14.07.2009 அன்று ஆறுமுகசாமி 5 வது முறையாக தீட்சிர்களால் தாக்கப்பட்டார். வழக்கம் போல சிதம்பரம் காவல் துறை பார்ப்பானுக்கு ஒரு நீதி, பஞ்சம சூத்திரனுக்கு ஒரு நீதி என்று அடித்தவன் பெயர் தெரியாது என வழக்கு போட்டது. “சிவனடியாரை தாக்கியது ரவுடி ஞானமூர்த்தி தீட்சித கும்பல்தான், கைது செய்யுங்கள், நீங்களும் விசாரித்து கொள்ளுங்கள்” என்று நாங்கள் போலீசிடம் சொன்னோம். ஆனால் பூணூல் குடுமிக்கு எதிராக காக்கிச் சட்டை அசைய மறுத்து விட்டது.
இதற்காக 17.7.2009 அன்று காலை 10.00 மணிக்கு மேலவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்புடன், பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பா.ம.க, வி.சி.க மற்றும் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம். சந்திரபாண்டியன், வி.வி.சுவாமிநாதன், வழக்கறிஞர் ராஜூ, வழக்கறிஞர் செந்தில், காவியச்செல்வன், தோழர் அம்பிகாபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அதில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ பேசிய உரையின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.
” சிதம்ரம் நகர போலீசு சிவனடியாரை தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சித கும்பலை இந்த ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கைது செய்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நடராசர் நகையை திருடிய தீட்சித்தர்கள் மீது சங்கர தீட்சிதர் என்பவர் கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டு 1994 முதல் தூங்குகிறது. மூர்த்தி தீட்சிதர் என்பவரை கோவிலுக்குள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் நகர ஆய்வாளர் ராமலிங்கத்திற்கு தெரிந்தும் அன்றைக்கு வழக்கு பதிவு செய்யாமல் முடிக்கப்பட்டது. இவைகளுக்கு சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் போட்ட வழக்கில் தமிழக போலீசு 2 வருடங்ளாக தீட்சிதர்களுக்கு ஆதரவாக இழுத்தடித்து வருகிறது.பின் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?”……
“போலீசு தன் கடமையை செய்ய மறுக்கிற போது , பொது மக்களே அதை செய்யவேண்டும். குற்றவியல் சட்டம் பிரிவு 43 நமக்கு அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. சிவனடியாரை தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சிதரை நாமே பிடித்து கையை பின்புறம் கட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இப்படி செய்யும் சூழல் இருந்தால் போலீசு முந்தி கொண்டு கைது செய்து விடும். கடலூரில் புதிதாக வந்துள்ள எஸ்.பி, எஃப்.ஐ.ஆர் இருந்தால் அந்த ரவுடி கையை உடைத்து விடு என்று சொல்கிறார். தீட்சிதன் கையை உடைப்பாரா அந்த கடலூர் எஸ்.பி என்று நாங்கள் கேட்கவில்லை, கைது செய் என்றுதான் கேட்கிறோம்.”
“தமிழ் பாடும் அரசாணையை போலீசு அமுல்படுத்த தவறினால் ம.க.இ.க தோழர்களும், பொது மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் தானே அமல்படுத்தும் என்பதை அறிந்த அரசு, ஏ.எஸ்.பி செந்தில் வேலன் மூலம் நிறைவேற்றியது. நாம் செய்திருந்தால் எத்தனை தீட்சிதர்களுக்கு பூணூல் குடுமி அறுந்திருக்கும், மண்டை உடைந்திருக்கும், என்று சொல்ல முடியாது. போலீசு உயர் அதிகாரிகள் வர்க்க பாசத்தோடு தீட்சிதர்கள மீது தள்ளு முள்ளு நடத்தியபோது எஸ்.பியை தாக்கிய பிறகும் அடங்காத தீட்சிதர்கள் சாதாதரண காவலர்கள், போலீசு என்பதை தாண்டி வர்க்க உணர்வோடு உடம்பு முழுவதும் எண்ணை தடவிய தீட்சித பார்ப்பனர்களை சிண்டை பிடித்து இழுத்து சிற்றம்பல மேடைக்கு வெளியே எறிந்தவர்கள் சாதாரண காவலர்கள். அன்று மாலை எங்கள் மீது தடியடி நடத்தி கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது ஏ.எஸ்.பி. செந்தில் வேலன் என்னிடம் என்ன தெரியுமா சொன்னார்? ‘என் உத்யோகத்தை பணயம் வைத்து இன்று காலை இந்த வேலையை செய்து முடித்தேன்’ என்றார். அரசாணையை அமுல்படுத்தும் இந்த போலீசு அதிகாரி வேலையைப் பணயம் வைக்கிறார் என்றால என்ன அர்த்தம்? பார்ப்பானிடம் பூணூல் குடுமி இருக்கிறது. அவன் ஆன்மீகத்தில், சாதாரண மக்களை பக்தியால் ஒடுக்கும் ஆன்மீக போலீசு. இவர்களிடம் லத்தி, துப்பாக்கி இருக்கிறது. சாதாரண மக்களை அடித்து பலாத்காரமாக ஒடுக்கும் அரசு போலீசு, அதனால் தீட்சிதப் பார்ப்பான் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதை புரிந்து கொண்டால்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக செய்ய முடியும்.”
“எங்களை சட்டவிரோதமாக தாக்கி கைது செய்த போலீசு மீது வழக்கு போட்டு இதே சிதம்பரம் நீதிமன்றத்தில் அவர்களை குற்றவாளிகளாக்கி கோர்ட டவாலியால் போலீசு வகையறா என்று கூப்பிட வைத்திருக்க முடியும். ஆனால் எங்கள் போராட்டம் போலீசை எதிர்த்து அல்ல. தீட்சித பார்ப்பனர்களை எதிர்த்துதான். கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழில் பாடி வழிபட சென்று சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் அடித்து கையை முறித்து தூக்கி வெளியே வீசினார்களே, அப்போது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தீட்சிதனுக்கு எதிராக இங்கு கண்டன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தியிருந்தால், நம்ம தோழரை தீட்சித பார்ப்பன வேசம்போட்டு செருப்பால் அடித்து இழுத்து சென்றதை வைத்து சிதம்ரத்தில் பிராமண சங்கம், பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தியிருக்காது. பிரமீடு சாய்மீரா என்ற பிராடு கம்பெனி தலைவர் நாராயணன், பிராமணர் சங்க தலைவராக துணிச்சலாக இங்கு பேசியிருக்க மாட்டான். இந்து ஆலய பாதுகாப்பு குழு என்கிறான். இந்த ஆலயப்பாதுகாப்பிற்காக என்ன செயதான், கோவிலில் நடந்த தீட்சிதர்களின் காமகளியாட்டத்தை தட்டி கேட்டானா, மர்ம கொலைகளுக்கு நீதி கேட்டானா, சாமி நகையை திருடி விற்ற தீட்சிதனை தண்டித்தானா, பக்தர்களிடம் ஆன்மீகத்தை பேசாமல் டூரிஸ்ட் கைடு போல பணம் பறித்த்தை தடுத்தனா, தமிழ்பாட மறுத்த தீண்டாமை கொடுமைக்கு குரல் கொடுத்தனா? கோவில் சொத்தை விற்று பங்கு போட்ட தீட்சிதனை கண்டித்திருப்பானா? கோவில் முழுவதும் குப்பையும், மாடும், மாட்டுசாணியும் பரவி கிடந்தபோது பார்க்காதவன், இன்று தீட்சிதன் போட்ட எச்சில் எலும்பு துண்டுக்காக கைக்கூலிகளாக ஒன்று சேர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு குழு என்று வைத்து கொண்டு உண்டியல் வைப்பதை தடுக்கிறான், கோவிலை பாதுகாப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பெற்ற உரிமையை பாதுகாப்பது நமது கடமை.”
“இந்த கோவிலில் வரும் வருமானத்தை சாமியாரா கொண்டு போக போகிறார், இல்லை நாங்க கொண்டு போக போகிறோமா? அவர் மட்டும் பாட வேண்டும் என்று இருந்தால் எப்போதோ போராட்டம் முடிந்திருக்கும். அனைவரும் பாடவேண்டும், இந்த கோவில் முழுமையாக தீட்சித கொள்ளை கூட்டத்திடமிருந்து மீட்க வேண்டும். தீட்சித தனித்சொத்தாக உள்ள, நடராசா கோவில் பொது சொத்தாக்காப்படவேண்டும் என்பதற்குத்தான் இந்த போராட்டம். தமிழக முதல்வரால் நேரடியாக தமிழ் காவலர் என்று பாராட்டு பெற்று, மாதம் 3000 ஓய்வூதியம் பெறுபவர், பெற்ற உரிமை பாதுகாக்க படவேண்டும் என்பதற்காக தள்ளாத வயதிலும் தினந்தோறும் மாலையில் கோவிலுக்கு சென்று சிற்றம்பல மேடைக்கு போங்க, பாடுங்க, தீட்சிதன் காசு கேட்டா குடுக்காதீங்க, உண்டியல்ல காசு போடுங்க என்ற பக்தர்களை ஆற்றுபடுத்துகிற காரணத்தால் கோவிலுக்கு வரும் சிவனடியாரை தீட்சிதன் தாக்க முடிகிறது என்றால் காரணம் தீட்சிதன் அல்ல, சிதம்பரம் நகர பொதுமக்கள், பக்தர்கள்தான். வள்ளலார் ஜோதியில் கலந்தார், நந்தனார் ஜோதியில் கலந்தார், பெத்தான சாம்பான், மூத்த்தாண்டவர் ஜோதியில் கலந்தார்கள், சிவனடியார் ஆறுமுகசாமி கால் தவறி கீழே விழுந்து கருங்கல்லில் அடிப்ட்டு இறந்து போனார் என்று தீட்சிதனே சாமியாரை சுவற்றில் மோதி கொன்று விடுவான். காவல்துறை இத்துப்போன 2 தீட்சிதனை கைது செய்யும். சாட்சி சொல்ல எந்த பக்தர்களும் வரமாட்டான் கேஸ் முடிந்து போகும்.”
“காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த சங்கரராமனை, சங்கராச்சாரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து போட்டுத்தள்ளினார். யார் சாட்சி சொல்லுவார்கள். அது போல இங்கேயும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் சாமியாரை தீர்த்து கட்ட, தீட்சிதர்கள் முன்னோட்டம் பார்க்கிறர்கள். சாமியாரை இத்தனை தடவை தாக்குகிறார்களே, நாம் ஒரு தடவை தீட்சிதனை திருப்பி அடித்து விட்டால் என்ன ஆகும்? நாம் போலீசு ஸ்டேசன்ல புகுந்து போலீசை அடிச்சா என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். கோவிலும், போலீசு ஸ்டேசனும் ஒன்றுதான்.
சாமியார் கொல்லப்பட்டால் முதல் குற்றவாளி தீட்சிதன், இரண்டாவது குற்றவாளி சிதம்பரம் நகர மக்கள், மூன்றாவது குற்றவாளி போலீசு என்பதை அறுதியிட்டு சொல்லுகிறேன். தீட்சிதர்களால் சாமியார் உயிருக்கு ஆபத்து என்றுபல முறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். ஏனென்றால் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வந்த தில்ல நடராசன் கோவில் முழுமையாக கையை விட்டு போகிறது அதை மீட்க முடியாமல் இருப்பதற்கு சாமியார்தான் காரணம், அவரை போட்டு விட்டால் நீதிமன்றத்திற்கு இவர்கள் தொடர்ந்து வாதாட முடியாது என்று தீட்சிதர்கள் நினைக்கிறார்கள்.” “சாமியாரை அடித்தால் பொதுமக்கள் திருப்பி அடிப்பார்கள் என்று தீட்சிதன் நினைத்தால் சாமியார் தாக்கப்படமாட்டார். சாமியாரை தாக்கிய தீட்சிதனை நாம் கைது செய்யாவிட்டால் தீட்சிதனுக்கு பாதுகாப்பில்லை என்று போலீசு நினைத்தால் போலீசு தீட்சிதனை கைது செய்யும். தீட்சித பார்ப்பானுக்கு எதிராக சட்டம் செயல்படாது என்பது தொடருமானால், மக்களே சட்டத்தை அமல்டுத்த வேண்டும். அப்போது நடராசர் கோவில் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும். அதற்கு நாங்கள் முன்னணியில் இருப்போம். 15 நாட்களுக்குள் ரவடி ஞானமூர்த்தி தீட்சித கும்பலை போலீசு கைது செய்யாவிட்டால் நாங்களே கைது செய்து போலீசு நிலையத்தில் ஒப்படைப்போம் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.”
-தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
நந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!
உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!
தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!
சிவனடியாரை கொல்ல தீட்சிதர் சதி…
“காஞ்சிபுரத்தில் சங்கரராமனை, சங்கராச்சாரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து போட்டுத்தள்ளினார், அது போல சாமியாரை தீர்த்து கட்ட, தீட்சிதர்கள் முன்னோட்டம் பார்க்கிறர்கள். https://www.vinavu.com/2009/07/31/thillai4/trackback/…
ராஜூ தன் உரையில் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. இவர்களை இப்படியே விட்டுவைத்தால், ஆறுமுகசாமி அவர்களைப் போட்டுத் தள்ளிவிடுவார்கள்.
இந்த தொடர் போராட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறேன் என்கிற முறையில் ரவுடி தீட்சிதர்களை கைது செய்து ஒப்படைக்கும் நாள் என்றைக்கு என்று சொல்லுங்கள். நானும் வருகிறேன். போராட்டத்தை முடித்து வைப்போம்.
தோழர் ராஜூவை அடுத்த போராட்டத்திற்கு களமிறக்குவோம்.
பதிவில், தலைப்பிலிருந்தே தட்டச்சு தவறுகள் இருக்கின்றன. கொஞ்சம் திருத்துங்களேன். வாசிக்கும் பொழுது, தகராறு வருகிறது.
சில தவறுகள் –
தீட்சிரகள் / தீட்சிர்களால் / சாதாதரண /சிதம்ரத்தில்/சொத்தாக்காப்படவேண்டும் /பார்க்கிறர்கள் / தில்ல
இது ஒன்றும் அவர்களுக்கு புதியது அல்ல கொஞ்ச நாள் இதை இவர்கள் செய்யாமல் இருந்தார்கள். வள்ளலரை
கொளுத்தி விட்டு ஜோதி ஆகிவிட்டார் என்று கதை கட்டிய கும்பல் தான் இவர்கள்.
வாங்க லைட்ங். நான் தங்களை வினவு தளத்தில் பின்னூட்டங்களில் முதன் முதலாக பார்க்கிறேன். நானே அழைக்கலாம் என நேற்று தான் நினனத்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள். தொடர்ச்சியாக விவாதங்களில் பங்கெடுங்கள்.
ரசினிகாந்து சினிமாவ மட்டும்தான் வீஈஈஈஈஈரமணி கொய்யா எதிர்ப்பாரோ… தீட்சிதர் பிரச்சனையில அவரு என்ன செஞ்சாருன்னு கருணாநிதி கனவுல வந்தா கேட்டு செல்லச்சொல்லுங்க
பொதுவாக வினவு குழுவை சேராத ஒருவரின் கருத்தை பதித்தால் அது வினவு குழுவினருக்கு இசைவுடையதா இல்லையா என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். வேறுபாடு இருந்தால் – சிறிய வேறுபாடாக இருந்தாலும் – என்ன எவை என்று தெளிவாக எழுதினால் நல்லது. முழு இசைவு இருந்தாலும் அதை வெளிப்படையாக சொன்னால்தான் உங்கள் நிலை தெளிவாக புரியும்.
தருமங்களையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும்., இவ்வளவு தானா? மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்., பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும். இவற்றில் எதை நம்பாவிட்டாலும் – பூணூல் குடுமி தீட்சிதரை நம்பியாக வேண்டும்.
நம் வாழ்வில் ஜாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும், கோவிலினிடமும், கடவுளினிடமும் தான் இருந்து வருவதை நல்லவண்ணம் உணருகிறோம். அதாவது கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால் தான் சூத்திரனாகிறோம். நாம் ஒரு இந்து என்றால் நமக்கு நாம் கண்ணால் கூடப் பார்க்க முடியாத, காதால் கூடக் கேட்க முடியாத, ‘வேதம்’, ‘சாஸ்திரம்’ ஆகியவற்றையு இந்து மதத்தாருக்குள் இருந்து தான் வருகிறதே ஒழிய யாருக்குள் இருந்து வருகிறது? ____________-___________-_____________
மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமூதாய சமத்துவமும், ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத் தான் நாடு என்றும் சுதந்திர பூமி என்றும் சொல்லலாம். இவை இல்லாத நாட்டையும் சமூதாயத்தையும் சிறைக்கூடம் என்றும், அடிமைச் சமூதாயம் என்றும் தான் சொல்ல வேண்டும். சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமூதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
//“போலீசு தன் கடமையை செய்ய மறுக்கிற போது , பொது மக்களே அதை செய்யவேண்டும். குற்றவியல் சட்டம் பிரிவு 43 நமக்கு அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.// வழக்கறிஞர் ராஜூ பேசியதைப் போல் நாம் முன்னோடிகளாய் திகழ்வோமானால் நிச்சயம் சமூக மாற்றத்தை இந்த நூற்றாண்டிலே காணமுடியும்….
தருமங்களையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்தைகளையும் இவற்றைக் குறிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும்., இவ்வளவு தானா? மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்., பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும். இவற்றில் எதை நம்பாவிட்டாலும் – பூணூல் குடுமி தீட்சிதரை நம்பியாக வேண்டும்.
– nithin. இப்படி இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களும் கேட்கவில்லை. எவரவருக்கு எதெது பிடித்ததோ, அல்லது, ஒத்து வருதோ, அதை ஏற்றுகொண்டு வாழலாம். அவரும் இந்துவே.
இப்படி பலர் பெரிய் மகான்கள் ஆயிருக்கிறார்கள். அவர்களுக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். சித்தர்கள், பார்ப்பனர், குடுமி, ஆச்சாரம் இவற்றெயெல்லாம் தூக்கி எரிந்தது மட்டுமல்லாமல், ஆச்சாரப்பார்ப்பனரை வசைய்ம் பாடினர். தயானந்த சரசுவதி, இந்து மதத்தின் கோயில்களையும், விக்ரகாரதனையும் தூக்கியெறிந்து, வேதவழிவந்த வேள்விச்ச்டங்குகளே போதும் என்றார். ஆரிய்ஜமாசம் அதுவே.
நாராயணகுரு., ஒரே கடவுள், ஒரே ஜாதி என்றார். திருமூலர்: ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார்.
இவர்களெல்லாம் இந்துக்கள் இல்லையா? பார்ப்பனரும், குடுமியும், சாத்திரங்களும், நம்ப முடியாத கட்டுக்கதைகளும், அப்பாவிகளை வருத்தெடுக்கும் மூடநம்பிக்கைகளும், பிறமக்களின் மொழி, க்லாச்சாரம் இவற்றை உதாசீனப்படுத்த்வோரை உதாசீனப்படுத்திய பின்னும் – இந்துவாக இருக்கலாம். இப்படி ஒரு relaxation இருந்தால்தான் இந்து மதம் வாழும். கட்டாயபடித்தீனெரென்றால், நீரும் அழிந்து, நும் மதத்தையும் அழிப்பீர்.
நண்பர் கரிக்குலம், இப்பொழுது முக்கிய கேள்வி இந்துவாய் இருப்பது எப்படி என்பது அல்ல… உங்களின் கூற்றுப்படி அராஜகம் செய்யும் தீட்சிதனின் செயல்களை கண்டும் காணாமல் விட்டு விட்டு, நமக்கு தெரிந்த வழியில் இந்துவாய் இருப்பதா..?
உங்களின் இந்த பதிலில் நீங்கள் கூறாது…
1. தமிழில் பாடினால் தீட்டு என்கிறானே, தீட்சிதன் ? நீங்கள் ஆதரிக்கிறீரா?
2. தீட்சிதனுக்கு சொந்தமான கோவில் என உரிமை கொண்டாடுகிறான் ? அவனிடமே கோவிலை கொடுத்து விடலாமா?
தவறான கண்ணோட்டத்தை சரி பார்த்தமைக்கு நன்றி…
//அறியாதபுள்ள தெரியாத சொல்லிடுச்சு உட்றுப்பா//
தமிழுக்காக சுயமரியாதை உணர்வுடன் போராடும் சிவனடியார் ஆறுமுகசாமியை இழந்தால், அது தமிழகத்திற்கு பேரிழப்பாகும். பக்தர்களும் பாராமுகமாக இருப்பது தீட்சிதனுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. பல டஜன் தீட்சித வில்லன்கள் மத்தியில் கொண்ட கொள்கைக்காக திரமாக இருக்கிறாரே, இவரல்லவா நம்பிக்கையானவர்.
மிக சரியாய் சொல்லி இருக்கிறார் தோழர்… இந்த தீட்சித நாய்களை , அட்டை பூச்சிகளை போல் ஒட்டிக் கொண்டு மக்களின் பணத்தில் அமர்ந்து தின்று, கொழுப்பெடுத்து அலையும் திமிரை அடக்க வேண்டும்… சுயமரியாதை உள்ள அனைவரும் இந்த பார்ப்பன நாய்களை கைது செய்து… தெருதெருவாய் இழுத்து செல்ல வேண்டும்…
சம்பந்தம் இல்லாமல் இங்கே இதை எழுதுவதற்கு மன்னிக்கவும். முருகேச பாண்டியன் என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் – அதில் அவர் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற ஒரு இயக்கம் மதுரை பக்கத்தில் ஆரம்பிக்கும்போது தானும் அதில் பங்காற்றியதாக சொல்லி இருந்தார். இது உங்கள் ம.க.இ.க.தானா? முருகேச பாண்டியன் உங்கள் இயக்கத்தவர்தானா?
அப்புறம் இந்த மேடைப் பேச்சில் உங்களுக்கு எவ்வளவு தூரம் இசைவு என்று சொல்லவே இல்லையே?
முருகேச பாண்டியன் அப்போது ம.க.இ.கவில் இருந்தாரா என்ற விவரம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது அவர் இல்லை என்பது மட்டும் தெரியும். இந்தக் கட்டுரையில் எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. உங்கள் விமரிசனங்களை எழுதலாம். நன்றி!
Poda pokkathavanungalaa
வீடு கட்டுவதால் வேலை பலு, அதனால் அடிக்கடி வர முடியவில்லை இனிமேல் தொடர்ந்து வருவேன்
உழவாரப்படை தயார் செய்யலாம் ! இது தான் சமயம் !
வினவு குழுவினர் இந்த பேச்சில் முழு உடன்பாடு என்று சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு இந்த பேச்சில் தவறை கண்டிக்கும் எண்ணத்தை விட ஜாதி வெறிதான் அதிகம் தெரிகிறது. தீட்சிதர்கள் தவறு செய்வது இரண்டாம் பட்சம், அவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதுதான் முதல் தவறு என்று தொனிக்கிறது. இந்த பதிவுக்கு இதற்கு மேல் கருத்து தெரிவித்து என் சலிப்பை வீணாக அதிகரித்துக் கொள்ள விரும்பவில்லை.
நண்பர் ஆர.வி, சாதியால் மக்கள் பிரிக்கப்படுவதை எதிர்க்கும் நீங்கள், ஒருவனை பார்ப்பான் என திட்டும்போது மட்டும் உங்களுக்கு வருத்தம், கோபம் உண்டாவது உண்மையிலும் கொஞ்சம் சலிப்பாகதானிருக்கிறது…
என்றோ எழுதி வைத்த , என் பாட்டன் செய்த தவறுக்கு நான் பொறுப்பல்ல என நீங்கள் கூறியதாக நினைவு.. அது உண்மை என்றால் இன்று தீட்சிதன் சிதம்பரம் கோவிலை உரிமை கொண்டாடுவதற்கான ஆதாரம், பழைய புராண குப்பையில் உள்ள கதை…
அதாவது, தீட்சிதன் வானத்தில் இருந்து வந்தவனாம், இந்த கோவிலை சிவன் கொடுத்தானாம்.. இதை நீங்கள் மறுக்கலாம் ஆனால் அரசும், அத்வானியும், செயாவும்.. இதை மறுக்கின்றனரா என்பதுதான் இங்கு கேள்வியே…
இன்றளவும் பார்ப்பனியம் தனது இரும்பு கரத்தை கொண்டு மக்கள் மீது அடக்கு முறையை ஏவுகிறது… அது சில சமயங்களில் சிதம்பரத்தில், சில சமயங்களில் மதுரையில் எதோ ஒரு சிறிய கிராமத்தில் …
பார்பனியத்தை அகற்றாமல் இந்தியாவில் சாதி ஒழியாது…
பகத்,
தவறு கண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்பவர்கள் கண்டிக்க/தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சி என்ன பயனை தரும்? அது எப்படி ஜாதியை ஒழிக்கும்? தவறு செய்தவர் பார்ப்பனராக இருக்கலாம் என்று சாத்தியக்கூறு இருந்தாலே போதும், வினவு குழுவினரும் சரி, இங்கே பொதுவாக இந்த குழுவினருடன் ஒத்த மன நிலை உடையவர்களும் சரி, ஜாதி பெயரை சொல்லித்தான் திட்டுகிறீர்கள். கொழுப்பெடுத்த அய்யங்கார் பார்ப்பான், அம்பி, என்றுதான் எழுதப்படுகிறது. பரகால ஜீயர் மடத்தை சேர்ந்த பத்ரிக்குத்தான் கொழுப்பு, அதே போன்ற பாலியல் குற்றங்களை செய்த கேரளா பாதிரிக்கு கொழுப்பு இல்லை என்று வினவு வெளிப்படையாகத்தான் சொன்னார். என் கருத்துகளுக்கு காரணம் என் genotype என்று டாக்டர் ருத்ரன் மிக தெளிவாகத்தான் சொன்னார். மணியோ யாரோ reverse casteism சரியே என்றுதான் வாதிட்டார். இது போன்ற வாதம் ஜாதியை ஒழிக்காது, ஜாதி வித்தியாசத்தை வளர்க்கும் என்று உங்களுக்கு புரியாதது துரதிருஷ்டம்.
// ஒருவனை பார்ப்பான் என திட்டும்போது மட்டும் உங்களுக்கு வருத்தம், கோபம் உண்டாவது உண்மையிலும் கொஞ்சம் சலிப்பாகதானிருக்கிறது…// என்று எழுதி இருந்தீர்கள். கொழுபெடுத்த கவுண்டன், அரிப்பெடுத்த துலுக்கன் என்று எழுதினாலும் அதே வருத்தமும் கோபமும் வரத்தான் வரும். அப்படி வினவும் எழுதுவதில்லை, இங்கே மறுமொழி எழுதுபவர்களும் எழுதுவதில்லை. ஏதோ அந்த அளவு நாகரீகம் இருக்கிறதே, ஒரு இடத்தில் மட்டும்தானே தவறுகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இதோ இந்த தீட்சிதர் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள். இது ஜாதி சார்ந்த விஷயம் இல்லை – ஆதிக்கம் செலுத்தும் ஆசை, பொது சொத்தை தன் சுயநலனுக்காக பயன்படுத்த விரும்பும் நோக்கம், இவையே இங்கே பெரிதாக தெரிகிறது. தீட்சிதருக்கு பதிலாக கவுண்டர்களோ, பிள்ளைமார்களோ, நாயக்கர்களோ, நாடார்களோ, தேவர்களோ, முஸ்லிம்களோ, கிருச்துவர்களோ ஒரு வழிபாட்டு தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் காலம் காலமாக வைத்திருந்தால் அனேகமாக இதே போல்தான் நடக்கும். இதை ஜாதி விஷயமகா குறுக்குவது முட்டாள்தனம். என்ன செய்யலாம், பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் தவறு செய்தால் வினவு குழுவினரும், இங்கே வரும் ஒத்த மனப்பான்மை உடையவரும் திசை திரும்பி விடுகிறீர்கள். பார்ப்பன ஜாதி துவேஷம்தான் முன்னால் வந்து நிற்கிறது.
பாட்டன் தவறுகளை பற்றி சொல்லி இருந்தீர்கள். நீங்கள் பிறந்த ஜாதிதான் இருப்பதிலேயே “தாழ்ந்த” ஜாதி, அதனால் உங்கள் முப்பாட்டன் எந்த ஜாதீய அடக்குமுறையையும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். என் பாட்டன் செய்த தவறுக்கு நான் பொறுப்பு என்றால் பெண்ணை அடிமைப்படுத்திய உங்கள் பாட்டன் தவறுக்கு நீங்கள் என்ன பொறுப்பு ஏற்று கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் ஒரு பெண் ஒரு ஆனால் கொடுமைப்படுத்தபோடும்போது ஆண்கள் அயோக்கியர்கள் என்று எழுதிக்கொள்வீர்களா என்ன? அப்படி சகட்டு மேனிக்கு ஆண்களை தாக்கி எழுதும் பதிவுகளையும் மறுமொழிகளையும் நான் இங்கே பார்த்ததில்லை.
// பார்பனியத்தை அகற்றாமல் இந்தியாவில் சாதி ஒழியாது…//
நீங்கள் பார்ப்பனீயம் என்று சொல்வது தவறான வார்த்தை பிரயோகம். ஆனால் நீங்கள் பார்ப்பனீயம் என்று எதை சொல்கிறீர்கள் என்று எனக்கும் குன்சாக புரிகிறது. அந்த புரிதல் சரியாக இருக்கும் பட்சத்தில் மிக சரி. நானும் 100% உடன்படுகிறேன்.
இதை உங்கள் போன்றவருக்கு புரிய வைக்கும் சக்தி எனக்கில்லை என்பது தெளிவாக தெரிந்தும் ஏன் நேரத்தை வீணடிக்கிறேன் என்பதுதான் எனக்கே புரியவில்லை.
கட்டுரையில் ஜாதிவெறி எங்கே தொனிக்கிறது?
தீட்சிதர்கள் என்ற சொல்லை பற்றி குறிப்பிடுவதாக இருந்தால்,
1. தீட்சிதர்கள் என தங்களை குறிப்பிடுவது, தில்லை வாழ் தீட்சிதர்கள் தானே. அங்கு திருட்டு தனங்கள், தவறுகளை செய்யும் தீட்சிதர்களை இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிகாட்ட வேண்டாமா?
2. பிறப்பால் பார்ப்பனீய குடும்பங்களில் பிறந்திருந்தாலும், அவர்களின் (அவாளின்) தவறுகளில் உடன்பாடு இல்லை என்றால் பார்பனீய அடையாளங்களை துறந்து விடுவது தானே. உதாரணமாக தீட்சிதர்கள் போன்ற ஜாதி பெயர்கள், பூணூல், சமஸ்கிருத மொழி வெறி, பார்ப்பனீய சடங்குகள், ஹோமங்கள்
மேலும் கட்டுரை கோருவது, கோயிலை பொது நிர்வாகத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதே. அதற்கு தில்லை வாழ் பக்தர்களும் பாடுபட வேண்டும். அது தானே உண்மையான ஜனநாயகம்.
கடந்த ஆண்டின் ஆன்மீக ரசம் சொட்டும் சூப்பர் ஹிட்
பாடலின் வரிகள் இது தான்
“காஞ்சியில சங்கரரு.
கேரளாவில் கண்டரரு
தில்லையில தீட்சதரு…”
அனைவரும் கேட்க
http://www.tamilcircle.net/index.php?Itemid=111&catid=197:2008-09-13-22-10-42&id=4008:2008-09-14-07-51-44&option=com_content&view=article
சிதம்பரம் கோவில் விவகாரம் பற்றி நான் எழுதிய 2 பதிவுகள் இங்கே.
http://koottanchoru.wordpress.com/2009/07/23/கோவில்கள்-அரசு-ஆத்திகர்/
http://koottanchoru.wordpress.com/2009/08/03/சிதம்பரம்-கோவில்-ii/
sdafdsf
hrpc kidatha vetriku valthukal,
whats the position of case now..?