Saturday, June 15, 2024
முகப்புஉலகம்ஈழம்ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! - படங்கள்

ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள்

-

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.

இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவகங்கையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது நான்கு தோழர்கள் கருப்பக்கொடி காட்டி முழக்கமிட்டனர். தோழர்கள் அருகே இருந்த காங்கிரசு அடிப்பொடிகள் தோழர்களை தாக்க வந்தனர். மேடைக்கருகே வந்த எதிர்ப்பைப் பார்த்து திகைத்து நின்ற ராகுல் அதன்பிறகு மொத்தம் பதினைந்து நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். பதட்டத்தில் அவர் சிதம்பரம் பெயரையும், கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கும் மறந்து மேடையை விட்டு இறங்க, உடனே சிதம்பரம் கையைப்பிடித்து இழுக்காத குறையாக ராகுல் மறந்து போனதைப் பேசுமாறு கூற ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.

சிவகங்கையை முடித்துவிட்டு திருச்சி உழவர் சந்தையில் ராகுல் காந்தி பேசுவதற்கு வந்தார். அவர் வந்த வாகன வரிசையை சாலையில் மறித்த பெண் தோழர்களையும் உள்ளிட்டு எழுபது தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு கருப்புக் கொடி ஏந்தினார்கள். எவ்வளவோ பாதுகாப்பு செய்து விட்டோமென இறுமாந்திருந்த போலீசு செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நிற்க அப்புறம் சகஜநிலைக்கு வந்து அனைத்துத் தோழர்களையும் கடுமையாக தடியடி செய்து கைது செய்தது. போலீசு வேன்களில் தோழர்கள் முழக்கமிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்த ராகுல் காந்தியை போலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையிலேயே வந்த மறியலைக் கண்டு உள்ளூர் காங்கிரசுக்காரர்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இந்த எதிர்ப்புக் குறித்து தமிழக காங்கிரசு வேட்டிகள் அவர்களது இளவரசரிடம் மறைப்பதற்கு முயலலாம். ஆனால் மத்திய உளவுத்துறை காங்கிரசுக் கோமானிடம் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிடும்.

ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு நிம்மதியாக வந்து செல்லமுடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருப்புக் கொடி எதிர்ப்பு ஒரு துவக்கம்.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

 1. ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி படங்கள்…

  ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு …

 2. not only for this srilankan issue, this kind of opposition must be shown for all the corrupted politicians and to those who divide us by religion. i welcome the move. these politicians are not our defenders but our blood-suckers

 3. http://www.hindu.com/2009/05/09/stories/2009050953630400.htm

  4 held for showing black flags to Rahul

  SIVAGANGA: The police on Friday arrested four persons for showing black flags to All India Congress Committee general secretary Rahul Gandhi.

  Sources said the persons owing allegiance to the Makkal Kalai Ilakkia Kazhagam and Puthiya Jananayaga Thozhilalar Munnani, who stood up along the Congress workers, suddenly showed the black flags when Mr. Rahul’s car was about to enter the venue, where he addressed the election meeting. — Special Correspondent

 4. ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி –

  http://thatstamil.oneindia.in/news/2009/05/09/tn-72-persons-including-mansur-ali-khan-arrested.html

  நேற்று திருச்சியில் ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தென்னூர் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடந்தது. இதற்காக அவர் காரில் உழவர் சந்தை திடலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

  அப்போது, செட்டி பாலம் அருகே, மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் கறுப்புக்கொடியுடன் வந்தனர். ராகுல் காந்தியைக் கண்டித்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 52 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.

  அதேபோல, 19 லதிமுக தொண்டர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கருப்புக் கொடி காட்ட காத்திருந்தார். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பி்ன்னர் விடுவித்தனர்.

 5. In vanny people including children are starving,Today (May 8/09)they were being killed brutally by shelling while they were having their only meal of the day, rice soup(kangi).Terrorist,Sri-lankan army preparing for a great offensive,hardcore tterrorist Gothabaya told to use any heavy weapons whether they are banned or not, including cluster bombs,chemical bombs and burning bombs.These were given by Gandhi Thesam, India to kill the innocent tamils in Vanny.Recently a convoy of 70 trucks took arms to send them to Vanny to kill the dyeing tamils by starvation,deseases,injuries and by barbaric brutal attacks of indian army supported terrorist Sri-Lankan army.When Tamils in Vanny are In this grave situation and at the verge of being completely masscred (still the saviors of Tamils LTTE defending them) Rahul Gandhi,a world lier speaks in the election meetings that because of their effort the war is stopped.How he tries to cheat my brothers and sisters in Tamil nadu to get vote.When I saw the photographs of agitation with black flags against Gandhi family each and every Tamil all over the world feel proud of our Tamil brothers and sisters living in Tamil nadu.Kalaingar Karuunanithy may abondon the Tamils in Vanny,but our blood related Tamil brothers and sisters are not and wiill not.The Congress party and the TMK are full responsible for brutal killings and injuring of more than 20 thousand people and children.Several hundres of children are made orphans,many hundred of young men and women are killed and raped to death by brutal ,terrorist Sri-Lankan army,more than 200,000 people made to live in concetration camps and daily struggle to get one meal per day.Many young women’s dead bodies are scattered near and in the lakes after being raped.No inquiry ,no judicial inquiries about the deaths.Sir.Karunanithi iyah as a Tamil, how could you bear up all these brutalities and attrocities.In Rameswaram coastal area poor fishermen 600,our brothers were killed by terrorist Sri-Lankan navy.What action was taken by Indian rulers against Sri-Lankan navy.Why are you calling yourself as super power in South East Asia when you can’t safe yor own citizen. Dear brothers and sisters don’t be proud to be an Indian.As far as Indian rulers are concerned Your life has no value.The Super power India can only kill the innocent, helpless EELAM TAMILS. It is bleeding in each and every one of the Tamil’s chest.Your betrayal can not be for given.You are a living dead man.As an honourable and genuine Tamil my brothers and sisters teach a strong lesson to Congress party and TMK. in the coming election.In future any party which betrays Tamils and Tamil community should not dare to do this type of merciless act.We the Tamils through out the world will never forget the Indian rulers who supported the Barbaric,terrorist Sri-Lankan govt to kill our brothers,sistrers and children.We will never.

 6. தோழர்களே!
  கருப்பு தோரணம் கட்டி !
  செருப்பால் அர்ச்சனை செய்து !
  எச்சிலால் அபிஷெகம் செய்திருக்க வேண்டாமா !
  இந்த கேடு கெட்ட காங்கிரசு நாயை !

 7. குழக்கொழுந்திற்கு எதிரான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

  இந்த குலக்கொழுந்து, கூட்டணியில் இருக்கும்பொழுதே, தேர்தலுக்கு பிறகு உள்ள நிலைக்கு, அதிமுகவுக்கு தூதுவிடுகிறது. தேர்தல். குறைந்தப்பட்ச கூட்டணி தர்மம் கூ இல்லை.

 8. தோழர்களே!
  கருப்பு தோரணம் கட்டி !
  செருப்பால் அர்ச்சனை செய்து !
  எச்சிலால் அபிஷெகம் செய்திருக்க வேண்டாமா !
  இந்த கேடு கெட்ட comunist NAIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII kalai …….

  • உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை இப்படி ஒரு இன அழிப்பு எங்கும் நடந்து இருக்காது . ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற விஷயத்தில்
   பாகிஸ்தான் , சீன உளவு நிறுவனங்கள் இந்தியாவில் கால் ஊன்ற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது (இதன் பின் விளையுவு எப்படி இருக்கும் தெரயுமா?)
   முக்கிய குற்றவாளிகள் இந்த விஷயத்தில் தப்பிக்க உதவியது , இதற்கெலாம் காரண கர்த்த யார் என்று தெரிந்தும் ஆதரிக்கும் , மானக்கேட்ட, மந்தனை இருபதற்கே தகுதி அற்ற நாய் கலை எந்த செருப்பால் அடிப்பது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க