Saturday, July 20, 2024
முகப்புஉலகம்ஈழம்கோயபல்சை விஞ்சிய இந்து என்.ராம்

கோயபல்சை விஞ்சிய இந்து என்.ராம்

-

கோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது. அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது.
ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இம்முகாம்களைப் பார்வையிட ஐ.நா. பணியாளர்களையோ, ஊடகங்களையோ, மனித உரிமை அமைப்புகளையோ அரசு அனுமதிப்பதில்லை அகதிகள் முகாமில் பணியாற்றித் திரும்பிய மருத்துவர்கள், செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், முகாமை பார்வையிட்ட இலங்கை அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் வாக்குமூலங்களே அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் அவலநிலையைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த சில வாரங்களில் மட்டும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு அம்மை நோய் தாக்கியிருப்பதாகவும், இலட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் செய்வதற்கு அங்கு மொத்தமே 50 மருத்துவர்கள்தான் உள்ளனர் என்றும், 300 தாதியர்கள் தேவைப்படுகின்ற இடத்தில் மொத்தமே 5 முதல் 10 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், அரசு மருத்துவர் சங்கச் செய்தித் தொடர்பாளரான மருத்துவர் உபுல் குணசேகரா தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை வசதிகள் இல்லை.

ஐ.நா.வின் ஆயுத மோதல் மற்றும் குழந்தைகள் பிரிவு, பி.பி.சி.யின் சிங்கள வானொலிச் சேவையில் “அரசு சிறார்களுக்கு சிறப்பு ஊட்டத் திட்டத்தை உடனடியாக யல்படுத்த வேண்டும்” என்று எச்சரித்துள்ளது. முகாம்களில் அடைபட்டுள்ள 5 ஆயிரம் சிறுவர்கள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 90 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்டச் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இருக்கும் மாணிக் ஃபார்ம் முகாமில் 70 பேருக்கு ஒரு கழிப்பறைதான் உள்ளது. சர்வதேச நெறிமுறைப்படி அது 20 பேருக்கு ஒன்று என இருக்க வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் தொற்றுநோயான வயிற்றுப் போக்கு பல உயிர்களைப் பறித்துள்ளது.

மாணிக் ஃபார்ம் முகாமைச் சேர்ந்த வயதான தமிழர் ஒருவர் “இளைஞர்களும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இங்கு நடத்தப்படும் விதமும், கேட்கச் சகிக்காத வசவுகளும் போர்முனையிலேயே பட்டினி கிடந்தாவது செத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது” என்கிறார். இதற்கு முன் வனாந்திரமாக இருந்த இடத்தில் தகரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முகாம்களில் வெயிலின் உக்கிரம் அதிகமிருப்பதால், கிடைக்கும் இடைவெளிகளில் எல்லோரும் தூங்குகிறார்கள். சிறுகுழந்தைகளை உறங்க வைத்திருக்கும் பெற்றோர்கள் ‘சிங்கள ராணுவத்தினர் எவரேனும் பிள்ளைகளைத் தூக்கிச் ன்று விடுவரோ’ எனும் பீதியில் தூக்கம் வராது இரவெல்லாம் விழித்திருக்கும் கொடுமை தாங்கமுடியாத ஒன்று. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் அப்பகுதியின் களிமண் தரையில் கால் வைக்கக் கூட முடியாது. கூடவே எக்கச்சக்கமாக பூச்சிகள் கிளம்பி வரும். அது இன்னும் கொடுமையானது.

கிளிநொச்சியைச் சேர்ந்த 60 வயது முதியவர் போரில் காணாமல் போன தனது மகளின் குடும்பத்தைத் தேடி முகாம்கள் தோறும் அலைகிறார். வவுனியாவில் இருக்கும் பெரியகாட்டு முகாமில் இராணுவத்தினர் பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என்பதால், அவரால் அந்த முகாமிற்குள் ன்று தேடமுடியாது தவிக்கிறார்.

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் முகாமில் நோயினால் சிறுவர்கள் பலியாகிக் கொண்டுள்ளனர். நோயாளிகளுக்குத் தேவையான அளவு மருத்துவர்களில்லை. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ பரிசோதனை செய்யும்போதும் இராணுவ புலனாவுத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விடத்தில் உள்ளனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களைப் பரிசோதித்த இராணுவ மருத்துவர்கள், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் தேவை இல்லை என முகாமுக்கு திருப்பி அனுப்பினர். முகாமில் அச்சிறுவர்கள் பிணமாயினர்.

வந்தனா சந்திரசேகர் எனும் 28 வயதுப் பெண், 9 மாதக் கர்ப்பிணி. ஏற்கெனவே இவருக்கு 5 பிள்ளைகள். இவர் தண்ணீருக்காக 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கிறார். நீண்ட நேரம் காத்திருந்த பின்னர், ஒவ்வொரு குடும்பமும் தலா 10 லிட்டர் தண்ணீரைக் குடிக்க, குளிக்க, உடுப்புக் கழுவப் பெற்றுக்கொள்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் அங்கு நடைபெற்ற தாக்குதலால் கால் ஊனமாகி குடும்பத்துடன் ராமேஸ்வரம் – அரிச்சமுனைக்குத் தப்பிவந்துள்ளார். தொற்றுநோகள் பரவி முகாம்களில் தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையில் இறந்து வருவதாகவும் வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் ஆண்களும் பெண்களும் இறந்துள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கல்மனம் கொண்டோரையும் உருகிட வைக்கும் மனிதக் கொடுமைகளை அரங்கேற்றிவரும் இந்த வதை முகாம்களுக்கு சிங்கள இனவெறியன் ராஜபக்சே வைத்துள்ள பெயரோ ‘நலன்புரி கிராமங்கள்’.
இந்த நலன்புரி கிராமங்களைப் பற்றி, பிரிட்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிக்கை “மூன்று லட்சம் மக்கள் இலங்கை அரசின் சாவு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஆண்கள் சித்திரவதைக்கு உட்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகிறார்கள். சிறுவர்கள் மனரீதியாக பாதிப்புக்கு உட்படுகிறார்கள். உணவு, மருந்து தண்ணீர் இல்லாமல் மக்கள் ஈக்களைப் போல த்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களும் சரி, முதியவர்களும் சரி உணவுக்காக சுடும் வெயிலில் காத்திருக்க, இறந்தவர்களின் உடல்களோ வெளியில் போடப்பட்டு அழுகவிடப்பட்டுள்ளன” என்று எழுதியுள்ளது.

வவுனியாவில் உள்ள முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 1400 பேர் இறப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூளைக் காச்சலால் மட்டும் 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த வீதத்தில் இறப்பு தொடருமானால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முகாம்களில் மக்களே இல்லாத நிலை ஏற்படும் என்றும் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி 200 பேர் த்துக் கொண்டிருக்கின்றனர்.

வதைமுகாம்களின் நிலைமையைப் பற்றிப் பேசும்போது பத்மினி சிதம்பரநாதன் எனும் தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கூட “இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களைக் கூட சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை” எனக் கண்டித்துள்ளது. “முட்கம்பி வேலிக்குள் 3 லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல். எமது நாட்டுப் பிரஜைகளான 3 லட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் அடைத்து வைத்துள்ளீர்கள்?” என்றும், “உடனடியாக அந்த மக்களை அவர்களின் சோந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுங்கள்” என்றும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பேசியிருக்கிறார்.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா கூட ‘‘அகதி முகாம்களைப் பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன். காலைக்கடன்களைக் கழிப்பதற்குக் கூட மக்கள் மணிக்கணக்கில் கியூவில் நிற்கிறார்கள். 5 பேர் மட்டும் இருக்கக் கூடிய கூடாரத்தில் 30-க்கும் அதிகம் பேர் உள்ளனர். கூடாரத்தில் எழுந்து நின்றால், இடுப்பு எலும்பே முறிந்துவிடும்; இந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தென்னாசியாவிலேயே பெரிய பத்திரிக்கை என்றும் பாரம்பரியம் மிக்க நம்பத்தகுந்த பத்திரிக்கை என்றும் நடுத்தர வர்க்கத்தாலும் அறிவுஜீவிகளாலும் போற்றப்படும் “இந்து” நாளேட்டின் ஆசிரியர் என்.ராம் மட்டும் இந்த அகதி முகாம்களை “இந்தியாவில் இருக்கும் முகாம்களை விட மேம்பட்டிருக்கிறது” என்றும், “சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை. தண்ணீருக்கும் பிரச்சினை இல்லை” என்றும் சோல்லியிருக்கிறார். முட்கம்பி வேலிகளில் மின்சாரத்தைப் பாச்சி மக்களைக் கொல்லாத ராஜபக்சேவின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறார், இந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு. அங்கு உற்றார்-உறவினர்களையும் சோந்த ஊரையும் விட்டு ஏதிலிகளாகக் கொடும் வலிகளோடு வந்த தமிழர்களை “வீடுவாசலை விட்டுவிட்டு ஓடிவந்த போதுகூட, தாங்கள் சேமித்து வைத்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள்” என்றும் வக்கிரத்தோடு சோல்லியிருக்கிறார்.

“இந்து’’ராமின் தனிப்பட்ட குரல் அல்ல இது. இந்திய மேலாதிக்கம், இலங்கை அரசின் யல்பாட்டுக்கு ராமின் மூலம் தரும் பாராட்டுப் பத்திரம்தான் இது.  யாருமே நுழைய முடியாத அம்முகாம்களுக்கு ஹெலிகாப்டரில் “இந்து” ராம் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ராஜபக்சே நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைத்து, கொலைக்கரங்கள் வழங்கிய “லங்கா ரத்னா” எனும் பதக்கத்துடன் சிங்கள இனவெறிக்கும், இந்திய மேலாதிக்கத்தின் நலனுக்கும் ஊதுகுழலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, ‘பாரம்பரியம்’ மிக்க “இந்து” பத்திரிக்கை.

இலங்கை மீதான மேலாதிக்கப் போட்டாபோட்டியின் காரணமாகவும், சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடாமல் இழுப்பதற்காகவும், மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் அகதிமுகாம் அவலங்களை அம்பலப்படுத்துகின்றன. இந்திய மேலாதிக்கவாதிகளோ, ராஜபக்சே கும்பலுக்கு நற்சான்றிதழ் அளித்து தாஜா செய்து தம்பக்கம் இழுக்க, அகதிமுகாம் அவலங்களை மூடிமறைக்கின்றனர். போர்க்குற்றவாளியான ராஜபக்சே மட்டுமல்ல; இக்குற்றங்களுக்குப் பக்கபலமாகப் பிரச்சாரம் செய்துவரும் இந்திய மேலாதிக்கத்தின் ஊதுகுழலான “இந்து” ராம் போன்ற கோயபல்சுகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்: வன்னி அகதி வதை முகாம்கள் – நேரடி ரிப்போர்ட், புகைப்படங்கள்!

N.Ramஆயணம் – வீதி நாடகம்

 1. //இலங்கை மீதான மேலாதிக்கப் போட்டாபோட்டியின் காரணமாகவும், சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடாமல் இழுப்பதற்காகவும், மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் அகதிமுகாம் அவலங்களை அம்பலப்படுத்துகின்றன. இந்திய மேலாதிக்கவாதிகளோ, ராஜபக்சே கும்பலுக்கு நற்சான்றிதழ் அளித்து தாஜா செய்து தம்பக்கம் இழுக்க, அகதிமுகாம் அவலங்களை மூடிமறைக்கின்றனர்.//

  இதுதான் யதார்த்தமான உண்மை.

  ஈழத்தில் இன்று 3 லட்சம் தமிழர்களுக்கு மேல், மிக கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் பத்திரிகைகள் இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழர்களிடம் அரசயில் எழுச்சியை உண்டாக்குவதற்கு பதில், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், ‘ஈழ வரலாறு-இலங்கை வரலாறு-பிரபாகரன் வரலாறு’ என்று பழைய கதைகளை எழுதி, தமிழர்களை வெற்று பெருமை பேச வைத்து, பணம் பார்க்கிறார்கள்.

  தோழமையுடன்,

  செந்தில்.

 2. “வவுனியாவில் உள்ள முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 1400 பேர் இறப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூளைக் காச்சலால் மட்டும் 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த வீதத்தில் இறப்பு தொடருமானால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முகாம்களில் மக்களே இல்லாத நிலை ஏற்படும் என்றும் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி 200 பேர் த்துக் கொண்டிருக்கின்றனர்.”

  நாஜிப்படை வதை முகாம்களில் நடந்த கொடுமைகளை ஹிட்லரின் வாரிசான‌ ராஜபக்சே இலங்கையில் வெற்றிகரமாக செய்து வருகிறான். இந்தியாவின் துணையோடு தான் நடக்கிறது. “இந்து” ராம்,
  தினமலர் போன்ற பத்திரிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். மிச்சம் உள்ள மக்களையாவது காப்பாற்ற வேண்டும்.

 3. பல உண்மைகளை அம்பலப்படுத்தும் கட்டுரை. தெளிவுபடுத்தியது. பாராட்டுக்கள்.

  இதே போல பழைய சோவியத் ரஸ்ஸியாவில் இருந்த சைபீரிய வதை முகாம்களை
  பற்றி ஒரு நேர்மையான ஆய்வுக்கட்டுரை எழுதுவீர்களா ?

  உங்க கட்டுரைக்கு தேவையான விக்கி சுட்டி (ஒரு அறிமுகத்திற்க்குத்தான்) : http://en.wikipedia.org/wiki/Gulag

  • ஏம்வே அ. அதியமான்,

    எதுக்குனாச்சும்  சைபிரீயா வதை முகாம்னு தும்முனாலும் துப்பினாலும்னு சும்மா கதை விட்டுகிட்டு கிடக்குதீரு. உம்ம பொய்க்கணக்கை சும்மா தூக்கி சாப்பிடுத மாதிரி அமெரிக்காகாரன் இன்னைக்கு வரைக்கும் எத்தனை பேரை கொன்னுபோட்டுருக்கான் தெரியுமா வே? ஈராக்குல மட்டும் பத்து இலட்சமெண்டு சொன்னால் ஆப்கானிஸ்தான், செர்பியா, தென்னமெரிக்கா கணக்கெல்லாம் கூட்டிப்பாத்தா அவன்தான்வே உலகத்துலேயே பெரிய கொலைகாரன், அந்த கபோதிப் பயலை ஜனநாயக சக்கரவர்த்தின்னு பாரட்டு பட்டம் கொடுத்துட்டு உம்ம மறுமொழிகள ஏதோ பாவம்னு விட்டுக் கொடுக்குத வினவுகாரவுக சைட்டுல வெட்கம் கெட்டு நல்ல மனுசன் மாதிரி வேசம் போடுதீரு. உமக்க நெல்லிக்கனியை காசுகொடுத்து பாக்கச்சொன்னாக்கூட எந்தப் பயலும் பாக்கமாட்டான். அதுக்க விளம்பரத்துக்கு இங்கே வந்து அப்பப்ப வாந்தி எடுக்கீறீரு. இந்த கண்ராவியை யாருவே சுத்தம் பண்ணுத்து? கொஞ்சம் டீசன்டா நடக்கனும்வே, இல்லாட்டி வேற வேல வெட்டி இருந்தா பாக்கணும்வே!

   • காளமேகம்,

    ஒரு தவறு, மற்றொன்றை நியாப்படுத்திவிடுமா என்ன ?
    அமெரிக்கர்களால் ஈராக்கில் கொல்ல்பட்ட மக்களை விட
    பல மடங்கு அதிகமாக ஷியா சன்னி பிரிவினிரடையே
    நடக்கும் போரில்தான் அதிகாமானோர் கொல்லபடுகின்றனர்.
    முட்டாள்தனமாக, சர்வாதிகரத்தனமாக, ஈராக் மீது
    படை எடுத்துவிட்டு இன்று வெளியேற வழி தெரியாமல்
    அமெரிக்க முழிக்கிறத்து. அமெரிக்காவின் ஏகாபத்தியம்
    பற்றி நான் எழுதியதை படிக்கவில்லை நீர். நான் எப்போது
    அதை ஆதரித்தேன் அல்லது நியாப்படுத்தினேன் ?

    ஸ்டாலின் காலத்து முகாம்கள் (குலாகுகள்) பற்றி
    எழுதுவதெல்லாம் உமக்கு “கதைகளாக” தெரிகிறதா ?
    இன்று அப்படித்தான் தெரியும். “அனுபவித்து” பார்த்தால்
    தான் புரியும்.

   • அய்யா அதியமான்,####இன்று அப்படித்தான் தெரியும். “அனுபவித்து” பார்த்தால்தான் புரியும்.####நீங்கள் எந்த குலாக்கில் அடைக்கப்பட்டீர்கள், எப்படி வெளியே வந்தீர்கள், என்ன ‘அனுபவித்து’ தெளிந்தீர்கள்.  புரியவில்லை தயவு செய்து விளக்கவும் (பு.த.செ.வி)

   • அதியமான் அண்ணாச்சி,

    ஷியா – சன்னி மோதல் எப்படிவே வந்துச்சு? அமெரிக்கா காரன் வரதுக்கு முன்னாடி வரை அவுக ஒத்துமையாத்தான் இருந்தாக. இப்ப அடிச்சிகிடுதாக எண்டால் அதுக்கு அமெரிக்காகாரன்தான்வே காரணம். ஈரான்- ஈராக் சண்டையைப் பாத்தீகன்னா அங்கனையும் அமெரிக்காதான்வே காரணம். அப்ப சதாம் அண்ணாச்சிக்கு சண்டை போட ஆயுதங்கள குடுத்த்து யாரு? ஆப்ரிக்காவுல எல்லா நாட்டுக்குள்ளேயும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிடுதாக எண்டால் அந்த துவக்கை எவன்வே  கொடுத்து அடிச்சிக்கிட சொன்னான்?

    அமெரிக்காகாரன் முட்டாள்தனமா ஈராக்குல படையெடுத்தான்னு முட்டாள்தானமால்ல உளறியிருக்கீறு. அவன் எண்ணெய் கெணத்துக்காகத்தான் ஆக்கிரமிச்சுக்கிட்டான்னது கூட உமக்கு தெரியலையேவே. 

    முதலாளிமாரு, ஜனநாயகமாரு எல்லா மாருக்கும் நீரு போடுத ஜால்ராவுக்கு சென்டரே அமெரிக்காதானவே. அப்பன்னா நீரும் அமெரிக்காரனோட விசுவாசிதானவே.

   • காளமேகம்,

    தெளிவாக நான் எழுதினாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று எழுதபவரிடம் என்ன பதில் சொல்லி என்ன ? எண்ணை வளங்களை கைபற்ற படையெடுப்பு தேவையில்லை. மேலும் ஈராக் அதன்
    எண்ணையை அமெரிக்க போன்ற மிக பெரிய சந்தையில்தாம் விற்றாக வேண்டும். (சாவேஸின் வெனிஸுலாவும் இன்றும் அப்படிதான் விற்கிறது). புஸ் இன் கூட்டாளிகள் தம் சுயனலத்திற்க்கா இதை தூண்டிவிட்டனர் என்ற குற்றச்சாட்டுதான் உண்மை. அப்படி எண்ணை வளங்கள்தான் முக்கியம் என்றால் அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற துடிக்க வேண்டிய அவசியம் என்ன ? குர்திஸ்தான் பகுதியில் தான் எண்ணைவளம் அதிகம். அதை ஆக்கிரமத்து இருக்கும் இன்னேறம்..

    ஷியா / சன்னி தாக்குதல்களுக்கு நீர் கூறும் காரணம் உளரரல். சதாமின் ஃபாசிச ஆட்சி இருந்த வரை அங்கு அமைதியை தக்கவைத்து கொண்டது. ஈரான் /‍ ஈராக் போரின் பின் புலத்தில் உங்க பழைய தோழர் “சோவியத் ரஸ்ஸியாவின்” திருவிளையாடல்களை சொல்லா டபாய்கிறீக ?

    பார்க்கவும் எமது பழைய பதிவு :

    சதாம் ஹுசேன், செர்பியா,ஆஃப்கானிஸ்தான், அமெரிகாவின் போர்கள், டாலர் அரசியல் மற்றும் இன்ன பிற…
    http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

    ///முதலாளிமாரு, ஜனநாயகமாரு எல்லா மாருக்கும் நீரு போடுத ஜால்ராவுக்கு சென்டரே அமெரிக்காதானவே. அப்பன்னா நீரும் அமெரிக்காரனோட விசுவாசிதானவே.////

    இதுதான் உமது பதிலா. காளமேகம்னு ஒரு அருமையான சிலேடை புலவர் பெயர வச்சிகிட்டு இப்படி
    லூசு மாதுரி உளருனா எப்படி ? யார் முட்டாள் என்று வாசகர்களுக்கு தெரியும். ஜனனாயகம் என்றால்
    என்ன என்றே அறியாத பாலகனிடம் பேசுவதுதான் என் தவறு..

  • அதியமான் அவர்களே,
   கட்டுரையில் எழுதப்பட்டுள்ள செய்திக்கு நேரடியான உங்களின் விமர்சனத்தை எழுதுங்கள். அதைவிட்டு விட்டு சைபீரிய வதை முகாம்களைப்
   பற்றி எழுதுங்கள் எனறு கேட்பது “இதை குறை சொல்றியே அதைப்பத்தி எழுதேன் பார்ப்போம்” என்று இந்து ராமுக்கு வக்காலத்து வாங்குவது போல் உள்ளது. கட்டுரையை பாராட்டுறேன்னு வேற சொல்றீங்க. சைபீரிய முகாம்களைப்
   பற்றி எழுதியிருந்தா அதைப்பற்றி விமர்சனம் செய்யலாம். சைபீரிய முகாம்களைப் நியாயப்படுத்தி ஈழமுகாம்களை அநியாயம் என்று வினவு நரித்தனமா எழுதியுள்ளார் என்று தைரியமா சொல்ல வேண்டியதானே? எது உம்மைத் தடுக்குது?

 4. எச்சை காசுக்கும் பிச்சை விருதுக்கும் பொருக்கி தின்னும் காரியவாதி இத்துப்போன ராம் என்று ஒதுக்கி விட முடியாது. அது ஒரு இந்திய மேலாதிக்கத்தின் குரல்.

  \\“இந்து” நாளேட்டின் ஆசிரியர் என்.ராம் மட்டும் இந்த அகதி முகாம்களை “இந்தியாவில் இருக்கும் முகாம்களை விட மேம்பட்டிருக்கிறது” என்றும், “சாப்பாட்டுப் பிரச்சினை இல்லை. தண்ணீருக்கும் பிரச்சினை இல்லை” என்றும் சோல்லியிருக்கிறார்.\\

  பிறகென்ன இந்து ராமே அங்கே சென்று , தனது குடும்பம் சகிதம் தங்கியிருந்து வாங்கிய விருதுகளுக்கு பெருமை சேர்க்கலாமே.

  அதெப்படி, இந்து அதிக்க கருத்தியலும் புத்தமத தேச வெறி ஆட்சியாளர்களும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடிகிறது? சமணர்களைக் கழுவிலேற்றிய வரலாற்றை திரிபு என்றும் கூட கதைப்பார்கள்.

 5. I am glad you guys are exposing this. It is really sad to hear that fellow Tamils are treated this way. Is there any thing we can do to help?. Chindu Ram is a despicable guy for doing this. But his motives are not to help Indian interest. It is exactly opposite he and his paper gets funding from Chinese infact it is a paper devoted for Chinese interests. The Chinese wants to control the LTTE and bring Srilanka under their control so Chindu Ram is helping them. He hates Tamils or Indians. Here are the 2 links that exposes this Chinese lapdog. Shame on him. The Hindu is the worst newspaper in the world sucking up to the Chinese fascists dictatorship.He is nothing but a Chinese hitman who is helping the Chinese to bring Srilanka under their control.
  http://cbcnn.blogspot.com/
  http://beta.thehindu.com/opinion/lead/article22850.ece

 6. அணைத்து தமிழக உறவுகளும் தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த உண்மை அனுபவத்தை வாசியுங்கள்.

  மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.
  இதோ சிவரூபன் பேசுகிறார்:

  “”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

  நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

  பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின் வெக்கையும்இ படு கொலைகளின் கொடூரமும்இ சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள்,அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

  இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டுஇ கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டுஇ பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல்இ தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாதஇ உடல் சோர்ந்துஇ உளம் நலிந்துஇ உணர்வு செத்துஇ நா வறண்டுஇ இதய நாடிகள் ஒடுங்கிஇ வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவுஇ குடிநீர்இ அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசைஇ மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

  இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

  அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

  வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில்இ தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்தஇ “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்கஇ மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

  “”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள்இ இந்திரா ரடார்இ செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும்இ ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்துஇ தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

  இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவாஇ கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

  பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண்இ பெண்இ பெரியோர்இ குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறுஇ கால் வேறுஇ உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

  பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில்இ வயிற்றில்இ காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

  வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

  எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவிஇ பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

  அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான்இ என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

  “”என் மனைவிஇ பிள்ளைஇ தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாகஇ உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

  “”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும்இ ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

  தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலைஇ கால்இ கைஇ உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

  கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகிஇ உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

  அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

  மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதாஇ அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

  தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும்இ கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

  கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய்இ தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின்இ நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும்இ விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம்இ “”தாய்இ தகப்பன்…” என்று ஆரம்பிக்கவேஇ “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

  பெற்றோரை இழந்துஇ இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும்இ சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

  மனதில் வெறுப்பும்இ நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

  வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

  பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம்இ முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்கஇ போவோம் ஆமி வறான்இ எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

  நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோஇ ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

  தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்றுஇ ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயாஇ ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய்இ நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

  எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும்இ மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

  வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும்இ கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

  ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும்இ அடித்தும்இ வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவிஇ பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

  இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லைஇ தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன்இ “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன்இ “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

  இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோதுஇ சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும்இ “பசிக்குதுஇ ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும்இ தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

  வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காதஇ பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

  எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்றுஇ “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

  அந்த இடத்தில்இ அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

  உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால்இ அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில்இ வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

  எங்கு கொண்டுபோகிறார் களோஇ என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஐஅஅபைசயவழைn) மற்றும் சுங்கம் (ஊரளவழஅள)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

  இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”இ “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”இ “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”இ “”எங்களுக்கு எல்லாம் தெரியும்இ பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்க��
  �்.

  பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதா��
  �் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1இ2இ3 (ழுpநசயவழைn ஊhநஉமஅயவந) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாதுஇ அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோஇ சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய்இ புயல்காற்றாய் தான் இருப்பார்.

  சர்வதேசமேஇ ஐ.நா.சபையேஇ தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
  நன்றி யாழ்.

 7. இந்து ராம் தன் பாணியில் ராஜபக்க்ஷேக்களுக்கு, தமிழின அழிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார். இது அம்பலப்படுத்த வேண்டியதுதான். அதே நேரம் அமெரிக்காவின் (அண்மைய இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை), ஐரோப்பாவின் (ஏற்றுமதி வரிச்சலுகை பூச்சாண்டி)  போன்றனவும் அம்பலப்படுத்தப்பட வேண்டியவையே. அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஆயுதமும் அறிவுரையும் கொடுத்து தமிழின அழிப்புக்கு மறைமுகமாக துணைபோவார்களாம். பிறகு, இவர்களே போர்க்குற்ற அறிக்கை, ஏற்றுமதி வரிச்சலுகை ரத்து என்று இலங்கைக்கு பூச்சாண்டி காட்டுவார்களாம். பயப்படுவரார்களா ராஜபக்க்ஷேக்கள்? 
  ஒரு இஸ்லாமிய தேசமாக இருந்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நேரடியாகவே களமிறங்கி இருப்பார்கள். இஸ்ரேலை சந்தோசப்படுத்தியிருப்பார்கள். இவர்கள் சீனாவுக்கு நேரடியாக எதையும் சொல்லவோ, செய்யவோ  முடியவில்லை. அதனால், சீனாவின் காதலி இலங்கையின் மூலம் அழுத்தத்தை பிரயோகிக்க முனைகிறார்கள் போலுள்ளது. வேறன்ன காரணம், இலங்கை சீனாவை கைவிட்டு விட்டு இந்தியாவை காதலிக்க வேண்டும் என்பதுதான் மேற்குலகின் ஆசை. இந்தியாவின் ஒரேயொரு ஆசை ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி ஈழத்தமிழன் வாழவே கூடாது. 
  ஆக, சீனாவுக்கு ஓர் ஆசை. இந்தியாவுக்கு ஓர் ஆசை. மேற்குலகிற்கு ஓர் ஆசை. இடையில் பலியாடுகளாய் பரிதவிப்பது வதைமுகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள். தயவு செய்து யாராவது அமெரிக்கவோ அல்லது ஐரோப்பாவோ ஈழத்தமிழர்களிலுள்ள அக்கறையால் தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். மேற்குலகிற்கு அவர்களின் பூகோள அரசியல் நலன்களை தக்கவைத்துகொள்வதுதான் நோக்கமேயன்றி, வதைமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களை காபாற்றுவதல்ல. 

  என்னைப்பொறுத்தவரையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா, இந்து ராம், மேற்குலகம் எல்லாமே ஒன்றுதான். 

 8. தோழ‌ர் ரதி,

  நீங்க இப்ப அடைக்காலம் தேடி வாழும் தேசம் எது ? மே.அய்ரோப்பிய தேசமா அல்லது கனடாவா ?
  அவற்றில் பல லச்சம் ஈழவர்களுக்கு அடைக்கலம் அளித்து, முழு சுதந்திரமும், உதவிகளும் அளித்தால், இப்படிதான் பேசுவீக போல !! உங்க தர்கம் மிக மேலோட்டமாக உள்ளது. அய்ரோப்பிய யூனியன் எடுக்கபோகும் வர சலுகை நடவடிக்கை, உண்மையில் மனிதனேய அடிப்படையில் தான். அங்கும் மனித நேயம், மனித உரிமைகல், அறம் : இவற்றில் நம்பிக்கை உடைய மக்கள் மற்றும் பாரளுமன்ற அங்கத்தினர் பெருமளவில் உள்ளனர். பல பத்தாண்டுகளாக புலிகளின் பன்னாடு தலைமையகம் லண்டனில்தான் வெளிபடையாக செயல்பட அனுமதிக்கப்பட்டதை மறக்க வேண்டாம். பின்னர் புலிகளில் ஃபாசிச போக்கால் வெறுத்து போய், அதை மூட செய்தார்கள்.

  80களின் மத்தி வரை இந்தியாவும், பல இதர நாடுகளிலும் இருந்த ஆதரவு அலை பற்றி முழு விபரம் அறியாதவர் போலும். அத்தனையும் கெடுத்துக்கொண்டார்கள் புலிகள். இந்திய அரசு செய்த தவறுகளை நியாப்படுத்தவில்லை. முக்கியமாக இந்திரா காந்தி இருந்த வரை மிக விவேகமாக நடந்தனர். ராஜிவிற்க்கு விவேகம் பற்றாமல், ஜெயவர்த்தனே விரித்த வலை விழுந்தார். இந்திய அமைதி படை செய்த அராஜாகங்கள் கொடுமைகள் தான். இந்திய படையை எதிர்க்க, புலிகள் அன்று இலங்கை பிரதமர் பிரமதேசாவுடன் கூட்டணி அமைத்து, இலங்கை அரசிடம் இருந்த உதவி பெற்றனர். ஆனால் 1989இல் ராஜிவ் தோற்றபின், பிரதமர் ஆன வி.பி.சிங் அந்த படையை வாபஸ் பெற்றார். 1991 பாரளுமன்ற தேர்தலின் போது ராஜிவை புலிகள் கொன்றனர். முக்கிய காரணம் : அவர் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகி, இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்புவார் என்ற மிக தவறான அனுமானம். அந்த ‘துன்பயில்’ நாடகத்திற்க்கு சில மாதங்கள் முன்பு, பத்மனாபாவும் அவரின் பல சகாக்களும் சென்னையில் வைத்து, புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பின், இந்திய அரசு, புலிக்ளை எதிர்களாகத்தான் பார்த்தது. அது இயல்புதான்.

  அதனால் பொத்தாம் பொதுவாக அனுமானிக்க வேண்டாம்.

  • அவற்றில் பல லச்சம் ஈழவர்களுக்கு அடைக்கலம் அளித்து, முழு சுதந்திரமும், உதவிகளும் அளித்தால், இப்படிதான் பேசுவீக போல !!#####

   அதியமான் சார் இதுக்கு என்ன அர்த்தம்? உலகத்துல உங்கள மாதிரி மிடில்கிளால் ரொம்ப கம்மி, விளிம்பு நிலையில உள்ளவங்கதான் அதிகம். காலம்காலமா இது மாதிரி பண்ணையார்தனமான பேச்சு பேசியே ஒடுக்கப்பட்ட சனங்கள மேல மேல ஒடுக்கிறிங்களே ஏன்? அவங்க கேள்வி கேட்டா என்ன ஆயிடும்.. ரதி அகதியாய் வாழ்ந்தா கேள்வி கேக்க கூடாதா? நீங்க எனக்கு சோறு போட்டா…நீங்க மூஞ்சீல துப்புனாலும் நான் கம்முனு இருக்கணுமா?

   • ////அகதியாய் வாழ்ந்தா கேள்வி கேக்க கூடாதா? நீங்க எனக்கு சோறு போட்டா…நீங்க மூஞ்சீல துப்புனாலும் நான் கம்முனு இருக்கணுமா?
    ////// மடத்தனமான உளரல் இது ? யார் காரி துப்பினார்கள். அய்ரோப்பா யூனியன் எடுக்க போகும் நடவடிக்கை அப்ப தப்பா ? அய்ரோப்பிய நாடுகளில் ஈழவர்கள் கடும் போராட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தப்பா ?
    இலங்கை தூதுரகத்தின் முன் பெரிய ஆர்பாட்டங்க்கள், (ஏன் வன்முறை கூட) நடந்தன.

    ஒரு வேளை ஈழம் உருவாகியிருந்து, எதிர்காலத்தில் பிற நாடு ஒன்றை சேர்ந்த அகதிகள் யாழ்பாணத்தில் தஞ்சம் புகுந்து, இது போல அவர்களின் தாய்நாட்டின் தூதுரகத்தின் முன்பு பெரிய ஆர்பாட்டம் செய்ய முனைந்தால், புலிகளும், பிறரும் அனுமதிதிருப்பார்களா என்று கற்பனை செய்கிறேன் !!

    விளிம்பு நிலை மனிதர் பற்றி என்ன பெரிய பில்டப் ? சும்மா கதைக்காதீக..

  • அதியமான்,
   அரசியலை விமர்சனம் செய்வதென்பது ஒன்றும் தேசதுரோகம் கிடையாது. நாங்கள் வாழும் எந்தவொரு புலம் பெயர்ந்த நாட்டிற்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்காதவர்கள் ஈழத்தமிழர்கள் என்பது என் கருத்து. நாங்கள் வாழும் நாடுகளின் தேசியநீரோட்டத்திற்கு எங்களாலான பங்களிப்பை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.  முன்னூறு வருடங்களாக எங்கள் மண்ணில் எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வளங்களையும் சுரண்டியவர்கள் நாட்டில் நாங்கள் “அகதி” அந்தஸ்து தானே கோரினோம். அவர்கள் நாட்டு மக்களுக்கோ அல்லது அந்தந்த நாடுகளுக்கோ எந்தவொரு தீங்கும் செய்யவில்லை நாங்கள். நாங்கள் அகதிகள் தான், அடிமைகள் இல்லையே? அடைக்கலம் தந்த நாட்டின் இரட்டைவேடப்போக்கை விமர்சித்தால் அது என்ன நன்றிமறத்தல் என்றாகிவிடுமா?
   //உங்க தர்கம் மிக மேலோட்டமாக உள்ளது. //
   சரிதான், ஓர் விடயத்தை நான் மேலோட்டமாகத்தான் சொல்லிவிட்டேன் போலுள்ளது. எங்களின் இன்றைய அவலத்திற்கு வித்திட்டது எங்கள் மண்ணில் முன்னூறு வருடத்திற்கும் மேலான காலனித்துவ ஆதிக்கம். இலங்கையில் இருந்த இரு வேறு ராச்சியங்களை தங்களின் ஆட்சி வசதிக்கு ஏற்றாற்போல ஒன்றாய் இணைத்தார்கள். இவர்கள் போட்ட வித்து இன்று விருட்சமாகி நிற்க, இவர்கள் இன்று அதன் வேருக்கும் நீர்வாத்து, கூடவே ஈழத்தமிழனின் அவலத்திற்கும் கண்ணீர் விட்டு இரட்டை வேடம் போடுகிறார்கள். அதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன். ஏன் இவர்களெல்லாம் நினைத்திருந்தால் இருபதாயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியாதா? இவர்கள் எப்போதோ இலங்கைக்கு ஓர் Economic Sanction கொடுத்திருந்தால் கூட எங்களின் அவலங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாமே. 
   தவிர, அமெரிக்கா Satellite மூலம் அங்கு நடந்த கொடுமைகளை படம் பிடித்தது, படம் பிடித்தது……. என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனுங்க,  இவுக புடிச்ச படத்த யாருக்காச்சியும் காட்டவே மாட்டாகளா? அப்போ, படம் புடிச்சி, படம் புடிச்சி….. ஈழத்தமிழர்கள் செத்திட்டிருந்தத satellite  மூலமா பாத்துட்டேவா இருந்தாக? இதுக்குப் பேருதான் மனிதநேயமுங்களா? இப்படி சாதாரணமான கேள்விகளைதானே நான் கேட்கிறேன். இதுக்கேங்க நீங்க இவ்வளவு கோபப்படறீங்க? 

   • //என்னைப்பொறுத்தவரையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா, இந்து ராம், மேற்குலகம் எல்லாமே ஒன்றுதான். ///

    my comment for this generalisation. that is all. and what is merkulagam : does it include France or Canda too ? and what harm did they do to Tamils ?

    ////எங்களின் இன்றைய அவலத்திற்கு வித்திட்டது எங்கள் மண்ணில் முன்னூறு வருடத்திற்கும் மேலான காலனித்துவ ஆதிக்கம். இலங்கையில் இருந்த இரு வேறு ராச்சியங்களை தங்களின் ஆட்சி வசதிக்கு ஏற்றாற்போல ஒன்றாய் இணைத்தார்கள். இவர்கள் போட்ட வித்து இன்று விருட்சமாகி நிற்க, இவர்கள் இன்று அதன் வேருக்கும் நீர்வாத்து, கூடவே ஈழத்தமிழனின் அவலத்திற்கும் கண்ணீர் விட்டு///// too simplisitic explanation. there is no doubt about colonial exploitation of the Bristish. but the Yaalpaana Tamil dominated the majority of SL govt posts and were better educated than Sinhales during those colonial times. this was the root cause of Sinhala resentment and chauvinism whic h was blown by cynical and fasict sinhala politicians. the condition of Jaffna tamils domination in govt jobs and education in those days can be compared to the similar domination of govt jobs and education in India by brahmins in those days. an approximate comparision. but India tried to tilt the balance thru democratic ways like reservation, etc while sinhalese took to chauvinism and fasicsim.

   • ரதி,

    இத்தனை ஆண்டுகாலம், அய்ரோப்பிய யூனியன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்காமல், இப்போது செய்ய முனைய காரணம் உண்டு. இதுவரை புலிகளின் ஃபாசிசத்தற்க்கும், சிங்கள அரசின் ஃபாசித்ததிற்க்கும், இடையே அப்பாவி மக்கள் நசுக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து போர் நடந்து வந்தது. மே மாதத்தில் இருந்து
    புலிகள் இல்லை. இனியும் சிங்கள அரசு ஈழ மக்களை முகாம்களில் அடைத்து வைக்க்க ஒரு காரணமும் இருக்க முடியாது. சிங்கள அர‌சை நிர்பந்திக்க ஒரு ஆரம்ப நடவடிக்கையாக அய்ரோப்பிய யூனியன் வரி சலுகை ரத்து செய்ய முனைந்துள்ளது. ஆனால் இது சிங்கள அரசை பாதிக்காது, சிங்கள் மக்களை பாதிக்கும், லச்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்ற மாற்று கருத்துக்கள் அய்ரோப்பாவில் ஒலிக்கின்றது. விவாதம் தொடர்கிறது. கடந்த காலங்களில் பொருளாதார தடைகள் எதிர்மறையான் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதும் விவாதப்படுத்தப்படுகிறது. 90களில் சதாம் ஹுசெனின் ஃபாசிச ஆட்சியை அகற்ற ஈராக் மீது பொருளாதார தடை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, அப்பாவி மக்களைதாம் பாதித்தது. இன்றும் ஃபாசி சர்வாதிகார ஆட்சி நடக்கும் மைன்மார் மீது தடைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே இவை பற்றி விவாதம் தொடர்கறது.

    உண‌ர்சி வ‌ச‌ப்ப‌ட்டு மேற்குல‌ம் அனைத்தையும் ஒரே பிராக்க‌ட்டில் அடைத்து, பொதுப்ப‌டுத்த‌ வேண்டாம்..

   • அதியமான்,

    “….Militaries and strategic think tanks here are strongly telling Western governments that they cannot let Sri Lanka slip into a future, Chinese-power orbit, which is another reason why our leaders were so anxious to avoid a direct clash with Sri Lanka over this war and why they went out of their way to shun Tamil protesters in Canada and Europe……”

    http://www.cbc.ca/world/story/2009/05/21/f-vp-stewart.html

    இதை நீங்கள் கண்டிப்பாக படித்துப்பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் வாழும் நாட்டில் தேசிய ஊடகத்தில் வந்த கட்டுரை. என் போன்றவர்களுக்கு ஏன் மேற்குலகம் மீது நம்பிக்கை வர மறுக்கிறது என்பதை இது விளக்கும் என்று நம்புகிறேன். 

    //ஆனால் இது சிங்கள அரசை பாதிக்காது, சிங்கள் மக்களை பாதிக்கும், லச்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்ற மாற்று கருத்துக்கள் அய்ரோப்பாவில் ஒலிக்கின்றது. //

    மக்களை இன்னும் எதனை காலம் தான் ராஜபக்க்ஷேக்கள் ஏமாற்றுவார்கள்? பொருளாதார தடைகளின் வலிகளை அறியாதவர்கள் அல்ல ஈழத்தமிழர்கள். தசாப்தங்களாக என் உறவுகள் பொருளாதார தடையையும் தாண்டி இனிமேல் இழப்பதற்கும், தொலைப்பதற்கும் எதுவுமில்லை என்ற அவலநிலையில் தானே இன்று வாழ்துகொண்டிருக்கிறார்கள்/செத்து செத்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
    ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP Plus வரிச்சலுகை ரத்தால் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுதான் சொல்கிறார்கள். சிங்கள சமூகத்திற்கு இதுதான் முதல் சுமை என்றில்லை. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் அதள விதள பாதாளத்தில் தானுள்ளது. இப்பொது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை ரத்தும் சேர்ந்தால் நாடே மூழ்கும் அபாயம் தான் வரும். பிறகு அதன் சுமையை நாட்டு மக்கள் தானே சுமக்க வேண்டும். அதனால் அப்படிப்பட்ட ஓர் அரசை இனிமேல் சிங்கள சமூகம் விரும்புமா? இனிமேல் ஓர் தேர்தல் வந்தால் அவர்களும் இதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. பெரும்பான்மையினர் தான் எந்த அரசு வந்தால் தங்கள் மீது சுமத்தப்படும் சுமைகள் குறையும் என்று முடிவெடுக்க வேண்டும். 
    //….the European Union, press reports this month suggest, is considering withdrawing the GSP+ subsidy for firms that import from there. This, according to Sri Lanka’s supporters, should not happen as it will “hurt” 250,000 ‘Sri Lankans’. But that, surely, is the logic of sanctions. It is only when the majority Sinhalese who support President Rajapak-se’s ultra-nationalist regime are compelled by economic hardship into bringing internal pressure to bear on it that international demands over human rights and political reconciliation, for example, will even draw lip service from it…..//
    Source: Tamilnet, Sanctions compel people to change their government’s conduct – paper[TamilNet, Wednesday, 16 September 2009, 20:28 GMT]
    அதியமான், 
    நான் இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எந்தவொரு பொருளாதாரத்தடையும் இலங்கையில் தமிழர்களுக்கு குறைந்தபட்சம் “வாழ்வுரிமையையாவது” பெற்றுத்தரும் என்றால் அதை உங்களை விட நாங்கள் அதிகமாக வரவேற்போம். ஆனால், அந்த தடையை விதிக்க விரும்புபவர்களின் நோக்கம் தமிழர்களின் அவலவாழ்வு பற்றிய அக்கறையா என்பதே எனக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள கருத்து முரண்பாடு. நான் கொடுத்த சுட்டியைப் படித்துப்பார்த்தால் நான் ஏன் உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாங்கள் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை எப்படி எங்கள் உறவுகளை வதைமுகாம்களிலிருந்து  வெளியே கொண்டுவர பயன்படுத்தலாம் என்பதை தான் சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து. 
    இந்த GSP Plus வரிச்சலுகை ரத்து நடக்காது என்பதே என் ஊகம். பொறுத்திருந்து பார்க்கலாம். 

  • எம்வே அ. அதியமானு,

   சும்மா கூமுட்டை கணக்கா உளறிருக்கீரு. ஐரோபா, கனடா, அமெரிக்கா இவுக நாட்டுல பல நாட்டு அகதிகளை எதுக்குவே வச்சுருக்காக? ஈழத்தமிழ்மாரெல்லாம் அங்க ராஜா மாதிரியாவே வாழுதாக? இங்கிலாந்துல எல்லா பெட்ரோல் பங்குலயும் இவுகதான் பெட்ரோல் போடுத பாய்மார். ஐரோப்பாவுல எல்லா சாப்பாட்டுகடைகளில இவுகதான் ப்த்து பதினைஞ்சு மணிநேரம் வேல செய்தாக. இந்த வேலையெல்லாம் வெள்ளக்கார கபோதிக செய்ய மாட்டாகன்னு அடிமாட்டு கூலிக்கு இப்புடி அகதிகளை யூஸ் பண்ணிக்கிடுதாகவே.  உம்ம புத்தி எப்பவும் கோணல்னா அதுக்குனு இப்புடியா உளருவீறு?அகதின்னு வந்தா நல்லா மாடு கணக்கா வேலை வாங்குத நாட்டுக்காரவுகளெல்லாம் உம்ம கண்ணுல தர்மா ராசா போல தெரியுதுன்னா கண்ணாடிய மாத்துவே, ஐஞ்சு பத்து ரூபா ஆனாக்கூட எதாவது கண்ணு டெஸ்ட்டு எடும்வே இல்லாங்காட்டி திக்கு தெரியாதகாட்டில அவுத்த விட்ட வவ்வாலு கணக்கா தொங்கப்போரீறு!

   • டேய் காளமேகம்,

    முதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள். ஓ.கே.

    ஈழவர்கள் மட்டுமள், பல்வேறு ஆசிய‍ / ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், இந்தியாவிலிருந்த்தும் பல லச்சம் பேர்கள் மே.அய்ரோப்பாவில் “அகதிகளாகவும்” அல்லது சட்டபடியோ, அல்லது அனுமதி சீட்டு இல்லாமலும் பணி புரிகிறார்கள். உடல் உழைப்புக்கு அங்கு, போதுமான சம்பளம் மற்றும் அரசு உதவிகள் பல உண்டு.
    யாரும் அடிமைகள் அல்ல. விரும்பித்தான் செல்கின்றனர். அந்நாடுகளின் எல்லைகளை திறந்துவிட்டால் பல கோடி மக்கள் உள்ளே நுழைய தயாராக இருக்கின்றனர்.

    நாமக்கல் பகுதியிலிருந்து பல ஆயிரம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் சட்டப்படியும், சட்டவிரோதமாகவும்
    பிரட்டனுக்கு சென்று உடல் உழைப்பில் நல்ல சம்பாதித்து, மிச்சப்படுத்தி, பின் திரும்புகின்றனர்.
    அந்நாட்டின் பொருளாதாரம் அப்படி இருக்கும். அவ்வளவுதான்.

    அது போன்ற நாடுகளில் ஒருவர் கடும் உழைப்பு, சிக்கன வாழ்க்கை, சேமிப்பு என்று வாழ்ந்தால் ஒரு 10 ஆண்டுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் பல பத்து லச்சங்கள் சேமிக்க முடியும். அதே உழைப்பும், சிக்கன வாழ்க்கையும் இங்கு கடைபிடித்தால் பெரிதாக சேமிக்க முடியாது. அப்படி உள்ளது நமது பணவீக்கம் மூலம்
    உருவாகும் விலைவாசி உயர்வும், ஊழலும்.

    அதானல மொதல்ல மரியாதையா பேசக் கற்றுக்கொள்.

  • //ஈழவர்கள் மட்டுமள், பல்வேறு ஆசிய‍ / ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், இந்தியாவிலிருந்த்தும் பல லச்சம் பேர்கள் மே.அய்ரோப்பாவில் “அகதிகளாகவும்” அல்லது சட்டபடியோ, அல்லது அனுமதி சீட்டு இல்லாமலும் பணி புரிகிறார்கள். உடல் உழைப்புக்கு அங்கு, போதுமான சம்பளம் மற்றும் அரசு உதவிகள் பல உண்டு.
   யாரும் அடிமைகள் அல்ல. விரும்பித்தான் செல்கின்றனர். அந்நாடுகளின் எல்லைகளை திறந்துவிட்டால் பல கோடி மக்கள் உள்ளே நுழைய தயாராக இருக்கின்றனர்.//

   அதியமான்,

   ஈழத்தமிழர்கள் மற்ற நாட்டு மக்களைப் போல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் மேலை நாடுகளுக்கு விரும்பி செல்லவில்லை. அவர்கள் சிங்கள அரசின் கொடுமைகளாலேயே வேறு நாடுகளுக்கு சென்று வாழ்கின்றனர்.

   தோழமையுடன்,

   செந்தில்.

 9. ஆச்சரியமாக இருக்கிறது,உங்களிடமிருந்து தமிழ்த்துரோகி என்ற வார்த்தைச்சுட்டுதலும் குறித்துக்காட்டலும்.
  இதற்கு ஈழத்தில் என்ன பொருள் என்று உங்களுக்குத்தெரியுமா?
  சுட்டுக்கொல்லுதல்தான்.

  இன்றைய ஈழத்தின் அவலங்களை இந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட்டதற்கு
  இத்தகைய தமிழ்த்துரோகி சுட்டிக்காட்டுதலும் சுட்டுக்கொல்லுதலும்தான் காரணமாக இருந்தது.
  இது யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிலிருந்து தொடங்குகிறது…..

  லக்ஸ்மன் கதிர்காமர் நீலன் திருச்செல்வம் அவர்களோடு இணைந்து தயாரித்து அளித்த தீர்வுத்திட்டம் அன்ரன் பால சிங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது,எப்போதும்போலவே பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டது.
  அத்தகைய சமாதானத்தீர்வுத்திட்டங்களிலும் சமாதான முயற்சிகளிலும் ஈடுபட்டவர்கள் அவர்காலத்தில் மூவர் நீலன்,கதிர்காமர்,கேதீஸ் லோகநாதன்.
  மூவரையுமே புலிகள் சுட்டார்கள்.
  தியாகிகள் துரோகிகள் என்றவகைப்பாடு மே – 18 உடன் நல்வாய்ப்பாக முடிவுக்குவந்துவிட்டது.

  இப்போதைய நிலையை புரிந்துகொள்ள கீழ்வரும் செய்தியைப் படிக்கவும்;

  தேசிய கீதமும் ‐ ரி.என்.ஏ. யும் ‐

  தமிழ் அரசியலின் புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்க வேண்டும் ‐ ஆலோசனை கூறுகிறது றாவய ‐ தமிழாக்கம் ‐ GTண்:
  2009-09-21 02:41:04 (Bஸ்T)

  வவுனியா நகரசபை உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் தேசிய கீதம் பாடி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இது தமிழ்க் கூட்டமைப்பு நாட்டிற்கு அளித்த மிகவும் முக்கியமான செய்தி என்றே கூற முடியும் என்கிறது றாவய ஆசிரியர் தலையங்கம்.

  1976 வட்டுக்கோட்டை சம்மேளனத்தின் பின்னர் தமிழ்க் கட்சிகள் இலங்கை தேசிய கீதத்தினை புறக்கணித்தே வந்துள்ளன. வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேச பாடசாலைகளில் தேசிய கீதம் பாடப்படுவது புலிகளினால் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பல தசாப்தங்களின் பின்னர் தாம் வென்ற நகர சபையின் பதவிப்பிரமாண வைபவத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதன் ஊடாக பிரிவினைவாத அரசியலைக்
  கைவிட்டு ஒரே நாட்டில் வாழும் மக்களாக தாம் செயற்பட தயார் என்ற செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது என்றே கருத முடியும். இது தமிழ்க் கூட்டமைப்பு சிங்கள மக்களுக்கு வழங்கிய சிறந்ததொரு சமிக்ஞை என்றே கொள்ள முடியும்.

  தமிழ்ப் பிரிவினைவாதத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் அடிப்படைவாத சிந்தனைகள் மட்டுமன்றி தமிழ் மக்களை பெரிதும் பாதித்த சிங்களவர்களின் எதிர்வினைகளும் காரணமாக அமைந்தன. இவ்வாறு போஷிக்கப்பட்ட தமிழ்ப் பிரிவினைவாதத்தினால் தமிழ் மக்களும் அன்றி சிங்கள மக்களும் அதற்கான விலையை செலுத்த வேண்டி நேர்ந்தது. பிரபாகரனின் மரணத்திற்கு பின்னர் தமிழ் மக்கள்
  மட்டுமன்றி சிங்கள மக்களும் புதிதாக சிந்திக்க செயலாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பு இதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கை மிக முக்கியமானதாகும். தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டு ஒரே நாட்டிற்குள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள தமக்குள் இருக்கும் தயார் நிலையினையா தேசிய கீதத்தினை பாடியதன் ஊடாக தமிழ்க் கூட்டமைப்பினர்
  வெளிப்படுத்தியிருக்கின்றனர் அல்லவா? ஓர் அடையாள செயற்பாடாக மேற்கொள்ளப்பட்ட இவ்விடயம் புரட்சிகரமானது என்றே கருதப்பட முடியும்.

  சிங்கள மக்கள் தமிழ் மக்கள் குறித்து புதிய முறையில் சிந்திக்க வேண்டிய நிலைக்கு வர வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களும் சிங்கள மக்கள் குறித்து மட்டுமன்றி சிறுபான்மை மக்களாக தமது பிரச்சினைகள் குறித்து புதிய முறையில் சிந்திக்க தலைப்பபட வேண்டும். தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது சிங்கள மக்களின் பொறுப்பாகும். மறுபுறம்
  பிரிவினைவாதத்தினைக் கைவிட்டு சிங்கள மக்களுடன் ஒரு நாட்டில் வாழ தமிழ் மக்களும் உறுதி கொள்ள வேண்டும்.

  இந்த செயற்பாட்டுடன் மட்டும் தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்திக் கொள்ளக் கூடாது. ஈ.பி.டி.பி மற்றும் புளொட் ஆகிய பிற தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைப்புடன் அகதி மக்கள் பிரச்சினைகள் மட்டுமன்றி தமிழ் மக்களுக்கேயுரிய பிரச்சினைகளை கௌரவமாக தீர்த்துக்கொள்ள அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சியுடனும் புரிந்துணர்வுடன் செயற்படும் நிலைக்கு வரவேண்டும். இப்பொழுது
  புலிகள் நாட்டில் இல்லாததினால் துப்பாக்கிகளுக்கு அச்சமுறும் நிலை இல்லை. பிரிவினைவாதம் தமிழ் மக்களின் வாழ்க்கையின் துயரங்களுக்கு காரணமாக உள்ளது என்பதனை புரிந்து கொண்டு தமிழ் அரசியலின் புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் பணி அவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்

  • sugan,

   பின்னர் எதற்காக தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களும், சிங்கள பெயர் மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கிறது? எதற்காக வதை முகாம்களில் இன்றும் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?

   “எதை கொடுக்க வேண்டும் எதை கொடுக்கக் கூடாது என்று எனக்கு தெரியும். அவர்கள் கேட்பது கிடைக்காது” என்ற ராஜபக்சேவின் கருத்துக்கு இன்னுமா உங்களுக்கு அர்த்தம் புரியவில்லை?

   தோழமையுடன்,

   செந்தில்.

  • //இன்றைய ஈழத்தின் அவலங்களை இந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட்டதற்கு
   இத்தகைய தமிழ்த்துரோகி சுட்டிக்காட்டுதலும் சுட்டுக்கொல்லுதலும்தான் காரணமாக இருந்தது.//

   அப்படியென்றால் இப்படிப்பட்டோர் சொல்வது உண்மை என்று ஒப்புக்கொள்ளவேண்டுமா? அது பொய், அவதூறு என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா? துரோகிகளை அடையாளம் காட்டாமல் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டுவிடும் என்று கூறவருகிறீரா?

   தோழமையுடன்,

   செந்தில்.

  • //இன்றைய ஈழத்தின் அவலங்களை இந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட்டதற்கு
   இத்தகைய தமிழ்த்துரோகி சுட்டிக்காட்டுதலும் சுட்டுக்கொல்லுதலும்தான் காரணமாக இருந்தது.//

   sugan அவர்களே, இன்றைய ஈழத்தின் அவலநிலைக்கு இப்படிப்பட்ட துரோகிகளும் சதிகாரர்களும் விலை போனவர்களும் ஒரு காரணம் என்ற உண்மையைக் கூட உங்களால் ஒப்புக்கொள்ளமுடியாமல், அவர்களை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தியதால் தான் இன்று ஈழத்தில் இந்த நிலைமை என்று கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லிவிட்டீர்களே!

   தோழமையுடன்,

   செந்தில்.

 10. தமிழ்த்துரோகி என்று இனவாத,தமிழ் அடிப்படைவாத அரசிyaலில் கால்வைக்கிறீர்கள்.
  வைக்கோ,நெடுமாறன்,சீமான் போன்றோரே பெரும்பாலும் இதை இப்போது பாவிப்பதில்லை, பரிசீலியுங்கள்.

 11. இந்தியா தலைமையிலான தெற்காசியப் பொருளாதாரத்தின் பசி, 50 ஆயிரம் தமிழ் பேசும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி கொன்றுபோட்டுவிட்டு எதிர்ப்புகள் ஏதுமின்றி வெற்றி கொண்டுவிட்டதாக இறுமாப்படைந்து கொள்கிறது. அரசியலில் அரிவரி கூடத் தெரியாத அமைரிக்க அங்காடியொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரஜபக்ச சகோதர்களை தனது கைப்பொம்மையாக்கிக் கொண்ட இந்திய அரசு, தனது பிராந்திய, அரசியல், பொருளாதார நலன்களுக்காக கொன்று போட்டவர்கள் போக மிஞ்சியவர்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதையும் நியாயப்படுத்துகிறது.
  http://inioru.com/?p=5623

 12. தோழர் வினவு!
  தமிழ்த்துரோகி என்பதன் அரசியல் அடிப்படைகுறித்துப் பரிசீலித்தீர்களா?
  அதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • ‘தமிழ்த் துரோகி’ தொடர்பாக சுகன் கேட்ட கேள்விக்கு பதில்:

   புலிகள் தமக்கு உடன்பாடில்லா அனைவரையுமே தமிழ் துரோகிகள் என்று குற்றம் சுமத்தி அழித்து வந்தனர். இதைக் கண்டிக்கிற அதேநேரத்தில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு துரோகமிழைத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களை அரசியல் ரீதியாக தமிழ் துரோகிகள் என்று வரையறுப்பது சரியானது என்றே கருதுகிறோம். துரோகிகளாக இருப்பவர்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதா, அல்லது ஏவல் துரோகிகளாக காட்டிக்கொடுப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள்அழிக்கப்படவேண்டியவர்களா என்பதை அவர்களது துரோகத்தின் தன்மைக்கேற்பவே முடிவு செய்யமுடியும். இப்படி இனத்துரோகிகள் என்று பயன்படுத்துவது சரியானதே. புலிகள் அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள் என்பதால் இப்படி நாமும் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல. பேரினவாத வெறியை சிங்கள இனவெறி என்று வரையறுப்பது எப்படி சரியானதோ அதே போல தமிழனதுரோகிகளை வரையறுப்பதும் சரியானதே. இந்தியாவில் இந்து மதவெறியர்கள் பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகள் என்று அழைக்கிறோம். இப்படி சமூக ஆதிக்கம் செய்கிறவர்களை அவர்களது இனம், மதம், சாதி பெயர்களை குறிப்பிட்டு அழைப்பதை நாங்கள் ஏற்கிறோம். இது வர்க்க ரீதியாக சமூகத்தை ஆய்வு செய்யும் மார்க்கிசய அணுகுமுறைக்கு உடன்பாடானதே.

   ( புதிய ஜனநாயகம் தோழர்களிடம் கேட்டுப்பெற்ற விளக்கத்தை இங்கே பதிவு செய்திருக்கிறோம்.)

 13. சுகன்,

  கைவசம் உள்ள வேலைகளை முடித்துவிட்டு உங்கள் கேள்விகளுக்கு கூடிய விரைவில் பதிலளிக்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க