Thursday, September 28, 2023
முகப்புஉலகம்ஈழம்ஈழம் - டி. அருள் எழிலனின் "பேரினவாதத்தின் ராஜா" நூல் வெளியீட்டு விழா!

ஈழம் – டி. அருள் எழிலனின் “பேரினவாதத்தின் ராஜா” நூல் வெளியீட்டு விழா!

-

perinavathathin-raja-arul-ezhilan

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன்.

நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி,

இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்)  அண்ணாசாலை, சென்னை.

நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம்.

எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய வெறியால் ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. //////////அண்ணா !இரயாகரன் அவர்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடுவது இருக்கட்டும்.உங்களின் மாக்ஸிய அறிவைப்பார்த்து எனக்கு புல்லரிக்குதுன்னா.புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு ஸ்டாலின் என்ற பெயர்தான் சூப்பர்.அது எப்படினா அவ்வளவு அழகான வார்த்தைகளைக்கொண்டு சுத்தி சுத்தி உங்கள் கொள்கையின் இயலாமையை
  கம்யுனிஸ்ட் என்ற ஒன்றை வைத்து நிறுவபார்க்கிறீர்கள்.நீங்கள் கம்யுனிஸ்ட் என்று வெளியே சொல்லாதிர்கள்.யாரும் மாக்சியமா? அது ரொம்ப குழப்பமானது,படிக்கிறவர்களுக்கும் புரியாது,பாடம் நடத்தரவங்களுக்கும் புரியாதுன்னு சொல்லிடபோராங்க. மக்கள் விழுப்புணர்ச்சி அடையசெய்து,ஆயுதம் ஏந்திபோராடுவதே கம்யுனிஸ்டின் செயல்.ஆனால் உங்களால் அவ்வளவு பெரிய செயலை செய்யமுடியாது என்றால்,இப்படிதான் பாராளுமன்றபாதையே கம்யுனிஸ்ட்பாதை இதுவே இன்றைய நிலை என்று ஓட்டு பொறிக்கி அரசியலுக்கு வக்காலத்து வாங்கிய ஆல்தானெ நீங்கள்.
  நீங்கள் இரயாகரனை சொன்னால் சரியாகதான் இருக்கும்./////////////////

  பித்தன் வணக்கம்
  இரயாகரன் என்பவரை ம.க.இ.க வுடன் ஒப்பிடும் இந்த ஸ்டாலின் குரு அதன் மூலம் கேவலமான முறையில் சுய இன்பம் பெற்றுக்கொள்கிறார். புலி பற்றிய நிலைப்பாட்டிலோ இன்னும் பல்வேறு நிலைப்பாடுகளிலோ ம.க.இ.க வுக்கும் இரயாகரனுக்கும் நேர் எதிரான பார்வை உண்டு என்பதை கூட அறிய முடியாத இந்த கிணற்றுத்தவளைகள் பாவம் தம் மகிழ்ச்சிக்காக எதையாவது செய்கின்றன, செய்துவிட்டு போகட்டும் விடுங்கள். இரயாகரன் தனது தளத்தில் புஜ, புக வுக்கு இடம் ஒதுக்கியிருப்பதை வைத்தும், நமது கட்டுரைகளை மீற் பிரசுரம் செய்வதை வைத்தும் இவர்கள் இராகரனுடனான நமது அரசியல் உறவை காண்கிறார்கள்.

  இரயாகரன் குறித்து நாம் எழுதிய கட்டுரை கீழே உள்ளது எமக்கும் அவருக்குமிடையிலான வேறுபாட்டை அறிய‌ அவசியம் வாசித்து பார்க்கவும்.

  அறிவிப்பு: “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!
  https://www.vinavu.com/2009/08/27/raya2/

  மேலும் விரிவான விவரங்களை அறிய ஆர்குட் உள்ளே சென்று கீழ்கண்ட சுட்டியிலுள்ள இழையை காணவும்.
  http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5410508673789778150&start=1

 2. நூல் வெளியீட்டுவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!!!

 3. தோழர் அருள் எழிலனின் எழுத்துக்கள் நூலாக வெளிவருவது மகிழ்ச்சி . நிகழ்ச்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

 4. டியர் வினவு, இந்த புஸ்தகத்தின் சில பஹுதிகளை வெளியிடுங்களேன் ப்ளீஸ் ,.மிஹுந்த நன்றி இப்போது என்னால் தமிழ் இல் மெசேஜ் செய்ய முடிகிறது.நன்றி நன்றி

 5. பத்திரிக்கையாளர்களில் நேர்மையாகவும், காத்திரமாகவும் எழுதும் எழுதுபவர்களில் அருள் எழிலன் ஒருவர். அவருடைய எழுத்துக்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள். விலை ரூ. 125 என இருக்கிறது. பெரிய புத்தகமா என்ன? தோழர்களில் யாராவது வெளியீட்டு விழா தொடர்பாக பதிவு வெளியிட்டால் நல்லது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க