Saturday, December 7, 2024
முகப்புஉலகம்ஈழம்புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!

புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!

-

நண்பர்களே,

ஆகஸ்ட்டு மாதம் இருபதாம் தேதி தோழர் இரயாகரன் எமக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அந்த மடல் பின்வருமாறு:

தோழர் வினவுக்கு, மற்றும் தோழர்களுக்கும்

ரதி ஒரு புலிப் பாசிஸ்ட்தான் என்ற அடிப்படையில், ஒரு விமரிசனத்தை நாம் எமது இணையத்தில் வெளியிட எழுதி வருகின்றோம். இந்த விமர்சனம் கடுமையானதாகவே இருக்கும்.

இது எந்த விதத்திலும் எமது தோழமைக்கு பாதகமானதல்ல. ஈழத் (மக்களின்) தேசியத்தையும், தேசிய (புலிப்) பாசிஸ்ட்டுகளையும் பிரித்துப் பார்க்கத் தவறியதால் எற்படும், ஒரு அரசியல் முரண்பாடாகவே நாம் கருதுகின்றோம். நீங்கள் முன்கையெடுத்து, அதை ரதிக்கு எதிராக முன்வைத்து வாதிடுவீர்கள் என்ற எதிர்பார்த்தோம்;. அதை நீங்கள் செய்யவில்லை.

இதை தோழமையடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். உங்கள் அபிராயங்களை எதிர்பார்க்கின்றேன்.

பி.இரயா

************************

மேற்கண்ட கடிதத்திற்கு கீழ்க்கண்டவாறு பதிலிளித்திருந்தோம்.

அன்புள்ள தோழர் இரயாகரன்,

ரதி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் பார்த்தோம்.

“ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம். இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம்.” என்ற அறிமுகத்துடன்தான் ரதியின் கட்டுரை வெளியிடப்படுகிறது. இந்தக் கட்டுரையில் புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை. புலிகளை விமரிசித்தும் எழுதவில்லலை. ஒருவேளை இனிவரும் கட்டுரைகளில் அவர் ஆதரவாகவோ எதிராகவோ எழுதும் பட்சத்தில் அதில் வாசகர்களால் விவாதிக்கப்படத்தான் போகிறது. சிங்கள பாசிசம், புலிகளின் பாசிசம் ஈழத்து மக்களுடைய நிலை ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவை தமிழகத்து வாசகர்களும், உலகமெங்குமுள்ள தமிழ் வாசகர்களும் புரிந்து கொள்வதற்கு அத்தகைய விவாதம் உதவி செய்யுமேயன்றி ஊறு விளைவிக்காது. எம் சார்பாக எழுதும் கட்டுரைகளைத் தவிர பிற வாசகர்களது கட்டுரைகளை வெளயிடும்போது இத்தகைய மாற்றுக்கருத்துக்களும், அதை ஒட்டிய விவாதங்களும் வருவது தவிர்க்க இயலாத்து என்பதுடன் அது ஆரோக்கியமானதென்றே கருதுகிறோம்.

ரதி ஒரு புலி பாசிஸ்ட் என அம்பலப்படுத்தி கடுமையாக விமரசித்து எழுதப் போவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உங்களுடைய உரிமை. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் புலி ஆதரவு கருத்து கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது நீங்கள் அறிந்த்துதான். இந்த ஆதரவாளர்கள் அனைவருமே புலி பாசிஸ்ட்டுகள் என்று மதிப்பீடு செய்வது தவறென்று கருதுகிறோம். புலிகள்தான் போராடுகிறார்கள், அவர்கள்தான் தியாகம் செய்கிறார்கள், எனவே அவர்களை விமரிசிக்க கூடாது என்ற கருத்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் அக்கருத்தே கோலோச்சுகிறது. இந்தக் கருத்தை இனவாதிகள் புலிப் பாசிச ஆதரவு நோக்கத்திற்காக திட்டமிட்டே முன்தள்ளுகிறார்கள். வெகுமக்களோ அரசியல் கண்ணோட்டமற்ற ஒரு அப்பாவித்தனமான கருத்தாக இதனைக் கொண்டிருக்கிறார்கள். இவை இரண்டும் ஒன்றுதான் என்றால் இந்து பாசிஸ்ட்டுகளும் சராசரி இந்துக்களும் ஒன்றுதான் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும். அவ்வாறு நாங்கள் கருதவில்லை. மேலும் சிங்கள பாசிசம் வெற்றி பெற்று, புலிகள் தோல்வியுற்று ஒரு அரசியல் வெற்றிடத்தில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் பொறுமையான விவாதமே அவர்களை அரசியல்படுத்த உதவும் என்று கருதுகிறோம். இதற்குமேல் இப்பிரச்சினை தொடர்பாக எம் தரப்பில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ரதி பற்றிய விமரிசனம் வெளியிடுவதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

*******************************

எமது கடிதத்திற்கு அவர் பதிலேதும் அளிக்கவில்லை.

தற்போது தோழர் இரயாகரன் அவரது தளத்தில் தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் ( அதன் பிரதி கீழே)

என்ற தொடரை வெளியிட்டிருக்கிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள தொடரில் பதிலளிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் எதுவும் இருப்பதாக வினவு கருதவில்லை. எனவே இரயாகரனுக்கு நாங்கள் அனுப்பிய பதில் கடிதமே வாசகர்கள் விளக்கம் பெற போதுமானது என்று கருதுகிறோம்.

வினவு

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

*********************************

தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம்

தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது.  இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.

மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.

இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது. இந்த அடிப்படையில்தான் (புலிப்) தமிழ் பாசிசம் தன்னை மூடிமறைத்துக்கொண்டு, வினவில் புகுந்து நிற்கின்றது.

நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு. இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாவிட்டால் சரி. மறைமுகமாகச் செய்யலாம் என்பதற்கு இது ஒத்தது.

ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.

தமிழ்மக்களின் பொது அவலத்தை புலியிசம் தனக்கு ஏற்ப, தன் வர்க்கத்துக்கு ஏற்ப  பயன்படுத்தும் என்ற அரசியல் உண்மையை, இந்த நடத்தை மூலம் வினவு நிராகரிக்கின்றது. இந்த அடிப்படையில் எதிர் விமர்சனமின்றி, அதை நுணுகிப் பார்க்கத்தவறி, தமிழ் பாசிசத்தை தமிழ்மக்கள் அவலத்தினூடு, பொதுவுடமை ஊடாக பிரச்சாரம் செய்ய வினவுதளம் உதவுகின்றது. வர்க்கங்கள் உள்ள சமூகத்தில், தமிழ்மக்களின் பொதுவான துயரங்களை எந்த வர்க்கம், எப்படி தனக்கு இசைவாக பயன்படுத்தும் என்ற அடிப்படையான அரசியல் வேறுபாட்டை கூட இங்கு கைக்கொள்ளாது, தமிழ் பாசிசத்தை ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் குரலாக பொதுவுடமை பிரச்சாரத்தில் வினவு அனுமதித்துள்ளது. ஒரு புலிப் பாசிட்டை “தோழர்” என்று கூறி, எம் தோழர்களின் (சர்வதேசியத்தில் அவர்கள் தோழர்கள் கூட) பல ஆயிரம் பேரின் கழுத்தை அறுத்த பாசிச கும்பலுக்கு “தோழர்” அந்தஸ்து கொடுத்து, பொதுவுடைமை தளத்தில் கம்பளம் விரித்து பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது. “தோழர்” என்ற அரசியல் பதத்தை எழுந்தமானமாக கையாள்வது, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாது. தோழர் மருதையனையும், தோழர் என்று புலியை ஆதரிப்பதாக கூறும் ஒருவரையும், ஒரே விழிச்சொல் ஊடாக “தோழராக” ஒன்றுபடுத்தி விடுவது, தோழமையின் மேலான கேள்வியாகிவிடுகின்றது.

ஈழத்து பொதுவுடமை தன் வர்க்க எதிரியில் ஒன்றை, இந்திய பொதுவுடமைக்கு சார்பான வினவுத் தளத்தின் ஊடாக எதிர்கொள்ளும் துயரம் எம்முன். நாம் சந்திக்கும் கடும் உழைப்பு, கடும் பளுவுக்குள், சர்வதேசியத்தின் அரசியல் அடிப்படையை தகர்த்துவிடும் எல்லைக்குள் இவர்கள் நகர்த்துகின்றனர். மனிதன் தான் சந்தித்த பாதிப்புகளை எந்த வர்க்கமுமற்றதாக காட்டி, ஈழத்துப் பாசிட்டுகளின் பிரச்சாரத்தை எமது பொதுவுடமை பிரச்சாரத்துக்கு எதிராக முன்னிறுத்தியுள்ளனர்.

நாங்கள் இதற்கு முரணாக, முரண்பட்ட விதத்தில் பிரச்சாரம் செய்கின்றோம். வரலாறும், அனுபவமும், துயரங்களும் வர்க்கம் சார்ந்தது. வெறும் சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி, அனைத்தையும் வர்க்கமற்றதாக, முற்போக்கானதாக காட்டுவது அரசியல் அபத்தம்.  தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது. அத்துடன் பேசப்படும் மனித துயரங்கள், தமிழ் பாசிசத்தினால் உசுப்பேற்றப்பட்டு  உற்பத்தி செய்யப்பட்டது. உதாரணமாக மக்களை பணயம் வைத்து, (மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல் தொடுத்து மக்கள் பலியாகி விழும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் இன்றல்ல என்றோ ஆரம்பத்திலிருந்தே அவர்களது உத்தியாகவிருந்தது) அவர்களை பலிகொடுத்து, பலியை மனித அவலமாக காட்டிப் பிரச்சாரம் செய்தது தான் தமிழ் பாசிசம். இதைத்தான் காலாகாலமாக தமிழ்ப்பாசிசம் செய்தது. அந்த பக்கத்தில் சிலவற்றை, வினவு தளத்தில் வர்க்கமற்ற தமிழனின் துயரமாக காட்டி, தமிழ் பாசிசம் இந்திய பொதுவுடமைக்கு வகுப்பு எடுக்க முனைகின்றது.

தன்னால், தன் அரசியல் நடத்தையால் பாதிக்கப்பட்ட மக்களையும் வரலாற்றையும், பொதுவுடமை ஊடாக மூடிமறைக்க முனைகின்றது. தன் பாசிச வரலாற்றை மூடிமறைத்து,  பேரினவாத வரலாறாக மட்டும் திரிக்கின்றது. மனித துயரத்தை உற்பத்தி செய்த, தமிழ் பாசிச அரசியலை திட்டமிட்டு மறைக்கின்றது.

ஒடுக்குமுறையின் பொது அதிகாரத்தை தமிழ் என்ற ஒருமையில், ஒற்றை வரலாறாக காட்ட முனைகின்றது. இதை பொதுவான மனித துயரத்தின் மூலம், பொதுவுடமை தளத்தில் பாசிசம் பாய்விரித்து நிற்கின்றது. இதை எதிர்வினை செய்து முறியடிக்கும் வகையில், தமிழ் பாசிச வரலாற்றுக் கல்வியை இந்தியப் பொதுவுடமை இழந்து நிற்கின்றது. இது ஈழத்து பாட்டாளி வர்க்கம் சந்திக்கும், புதிய அரசியல் நெருக்கடிதான்.

தொடரும்
23.08.2009

  1. ஆகஸ்ட்டு மாதம் இருபதாம் தேதி தோழர் இரயாகரன் எமக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அந்த மடல் பின்வருமாறு:
    தோழர் வினவுக்கு, மற்றும் தோழர்களுக்கும் https://www.vinavu.com/2009/08/25/raya1/trackback/

  2. தவறான விமர்சனம், சரியான விளக்கம். ஆனால் தோழர் இரயாகரன் உங்கள் விளக்கத்தை பரிசீலிக்கவேயில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது, மேலும் அவர் கொடுத்திருக்கும் இந்து/முஸ்லிம் உதாரணம் மிகத் தவறானது. ம.க.இ.க நடத்திய குஜராத் இனக்கலவரத்துக்கு எதிர்வினையான பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பேசிய முஸ்லீம்கள்களை தாலிபானின் பிரதினிதிகள் என்றா பார்க்க முடியும்?
    அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஒரு தேசப்பற்றாளன் தாலிபானின் அல்லது சதாமின் அரசியலில் ஒப்புதல் இல்லையெனினும் போர்களத்தில் அவர்களை ஆதரிப்பது தவறாகுமா? அப்படி ஆதரிப்பதினாலேயே அவர்களும் தாலிபான் ஆகிவிடுவார்களா? இதற்க்கும் ஒன்று நீங்கள் எங்களோடு இல்லை தீவிரவாதிகளோடு என்று பேசிய ஏகாதிபத்திய வசனத்துக்கும் என்ன வித்தியாசம் எனது கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம் ஆனால் இது என்னுடைய கேள்வி மட்டும் இல்லை

  3. ரயாகரன் தளத்தில் நான் எழுதிய மறுமொழி கீழே:
    // நான் புலிகளை எதிர்ப்பவன். புலிகள், குறிப்பாக பிரபாகரன் ஃபாசிஸ்ட் என்று கருதுபவன். ஆனால் ரதியை ஒரு ஃபாசிஸ்ட் என்று குறிப்பிடுவதை கடுமையாக கண்டிக்கிறேன்.

    புலிகள் உத்தமர்கள் இல்லைதான். ஆனால் அவர்கள் செய்த தவறுகள் பரங்கிமலை அளவு என்றால் இலங்கை அரசு செய்த தவறுகள் இமய மலை அளவு என்பது என் உறுதியான கருத்து. ரதி புலிகளை தீவிரமாக ஆதரிப்பவர்தான். ஆனால் அவர் கண்ணில் பெரிதாக தெரிவது புலிகளின் இலங்கை அரசு எதிர்ப்பு நிலை மட்டுமே. நேரடியாக பாதிக்கப்பட்ட அவர் ஈழத் தமிழர்களுக்கு விடிவு புலிகளின் மூலமகா மட்டுமே வரும் என்று நம்புவதில் எந்த ஆச்ச்சரியுமும் இல்லை.

    அவர் எழுதும் பதிவுகள் முக்கியமான ஆவணங்கள் என்று நான் நினைக்கிறேன். ரயாகரன் போன்றவர்களுக்கு அவர் எழுதும் விஷயங்கள் பழைய கஞ்சியாக இருக்கலாம். ஆனால் என் போன்ற பலருக்கு அப்படி இல்லை.

    ஈழம் பற்றி நான் எழுதிய சில பதிவுகளை இங்கே காணலாம். http://koottanchoru.wordpress.com/ஈழத்-தமிழர்கள்/ //

  4. 1.புலி அபிமானிகள் அனைவரும் பாசஸ்டுகளா? நாம் இல்லை என்கிற்றோம்.

    2.அத்துடன் புலித்தலைமை வேறு, புலி அணிகள் கூட வேறு.

    3.புலிக்கு பின்னால் நின்ற மக்கள் கூட வேறு.

    இவைகளை நாம் பல கட்டுரைகளில் தெளிவு படுத்தியிருக்கின்றோம். அந்த அடிப்படையில்தான் விமர்சனத்தை செய்துவந்தள்ளோம். இங்கு அவரை நாம் பாசிட் என்று ஏன் அழைக்கின்றோம், என்பதை பகுதி 4 ல் வெளிக்கொண்டு வரவுள்ளோம்.

    கடித்துக்கு பதில் தாரமை, நீங்கள் பாசிட்டல்ல என்ற உங்கள் அரசியல் நிiiயில், விவாதம் செய்தே ஆக வேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றது. இந்த விவாதம் தொடங்கிய போது, பகு;தறிவுடன் நாம் விவாதிகக் கோரியதை, நீங்கள் பகுத்தறிவுக்கு வர்க்கம் உண்டு என்ற பதில் தந்தீர்கள். அதனால்தான் விவாததில் இருந்த விலகிக்கொண்டோம்.

    பகுத்தறிவுக்கும் வர்க்கம் இல்லையென்று அடிப்படையிலா, நாம் வர்க்க அரசியலை இதவரை செய்து கொண்டிருந்தோம். சாதாரன முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையில் கூட, உண்மையினை மறுக்கும் போது, பகுத்தறிவை இங்கு கேள்விகுள்ளாக்கினோம்.

  5. 1. “புலி அபிமானி” என்ற உங்கள் கருதுகோளின் அடிப்படையில், எந்த வகையில் அரசியல் ரீதியாக சரியான திசையில் வென்று எடுக்கும் அரசியல் விமர்சத்தை செய்துள்ளீர்கள்;.

    2.”புலி அபிமானி” புலிக்கு ஊடாகத்தான் வரலாற்றைக் கூறுவார். அதை எங்கே எப்படி மறுத்துள்ளீர்கள்? அப்படி புலிக் ஊடாக அல்லது தன் வர்க்க நிலையில் நின்று கூறவில்லை என்கின்றீர்களா? அதை எப்படி எங்கே மறுத்துள்ளிர்கள்.

    தோழர்hகளே சொல்லுங்கள்.

  6. புலி அபிமானியும், புலிப் பாசிட்டும் இங்கு, இந்த இடத்தில் இதைச் சொல்லும் போது எப்படி வேறுபாடுவார்கள்?

  7. தோழர். இரயாகரன் அவர்களே, நீங்கள் அவசரப்படுகிறீர்கள். இப்படி நீங்கள் முன்கூட்டியே விமர்சிப்பது ரதியை எச்சரிக்கை அடையச்செய்யலாம். அவர் தனது புலிப்பாசத்தை மறைக்க முற்படலாம். அவர் புலிக்கு ஊடாக வரலாற்றை எழுதினால் விமர்சிக்கலாமே.

  8. The word fascism is loosely used by Rayaharan. Is it right on his part to call every one as fascist who fails to fall into his line. He would be a fascist in the eyes of others for his rigid views.In my opinion Rathi is rendering a great service not only in reminiscing the suppressive measures of Rajapakse but also in protecting Elam politics from the dry and unenthusiastic language use of Rayaharan like old chaps. In a true Marxist perspective what he indulges in is not at all a Communist activity but a petty bourgeois activity. Now, there is no LTTE. What prevents Rayaharan from going there to Elam to wage war against Rajapakse. When you go to Spencer Plaza in Chennai you can see the bohemian life style of people in Tamil Nadu. But in the same country in a state called Bihar Dalit farmers are dying. Does the word Middle Class Fascists suit the people in Spencer Plaza? I think Rayaharan like people have no political life unless they criticize LTTE. But the sad thing in the ugly episode of Rayaharan is there is no LTTE at the recieving end of his abuses and so he chooses the so called PULI ABIMAANIKAL.

  9. இராயகரனுக்கெல்லாம் ஒரு பதிலா.. எவனாவது தமிழரங்கத்துல லாஜிக்கலா வாதாடி நுணுக்கமா மறுத்து தனக்குப் பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டாலே
    அந்தப் பின்னூட்டம் அங்க வராது. இதுல இவனுங்க லாம் சனநாயகம், பேச்சுரிமை பிண்ணாக்கு பத்தி பேசறது தான் காமடி. தான் மட்டுந் தேன் உத்தமன், மேதாவி,
    அதிபுத்திசாலி, தான் பண்ணுறது மட்டுந் தான் தூய அரசியல், தன்னுது தான் உன்னதமான சித்தாந்தம், மத்தவனெல்லாம் ஜாட்டான்னு நெனைக்கிற இந்த ஒற்றை மனப்பான்மையே இவனுங்க பேச எண்ணுற கோட்பாட்ட எல்லாம் சுக்கு நூறாக்குது.
    இது இன்னொரு வகைப் பார்ப்பனியம், தன்னையே உயர் பீடத்துல வச்சுக்கற யூதத்தனம், ஒரு வகை apartheid. இது தான் இராயகரன்!!! இந்த ஒற்றைத்தனங்களோட தான் அவர் மத்தவங்கள பழி சொல்றார்.. முதலில் உன் கண்ணிலுள்ள விட்டை எடுத்து விட்டு அடுத்தவன் கண்ணுக்கு போன்னு ஏதோ பொஸ்தகத்துல சொல்லிருக்காப்ல.

    படி எடுக்கும் எந்திரம் போல எழுதித் தள்ளும் எழுத்துநோயாளி ஜெயமோகன் போல அரசியல்நோயாளி இவர். வெறும் வறட்டுச் சித்தாந்தங்களும், மொண்ணைக் கோபங்களும், சுய சொறிதல்களும்.

    தொடர்ச்சியா புலிகளத் திட்டணும், ஆனா இடைக்கிட புலியணிகள் வேற, மக்கள் வேறன்னு படிக்கும் வாசகர்கள் தன் மேல் காழ்ப்புணர்வுக் குற்றச்சாட்டை சுமத்தாதிருக்க 3:1 tactல பதிவுகள் வேற..

    இராயகரன விஜயக்காந் படங்கள் மாதிரி நெனச்சு விட்டுப் போறது தான் உத்தமம். வி.காந் படங்கள் சீரியசா இருக்கும், ஆனா பார்க்கற நமக்குக் காமெடி தாங்காது..

    • யேய் யார் நீ ?
      போகிற போக்கில் தோழர் ரயாகரனை விமர்சிப்பது
      என்கிற சாக்கில் பாசிச புலிக்கு புகழ் பாடுகிறாய்.
      தோழர் ரயாகரன் எம்மை விமர்சிப்பதோ
      தோழரை நாங்கள் விமர்சிப்பதோ வேறு
      நடுவில் யோக்கியன் போல புகுந்து உன்னுடைய‌
      புலி வேலைய இங்கு காட்டதே புலியின் வாலையும்
      வெட்டி விடுவோம்.

      புலியை பற்றி விமர்சிக்க அஞ்சுகிறவனுக்கு
      ரயாகரன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

    • dai stupid arivu kolunthu, ethavathu sollanumgurathukaga enna venunaalum solluviya?. etho posthakathula solli irukappula nu sollura, athu enna posthagam nu theriyalana nee ean atha sollura, muttal….

  10. பொதுவாக தோழர் ரயாகரனுடன் முரண்படுவதில் எமக்கு சிறுதும் உடன்பாடில்லை, (பல வருடங்களாக அவருடைய கட்டுரைகளை படித்த அனுபவத்தினால் சொல்கிறேன்),

    //அவர் கொடுத்திருக்கும் இந்து/முஸ்லிம் உதாரணம் மிகத் தவறானது. ம.க.இ.க நடத்திய குஜராத் இனக்கலவரத்துக்கு எதிர்வினையான பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பேசிய முஸ்லீம்கள்களை தாலிபானின் பிரதினிதிகள் என்றா பார்க்க முடியும்?//

    தோழர் MamboNo8! தோழர் ரயாகரன் எழுதியதற்கான அர்த்தம் இதுவல்ல//இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது.// இதில் என்ன தவறு இருக்கிறது இது தானே சரியானது அப்படிதானே புதிய ஜனநாயகம் எழுதுகிறது இங்கே நீங்கள்
    பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை பற்றி உதாரணம் காட்டுவது பொருந்தாது பிரச்சனையை வேறு திசையில் திருப்பதான் உதவும்,

    ரதி பொதுவாக பாதிக்கபட்ட புலம்பெயரந்த தமிழர்களின் உணர்வை வெளிபடுத்துகிறார் அதே சமயத்தில் அவர் தனது புலி பாசத்தை தேவையான
    இடங்களில் வெளிபடுத்திய வண்ணம் இருப்பதை வினவு
    மறுக்க முடியாது, பொதுவாக புலிகளின் பாசிசத்தை அம்பலபடுத்தியது தமிழகத்தில் மகஇக தான், ஆனால் ரதி அவர்களோ தன் கட்டுரையில்
    தனது புலி ஆதரவை அவ்வப்போது வெளிபடுத்தி கொண்டும் குறிப்பாக தோழர் ரயாகரனுக்கு எதிராக கருத்துக்களை கூறு வருகிறார் இது நல்லதல்ல தோழர் ரயாகரனுக்கும் மகஇகவுக்கு இருக்கும் ஆரோக்கியமான போக்கு பொதுவான மகஇக ஆதரவாளர்கள் அனைவருக்கும் தெரியும், இதை வினவில் தனது கட்டுரை மூலமாக ரதி சீர்குலைப்பதாக கருதுகிறோம், ரதியின் தற்போதைய கட்டுரைகள் புதிய ஜனநாயகத்தில் வெளிவரவாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் ஆனால் வினவு தோழர்கள் இதற்கான வாய்ப்பை (ரதிக்கு) வழங்கியபோதே நாங்கள் தவறு என்று கருதினோம்,ஒரு புலிப் பாசிட்டை “தோழர்” என்று கூறி, எம் தோழர்களின் (சர்வதேசியத்தில் அவர்கள் தோழர்கள் கூட) பல ஆயிரம் பேரின் கழுத்தை அறுத்த பாசிச கும்பலுக்கு “தோழர்” அந்தஸ்து கொடுத்து, பொதுவுடைமை தளத்தில் கம்பளம் விரித்து பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது. “தோழர்” என்ற அரசியல் பதத்தை எழுந்தமானமாக கையாள்வது, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாது. தோழர் மருதையனையும், தோழர் என்று புலியை ஆதரிப்பதாக கூறும் ஒருவரையும், ஒரே விழிச்சொல் ஊடாக “தோழராக” ஒன்றுபடுத்தி விடுவது, தோழமையின் மேலான கேள்வியாகிவிடுகின்றது. இது உண்மைதான் வினவு தோழர்கள்
    இதை கவனத்தில் கொள்ள வேண்டும் தோழர் என்ற வார்த்தையை சில தோழர்களே அதன் கனம் தெரியாமலே பயன் படுத்துகிறார்கள் புலி அபிமானிகள் அனைவரும் பாசிட்டுகள் என்று தோழர்(ரயாகரன்) எங்கே குறிப்பிட்டுள்ளார் எனவே உங்கள் தலைப்பே தவறு. புலி அபிமானி என்பதை தாண்டி ரதி புலிகள் பற்றி நல்லெண்ணம் உருவாக்க முயறசிக்கிறார், அவர் அப்படி இல்லை என்று நீங்கள் மறுக்ககூடாது புலிகள் பற்றி புஜ வின் விமர்சனத்தை ஏற்று கொள்வதாக ரதி மறுமொழியிட்டால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம், உங்கள் தலைப்பே தோழரை (ரயாகரன்) பற்றி தவறான புரிதலை கொண்டு செல்வதாக இருக்கிறது தோழர்கள் அசுரன், ஏகலைவன், போராட்டம் போன்றவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு தெளிவுபடுத்த வேண்டும் அது உங்கள் கடமை அமைதியாக இருந்துவிடாதீர்கள்

    • தோழர் ரயாகரன் புலி தலைமையைதான் எதிர்த்தார் அவர் புலியை மட்டும் விமர்சன்ம் செய்வது போல ஒரு மாயத்தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர்
      நாட்டுக்காக புலியாக மாறி உயிர் துறந்த வீரர்களுக்கு அவர் உரிய மரியாதையை செலுத்தியுள்ளார்,

       சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

      • தோழர் விடுதலை,

        யாரும் மாயத்தோற்றம் காட்டவில்லை, அவரே ஒரு மாய உலகில் தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.
        அங்கு போராடிய பெரும்பாலானோர் (இறுதிக் கட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கப்பட்டோர் தவிர) புலித் தலைமையை விரும்பி ஏற்றுத் தான் போராடினார்கள். அவர்கள் தங்கள் தலைமையை முழுமையாக நம்பினார்கள். அத் தலைமை சரியான
        முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்காததால், வெற்று நம்பிக்கைகளால், ஏமாற்றப் பட்டதனால், வீண் இராணுவ ஆரவாரங்களால் தன்னுடன் சேர்ந்த பட்டாளத்தையும், மக்களையும் பலிகொடுக்க காரணமாகி விட்டது. இது தனிக் கதையாடல், பேசலாம்.

        வேண்டுமெனப் புலிகள் மீது காழ்ப்புணர்வோடு பழிகளை மட்டும் சுமத்தி விட்டு, ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் செய்து கொண்டு வேண்டாப் பெண்டாட்டி கை பட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம் என இருந்து விட்டு, வீரவணக்கங்கள் போராளிகளுக்குச் சொல்வதெல்லாம் பாசாங்கு தான். உணர்வுகளுடன் மதிப்பதாகக் கூறுவதற்கும்,ஓரு நிகழ்ச்சி நிரலை வைத்து இயந்திரத்தனமாக மிகைநடிப்பு காட்டுவதற்கும் வித்யாசங்கள் உண்டு. – இப்படி இந்த இறுதி நேரத்தில் கூட அப்போராளிகளுக்கு வணக்கங்கள் தெரிவிக்காவிடில் எதிர்காலத்தில் மக்கள் முன்னால் அரசியல் பேசப் போகையில் எவனும் கேள்வி கேட்டால், இதோ பார் நானும் கட்டுரை எழுதினேன், அறிக்கை விட்டேன், என்பதாகக் காட்டி தன் அப்பழுக்கை நிருபிக்க (இப்போது அவ்வப்போது லிங் சுட்டி நிருபிக்கிறாரே அதேபோல்)- தேர்ந்த திட்டமிடலுடன் எழுதப் பட்டதாகவே இந்த போராளிகளுக்கான வீரவணக்கக் கட்டுரைகள் எல்லாம் இருக்கிறது.
        இவ்வளவு நாளும் தமிழரங்கம் படித்து வரும் எவராலும் அதை ஊகிக்க முடியும்.
        அவர் முகடொன்றின் உச்சிக் குடுமியில் தான் இருப்பதாகக் கருதிக் கொண்டு, மேட்டிமைத்தனத்துடன் எழுதி வந்தார். இனியும் அதைத் தான் தொடர்வார். அவருக்கு ஈழம் வீழ்ந்தது தமிழர் மாண்டது அனைத்துமே ஆஹா.. பார் நான் சொன்னேன்ல.. இது தான் நடக்கமுனு.. எல்லாமே கட்டுரை எழுத ஒரு விஷயம். ஈழத்தில் போராடிய இயக்கம் போய் விட்டது. தாராளமாக அங்கு போய் புதிய அரசியலை மக்கள் மத்தியில் கட்டமைக்கலாம். முன்னர் காகிதத்திலும், கிடைத்தால் மைக்கின் முன்னும் இப்போது இணையப் பக்கங்களிலும் அரசியல் செய்வதே இவர்களுக்கு நடைமுறை ஆகிவிட்டது.

        ம.க.இ.க போன்ற செயல்முறையில், மக்கள் போராட்ட வடிவங்களில் களம் இறங்கும் அமைப்பு, இராயகரன் போன்ற வார்த்தைகளில் மட்டும் புரட்சி கட்டும் ஒற்றைத்தன பார்ப்பனியர்கள் சொல்வதைக் கேட்பதும், இவர் போன்றோடு கூட்டு வைத்திருப்பதும் முரண்பாடே!

    • தோழர் விடுதலை,

      என்னைப் பொருத்தவரை இது மிக மிக மேலோட்ட மான முரண்பாடுகளை மையப்படுத்தி நடத்தப்படுகிற விவாதமாகவே கருதுகிறேன். இருப்பினும், இந்த முரண்பாடும், அதன் மீதான விவாதமும் மிகமிக அவசியம் என்றே கருதுகிறேன். புலிப்பாசிசத்தைக் கண்டிப்பதிலும் சிங்கள பேரினவாத அயோக்கியத்தனங்களைக் கண்டிப்பதிலும், ஈழ மக்களின் நியாயமான சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பதிலும் தோழர் இரயாகரனின் தளத்திற்கும் வினவிற்கும் எந்த முரண்பாடுமில்லை. இது எல்லோருக்கும் தெரியும்.

      தோழர் ரதியின் எழுத்துக்களில் பக்கச் சார்பு இருக்கிறது. இதோ என்று ஆனித்தரமாக நிறுவி விவாதிக்க முடியாத குறைபாடு தோழர் இரயாவிடமும் இருக்கிறது. ’புலி அபிமானிகள்’, ’புலி ஆதரவாளர்கள்’ என்பதை நாம் கற்பனையில் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காட்டிலும் வினவு கோரியிருப்பதைப் போல ரதி, தனது புலியாதரவுக் கருத்தை வெளிபப்டுத்திய பிறகு முடிவு செய்து கண்டிப்பதுதான் சரி என்பது என் கருத்து.

      எனினும் இம்முரண்பாடுகள் விவாத களத்தில் நின்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் ரதி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து வேடிக்கை பார்ப்பது சரியல்ல. இது முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தி நடைபெறுகின்ற விவாதம். இது குறித்து தனது கருத்துக்களை விரிவாகவும், உடைத்து வெளிபப்டையாகவும் தோழர் ரதி எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

      இதைத் தவிர என்னிடம் இப்போதைக்கு பதில் ஒன்றும் இல்லை.

      தோழமையுடன்,
      ஏகலைவன்

      • சந்தேகமே வேண்டாம் ரதி புலி ஆதரவாளர்தான்… அதனால் என்ன? அவரது கருத்தை மாற்ற போராடுவது தானே நமது அரசியல் வேலை.
        களத்தில் நாம் இதுவரை எத்தனை புலிஆதரவாளர்களை சந்தித்திருப்போம், விவாதித்திருப்போம், மாற்றியிருப்போம்.

        இந்திய புரட்சிகர அமைப்புகளிளேயே புலிகளின் மீதான பார்வையில் வேறுபாடு உன்டா இல்லையா, அவையெல்லாம் எப்படி தீர்ப்பது, விவாதிப்பதுதானே வழி்.

        முன்பு ஒரு முறை வினவு எழுதியை போல, வலையுலகில் இரண்டு பிரவு, ஒன்று புலி எதிர்ப்பு – அங்கு புலி ஆதரவு ஒலிக்காது…. மற்றொன்ரு புலி ஆதரவு – அங்கு புலி எதிர்ப்பு ஒலிக்காது. இப்படி இருந்தால் உருப்படுமா?

        என்ன உயர்வான அரசியல் கொள்கையிருந்தால் என்ன மாற்றுக் கருத்துகளுடன் போராடினால்தானே அது உயர்வானது என்று ஒப்புக்கொள்ளப்படும்.

        அப்படி மாற்றுக் கருத்துக்கள் விவாதம் செய்ய வினவு ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறது, விவாதிப்பதை விடுத்து விவாதம் நடக்காத, சூன்யமான ஒரு வெளிக்கு மீண்டும் கொண்டு செல்ல முயற்சிகள் நடக்கிறது. இந்த முறை இது புரட்சிகர முகாமிலிருந்து நடப்பதுதான் வேதனையான விசயம்.

        போலி கம்யூனிஸ்டுகளாகட்டும், மதவாதிகளாகட்டும், புலிகளாகட்டும், நமது முரண்பாடு எப்போதும் தலைமையோடுதான் அணிகளோடு அல்ல, அணிகள் நமது தோழர்களே.

        ரதி புலிகளின் குரலாகவே ஒலித்தால் கூட அதைப்பற்றி அஞ்சத்தேவையில்லை, ஏனெனில் நாம் கருத்து புரட்சியாளர்கள் மட்டுமல்ல, களத்திலும் வேலை செய்கிறோம், நமது புரட்சிகர நடைமுரை எத்தனையோ தீவிர மாற்றுக்கருத்தாளர்களை வென்றிருகிறது. நடைமுறையில்லா வழிமுரைக்குள் இருந்தால்தான் மாற்றுக்கருத்துக்கும் அஞ்ச வேண்டிய நிலை வரும்.

        எனவே தோழர். ரதியை அவர்போக்கில் எழுத விடுங்கள்.. முன்பு மா.சே கூறியது போல அவரவர் பார்வையில் அவரவர் அனுபவங்கள் பதியப்படட்டும், சரி தவறை விவாதிப்போம். ரதி நேர்மையாக விவாதிப்பவர், இந்த களத்தில் அதை யாரும் ஒப்புக்கொள்ள முடி்யும்.

        அனுபவங்கள் ஒற்றைத்துருவமானவையல்ல. கையை கட்டலாம், குரல் வளையை நசுக்கலாம்… சிந்தனையை?

      • தோழர் ஜான்

        புலி ஆதரவாளரோ அல்லது புலியாகவே கூட இருக்கட்டும் அவர்களுடன் பேசி
        விவாதிப்பது சரியானதுதான் RSSஅம்பிகளுடன் கூட பேசி விவாதம் செய்து
        அவர்களையும் தெளிய வைக்க முயற்சி மேற்கொள்வதுதான் சரியானது,
        ஆனால் இங்கே நடப்பது என்ன ரதி விவாதிப்பவராக இங்கு வரவில்லை
        அவர் கட்டுரையாளராக எழுதுகிறார் ஏற்கனவே ரதி புலி பாசத்தை பழைய விவாதங்களில் வெளியிட்டுள்ளார், இப்போது எழுதும் கட்டுரையிலும் அவர்
        புலி பாசத்தை தேவையான இடங்களில் வெளியிட்டுள்ளார், இது ஒன்றும் கதையல்ல வரலாறு இங்கு புலிகளின் பாசிச மாபியத்தனமும் பதியப்பட வேண்டும், ஈழமக்களின் கண்ணீரில் சிங்கள பாசிட்டுகளுக்கு பங்கு உள்ளது போல் புலிகளுக்கும் பங்கு உண்டு இங்கு ஈழ சொந்தங்களின் வலியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் இது பக்கசார்பின்றி இருத்தல் அவசியம்
        அப்போதுதான் நமக்கு அது ஒரு படிப்பினையாக இருக்கும்

        ரதி புலி ஆதரவாளர் அவர் கட்டுரை எழுதலாம் அவர் தவறு செய்யும் போதுதான் அதை சுட்டிகாட்ட வேண்டும் என சில தோழர்கள் கூறுகிறார்கள்
        அப்படியானால் தோழர் ❓ அதியமான் போன்றவர்களையும் கட்டுரை எழுத சொல்லி தவறு செய்யும்போது சுட்டி காட்டலாமா? இங்கு புரட்சிகர சிந்தனைகளை உயர்த்தி பிடிக்கும் வினவில் இப்படி ஒரு கட்டுரையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை,

  11. நண்பரே, தோழர்.இரயாகரன் தனது அனுபவ வலியிலிருந்து பேசுகிறார். ஆயிரக்கணக்கான தனது சொந்த மக்களையே கொலை செய்த புலிகளின் ஊடாகத்தான் ரதியின் பதிவு நகரும் என்று அவர் அனுமானிப்பதினாலேயே விமர்சிக்கிறார். இந்த அனுமானம் சரி என்றே நினைக்கின்றேன். ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சி என்ற பெயரில் புலிகளின் தவறுகளை ரதி எழுதாமல் விடுவாரேயானால் அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகிவிடும். தோழர் கூறுவது போல் தமிழினம் புலிகளினால்தான் இழிவான இந்த நிலையடைந்துள்ளது.
    மேலும் அவர் கூறுகிறார், மக்களை பணயம் வைத்து, (மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல் தொடுத்து மக்கள் பலியாகி விழும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் இன்றல்ல என்றோ ஆரம்பத்திலிருந்தே அவர்களது உத்தியாகவிருந்தது) அவர்களை பலிகொடுத்து, பலியை மனித அவலமாக காட்டிப் பிரச்சாரம் செய்தது தான் தமிழ் பாசிசம். இதைத்தான் காலாகாலமாக தமிழ்ப்பாசிசம் செய்தது. இதைக் கூறாத வரலாற்றை சரி என்கிறீர்களா. மக்களை மீண்டும் இந்த படுகுழியில் தள்ளி விடுவார்களோ என்றுதான் பதறுகிறார்.

    • // நண்பரே, தோழர்.இரயாகரன் தனது அனுபவ வலியிலிருந்து பேசுகிறார். ஆயிரக்கணக்கான தனது சொந்த மக்களையே கொலை செய்த புலிகளின் ஊடாகத்தான் ரதியின் பதிவு நகரும் என்று அவர் அனுமானிப்பதினாலேயே விமர்சிக்கிறார். இந்த அனுமானம் சரி என்றே நினைக்கின்றேன். ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சி என்ற பெயரில் புலிகளின் தவறுகளை ரதி எழுதாமல் விடுவாரேயானால் அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகிவிடும். தோழர் கூறுவது போல் தமிழினம் புலிகளினால்தான் இழிவான இந்த நிலையடைந்துள்ளது.
      மேலும் அவர் கூறுகிறார், மக்களை பணயம் வைத்து, (மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல் தொடுத்து மக்கள் பலியாகி விழும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் இன்றல்ல என்றோ ஆரம்பத்திலிருந்தே அவர்களது உத்தியாகவிருந்தது) அவர்களை பலிகொடுத்து, பலியை மனித அவலமாக காட்டிப் பிரச்சாரம் செய்தது தான் தமிழ் பாசிசம். இதைத்தான் காலாகாலமாக தமிழ்ப்பாசிசம் செய்தது. இதைக் கூறாத வரலாற்றை சரி என்கிறீர்களா. மக்களை மீண்டும் இந்த படுகுழியில் தள்ளி விடுவார்களோ என்றுதான் பதறுகிறார் //

      Correct
      Vinavu should take care before publishing Rathi’s Articles, because everyone have good belief and
      faith on vinavu’s Artcles.
      Let Rathi to write.

  12. எங்களுடைய வாய்க்குள் உங்கள் வார்த்தைகளை திணிப்பது போலானது போன்றதே ” புலிகளின் அநுதாபிகள் அனைவரும் புலிப் பாசிட்டுக்களா” என்ற கேள்வியுடனான வினவின் தலையங்கம்.

    இந்தத்தலையங்கம் எழுப்பும் கேள்விக்கு எமது பதில் புலிகளின் அநுதாபிகள் அனைவரும் புலிப் பாசிட்டுக்கள் அல்ல என்பதே.

    மேலும் தர்க்க ரீதியாக இதைப் பார்த்தால் இக் கேள்விக்குள் இக் கேள்விக்கான இன்னொரு பதிலும் ஒளிந்திருக்கின்றது. அது என்னவெனில் புலிகளின் அநுதாபிகள் அனைவரும் புலிப் பாசிட்டுக்களா என்பதை இல்லை என்று மறுத்துரைக்கின்ற போது எதிர்மறையாக அவர்களில் ஒரு பகுதியினர் பாசிட்டுக்களாக இருக்க முடியும் என்பதேயாகும்.

    இந்தப் பாசிச சூழலில் உழன்று மக்களின் அவலங்களோடும் துயரங்களோடும் இணைந்து அவர்களுக்காக போராட புறப்பட்ட தோழர்களை இப்பாசிச சக்திகளிடம் இழந்தோம். பேரினவாத பாசிட்டுக்களுக்கு முகம் கொடுத்து அதே பேரினவாதத்தை எதிர்த்த போராளிகளின,; தோழர்களின் மக்களின் குருதியில் கைநனைத்த பாசிட்டுக்களை நாம் எம் அநுபவத்தில் அறிந்து கொண்டிருக்கின்றோம்.

    இவர்கள் புரட்சிகர வர்க்கப் போராட்ட சக்திகளாக வேசமிட்டு ”சோசலிச” திட்டங்கள் தயாரித்து போராளிகளைக் கருவறுத்திருக்கின்றார்கள். அப்பாவிகளாக நடித்து கடத்தி கொலை செய்து பாசிசத்துக்கு சேவை செய்திருக்கின்றார்கள். அன்பு காட்டி வறுமை போக்கி தங்கள் ஆளுமைக்குள் இழுத்து பலி எடுத்திருக்கின்றார்கள். விமலேஸ்வரன், செல்வநிதி தியாகராஜா, செல்வன், அகிலன், தீப்பொறி மற்றும் புதியதோர் உலகம் ஆசிரியர் கோவிந்தன், சந்ததியார் போன்றோர்கள் கொல்லப்பட்ட போது பாசிசத்தின் கூடாரத்துக்குள் போர் தொடுத்த எங்கள் அநுபவங்களும் வரலாறுகள் தான்.

    அந்தப் போராளிகளின் உடலங்கள் கூட கிடைக்காதவாறாய் சிதைக்கப்பட்டு, ஒப்படைக்க மறுக்கப்பட்டு, காணாமல் போக வைக்கப்பட்டு, தெருவோரமாய் கொலை செய்து நெருப்பினுள் வீசப்பட்ட ஆயிரக் கணக்கான அந்தப் போராளிகளின் தாய்மார்கள் உறவினர்களுக்கு பாசிசத்தின் பதில் என்ன என்ற வரலாற்றுக் கேள்விக்கு பதில் சொல்ல இந்தப் போக்குகளை கடைப்பிடித்த இயக்க அநுதாபிகளுக்கு கடமையுண்டு. அந்தத் பாசிச பிடிக்குள் தமது போராட்டத்தை இழந்த மக்கள் இதைக் கோருவார்கள்.

    இந்தக் கடமையை தட்டிக்கழிக்கும் அநுதாபிகளை ” அநுதாபிகள் என்று சொல்ல முடியாது. எனவே இவ்வாறானவர்கள் தான் இயக்க அநுதாபிகளில் சாதாரண அநுதாபி என்றதற்கு வெளியில் பாசிச கூறை பாதுகாக்க முனைபவர்கள். எனவே தான் அநுதாபிகள் யார் பாசிட்டுக்கள் யார் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.

    ரதியின் தொடர் கட்டுரை தொடர்பாக வரலாற்றை தன் (புலி) வழியில் இழுத்துச் செல்லும் மையமான போக்குக்கு எங்களது மறுப்புகளை நாங்கள் தெரிவித்து வந்தோம். இன்னும் இது தொடர்பாய் ஆவணங்களோடு ( இன்னும் இணைக்கவுள்ளோம் ) தழிழரங்கத்தில் இரு பகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
    தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)
    தோழர் வினவின் தளத்தில் அப்பாவி வேஷம் போட்டு நிற்கும் தமிழ் பாசிசம் (பகுதி 2)

    ரதி உங்களது பாசறையில் புலி அநுதாபி நிலையிலிருந்து தெளிவூட்டப்பட்டு வென்றெடுக்கப்பட வேண்டியவர் என்று ஒரு நிலை இருந்திருக்கலாம். அதனை விமர்சனங்களினூடு வினவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு தப்பியதால், தமிழ்ப்பாசிச கூறுகள் வரலாற்றை மறுபடியும் தாம் சார்ந்து அதுவும் வினவு தளத்தில் பதிவு செய்த போது நாங்கள் விழித்துக் கொண்டோம்.

    • தோழர் வினவு,

      வணக்கம்,தோழர் இரயாகரன் மீதான இக்கட்டுரையின் தலைப்பு சரியானதாக இருக்கின்றதா?

      தோழர் இரயாகரனின் கருத்துக்களோ கட்டுரைகளோ, தனிப்பட்ட வலியிலிருந்து எழுதப்படுபவை அல்ல, அது அவரது பொதுவுடமை சித்தாந்தத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது. ஒரு கம்யூனிஸ்ட் தனிப்பட்ட பார்வையிலிருந்து எழுத முடியுமா? பாட்டாளிவர்க்க சிந்தனையிலிருந்துதான் எழுத முடியும். இன்னும் நண்பர் ரதி எழுதியே முடிக்க வில்லை எனலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் பதிவின் போது மறுமொழிகளைப்பாருங்கள். நன்றாக எழுது கிறீர்கள், எழுத்து நடை அருமை என சில தோழர்கள் எழுதலாம். ஆனால் தனது வரலாற்றுக்கட்டுரையில் புலிப்பாசிசத்தை எங்கனமாவது தொட்டிருக்கிறாரா பாருங்கள். அப்படி சிங்கள இனவெறிப்பாசிசம் தமிழ் குறுந்தேசியப்பாசிசம் இரண்டுக்குமிடையில் பட்ட அனுபவங்களை எழுதினால் தானே அது சரியான வரலாறு. நல்லகருத்தாக்கத்தை எழுதுகிறார்களே தவிர . அந்தக்கருத்தாக்கம் உண்மையானதா என்பதையும் பார்க்கவேண்டுமா இல்லையா?

      அவரின் போராடி மரணித்த என்றகட்டுரை எத்துணை சிறப்பான அம்சங்களை கொண்டது.ஒரு கம்யூனிஸ்டுக்கே உரிய தன்மைகளை கொண்டது .

      இறுதியாய் சந்தேகம்

      ஒரு புலி ஆதரவாளரால் சரியான வரலாறை எழுத முடியுமா? முடியுமெனில் அது எப்படி சாத்தியம்? துயரத்திற்கு,கண்ணீருக்கு வர்க்கமில்லையா? இதே வரலாற்றை தோழர் சிறீயோ அல்லது இரயாவோ எழுதினால் சிங்கள இனவெறிப்பாசிசம், புலியின் குறுந்தேசிய பாசிசத்தை அம்பலப்படுத்துவார்களா இல்லையா ? அது தானே சரியா இருக்கும். சரியா அல்லது தவறா என்பதை வரலாறு நிறுவியிருக்கிறதே. தோழர் இயா எப்போதும் புலி ஆதரவாளர்களை பாசிட்டுகளாக வரையறுக்கவில்லை. அனைவரும் ஈழத்தின், இலங்கையின் உண்மையான வரலாறை எதிர்பார்க்கிறோம். அது தானே இப்போதைய தேவை. பாசிசத்தை விமர்சிக்காத வகையில் ஒரு வரலாறு எழுத முடியுமா?

      தயவு செய்து தோழகள் தெளிவு படுத்தவும்

      • சரியாகச் சொன்னீர்கள். இது வித்தகன் எழுதுவது போன்ற கட்டுரையில்லை, வந்தார்கள் சுட்டார்கள் செத்தார்கள் என்று எழுதுவதற்கு. ஒரு இன மக்களின் நூற்றாண்டுகால துயர வரலாறு. பேரினவாதத்திற்கும் தமிழ்பாசிசத்திகும் இடையே சிக்குண்டு மரணித்த அம்மக்களின் வரலாற்றை எழுத ஒரு சிறந்த மார்க்ஸிஸ்டால் தான் முடியும். ஒருக்கால் ரதி புலி ஆதரவாளராக இல்லாவிட்டாலும் தான் கண்ட,கேட்ட அனுபவத்திலிருந்துதான் எழுதுவார். இதன் காரணமாகவும் புலியின் தவறுகள் மறைக்கப்படும். அவருக்கு தெரியாமலும் போயிருக்கலாம். அல்லது தெரிந்தும் எழுதாமல் விடலாம். ஏன் தோழர்.இரயாகரனையே எழுதச் சொல்லக்கூடாது.

  13. // யேய் யார் நீ ?
    போகிற போக்கில் தோழர் ரயாகரனை விமர்சிப்பது
    என்கிற சாக்கில் பாசிச புலிக்கு புகழ் பாடுகிறாய்.
    தோழர் ரயாகரன் எம்மை விமர்சிப்பதோ
    தோழரை நாங்கள் விமர்சிப்பதோ வேறு
    நடுவில் யோக்கியன் போல புகுந்து உன்னுடைய‌
    புலி வேலைய இங்கு காட்டதே புலியின் வாலையும்
    வெட்டி விடுவோம்.

    புலியை பற்றி விமர்சிக்க அஞ்சுகிறவனுக்கு
    ரயாகரன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை
    //

    உன்ன எதிர்க்கற, நசுக்கி வச்சிருக்கற இந்திய, பார்ப்பனிய அரசின் வாலையே வெட்டத் துப்பு இல்ல உனக்கு.. இதுல புலிவால வெட்டப் போறியா, ரொம்பத் துள்ளாத.. இப்படி உங்களைப் போல் எழுதிப் போக எனக்கு வெகு நேரமாகாது சர்வதேசியரே.
    என் பின்னூட்டு யாருக்கும் புகழ் பாடல, மார்க்சியம் என்ற போர்வைக்குள், அதற்குக் களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒற்றைத் தனங் கொண்ட பார்ப்பனிய பாசிச மனநிலை கொண்டவரைப் பற்றியது. இராயகரன் என்ன யாருமே விமர்சிக்க முடியாத பெரிய மகோன்னதரா..? இது என்ன மனநிலை.. புலிகள விமர்சிக்கக் கூடாதென புலியாதரவுக்காரர்கள் சிலரின் மனோபாவத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. இராயகரனை விமர்சிச்ச உடனே நான் புலி ஆதரவாளன் ஆயிருவேனாம். ரஜனி, விஜய், அஜித் ரசிகர்கள் பாணியில் கோபங் கொண்டு விசிலடிச்சான் குஞ்சு மனோபாவத்துடன் திமிராடுவது தான் சர்வதேசியமா நான் சொன்ன கருத்திலுள்ள உண்மைய அலசாம என்னத் திட்டி பதிலிடும் போதே தெரிகிறது உங்க சனநாயகம். ஆராயாது, ரசிகசிகாமணி மனநிலையுடன் பேசுவதை நிறுத்தவும்.
    முடிஞ்சா யார் யாரு யார் யார எப்ப, எப்படி விமர்சிக்கலாம் என பட்டியல் ஒன்று தயாரித்துப் போடவும். எம் போன்றோருக்கு உதவியாய் இருக்கும். 🙂

    • நான் இந்த விடயத்தில் முற்று முழுதாக அறிவுகொளுந்தை ஆதரிக்கிறேன். சர்வதேசியவாதியின் எழுத்தில் பாசிச சாயல் நிறையவே உள்ளது. இப்படி திமிர் தனமாக எழுதுவதால் எந்த பலனும் ஏற்படாது…மாறாக கோபமே வரும்.

    • //உன்ன எதிர்க்கற, நசுக்கி வச்சிருக்கற இந்திய, பார்ப்பனிய அரசின் வாலையே வெட்டத் துப்பு இல்ல உனக்கு.. இதுல புலிவால வெட்டப் போறியா, ரொம்பத் துள்ளாத.. // தங்களை அடக்கி , நசுக்கி வைத்திருக்கிற அரசுக்கு எதிராக தாங்கள் என்ன செய்தீர்கள் கொஞ்சம் விளக்கமுடியுமா

    • அறிவுக்கொழுந்து அவர்களுடைய கருத்து சரியானதே. இரயாகரனுடைய கட்டுரைகளை படித்தவரையில் அவருக்கு புலிகள் மிது அதிகமான கோபம் இருப்பது தெரிகிறது. அவர் கட்டுரையில் இருந்த நான் தெரிந்து கொண்டவரையில் தான்னுடைய கருத்துதான் சரியானது என்ற எண்ணதில் அவர் இருப்பது தெரிகிறது. மற்றவர்களின் கருத்துக்களை பரிசீலிக்கவே மறுக்கிறார். தோழர் வினவின் விளக்கம் சரியானதே.

      //தோழர் ரயாகரன் எம்மை விமர்சிப்பதோ
      தோழரை நாங்கள் விமர்சிப்பதோ வேறு
      நடுவில் யோக்கியன் போல புகுந்து உன்னுடைய
      புலி வேலைய இங்கு காட்டதே புலியின் வாலையும்
      வெட்டி விடுவோம்.//

      இரயாகரனோ, நீங்களோ விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்களா!!
      நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி யாரும் கேள்விகேட்க கூடாது.
      இதுவும் பார்பனீய சிந்தனைதான் தோழரே.

    • மிக மிக சரியாக சொன்னீர்கள் அறிவுக்கொழுந்து! ரயாகரன் தன்னை, கருத்துலகின் கடவுளாக நினைத்துக்கொண்டிருக்கிறார். புலிகள் செய்வது பாசிசம் என்றால் இவர் செய்வது அதை விட கேவலமானது. மாற்று கருத்துக்கே அங்கே இடமில்லை. யாராவது கொஞ்சம் யோசித்து அவர் சொல்வது தவறு என்று ஆதரங்களுடனோ அல்லது கேள்வியாகவோ கேட்டால், உடனே அந்த பின்னூட்டம் நீக்கப்பட்டுவிடும். ஏன் என்றால், அவர் ஒரு மார்க்சியவாதி. ரயாகரன் போன்ற மன நிலை பிறழ்ந்தவர்களை விட்டு வைத்த புலிகள் பாசிட்டுகள். முதலில் இந்த ஆளை யாராவது வலுக்கட்டாயமாக பிடித்துப் போய் ஒரு நல்ல மனோதத்துவ சிகிச்சையாளரிடம் ஒப்படைப்பது நல்லது. இப்படியே விட்டு வைத்தால், நாளை தெருவில் இறங்கி போவோர் வருவோரை எல்லாம், “புலி,புலி” என்று கத்திக்கொண்டே கடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

  14. […] First Tweet 14 hours ago vinavu vinavu Highly Influential புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? https://www.vinavu.com/2009/08/25/raya1/ RT Pls view retweet […]

  15. ஈழம் பற்றி விவரம் அறியாத தமிழ்நாட்டு மக்கள் இரயாகரன் எழுதும் கட்டுரைகளைப் படித்தால், புலிகள் செய்ததுதான் இமாலயத் தவறுகள் மற்றபடி சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் என்னவோ கடுகளவு மட்டும்தான் என்று எண்ணத் தோன்றும்.

  16. அப்படியா சிங்கள பாசிட்டுகளை தோழர் அம்பலபடுத்தவில்லை என்கிறீர்களா
    இதை தாங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா

  17. ரயாகரனைப் பொறுத்த வரை அவர் சிறிய கட்டுரைகளாக எழுதுவது எல்லாம் ஒரு வகையான புலம்பல்களே. கோபம் கொண்ட வயோதிபர் ஒருவரிம் புலம்பல் போல. இது தவிர அவர் எந்தத் தத்துவார்த்தக் கட்டுரையும் எழுதியது கிடையாது. ஒரு விடயத்தைத் தத்துவார்த்த ரீதியாக ஆராயும் திறமையும் அறிவும் அவரிடம் இல்லை. மார்க்சியத்தில் பற்று உண்டு. ஒரு பிரச்ச்னை தொடர்பாக ஆராயவோ அது குறித்து முடிபு செய்யவோ அவரால் உடனடியாக முடியாது எனினும், பகிரதப் பிரயத்தன்ப் பட்டு நீங்கள் புரிய வைத்தால் ஏற்றுக்கொள்வார். இரண்டு விடயங்கள் முக்கியம்.
    1. ரயாகரன் அரசியல் ரீதியாக வளர்ந்து கொள்வதும், சுய விமர்சன அடிப்படையைல் தன்னை நோக்குவதும்.
    2. அவரோடு ஒத்து வரக்கூடிய தோழர்கள் இதை அவருக்குப் புரிய வைப்பதும்.

  18. நண்பர் ரதியின் அவரைப் போன்ற பல லட்சம் தமிழ் நெஞ்சங்களின் துயரையும், வலிகளையும் பகிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவுமே ஆசைப்படுகிறேன். இருந்த போதிலும் அவரின் நினைவுகள் இங்கு தனி நபரின் நினைவுகள் என்ற எல்லையை தாண்டி ஒரு சமூகத்தின் நினைவுகளாக நம்மில் பலரால் கருதப்படும் பொழுது நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன்.

  19. Itaniavin kadithathudan saturday kavithayil Vasakarkalin kavithaicku kandisan Apply..! Why? Because ., Thavarana Sithantham , karuthakkal etc., varalam athu vinavil varakkoodathu enbathuthane.,? Rathi avargal katturaikkaka illai entralum pothuvudamaicku maraka matravarkalin karuthakkal pirasuram avathu avarhalin karuthu urimai entru naam eduthukkondal , Theekkathir nazhithal sollum karanampol irukkakkoodathallava? antha vahail rayakaran avargal solvathu sari enpatha? or ithai indaraya kalakattathil jananayaka urimai endru vimarsanamaha yeatrukkondu vimarsanam seivatha?

    • win, சனிக்கிழமை கவிதைகளுக்கு conditions apply எல்லாம் இல்லை….

      //எழுதுங்கள். முழக்கங்களை கவிதைகளாக்கும் முயற்சி வேண்டாம். சமூக, பண்பாட்டுக் கவிதைகளில் தேறும் போதே நல்ல அரசியல் கவிதைகள் பிறக்கும். மற்றவருக்கு உபதேசம் செய்யும் வகையில் எழுதுவதைத் தவிர்த்து நாம் ஏன் அப்படி இல்லை, அல்லது அப்படி இருக்கிறோம் என்ற சுயவிமர்சனத்தை கவிதை அனுபவமாக எழுதுங்கள். உங்கள் வேலை, குடும்பம், நட்பு, பிரிவு, தோழமை இதன் கள, காட்சி, இயக்க, நினைவு முரண்பாடுகளை கவிதையாக்குங்கள்.
      வினவில் சனிக்கிழமை தோறும் கவிதைகள் வெளியிடுவோம். மற்றபடி ஒரு கவிதை ஏன் பிரசுரமானது, ஏன் பிரசுரமாகவில்லை என்று நீங்கள் கேட்பதும் நாங்கள் அதற்கு பதில் சொல்வதும் சாத்தியமில்லை. இதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். //

      இங்கே மாற்றுக்கருத்து எழுதக்கூடாது என்று எங்கும் பதியப்படவில்லை, எழுத ஒரு ஆலோசனை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் தயவு செய்து தவறான தகவலை பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

      இதே களத்தில் முதலாளித்துவ ஆதரவாளர் அதியமானின் போன்றோறின் கருத்துக்களும், ஏன் தீவிர மதவாதிகளின் கருத்துக்கள் கூட தணிக்கை செய்யப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியாதா?

  20. நண்பர்களே,

    வினவில் ஈழ அகதியைப் பற்றிய நினைவுகளை வைத்து ரதியை எழுதச் சொன்னது வினவு. ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும் பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டி, உற்சாகப்படுத்தி எழுதுமாறு கேட்டுக்கொண்டோம். இந்தக் கட்டுரை எதற்காக என்று இதன் முதல் பாகத்திலேயே அறிவித்துள்ளோம். பின்னூட்டமிடுபவர்கள் அதை ஒரு படித்து விட்டு கருத்துக்களை தெரிவித்தால் நலம். அதே போல இரயாகரனது விமரிசனத்திற்கும் எமது பதிலை முகப்பில் அளித்துள்ளோம். அதை விட்டுவிட்டு புதிதாக பல விசயங்களை சில தோழர்கள் எழுப்புகிறார்கள். அடுத்து இந்த விவாதத்தில் பதில் சொல்வதற்கு ரதி ஒன்றும் கடமைப்பட்டவரல்ல. அவரை எழுதச் சொன்னது வினவுதான் என்பதால் எல்லா விமரிசனக் கணைகளும் வினவை நோக்கியே வரட்டும். உரிய நேரத்தில் உரிய மொழியில் பதிலளிப்போம். மற்றபடி புலிகள் பயங்கரமாக திட்டமிட்டு ரதியை வினவில் ஊடுறுவ வைத்து தங்கள் நியாயங்களை விளக்குவதவற்கு பயன்படுத்த முனைந்திருப்பதைப் போல சிலர் சித்தரிக்கிறார்கள். அப்படியல்ல என்பதை இந்த தொடரையும் முன்னுரையையும் படித்து தெளிவடையாலாம்.

    வினவு

      • தோழர் வினவு
        தங்களின் பதில் திருப்தியாக இல்லை ரதி புலி சார்போடு எழுதுகிறாரா இல்லையா இது தான் மைய கேள்வி தாங்கள் இதற்கு பதில் சொல்லாமல்
        முன்பே பதில் சொல்லிவிட்டோம் என்கிறீர்கள், சரி ரதியின் கட்டுரைகளில் புலிகள் பற்றிய விமர்சனங்கள் இருக்குமா? அதை இப்போது கூறமுடியாது, தொடர் முடிந்தபின் எங்கே போய் விமர்சனம் செய்வது?

        //விமரிசனக் கணைகளும் வினவை நோக்கியே வரட்டும். உரிய நேரத்தில் உரிய மொழியில் பதிலளிப்போம்.//

        இதன் அர்த்தம் என்ன ரதியை விமர்சனம் செய்யாதே வினவை விமர்சனம் செய் என்கிறீர்கள், ரதியை கேட்க கூடிய கேள்வியை எப்படி உங்களிடம் கேட்க முடியும் உங்களுடைய இந்த பதில் நேர்மையாக இல்லை
        குறைந்தபட்சம் ஏகலைவன் கூறியது போல முழுக்க அவரை மையப்படுத்தி நடைபெறுகின்ற விவாதம். இது குறித்து தனது கருத்துக்களை விரிவாகவும், உடைத்து வெளிபப்டையாகவும் தோழர் ரதி எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். செய்திருக்கலாம் ஆனால் நீங்கள் ரதியை பாதுகாக்க நினைக்கிறீர்கள் இதன்மூலம் ரதியின் ஈழ கட்டுரையை யாரும் விமர்சனம் செய்ய வாய்ப்பு குறையும் மேலோட்டமாக மட்டும் விவாதம் நடைபெறவே வாய்ப்பளிக்கும் ஆழமாக விமரிசித்தால் உடனே வினவு
        கேடயமாக வந்து எதா இருந்தாலும் என்னை கேளு என்ற தொனியில் பேச ஆரம்பித்து விடுகிறீர்கள் இனி இந்த ரதி கட்டுரைக்கு வந்து பின்னூட்டமிட்டு அசிங்கப்பட நான் தயாரில்லை (இதற்கு உங்கள் பதிலை கண்டிப்பாக எதிர்பார்க்க போவதில்லை)

  21. தோழர் வினவுக்கு,
    வணக்கம்.ரதியின் பதிவு, ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வரும் முயற்சியாகவும் ஈழப்போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு தூண்டுகோளாகவும் இருக்கும் என்று நம்புவதாகவும் அவரின் நினைவுகளை உங்களின் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
    ஆனால் ரதி அவர்கள் தன் முன்னுரையில் தான் அரசியல் பேசப்போவதில்லை எனவும்,தன்னுடைய மனக்குமுறல்களை மட்டுமே எழுதப்போவதாக தெளிவுபடுத்திய்ள்ளார். அவர் மனக்குமுறலாக‌ தமிழீழ மக்களின் துன்பத்திற்கு காரணமாக‌ சிங்களகாடையர்கள்,சிங்கள இராணுவத்தினர்,சர்வதேசம் மற்றும் அய்நா ஆகியவற்றையே சாடுகிறார்.. அவருடைய முன்னுரையில் இயக்கங்களைப்பற்றி ஒரு வரிகூட இல்லை. இங்கேதான் சந்தேகம் வருகிறது.
    ஈழத்தின் தற்போதைய பின்னடைவுக்கு யார் காரணம், சிங்களவர்களா இல்லையே புலிகளே முதன்மையான காரணம். புலிகளின் பாசிச செயல்களையும் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தையும் நீங்களும் அறிவீர்கள். ரதியின் நினைவுகள் ஈழப்போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்கிறீர்கள். மக்களின் துரோகிகளை(முக்கியமாக புலியை)அம்பலப்படுத்தாத அவரின் நினைவுகளிலிருந்து எந்த தூண்டுகோள் உருவாகும். பின்னடைவுக்கு காரணமே புலிகள் தானே. தமிழீழ மக்கள் மீது சிங்களன் செய்ததையேதான் புலிகளும் செய்தனர். ரதி அவர்கள் புலியைவிடுத்து பேரினவாதத்தை மட்டுமே எழுதுவாரேயானால் அது சிங்களன் மீது வெறுப்பையும் ஈழ மக்கள் மீது ஒருவித பரிதாப உணர்ச்சியை மட்டுமே தோற்றுவிக்கும். ஏன் பின்னடைவு ஏற்பட்டது என்பது தெரியாமலே போகும். ரதி அவர்கள் தன் முன்னுரையில் எங்காவது இயக்கங்களை தொட்டிருக்கிறாரா பாருங்கள்.
    ஆர்வி கூறுவதுபோல தோழர். ரயாகரனுக்கு இது பழைய கஞ்சி,எங்களுக்கு புதியது. நீங்களும் அரசியல் உணர்வோடு சேமிக்க சொல்கிறீர்கள். புதியதாக இருந்தால்தானே சேமித்துக்கொள்ளலாம். ஒரு உதாரணம்.
    ஈழமக்களுக்கான ஓர் ஆர்ப்பாட்டத்தில்(மகஇக)ஒரு தோழர், புலிகளின் ஊடறுப்பு தாக்குதல் மூலம் பிரபாகரன் எப்படி தப்பினார் என்ற நக்கீரனில் வெளிவந்த செய்தியை ஆதாரமாகக்கொண்டு உணர்ச்சிபூர்வமாக பேசினார். இதைத்தானே நாங்கள்(தமிழக மக்கள்)இத்தனை காலமாக‌ தெரிந்து வைத்துள்ளோம். மீண்டும் ஏன் அதே பழைய கஞ்சி.
    விடுதலையின் இந்த மறுமொழியில் நானும் உடன்படுகிறேன். /விமரிசனக் கணைகளும் வினவை நோக்கியே வரட்டும். உரிய நேரத்தில் உரிய மொழியில் பதிலளிப்போம்.//
    இதன் அர்த்தம் என்ன ரதியை விமர்சனம் செய்யாதே வினவை விமர்சனம் செய் என்கிறீர்கள், ரதியை கேட்க கூடிய கேள்வியை எப்படி உங்களிடம் கேட்க முடியும் உங்களுடைய இந்த பதில் நேர்மையாக இல்லை.

  22. It is a known fact that the LTTE gave a different definition to “Pooraddam”. On their language, the “Pooraddam” is : killing and destroying the tamil people who are against the actions and ideas of “Pirabakaran” or the “Puli”. But the “Pooralikal” or the other third or fourth rangs of the LTTE members didn’t know that they are helping for the “pacists”. But the “Pulampeyar” tamils can understand that this is “pacism”. If they are supporting the “Puli Amaippu”, they are also “pacistes”.

  23. THAYVU SEITHU VINVU ACRIARRE EELAM MAKKAL PARI ENI ELTHATRIKAL
    ENGLEAN VRALARU THRYATHA ARKURIELLAM THAPU THAPPA ELTHI ENGAL MANSAI ENUM KAYA PADTHUTHKAL ENYAVTHU EUTHAVI SEIDUM ENGALAPARTI THAPPANKARTHUGALI SOLLAMLA SUMMA IRUNTHA POTHUM
    NUGAL ELLAMTAMILAR ENDU ENNATHA KILLCHINGA
    MUTHALLA ENUDA PRICHANI PARUNGO ENGAD PRICHANILL THALLI IDAML IRUNTHA SRAI
    RATHI AKKA ENMAL INTHA VIVU THALLTHEL ELTHA VENDAM
    AVAI NIGI KUDIRKEAM
    NAGALL ELLAM LTTE ENDU
    ORU NAL IVAI ELLAM VATHU EELATHI VANTHU VALLTATAHN THRIUM ENGAD NILLAMI
    ETHU AC ROMM IRUNTH SUMMA ELTHINAL POTTHATHU
    VANTH PARTHHAHAN YARLA INTHA PRICHANNI VATHAENDU THRIUM UMIYEL NAGA INDA TAMILRGALKA PORAD POIA THAN
    ENGALKU INTHA NILLMAI

  24. Le fascisme et le nazisme comme idéologies impliquent, aux degrés variables, quelques caractéristiques suivantes :

    • Nationalisme et superbe-patriotisme avec un sens de mission historique.
    Militarisme agressif même jusqu’au degré d’améliorer la guerre comme bon pour l’esprit national ou individuel.
    • Utilisation de violence ou de menaces de violence d’imposer des vues à d’autres (fascisme et nazisme ont utilisé la violence de rue et la violence de l’Etat à différents moments dans leur développement).
    • Confiance autoritaire à un Chef ou à une élite pas constitutionnellement responsable à un électeur.
    • Culte de personnalité autour d’un Chef charismatique.
    • Réaction contre les valeurs de Modernisme, habituellement avec des attaques émotives contre le libéralisme et le communisme.
    • Exhortations pour les masses homogènes des gens communs (Volkish en allemand, populiste aux États-Unis.) pour s’associer volontairement à une mission héroïque souvent métaphysique et idéalisme dans le caractère.
    • Déshumanisation et bouc-émission d’ennemie. Voir l’ennemi comme force inférieure ou moins qu’humaine, peut-être impliqué dans une conspiration qui justifie à les exécuter.
    • L’image d’individu d’être une forme supérieure d’organisation sociale au delà de socialisme, de capitalisme et de démocratie.
    • Éléments des racines idéologiques socialistes nationales, par exemple, soutien apparent de la classe ouvrière ou des fermiers industriels ; mais finalement, la pièce forgée d’une alliance avec un secteur d’élite de la société.
    • Abandon de à toute idéologie conformée dans une commande pour la puissance d’état.

    Ce sont les définitions données au fascisme et au nazisme, les mêmes caractéristiques adoptées par le LTTE. Le LTTE a fait pensé la population tamoule que leur idéologie adoptée est le « combat pour la liberté » et l’exécution des adversaires qui ont des idées différentes des celles de Pirabakaran, même si ces idées sont meilleurs sont justifiées. C’est donc évident que les gens qui soutienne les activités du LTTE sont des fascistes.

  25. அணைத்து தமிழக உறவுகளும் தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த உண்மை அனுபவத்தை வாசியுங்கள்.

    மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.
    இதோ சிவரூபன் பேசுகிறார்:

    “”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

    நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

    பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின் வெக்கையும்இ படு கொலைகளின் கொடூரமும்இ சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள்,அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

    இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டுஇ கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டுஇ பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல்இ தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாதஇ உடல் சோர்ந்துஇ உளம் நலிந்துஇ உணர்வு செத்துஇ நா வறண்டுஇ இதய நாடிகள் ஒடுங்கிஇ வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவுஇ குடிநீர்இ அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசைஇ மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

    இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

    அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

    வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில்இ தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்தஇ “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்கஇ மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

    “”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள்இ இந்திரா ரடார்இ செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும்இ ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்துஇ தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

    இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவாஇ கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

    பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண்இ பெண்இ பெரியோர்இ குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறுஇ கால் வேறுஇ உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

    பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில்இ வயிற்றில்இ காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

    வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

    எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவிஇ பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

    அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான்இ என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

    “”என் மனைவிஇ பிள்ளைஇ தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாகஇ உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

    “”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும்இ ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

    தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலைஇ கால்இ கைஇ உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

    கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகிஇ உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

    அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

    மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதாஇ அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

    தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும்இ கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

    கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய்இ தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின்இ நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும்இ விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம்இ “”தாய்இ தகப்பன்…” என்று ஆரம்பிக்கவேஇ “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

    பெற்றோரை இழந்துஇ இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும்இ சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

    மனதில் வெறுப்பும்இ நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

    வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

    பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம்இ முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்கஇ போவோம் ஆமி வறான்இ எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

    நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோஇ ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

    தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்றுஇ ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயாஇ ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய்இ நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

    எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும்இ மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

    வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும்இ கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

    ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும்இ அடித்தும்இ வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவிஇ பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

    இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லைஇ தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன்இ “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன்இ “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

    இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோதுஇ சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும்இ “பசிக்குதுஇ ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும்இ தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

    வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காதஇ பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

    எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்றுஇ “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

    அந்த இடத்தில்இ அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

    உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால்இ அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில்இ வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

    எங்கு கொண்டுபோகிறார் களோஇ என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஐஅஅபைசயவழைn) மற்றும் சுங்கம் (ஊரளவழஅள)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

    இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”இ “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”இ “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”இ “”எங்களுக்கு எல்லாம் தெரியும்இ பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்க��
    �்.

    பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதா��
    �் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1இ2இ3 (ழுpநசயவழைn ஊhநஉமஅயவந) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாதுஇ அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோஇ சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய்இ புயல்காற்றாய் தான் இருப்பார்.

    சர்வதேசமேஇ ஐ.நா.சபையேஇ தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
    நன்றி யாழ்.

  26. இவர் பெரிய ஆளுதான்
    ரயாகரன் என்ற ஒருவருக்கா இவ்வளவு பின்னூட்டம்.
    பெரிய மேதையாயிருப்பார் போல

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க