Friday, June 21, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!

-

ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்!

இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன. புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு ’வடக்கின் வசந்தம்’ எனக் கவர்ச்சியான பெயரைச் சூட்டி இருக்கும் இலங்கை இனவாத அரசு, தனக்கு உதவிகள் சீனாவிலிருந்து வந்தாலும்  இந்தியாவிலிருந்து வந்தாலும் ஏற்றுக்கொண்டு அந்நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் உள்ளது.

விவசாய நிபுணரும், ‘பசுமைப் புரட்சி’ மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஈழத்தமிழர் சிந்திய ரத்தம் உலரும் முன்னரே இலங்கைக்குப் பறந்து சென்று வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளின் விவசாய மறுசீரமைப்புக்கான திட்டத்தை முன்மொழிந்து வந்திருக்கிறார்.

அரசு நிறுவியுள்ள அகதிகள் முகாம்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் இளைஞர்களைத் தனியே பிரித்து வதைமுகாம்களுக்கு அனுப்பிவிட்டு, எஞ்சி இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து வன்னி, மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் இருக்கும் 3 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் தேவையான உணவு தானியங்களைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை சுவாமிநாதன் தீட்டியிருக்கிறார். தற்போது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பின் மக்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்து பெற்ற பாரம்பரிய அறிவைக் கொண்டுள்ளவர்கள்தான்.  இவர்களால் அப்பகுதியில் 1 லட்சம் ஹெக்டேரில் நெல்லும், 2 லட்சம் ஹெக்டேரில் பாசிப்பயிறு, மிளகா, எள், தேங்கா, சேனைக்கிழங்கு போன்ற விளைபொருட்களும் போருக்கு முன்புவரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இம்முகாம்களிலிருக்கும் பெண்களுக்கு மண்புழு வளர்த்தல், இயற்கை எரு தயாரித்தல், ஊடுபயிராக நைட்ரஜன் சத்தைத் தக்கவைக்கும் அகத்தி பயிரிடல் போன்றவற்றை சுவாமிநாதனின் ஆராச்சி நிறுவனம் கற்றுத் தரப்போகிறதாம். அங்குள்ள மண்ணின் தன்மையை ஆவு செய்ய நடமாடும் மண்பரிசோதனைக் கூடங்களும், ஒவ்வொரு விவசாயிக்கும் மண்பரிசோதனை அடையாள அட்டையும் வழங்கப்பட்டு மண்ணின் தன்மைக்கேற்ற நீர்ப்பாய்ச்சலளவு வரையறுக்கப்படுமாம்.

இதன்படி,சுவாமிநாதனின் ஆராய்ச்சி நிறுவனம், விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றியும் அங்குள்ள 2300 கண்மாய்களையும் 50 நடுத்தர மற்றும் 11 பெரும் குளங்களையும் சீரமைத்தும் இப்பெண்களைக் கொண்டு போய் வடக்குப் பிரதேசத்தில் குடியமர்த்தி, தாம் திட்டமிட்டுள்ள இந்தியாவிற்குத் தேவையான விளைபொருட்களைப் பயிர் செய்யும். விவசாயத்தை, வரும் விதைப்புக் காலமான அக்டோபரில் நடைமுறைப்படுத்தும். வன்னிப்பெருநிலப்பரப்பில் போருக்கு முந்தைய உணவு உற்பத்தி மட்டும் 8 லட்சம் டன்களாகும். இதைத் தவிர தலா 10 செண்டுகள் கொண்ட வீட்டுத் தோட்டங்கள் மூலமும், கணிசமான தோட்டப்பயிர் விளைச்சலும், கால்நடை விளைபொருட்களும் இத்திட்டத்தின் இலக்கில் வருவன.

மன்னார் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலையும் சுவாமிநாதனின் நிறுவனம் விட்டுவைக்கவில்லை. மீன்பிடித் தொழிலை இந்திய நலனுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் வகையில் பயிற்சி தரும் மையம் ஒன்றையும் அது நிறுவ உள்ளது. இத்திட்டங்களுக்கெல்லாம் சுமார் ரூ. 500 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டங்களைப் பற்றி “இந்து” நாளேட்டில் விளக்கமளித்திருக்கும் சுவாமிநாதன், “போர் இப்போது முடிந்திருக்கிறது. வடக்குப் பிரதேசத்தின் பொருளாதாரப் போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்றும், “மக்கள் விரும்பியது சமாதானத்தையும், உணவையும்தான்” என்றும் சொல்லியுள்ளார். அதாவது ரேடார்களையும், எரிகுண்டுகளையும் வழங்கி இருபதாயிரம் பேரை அழித்து சமாதானத்தை(!) நிறுவிய இந்தியா, இப்போது அவர்களுக்கு உணவை ‘வடக்கின் வசந்தம்’ ஊடாக வழங்கப் போகிறது.

ஈழமக்களின் உணவு குறித்து சுவாமிநாதனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், விவசாயத்தில் இன்றைக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் உலகமயத் தாக்கத்தைக் காணவேண்டும். உற்பத்தித் தொழிலிலும் கணிப்பொறித் துறையிலும் தேசங்கடந்த உழைப்பை “அவுட் சோர்சிங்” மூலம் உறிஞ்சிவரும் ஏகாதிபத்தியம், இன்று விவசாயத்தையும் நாடுகடத்தும் திட்டத்தில் நுழைந்துள்ளது. அண்மையில் தென்கொரிய டேவூ நிறுவனம், மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து தனது நாட்டின் உணவுத் தேவையை ஈடுகட்ட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதேபோன்று சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகளும் பிற மூன்றாம் உலக நாடுகளின் விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன. இந்திய நிறுவனங்கள் மடகாஸ்கரில் நெல், கோதுமை மற்றும் பயறு வகைகளையும், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெ வித்து மற்றும் பயறுவகைகளையும் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. சீனா தன் வருங்கால விவசாயத் தேவைகளை காங்கோ, சூடான், சோமாலியா, தென் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் அவுட்சோர்சிங் செய்ய உள்ளது.

சுவாமிநாதனே தனது “இந்து” கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல வியட்நாமும், கம்போடியாவும் விவசாயத்தில் காலனி நாடுகளாக்கப்பட்டுள்ளன. விவசாயத்தில் அவுட்சோர்சிங் தான் ‘வடக்கின் வசந்தம்’ எனும் பேரால் இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் காலனியாக்கப் போகிறது. ஈழமக்களைக் கொன்றொழித்து, அவர்களின் விடுதலைப்போரைக் கருவறுத்த இந்தியா, அம்மக்களின் பொருளாதார சுதந்திரத்தைத் தன் காலடிக்குக் கொண்டுவரப் போகிறது.

ஈழத்தில் விவசாயத்தை ஏற்கெனவே போர் அழித்து விட்டது. போரில்லாத மற்ற நாடுகளிலோ உலகமயமானது விவசாயத்தை விவசாயிகளிடம் இருந்தே பறித்து விட்டது. இப்போது அவர்களிடமிருந்து நிலத்தைக் கைமாற்றி விட்டு அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கும் பல நுணுக்கமான திட்டங்களுடன் பல ஆய்வு நிறுவனங்களும் செயலில் இறங்கி உள்ளன. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய நெல் ரகங்களை ராக்பெல்லர்/போர்டு பவுண்டேசனுக்குத் திருடிச் சென்று, இந்திய விவசாயிகளின் வாழ்வைச் சீரழித்த மக்கள்விரோதியான சுவாமிநாதன், இப்போது போரின் கொடுமைகளால் குறுக்கொடிந்து போக்கிடக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கும் சதியுடன் இந்திய-இலங்கை அரசுகளின் ஆசிபெற்று “ஒவ்வொரு பேரழிவும் வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!” என்று அறிவித்தபடி ஈழத்தின் உள்ளே நுழைந்திருக்கிறார்.

ஈழத்தின் மீதான் இந்திய மேலாதிக்கத்தின் பகுதியான இதனைப் புரிந்துகொள்ளத் தவறும் இனவாதிகளோ, சுவாமிநாதன் பார்ப்பான் என்றும், சிலகோடிகளுக்காக தமிழ்ப்பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி வதைக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆண்களை சித்திரவதை முகாம்களில் அடைத்துவைத்து பெண்களின் மானத்தோடு விளையாடும் பார்ப்பனிய சதி இது என்றும் சொல்லி சுவாமிநாதனை, பார்ப்பனர் என்பதால் மட்டும் எதிர்க்கின்றனர். இவர்கள் நினைப்பது போல எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு தனிநபர் அல்ல. இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களும் இந்திய அரசின் மேலாதிக்கமும் பின்னிப் பிணைந்திருப்பதுதான் இந்தக் கிழட்டுப்பார்ப்பன ஓநாயின் ஆய்வு நிறுவனம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை இந்த நிறுவனத்துக்கு அரசு தாரைவார்த்திருப்பதும், சுவாமிநாதனை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி இருப்பதும் தற்செயலானவை அல்ல.

இனவாதிகளாவது இதனைப் பார்ப்பனியம் எனக் குறுக்கிப் பார்க்கிறார்கள். ஆனால் ‘தமிழர் தலைவர்’ வீரமணியோ “விவசாயம் பாவகரமானது என்பதுதானே மனுநீதி! பரம்பரையாக ஏர்பிடிக்காத இனத்திலிருந்து விவசாய நிபுணர்கள் வருவது விளம்பர வெளிச்சத்தால் தொடரும் வித்தைகள்” என்றும், “பார்ப்பனர்கள் எந்த ஆட்சி வந்தாலும் நிரந்தரச் செல்வாக்குடன் இருக்கிறார்கள் பாருங்கள்” என்றும் அறிக்கை விட்டு சுவாமிநாதனை அறிமுகம் செய்கிறார். ஈழ விவசாயம் இந்தியாவுக்குத் திறந்துவிடப்படும்போது, அதில் பார்ப்பான் பலனடைகிறானே என்ற வயிற்றெரிச்சலைத் தவிர, இதில் வேறு எந்த வெங்காயமும் இல்லை. ஒருவேளை, நாளை ஈழத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கல்வி வியாபாரம் நடத்தலாம் எனும் வாப்பு வரும்சூழலில், ஈழத் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தக்கூட இந்த ‘தமிழர் தலைவர்’ மனக்கணக்கு போட்டிருக்கக் கூடும். அதனால்தான் சுவாமிநாதனைக் கூட ‘தமிழர் தலைவர்’ கடுமையாகச் சாடவில்லை.

செருப்புக்கேத்தபடி காலைவெட்ட முடியாது. அதைப்போலவே தாங்கள் வைத்திருக்கும் பார்ப்பன எதிர்ப்பு எனும் ஒரே வட்டத்துக்குள் சுவாமிநாதனின் ‘ஈழ விவசாயப் புரட்சியை’ அடைக்கப் பார்ப்பதன் மூலம் இந்தியாவின் ஆதிக்கத்துக்குத் துணைபோகின்றனர், தமிழினவாதிகள். ஒருவேளை ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தை நிறைவேற்றும் இடத்தில் சுவாமிநாதன் எனும் பார்ப்பானுக்குப் பதிலாக சூத்திரன் ஒருவன் இருந்திருந்தால் எனும் கேள்வியில் இவர்களின் சாயம் வெளுத்துவிடும்.

______________________________________________

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009
______________________________________________

 1. ஈழம்: இந்தியாவின் நரித்தனம்!…

  விவசாய நிபுணரும், ‘பசுமைப் புரட்சி’ மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் ஈழத்தமிழர் சிந்திய ரத்தம் உலரும் முன்னரே இலங்கைக்குப் பறந்து சென்று வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளின் விவசாய மறுசீரமைப்புக்கான திட…

 2. பருப்பு மாதிரி ஈழம் ஈழம் என்று பினாத்திக்கொண்டிருக்கும் மென்டலே, அங்கே ஈழத்துக்கே போய் ஆட்ட வேண்டியதுதானே.

  ஏன் இங்கு எங்கள் அருமை நாடு இந்தியாவில் பொருக்கி தின்று கொண்டிருக்கிறாய் நாயே.

  கையில் Blog இருக்கிறதென்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்திய விரோதமாய் பினாத்திக்கொண்டு திரிகிறாயே மூடனே.

 3. அருமை இந்திய சொறி நாயே உனக்கு மரியாதையாக பதில் வேண்டுமா,
  அல்லது மரியாதை கெட வேண்டுமா ?

 4. ///விவசாய நிபுணரும், ‘பசுமைப் புரட்சி’ மூலம் இந்திய விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் //// :))))) hahaha
  good joke. without green revolution, there would be starvation today. the threat of famine was the driver behind the green revolution then. the issue of erosion of soil fertility (still debated) due to chemical fertilisers is only point of contention about green revolution. you people oppose MS only because the US MNCs sponsored and exported fertiliser plants !! but without them we would still be importing food grains like the 60s. so ? and comrades never talk about the new high yielding varieties of rice and whet developed with intl help which was the major part of green revolution. i suppose that is a terrible sin !! and i suppose comrade propose the Ukraine style forced collectivsation in 1930s which led to holodomor famine which killed millions in USSR. pls try that in India and Eelam soon. good luck.

 5. United States of America declared a war on Indian rice [and food security] way back in the early 1960s when India’s No 1 scientist , Dr M.S. Swaminathan, stole the gene bank of rice, evolved over decades by Dr Riccharia, and passed it over to the Americans. How many genetic varieties have been stolen? No one really knows. Swaminathan was the main dramatics personae in what is known as “the great[est] gene robbery” in the history of mankind. [See, “The Great Gene Robbery”, by Dr Claude Alvarez, The Illustrated Weekly of India, March 23-April 5, 1986]

  “India had 120,000 varieties of rice seeds; today, no more than 50 are available. This is United States’ war on genetic diversity, ably supported by scientist-criminals like MS Swaminathan. And the worst crime of the Indian Government is to have these criminals head Agriculture Policy of India. At age 75, Swaminathan lives to lord it over many Expert Committees, including crucial ones in the Ministry of Agriculture. The deadly tentacles of this hydra-headed monster extend in many ministries of the Government of India. From early 1960s, Swaminathan has been the front of the Rockefellers, implementing their agenda with full support of the US Government”

 6. இது இப்படியும் இருக்கலாம். மூன்று லட்சம் பேருக்கு இலவசமாக சோறு போட்டால் ஆளுக்கு மாதம் நூறு டாலர் ஆனாலும் வருட செலவு 360 மில்லியன் டாலர் ஆகும் . சீனாவும், இந்தியாவும் கொட்டி கொடுத்தாலும் செலவு செலவுதான். அதனால் அங்குள்ள பெண்களை வைத்தே வேலை வாங்கி ஹிட்லரின் வதை முகாம்கல் போல ஆக்கும் திட்டமாக இருக்கலாம். செலவை குறைக்க குடும்மா கட்டுப்பாடு, சுட்டு தள்ளுவது இதெல்லாம் செய்யலாம். இவர்களை முகாமிலிருந்து இவர்கள் விடுவிக்கப் போவதில்லை.

 7. ஆமை புகுந்த வீடு……அது மூடனம்பிக்கை எம்.எசு.சுவாமினாதன் கால்பட்ட வயலு பொட்டலு…இதுபுதுமொழி அனுபவமையா..அனுபவம், இந்திய விவசாயத்தைஅழித்து கிராமங்களை சுடுகாடாக்கி ஆட்டையும்..மாட்டையும்..கொழியையும்.மொத்தமாய் கொல்லிவைத்தவனையா….இந்த நாய்…….{நாயை,நாயென்றுதான்சொல்ல முடியும்,திருவாளர்நாய் அவர்களேஎன்று கூப்பிடமுடியாது} கழுதைக்குபேரு முத்துமானிக்கமாம் விவசாயத்தை அழிச்சவன் வேளாண்விஞ்ஞானியாம்….புடுங்…கி

 8. //விவசாயத்தில் அவுட்சோர்சிங் தான் ‘வடக்கின் வசந்தம்’ எனும் பேரால் இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் காலனியாக்கப் போகிறது. //

  Well said!

  அரச வர்த்தமானியில் தசாப்தங்களாக வடக்கிற்கு வார்த்தையளவில் கூட வராத வசந்தத்தை இந்தியாவின் சுவாமிநாதன் கொண்டுவருகிறாரா? மண்ணின் மைந்தர்களே out sourcing நிறுவனங்களின் அடிமைகள். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த வடக்கின் ஈழத்தமிழர்களுக்கு விவசாயம் பற்றிப் பாடமா? உலகமயமாக்கலின் கைக்கூலிகளுக்கு வேறு வேலையே கிடையாதா?

  காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கந்தளாய் சீனி தொழிற்சாலை, வன்னியின் விவசாயம், கிளிநொச்சி தவிர்ந்த மற்றைய தமிழ் மாவட்டங்களில் உள்ள கரையோர பிரதேசங்களிலுள்ள மீன்பிடி மற்றும் அது சார்ந்த தொழில்கள் , பலாலி விமான நிலையம் இதெல்லாம் எங்களுக்கு (வடக்கிற்கு) தந்த வசந்தத்தை வேரோடு பிடுங்கி, வடக்கை சூனியமாக்கி விட்டு இனிமேல் என்னய்யா புதிதாக வசந்தம்?

  எங்கள் சொந்த மண்ணில் எங்களை சுதந்திரமாக சுவாசிக்கவேனும் விடுங்களேன்! எங்கள் மண்ணை ஆக்கிரமிக்காமல் விலகிச் செல்லுங்களேன்! எங்களுக்குரிய வசந்தத்தை நாங்களே, மண்ணின் மைந்தர்களே, உலகமே வியக்கும் அளவிற்கு கட்டி எழுப்புவோம்.

  இந்த கட்டுரைக்கான படம் வரைந்தவரிடம் ஓர் கேள்வி. சுவாமிநாதன் வடக்கில் தானே வசந்தம் பற்றிப்பேசுகிறார். ஆனால், நீங்கள் முழு இலங்கையையும் பசுமையாய் காட்டியிருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை? அது தவிர, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தன் ஓர் கட்டுரையில் இலங்கையின் மொத்த விவசாயத் துறையின் (மீன்பிடித்துறை உட்பட) வருமானத்தில் 40% வடக்கு கிழக்கிலிருந்து வருவதாக சொன்னது எனக்கு நினைவு. அதை உங்கள் படம் பிரதிபலிக்கவில்லை என்பதை சொல்லவந்தேன், அவ்வளவுதான். உங்கள் படத்தில் குற்றம் கண்டுபிடிப்பது என் நோக்கம் அல்ல.

  • //காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கந்தளாய் சீனி தொழிற்சாலை, வன்னியின் விவசாயம், கிளிநொச்சி தவிர்ந்த மற்றைய தமிழ் மாவட்டங்களில் உள்ள கரையோர பிரதேசங்களிலுள்ள மீன்பிடி மற்றும் அது சார்ந்த தொழில்கள் , பலாலி விமான நிலையம் இதெல்லாம் எங்களுக்கு (வடக்கிற்கு) தந்த வசந்தத்தை வேரோடு பிடுங்கி, வடக்கை சூனியமாக்கி விட்டு இனிமேல் என்னய்யா புதிதாக வசந்தம்? //

   காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கந்தளாய் சீனி தொழிற்சாலை, வன்னியின் விவசாயம், பலாலி விமான நிலையம் இவையெல்லாம் இலங்கை அரசால் கட்டி எழுப்பப்பட்டவை. ரதி இலங்கை அரசுக்கு எதிராக பேசுவதெல்லாம் பித்தலாட்டம். இலங்கை அரசின் பொருளாதார ஆதரவின்றி இவர்களால் ஒரு நாள் கூட நின்று பிடிக்க முடியாது. புலிகளின் வன்னித் தமிழீழத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியது. முழுக்க முழுக்க அரசாங்க நிதியில் தான் பாடசாலைகள் இயங்கின. வன்னி விவசாயிகள் சிங்களவனுக்கு விற்று தான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். விவசாயிகளின் வருமானத்திலும், இலங்கை அரசு கொடுத்த சம்பளத்திலும் ஒரு பகுதி வரியாக புலிகளுக்கு போனது. அந்தப் பணத்தில் தான் புலிகள் வாழ்ந்தார்கள். இந்த லட்சணத்தில் தான் de facto தமிழீழம் நடந்தது.

   • Tecan,

    //இலங்கை அரசின் பொருளாதார ஆதரவின்றி இவர்களால் ஒரு நாள் கூட நின்று பிடிக்க முடியாது.//

    நின்றுபிடிக்க முடியுமா? முடியாதா? என்று பரீட்சிக்கவாவது ஒரு சந்தர்ப்பம் தாருங்களேன்.

   • //நின்றுபிடிக்க முடியுமா? முடியாதா? என்று பரீட்சிக்கவாவது ஒரு சந்தர்ப்பம் தாருங்களேன்.// பத்து வருடங்களுக்கு மேலாக வன்னியில் என்ன செய்து கிழித்தார்கள்? ஆயுத தொழிற்சாலை கட்டினார்கள், பிரபாகரன் குடும்பம் சொகுசாக வாழ நீச்சல்குளம் கட்டினார்கள். புலிகளின் வருடாந்த வருமானம் பில்லியன் டாலர்கள். அந்தப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்திருந்தாலே வன்னித் தமிழர்கள் இன்றைக்கு செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள். நீங்கள் தான் புலி இல்லையே? புலி இயக்கத்தின் ஊழல் உங்களுக்கு எப்படித் தெரிய வரும்? முதலில் நீங்கள் புலிகள் என்றால் யார் என்று படியுங்கள். அதற்குப் பிறகு மதிப்பு வையுங்கள். புலிகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் கதைக்க வராதீர்கள். ஒன்றுமே தெரியாமல் தமிழகத் தமிழர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள்.

   • Tecan,

    நான் என்ன புலிகளுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என்றா கேட்டேன்? மண்ணின் மைந்தர்கள் என்று என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேனே, பார்க்கவில்லையா?

    //ஒன்றுமே தெரியாமல் தமிழகத் தமிழர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள்.//

    இதை தமிழக தமிழர்கள் சொல்லட்டுமே. ரதி பாடம் எடுக்க வேண்டுமா அல்லது Tecan பாடம் எடுக்க வேண்டுமா என்று. Tecan தான் பாடம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் நான் குறுக்கே நிற்கவே மாட்டேன். நீங்க ஜமாய்ங்க!

   • //நான் என்ன புலிகளுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் என்றா கேட்டேன்?// புலிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அனைத்தையும் நாசமாக்குவார்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்ட நேர்மையை பாராட்டுகிறேன்.

 9. /////ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்து பெற்ற பாரம்பரிய அறிவைக் கொண்டுள்ளவர்கள்தான். இவர்களால் அப்பகுதியில் 1 லட்சம் ஹெக்டேரில் நெல்லும், 2 லட்சம் ஹெக்டேரில் பாசிப்பயிறு, மிளகா, எள், தேங்கா, சேனைக்கிழங்கு போன்ற விளைபொருட்களும் போருக்கு முன்புவரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இம்முகாம்களிலிருக்கும் பெண்களுக்கு மண்புழு வளர்த்தல், இயற்கை எரு தயாரித்தல், ஊடுபயிராக நைட்ரஜன் சத்தைத் தக்கவைக்கும் அகத்தி பயிரிடல் போன்றவற்றை சுவாமிநாதனின் ஆராச்சி நிறுவனம் கற்றுத் தரப்போகிறதாம். அங்குள்ள மண்ணின் தன்மையை ஆவு செய்ய நடமாடும் மண்பரிசோதனைக் கூடங்களும், ஒவ்வொரு விவசாயிக்கும் மண்பரிசோதனை அடையாள அட்டையும் வழங்கப்பட்டு மண்ணின் தன்மைக்கேற்ற நீர்ப்பாய்ச்சலளவு வரையறுக்கப்படுமாம்.///// anything wrong or evil in this ? crazy to label this as evil or imperialism. by the way, were Eelam tamil famrers not using modern chemical fertilisers and pesticides till date or were they not ?

 10. /////உற்பத்தித் தொழிலிலும் கணிப்பொறித் துறையிலும் தேசங்கடந்த உழைப்பை “அவுட் சோர்சிங்” மூலம் உறிஞ்சிவரும் ஏகாதிபத்தியம், இன்று விவசாயத்தையும் நாடுகடத்தும் திட்டத்தில் நுழைந்துள்ளது. /////
  அவுட் சோர்ஸிங்கினால், பன்னாட்டு ஏகாதிபத்தியங்களால் “சுர‌ண்ட‌ப்ப‌டும்” தோழ‌ர்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌க‌ளே, உட‌ன‌டியாக‌ உங்க‌ள் வேலைக‌ளை ராஜினாமா செய்து, இந்த‌ “சுர‌ண்ட‌லை” நிறுத்த‌ வ‌கை செய்யுங்க‌ளேன் !! :)) மேலும் இதை பார்க்க‌வும் :
  http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html

  உலகமயமாக்கல் பற்றி…

  and AirTel / Singtel companies are planning to cover the Eelam areas with their cellular network soon. this would enable us to talk with Eelam tamils soon very cheaply and easily, unlike today. anything wrong or evil in this ? would you like Eelam tamils to remain cut off from the world like today ?

 11. //அவுட் சோர்ஸிங்கினால், பன்னாட்டு ஏகாதிபத்தியங்களால் “சுர‌ண்ட‌ப்ப‌டும்” தோழ‌ர்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌க‌ளே, உட‌ன‌டியாக‌ உங்க‌ள் வேலைக‌ளை ராஜினாமா செய்து, இந்த‌ “சுர‌ண்ட‌லை” நிறுத்த‌ வ‌கை செய்யுங்க‌ளேன் !! 🙂 ) மேலும் இதை பார்க்க‌வும் ://

  சுரண்டப்படும் யாவரும் கோருவது சுரண்டுபவர் ராஜினாம செய்யப்படுவதைத்தான். அதை புரட்சி என்பார்கள். அதியாமானோ தனது வரக்க இயல்பிற்கு ஏற்ப கோரிக்கைகளை தலைகீழாக வைக்கிறார்.

 12. சரி அப்பனே,

  இந்தியாவில் “சுரண்டும்” பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் பங்குதார்களை துரத்திவிட்டு, அந்நிறுவனங்களை “தேசியமயமாக்கி” நடத்திப்பாருங்களேன். பிறகு அவை என்ன ஆகின்றன என்று. இந்த நாட்டில் இது போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதை அதிர்ஸ்டமாக கருதுபவர்கள் மிக மிக அதிகம் என்பதே எமது புரிதல்.

  தேசியமயமாக்கப்பட்ட பழைய நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி :
  http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html

  • //இந்தியாவில் “சுரண்டும்” பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் பங்குதார்களை துரத்திவிட்டு, அந்நிறுவனங்களை “தேசியமயமாக்கி” நடத்திப்பாருங்களேன். பிறகு அவை என்ன ஆகின்றன என்று. இந்த நாட்டில் இது போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதை அதிர்ஸ்டமாக கருதுபவர்கள் மிக மிக அதிகம் என்பதே எமது புரிதல்.//

   உமது மனிதாபிமானம் பல்லிளிக்கும் இடம் இதுதான் என்று முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தேன். வேலை வாய்ப்பு குறித்த உமது புருடாக்களையும், இந்தியாவில் விவசாய புரட்சியின் விளைவாக உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் முன்பு அசுரனில் விவாதிக்கப்பட்டுள்ளது. சும்மா மிரட்டுகிற வேலையை விடுங்கள்.. உங்களது தனியார்மயம் வேலைவாய்ப்பில் ஒரு பங்களிப்பும் செய்யவில்லை என்பதைத்தான் ரிசர்வ் பேங்க் புள்ளிவிவ்ரம் சொல்லுகிறது. தேசியமயமாக்கினால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது(உண்மைதான் விப்ரோஆசிம் போன்றவர்களின் டவுசர் கழன்றுவிடும்)

 13. //உமது மனிதாபிமானம் பல்லிளிக்கும் இடம் இதுதான் என்று முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தேன். வேலை வாய்ப்பு குறித்த உமது புருடாக்களையும், இந்தியாவில் விவசாய புரட்சியின் விளைவாக உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் முன்பு அசுரனில் விவாதிக்கப்பட்டுள்ளது. சும்மா மிரட்டுகிற வேலையை விடுங்கள்.. உங்களது தனியார்மயம் வேலைவாய்ப்பில் ஒரு பங்களிப்பும் செய்யவில்லை என்பதைத்தான் ரிசர்வ் பேங்க் புள்ளிவிவ்ரம் சொல்லுகிறது. தேசியமயமாக்கினால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது(உண்மைதான் விப்ரோஆசிம் போன்றவர்களின் டவுசர் கழன்றுவிடும்)////

  உமது மூடத்தனமும், வீண் ஜம்பங்களும் பல்லிளிக்கும் இடம் இதுதான். வேலை வாய்ப்பு பற்றி ஆர்.பி.அய் என்ன சொல்கிறது. குறைந்துவிட்டதா என்ன ? மேலும் அது அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பற்றிய முழு விவரங்களை சொல்கிறதா என்றுதான் கேட்டேன். பதில் இல்லை. இந்தியாவில் விவசாயம் சீரழந்ததற்க்கு காரணிகள் மூடிய பொருளாதார கொள்கைகள் மற்றும் நில உச்ச வரம்பு கொள்கைகள் தாம் என்றும் விவாதித்துள்ளோம். தனியார்மயம் வேலை வாய்ப்பில் ஒரு பங்களிப்பும் செய்யவிலை என்றால் பின் யார் அல்லது எந்த கொள்கை இத்தனை கோடி மக்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளதாம். அரசா ? 110 கோடி மக்கள் தொகை இன்று. அன்று இதில் பாதிதான். ஆனால் கடுமையான வேலை இல்லாத் திண்டாட்டம். அதே நிலை இன்றும் தொடர்ந்திருந்தால் பல பத்து கோடி மக்கள் வேலை இல்லாமல் கடும் கொந்தளிப்பு உண்டாகியிருக்கும்.

  இன்னொரு விசியம் அசுரன் : விவாதாம் சூடாகும் போது தனி மனித தாக்குதல் பாணி உமக்கு வருகிறது. மிக சுலபமாக் உம்மையும் என்னா ஏச முடியும். (பழச மறக்க வேண்டாம்). ஆனால் இங்கு வேண்டாம் என்று பார்க்கிறேன். உமது அமர்தியா சென் உமது கடவுளானா ஸ்டாலின் மற்றும் கம்யூனிச அமைப்பை பற்றி சொன்ன அரிய கருத்துக்களை விரைவில் எழுதுகிறேன். மேலும் அவர் தாரளமயமாக்கலை ஆதரிக்கிறார்.
  ஊழல் மூலம் பல நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு சென்றடையாததைதான் கடுமையாக விமர்சிக்கிறார்.

 14. ///தேசியமயமாக்கினால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது(உண்மைதான் விப்ரோஆசிம் போன்றவர்களின் டவுசர் கழன்றுவிடும்)
  ////

  is it so ? :)))))))))))) i can only laugh at your colossal ignorance. try this for finding the truth. ask Air India or Indian Bank old timers about all this. you are too theoritical and bookish and young for this subject. yet you brag like a nut. Do you have any idea about the qualities of a leader like Azim Premji to create a WIPRO. or the bureacratic apathy and mis management of a typical govt PSU in India which will surely ruin a company like WIPRO in no time. try arguing this with any experienced person in India. i can only laugh at your argument here..

  • //ask Air India or Indian Bank old timers about all this//

   அடடா.. எயர் இண்டியா (ஊழியர்கள்) கேட்கிறார்களே அதற்கு பதில் சொல்லுங்கள் முதலில் –

   ஏன் லாபம் கொழிக்கும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்த்தது அரசாங்கம்?

   லாபத்தில் நடந்து கொண்டிருந்த போது கூட ஏன் எயர் இண்டிய விமானங்களை நவீனப் படுத்த வில்லை?

   இதற்கு பதில் சொல்லி விட்டு மல்லையாவிடம் போய்க் கேளுங்கள் –

   ஏன் உன்னுடைய நட்டத்திற்கு மக்கள் வரிப் பணத்தை எதிர்பார்க்கிறாய் என்று

   ஏன் நீ லாபம் சம்பாதிக்க அரசாங்கம் மாணிய விலையில் எரி பொருள் தர வேண்டும் என்று

   இப்போ நட்ட மென்றவுடன் வருகிறாயே… லாபம் வந்த போது அரசாங்கத்துக்கு ஏன் நீ பங்கு தரவில்லை என்று

 15. // உமது மூடத்தனமும், வீண் ஜம்பங்களும் பல்லிளிக்கும் இடம் இதுதான். வேலை வாய்ப்பு பற்றி ஆர்.பி.அய் என்ன சொல்கிறது. குறைந்துவிட்டதா என்ன மேலும் அது அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் பற்றிய முழு விவரங்களை சொல்கிறதா என்றுதான் கேட்டேன். பதில் இல்லை // இது அசுரனின் பதில்
  அசுரன்
  Posted on August 27, 2009 at 5:13 am

  http://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/87396.pdf
  வேலைவாய்ப்பு குறித்த மேலேயுள்ள ரிசர்வ் வங்கி அறிக்கை வேலை வாய்ப்பு குறித்த அதியமானின் அத்தனை மாயஜாலங்களையும் திரை கிழிக்கிறது.

  (தோராயமான அளவு)
  1970-71ல் அரசு வேலைவாய்ப்பு 110லட்சம்
  தனியாரில் 67லட்சம்

  1990-91 அரசு 190 லட்சம்
  தனியார் 76 லட்சம்

  1991-92 அரசு 190 லட்சம்
  தனியார் 78 லட்சம்

  2004-05 அரசு – 180 லட்சம்
  தனியாரில் – 84 லட்சம்
  //
  அதாவது ஆர்பி ஐயின் அறிக்கை, தனியாரில் உருவாகி இருக்கும் அத்தனை வேலை வாய்ப்புகளையும்தான் குறிக்கிறது.

  சரிதானா அசுரன் ?

 16. இந்த ஆர்.பி.அய் புள்ளி விவரப்படி, 1971 இல் மொத்த வேலை வாய்ப்பு, சுமார் 1.75 கோடியில் இருந்து 2004இல் சுமார் 2.75 கோடி அதிகரித்துள்ளது. இதில் தனியார் துறை என்று குறிப்பிடப்படுவது, ஆர்கனைஸ்ட் துறை மட்டும்தானா அல்லது ரிக்கார்டுகளே இல்லாத அன் ஆர்கனைஸ்ட் துறைகள் (விவசாயக் கூலி, இஸ்திரி போடுபவர்கள், ஓட்டுநர்கள், ப்ளம்பர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், மற்றும் இது போன்ற பல்லாயிரம் துறையுனரையும் சேர்த்தா ? கண்டிப்பாக இருக்க முடியாது. 1971 இல் இந்தய மக்கள் தொகை சுமார் 50 கோடிகள் இருக்கும். அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 20 கோடிகளாவது இருப்பர்.
  ஆனால் இந்த புள்ளிவிவரம் 1.75 கோடிகளை மட்டும் காட்டுகிறது. அதே போல 2004இல் இந்திய மக்கட்தொகை சுமார் 106 கோடிகள். அதில் சுமார் 40 கோடிகளாவது வேலை செய்யும் மக்களாக இருப்பர். (மீதி குழந்தைகள், வயதானோர், போன்றவர்கள்). ஆனால் இந்த புள்ளி விவரம் சொல்வது சுமார் 2.75 கோடிகள் மட்டுமே. அரசு துறையில் மொத்த வேலை வாய்ப்பை சுலபமாக கணக்கெடுத்துவிடலாம். ஆனால்
  அனைத்து வகை தனியார் துறைகளையும் கணக்கிட முடியாது. (ரிக்கார்டுகள் இல்லை). ஆனால் இந்தியாவின் இன்றைய ஜி.டி.பி சுமார் 51 லச்சம் கோடிகள். உற்பத்தி அளவு, மற்றும் வரி வசூல் தொகைகள் அன்றைவிட மிக மிக மிக அதிகம். வெறும் 84 லச்சம் தனியார் தொழிளார்கள் இத்தனை லச்சம் கொடி ஜி.டி.பி உருவாக காரணியா ? இதிலிருந்தே இந்த புள்ளி விவரம் முழுமையானது அல்ல என்று தெளிவாகிறது. சரிதானே அசுரன் ? இதை வைத்துகொண்டு குதித்தீர்கள் !!

  அய்.நா வை சேர்ந்த உலக தொழிலாளர் அமைப்பில் சுமார் 36 கோடிகள் வேலை வாய்ப்பு என்று ஒரு சுட்டி சொல்கிறது. அந்த சுட்டிய காபி செய்ய முடியவில்லை. இந்த சுட்டியில் இருந்து பார்த்துச் செல்லவும் :
  http://laborsta.ilo.org

  • /ரிக்கார்டுகளே இல்லாத அன் ஆர்கனைஸ்ட் துறைகள் (விவசாயக் கூலி, இஸ்திரி போடுபவர்கள், ஓட்டுநர்கள், ப்ளம்பர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், மற்றும் இது போன்ற பல்லாயிரம் துறையுனரையும் சேர்த்தா ? கண்டிப்பாக இருக்க முடியாது. 1//

   இந்த புள்ளிவிவரம் முழுமையானது இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை அன் ஆர்க்னைஸ்டு செக்டரில் வேலை வாய்ப்பு போதுமானதில்லை என்கிற அளவுக்கு விவசாயத்திலிருந்து மக்கள் கோடிக்கணக்கில் வேலையிழந்து வருவது. அதியமானின் அன் ஆர்க்னைஸ்டு கும்பல் இப்படிப்பட்ட ரிசர்வ் உழைப்பு சக்தியைத்தான் குறைந்ததகூலியில் அடிமாட்டு விலைக்கு சுரண்டுகிறார்கள். ஆகவேதான் இது அன் ஆர்க்னைஸ்டாக வைக்கப்பட்டு பேணப்படுகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் ஆர்கன்ஸைடு ஆட்களின் எண்ணிக்கையை பெரிய கம்பேனிகள் குறைத்து விட்டு காண்ட்ராக்ட், கேசுவல் லேபர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் (இதே நேரத்தில் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது) சுரண்டலுக்கும் இதுவே அடிப்படை.(சுமங்கிலி திட்டம், பிஹார், ஒரிஸ்ஸ கூலிகள் இங்கு திருப்பூர் ஈரோடுகளில் கொத்தடிமைகளாக வேலை செய்வது etc)

   இதை இன்னொரு வகையில் புரிந்து கொள்ள தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உதவி செய்யும். இதற்கு அதியமானுடைய பதில் எல்லாருக்கும் வேலை கொடுப்பது சாத்தியமில்லை என்பது. இதுதான் அதியமானின் மனிதாபிமானம் பல்லிளிக்கும் இடம். இதுதான் அதியமான் பொருளாதாராத்தின் இயலாமை, தோல்வி.

   சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், இவரது உலகமயம் ஆர்கனைஸ்டு செக்டரில் என்ன இழவை கிழித்துள்ளது என்பதை ஆய்வு செய்வதற்கு RBI புள்ளிவிவரம் போதும்தானே? இல்லாததை ஏன் பேச வேண்டும்? அது குறித்து அவரது எதிர்வினை ‘தாவியமானா’க உள்ளது.

   அசுரன்

 17. அசுரன்,

  மொதல்ல ஆர்.பி.அய் டேடா முழுமையானது அல்ல என்று நான் சொன்னதிற்க்கு கண்டபடி
  பேசினீர்கள். இப்போது நான் சொன்னது சரி என்றாகிவிட்ட பின், சுரண்டலை பற்றி பேசி
  சமாளிக்கிறீர்கள். எம்மை எஸ்கேபிஸ்ட் என்று சொன்னவர் தானே நீர். நீர் தான் எஸ்கேபிஸ்ட்.
  நேர்மையும் இல்லை. விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவு இன்று உள்ளது, முதலாளிகளுக்கு
  1,00,000 கோடிகள் கடன் தள்ளுபடி என்று கதை அளந்தீர்கள். ஆதாரம் கேட்டதற்க்கு, புள்ளிவிவரங்கள் உள்ளது என்று சொன்னதோடு சரி.

  சரி, இருக்கட்டும். இந்தியாவில் விவசாயம் மற்றும் விலைவாசி உயர்வு, வறுமை , வேலை இன்மை இதெல்லாம் இந்த அளவிலாவது கட்டுபடுத்தப்பட்டுள்ள காரணம் உங்கள் இடதுசாரி கொள்கைகள் அல்ல. மாறாக 45 ஆண்டுகளாக படுநாசம் செய்துவிட்டு, அதை உடனே சரி செய் என்றால் எப்படி ?

  ///அதே அளவுக்கு உண்மை அன் ஆர்க்னைஸ்டு செக்டரில் வேலை வாய்ப்பு போதுமானதில்லை என்கிற அளவுக்கு விவசாயத்திலிருந்து மக்கள் கோடிக்கணக்கில் வேலையிழந்து வருவது. அதே அளவுக்கு உண்மை அன் ஆர்க்னைஸ்டு செக்டரில் வேலை வாய்ப்பு போதுமானதில்லை என்கிற அளவுக்கு விவசாயத்திலிருந்து மக்கள் கோடிக்கணக்கில் வேலையிழந்து வருவது. ////

  தார‌ள‌ம‌ய‌மாக்கம‌ல் இல்லாது இருந்தால் இந்த‌ அள‌வு வேலை வாய்ப்புக‌ளை கூட‌ உருவாக்கியிருக்க‌ முடியாது.
  மேலும் ரூபாயின் ம‌திப்பு க‌டும் வீழ்ச்சி அடைந்து, இற‌க்கும‌தி செய்ய‌ டால‌ரும் இல்லாம‌ல், திவாலாகி,
  வறுமை மிக‌ மிக‌ மிக‌ அதிகாமாகி, இந்த‌ உரையாட‌ல் இன்று சாத்திய‌மாகி இருக்காது. ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் உம்மை போன்ற‌வ‌ர்களின் “கொள்கைக‌ளை” நோக்கி இந்தியாவை ந‌க‌ர்த்த‌ முய‌ன்ற‌தால் உருவானா விளைவுகளை இன்று குறுகிய கால‌த்தில் ச‌ரி செய்ய‌ முடியுமா என்ன‌ ? உல‌கில் இட‌துசாரி கொள்கைக‌ளை ப‌ல‌ பாணிக‌ளில் பின்ப‌ற்றிய‌ அனைத்து நாடுக‌ளும், இன்றும் த‌டுமாறி கொண்டுதான் இருக்கின்ற‌ன‌. ர‌ஸ்ஸியாவையும், ஃபிரான்ஸையும் ஒப்பிட்டாலே தெரியும். ர‌ஸ்ஸியாவும் இன்றைய‌ ஃபிரான்ஸ் போல‌ வ‌றுமை மிக‌ குறைவாக‌ உள்ள‌ ஒரு வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ உருவாகியிருக்க‌ முடியும். 75 வ‌ருட‌ சோசிய‌லிச‌ ப‌ரிசோத‌னை அதை சீரழித்து விட்ட‌து. பொருளாதார‌த்தை கூட‌ சீர் செய்து விட‌லாம். ஆனால் இட‌துசாரி கொள்கைக‌ள் உருவாக்கிய‌ ஃபாசிச‌, மைய்ய‌ப்ப‌டுத்தும் அதிகார‌ அமைப்பினால் விளைந்த‌ தார்மீக‌ சீர்கேட்டை ச‌ரி செய்வ‌து மிக‌ மிக‌ க‌டின‌ம். அத‌னால் தான் முன்னாள் இட‌துசாரி நாடுக‌ளில் க‌டும் ஊழ‌ல், திருட்டு, அதிகார‌ துஸ்பிர‌யோக‌ம். இந்தியாவும் ஒரு ந‌ல்ல‌ உதார‌ண‌ம். 1947இக்கு முன் இருந்த‌ இந்திய‌ர்க‌ளின் நேர்மை வேறு. இன்றுதான் பார்க்கிறோமே.

  க‌ம்யூனிச‌ செம்புர‌ட்சி உருவானால், ஒரு 5 ஆண்டுக‌ளில் நிலைமைய‌ ச‌ரியாக்கி, சுபிட்ச்ச‌ம் உருவாக்கி முடியுமா உங்க‌ளால் ? ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை பார்தால், ப‌ல‌ கோடி ம‌க்க‌ளை முத‌லில் ப‌லி கொடுத்து பின்ன‌ர்தான் விவ‌சாய‌த்தை ஒரு வ‌ழியாக்கியிருக்கிறீர்க‌ள்.

  அம‌ர்தையா சென் ப‌ற்றி க‌தைக்கிறீர்க‌ள். உக்ரேனியிய‌ ப‌ஞ்ச‌ம் ப‌ற்றியும், க‌ம்யூனிச‌ ச‌ர்வாதிகார‌த்தினால் தான்
  அப்ப‌ஞ்ச‌ம் உருவாகி, நிவார‌ண‌மும் ஒழுங்காக‌ செய்ய‌ முடிய‌வில்லை என்ப‌தை ப‌ற்றி விள‌க்கியுள்ளார்.
  ப‌டித்து பாரும். அனைத்து வ‌கை ஃபாசிச‌ ச‌ர்வாதிகார‌மும் இதே போல‌ ப‌ஞ்ச‌த்தை உருவாக்கும் என்ப‌தை ப‌ற்றிய‌ அவ‌ர‌து ஆய்வே, அவ‌ரின் ஆக்க‌ங்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌து.

  ம‌னிதாபிமான‌த்தை ப‌ற்றி நீங்க‌ க‌தைப்ப‌து தான் ந‌கைமுர‌ண்.

 18. அதியமானின் கடசி புகலிடம் உக்ரைன் பஞ்சம் மற்றும் ரஸ்ய பீதி….

  //மொதல்ல ஆர்.பி.அய் டேடா முழுமையானது அல்ல என்று நான் சொன்னதிற்க்கு கண்டபடி
  பேசினீர்கள். இப்போது நான் சொன்னது சரி என்றாகிவிட்ட பின், சுரண்டலை பற்றி பேசி
  சமாளிக்கிறீர்கள்.//

  கண்டபடி பேசினேன் என்று பொய் சொல்ல வேண்டாம் அதியமான். இங்கும் கூட சுரண்டலைப் பற்றி மட்டும் பேசவில்லை. கொடுக்கப்பட்ட புள்ளிவிவரத்திலேயே விவாதிக்க இடமுள்ளது என்பதையும், மாறாக அதனை மறுக்கும் உங்களது கருத்துக் கோர்வைகளோ வெறும் கருத்துக் கோர்வைகளாக மட்டுமே நிற்கின்றன அவற்றின் மீது விவாதிக்க இயலாது என்பதையே வலியுறுத்துகிறேன். இந்த அடிப்படையில் RBI புள்ளிவிவ்ரம் முழுமையானதே. அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.

  மேலும், முதலாளிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த விவரங்கள் மற்றும் ப்ரி மார்க்கேட், மூடிய பொருளாதாரம் உள்ளிட்ட இன்னபிற இரண்டாம் கட்ட விவாதக் கருப்பொருளை இப்பொழுதே விவாதிக்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகக் கூறித்தான் அவற்றை ஒதுக்கி வைத்தேன். ஏனேனில் தாவித் தாவிச் செல்லும் இயல்புடைய தாவியமானிடம் வேறெந்த வகையிலும் கறாராக விவாதம் செய்வது சாத்தியமில்லை என்பதால். இதனையெல்லாம் நேர்மையின்றி அதியமான் அவதூறு செய்ய பயன்படுத்தினால் அதே போலான நடவடிக்கைகளில் ஆதாரத்துடன் இறங்க வேண்டி வரும். ஏற்கனவே உங்களுக்கு என்னால் அன்புடன் கொடுக்கப்பட்ட (நீரூபிக்கப்பட்ட) பொய்தியமான் என்ற பெயருடன் மேலும் சில பல பெயர்களை சேர்க்க வேண்டிவரும்.

  இவற்றையெல்லாம் ஆதரமின்றி செய்யப் போவதில்லை. விவாதத்தில் வெளிப்படும் உங்களது மோசடியான வாத முறைகளின் மூலமே இவை செய்யப்படும்.

  அசுரன்

 19. //ந‌க‌ர்த்த‌ முய‌ன்ற‌தால் உருவானா விளைவுகளை இன்று குறுகிய கால‌த்தில் ச‌ரி செய்ய‌ முடியுமா என்ன‌ ? உல‌கில் இட‌துசாரி கொள்கைக‌ளை ப‌ல‌ பாணிக‌ளில் பின்ப‌ற்றிய‌//

  பொய்தியமான் என்று உங்களை அழைப்பதற்கு காரணமாக, 1990க்கு முன்புள்ள எல்லா தவறுகளும், இன்றைய எல்லா தவறுகளும் இடதுசாரிக் கொள்கையால் என்ற உங்களது பொய் ஒரு பொய் என்பதை பலமுறை நீருபித்து அதனை நீங்கள் பல முறை ஏற்றுக் கொண்ட பிற்பாடும் இதெயேதான் சொல்வேன் என்று நீங்கள் சாதிக்கின்ற ப்ட்சத்தில் உங்களது பெயரை நிரந்தரமாக பொய்தியமான் என்றே அழைப்பேன்.

  இதனை சுட்டிக் காட்டும் பொழுது மழுப்பலாக எழுதுவதும் பிறகு கொஞ்சம் நாள் கழித்து மீண்டும் இந்த பொய்யை இடுவதுமான நேர்மையற்ற மோசடியான அனுகுமுறை முதலாளிகளுக்கு மட்டுமே உரியது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

  அன்பு பொய்தியமான்,
  இனி
  இதில் பின்வாங்குவதற்கு இடமில்லை.

  இனி அனைவரும் அன்புடன் உங்களை பொய்தியமான் என்றே அழைப்போம் ஆர்வமுள்ள தோழர்களை வரவேற்கிறேன்.

  அசுரன்

 20. சரி, மெய்யான அசுரன்,

  இடதுசாரி கொள்கைகள் என்றால் முதலில் உமது டிஃபனிஸ்னை தான் அனைவரும்
  ஏற்க்க வேண்டும் என்ற வறட்டுவாது உமது. இடதுசாரி கொள்கைகள் என்றால்
  லெனின், ஸ்டாலின் போன்றோர்களில் கொள்கைகளில் இருந்து, “போலி” சோசியலிச‌
  கொள்கைக‌ள் (அதாவ‌து ஜ‌ன‌னாய‌க‌ நாட்டில், அம‌லான‌ “சோசிய‌லிச‌ பாணிக‌ள்) வ‌ரை.
  அனைத்தும் ஒரே புள்ளியை நோக்கி ந‌க‌ர‌ முற்ப‌ட்ட‌ன‌. ப‌ல‌ வ‌ழிமுறைக‌ளில்.

  வ‌ல‌துசாரி என்றால் இட்ட‌ல‌ர் முத‌ல் இன்றைய‌ லிபெர்டேரிய‌ன் க‌ட்சியின‌ர் வ‌ரை, அனைத்தையும்,
  ஒரே பிராக்க‌ட்டில் வ‌கைப்ப‌டுத்துவ‌து தோழ‌ர்க‌ளின் வ‌ழிமுறைதானே ?

  தூய‌ க‌ம்யூனிச‌ம் எங்கும் உருவாக‌வில்லை என்ற‌ உம‌து ப‌ழைய‌ வாத‌த்தை ந‌ன்கு அறிவேன்.
  இந்தியாவில், சிலியில் முன்ன‌ர் முய‌ன்ற‌ “கொள்கைக‌ள்” என்ன‌ பெய‌ரில் அழைத்தால் தான்
  இப்ப‌ என்ன‌ ? பொய்மான், இன்ன‌பிற‌ என்று நீர் இணைய‌த்தில் உள‌றிக்கொண்டு திரிய‌லாம்.
  :)) ஆனால் வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர்க‌ளின் நிலைபாடு ப‌ற்றி உம‌து அறியாமை தான் அதிக‌ம்.

  உக்ரேனிய‌ ப‌ஞ்சம் ப‌ற்றி உக்ரென் ம‌க்க‌ள் தாம் சொல்ல‌வேண்டும். உம்மை போன்ற‌
  வ‌ர‌லாற்று திரிபுவாதிக‌ள் அல்ல‌. ம‌டிந்த‌ ம‌க்க‌ளின் எண்ணிக்கைக‌ளில் தான் இன்று
  மாற்று க‌ருத்து. ஆனால் ஸ்டாலினை அம்ம‌க்க‌ள் ஒரு வில்ல‌னாக‌தான் என்றும் பார்பார்க‌ள்.
  யூத‌ர்க‌ள் இட்ல‌ரையும், த‌மிழ‌ர்க‌ள் ராஜ‌ப‌க்சேவையும் பார்ப‌து போல‌.

  அம‌ர்தியா சென் இது போன்ற‌ ப‌ஞ்ச‌ங்க‌ளை ப‌ற்றி எழுதிய‌தை ப‌டித்து பாரும். அம‌ர்த்தியா
  சென்னை ப‌ற்றி க‌தைக்கிறீர் !!

 21. பொய்தியமான் (அதியமான்) எங்கிருந்தாலும் உடனடியாக இங்கே வரவும்…..

  https://www.vinavu.com/2009/08/15/august15/#comment-8986

  //வ‌ல‌துசாரி என்றால் இட்ட‌ல‌ர்//

  ஹிட்லரின் கட்சி பெயர் சோசலிச கட்சி. அவ்ரை வலதுசாரி லிஸ்டில் சேர்திருக்கும் பொய்தியமான், ஒருவேளை பிறகு தேவைப்பட்டால் ஹிட்லர் கட்சியின் பெயரில் சோசலிசம் இருக்கின்ற ஒரே காரணத்தால் அதனையும் இடதுசாரியின் தோல்வியில் பட்டியலிடுவார்.

 22. //தார‌ள‌ம‌ய‌மாக்கம‌ல் இல்லாது இருந்தால் இந்த‌ அள‌வு வேலை வாய்ப்புக‌ளை கூட‌ உருவாக்கியிருக்க‌ முடியாது.//தாராளமயம் வருவதற்கு முன்னால் பட்டிக்காடுகளில் வேளாண்மை நல்லாத்தான் இருந்தது.. கிட்டத்தட்ட அனைவருக்கும் வேலை இருந்தது. மழை தப்பிப்போன வருடங்கள் தவிர்த்து இரு போகம்–ஒரு போகம் நெல்லும் இன்னொரு போகம் பருத்தியோ, காய்கறியோ பயிர்செய்ய முடிந்தது.. இன்று? நாட்டின் பிரதானமான தொழில் நசுக்கப்பட்டு வருகிறது.. இதனை முதலாளித்துவ பத்திரிக்கைகள் வந்து சாட்சியம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. நெசவுத் தொழில் மட்டும் என்ன வாழுகிறதாம்? வாழ்விழந்து நொடித்துப் போய் தறிகளை காயலான் கடைக்குப் போடும் நிலையில்தான் சிறுமுதலாளிகளே உள்ளனர். சுயமாக தையல் கடை வைத்து சிறு அளவில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எங்கே? சிறு தோட்டங்களில் தேயிலை உற்பத்தி செய்த விவசாயிகள் என்ன ஆனார்கள்? உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் தொடுத்த தாக்குதலால் வீதிக்கு வந்தவர்களும், கிட்னி வித்துப் பிழைப்பவர்களும் பல லட்சம் பேருக்கும் மேலே.. அதே சமயம் தாராளமயம் சில வேலைவாய்ப்புகளை உருவாக்கியதென்னவோ உண்மைதான்.. ஆனால் அது கணிணி போன்ற துறைகளில் சில லட்சம் பேருக்கு வேலை கொடுத்தது.. ஆனால் அதனைவிடப் பல மடங்கு எண்ணிக்கையில் தொழிலாளர்களை வீதியில் வீசி எறிந்தது.. இதனை மறுக்க முடியுமா? ஒவ்வொரு சிறுதொழில் முனைவோரும் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.. தீப்பெட்டி,கயிறுதிரித்தல், முதல் கால்நடை வளர்ப்பு வரை அனைத்தும் இதனால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.. பொம்மைகளை செய்து வந்த சிறுதொழில்கூடங்கள் சீனப்பொம்மைகள் வரவால் சீரழிந்ததையும், பராசுரக் குளிர்பானங்களின் முன்னால் காளிமார்க்கும் வின்செண்ட் சோடாவும் ஒழிக்கப்பட்டதையும் பேசாமல் தாராளமயம் பற்றிப் பேசமுடியுமா?

 23. //இடதுசாரி கொள்கைகள் என்றால் முதலில் உமது டிஃபனிஸ்னை தான் அனைவரும்
  ஏற்க்க வேண்டும் என்ற வறட்டுவாது உமது. இடதுசாரி கொள்கைகள் என்றால்
  லெனின், ஸ்டாலின் போன்றோர்களில் கொள்கைகளில் இருந்து, “போலி” சோசியலிச‌
  கொள்கைக‌ள் (அதாவ‌து ஜ‌ன‌னாய‌க‌ நாட்டில், அம‌லான‌ “சோசிய‌லிச‌ பாணிக‌ள்) வ‌ரை.
  அனைத்தும் ஒரே புள்ளியை நோக்கி ந‌க‌ர‌ முற்ப‌ட்ட‌ன‌. ப‌ல‌ வ‌ழிமுறைக‌ளில்.//

  பொய்தியமானின் மழுப்பல்ஸ் இப்படித்தான் எந்த வரையறையையும் கறாரகக் சொல்லாமல், அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதி போலவே இருக்கும்….

 24. பொய்தியமான் மற்றும் அசுரன்,

  இதோ ஆர்கனைஸ்டு லேபரிலேயே ஒரு உள் அன் ஆர்கனைஸ்டு லேபராக இருந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இருந்த அற்ப சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன. டர்பைன் மண்டையனின் காங்கிரஸ் அரசு இந்த சாதனையைச் செய்துள்ளது. இனிமேல், 2 மாத நோட்டீஸ் பீரியெட், விளக்கம் இதெல்லாம் இல்லாமலேயே தகவல்தொழில்நுட்ப ஊழியர்களை வேலையில் இருந்து சுரண்ட முடியும்.

  இரண்டு வருடத்திற்கு லேபர் ஆக்டை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கும் சட்டம்

 25. தாராளமயம் நம் நாட்டின் சகலதரப்பையும் சீரழித்து சின்னாபின்னமாக்கி உள்ளது. காமவெறி பிடித்த வக்கிர பாலியல் நுகர்வைக் கொண்ட மேலைநாட்டவர்களின் ‘சீப் ரேட்’ விபச்சார பூமியாக நாட்டை மாற்றியது..(அதன் மூலம் கிடைத்த டாலர் செலாவணிகள்தானே முக்கியம், அதியமான்!).. இதன் விளைவை கோவா,மாமல்லபுரக் கரைகளில் கண்கூடாகக் காணக்கூடும்.. சிறுவர், சிறுமிகளைக்கூட தாராளமயப் பாலியல் நுகர்வு விட்டுவைக்கவில்லை..13 வயதிலேயே வெள்ளைக்காரனுக்குப் பாலியல் கருவியாக்கப்படும் இந்தியச் சிறுமிகள் தாராளமயத்தின் கொடூரத்தின் சாட்சியங்கள்… இந்தச் சீரழிவுகளுக்கு மருந்து போடுகிறோம் என்று கூடவே காண்டம் தூக்கிக்கொண்டு சிறுமிகள் கையில் அவற்றைக்கொடுக்கும்’என்.ஜி.ஓ.’ ஓநாய்கள்… தூ.. இதைவிடக் கேவலம் ஒன்றும் உண்டு… அமெரிக்க போர்க்கப்பல் சென்னையில் நங்கூரமிட..கேள்வி ஏதூமின்றி சாம் மாமாவின் வீரர்கள் சென்னையைச் சுற்றி வர.. அவ்வீரர்களின்பாலியல் தேவைகளுக்காக கோடம்பாக்கம் துணைநடிகைகளை டாலருக்காக இந்திய அரசே ஏற்பாடு செய்தது…லீ மெரிடியன் போன்ற ஓட்டல்களில் இந்த மானங்கெட்ட பொழப்புக்கு படுக்கை அறைக்குக் காவல் காத்தது..டாலருக்காக மானத்தை விற்கும் அரசின் காவல்துறை..இது ஒரு புறம் இருக்க.. தாராளமயம் எல்லைதாண்டிப் போய் பட்டினிச்சாவில் நெசவாளிகள் வீழ..அவர்களுக்குக் கஞ்சித் தொட்டி திறந்தார்கள்… அதே நேரத்தீல் கே.எப்.சி.யும் வந்தது..மெக்டொனால்டும் வந்தது..பீசாவும் வந்தது.. நொய்யல் ஆற்றை சாகடிக்க ஏற்றுமதி உயர்ந்தது.. பஞ்சம் பிழைக்க வந்த மக்களால் திருப்பூர் வீங்கியது.. கூடவே சனிக்கிழமை மயானகாண்டமும் ஊழிக்கூத்தாடியது..சனிக்கிழமை சம்பளம் பெறும்வரைக்கும் பல சிப்ப்டில் எந்திரத்தோடு எந்திரமாக ஓடீக்கழைத்த பஞ்சைகள் தங்களின் கொண்டாட்டத்தை டாஸ்மாக் கடைகளில் தொலைத்து ஈரலை வீங்கவைத்து செத்தார்கள்… அவர்களின் வாரச்சம்பளத்தைப் பறிக்க திருப்பூரில் சதை வியாபாரம் பெருகி ஆட்கொல்லி நோய்களும் பெருகின… இவ்வாறெல்லாம் போனால் எப்படி தாராளமயம் ந்நீடித்து நிற்கும்.. என்.ஜி.ஓ.க்கள் இரக்கம் பெருகி ஓடியது…ஓடோடி வந்து ‘ஆணுறை’ தந்து ஏகாதிபத்தியத்தின் கருணையை நிலை நாட்டியது… டாலருக்காக உழைத்து உழைத்து 40 வயதுக்குள் சருகாகிப் போகும் மானிடர்களையும் இடுப்போரம் கிட்னி விற்ற தழும்புகளையும் பெருக வைத்த தாராளமயத்தைப் போய் குற்றம் சொல்பவன் இந்தியத்தாயின் ‘தொழிலு’க்கு இடையூறு செய்யும் கோடாரிக் கொம்புதானே..அதியமான்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க