Wednesday, July 24, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் !!

3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் !!

-

இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதுவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப நாட்களாக அலுவலக சுற்றுப்பயணமாக வட இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதிலும் கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்க வேண்டியாகிவிட்டபடியால், ஒரு பேயிங் கெஸ்ட் அக்காமடேஷனில் தங்கியிருக்கிறேன். என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர்கள் – ஒருவன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் – ஒருவன் உத்திர பிரதேசம் – ஒருவன் நம்ம ஊர், கும்பகோணம்.

வந்த நாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அனேகமாக நான் அறைக்கு பீஃப் பிரியாணி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட இரண்டாவது நாளிலிருந்தே கொஞ்சம் முறைப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராகுல் (ம.பி காரன்) எங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து புதிதாக திரைக்கு வந்துள்ள 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் வாங்கி வந்துவிட்டான். நான் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தி ஒரு எழவும் புரியாது என்று சொல்லிப்பார்த்தேன் – விடவில்லை.

அதிலும் நம்ம கும்பகோணத்தான் ஒரு பார்ப்பான், இந்தி கற்று விடவேண்டும் என்று கடும் முனைப்புடன் இருக்கிறவன். மற்ற இருவருமாக சேர்ந்து இவனிடம் இந்தி படம் பார்த்தால் ஓரளவு இந்தி பேசக் கற்றுக் கொண்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. ம்ம்… சொல்ல மறந்து விட்டேன் – அவர்களும் பார்ப்பனர்கள்தான். ஒருத்தன் காயஸ்த் பார்ப்பான், இன்னொருவன் வேறு ஏதோவொரு பார்ப்பான்..  என்னதான் பார்ப்பான்களாயிருந்தாலும், இவர்களுக்குள் ஒரு க்ளியரான டிமார்கேஷன் (பிரிவு) இருக்கும் – அதாவது நம்ம கும்பகோணத்தானுக்கும் வடக்கத்தியானுகளுக்கும். இதுல எவன் எவனை ஒதுக்கறான் என்று எனக்கு இதுவரை புரியவரவில்லை.

கிடக்கட்டும். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் நம்மாளு என்னைப் போட்டு நச்சியெடுத்து சம்மதிக்க வைத்துவிட்டான். படத்தைப் பற்றி நிறைய விமர்சனக் கட்டுரைகள் தமிழில் கூட வந்திருக்கின்றன.. கதை என்று பார்த்தால்…. ஹீரோ ரான்ச்சோ ஒரு புத்திசாலி  (ஆமிர்கான்) கல்லூரி மாணவன்(!). கூட்டாளிகளாக இன்னும் இரண்டு மாணவர்கள் – ஒரு மேல் நடுத்தர வர்க்க முசுலீம்(மாதவன்), ஒரு கீழ்நடுத்தரவர்க்க இந்து (பேரு தெரியலை).

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள் – ஆமிர் பொறியியலை அதன் உண்மையான அர்த்தத்தில் கற்க விரும்புபவன் – நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டத்தின் மேல் விமரிசனம் கொண்டவன். மாதவன் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட மாணவன் – அப்பாவின் கட்டாயத்துக்கு பொறியியல் கற்க வந்துள்ளவன். அந்த இன்னொருவன், வீட்டில் பொருளாதார நெருக்கடி – எப்படியோ படித்து ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற கட்டாயத்துக்கு பொறியியல் கற்க வந்துள்ளவன்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கல்லூரி நாட்களில் லூட்டியடிக்கிறார்கள். இப்படியாக வாத்தியார்களையும், கல்லூரி தாளாளரையும் கடுப்படித்து படித்து முடிக்கிறார்கள் – மாதவன் படித்து முடித்தவுடன் பொறியியல் துறையை விடுத்து தனக்கு விருப்பமான புகைப்படக்கலையை தேர்ந்தெடுக்கிறான் – ஆமிரின் ஆலோசனை. இன்னொரு மாணவனுக்கு கேம்ப்பஸ்ஸில் வேலை கிடைக்கிறது – ஆமீரின் உதவி+ஊக்கம்+etc. கதாநாயகியின் அக்காள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள் – உபயம் ஆமிர் ( அதாவது பிரசவ கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார் – ஹீரோவாச்சே, சும்மாவா?).

படம் நெடுக வரும் இன்னொரு பாத்திரம் – ராமலிங்கம் எனும் மாணவன். இந்த பாத்திரப் படைப்பைப் பற்றித்தான் எனது நெருடல் –
இவன் வரும் காட்சிகளை நான்(ங்கள்) காணவேண்டும் என்பதற்காகவே ராகுல் தனது கைக்காசைப் போட்டு டிக்கெட் வாங்கி வந்திருக்கிறான் என்பது எனது அனுமானம். இந்த ராமலிங்கம் போன்ற ஒரு பாத்திரத்தை நாமும் கூட நமது கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். “ஏய் இது என்னோட டிபனாக்கும் – இது என்னோட பேனாவாக்கும் – இது என்னோட டிராப்ட்டராக்கும் – தொடாதே!” இந்த மாதிரி ஒரு அல்பை கேரக்டர்.

படித்து முடிக்கும் சமயத்தில் வரும் ஒரு ஆசிரியர் தின விழாவில், கல்லூரி தாளாளரை இம்ப்ரெஸ் செய்ய ராமலிங்கம் லைப்ரரியன் உதவியுடன் ஒரு இந்தி உரையை தயாரிக்கிறான் – அதில் வரும் ஏதோவொரு வார்த்தையை மாற்றி “பலாத்கார்” என்று வரும்படி ஆமிர் செய்து விடுகிறான். ஏன்? ஏனென்றால் இந்த கேரக்டர் ஒரு அல்பையாச்சே. அந்த விழாவில் எல்லோர் முன்னிலையிலும் உரையை படித்து கடும் அவமானத்துக்குள்ளாகும் ராமலிங்கம், இந்த மூன்று நண்பர்களிடமும் வந்து, இன்னும் பத்து ஆண்டுகளில் தான் சொந்த வாழ்க்கையில் ஒரு உயர் நிலைக்கு வந்தபின் இவர்களை வந்து சந்திப்பதாக சவால் விட்டுச் செல்கிறான். முதல் காட்சியே பத்தாண்டு கழித்து ராமலிங்கம் இவர்களை சந்திக்க வருவதிலிருந்துதான் படம் ஆரம்பிக்கிறது. இவர்களில் ரான்ச்சோ(ஆமிர்) எங்கேயிருக்கிறான் என்று எவருக்கும் தெரியவில்லை – அவனைத் தேடிப்போகும் இடைவெளியில் ஃப்ளேஷ்பேக்காகத்தான் மொத்த கதையும் விரிகிறது.

ராமலிங்கம் தன்னை கல்லூரி முதலாண்டு முதல் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதும்  “I am Chattar Ramalingam born in Uganda, studied in Pondicherry” என்றே சொல்கிறான். ராமலிங்கம் எனும் கதாபாத்திரம் – தெளிவாக தமிழர்களின் உருவகமாகவே படத்தில் காட்டப்படுகிறது. அவன் தட்டுத்தடுமாறி இந்தி கற்றுக்கொள்ள முயல்கிறான் – இடையிடையே ஆங்கில வார்த்தைகள் போட்டு பேசுகிறான். MTI – அதாவது மதர் டங் இன்ப்ளுயன்ஸ் என்பார்களல்லவா, தாய்மொழி பாதிப்புடன் பிற மொழிபேசுவது போலவே, தென்னாட்டு பாதிப்புடன் (accent) இந்தி பேசுகிறான். மொத்த திரையரங்கும் கைகொட்டிச் சிரிக்கிறது – ராகுல் எனது மற்றும் கும்பகோணத்தானின் முகபாவத்தை ஓரக்கண்ணில் கவனிப்பது தெரிந்தது.

ராமலிங்கம் கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வும் கூட கச்சிதமாக தமிழர்களை நினைவுக்குக் கொண்டுவரும் படியான ஒரு தேர்வு. தில்லியில் வடகிழக்கிலிருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் இடம் பெயர்ந்து வரும் மக்களை இங்கே வடநாட்டினர் “சிங்க்கீஸ்” (சைனீஸ் என்பதன் சுருக்கம்) என்றே விளித்து கிண்டல் செய்கிறார்கள். அவர்களை இந்தியர்களாகவே வடக்கில் கருவதில்லை. அதே போல் தமிழர்களையும் அவர்கள் இந்தியர்களாக கருதுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் வட இந்தியர்கள் என்று குறிப்பது ஊடகங்களை மட்டுமல்ல – இங்கே சாதாரணமாக என்னோடு பழகுபவர்களும் கூட இதே போன்ற அணுகுமுறையை கையாளுவதைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பிரதிபலிக்கும் விதமாகவே ராமலிங்கம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது தான் உகாண்டாவில் பிறந்ததாக சொல்கிறான். வேறு சில இடத்திலும் இது அழுத்தமாக புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கதாபாத்திரம்  கோமாளித்தனமாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…ம்ம்ம்ம்.. ஒரு விதமான காமெடி வில்லன் போல!

பரீட்சையில் தான் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக பரீட்சைக்கு முந்தைய இரவு ஹாஸ்டலில் உள்ள அறைகளில் மற்ற மாணவர்கள் அறியாமல் செக்ஸ் புத்தகத்தை வைக்கிறான். ஹீரோ கல்வித் திட்டத்தைப் பற்றி வகுப்பில் ஆசிரியரிடம் விமர்சித்துப் பேசுகிறான், அதற்கு ஆசிரியர் அந்த மாணவனை(ஹீரோவை) கன்னாபின்னாவென்று திட்டுகிறார் – மற்ற மாணவர்களெல்லாம்  அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் மட்டும் சத்தம் போட்டு சிரிப்பது போலவும், எகத்தாளமாக திரும்பி பார்க்கிறான்.

பொதுவாக நான் படிக்கும் காலத்தில் என்னைப் பொறுத்தளவில், முதல் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, தலையை எண்ணை போட்டு படிய வாரிக்கொண்டு, சட்டையில் காலர்பட்டன் நெக்பட்டனெல்லாம் போட்டுக் கொண்டு, ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திரிக் கொட்டைத் தனமாக தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை வாந்தியெடுக்கும் மாணவனைக் கண்டாலே பிடிக்காது. எட்டி உதைக்கலாமா என்று கூட தோன்றும். இந்த ராமலிங்கம் கதாபாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது.  ராமலிங்கம்  ஒரு கோழை, காரியவாதி, சுயநலவாதி, துரோகி, இங்கிதம் தெரியாவன் (ராமலிங்கம் அடிக்கடி குசுவிடுவது போல காட்சிகள் உள்ளது) என்பதை மிக முயன்று நிறுவியுள்ளனர். இங்கே ராமலிங்கம் என்பது ஒரு கதாபாத்திரமாக அல்ல – தமிழர்களின் ஒரு குறியீடாகவே இருக்கிறது.

எப்படி?

பொதுவில் இங்கே (வடக்கில்) தமிழர்கள் காரியவாதிகள் என்றும் எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போலவும் ஒரு கருத்து உள்ளது. ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் – அந்தக் கருத்தின் உருவகமாக ராமலிங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவில் தெற்கத்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) உலகமயமாக்கலின் பின் உருவான ஐ.டி துறை, ஐ.டி சேவைத் துறை போன்றவைகளில் அதிகளவு வேலைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனும் குமைச்சல் வடக்கில் இயல்பாகவே இருக்கிறது. அதற்குக் உண்மையான காரணம் அவர்களை விட ஒப்பீட்டு ரீதியில் ( BIMARU மாநிலங்கள் சில ஆப்ரிக்க நாடுகளை விட படு கேவலமான முறையில் உள்ளது) கல்வித்துறைக் கட்டமைப்புகள் இங்கே வலுவாக இருப்பதாகும். ஆனால், வடக்கில் சாதாரணர்களிடையே ஏதோ தமிழர்கள் தந்திரமாக (அவர்களுக்கு தென்னிந்தியா என்றாலே அது தமிழ்நாடு தான்) தமது வேலைகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் கதையில் ஒரு ட்விஸ்ட்.. அதாவது ஆமிர் உண்மையான ரான்ச்சோ அல்ல. ரான்ச்சோ என்பது ஒரு பெரிய பண்ணையாரின் பையன். ஆமிர் அந்த கிராமத்தில் நன்றாக படிக்கும் ஏழை மாணவன் என்பதால், ரான்சோவின் பேரில் பொறியியல் படித்து பட்டத்தை ரான்சோவுக்கு கொடுத்துவிட வேண்டும் எனும் ஏற்பாட்டில் தான் படிக்கவே வருகிறான் (இது இன்னொரு நெருடல்). போலவே படித்து முடித்ததும் பட்டத்தை உண்மையான ரான்ச்சோவிடம் கொடுத்துவிட்டு ஒரு ஒதுக்குப் புறமான கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும் ஒரு விஞ்ஞானியாகவும் (!?) வாழ்ந்து வரும் ஆமிரின் உண்மையான பெயர் – ஃபுங்செக் வாங்க்டூ. இவரிடம் சில முக்கியமான பேட்டண்டுகள் இருக்கிறது. வாங்க்டூவிடம் ஒரு ஒப்பந்தம் போடும் வேலையாகத் தான் ராமலிங்கம் இந்தியா வருகிறான் – ஆனால் வாங்க்டூதான் ஆமிர் என்று தெரியாது. அந்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை.

ஆமிரை கிராமத்தில் பொடியன்கள் மத்தியில் வைத்துப் பார்க்கும் ராமலிங்கம் முதலில் அவனைக் கேவலமாக பேசிவிடுகிறான்.. பிறகு அவனே தான் சந்திக்க வேண்டிய வாங்க்டூ என்று தெரியவரும் போது இதுவரை தான் பேசியதெல்லாம் சும்மா தமாஷுக்காக என்றும் ஆமிர்தான் ஜெயித்து விட்டதாகவும் சொல்லி குழைகிறான். உச்சகட்டமாக தனது பேண்ட்டை கழட்டி ஜட்டியுடன் திரும்பி நின்று “நீ தான் பெரியாளு” என்பது போன்று ஏதோ இந்தியில் சொல்கிறான். ஆமிரும் மற்ற இரு நண்பர்களும் கேலியாக சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் – ராமலிங்கம் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டே துரத்துகிறான் – காட்சி உறைந்து படம் முடிகிறது..

இந்த இறுதிக் காட்சி “தமிழர்கள் தமது காரியம் நடக்க வேண்டுமானால் எந்தளவுக்கும் இறங்கிப் போக தயங்காத சுயநலவாதிகள்” என்று வடநாட்டான் நம்மேல் கொண்டிருக்கும் கருத்தின் உருவகம்.

“ஆப்கோ ஹிந்தி மாலும்ஹேனா?”

“Sorry I dont know hindi”

என்று எனக்கும் ராகுலுக்கும் ஆரம்பத்தில் நடந்த அந்த உரையாடலைத் தொடர்ந்தே என்னை ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த உயிரினத்தைப் பார்ப்பது போலவே பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆக, நான் ராமலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதும், ராமலிங்கத்தின் கோமாளித்தனங்களைப் பார்த்து கூட்டம் கைகொட்டிச் சிரிப்பதை பார்க்க வேண்டும் என்பதும்தான் அவன் நோக்கம். படம் நெடுக இடையிடையே அவன் என்னை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. நானாவது பரவாயில்லை – ஹிந்தியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டவன். ஹிந்தி தெரியாது என்று பெருமையாகவே சொல்லிக் கொள்பவன். ஆனால் சங்கரனின்( கும்பகோணம்) நிலையோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் தட்டுத்தடுமாறி ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பவன் – அவனுடைய பட்லர் இந்தியை தினப்படி அவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந்தப் படமோ அதில் உச்சகட்டமாகிவிட்டது.

திரையரங்கை விட்டு வெளியே வந்து நான் தனியே போய் தம்மடிக்க நின்றேன். சங்கரன் உர்ரென்று வந்து பக்கத்தில் நின்றான். “நீங்க வேணா பாருங்க பாஸு.. சீக்கிரமா நல்லா இந்தி பேசக் கத்துக்குவேன்” என்றான். “கத்துக்கிட்டு?” என்றேன்… ஒன்றும் பதில் சொல்லவில்லை.

மொழியின் மேல் எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது -நான் மொழிவெறியனுமல்ல- ஆனால் அது திணிக்கப்படுவதுதான் எரிச்சலூட்டுகிறது. எனது இந்தப் பயணத்தில் தில்லியின் சில பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது.. அதிலும் குறிப்பாக கால்காஜி பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். கூலி வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களான அவர்களிடம் பழகிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தையும் காட்டுகிறது.

வடநாட்டைச் சேர்ந்த, மற்றும் பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பிற உழைக்கும் மக்கள் தமது வர்க்கத்தவரான தமிழர்களின் மேல் மொழிக் காழ்ப்பைக் காட்டுவதில்லை. இயல்பாக இவர்களும் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். புதிதாக வந்து சேரும் இந்தி பேசத்தெரியாத தமிழர்களுக்கும் மற்ற உழைக்கும் வடநாட்டினர் உதவியாகவே இருக்கிறார்கள். வேலைக்கான போட்டி மட்டுமே அவர்களிடம் நிலவுகிறாதேயொழிய தமிழன் எனும் காரணத்துக்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை -நடைபாதைகளின் ஒரே பகுதியை அவர்கள் தமக்குள் சச்சரவில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் மேல்தர வர்க்கங்களிடையே இயல்பாகவே மதராஸிகள் மேல் வெறுப்பு இருக்கிறது. அவர்கள் வேலைகளை நாம் அபகரித்துக் கொள்கிறோம் எனும் பொறாமை இருக்கிறது. இயல்பாக இந்த குமுறல்களெல்லாம் அவர்களுக்கு சரியான கல்விக்கட்டமைப்பை உறுதி செய்து தராத அரசின் மேல் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் குமுறல்களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மேலான வெறுப்பாக மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சின்ன உதாரணம் தான்.

உடன் வேலை செய்யும் வேறு தென்னாட்டவர்களிடம் பேசும் போது இதே போன்ற கள்ளப்பரப்புரை தொடர்ந்து நடந்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துவரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் சமீபத்திய உலகளாவிய பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் மேலும் சீர்குலைவை நோக்கி சென்று வரும் நிலையில், மக்களின் கோபம் தம்மேல் திரும்பிவிடாமல் தடுத்து வைக்க இது போன்ற படங்களும் ஆளும் வர்க்கத்துக்கு கணிசமாக சேவை செய்கின்றன. பிராந்திய பகைமைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அளவுக்குள் வளருவதை ஆளும் வர்க்கம் எப்போதுமே விரும்பத்தான் செய்யும்.ஆனால், இந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலை ஒரு நாள் ஏற்படும் போது – அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கையான இந்தியா எனும் இந்த ஏற்பாடு சிதைந்து போகத்தான் செய்யும். கூடவே உழைக்கும் மக்களின் இயல்மான இந்தியா பிறக்கவும் கூடுமென்று கருதுகிறேன்.

 1. இது மாதிரி நிறைய உண்டு . ஹிந்தி சீரியல்களில் தமிழர்களை கோமாளிகளாக காட்டியுளார்கள். . பழைய ஹிந்தி படங்களில் கூட நீங்கள் இதை பார்க்கலாம்

 2. இந்தப் படத்தை நானும் பார்த்தேன். நல்ல பாடம் சொல்லும் படம் என்று நினைத்தேன்.

  அந்த இராமலிங்கம் கதாபாத்திரத்தை இந்தவொரு கோணத்தில் நீங்கள் சொன்ன பின் சிந்தித்தால் உணர முடிகிறது.

  அந்த ஜட்டி கழற்றும் விடயத்தை மட்டும் நீங்கள் தப்பாய் புரிந்திருக்கிறீர்கள். இது அவர்களது கல்லூரி வாழ்க்கையில் நீ வென்று விட்டாய் என்பதை காட்டும் ஒரு குறியீடாக கொள்கிறார்கள். அவ்வளவுதான். அதை இந்த இராமலிங்கம் மட்டுமில்லை கல்லூரிக்கு வெளியே கதாநாயகி முன்னிலையில் கதாநாயகனிடம் மற்ற இருவரும் செய்து காண்பிப்பார்கள்.

 3. அருமையான பதிவு-விமரிசனம் கார்க்கி, உங்கள் வடநாட்டு அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள், குறிப்பாக இங்கேயுள்ள டீக்கடை மலையாளிகளையும், பஞ்சம் பிழைக்கவந்த பிகாரிகளையும் ‘மார்வாடி-சேட்டு’களையும் ஒன்றுபோல கருதும், அவற்களை வெறுக்கும்  இனவாத அரசியலையும்..வடக்கே பஞ்சம் பிழைக்கச்சென்ற தமிழர்கள்-மற்றும் மிடில்கிளாசாக செட்டிலான தமிழர்களை அங்குள்ளவர்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதையும் சில உதாரணங்களோடு விரிவாக எழுதவேண்டும். சொந்த அனுபவத்தை நீங்கள் எழுதுவதால் அது இன்னமும் எளிமையாக புரியும் என கருதுகிறேன். இந்தப்பதிவிலேயே அதை சுறுக்கமாக எழுதியிருந்தாலும், மலிவான இனவாத அரசியலில் எளிதாக விழுந்துவிடும் படித்த-இணைய இளைஞர்களுக்காக விரிவான பார்வை ஒன்று தேவை. 

 4. தமிழ்ப்படம் பாக்கதுக்கே யோசிக்கிற என்ன மாதிரி ஆளுங்களெல்லாம் இந்திப் படத்தை எங்கன போய் பாக்க? தம்பி கார்க்கியோட விமர்சனம் படத்தையும் தாண்டி சொந்த வாழ்க்கையோட சேந்து எழுதுனது நல்லா இருக்கு. வடக்க இருந்து மக்களெல்லாம் பஞ்சத்துக்கு பிழைக்க இங்கதான் ஓடி வருதாக. அவுக வாழ்க்கைய பத்தியும் வினவுக்காரவுக எழுதுனா நில்லா இருக்கும். வடக்கத்திமாரு நம்மளப்பத்தி என்ன நினைக்கான்னு இந்த கட்டுரையப் பாத்தப்புறம்தான் தெரியுது.

 5. நானும் இந்த படத்தினைப் பார்த்தேன். ஆனால் ராமலிங்கம் கதாபாத்திரத்தை இந்த கோணத்தில் அனுகவில்லை. இங்கு அமீரகத்திலும் நம்மவர்கள் மீதான அவர்களின் வெறுப்பை பல நேரங்களில் கண்டிருக்கின்றேன்.

 6. எனக்கென்னமோ, ராமலிங்கத்தைப் பார்த்தால் இன்போஸிஸ் நாரயணமூர்த்தி ஞாபகம் தான் வருது.

  பொதுவாக வட இந்தியர்கள் நடிகர் ரஜினியை வைத்துத் தான் எங்களை கிண்டலடிப்பார்கள். (தெலுங்கு பசங்க உடனே ரஜினி எங்க ஊரு இல்ல. அவரு தமிழ்நாட்டு நடிகர் என்று பதைபதைப்பார்கள்.) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒன்று என்று சொல்லிப் பேசுவார்கள்.

  ஒருமுறை ரூர்க்கியில், நான் மயக்கமாக வந்து ரோட்டில் விழுந்தபோது தண்ணீர் கொடுத்து உபசரித்தவர்களை என்னால் மற்க்க முடியாது.(அப்போது எனக்கு இந்தி சரியாகத் தெரியாது.) அவர்கள் நீங்கள் சொன்ன பாட்டாளிகள் தான்.

 7. இதே தமிழில் எடுக்கும் போது அந்த சைலன்ஸர் கதாப்பாத்திரம் ஒரு பார்ப்பானனாக இருப்பான். அப்போது அந்தப்படத்தை ஆஹா, ஓஹோ என்று புகழ்வீர்கள். நீங்கள் எல்லாம் தெளியவே மாட்டீங்களா ?

  • அனானி, பிராமணன் என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழ்ப் பெயர்தான் பார்பாபான். பார்ப்பனர்கள் என்று எழுதுவதற்கே இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?

   • உங்கள் பார்ப்பான வெறுப்பைத் தானய்யா இங்கே சுட்டிக்காட்டுகிறேன். எத்தனை தமிழ் படங்களில் மார்வாடி சேட்டை ஜட்டியுடன் ஓட விடுகிறீர்கள் ? எத்தனை தமிழ் படங்களில் சர்தார் ஜியை கிண்டலடிக்கிறீர்கள். அது போலத்தான் இப்படமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    உங்கள் பார்ப்பான வெறுப்பை இங்கே பலர் சுட்டிக்காட்டி விட்டனர். இருந்தாலும் இன்றும் சொல்கிறேன். உங்களால் பார்ப்பானன் மேல் பழி போடாலம் ஒரு 10 வரி கூட எழுத முடியாது. அப்படி நீங்கள் எழுதும் நாள் வினவு தளம் இல்லாமல் போகும் நாளாக இருக்கும்.

    • பதிவை அமைதியாக படிக்கவும். நீங்கள் கூறுவது போன்ற மார்வாடி மற்றும் சர்தார்ஜி சீன்கள் காமெடிக்காகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. இழிவுபடுத்து போன்ற மையக்கருத்தாக இல்லை.

    • மார்வாடியை கிண்டல் பண்ணா அது காமெடி. நம்மாளை பண்ணா அது இழிவு படுத்துதல். அட்டகாசம். 

    • கலி,
     இந்தக் கட்டுரையிலேயே பார்ப்பானன் என்று பல முறை வந்துள்ளது.
     சாதியை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் தான் சாதியை விட்டுக்கொடுப்பதில்லை. சாதியை அழியாமல் பாதுகாப்பவர்களும் அவர்களே.

   • பறையன் என்றோ தேவன் என்றோ வன்னியன் என்றோ அம்பட்டன் என்றோ எழுதி விடுவீரா. பார்ப்பான் என்றால் அலட்சியம். நான் அந்த சமூகத்தை சேர்ந்தவன் இல்லை. எனினும் அணுகும் முறையை மாற்றுதல் நலம். வினவு என்ன ஆகாயத்தில் இருந்த குதித்து விட்டார்.

    • பிராமணன்வால் என்றழைத்தால் குதூகலிக்கும் நீங்கள் பார்ப்பனன் என தமிழில் அழைத்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? தமிழ் சூத்திரன் மொழி என்பதாலா!

    • பிராமணவாள் பிரமணப்பூ* என்றெல்லாம் அழைத்து உங்களை நீங்களே ஏன் தரம்தாழ்த்திக்கொள்ளாவேண்டும். வன்னியர்வாள், தேவர்வாள் என்றெல்லாம் அழைக்கும் காலத்தில் பிராமணனை அப்படி அழைத்திருக்கலாம்.
     இன்று வன்னியரையும், தேவரையும் அப்படி எல்லாம் வாள் போட்டு இல்லை பூ* போட்டு அழைக்காதபோது, பிராமணனுக்கு மட்டும் ஏன் அந்த சலுகை ?

     பார்ப்பானன் என்பது பிராமணனை மட்டும் தான் குறிக்கும் சொல்லா இல்லை பூனூல் போடும் அனைவரையும் குறிக்கும் சொல்லா ?

    • Every community has a right to decide how they want to referred to. Parpanan is an offensive term. You can have a survey among Brahmins and I am sure every one will agree with me.
     Here is a passage inspired by Chris Rock.

     ஒரு இரவு பதின் ஒரு மணி அளவில் நாலு பேரு உன்னோட வீட்ல நுழைஞ்சு களவாடிட்டு ஓடும் போது, நீ பொங்கி எழுந்து , தொரத்திகிட்டு போயி ஒருத்தன் சட்டையில கை வைக்கும் போது, அவன் சட்டை கிழுன்சு போயி, அவன் சட்டைய விட்டுட்டு ஓடும்போது, கிழிஞ்ச சட்டையோடு ஒர் பூணுலும் வந்துதுனா , அப்ப கத்தி சொல்லெல்லாம் , பார்பன புடிங்கடானு . கேட்க ஆளில்லை என்பதற்காக பிராமணனை என்ன வேண்ணா சொல்லலாம் என்றால், வடக்க உள்ளவன் உன்ன செருப்பால் அடிக்கிறதும் தப்பு இல்லை.”

    • கோல் நிலை பார்ப்பவன் பார்ப்பான் என்றால், பறை அடிபவனை பறையன் என கூப்பிடலாமா? ஒரு சமூகம் அசிங்கமா நினைக்கும் போது எதுக்காக அந்த வார்த்தைய உபயோக படுதனும்கிறேன் ?

    • @@@கோல் நிலை பார்ப்பவன் பார்ப்பான் என்றால், பறை அடிபவனை பறையன் என கூப்பிடலாமா? @@@

     பாப்பானுங்க பறையங்க வீட்டுல ்பெண் கொடுத்து பெண் எடுக்குற அளவுக்கு சமத்துவம் இருக்குற ஊர்ல கேக்க வேண்டிய கேள்வி இது பிரதர்!!! பீய மிதிச்சா கூட கால கழுவனும் பறையன தொட்டா ஆளே குளிக்கனுமின்னு நெனைக்குற பாப்பானுங்க இருக்குற ஊருல உங்க வாதம் செல்லாது… வேணா ஒன்னு செய்யலாம், பாப்பானுங்கள
     பூனூல அறுத்து போட்டு கையுல பறையெடுத்துக்க ்சொல்லுங்க, செத்த மாட்ட அறுக்க சொல்லுங்க, தலையில கூடையில மலத்த சுமக்க சொல்லுங்க, நகர சுத்திகரிப்பு தொழிலாளியா சாக்கடையில எறங்க சொல்லுங்க, வெட்டியான சுடுகாட்டுல வேல பாக்க சொல்லுங்க, கூலி விவாசாயியா கழனி்யில எறங்க சொல்லுங்க… நாங்க பாப்பான்னு கூப்புடற நிறுத்தறோம்!!!! வந்துட்டாங்க பாப்பானும் பறையனும் ஒன்னுன்னு சொல்லிகிட்டு…

    • அய்யா கேள்விகுறி, வலிகுதுல. அப்பா பொத்தி கிட்டு போங்க. ஒங்க வூருல பிராமணன் மட்டும் தன மலம் போனானா? மத்தவன் மலதேல்லாம் சுமந்தது யாரு? மத்தவன பேசினா பின்னி பெடல எடுத்திடுவன் இல்லை? அந்த பயம். ஓங்கல படிச்சு மேல வா நு சொன்னாக்க நீங்க எங்கள மலம் அல்ல கூபிடிறீங்க. அதுக்காக தானே இட ஒதுக்கீடு எல்லாம் இருக்கு.

    • பெரியரார படித்துவிட்டு அதை Vomit எடுத்தாக்க புரட்சி காரன் இல்லை பாஸ். சுயமாக சிந்திக்கணும். எல்லா பிராமணனும் தமிழ் நாட்டை விட்டு வெளியே போயிட்டா பிரச்னை தீர்ந்திடுமா? படிக்க சொல்லுங்க எல்லரரும். நகரத்துக்கு வர சொல்லுங்க. மலம் அல்லறது Machine பண்ணனும். மனுஷன் பன்ன கூடாது.

    • வேதம் ஓதி காசு பண்ண முடியாதுன பிராமணன் IAS படிச்சான். அப்பறம் ias PASS பண்ணி அமெரிக்கா போகமுடியாதுன்னு கம்ப்யூட்டர் படிச்சான். இன்னைக்கு என் பிள்ளை வேதம் கத்துக்க போறேன்னு கிளம்பினா நாலு சாத்து சாத்தி, டாக்டர் ஆகவோ , Engineer ஆகவோ தான் ஆக்குவன் எவனும். I do agree that a section of the people have been exploited for generations by the 3/4th of the society and it suited them. Brahmins are equally / a bit more responsible for the historic exploitation just like the others. But capitalism has a brought in a different aspect to life. A class system based on Money. And education/skill is the only way to eliminate poverty. A lot of us fully support undoing this by previledges for the class of people. But to blame just the brahmins, who do not even have a voice today and comfortably forget everbody else who still practice rettai tumbler is hypocarcy. Afterall other castes inherited properties from their ancestors. Brahmins inhertited only the attitude to learn.

     Intercaste marriages is stupid, cos I believe in marrying a girl because I want to live with that person for the rest of my life and not for any other reasons. Industrialization has changed the way things are done in the real world. So think progressive Kelvikkuri.

    • ஆண்டாண்டு காலமாக உழைப்பே என்னவென்று தெரியாத
     ஒரு சமுதாயம் இருக்கிறது என்றால் அது பார்பனர்கள்
     மட்டுமே.அங்கள் உழைப்பை உறிஞ்சி சுகமாக
     வாழ்ந்த சமுதாயம் நீங்கள் என்று உணர்ந்துகொண்டதால்
     இன்று நாங்கள் உங்களை வெறுக்கிறோம்.கோவில்களை
     தாழ்த்தப்பட்டவர்கள் கட்டுவதால் வந்த தோஷத்தை
     போக்க குடமுழுக்கு(கும்பாபிஷேகம்) செய்து எங்களை
     நீங்கள் கேவலப்படுத்தும்பொது நாங்கள் உங்களை
     பாப்பான் என்று கேவலப்படுத்ததான் செய்வோம்.
     திருமண சடங்கில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு
     திருமணம் செய்ய மறுத்து.மாப்பிள்ளைக்கு சிறிது
     நேரம் பூணூலை மாட்டி அவர்களை பார்பனராக
     மாற்றி திருமணம் செய்யும் உங்கள் கேவல செயல்
     தொடரும் வரை உங்களை பாப்பான் என்று தான்
     அழைப்போம்.

    • கார்த்திக். கோவில் கட்டிய பின் குடமுழுக்கு செய்து தோஷம் போக்கும் பார்ப்பனீயப பழக்கம் வளர்வதற்கு கோவில் கட்டுவதுதான் அடிப்படை என்பதை நினைவில் கொள்வோம். கோவிலே கட்டாவிட்டால், கோவிலுக்கே போகாவிட்டால் இந்த வேறுபாடு வரவே வராது இல்லையா?

     கடவுள் நம்பிக்கை இருக்கும் வரை கடவுளுக்குப் பிடித்த இனம் கடவுக்குப் பிடிக்காத இனம் என்ற இரு பிரிவுகள் இருந்தே தீரும். கடவுள் மறுப்புதான் சாதி ஒழிய முதல் அடி என்பதை உணருவோம்.

 8. பரஸ்பர வெறுப்பு தவிர்க்க முடியாதுதான.. நாம பாப்பான வெறுத்து எளுதறதில்லையா.. அதப் போலத்தான்… நீங்க ஆல் இந்தியா பார்ட்டியா இல்லை தமிழ்நாட்டுக்கு மட்டும் கம்யூனிஸ்டு பார்டியா.. குறுகிய வாதத்த நீங்களும் பேசலாமா…?

  • நன்றி தோழர் வினவு,

   நாகராஜ் – இது ‘தமிழனை வடநாட்டான் திட்டிவிட்டான்’ எனும் வெற்று உணர்ச்சியின் காரணமாக மட்டும் எழுதவில்லை. ஏன் இப்படியான
   திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்பது தான் கேள்வி.

  • நாகராஜ் விமர்சனத்துல சாதாரண மக்கள் மொழி தடைகளைத் தாண்டி ஒற்றுமையாக இருப்பதையும், நடுத்தர, மேல் தட்டு வர்க்கங்களிடையேதான் இந்த மொழிபேதம் நிலவுவதாக கூறப்பட்டிருக்கிறது. கட்டுரையின் முடிவிலேயும் உழைக்கும் மக்களின் இந்தியா உருவாகும் என்றுதான் வருகிறது. எனவே இங்கு குறுகிய வாதம் எங்கு வருகிறது?

 9. இந்திக்காரர்களுக்கு தமிழன் என்றால் உங்களுக்கு பார்ப்பனன், இந்த பதிவிலேயே கும்பகோண பார்ப்பனன் / மத்திய pradhesatthu பார்ப்பன் என்று எத்தனை முறை எழுதி இருக்கறீர்கள்.. மீண்டும் படித்து பார்த்தால் உங்களுக்கே சிரிப்பாக இல்லையா? விடுங்கப்பு நாம பார்க்காததா .. மேலும் இன்னொரு விஷயம், வட இந்தியர்களுக்கு தமிழன் என்றாலே தமிழ் பார்பனர் என்றுதான் நினைப்பு, அதனால்தான் தமிழர்கள் தயிர்சாத பார்டிகள் என்று சொல்லுவார்கள், அந்த ராமலிங்கமும் தமிழ் பார்ப்பன உருவாக்கம்தான் (தமிழகத்தில் பார்பனரல்லாதவரே இல்லை என்பது மும்பை வாலாக்களின் முடிவு), அந்த பார்பன கதாபாத்திரத்துக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது உங்கள் பிராமண வெறுப்புக்கே எதிரானது.

  • கோகுல் அன்று மட்டுமல்ல இன்றும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே கணிசமான அளவில் மத்திய அரசின் அதிகாரிகளாக டெல்லியில் இருக்கின்றனர். இவர்கள்தான் தமிழகத்தில் பிரதிநிதிகள் என்று வடக்கில் ஒரு பொதுப்புத்தியாய் பேசப்படும் விசயம். தமிழகத்தில் உள்ள பார்ப்பனரல்லாதோரை இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பது தெரிகிறது. பொதுவில் எல்லா மொழிகளிலும் அங்கு ஆதிக்கம் செய்யும் பிரிவினரையே அந்த சமூகத்தின் பண்பாட்டு பிரதிநிதிகளாக கருதுகிறார்கள். இதில் அந்த சமூகத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை.

   • in this movie ramalingam represents a non-bramin.because no bramin man would have names such as ramalingam sankaralingam.they know what lingam means.it is the innocent so called sudras who name their children after lingams.the name ramalingam has deliberately been selected to mean a non.bramin tamil.

 10. Vinavu,
  Am a tanjore born and north brought up Tamilan!( In your language Pa…) However I have never come across anything because of my roots!..
  It is the comlex of not knowing the language has propelled this article.
  In Tamil movies we do such things like making fun of a sardarji/north indian it has been done in 3 idiots!. One punch line: ONLY BECAUSE OF 40 YEARS of dravidan rule we’ve been prevented from learning hindi! But Thanai Thalaivar Kalaingarin grandchildren are studying in CBSE schools only where hindi is a subject.

  That ‘s why we are deprived of lot of job oppurtunities in Entire NORTH which consists around 10 states.

  SO nothing wrong in it still we can atleast make the next generation learn hindi and make them more employable !!!!

  • பஞ்சாப் ரவி, இந்தி கற்காத்தால்தான் நாம் நமது வாய்ப்புகளை இழந்து விட்டோம் என்பது தவறான அனுமாணம். பொதுவில் அரசு வேலைவாய்ப்புகள் அருகிவரும் சூழ்நிலையில் நாம் வேலை உரிமைக்காக போராடுவதே சரியாக இருக்கும். மற்றபடி தமிழகத்திலிருந்து வடக்கில் செல்லும் சாதாரண மக்கள் அங்கே இந்தி கற்றுக் கொள்வதும், அங்கிருந்து வரும் மக்கள் இங்கு தமிழைக் கற்பதும் இயல்பாகத்தானே இருக்கிறது? எந்த ஒரு மொழியும் மாற்று மொழி பேசுவோரிடத்தே திணிக்கப்படுவது தவறு. தமிழகத்திலியே அரசு, நிர்வாக. நீதி துறைகளில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதும். இதனால் சாதாரண மக்கள் இத்துறைகளில் அன்னியப்படுவதும் நடக்கத்தானே செய்கிறது.

   • Vinavu my point is very simple; Be A ROMAN WHEN YOU ARE IN ROME. See the plight of hindi speaking people in Mumbai .They are tormented and even physically abused,.
    KNOWING a OTHER language definitely improves the market value /employability of a person,..That is my point. If you ever speak or interact with a tamilian settled in north he will definitely share his views on learning hindi (he ‘d say that it is a MUST!) Am not propogating hindi in anyway but atleast for their upliftment in life at least from now onwards they must learn it as an option ! Acha one parting joke : If a punjabi meets a fellow punjabi he will start talking in chaste punjabi;similarly with bengalis and north indians,They talk in their respective mother tongues ! BUT ONLY WE TAMILS START TALKING TO EACH OTHER IN ENGLISH(Sometimes Broken !).when we meet a fellow tamil,..

    • If you ever speak or interact with a tamilian settled in north he will definitely share his views on learning hindi (he ‘d say that it is a MUST!)
     BUT ONLY WE TAMILS START TALKING TO EACH OTHER IN ENGLISH(Sometimes Broken !).when we meet a fellow tamil,..
      இல்லை என்னேன்றல் நான் வடநாட்டில் கடந்த 20
     வருடங்களாக இருக்கிறேன் நான் இங்கு வந்த பின்பு
      தான் கற்றுக்கொண்டேன். இங்கு இரு தமிழர்கள் 
     சந்தித்து கொண்டால் பேசுவது தமிழ் ஆக தான் இருக்கும் 
     அவ்விருவரும் brahamin ஆக இல்லாவிடில். இரு brahmin
     சந்தித்து கொண்டால் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுவார்கள். 

  • ////That ’s why we are deprived of lot of job oppurtunities in Entire NORTH which consists around 10 states.///

   பஞ்சாப் ரவி,

   You are 100% correct. Hi! Hi! Hi!. I have never read a more absurd staement than this. This is just vomitus from our so-called stupid Tamil press.

   In chennai alone, 45% of working people’s mother tongue is NOT Tamil, and all of them know Hindi. So what you said is correct, they have got jobs here (moved from other states) becuase they knwo Hindi. Joke of the century.

   OK, according to you there is no unemployment in North India! If you know Hindi, you get job. Tamilians not knowing Hindi are all unemployes. This is non-sense.

   If I get a job in North, and if I decide to go then if necessary I could learn Hindi! Which north indian in Tamil Nadu bothers to learn the local language.

   Come on grow up man…

   • Boss May I knew ur source which says that in Chennai 45 % working class is Non tamils,..There is a proverb ; Lies,Damn Lies and STATISTICS !!!

    Pl let others learn whatever they want do not spoil ANOTHER generation,..

 11. // But Thanai Thalaivar Kalaingarin grandchildren are studying in CBSE schools only where hindi is a subject.
  //

  ஆதாரம் தர முடியுமா

  அவரது எந்த பேரன் அல்லது பேத்தி, எந்த பள்ளி என்று

  • தயானிதி மாறன்= donbosco matriculation egmore
   மு.க. ஸ்டாலின்= madras christian college school chetpet
   கலாநிதி மாறன்= donbosco egmore. Loyola college graduate.

   எல்லாம் இங்கிலீஸ் மீடியமுங்க….தமிழ் மீடியத்துல படிக்க வைக்கத் துப்பு கெட்டவரா கொலைஞர் கருநா நிதி?

   • என்ன நம்ம ‘விடையளி’ அமைதியா இருக்காரு? இந்த கருத்துக்கு அவரை யாராவது விடையளிக்க சொல்லுங்கப்பு. என்னமோ கருணாநிதி அவரு புள்ளைங்க, பேர புள்ளைங்க எல்லோரையும் தமிழ் வழி பள்ளிகூடத்துல சேத்து விட்டிருக்கருன்னு சொல்லுவாரு போலருக்கு.

 12. ரொம்ப நல்ல பதிவு. நன்றி. நான் சிட்னியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பர்ர்க்கிறேன். இந்த ஹிந்தி ஆதிக்கம் எங்கே போனாலும் நம்மை விடாது போல. என்னை பார்த்ததுமே ஹிந்தியில் பேச ஆரம்பிச்சுடுவாங்க. எனக்கு ஹிந்தி தெரியாதுனு சொன்னா உடனே தேச துரோகி மாதிரி பார்ப்பாங்க. இந்தியனா இருந்துட்டு ஹிந்தி பேச தெரியாதா? அப்டினு ஒரு ஏளன பார்வை வேற…. நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கிறது.மற்றவர்களிடம் பேச ஆங்கிலம் இருக்கிறது.தேவையே இல்லாமல் வேற்று மொழியை நம்மீது திணிக்க முயலுகிறார்கள். இதில் யார் மொழிவெறியர்கள் இனவெறியர்கள் என்று ஒரு முட்டாளுக்குகூட விளங்கும். ஹிந்தி தேசிய மொழினா(?) உருதுவும் தேசிய மொழிதானே???? அதை ஏன் யாரும் வற்புருத்த மாட்டேங்கிறாங்க?????

  • Mr.Sella,

   As you mentioned Hindi is not a national language.

   Neither the Constitution of India nor Indian law specifies a National language. Article 343 of the constitution specifies that the official language of the Union shall be Hindi in Devanagari script. Article 354 specifies that the legislature of a State may by law adopt any one or more of the languages in use in the State or Hindi as the Language or Languages to be used for all or any of the official purposes of that State.[3] Section 8 of The Official Languages Act of 1963 (as amended in 1967) empowers the Union Government to make rules regarding the languages which may be used for the official purposes of the Union, for transaction of business in Parliament, and for communication between the Union Government and the states.[4] Section 3 of G.S.R. 1053, titled “Rules, 1976 (As Amended, 1987)” specifies that communications from a Central (Union) Government office to a State or a Union Territory in shall, save in exceptional cases (Region “A”) or shall ordinarily (Region “B”), be in Hindi, and if any communication is issued to any of them in English it shall be accompanied by a Hindi translation thereof.

   • இங்க எங்கயுமே நேசனல் லாங்குவேஜ்னு சொல்லப்படவில்லையே?

    ஒரு வேளை நேசனல் லாங்குவேஜை ஆங்கிலத்தில் வேற மாதிரி சொல்லுவாங்களோ?

    • dear my reply for selva,

     //ஹிந்தி தேசிய மொழினா(?) உருதுவும் தேசிய மொழிதானே???? அதை ஏன் யாரும் வற்புருத்த மாட்டேங்கிறாங்க?????//

 13. நம்ம தமிழ் படத்துல ஒண்ணுமே பண்ணலியா? வில்லன் தீவிர வாதி, அழகான பொண்ணு எப்பவுமே வடக்குல இருந்து தான் இறக்குமதி பண்றோம்! ரொம்ப கோப படாதீங்க பாசு….ஒரு படம் எடுத்து நம்ம பேர கெடுக்க வோ மாத்தவாவ் முடியாது. சொல்ல போன, சென்னை பசங்க தென் தமிழ் நாட்டுல இருந்து வந்தா மதிக்க மாட்டாங்க! இதெல்லாம் ஊர் ஊருக்கு இருக்குறது தான். என்னோட ஆபீஸ் ல தமிழ் பத்து பேர் கிட்ட ஒரு நோர்த் இந்தியன் படுற பாடு…பாவம்!

 14. வணக்கம்,

  நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை. ஆனால் நீங்கள் பாதி உண்மையை தான் கூறியிருக்கிறீர்கள்!
  நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பச்சைத் தமிழன். எனக்கும் அரை குறை ஹிந்தி தான் தெரியும்.
  நான் பணி பயிற்சி காலத்தின் போது தில்லியில் 2 மாதங்கள் வசித்தேன்.
  அங்கு வட இந்தியர்கள் என்னை பல முறை அவமானப்படுத்தியது உண்டு.
  ஆனால், நான் மதுரையில் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பயிலும் போது வட இந்தியன் ஒருவன் என் வகுப்பில் பயின்றான். தமிழர்கள் எல்லோரும் எங்களுக்குள் பழகியது போல் அவனுடன் பழகாததற்கு காரணம் அவனில்லை. அவனை சமயங்களில் விளையாட்டாக அவனுக்கு புரியாத தமிழில் கிண்டல் செய்வோம்.
  ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பா! சிறுபான்மையினர்(மொழி/இனம்/சாதி எதுவாக இருக்கட்டும்) பெரும்பான்மையினரிடம் அவமானப்பட வேண்டியிருக்கிறது. நம் இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற என்னத்தை மறந்தாலே நிம்மதிகிடைக்கும்.

  நன்றி,
  பலராமன்

  • இந்த விவாதம் வேறு பல விசயங்களைக் கூட யோசிக்க வைக்கிறது. ஒரு முறை மதுரையில் இருந்த போது, மதுரைக்காரர் சொன்னார் ” மெட்ராஸ் காரங்களுக்கு சென்னையைத் தாண்டினாலே எல்லாமும் கிராமத்தான் ஊர்நாட்டான்னு நெனப்பு….” அதைப் போல டெல்லிக்காரனும் அவனுக்கு கீழ உள்ள பிரதேசம் மட்டமா நினைக்கலாம்… இது பொது மனித சைக்காலஜி போல….

  •  //சிறுபான்மையினர்(மொழி/இனம்/சாதி எதுவாக இருக்கட்டும்) பெரும்பான்மையினரிடம் அவமானப்பட வேண்டியிருக்கிறது//தங்களின் இந்த கருத்து முற்றிலும் உண்மையே.பாராட்டுக்கள்.

 15. //இந்த கதாபாத்திரம் கோமாளித்தனமாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…//
  கருனாநிதி போன்றவர்கள் தமிழ்நாட்டின் தலமைகளாக விளங்கும் போது, இப்படி சொல்வதில் வியப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

 16. dear mr. gorki and vinavu,

  It is periyaarist …….. and caste fanatics like you guys who have brought shame to tamil and tamils.You have always talked divisive politics like dravidians and aryans.Just looking at the behaviour of punks and barbarians like typical so called dravidain tamil,normal people feel like spitting on the dirty faces of typical tamils like you guys.what else do you expect you sons of ………..

 17. அய்யா,

  3 Idiots என்று இல்லை. Padosan படத்தில் வரும் மெஹ்மூதின் கதாபாத்திரம்,  Agnipath ல் வரும் மிதுன் சக்கரவர்த்தியின் கதாபாத்திரம் என காலங்காலமாக இந்தி திரைப்படங்களில் தமிழர்களை கீழ்த்தரமாக  சித்தரிப்பதை வழமையாக் கொண்டிருக்கிறார்கள். (தமிழகத்தில் பார்ப்பானைத் தவிர வேறு யாரும் கிடையாது என்பது அவர்கள் நினைப்பு)

  நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அலுவலக பணியாக் வந்த ஒரு வட இந்தியன் உணவகத்தில் ”fast மாடி” ஆங்கிலம் கலந்த கன்னடத்தில் என்று அங்கிருந்த ஊழியரிடம் உததரவிட்டுக் கொண்டிருந்தான்.  சென்னையில் வந்து கன்னடத்தை தமிழ் என்று பேசும் அளவிற்கு அவர்கள் அதிபுத்திசாலிகள்.

  இதையெல்லாம் ”திங்களை நாய் குரைத்தற்று” என நினைத்து ஒதுக்கிவிட வேண்டியதுதான்.

 18. என்னை இந்த படம் தாரே சமீன் போல் அவ்வளவு பாதிக்கவில்லை. ஆனால் இங்கு அமெரிக்காவில் வடக்கதியான்கள் ஆகா ஓகோ என்று பாராட்டித் தள்ளினார்கள். தியேட்டரில் எழுந்து நின்று படம் முடிந்ததும் கைத் தட்டினார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். சாதாரண காமெடிப் படமாகவே எனக்குப் பட்டது. நீங்கள் பார்த்த கோணம் வித்தியாசமாக இருந்தது. உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். நன்றி.

 19. Gokul said
  //இந்திக்காரர்களுக்கு தமிழன் என்றால் உங்களுக்கு பார்ப்பனன், இந்த பதிவிலேயே கும்பகோண பார்ப்பனன் / மத்திய pradhesatthu பார்ப்பன் என்று எத்தனை முறை எழுதி இருக்கறீர்கள்.. மீண்டும் படித்து பார்த்தால் உங்களுக்கே சிரிப்பாக இல்லையா? விடுங்கப்பு நாம பார்க்காததா .. மேலும் இன்னொரு விஷயம், வட இந்தியர்களுக்கு தமிழன் என்றாலே தமிழ் பார்பனர் என்றுதான் நினைப்பு, அதனால்தான் தமிழர்கள் தயிர்சாத பார்டிகள் என்று சொல்லுவார்கள், அந்த ராமலிங்கமும் தமிழ் பார்ப்பன உருவாக்கம்தான் (தமிழகத்தில் பார்பனரல்லாதவரே இல்லை என்பது மும்பை வாலாக்களின் முடிவு), அந்த பார்பன கதாபாத்திரத்துக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது உங்கள் பிராமண வெறுப்புக்கே எதிரானது.//
  இந்த பின்னூட்டத்துக்கு அப்புறமும் என்னய்யா வெட்டிப் பேச்சு இங்கே. படமே புரியாம ஒரு பதிவு. பதிவே புரியாம பின்னூட்டங்கள். பின்னூட்டங்களே புரியாம விளக்கங்கள். கொடுமை

 20. அரூமை மிகவும் சிரமப்பட்டு எழுதிஇருக்கிறீர்கள், அந்த ராமலிங்க தமிழன் பரையனா ? அல்லது பற்பனா ?

 21. அருமையான பதிவு. நீங்கள் சொல்வது சரிதான். இந்தி தெரியாவிட்டால் தேசத் துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறார்கள். நம்ம ஊர் நண்பன் ஒருவர் சொன்னது : “வழுக்கையன் நம்மள ஹிந்தி கத்துக்க முடியாம செய்து நம்ம வாழ்கையே வீணடிச்சுட்டான்” …..

 22. Very sorry to see this article, I thought Vinavu.com had some reputation as being a good tamil only media but some recent post indicate that its nothing short of hatemongers. Why do people have to feel so insecure about their own identity ?
  If the guy could not understand hindi he could have atleast read the original book by chetan and then tried to understand the film. The film touched a good chord of educational reforms in India which is what we miss.
  Pity this guy that he is using subjects like this to vent his incapabilities and frustations.

 23. உங்களிடம் படம் பற்றி கொஞ்சம் ஆழமான விமர்சனத்தை எதிர்பார்த்தேன். படிக்கும் இளைஞர்களின் தற்கொலை, மாணவர்கள் ஆசிரியர் இடையேயான உறவு என கதையின் போக்கில் சில சமுதாய பிரச்சனைகளையும் தொட்டுச்செல்கிறது. அவற்றை தாங்கள் சொல்லாமல் விட்டுள்ளீர்கள்.

 24. எந்த ஒரு பிரச்சினையிலும் தனக்கு ஒத்துப் போகும் ஒரே புள்ளியில் நின்றுக் கொண்டு பேசுவதே வினவின் வழக்கம். அந்த தாக்கம் உங்களிடமும் நிறையவே காண முடிகிறது. பிரதி சொல்லாமல் சொல்லும் கருத்துகளும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் அது மட்டுமே அந்த படைப்பாளியில் நோக்கம் என்பது போல் நிறுவ முயலுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ராகுல் என்பவரைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவரு தங்களை படம் பார்க்க அழைத்ததி கூட இதற்காகத்தான் என்னும் தங்களின் அனுமானம். ப்ச்.. 

  சில வருடம் முன்பு புத்தாண்டன்று இரவு ஒரு நட்சத்திர விடுதிக்கு சென்றேன். அந்த வாயிலில் இருந்த சில இளைஞர்கள் இந்த நேரத்தில் இங்கே இருக்கிறீர்களே. வீட்ல கேட்க மாட்டாங்களா என்றார். நான் பதிலுக்கு “நீயும்தான் இங்க நிக்குற. உங்க வீட்ல தண்ணி தெளிச்சு விட்டுடாங்களா” என்று. வினவு தளத்துக்கு பலர் வருகிறார்கள். உங்களைப் போன்ற சிலரை அவர்கள் வளைத்துவிடுகிறார்கள். எதிலும் குறை மட்டுமே சொல்லும் பழக்கம். வாழ்வை நீங்கள் ரசிப்பவர் என்பதை தங்கள் தளத்தில் சில பதிவுகள் பார்த்து தெரிந்துக் கொண்டேன். மாறிவிட வேண்டாம் கார்க்கி.

  நான் இங்கு வந்ததன் காரணம், என் பெயரும் கார்க்கி. விமர்சனம் எழுதியது நீயா என்று சிலர் கேட்டு மின்னஞ்சல் செய்தார்கள் அதனால்தான்.

  ஆனால் இது விமர்சனமே இல்லை. அது வேறு விஷயம்

  நன்றி
  கார்க்கி.

  • வாழ்வை ரசிப்பது என்றால் என்ன கார்கி .நாம் வாழ்வில் அழகியல் மட்டுமே இருப்பதால் தான் நம் சமூகம் சிதைந்து உள்ளது……அழகியல் கண்ணோட்டம் விட்டு வெளியே வாருங்கள் …..வெறும் நாம் ரசித்து மட்டும் பழகி விட்டதாலே நாம் சிதைந்து உள்ளோம்….நீங்கள் போதையில் இருந்து மீண்டு வாருங்கள்

  • அது என்ன ‘தனக்கு ஒத்துப்போகும் புள்ளி’ ‘செல்வாவின் வாந்தி’ உங்களால் எடுக்கப்படவில்லையா. நீங்கள் கட்டினால் பூ மற்றவர் எடுத்தால் வாந்தி – நல்லது

   • தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வது வேறு. தனக்கு ஒத்துவரும் ஒரே விஷயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்வது வேறு. ஆ.ஒ எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கலை,ஒளிப்பதிவு, நடிப்பு என என்னை கவர்ந்த அம்சங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தேன். இயக்குனரை மட்டுமே சாடியிருந்தேன். 

    உங்களைப் போல் எனக்கு தோதான பெயர் ஒன்றை சொல்லுஙக்ளேன் சகா

    • கார்க்கிபவா!..  மலம் இருக்கின்றது, வினவு அதை மலமென்றும் – பீயென்றும் அது ஏன் அகற்றப்படவேண்டும் என்றும் அக்குவேறு ஆணிவேறாக பியித்து எழுதுகின்றது உங்கள் வார்தைகளின் சொன்னால் மலத்தை பற்றி குறை சொல்கிறது….

      ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்… அது மலம்தான் இருந்தாலும் அதை நோண்டிப்பார்த்தேன் அதில் ரெண்டு நல்ல அரிசி கிடைத்தது, அதை வேகவைத்து தின்னலாமே.. அதைப்பற்றி ஏன் வினவு எழுதவில்லை எனவே வினவு பதிவு ஒருதலைப்பட்சமானது, மலம் அகற்றப்படவேண்டும் என்ற தனது கருத்துக்கு ஒத்துவரும் விசயங்களை மட்டும் எழுகின்றது என்கிறீர்கள்.. 

     மலத்தில் கிடக்கும் அரிசியை பொங்கித்தின்பது உங்கள் உரிமை அதை யாரும் தடுக்கமுடியாது..   அதே நேரத்தில் அந்த மலத்தை கழுவியெறிந்து அது இருந்த இடத்தை ஆசிட் ஊற்றி கழுவ்வேண்டும் என்று வினவு பிரச்சாரம் செய்வது  உங்கள் வயிற்றுப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்குமெனில் அதற்கு என்ன செய்ய முடியும்? 

     பின்குறிப்பு – உங்களுக்கு பொறுத்தமான பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் கார்க்கி என்ற ஒரு பேரரிவாளனின் மற்றும் அற்புதமான மனிதனின் பெயர் உங்களுக்கு பொறுத்தமாயில்லை என்று நீங்கள் உணர்ந்ததற்கு உங்களை பாராட்டியே ஆகவேண்டும்

    • நன்றி சகா. வாதத்திற்கு சொல்வதென்றால் மலம் தான் சிறந்த உரம் நெல் வளர :)))

     நான் வினவே மலம் என்கிறேன். ஒத்துக் கொள்வீர்களா?

    • //கார்க்கி என்ற ஒரு பேரரிவாளனின் மற்றும் அற்புதமான மனிதனின் பெயர் உங்களுக்கு பொறுத்தமாயில்லை//

     இதை நான் வழிமொழிகிறேன்

    • //உங்களைப் போல் எனக்கு தோதான பெயர் ஒன்றை சொல்லுஙக்ளேன் சகா//

     பொறுக்கி, வருக்கி
     ஏமி பாவா அர்த்தமாயிந்தா?

 25. நான் என் தளத்திலே படம் பற்றி பாராட்டி எழுதி இருந்தேன் …..அதற்குள் இவ்வளவு அரசியல் உள்ளதா என்று புரிகிறது …வினவு ஒரே தளத்தில் இருந்து பேசுபவர்கள் அல்ல நன்றாய் இருக்க்கிறது விமர்சனம் என்றால் கேமரா கோணம் மட்டும் தானா நீங்க சொல்ற விமர்சனம் படம் வேகமாய் போகிறது மெதுவாய் போகிறது அந்த அளவே ,,,,,அரசியல் பார்வை தேவை

 26. வொர்கிங் கிளாஸ் மராத்தியர்கள் தான் சிவசீனவின் அடித்தளம். அவர்கள்தான் வெறுப்பு அரசியலுக்கு பலியானவர்கள்.படம் பார்த்தாலும் புரியாவிட்டாலும் எதயாவது உளறவீண்டும என்பதற்காக எழுதினால் இப்படித்தான் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் வெறுப்புகளை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டாம். மும்பையில், தில்லியில் இன்று மதிப்பு ஒருவனின் படிப்பு, வேலை, வருமானத்தில் இருக்கிறது. பஞ்சாபியை மணன்-தா தமிழ்ப் பெண் வலைப்பதிவு எழுதுகிறார். படித்துப் பாருங்கள். தில்லியிளிருன்-தும், மும்பையிளிருன்-தும் வலைப்பதிவுகள் எழுதுகிறாகள். அதையும் படிக்க வீண்டும் வினவு கும்பல்.

 27. உனக்கு பாப்பான் மேல வெறுப்பு . அவனுக்கு தமிழன் மேல வெறுப்பு. வெளக்கமாறு சுத்தமா இருந்தாதான் கூட்டுற எடமும் சுத்தமா இருக்கும்.

 28. //வந்த நாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை.
  குறிப்பாக இங்கேயுள்ள டீக்கடை மலையாளிகளையும், பஞ்சம் பிழைக்கவந்த பிகாரிகளையும் ‘மார்வாடி-சேட்டு’களையும் //

  முதலில் நீங்கள் திருந்துங்கள்..மற்றவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.. GIVE RESPECT AND GET RESPECT.
  எங்கு சென்றாலும் மரியாதை தானாகக் கிடைக்கும்.

  • சுரபி, இனவாத வெறுப்புக்கு எதிராக எழுதப்பட்ட பின்னூட்டம் அது, எழுதியை முழுவாத வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அவசரமாக பதில் எழுதாவிட்டால் என்னவாகப்போகிறது?

  • ஏன்யா சுரபி எப்போதும் முசுலீமு பேருலதானே வந்து ஜல்லியடிப்ப இப்ப என்ன சுரபின்னு வந்திருக்க, ஸ்பெலிங் மிஸ்டேக்?

 29. பார்டரில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினை இன்னும் கொடுமையானது. அவர்கள் இரண்டு தரப்புகளாலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். நான் பிறந்த ஊரை தெரிந்து கொண்ட நண்பர் ஒருவர் என்னிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அவருக்கு ஒருவர் உரைத்ததை கூறினார்.நானும் படித்த இடத்திலும் பணிசெயகிற இடத்திலும் ஒரு outsider ஆகவே உணர்ந்து வந்துள்ளேன். மனிதர்கள் எப்போதும் ஏதாவது ஒரு குழுவோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். மதம், சாதி, இனம் இந்த அடையாளப்படுத்தல் முயற்சிக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சக்தி வாய்ந்த யூனிட்களாக இவை உருவெடுத்து சமூகத்தை மிரட்ட , மக்களுடைய இந்த group sense தான் முக்கிய காரணமாக உள்ளது.

 30. மார்வாடியை கிண்டல் பண்ணா அது காமெடி. நம்மாளை பண்ணா அது இழிவு படுத்துதல். அட்டகாசம். /////

  அருமையாக கூறினீர்கள்..நாம் பெரும்பாலும் வட நாட்டு காரர்களை பொதுவாக சேட்டு என்று அழைப்பது ஒரு நகைப்பானதே.
  ..எனக்கும் பல வடநாட்டு நண்பர்கள் இருக்கிறார்கள்(எனக்கு ஹிந்தி தெரியாது.)ஆனால் அவர்கள் என்னை வேறு விதமாக (நீங்கள் கூறியது போல்) அணுகியதில்லை..ஆகவே தனிப்பட்ட அனுபவத்தை பொது கருத்தாக கூறுவது சரியில்லை.
  நாமதான் இப்படி வடநாட்டுக்காரன் தென்னிந்தியன் என்று வேறு படுத்தி கூவி கொண்டிருக்கிறோம்
  இந்த வேறுபாட்டை ஆரம்பித்த புற்று நோயில் அல்பாயிசில் போய் விட்ட அந்த அண்ணாவும் தண்டவாளத்தில் படுத்த (தன பேரன்களுக்கு வடநாட்டு பெயர் வைத்து அவர்களை ஹிந்தியும் படிக்க வைத்து மந்திரி ஆக்கிய தமிழினத்தின் ஒரே தலைவர்…தமிழை கண்டுபிடித்தவர்..(!!!)தமிழுக்காக தன துடை சதையை அறுத்து கொடுத்தவர் என பல அப்பாவி தமிழர்களை நினைத்து என்ன சொல்வது??இந்த ஒப்பற்ற தலிவரை நம்பி ஏமாந்து உயிர் விட்ட ஒரு லட்சம் தமிழர்களுக்கு என்ன பதில்?
  இந்தியன் எக்ஸ்ப்ரஸில் ஒரு கட்டுரையை எழுதிய ஓர் பெண்மணி தான் உலகெங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்ததாகவும் ஆனால் சென்னையில் வசிப்பதற்கு மட்டும் தமிழ் (அந்த நகர மொழி )தெரிய வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார்..தமிழ் நாடு என்று மொழியின் பெயரை வைத்துகொண்டு தமிழ் தெரியாத இங்கு பிறந்த மேதாவிகள் இருப்பது வெட்க கேடு..
  தமிழ் கண் போன்றது ஆங்கிலம் கண்ணாடி போன்றது என்று கூவிய அண்ணாவிற்கு இன்று பலரும் கண்ணை பிடுங்கி எரிந்து விட்டு வெறும் கண்ணாடியோடு அலைவது வெட்க கேடு..

   • சமஸ்கிருதமும் கருவி தானே, அதைப்பயன் படுத்தினால் மட்டும் ஏன் உங்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்தக் கருவி பழுதடைந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு திட்டுகிறீர்கள் ?

 31. தமிழர்கள் இந்த தீவிரவாத சிந்தனையை முதலில் விட வேண்டும். மனிதர்களில் பல நிறங்கள். நாம் ஒரு வெளிநாடினரையோ அல்லது அண்டை மாநிலதாரையோ சந்திக்கும் போது மிகுந்த மதிப்பு அளிப்பது நமுடைய பழக்கம் ஆகவே போகி விட்டது. அதையே மற்றவர்களிடமும் எதிர் பார்ப்பது சரி வாராது என்றே நான் கருதுகிரேன். வெள்ளையர்கள் அமெரிக்கர்களை சாடுவதும் .. அமெரிக்கர்கள் வெள்ளையர்களை சாடுவதும் வெறுப்புணர்ச்சி இல்லை. அது ஒரு நட்பான கேலி.. அதை போல் தான் இதனையும் நாம் எடுத்து கொள்ள வேண்டும். எதுக்கெடுத்தாலும் கோவ படுகிறவர்கள் தமிழர்கள் என்ற சொல்லை எந்த கட்டுரை ஊர்ஜித படுத்துவது போலவே நான் உணர்கிறேன். அமைதி வேண்டும் தொலை நோக்கு பார்வை வேண்டும். வாழ்க தமிழ்…

 32. ஒரு இரவு பதின் ஒரு மணி அளவில் நாலு பேரு உன்னோட வீட்ல நுழைஞ்சு பெண்களை பலாத்காரம் பண்ணிட்டு ஓடும் போது, நீ பொங்கி எழுந்து , தொரத்திகிட்டு போயி ஒருத்தன் சட்டையில கை வைக்கும் போது, அவன் சட்டை கிழுன்சு போயி, அவன் சட்டைய விட்டுட்டு ஓடும்போது, கிழிஞ்ச சட்டியோடு ஒர் பூணுலும் வந்துதுனா , அப்ப கத்தி சொல்லெல்லாம் , பார்பன புடிங்கடானு . கேட்க ஆளில்லை என்பதற்காக பிராமணனை என்ன வேண்ணா சொல்லலாம் என்றால், வடக்க உள்ளவன் உன்ன செருப்பால் அடிக்கிறதும் தப்பு இல்லை.

 33. I think many people never crossed Tamilnadu border. so they praise this movie. This movie is another version of Ramayanam try to project people from south are monkeys and draculas. In this chatur Ramalingam could be Telugu also since i googled this name more than Tamil lot of Telugu people have “chatur”. Lot of brilliant people here will even accept praise even if they are called monkeys. This is not the first time for Amir. even in Fana he mocked Tamil. Here you need to understand one thing north people will be more jovial and fun loving and they want to be up in the air. That is why you will not see more serious movies in Hindi. Even serious message in this movie except unacceptable Chatur’s role, they conveyed their message thru comedy. Its is there typical attitude. similar subject like this in the film TAMIL M.A. wanted to say growing disparities between students field but told in a very violent way. That is difference between them and us. We need to learn this from north Indians that we should not get angry for everything.rather giving them back in soft and strong way

 34. உங்களின் பார்பன வெறுப்பு புரிகிறது. குறிப்பாக அதிகார வர்க்கத்தில் பெருமளவு இன்னும் பழம்பெருச்சாளிகள் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், நான் பணிபுரியும் கணினி அலுவலகத்தில் இருக்கும் பெரும்பாலான பார்பனர்கள் எந்த வித்யாசமும் இல்லாமல் தான் பழகுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘பிராமணன்’/’உயர்ந்தவன்’ என்ற எந்த ஒரு அற்பமான சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. மற்ற துறையில் எப்படியோ எனக்கு தெரியாது, ஆனால் கணினி துறையில் இளைய தலைமுறையினர் பெரும்பாலானோர் ஜாதி பேதம் இல்லாமல் பழகுகிறார்கள். யாரும் யாருடைய பழக்கத்தையும் மற்றவர்கள் மீது திணிப்பதில்லை. நான் வெளிநாடு சென்றிருந்த போது என்னுடன் ஆறு மாதம் அறையில் தங்கி இருந்தவன் ஒரு பிராமணன், ஒரு தலித். ஆனால் நீங்கள் சொல்வது போல் நாங்கள் அசைவம் சாப்பிடும் போது அவன் எங்களை ஒரு மாதிரி எல்லாம் பார்க்கவில்லை. இன்னும் சொல்ல போனால், நான் சிக்கன்/மீன் சாப்பிட்டு கழுவி வைத்த தட்டை அவன் உடனே உபயோகபடுத்தியதையும் நான் பார்த்திருக்கிறான். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், பர்பனர்களிலும் பேதம் பார்க்காதவர்கள் (குறிப்பாக இளைய தமிழ் சமுதாயத்தினர்) இருக்கிறார்கள் என்பதும் நிதரசனமான் உண்மை.

 35. வட இந்தியர்கள் தமிழர்களை மதிப்பதில்லை என கூறுகிறீர்கள் .ஆனால் முதலில் தமிழன் சக தமிழனை மதித்து நடக்கிறானா என்றால் இல்லை என்பதுதான் பதில்.வேட்டி சட்டையுடன் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அனுமதி இல்லை(தமிழ் நாட்டில்தான்)தமிழில் பேசினால் கேவலமாக பார்பதும் கிண்டல் செய்வதும் பிறப்பால் தமிழ்நாட்டில் பிறந்து தொலைத்து விட்ட(ஆங்கிலம் மட்டுமேதெரிந்த) சில கழிசடைகள்தான்.
  மேலும் ஹிந்தி சினிமாவை விடுங்கள் தமிழ் சினிமாவில் என்ன மதிப்பு கொடுக்கிறார்கள்?நல்ல தமிழ் பெயர் வைத்த ஒரு பெண்ணை முகத்தில் கறியைபூசிவைத்து அவர் கதாநாயகனின் முறைப்பெண் போலவும் அவனை மணக்க துடிப்பதாகவும் ஆனால் கதாநாயகனின் உருப்படாத கும்பல் ஒன்று அந்த பெண்ணை நிறத்தை வைத்தும் அந்த தமிழ் பெயரையும் சொல்லி கேலி செய்யும் கேடு கேட்ட நிலை இந்த தமிழ் சினிமாவிலும் உண்டு.
  மேலும் கேரளாவில் இருந்து இங்கு பிழைக்க ஓடி வந்த கௌதம் மேனன் என்ற அதி புத்திசாலி(டாட் ட்யூட் போன்ற புரட்சிகர தமிழ் வார்த்தைகளை சினிமாவில் அறிமுகம் செய்து தமிழில் வள்ளுவனுக்கே சவால் விட்டவர்!!!)தான் எடுக்கும் அனைத்து படங்களிலும் பிச்சைகாரன் உட்பட அனைவரும் ஆங்கிலத்தில் தான் பேச வைப்பார்.அந்த கொடுமையையும் தாண்டி தன பட வில்லன்களுக்கு நல்ல தமிழ் பெயர் வைத்து(பாண்டியன் ,இளமாறன் )அவர்களை கொள்வதில் அலாதி பிரியம்.

 36. ”நான் வினவே மலம் என்கிறேன்.”
  இருக்கலாம். லகர கணவான்களுக்கு குடிசைகள் குப்பைக்கூளங்களாக தெரிவதுபோல, அமெரிக்காவிற்கு இந்தியர்கள் பரிசோதனை எலிகளாக தெரிவதுபோல, மேட்டுக்குடிகளுக்கு ஊர்வலம் செல்லும் தொழிலாளர்கள் பொறுக்கிகளாக தெரிவதுபோல,ஆளும் வர்க்கத்திற்கு போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளாக தெரிவதுபோல, அனில் அகர்வாலுக்கு ஒரிசா பழங்குடியினர் பலிகொடுக்கப்படவேண்டிய ஆடுகளாக தெரிவதுபோல், உங்களுக்கும் வினவு மலமாக தெரியலாம். தெரிவதிலொன்றும் வியப்பில்லை. பார்ப்பவனின் கண்களிலும் மூளையிலும் கோளாறிருந்தால் எதுவும் எப்படியும் தெரியலாம்.

  • ஒரு சில பிராமணர்கள் ஆதிக்கம் செய்வதை வைத்து ஒட்டு மொத்த பிராமண சமுதாயத்தின் மீதும்  வினவு சாக்கடை அள்ளி தெளித்தது போல். 

   அப்படி தானே. 

 37. //நான் வினவே மலம் என்கிறேன். ஒத்துக் கொள்வீர்களா?// I dont agree.vinavu is not Faeces.He is actually the excreting rectum of the chinese agency called ma ka i ka.

 38. வினவின் உன்னைப் போல் ஒருவன் விமர்சனம் போன்றவை தேவை,. ஆனால், இதெல்லாம் கொஞ்சம் overஆ தெரியுது.

  நானும் இந்தப் படத்தை மூன்று முறை பார்த்தேன். சில வேளை, சில விசயங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு நகர வேண்டியது தான். வடக்கு – தெக்கு ஒத்துப் போகாதது தெரிந்தது தானே? நாமும் ஆந்திரர்கள், மலையாளிகள், வடக்குக்காரர்களை நிறைய கேவலமாகவும் நகைச்சுவையாகவும் காட்டி இருக்கிறோம்.

  • ரவி, இப்போது வினவில் பலரது எழுத்தை வெளியிடுகிறோம். எழுத்தாளர் பெட்டியை பார்க்கவும். அதே சமயம் எழுதப்படும் விசயங்களுக்கு வினவு பொறுப்பு ஏற்கிறது. இந்தப்பட விமர்சனம் தோழர் கார்க்கியால் அவரது சொந்த அனுபவத்தை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பொதுவில் இந்தி மாநிலங்களின் நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் தென்னாட்டு வெறுப்பை கட்டுரையாளர் சுட்டிக் காட்டுகிறார். கூடவே சாதரண மக்களிடம் அந்தபேதம் இல்லை என்பதையும் எழுதியிருக்கிறார். தமிழ்ப்படங்களில் மற்ற மொழி மக்களை இழிவுபடுத்தும் நகைச்சுவையும் கண்டிக்கப்படவேண்டிவையே.

   • வினவு, பலரும் எழுதுவது அறிந்ததே. வினவில் வருவதற்கு நீங்களும் பொறுப்பு என்ற உரிமையிலேயே கேட்டேன். வினவு தொடக்க காலத்தில் இருந்த அளவு கட்டுரைகளின் தரம் இல்லை என்ற வருத்தம். நன்றி.

    • ரவி, இப்படி சொன்னா ஆச்சா? எந்த கட்டுரைங்க தரமா இருந்துச்சு? ஏன்? எந்த கட்டுரைங்க தரமா இல்லை? ஏன் இப்படி விலாவாரியா எழுதுங்க அப்பத்தானே என்னைய மாதிரி சாதாரண வாசனும் கூட விவரமாயிக்க வசதியாஇருக்கும்.

 39. நன்றி வினவு, இந்த நடுத்தர வர்க்கம் இப்படித்தான் நினைக்க முடியும். அதுக்காக உண்மைய சொல்லாம இருக்க முடியாது.எதோ பார்பனர்கள் தங்களோட ஆதிக்கத்தை (சம்பிரதயங்கள)
  விட்டு விலகி நம்ம ஆள் மாதிரி தெருவில் தட்டு வண்டி இழுத்து பிழைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னதான் இருக்கிறாங்க அப்படின்னு சொல்லுறாங்க .புரியாம – படிச்சு மனப்பாடம் செய்தவர்கள் போல.

 40. தமிழ்ப்படங்களில் மற்ற மொழி மக்களை இழிவுபடுத்தும் நகைச்சுவையும் கண்டிக்கப்படவேண்டிவையே./////

  அட நீங்க வேற தமிழ் படங்களில் தமிழ் ஆசிரியரை கிண்டல் செய்யும் கேவலப்படுத்தும் படங்கள் எத்தனை எத்தனை?முதலில் நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வதை நிறுத்துவோம் பிறகு மற்றவர்கள் பற்றி பேசலாம்..(எனது முந்தைய பதிவிழும் இதையேதான் சொல்லியிருக்கிறேன்

 41. இந்த வடக்கு தெற்கு மாநிலம் கடந்து மட்டுமல்ல மாவட்டம் கடந்தும் இருக்கிறது. என் பெற்றோருக்கு தென்கோடியில் உள்ள ஒரு சிறு கிராமம் பூர்வீகம் 45 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறிய அவர் 25 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் புறநகர் ஒன்றில் வீட்டுமனை வாங்கி வீடு கட்டும்போது ஏற்பட்ட இன்னலில் ஒன்று, அக்கிராமத்தின் பூர்வகுடி மக்களின் பேச்சு என்னவென்றால், எங்கிருந்தோ வந்ததெல்லாம் இங்க மாடிவீடு கட்டுது என்பது. மற்றொரு உண்மை அதே காலகட்டத்தில் நாங்கள் குடும்பமாக சொந்த ஊருக்கு சென்றபோது நாங்கள் மெட்ராஸ்காரர்கள் என அழைக்கபட்டோம் எங்கள் உறவுகளால். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மக்களின் மனோபாவம் மேலே சொன்னதுபோல் மாநிலம் விட்டு மட்டுமல்ல சொந்த கிராமத்தை விட்டு சில காலம் வேறிடம் சென்றுவிட்டாலே அந்நியமாக்கப்படுகிறான்.

 42. Author of this blog is an insecure idiot. Must be from a small town in TN and thinks that everybody is out to get poor tamilians and put them down. I use to be one of those Tamilians and living abroad and in many places gave me the confidence to face unpleasant situations. The guys needs to grow up.

 43. இந்தி பேசாத இந்திய ஒன்றிய மக்கள் தொடந்து புறக்கணிக்கப்படுவது இன்று நேற்று நடப்பதல்ல .அண்மையில் ஈழதமிழர்கள் இந்திய அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டதை நம் வேடிக்கை பார்த்தோம் .இந்த தலைகுனிவு இனி வேண்டாம் .சாதியை ஒழித்து தமிழர்களை ஒன்று சேர்த்து நம் nadu amaippom .

 44. இந்த படத்தின் கருது என்னவென்றால் பிடித்தமான துறையில் சேர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் ஆகும். ராமலிங்கம் என்ற பாத்திரம் காமெடியாக எடுத்துக்கொண்டு நல்ல கருத்தை பாராட்ட வேண்டும்.

 45. இந்த படத்த தமிழில் தயாரிக்க வுரிமை வாங்கி இருக்காங்க  அது வந்த பிறகு பார்போம் யாராவது வடநாட்டான் வந்து பதில் குசு விடுற்னணு.அப்படி ஏதும் செஞ்சா மாத்தி மாத்தி குசு விட்டு இந்தியாவையே நாராடிசுருவோம்.ஏங்க அத சினிமாவா பாருங்க.கமலஹாசன் நாயகன்ல வந்து சேட்டு கம்மனாட்டின்னு திட்டுணப்ப நல்லா இருந்திச்சுல்ல .

 46. இது போன்று சொரணைக் கெட்டுப்போனதால் தான் உலகின் பழமையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தும் அதனைத் தொடர்பு மொழியாக கொள்ளாமல் ஆங்கிலத்தையும் இந்தியையும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். —புதியவன்–

 47. //Gokul

  இந்திக்காரர்களுக்கு தமிழன் என்றால் உங்களுக்கு பார்ப்பனன், இந்த பதிவிலேயே கும்பகோண பார்ப்பனன் / மத்திய pradhesatthu பார்ப்பன் என்று எத்தனை முறை எழுதி இருக்கறீர்கள்.. மீண்டும் படித்து பார்த்தால் உங்களுக்கே சிரிப்பாக இல்லையா? விடுங்கப்பு நாம பார்க்காததா .. மேலும் இன்னொரு விஷயம், வட இந்தியர்களுக்கு தமிழன் என்றாலே தமிழ் பார்பனர் என்றுதான் நினைப்பு, அதனால்தான் தமிழர்கள் தயிர்சாத பார்டிகள் என்று சொல்லுவார்கள், அந்த ராமலிங்கமும் தமிழ் பார்ப்பன உருவாக்கம்தான் (தமிழகத்தில் பார்பனரல்லாதவரே இல்லை என்பது மும்பை வாலாக்களின் முடிவு), அந்த பார்பன கதாபாத்திரத்துக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது உங்கள் பிராமண வெறுப்புக்கே எதிரானது.//

  இவருடைய கருத்தே சரியானது.

 48. Lot of flaws in analysis,probably because vinvavu doesn’t understand the context of the film.

  The guy named chatur ramalingam is named like a tamil brahmin studious geek,conformist student who ll please the superiors to score grades and get ahead.His accent is very bengali and so is his face,he comes across as a pseudo intellectual.

  Secondly,yeah it is true that people of north india especially punjabis are very arrogant but we tamils are no less.they are the equivalent of tamils up north.

  it is just a normal type problem,nobody ll accept u just like that.u have to make an effort to fit in with the crowd,it works same way when northies come and live in Madras.

 49. Learning Hindi is a must.It opens up so much opportunities for Tamils.Most people,especially the blue collar workers are scared of moving out of TN because they cant communicate and as a result have to stay back in Tn,which makes them perfect cannon fodder for the Dravidian Ideologists who manipulate and exploit them as Thondan.

  Most Tamizh people serving in the army/Central government or living in North India ll tell you how hindi would have helped them do so much better in life.

 50. மூன்று பார்ப்பனர் மத்தியில் தங்கி, அவர்கள் காசில் திரைப்படம் பார்த்து, அவர்களிடமே அர்த்தம் கேட்டு புரிந்துகொண்டு அவர்களையே தாக்கி எழுதி இருக்கிறீர்கள்… நல்லது.
  மூவரிடம் முன் கூட்டியே சொன்னீரா உம்மை விமர்சிக்க போகிறேன் என்று, அல்லது பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைத்தீரா ?
  உணவுக்கும் சேர்த்து காசு வசூலிக்கும் பேயிங் கெஸ்ட் அக்கொமோடசனில் சைவ உணவு மட்டும் வழங்கும் விடுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர் ?
  உங்களுக்கான உணவு உங்கள் காசில் தயாரயிருக்கும்போது, நீங்கள் ஏன் வெளி உணவை வாங்கி வந்தீர்? உங்களுக்காக தயாரான உணவு வீணோ ?
  பீப் பிரியாணி சுட சுட உண்ணுவதே சுவையாகும் பார்சலை விட, பிறகேன் கையில் வாங்கி சைவ விடுதிக்குள் எடுத்து வந்தீர்? விடுதி விதிகளை மீறவா? அல்லது விடுதிக்கு தில்லி மாகான அரசு கொடுத்திருந்த லைசென்சுக்கு வெட்டு வைக்கவா? அல்லது மூன்று பார்ப்பனர்களுக்கும் கோபம் வருமா என சோதிக்கவா ?
  நீவிர் பீப் பிரியாணியை சாப்பிட்டதை கண்டும், நும்மை அவர்கள் சகித்து தானே அருகில் அமர்ந்திருந்தனர்… அது சகிப்புத்தன்மை அன்றோ.. அது எதுவாயினும் உமது உயிர் காக்கும் உணவு என்ற அடிப்படை புரிதல் தானே அது… பீப் பிரியானியாயினும் அன்ன-லட்சுமியே என்றுதானே பொறுமை காத்தனர்..
  தெரிந்து கொள்,
  மூன்று பார்ப்பனர் மத்தியில் தங்கி நீர் இழந்தது எதுவுமல்ல, பெற்றது தான் உண்டு…
  இதே மூன்று கிறித்தவர் மத்தியில் தங்கி இருப்பின், நீர் கிறிதவராய் மாற்றப்பட்டிருப்பீர்…
  மூன்று இஸ்லாமியராயின் “excuse me we do prayer 5 times a day and need privacy, it will affect both of our privacy, can you please ” – என்று சொல்லி உம்மை அனுமதித்திருக்க மாட்டார்கள்
  மூன்று சீகியனாயிருப்பின் – மூன்று நாட்களுக்குள் நீர் தாக்கப்படிருப்பீர் …
  மூன்று வெள்ளையனோடு இருந்திருப்பின் – விசா பெற்று விதேசி ஆகியிருப்பீர்
  மூன்று இலங்கையனோடு இருந்திருப்பின் – போராளி ஆகியிருப்பீர்..

  • என்னா கோவம் பாரு.வடக்கத்தி பார்ப்பான சொன்னவுடனே தெக்கத்தி பார்ப்பானுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது.அப்டி என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு இவ்வளவு கோவம்னு பாத்துரலாம்.

   \\மூன்று பார்ப்பனர் மத்தியில் தங்கி, அவர்கள் காசில் திரைப்படம் பார்த்து, அவர்களிடமே அர்த்தம் கேட்டு புரிந்துகொண்டு அவர்களையே தாக்கி எழுதி இருக்கிறீர்கள்… நல்லது.//

   ஏதோ அந்த மூன்று பார்ப்பனர்கள் தயவில் அந்த இடத்தில் ஓசியில் ஒட்டிக் கொண்டிருந்துவிட்டு பின்னர் நன்றி இல்லாமல் அவர்களை குறை கூறி எழுதி இருப்பது போல் உள்ளது இந்த கூற்று. அய்யா அறிவாளியே,அது ஒரு பேயிங் கெஸ்ட் விடுதின்னு தெளிவா சொல்லிட்டாரே அங்க ஏற்கனவே இருந்த மூவர்தான் அந்த பார்ப்பனர்கள்.அவர்கள் விரும்பி கார்கியை சேர்க்கவில்லை.கார்கியும் அவர்களை தேடி போய் சேரவில்லை.எதேச்சையாக அமைந்த ஒன்று.அதுக்காக அவர்கள் நடத்தையை விமர்சிக்க கூடாதா.அப்படி ஏதாவது மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருந்தால் உங்களவா கிட்ட சொல்லி தனியா ஒரு சட்டம் போட்ருங்க. ஏன்னா பல விதிமுறைகளில் மனுதர்மத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் வேறுபாடு கிடையாது.

   திரைப்படம் பார்க்க கார்கி விரும்பாவிட்டாலும் அவரது சம்மதம் இல்லாம டிக்கட் வாங்கியாந்ததும் வற்புறுத்தி அழைத்துச் சென்றதும் அந்த பார்ப்பனர்கள்தா.அதுவும் தமிழர்களை கேலி செய்யும் படத்தை காட்டி அவரை சிறுமைப் படுத்தும் கெட்ட உள்நோக்கத்தோடு.இதற்காக அந்த வஞ்ச புத்தி பார்ப்பானுக்கு நன்றி செலுத்த முடியுமா.

   \\உணவுக்கும் சேர்த்து காசு வசூலிக்கும் பேயிங் கெஸ்ட் அக்கொமோடசனில் சைவ உணவு மட்டும் வழங்கும் விடுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர் ?உங்களுக்கான உணவு உங்கள் காசில் தயாரயிருக்கும்போது, நீங்கள் ஏன் வெளி உணவை வாங்கி வந்தீர்? உங்களுக்காக தயாரான உணவு வீணோ ?
   பீப் பிரியாணி சுட சுட உண்ணுவதே சுவையாகும் பார்சலை விட, பிறகேன் கையில் வாங்கி சைவ விடுதிக்குள் எடுத்து வந்தீர்? விடுதி விதிகளை மீறவா? அல்லது விடுதிக்கு தில்லி மாகான அரசு கொடுத்திருந்த லைசென்சுக்கு வெட்டு வைக்கவா? அல்லது மூன்று பார்ப்பனர்களுக்கும் கோபம் வருமா என சோதிக்கவா ?//

   பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்பதை நிரூபிக்கும் வாக்குமூலம் இது.கட்டுரையில் எங்காவது அது சைவ விடுதி என உள்ளதா.மனிதன் மட்டும் அத கண்டு புட்சு கார்கி லைசென்ச கேன்சல் பண்ண சதி செஞ்சாருன்னு கண்டுபுடுச்சுட்டாரே. மெய்யாலுமே நீங்க துப்பறியும் சொம்பு சாரி சாம்புதானுங்க.ஒரு மனிதனுக்கு தான் விரும்பும் உணவை உண்ணக்கூட உரிமை இல்லையா.அது ஆறிப் போச்சா சூடா இருந்துச்சா அலுமினியம் பாயில் பேப்பர்ல கட்டி தந்ததா,இதெல்லாம் சாம்புவான நீங்கள் கவலை பட கூடியவையா.

   \\நீவிர் பீப் பிரியாணியை சாப்பிட்டதை கண்டும், நும்மை அவர்கள் சகித்து தானே அருகில் அமர்ந்திருந்தனர்… அது சகிப்புத்தன்மை அன்றோ.. அது எதுவாயினும் உமது உயிர் காக்கும் உணவு என்ற அடிப்படை புரிதல் தானே அது… பீப் பிரியானியாயினும் அன்ன-லட்சுமியே என்றுதானே பொறுமை காத்தனர்.//

   அடேங்கப்பா,ஏன்னா ஒரு சகிப்பு தன்மை.கட்டுரையை நல்லா படித்து பாரும்.மாட்டுக்கறி சாப்பிட்ட அன்னிலேர்ந்துதான் முறுகலே ஆரம்பிச்சுருக்கு.ஆமா ஒருத்தன் அவன் காச போட்டு அவனுக்கு பிடிச்ச உணவ சாப்புடுறத நீங்க என்னத்துக்கய்ய சகிச்சக்கணும்.அது அவன் உரிமை.அதில் நீங்கள் தலையிடுவதே சகிச்சுக்கிறேன்னு சொல்றதே மனு தர்ம திமிர்தான்.

   .
   \\தெரிந்து கொள்,
   மூன்று பார்ப்பனர் மத்தியில் தங்கி நீர் இழந்தது எதுவுமல்ல, பெற்றது தான் உண்டு…
   இதே மூன்று கிறித்தவர் மத்தியில் தங்கி இருப்பின், நீர் கிறிதவராய் மாற்றப்பட்டிருப்பீர்…
   மூன்று இஸ்லாமியராயின் “excuse me we do prayer 5 times a day and need privacy, it will affect both of our privacy, can you please ” – என்று சொல்லி உம்மை அனுமதித்திருக்க மாட்டார்கள்
   மூன்று சீகியனாயிருப்பின் – மூன்று நாட்களுக்குள் நீர் தாக்கப்படிருப்பீர் …
   மூன்று வெள்ளையனோடு இருந்திருப்பின் – விசா பெற்று விதேசி ஆகியிருப்பீர்
   மூன்று இலங்கையனோடு இருந்திருப்பின் – போராளி ஆகியிருப்பீர்.//

   இதனால் சகலருக்கும் துப்பறியும் சாம்புவாகிய மனிதன் கண்டுபிடித்து அறிவிப்பது என்னவென்றால் இந்த இந்திய திருநாட்டில் ஏன் உலகில் வாழும் எந்த ஒரு பிரிவினரும் நல்லவர்கள் அல்ல.பார்ப்பனர்கள் மட்டுமே நல்லவர்கள்.இந்துக்களில் பிற சாதியினரையும் அமெரிக்க மாமாவையும் இந்த பட்டியலில் சேர்க்காததன் காரணம் அவர்களை இந்துக்கள் என்று சொல்லி எங்களுக்கு வால் பிடிக்க வைக்க வேண்டியுள்ளது,அமெரிக்க மாமாவோ எங்களுக்கு அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மூலவர் ,உற்சவ மூர்த்தி. குலதெய்வம் எல்லாமே அவாதான்.இப்போதைக்கு அவாகிட்ட உஞ்சவிருத்தி எடுத்துக்கிட்டு இருக்கரதாலா அவாளை பத்தி ஒன்னும் சொல்றதில்லை.

 51. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்… உண்டு என்கிறது உமது மறுமொழி
  \\என்னா கோவம் பாரு.வடக்கத்தி பார்ப்பான சொன்னவுடனே தெக்கத்தி பார்ப்பானுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது.\\
  எம்மை துப்பறியும் சாம்பு என்று விளித்துவிட்டு, நீவிர் எம்மை தெற்கத்தி பார்ப்பானே என கண்டு பிடித்து சாம்புவை மிஞ்சி விட்டீர்.. போலி கம்யுனிசம், போலி கம்யுனிசம் என வாய் கிழிய பேசும் சிறு குழு, உண்மையான கம்யுனிசம் என்பது கருப்பு பார்ப்பன எதிர்ப்பு தான் என சுருக்கி கொண்டதால், போலியற்ற கம்யுனிசத்தை விமர்சிப்பவனேல்லாம் தெற்கத்தி பார்ப்பானாக இந்த சிறு குழு சார்ந்த அன்புடையோர் கருதுவது ஒன்றும் பெரிய தவறல்ல…

  \\எதேச்சையாக அமைந்த ஒன்று.அதுக்காக அவர்கள் நடத்தையை விமர்சிக்க கூடாதா.அப்படி ஏதாவது மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருந்தால் உங்களவா கிட்ட சொல்லி தனியா ஒரு சட்டம் போட்ருங்க\\
  மனு தர்மத்தில் இருக்கிறதா என அறியேன், ஆனால் மனித தர்மத்தில், பத்திரிகை தர்மத்தில் இருக்கிறது…
  “ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் நேரடி சந்திப்பில் நமக்கு கிடைக்கும் ஒரு செய்தி உண்மையாயினும், கற்பனையாயினும், அச்செய்தியை நமக்கு கொடுத்ததில் அச்சந்திப்பில் பங்கு பெற்ற நபர்கள் தெரிந்தோ தெரியாமலோ உதவி இருக்கிறார்கள்… இத்தருணத்தில் பிரசுரிக்கப்படும் செய்தியாவது சம்பந்தப்பட்டவர்களை விமர்சன பொருளாக்குமேயாயின், அந்நபரிடம்/நபர்களிடம் முன்னறிவித்து விளக்கி அவர்தம் கருத்தையும் இணைத்து பிரசுரிக்க வேண்டும்”

  \\ திரைப்படம் பார்க்க கார்கி விரும்பாவிட்டாலும் அவரது சம்மதம் இல்லாம டிக்கட் வாங்கியாந்ததும் வற்புறுத்தி அழைத்துச் சென்றதும் அந்த பார்ப்பனர்கள்தா\\
  வற்புறுத்தி அழைத்தால் விலைமாதுவிடம் செல்வீரா? சென்று நுயித்து விட்டு விலை கொடுக்காமல் திரும்புவீரா ? வனவாசம் தான் மிஞ்சும்…

  \\கட்டுரையில் எங்காவது அது சைவ விடுதி என உள்ளதா? \\
  அசைவ விடுதிகளில் பார்ப்பனர்கள் உணவருந்த மாட்டார்கள் என்பதை யோசிக்க முன்புத்தி தேவை இல்லை… (உடனே எங்க ஊரு பார்ப்பன் எல்லாத்தையும் தின்பான்னு பதிலளிக்க முயற்சி செய்ய வேண்டாம்..)
  அது அசைவ விடுதிதான் என்று கார்க்கி சொன்னால் அந்த உ.பி காரனும் ம.பி காரனும் பார்ப்பனன் அல்ல.. பெரும்பாலும் மாரத்தியர்களும், சத்திரியர்களும் இன்ன பிற வடக்கத்தி இந்தியர்கள் நமது கண்களுக்கு பிராமணர்களாகவே தெரிகின்றனர்…
  \\மாட்டுக்கறி சாப்பிட்ட அன்னிலேர்ந்துதான் முறுகலே ஆரம்பிச்சுருக்கு\\
  அந்த முறுகல் அவருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கும் அளவுக்கு இருந்திருக்கு…

  \\ஒருத்தன் அவன் காச போட்டு அவனுக்கு பிடிச்ச உணவ சாப்புடுறத நீங்க என்னத்துக்கய்ய சகிச்சக்கணும்\\

  \\உலகில் வாழும் எந்த ஒரு பிரிவினரும் நல்லவர்கள் அல்ல.பார்ப்பனர்கள் மட்டுமே நல்லவர்கள்\\
  கடைசி பத்தி அப்படி ஒரு புரிதலை தருகிறதோ… கருத்தாக்கத்தில் உள்ள தவறுதான்… தெளிவாக கூற முயற்சிக்கிறேன்…

  “கிறித்தவர் மத்தியில் தங்கி இருப்பின், நீர் கிறிதவராய் மாற்றப்பட்டிருப்பீர்…”
  இது கிறித்தவத்தின் மகிமை. உலகின் மிக அன்பானவர்கள், வசீகரமானவர்கள் கிறித்தவர்கள். நன்கு பயிற்சி பெற்ற கிறித்தவ போதகர்களின் உரை கேட்டால் மிருகங்கள் கூட இயேசுவின் நாமம் ஜெபிக்க தொடக்கி விடும்.. ஏன் கல்லூரி வாழ்க்கையிலேயே விடுதியறை நண்பன் மூலம் மதம் மாற துடித்து கொண்டிருந்த நண்பர்களை பார்த்திருக்கிறேன்…
  “இஸ்லாமியராயின் உம்மை அனுமதித்திருக்க மாட்டார்கள்” – இஸ்லாமியர்கள் இறை மறுப்பு கொள்கை உடைய அல்லது கம்யுனிச சித்தாந்தங்களை இனம் கண்டு வரும் முன்னே துரத்துவதில் அறிவுடைவர்கள்.. பார்ப்பனர் மத்தியில் பீப் தின்பவன், இஸ்லாமியர் மத்தியில் மது அருந்தி, பன்றி தின்ன தயங்க மாட்டன் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?
  “சீகியனாயிருப்பின் தாக்கப்படிருப்பீர்” – நாலு சீக்கியன் மத்தியில் பொய் பீப் சாப்பிட்டு பார்… கிடைக்கும் பரிசு என்ன என்பது சொல்லி தெரியாது…
  “வெள்ளையனோடு இருந்திருப்பின் விசா பெற்று விதேசி ஆகியிருப்பீர்” – நீங்கள் கூறும் அமெரிக்க மாமாவையும் சேர்த்துதான் குறிக்கிறேன்…
  “இலங்கையனோடு இருந்திருப்பின் போராளி ஆகியிருப்பீர் ” – இலங்கை தமிழரோடு அறை வாடகையை பகிர்ந்து வசிக்கும் வளைகுடா நண்பர்களையும், பிரான்சு, கனடிய, இலண்டன் வாழ் தமிழ் நண்பர்களை கேட்டு பாருங்களேன்…

  இன்னொரு கேள்வி
  \\ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் ?\\
  சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – எந்த மொழியில் கேட்டார் ஆங்கிலமா ?
  நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள் – எத்தனை தமிழன் அப்படி வடநாட்டில் போய் முதலிடத்தில் இருக்கிறான்… மலையாளிகளை குறித்து தானே இப்படி கேட்பது வழக்கம்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க