புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பதிவுலகின் நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கிறோம். இந்த முழக்கங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.
முழக்கங்கள்
சிங்கள இனவெறிப் பாசிசத்தின்
இன அழிப்புப்போரை எதிர்த்துப் போராடி
விடுதலைப் புலிகள் வீரமரணம்!
ஓயமாட்டோம்!
ராஜபக்சே கும்பலை
போர்க்கிரிமினலாக அறிவித்து
தண்டனை வழங்கப் போராடுவோம்!
சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து
ஈழத்தமிழர்களை மீட்டெடுப்போம்!
ஐ.நா மன்றத்தின் மூலம் மீள்குடியமர்த்தவும்,
உணவு-மருத்துவம் உடனே வழங்கவும் போராடுவோம்!
அரசியல் தீர்வு, மறுநிர்மாணம் என்ற பெயரில்
தமிழர் பகுதிகளை சிங்களக் காலனியாக்க முயலும்
இராஜபக்சே-இந்திய அரசு கூட்டுசதியை முறியடிப்போம்!
துவண்டுவிடாது ஈழத்தமிழினம்!
துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!
நீடிக்காது சிங்கள இனவெறியின் வக்கிரக் களியாட்டம்!
பீனிக்ஸ் பறவையாக மீண்டெழும் ஈழவிடுதலைப்போர்!
000
கண் திறந்து பார் தமிழகமே!
ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்
இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசு
அறுத்து முடித்தது ராஜபக்சே அரசு!
இலங்கை அரசின் வெற்றிக்களிப்பு
சிங்கள வெறியின் கோரநடனம்!
முல்லைத்தீவின் கடறகரையெங்கும்
இரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்!
முட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறது
முகம் சிதைந்த ஈழத்தமிழினம்!
படுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் – டில்லியில்
பதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்!
பச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்கு
பத்தாதாம் மந்திரிப் பதவி!
படுகொலைத் தலைவி சோனியாவின் மகனோ
பாரதத்தின் நாளைய பிரதமராம்!
“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோ
படுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்!
எனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்?
உன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,
உன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,
உன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,
நீ வழங்கிய அதிகாரம்..
நாம் பேசத்தவறினால் யார் பேசுவார்?
அமைதி காப்பது அவமானம்
அலட்சியம் காட்டுவது அநீதி
ஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக!
வீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை!
மீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்!
தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்! – வினவு!…
21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெ…
நல்ல முயற்சி ,
வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
நல்ல முயற்சி ,
வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
துணை நிற்பார்கள் தமிழக மக்கள்! – ஆம், மற்றவர்கள் பிரியாணி பொட்டலம் சப்ளை செய்யும் வரை.
சயனைடு குப்பிக்கு பிரியாணி பொட்டலம் பரவாயில்லை
சயனைடு குப்பி வீரம்!
பிரியாணி பொட்டலம் சோரம்!
ne sariyana thandal soru pandaram , manam kedda parathesi unni mathiri manithar allatha peikalal than thmilanukku alivu tholinsu po.
sayanaid kuppi = thanmaanam
biriyaani pottalam = avamaanam
வினவுக்கு ஒரு வேண்டுகோள்! இங்கே தனிநபரிகளின் கூற்றுக்கு கருத்துக்களால் பதிலளிக்காமல், தனிநபர்களைத்தூற்றும் மறுமொழிகளை தணிக்கை செய்யுமாறு வேண்டுகிறேன்.
ஈழ பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்தே சரியான பார்வையில் இருக்கிறோம் என்பதோடு , அம்மக்கள் துவண்டு விழும்போது நாம் போராட்டங்களை தொடர்கிறோம் தோழர்
நக்சல் நாய் வினவு,
இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக உன்னை மாதிரி சொறி நாய்கள் பொங்கி எழுந்தா,நக்சல் அராஜகத்துக்கு எதிராக மக்கள் பொங்கி எழ மாட்டார்களா?நாயே உன்னை மாதிரி தீவிரவாத சொறி நாய்களையெல்லாம் சுட்டுத் தள்ளவேண்டுமடா.
hai vinai, ungaludaiya intha karuthu, romaba super,naayagal enaikume nanri unarvullathu, ungala mathiri kulla nari vella onnum pakklaye….
arumai arumai. Tamil nattil kulla narigalaal thaan romba thollai
Daai sori piditha naaye nagsal pathiya varalaru kooda theriyama nagsal enra vaarthaiya enimel nee use pannatha, athukku muthal thadavaiya nagsal pathiya varalaru mothala padi atharku mel vivathippom
vinay ! வாடா எச்சில் கால் நாயே! ஆமா நீ போலி கம்யூனிஸ்டு பொருக்கிதான
ஏண்டா எத்தனதடவ செருப்படி வாங்கனாலும் உங்கள மாதிரி கூலிக்கு மாறடிக்கிற நாய்களுக்கு புத்தியே வராதா? மக்கள் அராஜகத்துக்கும் , பயங்கரவாதத்துக்கும் எதிராக கண்டிப்பா பொங்கி எழுவார்கள்!
(வினவுக்கு கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் குழப்பம் விளைவிக்க்கும் வினய் போன்றோரை அனுமதிக்காதீர்- இவர்களுக்கு இப்படிதான் பதில் எழுத வேண்டியிருக்கிறது)
வினவு அவர்களே! நான் மரண அடியை வழிமொழிகிறேன்.
உங்கள் பெருந்தன்மையும், ஜனநாயகப்பண்பும் உள்ளங்கை நெல்லிக்கனியென ஏற்கனவே பல தருணங்களில் நிரூபணமாகியிருக்கிறது.. எனவே நீங்கள் கீழ்த்தரமான மறுமொழிகளை அனுமதிப்பதற்கு ஒரு அவசியமுமில்லை.
Why not you guys change your attitute and come join hands with india. If you are standing alone and shouting will not chage anything. If you are really honest and part of the world then be part of it. You have problem of believing anyone. You can not even believe your life partner and your parents. Life is belief. We born and we will die one day, so please help others and enjoy your stay in the world.
the people whom u say “shouting” are indians… the real indians…they have dignity, self-respect and a goal with real honesty. Understand…u have the problem of understanding these people, their achievements and goals. From ur statement, it is clear that u are born, u will die one day, u enjoy the world believing only ur life-partner and your parents, misbelieving all others…..how come u have the courtesy to “HELP OTHERS”. You are capable of helping only ur family… keep doing…. enjoy ur life…. dont come out to comment on OTHERS..
When innocent Palestines killed they made this “shout” , when innocent Jews killed by Hitler they made this “shout” , when innocent Iraquis killed the world made this “Should, when innocent Sikhs kiiled by congress gundas they made this “Shout” and when innocent Tamils get killed by arrogant Indian Army and Srilankan army all the Tamils in the world make this “Shoult”. Essentially what the arrogants made and make are total violation of human rights and what we do is our voice against this. Dont call this again as “shout”
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற செய்தி படத்துடன் இன்று நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது. பார்க்க… http://socratesjr2007.blogspot.com
ankal thalivan ab 100 vayathukku mal iruppar anal avari viththu plippu nadaththum parathesikal olika und natharikkuddam .
Yes, we will support
பரதேசிகளா இப்பிடித்தானே 20 ஆண்டுகளுக்கு முன் எங்களை உசுப்பேத்தியே இந்த நிலைக்கு தள்ளி றணகமாக்கீட்டீங்க எப்ப உதவனும் என்று தெரியாத பரதேசி கூட்டமே போதுமடா விடுங்கடா எங்களை
adankurankal ilaije munru ulakaththukkum akathathukal.
ஈழத்தமிழர் தமிழகத்தமிழரை வெறுக்குமாறு செய்த அரசியல்வாதிகளின் ராஜதந்திரம் நன்றாகவே வேலை செய்கிறது. தமிழர்களே தயவுசெய்து அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.
thamilari sathiyaka kuru poddu pilipu nadathiya pappanar thandal nasakara kumpal vetti pettu viddarkal . thamilnadu makkal palar sinthikatha addu manthikal aki viddarkal thamilmanaththi vittu pilipu nadaththum inaththanamanavarkal.
ஓ தமிழகத்து தமிழர்களே !
தொப்புள்கொடி உறவுகள் என்று நம்பி இருந்த நமக்கு உங்களிடம் இருந்து கிடைத்த ஏமாற்றம் கொஞ்சம் அல்ல. இனியும் உங்களால் நமக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை
ஏற்கனவே தமிழருக்குள் ஈழத்திலும் ஒற்றுமையில்லை. தமிழகத்திலும் ஒற்றுமையில்லை. இப்போது ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டவர்க்குமிடையில் உரசல்கள்…ஈழத்தமிழர்களின், தமிழகத்தேர்தல் முடிவுகளினூடான தமிழகத்தமிழரின் மீதான (தவறான ஆனால் காரணப்படுத்தக்கூடிய) மதிப்பீடுகளால் உருவாகும் இந்தப்புது ஆபத்து அச்சுறுத்துகிறது. மித்ரபேதம் என்ற வலிமையான ஆயுதம் நன்கு வேலை செய்கிறது!
// இப்போது ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டவர்க்குமிடையில் உரசல்கள்//
இது பயத்தை தருகிறது.எந்த சம்பவத்தை வைத்து அப்படி சொல்கிறீரகள். ஈழத்தமிழர்களுக்காக தமிழக உறவுகள் செயத தியாகதையும் போராட்டங்களையும் நாங்கள் என்றென்றும் நன்றியூடன் நினைவு கூர்வோம். உண்மையில் ஈழத்தமிழனை ஏமாற்றியது அரசியல்வாதிகளும் கொள்கைவகுப்பாளர்களும் தான். தமிழக உறவுகள் அல்ல. எய்தவர்கள் இருக்க அம்பை நோவது சரியல்ல.
யாராக இருந்தாலும் இந்த மூன்றாந்தர அர்சியலுக்கு விலை போகாதீரகள்.
ரதி அவர்களே! இந்த தேர்தல் முடிந்தபின் அனைத்து வெகுஜன ஊடகங்களின் இணையதளங்களிலும் வரும் செய்திகளின் பின்னூட்டங்களில் இத்தகைய காழ்ப்புணர்ச்சி நன்றாகவே வெளிப்படுகிறது. ஒருவரையொருவர் சாடுவது மலிந்து வருகிறது.
காங்கிரஸ் தமிழ் விரோதக்கட்சிதானென நன்றாகத்தெரியும்தான். ஆனால் நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வின்மையாலும், ஊடக வடிக்கட்டுதல்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சாதிக்கப்பட்ட இந்த வெற்றியினை தமிழரின் மனப்பான்மையாகவோ அல்லது தீர்ப்பாகவோ ஈழத்தமிழர் கருதக்கூடாது. தற்சமயம் அவ்வளவு தெளிவான மனநிலைமையிலும் பல ஈழத்தமிழர் இல்லையென்பது இங்குள்ளவர்க்கும் புரிவதில்லை. வட இந்தியர்களின் பதிவுகளோ சகிக்கமுடியவில்லை. போதாக்குறைக்கு தம்மை இந்தியரென்று கற்பிதம் செய்யும் தமிழர்கள் வேறு. எனவே தகாத வாதங்கள் வளர்கின்றன.
இத்தகைய தூற்றுதல்களுக்கு இடமளிக்கும் இப்பத்திரிக்கைகள் நான் “தமிழர்களே இந்திய ஆங்கில ஊடக இணையங்களில் எந்த பதிவையும் போடாதீர்கள்” என வேண்டுகோள் பதித்த போது தணிக்கை செய்யப்பட்டது.
என் பயத்திற்கான ஆதாரங்களில் இவை வெகுசிலவே.
நாம்தான் விழிப்போடிருந்து வெல்ல வேண்டும்.
சென்னையில், ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முன்வைத்தது.
Vinay! nee oru kirukkan.. Avadhoorugalai parapi naai pola kadikadhae. Sariyana theervu ulla noolgalai padi..
oru siriya thohai eelath thamilar maddum pavam neduka sinkalavanodum india sathikara arasodum,sathikara sarvathesa nadukalodum porada mudijuma 8kodi thamilarum suyanalam ilamal poradinal maddume thamilarukkum avarkal santhaikkum vidivum oru nadum kidaikkum.
இரங்குவோன்,
//ஆனால் நம் மக்களின் அரசியல் விழிப்புணர்வின்மையாலும், ஊடக வடிக்கட்டுதல்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சாதிக்கப்பட்ட இந்த வெற்றியினை தமிழரின் மனப்பான்மையாகவோ அல்லது தீர்ப்பாகவோ ஈழத்தமிழர் கருதக்கூடாது. தற்சமயம் அவ்வளவு தெளிவான மனநிலைமையிலும் பல ஈழத்தமிழர் இல்லையென்பது இங்குள்ளவர்க்கும் புரிவதில்லை.//
நான் நூற்றுக்கு நூறு வீதம் உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.
நான் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ். நானும் சில இந்திய இணையத்தள ஊடகங்களில் ஒரு விடயத்தை கவனித்தேன். அதாவது, எல்லோரும் இந்த தேர்தல் ஈழத்தமிழரை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போகிறது என்று கூறினார்கள். ஆனால், தேர்தல் முடிவுகள் அதை வெளிக்காட்டவில்லை என்றும்; ஆகவே, இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று எழுதியிருந்தார்கள்.
உண்மையா அல்லது பொய்யா என தெரியாத; ஆனால், நான் படித்ததில் தெரிந்து கொண்டவை சில,
1. இந்த இந்திய தேர்தல் உண்மையில் ஜனநாயக முறைப்படி நடந்ததா?
2. சிதம்பரம் முதல் சுற்று வாக்குகளின் எண்ணிக்கையில் தோற்றதாகவும் பின்பு அவர் வென்றதாகவும்
3. சில இடங்களில் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிககையை விட வாக்குகளின் எண்ணிகை அதிகமாக இருந்தன என்றும்
4. நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் வேறு யாரோ அவருக்காக வாக்கை பதிந்ததாகவும்
இதெல்லாம் எவ்வளவு உண்மையென்று எனக்கு தெரியாது. ஆனால், வாக்காளனுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குபவர்கள், ஏன் இந்த முறைகேடுகளையெல்லாம் செய்ய தயங்க மாட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
நான் சொல்ல வந்த விடயத்திற்கு வருகிறேன். ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் இந்த தேர்தலின் மூலம் இந்தியாவில் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் வந்தால் வன்னியில் தம் உறவுகளின் உயிர்கள் காக்கப்படலாம் என்று நம்பியிருந்தார்கள். அது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகி போய்விட்டது. கையறு நிலையிலுள்ள ஈழத்தமிழன், வன்னியின் அவலத்தை தடுத்து நிறுத்த முடியாத ஈழத்தமிழன் வேதனையின் விளிம்பில் நின்றான். அதை சில அரசியல் அரைவேக்காடுகள் தங்கள் வழக்கமான கைங்கரியங்களுக்கு பயன்படுத்திக்கொண்டன. சில அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர் விடயத்தில் தானே மத்திய/மாநில கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். அதனால், சண்டையை மூட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். அதில் அவர்கள் குளிர் காயலாம் அல்லவா.
என் கருத்து, இந்த தேர்தலில் ஈழத்தமிழர் விடயம் தான் முக்கியம் பெறுகிறது என்ற கருத்தை மக்களின் மனதில் விதைத்ததில் அரசியல் வாதிகளுக்கு தான் முக்கிய பங்குண்டு. அடுத்து நீங்கள் சொன்னது போல் ஊடகவடிகட்டுதல். தன் உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டு உறவுகளுக்கு தெரியாதா என்ன செய்யவேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று.
எது எப்படியன்றாலும், எல்லாமே முடிந்து போய்விட்டது. இனிமேல் அறிவிலிகளாய் எங்களுக்குள் அடித்துக்கொள்வதில் எந்த பயனும் இல்லை. உறவுகளே, இரங்குவோன் சொன்னது போல் இன்று நாங்கள் எந்தவொரு விடயத்தையும் தெளிவாக சிந்திக்க கூடிய மனநிலையில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். நாங்கள் ஏதாவது தெரியாமல் தவறு செய்தாலும் அதை பொறுத்துக்கொள்வீரகள் என்று நம்புகிறேன்.