையா?
    அவரால் தன்னுடைய சாதியினை பகிரங்கமாக சொல்லிக்கொள்ள முடிகிறதா? உங்களைப் போல். அதாவது நான் கவுண்டர், முதலியார், பிள்ளை செட்டியார் என்று பீற்றிக் கொள்வதைப் போல்? அதற்குத்தான் அந்த சலுகை புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போன்றவர்கள் சலுகைப் பெறும் தாழ்த்தப்பட்டவர்களை பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்துங்கள். அவர்களை சாதி ரீதியாக சிறுமைப்படுத்தப்படும் போது நீங்கள் துணைக்கு நிற்பீர்களா என்ன? ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் இழிவுப்படுத்தப்பட்டவர்களுக்கு சமூகம் செய்ய வேண்டிய நன்றி கடன் தான் இந்த இடஒதுக்கீடு.
    நீங்கள் சாதி ஏதிர்ப்பாளராக இருந்தால் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் உங்கள் மகனுக்கு நிச்சயம் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இடம் உண்டு.

    அடுத்தாக தாழ்த்தப்பட்ட மக்களுக்குதான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று நீங்கள் தவறாக நீனைக்கிறீர்கள். தமிழ் நாட்டில் இப்படிதான் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவகுப்பு( கவுண்டர், செட்டியார், முதலியார் போன்றவர்கள்) 30சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 20 சதவீதம் (வண்ணார், நாவிதர், வன்னியர் போன்றோர்) தாழ்த்ப்பட்ட வகுப்பினர் 18 மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் ஆக மொத்தம் 69 சதவீதம் இதில் எந்த வகுப்பினருக்கு அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க விஜயகாந்த் அவர்களே
    –வாகை–

 9. இந்த பூசாரி இவ்ளோ நாளா எங்கே போயிருந்தார்.
  காங்கிரஸ்காரன்கிட்ட காசு வாங்கிட்டு பேத்துறார்ன்னு தெரியுது.
  விசுவ இந்து பரிஷத், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டால் இந்துக்களுக்கு பகிரங்க ஆதரவு தரும் அமைப்புகள் உண்டா?
  மற்றவை எல்லாம் முஸ்லீம் போடும் ஓட்டுக்கும், முஸ்லீம் தரும் நோட்டுக்கு தங்களை விற்றவர்களே.
  ‘இந்து’ன்னாலே அலர்ஜியாகும் நம்ப கம்யூனிஸ்ட் கட்சிகளும் ‘The Hindu’ போன்ற பத்திர்க்கைகளுக்கும் தான் இந்த பூசாரி தேவை. அவர்களின் கண்டுபிடிப்புதான் இந்த பூசாரி. another kalyan singh..
  thats my two cents..

 10. I think our friend Priyan lends his ears only to Varun and Modi’s speeches and perhaps that prevented him from hearing many more dissent voices within hindu community. Please tell us in what way BJP and RSS are representing hindus. Is that by destroying mosques and churches? Gujarat, Kandhamal and Mangalore- do you think these places stand for the hindu awareness created by the RSS and want these to be repeated? Specify one problem of hindus which the other communities differ from it ?

 11. […] This post was mentioned on Twitter by Ragu and ஏழர, ஏழர. ஏழர said: அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி http://bit.ly/adt84o #Ayodhya #BabriMasjid […]

 12. Hello sir. , There is no correct discussion in the comments,. simply telling the BJP is Bad, or brahmins are bad. Is there any connection within this. Hello Mr. Vinavu . These interview is taken by you.? . Simply you are giving the interviews in this website. how we can consider as all are true.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க