முகப்புஉலகம்ஈழம்லீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!

லீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!

-

vote-012நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-லீனா மணிமேகலை


கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள்  கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில விசிலடிச்சான் குஞ்சுகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும்  ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு”  தீனி போடுவதுதான்  லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது.செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை  கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய  கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும்  ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது  லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு.  ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின்  ரத்தத்தை உறிஞ்சிக்  கோலோச்சும் இந்தத் துறையில்  ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள்  லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன்  இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம்  போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம்.  ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம்.  சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை,  தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது.  மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம்.  நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா  மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும்  அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது.  போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா,  அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான  தொடர்பு  தரும் திமிரா  என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா.  இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன்,  தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின்  மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார்.  மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட  லீனா  “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது.  ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத்  தெரிந்த பலருக்கும்…..  கடைசியாக இராஜபக்சேவுக்கும்  ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம்.  இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக  போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில்  இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

——————————–

பின் ‘குறி’ப்பு: மைனர் கெட்டால் மாமா என்பார்கள். போலி கம்யூனிஸ்டு குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கமும் உள்ளவர் லீனா. அதான் இந்த லச்சணம்!

ரெண்டு மூணு சீட்டுகளுக்காகத்தன் அந்த அம்மாவிடம் மானத்தை அடகு வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.  லீனாவின் அலப்பரைகளும் கூட இவர்களுடைய தோலில் கொஞ்சம் கூட உரைக்கவில்லையே! மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. எழுதட்டுமே. எழுதும்போதே வாசிப்பவன் புரிந்துகொள்ளமாட்டானா? புரிந்து கொள்ள வேண்டாமென்று முடிவெடுத்தவன் எதைப் படித்து என்ன செய்யப்போகிறான்?
  ஆனாலும் பெண்கள் எழுதவேண்டும் என்பதற்கான எதிர்ப்பாய் இதை யாரும் திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.

  • அன்பார்ந்த நண்பர்களே,
   வேலை நெருக்கடி காரணமாக இந்தக்கட்டுரைக்கான விவாதங்களில் உடனுக்குடன் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். கூடிய விரைவில் எமது கருத்துக்களை தெரிவிக்க முயல்கிறோம். மற்றபடி பொருளார்ந்த முறையில் விவாதம் நடப்பதற்கு வாழ்த்துக்கள்.

  • கை.அறிவழகனின் பதிவில் காணப்படும் நேர்மையைப் பாராட்ட வேண்டும், மேலும் பெண்ணியம் என்றால் உறுப்புகளைப் பற்றியது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கும் பெண்ணியவாதிகளையும் தொளுரித்திருக்கிறார். ஆனாலும் இவர்கள் யாரும் திருந்த மாட்டார்கள். நன்றி அர டிக்கெட்டு, இணைப்புகளுக்கு.

  • தன்னை முன்னிலைப்படுத்த ஏதாவது ஒரு கருவியைத் தேடிக்கொண்டிருக்கும் சூழலில் , உடல் அரசியலை வைத்து லீனா மணிமேகலை , யோனி – ஆண் குறி என்று கவிதை எழுதிப் பிழைப்பதெல்லாம் அபத்தம் .

   புரட்சி – முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு , தழைகீழாய் நடந்தால் உலகம் உடனே நம்மைத் திரும்பிப் பார்த்து விடுமென்ற நினைப்பு இவருக்கு ….!

 2. சபாஷ். அப்படி போடுங்க அருவாளை.
  நாட்டாமை வந்துட்டார். சொம்பை எடுத்து மறைச்சு வையுங்க.
  லீனாவின் கவிதைகள் சரோஜாதேவி புக் படித்த எப்பெக்டு குடுக்குது.
  லீனா மணிமேகலை பல ஆண்குறிகளை பார்த்து பக்குவப்பட்டவர் போல் உள்ளதே.
  இந்த லீனா லீனா ன்னு சொல்றீங்களே அது யாருங்கோ. வேலு பிரபாகரனின் ஒரு படத்தில் அவுத்து போட்டு நடிச்சதே அதுவாங்கோ.

 3. நிறைய கோபத்தோடு எழுதியிருக்கிறீர்கள். நியாயமான கோபம்.

  சிபிஐ க‌ட்சி தொட‌ர்பால், கட்சி ரீதியான ப‌ல‌ மாநாட்டுகளுக்கு பல நாடுகளுக்கு சென்ற‌வ‌ர் இந்த‌ லீனா. நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரிதான்.

 4. “ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப்” போட்டு “கட்டவிழ்ப்பு” செய்வது எப்படி என்று, இந்தப் பதிவைப் படித்து லீனா தெரிந்து கொள்ளலாம். இந்தப் “பிரதி”யிலிருந்து தான் எத்தகைய பிரகிருதி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

 5. மார்க்ஸ் செல முன்னாடி கவுண்டமணியே கூசிப்போகுற அளவுக்கு என்னா பக்தியோட கையகட்டி நிக்குறாவுக.. பக்கத்துல சோபா வேற.. என்னமோ போங்க 

 6. ஜார்ஜ் கார்லின் தன்னுடைய நகைச்சுவையான அமெரிக்க விமர்சனத்தில் கூறியவற்றை எல்லா தளத்திற்கும் லீனா பொருத்திப் பார்க்கிறாரா?

 7. இதைப்போன்ற வெங்காயங்கள் நிறையவே உலாவுகின்றன. அனைத்து பிரச்சினைகளையும் தன் பெண்ணுறுப்பு ஊடாகவே எதிர்கொள்வது என்ற கொள்கையை கொண்ட எழுத்து நாய்கள். இவர்களெல்லாம் தன்னை எங்கும் பெண்ணுறுப்பாக எதிலும் போய் காண்பித்துக்கொள்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு தப்பாமல் பிறந்தவர்கள் எதற்கும் எல்லா பிரச்சினைக்கும் காரணம் வர்க்கமல்ல பெண்ணுறுப்புதான் என்று புளங்காகிதமடைகிறார்கள்.

  சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து சினிமாவுக்கு சான்ஸ் கேட்க போயிருந்தால் அவரின் கவிதைகளுக்கு மேலேயே உறுப்புகள் முனகியிருக்கும். லீனாமுதல் பெண்ணிய கவிதைகள் எழுதிக்கொள்வதாய் கூறும் பலரும், பலருக்கும் ஒரே அப்பன் தான் அது ஏகாதிபத்திய அடிமைத்தனம். இவர்களின் கவிதைகளைப் பார்த்தோ படித்தோ ஏதாவது இப்போது சான்ஸ் கிடைக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கத்தை உறுப்பாக கொச்சைப்படுத்தும் இவர்கள் கிழிக்கப்பட வேண்டியதுதான் இன்றைய தேவை.

  ஒரு சந்தேகம் லீனாக்கள் தாங்கள் ஹோட்டலில் சாப்பிடும் போது சர்வரையோ, ரோட்டில் நடக்கும் போது மற்றமக்களையோ உறுப்புக்களாகத்தான் பார்ப்பார்கள் போலிருக்கிறது என்றாவது அதிகாரவர்க்கத்தின் உறுப்புகளை சீண்ட தயராயிருப்பார்களா!!!!!!!

  கலகம்

  • அப்புறம் வினவு ,

   இதையெல்லாம் பெண் என்று சொல்லவேண்டாம், உறுப்போட பிறந்த ஜந்து எனச்சொல்லுங்கள்,
   தன்னை மதிக்காத மக்களை மதிக்காத இவர்களை எப்பவோ மனுசங்க லிஸ்ட்லிருந்து தூக்கியாச்சு.
   இன்னொரு சந்தேகம்
   எல்லோர் உறுப்பையும் ஆராயுறாங்களே
   ஊதைவாயன் சங்கரன் உறுப்பையும் ஆராஞ்சாங்களா
   எதற்கெடுத்தாலும் உறுப்பு, உறுப்பு உறுப்புன்னு புலம்புற இவங்கள Dr.ருத்ரன் மாதிரி நல்ல சைக்காலஜிஸ்ட்ங்ககிட்டதான் அனுப்பனும்

   • What she wrote is ” obscene ” and it is a penal offence under I.P.C. Those who don’t like it can go and file complaint in Police station and let the court decide it .

  • கலகம், உங்கள் விமரிசனங்களில் பொருளின்றி திட்டுவதே அதிகமிருக்கிறது. தோழர்கள் என்றால் இப்படித்தான் என்று முத்திரை குத்துதவதற்கே பயன்படும். வாதத்தில் முன்னேறுவதற்கு உங்கள் சிந்தனை கஷ்டப்படுகிறது என்பதே எனது கருத்து.

 8. உங்களின் இந்த பதிவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லாவற்றையும் கேட்டே தீர்ப்பெழுதிவிடுவதும் சொந்த வாழ்வில் அத்து மீறி நுழைவதும் விமர்சனத்திற்கும் வினவிற்கும் அழகில்லை.

  • உழைக்கும் மக்களின் வாழ்வினைப்பற்றி, போரில் சாகும் மக்களைப்பற்றி கொச்சைப்படுத்த இது அவர்களை கேட்டதா? மக்களை மதிக்காத வாழ்க்கையை கிழிப்பது தப்பில்லை. டென்சன் ஆவாதீங்க அய்யனாரே !!!!!!
   இதெல்லாம் ஒரு குரூப்பாத்தான் திரியுதுங்க இப்புடி ஒரு வாய்ப்ப கொடுத்த வினவுக்கு நன்றி

   • தகுந்த ஆதாரம் இல்லாமல் “அவர் சொன்னார்” “இவர் சொன்னார்” என்று எழுதுவதைத்தான் அய்யனார் குறைசொல்கிறார். சம்மந்தபட்டவர்களிடம் அனுமதி பெற்றுதான் அவர்களைப்பற்றி எழுதவேண்டும் என்று நீங்கள் புந்துகொண்டீர்கள்.

    என்னைப் பொருத்தவரை லீனாவைப் போல எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களை விமர்சிக்கும் போது பெயர், சாதி,மதம், வர்க்கம் என்றுதான் அடையாளப்படுகிறார்களே அன்றி பாலிலனம் (ஆண்) சார்ந்து அல்ல.

    ஆனால் எந்த பெண்ணை குற்றம்சாட்டும் போதும் பாலிலனம் சார்ந்து – போலி பெண்ணியவாதிகளை மட்டுமே சொல்கிறோம் என்கிற பெயரில் – பெண்கள் அனைவரையும் பொதுமைப்படுத்தும் பொது ஆணாதிக்குரலில் எனது நணபர்களும் சில நேரம் என்னையும் அறியாமல் நானும் விவாதித்த சமயங்கள் தான் இந்த விவாதங்களை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருகிறதன.

  • இந்த ப‌திவில் உங்களை எது வருத்தமடையச் செய்தது என்று குறிப்பாக சொல்லாமல் பொதுவாக ‘பதிவு மிகுந்த வருத்தத்தை தருகிறது’ என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம் ஐயனார் ? அப்படியானால், பதிவே எழுதியிருக்கக் கூடாது என்கிறீர்களா ? விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌லாமா கூடாதா என்ப‌தை தெளிவாக‌ கூறுங்க‌ள்.

   பிறகு, நீங்கள் ஏன் இதை லீனாவின் க‌விதையை க‌ட்டுடைத்த‌ ப‌திவு என்று எடுத்துக்கொள்ள‌க்கூடாது ? எல்லாவற்றையும் கட்டுடைக்கும் உங்களுடைய கலகக்கார தத்துவத்திற்கு இது ஏற்புடைய பதிவு தானே ?

 9. லீனாவுக்கு சென்னையில் மூன்று வீடுகள். ஒன்று வடபழனியில் உள்ளது அதை இப்போது வாடகைக்கு விட்டிருக்கிறாராம். இன்னொன்று சென்னையில் கோடீஸ்வரக் கோமான்கள் வாழும் அல்லையன்ஸ் பிராஞ்சைஸ் அலுவலகம் இருக்கும் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறதாம். இன்னொன்றூ தாம்பரத்திற்கு வெளியே இருக்கிறதாம். இதெல்லாம் அவரது வர்க்க நலன் சார்ந்த விஷயங்கள். ஆனால் அப்படி வசதியாக வாழ்கிற லீனா புரட்சிகர அரசியலுக்காக சுக போக வாழ்வை மறுத்து செயல் படும் தோழர்களை ஆண் குறிகள் என்று எழுதியிருப்பதை படிக்கும் போது லீனாவை அம்பலப்படுத்தியே ஆக வேண்டிய தேவை எழுந்ததை ஒட்டியே இதை எல்லாம் நாம் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. தவிறவும் அவரது தேவதை படத்திற்காக இந்திய அரசு உயரிய விருது ஒன்றையும் வழங்கியிருக்கிறதாம். ஆனால் அதில் லீனா கடைபிடித்த தந்திரம்தான் இங்கு பேசப்பட வேண்டியது. அந்தப் படத்திற்கு கேமிராமேனாக பணியாற்றியது ஒரு மலையாளி….. அவர் மத்திய அரசின் விருது வழங்கும் குழுக்களில் ஜூரியாக இருக்கும் பெரும்பாலானவர்கள் மலையாளிகள்தான் இதை நாம் இங்கு இனவாதமாக முன் வைக்கவில்லை.யதார்த்தம் அதுதான். அபப்டி ஜூரிக்களாக இருக்கும் மலையாளிகளுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த மலையாளக் கேமிராமேன் இந்தப் படத்திற்கு எப்படியும் விருது வாங்கிடலாம் என்று உத்திரவாதம் கொடுத்ததன் பேரிலேதான் அவரை கேமிராமேனாகவே போட்டாராம். லீனா மேலும்……இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் செங்கடல் என்னும் படமும் அப்படி கேன்ஸ் விழாவை குறிவைத்தே எடுக்கப்படுகிறதாம். இங்கே நாம் முன் வைக்க விரும்பும் கேள்வி. இந்திய உழைக்கும் பெண்களின் உண்மையான பிரச்சனைகளை தனது தேவதை படத்தில் லீனா வெளிப்படுத்தியிருந்தால் எப்படி இந்திய அரசு லீனாவுக்கு விருது கொடுத்திருக்கும் என்பதுதான்? உழைக்கும் பெண்களை காட்டிக் கொடுத்து அவர்களின் பிரச்சனைகளை திசை திருப்பியே லீனா வளர்ச்சியடைந்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது. என்பதோடு அதன் அடுத்தக் கட்ட சர்வதேச வளர்ச்சிதான் கேன்ஸ் திரைப்பட விழாவை குறிவைத்து எடுக்கப்படும் செங்கடல் படமும். அதற்காக அவர் எடுத்திருப்பது இப்போது மீனவர்களை. தேவதையில் மீனவப் பெண்கள்…. இப்போது மீனவ ஆண்களா? லீனா பதில் சொல்வாரா?

  • ஆமாங்க பிரகாஷ், என்னோட நண்பன் ஒருத்தன் கூட நீங்க சொன்ன‌ இதே டயகலாக்கை தான் சொன்னான். இது தான் லீனா மணிமேகலை, இதுக்கு மேல நீங்கள்ளாம் (என்னோட நண்பனையும் சேர்த்து தான்)அந்த கவிதாயினிக்கிட்ட என்னத்த எதிர்பார்த்தீங்க? ‌அந்த மடையன் (அதாங்க ஏன் பிரெண்ட்) அவங்களை ஏதோ அருந்ததி ராய் ரேஞ்சுக்கு நினைச்சிட்டு இருந்திருக்கான் போல, அப்புறம் தான் அய்யய்யோ இவங்க இவ்வள‌வு தானா என்கிறான். ஆரம்பத்திலிருந்தே இவங்க இவ்வளவுதாங்க!

 10. மாதர் குல மாணிக்கம், தியாக சிற்பி, நம் உலகின் ஒரே புரட்சி தேவி..மகளிரின் விடிவெள்ளி, சித்தாந்த ஸ்வரூபம்.. அன்னை,
  தியாக திருவிளக்கு, ஏழைகளின் வைகறை.. சகோதரிகெல்லாம் சகோதரி முற்போக்கு நட்சத்திரம்.. லீனா மணிமேகலை பற்றி வினவு இப்படி எழுதி இருக்க கூடாது..

 11. //உங்களின் இந்த பதிவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லாவற்றையும் கேட்டே தீர்ப்பெழுதிவிடுவதும் சொந்த வாழ்வில் அத்து மீறி நுழைவதும் விமர்சனத்திற்கும் வினவிற்கும் அழகில்லை.//
  திரு அய்யனார்,
  இதில் வருத்தப்பட எதுவுமே இல்லை, அவரது வலை பதிவிலேயே இந்த கவிதை இடம் பெற்றிருக்கிறது. இணைய தளம் என்பது ஒரு பொது தளம். அவரே பொது இடத்திற்கு வந்து விட்ட பிறகு யார் வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம். வீட்டுக்குள் இருக்கும் வரை தான் அது சொந்த விசயம்.
  திரு வினவு,
  உங்களை பாராட்டுகிறேன், பெண் விடுதலைக்கு போராடுகிறேன் என்று கூறி சுய விளம்பரம் தேடும் இவர்களால் பெண்களுக்கு ஐந்து காசுக்கு கூட பலனில்லை. இவர்கள் போராடுவது பெண் சுதந்திரத்திற்கு அல்ல, அவர்களின் சொந்த செக்ஸ் சுதந்திரத்திற்கு. நாட்டின் பிரதம மந்திரியே அவரின் சேவையை போற்றி காலில் விழுந்து வணங்கினாரே, மதுரை சின்னபிள்ளை என்ற மூதாட்டி, அவரும் பெண்தான், பெண்கள் முன்னேற்றத்திற்கு தான் அவரும் உழைத்தார் அவரின் கால் தூசிக்கு கூட ஈடாக மாட்டார் இந்த பெண். இது போன்ற வெளி வேடதாரிகளின் வேடங்களை அம்பலபடுத்துவது மிக அவசியம். இது போன்ற பெண்கள் தன் தகப்பனையும், சகோதரனையும் எந்த கண்ணோட்டதில் பார்ப்பார்கள்.

  • “எனக்கு தெரியும்
   அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
   லும்பன் தரகன் மகாராஜா தளபதி
   திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
   போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
   கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
   கணவன், தந்தை, சகோதரன், மகன்
   எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
   என்ற ரகசியம்”

   அவரது கவிதையில் அவரே கூறியுள்ளார் அவர் அதை எப்படி பார்பார் என்பதை.

   • நண்பர் kanbro அவர்வளே,

    இந்த கவிதையில் ஆண்குறி என்பது பெண்கள் பற்றிய ஆண்களின் பெதுவான பார்வையை குறிப்பதாகவே தெரிகிறது. ஆண் ஒருவன் நல்வனோ, கெட்டவனோ- உறவுக்காரனோ,வெளியாளோ யாராக இருந்தாலும் பெண் என்று வந்தால் எல்லா ஆண்களும் ஒன்றுதான் என்பதே பொருள்படுகிறது. உங்களுக்கு லீனா மேல் உள்ள கோபத்தை இந்த கவிதை மேல் ஏன் காட்டவேண்டும்

    குறிப்பு – எப்பொருள் (குரல்)

 12. வினவு, உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விழைகிறேன்.

  எனக்கு வத்தல் குழம்பும், வடு மாங்காயும் நிரம்பப் பிடிக்கும். என்னைச் சந்திக்கும் நண்பர்களிடமிருந்தும், எழுதும் எழுத்து வரை வடுமாங்காயும், வத்தல் குழம்பும் இடம் பெறும். ஏனென்றால் என் அடி மனதில் வத்தலும், வடு மாங்காயும் பதிந்து கிடக்கிறது.

  எனக்குப் பிடித்தது என்னவோ அதைத்தானே நான் செய்வேன். எழுதுவேன், பேசுவேன். இது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும் ?

  • வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எனக்கு ராஜபட்சேவை பிடிக்கும், பொன்சேகாவை பிடிக்கும் என்று தாராளமாக உங்கள் வீட்டுச்சுவர் பூராக‌ கிறுக்கிக்கொள்ளுங்கள், (சொந்த வீடு என்றால் பிரச்சனை இல்லை வாடகை வீடாக இருந்தால் ஹவுஸ் ஓனர் கூட‌ கேட்பார்) அது உங்கள் சொந்த விசயமாக முடிந்துவிடும் ஆனால் அதற்கு மாறாக‌ தெருவில் இறங்கி மேற்கண்ட வாசகத்தை எழுதினால் அமெரிக்க ஏஜெண்ட் சுப்பிரமணியசாமிக்கு முட்டாபிக்ஷேகம் செய்ததைப் போல தான் மக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் வினவு மிகவும் நாகரீகமான முறையில் தான், அதாவது லீனாவின் மொழியின் வரம்புகளில் நின்று தான் பதிலளித்துள்ளது. இதில் உங்களுக்கு என்ன கேள்வி ?

   • கருத்துச் சுதந்திரம் அவசியம் தேவை. விமர்சனமும் தேவை. ரியல் என்கவுண்டர் முதலில் நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள முயலுங்கள். நான் கேள்வி எதையும் கேட்கவில்லை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள். லீனாவை விமர்சனம் செய்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

    • சரிதான் பாலகிருஷ்ணன், உங்கள் விமரிசனத்தை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இனி கவனமாய் வாதிடுகிறேன்.

 13. அய்யனார்….. லீனாவின் தனிப்பட்ட வாழ்வை தாக்கியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அவர் எழுதியுள்ள கவிதை பற்றி நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை. உங்கள் வருத்தம் என்னவென்றால் அவரது கவிதையைத் தாக்காமல் லீனாவைத் தாக்கி விட்டதாகவும். இது தனிப்பட்ட தாக்குதல் என்பதுதான் உங்கள் கவலை.உங்களின் நியாயபப்டியே கேட்கிறோம். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் குறித்து எழுதாமல் மார்க்ஸை ஆண் குறித்து என்று எழுதலாமா?( எப்படி எழுதினாலும் அதை எதிர்கொள்வோம் என்பது வேறு விஷயம்)
  தவிறவும். லீனா என்கிற பெண் எழுதிய மேலே உள்ள கவிதை குறித்த உங்கள் கருத்தைச் சொல்லவும்….. அய்யனார் யோனி, ஆண் குறி என்பது தனிப்பட்ட விஷயமா? அந்தரங்கமானதா? அல்லது பொதுவான விஷயமா? என்பதோடு லீனா எழுதும் போது மட்டும் ஆண் குறித்து பொதுவான விஷயமாகவும். அதையே அம்பலப்படுத்தி லீனாவிடம் இருப்பது ஆண்குறிதான் என்றூ எழுதினால் அது மட்டும் தனிப்பட்ட விஷயமா? அய்யனார் பதில் சொல்ல வேண்டும்.

 14. நண்பர்களுக்கு,

  யோனி
  கவிதையை ஆண் எழுதினால் புரட்சியாகவும் குறி கவிதையை பெண் எழுதினால் அலைபவளாகவும் சித்தரிப்பது எத்தகைய முற்போக்குத் தனம் என்பது எனக்கு விளங்கவில்லை. பிரதிக்குள் ஆண் பெண் தன்மைகளை புகுத்திக் கொண்டு அதை விமர்சிப்பதோ அல்லது பிரதியை வைத்து எழுதுபவனை/ ளை கீழ்த்தரமாக சித்தரிப்பதோ நீங்கள் கட்டமைத்துக் கொண்டிருக்கும் முற்போக்கு பிம்பத்திற்கு எதிரானதா சாதகமானதா என்கிற அனுமானங்களையெல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

  • @@@யோனி
   கவிதையை ஆண் எழுதினால் புரட்சியாகவும் குறி கவிதையை பெண் எழுதினால் அலைபவளாகவும் சித்தரிப்பது எத்தகைய முற்போக்குத் தனம் என்பது எனக்கு விளங்கவில்லை. @@@

   இது போன்ற ஒரு கருத்து வினவு தளத்தில் இதுவரை வெளிவரவில்லை. மற்றபடி உங்கள் கருத்தான பிரதியை வைத்து எழுதுபவனை மதிப்பிடக்கூடாது என்றால் ஒருவனை பாலியல் வன்முறையாளனை ‘பாலியல் வன்முறையாளன்’ என்று எப்படி மதிப்பிடுவீர்கள்????

  • யோனி, குறி என்று ஆண் எழுதினால் மட்டும் அது புரட்சிகரமானது, முற்போக்கானது என்று உங்களுக்கு எந்த புரட்சியாளன் சொன்னான் ?

   உங்களுடைய தத்துவமற்ற தத்துவத்தின்படி ஆசிரியன் (ஆண்,பெண்) தான் பிரதி பிரசவித்ததும் மரித்துவிடுகிறானே அப்புறம் அவ‌னை யார் கீழ்தரமாக சித்தரித்தால் என்ன மேல்தரமாக சித்தரித்தால் உங்களுக்கென்ன கவலை ? ஆசிரியன் தான் அதற்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவன் அல்லவே. பிறகு எதற்கு வருந்துகிறீர்கள் ?

 15. வினவு தளத்தில் இடும் முதல் மறுமொழி. அய்யனரின் பொருட்டு.

  அய்யனார், லீனா, [அம்மணி என்றோ அக்கா என்றோ அழைத்தால் அவர் கடும் கோபம் கொள்வதாக நெருங்கிய நண்பர்கள் சொல்லக்  கேள்விப்பட்டிருக்கிறேன் ;)] தனது கவிதைகளை ‘புரச்சிப் பாலியல் பெண் கவிதைகள்’ என்று முன்னிறுத்திக் கொண்டிருப்பவர்.

  நான் சொல்ல வருவது புரிகிறதோ? :)) லீனா தான் கவிதை எழுதுகிறேன் என்று பொதுவாகச் சொல்வதில்லை. ‘பெண்ணியப் புரச்சிப் பாலியல் கவிதைகள்’ எழுதுவதாகச் சொல்கிறார். அப்படியானபின் நீங்கள் “கவிதையை ஆண் எழுதினால் புரட்சியாகவும் குறி கவிதையை பெண் எழுதினால் அலைபவளாகவும் சித்தரிப்பது எத்தகைய முற்போக்குத் தனம் என்பது எனக்கு விளங்கவில்லை” என்று எழுதுவது அசட்டுத்தனமான பிரதியியல் விமர்சனம். 

  தனது கவிதை பெண் தன்னிலையை முன்னிறுத்தும் பிரதி என்று ஒருவர் சொல்லும்போது அது அப்படியில்லை என்று காட்டவும் ஒருவர் முயற்சி செய்யலாம். அதைத்தான் வினவு செய்திருப்பதாகக் கருதுகிறேன். 

  நீங்கள் இன்னமும் ஒரு பிரதிக்கு எத்தனை ஆயிரம் அர்த்தங்கள் வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரியலாம் – unlimited semiosis – என்ற கருத்தில் இருந்தீர்களானால் ஒரு குப்பையும் கொட்ட முடியாது. unlimited semiosis என்ற கருத்தாக்கம் எத்தனை அபத்தம் என்பதை பலமுறை என்னால் முடிந்தவரை சுட்டிக்காட்டிவிட்டேன். 

  எல்லாம் புரிந்த நபராக நீங்கள் மாறிவிட்டிருந்தால் வாழ்த்துகிறேன்.
  நன்றிகள்.

 16. வினவின் இந்தக் கட்டுரை மிகுந்த ஏமாற்றத்தையும், ஆயாசத்தையும் தருகிறது. பாலியல் குறித்த விஷயங்களில் வினவு பலமுறை இவ்வாறன ‘நீதிமானாக’ நின்று தீர்ப்பு சொல்லியிருப்பதால் இது வியபளிக்கவில்லை என்பதும் உண்மையே.

  வர்க்கப் போராட்டதிற்கு பாலின வேறுபாடு தெரியாது என்கிறாரா கட்டுரையாளர்? மார்க்ஸ், லெனின் வரிசையில் பெண் ‘தலைவர்கள்’ இல்லாமல் போனது எதேச்சை என்று சொல்ல வருகின்றீர்களா? ஒருவேளை கம்யுனிசம் போன்ற ‘உயரிய’ சித்தாந்த வாழ்க்கைமுறை/போராட்டம் பெண்களுக்குப் புரியாது போலும்.

  பெண்களை விற்பனைப் பொருளாக்குவது முதலாளி வர்க்க ஆண்கள், அவர்களிடமிருந்து பெண் ‘மானத்தை காப்பவர்கள்’ உழைப்பாளி வர்க்க ஆண்கள். போரிட வந்தவர்களும் ஆண்கள், எதிரே போர்கொண்டு மாண்டவர்களும் ஆண்கள். இதில் பெண்களின் agency எங்கே ஐயா போயிற்று?

  ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள். bell hooks எழுத்துக்கள் சிலவற்றை படித்தல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

  • வின‌வை ஏன் நீங்க‌ள் நீதிமானாக‌ க‌ருதிக்கொள்கிறீர்க‌ள் ? பாலியல் குறித்த விஷயங்களில் வினவு சில‌ க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தா‌ல் நீங்க‌ள் உங்க‌ளுடைய‌ க‌ருத்து என்னவோ அதைச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு வெறுமனே அங்க‌லாய்த்துக்கொள்வ‌து ஏன் ?

   பெண்களுக்காக எந்த காலத்திலும் ஆண்கள் மட்டும் போராடி அடிமைத்தனத்தை ஒழிக்க முடியாது. நாங்கள் அப்படி சொல்லவும் இல்லை, அப்படி எங்கும் நடந்ததும் இல்லை, நடக்கவும் முடியாது.

   கடைசியாக,
   பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள் தான் ஆனால் அது உழைக்கும் பெண்களுக்குத்தானே தவிர இது போன்ற எதிர் பெண்ணியம் பேசிக்கொண்டு ஆணாதிக்கத்திற்கு தீனி போடும் மேட்டுக்குடிகளுக்கு அல்ல. பெண்களுக்கும் வர்க்கம் உண்டு.

   • நான் அங்கலாய்பதாய் நீங்கள் கூறுவதை மறுக்கிறேன். அது எனது கருத்து. அதற்கான ஆதாரம் கட்டுரையிலே உள்ளது. அதை ஒவ்வொன்றாகக் கட்டுடைத்து இங்கே எழுத பொறுமை இல்லை. மன்னிக்கவும். கீழே நந்தா அவர்கள் அதைச் செய்துள்ளார் என்றே நினைக்கிறேன், உடன்படுகிறேன்.

    ‘potential rape’, ‘potential abuse’ என்பது உழைக்கும் பெண்களுக்கு மட்டும் உருவாகும் சூழ்நிலை அல்ல. நீங்கள் கூறும் மேட்டுக்குடி பெண்டிரையும் அது வெவ்வேறு வடிவங்களில் அச்சுறுத்தத்தான் செய்கின்றன. “அவ பணக்காரி, அவ சேலைய பணக்கார பயலுவ உருவுனா தப்பில்லா”; “இப்புடி மினிக்கிட்டு திருஞ்சா ரோட்ல போறவன் கைய புடிச்சு இழுக்கத்தான் செய்வான்” போன்ற கற்பிதங்களை நான் வன்மைய எதிர்கிறேன். (உங்கள்நிலைப்பாடும் அதுவே எனில் விட்டுவிடலாம்.) வர்கத்தின் வெளியே நின்று எதிர் குரல் எழுப்ப வேண்டிய பல விஷயங்களுள் இதுவும் ஒன்று.

    உழைக்கும் மக்களின் குமுரலுக்கிடையே இது போன்ற பாலின ஒடுக்குமுறைகள் எல்லாம் பெரிது இல்லைதான். அதேபோல் தமிழ் திரைப்பட நடிகைகளின் ‘அறசீற்றம்’ நகைப்புக்குரியதுதான். ஆனால் குஷ்புவுக்கு எதிராகத் திரண்ட — அவரை அண்ணா சாலையில் உயிரோடு கொளுத்துவோம் என்று மிரட்டிய — ‘உழைக்கும்’ பெண்களுக்கு என்றும் என் ஆதரவு இல்லை.

    அதேபோல லீனா உழைகின்றாரா/மேட்டுக்குடியா இல்லையா போன்ற முடிவுகளுக்கு வர என்னிடம் எந்த அவசியமோ ஆதாரமோ இல்லை (கட்டுரையாளருக்கு இருப்பது போல(!)). எது பெண்ணியம் என்று நீங்கள் கூறினால் லீனா எப்படி எதிர்பென்னியவாதி என்று சொல்லிகிறீர்கள் என்பதும் புரியும். (அப்போதும் உங்களின் சட்டகத்திற்கு உடன்படுவேன் என்பது நிச்சயம் அல்ல.)

 17. முன்குறிப்பு. நான் இதுவரை லீனா மணிமேகலையை பார்த்ததும் இல்லை, அவரிடம் பேசியதுமில்லை.

  வினவு பல சமயங்களில் உங்கள் கட்டுரையின் முழு உள்ளடக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் உங்களது கட்டுரையின் தொடர்ச்சியான அறச்சீற்றமும், ஒடுக்குமுறைகளின் மீதான ரௌத்ரமும் கூடிய உங்களது கட்டுரைகளை வாசிக்க தவறுவது மட்டும் இல்லை. சொல்லப்போனால் பல கட்டுரைகள் “அப்பாடா இவர்களாவது இதைப் பற்றிப் பேசினார்களே” என்ற சந்தோஷத்தைத் தந்திருக்கிறது.

  இந்தக் கட்டுரையின் பல இடங்கள் முகம் சுளிக்க வைப்பதாய் இருக்கிறது. அது குறி, யோனி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மீதான பொது ஜனம் சார்ந்த முகம் சுளித்தல் அல்ல. உங்களது கருத்தாக்கங்கள் மீதானது. அதீத கோபமோ அல்லது இனம் காண முடியா உணர்வோ சற்றே உங்களது கட்டுரையை திசைதிருப்புகிறதோ?

  //பொதுவாக போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில் இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.//

  எவ்வளவு மோசமான வரிகள் இவை. என்.டி.திவாரி குறித்து பெரும்பாலான ஊடகங்களில் வந்த செய்திக்கட்டுரைகள் ஏறக்குறைய இது மாதிரிதான் எழுதப்பட்டவை. ”அவர் அதிக மாத்திரைகளை உட்கொள்வாராம். பல பெண்களை மிரட்டினாராம், பெண்கள் அவருடன் சந்தோஷமாக இருந்தார்களாம்.” இந்த “ஆம்” என்ற விகுதி எவ்வளவு மோசமான வரிகளை வெகு எளிதாய் தயாரித்து விடுகிறது. செய்திக்கட்டுரைகளின் நோக்கம் உண்மையை உணர்த்துவது போய், இப்போது மக்களின் மன விகாரங்களுக்கு எப்படி தீனி போடுவது என்பதற்கு வெகு அழகாய் உபயோகப்பட்டு வருகிறது.

  உங்களது கட்டுரைக்கு வருகிறேன். இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா வினவு?கொஞ்சம் தள்ளி நின்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் தனது போர்ட்ஃபோலியோ புகைப்படங்களை வைத்திருக்கிறார் என்ற ஒரு தகவலை வைத்து எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறீர்கள்? உங்களுக்கே இது தவறாக தெரியவில்லையா?

  உங்களது கட்டுரையில் தொழிலாளர்களுக்கெதிரான அவரது செயல், மத்திய, மாநில மற்றும் ராஜபக்‌ஷே, சோனியாக்களை கூட விமர்சிக்க விரும்பாத மொக்கைத்தனமான போராட்ட முறை போன்ற பல இடங்களில் ஒத்துப் போகின்றேன்.

  ஆனால் லயோலா கல்லூரி விவகாரம் குறித்தான பிரச்சினையை நீங்கள் எள்ளல் செய்து பேசிய வரிகள் மகா அபத்தம். அதற்கு முன்பும், பின்பும் தொடர்ச்சியாக போராட்டங்களில் அவர் கலந்துக் கொண்டுதான் இருந்தார். அவரது அரசியல் கொள்கைகள் நமக்கு ஏற்புடையதா இல்லையா என்பது வேறு. ஆனால் தொடர்ச்சியாய் அவரது அரசியல் சார்பு போராட்டங்களில் அவரது பங்களிப்புகள் இருந்துக் கொண்டுதான் இருந்தன. என்னமோ அவர் லயோலா கல்லூரி பிரச்சினையைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்பட்டதே இல்லை என்ற ரீதியில் எழுதி இருந்ததை என்னவென்று சொல்வது.

  ஏன் நீங்கள் கூடத்தான் கொஞ்ச நாளைக்கு முன்பு சுமஜ்லா விஷயத்துக்காக எல்லாம் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். ஏன் உங்களுக்கு அப்போது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரிக்கும் அளவுக்கு அவை தோன்றியதா?

  அது ஒரு நிகழ்வு. அனுமதி மறுத்ததும், அதற்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் அவர் போராட்டம் நிகழ்த்தியதும், உடை சார்ந்து பெண்களின் கட்டுப்பாடுகள் குறித்தும் எழுந்த விமர்சனமும் அதன் விளைவுகள். ஆனால் நீங்கள்தான் அதற்கு ஓவர் ரீயாக்ட் செய்கின்றீர்கள். ராமநாராயணன், அம்மன் வேப்பிலை போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் சத்தியமாய் கட்டுரையின் மையமாய் நீங்கள் சொல்ல வந்ததை மீறி விகாரமாய் துருத்திக் கொண்டிருக்கிறது.

  உங்களது கட்டுரையின் சாராம்சம் என்ன? பலரும் முற்போக்குவாதி என்று நம்பிக்கொண்டிருக்கும் லீனா அப்படிப்பட்டவரல்ல என்பதை நிறுவ முயல்வதும், அவரது இரண்டாவது கவிதையில் இருக்கும் வன்மமான அரசியலையும் வெளிப்படுத்துவதுதானே? இதை இவ்வளவு மோசமாகவா வெளிக் கொணருவது?

  முதல் கவிதை குறித்தான உங்களது புரிதலிலிருந்து நான் வேறுபடுகின்றேன். அதிகார ஒடுக்குமுறைக்கும், போர்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஆண்குறி மட்டுமே காரணம் என்று அவர் நிறுவ முயன்றதாய் உங்களது புரிதல். ஆனால் என்னுடைய புரிதல் உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கின்ற போர்களின் போதும் வன்புணரப்படும் பெண்களின் ஓலமாய் இதை நான் பார்க்கின்றேன். இந்த புரிதலிலேயே நாம் வித்தியாசப்படும் போது இந்தக் கவிதை குறித்தான உங்களது விமர்சனங்களுக்கு நான் என்னவென்று சொல்ல? (அந்த கவிதையின் ”புரட்சி வேண்டுபவர்கள்” என்ற வரிகளின் மீது எனக்கு மறு வாசிப்பு தேவைப்படுகின்றது)

  2 வது கவிதை மட்டுமே என்னைப் பொறுத்த வரை மிகத் தவறான ஒன்று. அதை நீங்கள் கருத்தியலாக விமர்சிக்கலாம். ஆனால் இப்படி ராமநாராயணன், கன்னட பிரசாத், குடும்ப ஆட்களை இழுப்பது என்று கீழ்மட்ட விமர்சனம் தேவையா? அது எப்படி நீ எங்களையே தப்பு சொல்லலாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்களா? அப்புறம் சாரு என்னைப்பத்தியே சொல்றியா என்று கொதித்து எழுவதற்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகின்றது.

  அது எப்படி நீ குறியை வைத்தே எழுதிக் கொண்டிருக்கலாம் என்ற கேள்வியை கேட்பதற்குப் பதில் இப்படி கேட்கின்றீர்களா வினவு? ஏன்னா இந்தப்பதிவில் கலகத்தின் பின்னூட்டங்கள் அந்த கேள்வியை நோக்கியே இருக்கின்றது. உங்களது அமைப்பு சார்ந்த ஒருவரிடமிருந்து இவ்வளவு பிற்போக்குத்தனமான பின்னூட்டமா?

  //மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.//

  //மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.//

  //சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.//

  //ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.//

  //இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம். இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.//

  “தாம், ராம், சொல்கிறார்கள், அப்படித்தான் தோன்றுகிறது, பேசிக்கிறாங்க” என்னங்க இது? நான் வினவு தளத்தின் கட்டுரையைதான் படித்துக் கொண்டிருக்கிறேனா இல்லை நக்கீரனை படித்துக் கொண்டிருக்கிறேனா?

  மிக முக்கியமாய் அய்யனாரின் கேள்வி இப்போது உங்கள் முன் வெகு தீவிரமாய் வைத்தாக வேண்டி இருக்கின்றது. எல்லாவற்றையும் கேட்டே தீர்ப்பெழுதி விடுவீர்களா? அப்புறம் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் வகை கட்டுரைகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தேவையில்லை என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்களா? அல்லது உங்கள் தளத்தின் வாசகர்கள் இது போன்று எழுதுவதைத்தான் விரும்புபவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் நான் ஜட்டி விலையை சொல்லும் கட்டுரைகளையே விரும்பி படித்து விட்டு போயிருப்பேனே? இங்கே வந்து எதிர்பார்த்து ஏமாநதது என் தவறோ?

  வினவு தளத்தின் தீவிர வாசகனாய் இருந்தாலும் இங்கே பின்னூட்டங்களில் பல சமய்ங்களில் கருத்தியல் ஜனநாயகமே இருப்பதில்லை என்று உங்கள் அமைப்பைச் சேர்ந்த நண்பரிடம் பலமுறை வருத்தப்பட்டிருக்கின்றேன். ஒரு கட்டத்தில் ரொம்ப வெறுத்துப் போய் தனிமடலாவது இடலாம் என்று நினைத்த போது செல்வநாயகி அவர்களின் முற்போக்கு குறித்தான பின்னூட்டம் சற்றே ஆசுவாசப்படுத்தியது. இப்போது ஒன்றுமே முடியாமல் இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை இடுகின்றேன்.

  மறுபடியும் சொல்கின்றேன். கட்டுரையின் சாராம்சமாக லீனா அவர்களின் வன்மமான பொதுவுடைமை எதிர்ப்பு, இலங்கைக்கெதிரான மொக்கைத்தனமான போராட்ட முறை, சம்பள விவகாரம், ஆகிய பிரச்சினைகளில் உங்களது கருத்தை நான் கை தட்டி வரவேற்கின்றேன்.

  ஆனால் மட்டமான வார்த்தைப்பிரயோகங்களும், தேவையற்ற காழ்ப்புடன் கூடிய விமர்சனங்களும், ஓவர் ரீயாக்ட் செய்வதும் ஆகிய உங்களது செயல்களை பலமாய் எதிர்க்கின்றேன். இந்த கட்டுரையை இன்னும் பல மடங்கு நன்றாக எழுதி இருக்கலாம்.

  ஒரு பெண் குறியைப் பற்றி எழுதி விட்டாள், இவ எல்லாம் என்ன ஆளு என்ற பிற்போக்குத்தனமான ரீதியில் வினவு தளம் இயங்காது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உங்களது கட்டுரையின் பல இடங்கள் அப்படி ஒரு எதிர்ப்பைத்தான் எனக்கு உணர்த்துகின்றது. அது எனது புரிதலின் தவறா அல்லது உங்களது கட்டுரையின் சொல்லாடல்கள் தவறா என்பதை உங்களது முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

  இந்தப்பின்னூட்டத்திற்கு மறுமொழி வேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால் மறுமொழி கூறுபவர்கள் கருத்தியல் விமர்சனங்களை வைத்தால் மட்டுமே நான் மீண்டும் பதிலளிப்பேன். வெறுமனே வசைபாடல்கள் மட்டுமே தாங்கிய பின்னூட்டத்திற்கு எனது மௌனத்தை மட்டும் பதிலாய் வழங்குகின்றேன்.

  • //இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.//

   நந்தா இது உங்கள் பார்வைக்கு!

  • நந்தா, புரட்ச்யும், ஜிகாதும், ராஜபட்சேவும், மார்க்சும் ஒன்றெனும்போது, லீனாவின் போர்ட்போலியோவும் கன்னடபிரசாதின் போர்ட்போலியோவும் ஒன்றாக முடியாதா? சில விசயங்கள் உரைக்க வேண்டுமானால் அதை செல்லவேண்டிய விதத்தில்தான் சொல்ல வேண்டும்

  • நந்தா @@பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!@@ இந்த வரி உங்களுக்கு நிஜமாவே புரியலயா? லீனா எனும் பெண்ணிய போராளியின் முகத்திரை கிழியவில்லையா

  • நந்தா எனக்கு இது புரியவில்லை. தயவு செய்து விளக்கவும் @@@இங்கே பின்னூட்டங்களில் பல சமய்ங்களில் கருத்தியல் ஜனநாயகமே இருப்பதில்லை என்று உங்கள் அமைப்பைச் சேர்ந்த நண்பரிடம் பலமுறை வருத்தப்பட்டிருக்கின்றேன்.@@@

   • கேள்விக்குறி இப்போதுதான் இதை பார்த்ததால் தாமதமாய் பதிலிடுகின்றேன். இது குறித்து நாம் இங்கு பேசுவது ஒரு வேளை கட்டுரையை திசை திருப்பலாம். உங்கள் அமைப்பைச் சேர்ந்த சரவணராஜாவிடம் இது குறித்து பல முறை பேசி இருக்கின்றேன்.

 18. அய்யனார், 

  தமிழ் எழுத்துச் சூழலில் இருந்து குறைந்தது ஒரு ஆறு மாத காலமாவது விலகி இருப்பது – இழந்த என் நிதானப் பண்பைத் திரும்ப வளர்த்துக் கொள்ளவும், என் மன நிம்மதியின் பொருட்டும் – என்ற என் முடிவையும் மீறி இங்கு பின்னூட்டமிட்டதற்கு காரணம் உண்டு. 

  நேற்று ”இனியொரு” இணைய இதழில் வெளியாகியிருந்த இச்செய்தியையும், “தினத்தந்தி”யில் அச்செய்தி வெளியாகியிருந்ததையும் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் எனது பக்கத்தில் நான் எழுதிய குறிப்பிற்கு பல்லிளித்து மட்டும் சென்ற நீங்கள் இங்கு ‘கவிதைக்கு’ வக்காலத்து வாங்கியது பெரும் சந்தர்ப்பவாதமாக எனக்குப் பட்டது. இது குறித்து மீண்டும் எனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பு எழுதியும் இருக்கிறேன்.

  இது இரட்டை வேடமா அல்லது இடத்திற்கு ஏற்றவாறு நபர்களுக்கு ஏற்றவாறு பேசும் ‘நட்பு’ நிமித்தமா? 

  என்ன கழுதையோ! அய்யனார் கோவிலில் நிற்கும் நாய்ச் சிலைக்காவது புரிந்தால் தேவலை.

 19. அய்யனாருக்கான குறிப்பாக மட்டுமல்லாமல் பொதுவான நோக்கிலும் இது குறித்து எனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று இக்கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துவிட்டு எழுதிய பின்னூட்டங்கள் [இதற்கு முன்பாக ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் லீனா, ஷோபாசக்தி, அ. மார்க்ஸ் இவர்களிடையேயான உறவுகளில் என்ன அரசியல் இருக்கு என்று ‘வண்டை வண்டையாக’ எழுதப் போய் – அதை காப்பி – பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு பல இடங்களில் அனானிகளாக பின்னூட்டமிட்ட சிலர் யாரென்ற பலமான ஊகமும் உண்டு; இங்கும் அவை அனானிப் பின்னூட்டமாக இடப்படலாம் – எனக்குக் கவலையில்லை; அவற்றை வைத்து என் மீது சைபர் க்ரைமில் கேஸ் குடுத்திருக்காம் அம்மிணி :))] 

  ஃபேஸ் புக்கில் எனது பக்கத்தில் எழுதிய குறிப்புகள்: 

  ஒன்று: இங்கே இது குறித்த செய்தியை வெளியிட்டபோது இளித்துவிட்டுச் சென்ற அய்யனார் வினவு பதிவில் போய் “தனிப்பட்ட தாக்குதல் ஏன்” என்கிற ரீதியில் கேள்வி கேட்டிருப்பது புரியவில்லை.  

  இரண்டு: லீனா குறித்த சர்ச்சை தனிப்பட்ட விடயங்கள் சார்ந்ததில்லை; ஆரோக்கியமான ஒரு அரசியல் கலாச்சாரத்தை வெகுவாக சீரழித்ததில் மிகச் சமீக காலத்தில் முனைப்பாக இருந்தவர் என்பதாலேயே அந்த ஈனப்பிறவி மீது கடுப்பாகிறது; இதில் வினவு எழுப்பிய கேள்விகள் மிக நியாயமானவை; சில விடயங்களை குறிப்பிட மறந்துவிட்டார்கள் என்ற போதிலும். உதாரணமாக, தில்லியில் நிகழ்த்திய ‘ஆர்ப்பாட்டத்திற்கு’ யார் முதலில் ஏற்பாடு செய்தது? அதை லீனா எப்படி ஹைஜாக் செய்தார் என்ற கேள்வி … 

  மூன்று: ஒரு ஆவணப் படத்திற்கு ஒரு கோடி ஆட்டையைப் போட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் … Sundance, ITVS போன்ற சர்வதேச நிறுவனங்கள் கூட அவ்வளவு தொகை கொடுப்பதைல்லை; ஒரு வருடத்திற்கு முன்பான UNESCO வின் சர்வே ஒன்றின்படி ஒரு 30 நிமிட டாக்குமெண்டரியை இந்தியாவில் எடுப்பதற்கான தயாரிப்பு செலவு 5 லட்சங்கள் மட்டுமே.

  நான்கு: ஈனம் மானம் கெட்ட ஜென்மங்களிடம் எந்த தரவுகள் ‘உண்மைகளைப்’ பேசினாலும் பிரயோசனமில்லை; அவ்வளவே 🙁 

  ஐந்து: நான் கண்ட வரையில் இத்தகைய நபர்களுக்கு ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்ச்சி கூட இருப்பதில்லை; யாரையும் எப்படியும் ஏப்பம் விட்டுவிட முடியும் என்ற திடகாத்திர நம்பிக்கை இத்தகைய ஆட்களுக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்; எல்லாம் காலப்போக்கில் ஆட்கள் மறந்துவிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் எதையும் செய்யத் தயாரகவும் இருப்பதையும் கண்டிருக்கிறேன்; ஒன்னும் செய்ய முடியாது. இதுகளாகவே அசிங்கப்பட்டுப் போனாலும் இதுகளுக்கு உடம்பு கூசாது.

 20. பெண் இனத்திற்கு எதரி ஒரு பெண் அல்லாமல் வேறு யாரும் இல்லை…………..எங்கே பொய்கொண்டிருக்கிறது நம் பண்பாடும் கலாச்சாரமும்…………சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு ஆனால் அதை தவறான வழிகழில் பயன்படுத்தாதே நல்லவர்களையும் கெடுக்காதே ………………….வேறென்ன சொல்ல ……………………….

 21. மனிதர்க்கும் மிருகத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் இந்த பாலுறவு மட்டுமே அவை களிலும் சிலவை ஒரே ஒரு ஜோடியுடன் மட்டுமே…………………………………………………………………………….

 22. அவ இவன்னு எல்லாம் மறியாதைக்குறைவாக‌ பேசாதீங்க, அது விவாதத்தை திசை திருப்பும்.அப்புறம் முக்கியமான விச‌யத்தை விட்டுவிட்டு அதை பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்.

 23. vetkam yeanbathu yeathu namakku! Sathiyam Sonnaal pen!

  Puratchi patri paadiya mundaasu kavignan Than mundasai kazhartri Mukkaadaai pottu kolvaan!
  Irantha pinam Thirantha vaaiyaal thuppiyathu keattean! Penne pennirku yeathiri Aanalla Arivizhanthavale! Kaamam kaasu kodukum yeanbathu penniyathil ondu! Kaamam yeanbathaal Kaasiai izhanthu Viyaathiaium vaanga vendum yeanbathanaal Thalli ponathu Aaniyam! Pantri Seatril puralum, Athai oru poruttaaha Karutha Veandiathu namathu velai alla! Pirasurika panam veandum! Pirasavikka manam veandum!

 24. கட்டுரை ஒடுக்கும் மக்கள் சார்பு பற்றிப் பேசினாலும் அதன் அணுகுமுறை சராசரி வலதுசாரி அணுகுமுறையாகவே உள்ளது.
  தீராநதி மற்றும் குமுதத்திற்குப்  பொருத்தமான கட்டுரை எப்படி வினவுவில் வெளியானது என்று நான் ஆச்சரியப்படவில்லை. ஏற்கெனவேயும் வினவுவில் இவ்வாறான கட்டுரைகளைப் படித்ததுண்டு. அதேவேளை வினவுவில் பல குறிப்பிடத் தகுந்த நல்ல கட்டுரைகளையும் படித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறித்துக்காட்டுதல் வேண்டும். 
  1.லீனாவும் ஷோபாசக்தியும் பட்டா கேட்டதற்காக தொழிலாளர்களைத் தாக்கியது.2.கூட்டத்தில் மத்திய மாநில மற்றும் இலங்கை அரசுகளை விமர்சிக்க அனுமதிக்காமை 3.நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது கவிதை போன்ற விடயங்களில் எனக்கு தங்களுடைய விமர்சனத்துடன் உடன்பாடு உண்டு. (முதலாவது கவிதை பற்றிய எனது பார்வை வேறானது.)
  ஆனால், அவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு லீனாவை விமர்சிக்க தாங்கள் எடுத்துக் கொண்ட அணுகுமுறை, கையாண்ட சொற்கள் துணைக்கழைத்த உதாரணங்கள் என்பவற்றில் எனக்கு உடன்பாடு காண முடியவில்லை. இவை ஒரு சராசரி வலதுசாரி அணுகுமுறையாகவே உள்ளன. 
  லயோலாக்கல்லூரிக்கு அவர் பாரம்பரிய(?) உடையில் போகாததால் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தது எப்படித் தவறாகும்? அதற்கு ஆதரவளித்தவர்களில் லீனாவுக்காக ஆதரவளித்தவர்களை விட அத்தகைய கலாசாரக் காவல்தனத்தை எதிர்த்து ஆதரவளித்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய போராட்டம் நியாயமானதும் முற்போக்கானதுமாகும். தங்களுடைய விமர்சனம் அத்தகையவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல்  வலதுசாரி கலாசாரக் காவலர்களுக்கு ஆதரவளிக்கும் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது.
  மாத்தம்மா மிகைப்படுத்தப்பட்ட படம் என்பதைத் தவிர தங்களிடமிருந்து வேறு விமர்சனமேதுமில்லை. அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். அது ஒரு நியாயமான படம் நல்ல முயற்சி என்பது தான் எனது அபிப்பிராயம். லீனா குறித்த விமர்சனத்தில் இதையும் சாட்டுக்கு இழுப்பது தங்களது கட்டுரையை அல்லவா பலவீனப்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவ்வாறான பெண்கள் மீதான ஒடுக்குமுறை இல்லை. இது லீனாவின் மிகைப்படுத்தல் என்று ‘இடதுசாரி’களே சொல்லிவிட்டார்கள் என்று அவ்வொடுக்குமுறையை திரை போட்டு மறைத்து விடவும் உதவும் என்பதை தாங்கள் ஏன் எண்ணவில்லை. இங்கு தான் தங்களுடைய பலவீனம் இருக்கிறது. ஓடுக்கப்பட்ட அந்தப் பெண்களுடைய நலனை விட லீனாவைத் தாக்குவது என்பது உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டது. ( அதற்காக லீனாவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை)
  1.அதேபோல் ஈழத்து நண்பர்கள் சிலரை படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏமாற்றியதாகவும் எழுதி இருக்கிறீர்கள்.  ஈழத்து நண்பர்கள் எவராவது லீனா தன்னை ஏமாற்றியதாக சொன்னதாக நான் அறியவில்லை. அது தொடக்கம் மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமுமற்ற சராசரிக் குமுத எழுத்தாகப் போய் விட்டது. 
  இந்த இடத்தில் தான் நியாயமான விமர்சனப் பார்வை அவசியம் என்கிறேன். ஓரு வருடைய சரியையும் தவறையும் நிதானமாக அணுகும் பக்குவத்தை நான் இடதுசாரிகளிடம் எதிர்பார்க்கிறேன். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் ஏமாந்து போவது தான் நிகழ்கிறது. 
  உங்களுடைய தர்க்கத்தின்படி லீனாவால் குறித்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக நீங்கள் பரிந்து பேசுவது கூடத் தவறு. ஏனெனில் அவர்களும் நீங்களே குறிப்பிடுகிறபடி இறுதியில் ஒரு தமிழ் ஆண்குறி சினிமாவையே படைப்பார்கள் என்று ஒருவர் வாதிடக் கூடுமல்லவா?