தமிழ் சினிமாவிற்குள் அண்ணன்-தங்கை, பண்ணையார் மகள் காதல், தாய்-தனயன், தேசபக்தி, திருடன்-போலீசு முதலான ஒன்பது கதைகள் மட்டும் பல்வேறு தினுசுகளில் படமாய் எடுத்து வெளியிடப்படுகிறது என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். நீங்கள் எந்த கதையை எடுத்துக் கொண்டாலும் அது இந்த ஃபார்முலாவில் கண்டிப்பாய் அடங்கும். அந்த ஒன்பது ஃபார்முலாக்களில் ஒன்றான தேசபக்தியை எடுத்துக் கொண்ட இயக்குநர் தான் ஆசைப்பட்ட அத்தனை மெசேஜூகளையும் திணித்து வெளியிட்டிருக்கும் படம் – பேராண்மை.
‘அதிகாலையின் அமைதியில்’ எனும் ரசிய நாவல் மற்றும் திரைப்படத்தின் உணர்ச்சியில் மனதைப் பறிகொடுத்த வாசகர்கள், தோழர்கள் பலருமிருக்கலாம். ரசிய கலாச்சார மையத்தில் அந்த படத்தை தோழர்களுடன் பார்த்து ஒன்றிய அனுபவம் இன்னமும் மறக்கக்கூடியதல்ல. துருதுருப்பான நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஐந்து இளம் பெண் வீராங்கனைகளை தாய்ப்பாசத்துடன் வழிநடத்தும் எளிய கிராமத்து மனிதனான செம்படை அதிகாரி, அந்தப் பெண்களின் துணையுடன் நாஜிப் படையை எதிர்கொண்டு வெல்லும் போரின் ஊடாக, அவர்களுக்கு இடையே மலரும் தோழமையையும், அதன் பின் மரணம் தோற்றுவிக்கும் துயரையும் விளக்கும் அற்புதமான கதை.
ஜனநாதனும் அப்படி அந்தப் படத்தில் ஒன்றியிருக்கலாம். ஆனால் பேராண்மை அந்தப் படத்தின் அழகை கேலிசெய்வது போலவே அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்க மாணவிகளை வைத்துக் கொண்டு துருவன் எனும் பழங்குடி இளைஞன் வெள்ளைக்காரத் தீவிரவாதிகளை அநேகமாக அவன் மட்டும் தன்னந்தனியே சுலபமாக எதிர்த்து வென்று இந்திய ராக்கெட்டை காப்பாற்றும் கதை. நியாயமாக இந்தக்கதை விஜயகாந்துக்கோ, அர்ஜூனுக்கோ சேரவேண்டியது. ஜனநாதன் எப்படி இந்த வலைக்குள் சிக்கினார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த ஆக்சன் ஹீரோக்கள் செய்யாத சில வேலைகளை துருவனாக ஜெயம் ரவி செய்கிறார்.
என்.சி.சி வகுப்பில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பொருளாதாரம், உபரி மதிப்பு குறித்து மார்க்சிய அடிப்படையில் விளக்குகிறார். காட்டில் தங்கும் இரவில் மூலதனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறார். அவரது உறவினர்கள் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை பேசுகிறார்கள். அதிவேகமான சண்டைக் காட்சிகளின் நடுவில் கண்ணிவெடிக்கு எதிராக பேசும் துருவன், கூடவே பொதுவுடமை அரசியலை படிக்குமாறு அந்த மாணவிகளிடம் கேட்டுக் கொள்கிறார். தனது பழங்குடி சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் போது பச்சைத் தேயிலையின் விலையை குறிப்பிடுகிறார்.
அவரை சாதிரீதியாக இழிவு படுத்தும் மேலதிகாரி பொன்வண்ணனிடம் வீரவசனம் பேசாமல் அப்படியே அடிபணிகிறார். ஆனால் வெள்ளைநிறத் தீவிரவாதிகள் வந்ததும் பொங்கி எழுகிறார். “யார் சாதி ரீதியாக, இட ஒதுக்கீடு மூலம் தகுதி திறமைக்குறைவானவர்கள் என்று இழிவு படுத்தப்படுகிறார்களோ அவர்கள்தான் நாட்டிற்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்” என்று இயக்குநர் காட்ட முயற்சித்திருக்கிறார். விரோதியிடம் காட்டவேண்டிய வீரத்தை நண்பர்களிடம் காட்டக்கூடாது என்று தன் மவுனத்தை நியாயப்படுத்துகிறார். இன்னும் நாம் மறந்த பல மெசேஜூகள் இருக்கக்கூடும்.
நான்கைந்து மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரன்யாவில் மாவோயிஸ்ட்டுகளின் மீதும் பழங்குடி மக்கள் மீதும் இந்திய அரசு போர்தொடுத்திருக்கும் வேளையில், ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் உயிர் கேள்விக்குள்ளாக்கப்படும் இவ்வேளையில் இந்த யதார்த்தத்திற்கு புறம்பான, மாறுபாடான இந்தப்படம் மிகுந்த எரிச்சலைத் தருகிறது. தரகு முதலாளிகளின் தொழில் சேவைக்காக பயன்படும் விண்வெளி ஆராய்ச்சி இயற்கை விவசாயத்திற்கு பயன்படப்போகிறது என்ற அபத்தத்தையும் பொறுக்க முடியவில்லை. பருத்தியில் வந்த மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் வந்து பல விவசாயிகள் தற்கொலை செய்து இப்போது அது கத்திரிக்காய் வரை வந்துவிட்ட நிலையில் இந்திய விவசாயமே பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரப்பிடியில் இருக்கும் சூழ்நிலையில் “எது எதார்த்தம்” என்ற புரிதல் கூட இயக்குநருக்கு இல்லை.
ஏதோ இந்திய ராக்கெட்டை தடுப்பதற்காக சர்வதேச சதி என்று புனைகிறது இந்தக்கதை. குடிக்கும் நீர் முதல் கும்பிடு போடும் அரசியல்வாதிகள் வரையில் அனைவரும் இன்று அன்னிய நிறுவனங்களின் கையில். இந்தியாவை கூறுபோட்டு விற்பனை செய்யும் அதிகாரவர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் என்ற உண்மையான வில்லன்கள் இந்தப்படத்தில் மறைந்து கொள்கிறார்கள். ஏதோ ஹாலிவுட் 8பேக் வயிற்றுடன் நவீன ஆயுதங்களுடன் வருகிறார்கள் வில்லன்கள். நாயகன் மட்டுமல்ல, வில்லன்களின் சித்தரிப்பும் செயற்கை.
அடுத்து இட ஒதுக்கீடு பெற்று அரசு வேலைகளில் செட்டிலானவர்கள் பலரும் தமது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதையும் பிடுங்குவது இல்லை. பண்பாட்டு ரீதியாக பார்ப்பனமயமாக்கத்திலும், சிந்தனை ரீதியாக ஆளும் வர்க்க அரசியலிலும் இவர்கள் உருமாறி, தம் மக்களுக்கே எதிரானவர்களாக நடந்து கொள்ளும் போது, அவர்களை தேசபக்தர்களாக காட்டுவது ஃபார்முலா கதையின் இன்னொரு வடிவம்.
கோடம்பாக்கத்துக்கு வரும் பலர் முற்போக்கு கருத்துக்களை இதயத்தில் வைத்து மக்களுக்கான படங்கள் எடுப்பேன் என இயக்குநர் ஆவதற்கு முன்பு வரை பேசுகின்றனர். பேசிவிட்டு பின்பு அந்த தொழிலின் ஜோதிக்குள் ஐக்யமாகின்றனர். பின்னர் ஃபார்முலாவின் தவிர்க்க இயலாமையை நியாயப்படுத்துகின்றனர்.
ஜனநாதனும் அப்படித்தான். தமிழ் மக்களின் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டுவதற்கு கூட யாரும் தயாராக இல்லாத நிலையில் இத்தகைய முற்போக்கு படிமங்களே பலருக்கு பாலைவனச் சோலையாக தெரிகிறது. ஆனாலும் அந்த சோலையில் நீர் இல்லை. ஏனென்றால் ஃபார்முலா என்பது பிளாஸ்டிக் சோலை. அதில் ஊறுவது உண்மைத் தண்ணீராகவே இருந்தாலும் அது கானல் நீராகவே மாறும்.
இந்த படத்திற்கு தோழர்கள் மதிமாறனும், சுகுணா திவாகரும் பொருத்தமான விமரிசனங்களை எழுதியிருக்கிறார்கள் என்பதால் இங்கே வினவு வழக்கமாக எழுதும் விரிவான விமரிசனம் இல்லை. ஒருவேளை அந்த தோழர்கள் எழுதியிருக்கா விட்டாலும் இதற்குமேல் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.
இந்தியா என்றால் விவசாயிகளும் கிராமங்களும்தான் என்றெல்லாம் படத்தில் உரையாடல் வந்தாலும், இறுதியில் தீவிரவாதி, ராக்கெட், இராணுவம் என்று ஆளும் வர்க்கம் தூக்கிபிடிக்கும் இந்தியாதான் கதையமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தும் இந்திய தேசபக்தி போற்றிக் கொண்டாடப்படுகிறது.
அதிகாலையின் அமைதியில் திரைப்படத்தில் வரும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கப் பெண்கள், “பாமரனான” அந்தக் கம்யூனிஸ்டு இராணுவ அதிகாரியின் மீது மதிப்பே இல்லாதவர்கள். நாஜிப்படைக்கு எதிரான போரில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும், தன்னல மறுப்பும் அவர் பால் அந்தப் பெண்களின் இதயத்தில் தோற்றுவிக்கும் நேசம், அதன் ஊடாக அவர்களிடையே மலரும் உறவு, அந்தக் கூட்டுத்துவ உறவின் வலிமையில் வெளியில் தெரியாத இழையாக ஊடாடும் நாட்டுப்பற்று..! இதுதான் அந்தப் படத்தின் அழகு, வலிமை!
பேராண்மையின் நாட்டுப்பற்று போலியாக இருப்பதால், அது பாரதமாதாவுக்கு தீபாரதனையாகி விடுகிறது. இயக்குநர் ஜனநாதன் விசமக்காரர் அல்ல. ஃபார்முலாவை மீற முடியாது. இனிப்புக்குள் எப்படி மருந்தை வைப்பது என்பதுதான் பிரச்சினை என்று அவர் சிந்தித்திருக்கிறார். அரசியல் என்பது நோயாளிக்கே தெரியாமல் நோயாளியின் தொண்டைக்குள் இறக்கப்படும் மருந்து அல்ல. நோயாளி, அதாவது ரசிகர்கள் எதை சுவைக்கிறார்களோ அதுதான் அவர்களுக்குப் போய்ச்சேருகிறது. தணிக்கையில் வெட்டியது போக ரசிகனுக்கு போவது வரை இலாபம் என்ற கணக்கு மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்க்கப் பயன்படாது.
படிக்க
indha alavilavadhu padam edukka oruvar mun vandhu ullar avarai parata villai endralum igalla vendam. thakkali ungalluku ellam perrarasu padam thanda layakku.
mooditu poda
its right but wt i say?jayamravi dt speak against ponwanan it is only problem other wise movie is goooooooooooooooooooooodddddddddddddddd
please change ur character or dont publish like that, please..becoz this movie better than vijay ,ajith movie and tamil industry movies..
இதை ஒரு தேசபக்தித் திரைப்படமாக பொதுமக்கள் சிலரும் புரிந்து கொள்வது கவலையே.
எனக்கென்னவோ துருவனின் தேசம் சார்ந்த கருத்துகள் இந்த மண், மக்கள், அவர்களின் முன்னேற்றத்தைக் காப்போம் என்பதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஒன்றியம் என்ற அதிகார அமைப்பைக் காப்போம் என்று புரிந்து கொள்ளவில்லை.
சாதி குறித்த விமர்சனங்களை தணிக்கை செய்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிகிறது. தணிக்கை செய்யாமல் விட்டால், தங்கள் சாதியை அவமானப்படுத்தி விட்டதாக யாரும் வழக்கு போட்டாலும் வியப்பதற்கு இல்லை.
தன்னை அடக்கியாளும் அதிகாரியை எதிர்த்தோ வேலையை விட்டோ துருவன் போராடி இருக்கலாம். ஆனால், அதிகார அமைப்புக்குள் இருந்து தன் மக்களுக்கு சில நன்மைகளைப் பெற முயன்றிருக்கலாம். (கல்வி, பாதுகாப்பு, இருப்பிட உறுதி போல..)
இயக்குநரின் முதற் படம் இயற்கை மிக அருமையானது. ஆனால், அவ்வளவாக ஓடவில்லை. எனவே, வணிக சமரசங்களுக்கு உட்பட்டு தன்னால் இயன்ற வரை இந்தப் படத்தில் தன் கருத்தைச் சொல்லி இருக்கிறார். இந்த மாதிரி படங்களில் logic பார்க்காமல் பாராட்டுவது நன்று.
ரவி,
வடகிழக்கை தவிர்த்து பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மத்திய இந்தியாவின் தண்டகாரன்யாவில் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றதற்காகவும், விற்பதற்காகவும் அந்த மண்ணின் மைந்தர்களை விரட்டுவதற்கு இந்திய அரசு துடிக்கிறது. அதனாலேயே மாவோயிஸ்ட்டுகளுடன் போர் என அறிவிக்காமலேயே போர் நடத்தப்பட்டு வருகிறது. பேராண்மை படம் இத்தகைய ஜீவாதாரமான பழங்குடி மக்களின் பிரச்சினையை பேசவில்லை, புளித்துப் போன அர்ஜூன், தீவிரவாத ஃபார்முலாவில் மையம் கொண்டிருக்கும் இந்தக்கதையின் செருகலாக வரும் முற்போக்கு கருத்துக்கள் யாருக்கும் போய்ச்சேராது. அது இயக்குநரின் ஆசையாக மட்டுமே இருக்கும். துருவன் இந்திய மக்களின் முன்னேற்றத்தை குறித்தே கவலைப்படுவது உண்மை. ஆனால் படத்தில் செயற்கையான இந்திய நாட்டுப்பற்றே ரசிகர்களிடன் சென்றடைகிறது. உண்மையான இந்திய பற்றை காட்ட வேண்டுமென்றால் இருக்கும் இந்திய அமைப்பை பொருத்தமான விமரிசிக்க வேண்டும். அதற்கு இடம் கொடுக்காதபடி கதையின் மையம் கற்பனையான தீவிரவாதத்தில் சிக்குண்டிருக்கிறது. சாதியம் குறித்த விமரிசனம், அதிகாரவர்க்கம் குறித்த விமரிசனம் எல்லாம் படத்தில் இருந்தாலும் அவையெல்லாம் கொசுறு போல ஒட்டிக்கொள்கிறதே அன்றி அந்த பிரச்சினைகளின் ஆழத்திற்குள் கதை செல்லவில்லை. இயக்குநர் மையமாக என்ன கதை என்பதில் வணிகரீதீயாக யோசித்துவிட்டு சில முற்போக்கு விசயங்களை மட்டும் ஒட்டாமல் பேசுவதில் பயனில்லை என்பதே எங்கள் எண்ணம். மற்றபடி இந்தப்படத்தின் லாஜிக் மீறல் குறித்து விமரிசிக்கவில்லை. படத்தின் கதையே செயற்கையாக இருக்கும் போது நாயகனும், வில்லன்களும் யதார்த்தமாக இல்லாதபோது அதைப்பற்றியே விமரிசித்திருக்கிறோம்.
மற்ற இயக்குநர்களைப்போலவே ஜனநாதனும் தமிழ் சினிமா ஃபார்முலா என்பதை எற்றுக் கொண்டிருக்கிறார். இதில் மாற்றம் வராத போது சினிமாவில் மட்டும் எப்படி மாற்றம் வரும்? படத்தில் ஆபாசமான ஜனரஞ்சக அம்சங்கள் இல்லையே அன்றி சாதாதரண இரசிகனை கண்க்கில் கொண்டே பெரும்பாலான அம்சங்கள் ஜனரஞ்சகமாகவே இருக்கின்றன. இந்தப்படம் இரசிகனுக்கு புதிய சுவையை அறிமுகம் செய்யவில்லை. அவன் ஏற்கனவே எதற்கு சுலபமாக பழக்கப்பட்டிருக்கிறானோ அந்த சுவையைக் குறிவைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது.
//உண்மையான இந்திய பற்றை காட்ட வேண்டுமென்றால் இருக்கும் இந்திய அமைப்பை பொருத்தமான விமரிசிக்க வேண்டும்.//
வெளிப்படையாக முழுக்க முழுக்க இப்படி எடுத்தால் தணிக்கையைத் தாண்டுமா? காற்றுக்கென்ன வேலி போன்ற திரைப்படங்களுக்கே தடை விதித்தார்கள்.
அல்லது மிக நுணுக்கமான மறைமுக விமர்சனங்கள் இருக்க வேண்டும். இப்படி இருந்தாலும் போய் சேருமா என்பதும் சந்தேகமே.
//ஆனால் படத்தில் செயற்கையான இந்திய நாட்டுப்பற்றே ரசிகர்களிடன் சென்றடைகிறது.//
//இயக்குநர் மையமாக என்ன கதை என்பதில் வணிகரீதீயாக யோசித்துவிட்டு சில முற்போக்கு விசயங்களை மட்டும் ஒட்டாமல் பேசுவதில் பயனில்லை என்பதே எங்கள் எண்ணம்.//
அப்படி முற்றிலும் புறக்கணிக்க முடியாது. படம் பார்த்த பலரும் இட ஒதுக்கீடு, மலை வாழ் மக்கள் வாழ்க்கை நிலை பற்றி சிறிதேனும் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
இது போன்ற திரைப்படங்கள் இன்னும் தீவிரமான படங்களுக்குத் துவக்கமாக இருக்கட்டுமே என்றே எதிர்பார்க்க முடிகிறது.
த.மு.எ.ச ஜனநாதனை பாராட்டியதால் வந்த காண்டோ? வினவு அவர்களே அன்பே சிவம் ,பேராண்மை போன்ற படங்களை வரவேற்க வேண்டும்
hi ..first ninga solrathu ellam correct than , but cinema enkira business la jananathan mathiri etho konjam try panni ,jathi pathi ,multi national companies pathi, communism pathi solrathukku alunga irukangale santhosa padunga, illa jananathan vachi ninga oru film produce pannunga oru stronga message sollunga,,arun pandian than producer avar onnum kena illai ..itha ellam thandi padam hit.. so ninga vinavu irunthu oru documentry vathu eduthu sollunga ,… ninga enn china problem ellam inga discuss pannurathu ilaa ..arunchal chinava unga point of view.. communism pathi padikiratholye allathu intha mathiri eluthurathu allye communism valaranthu vidathu ..makkalukkaka poradanum..vara vara ningalum bjp mathiri palaya ramar koil pathi pesi kanam poidanthinga..
நண்பரே
வாதம் செய்தால் உங்களை வெல்ல யாராலும் முடியாது, ஏன் உம்மை போன்றவர்களை யாராலும் வெல்ல முடியாது,
எந்த விசயமாக இருந்தாலும் அதில் உள்ள பாஸிடிவை எடுத்து கொண்டு தீயவற்றை சுட்டிகாட்டுதல் என்பது இயல்பான விமர்சனம். மன்னித்து கொள்ளுங்கள் அது இல்லை உங்களிடம்
மிக மிக ஆழமாக சிந்திக்க தெரிந்த உங்களுக்கு பாஸிடிவ் மனநிலை இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டி காட்டுகிறேன் . . நீங்கள் சுட்டிகாட்டிய கருத்துக்கள் எதுவுமே மறுக்க கூடியது அல்ல . . விவசாய வளர்ச்சிக்காக இராக்கெட் என்பது அபத்தம் என்பது எல்லாருக்கும் தெரியக்கூடியதே, ஒற்றை மனிதனாக ஒரு தீவிரவாத கும்பலை கொன்று விடுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல, அதே சமயத்தில் பொழுது போக்கிற்காக சினிமா என்பதும் அதில் சின்ன சின்ன குறைகள் இருக்கும் என்பதையும் ஏன் ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது
“வாடி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா”
“என்னத்த சொல்வேனுங்க வடுமாங்க ஊறுதுங்க”
போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த சினிமா பாடல்களை கொண்ட சினிமாவும், குத்து பாட்டே தேசிய கீதமாக கொண்ட சினிமாக்களும் வரும் காலகட்டமாகி விட்ட இந்த சினிமா உலகின் மாற்றங்களை இயன்ற அளவு சுட்டிகாட்டும் சில பல சினிமாக்களை வரவேற்பதின் மூலமே கொஞ்சமேனும் மாற்றம் உருவாகும் அப்படி இல்லாத
குற்றமே கண்டு கொண்டிருப்பதுதான் உங்கள் வேலை எனில் அதிலும் தவறில்லை தொடர்க
இறுதியாக ஒன்று
நிறைகளை பாராட்டி குறைகளை சுட்டிகாட்டுவதுதான் எழுத்தாளனுக்கு அழகு
அதில் குறை இருந்தால் அது அவனது மனதின் கண்ணாடியாகிவிடும் ,. . . .
நன்றி
நெல்சன்,
இந்தப் படத்தைப்பற்றி மையமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை வைத்தே பாசிட்டிவ், நெகட்டீவ் பேசமுடியும். எங்களது விமரிசனங்கள் படத்தை முழுமையாக அணுகி முன்வைக்கப்பட்டுள்ளது. எப்படியும் குறை சொல்லியே ஆகவேண்டுமென்பதற்காக விமரிசிக்கவில்லை. ஒரு படத்தில் ஆபாசங்கள், குத்துப்பாட்டு இல்லை என்பதற்காகவே அது நல்ல படமாக இருக்கவேண்டும் என்று விதியிருக்கிறதா என்ன? அப்படிப்பார்த்தால் சன் டி.வியின் சீரியல்களில் கூட ஆபாசமோ, குத்துப்பாட்டுக்களோ ஏன் ராமநாராயணனின் பக்திப்படங்களில் கூட அவையெல்லாம் இடம்பெறுவதில்லை என்பதால் அவற்றை வரவேற்கமுடியுமா? பேராண்மையின் மையக்கரு தமிழ் படங்களின் செயற்கையான தேசபக்தி ஃபார்முலாவில் அடங்கியிருக்கிறது. இதற்குள்ளாக இயக்குநர் சில நல்ல விடயங்களை கூற முயற்சித்திருக்கிறார். அவை வெற்றி பெறவேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான மையக்கதை வேண்டும். அது இந்தப்படத்தில் இல்லை. எனவே பாசிட்டீவாக சொல்வதாக இருந்தால் முற்போக்கு கருத்துக்கள் இடம்பெறுவதற்கு உண்மையான வாழ்க்கை பற்றிய பார்வையை இயக்குநர் வளர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது அதை சொல்லத் துணியவேண்டும். அந்த அடிப்படையில் மாற்றம் வராமல் சில அறிவுரைகளை மட்டும் வைத்து இந்த பழங்குடி ராம்போ படத்தை மதிப்பிட முடியாது.
வினவு தங்கள் கருத்து சரியே உங்களிடத்தில் இருந்து பார்க்கும்போது . அனால் கோவில் எங்களை போன்ற சிற்றறிவு உள்ளவர்கள் குறைந்த பட்சம் மர்கிசம் என்னவென்று தேடுவதற்கு இது போன்ற திரைப்படங்கள் எவ்வாறு தூண்டுதலாக இருக்கிறது என்று உங்கள் தோழர்களை கேளுங்கள் .இங்க எவ்ளோவோ நபர்கள் மர்கிச புத்தகங்கள் படிக்கமுடியாது என்று தூகிப்போட்டவர்கள் .இப்பொழுது அதை தூசிதட்டி வழிகாட்டுதலுடன் படிக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்
கோவை என்பது தவறாக கோவில் என்று மொழிந்து விட்டேன் மன்னிக்கவும்
மேலும் எங்களுக்கும் இதில் சில முரண்பாடுகள் உள்ளது ஆனால் என்ன செய்ய இங்க இத செய்வதே பெரிய புரட்சியா இருக்கு அதையும் மீறி குறைந்த பட்சம் இம் மக்களுக்காக ஜனா இதையாவது சிந்திதனே என்கிரவிததில் தான் நான் பார்கிறேன் இது என் கருத்து மட்டுமே
வினவு நிலவுகின்ற சமூக அமைப்பில் மக்கள் எதை பாக்க வேண்டும் என்பதை
முர்டோச்சுகளால் தான் தீர்மானிக்க படுகிறது தமிழக ஊடகங்களோ
தமிழ் தேசியம் பேசியே தமிழர்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த
அயோக்கியர்கள் கையில் (சூரியன் மறையா ஊடக உலகத்திற்கு
சொந்தகாரர்கள்) இது போன்ற சுழலில் குறைந்த பட்சமாக
ஒரு மாற்று படம் தான் இது ஆனால் அயங்கரன் போன்ற பன்னாட்டு நிறுவனகளின் பணத்தில் இதையாவது சொன்னது சாதனைதானே இங்கு பார்பன பகுத்தறிவாளி கமலும்
தமிழ் நாட்டின் “முற்போக்கு ” எழுத்தாளர் மனங்கெட்ட புத்திரன் மன்னிக்கவும்
மனுஷய புத்திரனும் ஏற்றும் எரிச்சலில் இருந்து ஒரு சின்ன மாறுதல்
அவ்வளவே சிறிய மாற்றங்கள் தானே தொடக்கம் பெரிய மாற்றங்களுக்கு
மேலும் இங்கு வினாவை விமர்சித்து இருக்கும் சில அறிவிலிகள் போல
நான் வினவை திரைபடம் எடுத்து காட்ட சொல்ல மாட்டேன் காரணம்
உங்கள் கலை நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் வினவை வினவிய
இந்த அதி மேதாவிகள் தெருவில் என்ன கூட்டம் கண்டாலும்
கண்ணை பொத்திக்கொண்டு போகும் “தன்னலமற்ற சமூக சிந்தைவாதிகள் தான்”
உங்களை A/C hallil திரைபடம் போட்டு காட்ட சொல்லுகிறது ….
அந்த நாய்களின் ஊளையை விட்டு தள்ளுங்கள் இனிவரும் காலங்களில்
உங்கள் பயனுள்ள விமர்சனங்கள் வெளிவரட்டும்
nattu ptru pathi ninga pesave kodathu ..kasu vangura varaikum than porattam makkal.. athuku appuram ninga odirvinga ,tutucorin sterlite, nellai coke factory, tamira parani thanni varaikum ninga onnum congress or bjp different ana allunga illai..
நச்.
ரவி அண்ணா,
மணிரத்னம் பாணியில “இரண்டு எழுத்துல” விமர்சனம் சொல்றீங்க! பதிவு பல விசயங்களை விளக்கி எழுதி இருக்காங்க! எல்லா கருத்துகளையுமே ஏத்துகிறீங்களா! புரியல! விளக்குங்களேன்.
அண்ணே வேற வளியில்ல
பேசாம மகஇக சார்பா ஒரு தமிழ்ப் படம் எடுத்துட வேண்டியதுதான்…
film is superb
நாகராஜ்,
மக்கள் பிரச்சனைகளை மையம் கொண்டு, மக.இ.க. சார்பாக இரண்டு மூன்று குறும்படங்கள் அல்லது டாக்குமென்ட்ரி எடுத்திருக்கிறார்கள். வாங்கி பார்த்து விட்டு விமர்சியுங்கள்.
பிறகு, அமைப்பின் வளர்ச்சியில் எதிர் காலத்தில் நல்ல தரமான படமும் எடுப்பார்கள். அதுவரைக்கும் எந்த படத்தையும் விமர்சிக்க கூடாது என சொல்லமாட்டீர்களே!
மோகன்..
தாமிரபரணிக்கும், ஸ்டெர்லைட்டுக்கும் போராடுவதற்கு மக்கள் கலை இலக்கிய கழகம் வந்து மக்களை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு போராட்டத்தை பாதியில் கைவிட்டதால், அந்த ஏமாற்றத்தை சகிக்க முடியாமல் ஏற்கெனவே போராட்டத்தில் தீவிரமாக இருந்த மக்கள் பின்வாங்கி விட்டார்களா.. இந்த மாபெரும் உண்மையைக் கொஞ்சம் விளக்க முடியுமா..
மற்றபடி பிஜேபி உடன் எப்படி ஒப்பிட்டீர்கள். அதுவும் ஜகநாதனின் இந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவு படத்துக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டு.. நல்ல படத்த எடுக்கணும் இல்லாட்டி பேசக் கூடாது அப்படின்னு கூட நீங்க சொல்லலாம். ஒரு கலைவடிவம் அதன் உருவாக்கத்திலுருந்து பார்வையாளர்களை சென்றடையும் வரை எதிரிகளின் கையில் இருக்கும் போது நாங்களும் எப்படியாவது பாராளுமன்றத்தில் பேசி சரிக்கட்டி புரட்சியை நடத்த முடியாதுதானே.. சீனாவை கம்யூனிச அல்லது சோசலிச நாடு என இன்றைய காலகட்டத்தில் நாங்கள் மதிப்பிடாத போது நீங்கள் ஏன் இப்படி எங்களிடம் கேட்கின்றீர்கள். புரியவில்லையே…
நெல்சன்..
நிறைகளையும் குறிப்பிட வேண்டும் எனச் சொன்னீர்கள். ஆனால் நீங்களே குத்துப்பாட்டு உள்ள படங்களை மொத்தமாக குறை கூறுகிறீர்கள். உங்களுக்கு மட்டும் ஒரு நியாயமா.. மற்றபடி இந்தப்படம் ஒரு நல்ல நாவலை குதறி அர்ஜூன் படமாக்கியதை எப்படி சகிக்க முடியும். மலத்தில் செறிக்கப்படாத கனி வந்த்தற்காக எடுத்து சாப்பிடவா முடியும்… அப்புறம் விமர்சனம் மாற்றங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரு நல்ல கலைஞன் கூரிய விமர்சனங்களுக்காக சுருண்டு கொள்வதோ, அல்லது தனது முன்முயற்சியை பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதோ அவனது ஆளுமைக்கு அழகல்ல•.
ரவி..
நீங்கள் முற்போக்கை சொன்னால் சென்சாரில் பிடித்துக் கொள்வார்கள் என்பதற்காக பயப்படுகின்றீர்கள். தேர்ந்த கலைஞனும், சமூகப் பற்றும் உள்ள ஒருவன் ஒரு அதிகாரவர்க்க சட்டாம்பிள்ளையை சட்டவழிப்படி ஏமாற்றுவது ஒரு டெக்னிக்கல் மேட்டர். இதனை செய்வது பிரச்சினையில்லை. மாறாக எப்படி படம் எடுத்தால் ஓடும் என வழிகாட்டும் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் பிரச்சனைதான் முதன்மையானது எனக் கருதுகிறேன்.
மற்றபடி ஜெகநாதன் தேசியம் பற்றிய குழப்பம், ஒரு நாவலை படமாக்க கலைப்படைப்பை மண்ணுக்கேற்ற சூழலுக்கேற்ற வடிவத்தில் மாற்றீடு செய்ய முயன்று தோற்றது, எல்லாக் கருத்துக்களையும் ஏதோ ஒரு தடவையாவது சொல்லி வைக்க வேண்டும் என்ற அதீத குழந்தமைத்தனம்.. இப்படி நிறைய சொல்லலாம். எதற்கும் அந்த ரசிய நாவலை ஒரு முறை படியுங்கள். அதற்கு பிறகு நீங்கள் இவர்களை விட அதிகமாக விமர்சிக்க முன் வருவீர்கள் என நம்புகிறேன்.
thavarana kannottam – wrong analysis
i expect the correct analysis from kathir
Dear Vinavu,
I do accept this film is glorifying the pseudo national sentiments and etc etc.But it is a better film than the films which we come across in tamil. then pls come up with some great indian films atleast….(which you consider as a true revolutionary film) i am asking seriously because i am not that much aware of that… if you know pls share….
//.(which you consider as a true revolutionary film) //
தமஸ் என்று ஒரு படம்…. முடிந்தால் பாருங்கள்
வினவு நீங்கள் இந்த படத்தை விமர்சிப்பது வேதனைதான் தருகிறது. இன்னும் நமது நாட்டின் மக்களின் மனங்களின் எதார்த்த நிலையை நீங்கள் புரிந்து இருக்கவில்லை என்று சொல்கிற அளவுக்கு எனக்கு அறிவு தகுதி இல்லை தான்.ஆனால் நீங்கள் மக்கள் என்றால் சோவியத் மக்கள்தான்,சீனா தான்.படங்கள் என்றால் சோவியத் படங்கள் தான் என்ற நினைப்பில் தான் இருக்கிறீர்கள்..ஆனால் நம்நாட்டு மக்கள் அந்த அளவுக்கு இல்லைங்க அய்யா.சட்டமும் அப்படி இருக்கவிடாது.அப்படி என்றால் போராட வேண்டியதுதான் என்பீற்கள். எண்ணங்களே அடிமையாக இருக்கும் போது,என்னையே நான் யார் என்று தெரியாதபோது எதை நோக்கி போரட முடியும். நீங்கள் எல்லாம் அறிவி ஜீவிகள் நீங்கள் சொல்வதுதான் உண்மை. அப்படியே நம்பிவிடவேண்டும்.தேசியத்தை நீங்கள் எடுப்பிற்கள்,ஆனால் அதே கொள்கையுடன் மற்றவர்கள் எடுத்தால் தவறு. கம்யுனிஸ்ட்டுகள் என்றால் நாங்கள் தான்.வேறு யாரும் கம்யுனிஸ்ட்டுகள் கிடையாது,போலிகள்.நீங்கள் ஒன்றை செய்தால் தந்திரம்.மற்றவர்கள் செய்தால் அது பிற்போக்குதனம்,பின்நவினத்துவம். நல்ல விமர்சனம். படத்தை பார்த்தவர்கள் படம் நல்லவே இல்லை என்று சொல்பவர்கள்.அதிகாரவர்கத்கம் தான்.நீங்கள் ஒரு உண்மையான சோசியலிச படம் எடுத்துபார்ருங்க.படம் தடைசெய்யப்பட்டுவிடும்.நிலைமை இப்படி.
மக்களுக்கான படத்தை எடுக்க முடியலைன்னா பேசாம … போக வேண்டியது தானே. என்ன எழவுக்கு இந்திய தேசிய கருமாந்திர தேச பக்தியை வாந்தி எடுத்து தொலைக்க அழகான சோவியத் படத்தை கையில் எடுத்துக்கொண்டு அசிங்கப்படுத்த வேண்டும் ?
அந்த சோவியத் படத்தை கண்டபடிக்கு நாய் மாதிரி கடித்து குதறி வைக்க அந்த படத்தை என்ன ஜெகனாதனோட மாமா எடுத்தானா மச்சான் எடுத்தானா, அந்த படத்தின் மீது அந்த ஆள் கை வைத்ததற்காகவே அந்த ஆள் மீது கேஸ் போட வேண்டும்.
ரூபகாந்தன் அவர்களே,
நாங்கள் ஒன்றும் உங்களை மார்க்சிய படத்தை எடுக்கச்சொல்லவில்லையே. விஜய்ன்னு ஒரு வெந்த வாயன் இருக்கானே அவனைப்போலவோ இல்லை இன்னொரு வெங்காயம் இருக்கானே அவனைப்போலவோ எந்த எழவையோ எடுத்துட்டு போங்க நாங்க அதையெல்லாம் விமர்சிக்க மாட்டோம். நாங்க என்னைக்காவது விஜய் படத்தையோ எஸ்.ஜே சூர்யா படத்தையோ விமர்சித்து நீங்க பார்த்திருக்கீங்களா, அப்படி எடுத்துட்டு போங்க நாங்களும் எங்க வேலையை பார்த்துட்டு போவோம். அதை விட்டுவிட்டு முற்போக்கு, மார்க்சியம் என்கிற பெயரில் இந்திய தேசபக்தி என்கிற மலத்தை காட்டினால் நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம், விருப்பம் இருந்தால் படிங்க அதில் தவறு இருந்தால் விமர்சனம் செய்யுங்கள், நீங்கள் படத்தை பற்றிய விமர்சனத்தை பற்றி விமர்சனமாவே எதையும் சொல்லவில்லை மாறாக ஆதங்கப்பட்டு அங்கலாய்த்துகொண்டுள்ளீர்கள்.
அருமையான பதில் தோழர்!
வினவு இந்திய தேசியத்தைப்பற்றி நீங்கள் சொல்லும்போது சிரிப்புதான் வருது.தேசியத்தை மறுத்து சர்வதேசியத்தை நோக்கிய ஒரு போராட்டத்தை நீங்கள் வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டுங்கள்.அட நீங்களே மாக்சிய லெனினிஸ்ட்களே
இங்கு ஆயுதம் ஏந்திப்போராடியதே தேசியத்தை நோக்கிதானே. இந்த படம் சோஸியலிச நாட்டில் இருந்து வரவில்லை.
சோசியலிச புரட்சி ஏற்ப்பட்ட பிறகு நீங்கள் எதிர்பார்த்த படங்கள் வேண்டுமானாலும் வரும்.இப்பொழுது பார்ப்பனர்கள் ஆட்சி நடந்துவருது அய்யா.இங்கு எங்களுக்கு கொடுக்கர ஜனநாயகத்தின்படி,சுதந்திரத்தின்படி தான் நாங்கள் கருத்து சொல்லமுடியும்.ரஜினி சிவாஜி படத்தில் சொல்வானே, இப்படி இருந்த ஊரை இப்படி மாத்தப்போரம் என்று அப்படிதான் இருக்கிறது உங்கள் மாக்சியபார்வை.சந்தேகங்களே உங்கள் வேலை.ஏன்னென்றால் ஸ்டாலின் பிள்ளைகளாச்சே பிறகு அப்படிதான் நடந்துகொள்விர்கள்.ஆனால் உண்மையான மாக்சியவாதிக்கு தெரியும்.சோவியத்யூனியன்வீழ்ச்சுக்கு காரணமே ஸ்டாலினும்,அவர்கள் தோழர்களும் தான்.ஏன்னென்றால் அவரின் செல்லபிள்ளைதான குருவிச்சேவும்,கோர்பச்சேவும்.
பிறகு ஆதங்கப்பட்டு அங்கலாய்த்துக்கொள்வதற்கு இங்கு ஒன்றுமே இல்லை தோழரே.காட்டில் ஒரு போராட்டம் என்றால் அது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போரட்டம் என்று சொல்கிற உங்களை என்ன சொல்வது. முன்னேற்றமோ,மாற்றமோ,வளர்ச்சியோ,சீர்திருத்தமோ,சிறிது சிறிதாக மாறவேண்டியது,மாற்றப்படவேண்டியது.
இந்த படத்தில் சோசியலிசத்திற்கு எதிராக என்ன சொல்லப்பட்டது.மலைவாழ்மக்களுக்கு எதிராக எந்த காட்சி இருக்கு சொல்லுங்கள். எதை செய்தாலும் அதை குறைக்கூடுவதே உங்கள் வேலை.
தோழர் ஸ்டாலினை பற்றி முதலாளிகள் எடுக்கும் வாந்தியையே மீண்டும் வாந்தி எடுக்கும் நீ சோசலிசத்தை பத்தி எல்லாம் நீ பேசாத ரூபகாந்தா.
பார்ப்பனர்கள் ஆட்சி நடந்து வருது எனவே அவன் கொடுக்கிற ஜனநாயகப்படி தான் படம் எடுக்க முடியும் என்கிறாய். சரி அந்த லட்சணமும் எப்படி இருக்கிறது ? மொத்த படமுமே அவனுக்காகவே அவனுடைய பார்முலாவிலேயே தான் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை பார்த்து யாராவது கம்யூனிசத்தை கற்பார்களா ? இந்தியா மீது போலி தேசபக்தியை தான் இந்த படம் உருவாக்குகிறது.
இப்படி எல்லாம் படம் எடு எடுன்னு உங்களையெல்லாம் யாரு இங்க கேட்டாங்க.
மலைவாழ் மக்களை பற்றியும் பேசுறீஙளா.
உங்களை மாதிரி ஆளுங்களுக்கு மதிமாறன் ஒரு சாட்டையடி பதிவை எழுதியுள்ளார் போய் படிப்பா.
http://mathimaran.wordpress.com/2009/10/29/article-248/
பெரியார்ஸ்டாலின்// நீ பேசாதப்பா பார்ப்பனியம் தான் தெரியுது.
தம்பி ரூபகாந்தா பார்ப்பனியம் எங்கே தெரியுது ? பார்ப்பனீய இந்திய தேசியத்தை ஆதரிக்கும் படத்தை நீ தான் தலையில் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருக்கிறாய், எனவே பார்ப்பனீயம் உன்னிடம் தான் வழிகிறது. போ போ போய் தொடைச்சிக்க…
வெளிநாடுகளில் உள்ள மக்களது மனத்தை அறிகின்ற அளவுக்கு நமக்குள் புரிதல் இல்லைதான். நீங்கள் புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனம் அல்லது எண்ணங்களே அடிமையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அடிமைத்தனம் இவ்வாறு எங்கும் நிரவி உள்ள இடத்திலிருந்து அடிமைத்தனத்திற்கு கட்டுப்பட்ட புதிய கருத்துக்கள் எப்படி முகிழும் என எதிர்பார்க்கின்றீர்கள். ஒரு வேளை பெரியார் இப்படி யோசித்து இருந்தால் அவர் நிச்சயமாக கோவில்களில் கதா கலாட்சேபம் பண்ணி ஐயர்களை மெதுவான முறையில்தான் திருத்தியிருப்பார். உங்களுக்கு புரிந்த அளவுக்கு அவருக்கு புரியவில்லை என நினைக்கிறேன்…
இரண்டாம் உலகப்போரில் தேசியத்தை முதலில் ஹிட்லரும் பிறகு ஸ்டாலினும் எடுத்து இருப்பதால் இரண்டும் ஒன்றுதான்.. ஆகவே இரண்டு பேரும் பாசிஸ்டுகள் எனச் சொல்ல முடியுமா… நிற்க•. ஸ்டாலின் மீதான உங்களது விமர்சனத்தை சொல்லத் துவங்குவதற்குள் ஏன் அவசரமாக முடிவுகளை சொல்கின்றீர்கள். இந்த அவசரமாக அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற ஜெகநாதனின் முயற்சிதான் ஒரு நல்ல நாவலை அர்ஜூன் படம் பொல ஆக்கியுள்ளது உங்களுக்கு புரியவில்லையா..
மக்களுடைய தரத்தை காரணமாக கூறுகின்றீர்கள். குத்தாட்டம் போட்டால்தான் படம் பார்க்க வருவோம் என முதலில் மக்கள் சொன்னார்களா அல்லது சினிமாக்கார்ர்களின் வியாபார உத்தியா… கொஞ்சம் நேர்மையாக யோசித்தால் மக்களை கீழ்மைப்படுத்திப் பார்க்கும் இழிந்த புத்தியில் இருந்து நீங்களும் இப்படி நீண்ட காலமாக பேசிவரும் சினிமாக்கார்ர்கரும்ஃ வெளியே வந்து விடலாம்.
படம்பார்த்த அதிகாரவர்க்க நபர் யார் இதனை எதிர்த்தார்கள் எனச் சொல்ல முடியுமா…
சர்வதேசியத்திற்காக கடந்த நூற்றாண்டில் ஸ்பெயினில் ஜனநாயகத்திற்காக நடந்த போராட்டம், பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள், இந்த நூற்றாண்டில் கூட புஷ்க்கு எதிரான போராட்டங்கள், உலகமயமாக்கலுக்கு எதிராக உலகம் முழுவதும் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள், ஆப்கன்,ஈராக், வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போராட்டங்கள்… என விவரித்தால் நீண்டுகொண்டே செல்லும்.. இதில் தேசியம் எங்கே வருகிறது. இந்தியாவில் எதிரி ஒரு கட்டமைப்பை வைத்திருக்கிறான் அதற்கு எதிராக போராடுவதை சர்வதேசியம் கிடையாது என்பது முழுமையில் இருந்து பார்க்காத அரசியல். அப்பார்வை குறைபாடு உடையது.
திரும்பி திரும்பி காம்மடி பண்ணாதிங்க.அய்யா ஏகாதியபத்தியத்திற்கு எதிரான போராட்டம் எல்லாமே தேசியத்தை ஆதரிக்கும் போராட்டம் தான்.ஜார்ஜ் புஸ்சுக்கு எதிரான போராட்டம் பெரும்பாலும் முஸ்லிம் மக்களும்,கம்யுனிஸ்ட்சுக்கள் நடத்திய போராட்டங்கள்தான்.இவை எல்லாமே தேசியத்தை சார்ந்தது அய்யா.
ஸ்டாலினைப்பற்றி சொல்கிறீர்கள். எனக்கும் தோழர் ஸ்டாலின் மீது பற்று உள்ளது. அது சர்வதிகாரத்துக்கு எதிரானப்போராட்டத்தில்,ஆனால் சோசியலிசத்தில் அதாவது பொருளாதாரவாதத்தை எடுத்த ஸ்டாலின் கம்யுனிசத்திற்கே ஆப்பு வைத்தது. சோவியத் யுனியனின் வீழ்ச்சியில் தெரியவில்லையா? மாக்சியம் தனிநபரை நம்பி செல்கிற கொள்கையா? என்னத்தையா படித்த. தோழர் ஸ்டாலின்மீது பல ஆதிக்கநாய்கள் சொல்லும் கருத்தை நான் சொல்லவில்லை.அதாவது சர்வதிகாரி,கொலைக்காரன்,வருமையில் மக்களை சாகடித்தவன்.நீயே ஒன்றை நினைத்துக்கொண்டு பதில் சொன்னால் நான் என்னப்பா செய்வேன்.
//////////////////////பொருளாதாரவாதத்தை எடுத்த ஸ்டாலின் கம்யுனிசத்திற்கே ஆப்பு வைத்தது. சோவியத் யுனியனின் வீழ்ச்சியில் தெரியவில்லையா? மாக்சியம் தனிநபரை நம்பி செல்கிற கொள்கையா? என்னத்தையா படித்த . ////////////////////////////////////
சோவியத் யுனியன் தோழர் ஸ்டாலினால் வீழ்ந்ததா, என்ன ரூபகாந்தன் கனவு கண்டீர்களா ? மார்க்சியம் தனிநபரை நம்பி செல்கிற கொள்கையா? நீ என்னத்தையா படித்த மார்க்சியத்தை ?
ஆகா என்னய்ய இது
வழக்காடுவது நல்லது ஆனால் இது வழக்கு போலவும் இல்லை
அதனால் விடுங்கப்பா
Tharkala Tamil thirai ulagil indha madhiri commercial palil communisa kungumapoo thoovum muyarchiyai varavarkiran… Anal palai arundhupavarkal negrokalaga irukiragal.. kungumapooval payan illai..
Muzhumaiyana matru marundhu thavai…
பெரியார்ஸ்டாலின்//
தோழரே உங்களிடம் தான் ஆதிக்க மனப்பான்மை இருக்குது.எதையும் நாங்கள் தான் சரியா புரிச்சிக்கொள்கிறோம்.
நம்முடைய புரிதல்தான் சரி என்று உரக்க பேசுகிற ஆதிக்க திமிர் உம்முடைய பார்வையில்தான் உள்ளது.
நல்லது ரூபகாந்தன்
நீங்கள் சூட்டிய ‘பழைய’ புதிய பட்டத்தை மீண்டும் புதிதாக சூட்டிக்கொள்கிறேன். நன்றி
ஆனால் நீங்கள் கடைசி வரை விவாதிக்கவே இல்லைங்க..
நீங்க ரொம்ப தெறமசாலி தான் போங்க.
தோழரே ஸ்டாலின் முன்னேடுத்த எடுத்த பொருளாதாரவாதம் யாருக்கு நல்லது. பொருளாதாரவாதம் யாருக்கு தேவை?
கொச்சம் சொன்னால் அடியேன் தெரிந்துக்கொள்வேன்.
இது என்ன கேள்வி ?
மக்களுக்குத் தான்…
அதை விளக்கித்தான் கீழ் கண்ட சுட்டியில் பதிவும் விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது.
http://vrinternationalists.wordpress.com/2009/10/23/ஸ்டாலின்-சர்வாதிகாரி-தான/#comments
நீங்கள் ஒரு மாதிரி விசித்திரமான நபராக இருக்கிறீர்கள் எனவே நான் இத்தோடு ஜீட்..
கீழே உள்ளது உங்கள் பிளாக் தானே ரூபகாந்தன்
http://tamilmanavan.blogspot.com/
தோழரே உங்களை குழப்பவில்லை. உங்களிடத்தில் உங்கள் கருத்துக்களில் நான் எப்பொழுதும் விமர்ச்சித்தது இல்லை.ஏன்னென்றால் நீங்கள் தெளிவான பதிலை சொல்விற்கள்.போராண்மைப்போல உள்ள சினிமாவுக்காக நீங்கள் விமர்சிப்பது வேதனை தருகிறது. இன்றைய சூழ்நிலையில் சின்னதிரையும்,பெரியத்திரையும் தான் மிகப்பெரிய முதளாலித்துவ ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை மக்கள் உணராமல் இருப்பதுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது.ஆதலால் இதுப்போல திரைப்படங்களையாது விமர்சிக்காமல் அமைதிகாத்தால் நன்றாகவே இருக்கும். உங்கள் தோழர்கள் காஞ்சிவரம் படத்தை விமர்சித்தார்கள். அது மிகவும் சரியான விமர்சனம்,சரியான பார்வை. அப்பொழுது நான் அதைப்படித்து உண்மையை தெரிந்துக்கொண்டேன்.
ஒரு விண்ணப்பம்
முன்பெல்லாம் பின்னூட்டமிடுகிற நபரின் பெயரை கிளிக்கினால், அவருடைய தளத்திற்கு செல்லும். சமீப காலமாக அப்படி செல்வதில்லை. ஏன்?
சில காரணங்களுக்காக நீங்கள் மாற்றியிருக்கலாம். ஆனால், பின்னூட்டமிடுகிற நபரின் அரசியல், பின்னணி புரிந்து கொள்ள, தளத்திற்கு செல்வது வசதியாக இருந்தது. முன்பு போல தளத்திற்கு இணைக்க வழி செய்யுங்கள்.
தோழரே அது எனக்கு பிடித்த தலைப்புகளை எனக்காக நான் காப்பி செய்தது.
http://tamilmanavan.blogspot.com/
வினவுக்காரவுகளுக்கு,
விமர்சனத்தை நல்லாத்தான் எழுதியிருக்கீக. இருந்தாலும் அப்ப்பப கொஞ்சம் நல்ல சினிமாக்களையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி எழுதுங்க. இல்லையினா எப்பவும் திட்டுர ஆளுன்னு பேரை வாங்கிக்கிடுவீங்க. பேராண்மை படத்துல கூட இயக்குநர் அண்ணாச்சி சில நல்ல விசயங்களை சொன்னதுக்கு ஒரு பாராட்டை தெரிவிச்சா கொறைஞ்சா போவிங்க, ஏதோ பாத்து செய்யுங்க
அய்யா காளமேகம்
அப்படி என்ன நல்ல விசயம் பேராண்மையில் வெளிப்பட்டது எனச் சொல்ல முடியுமா..
மணி அண்ணாச்சி முதல்ல படத்தை பாத்தீகன்னா நல்ல விசயங்கள் இருக்கான்னு புரிஞ்சிக்கிடலாம்லா.
படம் பார்த்துவிட்டேன். சில நல்ல விசயங்கள் இருப்பதாக சொன்னது நீங்கள். அவை என்னென்ன என்பதுதான் எனது கேள்வி.
படம் பாத்துகிட்டும் நல்ல விசயங்கள் என்னன்னு கேக்குதீகன்னா ஒண்ணும் விளங்கிக்கிடலியே? காட்டுல வாழுத மக்களை போலீசுக்காரகவுகளும், அதிகாரிமாரும் அடிச்சு விரட்டுதாக. அங்கன மக்களோட தலைவரு உழைக்கிறவனோட ஆட்சி ஒருநாள் வருமுன்னு வீரமாய்ட்டு பேசுதாகளே இது நல்ல விசயமா உங்க கண்ணுக்கு படலியா, பட்டுதா?
காளமேகம்
நீங்கள் கூறுவனவற்றை வேறுசில தெலுங்கு டப்பிங் படங்களில், முரளி படத்தில், சந்திரசேகர் படத்தில், ரகுவரன் படத்தில், … நீங்கள் பார்த்த்து இல்லையா…
மணி அண்ணாச்சி
தெலுங்கு டப்பிங் படங்களும், பேராண்மையும் ஒன்னுண்ணா உங்கள தாமிரபரணியில் முக்கினாலும் பாவம் தீராது வேய்! போற போக்க பாத்தா இயக்குநர் ஜனநாதனை ஆர்.எஸ்.எஸ் காரவுகன்னு முத்திரை குத்தினாலும் குத்துவீக போல இருக்கே. வினவுலகூட விமரிசனத்தை அடக்கமாத்தான் எழுதியிருக்காக. நீங்க முதல்ல கொஞ்சம் பணிவை கத்துக்கிடுங்க
காளமேகம்
ஒரு படத்தை வைத்து அவரை ஆர்.எஸ்.எஸ் கார்ர் என முத்திரை குத்த மாட்டேன். மற்றபடி பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்தால் அதற்கு நான் என்ன செய்ய•.. ஆனால் பிள்ளையாரை செயற்காயான பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யாமல் இயற்கையான சாணத்தில் செய்திருக்கிறார்கள் என்று எனக்கு பார்க்கத் தெரியாதுதான்…
விமர்சனத்தை பணிவாகச் செய்ய வேண்டும் என்பது பொதுவில் விமர்சனம் செய்வதற்கான முறை என நீங்கள் முன்வைக்கின்றீர்களா..
பேராண்மை படத்தில் வரும் சில கருத்துக்கள். இந்தியாவை ஒரு தேசமாக பார்ப்பது. ஆனால் இந்தியா என்பது பல்வேறு தேசங்களை கொண்ட ஒரு நாடு என்று பார்க்கவேண்டும். இந்தக் கருத்துப் புரிதல் இயக்கநருக்கு இல்லை அல்லது அவர் கொண்ட அரசியலிலிருந்து அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் சாதி ஒடுக்குமுறையை அரசுப் பதவிகளில் எப்படி வெளிப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த ஒடுக்குமுறையை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதை வெளிப்படுத்தவில்லை அல்லது அதற்கான கருத்தே அவருக்கில்லை என்று சொல்லாம்.
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவை குறிப்பாக காடுகளை எப்படி கூறுபோட்டு விற்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயம் எப்படி அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ஆனால் அந்நிய சக்திகள் ஏகாதிபத்தியவாதிகள் உள்ளே நுழைவதற்கு இந்த ஆட்சியாளர்கள் எப்படி பட்டுக் கம்பளம் விரிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்த வில்லை. அதற்கான கருத்தும் இல்லை என்றே தெரிகிறது. இந்திய சுதந்திரமாக வளர்சியடைந்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்து அவருக்கு இருக்கலாம்.
ஆனால் ஒன்று மறந்து விடக்கூடாது. ஏகாதிபத்திய நாடு மற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளை அடிபணிய வைக்கிறது என்பது உண்மையென்றபோதும், ஏகாதிபத்தியம் விதிக்கும் 100 சதவீத கட்டளையை அப்படியே ஏற்று அடிபணிகிறது என்று பொருள் கொள்ளக் கூடாது. இந்திய நாடு தரகு அடிப்படையில் தன் நலனை வளர்க்கப் போராடுகிறது. தனது அண்டை நாடுகளை விட வலிமையை பெருக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. தனது அண்டை நாடுகளில் சிறிய வலிமை குன்றிய நாடுகளை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவர துடிக்கிறது. அதற்கு தனக்கு தேவையான அளவை அனைத்து மட்டத்திலும் வளர்த்துக் கொள்கிறது. இதை கூட ஏற்கமுடியாமல் ஏகாதிபத்திய நாடுகள் தடைகளை ஏற்படுத்துகிறது. இதுதான் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்குமான முரணாக மாறுகிறது. ஆனால் ஒன்றை மறந்தவிடக் கூடாது. இந்த நாடுகள் என்றென்றைக்கும் ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தளையினை முறித்துக்கொண்டு ஒரு சுதந்திர நாடாக தன்னை நிலைநிறுத்த முனையாது. அவர்களை சார்ந்து அதிகபட்ச லாபத்தினையும், பேரத்தினையும் பெற முயற்சிக்குமே தவிர சுதந்திரத்திற்காக போராடாது. இந்த நிலையில்தான் இந்தியா உள்ளது. இயக்குநரும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று படத்தின் மையக் கருவை அமைத்திருப்பதாகவே காட்டியிருக்கிறார். அதிலும் அவர் பாகிஸ்தான் தனது எதிரி என்றோ, சீனாதான் எதிரி என்றோ, தீவிரவாதம்தான் எதிரி என்றோ காட்டவில்லை. அதை மீறி ஏகாதிபத்தியத்தையே (குறிப்பாக ஒரு சிலர் கூறுவது போல் அமெரிக்காவை மட்டும் கைநீட்டாமல் அமெரிக்கா உட்பட எல்ல ஏகாதிபத்தியங்களின் கைகூலிப்படை என்றே இதில் விவரிக்கிறார்) எதிர்க்க வேண்டும். அவர்கள் நம் நாட்டின் எதிரிகள் என்றே மையக் கருத்தை விவரிக்கிறார். இதை ஒட்டி எத்தனையோ சினிமாவுக்குரிய விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வெறும் சாதி ஒடுக்குமுறையை மட்டும் சொல்லிக்கொண்டு, மதவெறி என்று மட்டும் சொல்லிக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை விட்டு விட்டு பேசும் போலி ஜனநாயகவாதிகளுக்கு மத்தியில் அந்நிய அதிக்கத்தை ஒரு மையக் கருத்தாக வைத்து கூறியிருப்பது இன்றைய தேவையை உணர்ந்துக்கொள்ள உதவி செய்கிறது. அந்நிய ஆதிக்கத்தை (பாகிஸ்தான் சீனா இல்லாத) எதிர்த்த இந்த கதையை அந்தளவில் வரவேற்போம். இந்தியவின் சுதந்திர வளர்ச்சிக்கு இவர்கள்தான் தடை இவர்களைதான் எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியிருப்பதாகவே இருக்கிறது.
இதில் இருக்கும் தேசம் பற்றிய பார்வை, உள்நாட்டில் ஜனநாயகம் (சாதி, மத ஒடுக்குமுறை, அரசதிகாரம்) பற்றிய பார்வை ஆகியவற்றில் இயக்குநருக்குள்ள தெளிவின்மை படத்திலும் தெரிக்கிறது. ஆனால் எவ்வளவு குறைகள் இருந்தபோதும். அந்நிய ஆதிக்கத்தை அதாவது மீண்டும் சுட்டிக் காட்டுகிறேன் இந்த அரசாங்கம் அந்நியர்கள் என்றால் பாகிஸ்தான், சீனா என்று மட்டுமே கற்றுக்கொடுத்திருக்கிறார்கள், அதை மீறி மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளையே அந்நியர்களாக அதில் சித்திரித்திருகிறார்களே அவர்களை எதிர்த்துப் போராடுவது முக்கியம் என்றும் அதில் பதிவுசெய்துள்ளதால் அந்தபடம் ஒரு முக்கியப் இன்றைய தேவையான அரசியல் பதிவாகவே நினைக்க வேண்டியுள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பை விட்டுவிட்டு சாதிப் பிரச்சனைக்குமேல், இனப்பிரச்சனைக்குமேல் சிந்திக்கமாட்டேன் என்று அடம்பிடிப்பது சாதி ஒடுக்குமுறையயும் ஒழிக்க முடியாது, இனப்பிரச்சனையையும் ஒழிக்கமுடியாது. இதைத்தான் இன்றைய இந்திய வரலாறும் ஈழத்தின் வரலாறும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
//இயக்குநர் ஜனநாதன் விசமக்காரர் அல்ல. ஃபார்முலாவை மீற முடியாது. இனிப்புக்குள் எப்படி மருந்தை வைப்பது என்பதுதான் பிரச்சினை என்று அவர் சிந்தித்திருக்கிறார்.//
ஜனநாதனை சரியாக கணித்திருக்கிறீர்கள். ஜனநாதன் போன்றோர் படமெடுக்கும்போது, உங்களைப் போன்றோரின் விமர்சனங்களால்தான் படம் நிறைவு பெறுகிறது.
Andha moonru varigal mattume vimarsanathil pidithulladhu…
pongadaa pokkathavanungalaaa……
verum vaaichchavadaal vidadhaan neengallaam laaayakku….
vera yedhukkum laayakkillaa
dhillu irundhaa iru maatru cinema yeduthu kaattunga….apparam vandhu vimarsanam ezhudhunga……
பெரோஸ
நீங்கள் சொல்ல வருவது இனிமேல் பயனுள்ள விமர்சனங்கள் வரட்டும் என்று. இது பயனுள்ளது எனப் படவில்லையா.. என்னைப் பொறுத்தவரை கட்டுரை படத்தை அவ்வளவாக விமர்சனம் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன். மற்றபடி கமல் படம் போல இல்லாமல் தரமானது என நினைத்தால் தயவு செய்து இரண்டும் ஒன்றுதான் என்பதை நீங்கள் விரைவில் புரிந்து கொள்ள முடியும்.
சிறிய மாற்றங்களை ஒரு முதலாளிய அமைப்பிற்குள் நடத்திக் காண்பித்த்து சாதனை. சிறயது என்றாலும் சிறியதுதான் பெரியதற்கு ஆரம்பம் என இனிப்புக்குள் மருந்தை அடைக்கும் வேலை சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் வயிற்றுவலிக்கு மருந்து கேட்டால் டாக்டருக்கு படித்தவர் தான் படித்த எல்லா மருந்தையும் கொடுத்து தலைவலி, பேதி காய்ச்சல் வர வைத்த கதைதான் இது.
ஒரு புரிதலுக்காக மேற்படி பாராவில் மருந்து என்பது அரசியல், இனிப்பு என்பது பார்முலா, டாக்டர் என்பவர் டைரக்டர்
நல்லது நீங்கள் சொல்வது புரிகிறது அனால் நான் இனியும் நல்ல பயன் உள்ள கட்டுரை வரட்டும் என்று தான் சொன்னேன் . மேலும் உங்கள் அரசியல் பார்வையில் உடன்படுகிறேன் நன்றி நான் இனியும் என்று சொன்னதற்கு காரணம் இது நல்ல விமர்சனமே . மேலும் இங்க இருட்டிலேயே வாழ்ந்து பழகியதால் சிறு வெளிச்சம் கூட எங்களுக்கு பெரிய வெளிச்சமாக தெரிவதன் விளைவே என் இடுகை
Hello ithu enga thalaivar VIYAKANTH nadikka vendiya padam…Miss panittaar
Thozalare….
Ungalathu Paarvai sariyanathe!!!
Aanaal cinema ulagai siridhu siridhaaga maattra muyalum ithu pondra (Jananadhan, Ramji.S.Balan) iyakunargaluku ithu oru periya thadaikal.
oru vellai jananaathan thannai maattrikondaal nallathu… aanaal manamudaindhu ramji.s.balanai-pol cinema padam edupadhaye niruthivittal ! ! ! ! ! ! ! !
”ULLADHUM POCHUDA NOLLA KANNAA”
Endra nilai cinema ulaguku vandhu vidadha????
[…] This post was mentioned on Twitter by karthick. karthick said: RT @ezharai: பேராண்மை முற்போக்கு மசாலா – https://www.vinavu.com/2009/10/27/peranmai-masala/ #தொண்டு […]
“At Dawn It’s Quiet Here” என்ற திரைபடத்தின் அப்படமான காப்பி . லிங்க் (http://www.youtube.com/watch?v=uVsKl-m3uGw) . முழுதும் பார்க்க பொறுமை இல்லையா இந்த பகுதியை மட்டும் பார்க்க http://www.youtube.com/watch?v=AjQl-rPY1k8&feature=watch_response_rev
“”என்றபோதும் ஜனநாதனின் பேராண்மையை முற்றிலுமாக எதிர்மறையில் நிறுத்தி நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ‘அ – அம்மா, ஆ – ஆத்தா’ என்று ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில் அவர்களின் இயற்கையோடு இணைந்த இயல்பையும், ‘சுள்ளி பொறுக்கிறவனைக் கூட விடமாட்டோம்’ என்று திட்டமிட்டு அவர்களையும் காட்டையும் அழிக்கும் அதிகார எந்திரங்களையும் பதிவு செய்ததற்காக, ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக, பேராண்மை என்று பெயர் வைத்து பெண்களைக் கதைநாயகிகளாய் சாகசக்காரர்களாய் முன்வைத்ததற்காக, இறுதியில் பொன்வண்ணன் குடியரசுத்தலைவர் விருது பெறுவதுபோல் காட்சி வைத்து அதிகாரவர்க்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்ததற்காக ஜனநாதனுக்கு ரெட்சல்யூட்ஸ்!””
வினவு இந்த அலவுக்கு கூடநீஙல் ஒப்புக்கொல்லவில்லை