Thursday, October 10, 2024
முகப்புசெய்திதினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!

-

தின மலர் - மலிவு விலையில் மனு தர்மம்

vote-012தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும்  தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை  ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர்.  நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு  சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த  ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும்  வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு  மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

-நன்றி வில்லவன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

    • தினமலரின் கிருக்குதனமும் அவாழின் செய்தி போடும் விதமும் ரொம்ப விசமத்தனமா இருக்கும்.இப்ப ஜயா ஆட்ச்சிக்கு வந்த பின்பு அவாலின் வெப் ஷைடை பார்த்தால் மு க வையும் ராமதாசையும் விமர்சனம் என்ர பெயரில் அவன் இவன் என நாரசாரமா இவனுகலா போலி பெயர்கலால் கமன்ட் கொடுதது கொன்டிருக்கிரான்.

  1. அருமையான  கட்டுரை. // ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? //
    இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது…
    பொருளாதார ரீதியில் இட ஒதிக்கீடு செய்வதால் என்ன கெடுதல் ? தயவு செய்து விளக்கவும் ?

    • பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சாதிரீதியான இடஒதுக்கீட்டுக்கு முற்றிலும் முரணானது. ஒருவனுக்கு பொருளுதவி செய்வதன் மூலம் அவனை பொருளாதாரத்தில் மேம்பட்டவனுக்கு நிகராக்க முடியும். சாதிரீதியான வேறுபாட்டை அப்படிக் களைய முடியுமா என்பதுதான் கேள்வி.

      கிரீமி லேயர் எனும் வாதம் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியே. ஏழை தாழ்த்தப்பட்டவனுக்கான அடிப்படைக்கல்விக்கான சகல வழிகளும் இந்தியாவில் அடைபட்டுக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான கிராம ஆரம்பப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் அல்லது ஈராசிரியர் பள்ளிகள் இங்கு உருவாகும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணுவதே சிரமம். ஒருபுறம் பணமில்லாதவன் படிப்பைவிட்டு ஓடும் வேலையை செய்துகொண்டு ( சென்னையில் மட்டும் சென்ற ஆண்டு 30 மாநகராட்சிப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன ) மறுபுறம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என சொல்வது மோசடி.

      சுருக்கமாக சொல்வதானால் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் களையவும் சாதிரீதியான ஏற்றத்தாழ்வை களையவும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் வேறு வேறானவை. பொருளாதாரத்தில் மேம்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படும்போது அவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பது தேவையில்லாதது. .

      • //கிரீமி லேயர் எனும் வாதம் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியே./// அப்படியா ? இல்லையே. கிரிமி லேயர்களை களைந்தால் தான் உண்மையில் நீதி கிடைக்கும். தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட சாதிகளில் உள்ள, கிரிமி லேயர் அல்லாது இதர மக்களுக்கும் உண்மையில் பயன் கிடைக்கும். இன்று கிரிமி லேயர்கள் தாம் மிக பெரும்பாலான இடங்களை பிடிக்கின்றனர். பொதுப்பிரிவிலும் அதிகம் பெறுகின்றனர். இது சமூக நீதி அல்லவே ? கிரிமி லேயர்களை களைய முயற்சி கூட செய்யாதது பெரும் சதி. (நானும் ஒரு கிரிமி லேயர், பி.சி தான்). அண்ணா பல்கலைகழக அனுமதி பட்டியலில் இடம் பெறும், பி.சி மாணவர்களின் பின்புலத்தை ஆராய்க.

  2. ஜெனோடைப் என்றதும் துள்ளிக் குதித்து கோபம் கொப்பளிக்க சீறிய ஆர்.விக்கு உண்மையை செவிட்டில் அறைந்து கூறுகிறது தினமலர். தமிழின் பிரபலமான நாளேடே பார்ப்பனியத்தை வெறியுடன் பின்பற்றுகிறது என்றால் அந்த சாதியில் இருக்கும் பெரும்பாலானோர் எப்படி இருப்பார்கள் என்பதை யாரும் ஊகிக்க முடியும். வாழ்த்துக்கள் வில்லவன்.

    • ரியல் என்கவுண்டர் – இதில் எங்கிருந்து ஆர்வி வருகிறார் ? அவரும் genotype வழியில் மக்களை குறுக்கக்கூடாது என்று தானே சொல்கிறார் ? வில்லவன், வைரம் ராஜகோபால் எழுதி இருப்பதை விமர்சனம் செய்து இருப்பதும் அதையே தான்.

      • மணிகண்டன்,
        ஜேனோடைப்பை ஒரு மதமாக்கி, சித்தாந்தமாக்கி நாட்டு மக்களை பிரித்த்தே அவாள்கள்தான் என்பதற்கு ஆதரமாக தினமலர் இருக்கிறது என்பதையே சொல்லியிருக்கிறேன். மற்றபடி அதை நாம் ஏற்கவில்லை, விமரிசனம் செய்கிறோம் என்பதுதான் எனது கருத்தும்.

  3. தினமலர் பற்றிய பெரும்பாலான குற்றாச்சாட்டுகள் சரிதான். மாற்றுக்கருத்தில்லை.
    ஆனால் இட ஒதுக்கீட்டில் கிரிமி லேயர்களை களைவது பற்றி கருத்தில் தவறு
    இல்லையே ? ஒரு அல்லது இரண்டு தலைமுறைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுப்பதுதான் நியாயம். சமூக நீதி இன்று பெருவாரியான சமூக அநீதியாகத்தான்
    நடைமுறையில் உள்ளது. இட ஒதுக்கீட்டால் பயன் அடைபவர்களில் மிக பெரும்
    பாலானோர்கள் இந்த கிரிமி லேயர்கள் தாம். உண்மையில் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட
    சாதிகளை சேர்ந்த, கிரிமி லேயர் அல்லாதவர்கள், மிக குறைவான சதமே பயண்டைகின்றனர். Open quota (that is non-reserved seats) விலும் பெரும் சதவீதத்தில்
    பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் select ஆகினறனர்.

    இட ஒதுக்கீட்டில் கிரிமி லேயர்களை உடனடியாக தவர்க்க சட்ட திருத்தம்
    கொண்டு வர வேண்டும். (உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது). இதனால் lapseஆகும் reserved seatsகளை OC (unreserved) quotaவில் அந்தந்த ஆண்டுகள்
    சேர்க்க வேண்டும். அப்போதுதான், படிப்படியாக உண்மையில் பிற்படுத்தப்பட்ட,
    தாழ்த்தப்பட்ட மக்கள் அதை பயன் படுத்த உரிய உதவிகள் உருவாகும். உண்மையில்
    தகுதியானவர்கள் யார், எங்கு உள்ளனர் என்ற தகவல்கள் பரவலாகும். பள்ளி கல்வியில் அவர்களுக்கு உதவிகள் மற்றும் வேண்டிய சிறப்பு பயிற்ச்சிகள் அளிக்க
    அரசு முனையும். அரசை இதை நோக்கி தள்ள, சமூக ஆர்வலர்களும், அரசியல்
    கட்சிகளும் முனையும். சாதிகள் மூலமாக கொண்ட ஓட்டு வங்கி அரசியலும்
    வலுவிலக்கும். உண்மையான சமூக நீதி கிடைக்க வழி பிறக்கும்.

    இன்று நடப்பது பித்தலாட்டமே. நானும் ஒரு பிற்பட்ட வகுப்பை சார்ந்த கீர்மி லேயர்தான். இதை பற்றி விவாதிக்க முயன்றால், உம் குடும்பத்தார்களை
    இட ஒதுக்கீட்டு சலுகைகளை நிராகரிக்க செய்யுங்கள் என்ற அருமையான
    அறிவுறைகள் கிடைக்கின்றன. Some gems !!

    மத்திய அரசு வேலைகளில், இட ஒதுக்கீட்டில், இந்த கிரிமி லேயர்களை களைய சட்டபூர்வமான முறை உள்ளது. பார்க்க :

    http://ncbc.nic.in/html/creamylayer.html

    இதை அனைத்து வகை இட ஒதுக்கீடுகளிலும் அமலாக்க வேண்டும். அதுதான்
    உண்மையான சமூக நீதி.

    இதை பற்றி சில ஆண்டுகளுக்கு முன் திரு.வீரமணி அவர்களுக்கு நான்
    எழுதிய மின் மடல் :

    http://athiyaman.blogspot.com/2006/01/reg-creamy-layer-misusing-reservation.html

  4. இடஒத்க்கீடு என்பது 2000 ஆண்டுகள் ஈன தொழில் செயயவைககபடட்த்ன் ஆருத்ல் பரிசு.எவானவது ஒரு 6 மாத்ம் ஊரில் மொத்த மல்ம் அல்லும் வேலை செய்வானா? அந்த பிராமனன் இடஒத்துகீடு வரிசைய்ல் வருவான்.
    அன்பானவர்கலுகு வேண்டுவது, இந்த வலை பதிவை படித்து மாயவ்லை தின்மலர் விழ்து சாகவேய்ண்டாம்.

    • இங்கு மறுமொழி எழுதி கொன்டிருக்கும் எவரும் உங்களையும் உட்பட யாரும் மலம் அள்ள தயார் இல்லை! என்ன செய்வது நமக்கு பார்ப்பானிடம் தானே இந்த கேள்வி கேட்க்க முடியும் “நீ மலம் அள்ள தயாரா” என்று. செய்வோம். 2000 ஆன்டுகள் நீண்ட அடிமைத்தனத்தில் இருந்து மீன்ட உடன் எவன் கிடைப்பான் நாம் இப்பொழுது அடிமைபடுத்த என தேடும் கிழ்த்தரமான மனித வக்கிரம் மட்டுமே இங்கு பதிவுகளில் அம்பலபடுகிறது. பாவம் ‘மார்க்ஸ்’! மனித குல ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க நினைத்த அவருக்கு இப்படிபட்ட சிஷ்யகோடிகள். 

      • புலிகேசி, என்னடா வினவில் ஜெயமோகனது சீடர்களை காணோமே என யோசித்தால் வந்து ஏராளமாக கழித்து வைத்திருக்கிறீர்கள். மார்க்ஸ் பெயரையெல்லாம் சொன்னால் அபச்சாரம் என உங்கள் குரு ஜெயமோகன் கற்றுக்கொடுக்கவில்லையா? மலம் அள்ளுவது இருக்கட்டும், ஏரோட்டுவது, மூட்டை சுமப்பது, கூலி வேலை செய்வது போன்ற மற்ற சாதியினர் செய்யும் வேலைகளில் கூட பார்ப்பனர்கள் இல்லாமல் போன மர்மம் என்ன? கேட்டால் எனக்கு தெரிந்த ஒரு பார்ப்பனர் சுத்தியலை வைத்து ஆணியடிப்பார் என்று அளக்க வேண்டாம். விதிவிலக்குகளை தள்ளிவைத்து விட்டு பார்த்தால் எந்த உடலுழைப்பிலும் பார்ப்பனர்கள் இல்லை. அன்று மந்திரம் சொன்னார்கள், இன்று ஜாவா சொல்கிறார்கள், மற்றபடி அவா எல்லாரும் பேஷாகத்தான் உள்ளார்கள். இந்த உலகறிந்த உண்மையைக்கூட உங்களுக்கு ஒப்புவதற்கு மனமில்லை. இதற்கு காரணம் உங்களது ஜேனோடைப் என்று சொல்லவில்லை. போலி மதசார்பின்மைவாதிகள் இந்து மதவெறியர்களை விட அபயாகரமானவர்கள் என்பது புலிகேசியின் விசயத்தில் உண்மையென்று அடித்து சொல்லலாம். அவ்வளவுதான்.

        • எல்லாம் சரிதான் நண்பரே பார்பான் உடல் உழைப்பில் நாட்டம் கொள்வது இல்லை அதே போல பிற ஜாதிகள் மலம் அல்ல ஒத்ஹு கொள்வது இல்லை

          இதில் அவன் செய்வது மட்டும் தவறு இவன் செய்வது சரி என்றால் என்ன நியாயம். ஒவோருவனும் அவனவனுக்கு தகுந்தாற்போல பிறரை ஏக்க பாரிகிறான் . அவன் எய்தால் தவறாம் இவன் எய்தால் அவனை விட ஒன்றும் இலையாம்.

  5. நமது நிலையில் தெளிவாய் இருக்க வேண்டும். இந்து மதம், சாதி அதை சார்ந்த அடையாளங்கள், குனங்கள், என ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., போன்ற அமைப்புகள் பரப்பும் தகவல்களை ஒப்பு கொள்கிறோமா? இல்லையா? இல்லையெனில் ‘பார்ப்பனீயம்’ எனும் சொல் இத்தளத்தில் இருந்து நீக்க படவேண்டும். இருக்கு என்றால் ‘தினமனி’ எழுதியதை ஒப்பு கொள்ள வேண்டும். ஒரு கம்யூனிஸ்டாய் முடிவு எடுக்கவும் தங்கள் சாதி சார்புகளை தவிர்த்து விட்டு, வர்க்கம் எனும் ஒற்றை நிலையில் நின்று. 

    • இவ்வளவுதானா

      இனிமேல் எந்த அய்யரு அய்யங்காரு பொண்ணும் அவங்க சாதில திருமணம் செய்யக் கூடாதுன்னு சட்டம் போடுங்க•. முடிஞ்சிடும் பிரச்சினை. தாம்ப்ராஸ் மூலமா சொன்னா உதவியா இருக்கும்.. இல்லாங்காட்டி எஸ்வி செகர் மூலமாவோ அல்லது காஞ்சி பீடாதிபதி மூலமாவோ முயற்சி எடுங்க‌

  6. கட்டுரையில் சரியான இடத்தில் ஜாதீயம் என்ற பதத்தை உபயோகித்ததற்காக வினவுக்கு வாழ்த்துகள். மூன்று சிறுகதைகளையும் சுருக்கி எழுதியிருக்கும் விதத்தில் வினவின் எழுத்தாளர்கள் சுருங்கச் சொல்லும் கலையில் பண்பட்டு வருவதை ரசிக்கிறேன். தினமலர் பத்திரிகை நாணயமற்ற இனவாத பத்திரிகை என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து படிக்கும் சாதி வெறியற்ற உயர் சாதியினர் இதை உணர்ந்து அப்பத்திரிகையைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.

    • வித்தகன் அது என்ன ” சாதி வெறியற்ற உயர் சாதியினர்” உயர் சாதியினர் என்ற பதமே சாதிவெறிதானே

        • மணி, FC, BC, MBC ஐ தமிழ் படுத்தினால் முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என்பது தான் என் மூளைக்கு தெரிந்த தமிழ். (சரியான தமிழ் பதத்தை யாராவது எழுதவும்) உயர் சாதி என்பது ஒரு வன்முறையான கருத்து.

      • நான் சொல்ல நினைத்தது ஆதிக்க சாதியில் பிறந்தும் சாதி வெறியில்லாமல் இருப்பவர்கள் இப்பத்திரிகையைத் தவிர்க்க வேண்டும் என்பதே. இந்தத் திருத்தத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  7.  Where is the question of Dinamalar’s brahhmin arrogance?On the contrary you are forcing  them to accept your views as gospel truths without questions like a flock of cattle as EVR did by confusing the so called dravidians by quoting out of context.Just as you have every right,they too have their rights to hold a different view

  8. You have your magazines to publish your stories and abuse USA,brahmins, RSS etc. They do have the right to express their views. Your so called progressive views end up in spreading hatred against brahmins. Your post on ‘genotype’ is a good example for that.So before accusing Dinamalar correct yourself. I dont read Dinamalar or the stories published there.I read your blog.You spread one form of hatred, RSS/VHP another form.Anti-brahmin is as bad as anti-muslim.So I see you and RSS as sides of the same coin. Those who dislike Dinamalar may dislike your blog also. What are you doing to eradicate evils of caste?. CPI(M) is doing something.What are you doing except writing like this day in and day out.

  9. ‘” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். You invoked genotype to say the same thing. So why are you criticising them. You used an english word and they put in colloquial Tamil.

    • மிஷ்டர் விஷ்னு, stop your loathing and read the Genotype Article first!, It says the exact opposite of what you say it says!!!

  10. வில்லவன் கட்டுரை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    முற்போக்கு இயக்கங்கள் எல்லாம், சைக்கிளில் பிரச்சாரம் செய்ய, தினமலரோ, விமானத்திலிருந்து சீம கருவேலை விதைகளை தூவியதை போல மனுதர்ம கருத்துக்களை தூவுகிறது.

    தினமலர் குரூப் மலர் தொலைக்காட்சி என்று 2004ல் தொடங்க இருந்தார்கள். வேலைக்கு ஆட்கள் எல்லாம் தேர்வு செய்துவிட்டார்கள். என்ன காரணத்தினாலோ துவங்கபடவில்லை. துவங்கியிருந்தால்… இப்பொழுது, ஜெ டிவியும், மற்ற சானல்களும் பரப்புவதை மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்டிருக்கும்.

  11. சாதி ஒழிய சங்க்ராம்டம் ஏன் செயய கூடாது. எல்லொரும் இநது ,பூனூல் போடலாம்,அர்சகர் ஆக்லாம்,வேத்ம் படி,பிற்மதம் போல் எண்ரு சொன்னால் போதும்

  12. தமிழகத்தில் பத்து ஊர்களில் தினமலர் அச்சாகிறது. அவற்றில் நான்கு பதிப்புகள் நிறைய வாசகர்களை கொண்டிருக்கின்றன. மீதி பதிப்புகளின் நிலை தள்ளாட்டம்தான். காரணம் அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததுதான். குடும்பத்துக்குள் ஒற்றுமையாக இருந்து அவர்கள் தாத்தா உருவாக்கிய சந்தையை காக்க தெரியவில்லை. இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

    • அந்த நான்கு பதிப்புகள் கூட இவர்கள் பரப்பும் மனுதர்ம கருத்துக்களுக்காக இல்லை. பகுதி பிரச்சனைகளை நன்றாக கவர் பண்ணுகிறார்கள். அதனால் தான். அதற்கு அந்த தொழிலாளர்களின் உழைப்பு தான் காரணம்.

  13. எல்லொரும் இநது ,பூனூல் போடலாம்,அர்சகர் ஆக்லாம்,வேத்ம் படி,பிற்மதம் போல் எண்ரு சொன்னால் போதும்

    yes anybody can wear poonnool, yes anybody can function as archaka in privately owned temple if the temple owners permit anybody can read vedas they are available as books. so what do you want.
    sankara mutt is not authority for hinduism.RSS teaches sanskrit for all.Ramakrishna mutt allows anyone including women to join their order as sannyasin.Vedas are there for anyone to read.So what are you complaining about. In ISKCON there are americans and europeans wearing sacred therad.hindus are not objecting to that. Let Vinavu and Maruthayan wear sacred thread and learn sanskrit-
    who will object to that.

    • ///ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ///
      நியாயம் கேட்காமல், ஆனால் மனித அவலத்தை, அக்கிரமத்தை பதிவு செய்யும் பல கதைகள் ‘புதிய் கலாச்சாரத்தில்’ வந்தது உண்டு. அப்ப‌டியான ஒர் உணர்வை இந்த கதைகள் பதிவு செய்திருந்தால் கூட போதுமானது. அவை ‘தினமலரில்’ வருவதாலேயே ஒதுக்க வேண்டாம்.அக்கதைகளை எழுதியது பார்ப்பனர்களாய் இருக்காது என்பதை நினைவில் வைக்கவும்.  மேலும் இடஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினர், அவர்கள் சாதி சார்ந்த மற்ற்வர்கள் முன்னேற தடையாய் உள்ளனர் என்பதை தினமலர் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. படித்து முன்னேறிய வகுப்பினர் தான் தினமலர் வாங்கி படிக்கிறார்கள். அவர்கள் திருந்தினால் சமூகத்துக்கு நல்லதுதானே. நியாத்தின் குரல் எங்கிருந்து ஒலித்தாலும் ஏற்று கொள்ள வேண்டியது தானே! அதுதானே சரி. 

      • புலிகேசி அவர்களே!

        மனுதர்ம குகையிலிருந்து நியாயத்தின் குரல் எதிரொலிக்காது! ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும், வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என மார்க்சிய ஆசான்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    • சமஸ்கிருதம் படிக்க தடை இல்லை, வேதங்கள் கற்று கொள்ள தடை இல்லை, பூனூல் அனிய தடை இல்லை. இன்னும் நாம் ஏன் பார்பனியத்தை விடாமல் பிடித்து தொங்குகிறோம் என்றால் ஒரு பொது எதிரி தேவைபடுகிறான். மற்றெல்லா சமூகங்களும் செய்யும் பிழை அல்லது அநீதிகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள.இன்னும் எத்தனை காலம் இந்த பார்ப்பனர்கள் இந்த சமூகத்தை வழி நடத்த போகிறார்கள்? கருவறையில் அந்த புழுக்கத்தில், நாற்றத்தில், சட்டை இல்லாமல், வாய் வலிக்க மந்திரம் சொல்லும் பார்ப்பனர்கள் அரிதாகி விடுவார்கள் இன்னும் சிலபல வருடஙகளில். படித்து டாக்டர் அல்லது இஞ்சினியர் என அமெரிக்கா பறந்து விடுவார்கள். அன்று இந்த கோவில்களையெல்லாம் நாம் கட்டி ஆளலாம். அப்பொழுது பார்ப்போம் மனித வக்கிரங்கள் எவ்வளவு வெளியேறும் என்று. தேவர்கள் கருவறை உள்ளே நின்று அரிவாளோடு அர்ச்சனை செய்வதை நினைத்தலே பரவசமாய் இருக்கிறது. ‘பள்ளர்’ குலமே எழுச்சி கொள், அங்கே நமது பங்கை உறுதி செய்வோம் இப்பொழுதே!

      • அருவா பிடிக்கிற தேவர்கள்தான் பார்ப்பன இந்து முன்னணியின் தென்மாவட்டத் தளபதிகள், தெரியுமா புலிகேசி?

      • கோவில்கலில் குத்து வெட்டு தான்நடக்கும். பொருமை இருக்காது . ப்ரமனன் பூஜை எல்லா சாதியும் மரியாதை தரும். ஆரியன் புத்திசாலி.

  14. அருமையான கட்டுரை.தோழர் வில்லவனுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.தினமலரின் பார்பனிய முகத்தை கிழிப்பதை போல் இக்கட்டுரை இருந்தது.ஆர்.எஸ்.எஸ்.கருத்தை தமிழகத்தில் பரப்புவதில் கமலை விட தினமலர் முனைப்பாக செயல்படுகிறது.

  15. சரி சினிமா கூத்தாடி விவேக் சொன்ன மஞ்சள் பத்திரிகை என்பதன் பொருள் என்ன ?

  16. ///ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ///நியாயம் கேட்காமல், ஆனால் மனித அவலத்தை, அக்கிரமத்தை பதிவு செய்யும் பல கதைகள் ‘புதிய் கலாச்சாரத்தில்’ வந்தது உண்டு. அப்ப‌டியான ஒர் உணர்வை இந்த கதைகள் பதிவு செய்திருந்தால் கூட போதுமானது. அவை ‘தினமலரில்’ வருவதாலேயே ஒதுக்க வேண்டாம்.அக்கதைகளை எழுதியது பார்ப்பனர்களாய் இருக்காது என்பதை நினைவில் வைக்கவும்.  மேலும் இடஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினர், அவர்கள் சாதி சார்ந்த மற்ற்வர்கள் முன்னேற தடையாய் உள்ளனர் என்பதை தினமலர் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. படித்து முன்னேறிய வகுப்பினர் தான் தினமலர் வாங்கி படிக்கிறார்கள். அவர்கள் திருந்தினால் சமூகத்துக்கு நல்லதுதானே. நியாத்தின் குரல் எங்கிருந்து ஒலித்தாலும் ஏற்று கொள்ள வேண்டியது 

  17. நல்ல கட்டுரை! இவை எல்லாம் பேச்சோடும் எழுத்தோடும் தான் உள்ளது. ஏன் நம்மை போல் உள்ளவர்கள் நியாயத்திற்காக போரடகூடாது? இன்னும் தாழ்த்தபட்டவர்கள் தம் இடஒதுக்கீட்டைகூட நிரப்ப முடியவில்லை. மேல் சாதிக்காரர்கள் இதை இன்னும் பொய் சாதி சான்றிதல் பெற்று பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.இதெற்கெல்லாம் ஒரேவழி கல்வி மற்றும் கலப்பு திருமணங்கள். சாதீய அடக்கு ஒடுக்கு முறைகளை திரைப்படங்களில் பார்த்து ரசிக்கும் நாம் ஏன் நடைமுறையில் கடைபிடிப்பதை மறந்துவிடுகிறோம். நாண்பர்களே….சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பினாலும் நாம் இன்னும் தரை மீதுதான் தவழ்ந்துகொண்டிருக்கிரோம் என்பதை மறந்துவிடவேண்டாம்…
    நான் புராணம் அதிகமாக படித்ததில்லை…சாமியே பிராமணர்கள் சூத்திரர்கள் என்று பிரிக்கும் போது நீ ஏன் போராட்டங்கள் செய்து கோவில் நுழைவு போராட்டம் , தேர் இழுக்கும் போராட்டம் நடத்துகிறாய்? உதறி தள்ளு…..உன் வாழ்க்கையில் உயர்வதை குறிக்கோளா வை…

    நன்றி…

  18. தோழர் வினவு!

    மக்கள் ஆதரவோடு வளர்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்.. எதிர்கருத்து கூறியே வளர்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்..ஒருவருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவமே அவரை வளர்த்துவிடுகிறது.. என்று நம்புபவன் நான்.. இவன் மட்டுமல்ல இந்து ராம்.. சப்புற மணி சாமி ஆகியோரை கூர்ந்து கவனித்தால் தங்களுக்கு தெரியும்.. இவன்களுக்கு இந்த அளவுக்கு தனி இடுக்கை போடுமளவுக்கு முக்கியத்துவம் தரதேவை இல்லை என்பதே எனது கருத்து.. சண்டையிடுபவன் சமமான எதிராளியாக இருக்கவேண்டும். இவன்கள் எல்லாம் அதற்கும் கீழே! டாய்லெட் டிஸ்யு பேப்பருக்கும் தினமலத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ..எனவே தோழரை இவனுகளை பற்றி பதிவு எழுதி போராட்டம் நடத்தி பெரிய ஆளாக வளர்த்துவிட வேண்டாம் என கனிவோடு கேட்டு கொள்கிறேன்

    • செந்தமிழன்,

      சமூகத்தில் தினமலரின் பங்கை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அரசியல் அறிந்த முன்னணியாளர்களிடம் தான் தினமலர் அம்பலப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட மக்களிடம் தனது செல்வாக்கை இழக்கவில்லை என கட்டுரையாளரே குறிப்பிடுகிறார்.

  19. எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்
    அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு

    பார்பன தினமலர் சொல்லி விட்டதால் கருத்தை ஆராயவேண்டியது இல்லை என்பதாகிவிடாது என்கிறார் வள்ளுவர்

    இட ஒதுக்கீடு எனபது காலம் காலமாக அணைத்து சமுதாயத்தினரால் ஒடுக்கப்பட்ட முன்னேறாத மக்களுக்கு முன்னேற தேவை

    இன்றைக்கும் தீண்டாமை கொடுமை செய்கின்ற சாதிகளுக்கு, முன்னேறிய மக்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு.
    இரட்டை குவளை வேண்டும் என்று ஏய்க்கும் மக்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு.

    அன்று பார்பன்ருட்ன் சேர்ந்து தால்தபட்டவர்களை ஒடுக்கினார்கள்
    இன்று தால்தபட்டவர்களுடன் சேர்ந்து இட ஒதுக்கீடு பெறுகிறார்கள்.

  20. உண்மை கசக்கும்!, தினமலரை பற்றி எவ்வளவு கூரை கூறினாலும், அவர்கள் நடுநிலைமை தவரதாவர்கள் எனபது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இங்கே நி ஊமை வேஷம் போட்டு விஷம் ஏற்றும் முயற்சி தோல்வியாகve மூடியும்.

    • //நடுநிலைமை தவரதாவர்கள் //
      நடுநிலைமை தவறாதவர்கள் என்று சொல்வதெல்ல்லாம் ஓவர். அதனால் தான், கட்டுரையாளர் சொல்கிற படி, அரசு ஊழியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், திராவிட கட்சிகள் ஏன் எரிக்கிறார்கள்? தினமலரே நீங்கள் சொல்வது போல சொல்வது கிடையாது.

  21. நல்லவர்கள் எல்லா இடத்திலும் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். என்ன நாம் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லை, அதனால்தான் பிரச்சினைகள் வருகின்றன. நடந்ததையும் நடப்பதையும் நாம் மாற்றமுடியாது. ஆனால் நடக்கபோவதை நாம் மாற்றலாம்.அதை மாற்ற நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். உண்ணும் உணவும், உடுப்பும், உயிர் காக்கும் மருந்தும், பேசும் பேச்சும், பிறந்ததிலிருந்து ஓடும் குருதியும் ஒண்ணா இருந்தாலும் சில நெஞ்சங்கள் பிரிவினையை பேணி காக்கின்றன!

  22. இதே தினமலர் கடா வெட்டும் சிரிப்பு போலீஸ் என்று செய்தி போடுகிறது. இதுவே ஒரு பார்ப்பனருக்கு பூசணி, வாla்காய் ,பத்தாயிரம் தட்சிணை கொடுத்து பூசை செய்தால் சிரிப்பு போலீஸ் என்று எழுதுமா?
    இவர்கள் ஒபாமா பையில் குரங்கு வெச்சிருக்கார், இதோ தங்கம் அணிந்த குரங்கு சாமி போல மூட நம்பிக்கையை பரப்புவார்கள் . ஆனால் திடீரென்று எங்கிருந்தோ பகுத்தறிவு வேஷம் வந்துடும்.

    போர் நடக்கும் இடத்தில் பொது மக்களே இல்லை என்று எழுதி ரெண்டு லட்சம் மக்களை சூ மநத்ரகாளி காணோம் என்றாக்கிய பத்திரிகையை தமிழர்கள் படிப்பதே தவறு.

  23. Mr.அநோன்ய்மௌஸ்.,நீங்கள் கூறியது முற்RIலும் சரி தினமலரை புரகணிபவர்களில் நானும் oruvan.

  24. // நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. //
    🙂 இது பற்றி நான் ஒரு பதிவை ஏற்கனவே எழுதினேன்.

  25. இவர்களின் ஆசாரம் என்று கூறி கொண்டு கோயிலுக்குள்ளேயே பண்ணும் அபசாரங்கள் எல்லாம் வலையில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி கொடிருக்கிறது. படிபடியாக இவர்களின் எல்லா அசிங்க முகமும் வெளிச்சத்திற்கு வரும். நடிகைகளை பற்றி முதல் பக்கத்தில் எழுதிய இந்த தினமலர் இவர்களின் சலபங்களை ஏன் துண்டு செய்தியாக வெளியிடுகிறது?

    • இவன்கள் என பொதுப்படையாகக் கூறக்கூடாது. ஒருவன் செய்ததை அனைவரும் செய்த்தாக திர்க்கலாமா?
      தினமலர் ஒரு நல்ல பத்திரிக்கை. அவர்கள் திராவிடர்கள் பிராமணருக்கு செய்த துவேசத்தை நிவிர்த்தி பண்ணும் நோக்க்ததில் எழுதுகிறாரகள். யாராவது அதைச்செய்தால் நல்லதுதானே? புராணங்கள், ஆன்மிகம் என்று போவதால், ஒரு பத்திரிக்கையை குறை சொல்லமுடியாது. பத்திரிக்கை பலருக்கும் திருப்துபடுத்தும் வகையில் இருந்தால்தான் வியாபாரமாகும். இல்லையென்றால், முரசொலி, விடுதலை போன்று ஒரு குறுகிய் வட்டத்துக்குள்தான் மேயும்.

    • ஆமாம் ஆமாம், லெனினும் ஸ்டாலினும் செய்த கொலைகளுக்கு எல்லா கம்மூனிஸ்டுகளும் தானே காரணம். அதே மாதிரி ஒரு முட்டாள் செய்ததுக்கு எல்லா பார்ப்பானும் தான் ஜெயிலுக்குப் போகணும். சரியாகச் சொன்னீர்கள் நிதி.

      • எதுவுமே தெரியாம தெரிந்த மாதிரி பேசுறயே கொஞ்சம் அத விளக்க முடியுமா ஆதாரம் இருந்தா pesu

        • http://www.hawaii.edu/powerkills/NOTE4.ஹதம்
          பூனை கண்ணை மூடிகிட்டா ஒலகம் இருண்டுவிடாது அன்பரே. யூதம், கிருத்தவம், இசுலாம் மதங்கள் செய்த கொலைகளை மிஞ்சிவிடும் கம்யூனிசம் செய்த/செய்யும் கொலைகள்.
          வாழ்க கம்மினாட்டியிசம்.

      • தேவநாதன் போல், சங்கரச்சாரி போல் பல பால் (cow milk only) குடிக்க தெரியாத பச்சிளம் குழந்தைகள் குடிமி போட்டுகொண்டு செய்யும் அக்ரமங்கள் modern technology like blogs, video phones etc. வரும் காலங்களில் மூலம் அம்பலபடுதபடும். நீங்கள் பயபடதிர்கள் உங்களை யாரும் இப்பொழுது கைது செய்ய போவதில்லை

      • தமிழ்நாட்டை சுடுகாடா மாற்றி கொண்டிரிகும் உங்க பிரமண கூட்டம் ஈழத்தையும் விட்டுவெக்கமா அவர்களின் போரை நெய்யாண்டியாக்கி. இப்போ சந்தொசதெல மிதந்து கொண்டிருக்கும் பிரமன அப்பாவிகளான சோ, சுப்ரமனியாச்வாமி, ஜெயலிதா, ராம் போன்றோருக்கு விளக்கு பிடித்த பிரமின பத்திரிகைகளான தினமலர், ஹிந்து செய்த, செய்கின்ற துரோக்காகளை ஈழ மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களேமன்னிகமடார்கள்

  26. வாழ்த்துக்கள். நல்ல கட்டுரை.

    கிரிமிலேயரை இடஓதுக்கிட்டில் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் அதியமானுக்கு,

    இடஓதுக்கீட்டில் பலன் அடைந்த தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனைப் பேர் ? ஊருக்கு நாளு பேர். இடஓதுக்கீடு பற்றி புதிய ஜனநாயகம் ஓரு புத்தகம் வெளியிட்டுள்ளது. அதனைப் பாருங்கள். இந்தியாவில் இட ஓதுக்கீடு வந்ததில் இருந்து எவ்வளவு பேர் பலனடந்து இருக்கிறார்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது. பலனடைந்தவர்கள் மிகவும் குறைவு. ஏன், இடஒதுக்கீட்டு இடங்களை பொதுப்பிரிவிற்கு மாற்றி மத்திய தேர்வாணையம் செய்த தில்லுமுல்லுகளை விசாரிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில், இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தாக்கல் செய்யும் மாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், “இது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தினால் தேர்வாணையத்தின் கல்விப்பணி பாதிக்கும்” என்று ஒரே போடாகப் போட்டு வழக்கு இழு இழு என்று இழுத்துக் கொண்டுள்ளது. இது ஒன்றே போதும் இடஒதுக்கீடு எந்த தூரம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு.

    மேலும் இடஒதுக்கீடு என்பதே, மக்களுக்கு அதிகாரமையத்திற்கு எதிராக உணர்வுகள் வரக்கூடாது என்பதற்காகா – ஏமாற்றுவதற்காக வெள்ளையன் கண்டுபிடித்தது. அதனை இந்திய அரசு இன்று கடைப்பிடிக்கிறது.

    இதற்கு நல்ல உதாரணம் – இடஒதுக்கீடு வேண்டும் நாங்கள் கஷ்டபடுகிறோம் என்னும் கவுண்டர்கள், செட்டியார்கள், தேவர்கள், முதலியார்கள் முதலானோர் (மற்ற ஜாதிகளை சொல்ல துவங்கினால் இடம் பற்றாது), தங்கள ஜாதியை மட்டும் எப்படி உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று பாருங்கள். ராமதாஸ் சித்திரை முழு நிலவு கொண்டாடுகிறார் – அவர்கள் பல்லவ பரம்பரையாம். கொங்கு கவுண்டர்கள் தாங்கள் ராஜ பரம்பரை என்கிறார்கள். தேவர்கள் மூவேந்தர்கள் பிறந்த பரம்பரை நாங்கள் என்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்றுபடும் ஒரு இடம் – தாழ்த்தப்பட்டவர்களின் மீது தங்கள் அதிகாரத்தை கொடுரமாக நிலைநாட்டுவதில் மட்டும்தான்.

    உண்மையான இடஒதுக்கீடு யாருக்காக அம்பேத்காரால் அறிவிக்கப்பட்டதோ அவர்களுக்கு அது போய் சேரவே இல்லை. (சில பேரை தவிர்த்து)

    அறிவுடைநம்பி

    • ///கிரிமிலேயரை இடஓதுக்கிட்டில் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் அதியமானுக்கு,///

      இட ஒதுக்கீட்டில் கிரிமி லேயர்களை களைய வேண்டும் என்றுதானே சொன்னேன். அதில் என்ன அநீதி உள்ளது ?

  27. all said and done, தினமலரின் local coverage and reporting மிக விரிவானதுe ; the best among all TN papers. லோக்கல் செய்திகளுக்காக இதை அவ்வப்போது படித்து தொலைய வேண்டியிருக்கிறது. இது மட்டும் தான் தினமலரில் ‘நல்ல’ விசியம்.

  28. தினமலர், சிதம்பரம் பூஜாரிகள் விசய்த்தில் ஒரு சிறப்புக்கட்டுரையைப் போட்டிருந்தது. அதை வினவு படிக்கவில்லை போலும். அதில் அவர்கள், சிதம்பரம் பூசாரிகளின் உள்ளோக்கமும், அவர்கள் செய்தது தவறு என்றும் சொன்னார்கள். அது போக, ஆசிர்யருக்குக்கடிதம் பகுதிர்யிலும் பூசாரிகளை எதிர்த்த கடிதங்களும் வந்தன.

  29. //தினமலர், சிதம்பரம் பூஜாரிகள் விசய்த்தில் ஒரு சிறப்புக்கட்டுரையைப் போட்டிருந்தது. அதை வினவு படிக்கவில்லை போலும். அதில் அவர்கள், சிதம்பரம் பூசாரிகளின் உள்ளோக்கமும், அவர்கள் செய்தது தவறு என்றும் சொன்னார்கள். அது போக, ஆசிர்யருக்குக்கடிதம் பகுதிர்யிலும் பூசாரிகளை எதிர்த்த கடிதங்களும் வந்தன.//

    கத்திரிக்கா முத்தினா கடத்தெருவுக்கு வந்துதான் தீரனும்…. அது மாதிரிதான் இதுவும்.

  30. எல்லோரும் புதிய ஜனநாயகத்தை மட்டுமே படிக்கவேண்டும். அது தான் முற்றிலும் மதச்சார்பற்ற சமத்துவச் சுடர் இதழ்.
    வாழ்க கம்மினாட்டியிசம்.

    • ஹலோ mr.anonymous புதியஜனநாயகம் எந்த மதத்துக்கு சார்பா கட்டுரை எழுதிருக்கு?இந்த கட்டுரைல தினமலரோட பார்பனிய முகத்த ஆதாரபூர்வமா நிருபிசிருக மாதிரி,உங்களால நிருபிக்க முடியுமா?எதோ கருத்து சொல்லணும்னு சொல்ல கூடாது.ஒரு சின்ன திருத்தம்…வாழ்க கம்யுநிசம்.

      • கம்யூனிசமே ஒரு மதம் தானே! அதைச் சார்பா வெச்சுகிட்டு எழுதுற பத்திரிக்கை எல்லாம்
        நடுநிலை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
        எதை எழுதினாலும் பார்ப்பானீயம், பார்ப்பான் என்ற புள்ளியில் முடிக்காமல் உங்களால் சிந்திக்ககூட முடியாது
        அவ்வளவு சிந்தனை வறண்டவர்கள் நீங்கள்.

        உங்களால் மனித குலத்துக்கு 10 நயா பைசா கூட பிரயோசனமில்லை.
        நீங்கள் எல்லாம் நீங்களாகவே தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கிவிடுங்கள். அதுவே நீங்கள் மனித குலத்துக்குச் செய்யும் மாபெரும் சேவை.

    • பாப்பாரநா……கல் இபுடிதான் கிருக்குதனமா எதையாவது எழதும் அதாவது தினமலத்தை போல

  31. அருமையான கட்டுரை.தோழர் வில்லவனுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள். Ivalavu aandukalam kalviai gurukulathil aakkramithukondu irunthavarkal, athatku kuttra unarvu kollathavarkal idaothikettel patithu varuvai eppadi
    ‘ivarkalukku pothum’ anru pesa mdikirathu?

  32. தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் எல்லாம் மைனாரிடி தான். ஒரு லாரியில் ஏத்திர அளவு கூட்டம் வெச்சிக்கு பேச்சு புல்டோசர் சைசுக்கு வ விடுறீங்க.
    உங்களால் பார்ப்பானைத் திட்டாமல் ஒரு பதிவு கூட எழுத முடியாது வினவு.
    அப்படி நீங்கள் எழுதினால் அது தான் உங்கள் கடைசி பதிவு.

  33. தக்க சமயத்தில் எனக்கு லூசூனின் இந்தக் கட்டுரையை படிக்கத் தந்து உதவியதற்கு நன்றி. ஜினோடைப் பற்றிய விவாத்த்தை திசை திருப்பிய பார்ப்பன கும்பலிடம் இருந்து விடுபட முயற்சிக்கிறேன்.

  34. பாப்பன் கிட்டருந்து உங்க எல்லாருக்கும் என்னதான்யா வேணும். சமதுவம் சகோரதுவம் அப்டின்னு ஜல்லி அடிக்காம சொல்லு .ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு.பூணுல் போடகூடாது,அவன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்,இப்டி சொல்லு?. சொல்ல வரத தெளிவா சொல்லு!! எல்லாரும் வா !! ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம் .

  35. பாப்பன் கிட்டருந்து உங்க எல்லாருக்கும் என்னதான்யா வேணும். சமதுவம் சகோரதுவம் அப்டின்னு ஜல்லி அடிக்காம சொல்லு .ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு.பூணுல் போடகூடாது,அவன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்,இப்டி சொல்லு?. சொல்ல வரத தெளிவா சொல்லு!! எல்லாரும் வா !! ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம் . வினவு நீயாவது சொல்லு????????????

  36. பொங்கல்ல உப்பு இல்லனாலும் பார்ப்பான் தான் காரணம்னு சொல்லுவிங்களா ?
    எல்லா ஜாதியிலும் அயோக்கியர்கள் உள்ளார்கள். ஆனால் பார்ப்பான் செய்தால் மட்டும் அதை பெரிதுபடுத்தி அவர்களை உயர்த்துகிறிர்கள்.
    பாரதி,மறை மலை அடிகள் ,உ .வே .சா,ரமணர் ,அகத்தியர் ஆகியோர் ஜாதி வெறியுடன் வாழ்ந்தார்களா ???
    ஒருவரை வைத்து ஒரு சமூகத்தை பொதுப்படையாக விமர்சிக்காதிர்கள்
    (இந்து மதத்தில், தவறு செய்த ஒருவன் பிராமணனாக இருப்பின் அவனுக்கு மற்றவர்களை விட 1000 மடங்கு அதிகமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது!!! எனவே இந்து மதமும் பிராமணனை உயர்த்தி பிடிக்கவில்லை )

  37. //பாப்பன் கிட்டருந்து உங்க எல்லாருக்கும் என்னதான்யா வேணும். சமதுவம் சகோரதுவம் அப்டின்னு ஜல்லி அடிக்காம சொல்லு .ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு.பூணுல் போடகூடாது,அவன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்,இப்டி சொல்லு?. சொல்ல வரத தெளிவா சொல்லு!! எல்லாரும் வா !! ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம் .//

    //மற்றவருக்கு என்ன வேண்டுமோ, அது பற்றி நான் சொல்ல முடியாது. ஆனால் தங்களை பார்ப்பனர் என்று கருதுபவர்களிடம் நான் வேண்டுவது இதுதான். 1 ) இந்திய சமூகத்தை அவ்வப் போது சரியான வழியில் கொண்டு சென்றது பகுத்தறிவு அடிப்படையிலே அமைந்த ஆன்மீக ஆராய்ச்சியும், சுயநலமற்ற அன்பு உள்ளங்களும் தான். இவற்றைப் பெற்று இருந்த புத்தர், சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர், அப்பர், அருணகிரிநாதர், தியாகராசர் போன்ற ஆன்மீக அறிவும் அன்பு உள்ளமும் கொண்ட நல்லவர்களை மறக்கும் படிக்கு – பில்லியன்களை, அரசியல் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட போலித் துறவிகளின் பொருளாதார அரசியல் வெற்றியில் மயங்கி , அவர்களை ஆன்மீக வாதிகள் போல பிரச்சாரம் செய்து, இந்திய நாட்டின் தத்துவமான பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை கெடுத்து, அசிங்கத்தை பாது காத்து, பல்லக்கு தூக்குவதை நிறுத்துங்கள்.

    2) உங்களால் முடிந்தால் காசு பணம் சம்பாரிப்பதை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணாமல், சுயநலமற்று எல்லோர்க்கும் செம்மை நினைந்து, சரியான ஆன்மீக அறிவை உணர்ந்து, அதை எல்லா மக்களையும் இணைத்து சமத்துவ நிலைக்கு கொண்டு வர உதவுங்கள். 3) இல்லையேல் தயவு செய்து இந்த போலி சாமியார்களுக்கு பல்லக்கு தூக்குவதையாவது நிறுத்துங்கள். சரியான ஆன்மீகம் எல்லா மக்களிடமும் சென்று அவர்களை ஒன்றிணைக்கும். 4) எல்லோரையும் போல சாராசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ள நிலையிலும் தங்களை பிராமணர் என எண்ணிக் கொண்டு, எதற்க்காக வாதாடுகிறோம் எனக் கூட புரியாமல் வாதாடிக் கொண்டு, சாதிக் காழ்ப்புணர்ச்சிக்காரரின் செயலுக்கு நெய் வார்ப்பதையாவது நிறுத்துங்கள்.//

    //நீ சொல்லுற மாதிரி பாப்பான் மாறியாச்சு. இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//

    என்னை ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு என்று சொன்னீர்கள். அதைப் போல நானும் எழுதி இருக்கிறேன். ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி மாறி இருக்கிறீர்களா என்று தெரிவித்து இருந்தால் சரியாக இருக்கும். பொத்தம் பொதுவாக மாறி விட்டோம் என்று ஒப்புக்கு தெரிவித்து இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் மாற்றம் இல்லை என்பது, அடுத்து நீங்கள் எழுதியதில் இருந்து தெளிவாகிறது. //இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//அதாவது “நாங்கள் மாறி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா, அவனுங்க அடிச்சு கிட்டுதானே இருக்க போகிரங்க, போய்யா வேலையைப் பாத்துக்கிட்டு” என்று என்னைப் பார்த்து சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது பொறுப்புணர்ச்சி இல்லாத செயல் என்பதை நீங்கள் அறியவில்லை. தென்
    மாவட்டங்களிலும், வேறு எங்கிலும் சாதிக் கலவரம் இல்லாத வண்ணம், சாதிகளுக்கிடையேயான பகைமை & வேறுபாடு குறையும் வண்ணம், பிறகு ஒரே சமுதாயம்
    உருவாக என்ன செய்ய வேண்டும் என்கிற அக்கறையோ, பொறுப்போ உங்களுக்கு இல்லை. உங்களை யாரும் திட்டக் கூடாது. அந்த ஒரே கவலை தான் உங்களுக்கு.

    ////அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),

    கருண ஏவ ச (கருணையுடன் ),

    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”//

    என்கிற எண்ணம் உங்களுக்கு இல்லை.

    //“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்”// மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை உடைய தன்மை இருந்து இருந்தால், “நீ சொல்லுற மாதிரி பாப்பான் மாறியாச்சு” என்றால், நீங்கள் இப்படி // இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//என்று கேட்டு இருக்க மாட்டீர்கள்.

    இப்படி எல்லா உயிர்களின் நன்மையை நினைத்து இருந்தால் பார்ப்பனரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள். எந்த வகையிலும் பார்ப்பனருக்குரிய குணாதிசயங்கள் இல்லாத போது பார்ப்பனரை திட்டினால் நீங்கள் எதற்கு வருத்தப் பட வேண்டும்?

    பேசாமல் சென்று இன்னும் அதிக செல்வம் சேர்ப்பது எப்படி, இன்னும் எந்த கம்பெனியில் ஷேர் வாங்கலாம், இன்னும் எந்த புதிய பணக்கார சாமியாரைப் பிடித்தால் வேலை நடக்கும், இன்னும் எப்படி அதிக பகட்டாக வாழலாம் என்று உருப்படியான சிந்தனையில் நேரத்தை செலவிடுங்கள்.

    நாங்கள் முடிந்த வரையில் சமத்துவ சமூக அமைக்கவும் , எல்லா உயிர்களிடமும் சிநேகமாக இருக்கும் மன நிலையை உருவாக்கவும் முயற்சி செய்வோம்.

    நான் உங்களை திட்டவில்லை. ஆல் த பெஸ்ட்!

  38. nalla arumaiyaana sataiyati,naan yean thevar entru yealuthinen entral naangalum ithai paarkeroom enpathrkkaathaan,elloraium saathi veriyar entru ninaithu vetakkutaathu, athanaalthan…………

    • நாங்களும் என்பதிலேயே உங்கள் சாதி உணர்வு தெறிக்கிறது
      மற்றபடி இங்கு விவாதத்தில் பங்கு பெறும் எல்லோரும் தங்கள் சாதி பெயரில் எழுத ஆரம்பித்தால் உமக்கே அசிங்கமாய் போய்விடும் ஏனென்றால் தேவர் என்றால் உமக்கு பெருமையாய் இருக்கலாம் , எனக்கு தெரிந்து தேவர் என்ற சொல்லை நான் சினிமாவில்தான் முதலில் கேட்டேன் அப்படினா என்னனு எனக்கு தெரியாது எங்க ஆயாவிடம் கேட்டேன் கள்ளனுங்க(தவறாக எண்ண வேண்டாம்) என்ற பதில்தான் வந்தது இதுல போயி என்ன மரியாதை? நம்மதான் சாதிபெருமை சொல்லிட்டு இருக்கோம்
      பாப்பான் எல்லாத்தையும் தேவ…… பசங்கன்னுதான் சொல்றான். சதிபெருமை பேசி சுயஇன்பம் பண்ணாதிங்க
      திருந்துங்கப்பா

        • விடுதலை,
          என்ன கூப்பாடு ? நியாயத்தை பேசினால், உமக்கு அது கூப்பாடு போல தெரிகிறதா ? ஆதாரத்துடன் கருத்துக்களை மறுக்க முயலாமால், இப்படி பொதுப்படையாக உளர வேண்டாம். புரிகிறதா

        • அதியமான் உங்கள் நியாயத்தை பேசுங்க அதை தடுக்க எனக்கு உரிமையில்லை
          நான் சுட்டி காட்டுவது நானும் பீ்சிதான் நானும் பீ்சிதான் நானும் பீ்சிதான் என்று எழுதுவது பற்றிதான், நீங்க மட்டும்தான் பீசின்னு நினைச்சுகிட்டு எழுதாதிங்க

        • விடுதலை, அப்படி நான் தெளிவாக சொல்லவிட்டால் நான் ஒரு FC அல்லது பார்பான் என்று வசைபாடுகிறார்கள். இங்கு தான் பிறந்த சாதியை கொண்டு, ஒருவனை முத்திரை குத்தும், உயர்ந்த பண்பும், பகுத்தறிவும் உலாவுகிறதே.

          மேலும், பி.சியாக பிறந்தால், அதில் உள்ள நடைமுறை யாதர்த்தங்களை அனுபவத்தில் அறிகிறேன். ஒ.கெ.

  39. தினமலர் கும்பலை புறக்கணிக்கவேண்டும் !

    இதற்காக யாரும் இந்துமத வெறியை தூண்டி மக்களை துண்டாடுவதில் தினமலரின் பணி முக்கியமானது,சமூகவிரோத பார்ப்பன கும்பல்களால் வெளியிடப்படும் இந்த
    பார்ப்பன கழிசடை பத்திரிக்கை மக்களுக்காக போராடும் போராளிகளை அவன் இவன் என்று எழுதி தனது கோயபல்ஸ் புளுகை அவிழ்த்து அவதூறை நஞ்சை கக்கி வருகிறது, தினமலரைமட்டும் தொடர்ச்சியாக படிக்கும் வாசகன் தன்னையறியாமலே பார்ப்பன சூழ்ச்சிக்கு இரையாகிவிடுகிறான், அடுத்தவன் வீட்டில் என்னநடக்கிறது என்ன தின்கிறார்கள், என்ன கழிகிறார்கள் என்கிற குணம் முக்கால் வாசி கோட்சே குலத்தவர்களிடம்(பார்ப்பனர்கள்தான்) இருக்கிறது கோள் மூட்டுவது,அடுத்தவன குடிய கெடுக்கறது இதையெல்லாம் ஒரு கலாச்சாரமாகவே இந்த பார்ப்பான் பசங்க செஞ்சிட்டு வறாங்க இதில் பார்ப்பனரல்லாத மற்றவரும் பலியாகிவிடுகின்றனர், அந்த கலாச்சரத்தின் பத்திரிக்கை வடிவம்தான் தினமலர்.
    சங்கராச்சாரிய வணங்கி அவனுக்காக வீட்ட திறந்து வைத்திருக்கும் பார்ப்பன தினமலர் கும்பலை புறக்கணிக்கவேண்டும்.

  40. தினமலர் கும்பலை புறக்கணிக்கவேண்டும் !

    யாரும் இந்துமத வெறியை தூண்டி மக்களை துண்டாடுவதில் தினமலரின் பணி முக்கியமானது,சமூகவிரோத பார்ப்பன கும்பல்களால் வெளியிடப்படும் இந்த
    பார்ப்பன கழிசடை பத்திரிக்கை மக்களுக்காக போராடும் போராளிகளை அவன் இவன் என்று எழுதி தனது கோயபல்ஸ் புளுகை அவிழ்த்து அவதூறை நஞ்சை கக்கி வருகிறது, தினமலரைமட்டும் தொடர்ச்சியாக படிக்கும் வாசகன் தன்னையறியாமலே பார்ப்பன சூழ்ச்சிக்கு இரையாகிவிடுகிறான், அடுத்தவன் வீட்டில் என்னநடக்கிறது என்ன தின்கிறார்கள், என்ன கழிகிறார்கள் என்கிற குணம் முக்கால் வாசி கோட்சே குலத்தவர்களிடம்(பார்ப்பனர்கள்தான்) இருக்கிறது கோள் மூட்டுவது,அடுத்தவன குடிய கெடுக்கறது இதையெல்லாம் ஒரு கலாச்சாரமாகவே இந்த பார்ப்பான் பசங்க செஞ்சிட்டு வறாங்க இதில் பார்ப்பனரல்லாத மற்றவரும் பலியாகிவிடுகின்றனர், அந்த கலாச்சரத்தின் பத்திரிக்கை வடிவம்தான் தினமலர்.
    சங்கராச்சாரிய வணங்கி அவனுக்காக வீட்ட திறந்து வைத்திருக்கும் பார்ப்பன தினமலர் கும்பலை புறக்கணிக்கவேண்டும்.

  41. ஹ்ம்ம் இவ்வளவு தூரம் reservation குறித்து வாதிடும் தமிழர்கள் இலங்கையில் சிங்களகாரன் போட்ட reserevation எதிர்ப்பது  ஏன்?  ஈழ தமிழன் நல்ல வாய்ப்புகளை பெற்று படிக்க முடிந்தது இலங்கையில். பொதி கொண்டு reservationஐ ஏற்று கொள்ள வேண்டியது தானே.  அதே போல் முதன் முதலில் இந்திய தமிழர்களை திருப்பி அனுபிய பொது அதற்க்கு மறுப்பு எதவும் தெரிவிக்கமல் உள்ளூர ஆனந்த பட்டவன் தன ஈழ தமிழன். கண்டிப்பாக சிங்களவன் செய்த வான் கொலைகளை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன். எனது தமிழன் சாவது .. கேவலமாக நடத்தபடுவது ஒரு போதும் ஏற்க முடியாது. இங்கு பார்பனர்களை அருமையாக வசைபாடும் சஹோதரர்கள், இஸ்லாமியர்கள் தங்களை தனியாக அடையாள படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கையில் சொன்னதை பத்தி கருத்து தெரிவிக்க அழைக்கிறேன். ஹ்ம்ம் ஒரு இளிச்சவாயன் வேண்டும் இவர்களுக்கு கத்தி theeka

  42. சரியான பதிவு. தினமலரை பற்றி தெரிந்தாலும் அதன் மனுஸ்மிர்தி சாரத்தை பரப்புரையை எடுத்து கூறியதிற்கு நன்றி

    //கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?//

    இதற்க்கு ஆதாரம் இருகிறதா தோழரே? இணையத்தில் தேடி கிடைக்க வில்லை.. plz share if u have any source for this news alone..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க