காதல் கொண்டேன் படத்தின் இறுதிக் காட்சியில் அந்த சேட்டுப் பையனை கீழே கிடத்தி தனுஷ் கொரில்லா போல சுற்றி வருவாரே நினைவிருக்கிறதா? அந்தத் திரைப்படத்தில் செல்வராகவனின் ஏனைய பாத்திரங்களையெல்லாம் ஒப்பிடும்போது தனுஷ்ஷின் பாத்திரம் மட்டுமே இயக்குநரின் முழு சக்தியையும் உள்வாங்கிக் கொண்டு படைக்கப்பட்டிருந்தது. மற்ற பாத்திரங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்பதை விட அவர் விரும்பிய பாத்திரம் தனுஷின் சைக்கோ பாத்திரம்தான். அதற்கு ஏழ்மை, அனாதை போன்ற பிளாஷ் ஃபேக் இருந்தாலும் பிற்பகுதி சைக்கோதான் முதன்மை.
அதனால்தான் பின்பாதியில் ஆவேசமடையும் தனுஷின் ஆணாதிக்க உரையாடல்களுக்கும், உடல்மொழிக்கும் ரசிகர்கள் கைதட்டினார்கள். பெண்ணுடலை நுகர்ந்தெறியும் பண்டமாக கருதும் ஆணுள்ளங்களை அந்தப்படம் புண்படுத்தவில்லை. செய்ததெல்லாம் அதை ஆடவிட்டு இரசிகனின் அலைவரிசையில் ஒன்று கலந்து பெண் சதையை தின்பதற்கு முழுபடமும் ஆரவாரம் எழுப்பியதே. அப்போதே செல்வராகவனிடம் ஏதோ கோளாறு இருப்பதாக ஊகித்தோம். இப்பொது சரியென்று தோன்றுகிறது.
7ஜி ரெயின்போ காலனியில் கூட திண்ணை அரட்டையின் நட்பில் வாழும் வேலை வெட்டியற்ற நடுத்தர வர்க்க இளைஞன் தன்னை ஒரு பெண் காதலித்தே ஆகவேண்டும் என்பதற்கு ஆணவமாய் எல்லா தமிழ் ஹீரோக்களையும் போல விரட்டுகிறான். கூடவே விடலைப்பருவத்தின் சேட்டைகளை, குடும்பத்தோடு இயல்பாய் முரண்படும் அவர்களது உணர்ச்சியை சேர்த்துக் குழைத்ததால் இங்கும் ஆண் ரசிகன் ஒன்று கலந்தான். காதலிக்க வைக்கப்பட்ட பெண்ணை குறைந்த பட்சம் உடலுறுவு கொண்டுவிட்டாவது மறந்து விடலாம் என்ற அரிய சேதியை அதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண் காதலர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
புதுப்பேட்டை சிட்டி ஆப் காஃட் எனும் பிரேசில்படத்தை பார்த்து புலியென்று நினைத்து வரையப்பட்ட பூனை. அரிவாளால் கழுத்தை அறுப்பதையெல்லாம் பயிற்சியில் கற்கும் ரவுடிகளை சித்தரிக்கும் திரைப்படத்தில் அரிவாளைத் தாண்டி அரிவாளுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு வளையத்தை வழங்கும் ஆளும் வர்க்கத்தின் பாத்திரம் தவிர்க்கப்பட்டது. ஜெயேந்திரன் போன்ற காவிக்கயவர்கள் கூட அப்பு முதலான ரவுடிகளை வைத்து கொலை செய்யும் காலத்தில் ரவுடிகளை வெறும் விளைபொருளாக மட்டும் சிலாகித்த படமது.
என்றாலும் தனுஷ் கொரில்லா போல சுற்றி வரும் காட்சியை த்தரூபமாக சித்தரித்திருக்கும் செல்வராகவன் அத்தகைய மனநிலையில் யோசித்து வெளியிட்ட படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த மனநிலைதான் அவருடைய ஆளுமையின் சாரமாகவும் இருக்கலாம்.
இரண்டு, மூன்று படங்கள் வெற்றியடைந்து விட்டால் எல்லா இயக்குநர்களும் அவர்களுடைய உலகில் கடவுளாகி விடுவார்கள். அதன் பிறகு விரிந்த மெத்தையின் கருவறைப் பகுதியில் அவர்கள் மானாவாரியாக பேசிக் கொண்டிருக்க, பலியாடுகளாக உதவி இயக்குநர்கள் ஆமாம் போட இந்த உலகு தங்களிடமிருந்தே துவங்குவதாக அந்த கடவுள் இயக்குநர்கள் துணிகிறார்கள். அந்த வகையில் நிஜ வாழ்க்கையிலிருந்தும் துண்டித்துக் கொள்கிறார்கள். கற்பதையும், தேடுவதையும், புற உலகை உற்று நோக்குவதும் கொள்ள வேண்டிய படைப்பாளிப் பண்புகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. படைப்பின் உள்ளடக்கத்தை விழுங்கும் வடிவமும், இதுதான் ரசிக்கப்படும் என்ற ஃபார்முலாவும், அவர்களின் அரதப்பழசான தத்துவக் கண்ணாட்டமும் மூன்றாவது படத்திற்கான தகுதிகளாக இயல்பாக அமைந்து விடுகின்றன.அதுவே ஐந்தாவது படமென்றால் ஆண்டவனும் கையேந்த வேண்டும். இது செல்வராகவனின் ஐந்தாவது படம்!
பதிவுலகில் ஆயிரத்தில் ஒருவன் விமரிசனங்களை வகைக்கொன்றாக படித்ததிலிருந்து புரிந்த விசயங்கள்: “முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி போர்-புரியவில்லை” இது இரசிகர்களின் அளவை வைத்து படத்தை நிராகரித்த விமரிசனம். “வித்தியாசமான முயற்சி, கோலிவுட்டையும் – ஹாலிவுட்டையும் இணைக்கும் படம், தமிழின் முதல் ஃபேண்டசி – திரில்லர் படம்” இது படத்தை இரசித்தவர்களின் விமரிசனம். அப்புறம் நமது பின்நவீனத்துவ நண்பர்கள் வியந்தோதும் காட்சிகளையும், மொழிகளையும் கொண்டிருக்கும் படம், அதாவது ” பாலியல் விழைவுகளை ஒளிக்காத நபர்கள், விளிம்பு நிலை மக்களின் சிக்கல்கள், மனிதனின் ஆதிகால போர் வெறியை தொன்மங்களின் வழியாக பிரதி காட்டும் நிகழ் உலகம்…இத்யாதிகள்.
சத்தியமாய் இத்தனை நுட்பங்களும் நாம் படம் பார்க்கும் போது துளியேனும் உணரவில்லை. இது வினவின் பாமரப் பார்வையா, கலை விசயங்களில் இருக்கும் ஔரங்கசிப்தனமா?
ஃபேண்டசி எனப்படும் இல்லாததை விரும்பும் கனவுகளும், விரும்பியே ஆகவேண்டியவற்றை நினைக்கும் பகல் கனவுகளும், மாந்தீரிகத்தையும், சாகசத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு புனையும் கனவுகளும் உண்மையில் சமூக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகியதா? இல்லை. அவை குறிப்பிட்ட சமூக யதார்த்தத்தின் தேவைகளிலிருந்தே அந்த தேவையை அடைய முடியாத சிக்கல்களிலிருந்தே இயல்பாக தோன்றுகின்றன.
குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கும், அவை இந்த உலகுடன் பெரும் உரையாடல் நிகழ்த்தி புரிந்து கொள்வதற்கும் பேசும் குருவிகளும், சினேகமாய் இருக்கும் யானைகளும், சேட்டைகள் செய்யும் மிக்கி மௌவுசும் ஓரளவுக்கு தேவையாக இருக்கின்றன. இந்த தேவையை பகாசுரமாக்கி மழலையின் உணர்ச்சியை வெறியுடன் சுரண்டும்போது அவை வன்முறை மிகுந்த வீடியோ கேம்களாக படையெடுக்கின்றன. என்றாலும் இது கூட ஃபேண்டசிதான்.
ஆதிகாலத்தில் புராதானமாய் இயற்கையின் நீட்சியாய் மனிதக்கூட்டம் இருந்த காலத்தில் இயற்கையின் பேரழிவுகள் புரியாமல் அதிலிருந்து தப்பிப்பதற்கு மனிதன் புனைந்த முதல் புனைவு மாந்தீரிகம் கலந்த இறைச்சக்தி. அதுவே பின்னர் மதமாகி இறுகியது. உழைப்பின் வலி தெரியாமல் அவர்கள் உடல்தாளத்திற்கேற்ப இசைத்த பொருளற்ற வார்த்தைகள் பின்னர் சிம்பனி வரைக்கும் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாள் வேட்டைக்கு அவர்கள் தமது மனதை புத்துணர்வாக்கிய புனைவுகளின் வழியேதான் கலையும் அதன் எண்ணிறந்த வடிவங்களும் பிறந்தன. தெரிந்தவனவற்றின் சாத்தியங்களிலிருந்து தெரியாதவற்றை கண்டுபிடிக்கும் புனைவுகள்தான் அறிவியலாக இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.
இப்படி 21ஆம் நூற்றாண்டின் முன்னேறிய வாழ்க்கையை மனித குலம் கண்டறிந்தது ஃபேண்டசி எனப்படும் கற்பனையின் மூலம்தான். ஆனால் அது மட்டுமே தனியாக ஒரு சில மூளைகளில் தோன்றி வளரவில்லை. மனிதனின் உழைப்பு, அதுவும் கூட்டிழைப்பு செயற்காடுகளிலிருந்தே நாம் வியந்தோதும் இந்தக் கற்பனை, புனைவெளியின் எல்லையை உடைத்துக் கொண்டு அதையே தொட்டறியக்கூடிய வாழ்க்கையின் உண்மையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.
அவதார் படம் கூட ஃபேண்டசிதான். என்றாலும் அதன் வேர் அனைவருக்குள்ளும் இருக்கக்கூடிய அடிமைத்தனத்திற்கு எதிராக போராடக்கூடிய மனித வரலாற்றின் மிகச்சாதாரண ஒன்றில் இருக்கிறது. இங்கே சாதாரணம் என்பது அதன் பரந்து தழுவிய ஒன்றைக் காட்டுகிறது. இயற்கையோடு ஒன்றி வாழும் ஆதிவாசிகளும் அவர்களது இயற்கையை பணமாக சுரண்ட நினைக்கும் முதலாளிகளும் உலகெங்கும் இருக்கிறார்கள். எல்லா முதலாளித்துவ நாகரீகங்களும் அநேகமாய் இந்த ஆதிவாசிகளை நரபலி கொடுத்தே சாத்தியமாகியிருக்கின்றன. அதுவே இன்று ஆப்பரேஷன் கீரீன் ஹண்ட்டாய் மத்திய இந்தியாவில் ஆட்டம் போடுகிறது.
அதனால்தான் அவதாரில் உளவாளியாக செல்லும் மனிதன் அந்த வேற்றுக்கிரக ஜீவன்களோடு ஒன்றி காதல், விளையாட்டு, போர், துக்கம் என எல்லாவற்றிலும் இணையும் போது நம் கண்கள் கிராபிக்சின் மாய உலகைக் கண்டு வியந்தாலும், இதயமோ நல்லது வென்று கெட்டது அழியவேண்டுமென்ற ஆதி உணர்ச்சியை அடைகிறது. இந்த உணர்ச்சியை கைவிட்டு விட்டால் அவதார் படம் கூட வெறும் வீடியோ விளையாட்டாக மாறிவிடும்.
எனில் ஆயிரத்தில் ஒருவன் எந்த உணர்ச்சியைக் கொண்டு கற்பனை செய்ய முயல்கிறது? ஒரு வெங்காயத்திலும் இல்லை என்பதுதான் முதல் பதில். சற்று யோசித்துப் பார்த்தால் வெள்ளையன் ஆட்சிக்காலத்து ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள், மாளிகைக்கு வெளியே ஏழைகள் உழைத்து ஓடாக தேய்ந்திருக்கும் போது வெளிநாடு சென்று அங்கு ஒரு கழிப்பறை வெள்ளியில் செய்யப்பட்டிருந்தால், அதையே உள்நாடு திரும்பி தங்கத்தில் செய்து அழகு பார்ப்பார்கள். கூடவே விருந்து வைத்து ஏனைய நாட்டாமைகளுக்கு தமது மலசல தங்கக் கழிப்பறையை பெருமையுடன் காட்டுவார்கள். இந்த ஃபேண்டசியின் உணர்ச்சி என்ன? வக்கிரம்? எனில் அதுதான் ஆயிரத்தில் ஒருவனின் உணர்ச்சியும் கூட.
ஏழுகோடியில் போடப்பட்ட பட்ஜெட் 32 கோடிக்கு சென்றது வெறும் புள்ளிவிவரச் செய்தியல்ல. அங்குதான் தங்கக் கழிப்பறை மறைந்திருக்கிறது.
வரலாறு என்பது நம்மிடையே மன்னர்களின் டைரிக்குறிப்பாக பதிந்திருக்கிறதா, மக்களின் போராட்டமாக பதிந்திருக்கிறதா என்பதை நம்முடைய வரலாற்றுப் பார்வை தீர்மானிக்கிறது. அவ்வகையில் வரலாற்றை விட வரலாற்றுப் பார்வை முக்கியம். ஒரு முசலீம் மன்னன் ஒரு இந்துக் கோவிலை இடித்து விட்டான் என்று இந்துமதவெறியர்களின் பார்வையில் ஒரு வரலாறு முன்வைக்கப்படும் போது அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அது உண்மையா? நோண்டிப் பார்த்தால் பல இந்து மன்னர்கள் அருகாமை இந்து மன்னர்களின் நாட்டை கொள்ளையடித்ததும், கோவில்களை இடித்ததும், அதே போல பல முசுலீம் மன்னர்கள் போட்டி முசுலீம் மன்னர்களின் நாட்டை ஆக்கிரமித்திருப்பதும், மசூதிகளை இடித்திருப்பதும் கூட வரலாறுதான். இங்கு மன்னர்கள் எனும் வர்க்கமும், அவர்களது ஆட்சியின் இருப்பும் எதனால் சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு வரலாற்றுப் பார்வை தேவையாக இருக்கிறது.
அதே போல வரலாற்றை நினைவு கூர்வதும், படிப்பினைகளை ஏற்பதும் கூட நிகழ்கால வாழ்வில் நீங்கள் நடத்தும் போராட்டத்தை சார்ந்திருக்கிறது. அமெரிக்காவின் காலனி நாடாக இந்தியா மாறிவருகிறது என்று உணர்த்துவதற்கு சின்ன மருதுவின் ஜம்புதீவுப்பிரகடனம் தேவைப்படுகிறது.
நாம் செல்வராகவனின் வரலாற்று பார்வையை எங்கஙனம் புரிந்து கொள்வது? இயக்குநர் செல்வராகவன் பலரும் கருதுகிறபடி ஒருமசாலா இயக்குநர் இல்லையே? ஆனாலும் அவரின் புனைவுக்கான வரலாற்று உந்துதல் எதையும் நம்மால் காணமுடியவில்லை. தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில்தான் பவுத்த, சமண மதங்கள் முறியடிக்கப்பட்டு, பார்ப்பனியமாக்கம் வேகமாக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பார்ப்பனர்களையும், வேளாளர்களையும் மையமாகக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் நிலை கொண்டது. பல கிராம மக்கள் பார்ப்பனர்களுக்கும், கோவில்களுக்கும், அடிமைகளாக தாரைவார்க்கப்பட்டார்கள். சைவமாய் இறுகிய பார்ப்பனியத்தின் பிடியில் நந்தன்கள் எரிக்கப்பட்டார்கள்.
இத்தகைய எதுவும் இயக்குநரின் கண்களுக்கோ, அவர் வித்தியாசமான படம் எடுத்த்தாக சிலாகிக்கும் இரசிகர்களுக்கோ படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதைக்கு இரண்டு மன்னர்கள் அதுவும் தமிழ் மக்கள் அறிந்த இரண்டு ராஜாக்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வளவே. அதனால்தான் அமெரிக்க ஏகாதிப்த்தியத்திற்கு பெயர்பெற்ற வியட்நாம் என்ற பெயர் சோழர்களின் பெயரால் வாழும் தற்குறிகள் மற்றும் காட்டுமிராண்டிகள் இடமாக மாறியிருக்கிறது.
வரலாற்று உணர்ச்சியற்ற இந்தப்படத்தில் இயக்குநர் ஒன்றியிருப்பது தடைகளைத்தாண்டும் காட்சிகளும், படம் நெடுக எது எதற்கோ ஊளையிடும் மனிதக் குரல்களும்தான். இந்த தடைகளில் அவர் பலவற்றையும் கேவலப்படுத்தியிருப்பதை எப்படித்தான் “வித்தியாசமான” படக்கோஷ்டிகள் இரசித்தனரோ தெரியவில்லை. ஒருவேளை ஒன்றுமே புரியமால் பாராட்டினால்தான் மதிப்பார்கள் என்ற பரிதாபமா, அதுவும் தெரியவில்லை.
மீனவர்களின் தாயான கடலைக் கேவலப்படுத்தி, சிவப்பு வண்ண ஆதிவாசிகளை கேவலப்படுத்தி, அப்புறம் பாம்புகளைக் கேவலப்படுத்தி, பாம்பையும், ஆதிவாசிகளையும் கொசுபோல கொல்லும் துப்பாக்கிகளைக் கேவலப்படுத்தி, பாலைவனத்தை வில்லனாக்கி, குகைக்குள் கருப்பு சாயம்பூசிய மக்களைக் கேவலப்படுத்தி, இறுதிக் காட்சியில் எல்லாவற்றையும் கேவலப்படுத்தி, இந்தக்காட்சிகளுக்கு கருப்பு, சிவப்பு வண்ணம் பூசிய நூற்றுக்கணக்கான துணைநடிகர்களை கேவலப்படுத்தி, அவர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கூடக் கொடுக்கமுடியாமல் பட்ஜெட்டை கேவலப்படுத்தி, தூயதமிழைக் கேவலப்படுத்தி, இந்த எழவுக்கு செட்போட்ட தொழிலாளிகளின் உழைப்பை கேவலப்படுத்தி,படப்பிடிப்பு முடிந்த உடன்தான் திரைக்கதையை எடிட்டிங்கில் எழுதி அகிரோ குரசேவாவைக் கேவலப்படுத்தி, படம் சோதனையென்று புறக்கணித்த இரசிகர்களுக்கு பிரஸ் மீட் வைத்து கதையைச் சொல்லி கேவலப்படுத்தி…. அப்பப்பா தாங்க முடியவில்லை.
செல்வராகவன் எனும் இயக்குநர் வித்தியாசமாக எடுப்பதற்கு இத்தனை கேவலங்களையும் 32 கோடியில் அளிக்க முடியும் என்றால் இதுதான் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்பதோ?
ரீமா சென் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்துவிட்டார் என்று சில பதிவர்கள் பாராட்டுகிறார்கள். கப்பலில் பாடும் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஜெயல்லிதாவின் அபிநயம், மேசைக்கு அடியில் துப்பாக்கி நீட்டுவது, செம கட்டையென்று பேசுவது இவையெல்லாம் ஓடிப்போலாமா புகழ் மணிரத்தினத்தின் அபிநயங்கள், பார்த்திபனுடன் போடும் விரத தாப சண்டையெல்லாம் காதல் கொண்டேனில் சோனியா அகர்வால் ஆடிய அபிநயங்கள், ஆங்கிலத்தில் சண்டை போடுவது, தூய தமிழில் வஞ்சுவது இறுதியில் சிஜடி சகுந்தலாவாக அக்மார்க் வில்லியாக மாறும்போது இரசிகர்கள் ஆறுதலடைகிறார்கள் அதாவது தங்களது ஆண்மையை கார்த்திக் வழியாக சீண்டிய பெண்ணை வென்று விட்டோமென. மொத்த்த்தில் ஒரு நாலைந்து முகபாவனைகளை செயற்கையாக காட்டியதற்கே இத்தனை புகழ் என்றால் தமிழர்களை கருணாநிதியும், ஜெயாவும் ஏன் சுலபமாக ஏமாற்ற முடியாது?
அடுத்து பின்நவீனத்துவத்தின் பக்கம் கொஞ்சம் பார்க்கலாம். பிரதி வெளிப்படுத்தும் உவகையான கொண்டாட்டத்தை யாரும் மனம் போனபடி அர்த்தமாக்கலாம். ஞான குரு டோண்டு ராகவனிடம் கேட்டால் குண்டலினியில் இருக்கும் மூலாதாரச் சக்தியை ஏழு தடைகளைக் கடந்து சிரசில் இருக்கும் பிரம்மத்துடன் இணைவது என்று விளக்கமளிக்கலாம். முள்ளி வாய்க்காலின் துயரத்தை உண்மையாக பார்த்து வராத சோகம் செட்டுபோட்ட சண்டையின் மூலம் வருவதை தள்ளிவைத்துப் பார்த்தால் ஈழத்தை இந்தப்படம் நினைவுபடுத்தலாம். ஜே.கே போன்ற ஞானிகளிடம் கேட்டால் மனிதனின் ஆதார ஏழு உணர்ச்சிகளின் ( அது என்னவென்று எம்மிடம் கேட்டால் தெரியாது ) ஆழமான உளவியல் ஆட்டத்தை படம் கொடுத்திருப்பதாக சொல்லலாம்.
லீனா மணிமேகலை போன்ற COCKtail பெண்ணியவாதிகளிடம் கேட்டால் சங்க காலம் தொட்டு, ஈழக்காலம் வரை ஆணின் குறி போல ஆட்டம் போடும் போர்வெறியின் நள்ளிரவு தாக நீட்சியை, அற்புதமான உள்ளொளி புனைவு படும பராக்கிரமங்களின் வழி படம் உரசுகிறது என்று சொல்லலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்தான்.
படம் என்ன அதிகாரத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது? என்ன விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை கட்டியமைக்கிறது? என்ன விதமான பாலியல் விழைவுகளை போட்டு உடைக்கிறது? இப்படி பொருளே இல்லாத சுற்றி வளைத்து மூக்கை தொடும் மொழியில் கேட்காமல் சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே இரசிகனுக்கு ஏது ஏறியிருக்கிறது என்பதன் மூலமே பதிலைத்தேடலாமே?
வரலாறு புரியாமல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினால், ஒரு குடிகாரக் கணவனின் கையில் அவதிப்படும் பெண்ணும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினால் விதவையாகும் பெண்ணும் ஒன்றெனத் தோன்றுவார்கள். குடிகாரனும், உலக கொலைகாரனும் அருகருகே நாற்காலிகளைப் போட்டு பின் நவீனத்திற்காக அமரும் காட்சி நம்மால் சகிக்க முடியவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் உண்மையில் விளிம்பு நிலை மக்களை எவ்வளவு இழிவு படுத்த வேண்டுமோ அவ்வளவும் அதற்குமேலும் இழிவு படுத்தியிருக்கிறது. ரீமா சென்னின் மூலம் பெண்களை, சிவப்பு ஆதிவாசிகள் மூலம் பழங்குடிகளை, கஞ்சிக்கில்லாமல் பரிதவித்தாலும் மல்லனது சண்டையைப்பார்த்து ஆவேசக் கூச்சலாக இறையும் மக்களை, மக்களே இப்படி இருக்கும்போது எப்போதும் புணர்தலுக்கும், சண்டைக்கும் விரும்பக்கூடிய பார்த்திபன் அல்லது உண்மையான அதிகார மையம் மறைந்து கொள்ளும் தந்திரங்களை,….. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கு மையமும் இல்லை, விளிம்பும் இல்லை, வெங்காயமும் இல்லை.
மனித குல வரலாறு பசிவெறி, தாகவெறி, பாலுறுவுவெறி போன்ற அடிப்படை உணர்ச்சிகளுக்கிடையில் மட்டுமே நகர்ந்திருக்கிறது என்று கற்பிதம் செய்து புரிந்து கொண்டால் இந்தப்படத்தையும் சிலாகிக்கலாம். ஆனால் இந்த அடிப்படை உணர்ச்சிகள் மனிதர்களை, கூட்டமாக, சமூகமாக வாழவைத்து, வாழ்வை முன்னேற்றுவதற்கு உரிய சக்திகள், அந்த சக்திகளை கிடைக்க விடமால் செய்யும் உடமைச்சக்திகள் என்று வரலாற்றை பார்ப்பவர்கள் எவரும் இந்தப்படத்தை சகிக்க முடியாது. ஏனெனில் இந்தப்படம் வெவ்வேறு தருணங்களில் வெளிப்படும் மனிதத்தின் அடிப்படை அறத்தை எந்தப் பொருளுமில்லாமல் வன்மத்துடன் கேலிசெய்கிறது.
இறைச்சிக்காக அடித்துக் கொள்ளும் மக்கள் பின்பு மைதானத்தில் மல்லனது குண்டால் இரத்தச் சகதிகளாக சிதறும் மனிதர்களைக் கண்டு ஆரவாரமிடுகிறார்கள் என்ற காட்சி இதற்கோர் சான்று. உடன்வந்தவர்கள் பல தடைகளால் காக்கை குருவிகள் போல மடிந்து போவதை மறந்து படத்தின் முக்கிய பாத்திரங்கள் மூவரும் சகஜமாக பயணத்தை தொடர்வது மற்றோர் சான்று. இவையெல்லாம் ஒரு ஃபேண்டசி படத்தை லாஜிக் என்ற கத்தி கொண்டு வெட்டுவதாக சிலர் கருதலாம்.
ஆனால் இங்கே காரணகாரியங்கள் விவாதப்பொருளல்ல. ஆனால் நடக்கும் கதை இந்த காரணகாரியங்களை இழிவுபடுத்துகிறது என்பதே நம் விமரிசனம். செல்வராகவன் முன்னரே சொன்னபடி எந்த அறவுணர்ச்சியிலோ, வரலாற்று உணர்ச்சியோலோ இந்தக் கதையை கட்டியமைக்கவில்லை. அவரது வினோதமான பாத்திரங்களும் அந்த வினோதத்தை விகாரமாக காட்சிப்படுத்தும் வடிவமும்தான் இந்தப்படத்தின் கலை ஊற்று.
இத்தனைக்கும் பிறகும் இந்தப்படத்தில் நல்லது எதுவும் வினவின் கண்ணுக்குப்படவில்லையா என்று கேட்பவர்களை ஆறுதல் படுத்த ஒன்று சொல்லலாம். அது பார்த்திபனின் லிங்க தரிசனம் வசனம் இந்து முன்னணி வகையறாக்களுக்கு கடுப்பேற்றியிருக்கும் என்பதே. தற்செயலாக அமைந்து விட்ட இந்த ஒன்றுக்காக மட்டும் படத்தைப் பாராட்டலாம்.
வேட்டைக்காரன், குத்தாட்டம், காமடி, சண்டை என வழமையான தமிழ்படத்தை பார்த்து சலித்தவர்கள் இந்த மாறுபட்ட கோணங்களையும் காட்சிகளையும் வண்ணங்களையும் ஒரு சேஞ்சுக்காக இரசிக்கலாம்.
நம்மைப்பொறுத்தவரை வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட நல்ல படம். உழைத்து களைக்கும் மக்கள் அந்தப்படத்தில் ஏதோ கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு சென்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவன் அதைக் கூட செய்யவில்லை.
அய்யா நீங்க ஒரு படம் எடுங்க பார்போம், சும்மா நொள்ளை சொல்லிக்கிட்டு இருக்குறதே வேலைய உனக்கு வினவு ஒரு வெட்டிபய தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பு
கந்தா,
நல்லா சமைக்க தெரிஞ்ச தான், சமையல விமர்சனம் செய்ய தகுதி இருக்கிறது. நீங்க அப்படித்தான் விமர்சனம் சொல்றீங்களோ வீட்டில!
வினவு,
ஆயிரத்தெட்டு மொக்கை விமர்சனமா எழுதிகிட்டு இருக்கும் பொழுது, நீங்க சமூகம், வரலாறு என அறிவியல் பூர்வமா விமர்சனம் எழுதும் பொழுது…கடுப்பு கடுப்பாத்தான் வருது.
என்ன இருந்தாலும், ரீமா சென் பட்டைய கிளப்பி இருக்கிறாங்க எல்லோரும் எழுதி இருக்கும் பொழுது, நீங்க அதையே திருப்பி போட்டு தாக்குறீங்க!
//நம்மைப்பொறுத்தவரை வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட நல்ல படம். உழைத்து களைக்கும் மக்கள் அந்தப்படத்தில் ஏதோ கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு சென்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவன் அதைக் கூட செய்யவில்லை.///
சரியான பார்வை
ஆமாம்…
நம் தமிழர்களை சுலபமாக ஏமாற்றலாம் என்று சரியாகதான் சொன்னிர்கள். இவர்களை எல்லாம் திருத்த முடியாது. ஒரு ருபாய் அரிசி வாங்கி வண்ண தொலைகாட்சியில் படம் பார்பவர்கள் எவர்கள்
“லிங்க தரிசனம்” மட்டுமே பாராட்டப்படவேண்டிய விடயம். என்னைப்பொருத்த மட்டில் தயாரிப்பாளரின் 32 கோடியில் ஆண்ட்ரியாவிற்க்குள் ஆயிரத்தில் ஒருவனை சில வருடங்களாக செல்வா தேடி இருக்கிறார்..
ரொம்ப சரி
என்னை பொறுத்தவரை படத்தில் வரும் ஆபாசங்களை குற்றம் சொல்லமுடியும் matrapadi வல்லரசுகளின் மேலாதிக்கத்தை தோலுரித்து கட்டியுள்ளார்கள் .
உடன்படவில்லையென்றாலும் நீங்கள் முன்வைக்கும் வாதங்களை ரசித்துப் படித்தேன்.
இது தான் வினவின் வெற்றி
சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுத்துக்கள் போல… பாவம் பாட்டாளி வர்க்கம் 🙂
very very good man. ka..ka..poo
அதிக ஹிட்ஸ் வேண்டுமென்று எழுத துவங்கினால் சினிமாதான் எழுதவேண்டும் , அதை எழுத நான் தயாராக இல்லை , வாசகனின் தளத்தில் நின்று பேசாமல் வாசகனை நம் தளத்திற்க்கு அழைத்து வருவதே நாம் செய்ய வேண்டிய பணி – யாரோ ஒருவர் சொன்னது .
வினவு , ஹிட்ஸ் வெறி கொண்டு சினிமா பக்கம் திரும்பி அழிந்து போகாதீர்கள் .
மதி இண்டியா,
படம் வந்ததும் முதல் ஆளா கூட எழுதவில்லை. இதற்கு முன்பு இத்தனை பேர் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பார்களா என தெரியவில்லை. ஆயிரத்தில் ஒருவராக தான் வினவு எழுதியிருக்கிறார்.
விமர்சனத்தைப் பத்தி உன் கருத்தென்ன? அதைப்பத்தியெல்லாம் ஒரு கருத்தும் இல்லை. ஹிட்ஸ் வெறி என பினத்தமட்டும் தெரிகிறது.
சினிமாவும் சமூகத்தளத்தில் ஒரு அங்கம் தான்.
பணம் இருக்கும் தைரியத்தில் எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்தலாம் என்ற எண்ணம் மாற வேண்டும்.
“வினவு , ஹிட்ஸ் வெறி கொண்டு சினிமா பக்கம் திரும்பி அழிந்து போகாதீர்கள்”
பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை..
சினிமா எழுதினால் ஹிட்ஸ் என்று கிடையாது …..சினிமா அதிக மக்களை பாதித்துள்ளது.மனிதன் என்ன யோசிக்கிறான் என்று அவன் ரசனையை வைத்து சொல்லலாம் …………சினிமா பற்றி நிறைய எழுத தான் வேண்டும் ….அப்படி என்றால் அரசியல் எழுதினாலும் ஹிட்ஸ் தான் அதை எழுத கூடாது என்று சொல்ல முடியுமா?????
என்ன எழுதிகிறோம் என்பது தான் விடயம்
எப்பா மதி இந்தியா, உன்னைப் போல ஒருவனுக்குப் பெறவு இப்பத்தான் வினவுல சினிமா விமரிசனம் எழுதியிருக்காக, அது கூட பொறுக்கலையா ராசா, இந்த விமர்சனத்துல கூட சமூகம், வரலாறு,ன்னு எல்லாம் வருதே, தம்பி படிச்சுக்கிடலையா, வினவுக்காரவுக இதே மாதிரி நிறைய விமர்சனம் எழுதனங்குறதுதான் அண்ணாச்சியோட வேண்டுகோள்
நல்ல விமர்சனம்.
//நம்மைப்பொறுத்தவரை வேட்டைக்காரன் ஆயிரத்தில் ஒருவனை விட நல்ல படம். உழைத்து களைக்கும் மக்கள் அந்தப்படத்தில் ஏதோ கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு சென்று விடுவார்கள். ஆயிரத்தில் ஒருவன் அதைக் கூட செய்யவில்லை/// —
உண்மை.
//மொத்த்த்தில் ஒரு நாலைந்து முகபாவனைகளை செயற்கையாக காட்டியதற்கே இத்தனை புகழ் என்றால் தமிழர்களை கருணாநிதியும், ஜெயாவும் ஏன் சுலபமாக ஏமாற்ற முடியாது?//
//கூட்டிக் கழித்துப் பார்த்தால் இங்கு மையமும் இல்லை, விளிம்பும் இல்லை, வெங்காயமும் இல்லை//
நச் நச் நச்..!!!!
வினவு, நாலு சமூக பதிவு செய்யும் வேலையை ஒரு சினிமா விமரிசனப்பதிவு செய்யும். அடிக்கடி இது போன்ற பதிவுகளை எழுதவேண்டும், ஊருல சினிமாவுக்கா பஞ்சம்????? ரொம்ப முக்கியமா எல்லாரும் பதிவு எழுதறத்துக்கு முன்னாடி வினவு எழுதிட்டா தேவலாம் அப்பவாச்சும் சில பேரு எஸ்கேப்பு ஆக சான்ஸ் கிடைக்கும் 🙂
Kevalam Kevalam Kevalam ippadi oru kevalamaana katturaiya ezhuthuna kevalamaana vinava thavira vera evanakkum thayiriam irukaathu. ithukku kevalamana oru kelvikuriyoda reply vera. enna kevalam saravanan ithu.
நல்ல பதிவு… ஆனால் சில விடயங்கள் எனக்கு புரியவில்லை…
///சிவப்பு வண்ண ஆதிவாசிகளை கேவலப்படுத்தி, அப்புறம் பாம்புகளைக் கேவலப்படுத்தி/// என்ன கேவலப்டுதியுள்ளார் என்பது புரியவில்லை.
///சிவப்பு வண்ண ஆதிவாசிகளை கேவலப்படுத்தி, அப்புறம் பாம்புகளைக் கேவலப்படுத்தி/// என்ன கேவலப்டுதியுள்ளார் என்பது புரியவில்லை.//கலைவாணன் அய்யா, நானும்தான் நேத்து அந்த கருமத்த பாத்தேன். ஆதிவாசிகள எல்லாத்தையும் சாகடிக்கிற காட்டுஜென்மங்களா காட்டுதாக. ராம.நாராயணன் படத்துல பாம்பு பழிவாங்கத காட்டி ஜனத்த பயமுறுத்துவாக. அதப்போல பாம்புக்கூட்டத்த அந்த அப்பிராணி ஜீவனை படையெடுத்து வர்ர மாதிரியும் அத கூட்டம் கூட்டமா கொல்லுததும் நல்லா இருக்குங்குறீகளா?
அய்யா எனக்கு வினவு என்ன சொல்ல வராங்கன்னு புரியல… அதனால் தான் கேட்டேன்.தெரிந்து கொண்டே குசும்புத்தனமாக கேட்கவில்லை. நான் வினவை சாடவில்லை.
ஆனால் அந்த காட்சியை பார்த்த பொது என் நினைவுக்கு வந்தது அமெரிக்காவில் நடந்த இன ஒழிப்பு தான்.நாகரீகம் என்னும் பெயரில் நடந்த அந்த மிக பெரும் மனித அவலம் . இராணுவத்தை சித்தரித்த காட்சிகளிலும் எனக்கு காஷ்மீரிலும் அசாமிலும், ஈழத்திலும் நடக்கும் கொடுமைகள் தான் நினைவுக்கு வந்தன. வினவின் கோணத்தில் நான் யோசிக்கவில்லை.இது நாள் வரை ஒரு நல்ல படம் என்றே எண்ணி கொண்டிருந்தேன்.
ஆனால் எனது ஒரே நெருடல் … சினிமாத்துறைக்கு இத்தனை முக்கியத்துவம் தேவை தானா????
அய்யா மன்னிச்சுக்கிடுங்க, நான் கேட்ட விதம் சரியில்ல. வினவுக்காரவுகள விமரிசனம் செய்யக்கூடாதுன்னு நாஞ் சொல்லல்ல. சரி, தப்புகள சுட்டிக்காட்டுதது நல்ல விசயந்தானுங்களே
//லீனா மணிமேகலை போன்ற COCKtail பெண்ணியவாதிகளிடம்//
எனகென்னவோ இந்த வரி கேவலமாக படுகிறது. உங்களுக்கு?
சீனு நீங்க லீனா மேல இருக்குற லிங்க கிளிக் செஞ்சு பாருங்களேன்… COCKtailலின் ‘விவரம்’ புரியும்
முழு பதிவின் கருத்திலிருந்தும் வேறுபடுகின்றேன். வினவு தளத்தின் சினிமா விமர்சன கட்டுரைகள் எப்போதுமே என்னைக் கவர்ந்ததில்லை. இந்தப்பதிவும் அதற்கு விதி விலக்கல்ல.
சினிமா:திரை விலகும் போது புத்தகத்தை படித்தவர்களுக்கு எந்த ப்டத்தை நீங்கள் எப்படி அணுகுவீர்கள் என்பது அத்துபடியாயிருக்கும். அதனால் எளிதில் ஊகிக்க முடிகின்றது. வேட்டைகாரன் பரவாயில்லை என்ற கடைசி பத்தி விமர்சனமானது கடைசியில் முடிக்கும் போது சும்மா நச்சுன்னு ஒரு பஞ்ச் லைனோட முடிக்கணும் என்ற அமெச்சூர்தனமான அணுகுமுறையாய் எனக்கு தோன்றுகிறது. 🙂
நீங்கள் சொன்ன அந்த வேட்டைக்காரனிலும், இதே போல் பெண்ணை உடல் ரீதியிலாய் காட்சிப்படுத்தும் அவலங்களும், இன்ன பிற எழவுகளும் நடந்திருக்கின்றது. ஆனால் உங்களுக்கு அவை எப்போதும் உறுத்தலாய் தெரியாது. ஏனெனில் மசாலா படம் என்ற லேபிளும், உழைத்துக் களைக்கும் மக்கள் என்ற தோழர்களின் மீதான கரிசனமும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் சக்தியை நமக்கு தந்திருக்கிறது.
//மொத்த்த்தில் ஒரு நாலைந்து முகபாவனைகளை செயற்கையாக காட்டியதற்கே இத்தனை புகழ் என்றால் தமிழர்களை கருணாநிதியும், ஜெயாவும் ஏன் சுலபமாக ஏமாற்ற முடியாது?//
மேலோட்டமாய் பார்த்தால் நல்ல வரிகள் இல்லை என்று தோன்றினாலும், இதனுள்ளே ஒரு கருத்தும் இல்லை என்பதே எனது எண்ணம். உங்களது பார்வையில் முகபாவம் நடிப்பு இல்லை, உடல் மொழி நடிப்பு இல்லை என்றால், வேறு எதைத்தான் நடிப்பு என்கிறீர்கள். பக்கம் பக்க்கமாய் எழுதி வைத்து வசனம் பேசுவதையா? சரி இப்போ இந்த படத்தை ரசித்தவர்கள் எல்லாரும் கருணாந்திக்கும், ஜெயலலிதாவுக்கும் குடை பிடிப்பவர்களா? என்ன லாஜிக் இருக்கு உங்க கேள்வியிலன்னு புரியலை.
செல்வராகவனின் படைப்பை வைத்து செல்வராகவனின் மனதிற்குள் சென்று அகழ்வாராய்ச்சி செய்தது போல கண்டுபிடித்து எழுதிய வரிகள் ஜெ.மோ சில நாட்களிற்கு முன்பு மலாதாஸின் படைப்பை வைத்து ”அவர் மனசாட்சியாய் எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது.
இன்னும் பல விஷயங்களை பற்றி பேசலாம்தான். இப்போதைக்கு இது போதும்.
நந்தா ரீமா, வேட்டை, செல்வா பத்தியெல்லாம் நீங்க வினவு மேல விமர்சனம் எழுதியிருக்கீங்க.. அது ஏன் தப்பு அதை எப்படி எழுதியிருக்கனும்கறதையும் சேத்து எழுத்னும், இல்லேன்னா நீங்க என்ன சொல்ல வறீங்கன்னே புரியாம போயிடும்
நந்தா,
வேட்டைக்காரனை நல்ல படம் என்று சொல்லவில்லை. ஆ.ஒ வனுடன் ஒப்பிடும் போதுதான் அந்த நல்லது. மற்றபடி அந்த ஃபார்முலா படம் ரசிகனை புதிதாக எதுவும் கெடுத்துவிடப்போவதில்லை, ஏற்கனவே மொத்த தமிழ் சினிமாவும் கெடுத்து வைத்திருப்பதனால்.
ரீமா சென்னில் செய்ற்கையான பாவனையும், கலைஞரின் செயற்கையான அடுக்குமொழியும், ஜெயாவின் செய்ற்கையான சவடால்களும் ஏற்கப்படுவதில் ஒற்றுமை இல்லையா? அரசியலை மேலாட்டமாக விவாதிக்கும் பார்வையும், ரீமா சென்னை ஜோடனைகளுக்கான இரசிக்கும் பார்வையும் அப்படி ஒன்றும் வேறு பட்ட விசயங்கள் இல்லையே?
இருக்கட்டும், இந்தப்படத்தை எடுக்க செல்வராகனை உந்தித் த்ள்ளிய கலை உணர்ச்சி எது, அந்த படைப்பை பார்க்கும் இரசிகன் அடையும் கலை உணர்ச்சி எது என்று கருதுகிறீர்கள்?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், மறைக்கப்பட்ட உண்மைகளுக்கவும் அவ்வப்போது குரல் கொடுப்பதால் வினவு மீது ஒரு மரியாதை ஏற்ப்பட்டது..
கடந்த சில நாட்களாக வரும் கட்டுரைகளின் தோரணை “வினவும் ஒரு வகையான முற்றிய சைக்கோ தான் ” என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது..
வினவு தொடர்ச்சியாக பிளாக்கர்களை போல ஆகிவிட்டதோ என அஞ்சுகிறேன் , காலபோக்கில் மற்ற வலைப்பூக்களை மேய்வதை போல வினவையும் பார்க்க வேண்டியதுதான்
சமூக பிரச்சனைகள் இத்தனை இருக்கு எதோ ஒரு கூமுட்டை படத்தை பார்ப்பதற்கும் அதற்கு விமர்சனம் எழுதமும் தோழர்களை ஊக்குவிப்பது
சரியல்ல .
சினிமா அப்படித்தான் இருக்கிறது என சொல்லி வெறும் ஹிட் பதிவுகளை எழுதுவதை விட வேறு உருப்படியான வேலை பார்க்கலாம்
ஏற்கனவே சினிமா கவர்ச்சி நடிகை பத்தி வினவு எழுதிய போதே தோழர்கள் இதை சொன்னார்கள்
அதற்குமேல் உங்கள் விருப்பம்
தியாகு -செம்மலர்
தியாகு,
நீங்கள் சினிமாவை புறக்கணிப்பதால் மக்களும் புறக்கணித்துவிடப் போவதில்லை. வீட்டில், அலுவலகத்தில், சின்ன திரையில், பதிவுலகில் எங்கும் அதன் ஆக்கிரமிப்புதான். இந்தப் பிடியிலிருந்து மக்களை மீட்க வேண்டுமென்றால் அது சினிமா இரசனைக்குள் சமூகப்பார்வையுடன் புகுந்து சிந்திக்க வைக்க வேண்டும். இதில் இரசிப்பதற்கு ஒன்றுமில்லை எனும் படிநிலையில்தான் சமூக விசயங்களை மனம் நாடும்.
இந்த விமரிசனத்தில் கூட சமூக விசயங்கள், வரலாறு, புனைவு குறித்த மனித குலத்தின் பாதைகள் என்று புதிதாக சிந்திக்க அடியெடுத்துக் கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. நீங்கள் பதிவைப்படிக்கவில்லை போலிருக்கிறது.
ஷகிலா குறித்த பதிவு சினிமா கவர்ச்சி நடிகை பற்றியதாக நீங்கள் நினைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அந்தப்பதிவில் பர்தாவின் கண்ணிய எல்லை, கவர்ச்சியின் சுதந்திர எல்லை இரண்டையும் பரிசீலீக்கும் விமரிசனப் பார்வைதான் உள்ளடக்கம்.
சினிமாவை இரசனைக்காக பார்ப்பதற்கும், சமூக அக்கையுடன் விமரிசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எப்படியும் சினிமா இன்றைய இளைஞர்களின் மதம். அவர்களை மதமாற்றம் செய்யவேண்டுமானால் நீங்களும் சினிமாவைப்பற்றிப் பேசவேண்டும். இல்லையேல் அவர்களிடமிருந்து நீங்கள் தனிமைப் படுவீர்கள். இதெல்லாம் வயசான கேசு என்று இளையோரும் புறக்கணிப்பார்கள்.
கேள்விக்குறி சொன்னது போல நாலு சமூக விசயங்களைப்பற்றிய பதிவுகள் புரியவைக்காத்தை ஒருசினிமாப் பதிவு புரியவைக்க முடியும்.எனவே வினவில் சினிமாவை தொடர்ந்து எழுதத்தான் உத்தேசம்.
தோழர் தியாகு – எனக்கு ஒரு அமெரிக்கத் தொழிலாளி முன்பு செய்த உபதேசம்… ”யாருக்கும் மார்க்சியத்தை போதிக்காதே… நீ பேசுவது எதுவாகிலும், அது மாரக்சிய கண்ணோட்தில் இருப்பதை உறுதிசெய்துகொள்”.
வினவு பாட்டுக்கு புரட்சி அது இதுன்னு உங்க தோழர்கள் படிக்கறத்துக்காகவே மட்டும் பதிவு எழுதினா நாங்கெல்லாம் தெனோம் வந்து போக வேண்டிய அவசியமே இருக்காது. நல்லது கெட்டது உங்க தோழர்களோட மட்டும் போயிடும்.புரட்சிகர கும்மியா நீங்க பத்து பேரு மட்டும் அடிச்சுக்கலாம், எங்களுக்கும் நேரம் மிச்சம்.
அப்பிடியே உங்க புதிய ஜனநாயகம் ஆபிசுக்கும் போன் போட்டு கழிசடை நடிகை தமன்னா, அமெரிக்கா 8MM பாலியல் வக்கிரம் இதப்பத்தியெல்லாமெ எழுதவேணான்னு சொல்லுங்க
//வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் //
வினவு தளத்தில் அதன் அறிமுகத்தில் மேற்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளனமகஇக ஆதரவாளர்களிடம் இது போன்ற கட்டுரைகளைத்தான் எதிர்பார்க்க முடியும்உதாரணத்திற்கு நீங்கள் புதிய கலாச்சாரம் படித்தீர்கள் என்றால் அதில் அரசியல், சமூகம், திரைப்பட விமர்சனம், சிறுகதை, கவிதை, என அனைத்தையும் காணலாம் மத்தபடி நீங்கள் நினைப்பது போன்ற ஆகாவளித்தனமான அரட்டைகள் இங்கு நடக்காது அதற்கு நீங்கள் டோண்டு போன்ற வெட்டிபசங்க தளத்திற்கு செல்லலாம்,
/நீங்கள் டோண்டு போன்ற வெட்டிபசங்க தளத்திற்கு செல்லலாம்,//
ஹி ஹி ஹி
Vinavu, It is nice that you’ve watched the entire movie with this much patience ! However do such films deserve an space in vinavu’s site.! There are so many burning issues which are to be discussed! Anyway may be in a lighter vain we can accept this ; However please avoid cinema reviews in future …( Sorry I have problem in posting my replies in tamil as I’m not fluent in typing!)
பஞ்சாப் ரவி,
வினவில் சினிமா விமரிசனம் தேவையா, தேவையில்லையா? தேவையில்லை என்றால் ஏன் என்பதை விளக்க முடியுமா?
//நீங்கள் சினிமாவை புறக்கணிப்பதால் மக்களும் புறக்கணித்துவிடப் போவதில்லை. வீட்டில், அலுவலகத்தில், சின்ன திரையில், பதிவுலகில் எங்கும் அதன் ஆக்கிரமிப்புதான்.//
உண்மை
நான் படம் பார்த்தால்லென்ன பார்க்காட்டி என்ன பார்கிறவன் பார்த்துட்டுதான் இருப்பான்
இந்தப் பிடியிலிருந்து மக்களை மீட்க வேண்டுமென்றால் அது சினிமா இரசனைக்குள் சமூகப்பார்வையுடன் புகுந்து சிந்திக்க வைக்க வேண்டும். இதில் இரசிப்பதற்கு ஒன்றுமில்லை எனும் படிநிலையில்தான் சமூக விசயங்களை மனம் நாடும்.
//இந்த விமரிசனத்தில் கூட சமூக விசயங்கள், வரலாறு, புனைவு குறித்த மனித குலத்தின் பாதைகள் என்று புதிதாக சிந்திக்க அடியெடுத்துக் கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. நீங்கள் பதிவைப்படிக்கவில்லை போலிருக்கிறது.//
படித்தேன்
//ஷகிலா குறித்த பதிவு சினிமா கவர்ச்சி நடிகை பற்றியதாக நீங்கள் நினைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அந்தப்பதிவில் பர்தாவின் கண்ணிய எல்லை, கவர்ச்சியின் சுதந்திர எல்லை இரண்டையும் பரிசீலீக்கும் விமரிசனப் பார்வைதான் உள்ளடக்கம்.
சினிமாவை இரசனைக்காக பார்ப்பதற்கும், சமூக அக்கையுடன் விமரிசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
//ஆமாம்//
எப்படியும் சினிமா இன்றைய இளைஞர்களின் மதம். அவர்களை மதமாற்றம் செய்யவேண்டுமானால் நீங்களும் சினிமாவைப்பற்றிப் பேசவேண்டும். இல்லையேல் அவர்களிடமிருந்து நீங்கள் தனிமைப் படுவீர்கள். இதெல்லாம் வயசான கேசு என்று இளையோரும் புறக்கணிப்பார்கள்.
கேள்விக்குறி சொன்னது போல நாலு சமூக விசயங்களைப்பற்றிய பதிவுகள் புரியவைக்காத்தை ஒருசினிமாப் பதிவு புரியவைக்க முடியும்.எனவே வினவில் சினிமாவை தொடர்ந்து எழுதத்தான் உத்தேசம்.//
தாராளமாக எழுதுங்கள்
தினம் ஒரு படம் எடுத்து வெளியே வருகிறது சீரியல்களோ
கேட்கவே வேண்டாம் புதிய புதிய சீரியல்கள் வருகின்றன
ஆனால் ஒரு முற்போக்கு தளம் எதற்கு முக்கியத்துவம் தந்து எதற்கு குறைவான முக்கிய துவம் தரவேண்டும் என்ற விசயத்தில்
சினிமாவுக்கு ம் அதன் அடிப்படையிலான விமர்சனத்துக்கும் வினவு அதிக முக்கியத்துவம் தருவது போல எனக்கு தெரிந்தது
சினிமாவை பற்றி பேசித்தான் சமூக விசயத்தை புரிய வைக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன் பாடில்லை
அதற்கு மெனக்கெடும் நேரம் – அதிகம் அந்த நேரத்தை வேறு சமூக விசயங்களுக்கு பயன் படுத்தலாம் என நினைத்தேன் – இது எனது கருத்து
உங்கள் கருத்தை சொல்லி விட்டீர்கள்
பரவாயில்லை உங்கள் கருத்துப்படியே தொடருங்கள்
வாழ்த்துக்களுடன்
தியாகு -செம்மலர்
//சினிமாவுக்கும் அதன் அடிப்படையிலான விமர்சனத்துக்கும் வினவு அதிக முக்கியத்துவம் தருவது போல எனக்கு தெரிந்தது// எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்… சம கால ப்ரச்சனனைகள் அனைத்திற்கும் வினவு தன்னால் முடிந்த அளவு பதிவிடுகிறதே. அவசியம் கருதிதான் சினிமாக்கள் பற்றிய விமர்சனங்கள் வருகின்றன..
//சினிமாவுக்கும் அதன் அடிப்படையிலான விமர்சனத்துக்கும் வினவு அதிக முக்கியத்துவம் தருவது போல எனக்கு தெரிந்தது// தியாகு சொன்னது சரி. இதைத்தான் நானும் நினைக்கிறேன்
jeeva,தியாகு – இது நியாயமான விமரிசனமே இல்லை,
வினவில் இதுவரை வந்துள்ள பதிவுகள் – 397
அதில் சினிமா தொடர்பான பதிவுகள் – 26
அதில் விமரிசனங்கள்-7 மற்ற 19 எதோ ஒரு வகையில் சினமா சம்பந்தப்பட்டவை (லீனா – ஸ்டாலின் சகாப்தம் – ஈழம் – நூல் அறிமுகம், ஜெகத் கஸ்பார், சீமான் etc…)
பார்க்க https://www.vinavu.com/category/cinema/
இப்படி 7 சதவிகிதம் மட்டுமே சினிமா பதிவுகள் இருக்கும் போது நியாயமே இல்லாமல் நீங்கள் ஒரு கருத்தை உறுவாக்க முனைவதை ஏற்குக்கொள்ளவே முடியவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்பதும் புரியவில்லை. தயவு செய்து விளக்குங்கள் இல்லை தவறான கருத்துக்கு விமரிசனம் ஏற்றுக்கொள்ளுங்கள்
.ரொம்ப யோசிக்கதீன்ங்க.நானும் கொஞ்சம் முட்போக்காத்தான் யோசிக்கிறவன். ஆனால் இந்தளவுக்கு இல்லை,இப்போது வந்துகொண்டிருக்கும் படங்களை பார்க்கையில் இது ஒன்றும் கேவலமில்லை. செசிட்கு பெண்கள் அலைவது (ரீமாசென்)போன்ற காட்சியை தவிர.சென்சார் வேறு ரொம்ப குழப்பி விட்டதாக தோன்றுகிறது
கார்ப்பரேட் போலிச்சாமிகளான நித்யானந்தம்ஸ், ஸ்ரீ சிரி சிரி ரவிஷங்ஸ் வெள்ளியங்கிரி மலை கிங்ஸ் போன்றவற்றை எழுதுங்க..
எங்கிருந்து இந்த வார்த்தைகளை எடுத்து தொடுப்பிர்களோ!!!!!!!!! அதிலும் ” தமிழகத்தில் சோழர்களின் ஆட்சியில்தான் பவுத்த, சமண மதங்கள் முறியடிக்கப்பட்டு, பார்ப்பனியமாக்கம் வேகமாக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பார்ப்பனர்களையும், வேளாளர்களையும் மையமாகக் கொண்ட நிலவுடைமைச் சமூகம் நிலை கொண்டது. பல கிராம மக்கள் பார்ப்பனர்களுக்கும், கோவில்களுக்கும், அடிமைகளாக தாரைவார்க்கப்பட்டார்கள். சைவமாய் இறுகிய பார்ப்பனியத்தின் பிடியில் நந்தன்கள் எரிக்கப்பட்டார்கள்.”இந்த கருத்துக்கு பின்னல் தமிழர்களின் அனைத்து அழிவுகளும் அடங்கி இருக்கு போங்க.உ +ம (1001 வன்)
nogod7 அவர்களே,, விமர்சனத்தை தெளிவாக பதிவிடவும்
சரியான விமர்சனம்
//சம கால ப்ரச்சனனைகள் அனைத்திற்கும் வினவு தன்னால் முடிந்த அளவு பதிவிடுகிறதே. அவசியம் கருதிதான் சினிமாக்கள் பற்றிய விமர்சனங்கள் வருகின்றன..//
ஆதாரம் எல்லாம் திரட்டி போட எனக்கு நேரமில்லை நண்பரே
சமகால பிரச்சனை அனைத்துக்கும் வினவு எதிர்வினை புரியவில்லை என நான் சொல்லவில்லை
வலைப் பூக்களில் குப்பைகளையும் சொதப்பல்களையும் கண்டு நொந்து போயிருந்த எனக்கு வினைவின் விமர்சனம் நல்ல காரசாரமான உணவை திருப்தியாக உண்டது போல் இருந்தது. சில டைரக்டர்கள் தன்னை அறிவு ஜிவியாக நினைத்துக் கொண்டு செய்யும் மடத்தனங்களை தெளிவாக சொல்லியிருக்கிறது வினைவு. பாராட்டுகள்.
இது ஒரு Sado movie like Caligula or Salo..
கார்த்தி அடிக்கடி காண்டம் இருக்கு வரியா என பெண்களிடம் கேட்பதும் ரீமாவும் ஆண்ட்ரியாவும் கெட்ட வார்த்தைகளில் சாணியடித்து கொள்வதும் எப்படி சென்சர் அனுமத்திதது என்றே தெரியவில்லை.
தமிழர்களை நர மாமிசம் தின்பவனாக காட்டி விட்டாய்..பிறகென்ன ?உலக திரைப்பட விழாவிற்கு அனுப்பி அனைதுலகதினரும் தமிழன் ஒரு நர மாமிசம் தின்பவன் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடு..உன்னால் முடிந்தது அவ்வளவுதான்..ஏற்கெனவே தமிழர்களை பல நாடுகள் கேவலமாக நடத்துகின்றன இது இன்னும் அவர்களுக்கு உதவும்..
மேலும் ரீமா கன்னித்தன்மை உள்ளவளா என பரிசோதிக்க அவளை நிர்வாணமாக நிற்க வைத்து சிறுநீர் கழிக்க சொல்லி அதை சோதிக்கும் காட்சி முதலில் வைக்கப்பட்டு பின்பு நீக்கப்பட்டிருக்கிறது..சபாஷ் செல்வா! அடுத்தது Nazi இன் SS கேம்ப் குறித்து ஒரு சித்ரவதை படம் எடுத்து நீயே அதில் leutenantஆக நடித்து உன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்..
கேட்டால் நான் உலகத்தரமான படம் எடுக்கும் பொது ஏன் தூற்றுகிறீர்கள் என கேட்கிறான்..ஏனென்றால் உலகத்தரம் வாய்ந்த படங்களை பார்த்து விட்டதால் உன் படம் chicken shit .That’s all
நாடுகளும் எண்ணங்களும் சிறுசிறு தீவுகளாக இருந்தபோது நடந்த விடயங்களை இப்போது இவ்வளவு கோபத்துடன் சொல்லவேண்டிய அவசியம் என்ன? இப்போது நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் அந்த சமூகத்தால் நிகழ்த்தபடுகின்றதா?நீங்கள் குறிப்பிடும் பௌத்த மதம் இலங்கையில் இப்போது செய்யும் அழிவை ஏன் சொல்லக்கூடாது? முற்று முழுதாக சமூகத்தை துறவறத்துள் தள்ளும் பௌத்தமும் சமணமும் மக்களால் புறம்தள்ளப்பட்டன.
//ஞான குரு டோண்டு ராகவனிடம் கேட்டால் //
திருவாளர் டோண்டு அவர்களை இங்கே நீங்கள் இழிவுபடுத்தியிருக்கிறீர்கள். அதாவது அவரிடம் கேள்வி கேட்கும் அனானிகளிடம் கேளுங்கள் அவரின் ஞானத்தை. 32 கேள்வி கேட்பவர், காத்தால 7.43 க்கே கேட்டவர் என வெறும் அனானிகள் மட்டுமே அவரிடம் கேள்வி கேட்கிறார்களே! அதனால் தான் அவரை ஞானகுரு என்கிறீரா? அதுவும் கேள்விகள் 10 வரிகளிலும், பதில் 2 வரியிலும் வருவதால் அவரை ஞானகுரு என்கிறீரா? அல்லது அவர் போட்ட பதிவுக்கு அவரே பாராட்டுப் பின்னூட்டமும், அவரே அனானி பெயரில் கேள்விகளைப் பதிவு செய்வதும் உங்களுக்கெல்லாம் தெரிந்து விட்டதா? அல்லது சோவின் கழிவுகளைப் பதிவேற்றுவதால் அவரை ஞானகுரு என்கிறீர்களா வினவு அவர்களே!
sariyana parvai, vimarsanathhai ethirppavarkal ean sariyana vimarsanathai elutha marukkirargal ??????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!……………………………….a
கொஞ்சநாள் மாடு மேச்சுட்டு வந்து பிறகு பதிவு எழுதவும்.
வினவு வெகுசன வார இதழைப் போலவும், வாரா வாரம் ஏல்லாத்துக்கும் கருத்துக் கந்தசாமி கணக்கா வாந்தி எடுத்தும் வைக்கும் இராயகரன் பாணியிலும் எழுதிக் குவிப்பது வருத்தத்தைத் தருகிறது!
//அதிக ஹிட்ஸ் வேண்டுமென்று எழுத துவங்கினால் சினிமாதான் எழுதவேண்டும் , அதை எழுத நான் தயாராக இல்லை , வாசகனின் தளத்தில் நின்று பேசாமல் வாசகனை நம் தளத்திற்க்கு அழைத்து வருவதே நாம் செய்ய வேண்டிய பணி – யாரோ ஒருவர் சொன்னது .
வினவு , ஹிட்ஸ் வெறி கொண்டு சினிமா பக்கம் திரும்பி அழிந்து போகாதீர்கள் .//
இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
வினவு ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் விமர்சனத்தை எழுதியது மட்டுமல்லாது, இப்படத்தின் விமர்சனத்தை பாருங்கள் என்று பல மாதங்களாக முன் பக்கத்திலேயே விளம்பரமாக வைத்து இருந்தது. இந்த போக்கு நல்லதாக படவில்லை. தயவு செய்து சினிமாவை எழுதி விளம்பரம் தேடிக்கொள்ளாமல் ஏனையவர்கள் மறந்து போன சமூகம் பற்றி , மக்களது வாழ்வியல் பற்றி, அழகிரி போன்ற அரசியல் ரௌடிகளின் அட்டகாசங்கள் பற்றி, ஏனையவர்கள் எழுதப்பயப்படும் அநீதிகள் குறித்து எழுதுங்கள். இவ்வாறான
விடயங்களை தெரிந்து கொள்ளவே என்னைப்போன்றவர்கள் வினவுக்கு வருகிறோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் கொள்ளுங்கள்.
ஜீவா,
உன்னைப் போல ஒருவன் பற்றி பதிவுலகில் பலராலும் பாராட்டப்பட்ட படம். இந்து மதவெறியின் செல்வாக்கு பொதுப்புத்தியில் எப்படி பதிந்து விட்டது என்பதற்கு இது சான்று. அதனால்தான் அதை விமரிசனம் செய்து விரிவாக எழுதினோம். உண்மையில் அந்தப்படம் முசுலீம்களை இழிவு படுத்துவதோடு பாசிச அரசின் தேவையையும் அடிநாதமாக வலியுறுத்துகிறது. இதையெல்லாம் விமரிசனத்தில் எழுதியிருக்கிறோம். அதை வெறும் சினிமா விமரிசனமாக நீங்கள் குறுக்குவது சரியல்ல.
வினவில் வரும் எல்லா கட்டுரைகளும் சமூகம், மக்கள் வாழ்க்கை பற்றியதே. அழகிரி பற்றி கூட தனியாகவே கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். பரிசீலிக்கவும்.நன்றி
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி வினவு.
கேவலம்! கேவலம்.. கேவலம் .. கேவலம்..இப்படி ஒரு கேவலமான கட்டுரைய வேற யாரும் எழுதி இதுவரைக்கு பார்த்தது இல்லை. ஒரு எழவும் புரியல என்ன தமிழ் இது? தமிழ் மொழி பெயர்ப்பான் வந்தாலும் வந்துது..இந்த மாதிரி ரெண்டு கேட்டான் பசங்கள் எல்லாம் கட்டுரை என்ன்ற பெயர்ல வாந்தி எடுக்க வந்துடறாங்க . கேவலம் குப்பை மாதிரி இருக்கு. தமிழ் கொலைன்றது இது தானோ? ஒரு வாக்கியம் தெளிவா இருக்கா? ஒரு வார்த்தை புரியற மாதிரி இருக்கா? படிக்கற அப்போ குப்பையா கிளர்ன மாதிரி இருக்கு. பேசாம வினவு.காம் பதிலா குப்பை.காம் ன்னு மாதி தொலைங்க. என்ன பண்றது படிக்கும்போது கேவலமாதான் இருக்கு. வெட்டியா பொழுது போக வேண்டாமா? இந்த குப்பை.காம் க்கு கேள்விகுறி மாதிரி கேவலமான அல்லக்கை ரசிகர்கள் வேற. கேள்விக்குறிக்கு பதிலா குப்பைபொறுக்கி ன்னு மாதி வசிக்குடா.
இதற்கு முன் செல்வராகவன் எழுதிய ஒரு வீணா போன ஒரு கட்டுரையில் தான் பல பெண்களை காதலித்து ஏமாந்ததாகவும்(இந்த மெண்டல எந்த பொண்ணு லவ் பண்ணான்னு தெரியல)காதல் கொண்டேன் மற்றும் 7/G படங்கள் தன சொந்த சோக கதையே என்றான்.
இந்த படத்தில் காண்டம் இருக்கு வரியான்னு பொண்ணுங்களை கேட்கும் கார்த்தி கதாபாத்திரமும் இவனின் சொந்த பிரதிபலிப்பே(சோனியா அகர்வால் ஏன் இவனை விட்டு ஓடி போனான்னு இப்போ தெரியுது..பின்ன போற வர பொண்ணுங்க கிட்டைஎல்லாம் இவன் காண்டம் இருக்கு வரியான்னு கேட்ட எந்த பொண்ணுதான் இவன் கூட வாழ்வா?)
உலகத்தரமான படம் எடுக்கிறேன் என்று மார்தட்டும் அறிவிலிகள் செய்வது ஒன்றுதான் பல வெளிநாட்டு படங்களை பார்த்து அதிலிருந்து காட்சிகளை சுடுவது மட்டுமே.ஆனால் இந்த முண்டங்கள் வாசிப்பு என்று ஏதாவது செய்வார்கள என்றால் நிச்சயம் தினசரி கூட படிக்காத முண்டங்கள் என தெரியும்.பண்டைய வரலாறு தெரியாத ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு கொண்டு ஸ்காட்சில் பெண்களுடன் மூழ்கியிருக்கும் செல்வா போன்ற கழிசடைகள் வரலாற்று படம் எடுக்காமல் இருப்பது வரலாற்றிற்கு செய்யும் மரியாதை ..இவன் பேசாமல் வழக்கம் போல் சோனியா அகர்வாலை வைத்து படுக்கையறை காட்சிகளுடன் ஒரு தாடி வைத்த ஒரு தறுதலையை கதாநாயகனாக போட்டு எடுக்கட்டும்..(இவனின் தம்பி கொசு இருக்கவேஇருக்கிறான்)
இந்த கட்டுரைக்கு ஆயிரத்தில் ஒருவன் படமே மேல்.. படமாவது கொஞ்சமாவது புரிஞ்சுது…. இந்த கட்டுரை ஒரு எழவும் புரியல… யாராவுது தமிழ் கோனார் நோட்ஸ் இருந்தா கொடுங்கப்பா…
ஹாய் மோகன் கரெக்டா சொனீங்க. கேள்விகுறி ன்னு ஒரு அல்லக்கை ரசிகர் எதுக்கு எடுத்தாலும் ஆம்மாம் சாமி போடறவர் இருகார். அவர் கிட்ட இருக்கும்ம்னு நினைகிறேன். அந்த அடிவருடி கிட்டே இருக்கலாம்.
இந்த குப்பை கட்டுரையில “விளிம்பு நிலை மக்கள்” அப்படின்னு அடிக்கடி வாந்தி எடுத்து வச்சிருக்காங்க. அப்படின்னா என்னங்க கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன். ப்ளீஸ். ரொம்ப வித்தியாசமா இருக்கு! அது எந்த விளிம்புங்க? சுவர் மேல விளிம்பா? இல்ல இமயமலை விளிம்பா? இல்ல எந்த விளிம்பு? ப்ளீஸ் கொஞ்சம் அந்த அடிவருடி வச்சிருக்குற கோனார் நோட்ஸ் ல இருந்து பாத்து சொல்லுங்க.
ஒரு ஆழமான விமர்சன முயற்சிக்கு அபத்தமான பின்னூட்டங்கள் மட்டுமே வந்து சேர்ந்திருக்கின்றன… ஒற்றை இலையாய் நந்தா மாத்திரம் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். நந்தாவினுடைய புதிய கலாச்சாரம் திரை விமர்சனங்கள் குறித்த முன்முடிவுகள் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. அது அவர் விருப்பம். மற்றபடி, அடிப்படையில் நந்தாவினுடைய கருத்துக்கள் கட்டுரை குறித்து பலவீனமான புள்ளிகளில் நின்று விவாதிக்கிறது. கட்டுரையின் மையமான விசயத்தை விளங்கிக் கொள்வதற்கான இயலாமை அல்லது விருப்பமின்மையில்தான் அவரது விமர்சனம் குடி கொண்டிருக்கிறது.
//ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.//
//செல்வராகவன் முன்னரே சொன்னபடி எந்த அறவுணர்ச்சியிலோ, வரலாற்று உணர்ச்சியோலோ இந்தக் கதையை கட்டியமைக்கவில்லை. அவரது வினோதமான பாத்திரங்களும் அந்த வினோதத்தை விகாரமாக காட்சிப்படுத்தும் வடிவமும்தான் இந்தப்படத்தின் கலை ஊற்று.//
//தமது மலசல தங்கக் கழிப்பறையை பெருமையுடன் காட்டுவார்கள். இந்த ஃபேண்டசியின் உணர்ச்சி என்ன? வக்கிரம்? எனில் அதுதான் ஆயிரத்தில் ஒருவனின் உணர்ச்சியும் கூட.//
வினவின் மையமான விமர்சனம் இதுதான். ஆனால், இந்த மையப் புள்ளியை விட்டு விட்டு, ரீமா சென்னின் நடிப்பு, வேட்டைக்காரன் என விமர்சனம் முன்வைக்கிறார் நந்தா. மேலும், மேற்கூறிய இதர விசயங்கள் ரசிக மனதின் உளவியலை குறித்து வினவு எழுப்பிய கேள்விகள். இதனை வினவும் சுட்டிக் காட்டியிருக்கிறார். எனவே, கட்டுரையின் மையப் புள்ளியில் நின்று விவாதிப்பது நல்லது. அந்த மையப் புள்ளி சரியானது.
ஆனால், அதே வேளை, வினவின் விமர்சனத்தில் ஒரு மாறுபட்ட கருத்து உள்ளது. அது எல்லா விசயங்களையும் செல்வராகவன் கேவலப்படுத்தியிருப்பதாகக் கூறுவது. அது புரியவில்லை. பழங்குடிகள், கடல், பாலைவனத்தையெல்லாம் எந்த வகையில் செல்வராகவன் கேவலப்படுத்தியிருக்கிறார்?
ஓஹோ இது ஒரு ஆ ஆஆஆஆஆஆழமான முயற்சியா? ஓகே ஒத்துக்குறேன். ஆனா எழுதுற தமிழ கொஞ்சம் ஒழுங்க எழுதுனா நல்லா இருக்கும். தான் எழுதுறது தான் தமிழ்- என்ன கேக்க எவன் இருக்கான் என்ற திமுருல கிறுக்க கூடாது. “விளிம்பு நிலை மக்கள்” இந்த வார்த்தை எல்லாம் எங்க இருந்து கண்டுபிடிகிறாங்க?
வெட்டிப்பயலே! உன்னோட பின்னூட்டமே உன்கிட்ட எழுதுறதுக்கு சரக்கு இல்லங்கறத காட்டிடுசே,அப்புறம் ஏன் திரும்ப திரும்ப வந்து பின்னூட்டம் போட்டுக்கிட்டு irukke…
வந்துட்டார்ர கிளர்ச்சியாளர்!! நான் முன்னாடியே
சொல்லிட்டேன் வெட்டிபய ன்னு. அதனாலதான் இங்க
வந்து பின்னூட்டம் எழுதுறேன். சாருக்கு கோவத்த பாரு.
ஒழுங்க சம்பளத்துக்கு வேலைய பாருடா. உன்னோட ஆபீஸ்ல உன் வெத்து சரக்க எடுத்து உடரதுக்கு தான் கம்ப்யூட்டர் குடுத்து சம்பளம் தராங்களோ? வேலைய பாருடா.
வெண்ணிற இரவுகள்
says: February 4, 2010 at 1:57 pm
வினவு உங்கள் மற்ற விமர்சனம் சரி ஆனால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை …………..கதாநாயகன் ஒரு பொறிக்கி, நாயகிகள் மேட்டுக்குடி ரகம்…..படத்தில் சாதாரண தொழிலாளி பாதிக்க படுகிறான் என்று கார்த்தி சொல்வார் ….துன்புறுத்த படுவார் ………இதில் ஆதிக்க மக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று தானே சொல்ல முடியும்….
ஆதிக்க மக்களின் வக்கிரத்தை வக்கிரமாய் தானே காட்ட முடியும் ….
மற்றபடி நீங்கள் சொன்ன பின்நவீனத்துவ கருத்துக்களுக்கு உடன்படுகிறேன் ……………..
காட்டு மக்களை யாரும் கேவலபடுதவில்லை அவர்கள் விரட்டபடுகிறார்கள் என்ற காட்சி அமைப்பே அது ………எனக்கு அப்படி தான் புரிந்தது என் நண்பர்களுக்கும் அப்படி தான் புரிந்தது ……………..வினவின் மற்ற பட விமர்சனம் போல இந்த விமர்சனம் இல்லை …..3 IDIOTS படத்தை நான் பாராட்டி இருந்தேன் உங்கள் விமர்சனம் படித்து மாற்றி கொண்டேன்….
நான் ரசித்த பொக்கிஷம் அழகி மற்றும் பல படங்களை “சினிமா திரை விலகும் போது” படித்து மாறி இருக்கிறன் ….இந்த விமர்சனம் ஒன்று தவறாய் இருக்க வேண்டும் ….இல்லை என்றால் எங்களுக்கு புரியாமல் நீங்கள் எழுதி இருக்கலாம் …..ஏன் என்றால் இதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ….ஒன்று ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் சரியாக விளக்குவது வினவின் கடமை
வெண்ணிற இரவுகள்,
மேலே போராட்டம் குறிப்பிட்டுள்ள மறுமொழியை பார்க்கவும். அதுதான் இந்தப்படத்தைப் பற்றிய மையமான விமரிசனம். அதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ஆயிரத்தில் ஒருவன்… இன்னும் சொற்ப நாள்களில் திரையரங்கைவிட்டே ஓடி போயிவிடலாம். தோல்வியடைந்தற்கே…. பதிவுலகில் நூற்றுக்கணக்கான விமர்சனங்கள்: பாராட்டுகள் என்றால்… ஒருவேளை வெற்றியடைந்திருந்தால்… இந்த வினவின் விமர்சனத்திற்கு இப்பொழுது கிடைக்கிற திட்டுக்களை விட அதிகமாகவே கிடைத்திருக்கும்.
//ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.//
செல்வராகவன் ஒரு பேட்டியில்… சோழர்களின் வாழ்வை, வரலாற்றை படித்துவிட்டு தான் படம் எடுத்ததாக ஒரு பேட்டியில் கேட்டதாக நினைவு. “படம் முழுவதும் கற்பனையே” என்ற பேட்டி கூட சென்சார் கட்டாயப்படுத்தி தான் துவக்கத்தில் போடுகிறார்கள்.
32 கோடி – செல்வராகவன் துவக்கத்தில் ஒரு பட்ஜெட்டை சொல்லி… பின்பு பெரிய பட்ஜெட்டாக இழுத்து விட்டு விட்டார் என்று தான் செய்தி கேள்விபட்டேன்.
மேலும்… விமர்சனத்தின் மையக்கருத்தில் உடன்படுகிறேன்.
வினவு திரை விமர்சனம் எழுதினால்…. சிலர் மனம் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வருத்தப்படுவது இருக்கட்டும். வினவில் தொடர்ச்சியாக முக்கிய படங்களுக்கு விமர்சனம் எழுதுவது ஆரோக்கியமான ஒன்று தான்.
வினவு உங்கள் மற்ற விமர்சனம் சரி ஆனால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை …………..கதாநாயகன் ஒரு பொறிக்கி, நாயகிகள் மேட்டுக்குடி ரகம்…..படத்தில் சாதாரண தொழிலாளி பாதிக்க படுகிறான் என்று கார்த்தி சொல்வார் ….துன்புறுத்த படுவார் ………இதில் ஆதிக்க மக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று தானே சொல்ல முடியும்….
ஆதிக்க மக்களின் வக்கிரத்தை வக்கிரமாய் தானே காட்ட முடியும் ….
மற்றபடி நீங்கள் சொன்ன பின்நவீனத்துவ கருத்துக்களுக்கு உடன்படுகிறேன் ……………..
காட்டு மக்களை யாரும் கேவலபடுதவில்லை அவர்கள் விரட்டபடுகிறார்கள் என்ற காட்சி அமைப்பே அது ………எனக்கு அப்படி தான் புரிந்தது என் நண்பர்களுக்கும் அப்படி தான் புரிந்தது ……………..வினவின் மற்ற பட விமர்சனம் போல இந்த விமர்சனம் இல்லை …..3 IDIOTS படத்தை நான் பாராட்டி இருந்தேன் உங்கள் விமர்சனம் படித்து மாற்றி கொண்டேன்….
நான் ரசித்த பொக்கிஷம் அழகி மற்றும் பல படங்களை “சினிமா திரை விலகும் போது” படித்து மாறி இருக்கிறன் ….இந்த விமர்சனம் ஒன்று தவறாய் இருக்க வேண்டும் ….இல்லை என்றால் எங்களுக்கு புரியாமல் நீங்கள் எழுதி இருக்கலாம் …..ஏன் என்றால் இதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ….ஒன்று ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் சரியாக விளக்குவது வினவின் கடமை
மிகவும் அருமையான விமர்சனம் . இயக்குனர் ஒரு சைக்கோ என்பதை மறுபடியும் காட்டி உள்ளார். இந்த படத்தை நல்லா இருக்கு என்று சொல்பவர்கள் வரலாறு தெரியாதவர்கள். ஒன்று நன்றாக எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் எடுக்க கூடாது . படுக்கை அறை காட்சி வைத்து விட்டால் ஹாலிவுட் அளவிற்கு படம் எடுத்து விட்டதாக பீற்றி கொள்ளும் செல்வராகவன் இது தான் செய்ய முடியும் . நண்பர் சொல்வது போல் செல்வா வரலாற்று படம் எடுக்காமல் இருப்பது தமிழ் வரலாற்றுக்கு நல்லது. என்னுடன் படம் பார்க்க வந்த நண்பன் சொன்னது – வேட்டைக்காரன் படத்தை தினமும் பார்க்க சொன்னால் கூட பார்க்க முடியும் , ஆனால் இந்த படம் குப்பை என்று . அதை வினவு சொல்லி இருப்பது மிகவும் அருமை . உண்மை .
தொடர்ந்து சினிமா விமர்சனம் எழுதுங்க.
திரைப்படமொழியில் ‘Genre’ என்று ஒரு வார்த்தை உண்டு. நம் படைப்பாளிகளும் விமர்சகர்களும் அறிந்ததுதான். ஒரு திரைப்படம் இன்னவகையைச் சார்ந்தது என்பதை எளிதில் பகுத்துணர்வதற்காக இந்த ‘Genre’ -ஐக் குறிப்பது வழக்கம். ‘ஃபேண்டஸி’ என்பது இந்த ‘Genre’-ல் ஒருவகை. ஆங்கிலத்தில் சமீப காலத்தில் பெருவெற்றியடைந்த ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’, ‘ஹாரி பாட்டர்’, ‘மம்மி’ இப்போதைய ‘அவதார்’ எல்லாம் அந்த வகையில் வருபவை. தமிழில் இப்படியான தெளிவான ‘Genre’ முயற்சிகள் அதிகம் இருந்ததில்லை. சாத்தியமானதும் இல்லை. விட்டலாச்சாரியா போன்ற ஆசாமிகள் செய்ததையெல்லாம் ‘ஃபேண்டஸி’ என்று வரையறுக்கமுடியாது. ஃபேண்டஸியோ, காமெடியோ, க்ரைமோ இங்கே படைப்பாக்கத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் அவியல் தன்மையை விலக்கி திட்டவட்டமாக ஒரு ஃபேண்டஸியை ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ போன்ற சில படைப்புகள் முயற்சித்திருக்கின்றன. ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ கூட ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘மம்மி’ போல முற்றிலுமான கற்பனைக் கதையே. ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி வரலாற்றின் ஊடாக ‘ஃபேண்டஸி’ என்னும் பெயரில் குறுக்குசால் ஓட்டும் வேலையை அப்படங்கள் செய்ததில்லை. முந்தைய நூற்றாண்டுகளின் வரலாற்றை ஆதிக்கசக்திகள் கல்வியறிவின் துணைகொண்டு தங்களின் வசதிக்குத் திரித்து எழுதிய வேலையை ‘முற்றிலும் கற்பனை’ என்னும் சால்ஜாப்போடு செல்வராகவன் செய்யமுனைந்திருக்கிறார். எதிர்காலத்தில் ‘சும்மா லுலுளாட்டிக்கு…’ என்று இதேபோல ‘பெரியார் திண்டுக்கல் கோவில் ஒன்றில் அர்ச்சகராக வேலைபார்த்தபோது…’ ‘ராஜகோலாபாச்சாரி பெருந்துறை பேருந்து நிலையத்தில் அருந்ததியரின் கழிப்பறையைச் சுத்தம் செய்தபோது…’ என்றெல்லாம் செல்வராகவனின் வரலாற்றுக் கற்பனைகள் புதிய புதிய ஃபேண்டஸிக்களை உருவாக்கக்கூடும்… அப்போதும்கூட நாம் இப்படித்தான் வகை வகையான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ப்ளாக்குகளை நிரப்பிக்கொண்டிருப்போமா…? வெகுமக்கள் இடதுகாலில் எற்றித்தள்ளிவிட்ட ஆயிரத்தில் ஒருவனின் கொட்டகைக் கதவுகளை இறுக்கிமூடித் தாளிட்டு ஆகிற வேலையைப் பார்ப்போம் வாருங்கள் வினவு!
அருமையான பின்னூட்டம். நன்றாக இருந்தது.
//உன்னைப் போல ஒருவன் பற்றி பதிவுலகில் பலராலும் பாராட்டப்பட்ட படம். இந்து மதவெறியின் செல்வாக்கு பொதுப்புத்தியில் எப்படி பதிந்து விட்டது என்பதற்கு இது சான்று. அதனால்தான் அதை விமரிசனம் செய்து விரிவாக எழுதினோம். உண்மையில் அந்தப்படம் முசுலீம்களை இழிவு படுத்துவதோடு பாசிச அரசின் தேவையையும் அடிநாதமாக வலியுறுத்துகிறது//
நிறுத்து. முஸ்லிம் பார்வையாளர்கள் அதிகம் வருவாங்கன்னு நீ நினைத்தது தான் சரி.
சமூக அக்கறை உடன் விமர்சிப்பதென்றால் எத்தணை தமிழ் படம் தேறும்? பொதுவில் நல்லதொரு பார்வை பாராட்டுக்கள்
நல்ல படங்களை விமர்சிக்காமலும் இருக்கலாம் ஆனால் இது போன்ற ஆபாச குப்பையை விமர்சிக்காமல் இருப்பது பிற்காலத்தில் இது போன்று பல குப்பைகளை சேர்த்து விடும்.
பண்டைய கால தமிழனின் வரலாற்றில் சானி அடித்திருக்கும் செல்வா போன்ற மறை கழன்றவர்களை அகிரா குரசொவவுக்கு நிகராக ஒப்பிடும் சில கேடு கேட்ட விமர்சகர்கள் இருப்பதால்தான் இவன் போன்ற ஆபாச வெறி பிடித்தவர்கள் இன்னும் இயக்குனர்கள் என மார் தட்டி அலைகிறார்கள்.
இது கேடு கெட்ட படமா ? ஹலிவுட் , கோலவுட் பக்க்கம் அண்ன்ணன் போனது இல்லலஐயா?
நன்றி வினவு, விமர்சனம் நன்று. உண்மையில் ஆயிரத்தில் ஒருவனில் ஒரு வெங்காயமும் இல்லை.
என்ன எழுத வந்தீஙக என்னும் எழவு எனக்கு கடைசி வரை விள்ங்கலை. அதாவது நீங்க சசல்வ ராகவனை மறுக்கறீங்களா, ஆயயரத்தில் ஒருவனை மறுக்கறீங்களா? தயவு செய்து தனி மனித துவேசம் வேண்டாமே? அப்புறம் அரசியல் வியாபாரிகளுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்.?
செல்வா உண்மையில் கொடுத்து வைத்தவர் தான்.. படம் ஓடுதோ ஓடலையோ ஆனால் கதை புதுசு. அண்ணன் கமலின் பேசும் படம் குரிதிபுனல் அப்புறம் அத்தி பூத்த மாதிரி ஆயிரத்தில் ஒருவன்.
அஞ்சு பாட்டு , காதல் , மூணு சண்டை இருந்த நீங்க இவ்ளோ பெரிய வியாக்கியான ஒப்பீடு எழுதி இருப்பீங்களா ?
நீங்களும்மா அரைவேக்காட்டு கூட்டம் ???
King soloman’s mines(1985) படத்தின் அப்பட்டமான காப்பி இது செல்வாவின் சொந்த சரக்கு அல்ல. அந்த இங்கிலீஷ் படம் எந்த வக்கிரம் இல்லாமல் நன்றாக இருந்தது செல்வா தன்னுடைய வக்கிரங்களை கொட்டி சோழர் என்று புருடா விட்டு தமிழுக்காக மாற்றி எடுத்துள்ளான். அந்த படத்தை DVD பார்த்து திருடி படம் எடுத்தால் அவங்களுக்கு ராயல்டி கொடுக்காத செல்வா ஒரு திருடன். காப்பி எடுத்ததை ஒப்புகொல்லாத கோளை. சந்தேகம் இருந்தால் இங்கிலீஷ் படத்தை DVD or net இல் பாருங்கள்.
சரியான விமர்சனம். செல்வராகவன் என்ன அவர் அப்பன் வீட்டு காசைய செலவு செய்கிறார். யாரோ ஒரு இளிச்ச வாயன் தயாரிப்பாளர் பணம் கொடுக்கிறான் அதனால் அல்லிவீசத்தான் செய்வார். ஊரான் வீட்டு நெய்ய யன் பொண்டாட்டி கையே பழமொழி நினைவுக்கு வருகிறது. இவர்களுக்கு சமூக அக்கறை ஒன்றும் கிடையாது தங்கள் பக்கெட்டு நிறைய என்னவேண்டுமானாலும் செய்வார்கள் இந்த நவீன சினிமா கூத்தாடிகள்.
King soloman’s mines(1985) படத்தின் அப்பட்டமான காப்பி இது செல்வாவின் சொந்த சரக்கு அல்ல. அந்த இங்கிலீஷ் படம் எந்த வக்கிரம் இல்லாமல் நன்றாக இருந்தது செல்வா தன்னுடைய வக்கிரங்களை கொட்டி சோழர் என்று புருடா விட்டு தமிழுக்காக மாற்றி எடுத்துள்ளான். அந்த படத்தை DVD பார்த்து திருடி படம் எடுத்தால் அவங்களுக்கு ராயல்டி கொடுக்காத செல்வா ஒரு திருடன். காப்பி எடுத்ததை ஒப்புகொல்லாத கோளை. சந்தேகம் இருந்தால் இங்கிலீஷ் படத்தை DVD or net இல் பாருங்கள். இந்த தகவலை சொன்ன நண்பருக்கு நன்றி. எந்த படத்தை தான் இவர்கள் சொந்தமாக எடுத்தார்கள் இந்த மணிரத்தினம் இவன் எடுத்த நிறைய படங்கள் இப்படித்தான் நாயகன் படம் காட் பாதர் ஆங்கில படத்தின் காபிதான். இவனெல்லாம் பெரிய இயக்குனர். ஒன்னு ஹிந்தி படத்தை காப்பி பண்ணுவாங்கள் இல்லை ஆங்கிலப்படத்தை காப்பி பண்ணுவாங்க இதன் இவனுங்க வேலை.
ஐயா வினவு நீங்கள் ஏன் திரைப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதி உங்க நேரத்தை வீண் பண்ணுகிறீர்கள். இந்த கலை கூத்தாடிகளுக்கு கொள்கைகள் எல்லாம் கிடையாது. இவர்கள் தங்கள் வயிறு வளர்க்க தாங்கள் சுகமாக வாழ எதையும் செய்வார்கள். எந்த சினிமா காரனாவது ஏழை எளிய மக்களுக்கு நன்மை உண்டாக்கும் ஏதாவது காரியத்தை செய்துள்ளனா சொல்லுங்கள். கட்சி தொடங்க ரசிகர் மன்றங்கள் அமைத்து சினிமாவில் மக்களை ஏமாற்றியது போல நிஜ வாழ்க்கையிலும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் எதவாது கொஞ்சம் பணத்தை செலவு செய்திருப்பார்கள். இவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் இருந்து இவர்கள் ஒழுங்காக அரசுக்கு வருமானவரி செலுத்தி இருப்பார்களா? இவர்களை மாதிரி இலகுவாக சம்பாதிக்க யாரால் முடியும் ஒரு படத்துக்கு எத்தனை கோடி வாங்குகிறார்கள். இன்று தமிழகத்தின் தேவை நக்சல் பரிகள். இவர்கள் போல் ஒரு ஆயூதம் ஏந்திய கூட்டம் இந்த பணக்கார kottangalidam இருந்து panamgalai parithtu ஏழை மக்களுக்கு kodukkum kaalam varavendum..
லீனா மணிமேகலை போன்ற COCKtail பெண்ணியவாதிகளிடம் கேட்டால் சங்க காலம் தொட்டு, ஈழக்காலம் வரை ஆணின் குறி போல ஆட்டம் போடும் போர்வெறியின் நள்ளிரவு தாக நீட்சியை, அற்புதமான உள்ளொளி புனைவு படும பராக்கிரமங்களின் வழி படம் உரசுகிறது என்று சொல்லலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்தான். முடியல்ல…. அஆவ்வ்வ்வு
என்னை பொறுத்தவரை இந்த படம் செல்வராகவனின் கொடூர குணத்தினை 32 கோடி ரூபாய் துணையுடன் பிரதிபலித்துள்ளது. 60 % காட்சிகளில் ஒரே ரத்த களரி. காரணம் கேட்டால் போரில் அப்படி நடப்பது இயல்பு என்பார்கள். இயல்பாகவே இருந்தாலும் இப்படி ஒரு காட்சியை பார்க்கும் ஒரு தடுமாறும் மனதுள்ள மனிதனுக்கு எப்படி ஒரு கொடூர எண்ணங்கள் ஏற்படும் என்பது அந்த முட்டா* இயக்குனருக்கு தெரியாதா? இதனை நிஜமாக குழந்தைகளுடன் சென்று சந்தோஷமாக பார்க்கமுடியும் எனில் அது ஒரு கொலையை பார்த்து ரசிப்பதற்கோ அல்லது ஒரு ஆபாச படத்தை பார்ப்பதற்கோ சமம். அதிலும் அந்த குண்டன் கல்லை வைத்து மக்களை கொல்லுவதில் தெரிகிறது இயக்குனரின் கீழ்த்தனமான குரூர சிந்தனை. மேலை நாடுகளில் உள்ளதை போல இங்கேயும் சைக்கோகளை உருவாக்குவது தான் இது போன்றவர்களின் நோக்கம் போலும்… யாரடி நீ மோகினி பார்த்து பாராச்சியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதே போன்று ஆயிரத்தில் ஒருவனை பார்த்து கொதித்த பலரில் நானும் ஒருவன்…. இது போன்ற சைக்கோ படங்களுக்கு மக்கள் ஒரு போதும் ஆதரவு அளிக்கவே கூடாது.
என்னமோ சொல்லனும்னு தோணுது, ஆனா அது என்னன்னுதான் புரியல
சொல்வதெல்லாம் சரியான விசயம்தான் ஆனால் மிக நீண்ட கட்டுரையாக எழுதுவதை தவிர்த்து சுருக்கமாக கூறினால் அனைவரும் படிக்க வசதியாக இருக்கும்!!!!