உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 4
பெண்கள் தினத்தை ஒட்டி என்னையும் கட்டுரை எழுத அழைத்திருக்கும் வினவுத் தோழர்களுக்கு என் நன்றி.
பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை போன்ற சொற்றொடர்களைச் சிறு வயதில் அறிந்த போது அவை எல்லாம் ஏதோ பெரியம்மை, ப்ளேக் நோய் போன்ற பெருவியாதிகள்; அவை இக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன; அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவே தேவையில்லாத காலத்தில் வாழ்வதாக நம்பினேன். பதின்ம வயதில் முதல் முதலாகக் கண் திறந்து என் தாயின் வாழ்க்கையையும், மாமியின் வாழ்க்கையையும் உற்றுப் பார்க்கும் வரை.
அவர்கள் என்னதான் மறுத்தாலும், தங்கள் வாழ்க்கைக்குச் சப்பைக்கட்டு கட்டினாலும், அவர்களின் ஆதர்ச கணவரான என் தந்தை என்கிற ஆலமரத்தின் நிழலில் வெளுத்துச் சாம்பிய செடிகள் என்றுதான்
தோன்றும்.
ஆண்தான் உயர்ந்தவன்; பெண் அவனுக்கு அடுத்த படிதான் என்ற நம்பிக்கை எனக்கும் அக்காவுக்கும் சிறுவயது முதலே ஊட்டப்பட்டது. வீட்டில் அப்பா, தாத்தா ஆகியோரை ‘நீங்க வாங்க’ என்று மரியாதையாகவும், அம்மா, பாட்டியை ‘நீ வா’ என்று ஒருமையிலும் விளிப்போம்.
எனக்கும் என் அண்ணனுக்கும் சின்ன வயதில் ஆகாது. சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்; போட்டியும் இருக்கும். அவனோடு போட்டியிடுவதற்கே எனக்குத் தகுதியில்லை என்று என் மண்டையில் அடிக்கப்பட்டது என் பதின்ம வயதில். “அண்ணன் சாப்பிட்டவுடன் அவன் தட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ!” என்றார் அம்மா. அப்போது அவனுடன் எனக்கு ஏதோ சண்டை. ஆம்பளை தட்டெடுக்கக் கூடாது, துடைப்பத்தை எடுக்கக்கூடாது என்று காரணம் வேறு. நான் அதைச் செய்த போது என் மனம் வெதும்பியதும் அவன் கொக்கரித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.
திருமணத்துக்குப் பின், சமைக்கத் தெரியுமா என்று கேட்ட கணவனை அசத்த வேண்டும், பாராட்டு மழையில் நனைய வேண்டும் என்று சில நாள் வரிந்து கட்டிக் கொண்டு சமைத்தேன். என்றைக்கு அது என் வேலைதான் என்று Taken for granted ஆனது என்றே புரிபடவில்லை. (திடீரென்று ஒரு நாள் தான் மூளையில் அந்த பல்பு எரிந்தது!) அதற்கப்புறம் எனக்கு அதில் முன்பிருந்த ஈடுபாடு இல்லை. (இல்லை என்பதால் லேசான குற்ற உணர்வுதான் இருக்கிறது!)
தனிப்பட்ட முறையில் யோசித்தால், இதெல்லாம் ஒரு குறையா? வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமைன்னு நாட்ல எத்தனை பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்தால் நமக்கென்ன குறை என்றும் தோன்றுகிறது.
இந்தக் குறுகிய மனப்பான்மைதான், ஒப்பிட்டுப் பார்த்துத் தன்னளவில் மட்டும் திருப்தியோ ஆதங்கமோ அடையும் மனப்பான்மையாலும்தான் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்திருந்தாலும் இன்னும் முழுச்சுதந்திரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
தோன்றுவதில் சில:
முதலாவது, பயம்; குடும்பம் சமூகம் மீதுள்ள அளவற்ற பயம். குடும்பத்தில் எல்லாரையும் அனுசரித்துப் போகவேண்டும் என்று நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. இன்னும் நம் நாட்டைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஆணை மட்டுமல்ல,அவன் குடும்பத்தையும் சேர்த்தே திருமணம் செய்து கொள்கிறாள்.
அதனால்தான்: நண்பனாக, காதலனாக இருந்த போதெல்லாம் ‘டா’ போட்டுப் பேசியவனைத் திருமணமானதும் கஷ்டப்பட்டு ‘நீங்க’ என்று பேசியாக வேண்டிய கட்டாயம், அதற்கு மறுக்கும் மறு நொடியே அவன் தன் கணவன் முகத்தைக் காட்டி “இப்போது மரியாதையில் அழைக்கச் சம்மதமா, நான் இனி உன் நண்பன் இல்லை” என்பது போல் நடந்து கொள்வதும் நடக்கிறது.
மாமனார் பூர்விக வீட்டை விட்டு வரமாட்டார் என்பதற்காக, அலுவலகத்துக்கு அருகில் வீடு மாற்றிக் கொள்ளாமல், தினமும் நான்கு மணிக்கு எழுந்து, எல்லோரும் எழுந்திருக்கும் முன் வீட்டு வேலைகளை முடித்து, சமையல் செய்து கணவனுக்குக் கட்டி வைத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்டர் பஸ்ஸிலும் ஷேர் ஆட்டோவிலும் பயணம் செய்து அலுவலகத்துக்கு வந்து தூங்கி விழும் புதுமணப்பெண்கள் இருக்கிறார்கள்.
எவ்வளவு தான் படித்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் ஜோசியம் ஜாதகம் போன்ற அழுக்குகளை விட்டொழிக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதனால்தான்: காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன், ஆண்மையற்றவன் என்று மருத்துவரீதியாகத் தெரிந்த பின்னும், ஜோசியர் அடித்துச் சொல்லி இருக்கிறார் என்ற நம்பிக்கையில், இல்லறம் ஆரம்பிக்கும், குழந்தைப் பேறுவரும் என்று ஆண்டுக்கணக்கில் கன்னித் தவம் புரிந்து கொண்டு கணவன் வீட்டுக்குச் சம்பாதித்துக் கொட்டும் ஆஃபிஸர் பெண்கள் இருக்கிறார்கள்.
ஊர் உலகம் என்ன சொல்லுமோ? குழந்தைக்குத் தகப்பன் அவன் தானே.. என்ற மறுகலால்தான்: திருமணமாகிப் பத்தே மாதங்களில் குழந்தையைப் பெற்று, அடுத்த ஆண்டிலேயே தொடர்ந்த மனக்கசப்புகளாலும் கொடுமைகளாலும் பிரிந்து சென்றாலும், இன்னொரு திருமணத்தை நினைத்தும் பார்க்க முடியாமல் எதிர்காலமே இருண்டுவிட்டதாயக் கண்ணீரில் நாட்களைக் கரைக்கும்
பேதைகள் இருக்கிறார்கள்.
கல்வி என்பது பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும் கருவியாக இருப்பதும் இன்னொரு முக்கிய காரணம்.படிப்பதும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதும் ஓரளவு தன்னம்பிக்கையைப் பெண்கள் மனதில்
விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் தன்போக்கில் தங்களுக்குப் பிடித்த வகையில் தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை.
மேலும்,
சிகப்பழகும், கருமையான நீண்ட கூந்தலும், சம்க்கி ஒர்க் வைத்த பட்டுப் புடவைகளும்தான் உங்களது அத்தியாவசியத் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்பழுக்கற்ற கிச்சன் மேடைகளும் உங்கள் கடமைகள்.
உங்களைப் பார்த்த மாத்திரத்தில் ஆண்கள் வாய் பிளப்பதும் தடுமாறிக் கீழே விழுவதும்தான் உங்கள் பெருமைகள் என்று விளம்பரங்களும், ஊடகங்களும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வந்த மிச்ச நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!
டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.
பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப்படும் விதமாக, என்னைக் கவர்ந்த பெண்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்கள்!
– தீபா
_________________________
தீபா
படிப்பு: கட்டிடப் பொறியியல்
வசிப்பது: சென்னையில் கணவர் குழந்தையுடன்
வேலை: தனியார் நிறுவனத்தில்
வலைப்பூ ஆரம்பித்த நோக்கம்: முதலில் எழுதிப் பழகத்தான். ஒத்த சிந்தனையுடைய பலரின் நட்பு கிடைத்ததும், நல்ல எழுத்துக்களை வாசிப்பதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.தீபாவின் வலைப்பூ:http://deepaneha.blogspot.com/
______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
சிகப்பழகும், கருமையான நீண்ட கூந்தலும், சம்க்கி ஒர்க் வைத்த பட்டுப் புடவைகளும்தான் உங்களது அத்தியாவசியத் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்பழுக்கற்ற கிச்சன் மேடைகளும் உங்கள் கடமைகள்.
உங்களைப் பார்த்த மாத்திரத்தில் ஆண்கள் வாய் பிளப்பதும் தடுமாறிக் கீழே விழுவதும்தான் உங்கள் பெருமைகள் என்று விளம்பரங்களும், ஊடகங்களும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வந்த மிச்ச நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!
……… sadly, true!
இடுகையின் முதல் பகுதி, இடுகைக்கு தொடர்பில்லாத, ஆனால், என் வாசிப்புக்கு தொடர்புடைய விஷயங்களை யோசிக்க வைத்தது. இடுகையின் இரண்டாவது பகுதி அலுவலகத்தில் உடன் வேலைப் பார்க்கும் தோழிகளையும், காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல் தினமும் அலுவலகத்துக்கு கிளம்பும் என் அக்காவையும் நினைவுப் படுத்தியது. சாரமான இடுகைக்கு நன்றி. தோழமையுடன் பைத்தியக்காரன்
தீபா, வழக்கம் போலவே கூர்மையான எழுத்து.
//கல்வி என்பது பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும் கருவியாக இருப்பதும் இன்னொரு முக்கிய காரணம்//
ரொம்ப சரி. படிப்பதால் மட்டும் வாழ்க்கை சமாளிக்க முடிவதில்லை. இன்னும் “life skills in education” போக வேண்டியது நிறைய தூரம். பெண்களுக்கு இன்னும் நிறைய தூரம்!
வாழ்த்துகள் தீபா. சிறப்பான எழுத்து தொடரட்டும்.
நான் கவனித்த வரையில்…எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி உற்சாகமூட்டுகிறீர்கள். உமா அவர்களுக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை டாக்டர்?
🙂
வெளிவருமுன்பே சொல்லிவிட்டதால்!
நல்ல அனுபவக் கட்டுரை தீபா வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் தீபா. தங்களின் எளிமையான அனுபவ பகிர்வை என் துணைவிக்கும் பிரிண்ட் எடுத்து செல்கிறேன்.
சிகப்பழகும், கருமையான நீண்ட கூந்தலும், சம்க்கி ஒர்க் வைத்த பட்டுப் புடவைகளும்தான் உங்களது அத்தியாவசியத் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்பழுக்கற்ற கிச்சன் மேடைகளும் உங்கள் கடமைகள்//
பொளந்து கட்டிட்டீங்க.
ஆரம்பம் இயல்பாக இருந்தாலும், பத்தியை முடித்தவிதம் நச்.
சூடான கட்டுரை.
முதலாவது, பயம்; குடும்பம் சமூகம் மீதுள்ள அளவற்ற பயம். குடும்பத்தில் எல்லாரையும் அனுசரித்துப் போகவேண்டும் என்று நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. இன்னும் நம் நாட்டைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஆணை மட்டுமல்ல,அவன் குடும்பத்தையும் சேர்த்தே திருமணம் செய்து கொள்கிறாள்.
ஊர் உலகம் என்ன சொல்லுமோ? குழந்தைக்குத் தகப்பன் அவன் தானே.. என்ற மறுகலால்தான்: திருமணமாகிப் பத்தே மாதங்களில் குழந்தையைப் பெற்று, அடுத்த ஆண்டிலேயே தொடர்ந்த மனக்கசப்புகளாலும் கொடுமைகளாலும் பிரிந்து சென்றாலும், இன்னொரு திருமணத்தை நினைத்தும் பார்க்க முடியாமல் எதிர்காலமே இருண்டுவிட்டதாயக் கண்ணீரில் நாட்களைக் கரைக்கும்பேதைகள் இருக்கிறார்கள்.
.படிப்பதும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதும் ஓரளவு தன்னம்பிக்கையைப் பெண்கள் மனதில்விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் தன்போக்கில் தங்களுக்குப் பிடித்த வகையில் தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை
.டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை…
வாழ்த்துக்கள் தீபா….நல்லபகிர்வு…
மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தீபா! தெளிவாகவும் இயல்பாகவும்…
/மாமனார் பூர்விக வீட்டை விட்டு வரமாட்டார் என்பதற்காக, அலுவலகத்துக்கு அருகில் வீடு மாற்றிக் கொள்ளாமல், தினமும் நான்கு மணிக்கு எழுந்து, எல்லோரும் எழுந்திருக்கும் முன் வீட்டு வேலைகளை முடித்து, சமையல் செய்து கணவனுக்குக் கட்டி வைத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்டர் பஸ்ஸிலும் ஷேர் ஆட்டோவிலும் பயணம் செய்து ./
எத்தனை முகங்கள் வந்து போகின்றன…என் கண்முன்!
நம்முடைய வீட்டில் இருந்து பெண்ணுரிமையை ஆரம்பிப்போம்.
ஐயா வினவு நிஜமாக பெண்ணுரிமை என்று வஸ்து அல்லது ஜந்து உயிரோடு இருக்கிறதா.நீங்கள் சொல்லுங்கள்.பெண்கள் வாரமல்லவா.இதை படித்து விட்டு சொல்லுங்கள்.சொல்ல முடியவில்லை என்றால் நான் பின்னூட்டம் போட்ட பெயருக்கு மாறி விடவும்.
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_08.html
உரிமை என்பது வஸ்துவா/ஜந்துவா .. எப்படி என புரியவில்லை அம்மா கொஞ்சம் விளக்க முடியுமா ..
மதார், உங்க பதிவ விளம்பரப்படுத்த வினவ பயன்படுத்தறீங்க சரி. உங்க பதிவு கள்ள ஓட்டு குழுக்களை பற்றிய பதிவு. அந்த முதுகு சொறியும் கழிசடை பரஸ்பர ஓட்டு கும்பலை நீங்கள் பெயர் சொல்லி அம்பலப்படுத்தியிருந்தாலாவது மெச்சியிருக்கலாம்,நீங்களோ பொதுவாக நீதி சொல்வது போல பதிவு எழுதி சொதப்பி விட்டீர்கள்.
சரி போகட்டும். உங்களோட இந்த பதிவுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன பெண்ணுரிமையை வஸ்து, ஜந்து என்ற கிண்டல்? ஏன் வினவு ஏன் பேர வினாவதேன்னு மாத்தனும்? நீங்க பெண்ணுரிமையை ஜந்து பொந்துன்னு எழுதறத பாத்தா நீங்க ஆணாதிக்க கருத்து கொண்ட பதிவர் மாதிரி தெரியுதே!!!!!!!!!!
amma
//நண்பனாக, காதலனாக இருந்த போதெல்லாம் ‘டா’ போட்டுப் பேசியவனைத் திருமணமானதும் கஷ்டப்பட்டு ‘நீங்க’ என்று பேசியாக வேண்டிய கட்டாயம்//
இந்த வார்த்தைகளைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.
என் தோழி தன் நண்பனை உங்களை போலவே திருமணம் முடித்தவள். திருமணம் முடிந்ததும்.. முன்பை போல “டா” போட்டு பேசினால்… கூட்டுக் குடும்பத்தில் முறைத்தார்கள். அதனால் அவர்களுக்குள் சிறு ஒரு உடன்பாடு.. நண்பர்கள் மத்தியில் இருக்கும் பொழுது… “டா” போட்டுக்கொள்ளலாம். குடும்பத்தார், உறவினர்கள் மத்தியில் “ங்க!” போட வேண்டும்.
தோழிக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை. உடன்பாட்டுக்கு பிறகு, குடும்பத்தினர் மத்தியில் “டா” போடுவாள். நண்பர்கள் மத்தியில் “ங்க!” போடுவாள். இரண்டு பக்கமும் திட்டு வாங்குவாள்.
குழந்தை பருவத்தில் இருந்தே பால் வேற்றுமையை மிகவும் உறுதியாக பேணி வருகிறோம்.தனி பள்ளிக்கூடம்,தனி பஸ் ,தனி ரயில் பெட்டி,தனி போலீஸ் ஸ்டேஷன்,பல்கலைகழகம்.இருபாலருக்கும் இதனால் ஒரு ஆர்வம்.குழந்தைகளின் மார்க் மேல் இருக்கும்அக்கரையில் இந்த மாதிரி விசயங்களில் கொஞ்சம் மெனக்கெட்டால் ஆண்குழந்தைகள் தவறாக நடக்கமாட்டார்கள்.தென் மாநிலங்களில் கர்நாடகம் இந்த விசயத்தில் பரவாஇல்லை..இங்கு பெண்களிடம் தவறாக நடப்பவர்கள் பெரும்பாலும் வேறு மாநிலத்தவர்கள் தான்.அதுவும் குறிப்பாக தமிழ் மற்றும் வடமாநில மென்பொருள் poriyaalargal தான்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தீபா..
( இந்த மிஸஸ் கிட்ட சொல்லு விளம்பரம் செம கடுப்பு தெரியுமா.. 🙁 இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு..)
//விதைத்தாலும், தங்கள் வாழ்க்கையைத் தன்போக்கில் தங்களுக்குப் பிடித்த வகையில் தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் பெரும்பாலான பெண்களுக்கு இன்னும் இல்லை.
மேலும்,
சிகப்பழகும், கருமையான நீண்ட கூந்தலும், சம்க்கி ஒர்க் வைத்த பட்டுப் புடவைகளும்தான் உங்களது அத்தியாவசியத் தேவைகள். மிருதுவான சப்பாத்தியும், வெள்ளை வெளேரென்ற சட்டைக் காலரும், (“மிஸஸ் கிட்ட சொல்லு பிரஷ் பண்ண…ஹி ஹி!”) அப்பழுக்கற்ற கிச்சன் மேடைகளும் உங்கள் கடமைகள்.
உங்களைப் பார்த்த மாத்திரத்தில் ஆண்கள் வாய் பிளப்பதும் தடுமாறிக் கீழே விழுவதும்தான் உங்கள் பெருமைகள் என்று விளம்பரங்களும், ஊடகங்களும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வந்த மிச்ச நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!
டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.
பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப்படும் விதமாக, என்னைக் கவர்ந்த பெண்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பெண்கள் தின வாழ்த்துக்கள்!
– தீபா//
சாரமாக பிரச்சினையை விளக்கிவிட்டது மேலேயுள்ள வரிகள். வாழ்த்துக்கள்
நான் எப்படி…என் பங்கு என்ன…என் உறவு,நட்பு……..என் வாழ்வு முறை……..நான் கடைபிடிக்கும்/பிடிக்காத, சில பல கொள்கைகள்…. என
இதற்கெல்லாம் ஒரு ஆண் போராடுவதை விட ஒரு பெண் போராட வேண்டியுள்ளது.
//உங்களைப் பார்த்த மாத்திரத்தில் ஆண்கள் வாய் பிளப்பதும் தடுமாறிக் கீழே விழுவதும்தான் உங்கள் பெருமைகள் என்று விளம்பரங்களும், ஊடகங்களும் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் போது வேலைக்குப் போய் வந்த மிச்ச நேரத்தில் இந்த டார்கெட்டுகளை அடையத்தானே உழைத்துக் கொண்டிருக்கிறோம்!
டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.
//
உண்மை தோழி வாழ்த்துக்கள்
@ அர டிக்கெட்டு .
//
மதார், உங்க பதிவ விளம்பரப்படுத்த வினவ பயன்படுத்தறீங்க சரி. உங்க பதிவு கள்ள ஓட்டு குழுக்களை பற்றிய பதிவு. அந்த முதுகு சொறியும் கழிசடை பரஸ்பர ஓட்டு கும்பலை நீங்கள் பெயர் சொல்லி அம்பலப்படுத்தியிருந்தாலாவது மெச்சியிருக்கலாம்,நீங்களோ பொதுவாக நீதி சொல்வது போல பதிவு எழுதி சொதப்பி விட்டீர்கள்.
சரி போகட்டும். உங்களோட இந்த பதிவுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன பெண்ணுரிமையை வஸ்து, ஜந்து என்ற கிண்டல்? ஏன் வினவு ஏன் பேர வினாவதேன்னு மாத்தனும்? நீங்க பெண்ணுரிமையை ஜந்து பொந்துன்னு எழுதறத பாத்தா நீங்க ஆணாதிக்க கருத்து கொண்ட பதிவர் மாதிரி தெரியுதே!!!!!!!!!!//
ஐயா இந்த பதிவையே நான் இப்போதான் பார்க்குறேன் . யாரு அந்த பின்னூட்டம் போட்டங்கன்னே தெரியல , அதுக்குள்ளே என்மேல சாடிருக்கீங்க ? போட்டவங்கள போய் கேளுங்க .
//அந்த முதுகு சொறியும் கழிசடை பரஸ்பர ஓட்டு கும்பலை நீங்கள் பெயர் சொல்லி அம்பலப்படுத்தியிருந்தாலாவது மெச்சியிருக்கலாம்,நீங்களோ பொதுவாக நீதி சொல்வது போல பதிவு எழுதி சொதப்பி விட்டீர்கள்.//
ஐயா யாரோ ஒரு பின்னூட்டத்தில் போட்ட பெயருக்கே தனிமனித தாக்குதல் கூடாதுன்னு நாலு பேரு நாலு நாளா என்ன கேள்வி கேட்டாங்க , அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ? இதுல நான் பெயர் சொல்லிவேறு பதிவு போட்ட்ருக்கணும் என்று கவலையா?
என்பதிவின் கருத்தை இங்கே சொன்ன நீங்கள் இதை என் பதிவிலேயே சொல்லிருக்கலாமே ? நாலு நாள் சண்டை இன்னும் கொஞ்ச நாள் ஓடிருக்கும் .
நல்ல பதிவு. வாழ்த்துகள்!
//டிவியை நிறுத்தி விட்டு நிறைய படிப்போம். நிதானமாக மாற்றிச் சிந்திப்போம். மீட்டெடுப்போம் நமக்கான உலகத்தை.//
நல்ல கருத்து.
[…] மேலும் 0 கருத்து | மார்ச் 13th, 2010 at 7:04 am under Blog திரட்டி […]