Tuesday, October 3, 2023
முகப்புசெய்திதிருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!

திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!

-

மகளிர் தினத்தில் பெரும்பாலான அமைப்புக்கள் இனிப்பு கொடுத்தும், பரிசு கொடுத்தும் சடங்காக கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தையே பெண்களின் போராட்ட நாளாக கொண்டாடும் மரபே நமக்குத் தேவைப்படுகிறது.

மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத் தலைவர் தோழர்.நிர்மலா (தலைவர், பெ.வி.மு) பேசும்போது “மகளிர் தினம் 1857ல் பெண் தொழிலாளர்களின் போரட்டத்தால் உருவாகி, 1911ல் சோசலிச போராளி கிளாரா ஜெட்கினால் உலக அளவில் கடைபிடிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டது, இன்று மகளிர் அமைப்புகள் பெண் சுதந்திரம் எனும் பேரில் அரங்குகளில் கூத்தடிக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது, ஆக இது ஒரு போரட்ட தினமே என்று பெ.வி.மு    அனுசரிப்பதை”விளக்கினார்.

மைய கலைக்குழு தோழர் அஜிதா பேசும் போது பெண்கள் இன்று போக பொருளாகவும், வியாபாரத்திற்க்கு விளம்பரமாகவும், கணவனின் தேவையை நிறைவேற்றும் எந்திரமாகவும் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டியும், பெண்கள் தமது மன கஷ்டங்களை தீர்க்க வாய்ப்பாக சாமியார்களிடம் சரணடைவது,  தம்மை இழப்பது என இருக்கும் நிலையை கடுமையாகச் சாடினார்.

சிறுமி சுபா, கல்வியில் தனியார்மயம் நுழைந்து ஏழைகளுக்கு கல்வியை மறுத்துள்ளது என குரல் கொடுத்தார்.ம.க.இ.க தோழர் ராஜா பேசும் போது, விலைவாசி உயர்வின் தாக்கம் பெண்களை அதிகளவில் தாக்குவதும், அதற்கெதிரான போராட்டம் கட்டியமைக்க வேண்டியுள்ளதையும்,
இன்று காவல்துறையின் பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் பாதிக்கப்படுவதற்க்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை என்பதையும், இன்று அம்பலமாகி சந்தி சிரிக்கும் சாமியார்களின் அயோக்கியத்தனத்தையும் சாடினார்.

மேலும் இன்று மறுகாலனிய தாக்குதலால் விலைவாசி,வேலையிழப்பு, விவசாயம் நசிவு போன்ற கொடுந்தாக்கத்தை மக்கள் சந்திக்கும் வேளையில், பழங்குடி மக்களின் போராட்டம் மண்னைக்காக்க போர்க் குணத்துடன் நடப்பதை படிப்பினையாக எடுத்து நாமும் போராட வேண்டும், பெண்களின் உரிமைக்கான போராட்ட தினமே இது என்றார்.

பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர். பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது பங்கேற்றனர். மையக்கலைக்குழு தோழர்களின் துயரம் பருப்பு நாடகம்,பாடல்கள் கூடிநின்ற மக்களுக்கு உணர்வூட்டியது.

_______________________________

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி
_______________________________

 1. உழைக்கும் மகளிர் தினத்தை மகளிர் தினமாக பெருமுதலாளிகள் மாற்றி வருகிறார்கள். நகைக்கடையில் தள்ளுபடி துவங்கி… பலவற்றிலும் தொடர்கிறார்கள்.
  போராட்டத்தினமாக மாற்றியதற்கு வாழ்த்துக்கள்.
  படத்தைப் பார்த்ததும்… ஒரு பெரிய சந்தோசம். கொளுத்தும் வெயிலை சமாளிக்க சாமியானா பந்தல் போட்டு…ஆர்ப்பாட்டம். நல்ல முன்னேற்றம். பார்க்க குளிர்ச்சியாய இருக்கிறது.

  இதற்கு முன்… எத்தனை ஆர்ப்பாட்டங்கள் எவ்வளவு வெயில். எவ்வளவு கிறுகிறுப்பு.

 2. மடத்துக்கு கூட்டம் கூட்டமா போறாங்க ஆனா உணர்வுள்ள போராட்டத்திற்கு வர தயங்குரான்களே.

 3. பூ,பொட்டு,தோடு  -ஆர்பாட்டம் 
  தோழர்களிடம் நிறைய குறை இருக்கிறது .இப்படிஎல்லாம் ஆர்பாட்டம்  பண்ணினால் புரட்சி உருவாகாது.time waste

  • நண்பரே தயவுசெய்து அடுத்த மகளிர் தின கூட்டத்திற்க்கு பிறந்ததிலிருந்து பூ வைக்காத,பொட்டு வைக்காத,தோடு மாட்டாத பெண்களை ஒரு 100 பேரை அனுப்பி வைக்கவும்.

  • பூ வெய்பதில் என்ன தவறு? வாசனை திரவியம் அடித்தல் மட்டும் சரியோ?
   அவர்கள் அவர்களை அழகாக காட்டிகொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

  • தோழர் மார்ச் 30, ரெடிமேடா கம்யூனிஸ்டுங்க செய்யுற பேக்டரி அட்ரஸ குடுத்தீங்கன்னா, நாங்க அடுத்த ஆர்பாட்டத்துக்கு இப்பவோ தோழர்களை ஆடர் குட்துடுவோம் 🙂

   • முதலில் குடும்பத்தை ஒழிக்கவேண்டும் .
    கணவன் மனைவி இருவர் சேர்ந்து வாழ்வதே குடும்பம் .இவர்களுக்குள் உருவாகும் குழந்தைகளை(தோழர்களை) ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் சமூகம் வளர்க்கும் .அப்படி வளர்கிற குழந்தைகளிடம்   (தோழர்களிடம் ) ஆண் பெண் பேதம் இருக்காது .இருவரும் சமமாக மதிக்கபடுவர் .அவர்களுடைய துனையை அவர்களே தேர்ந்து எடுத்து கொள்வார்கள் .அப்படி வளர்கிறவர்கள் பின்னால் வரும் தோழர்களுக்காகவே வாழவேண்டும் .அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துகொள்வார்கள் ,சொத்து சேர்க்கும் ஆசை இருக்காது .அவர்களுக்குள் உருவான குழந்தை அவர்கள் அருகில் வளராது .எங்கோ ஒரு மாநிலத்தில் .ஏதோ ஒரு நாட்டில் வளர்க்கவேண்டும்.உங்கள் அருகில் வேறொரு குழந்தை வள்ர்கப்படும்போது,அந்த குழந்தையிடம் நீங்கள் காட்டும் உண்மையான அன்பு மிகவும் விலை மதிப்பற்றது .அப்பொழுதுதான் உண்மையான மனித சமூகம் உருவாகும் .ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் உலகை இயக்கவேண்டும் .அம்மா ,அப்பா ,மகன் ,தாத்தா,பாட்டி yellam சுயநலம். தோழர் என்பதே பொதுநலம் .  நீங்கள் தாத்தாவகவோ,பாட்டியாகவோ கடைசியா இறக்கும் போது,உங்கள் பிள்ளைகளிடத்தில் உண்மையான கண்ணீர் வெளிபடாது .பெருசு எப்படா தொலைஞ்சு போகும்னு தான் நினைபாங்க .அதே சமையம் நீங்கள் தோழராக சாகும் போது உங்கள் அருகில் இருக்கும் எங்கோ பிறந்த ,எங்கோ வளர்ந்த இன்னொரு தோழர் கண்ணீர் சிந்தும் போது.ஒவ்வருவரும் சமூக பற்றுள்ளவர்கலாகிரார்கள் .ஜாதி ,மதம் ,அதிகாரம் ,பெண் அடிமை ,kettavan ,திருடன் ,போலீஸ் ,எதிரி ,முதலாளி ,சொத்து எல்லாம் தவிடு போடி ஆகிவிடும் .அந்த காலம் விரைவில் வரும் …  

 4. // .ஜாதி ,மதம் ,அதிகாரம் ,பெண் அடிமை ,kettavan ,திருடன் ,போலீஸ் ,எதிரி ,முதலாளி ,சொத்து எல்லாம் தவிடு போடி ஆகிவிடும் .அந்த காலம் விரைவில் வரும் //

  “People are stealing everything that isn’t nailed down, and even what is,” said Natalya Gafarova, a spokeswoman for the Moscow regional railways.
  http://bit.ly/cuPvje

  வெற்றி வெற்றி !! குடும்ப ஒழிப்புக்கு வெற்றி !

  The vast majority of thieves are unemployed; others are teen-agers from poorer families, police said. And every time they reach for a wire, they’re flirting with death.…  

 5. ulaga magaleer thinathai sariyaga sirapithamaiku nanri.anaal trichy pengal seidha arpattathai otti potta notice sirappaga ellai sila college girls engal college vandhu notice koduthanar adhil vilaivasi patri podapattirundhadhu adhil pengal thinathai patri tdhu kolla mudiyavillai anaal avargal engalukku vilakkam koduthanar adhuve sirappaga erundhadhu adhaikuda noticeaga pottirukalam enbadhu en karuthu.

 6. உலக மகளீர் தின வாழ்த்துக்கள் திருச்சி பெண்கள் ஆர்ப்பாட்டம் நேரில் கண்டேன் நடன போட்டி ,கோல போட்டி நடுவே வாழ்க்கை பற்றி பேசினது சிறப்பு .நான் கல்லுரி படிக்கும் மாணவி என்னிடம் என்னுடைய வயதில் உள்ள சில மாணவிகள் பேசி நோட்டீஸ் கொடுத்தனர் அவர்கள் பேசியது அன்றிரவு என் தூக்கத்தை கலைத்தது மீண்டும் படித்தேன் நோட்டிசை அப்பெண்ணின் வார்த்தைகள் மட்டும் என் காதில் விழுந்து கொண்டிருந்தது அப்பெண்ணின் வார்த்தையே என்னை வரவழைத்தது அப்பெண் வெண்ணிலா .அவளுக்கே என் நன்றி உங்கள் போராட்ட பனி சிறக்க வாழ்த்துக்கள் குறிப்பாக மை ரோல் மாடல் வெண்ணிலாவுக்கு.

 7. பரமேஸ்வரி நான் உங்க தூக்கத்தை கலைத்த வெண்ணிலா.என்னுடைய முயற்சிகளுக்கு சிறப்பான சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளேன்.என்னுடைய இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நான் உங்களை நேரில் காண நீங்களே தொடர்பு முகவரியை தாருங்கள்.மேலும் வினவில் தொடர்ந்து இணைந்து இருங்கள்.மிக்க நன்றி

 8. மகளீர் தினத்தில் பெண்களின் தீர்க்கமான முடிவு

  myblogonly4youth.blogspot.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க