Thursday, July 18, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம் - பதுங்கு குழி - ம.க.இ.க வின் குறும்படம்

ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம்

-

வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார்.

போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பதாயிரம் மக்கள் இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. இலங்கை இனவெறி ராணுவம் இதுவரை கொன்ற கணக்கிற்கு அளவில்லை, இனி கொல்லப்போவதற்கு வரம்பும் இல்லை. குண்டு வீச்சிலிருந்து தப்பித் தவறி வரும் மக்களும் கூட குடிநீரும், உணவுமின்றி பட்டினிச்சாவை எதிர் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள். அன்றாடம் அவலத்தையும், மரணத்தையும் எதிர் கொண்டு இதற்கு விடிவே இராதா என உழலும் அந்த மக்களின் துடிப்பை ஒரு சில காட்சிகளால் உயிர்த்தெழவைக்க முயல்கிறது இந்த காட்சிப் படிமம்.

ஈழத்தின் துடிப்பு எந்த அளவுக்கு நமது உணர்ச்சியை தட்டி எழுப்புகிறதோ அந்த அளவுக்கு நாம் சரியான அரசியல் நிலைப்பாட்டோடு போராடவேண்டும். அதை மறுப்பதற்காகவே தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் ஈழத்தை வெறும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக மாற்றயிருக்கின்றன. ஜெயவும், கருணாநிதியும் யார் ஈழத்திற்காக பிடுங்கப் போகிறார்கள் என்ற கூச்சலோடு சண்டையிடும் நேரத்தில் இந்திய அரசின் உதவியோடு ஈழத்தில் தமிழினத்தை கருவறுக்கும் வேலையை ராஜபக்ஷே அரசு ஆர்ப்பாட்டத்துடன் செய்கிறது.

இந்திய அரசையும், அதற்கு உதவியாய் நேரடியாகவும், மறைமுகமாகவும் பரப்புரை செய்கின்ற ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளையும் எதிர்கொண்டு சமர் புரிவதற்கு நமக்குள்ள ஒரே ஆயுதம் தேர்தல் புறக்கணிப்புதான் என்ற கடமையையும் இந்த வீடியோப்படம் நினைவுபடுத்துகிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். ம.க.இ.க மையக் கலைக்குழு தயாரித்திருக்கும் இந்த இசைச் சித்திரம் தமிழகத்தின் பலபகுதிகளில் நடந்த எமது பொதுக்கூட்டங்களில் மேடை நிகழ்வாக நடத்தப்பட்டது.

 1. ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம் – வினவு!…

  ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்…

 2. ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம் – வினவு!…

  ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்…

 3. ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம் – வினவு!…

  ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்…

 4. முடிந்தவரை ஈழத்தமிழரின் துயரினை சொல்ல விளைந்து இருக்கிறீர்கள். நிஜம் இன்னும் மோசமானது ……..உங்கள் முயற்சிக்கு பாராட்டு ……நன்றாக் நடித்து இருக்கிறார்கள். இத்தகைய முயற்சியின் மூலம் நம் ஈழ போராட்டம் விரைவு பெற வேண்டும் …….தமிழக உறவுகளுக்கு நன்றி .உங்கள் தமிழ் உணர்வு எம்மை நெகிழ வைக்கிறது .நிலாமதி

 5. அன்பின் வினவு,

  ஒரு வழியாக நானும் இறுதியாக இந்த மனநிலைக்கு தான் வந்து விட்டேன். 49-O ஒரு அருமருந்து என மெத்த படிச்ச மூஞ்சுறுகள் Cyber Bullying பண்ணின. 49-O வால் தற்போதைய கேடுகெட்ட அரசியலை சரி செய்யலாம் என இணையத்தில் பரப்புரை செய்தனர். அதை நன்கு ஆராய்ந்து இங்கே அதன் உண்மை நிலையை அறிவித்துள்ளேன். உங்களின் கருத்தை அறிய தரவும்.

  49-O என்னும் உதவாக்கரை சட்டம் !!!
  http://gnuismail.blogspot.com/2009/05/49-o.html

  with care and love,

  Muhammad Ismail .H, PHD,
  http://gnuismail.blogspot.com

 6. பெரும்பான்மை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலமாக, இந்த தேர்தலினால் ஆகப்போவது ஏதுமில்லை என உணர்ந்து இருக்கின்றனர். இந்த படித்த அறிவாளிகள் “அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்! இவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள்” என சொல்லும் பொழுது பொசு பொசு என்கிறது. இவர்கள் திருந்த பல காலமாகும்.

 7. 1.
  2. அகிம்சை வழியில் போரடுபவர்கள் மிதவாதிகள்.
  மிதவாதம் தோற்கும் போது ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் தீவிரவாதிகள்.
  தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒன்றாக குழப்பி கொள்கிறோம்
  பிரபாகரன் தீவிரவாதி ஆனால் பயங்கிரவாதி அல்ல.
  விடுதலை போராட்டம் இரண்டு வகை ஒன்று மிதவாதம் மற்றொன்று தீவிரவாதம்,
  நம் நாடு காந்தியின் தலைமையில் மிதவாத பாதையில் சுதந்திரம் அடைந்தது.அதற்கு காரணம் மிதவாத போராட்டத்தை மதித்து ,நம்க்கு விடுதலை கொடுத்தார்கள் பிரிட்டிஷ் காரர்கள்.
  ஆனால்,இலங்கையில் மிதவாதம் தோற்றுவிட்டது,அகிம்சை வழியில் போராடியவர்களை அடிக்கினார்கள்.அவர்களை கொன்றார்கள்.
  இன படுகொலையில் ஈடுபட்டார்கள்.ஆனவே அங்கு மிதவாதம் தோற்று தீவிரவாதம் உருவானது.
  இரண்டும் போராடும் முறை தான்.ஆனால் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
  தீர்வு ,ஆதிக்க சக்திகள் நம் போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு தீர்வு வழங்கினால்,பிரச்சனை தீரும்
  மிதவாத போராட்டமோ அல்லது தீவிரவாத போராட்டமோ இல்லாமல் போகும்.
  ஆக்வே,பிரபாகரன் பயங்கிரவாதி அல்ல அவன் போராளி அல்லது தீவிரவாதி என்றூ சொல்லலாம்.
  சுபாஷ்சந்திரபோஸ்ம் ஒரு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தீவிரவாதி தான்.
  ராஜிவ் காந்தியின் மரணம் எனக்கும் வேதனை அளித்தது.ஆனால் அந்த ஒரு கொலைக்காக ,ஈழத்தில் ஆயிரகணக்கான குழந்தைகள்,முதியவர்கள் ,பெண்கள் கொல்லபட வேண்டுமா.
  ஈழதமிழ் மக்கள் அகதிகளாக காடுகளிலும் ,சமவெளிகளிலும் விலங்குகள் போல் எந்த வசதியும் இன்றி உண்ண உணவு இன்றி வாழ வேண்டுமா?
  ஆயிரகணக்கான தமிழர்களை கொன்றால் தான் சோனியா குடும்பத்தின் கொலை வெறி அடங்குமா?
  புலிகளை கொல்கிறேன் என்று சொல்லி இலங்கையில் சிங்கள இராணுவ இன படுகொலை செய்து கொண்டிருக்கிறது,
  வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்று உபதேசம் செய்வது மற்றவர்க்கு தானா?
  ராஜிவ் காந்தி அனுப்பிய அமைதிபடை அங்கு சென்றதும் இலங்கை அரசின் கூலி படையானது.அவர்கள் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களை கற்பழித்தார்கள்,எத்தனை ஆயிரம் ஆண்களை கொன்றார்கள்.
  அப்போது அவர்கள் ஈழதமிழர்கள் எப்படி கொதித்திருப்பார்கள்.
  சோனியாகாந்தியே நீ கணவரை இழந்ததற்காக இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களின் தாலியை அறுக்க போகிறாய்.இன்னும் எத்தனை ஆயிரம் குழந்தைகளிம் இரத்தம் குடிக்க போகிறாய்.
  ஈழதமிழர்களின் உரிமை போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டாய்.
  புலிகள் ,தீவிரவாதிகள் அல்ல அவர்கள் போராளிகள்.அவர்களை ஒடுக்கிட முடியாது.
  ஒரு பிரபாகரன் போனால் ,ஓராயிரம் பிரபாகரன் தோன்றுவார்கள்.
  ஈழதமிழர்களுக்கு உரிமை பெற்று தருவார்கள்.
  அவர்களின் சுதந்திர தாகத்தை அணைக்க முடியாது.
  சோனியாகாந்தியும் அவர்களுது குடும்பமும் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.
  இனி எல்லா மாநிலத்திலும் மாநிலகட்சிகளே வெல்ல வேண்டும்.
  அப்போது தான் வரும் காலத்தில் மாநிலத்திற்கு சனநாயக முறையில் நாம் மாநில ச்யாட்சி பெற முடியும்.
  நம்மிடம் இருப்பது வாக்கு.அதை தமிழர்களே சரியாக் பயன்படுத்துங்கள் .
  காங்கிரஸை அணைத்து இடங்களிலும் தோற்கடியுங்கள்.
  வெல்க ஈழம்.வாழ்க ஈழதமிழர்.
  இந்தியாவில் சனநாயகம் என்ற போர்வையில் ,மன்னர் ஆட்சி நடக்கிறது.
  நேரு குடும்பத்தில் பிற்ந்த ஒரு தகுதி போதும் இந்தியாவை ஆள்.
  பிறகு நம்க்கு எதற்கு ஓட்டு உரிமை.
  ராகுல் காந்தியின் பேச்சு கண்டிக்கதக்கது.
  பழி வாங்கும் தனி மனிதனுக்கு வேண்டும் என்றால் ,சரியாக இருக்கலாம்.
  ஆனால் ஆனால் ஒரு நாடாக சிந்திக்கும் போது,அது கூடாது.
  ராஜிவ் மரணத்தை வைத்து ஈழதமிழரின் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்த கூடாது.
  இந்தியாவில் பல மொழிகள் உள்ளன.இங்கும் இந்தியை மட்டும் அர்சு மொழியாக முன் வைக்கப்பட்டு அணைத்து மாநிலங்களிலும் திணிக்கதான் செய்கிறார்கள்.
  ஆனால் இந்த அளவுக்கு வன்முறை கிடையாது.
  தமிழர்கள் இதை ஏற்க வில்லை.இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இரு மொழி கொள்கை.ஆங்கிலம்,மற்றும் தாய் மொழி மட்டும் படிக்கலாம்,.
  சரியாக புரிந்து கொள்ளவும் ,தாய் மொழி என்று சொன்னேன் தவிர தமிழ் என்று சொல்லவில்லை.
  தெலுங்கை தாய் மொழியாக கொண்டவன் ,ஆங்கிலம் ,மற்றும் தெலுங்கு படித்தால் போதும்.தமிழ்நாட்டில் கூட தமிழை பிற மொழியினர் மீது திணிக்க வில்லை.
  ஆனால்,இலங்கையில் இரண்டு மொழி தான் ,தமிழ்ர்க்கு அவர்கள் வாழும்பகுதியில் தமிழை பயன்படுத்தி கொள்வதில் என்ன நஷ்டம்.
  ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்.ஒன்றும் புரியவில்லை.
  மலேசியாவில்,சிங்கபூரில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.ஆனால் அங்கு எல்லாம் இப்படி இன படு கொலை நடப்பதில்லை.
  மொழி பற்று இருக்கலாம் ஆனால் அது வெறியாக மாறகூடாது.அது நம் மனித தன்மையை இல்லாமல் ஆக்க கூடாது.ஆனால் ,சிங்களவர்கள் அதுவும் அனபை,கொல்லாமையை போதித்த பொள்த்தர்கள் இப்படி ஈழதமிழர்களை கொன்று இன படுகொலையில் ஈடுபடுவது வேதனை
  Reply
  3. வெங்கடேஷ்
  Posted on May 9, 2009 at 3:17 am
  ஆடு,மாடு,மற்ற விலங்குகள் ,செடி ,கொடி,நச்சு பாம்புகள் வாழலாம் ஒரு நாட்டில் ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட மனித இனம் சுதந்திரமாக வாழகூடாதா?
  விலங்குகள் வாழ் ,காடுகளை அழிக்காமல் காத்து வருகிறது உலக நாடுகள்.
  ஆனால் ,ஈழ தமிழன் வாழ் இடம் இல்லை.
  இங்கு மட்டுமலல ,அது பாலஸ்தீனம் என்றாலும் உலகில் வேறு பகுதியாக இருந்தாலும் சிறுபாண்மை இனம் எனப்தற்காக அவர்களை அழிக்க நினைப்பது தவறு.
  எல்லா மொழியின்ரும் எல்லா மதத்தினரும் கலந்து தத்தம் உரிமையுடன் சுதந்திரமாக் வாழும் போது தான் உலகமே அழகாக இருக்கும்.
  Reply
  4. வெங்கடேஷ்
  Posted on May 9, 2009 at 3:20 am
  காங்கிரஸ் இனி தமிழகத்தில் இருக்க கூடாது.தொண்டன் என்று யாரும் இருக்க கூடாது.காங்கிரஸ் தோற்கடிக்க பட வேண்டும்.
  இன்று இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதியாக திரிகிறான் ஈழ தமிழன்,.காரணம் சிங்கள பெரும்பாண்மை மக்கள் இலங்கை தங்களுக்கே சொந்த்ம் என்று எண்ணுவதால்.ஈழதமிழர்களை அங்கிருந்து விரட்டி அகதிகளாக்கி துரத்துகிறான்.
  நாளை இதே நிலை நமக்கும் வரலாம்.இந்தியா,இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று இங்கு ஆளும் வட மாநில அரசியல் வாதிகள் எண்ணூகிறார்கள்,
  இலங்கையில் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை ,நாளை இந்தியாவில் உள்ள தமிழனுக்கும் நாளை ஏற்படலாம்.
  நாம் அணைவரும் இந்தியர் என்றாலும்,நாம் வாழும் நிலபரப்பு நம்முடையது.நாம் தமிழர்கள் ஏதோ வட இந்தியர்களின் தயவில் அவர்கள் இடத்தில் வாழவில்லை.
  இதை அவர்கள் உணர்ந்தால்,நாம் இந்தியராக ஒன்றாக வாழ்வதில் வருத்தம் இல்லை.
  ஆனால்,சிங்களவர்கள் போல் எண்ணினால் ,.அது ஒற்றுமையை பாதிக்கும்.
  ஈழ தமிழன் கேட்பது,அவன் வாழும் நிலபரப்பில் அவன் கலாச்சாரத்தை ,பண்பாட்டை,வாழ்க்கைமுறையை ,மொழியை பின்பற்றி வாழும் உரிமையை தான்.
  அதை சிங்கள அரசு எப்படி மறுக்க முடியும்.
  சிங்கள வன்முறையாளர்களுக்கு ஆதரவு தரும் சோனியாகாந்தி,தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்போம்.காங்கிரஸை தோற்க்டிப்போம்.
  தமிழன் மானம் காப்போம்.நாம் இந்தியர் என்றாலும்,தமிழர்.அதை வட இந்தியனுக்கு புரியவைப்போம்.
  ஈழதமிழர்கள் சிங்கள இராணுவ தீவிரவாதிகளால் கொல்லபடுகிறார்கள் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

 8. தமிழக உறவுகளே,

  உங்களுக்குத்தான் தெரியும், யாருக்கு வாக்களித்தால் அல்லது வாக்களிக்காவிட்டால் ஈழத்தில் மாண்டவர் போக மீதம் உள்ளவரை காப்பாற்றுவார்கள் என்று.

  இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் என்று பாகுபாடின்றி காங்கிரஸ் இந்தியாவுக்கு மாற்றி மாற்றி நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதன் அர்சியல் பின்னணி என்னவென்று ஞாமறியோம் பராபரமே. என் அறிவுக்கு எட்டிய வரையில், ஈழத்தமிழனை கொன்று குவிப்பதற்கு காங்கிரஸ் இந்தியா உதவியதை சிங்கள ஆட்சியாளர்கள் நன்றிக்கடனோடு நினைவுகூருகிறார்கள் என்று தோன்றுகிறது.

  உறவுகளே ஒன்றை மறக்காதீரகள். என்றாவது ஒரு நாள் என் இனத்தின் அவலச்சாவு சரித்திரமாகும் போது காங்கிரஸ் இந்தியாவின் பங்களிப்பு (Proxy War) மறக்காமல் சரித்திரமாக்கப்படும்.

  சாட்சியின்றி ஈழத்தில் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறான் ஈழத்தமிழன்; ஆனால், காங்கிரஸ் இந்தியாவின் Proxy War இற்கு நிறையவே சாட்சிகள் இருக்கின்றன. உங்களால் ராஜீவ்காந்தியின் சாவை மறக்கமுடியாதென்றால்; மன்னிக்கவும், எங்களாலும் காங்கிரஸ் இந்தியாவின் கயமைத்தனத்தை, நயவஞ்சகத்தை இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.

 9. ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம் – வினவு!…

  ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க