முகப்புகட்சிகள்காங்கிரஸ்ப. சிதம்பரத்தின் "காவி" உறவு !!

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு !!

-

ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது.

ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.

ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.

ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.

சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.

அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”

இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”

இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.

2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.

கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

__________________________________________________________

நன்றி: திரு சங்கர்ராய், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 01/05/2010

தமிழில் சித்திரகுப்தன்.

__________________________________________________________

 1. உண்மையை வெளிப்படுத்தும் கட்டுரை. இதுபோன்ற பல நல்ல கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடவேண்டும்

 2. ./// ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது//நிலையான வீடுகூட இல்லமால் இருந்த நிலம் மட்டும்தான் சொந்தம் என்று இருந்த அந்த மக்களை மண்ணின் மைந்தர்களை பெரும் முதலாளிகளின் உலோக லாப வேறிக்காக விரட்டுவதை எப்படி தடுக்கப்போகிறோம் நிம்மதி இல்லமா போச்சுப்ப

 3. சிதம்பரம், ENRON (என்றான்) நிறுவனத்தையே ஊட்டி வளர்த்தவர் இதில் வியப்பேதும் இல்லை. போபர்ஸில் மூலம் கஜானாவை நிரப்பிய சோனியா வேதாந்தாவின் பணம் உங்கள் பதிவு வரும் முன்னே சோனியாவின் மாளிகையே நிரப்ப பட்டிற்கும். முழு அதிகாரத்தையும் நம்மை கேட்காமல் செய்கிறாரே என்று ஒரு சின்ன ஆதங்கம் மட்டுமே ஏற்பட்டிற்கும் .

 4. ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பத்தி இன்னிக்குதான் வினவுக்கு தெரியுமா?

  ஹேமந்த் கார்கரேயை கொன்றவுடன் உடனடியாக ஹோம் மினிஸ்டர் ஆனபோதே தெரியாதா? மறு ஆட்சியில் அதையே தக்க வைத்தபோதுகூட தெரியாதா?

  மும்பை கலவரம் பற்றி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்….
  கோவை கலவரம் பற்றி ராஜகோபால் கமிஷன்….
  கோத்ரா ரயில் எரிப்பு பற்றி லாலுவின் இரயில்வே மினிஸ்ட்ரி விசாரணை அறிக்கை….
  குஜராத் கலவரம் பற்றி தெஹல்கா-ஆஜ்தக் விடியோ ஆதாரம்…
  இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற ராஜேந்திர சச்சார் கமிஷன் & ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள்…
  பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களை ‘துப்புதுலக்கி'(???) ‘கண்டுபிடித்த'(???) லிபர்ஹான் கமிஷன்….
  நாண்டட்/மலேகான்/அகமதாபாத்/ஹைதராபாத்/ஜெய்ப்பூர்/சம்ஜோதா ரயில்/கோவா/ குண்டுவெடிப்புகளில் ஹேமந்த் கார்கரே அறிக்கை….
  என அனைத்து அறிக்கைகள் மீதும் ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்காமல், எல்லாத்தையும் தன் ‘சீட்டுக்கு’ கீழே வைத்து மேலே ஏறி சப்புன்னு உட்கார்ந்தபோது கூட தெரியாதா?

  கர்மவீரர் கர்கரேயை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்த வைத்த முன்னாள் ஹோம் மிநிஸ்தர் சிவராஜ் பாட்டிலை கானாக்கியபோது… …
  அஞ்சாநெஞ்சன் கார்கறேயின் கொலையில் மர்மம் இருக்கிறது என்ற சீனியர் மினிஸ்டர் அந்துலேயை தொலைத்துக்கட்டியது…
  ATS தலைவர் பொறுப்பேற்ற மகாத்மா ஹேமந்த் கார்கரே தம்மால் ‘நயவஞ்சக ஆர் எஸ் எஸ் நரி’ என்று தோலுரித்துக்காட்டிய பழைய ATS தலைவர் ராகேஷ் மிஸ்ராவையே மீண்டும் அப்பதவியில் மாலேகான் விசாரணைக்கு (பூட்டுக்கு காவல் திருட்டுப்பயல்) அமர்த்தியபோது கூட தெரியாதா?

  இப்போ ரீசண்டாய் ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் ஆதாரத்துடன் அம்பலம் ஆனபோது சைலன்ட் காட்டியபோது கூட தெரியாதா?

  இத்தனை தடவை தெரிந்துகொள்ள சான்சுகள் வந்தும் ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பத்தி தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போதுதான் வினவுக்கு தெரியுமா? ஒரு நசுக்கப்பட்ட மக்களைப்பற்றியே சிந்திக்க வேண்டாம். இந்தியா பெரியது. எல்லா பக்கமும் திரும்பி பார்க்கவும்.

  • மேக்கப்ப மாத்தினாலும் கொண்டையை மறைக்கமாட்டீரா ‘பாடி சோடா’ நெத்தியடி…  இது  சங்கர்ராய், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 01/05/2010 அன்னிக்கு எழுதிய கட்டுரையோட மொழிபெயர்ப்பு.. தலைப்ப மட்டும் படிச்சிட்டு சும்மா அறிவாளிமாதிரி காமிக்க சம்பந்தமில்லாம் உளரக்கூடாது. முட்ஞ்சா வினவுல இந்துமதவெறி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தி எழுதியிருக்கும் கட்டுரையை வாசிச்சு உண்மையிலேயே அறிவ வளத்துக்க முயற்சி செய்ய உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்

   • அறிவு ஜீவி சொல்லிட்டாருப்பா.. அல்லாரும் அறிவை வளர்த்துக்க படிங்கப்பா.

    • நீங்க என்ன பண்ணுவீங்க முட்டாஊ அண்ணே, அதான் வழுக்கி விழுந்திடுச்சில்ல… அட்டே.. பக்கத்து கறிக்கடை பாய்கிட்ட சொல்லிவச்சா நல்ல மூளை கிடைக்கும் பார்சல் அனுப்பி வைக்கவா???

   • அனுப்பி வையுங்க கே.குறி தம்பி. ஆனா நீங்க மட்டும் அங்கே
    போய்டாதீங்க. உங்க பக்கத்துக்கு சீட்டு தம்பி கோவால அனுப்பி
    வையுங்க. நீங்க போனா உங்க மூளைய ஆடு மூளைன்னு அந்த பாய் கொத்திட போறாரு.

    • முட்டாஊ அண்ணே அந்த கவலையே உங்களுக்கு வேணாம்,
     உங்கள மாதிரி ஆளு கூட இத்தினி நாளா பேசிகிட்டிருக்கறதுனால எனக்கு மூளையே இல்லன்னு இங்க எல்லாரும் எப்பவோ முடிவுக்கு வந்திட்டாங்க.

 5. இந்தியாவில் எங்கேயும் அனுமதிக்காத ஸ்டெர்லைட் தாமிர ஆலை தூத்துக்குடியில் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் பெரும் எதிர்ப்பை மீறி உருவானது. அதற்கு கைமாறிய பணம் பல கோடிகள் (வேறு யாருக்கு ஆட்சியாளருக்குதான்) . அதற்கு கைமாறாக அ.தி.மு.க. தனது .M P பதவியை ப.சி.க்கு வழங்கியிருக்கலாம்.

 6. அருமையான பதிவு வாழ்த்துக்கள், இருப்பினும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக இருந்தால் நல்லது, விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதாக எனக்கு தோன்றுகிறது.

  • ஆங்கில கட்டுரையை மொழி மாற்றம் செய்யும் போது அர்த்தம் மாறுபடாமலும் நாமாக சில விபரங்களை கூடுதலாக சொல்லாமலும் இருக்கவேண்டியுள்ளத்தால் சற்று கடினமாக இருப்பது போல் தோன்றுகிறது / எனினும் வரும் கட்டுரைகளில் இன்னும் எளிமையாக்க முயற்சிக்கிறேன்

 7. கொள்ளையடிப்பதற்காகவே அதிகாரத்தில் உள்ளர்வர்கள் இதை தவிர வேறு நல்லதாக எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பணத்தை கொட்டியாவது மக்களை காப்பாற்று என்பது போய், மக்களை கொன்றாவது பணத்தை வாங்கு என்பதே இப்போது சரி என்பதாகவும் பேசப்படுகிறது, தனக்கு என்று வரும்போது தான் தெரியும் தலைவலி. பொது மக்களுக்கு உண்மையை புரிய வைக்க நாம் அதிகமாகவே சிரமப்பட வேண்டும்.

 8. சிதம்பரம் ஹார்வர்டில் சட்டம் படித்தவர்.பல ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றியவர்.ஆட்சியில் இல்லாத போது அவர் வக்கீலாக வேலை செய்வது தவறீயில்லை. தன அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று கட்டுரையில் ந-இறுபிக்கப்படவில்லை. முட்டாள்த்தனமான கட்டுரை.

  • ஹார்வார்டில் படிச்சவனெல்லாம் தப்பு செய்ய மாட்டானா?

  • வக்கீலாக வேலை செய்வது தவறில்லை,தான் வேலை பர்தவனுக்கே ,பதவிக்கு வந்தவுடன் நாட்டை எழுதிக்கொடுப்பது என்ன நியாயம்.முட்டாள் தனமா உளராம உலக நடப்ப தெரிஞ்சுக்க

  • இந்த கட்டுரை ஒரு வெட்டி எழுதி பத்து வெட்டிபயல்கள் கமெண்ட் அடிக்கறாங்க… இது ஒரு புளுகுமூட்டை கதை !!
   ப.சி kku பணம்தான் குறி, இது சங்கத்தை களங்கம் செய்யும் நோக்கமே
   ஹிந்துன்ன உங்களுக்கு அப்படி என்ன அலர்சி !!

   • ஹிந்து அதுவும் RSS பற்றி எழுதுவதென்றால் முற்போக்கு? ஆட்களுக்கு
    இனிப்பு சாப்பிடுவதுபோலிருக்குமோ? இவர்கள் என்னாதான் கூறினாலும்
    ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்த வாஜ்பாய் மீது எந்த ஊழல் புகாருமில்லை.
    ஆர்.எஸ்எஸ் எந்த பயங்கரவாதத்திலும் ஈடுபட்டதில்லை. ஆனால்
    முற்போக்கு(வயிற்றுப்போக்கோ) முத்திரை வேண்டுமென்றால் அவர்களைத் திட்டவேண்டும் போலிருக்குது.

 9. vajpayee aatchiyil voozhal nadakkavillaiyam.nalla nagaichuvai.makkalin maradhi meedhu mani avargalukku yev valavu nambikkai.kargil savappettiyai kooda vittu vaikkadhavargal avargal.podhu thurai niruvana pangugalai adimattu vilaikku thaniyarukku tharai vartha indha yokkiyargalin yokkiyadhai makkalukku nandraga theriyum.adhanaldhan congress meedhu ivargal sollum voozhal pugargal avai unmaiyaga irundhalum kooda makkalidam yedupadamal pogiradhu.ivargal mattum yokkiyama yendra mananilaiye nilavugiradhu.aduthu R.S.S.bayangara vadham pattri Goa Malegon Ajmer Hyderabad gundu vedippugalil paliyanavargalin vuravukkarargalai poi kettuparungal. solvargal.

 10. எங்க ஊரில் நடக்கும் ONE TIME SETTLEMENT பத்தி வினவு கட்டுரை எதிர் பார்க்கின்றேன் .. எப்படி பேங்க் வரா கடனை இவர்கள் வசூலித்து சுருட்டுகின்றார்கள் என்பதை ஆராயவும் ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க