privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

-

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

vote-012ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி  ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார். இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார்.

மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட ஈழம் எனும் பசுவின் மடியிலிருந்தும் கூட பால் கறக்க முடியும் என்பதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெகத் கஸ்பார் எனும் பாதிரி.

“ஈழ மக்கள் மீதான படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து, யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக நூறு பேர் கவிதை எழுதுகிறார்கள் நீங்கள் கவிதை கொடுக்க வேண்டும்” என்று த.செ.ஞானவேல் என்பவர் பலரிடமும் கேட்டிருந்தாராம். அவருக்காக ஆனந்தவிகடனின் திருமாவேலனும், டைம்ஸ் ஆப்ஃ இண்டியா இதழின் குணசேகரன் என்னும் பத்திரிகையாளரும் கூட இப்படிப் பலரிடமும் கவிதை கேட்டிருக்கிறார்கள். நூலை ஞானவேல் எனும் பத்திரிகையாளர் வெளியிடப் போவதாகச் சொல்லித்தான் அனைவரிடமும் கவிதை வாங்கியிருக்கிறார்கள்.

ஒரு வழியாக “ஈழம்…. மௌனத்தின் வலி” என்ற அந்தக் கவிதை நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பர் ராஜ் என்பவருக்குச் சொந்தமான “நல்லேர் பதிப்பகம்” சார்பில் வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை நூல். ஞானவேலோ  அவர் அமைப்பாளராக இருக்கும் “போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்போ” இந்நூலை வெளிக் கொண்டுவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகாரவர்க்கங்கள், புகழ்பெற்றவர்கள் என்னும் வரிசைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள அந்நூல் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை என்னும் அமைப்பில் பல நண்பர்கள் தோழர்கள், சமூக ஆர்வலர்களின் கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது.

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

“ஈழம்…. மௌனத்தின் வலி” என்னும் தலைப்பிலான அக்கவிதை நூலின் முதல் கவிதையை கமலஹாசனும், கடைசிக் கவிதையை ரஜினிகாந்தும் எழுதியிருக்கிறார்கள். கமல் எழுதிய கவிதை தெனாலி படப்பிடிப்பின் போது எழுதப்பட்டதாம். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக் கவிதையை அவர் இவர்களுக்காவே எழுதிக் கொடுத்தாரா? அல்லது ஏதாவது மேடைகளில்  உதிர்த்த முத்தா ? என்று தெரியவில்லை. மற்றபடி தோழர் துரை.சண்முகம், இயக்குநர் கவிதா பாரதி, கலாப்பிரியா, ராஜுமூருகன் உள்ளிட்ட இன்னும் சிலரின் கவிதைகளைத் தவிர பெரும்பாலான கவிதைகள் மொக்கைகள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் நிருபர் குணசேகரன், “ஈழம் தொடர்பான புகைப்படங்களைப் பொருத்தமான கவிதையுடன் வெளியிட இருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் சேர்ந்து வெளியிடும் இந்த கவிதை நூலுக்கு நீங்களும் ஒரு கவிதை தர வேண்டும்” என்று தோழர்.துரை சண்முகத்திடம் கவிதை ஒன்று கேட்டாராம். “தன்னார்வக் குழுக்கள் வெளியிடுவதாக இருந்தால் கவிதை தரமுடியாது. கவிதையில் ஒரு சொல்லைத் தணிக்கை செய்வதாக இருந்தாலும் கவிதை தர முடியாது” என்று குணசேகரனிடம் கூறியிருக்கிறார் துரை.சண்முகம். இரண்டிற்கும் குணசேகரன் உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கவிதையையும் தந்திருக்கிறார்.

இரக்கம் காட்டுவதாய்
நீங்கள் ஒரு அறிக்கை விடுவதற்கு
இன்னும் எத்தனை வேண்டும் ஈழப்பிணங்கள்….

தேர்தல் செலவுக்காக
எங்கள் இரத்தத்தையே திருடிய உங்களிடம்
ஒப்படைக்க முடியாது கண்ணீரை

தலை சிதறிப் போனாலும்
எம் தலைமுறைகள் மறவாது
இந்திய கொலைக்கரம் முறிக்காமல்
எம் பிள்ளை துயிலாது

என்று துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் “தேர்தலுக்காக” என்ற சொல்லும் “இந்திய கொலைக்கரம்” என்ற சொற்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்குப் பதிலாக வெளியீட்டாளராக ஜெகத் கஸ்பார் அவதரித்திருக்கிறார். இவ்விரு விசயங்கள் குறித்தும் உடனே குணசேகரனுக்கு போன் செய்து கேட்டாராம் துரை. சண்முகம். அதிர்ச்சி அடைந்த குணசேகரன், கவிதையை ஞானவேலிடம் கொடுத்ததாகவும் இந்த அயோக்கியத்தனம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருந்தினாராம்.

ரஜனிகாந்த் கமலஹாசன் போன்ற கவிஞர்கள் எல்லாம் எழுதப்போகிறார்கள் என்ற விசயமும் துரை சண்முகத்துக்கு சொல்லப்பட வில்லையாம்.   இயக்குநர் சேரன் போன்றவர்கள் எழுதிய அயோக்கியத்தனமான கவிதைகளும் உண்டு. அழுது வடிந்து ஈழத்துக்காக போலிக்கண்ணீர் வடிக்கிற தந்திரக் கவிதைகளும் உண்டு. நூறு ரூபாய் விலையில்,”மனித நேயமிக்க எவரும் மறுபதிப்புச் செய்யலாம்” என்னும் அறிவிப்போடு பளபள காகித்தத்தில் வெளிவந்திருக்கும் நூலை, கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பார் ராஜ் வெளியிடுகிறார் என்பது தெரிந்திருந்தால் பாதிக்கும் மேலானவர்கள் கவிதை கொடுத்திருக்க மாட்டார்கள். ஏன் ஞானவேல் இப்படிச் செய்தார் என்று பலரும் இப்போது புலம்பித்திரிகிறார்கள்.

ஞானவேல் பத்திரிகையாளரா? என்று சிலர் கேட்டார்கள். அவர் ஆனந்த விகடனில் நிருபராக வேலை பார்த்ததாகவும் அதில் கிடைத்த தொடர்புகள் மூலம் அதிகார மட்டங்களில் உறவுகளை வளர்த்த பிறகு கலைக்குடும்பமான நடிகர் சிவக்குமார், அவரின் வாரிசு நடிகர் சூர்யா ஆகியோரின் பி,ஆர்.ஓவாகவும், சூர்யா ரசிகர் மன்றம், அவர்களின் அறக்கட்டளை வேலைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜிற்கும்  பி.ஆர்.ஓவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவ்வப்போது “உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்” என்னும் திடீர் பணக்காரர்கள் குறித்த தன்னம்பிகை கட்டுரைகளை சிலிர்க்க சிலிர்க்க உருட்டி உருட்டி எழுதுகிறவர் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஞானவேல் என்ற நபர் என்ன தொழில் செய்கிறார் என்பது இங்கு முக்கியமல்ல,  ஆனால் இன்றைய இவரது நடவடிக்கை ஈழப் பிரச்சனை என்னும் பொதுப் பிரச்சனையில் அசிங்கமான அவதாரமாக உருவெடுத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை இங்குள்ள அதிகார பீடங்களிடமும்,  சந்தர்ப்பவாத  சாமியார்கள், பெரும் பண்ணைகளிடமும் கொண்டு போய் அடகு வைத்து இவர்களை ஈழ நாயகர்களாக உருவாக்குகிற ஆளும் வர்க்க நலன் சார்ந்த தந்திரமாக உருவெடுத்திருக்கிறது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்  என்ற அமைப்பு என்ற ஒன்றைத் துவங்குவதோ, அதற்கு அமைப்பளாராக ஞானவேல் இருப்பதோ, ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ தவறிலை, ஆனால் தனக்குத் தெரிந்த பணக்காரர்கள், ஆளும் வர்க்க அடிவருடிகள், நடிகர்கள், என்ற இவர்களின் பின்னணியில் ஜெகத் கஸ்பார் என்னும் ஆளும் கட்சி ஆதரவுபெற்ற ஒரு நபரின் நிதி உதவியோடு வெளியிடுவதும் , அதற்குப் பத்திரிகையாளர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் இங்கு பிரச்சனை. ஞானவேல் “அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம்” சார்பில் இதைச் செய்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை.

போருக்கு எதிரானவர்கள் யார்?

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இரண்டரை ஆண்டுகால இலங்கை அரசின் போர் என்பது வெறுமனே இலங்கை அரசின் போர் அல்ல. பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்க வெறியே ஈழத்தில் போர் வெறியாக மக்களைக் கொன்று தீர்த்தது. ஆனால் இப்பிராந்தியத்தில் வேறெந்த ஒரு நாட்டின் பங்களிப்பையும் விட இந்தியாவின் பங்களிப்பே வன்னிப் போரில் அதிகம்.

இவர்களே ஆயுதங்களைக் கொடுத்தார்கள், இவர்களே இராணுவத்தை அனுப்பினார்கள், இவர்களே இராணுவ டாங்கிகளையும், விமானங்களையும் அனுப்பினார்கள். இவர்களே கொலைகார பாசிஸ்டுகளான ராஜபட்சே சகோதர்களை பாதுகாத்தார்கள். போரை நிறுத்துங்கள் என்று தமிழகம் கேட்ட போது இறையாண்மையுள்ள இலங்கை தேசத்திற்குள் தலையிட மாட்டோம் என்றார்கள். போரை நடத்திய இந்திய, இலங்கை கூட்டு இராணுவப் படைகள் கொன்றொழித்தது புலிகளை மட்டுமல்ல ஐம்பதாயிரம் வன்னி மக்களையும்தான்; இனப்படுகொலையின் சூத்திரதாரி இலங்கை மட்டுமல்ல மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான்.

போரை நிறுத்தாமல் அதை வேகமாக முடிக்க நெருக்கடி கொடுத்த இந்தியா இன்று ராஜபட்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்குமிடையிலான போரை தீர்த்து வைக்க விரும்புகிறது. சமாதானம் பேசவே கொழும்பு சென்றிருக்கிறார் பிரணாப்முகர்ஜி. வன்னி மக்களைக் கொன்றொழித்த மத்திய காங்கிரஸ் அரசு, போர் நிறுத்தம் கோரிய ஜனநாயக சக்திகளின் நண்பனா? எதிரியா?

இதற்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். கட்டுரையை எழுத நினத்ததன் தேவையே அங்கிருந்துதான் உருவாகிறது. அதைச் சொல்வதற்கு முன்னால், வேறு சில விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் மத்திய மாநில அரசு அதிகாரங்களை துய்த்து வரும் தி.மு.க இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சியோடு பதவியை பங்கிட்டிருக்கும் கட்சி. தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட போது கருணாநிதி தன் பதவி அதிகாரத்தைப்ப பாதுகாத்துக் கொள்வற்காக ஈழம் தொடர்பாக நாடகங்களை அரங்கேற்றினாரே தவிர கடைசி வரை ஈழ மக்களிடம் கரிசனம் காட்டவில்லை. மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது அவர் புலிகளின் சகோதரப் படுகொலை பற்றி பேசினார். வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்ற போது பிரபாகரன் சர்வாதிகாரி என்றார். ஈழம் தொடர்பாக மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை என்றார் கருணாநிதி.

கருணாநிதி மட்டுமல்ல அவரோடு அன்று  காங்கிரஸ் கூட்டணியில் இருந்த டாகடர் ராமதாஸ் கூட சூழலுக்கு தக்கவாறு பேசியே நாடகங்களை அரங்கேற்றினார்.போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று பார்ப்பனத் திமிரோடு பேசிய ஜெயலலிதாவோ, கருணாநிதியின் பெயர் கெடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஈழப் பிரச்சினையை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். மக்கள் அதை நம்பவில்லை என்பது தனிக்கதை.

கடைசியில் புலிக்கோஷமிட்டவர்களாலேயோ, நாடகங்களை நடத்தியவர்களாலேயோ, ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டோம். இவர்களால் உள்ளூர் தமிழர்களையும் காப்பாற்ற முடியாது என்பதை இன்றைக்கு மீனவர் பிரச்சனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைகோ, திருமா, கருணாநிதி, ஜே, நெடுமாறன், என எல்லா தலைகளும் சந்தர்ப்பவாதிகளே என்பதை தீயில் எரிந்து முத்துக்குமார் உணர்த்தினான். முத்துக்குமாரின் தியாகத்தை தற்கொலை என்றார் திமுகவின் அன்பழகன்.  இதெல்லாம் போரின் போது நடந்த சில கசப்பான உண்மைகள்.

ஜெகத்கஸ்பார் கும்பல் சொல்கிற மாதிரி அமைதியாக மௌனமாக இல்லாமல் தமிழகத்தின் இரண்டு துருவ அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு பல அமைப்புகளும்,வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை அமைப்பினர், கண் தெரியாதவர்கள், தையல் கலைஞர்கள்,  விவசாயிகள், மீனவர்கள், என பலரும் போராடினார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் மட்டும் போருக்கு எதிராக போராடவில்லை. ஒரு வேளை அப்போது இந்த அமைப்பு துவங்கப்பட்டு போருக்கு எதிராக போராடியிருந்தால் சீமானையும், கொளத்தூர் மணியையும், கோவை இராமகிருட்டிணனையும் ஏனைய தோழர்களையும் சிறையில் தள்ளி ஒடுக்கிய கருணாநிதி, இந்த பத்திரிகையாளர்களையும் உள்ளே தான் தள்ளியிருப்பார்.

ஈழப்போருக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த  வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் எது கிடைத்ததோ, அதுவே பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்திருக்கும். போராட்டம் என்பதன் வலியறியாத பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக போராடவில்லை என்றால், சில பிழைப்புவாத துரோகிகளோ அம்சாவின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். இது குறித்தெல்லாம் ஏற்கனவே விரிவாக வினவில் எழுதியிருக்கிறோம். போர் நடக்கும் போது மவுனமாக இருந்து விட்டு இப்போது போருக்கு எதிரான அமைப்பு என்று துவங்கியிருக்கிறார்களே, எந்த போருக்கு எதிரானது இந்த அமைப்பு என்று அதன் அமைப்பாளர் ஞானவேல் சொல்வாரா?

வடகிழக்கில் இந்தியப் படைகள் நடத்திக் கொண்டிருக்கிறதே அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களே வீரம் செறிந்த போர், அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது ஆப்கான் போருக்கு எதிரானதா? அல்லது இந்திய அரசு விரும்பாத போராக  சரத்பொன்சேகாவிற்கும், ராஜபட்சேவுக்கும் இடையில் தற்போது நடக்கும் போருக்கு எதிரானதா?

ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்இன்று இந்தப் பாதிரியார் குறித்து எழுத பலரும் பயப்படுகிறார்கள். சிலர் இவர் பிரபாகரனோடு உண்டு உறங்கி வாழ்ந்தவர் என்று மிரட்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ இவர் கனிமொழி, கார்த்திக் சிதம்பரம், சிதம்பரம் என பெரிய இடத்து தொடர்புகள் உள்ளவர் அதனால் வம்பு வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள். இன்னும் சிலரோ இவர் பின்னால் திருச்சபை இருக்கிறது. மிகப் பெரிய அதிகார பீடமது. அதனால் நாம் இவரை பகைத்துக் கொள்ள முடியாது என்று ஒதுங்குகிறார்கள். மே 18க்குப் பிறகு இவர் எழுதிய நக்கீரன் கட்டுரைகளை பதிவுலகில் பலர் வெளியிட்டு ஜெகத் கஸ்பாரை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள்.

கஸ்பாரைப் பொறுத்தவரை ஈழம் என்பது அவருக்கு “காலம் உருவாக்கித் தந்த கறவை மாடு. அவருக்கு ஈழத்தின் மீதோ, திமுக மீதோ, கருணாநிதியின் மீதோ அபிமானமோ, பற்றோ கிடையாது. பெரிய மனிதர்களின் பழக்கமும் தனது தன்னார்வக்குழுவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதும்தான் ஜெகத்தின் நோக்கம்.

கஸ்பார் கிறிஸ்தவ நிறுவனமான வெரித்தாஸ் வானொலியில் பிலிப்பைன்சில் பணியாற்றிய போது புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் புலத்து மக்களிடம் வசூலித்ததாகவும், பின்னர் அதில் நிதி தொடர்பான பிணக்கில் ஃபாதரை வன்னிகே அழைத்து புலிகள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பின்னர் கஸ்பார் சாதித்து வந்த மௌனத்தின் உணைமையான வலி இதுதான்.

நீண்டகால மௌனத்திற்குப் பிறகு, புலிகள் இல்லாமல் போன பிறகு, புலிகள் பற்றி பேசத் தொடங்கியருக்கிறார் கஸ்பார். புலிகளோடு தான் மிக மிக நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து எழுதுகிறார். கடந்து போன நிகழ்வுகள் குறித்து எழுதும் போது, அதை மறுக்கவோ, அல்லது உண்மைதான் என்று சொல்லவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால் இம்மாதிரி நபர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகிவிடுகிறது.

பிலிப்பைன்சில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி நிலையம் அமெரிக்க சி.ஐ.ஏவின் நிதி, கட்டுபாடுடன் ஆசியாவில் கம்யூனிசத்தையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் உளவறிந்து ஊடுறுவி, கண்காணத்து குலைப்பதற்கான பிரச்சாரத்தை செய்து வந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாது.

இப்போது ஜெகத் இந்திய உளவு நிறுவனத்தில் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகங்கள் புலத்து மக்களிடமிருந்து வெளிப்படுவதோடு, தமிழகத்திலும் கூட அப்படியான பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியது. மே-மாதம் வன்னிப் போர் துயரமான முறையில் – இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்து – முடிவுக்கு வந்த பிறகு வெளிவந்த  நக்கீரனில்  “வன்னியில் என்ன நடந்தது?”  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.

அக்கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவுக்காக, தான்  முயற்சித்ததாகவும் தானே கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெள்ளைக் கொடியோடு புலிகளை  சிங்கள இராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், ஆனால் இலங்கை அரசின் துரோகிகள்  நடேசனைக் கொன்று விட்டதாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்  ஜெகத் கஸ்பார் . இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த ஜெகத் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள்தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் ஜகத் கஸ்பார் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று கஸ்பார் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

புலிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை இலகுவாக வெல்ல இந்தியா பயன்படுத்தியிருக்கக் கூடிய தந்திரம்தான் இந்த “சரணடைவு நாடகம்” என்பதை இப்போதும் கூடவா ஒருவர் புரிந்து கொள்ள முடியாது? அதற்கு இந்திய வம்சாவளியினரான விஜய்நம்பியாரை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தில் ஊதியம் பெறும் ஆலோசகராக இருக்க அவரது அண்ணனான விஜயநம்பியாரோ ஐநாவின் சார்பில் இலங்கையில் சமாதானம் பேசுகிறார். தம்பியின் கையில் துப்பாக்கி… அண்ணனின் கையில் சமாதானப்புறா….. இந்த சமாதானப்புறாவை வைத்து தமிழக சமாதானபுறாவான ஜெகத் கஸ்பர் மூலமாக புலிகளை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறது,  இந்திய. இலங்கை கூட்டு இராணுவம். இந்த திட்டம் குறித்து அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று கஸ்பார் சாதிக்கலாம். ஆனால் இன்றைக்கும் இது புரியவில்லை என்று அவர் வாதாடமுடியாது.

இந்தக் கொலை வெறித் திட்டம் குறித்த செய்திகள்  21-05-2009 தேதியிலேயே கசிந்தது. அன்றைய மன அழுத்தங்களில் யாரும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. அந்தச் செய்தியில் இருந்தது இதுதான். வற்புறுத்தலாக சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்த செய்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது. விரைந்து போரை முடிக்க இந்தியா இலங்கைக்கு கொடுத்த நெருக்கடியின் இன்னொரு தந்திரமே இந்த வற்புறுத்தலான சரணடைவு. ஜெகத் கஸ்பார் ராஜ் யாருக்காக நடேசனுக்கு இந்த வற்புறுத்தலைக் கொடுத்தார்? பின்னர் எதற்காக இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?

சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாக சித்தரித்து கட்டுரை எழுதினார் இதே ஜெகத். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி இதனைக் கண்டிக்க, உடனே “மறுப்பு மாதிரி” ஒன்றை வெளியிட்டு சமாளித்தார். (இதற்கும் ஆரோக்கியசாமி தொடர்பாக சால்ஜாப்பு எதையும் ஜெகத் எழுதினால் அதை மறுக்க ஆரோக்கியசாமியும் உயிருடன் இல்லை)

சி.ஐ.ஏ புகழ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய இந்த அனுபவசாலியை இந்திய உளவு நிறுவனங்கள் கைவிடவில்லை என்பது இப்போது தெரிகிறது. சமாதானக் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு ஊடுறுவ அனுப்பியிருக்கிறது. ஆனால் இந்த வசூல் மன்னனின் உண்மை முகத்தைத் தெரிந்து கொண்ட புலிகள் இவரை பட்டும் படாமலும் ஒதுக்கி தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப் பார்த்திருக்கின்றனர். கூடாநட்பு குழிபறித்து விட்டது.

இப்போது புலிகள் இல்லை. கஸ்பார் புலிகள் பற்றிப் பேசுகிறார். ஈழ மக்களுக்காக எதையாவது செய்யத் துடிக்கிறாராம். அதற்காகவே சிதம்பரத்தோடும், ஆளும் கட்சியோடும் நெருக்கமாக இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்.

ஞானவேல்.. வளர்ந்து வரும் ஜெகத் கஸ்பாரே!

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!ஜெகத்தின் நல்லேர் பதிப்பகத்தின் நிதியில் பத்திரிகையாளர்களின் பெயரில் நூல் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதில் ஏழுதிய ஏராளமானவர்களையும் ஏமாற்றி, சக பத்திரிகையாளர்களையும் ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார் ஞானவேல். பொதுவாக எதிர்ப்பியக்கங்களின் போராட்ட வடிவங்களெல்லாம், இன்றைய அரசு அடக்குமுறைகளின் விளைவாக போர்க்குணமிக்க வடிவத்துக்கு மாறும் காலம் இது. அது போல அரசு அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது, மனுக்கொடுப்பது, கண்ணீர் அஞசலி செலுத்துவது போன்ற அபத்த நாடகங்கள் இந்தியாவில் காமெடியாகிவிட்டது. மக்கள் இவ்வாறு போராடி போராடி அலுத்துப் போய்விட்டார்கள்.  அப்படி போராடுகிறவர்கள் மண்டையை பிளக்கிறது போலீஸ் அராஜகம். இப்போது இம்மாதிரி போராட்டங்களில் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால்தான் போர் நடைபெற்ற காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களும் வன்முறை வடிவம் எடுத்தன. அப்போது ஜெகத் மௌன ஊர்வலம் நடத்தினார்.

அதாவது யாரைப் பற்றியும் எதுவும் பேசாமல் ஒரு ஊர்வலம். அதாவது கொலை செய்கிற இந்தியாவைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார அரசுகளைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார இந்திய அரசோடும், அதற்கு துணைபோகும் மாநில அரசோடும் சேர்ந்து கொண்டு “ஏதாவது” செய்ய வேண்டும். இதுதான் கஸ்பாரின் கொள்கை. அந்தக் கொள்கையை இப்படித்தானே அமல் படுத்த முடியும்?

மக்களின் எதிர்ப்பு வடிவங்களை அரசியல் அற்ற ஒன்றாக மாற்றுவதும் அதை அரசு நிறுனத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதும்தான் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரியின் வேலை. பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரிகளின் வேலையும் இதுதான்.

அயோக்கியத்தனத்தின் ஒரு போராட்ட வடிவமாக மௌன ஊர்வலத்தையும், மெழுகுவர்த்தி பிரார்த்தனயையும் நடத்தினார் ஜெகத். அதன் போருக்குப் பிந்தைய இன்னொரு வடிவம்தான் இந்த ”மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழா. கருணாநிதின் பெயரை சரி செய்யும் முயற்சியும், போராட்டங்களை மடைமாற்றும் முயற்சியும் கூட இந்த விழாவில் இருக்கிறது. அதாவது அனைத்து பத்திரிகையாளர்களும், கலைத்துறையினரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்களின் பின்னால்  நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை ஞானவேலும், ஜெகத்தும் தோற்றுவித்திருக்கிறார்கள். கவிதை வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் மேடையில் பேசினார்கள்.

பிரகாஷ்ராஜ் அவர் என்ன பேசினார் தெரியுமா? மௌனமாக இருந்து விட்டோம் என்று குறைபட்டார். ( மௌனமாக இருந்த ஞானவேல் பக்கத்தில் இருந்தார்) சிவக்குமார் பேசவே இல்லை ஏதோ கவிதை படித்தார். போலிச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் “அன்பும் கருணையும் பொழியட்டும், மக்கள் போராடக் கூடாது, சேகுவேராவை யாரும் பின்பற்றக் கூடாது” என்றான் அந்த தாடிக்கார சொறி நாய்……”நான் விரைவில் ஈழ மக்களுக்காக ஒரு ப்ராஜக்ட் செய்யப் போகிறேன்” என்று ஆட்டையப் போட்டான் அந்தப் பாவி. ஏ.ஆர் முருகதாஸ் ஏதோ பேசினார்.

அந்த விழாவில் கடைசியாக நன்றி சொன்னது யார் தெரியுமா? மருத்துவர் எழிலன். அவர் திட்டக்குழு தலைவரும் தீவிர திமுக அனுதாபியுமான கருணாநிதியின் செல்லப் பிள்ளையுமான நாகநாதனின் மகனாம். துரோகங்களை என்ன மையிட்டு மறைத்தாலும் அது இந்த புயல் மழையில் கரைந்து கொண்டே இருக்கும்தானே? எவருடைய பேச்சிலும் அரசியல் இல்லை. போரின் இந்திய முகத்தை சுட்டிக் காட்டவோ, தமிழக துரோகத்தை தோலுரிக்கவோ முடியாத ஆளும் வர்க்க பெரும்பண்ணைகள் தங்களின் சந்தர்ப்பவாத ஆளும் வர்க்க நலனை முன்னெடுத்தே இதில் பேசினார்கள்.

வந்திருந்த கூட்டத்தில் பாதி அல்லேலுயா கோஷ்டிகள். மீதி பேர் சத்குருவின் பக்தர்களாம். கூட்டம் முடிந்ததும் சத்குருவைப் பார்த்து அழுது அரற்றினார்களாம். சத்குருவிடம் அழுதால் கஷ்டங்கள் மறைந்து விடும் என்று சாங்கியம் இருப்பதால் அப்படியாம். ஆக ஈழத்துக்காகப் போட்ட கூட்டத்தில் ஆடியன்ஸ் அழுதது சத்குருவுக்காக.

இந்த விழாவில் பேசிய கிறிஸ்தவ பிஷப் மலையப்பன் சின்னப்பா, இறைவன் ராஜபக்சேயை தண்டிப்பான் என்று பேசினார். தங்களைப் போன்ற யூதாஸ்களுக்கு என்ன தண்டனை என்பதை அவர் கூறவில்லை. கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் பெரும்பலான பாதிரிகள் சாதி வெறியர்கள். பண மோசடிப் பேர்வழிகள். கிறிஸ்தவ மீனவர்களுக்காக வந்த நிதிகளை பெருமவளவு மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பாதிரிகளுக்கு உண்டு. இந்த சென்னை மயிலை பிஷப் மலையப்பன் சின்னப்பாவோ திமுக ஆதரவாளர். ஆளும் கட்சியோடு தொடர்பு வைத்து தங்களின் மத நிறுவனங்களுக்கு அனுகூலங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

ஜெகத் தனது “நாம்” அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கும்,இந்த மௌனத்தில் வலி நூலிற்கும் 68,லஸ் கோவில் சாலை என்னும் முகவரியைப் பயன்படுத்துகிறார். இது கிறிஸ்தவ நிறுவனமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் முகவரியாகும். ஆக ஜெகத்தின் இன்றைய ஈழம் சார்ந்த துரோகக் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க கிறிஸ்தவ திருச்சபையின் ரப்பர் ஸ்டாம்ப்

இறுதியாக,

பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ, அதற்காக  போரடுவதோ தவறில்லை, ஆனால் போர் நடந்து கொண்டிருந்த போது இந்த பத்திரிகையாளர்கள் எங்கே போயிருந்தார்கள் ? போருக்கு எதிரானது என்று சொல்லப்படும் இந்நூல் நல்லேர் எனப்படும் ஜெகத்தின் பணத்தில் ஏன் வெளிவரவேண்டும்? “நாம்” அமைப்பின் நிறுவனர்களாக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் போன்ற ஈழக் கொலைகாரர்களின் பணம் “நாம்” அமைப்பிடம் இல்லை என்பதற்கு பத்திரிகையாளர்களின் பெயரில் ஜெகத்திற்கு பந்தி வைத்த ஞானவேல் ஏதாவது உத்திரவாதம் தருவாரா? அல்லது நல்லேர் பதிப்பகத்தின் செலவில் வெளிபட்டப்பட்டிருக்கும் இப்பணம் என்பது புலிகளை கடைசி நேரத்தில் எளிதாக சரணடைய வைத்ததற்காக இந்திய உளவு நிறுவனம் ஜெகத் கஸ்பருக்கு சன்மானமாக வழங்கப்பட்ட பணத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை என்று உத்திரவாதத்தையாவது ஞானவேல் கொடுப்பாரா?

அன்பான ஈழத் தமிழர்களே!புலத்து மக்களே!  தமிழக மக்களே! வித விதமான குரலில் பேசி உங்கள் கழுத்த்தறுத்த இந்த துரோகிகளை இனம் காணுங்கள். இன்னும் நீங்கள் இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ஈழத்தில் எஞ்சியிருக்கும் உயிர்களைக் கூட இந்த இரத்த வெறியர்களிடம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இந்தத்  துரோகிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். துரோகத்தை மறைக்க வித விதமான முகமூடிகளோடு வந்து தங்கள் கறைகளை கழுவ நினைக்கும் இந்த கைக்கூலிகளை அம்பலப்படுத்துங்கள். புதிய அரசியல் பாதையை உங்களின் சொந்த அரசியல் அறிவில் முன்னெடுங்கள்.

–          கட்டுரையாளர்: வெண்மணி

தொடர்புடைய பதிவுகள்

  1. அதிரடியான தகவல்களுக்கு வாழ்த்துக்கள் வெண்மணி… உங்கள் அம்பலங்கள் தொடரட்டும். 

    • ஈழத்தின் பால் கட்டுரையாளர் கொண்டுள்ள நேர்மையும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு சொல்லிலும் புலப்படுகின்றது. இந்த துரோகிகளை எண்ணி இரத்தம் கொதித்திருஃக்கிறார், நமக்கும் கொதிக்க வைக்கிறார். இறுதியாக அவர் முன் வைக்கும் மாற்று அரசியல் தீர்வை நாம் வெகு விரைவில் காண வேண்டும்.

  2. அட பாவி மக்கா, பாதிரி கஸ்பரு செஞ்ச வில்லங்கத்தை பாத்தா ரத்தம் கொதிக்குதே, அம்புட்டு ரகசியத்தையும் வெளிய கொண்டுவந்த அண்ணாச்சி வெண்மணிக்கு நன்றி. நக்கீரனுல என்னமாதிரி ஆட்டத்தை போட்டு இந்தியாவோட ஏஜண்ட் கணக்கால்ல பாதிரி புகுந்து வெளையாடியிருக்குதாரு. பாவம் நம்ம ஈழத்து மக்கள் இன்னும் எத்தனை துரோகிகளை பாக்கதுக்கு அவுகளுக்கு விதி விதிச்சிருக்கோ, தெரியலை

    • துணிச்சலான கட்டுரை. பெரிய இடத்தில் மோதியிருக்கிறீர்கள் நிச்சயம் எதிர்வினையை எதிர்பார்க்கலாம். காளமேகம் சொன்னது போல கையறுநிலையென்றால் இதைப்போல இருக்கவும் முடியுமா? திரும்பிய பக்கமெல்லாம் துரோகிகள் அப்பப்பா . இந்த ஈழத்தமிழர் அழித்தொழிப்பு போர் பல பத்தாண்டுகளின் அரசியல் பாடங்களை சில மாதங்களில் சொல்லிக்கொடுத்துவிட்டது. அதற்காக நாம் அளித்த விலை…:-(

  3. நான் மணி

    1. ஜெக‌த் க‌ஸ்பார் ம‌ற்றும் ஞான‌வேல் ஆகியோரின் செல்போன் ந‌ம்ப‌ர் தேவை. அனைவ‌ரும் அவ‌ர்க‌ளுக்கு போன் செய்து நாக்கை பிடுங்குவ‌து போல‌ கேள்வி கேட்க‌ வேண்டும். குறிப்பாக‌ இதைன‌ அவ்விழாவில் க‌ல‌ந்துகொண்ட‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் செய்ய‌ வேண்டும். அப்ப‌டி செய்யாம‌ல் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றியெல்லாம் பேச‌க் கூடாது.

    2. க‌ட்டாய‌மாக‌ புத்த‌க‌மாக‌ வ‌ந்துள்ள‌தால் பேனாவை வைத்தாவ‌து விடுப‌ட்ட‌ அர‌சிய‌ல் வார்த்தைக‌ளை எழுதியே ஆக‌ வேண்டும். அதுதான‌ ஜ‌ன‌நாய‌க‌த்திற்கான‌ போராட்ட‌த்தின் அங்க‌மாக‌ இருக்க‌ முடியும்.

  4. தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும் போது மனித நேய முகமூடி அணிந்து மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த “எட்டப்பன்கள்” , இன்று மக்கள் தங்கள் மனதில் தேக்கி வைத்திருக்கும் ஈழ ரணங்களை பொய்யால், துரோகத்தால், மனித நேய முக மூடியால் ஆற்றி, மக்களின் போராட்டத்தை வலுவிழக்க செய்யும் இந்த கோமாளித்தனங்களை என்னவென்று சொல்ல… காந்தி காலம் முதல் இன்று வரை துரோகிகளுக்கு பயன்படும் இந்த உத்தியை உடைத்து எறிவோம். மக்கள் எழுச்சியை ஆதரிப்போம்.

  5. ஐயோ ஐயோ இந்த அயோக்கியனின் நக்கீரன் கட்டுரைகளைப் படித்து விட்டு என் தம்பி நிறைய தடவை இவரை ‘என்னமா கருணை உள்ளவர்’ என்று உருகுவான். இந்தப் பாவிதான் பிரபாகரனைச் சரணடைய வைத்துக் கொன்றது என்பது தெரியும் போது, நெஞ்சு வெடித்து விடுகிறது. இவரை – என்ன மரியாதை இவனுக்கு – இவன் கனிமொழியின் அல்லக்கை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இவன் ஒரு இந்தியக் கையாள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

  6. ஜெகத் காஸ்பர் தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டதை நினைத்து இப்பொழுது வெட்கப்படுகிறேன்.
    யாரை நம்புறது…யாரை நம்பக் கூடாதுன்னே தெரியல…

  7. நானும் முதலில் தமிழ்உணர்வுள்ள ஒரு பாதிரியார் என்று நினைத்து மேற்படி ஜெகத் அடிகளார் நடத்திய கூட்டங்களுக்கு
    ஆர்வமாக போய்வந்தேன்.ஆனால் இவரைப்பற்றி புலம்பெயர்ந்த நண்பர்கள் சொன்ன தகவல்கள் வேறு மாதிரி இருந்தது.அப்புறம் இவரைப்பற்றி விசாரித்தபோதுதான் மேற்படியார் கில்லாடிக்கு கில்லாடி என்பதை தெரிந்து கொண்டு அதன்பிறகு அவருக்கு முக்கியத்துவம் தராது ஒதுங்கி விட்டேன்.அவரின் உண்மை முகம் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வெளிவருவதில் மகிழ்ச்சி.வினவுக்கு பாராட்டுக்கள்,

    • ஜனவரியில்,கிளிநொச்சி விழுந்த வேதனையில் நாம் இருந்தபோது கனிமொழி இந்துராம் வகையராக்களோடு சேர்ந்து சென்னை சங்கம்ம் என்றபெயரில் கத்தடித்த இவன் எப்படி நம்மாளாய் இருக்க முடியும்.பார்பன சங்கீத அம்மணிகள் மற்றும் அகிலாசீனிவாசன்,பாம்பே ஜெயஸ்ரீ கும்பலுடன் நெர்க்கமான தொடர்பு வைத்திருக்கும் இவன் ஒரு பச்சோந்தி.பார்ப்பன அடிவருடி

  8. ஒற்றன்/துரோகி என அடையாளம் கண்டுவிட்டோம். இவனை ஏது செய்யலாம். இழவு விழந்தபின்னும் அதை காட்டி பிச்சை எடுக்கும் இவனை ஏது செய்யலாம் கம்பீராமாக, துக்கமின்றி, மான, அவமானமின்றி உலா வருகிறானே ஏது செய்யலாம்

  9. கூடிய விரைவில் பிரபாகரன் செய்த துரோகங்களையும் தோண்டி துருவி வெளியிடுவீர்கள் போலிருக்கு. அவர் ஒருவர் மட்டும் தான் துரோகிகள் லிஸ்டில் பாக்கி.

    • ஈழப் போராட்டத்தில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் பாதர் ஜெகத் கஸ்பாரை உங்கள் இதயத்தில் வைத்திருந்தீர்களா

  10. கிருஸ்துவத்திடம் சரணடைந்த ஈழப்போராட்டம் – கட்டுரை சூப்பர்.

    • நெத்தியடி பாய், உங்கள் விவாதம் எரிச்சலை கிளப்பும் விதமாக இருக்கின்றது. இங்கு மக்கள் வாசிப்பதும் விவாதிப்பதும் உயிரும் சதையுமான பிரச்சனை, மரணத்தின் வாசலில் நிற்கும் மக்களை பற்றியது. இங்கே வந்து நீங்கள் points score செய்ய நினைப்பது மிகவும் அறுவறுக்கத்தக்கதாகம் சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் துண்பங்களில் பங்கு கொள்ளாவிடினும் குறைந்தபட்சம்மாக அமைதியாக இருக்கலாமே. இறுதியாக ஒன்று மத அபிமானம் இருப்பது தவறல்ல ஆனால் பித்து..ஆபத்து!

      • மற்றவர்களின் வலி புரியாதவர்கள் அல்ல,முஸ்லிம்கள். உலகெங்கிலும் இந்த வலியை மற்றேல்லாரைவிடவும் மிக அதிகமாக அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வலியை புரியவைக்க இன்னொரு முயற்சி.

        கம்யூனிச கொள்கை அபிமானம் இருப்பது தவறல்ல. ஆனால் பித்து..ஆபத்து! அது, தவறான மௌட்டீகத்துக்கு தங்களை அழைத்து சென்றது. அதுதான், “பார்ப்பனீயத்தில் சரணடைந்த இஸ்லாம்” என்று தங்களை தலைப்பிட வைத்தது.

        இதே பதிவை, உங்களுக்கு முன் தமிழ் சர்க்கிளில் போட்ட இரயாகரன், ஏன் இதே தலைப்பை வைக்கவில்லை? அவர், வலியை உணர்ந்தவர். அவருக்கு கம்யுனிச பித்து தலைக்கு ஏறவில்லை. அவ்வளவு பேர் சொல்லியும், ஏன் இந்த ஈகோ? பலவகையிலும் முயன்று முடியாமல் போய் என்னை இந்த நிலைமைக்கு தள்ளியது நீங்கள்தான். இது எதிர்வினை. உங்களால் விளைந்த எதிவினை.

        • கம்யூனிச பித்து பிடித்தால் மோடிக்கள், முல்லா உமர் போன்றவர்கள் இருக்க மாட்டார்கள். மன்னிக்கவும் பார்ப்பனியமும் இருக்காது

    • நண்பர் முகம்மது அவர்களுக்கு,

      தயவு செய்து ஈழ மக்களின் துயரத்தை கேலிக்குள்ளாக்காதீர்கள்.

      • நண்பர் ராமலிங்கம் அவர்களுக்கு, தயவு செய்து ஈழ மக்களின் துயரத்தை கேடயமாக ஆக்கி, அநியாயம் இழைக்கப்பட்டவர்களை கேலி செய்யாதீர்கள். அவர்களின் நியாயத்தை மிதித்து அழிக்காதீர்கள்.

        • நெத்தியடி முகமது,

          இங்கே ராமலிங்கம் எங்கே கேலி செய்தார்? அது நீங்கள் செய்த்தே. கட்டுரையின் மையமான விசயத்தை விட்டு விட்டு இப்படி விவாதத்தை திசை திருப்பும் உங்களது செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் நீங்கள் என்ன ஆதாயம் அடையப்போகிறீர்கள்? வாசகர்கள் மத்தியில் நீங்களாகவே அம்பலப்படுவதுதான் நடக்கும். தயவு செய்து அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்

        • கிருஸ்துவத்திடம் சரணடைந்த ஈழப்போராட்டம் : இதில் தவறாக நான் என்ன கூறினேன்? இது ஒன்றும் கட்டுரையின் மையக்கருத்துக்கு முரணாக இல்லையே? கட்டுரையை ‘சூப்பர்’ என்று பாராட்டினேன். அது தவறா? இதில் எதை தவறு என்கிறீர்கள் ?

    • Tecan போலவே, ஈழம் சம்பந்தப்பட்ட பதிவுகளின் விவாதங்களை சீர்குலைக்க எத்தனிக்கும் நெத்தியடி- யார்? துரோகிகளை அறியும் காலமிது!

      • ////கிருஸ்துவத்திடம் சரணடைந்த ஈழப்போராட்டம்////
        —-விவாதங்களை சீர்குலைக்க எத்தனிக்கும் இந்த “?” யார்?
        ஒரு பாதிரியாரின் தாக்கம் எந்த அளவுக்கு வலிமையான ஈழப்போராட்டத்தில் ஊடுருவி இருந்து உள்ளது என்பதை மிக தைரியமாக கட்டுரையாளர் அம்பலப்படுத்தி உள்ளார். அதைப்பற்றி பேச “?”-க்கு பயமா?

      • ஜெகத்தின் குடும்பம் ஏழ்மையானது.ஆனால் இன்று ஆவர் கோடியில் புரள்கிறார்.இதை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை.இந்து சாமியார்களோ துறவிகளோ இப்படி இருக்க முடியுமா?விடுவார்களா?கஸ்பரின் ஆடம்பர வாழ்க்கையையும்,மேல்மட்ட தொடர்புகளையும் அதனால் அடையும் ஆதாயங்களையும் யாராவது எழுதினால் சுவையாக இருக்கும்

  11. ஈழம் – கூத்தாடிகள் கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ?

    http://vrinternationalists.wordpress.com/2009/11/16/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/

  12. அய்யோ அய்யோ என்னத்த சொல்ல,
    சரி நீங்க இப்படித்தான்னு தெரியும் அதுக்காக இப்படியா
    உங்க கருத்துக்களும் நீங்க சொன்ன விசயங்களும் அதிர்ச்சிகரமானவை நீங்கள் சந்தேகிக்கும் சில காரியங்கள் உண்மையாக இருக்குமேயாயின் காரணமானவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள். . ஆனாலும் எல்லாருடைய எதிர்மறையான பல விசயங்களை ஆராயும் நீங்கள் புலிகள் இப்படி ஆனதற்கான காரணத்தை மட்டும் ஏன் அறிய தர மறுக்கிறீர்கள்

    இத்தனை ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக வெற்றிகளை பெற்றுவந்த ஓர் போராட்ட குழு முழுமையாக அழிக்கப்பட்டதன் பின்னணி என்ன? (முழுமையாக அழிந்து விட்டதா?) என்பெதெல்லாம் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியிடுங்களேன் . . 

    இப்படி எல்லாருமே சுயநலவாதிகளாக இருந்தால் சொந்த நாட்டிலே அனாதைகளாக்கப்பட்டு வரும் தமிழர்கள் இனி என்னதான் ஆவார்கள்?

    • நான் மணி

      அவங்க அப்படித்தான்னு எப்படி தெரிந்து கொண்டீர்கள். எதனை ரெபரன்சாக வைத்திருந்தீர்கள். நேர்மறையில் மாத்திரமே தெரிய வேண்டும் என்ற உங்களது பார்வையின்படி பாதிரி ஜெகத் கஸ்பரின் நேர்மறை அம்சங்களை நீங்கள் தொகுக்கலாமே… புலிகள் ஏன் இப்படி ஆனார்கள் என இதே தளத்தில் வெவ்வேறு தருணங்களில் பல முறை எழுதப்பட்டுள்ளது. படித்து விட்டு பேசலாம். மாறாக உங்களது வசதிக்காக வினவைத் தொகுத்துத் தரக் கூறுகின்றீர்கள். தனியாக மொத்த ஈழம் சார்ந்த வெளியீடு மூன்றும் தளத்தில் உள்ளது என நினைக்கிறேன்.

      ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சியின் வளர்ச்சிப் போக்கின் சாரத்தை எடுத்துக் கொண்டு அதன் தன்மையை ஆராய்வதுதான் சரியான பார்வை. இதில் விடை எதிர்மறையாக வருமானால் அது ஆராய்ந்தவனின் குற்றமா.. ஆராயப்பட்ட பொருள் அல்லது நிகழ்வின் குறைபாடா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்…

      மாறாக வெள்ளையாக இருப்பதெல்லாம் உப்பு என்று கருதி சோடா உப்பை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடியாது என நினைக்கிறேன்..

  13. ஒருவேளை புத்தக வெளியீட்டு மேடையில் நிற்பவர்களில் ஜத்குருவுக்கும் பிரகாஷ் ராஜுவுக்கும் இடையில் கி.வீரமணியை நிறுத்தி இருந்தால் பத்திரிகையாளர்கள் ஏமாந்திருக்க மாட்டார்களோ…

    • வீரமணியும் என்ன லேசுப்பட்ட ஆளா? ரத்தச்சேறு படிந்த ராஜபக்சேயின் கொலைக்கரத்துடன் கைகோர்த்து வடக்கின் வசந்தம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஓநாய்தானே..அது! செத்த பிறகும் ரத்தம் குடிக்கும் ஓநாய் அது. பெரியார் மணியம்மை பல்கலைக்கும் வடக்கின் வசந்தத்திற்கும் உள்ள வியாபார (மூன்றாம் தரப்பு) ஒப்பந்தம் ஏற்கெனவே அம்பலமாகி விட்டது.

  14. ஈழத்தமிழர்களின் வாழ்வோடும். உயிரோடும் எல்லோரும் விளையாடிப்பார்த்து முடித்து விட்டார்கள். இப்போது பத்திரிகையாளர்கள் முறை. நக்கீரன் கோபால் நன்றாக கற்று வைத்துள்ளார். தேசியத்தலைவர் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் தான் அவருக்கு காமதேனு. இப்படியும் ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள் என்று வெட்கி தலைகுனிகிறேன்.

  15. இந்த துரோகியை காவி இந்தளவுக்கு உயர்த்தியதில் வலைப்பதிவர்களாக எமது பங்கும் இருந்தது என்பது வருத்தமே

    இருப்பினும் இனியாவது உணர்ந்து கொள்வார்கள் என்று பார்த்தால்

    இன்னும் இவரின் சாத்தான் வேதத்தை கர்த்தரின் வேதமாகவும் ஈழத்தின் காவலனாகவும் காவி வரும் தளங்களையும் அருவருடிகளையும் என்ன என்று சொல்வது ??

    இதற்கு வினவுக்கு எனது நன்றிகள் வெண்மணிக்கு பாராட்டுக்கள்

  16. இக்கட்டுரை எதிர்பார்த்தது தான். இந்த பாதர் என்றைக்கு மத்திய காங்கிரஸ் அரசை மறைமுகமாக ஆதரித்தும், காங்கிரஸின் ஜெயந்தி நடராஜனையும் சிதம்பரத்தையும் பாராட்டிப் பேச ஆரம்பித்தாரோ அன்றைக்கே இவரின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கிவிட்டது. ஒரு முறை வதை முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் இந்திய இலங்கை அரசுகளை கண்டித்தும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பாக சென்னையில் கடந்த ஜூன் 7, 2009 அன்று நடைபெற்ற பேரணியில் கண்டிப்பாக பிரபாகரன் புகைப்படம் தாங்கிய அட்டைகளை பிடிக்கக் கூடாது என்று அங்கிருந்தவர்களிடம் எச்சரித்தவர் தான் இந்த கஸ்பர் (அவர் சொல்லியும் பெரும்பாலானோர் பிரபாகரன் புகைப்படம் தாங்கிய அட்டைகளை தாங்கிச் சென்றோம் என்பது வேறு விடயம்). தற்போது கனிமொழியுடனான அடிக்கடி சந்திப்பு வேறு (அது ஒரு வேளை கருணாநிதியை தமிழின துரோகி என்ற பட்டத்திலிருந்து காப்பாற்றவா?). புலம் பெயர்ந்த தமிழர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே இவரின் முகமூடியை கிழித்து இணையதளங்களில் செய்தி வெளியிட்டுவிட்டனர். அதை மறைக்க நக்கீரனில் ஏதேதோ சொல்லி சப்பை கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார் இந்த பாதர்.

    தோழர் வினவு, தக்க நேரத்தில் கஸ்பரைப் பற்றி கட்டுரை வெளியிட்டதற்கு நன்றி. இல்லையென்றால் இவரும் திருமா போல் புலிகளின் வீரம் பேசியே தமிழக மக்களை ஏமாற்றி, காங்கிரஸ் மற்றும் கருணாநிதியின் ஈழ துரோகத்தை மறைக்கும் முயற்சியை தொடர்ந்திருப்பார். ஈழ விடுதலை போராட்டத்தில் துரோகிகளை கண்டறிவதிலேயே காலம் முடிந்துவிடும் போலிருக்கிறதே. தமிழர்களே இனியாவது உணர்ந்து செயல்படுவோம்.

  17. தோழர்..

    இங்கு இணையத்தில் கூடி கும்மியடிபதாலோ அல்லது ஊர்வலம் ஆர்பாட்டம் செய்வதாலோ அல்லது நீ துரோகி நான் துரோகி என ஆராய்ச்சி செய்வதாலோ அந்த மக்களுக்கு விடிவு வரப்போவதில்லை..

    மொத்ததில் டில்லி ஏகாதிபத்தியத்தை தமிழர் நாட்டில் முடக்குவதே சரி! நம்ம கோரிக்கைக்கு செவி சாய்க்காத மத்திய அரசாங்கம் என்ன மயித்துக்கு தமிழ் நாட்டில் நடக்க வேண்டும்.. தெரு முக்கில் நின்று கத்துவதால் யாரும் கவலைபட போவதில்லை.. வேடிக்கை பார்த்தே பழக்கபட்ட தமிழ் இனம் யாரோ யாருக்காகவோ..என்று வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.. எங்கள் ஊரில் பா.உ. சண்முகம் என்று ஒரு எம்.எல்.ஏ இருந்தார் ஒரு ஓட்டுக்காக ஒருநாள் முழுவதும் அந்த வீட்டில் தங்குவார்.. உணவு உண்பார்.. குசலம் விசாரிப்பார்.. முடிவில் வெற்றி அவருடையதே.. தோழர்கள் அத்தகைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. வீடு வீடாக புகுந்து அவர்களின் உறவினனாக பழகி இந்த கொடுமைகளை விளக்க வேண்டும் ..குறிப்பாக தயார்படுத்த பட்ட ஆவணங்களுடன்.. எத்தனை தோழர்கள் அவ்வாறு உங்களுடன் இருக்கிறார்கள்.. என் பணியை நான் எப்போதே ஆரம்பித்துவிட்டேன்

    செந்தமிழன்

  18. //தோழர்கள் அத்தகைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. வீடு வீடாக புகுந்து அவர்களின் உறவினனாக பழகி இந்த கொடுமைகளை விளக்க வேண்டும் ..//ஓகோ..அப்படியா…மேமாதம் நடந்த தேர்தலில் வீடுவீடாகப் போய் காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதீங்க..ஈழத்தாய்க்கு இரட்டை இலையில் ஓட்டுப் போடுங்க என்று சொல்லி டில்லி ஏகாதிபத்தியத்தை 40 தொகுதிகளில் முடக்கினாங்களே…அதே மாதிரியா?

    • தோழர் ..

      நான் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கவும் இல்லை..யாரையும் ஆதரிக்கவும் இல்லை..நீங்களாகவே ஒரு கற்பனையை வளர்த்து கொள்கிறீர்கள் ..நான் அந்த எம்.எல்.ஏ எந்த கட்சியை சேர்ந்தவர் என்று குறிப்பிடவே இல்லை.. ஆனால் அது போல் பழக வேண்டும் என்று சொன்னேன்.. ஆனால் அவருடைய பூர்வீகம் தெரிந்து குறுக்குசால் ஓட்டுகிறீர்கள் என்றால் கட்டாயம் நீங்கள் ரோவினுடைய உள்வாளிதான்..இந்தி தேசிய தேர்தல் என்பது முடிச்செறுக்கியையும் முள்ளமாறியையும் நேருக்கு நேர் நிறுத்தி இரண்டில் ஒன்றைதேர்வு செய்க என்பதாகும்.. ஒருவரை நீங்களே எதிரியாக தேர்வு செய்துவிட்டபிறகு வேறு என்ன நீங்கள் “அந்த” கட்சியின் ஆளாகத்தான் இருக்க வேண்டும்..இதுதான் திராவிட அரசியல் நியதி!!!!

      ரோ உளவாளியே வாழ்க! நீங்களாகவே ஜெயலலிதாவினை இழுப்பதில் இருந்து தெரியவில்லை..நீங்கள் இந்த கொலைகார தேசிய அரசியலில் உள்வாஙக்ப்ட்டுள்ளீர்கள் என.. என்ன மீண்டும் தெரு முக்கில் கூடி கும்மி அடியுங்கள் ராச பக்சே மிர மிரண்டு போவார்…

      • தோழர் செந்தமிழன்!நான் கேட்டிருந்தது இதுதான் “இரட்டை இலையில் ஓட்டுப் போடுங்க என்று சொல்லி டில்லி ஏகாதிபத்தியத்தை 40 தொகுதிகளில் முடக்கினாங்களே…அதே மாதிரியா?”..இதில் நீங்கள் செய்தீர்கள் என்ற பொருள் எங்கே வருகிறது? நீங்கள் ம.செந்தமிழன் இல்லைதானே? அவராய் இருந்தால் ஆத்திரம் வருவதில் நியாயம் இருக்கிறது. அவரின் அப்பா மணியரசன் தான் மே தேர்தலில் காங்கிரசுக்கு மட்டும் ஓட்டுப்போடாதீங்க என்று ஊர் ஊராகப் போய் ஈழத்தாய்க்கு காவடி எடுத்தார். இந்திய ஏகாதிபத்தியத்தை அதன் குண்டுச்சட்டிக்குள் நின்றே காங்கிரசை மட்டூமே எதிரியாக நிறுத்தி தமிழ்தேசியம் வளர்த்தார்.. நீங்கள் ம.செந்தமிழன் இல்லையே! இருந்தாலும் பரவா இல்லை.. ஆனால் ராவின் ஆள் எனும் பட்டம் எல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவர்தான்.. ஏதோ மனசில் பட்டதை எழுதினால்..கையில் முத்திரையோடு வந்துவிடுகிறீர்கள்..இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்திப் பிரச்சாரம் செய்வதுதான் உங்கள் நோக்கமென்றால் சரியான அரசியலே அது..இங்கிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளனைத்துமே முறியடிக்கப்பட வேண்டியவர்கள்தான்.. இந்த அரசியலை சத்தியமாக ரா ஆதரிக்காது என்று உங்களுக்கும் தெரியும்.

    • ஏன் நண்பரே இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க? ஏன் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சேலம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரச்சுரம் விநியோகித்து காங்கிரஸ்சை முடக்கப் பாடுபட்டார்களே அது போல் நம்மால் செய்ய முடியாதா? தியாகி முத்துக்குமாரையே யாருன்னு திமிறேடுத்துக் கேட்ட பொறம்போக்கு EVKS இளங்கோவன் ஈரோட்டில் தோற்கவில்லையா… தொகுதிக்கு கொஞ்சம் பணம் ஒதுக்கியும் பார்ப்பன் மணிசங்கர ஐய்யன் மயிலாடுதுறையில் தோற்கவில்லையா? ஏன் செருப்படி சிதம்பரத்தை கடைசி நேரத்தில் முட்டுக் கொடுத்து கடினமாக வெற்றி பெற வைத்தார்களே… (அந்த அ.தி.மு.க பொறம்போக்கும் கடைசி நேரத்தில் பணம் வாங்கிக் கொண்டான் என்பது வேறு விடயம்). இதெல்லாம் டில்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழகத்தின் ஒரு எழுச்சி தானே? இல்ல இதெல்லாம் அந்த ஈனத் தாய்க்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னதாலேயா?

      இதுதாங்க போராட்ட எழுச்சி… இனிதான் மெல்ல மெல்ல டில்லி ஏகாதிபத்தியத்தை தமிழகத்தில் இருந்து துடைக்க வேண்டும்… ஈழக் குரலை உயர்த்த வேண்டும் (ஏன் இந்த கருணா என்ன இன்னும் நூறு வருஷம் வாழவா போறான் டில்லிய காப்பாத்த???)

  19. அமிழ்ந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்த அருமையான கட்டுரை. போரின் வலியை விட யாரை போராளியாக ஏற்பது எனும் குழப்பத்தின் வலி மிகுதியாகும் போலிருக்கிறது. அவர்களின் அயர்ச்சியை போக்கும் விதங்களில் நமது போராட்டங்கள் அமையட்டும்.

    தோழமையுடன்

    செங்கொடி

  20. The fate of Tamils in Srilanks Still hangs imbalance. lets not fight within our roots. The enemy gets the benefit out of it. Leader Prabhakaran must be followed with stern action to uproot the enemies within and outside. So try and remove the black sheeps with gun and sword. Thats the way it is heading now. Every party and the missionaries supposed to work for peace and harmony try to gain from the affected Tamils in the camps, as if these cowards are trying hard for the people’s benefit dying there. But those who took advantage from the war to gain political interested , like MK, JJ, Thiruma, Vaiko, Nedumaran, must be hanged.

  21. //துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் “தேர்தலுக்காக” என்ற சொல்லும் “இந்திய கொலைக்கரம்” என்ற சொற்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்குப் பதிலாக வெளியீட்டாளராக ஜெகத் கஸ்பார் அவதரித்திருக்கிறார். இவ்விரு விசயங்கள் குறித்தும் உடனே குணசேகரனுக்கு போன் செய்து கேட்டாராம் துரை. சண்முகம். அதிர்ச்சி அடைந்த குணசேகரன், கவிதையை ஞானவேலிடம் கொடுத்ததாகவும் இந்த அயோக்கியத்தனம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருந்தினாராம்//
    முற்போக்கு சிந்தனையுடைய பத்திரிக்கையாளர்களாகக் கருதப்படுவோர், கஸ்பார் போன்றவர்களுக்காக வேலை செய்து கொடுப்பது எந்தவகையில் நியாயமாகும்?

    எதுவுமே தனக்குத் தெரியாது என்று ஒரு பத்திரிக்கையாளர் கூறுவதை நம்மால் நம்பமுடிகிறதா?

    இதையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த டி.டி.களைப் பற்றி ஜெயா நீதிமன்றத்தில் சொன்னதையும் நாம் நம்பத்தான் வேண்டும். (“எனக்குத் தெரியாத யாரோ என்பெயரில் டிடி எடுத்து அனுப்பிவிட்டனர்”).

    “இந்த அயோக்கியத்தனம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று மிகவும் “பொறுப்பாக”ப் பேசுவது, இம்மாதிரியான ‘முற்போக்கு’ நபர்களுக்கு புதிதில்லை.
    பிரபஞ்சன் முதல் சுப.வீ வரை இதற்கு ஒரு வரலாறே இருக்கிறது. ‘வைகோதான் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், போர்வாள் என்றெல்லாம் எழுதித்தள்ளுவார்கள். ராமதாசைப் ‘போராளி’ என்பார்கள். அவர்கள் அடுத்தடுத்து அம்பலமானபோதெல்லாம் “இதெல்லாம் தெரியாமல் நம்பி ஏமாந்துவிட்டோமே” என்று “பொறுப்போடு” அரசியல் பேசுவார்கள்.

    தோழர்கள் மட்டுமல்ல, பல்வேறு இயக்கங்கள் நடத்தும் தமிழ் தேசியவாதிகளும், பெரியார் இயக்கவாதிகளும் இவ்விசயத்தில் கவனமாக இருப்பதுதான் நல்லது.

  22. வினவு தோழர்களுக்கு வணக்கம்.
    இனியொரு தளத்தில் வெளிவந்துள்ள பற்றிய ஒரு கட்டுரைக்கு ராஜேஸ்வரன் என்பவர் எழுதியுள்ள‌ இந்த பின்னூட்டத்தில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மையா ?

    இது உண்மை எனில் வினவு கலையரசனை எப்படி ஆதரிக்கிறது ?
    இது குறித்து விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.
    அந்த பின்னூட்டமும் சுட்டியையும் கீழே கொடுத்துள்ளேன்.

    ////////////////////////////////////////////////////////////////////////
    இனியொரு ஆசிரியர் குழுவிற்கு மற்றவர்கள் மீது குறை குற்றம் சுமத்த முன் உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். ஐஎன்எஸ்டி என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனத்தைப்பற்றி வாய்கிழிய எழுதுகிறீர்கள்.ஆனால் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான உங்கள் நண்பர் கலையரசனைப்பற்றி வாய் திறக்கவே மாட்டீர்கள் அவரின் “புரட்சி” கட்டுரைகளை பிரசுரிப்பீர்கள். இது என்ன நியாயம். உங்களைப்போல் புரட்சி போராட்டம் என்று எழுதுகிற வினவு இணையத்தளம் இந்த ஏகாதிபத்திய தாசருக்கு இவரின் இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது. வினவு இனியொரு இணையத்தளங்கள் பேசுவதெல்லாம் ஊருக்கு உபதேசம்தான? எம் பெளசர் இதில் கலந்துகொள்கின்ற ஒருவரே தவிர ஐஎன்எஸ்டியில் அங்கத்தவர் அல்ல. அவரைப்பற்றி எழுதும் அசோக் யோகன் ஐஎன்எஸ்டியில் முக்கிய உறுப்பினர்களான நோர்வே- சரவணன் கொலன்ட் – கலையரசன் சுட்காட் -சிவராஐன் இவர்களைப்பற்றியெல்லாம் வாய்திறக்கமாட்டார். இதுதான் இவர்களின் மாற்று அரசியல்.முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள். இனியொரு கலையரசனின் பத்துக் கடுரைகள் வரை பிரசுரித்திருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய் வினவு கலையரசனுக்கு ஒரு சிறப்புப் பகுதியையே ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இனிமேல் சுசீந்திரன் பற்றிப் பேசுவதை யும் அமார்க்ஸ் ராஜதுரை போன்றோரை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍////////////////////////////////////////////////////////////////////////

    http://inioru.com/?p=7440

    • தோழர் சித்தார்த்தன்,

      இது தொடர்பாக தோழர் கலையரசனிடம் விளக்கம் கோரியிருந்தோம். அவரது கூற்றுப்படி அவர் ஐ.என்.எஸ்.டி கருத்தரங்கில் பல அரசியல் சார்பு கொண்டவர்கள் பங்கேற்றதைப்போல பங்கேற்று அவர்களது ஐரோப்பிய நிதி உதவியை விமரிசனம் செய்தே பேசியிருக்கிறார். மற்றபடி அந்த என்.ஜி.ஓவில் அவர் முக்கிய உறுப்பினரெல்லாம் இல்லை. தற்போது அந்த என்.ஜி.ஓ குழு பெருமளவு முடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே தோழர் கலையரசன் என்.ஜீ.ஓ அமைப்பொன்றுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற அவதூறை நாங்கள் ஏற்கவில்லை. தோழர் கலையரசனை ஏகாதிப்த்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தோழர் என்றே கருதுகிறோம். அவர் வினவு தளத்துக்கு கட்டுரை எழுதக்கூடாது என்பது மேற்கண்ட பின்னூட்டம் இட்டவரின் நோக்கமாக இருக்கலாம். அந்த பொய் வலையில் நாங்கள் சிக்கவில்லை. இந்தப் பிரச்சினையில் வினவின் நிலை இதுதான்.

  23. விளக்கத்திற்கு நன்றி தோழரே.

    போலிகளை காப்பாற்ற நம்மையும், கலையரசனையும் கறை படிந்தவர்களாக சித்தரிக்க முயலுகிறார்கள்.

    என்னுடையதையும் உங்களுடைய‌ இந்த பின்னூட்டத்தையும் இனியொருவில் அப்படியே இடுகிறேன்.

    இந்த நரித்தனத்திற்கு தோழர் கலையரசனே இனியொருவில் வந்து பதிலளித்து விட்டால் அவர்களின் முகத்தில் கரியை பூசியது போல் ஆகிவிடும், ஏனென்றால் இனியொரு அவரைப் பற்றி தவறுதலாக புரிந்து கொண்டு கீழ் கண்டவாறு பதிலளித்துள்ளது. தோழர் கலைக்கு இதை தெரிவித்து அவரையே பதிலளிக்கச் சொல்ல இயலுமா தோழர் ?

    ———————————————
    இனியொரு பதில்

    ராஜேஸ்வரன், இனியொரு மீதான உங்கள் விமர்சனத்தை கவனம் கொள்கின்றோம். நீங்கள் குறிப்பிடும் கொலன்டைச் சேர்ந்த கலையரசன் அவர்கள், ஐஎன்எஸ்டி என்ற நிதி நிறுவனத்தோடு மிக நெருக்கம் கொண்ட அதன் அங்கத்தவர் என்பது எமக்கு தெரிந்த பின்னர் அவரின் கட்டுரைகளை பதிவிடுவதை நாம் தவிர்த்துள்ளோம். இறுதியாக அவரின் கட்டுரை 31 ஜனவரி 2009 திகதிக்கு பிற்பாடு பதிவிடப்படவில்லை என்பதை தயவு செய்து கவனம் கொள்ளவும். .

    • தோழர் சித்தார்தன், இனியொருவிற்கு குறைந்த பட்ச தோழமையும் அக்கறையும் இருந்திருந்தால் இப்படி ஒரு பதில் எழுதும் முன்னர் தோழர் கலையரசனிடம் விளக்க்ம் கேட்டு பெற்றிருக்கவேண்டும். அவர்களிடம் அது இல்லை.. அதனாலேயே தோழர் கலையரசினடம் பதில் சொல்லக் கோருவது அவரை அவமானப்படுத்துவது போலாகும் என நன் கருதுகிறேன்.

      தவிர இனியொருவில் பின்ந்வீனத்துவ்வாதிகள் முதல் கம்யூனிச எதிரிகள்வரை கட்டுரை எழுவ்தை நீங்கள் காணமுடியும். எனவே இதில் தவறு இனியொருவிடத்தில்தான் இருக்கின்றது, வேண்டுமென்றால் அவர்களை சுயவிமர்சனம் ஏற்கச்சொல்லலாம்

      • நீங்கள் சொல்வது சரி தான் தோழர், நான் தோழர் கலையரசனை சுயவிமர்சனம் ஏற்கச் சொல்லவில்லை. இது பற்றி அவருடைய கருத்தை அவரே சொல்வது அவர்களுக்கு இன்னும் சரியான அடியாக இருக்கும் அல்லவா அதனால் அவரே விளக்கம் கொடுக்க முடியுமா என்று தான் கேட்டேன்.

  24. ஜெகத் க
    ஸ்பர் போன்ற பாதிரிகளை தமிழ் மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். தமிழ், தமிழன் என்று பேசி கடைசி நேரத்தில் நடேசனையும் போராளிகளையுமே கருவறுத்திருக்கிறான். இந்தப் பாவி. இவனுடைய நடவடிக்கைகள் ஆளும் வர்க்கம் சார்ந்து அமைந்த போதே இந்த சந்தேகம் எழுந்தது. இப்போது நூறு சதம் அது நிரூபணமாகிவிட்டது.

  25. தோழர்கள் வினவு சித்தார்த்தன் நான் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கலையரசன் மீது குற்றம் சுமத்தவில்லை. ஆதரத்துடனேயே இக் குற்றச்சாட்டை இனியொரு இணையத்தளத்தில் முன் வைத்தேன். புகலிடத்தில் புரட்சிபேசும்பலருடைய மறுபக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை நீங்கள் அறியவேண்டும். இவர்களின் எழுத்துக்ளையும் பேச்சுக்களையும் வெறுமனவே வைத்து இவர்களை முற்போக்கானவர்களாக புரட்சிகர சக்திகளாக கருதி தயவு செய்து ஏமாறாமல் இருக்கவேண்டும். கலையரசனைப்பற்றியும் ஐஎன்எஸ்டி பற்றியும் அதில் அங்கம்வகிக்கும் ஏணையவர்கள் பற்றியும் முழுமையாக எனக்கு தெரியும் என்பதாலேயே இக் குற்றச்சாட்டை முன் வைத்தேன். இத்தோடு ஐஎன்எஸ்டி என்ற தன்னார்வ நிதி நிறுவனத்தின் உத்தியோக பூர்வ இணையத்தள முகவரியை இத்தோடு இணைத்துள்ளேன் அதில்Favourite Sites என்ற பகுதியில் கிழ் ஐஎன்எஸ்டி உறுப்பினர் பிலொக் என்ற பகுதியில் கலையரசனின் இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். தோழர்களே புகலிட புரட்சியாளர்களிடம் கவனமாக இருங்கள்

    http://srilankandiasporablog.wordpress.com/2009/10/19/badboll-insd/

    Favourite Sites
    Beyondframe
    Boondi.lk
    Campaign for Free & Fair Election
    Free Media Movement, Sri Lanka
    Groundviews.org
    INSD Norway
    INSD-Membersblog: KALAIYARASAN
    Release Tissainayagam
    Rightsnow
    Vikalpa.org

    • ராஜேஸ்வரன்,

      வினவுக்கு கூட நாங்கள் அரசியல் ரீதியாக தவறு என்று கருதும் சிலர் ( எல்லோருமல்ல) லிங்க் கொடுத்துள்ளார்கள். அதை வைத்து வினவை மதிப்பிடுவது சரியாக இருக்குமா என்று பார்க்கவும். அடுத்து உங்களைப்பற்றி எந்த விவரம், பின்னணி, அரசியல் எதுவுதம் நேரடியாக தெரியாமல் நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை மட்டும் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் பிரச்சினை இந்தக்கட்டுரையின் விவாதத்தை திசை திருப்பும் என்பதால் இந்த அளவில் முடித்துக் கொள்கிறோம்.

  26. ஜெகத் கஸ்பார் புலிகளின் கடைசி கட்டத்தில் இப்படியொரு செயலில் ஈடுபட்டிருப்பார் என்பது நக்கீரன் வாயிலாக அவரை அறிந்து கொண்டவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியையே ஏற்படுத்தும். போர் உக்கிரமாக நடந்த காலத்தில் அந்த போருக்கு இந்திய ஊடகங்கள் வழங்கிய ஊடக அங்கீகாரத்தை கடுமையாக எதிர்த்து டைம்ஸ் நவ், NDTV ஆகிய ஆளும் வர்க்க ஊடகங்களில் முழங்கினார். சு.சாமியை இத்தாலிய உளவு ஏஜன்ட் என்று நேருக்கு நேராய் அவர் அழைத்தார்.

  27. கஸ்பரை தோலுரித்த அதே நேரம், அதோடு சேர்த்து, நக்கீரனையும் ஒரு வாங்கு வாங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனேனில், கஸ்பரின் “கதையை” bannerல் வைத்து, காசு பார்க்கும் நக்கீரன், கஸ்பரை விட, மிகப் பெரிய துரோகி.

  28. ஃபாதர் கஸ்பருக்கு சொம்பு தூக்குன பதிவுக்காரவுக யாரையும் காணமே, என்னன்னு ஒண்ணும் விளங்கலயே? நம்புனது ஒருபாடு தப்புனு கூடத் தோணாத்துக்கு என்னத்த காரமுனுண்னு சொன்னாத்தம்லா நல்லது. வாங்கடே வந்து சொல்லுங்கடே!

  29. your writing shows how frustrated you are, that’s normal. But you criticize everyone around you. Certainly i do not know much about Elam war as you know. But i can not accept one thing that the defeat of Prabhakaran is just because of Fr. Casper. I strongly believe it is much more than that. Tigers would have faced pressure from many international powers. I have many doubts. How KB was arrested as soon as the war was over. who protected him till then. it shows very clearly that FBI, RAW etc. etc., well known about his hiding place even before the war and they were watching everything silently. Why Raja (the American Tamil billionaire) who said to be the major funder for tiger’s arm procurement was arrested now when the FBI behind him for at least ten years. These all shows how these people have become useless for THEM to play anymore with them. In this Fr. Casper is or may be used as a small tooth stick if he is involved in it.

  30. ஈழத்தமிழனின் அவலத்தையும், வலியையும் எவ்வளவு விரைவில் காசாக்கமுடியுமோ அவ்வளவு வேகமாக காசாக்க ஜெ.காஸ்பருக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்கிறார். எங்களுக்காய், எங்களின் உரிமைகளுக்காய் போராடியவர்கள், எங்களின் வலிகளை தங்களின் தோள்களில் சுமந்தவர்கள், ஈழத்தமிழர்களுக்கு எல்லாமுமாய் இருந்தவர்கள் எவரும் இன்று உயிரோடு இல்லை. எஞ்சி இருப்பவர்கள் சிங்கள ராணுவத்தின் சித்திரவதையைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆனால், ஈழத்தமிழனின் பிணக்குவியலின் மேல் நின்றுகொண்டு தமிழினத்துரோகிகள் எல்லாம் மனிதாபிமானம், சமாதானம் என்றெல்லாம் பேசி இன்னும் எத்தனை பேர், எத்தனை காலம் எங்களை ஏமாற்றுவார்கள்? துரோகிகளினதும், துரோகங்களினதும் பட்டியல் நீளும் வரையில் எங்களின் துயரங்களும் நீண்டுகொண்டேதான் போகும். இந்த போலிகளையும், துரோகிகளையும் இனங்கண்டாலே எங்களுக்கு பாதி அவலம் தீரும். ஆனாலும் ஜெகத் காஸ்பரை இனங்கான இவ்வளவு நான் எடுத்தது தான் எனக்கு ஏனோ எரிச்சலாகவும், வியப்பாகவும் உள்ளது. 

  31. யார் இந்த ஜெகத் கஸ்பார்? தோலுரிக்கு உண்மை 

    விடுதலைப்புலிகளுக்கு துரோகம் இழைத்த இந்த ஜெகத் கஸ்பார், தாம் தான் மிகப்பெரிய ஒழுக்க சீலர் என எழுதியும் கூறயும் வருவது எதற்காக.

    வெரிதாஸ் வானொலிக்கு பின்னர், சென்னையில் தஞ்சம் அடைந்த இந்த ஜெகத் கஸ்பார், முதலில் நம்பவைத்து கழுத்தை அறுத்தது, விடுதலைப்புலிகளைத்தான். இலங்கையில் சமாதான காலத்தில், கருணாவை இலங்கை அரசு பக்கம் திரும்பியதே இந்த ஜெகத் கஸ்பார் தான். விடுதலைப்புலிகளின் நம்பிக்கையை பெற்று இருந்த காலத்தில், பணத்தசை பிடித்து விடுதலைப்புலிகளின் தலைவருக்கு பணத்தில் தூரோகத்தை செய்து விட்டு, கருணாவையும் வெளியேற செய்ததாலேயே, விடுதலைப்புலிகளின் தலைமை இவரை பின்னர் நம்ப மறுத்தது. அத்தோடு, விடுதலைப்புலிகளுக்கு செய்த வெரிதாஸ் (கிருத்துவ மக்களுக்காக பிலிப்பைன்சில் ஒலிபரப்பப்பட்ட வானொலியில், இவர் செய்தி வாசிப்பாளராய் இருந்துள்ளார். இவருக்கு யாழ்- சென்னையில் இயங்கும் இவ்வானொலியின் தலைமை, ஈழத்தமிழர் கொடுமைகளை வெளிகொண்டு வர இட்ட கட்டளையின் படியே பரப்புரை மேற்கொண்டார்.) செய்தி பரப்புரைக்கு நன்றிக் கடனாய், விடுதலைப்புலிகளின் தலைமை இவரின் தூரோகத்தை வெளியிடாதது, இவருக்கு சாதகமானது. இவையோடு விடுதலைப்புலிகளிடம் பணம் எமாற்றி விதம் பற்றி கீழே கட்டுரை விளக்குகிறது.

    பின்னர்;, தான் ஒரு அருட்தந்தை எனும் வேஷத்தில் நுழைந்து கொண்டு, பச்சைத் தமிழனான தாழ்த்தப்பட்ட சமூகத்திலி;ருந்து வந்திருந்தும், உலக அளவில் இசைக்கு பெயரெடுத்த இசைஞானி இளையராசாவிடம், இந்த ஜெகத் கஸ்பார், “திருவாசத்தை” சிம்ஃபொனியை உலகுக்கு கொடுக்கப் போவதாய் கூறி, பணத்திற்காக இளையாராசாவையே எமாற்றி படுகுழிக்குள் தள்ளியவர் தான் இந்த ஜெகத் கஸ்பார். இளையாராசா எமாந்த செய்தியை வெளியில் சொன்னால், தனது மானம் போகுமே என நினைத்து வெளியில் இச்செய்தியை கசிய விடாமல் விட்டு விட்டது இந்த ஜெகத் கஸ்பார்ருக்கு சாதகமாகியது.

    இந்த ஜெகத் கஸ்பார்? கிருத்துவர் எனக் கூறிக் கொண்டாலும், நாடார் சமூகத்திலிருந்த காராணத்தால், கனிமொழியின் வீட்டிற்க்குள் நுழைந்தார். இந்த ஜெகத் கஸ்பார்? வெரிதாஸ் வானொலியிலிருந்து வந்தவுடன், சென்னை வெரிதாஸை நடத்தும் சந்தோம் கம்யூனிக்கேசனில் சாதாரண பதவியில் சேர்ந்தார். பின்னர் இவரின் ஆங்கில அறிவிக்காக, அன்று சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநர் ஒருவர், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழகத்திற்கு வரும் வேளையில் அவர்களுக்கு துணையாக இருக்குமாறு இவரிடம் பணி ஒதுக்கப்பட்டது. அதே சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநருக்கு, கருணாநிதியில் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு இருந்து வந்தது. இதனால், சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநர் வெளிநாடுகளிலிருந்து வரும் முக்கிய ‘நபர்”களை கலைஞர் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைப்பது இவரின் வேளையாக இருந்தது. சந்தோம் கம்யூனிக்கேசனின் இயக்குநர் வெளியூர் சென்று விடும் வேளைகளில், இந்த ஜெகத் கஸ்பார்?ரைத்தான் வெளிநாட்டு ‘நபர்”களை கலைஞர் வீட்டிற்கு கூட்ட செல்ல சொல்லப்பட்டது. அப்போது, நாடார் சமூகம் என்பது ஒட்டி கொள்ள, சில வேளைகளில் ஏற்பட்ட ‘உறவே” கனிமொழிக்கு நெருக்கம் ஆக்கியது. இதுவே பின்னர், சென்னை சங்கமம் என விரிந்தது. இப்படியாக, கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் இவர் கனிமொழிக்கு முகவர் வேளை பணத்திற்காக செய்ய துண்டியது. இதனால், பல உயர்பதவில் இருப்போர் இவரை நாடி வர ஆரம்பித்தனர். இடைத்தரகா பணி வந்தவுடன், பணப்புழக்கம் பெருகியது. தற்போது ஒரு கரும்பு நிற காரை தானே ஓட்டி வருவதும், இரு ஐ.ஏ.எஸ. அதிகாரிகளுக்கு இடமாற்றம் பெற்று தந்ததால், அவர்களிடம் அன்பளிப்பாய் பெற்றதே. 

    நக்கீரனும் கருணாநிதியிடம் நெருக்கமாய் இருக்க விரும்பும் ஒரு தமிழர். நக்கீரனின் ஆசிரியர், கோபாலும், நாடார் சமூகத்தை சார்ந்தவர் ஆதலால், தற்போது கனிமொழியின் துணையும், ஆட்சியாளர் துணையும் வேண்டும் என்பத்ற்காக கோபால், இந்த ஜெகத் கஸ்பார்?ரிடம் கட்டுரை எழுதுமாறு சின் மீனைப் போட்டு பெரிய மீன் எடுக்க எண்ணியுள்ளார். கோபால் மேல் செயலலிதா காலத்தில் உள்ள பல வழக்குகளிலிருந்து விடுவிக்கவே எழுத்து என்னும், ஆயுதத்தை லஞ்சமாய் கொடுத்து கணக்குகளை நேர் செய்ய விழைந்துள்ளனர்.

    நீண்டகாலத்துக்கு முன்னர் ஈழமக்களின் துயர் தீர்க்கும் வானொலியாக பிலிப்பைன்சில் இருந்து இயங்கிய “வெரித்தாஸ்” வானொலியும் ஒன்று. அந்த வானொலி ஒலித்த போதெல்லாம், காவலரணில் இருந்த போராளி முதல் தமிழ் மக்களும் தமது துயரை ஏதோ ஒரு வகையில் இறக்கி வைத்தது போல் உணர்வு. அந்த அளவிற்கு அந்த வானொலி மக்களின் இதயம் கவர்ந்ததாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த வானொலியில் தவழ்ந்த நிகழ்ச்சிகள் சில குறுந்தட்டிலும் வெளிவந்திருந்தது.

    “வெரித்தஸ்” வானொலி ஈழத்தமிழ் மக்களிடம் இடம் பிடித்தமைக்கு முக்கிய பங்காற்றியவர் அடிகளார் ஜெகத் கஸ்பார் அவர்கள். இவரை தமிழ் மக்கள் மிகவும் அன்பாக போற்றியதன் ஊடாக ஒரு அழியாத இடத்தை எடுத்திருந்தார்.

    அண்மையில் சமாதானகாலத்தில் வன்னிக்கு போய் வந்திருந்தமையும், தலைவர் அவர்களை சந்தித்திருந்தார் என்பதும், அந்த அனுபவங்களின் வெளிப்பாட்டையே தற்போது “நக்கீரன்” இதழில் எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். மிகவும் ருசிகரமாக அவரது மொழிநடையில் எழுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் விடுதலைப்போராட்டத்தில் மூன்றாவது நபராக அதாவது ஒரு பார்வையாளராகவே மட்டுமே இருந்துள்ளார் என்பது நாமறிந்த உண்மை.

    தமிழின உணர்வாளன் என்றவகையில் அவர் தனது உணர்வுகளை கொட்டித் தீர்க்கின்றார். ஆனால் ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமாதான காலத்தில் வன்னிக்குப் போய் வந்த அந்த அடிகளார் பின்னர் மக்களிடையே காணாமல் போயிருந்தார். தற்போது முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தலை காட்டத் தொடங்கியுள்ளார். களத்தில் போராடிய தளபதிகள், போராளிகளுடன் அவர்களுக்கு துணையாக இருந்த மக்களுடன் தானும் உடன் இருந்தது போல் அவர் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்கின்றார்.

    போராட்டப்பாதையி்ல் இயக்க இரகசியங்கள் தனக்கும் தெரியும் என்பது போலவும் எழுதுகின்றார். போராட்டத்தின் பின்னடைவுக்கு குறிப்பிட்ட “தளபதி” காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தளபதியை விமர்சிக்கும் அளவில் இவருக்கு என்ன “யோக்கியதை” இருக்கின்றது? அந்த தளபதியுடன் கூட இவரும் இருந்தாரா? அவர் அனுபவித்த துன்பங்களை, துயரங்களை உடன் இருந்து பகிர்ந்து கொண்டவரா? அல்லது அத்தளபதிக்கு இயக்கமட்டத்தில் அதாவது தலைவர் மட்டத்தில் இருந்த புரிந்துணர்வை இவர் அறிந்திருந்தாரா? அவர்கள் போராளியாக இருந்து பட்டறிவு மூலம் தளபதியானவர்கள். இதுவே விடுதலைப்புலிகளின் சிறப்பியல்பு. ஆனால் அடிகளார் இவை எவையுமே அறியாதவராகவே இருக்கின்றார் என்பதை அவரது எழுத்தில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

    தற்போதய தனது எழுத்துக்களால் மக்களின் மனங்களில் இடத்தைப்பிடித்து, பின்னடிக்கு பெரும் விஷக்கருத்தை விதைக்கப் போகின்றார். இது திட்டமிட்ட ஒரு செயல். இதற்கு பின்னணிகள் இருக்கின்றன. அதாவது சர்வதேசம் எங்கும் தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

    எனவே, இப்படியான விஷமிகளின் கருத்தை அவதானித்து சரியான நேரத்தில் இனங்கண்டு அவர்களை சமூகத்தின் மத்தியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

    இறுதியாக…

    அண்மைக்காலத்தில் அடிகளார் ஏன் இயக்கத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பதை யாரும் அறியார். அதாவது வன்னி சென்றிருந்த போது தலைமையால் சில சர்வதேச வர்த்தகத் தொடர்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேசிய விடயங்களை கவனமாகவும், திறமையாகவும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டு சென்றிருந்தார். பின்னர் இயக்கத்தினால் காட்டப்பட்ட அந்த வர்த்தகத் தொடர்புகளை, தனது சொந்த விடயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்ததும் அவரை இயக்கத்தினர் தூரவே வைத்திருந்தனர் என்பதை மறைக்க முடியுமா??————————

    • நாடார் சமுக மக்களோ பிரபலங்களோ கனிமொழியை நாடாராக கருதுவதில்லை.இந்த சூழ்நிலையில் கனிமொழியின் வீட்டுக்குள் நுழந்த இந்த பாதிரியார் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொணுடார் என்பதே உண்மை.மற்றபடி நக்கீரன் கோபாலை நாடார் என்பநு தவறான தகவல்.அவர் நாடார் அல்ல..

    • நக்கீரன் கோபல் நாடார் இல்லை தேவர் இது தெரியாமல் பெரிய கட்டுரை ம்ம்
      காலம்

      • இல்லையே … நக்கீரன் கோபால் ரெட்டியார் அப்பா தேவர் சாதி அம்மா தேவர் சாதி என்றல்லவா கேள்விப்பட்டேன். நமக்கு பெருநாழி ங்கோய்

  32. ஜெகத் கஸ்பர் அடிகளாரின் குடும்பம் வறுமைப்பட்டது,உறவினர்களும் அனைவரும் ஏழைகளே!ஆனால் துறவியாக(!) இருக்கும் இவருக்கு இத்தனை செல்வம் எங்கிருந்து வந்த்தது.ஆடம்பர வாழ்க்கையும் பெரிய இடத்து தொடர்புகளும் இவரது பொருளாதார வளத்தை உயர்த்தியதை ஏன் யாரும் இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை.இந்து சாமியார்களோ துறவிகளோ இப்படி இருந்தால் விடுவீர்களா?

    • கஸ்பர் அடிகளார் சேன்னைக்கு வந்ததும் பிரபலமாகவும் பணம்பார்க்கவும் என்ன வழி என்று யோசித்து இசைஞானி இளையராஜாவைப்பிடித்தார் திருவாசகத்தை சிம்பொனி இசையில் இளையராஜாவை வைத்து இசையமக்கப்போவதாய் அறிவித்து அவரைமுதலில் பிடித்துக்கொண்டார்..அதிலிருந்து அவருக்கு அமோக வளர்ச்சிதான்…நல்ல கலேக்ஷனும் பெரிய இடத்து கனக்ஷன்களும் வர ஆரம்பித்தன.வைக்கோ தி.மு.க அணியில் இருந்தநேரம் வைக்கோ இவரை டெல்லிக்கு அழைத்துப்போய் ஜெயபால் ரெட்டியிடமும் அப்துல் கலாமிடமும் அறிமுகப்படுத்தினார்.இளையராஜாவும் ஒரு பாதிரியார் இந்து பக்தி இலக்கியத்திற்கு இவ்வளவு செய்கிறாரே என்று நேகிழ்ந்துபோய் சினிமாகார்ரஃகள் பலருக்கும் இவரை அறிமுகப்படுத்திளார்.சிம்பனி விழா கோலாகலமாய் நடந்த போது நானும் அதற்கு போயிருந்தேன்.ஜெயபால் ரெட்டி தான் சிடியை வெளியிட்டார் வைக்கோ பாரதிராஜா கமல் ரஜினி பாலமுரளிகருஷ்ணா என பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வைக்கோவை வானளவ புகழ்ந்தார் ஜெகத்கஸ்பர் வைக்கோவப் போல நேர்மையான தலைவர் எவரும் இல்லை என்றார்.ஆனால் சீன் மாறியது.சில நாட்களிலேயே கஸ்பர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கோடிகளை சுருட்டிவிடுடதாகவும் வருவோர் போவோரிடமெல்லாம் புலம்ப ஆரம்பித்தர் இசைஞானி.இப்போதுதான் கனிமொழியின் அறிமுகம் இவருக்கு கிடைத்த்து.கனிமொழியின் ஆலோசகரானார் கஸ்பர்..கனிமொழியைமுன்னிறுத்தி திட்டங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.வாத்தும் பொன் முட்டையிட ஆரம்பித்த்து.குட்வில் கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தி.மு.க விற்கு ஆதரவாய் தேர்தல் நேரங்களில் கருத்து கணிப்புகளை வெளியிட்டதன் மூலம் கலைஞருக்கும் நெருக்கமான இவர் ஆரம்பத்தில் தனக்கு உதவிய வைக்கோவைதான் முதலில் கைகழுவினார்.கனிமொழியின் நட்பை கச்சிதமாக பெற்றுக்கொண்ட இவர் நடத்தும் ஒவ்வோரு நிகழ்ச்சிகளும் கனிமொழியை முன்னிலைப்படுத்தியே நடத்தபபடுகிறது.அதனால்அவர்காட்டில் மழையும் பெய்திறது.நண்பர்களிடம் விசாரித்தபோது கத்தாலிக்க பிஷப்பின் கட்டளைகளுக்கு இவர் கட்டுபடுவதில்லையென்றும் அவர்களும் இவரைகண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்களென்றும்.கனிமொழிமூலம் அவர் அவர்களுக்கு பல உதவிகள் செய்வதாகவும் தெரிகிறது..

      • புலிகளின் பல ஆயிரம்கோடி ரூபா தனி நபர் சொத்தாக மாறிக்கொண்டிருக்கிறது அதைபத்தி கதைக்க மாட்டியலோ வெளி நாட்டில இருக்கிறத சொல்லுறன்

  33. vinavu is heading in a good direction… instead of just reporting …it is investigating ….this investigation helped us to find the most dangerous people who where HIDING jus around us….i think time has come to give ‘them’ sleepless nights… the TRAITORS should not sleep peacefully… this is the time to CATCH EM ! GOOD J O B VENMANII AND THANKS TO V I N A V U , FOR SHOWING US THE BLACK SHEEP.

  34. சிறப்பான கட்டுரை அம்பலப்படுத்தல்கள் தொடரட்டும்.

    தோழர்களுக்கு அறிவிப்பு,

    தமிழ் நாட்டில் இனம், தமிழ்,தேசியம், ஈழம் இப்படியெல்லாம் சவடால் அடிக்கும் மணியரசனுடைய பையன் செந்தமிழன் சிங்கள சீரியலுக்கு டயலாக் எழுதி நன்றாக சம்பாதித்து இது வரை இரண்டு மூன்று வீடுகளை தஞ்சாவூரில் கட்டியுள்ளாராம்.

    சிங்கள‌ இனவெறி, தமிழ் என்றெல்லாம் இங்கே பேசிக்கொண்டு சிங்கள சீரியலுக்கு டயலாக் எழுதுகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். பிழைப்புவாதம் ?

    ஈழப்பிரச்சனைக்குள் எத்தனை எத்தனை பிழைப்புவாதிகள் துரோகிகள்??? இவர்களை அம்பலப்படுத்தாமல் மக்களை நாம் அணிதிரட்ட முடியாது.

    • தமிழனுக்காக உழைக்கும் ஒவ்வருவனுடைய கதையும் இப்பதான் தெரியுது இதவச்சே இரண்டு மூன்று சீரியல் பண்ணலாம் போல தெரியுது.,தமிழ்நாட்டில்தான் எத்தனை கருணாநிதிகள்!சபாஷ் சரியான வேட்க கேடு

  35. அனைவரும் படிக்க வேண்டிய‌ பிளாக்ஷ் நியூஸ்:
    மணியரசனுடைய மகன் ம.செந்தமிழன் சிங்கள் சீரியல்களுக்கு டயலாக் எழுதி பிழைப்பு நடத்துகிறார்.

    தமிழ்,தமிழன், தமிழ்தேசியம் என்றெல்லாம் தமிழகத்தில் கூச்சலிடும் இந்த‌ கும்பல் மானம் வெட்கமின்றி சிங்கள பனத்தில் வயிறு வளர்க்கிறது.

    த்தூ.. த்தூ இதுவும் ஒரு பிழைப்பா..

    ஜெகத் கஸ்பார் என்கிற‌ உளவாளியை பற்றி அந்த‌ பிழைப்புவாதி எழுதிய‌ கட்டுரை சுட்டி கீழே.
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1307:2009-11-16-20-09-33&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

    • //மணியரசனுடைய மகன் ம.செந்தமிழன் சிங்கள் சீரியல்களுக்கு டயலாக் எழுதி பிழைப்பு நடத்துகிறார்.//

      இந்த செய்தியை கொஞ்சம் விவரமாக எழுதுங்கள்.

    • விரிவான விவரம் தெரியவில்லை தோழர் நொந்தகுமாரன்
      சாக்லேட் கதையை போல இதுவும் பின்னால் ஒரு தனி
      வெலியீடாக வரக்கூடும். அப்போது விரிவாக அறிந்துகொள்ளலாம்.‌

  36. இந்த ஆண்டு வழக்கமாக ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக்கண்காட்சி, இவர்களின் ‘சங்கம’த்திற்காக இம்முறை டிசம்பரிலேயே நடக்கப்போகிறதாம்…

  37. புரியவில்லையா மக்களே, லேய் வெள்ளையனுவ அவனுவ ஆதிக்கத்த ஒலகமெல்லாம் நெல நிறுத்த ஒலகத்துல உள்ளவனுவ எல்லாம் இஸ்ரேலுல பெறந்த கம்மூனிஸ்ட்டு ஏசு க்க பேர வச்சு ஒரு நிறுவனத்த நடத்துதானுக. அதுக்கு பல பேரு உண்டு. அந்த சப, இந்த சப, பெந்த் சபன்னு கிட்டு. தமிழு நாட்டுலயும் திருவள்ளுவரு தாமசுகிட்ட அறிவு குளிச்சாருண்ணு சொல்லிகிட்டு திரியானுவ. இவனுவ இப்போ ஈஸியா அடிக்க கெடச்ச எடந்தான் எலங்கெ. உண்மையா தமிழுக்கும், தமிழு ஆளுவளுக்கும் சண்ட போட்ட எடத்த கறிக்கடையா மாத்தி யாவரம் பாத்து புட்டானுவ. ஒருத்தன ஏசுவ கும்புட வச்சா பாஞ்சாயிரம் டாலரு கெடய்குமந்தெரியுமாலே. இனி எந்த எலங்க‌தமிழமுல சொள்ள மாடனையும், மாரியாத்தாளியும், முருகனையும் கும்புட முடியும். கொத்து கொத்தா பணம் கெடச்சுமுல்லாலே. ம‌க்களே நீங்களெல்லாம் பாவம் செஞ்சவியலே, பரலோக ராச்சியம் வேணுமுண்ணா ஏசுவ கும்புட வாங்கலே. பணமும் கெடச்சும்!! ஆமேன்

  38. கர்னன் படப்பாடலை மாற்றி கண்ணனும் கருனாய்நிதியுமென ஒரு நண்பரின் பாடல் கிடைத்தது. இதனையும் “ஈழம்…. மௌனத்தின் வலி” என்ற அந்தக் கவிதை நூலில் சேர்த்து வெளியிடுவார்களா?

    ஈழத்தை எண்ணிக் கலங்கிடும் இன்டியா
    மாவீரர் ஆன்மா மரணமெய்தாது
    மறுபடி பிறந்திருக்கும்
    தமிழரைக் கொல்வாய் தமிழனாய் கொல்வாய்
    வீரத்தில் அதுவுமொன்று
    நீ விட்டுவிட்டாலும் ஈழத்தமிழரின் மேனி
    புத்தன் தின்றுதான் தீர்வான் ஓர்நாள்.

    என்னை அறிந்தாய் தமிழர் உயிரும் எனதென்று அறிந்துகொண்டாய்
    கருனாய் மனது கல்மனதென்றோ மலையாளி தழுவவிட்டாய்
    சோனியா நானே மன்மோகன்சிங் நானே ஆரிய திராவிடன் சிங்களனும் நானே
    சொல்பவன் கருனாய் சொன்னவன் கருனாய்
    சிங்களத்தி வைப்பாட்டி ஆயுள்நீளும் வாழ.

    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
    அந்தப் புண்ணியம் கருனாய் நிதிக்கே
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கருனாய் நிதிக்கே
    கருனாய் காட்டினான் கருனாய் தாக்கினான்
    கருனாயே கொலைசெய்கின்றான்
    கனிமொழி எழுக திருமா வடுவா எழுக
    மகிந்த தாம்பூலம் சிவக்க வாழ்க.

    பரித்ரானாய சாதூனா விநாசாயத துஸ்குருதா
    தர்மசம் தாபநர்த்தாய சம்பவாமி யுகே யுகே.

  39. பாதிரி ஜெகத் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கிறார்கள்.நிலைமை உக்கிரமாக இருந்தபோது அவர்கள் உணர்வாளர்களோடு(உளவாளிகளாக) நின்றுகொண்டிருந்தார்கள்.விரைவில் அவர்கள் அம்பலப்படுவார்கள். அந்த அதிர்ச்சி பிரச்சினையிலிருந்தே ஜனநாயக‌ உணர்வாளர்களை வெளியேற்றவும் கூடும். எனவே, ஜெகத்திற்கு எதிரான அம்பலப்படுத்தல்கள், இணையத்திலிருந்து தெருவிற்கும் வரவேண்டும். அது மிஷினரிகளீன் நாடகங்களை திரை கிழிக்கும். குருசாமிமயில்வாகனன்.

  40. மக்களின் பணத்தை ஏய்த்து விசாரனைக்கு என அழைக்கபட்டு தண்டனை இல்லாது விடுவிக்கபட்ட ஒருவர் என்றால் அது கஸ்பராகத்தான் இருக்கும், கிருத்துவபாதிரியார் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே.

  41. ஐயோ…! இந்தியா நாசமாப் போக…

    இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம்.

    இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் மேலாக யார் மனதையாவது காயப்படுத்துமானால் வருந்துகின்றோம்.

    – 4tamilmedia Team

    “ஐயோ…! இந்தியா நாசமாப் போக..”

    இந்த வாசகத்தைக் கேட்டதும் உங்களுக்குப் பதற்றம் வருகிறதா..? பெருங்குரலெடுத்து ஒப்பாரிவைத்த அந்தப் பெண் திடீரென இப்படிக் கத்தினாள். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆனால் அந்த அபலைத் தாயின் கதறலால் அதிர்ந்து போனேன். ஈழத்து மக்கள் பலரின் மனதிலும், இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ்மக்கள் குறித்துச் செயற்படும் விதம் பற்றி அதிருப்தியான மனநிலை காணப்பட்டாலும் கூட, யாரும் வாய்விட்டுச் சொல்லாத வாசகங்கள் அவை. ஆனால் வன்னியிலிருந்து கதறியழுத ஒரு தாயின் வாயிலிருந்து வந்து விழுந்த வாசகங்கள் இவை.

    இன்று…மாலையில் களநிலைச் செய்திகளைச் சேகரிக்கச் சென்று கொண்டிருந்த போது, ” ஐயோ…! இந்தியா நாசமாப் போக..” என்ற அந்த அபலைத் தாயின் அலறல் கேட்டது. சுற்றி நின்றவர்களிடம் விபரம் கேட்டபோது, மூன்று பிள்ளைகளையும், தன் முழங்காலுக்குக் கீழேயுள்ள காற்பகுதியையும், இழந்துவிட்டஒரு பெண்ணின் ஆவேசமான கதறல் அது எனத் தெரிய வந்தது.

    எண்ணிப் பார்க்கின்றேன். உண்மையில் ஈழத்துமக்களின் மனங்களில் இந்தியா குறித்த நேசம் இப்படியாகவா இருந்தது ?.

    இந்தியா எமது அன்னைபூமி என்பார் சிலர். ஆன்மீக பூமி என்பார் சிலர். அந்த மண்ணில் ஒரு தரம் கால் பதித்தால் எந்த மனிதனது கவலைகளும் பறந்து போய்விடும் என்று ஒரு காலத்தில் பலர் சொல்லி மகிழ்வதைக் கேட்டிருக்கின்றேன். ஈழவிடுதலைப் போராட்டம் முகிழ்ந்த போதுகளில் கூட, இலங்கைஅரசு சொல்வதையோ, ஏன் விடுதலை இயக்கங்கள் சொல்வதையோ எம் மக்கள் அதிகம் நம்பியதில்லை. இந்தியா என்ற தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, மாநிலச் செய்திகள் கேட்கும் அவர்களின் ஆவலில் தெரியும்.

    இந்தியாவின் வெற்றிகள், வேதனைகள் அத்தனையையும், இந்தியமக்கள் எவ்விதம் அனுபவித்தார்களோ.. அப்படியே அனுபவித்தவர்கள். ஈழமக்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி மறைந்தபோது, இந்தியாவிலும் தமிழகத்திலும் எத்துனைபேர் அழுதார்களோ தெரியாது. ஆனால் ஈழத்தில் அத்தனைபேரும் அழுதார்கள். எத்தனையோ தாய்மார், அன்னையின் அந்திமக் கிரிகைககள் முடியும் மட்டும் உண்ணாதிருந்தார்கள். அத்தனை பாசமிக்க மக்களின் மத்தியிலிருந்ததான் இன்று இப்படியொரு கதறல்.

    இந்திய உறவுகளே!

    இந்தக் கதறலின் வலி உங்களுக்குப் புரியவில்லையா. புரிந்தும் வாழாதிருக்கின்றீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ.. அப்படியெல்லாம் சொல்லியாயிற்று. இந்திய மத்திய அரசு என்ன செய்கின்றது என்பது, தமிழகத்தின் கடைநிலை மாந்தனுக்கும் புரிகிறது, எறிகணைகளின் வீச்சுக்களில் எரிந்து கொண்டிருக்கும் ஈழத்து மக்களுக்கும் புரிகிறது. ஆனாலும், தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தலைவர்களுக்கு மட்டும் புரியாமல் போய்விடுகிறது.

    படித்த மேதாவிகள், பல்லிளித்துச் சொல்கிறார்கள் இந்தியா எப்போதும் நல்லதே செய்யுமென்று. உங்கள் கறுப்புக் கண்ணாடிகள் கண்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தோம், ஆனால் மனதுக்கும் கூட என்பதை உணர்ந்துகொள்ளாதிருந்து விட்டோம். இந்திய மத்திய அரசின் செய்கை என்னவென்று உங்கள் எல்லோர்க்கும் புரிகிறது. ஆனால், உங்கள் பிராந்திய வல்லரசெனும் பெருங்கனவில், ஈழத்தமிழினத்தை அழிக்கும் முயற்சிகளை ஆராதிக்கின்றீர்கள். ஒன்று மட்டும் சொல்ல ஆசை. நீதிக்குப் பிழையான இந்த நெறிமுறையால், நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடந்துவிடக் கூடும். ஏனென்றால், அரசியலில் நீங்கள் கூட்டு வைத்திருக்கும் கொடுங் சிங்கங்கள் என்பதற்குமப்பால், ‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும்’ என ஏதோஓரு நம்பிக்கை மொழி எங்கள் மொழியில் உண்டாமே. அது சத்தியமான வார்த்தையெனில், உங்கள் ‘அக்னி’களுக்கும், ‘பிருது’விகளுக்கும், அப்பால் ஏதோ ஒன்று உங்களை இல்லாது செய்யும் என்ற நம்பிக்கையில் கத்தியிருக்கின்றாள் அந்த அபலை. இன்னும் சொல்வதானால் ஏதுமற்றவள் அழுது குழறி, ஐயோ எனச் சொல்லி இட்டிருப்பது சபதம் அல்ல சாபம்.

  42. இந்தியாவை தாயென்று நம்பி அழிந்த ஈழமகள் இன்று ஏதுமற்றவள் இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டது.

    1. திபெத் சீனாவிற்கே சொந்தமானது – அமெரிக்கா

  43. பாதர் சொல்லுறதில எந்த பிழையும் இல்ல எங்கேயோ புலம்பெயர் நாட்டில இருந்துகொண்டு நீங்கள் நினைக்கிறத எல்லம் கேவலமான எழுத்தில
    வெளிப்படுத்திறியல் வடக்கத்தையான் என்று சொன்னவர்களெல்லாம்
    இப்ப எங்களுக்கு உதவி செய்யல்ல என்று ஒப்பாரி வைக்கிறியல்
    தேவையென்றால் காலைபிடிக்கிறதும் தேவையில்லையென்றால்
    காறித்துப்பும் பார்பானிய குணத்திற்க்கு எந்த விதத்திலயும் குறைந்ததல்ல
    யாழ்பாணியம் உங்கள மாதிரியானவர்களால்தான் இவ்வளவு இழப்பும்

  44. வணக்கம், பாதிரி ஜெகத் கஸ்பார் குறித்த பல்வேறு விமர்சனங்களையும் ஒரே மென்னூலாகத் தொகுக்க விரும்புகிறேன். அதில் இக்கட்டுரையையும் இணைத்துக் கொள்ள வினவு தளத்தினரிடமும் கட்டுரையாளரிடமும் அனுமதி கோருகிறேன். எவ்வித லாபநோக்கமும் இல்லாமல் அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்தளிப்பது ஒன்றே எனது நோக்கம்.

  45. நேற்று ஜகத் கஸ்பாரின் பேட்டி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ளது.
    அதில் அவரின் ‘ஈழம் – மௌனத்தின் வலி’ என்னும் வெளியிடப்பட்ட புத்தகம் பற்றியும் அவரின் மற்றைய (காமெடியான) பதில்களை பற்றியும் மறுபடியும் “ஈழம்: ஜகத் கஸ்பாரின் கப்ஸாத் தனம் அம்பலம்!” என்று அம்பலமாகிறது.

    http://vrinternationalists.wordpress.com

  46. பாதிரியின் உள்மனம் அந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, பெரும்பான்மையானவர்கள் சமுக அங்கீகாரத்தினாலேயே அழைக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகின்றது, சத்குருவை மட்டமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறீர்கள், அவர் போலி சாமியார் என்று கூறியிருக்கிறீர்கள், தன்னை சாமியார் என்று அவர் எப்போது உங்களிடம் சொன்னார். சாமியார் அல்ல, ஆன்மிகீவாதி அவ்வளவே, அந்த விழாவில் கலந்து கொண்டது அவர் அந்த மக்களுக்காக தன்னால் இயன்ற காரியம் என்று எண்ணியே கலநது கொண்டார், நீங்கள் கோபப்படுவதிலும். ஆத்திரப்படுவதலும் நியாயமுண்டு, கோபத்தை எழுத்தில் காட்டும நீங்கள் உங்கள் அருகாமையில் அகதியாய் வந்து தங்கியிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? விளக்க முடியுமா அன்பரே.

  47. டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி,மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொன்றவர் பா.சிதம்பரம் தான்
    [ புதன்கிழமை, 27 சனவரி 2010, 04:37.21 AM GMT +05:30 ]
    டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி 2009, மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொல்ல வைத்தவர்கள், சந்தேகமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முத்த அமைச்சரும் தமிழருமான பா.சிதம்பரம் தான்.
    பா.சிதம்பரம் ஈழத்தமிழருக்காக அல்லது காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழருக்காக நடத்திய ஒரே கூட்டம் 15-02-2009 சென்னை மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் தான். அன்று அவர் பேசியதை திரும்பவும் கேட்டால் – http://www.youtube.com/watch?v=V1NgzyF1pgE தெளிவாய் புரியும், யார் டெல்லியில் இருந்த காங்கிரஸ் பெரியவர் என்று. இன்னும் தமிழன் ஏறமாறக்கூடாது.

    திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

    “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

    மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

    கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

    கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

    கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை

    கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்ல

    கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

    கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.

    போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

    இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

    அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

    “கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

    இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

    உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

    பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.
    அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

    அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    “நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

    மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

    புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

    அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
    (மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonli…icle6350563.ece

    புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

    சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

    இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

    சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

    கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

    சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

    கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

    சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

    கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

    சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

    கே.பி.: ஆம்.

    சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

    கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

    சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

    கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

    சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

    கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

    கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

    ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

    அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

    இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

    இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

    இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

    களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

    தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

    கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

    ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

    மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

    “காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

    இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள்.

    காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

    மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

    ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

    நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

    எமதருமை புலத்து மக்களே,

    இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்! http://tamilwin.com/view.php?2a46QVb4b4bF98S34b2SIPz2e22N1GQecd24ipDce0ddZLuIce0dg2Fr2cd0FjoM30

Leave a Reply to balaji பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க