Monday, October 14, 2024
முகப்புசெய்திஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் !

ஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் !

-

ஏன் அவர் ஆஃப்கானுக்குத் திரும்பிச் செல்லமாட்டார் !

எனது முதல் ஆஃப்கான் பயணம் முடித்துத் திரும்பியபோது நாங்கள் அந்த நாட்டுக்குச் செய்த அழிவும்,அநீதியும் எண்ணி பெருத்த அவமானமாக இருந்தது !

அவை இருண்ட நாட்கள்!

2006ம் ஆண்டு நான் ஆஃப்கான் அனுப்பப்பட்டேன்.அந்த நாட்டு நிலைமைகள் ஆரம்பம் முதல் மிகவும் சவாலாக அமைந்தன ! அந்த நாட்டுக்கு நாங்கள் அனுப்பப்பட்ட காரணம் பற்றிய குழப்பம் நிலவி வந்தது ! எங்கள் பயணத்தின் நோக்கம் கசகசாச் செடிகளை அழிப்பதா? தேசப் பாதுகாப்பா? காரணம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருந்நது!

செப்டம்பர் 2,2006 , ராயல் ஏர் ஃபோர்ஸ்ன் ,நிம்ராட்விமானம் நடத்திய வான் வழித்தாக்குதல் என் நினைவில் நீடித்து வாழக்கூடிய அழிவு! 14 பேர் இறந்தனர். அழிவு நடந்த தினம் மதியம் முழுதும் அப்பகுதியில் பிணங்களைச் சுமந்து கொண்டு அலைந்தது இன்னும் வலிக்கிறது!

நிகழ்ந்த அந்த மரணங்கள் எதிர்த்துப் போராடி நடந்தவை அல்ல! அதன் பயனின்மையால் நடந்தவை !

நான் இராணுவத்தில் சேர்ந்தபோது மெலிந்து காணப்படுவேன்! மிகுந்த ஆர்வத்துடன் இருப்பேன்! இராணுவ வீரனாயிருப்பதில் பெருமை அடைந்தேன்!

ஆனால் இன்று , ஒரு இராணுவ அதிகாரி என்கிற நிலையில் இருந்து எனது உணர்வுகளை இந்த உலகம் அறியத் தருகிறேன்!

பிரிட்டிஷ் அரசு, ஆஃப்கானில் இருக்கும் இராணுவ வீரர்கள்மற்றும் ஆஃப்கான் நாட்டு மக்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்! அங்கு மக்கள் அல்லல் படுகிறார்கள்!

அது அனுமதிக்கப்படக்கூடாது! அமைதி வழிமுறைகளின் விதிப்படி மூன்று ஆண்டு காலப்பயணத்தில் பதிமூன்று மாதங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கக்கூடாதென்பதால் , பதவி உயர்வுடன் இங்கிலாந்திலேயே பணியமர்த்தப்பட்டேன்!

ஆனால் மீண்டும் ஆஃப்கான் செல்ல உத்தரவு வந்தது! என்னால் போக முடியவில்லை! தப்பிக்கும் பொருட்டு தென் கிழக்கு ஆசியாவுக்குச் சென்றேன்! மன உளைச்சலைக் கையாளத் தெரியாமல் நிறைய குடித்தேன்!சக வீரர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை! என்னைப்பற்றி அவர்கள் அறிந்திருப்பது அவர்களுக்கு நல்லதும் இல்லை! அப்படி ஒரு தர்ம சங்கடத்தில் யாரையும் வைக்க நான் விரும்பவில்லை!

சில மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றேன்! அங்கு என் மனைவியைச் சந்தித்தேன்! அவள் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தாள். மே மாதத்தில் நாடு திரும்பிச் சரணடைந்தேன்! இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறேன்!

(Lanceporal joe glenton என்ற அந்த அதிகாரி இங்கிலாந்தின் கார்டியன் தினசரியில் எழுதிய இந்த சிறு கட்டுரை 01.08.09 தி இந்துவில் வெளியிடப்பட்டிருந்தது.)

தமிழாக்கம்: யாழினி.

பின்னுரை:

என்னதான் தொழில்நுட்பத்தில் பீடு நடை போட்டாலும் ஏகாதிபத்திய இராணுவத்தின் மனவலிமையை ஆக்கிரமிப்பு வெறிக்கு தோதாக கட்டியமைக்கும் வேலையை இதுவரை அமெரிக்க மற்றும் இங்கிலாந்து இராணுவம் தயார் செய்வதில் வெற்றிபெறவில்லை. இங்கு கூட அந்த அதிகாரி மெல்லிய அளவில் தனது நாட்டின் நியாயம் குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார். அதற்கு மேல் அவரிடம் பெரிய அளவில் குற்ற உணர்வில்லை. ஆனால் இந்த சிறிய குற்ற உணர்விற்கே அவர் இராணுவத்திலிருந்தே வெளியேறி வெளிநாடு சென்று பின்னர் சரண்டைந்து இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருப்பது ஒரு முக்கிய விசயத்தை தெரிவிக்கிறது. எப்போதும் ஏகாதிபத்திய இராணுவத்தின் போர்த்திறனும், மனத்திறனும் அந்நாட்டின் அரசாங்கங்கள் எதிர்பார்ப்பது போல இருப்பதில்லை.

வியட்நாமிலிருந்து திரும்பிய அமெரிக்க வீர்ர்கள்தான் அப்போது போர் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய விசையாக இயங்கினார்கள். அவர்களெல்லாம் அமெரிக்காவின் வியட்நாம் மீதான ஆக்கிரமிப்பை அரசியல் ரீதியில் எதிர்க்க வில்லை என்றாலும் எந்த நோக்கமற்றும் செய்யப்படும் அந்தப்போரில் தாங்கள் உயிரிழப்பது குறித்தும், வியட்நாமிய மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்தும் அவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் தற்கொலை செய்தனர். சிலர் பிராயச்சித்தமாக வியட்நாமிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். இப்போதும் ஈராக்கிலிருந்து திரும்பும் வீர்ர்களின் தற்கொலை விகிதம் அதிகமாகத்தான் இருக்கிறது. இலங்கையில் சமீபத்தில் நடந்த போரில் கூட பல சிங்கள வீர்ர்கள் களத்தை விட்டு ஓடியிருக்கிறார்கள். அவர்களை சுடுதவற்கும் சிறைபிடிப்பதற்கும் பொன்சேகா உத்தரவிட்டிருந்தார். இப்படித்தான் ஆக்கிரமிப்பு இராணுவம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிகிறது.

அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் படைக்கு கொடுக்கப்படும் பயிற்சியின் படி ஒரு சின்ன எதிர்ப்புக் குரல் வந்தால் கூட அந்த திசையை நோக்கி சராமாரியாக சுடப்படவேண்டும் என்று பயிற்சியளித்திருக்கிறார்கள். ஆனால் பல அப்பாவி ஈராக்கியமக்கள், பெண்கள், குழந்தைகள் இப்படி கொல்லப்பட்டிருப்பது பல வீர்ர்களுக்கு தூக்கத்தை தொலைய வைத்திருக்கிறது.

வியட்நாம் போரில் அமெரிக்க வீரனின் உளவியல் துன்பத்தை சித்தரிக்கும் பிளாட்டூன் திரைப்படம் அரசியல் ரீதியாக அமெரிக்காவை விமரிசிக்கவில்லை என்றாலும் அப்படத்தை தயாரிக்க எந்த அமெரிக்க முதலாளியும் முன்வரவில்லை. பின்னர் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் இங்கிலாந்து முதலாளிகளை வைத்து அப்படத்தை வெளியிட்டார். பார்க்காதவர்கள் பாருங்கள்.

ஆனால் மக்கள் விடுதலைக்கு போராடும் போராளிகளுக்கு இத்தகைய உளவியல்சிக்கல்கள் வருவதில்லை. காரணம் அவர்களது போர் நியாயமானது. ஹிட்லரின் இராணுவத்தின் அதிதீவிர தாக்குதலை சோவியத் செஞ்சேனை அளப்பறிய தியாகத்துடன் முறியடித்த்தெல்லாம் உண்மையில் பலருக்கு தெரியாது. சீனாவின் செஞ்சேனை கிராமங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை படித்துப்பார்த்தால் இப்படியெல்லாம் கூட ஒரு இராணுவம் இருக்குமா என்று தோன்றும். இருபதாம் நூற்றாண்டு ஒரு மக்கள் நூற்றாண்டு என பி.பி.சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட போது ஒரு முதுபெரும் சீனப்பெண்மனி செஞ்சேனையின் கட்டுப்பாட்டையும், சியாங்கைஷேக்கின் இராணுவம் செய்த கொடுமைகளையெல்லாம் நினைவுகூர்ந்தார்.

காஷ்மீரில் நிலைகொண்டிருக்கும் இந்திய இராணுவம் கூட தற்கொலை விகித்த்திலும், வீர்ர்கள் உயரதிகாரிகளை சுட்டுக் கொல்வதிலும் அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறையையும் அதைப்போன்ற குற்றச்சாட்டு புலிகள் மீது இல்லை என்பதையும் கூட இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும். புலிகள் அரசியல்ரீதியில் பாரிய தவறுகள் செய்த போதும் இத்தகைய பாலியல் இழிசெயல்களை செய்ததில்லை. அபுகிரைப் வக்கிரங்களையெல்லாம் அமெரிக்கா அளவுக்கு உலகில் யாருமே செய்ததில்லை.

போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிடுவது, இனக்குழுக்களுக்குள் பகை மூட்டி கொல்ல வைப்பது போன்றவையும் கூட ஏகாதிபத்திய சதியாலோசனைகளின் பேரிலேயே நடக்கின்றன. இசுரேலின் மூர்க்கமான படுகொலைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவே ஹமாசின் போராளிகள் தற்கொலை செய்து இசுரேலிய மக்களை நடுங்க வைக்கின்றனர். இப்படி கோடி ரூபாய கொடுத்தால் கூட ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வீரன் தற்கொலை போராளியாக போராடுவதற்கு சம்மதிக்க மாட்டான். என்ன இருந்தாலும் அவை கூலிக்கு மாரடிக்கும் அடியாட்படைதானே! நாட்டின் மக்களின் விடுதலைக்கு தன்னுயிரைத் தந்து போராடும் போராளியின் மனவலிமைக்கு அமெரிக்காவின் அதிநவீன போர்முறைகளெல்லாம் ஈடாகது என்பதையே தற்போது அமெரிக்கா ஈராக்கில் சிக்கியிருப்பதைக் காட்டுகின்றன.

கருவிகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், டாங்கிகள், பீரங்கிகள், விமானங்கள், கப்பல்கள், அணுகுண்டுகள், வான்கொள்கள் இப்படி எண்ணிறந்த ஆயுதங்கள் இருந்தாலும் ஏகாதிபத்தியத்தின் திமிரை ஒடுக்கப்படும் நாடுகளைச்சேரந்த மக்கள் வெறும் தமது உடல் உயிரை வைத்தே எதிர்கொள்ளுகின்றனர். இந்த கருவி பலத்திற்கு ஈடாக இதுவரையிலும் இனிமேலும் எதுவும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை. அதனால்தான் அணுகுண்டுகள் வைத்திருக்கும் ஏகாதிபத்தியங்களை வெறும் காகிதப்புலிகள் என்றார் மாவோ.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவு

அமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் !

  1. யாழினி, முன்னேற்றம் இருக்கிறது, இருந்தாலும், அதிக அளவு வாக்கியங்கள் ( simple sentences) வராமல் இருப்பது நல்லது.

  2. எனது முதல் பயணம் முடித்துத் திரும்பியபோது நாங்கள் அந்த நாட்டுக்குச் செய்த அழிவும்,அநீதியும் எண்ணி பெருத்த அவமானமாக இருந்தது ! அவை இருண்ட நாட்கள்!… https://www.vinavu.com/2009/08/31/never-back-to-afghanistan/trackback/

  3. வினவு Part Time Work ஆக தாலிபான்களுக்கு கொள்கை பரப்பு செயலாளர் ஆக பனி புரிவது புதிய செய்தி. வாழ்க உங்கள் தொண்டு.

    வாழ்க கம்யுனிசம். ஓங்குக பொரட்சி..

  4. ***
    இலங்கையில் சமீபத்தில் நடந்த போரில் கூட பல சிங்கள வீர்ர்கள் களத்தை விட்டு ஓடியிருக்கிறார்கள்.
    ****
    ஆதாரம் ? ****காஷ்மீரில் நிலைகொண்டிருக்கும் இந்திய இராணுவம் கூட தற்கொலை விகித்த்திலும், வீர்ர்கள் உயரதிகாரிகளை சுட்டுக் கொல்வதிலும் அதிகரித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.*** ஆதாரம் ? *****இப்படி கோடி ரூபாய கொடுத்தால் கூட ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வீரன் தற்கொலை போராளியாக போராடுவதற்கு சம்மதிக்க மாட்டான். ****** நல்லது.

  5. என்னிடம் பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் போன வாரம் இப்படி சொன்னார். (ஆப்கானில் இருந்து வந்தவர் ). முதலில் அங்கு இருப்பது அமெரிக்கவோ, ப்ரிட்டிஷோ இல்லை. அது நேடோ படைகள். இந்தியா , இத்தாலி இவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். தலிபானுக்கு ஆப்கான் டிரைவர் மூலம் பணம் கொடுத்தால்தான் அங்கு பாதுகாப்பாக ரோடில் போக முடியுமாம். தலிபான்கள் இரண்டு சிறுமிகளின் முகத்தில் அமிலம் ஊற்றிவிட்டார்கள். அவர்களுக்கு பர்கா போடும் வயதாகவில்லை.
    உண்மையிலேயே ஆப்கான் சிறுமிகளை பாதுகாக்கத்தான் இவர்கள் அங்கே போனார்களா? ரஷ்யர்கள் எல்லாத்தையும் அழித்து விட்டார்கள். அவர்களுக்கு வேலை எதுவும் இல்லை. நாங்கள் ஜப்பானை கட்டினோம். ஜெர்மனியை கட்டினோம் என்றார். எல்லாருமே அடுத்தவர்கள் செய்யும் தவறுகளை காண்பித்து தங்கள் செயல்களை நியாயப்படுத்துகிறார்கள்.
    இன்னும் ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்கு சொல்லப்படும் நியாயம் என்ன தெரியுமா? இவர்கள் அதை வீசாவிட்டால் இன்னும் நிறைய பேர் கொள்ளப் பட்டிருப்பார்க்லாம். அதனால் தூங்கற குழ்ந்தை உட்பட அனைவரையும் கொன்றது நியாமாம். !!

    • திரு அனோனி அவர்களுக்கு வணக்கம். ஜப்பானுக்கு தேவைதான் அது.
      தயவு செய்து ஜப்பான் காரர்களின் கொடுமையைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் நன் கிங் ஆவனப படத்தை பற்றி பார்க்கவும்.

      அன்புடன்
      வினோத்.

  6. ஆஃப்கானிஸாதானில் தாலிபன் ஆட்சியும், அல் கொய்தா அதை தனது தளமாக அமைத்து கொண்டு, அமெரிக்க்காவை தாக்க்கியதன் விளைவுதான் இந்த “ஏகாதிபத்திய” படை எடுப்பு. ஆஃபகானிஸ்தானினி வரலாற்றை முழுமையாக பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் 1979இல் சோவியத் ரஸ்ஸியா “புரட்சி” அய் அங்கு ஏற்றுமதி செய்ய உதவி செய்ய, படை எடுத்தது. இதில் இருந்து தான் ஆஃப்கான் சீரழந்து, கொடுமைகளை அனுபவிக்கிறது. அதற்க்கு முன் மிக அமைதியான நாடு. இந்த பழைய வரலாற்றை பற்றி தோழர்கள் மூச்சு விட மாட்டர்கள். ஏகாதிபத்திய அத்துமீறலகள் பற்றி மட்டும்தான் எழுதுவர். (தகவல்கள் உண்மைதான். மீறல்கள் மிக அதிகம் என்பதும் சரிதான்).

    அதனால் ஆஃப்கானிஸ்தான் பற்றிய எமது பழைய பதிவையும் பார்க்கவும் :

    http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

    சதாம் ஹுசேன், செர்பியா,ஆஃப்கானிஸ்தான், அமெரிகாவின் போர்கள், டாலர் அரசியல் மற்றும் இன்ன பிற…

  7. தி கைட் ரன்னர் – புத்தகம் மற்றும் திரைப்படம் – சோவியத், அமெரிக்க படையெடுப்புக்கு முந்தைய, தாலிபான் இல்லாத, அமைதியான வாழ்க்கை முறை பற்றி பெருமூச்சு விட்டிருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க