Thursday, September 19, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

-

ராமதாஸ்-ராமதாசு-ராமனடிமைபடத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சந்தர்ப்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும், காரியவாதத்திலும்,  பச்சோந்தித்தனத்திலும், பொறுக்கித்தின்பதிலும் கொட்டை போட்டவர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இந்த வாதங்களில் ராமதாசை மிஞ்சமுடியாது என்றாலும் அது மிகையல்ல.

தனது குடும்பத்தினர் அரசியலுக்கும் கட்சிப் பதவிகளுக்கும் வரமாட்டார்கள் என்றும் அப்படி வந்தால் தன்னை முச்சந்தியில் செருப்பால் அடிக்கலாம் என்று சவடால் அடித்தவர், தமிழனுக்கு மறதி அதிகமென்பதாலும், நினைவு வந்தாலும் அடிக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையாலும் தனது மகன் சின்னய்யா அன்புமணியை வாரிசாக்கி கேபினட் அமைச்சராக்கியும், தமிழோசை நாளிதழ், மக்கள் டி.வி அனைத்திலும் தனது குடும்பத்தினரை வைத்தும் பா.ம.க கம்பெனியை நடத்துகிறார்.

பா.ஜ.க அமைச்சரவையிலும், காங்கிரசு அமைச்சரவையிலும் வளமான துறைகளைப் பெற்று தைலாபுரத்தின் சொத்துக்களை பிரம்மாண்டமாக விரிவாக்கினார். குறுகிய காலத்திலேயே நாளிதழ், டி.வி என தனது சுயநலத்தையே பொதுநலமாக பிரச்சாரம் செய்ய பலகோடி முதலீட்டில் உருவாக்கிக் கொண்டார். இவையெல்லாம் தொலைந்து போகட்டும்.

தற்போது ஈழப்பிரச்சினையில் காங்கிரசும், கருணாநிதியும் துரோகமிழைத்துவிட்டனர் என அவர்களோடு கூடிக்குலாவியதை மறைத்துவிட்டு வெட்கம் கெட்ட முறையில் கூச்சநாச்சமின்றி பேசிவருகிறார். அவரது மக்கள் தொலைக்காட்சியில் தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று 12.05.09 முழுவதும் ஈழத்தின் துயரக்காட்சிகளை திரும்பத் திரும்பக் காட்டி மாம்பழத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். ஈழத்தின் மக்கள் பிணங்களாகவும், ஊனமுற்றவர்களாகவும், அழுது அரற்றுபவர்களாகவும் இருக்கும் காட்சியை இதயத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் காட்டி இந்தப் போரை நிறுத்தமுடியாத, போருக்கு உதவி செய்கின்ற இந்திய அரசு, காங்கிரசு கட்சி, இவர்களுக்கு துணைபோகின்ற கருணாநிதி ஆகியோரை இந்தத்தேர்தலில் விரட்டி அடிக்கவேண்டுமென அந்தப் படத்தில் காட்டப்படுகிறது.

காங்கிரசுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்திருந்த ஒளிக்குறுந்தகடுகளை மக்களிடம் காட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை வைத்து அந்தக் குறுந்தகடுகளை திரும்பத் திரும்ப மக்கள் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். இங்குதான் ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களை வைத்து கறிவியாபாரம் செய்யும் ராமதாசின் ஆபாசம் திருத்தமாக வெளிப்படுகிறது.

2006இலிருந்தே இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரை துவக்கி அதன் பெயரில் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று வருகிறது. சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் அந்த இன ஒழிப்புப் போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. இதற்கு ஒத்தூதுகின்ற மத்திய அரசில் இவ்வளவு நாட்களும் பொறுக்கித் தின்ன ராமதாசின் அமைச்சர்கள் எவரும் காபினட் மீட்டிங்கில் கூட ஈழத்தைப் பற்றி வாய்திறந்ததில்லை. இந்த உண்மையை செட்டி நாட்டு சிதம்பரம் போட்டுடைத்தார்.

ஆக ஐந்து ஆண்டுகளும் சம்பாதித்துவிட்டு, அப்போது ஈழத்தின் மக்களைக் கொல்லும் பணிக்கு உதவும் இந்திய அரசில் பங்கேற்று விட்டு அல்லது ஈழத்தின் மக்களை அழிக்கும் பணிக்கு தலைமையேற்றுவிட்டு இப்போது அதுவும் தேர்தல் அறிவித்த பிறகு அ.தி.மு.க கூட்டணியில் சேருவதற்காக பதவி விலகி அப்போதும்கூட காங்கிரசு, மன்மோகன் சிங், சோனியா பற்றி எந்த விமரிசனமும் செய்யாததோடு நிற்காமல் அவர்களை மனங்குளிரப் பாராட்டிவிட்டு இப்போது தேர்தலுக்காக அவர்கள் துரோகிகளாம், அதற்காக தமிழக மக்கள் ராமதாசுக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் தமிழனே அந்த அளவுக்கு நீ கேனயனாக இருக்கிறாய் என்றுதானே பொருள்?

புதுவையில் திரைப்படத்துறையினர் நடத்திய கூட்டத்தில் இயக்குநர் சீமான் உணர்ச்சி பொங்க ஈழத்தின் துயரை வருணித்துவிட்டு அதை துடைக்கவும், அதற்கு காரணமான காங்கிரசைத் தோற்கடிக்கவும் மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இவ்வளவு நாளும் அந்த மாம்பழம் கையுடன் இணைந்து ஈழத்தில் குண்டு வீசிய கதை சீமானுக்கு தெரியாதா? காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டுமென்றால் அந்த காங்கிரசுக்கு முந்தாநாள் வரை தொள்கொடுத்திருக்கும் ராமதாசை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசியிருந்தால் சீமானின் பேச்சில் அர்த்தமிருக்கும். இல்லை நாளைக்கே தேர்தல் முடிந்து ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி சேரமாட்டார் என்பதற்கு அவரது ட்ராக் ரிக்கார்டே ஆதாரத்துடன் பதிலளிக்குமே?

இப்போது நம் கேள்வி ராமதாசுக்கல்ல, மாறாக அவரை சொக்கத்தங்கமாக தமிழீழத்தின் புனிதத் திருவுருவமாக கட்டியமைக்கிறார்களே தமிழின ஆர்வலர்கள் அவர்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். நாளைக்கு தேர்தல் முடிந்ததும் பா.ம.க வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்வோம். அப்போது ராமதாசு ஈழப்போரை நிறுத்தியாக வேண்டும். இல்லையேல் அரசியல், பதவிகள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். இவை நடக்காத பட்சத்தில் ராமதாசுக்கு வால்பிடிக்கும் திருப்பணியில் ஈடுபட்டவர்கள் அதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியவர்கள் இப்போதே தங்களுக்குரிய தண்டனை என்ன வேண்டும் என்பதை அறிவித்துவிட்டால் நல்லது.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. குழலி உள்ளிட்ட வன்னிய சாதி வெறியர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகே வருமாறு விழாக்கமிட்டியினரால் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்..

    • vanniyar is not சாதி வெறியர்கள் they are brave man’s , vanniyar is ancient tamil peopeles in tamilnadu, and srinlanka,
      Dr.Ramdass aiya is great, he always true support srinlank issues, he better than M.Karunathi and jayalitha,

    • படையாட்சியை குத்தம் சொல்லாதே. முடிந்தால் கருணாநிதியை திருத்தப்பார். வெறுமனே வன்னியன் என்று சொல்லாதே , வீர வன்னியன் என்று கூறு.

      • என்ன நெனச்சுனுகிற படயாச்சி,

        ஆமா நீனு எந்த ஊரு பென்னாகரம் பக்கம் வந்தியா , போ போ பாமக காரனுக்கெல்லாம் ஆப்பு வக்கறாங்களாம். நீ வீர வன்னியன்னு பேச ஆரம்பிச்சின்னா. நானு உங்க தலிவரு ஜீகே மண்ணி அதான் வீஈஈஈஈர வன்னியன் அந்த சாதி மக்களாலேயே தொரத்துன கதய சொல்லுவேன் .

        வேணுமா இன்னும் பேசுடி என் ராஜாத்தி இன்னும் கூஜா தூக்குறீயே ஆமா வன்னியன் வன்னியன்ன்னு பேசுறீயே .அங்கன தருமபுரியில மட்டும் திமுகவுக்கு மொத்தமா ஓட்டு குத்தீட்டாங்களாமா.

        படயாச்சி என்னதான் நீனு நாயாகத்துனாலும் அன்பு மணி அடிச்ச கொள்ளயில கொஞ்சம் கூட ஏன் தொட்டு நக்க கூட விடமாட்டான்.

        • முட்டாள் முருகா உன்ன மாதிரி ஜால்ராக்கலாலும்( தமிழினத்தை காட்டி கொடுக்கும் புரோக்கர்களால்தான் )
          100 ரூபாய்க்கு ஓட்டு வாங்கி ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய கருணாநிதி கும்பளின் கை கூளியே தமிழ் நாட்டில் என்ன வாழது திரும்பிய பக்கமேல்லாம் டாஸ்மாக் மதுபான கடைகள் இளைஞர்களை ஒழிக்க, வீட்டுக்கு வீடு இலவச தொலைக்காட்சி பென் சமுதாயத்தை சீரழிக்க, ஆசியாவின் 4 வது பணக்கார குடும்பம் யாருடையது, 1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், பென்னாகரத்த பத்தி பேசுர வந்து பார் பென்னாகரம் நானும் பென்னாகரம் தான் திமுக சமஉ யோக்யதயுமம், திமுக வின் வளர்ச்சித்திட்டமும் கிளியுது தருமபுரி மாவட்டம்,
          உண்ணைப் போல எட்டப்பன்களும் கூட்டிக்கோடுக்கும் முருகன்கள் மட்டும் தான் திமுகவில் வளர முடியும், சோனியா காலை நக்கும் கம்பேனிகள் தமிழ் நாட்டை ஆண்டது போதும் என்று தமிழர்கள் விரைவில் உணர்வார்கள், அப்போது ஒரிஜினல் தமிழன் ஆட்சி மலரும், தமிழீழமும் மலரும்.

  2. தமிழகத்தின் எதார்த்த சூழ்நிலையைப் பொறுத்த வரை ஈழ விடயம் பொது மக்களை குழப்பும் ஒரு விடயம் மாத்திரமே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதையாவது கூறி மக்களை குழப்புவதனால் ஈழப் பிரச்சினை அடுத்த நாட்டுப் பிரச்சினை என்று கை கழுவிச் செல்லும் நிலைதான் மேலோங்கி வருகிறது.

    இவர்களுக்கு சற்றும் குறையாமல் அவ்வப்போது சில நக்கீரர்கள் விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்தியை கொளுத்தி விடுவதும் பின்னர் திடீரென “நடு நிலை” நாயகங்களாக மாறுவதும், ஆ.வி – ஜு.விக்கள் கனவுக் கட்டுரைகள் மூலம் “இந்தப் படை தோற்காது” என்று மறைமுகமான உளவியல் தாக்கங்களை நடத்துவதும், “மலர்கள்” எல்லாம் இராணுவ மந்திரம் ஓதுவதுமாக தமிழக மக்களை எல்லோருமாக சேர்ந்து அடியோடு குழப்பி வைத்திருக்கிறார்கள்.

    மக்களை குழப்புவதில் ராமதாசின் பங்கு யாருக்கும் குறைவானதில்லை, ராமதாஸ்,வைகோ உட்பட அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.

    இது தொடர்பாக க.கோ.ச கூட்டணிக்கே வெற்றி ! என்ற பதிவொன்றும் எமது தளத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, விரும்பியவர்கள் எம் தளத்தில் அதைப் பார்வையிடலாம், வினவு தளத்தார் தங்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய வழிமுறைகளைத் தெரிவித்தால் இங்கேயே நேரடியாக எமது கருத்துக்களைக் கொண்டுவர விரும்புகிறோம்.

    எமது பதிவில் இருக்கும் கருத்துக்களை வாசித்துப் பாருங்கள், விரும்பினால் உங்கள் கருத்துக்களையும் அறியத்தாருங்கள்.

  3. மிகச்சிறப்பான கட்டுரை

    ராமதாசுக்கு தண்டனை தர தேவையில்லை ஏனெனில் அவர் ஏற்கனவே தான் மானங்கேட ஈனங்கெட்ட ஒரு விபச்சாரி என்பதை ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டார்.ஏற்கனவே பு ஜ வில் ராமதாஸ் பற்றி வந்த கட்டுரைக்கு பாமக வினர் சொன்னார்கள் ” நாங்க மட்டுமா கொள்ளையடிச்சோம் எங்களை மட்டும் ஏன் திட்டுறீங்க” என்று

    சீமான் கொளத்தூர் மணி வகையறாக்கள் கருணாநிதிக்கு நியாயமான முறையில் தண்டனை வழங்கப்போகிறார்களாம். உண்மையில் ஈழத்தில் போரை நிறுத்து அப்புறம் தேர்தலை நடத்து என அறிவிக்க துப்பில்லாதவர்கள் வீரர்களைப்போல் சீன் காட்டிக்கொண்டு திரிகிறார்கள்.பார்ப்பன செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்துகிறார்கள்.
    பெரியாரியம் பேசி அதை விற்பனை சரக்காக வீரமணி மாற்றியது போல இவர்கள் பாசிசத்துக்கு வால் பிடித்து இன்னும் அதிகமாய் தன் பங்குக்கு ஈழமக்கள் தலையில் குண்டு வீசுகிறார்கள்.யார் குற்றவாளி?

    காங்கிரசு மடும் தானா? இது இந்திய மேலாதிக்க நலனுக்காக இலங்கையை கொள்ளையடிக்க தரகு அதிகார வர்க்கம் நடத்தும் போர்.ஏதோ சோனியாவுக்கு கூட துணையில்லாததால் இப்போரை நடத்துவதாக சித்தரிப்பது பச்சை துரோகம்.

    • Dr.Rmadss is great tamil leader.
      here some mother fuking fellow against shoudting Dr.Rmadass
      aiya. Dr.Ramadass aiya lot of pressuress in cental govenemnt issues of Srinlank but central govenment deined aiya request. than what to do Dr.Ramdass aiyya. he is stand is correct

  4. //குழலி உள்ளிட்ட வன்னிய சாதி வெறியர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகே வருமாறு விழாக்கமிட்டியினரால் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்..//
    repeataaiii

  5. //குழலி உள்ளிட்ட வன்னிய சாதி வெறியர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகே வருமாறு விழாக்கமிட்டியினரால் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்..//

    எல்லோரும் ராமதாசிடம் கட்டிங் வாங்க போயிட்டாங்க

  6. In the Present situation the only political person who with the vision of feature Tamil people is Dr. Ramadoss. He may not a perfect person, In the past 50 yrs the politics no one was perfect. So all allegations are only defamatory and not a constrictive one.

  7. தமிழ் சசி அவர்கள் எழுதிய பின் வரும் கட்டுரையில் தேர்தல் குறித்து நான் இட்ட பின்னூட்டத்தை பொறுத்தம் கருதி இங்கும் இடுகிறேன்.

    தேர்தல், பெரியார் திக, தேர்தல் புறக்கணிப்பு
    http://changefortn.blogspot.com/2009/05/change-periyardk-election-boycott.html?showComment=1242282000000#c6326961009366110637

    எனது பின்னூட்டம்:

    நாம் இந்த தேர்தல் திருட்டு விழாவை வைத்து ஆளும் வர்க்கத்திற்கு ஏதோ ஒரு பாடம் கற்பிக்கலாம் என்று கற்பனையில் மிதந்து வந்தாலும், மக்களுக்கு அந்த மயக்கம் இல்லை என்பதை இந்த தேர்தலும் நிரூபித்துள்ளது. கையில் மை இடுவது ஒரு சடங்கு என்ற அளவில் வழமை போலவே மக்கள், தமது தேர்வை இட்டுள்ளனர் இந்த தேர்தலில். இந்த ஜனநாயகத்தில் மிச்சம் ஏதோ உள்ளது என்று கற்பனையில் இருக்கும் நமக்கு இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பு சரியான வேப்பிலையடியாக இருக்கும். மக்கள் யாருக்காவது இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க இருக்கிறார்கள் எனில் அது போலி ஜனநாயக தேர்தலை ஏதோ ஒரு வகையில் தீர்வாக நம்பும் நமக்குத்தான் அந்த பாடத்தை மக்கள் கற்பிக்க இருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட கற்பனையான மயக்கத்தில் இருந்து கொண்டு சரியான அரசியல் திசை வழி நோக்கிய பய்ணத்தை தொடங்காத நமக்குத்தான் மக்கள் பாடம் கற்பிக்கிறார்கள்.

    மு உ மு

  8. ஈழத்தை விற்கும் செய்யும் ராமதாஸ்…

    தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சந்தர்ப்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும், காரியவாதத்திலும்…

  9. //குழலி உள்ளிட்ட வன்னிய சாதி வெறியர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகே வருமாறு விழாக்கமிட்டியினரால் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்..//

    எல்லோரும் ராமதாசிடம் கட்டிங் வாங்க போயிட்டாங்க
    //

    kulaliyin edupidi senthamil ravi enge?

  10. பார்ப்பார்கள் எனப்படும் ஜாதி இதை தான் செய்து வந்ததாக திராவிட குஞ்சுகள் இது வரை கூறிவந்தன. பார்பனமும் வன்னியமும் ஒன்று தானோ ?

    • தானும் தன் குடும்பமும் மட்டும் தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தை காற்றில் பறக்காவிட்டு தேர்தலில் வெற்றி கண்டரே கருணாநிதி அவர்தான் மானங்கெட்ட ஓட்டுப்பொறுக்கி.

  11. இந்த அளவுக்கு உண்மை புட்டு புட்டு வைக்கும் நீங்கள் கருணாநிதியின் ஆறு மணிநேர உண்ணா நோன்பு பற்றியும், எங்களின் முயற்சியால் தான் இலங்கை ஓரளவு மக்களை கொள்கிறது என்று கூறிய மறு நாளே 3000 தமிழ்ர்களை கொன்று குவித்தைதையும் மற்றும் இலங்கை அரசியல் தலைவர்கள் முதல் அங்க கக்கூஸ் கழுவற சிங்களவன் வரை இந்திய அரசுதான் எல்லா வகையான உதவிகளையுக்ம் செய்தது என்ற சொல்லுக்கு பெருமை படும் காங்கிரஸ் பற்றயும் ஒரு குறையும் சொல்லாத உன்னை என்ற வென்று சொல்வது.

    • மாண்புமிகு சின்னப்பையன் அவர்களுக்கு,

      சின்னப்பையனாக இருங்கள் அதற்காக சின்னபுத்தி தேவையில்லை.காரணம் ஒருவரை விமர்சனம் செய்யும் போது நக்கல் கிண்டல் எல்லாம் உங்கள் விருப்பம்.ஆனால் மொத்தமாக சில கட்டுரையாவது படிக்கவேண்டும் ஒரேஒரு கட்டுரையை படித்து விட்டு முழுதாய் புரியாமல் ஏன் காங்.பத்தி எழுதல என உதார் விடுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறோம்.

      ராஜீவ் காந்தி குப்புற விழுந்து கிடந்த போது தமிழகம் முழுக்க ராஜீவ் கொலை அல்ல தண்டனை என பேசியது ம க இ க என்பது தெரியுமோ தெரியாதோ அல்லது தெரியாத மாதிரி நடிக்கலாம்.நிகழ்காலத்தி உங்களின் சூராதி சூரர்களெல்லாம் இந்தியாவை எங்கள் தந்தை நாடாக மதிக்கிறோம் இந்தியா எங்கள் நண்பன்,
      என கடை விரித்த போது அல்ல அதற்கு முன்னிலிருந்தே சொல்லிவருகிறோம்.இது இந்தியா தனது மேலாதிக்கத்துக்காக நடத்தும் போர் என்று.ஆனால் உங்கள் ராமதாஸ் தான் தற்போது வரை ஏதோ சோனியாவின் குடும்ப பிரச்சினையாக கூறுவது ஈழமக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.மேலும் தகவல் பெற வினவின் சோனியா காந்திக்கு எதிரான கட்டுரையையும் புதிய ஜனநாயக கட்டுரைகளையும்(about karunanithi drama) படியுங்கள்

      அறிவில் பெரிய பையனாக வாழ்த்துக்கள்

      • தவறுக்கு மன்னிக்கவும் உன்மையிலே உங்களுடன் ஓப்பிடுகையில் நான் ஒரு சின்னப் பையன்தான் தற்செயலாக தமிழிஷ் இணையதளத்தில் உலவும் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.
        சாதிகளை வெறுக்கும் நீங்கள் சாதிப் பெயர்களை அதிகம்
        பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்.மேலும் ஈழத்தில்
        உங்கள் நிலைப்பாடு என்ன மேலும் தேர்தலை புறக்கணிப்பதனால் பயன் என்ன?

  12. This statement is 100 wrong statment becuase last six month before Dr.Ramdass only declare the voice aginast indian government given the weapns againsst srinlanka tamilan. but here tamil not important to thiis statement .

    here not Dr.Ramdass misstake here only tamil papers mistake only
    see erevebody pmk very smal party in cental govenment but dmk is big party what to do dmk in central govenment. evereny issue delcared Dr.Ramdass aiya only delcared srinlanka issues.

  13. பா.ம.கவுக்கு ஓர் இடம் கூட சட்டமன்றத்திலும். நாடாளுமன்றத்திலும் இல்லாமல் தோற்கடிக்க வேண்டும். இது தமிழக மக்கள் கையில் தான் இருக்கிறது. தி.மு.கவும், அ.இ.அ.தி.மு.கவும் டாக்டர் ராமதாஸை ஒதுக்குவதில் ஒரே நிலைப்பாடு எடுத்தால், பா.ம.க என்று ஒரு கட்சி இருந்தது என வரலாற்றில் எழுதும் நிலை வரும்.

    • Ya ,Yes .First of all ask your Mam(J.Jayasasi) & Kolingar ,etc to avoids PMK and Dr.Ramadass In future.You are all Half boiled Brailer in Poultry.With out PMK and like its Part’s.All major state or central parties hidden or forget all backward peoples in india.

      After 90’s Tamilnadu get more development in all community and election festival bonus through this kind of Party or opposite political giant due to Mr.Ramdass effect.

      //புதுவையில் திரைப்படத்துறையினர் நடத்திய கூட்டத்தில் இயக்குநர் சீமான் உணர்ச்சி பொங்க ஈழத்தின் துயரை வருணித்துவிட்டு அதை துடைக்கவும், அதற்கு காரணமான காங்கிரசைத் தோற்கடிக்கவும் மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இவ்வளவு நாளும் அந்த மாம்பழம் கையுடன் இணைந்து ஈழத்தில் குண்டு வீசிய கதை சீமானுக்கு தெரியாதா? காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டுமென்றால் அந்த காங்கிரசுக்கு முந்தாநாள் வரை தொள்கொடுத்திருக்கும் ராமதாசை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசியிருந்தால் சீமானின் பேச்சில் அர்த்தமிருக்கும். இல்லை நாளைக்கே தேர்தல் முடிந்து ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி சேரமாட்டார் என்பதற்கு அவரது ட்ராக் ரிக்கார்டே ஆதாரத்துடன் பதிலளிக்குமே?//

      If Dr.Ramadass or PMK don’t like Tamils in eezham ,Why he dont know about Money and Power of Congress ?Why a small party getting angry with Sonia ?

      Ok what are all done by Kolingar and Sonia,Western lobby won by truthless way
      But I can say “True never dies”

  14. அவர் மானங்கேட ஈனங்கெட்ட அரசியல் விபச்சாரி என்பதில் சந்தேகம் எவருக்கும் வேண்டாம். 16ம் தேதி பாமகவிற்கு சாவு மணி அடிக்கபடும். மாம்பழம் அழுகும்.. நாறும்.
    தமிழக அரசிய்லை விட்டே அப்பனையும் மகனையும் துரத்த வேண்டும்.

    • //

      தமிழக அரசிய்லை விட்டே அப்பனையும் மகனையும் துரத்த வேண்டும்

      //

      R U saying about Karunanithi, Stalin and M.K.Azhakiri

    • மூடு பொண்டாட்டி காரண என்ன பன்றத உத்தேசம் ? அதுசரி , கூட்டி குடுத்து பொழைச்சுகுவீங்க.

  15. கலகம் அவர்களே

    @கலகம் Posted on May 13, 2009 at 10:24 am
    “.பார்ப்பன செயாவை ஈழத்தாயாக முன்னிறுத்துகிறார்கள்.”
    17 May 2009 10:29:04 AM IST
    COLOMBO, Sri Lanka: Sri Lanka’s president declared victory in his nation’s quarter-century civil war with the Tamil Tigers rebels.

    போர் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது . எனவே போர் நிறுத்தம் தேவை இல்லை.

    “”இந்தியாவை எங்கள் தந்தை நாடாக மதிக்கிறோம் இந்தியா எங்கள் நண்பன் “”

    நீங்கள் இந்தியாவை தந்தை நாடு என்று கருதும் ஸ்ரீலங்கா தமிழர் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இந்தியர் எவரையும் வசை பட அருகதை இல்லை. ராமதாசாக இருந்தாலும் சரி, ஜெயாவாக இருந்தாலும் சரி . கலைஞர் ஆக இருந்தாலும் சரி

    ஜெயாவும் தோற்று விட்டார் . எனவே மீண்டும் இந்திய தமிழர்களை நம்பாதீர்கள் .
    இந்திய தமிழ் “பார்ப்பான்கள் ” அவர்களை நம்பி நாசமாய் போய் விட்டார்கள்.

    அவர்களை நம்பி நீங்கள் ஏமாந்தால் உங்களை தான் திட்டி கொள்ள வேண்டும் .

    அறிவில் பெரிய பையனாக வாழ்த்துக்கள்

  16. /////குழலி உள்ளிட்ட வன்னிய சாதி வெறியர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகே வருமாறு விழாக்கமிட்டியினரால் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்..///// Thamizhan perla vandutanya vandutttttttttttttann……..

  17. ஈழ பிணங்களின் எண்ணிக்கையைக் காட்டி எண்ண‌முடியாத கோடிகளை அள்ள நினைத்த‌ பச்சோந்தி ராமதாசு இன்று அதிமுக கூட்டணியிலிருந்து 3வது முறையாக விலகினார். காரணம் – “தாயுடன் உறவு கொள்வது பெரும் தவறு என்று தன் மகன் இப்போதுதான் உணர்த்தினாராம்.” 

  18. இன்னைக்கு தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.மிகசிறந்த ஆளுமை திறன் கொண்ட தன்மான தலைவர் அய்யா ராமதாஸ் மட்டுமே. படிச்சவர், சமுதாயத்திற்கு தொண்டு செய்யவே தனவேலையை துறந்தவர்.இவ்ளோபேரு இவருக்கு எதிராக comments போட்டுருகிங்க. நல்லது…உண்மையானவர்கள் தான் விமர்சிக்கபடுவார்கள். இன்னைக்கு வரை உங்கள சுத்தி என்ன நடக்குது தெரியல? நீங்களாம் படிச்சது ஏட்டுவரை மட்டுமே…எதுக்குமே உதவாது. தனமனித ஜாதிய வெறிக்காக நல்லதலைவர்களை உதாசினபடுத்துகிறீர்கள்.ஆரம்பம்(அண்ணாவிற்கு பிறகு) முதல் இன்றுவரை தமிழ் உணர்வை காசுக்கும் தி.மு.க விற்கு ஜல்லி அடிக்கும் கூட்டங்களில் உங்களின் ஒரு ஜோடி கைகளும் அடக்கம் தான். ஜாதி ஒழிப்பை பேச்சளவில் செய்துப்பார்க்கும் வெற்றுமண்டைகள் இங்கே நிறையபேர் இருக்கிறீர்கள்.உங்களுக்கு இப்ப சுலபமாக புரியும் பாருங்க…Director Sankar படத்துக்கு பேர்வச்சா ஆங்கிலத்தில் தான் அதிகமாக வைப்பார் Gentleman,Boys,Jeans. இப்பலாம் தமிழில் தான் “எந்திரன்”. எங்கே இருந்து வந்தது இந்த மாற்றம்?
    நானும் blog எழுதறன்…அப்படின்னு பந்தா பண்ணிக்கிட்டு பெரிய மயிராண்டி மாதிரி topic போடாத.உனக்கு anonymousla comments போடுரதவச்சு மீண்டும் மொக்கையா reply பண்ணாத…ஏன் அப்படின்னா இந்த பதிவிற்கு திரும்ப வந்து என்னால படிக்க முடியாது.
    எனக்கு பல பயனுள்ள வேலைகளால் இத்துடன் முடித்துகொள்கிறேன்

  19. ஜாதிய கன்டுபிடிச இந்தியர் வால்க … 7 லாம் அரிஉ படம் யெடுத்த தமிலன் மனுசனெ இல்ல…
    தமிலர்கலுக்கு மட்டும் தான் ஜாதி முக்கியம் எத்தன ராக்கெட் விட்டலும் தமிலர் ஆகிய நாங்கல்
    ஜாதிய விடமாட்டொம் …… அனைத்து ஜாதி கட்சி வலர கன்டிப்ப அரசு நிதி குடுகனும். ஜாதி சன்ட வரும்போது கொலுத்த 500 பேருந்து 10 ரைல் , உடனே பெட்ரோல் விலய குரைகனும்… இதயெல்லம் கன்டிப அரசு நடமுரைக்கு கொன்டுவரனும்… இப்படிக்கு படிப்பு அரிஉ 1000% இருக்க தமிலன்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க