முகப்புஉலகம்ஈழம்ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

-

vote-012ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் கனியும் போது உண்மை முகத்தை விரும்பியே வெளிப்படுத்துவார்கள். ஜெகத் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

சென்ற வருடம் கொடூரமான இன அழிப்புப் போர் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது இந்தப் பாதிரியால் ” இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் ” என்ற  ஸ்லோகனோடு கார்த்திக் சிதம்பரம், ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோரால் துவங்கப்பட்டதுதான் “நாம்” என்னும் அமைப்பு. ஒரு தன்னார்வ நிறுவனமாக பதியப்பட்டுள்ள இந்த நிறுவனம், எழுபதாயிரம் மக்களைக் கொன்றொழித்த கொலைகார ராஜபட்சேவுக்கும் கொலைக்குத் துணைபோன போர் வெறி இந்தியாவுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளது . நாம் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிகை இதுதான்,

“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு (தமிழில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்குமான வார்த்தை வித்தியாசத்தையும் கவனியுங்கள்)’ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம்.”

“இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், ரோட்டரி-லயன்ஸ் போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில் -வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி இலங்கை அதிபர் திரு. மகிந்த ராஜபக்சே புது டில்லி வருவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தருணம மேற் சொன்ன பரிந்துரையை இந்தியப் பிரதமர் முன்வைத்து செயல்வடிவம் பெறச் செய்திட வேண்டுகிறோம். உடனடி புனர்வாழ்வு தேவைகள் என்னவென்பதை பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன. அவற்றினடிப்படையில் உடனடிப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களாக விரிவு செய்யப்படலாம். இதற்கென மத்திய மாநில அரசுகள் ஆதார நிதியொன்றை அறிவிப்பதையும் தமிழுலகம் காலம் கருதிய நற்செயலாய் வரவேற்கும் புனர் வாழ்வு- பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளை நீதியான அரசியற் தீர்வு தான் நிரந்தர அமைதிக்கு வழி என்பதையும் வலியுறுத்துகிறோம்.”

“தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு” (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்பதுதான் ஃபாதர் போட்டிருக்கும் மெகா ப்ராஜெக்ட்… இதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என பெரிய ப்ராஜெக்டுக்காக பெரிய மனிதர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். ஆக இந்த பெரிய மனிதர்கள் யார் என்பதையும் பார்த்து விடுவோம்.

பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

அதற்கு முன்னால் இது தொடர்பாக சென்னையில் நாம் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய முன்னாள் பேராசிரியரும், புலி ஆதரவாளரும், இந்நாளில் கருணாநிதி ஆதரவாளருமான  சுப.வீரபாண்டியன் பேசும் போது “இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் உள்ளூர் அரசியலை பேசக் கூடாது” என்றார். அதாவது புலிகளை காட்டிக் கொடுத்து கழுத்தறுத்த சந்தர்ப்பவாதிகளைப் பற்றி பேசினால் எல்லாமே குழம்பி விடும் என்கிறார். மேலதிகமாக இதில் கருணாநிதி பெயர் கெட்டு விடக் கூடாது என்கிற கவலை பேராசிரியருக்கு உண்டு… ஆனால் உள்ளூர் அரசியலைப் பேசாமல் உலக அரசியலைப் பேச முடியாது என்பதாலும் மிக ஆபத்தான ஒரு ஒப்பந்தத்தை ஜெகத் துவக்கி வைப்பதாலும் மக்களிடம் இதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி எழுதுகிறோம்.

இனி ப்ராஜெட் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ள பெரிய மனிதர்களைப் பார்ப்போம்.

ஜெகத் கஸ்பர் ராஜ் ( பச்சைத் தமிழன்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். பங்குப் பாதிரியாராய் இருந்த இடத்தில் இந்து, கிறிஸ்தவர் மோதல் வெடிக்க அங்கிருந்து செழிப்பான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம்  புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். போருக்குப் பின்னர் நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி வைத்து வினவு அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

ஆனாலும் விட்ட பாடில்லை, போராளிகளின் வீரமரணங்களை நினவு கூறும் நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி கொல்லபப்ட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுதான் ஈழ மக்களுக்கு பாதிரி காட்டிய பாசத்துக்கு எடுத்துக்காட்டு. ஊரே சிரித்த சிரிப்பில் இனி இந்த கடை கல்லா கட்டாது என்பதால் ஈழ ஆதரவுக் கடையை மூடி விட்டு இப்போது நேரடியாக ராஜபக்சேவிடமே ப்ராஜெக்டுக்கு தனது டில்லி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவரது வித விதமான விஸ்வரூபங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை ஏமாற்றி இவர் செய்த “மௌனத்தின் வலி” நூலையும் அதன் அரசியல் அயோக்கியத்தனத்தையும்  வினவு அம்பலப்படுத்திய போது தவறை உணர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பாதிரியை விட்டு ஒதுங்கினார்கள். நன்றி கெட்ட நாய், வீட்டுக்காரன் மீதே பாய்கிற மாதிரி உடனே பத்திரிகையாளர்கள் மீதே பாயந்தார் இந்தப் பாதிரி…. உஷாரானவர்கள் அந்தப் பக்கம் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எல்லாப் பழியையும் பத்திரிகையாளார்கள் மீது போட்டு விட்டு வழக்கம் போல தப்பிக்கப் பார்த்தார் பாதிரி.

சசிகுமார் ( மலையாளி)

தென்னிந்தியாவில் சன் டிவிக்கு இணையான வரலாற்றைக் கொண்ட மலையாள சேனலான் ஏஷியா நெட் தொலைக்காட்சியைத் துவங்கியவர்களில் ஒருவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய என்.ஜீ.ஓ நெட்வொர்க்கைக் கொண்டவர். தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் மூலம் கிடைத்த முற்போக்கு முகமூடியை இன்று வரைத் தாங்கிக் கொண்டிருப்பவர். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பெரும் பண்ணை வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள்.

அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபட்சே கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது. சசிகுமார் இந்து ராமின் ஒர்க்கிங் பார்ட்டனர். இந்து ராம், சசிகுமார், இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பார் ஈழ மக்களுக்கான ப்ராஜக்ட்டைப் போட்டிருக்கிறார். இந்து ராமின் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் இலங்கையில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொடுக்கிறது என்பதாகவும் சொல்கிறார்கள். சசுகுமாரின் மனைவிதான் tulika என்றொரு குழந்தைகளுக்கான பதிப்பகத்தை நடத்துகிறார். கணவரைப் போல பணம் கறக்கும் தன்னார்க் குழுக்களின் பிதாமகள் என்றே இவரைச் சொல்லலாம். பார்ப்பன எலைட் பெண்களால் நடத்தப்படும் பான்யன் என்னும் அமைப்பில் சசிகுமாரின் மனைவிக்கும் பங்குண்டு. பான்யன் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ப்ராஜெக்ட்டை ஈழத்திற்கு விரிவு படுத்தும் நோக்கோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பகவான் சிங் ( தெலுங்கர்)

தமிழகத்தின் பல புலி ஆதரவாளர்கள் புலத்து மக்களின் பணத்தில் குளித்தது போலவே புலத்து மக்களால் அழைக்கப்பட்டு விருந்து வைக்கைப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 புலிகள் ஆதரவு ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங் ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்றே பேசினார். பின்னர் 2009- ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த போது சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங் சென்னை திரும்பிய பின்னர்தான் இவர் பொறுப்பேற்றிருக்கும் சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசின் ஆதரவுக் கருத்துக்கள் தொடர்ந்து வந்தன.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதை வெளியிடாமல் பதிலுக்கு சிறப்புப் பேட்டியாக கருணாவின் பேட்டியை வெளியிட்டது அப்போது அம்பலமானது. அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தர்மசங்கடமான அந்தச் சூழலில் வெளியிட்டன. பின்னர் பத்திரிகையாளர்கள் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போருக்கு எதிராகப் போராடிய பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு போரைத் தொடுத்த இலங்கை அரசின் சென்னைத் தூதர் அம்சாவிடமே போரை நிறுத்தும் படி மனுக் கொடுக்க வைத்த பகவான் சிங் இப்போது உளவாளி ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ராஜபக்சேவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

ரவிக்குமார் ( பச்சைத் தமிழர்)

இவர் தலித்துக்களின் தத்துவாசிரியன் ரேஞ்சுக்கு புகழப்பட்டார். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது பவர் புரோக்கிங், ரியல் எஸ்டேட் என வளர்ந்திருக்கிறார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறாராம், இந்த பழைய பின் நவீன – தலித் தத்துவாசியிரியர். தனது பிழைப்புவாத அரசியலுக்கு ஏற்றவாறு தான் எழுதும் ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு.

ஜூனியர் விகடனில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருக்கே இவர் போட்டுக் கொள்ளும் சலாம் வகை. என்றாலும் இங்கே கவனிக்கத் தக்கது இந்தியா வரும் திரு.ராஜபட்சேவை வலியுறுத்தி இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பைக் கோரும் ரவிக்குமார் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர் திருமாவளவன். எம்.எல்.ஏ ரவிக்குமாரோ ராஜபக்சேவிடம் கூட்டமைப்பைக் கோருகிறார். திருமாவளவனோ இனவெறியன் ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதுதான் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் உறுமல் யோக்கியதை….

ஏ.எஸ் பன்னீர் செல்வம் (பச்சைத் தமிழர்)

கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க ப்ரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவாகரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் panos south asia  என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான்.

இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும் மெகாப்ராஜெக்டில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

இனக்கொலைக்கு எதிரனவாரா? ஜெகத் கஸ்பார்?

போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு கிறிஸ்தவப்பாதிரி என்னும் போர்வையில் உலவும் ஜெகத் கூட பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா? அவர்தான் “மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபக்சேவை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று சாபம் விட்டவர் ஆயிற்றே? இவர் எப்படி சென்னையில் உள்ள இலங்கைத் தூதகரத்தோடு நெருக்கம் பேணுவார் என்று நினைக்கிறீர்கள்?

கொலைகார ராஜபக்சேவை மன்னிப்பதல்ல…. ராஜபக்சேவின் மயிரைக் கூட கர்த்தர் கழட்ட மாட்டார் என்பது தெரிந்ததனாலோ என்னவோ, இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை சென்னை மயிலை பேராயர் சின்னப்பா சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியை இலங்கைத் தூதரகத்தின் இதழாக வந்து கொண்டிருக்கும் நீரிணை இதழில் இலங்கைத் தூதரகமே பதிவு செய்திருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் அதன் கள்ளக் குட்டி பதினாறடி பாய்கிறது. பிஷப் இலங்கைத் தூதரைப் பார்தார் ஃபாதரோ ராஜபக்சேவையே பார்க்கக் கிளம்பிவிட்டார்.

ஒவ்வொரு பேரழிவுமே இவர்களுக்கு நல்வாய்ப்புதான்…

இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபட்சேவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?  நிதி ப்ராஜெக்ட், தன்னார்வக் குழுக்கள், நிவாரணப் பணிகள், இதெல்லாம் இவரது வருமானத்திற்கான ஒப்பந்தங்கள் என்பதற்கப்பால் நம்மிடம் எஞ்சியிருப்பது ஒரே ஒரு கேள்விதான்……. இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் iifa திரைப்பட விழாவிற்கு சென்று வந்த இந்தி நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் தடை? அவர்கள் துரோகிகள்… சல்மான்கானோ, ஷாருக்கானோ செய்தால் அது துரோகம். அதையே ஒரு பச்சைத் தமிழன் செய்தால் அது என்ன தமிழ் தேசிய இறையாண்மையா?

பிபாஷா பாசுவோ, ஜான் ஆப்ரஹாமோ, சல்மான்கானோ சென்றது ஒரு திரைப்பட விழாவுக்காக. ஒரு இனம் என்ற வகையில் நம்மைப் போன்ற உணர்வு ரீதியான பிணைப்போ, புரிதலோ ஈழம் குறித்து இல்லாதவர்கள். இந்த நடிகர்கள் செல்வதால் ஏற்படுவதோ கலாசார சீரழிவு மட்டும்தான். ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரியத்தைச் செய்யத் துணிந்து விட்டார்கள் பாதிரி தலைமியில் உள்ள கூட்டணியனர்.

இது iifa விழாவை விட ஆபத்தானது. மலையாளியான சசிகுமாரும், தெலுங்கரான பகவான் சிங்கும், பச்சைத் தமிழர்கள் ரவிக்குமாரும், ஜெகத்தும், பன்னீர் செல்வமும் இணைந்து செயலபடுத்தப் போகும் இந்த இந்தோ இலங்கை ப்ராஜெக்ட் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக அழிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுகள் கூட்டாக தயாரித்துக் கொடுத்த திட்டம் என்றே தோன்றுகிறது. போருக்குப் பின்னர் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராம் என்ற ராஜபட்சே இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு அல்லக்கையை வியந்து போற்றி ஒரு போராளியாக உருவாக்கியதும் இதே ஜெகத்கஸ்பர்தான். நக்கீரன் பத்திரிகை அதற்கான பின் தளமாக இருந்தது.

யார் இந்த பத்திரிகையாளர் பாண்டியன்?

இலங்கை என்று ‘கேணல்’ ராமைச் சந்தித்து நக்கீரனில் செய்தியாக வந்த இவர் யார்? திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா இந்து வெறியனுக்காக தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். நகைமுகனைப் பற்றி எல்லா தமிழக இயக்கங்களுக்குமே தெரியும். இப்போது நகைமுகன், அர்ஜூன் சம்பத், பாண்டியன், பாலகுரு, என புதுக்கூட்டணி. ஒரு காலத்தில் வாடகை கொடுக்கக் கூட வழியில்லாத  இந்த பாண்டியன் நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து நக்கீரன் இதழில் முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுக்கிறார். பிரமாண்ட செலவில் பாலகுரு பல கூட்டங்களை நடத்துகிறார். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பார் ராஜ்.

ஈழ மக்களின் இன்றைய தேவை

புலிகளின் போராட்ட வழிமுறையும் புலிகளின் அரசியலுமே அவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. மக்களை பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தி மக்களை நம்பாத புலிகள் இந்திய, மேற்குலக அரசுகளையும் தமிழக புலி ஆதரவாளர்களையுமே நம்பியிருந்தனர். தமிழக மக்களின் ஆதரவையோ, ஈழ மக்களின் ஆதரவையோ ஒருங்கிணைத்து பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தை கட்டியமைக்காத புலிகள் இப்போது தாமும் அழிந்து மக்களையும் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

நிலம், உயிர், என எல்லாவற்றையும் இழந்து சுவாசிப்பதற்குக் கூட திராணியற்று பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு ஈழ மக்கள் ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஈழ ஆதரவாளர்களைக்  கண்டு கொள்ளாத புலிகள், உளவாளிகளோடுதான் எப்போதும் உறவு கொண்டிருக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது.  பெரும் அவலச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஈழ மக்களின் இன்றைய தேவை அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்திய பெரு நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளுக்காக இலங்கை திறந்து விடப்பட்டுள்ளது. மன்னாரின் எண்ணைய் வளமும், திருகோணமலைத் துறைமுகமும், வடக்குக் கிழக்கின் பல்லுயிர்ச் சூழலும் தனியார் நிறுவனங்களில் கழுகுக் கணகளில் பட்டு அபகரிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்திய கட்டுமான நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இது வரை நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை அரசோடு செய்து முடித்து விட்டன.

முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது என்பதுதான் ராஜபக்சே சொல்லும் செய்தி….. ஆமாம் கை, கால்கள் இழந்து மௌனிகளாக்கப்ப்ட்டுவிட்ட மக்களின் கல்லறைகளின் மீது கட்டிடம் கட்ட படையெடுக்கக் காத்திருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்….. அரசியல் ரீதியாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்து இனி எப்போதும் அரசியல் ரீதியாக ஈழ மக்களை எழும்ப விடாமல் அடித்துப் புதை குழியில் தள்ள கூடவே படையெடுக்கிறது தன்னார்வ நிறுவனங்கள்.

மறுக்கப்பட்ட சிவில் உரிமைகளை நாங்களே வழங்குவோம் என்று சொல்கிற தன்னார்வக் குழுக்கள் புதிதாக சொல்கிற வார்த்தை ” மீள் கட்டுமானம்” ஆமாம்  இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்கா கட்டமைத்த பயங்கரவாத கதையாடலோடு துவங்கிய ஈராக், ஆப்கான் யுத்தத்தின் பின்னர் அவர்கள் அடுத்து சொன்னதுதான் இந்த ”மீள்கட்டுமானம்”.

முதலில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தார்கள். பின்னர் மீள்கட்டுமானம் என்று அழித்ததை மீண்டும் கட்டுகிறார்கள். அழிப்பின் போது ஆயுத வியாபாரம்… மீளக்கட்டும் போது ஒட்டு மொத்த இடங்களையுமே கைப்பற்றிக் கொள்வது………ஆக ஒவ்வொரு பேரழிவும் ஒரு நல் வாய்ப்பாக இவர்களுக்கு வாய்த்து விடுகிறது… பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஜெகத் கஸ்பருக்கும்தான்……..

பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கான சொர்க்கம் இலங்கை என்று சொல்லியே உலக நாடுகளை ஏமாற்றி பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தது இலங்கை.

நிவாரணம் உள்ளிட்ட மக்களின் சிவில் சமூக உரிமைகளை தன்னார்வக் குழுக்கள் வழங்கினால் இனி எப்போதும் அவர்களால் மீளவே முடியாது. மாறாக அவர்களிடமிருந்து பறிக்கபப்ட்ட நிலங்களை அவர்களிடம் மீள ஒப்படைப்பதும் உழைப்பிற்கான உத்திரவாதத்தை வழங்குவதோடு சிவில் உரிமைகளைப் முழுமையாக வழங்கி, இராணுவக் கண்காணிப்பை நீக்கினாலே தங்களுக்கான மீள் கட்டுமானத்தை சில ஆண்டுகளில் அவர்கள் செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் விவசாயிகள், மீனவர்கள், இன்னபிற உழைக்கும் மக்கள்.

சாம்பலில் இருந்து மீண்டெழுவதை அவர்களுக்கு ஜெகத் கும்பல் மட்டுமல்ல வேறெந்த தன்னார்வக குழுக்களும்  கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக பாதிரி தலைமையில் அணிவகுத்திருக்கும் இந்தக் கும்பல் ஈழமக்களை அரசியல் ரீதியில் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே பாதிரி கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!

____________________________________________

– புதூர் ராசவேல்

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. இந்த நாயை புலிகள் உள்ளே விட்டது மிகப்பெரும் தவறு.இவன் பொருக்கி திங்க ஒரு இனத்தையே கட்டிக்கொடுத்த மாமாப்பயல் இவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு.

 2. நார் நாராய் கிழித்துள்ளீர் ….வாழ்க…

  முத்துரான்

 3. இவன் முகம் அம்பலமான பிறகு வெளிப்படையாகவே இந்திய அரசின் ஏஜெண்டாக செயல்படத் துவங்கி மாதங்கள் சில உருண்டோடி விட்டன.

 4. .Tulika ஒரு பதிப்பகம்,குழந்தைகளுக்கான நூல்களையும் வெளியிடுகிறது.அதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை சரிபார்க்கவும்.
  அது சமூக அறிவியல் நூல்களை வெளியிடுகிறது.சிபிஎம் சார்பு அறிவுஜீவிகள் நடத்துவது.Panos SouthAsia போன்றவை லண்டனை தலைமையகமாகக் கொண்ட Panos அமைப்பின் உதவியுடன் நடத்தப்படுபவை.அவை ஊடக பயிற்சி பள்ளிகள் அல்ல.

  ’பார்ப்பன எலைட் பெண்களால் நடத்தப்படும் பான்யன் என்னும் அமைப்பில் சசிகுமாரின் மனைவிக்கும் பங்குண்டு. பான்யன் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ப்ராஜெக்ட்டை ஈழத்திற்கு விரிவு படுத்தும் நோக்கோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்’

  பான்யன் அமைப்பினை தொடங்கியவ்ரில் ஒருவர் வட இந்தியர்.சாதி,மத பேதமின்றி பணியாற்றுகிறார்கள்.பலரின் உதவியுடன் நடத்துகிறார்கள்.இதில் போய் பார்பன எலைட் என்று எழுதுவது உளறல்.ஏனெனில் அதை சிறிய அளவில் துவக்கியவர்கள் இரண்டு நண்பிகள், இளவயதுப் பெண்கள்.தங்கள் சொந்தக்காசில் துவக்கினார்கள்.இன்று அதை விரிவாக்கியிருக்கிறார்கள்.அதற்கு ஆதரவு பலரிடமிருந்து வருகிறது.

  NGOக்கள் தொடர்பு பலருக்கு இருக்கலாம்.அதற்காக அவர்களை குற்றவாளிகளாக்க முடியாது.அருந்ததி ராய் உட்பட பலருக்கு அத்தகைய தொடர்பு உண்டு என்பதால் அவர்களின் அரசியலும்,NGO அரசியலும் ஒன்றா.

 5. […] This post was mentioned on Twitter by வினவு, elayamathy. elayamathy said: RT @vinavu: ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE https://www.vinavu.com/2010/06/07/agent-jegath-caper/ RT Pls. […]

 6. //கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். பங்குப் பாதிரியாராய் இருந்த இடத்தில் இந்து, கிறிஸ்தவர் மோதல் வெடிக்க அங்கிருந்து செழிப்பான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம் புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். போருக்குப் பின்னர் நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி வைத்து வினவு அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

  ஆனாலும் விட்ட பாடில்லை, போராளிகளின் வீரமரணங்களை நினவு கூறும் நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி கொல்லபப்ட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுதான் ஈழ மக்களுக்கு பாதிரி காட்டிய பாசத்துக்கு எடுத்துக்காட்டு.///

  இது போல பெர்சனல் விவரங்களை வெளிப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்..

  • அசுரன், அவரு கொலைபதிவர் இல்லைன்னு ப்லேட்டை திருப்பி போடுவோம்லே
   எங்க நியாயமே தனி பாஸு
   கொலைபதிவருக்கு ஒரு நாயம் மத்தவங்களுக்கு ஒரு நாயம்.
   ஏன்னா கொலைபதிவர்னு வந்துட்டா தலையில தனியா ஒரு கொம்பு மொளைச்சுடும் இப்பவாவது புரிஞ்சுக்கங்க. இல்லன்னா உண்மை அண்ணன் வந்து கிளாஸ் எடுப்பார்

 7. ஆலமரம் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களில் சந்தேகம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்.துலிகா, பான்யன், தொடர்பில் நாம் கொடுத்த தகவல்கள் உண்மையானவை… ஆலமரம் தனது என்.ஜீ.ஓ ஆதரவு கருத்தை நிறுவ, சந்தேகத்தைக் கிளறுகிறார்…..போலிகளை அம்பலப்படுத்தியிருக்கிறோம். புரிந்து கொள்ளுங்கள்

 8. இவர் புலிகளை பற்றி கூறியதை
  ஏற்க
  முடியாது. அவர்கள் மக்க்களை பார்வையாளர்களாக மட்டும் வைத்திருந்தால் இவ்வளவு போராளிகள்
  எப்படி கிடைதிருப்பர்கள். மக்களிடம்
  இருந்துதான் போராளிகள்
  உருவாயிருப்பர்கள் .கூடவே இருந்த ஆள்காட்டி

  துரோகிகளால்

  மட்டுமே வீழ்ந்து

  விட்டார்கள்

  இதுவே

  உண்மையாக
  இருக்கும்

 9. பகவான் சிங் ஒரு மளையாளி என்பது கூட தெரியவில்லையா?ஆச்சிரியமாய் இருக்கிறதே! கட்டுரையில் மற்றவையெல்லாம் சரிதான்! தமிழன் தான் ஏமாளியாயிற்றே! மிளகாய் அரைக்க பார்க்கிறார்கள். கவனம் தேவை. 

 10. தற்போதைய செய்திகள் : 1. பாலகுரு – பாண்டியன் என்கிற இலங்கை ஏஜென்டோடு, நகைமுகன் மற்றும் புலவர் புலமைபித்தனும் ‘டூ’ விட்டு விட்டார்கள். பாலகுரு ஒரு தெலுங்கர் என்றும், அவர் அன்மையில் இராம் என்கிற இலங்கை அரசின் கைக்கூலியை சந்தித்து வந்ததும் திருந்தி விட்டதாய் சொல்கிறார்கள். இனிமேல் இவர்கள் நடத்தும் கூட்டங்களில் இவர்களை காணமுடியாது 2. நகைமுகன் தற்போது மலேசியாவில் மையமாக வைத்து தொடங்கப்பட்ட (Permanent) World Tamil Protection Secretariat என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் கூட்டம் அன்மையில் பெங்களூரில் நடைபெற்றது. நல்வழியில் இக்கூட்டம் செல்ல வாழ்த்துகிறோம். 3. பாண்டியன், தமிழகத்தில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் கைக்கூலி என பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார். அவர் சில பெயர்களையும் குறிப்பிடுகிறார் – [obscured] ….சீமான், நெடியவனிடம் பணம் பெறுகிறாராம்….. 

 11. என்ன சொல்வதென்றே தெரியவில்லை, கேவலம் தான்வாழ ஒரு இனக் கூட்டத்தையே காட்டிகொடுப்பவர்கள் மனிதர்களே இல்லை,இவர்களுக்கு இனம், மொழி, தேசம், மக்கள் என்ற எந்த பற்றும் இல்லாத ஒரு உயிர் (மிருகம் என்று சொல்லகூடாது ) இவர்களை அடியோடு ஒழிக்கவேண்டும் .

 12. நன்றி வினவு,
  இன்னும் பலரின் முகமூடிகளை கிழியுங்கள். அப்போதுதான் எம்மக்கள் இவர்களிடமிருந்து தப்ப முடியும்.

 13. ஜகத் ஆரம்பத்திலேயே தளபதி ராமின் புகழ் பாடினார் என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

 14. விடமாட்டேன்டா டேய் என்ற பெயரில் ம.க.இ.க / வினவு ஆதரவு வலைப்பதிவு போர்வையில் ஒரு உளவுப் பன்றி சுற்றி வருகிறது. தோழர்கள் கவனமாக இருக்கவும்

 15. If one can read his articles thoroughly also can clearly recognize his double agent acts. .. it doesn’t need any background analysis. Such a element he is that one can suspect him for his role in elimination of LTTEs while at their last leg.

  Seems he is another chandraasami.

 16. போனவார நக்கீரனில், ஜகத் நடேசனுக்கும் இந்திய அரசுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து புலிகளை கழுத்தறுத்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றான். ஆனால், நடந்த கொலைகளுக்கு இந்திய அரசு காரணம் இல்லை என்பது போல புளுகிறான்.

 17. எல்லாம் சரிதான் , ஏன் ஹிந்து ராமுக்கு எதிராக தமிழ்நாட்டில் எவரும் போராடதயராக இல்லை ? நான் அதற்கு தயார் ராமுக்கு எதிராக 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறேன் .தமிழ் ஆர்வலர்கள் எனக்கு அதரவாக களம் இறங்குவார்கள .

  • நாம் எதை செய்கிறோமோ இல்லையோ , முதலில் தமிழ் நாட்டு தமிழர்கள் இலங்கைகு எதிராக சாத்விக முறைஇல் போராடிய பொது எல்லாம் (தர்ணா, வூர்வலம் என்று ) அதை தீவிரவாத ஆதரவு போராட்டம் என்றும், LTTE ஆதரவு போராட்டம் என்றும் சித்தரித்த, முத்து குமாரின் மரணத்தை இருட்டுஅடிப்பு செய்த இந்த நன்றி கெட்ட நாய்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் . இந்த மண்ணின் சோற்றை தின்று விட்டு இந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்திய இந்த பத்திரிகைகளை தமிழர்களே முதலில் புறகனிங்கள்

 18. திமுக ,அதிமுக இருக்கும்வரை தமிழர்களின் உணர்வு வெளிவராது .
  கலைஞர் செய்தது தப்பு என்றபோதிலும் அவருக்கு எதிரான ஓட்டை யாருக்கு செலுத்துவது என்ற மக்களின் குழப்பம்தான் அவரை தப்புசெய்ய தூண்டியது.

 19. நான் இதை வழிமொழிகிறேன். தலித்துகளின் தலைவன் என்றும் ஈழ மக்களின் நண்பன் என்றும் நடிக்கும் திருமாவை அம்பலப்படுத்தியதற்கு நன்றி. சமீபத்தில் நான் ஒரு தலித் கிராமம சென்று இருந்தேன் அங்குள்ள இளையர்களிடம் திருமாவின் துரோகம் பற்றி பேசியபோது ” அண்ணன் எதை செய்தாலும் சரியே ” என்றார்கள் . இவ்வாறு நமக்கு தேவையான இளைஞர்களே “தனி நபர் துதி ” “அண்ணன் செய்வது சரி ” “இன்றைய அரசியல் நிலைமையை சீர் தூக்கி பார்க்க மறுப்பது ” போன்ற குணங்களை கொண்டுள்ளனர். இதில் டாக்டர் கிருஷ்ணசாமி யை காணமுடியவில்லை .

 20. இந்த கள்வனின் நயவஞ்சக எழுத்துக்களை படித்துவிட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். இவன் பிரபாகரனை பேட்டி எடுத்தபோது, இவன் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கான பிரபாகரனின் பதிலும் என்று இவன் eludhiyadhu:

  கேள்வி: தமிழ் ஈழம் எப்போது மலரும்? பிரபாகரன் பதில்: நாங்கள் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன்( அமெரிக்க, பாகிஸ்தான்?) கூட்டு சேர்ந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் எப்போதும் கூட்டு சேர மாட்டோம். நான் இறந்தபிறகு ஒரு நாற்பது ஆண்டுகள் கழித்து மலரலாம்.
  இப்போதைய சூழலில், இவன் என்ன மாதிரி செய்தி யாருக்கு அனுப்பி இருப்பான் என்று யோசிக்கும்போது, “பிரபாகரன் ஒரு நாளும் அமெரிக்கர்களின் செல்லப்பிள்ளையாக மாட்டார். வேறு எவருடனும் ஒத்துப்போகவும் மாட்டார். அவர் இருந்தால் அமெரிக்கர்களுக்கு அரசியல் லாபம் மட்டுமல்ல, பொருளாதார லாபமும் இருக்காது. ஆகவே அவரை போட்டு தள்ளுங்கள்.”

 21. அருமையான கட்டுரை .தோழர் புதூர் ராசவேல்.மிக்க நன்றி. கஸ்பர் என்ற தமிழ் துரோகி ஈழ ஆதரவு பேசும் போதெல்லாம் (1995 களில்) நான் இவன் கண்டிப்பாக அமெரிக்க ஏஜென்டாக இருப்பான் என்று நண்பர்களுக்கு கூறினேன். ஆனால் அவர்கள் ஒருவரும் என்னை நம்பவில்லை .
  திருமா , ரவிக்குமார் போன்றோரும் தமிழ் துரோகிகளே.

 22. நாம் அரச ஒடுக்குமுறையை மட்டும்தான் எதிர்த்து போராடுகிறோம் துரோகியை எதிர்த்து போராடுவதில்லை காரணம் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் இருப்பதால் தான்,நாம் அந்த மக்களிடம் இவர்களை பற்றி எடுத்துரைக்கவேண்டும் அப்போதுதான் அவர்கள் துரோகம் செய்ய முன்வரமாட்டர்கள்

 23. புலிகளின் பாசிச போக்குதான் இந்த பேரழிவுக்கு காரணம் என்ற உளறல் பேச்சினை தயவு செய்து நிறுத்துங்கள்.புலிகளின் இந்த கட்டுறுதிதான் எங்கே திரும்பினாலும் துரோகிதான் என்ற நிலையிலும் போராட்டத்தை முன்னெடுத்தது.வீழ்ந்த பின்னும் இத்தனை துரோகிகள் எனும்போது யுத்த காலத்தில் எத்தனை பேரோ? போராட்டத்தை வாயால் மட்டும்தான் சித்தாந்த ரீதியாக நடத்த முடியும்.

 24. ஒரு சில பொது அறிவு!,இந்தியா என்ற நம் நாட்டில்,காலனித்துவத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக சிலர் போராடினார்கள்?.ஆங்கிலேயர் பிராமணர்கள் அதிகம் இருந்த(இந்து ராம் போன்ற) தரகு முதலாளிகளிடம் தரவேண்டாம் என்று “ஆங்கிலேயரின் திராவிட லேகியத்தை விழுங்கி” முதலியார்கள் “வெங்காய திராவிடநாடு” கேட்டார்கள்.இதை உடைக்க ராஜாஜி,கலைஞ்சர் கருணாநிதியை துண்டிவிட்டு,”செட்டியாரே எண்ணைக் கொடு இல்லாவிட்டால் செக்கில் பேலுவேன்” அதாவது எனக்கு தனிப்பட்ட ரீதியில் சலுகை கொடு இல்லாவிட்டால் திராவிடநாடு “ஊடுகட்டுவேன்(தமிழகம் பஞ்ச்சாபாக மாறும்)” என்று பாவலா காட்டுவேன்,என்ற அரசியலை துவக்கி,பிராமணர்களை “தமிழ்,தமிழ்,என்று கூறி,மாற்றிடு செய்ய முயன்ற முதலியார்களின் கையை மடக்கினார்!.இதில் சமுக விஞ்ஞான ரீதியான் “இறையாண்மை” எங்கே?.இறையாண்மையை பாதுகாக்க ஆயுதபலம் தேவை.சுதந்திரத்திற்காக போராடிய சிலர் தற்போதைய இந்திய தேசிய இராணுவத்திடமே அதை எதிர்ப்பார்த்தனர்.அது வழங்கப்பட்டதா?.இதன் முலம் தமிழகத்தின் பாதுகாப்பு உணர்வை பெறுகிறோமா?.இதுஒரு “சர்ச்சைக்குறியது(இஷ்யு)”!.
  இது ஒரு சமுக யதார்த்தப பிரச்சனை,”ஊடுகட்டும் விளையாட்டல்ல”,மக்களின் ஞாபக மறதி மீது விளையாடுவதற்கு!.
  கலைஞ்சர் கருணாநிதி “1989 இந்திய அமைதிகாக்கும் படை சென்னை வந்தபோது” ஏன் வரவேற்க போகவில்லை?,தற்போது மட்டும் ஏன் இந்திய இராணுவ ஒத்துழைப்புக்கு அனுசரணை வழங்கினார்?- அரசியலை சினிமாத்துறைப் போல்,”மார்கெட் மற்றும் ரேட்டிங்” முறையில் அணுகுவதால்தான்!.இந்தியாவை பொறுத்தவரையில்,எந்த ஜாதியிளுல்லவர் ஒருவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும்,”ருவாண்டாவில் நடந்தமாதிரி” “உலக முதலாளிகளின் துணையுடன்”,தன்னுடைய ஜாதியையோ,”குடும்பத்தையோ” உயர்த்திக் காட்டுவதற்கான “கருத்தியலை” மேம்படுத்து (ஆராய்ச்சிக்கட்டுரைகள்),”பூர்விகக் குடிகளின்” ஆதாரங்களை அழிப்பதற்கே துணைப் போகின்றனர்.பூர்விகக் குடிகள் முன்பு சிறு,சிறு ஆயுதங்களினால் எதிர்த்தார்கள் தற்போது அதுவும் இல்லை!.தற்போதைய உலக மயமாக்களில்,தாராள மயமாக்களில்,இந்த “தரகுமுதலாளிகளின்” உதவி பெரிதாக தேவையில்லை,ஆகையால்,உலக முதலாளிகளிடம் “எண்ணை வாங்க” “செக்கில் பேலுவதே” இந்த உலக செந்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் “திராவிட பூச்சாண்டியும்”,,”போர்வேண்டாம் பொருளைத் தேடு” என்ற அதன் தொல்காப்பிய? பாடலும்!!.

 25. நான் யாழ்ப்பாணத்தில் நடுங்காலம் வாழ்ந்தவன் பின் உயிர் காக்க இந்தியா வந்தவன். இப்போது பிழைப்புக்காக மேற்கத்தேய நாடு ஒன்றில் இருக்கிறேன். நான் புலிகளுக்கு நண்பனோ எதிரியோ இல்லை, நடு நிலை நின்று சொல்கிறேன், யாழ் மக்கள் எவ்வளவு புலிகளை நேசித்தர்களோ அவ்வளவு அவர்களை வெறுக்கவும் செய்தார்கள். அதற்க்கு காரணம் அவர்களின் பாசிச போக்கு என்பது உண்மை தான். அதற்க்கு நான் பல எடுத்துகட்டுகளை முன் வைக்க முடியும். இங்கே அவர்களின் பாசிச போக்கை மட்டுமே விவரிக்றேன். அவர்களின் வீரம், கட்டமைப்பு, நெட்வொர்க்ஸ் இவை எல்லாம் மிகச் சிறப்பானவை என்பது யாவரும் அறிந்ததே அதனால் அதைப்  பற்றி இங்கே நான் எழுதவில்லை. புலிகள் யாழை ஆண்ட வரைக்கும், மக்கள் அங்கிருந்து கொழும்புக்கோ அல்லது அவர்கள் ஆட்சிக்கு உட்படாத பிரதேசத்துக்கு போக வேண்டும் என்றால் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும். இது சாதரணமாக தெரிந்தாலும், இதன் விளைவுகள் படு பாதகமாக அமைந்தன. மக்களின் வெறுப்புக்கும் ஆளாயினர். பெருந்தொகையானவர்கள் யாழை விட்டுப் போய் விடுவார்களோ என்ற பயத்தில் புலிகள் பெரும்பாலனவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் எத்தனையோ குழந்தைகள், பெண்கள் சிகிச்சைக்காகக்  கூட கொழும்பு செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். எனக்கு தெரிந்தே சில குழந்தைகள் சிகிச்சை இன்றி இறந்தது உண்மை, ஒரு வேளை இவர்கள் அனுமதித்திருந்தால் அவர்கள் கொழும்பு சென்று மருத்துவம் பெற்று தப்பி இருக்க முடியும். யாழ் எங்கள் தை நாடு தான் ஆனால் அங்கே தான் வாழ வேண்டும் அங்கே தான் சாகவும் வேண்டும் என்று கட்டாயப் படுத்த யாருக்கும் உரிமையில்லை. அது நடமாடும் சுதந்திரத்தை தடுப்பதாகவே மக்கள் சினம் கொண்டனர். பின், கொழும்பிலிருந்து யாழ் வருபவர்கள், வவுனியாவில் புலிகளுக்கு வரி கட்டியே தங்கள் பொருட்களை எடுத்து செல்ல முடியும், அநியாய வரிகள் மக்களின் மீது சுமத்தப்பட்டது உண்மை. ஒருவர் புது மோட்டார் பைக் தன்னுடைய தேவைக்கு கொழும்பில் இருந்து யாழுக்கு எடுத்து சென்றார், அவருக்கு விதிக்கப்பட்ட வரி அந்த வாகனத்தை விடவும் அதிகம் என்பதால், எவ்ளவோ வாதாடியும் எடுபடவில்லை என்பதால், தான் வாகனத்தை அந்த இடத்திலேயே தீ இட்டு கொளுத்திய சம்பவம் பத்திரிகைகளில் எல்லாம் செய்தியாய் வந்தது. 
  பின் சமாதன பேச்சு என அரசாங்கம் இழுத்தடித காலத்தில் புலிகள் தாங்கள் தமிழ் ஈழம் பெற்று விட்டது போன்றே இருந்தனர். போரை மறந்து உயர் பதவிகளில் இருந்த தளபதிகள் சொந்த வீடு கட்டுவதும், சொந்த வெலை செய்வதுமாக திரிந்தனர். இந்த சமாதான பேச்சு காலமே அரசாங்கத்தை பலப்படுத்தியதும், புலிகளின் மூர்க்கத் தனமாக போராடும் வல்லமையை சீர்குலைத்ததும் ஆகும். பின்னர் விளித்தெழுந்த புலிகள் அவசர அவசரமாக ஆட்களை கட்டாயபடுத்தி சேர்த்ததும் அரங்கேறியது (சந்தேகம் எனில் யாழ் மற்றும் வன்னி மக்களை தொடர்பு கொள்ளுங்கள்). திருமணமானவர்கள், குடும்பமாய் உள்ளவர்கள் கூட போராட வர வேண்டும் என்பது தமிழ்ச்செல்வனின் கட்டளை. ஆண்களை பிடித்து செல்வர்கள், மனைவிமாரும் தாய்மாரும் கண்ணீருடன் அவர்களை தங்களிடம் மறுபடியும் தரும் படி கெஞ்சுவார்கள். ஆண்கள் திரும்பி வருவது அரிதிலும் அரிது. சில ஆண்கள் புலிகளின் கட்டுபாட்டில் இருந்து தப்பித்து ஓடி வருவார்கள், அடுத்த சில நாட்களில் அவர்களை மறுபடியும் பிடித்து சென்றுவிடுவார்கள். தமிழ்செல்வனுக்கு பெண்கள் கொடுத்த சாபம் சொஞ்ச நெஞ்சமல்ல. அதனாலோ என்னவோ அவர் மீது வானில் இருந்து குண்டு போட்டது ஒரு பெண் விமானி அதுவும் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி. 2 குண்டு கொண்டு வந்தாளாம் ஒன்று போட்டுவிட்டு வானில் இருந்து கொழும்புக்கு செய்தி சொன்னாளாம் தமிழ்ச்செல்வன் முடிந்தார் என்று ஆனால் அதிகாரியோ எதற்கும் மாற்றத்தையும் போட்டுவிட்டு வா என்றாராம். ஆக, வலுக்கடயப் படுத்தி போராட ஆள் சேர்ப்பது, பாசிசம் இல்லையா? தலைவருக்கு பிடித்த சேகுவராவும், பிடல் காஸ்ட்ரோவும் இப்படித்தான் ஆள் சேர்த்தனரா? இப்படி வேண்டா வெறுப்போடு  இயக்கத்தில் சேர்ந்தவன் எப்படி உண்மையை உழைப்பான்? அவன் உளவு சொல்ல துணிய மாட்டனா? மூர்க்கத்தனமாக போராடுவானா? சயனைட்டு குப்பியை கடிப்பனா?. ஆக, புலிகளுக்கு முதலில் மக்கள் ஆதரவு இருந்தது, போக போக மக்கள் இயக்கமாக மாறவேண்டியது ஆனால் எதிர் திசையிலேயே பயணித்தது. அதுவே தோல்விக்கு  முக்கிய காரணம். வேறு பல காரணங்கள் உண்டு என்பது என்பதும் முடியாதது.
  எனக்கு தெரிந்த வரை இலங்கையில் உழைப்பை நம்பி வாழ்ந்த மக்கள் என்றால் அது வன்னி மக்களே. விவசாயம், விவசாயம் இது தன அவர்கள் மந்திரம். யாரிடமும் கை எந்த மாட்டார்கள், தங்கள் உழைப்பை நம்பி வாழ்ந்தார்கள். புலிகளுக்கு அவர்கள் செய்த உதவி அளப்பெரியது. கடும் சண்டைக் காலங்களில் உணவு சமைப்பதில் இருந்து, காயப்பட்டவர்களை சிகிச்சைக்கு ஏற்றிச் செல்வது போன்ற காரியங்களை மனமுவந்து செய்து வந்தனர் ஆனால் புலிகளாலும் அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அவர்களே.
  புலிகளை நம்பி அவர்கள் பின்னால் விரும்பியும், கட்டாயத்தின் பேரிலும் சென்றது வன்னி மக்கள் தான். ஒரு வேளை கஞ்சிக்கு கஷ்டபட்ட மக்களுக்கு புலிகள் எதுவும் செய்யவில்லை, அரசாங்கமும் (கட்டாயத்தின் பெயரில் தான்), தன்னார்வ தொண்டு நிறுவனமும் அனுப்பிய அரிசி பருப்பு மூட்டைகளை மக்களுக்கு கொடுக்காது, அதை மண்மூட்டை போல் அரண் அமைக்க பயன்படுத்திய கொடுமையை எங்கு சொல்வது (வன்னியில் இருந்து தப்பி அகதி முகாமில் இருந்த உறவினர் சொன்னது). 
  எது எப்படி இருப்பினும் புலிகள் மட்டுமே ஈழ விடுதலைக்குக் கடைசி வரை போர்க்களம் நின்றவர்கள். எங்கள் இளைய தலை முறையே இன்று மாவீரர்களாகி விட்டனர். கொண்ட கொள்கை மாறாதவன் எங்கள் தலைவன்.  கருணாநிதியை விட பலகோடி மடங்கு மேலானவன். கருணாநிதி எல்லாம் தமிழுலகுக்கு  தலைவனாம், என்னே வேடிக்கை!! ஈழ மக்கள் விடுதலைக்காக ஏங்கியவன், தமிழர் மானமொடு வாழ தமிழருக்கு ஒரு நாடு வேண்டும் என்று ஏங்கிய ஒரே தலைவன் எங்கள் தலைவன் தான்.    

  • ஒரு சில பொது அறிவு!,இந்தியா என்ற நம் நாட்டில்,காலனித்துவத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக சிலர் போராடினார்கள்!.ஆங்கிலேயர் நிர்வாகத்தில் பிராமணர்கள் அதிகம் இருந்ததால்(இந்து ராம் போன்ற)அந்த தரகு முதலாளிகளிடம் சுதந்திர நிர்வாகத்தை தரவேண்டாம் என்று “ஆங்கிலேயரின் திராவிட லேகியத்தை விழுங்கி” முதலியார்கள், “வெங்காய திராவிடநாடு” கேட்டார்கள்.இதை உடைக்க ராஜாஜி,கலைஞர் கருணாநிதியை துண்டிவிட்டு,”செட்டியாரே எண்ணைக் கொடு இல்லாவிட்டால் செக்கில் பேலுவேன்” அதாவது எனக்கு தனிப்பட்ட ரீதியில் சலுகை கொடு இல்லாவிட்டால் திராவிடநாடு “ஊடுகட்டுவேன்(தமிழகம் பஞ்சாபாக மாறும்)” என்று பாவலா காட்டுவேன்,என்ற, அரசியலை துவக்கி,பிராமணர்களை “தமிழ்,தமிழ்,என்று கூறி,மாற்றீடு செய்ய முயன்ற முதலியார்களின் கையை மடக்கினார்!.இதில் சமூக விஞ்ஞான ரீதியான் “இறையாண்மை” எங்கே?.இறையாண்மையை பாதுகாக்க “ஆயுதபலம்” தேவை.சுதந்திரத்திற்காக போராடிய சிலர் தற்போதைய இந்திய தேசிய இராணுவத்திடமே அதை எதிர்ப்பார்த்தனர்!.அது வழங்கப்பட்டதா?.இதன் மூலம் தமிழகத்தின் பாதுகாப்பு உணர்வை பெறுகிறோமா?.இதை குமரப்பா,புலேந்திரன் “சயனைட் கொலை” மூலம் எல்.டி.டி.யினர் “மிகச் சரியாக” கேள்விக் குள்ளாக்கினார்களா?.அல்லது வெறுமனே வடக்கத்தியான் என்ற மலிவான “இந்திய எதிர்ப்புணர்வா?”.இதுஒரு “சர்ச்சைக்குறியது(இஷ்யு)”!.
   இது ஒரு சமுக யதார்த்தப பிரச்சனை,”ஊடுகட்டும் விளையாட்டல்ல”,மக்களின் ஞாபக மறதி மீது விளையாடுவதற்கு!.
   கலைஞர் கருணாநிதி “1989 இந்திய அமைதிகாக்கும் படை சென்னை வந்தபோது” ஏன் வரவேற்க போகவில்லை?,தற்போது மட்டும் ஏன் இந்திய இராணுவ ஒத்துழைப்புக்கு அனுசரணை வழங்கினார்?- அரசியலை சினிமாத்துறைப் போல்,”மார்கெட் மற்றும் ரேட்டிங்” முறையில் அணுகுவதால்தான்!.இந்தியாவை பொறுத்தவரையில்,எந்த ஜாதியிளுல்லவர் ஒருவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும்,”ருவாண்டாவில் நடந்தமாதிரி(ருவாண்டாவில்,டுட்சிகள்தான் உயர்ந்த ஐரோப்பிய இரத்தம் கலந்தவர்கள் என்ற ஜெர்மனியின் ஆராய்ச்சி முடிவு)”, “உலக முதலாளிகளின் துணையுடன்”,தன்னுடைய ஜாதியையோ,”குடும்பத்தையோ” உயர்த்திக் காட்டுவதற்கான “கருத்தியலை” மேம்படுத்தி (ஆராய்ச்சிக்கட்டுரைகள்),”பூர்விகக் குடிகளின்” ஆதாரங்களை அழிப்பதற்கே துணைப் போகின்றனர்.பூர்விகக் குடிகள் முன்பு சிறு,சிறு ஆயுதங்களினால் எதிர்த்தார்கள் தற்போது அதுவும் இல்லை!(ஆயுத எதிப்பால்தான் இவர்கள் தலைக்கு ஆபத்து- வெங்காய தேசியத்திற்கு உசுப்பேத்தாமல் இருந்தால் இவர்கள் ஏன் அந்தப்பக்கம் போகப் போகிறார்கள்).தற்போதைய உலக மயமாக்களில்,தாராள மயமாக்களில்,இந்த “தரகுமுதலாளிகளின்” உதவி உலக முதலாளிகளுக்கு, பெரிதாக தேவையில்லை,ஆகையால்,உலக முதலாளிகளிடம் “எண்ணை வாங்க” “செக்கில் பேலுவதே” இந்த உலக செந்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் “திராவிட பூச்சாண்டியும்”,,”போர்வேண்டாம் பொருளைத் தேடு” என்ற அதன் தொல்காப்பிய? பாடலும்!!.

   • தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் சாதியை ஒழிக்க முடியாது!.சாதி ஒழிப்பு என்பது இந்திய “கன்டக்ஸ்டில்” அணுகப்பட வேண்டும்!.அமெரிக்க தலித்தியரான,”மகாராஷ்ட்ர திருமதி.கெய்ல் ஓம்வெட்”,ஜெர்மனியரான “திரு.பால் காரஸ்”,ரஷியரான “திருமதி.பலவெட்ஸ்கி”,தியோஸபிகல் சொஸைட்டியை சேர்ந்த “திரு.ஹென்ரி ஓக்குல்ட்”,ஆகியோரின் இந்திய சேவை அனைத்தும்,”இந்துத்துவத்தை மேற்கத்திய திரிபு படுத்துவதாகவோ அல்லது,மேற்கத்தியவர்கள் இந்தியாவை புரிந்துக் கொள்ள உதவியாகவோ” அமைந்திருந்தது!.இதில்,தற்போது தவறாக பயன் படுத்துவது,மேற்கத்திய “மெட்டீரியல் பணத்திற்காக” பூர்வீக குடிகளின் “இனப் படுகொலை” மூலமாக,இந்திய-இலங்கை “தரகு முதலாளிகளே!”.

    காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவ வாதியான பேராசிரியர் திரு.சுந்தரத்தின் கூற்றுப்படி,மேற்கத்திய திரிபு என்பது,”ஏலியன் ஐடியாலஜி”(யுனிவர்ஸல் அல்ல)!.இது நம் எதிரி,எதிரிகளை ஒரு கட்டத்தில் இராணுவ(இந்திதேசிய) ரீதியாகவே சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதாகும்!.
    மார்க்ஸிய வாதிகள்,மார்க்ஸியம் என்பதும் யுனிவர்ஸல் அல்ல,அது ஜெர்மனியரான பிடரிக் ஏங்கல்ஸின்,ஐரோப்பிய சிந்தனையின் அடிப்படையில் அமைந்தது என்பதை நினைவில் கொண்டால் நல்லது!.
    திரு.ஆனைமுத்து அவர்கள்,என் தகப்பனாருடன் பேசிக் கொண்டிருந்த போது,பல முறை திருச்சியிலும்,சென்னையிலும் சந்தித்திருக்கிறேன்!.அவர் இன்னமும் உற்சாகமாக பேசிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி.உடல் நலத்துடன் அவர் மேலும் வாழ வேண்டும்!.

    மறைந்த என் தகப்பனார்,அவரிடம் விவாதித்தது,திரு.ஆனைமுத்து “தான் இந்துத்துவாதி” என்பதை ஒத்துக் கொண்டார்(இந்து மதம் அல்ல,பி.ஜே.பி. என்பது,பாகிஸ்த்தான் பிரிவினையின் போது ஏற்ப்பட்ட பாதிப்புகளால் உருவான இந்துத்துவத்தின் ஒரு அங்கம் அவ்வளவுதான்)என்பதும்,ஆனால்,”மலிவான பிராமண எதிர்ப்புவாதியாக” இருந்ததைதான் என் தகப்பனார் விவாதித்தார்!.திராவிட இயக்க தலைவர்கள்? தாங்கள் “பிராமணர்களை எதிர்க்கவில்லை,பிராமணியத்தைதான் எதிர்க்கிறோம்” என்று வார்த்தை ஜாலம் காட்டுவார்கள்!.நடிகர் எஸ்.வி.சேகர். பிராமணரா?,பிராமணியரா,அல்லது பிழைப்பு வாதியா?.

    பிராமண எதிர்ப்பு என்பது மகாராஷ்ட்ரத்தில்,”ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே” போன்றவர்களால் நடத்தப்பட்டிருந்தது.இது கிரிஸ்தவ மிஷனரிகளின் வளர்ச்சிக்கே துணைப்போயிருந்தது!. திராவிட இயக்கங்கள்,பிராமணர்களை எதிர்த்தது,காலனித்துவ நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை “மாற்றீடு” செய்வதற்க்காகத்தான்!.அதனால்தான் இந்திய சுதந்திரத்திற்க்காக போராடிய “பூர்வீகக்குடிகள்” அதே முனைப்புடன்,1947 க்குப்பிறகு,திராவிட இயக்கங்களின் “சமூக நீதி கொள்கைக்காக” போராடினார்கள்!.

    “இது கலனித்துவ எதிர்ப்பே தவிர,பிராமண எதிர்ப்பு அல்ல!”.

    பிராமண எதிர்ப்பு என்பதும்,அதனுடைய “சினிமா வசனம்” என்பதும்,காலிப்பயல்கள்,மற்றும் விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆதரவுடன்,”ரியல் எஸ்டேட் மாஃபியா போல்”,மக்களை சுரண்டி,”தரகு முதலாளிகளாக” பிழைப்புவாத அரசியல் நடத்துவதற்கே!. பூர்வீக குடிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை தடுப்பதற்கோ,இறையாண்மையை? பாதுகாப்பதற்கோ அல்ல!.

    “கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்”! என்று இளைஞர்களை உசுப்பி ஏற்றிவிட்டு,செந்தமிழ்த் தலைவர்கள்,தங்களுடயதைக் கிளப்பிக் கையில் எடுத்துக் கொண்டு,இரண்டாவது பெண்டாட்டி,மூன்றவது பெண்டாட்டி என்று பொதுக் கூட்டம் முடிந்ததும் கோவணமில்லாமல் சங்கமமாகி விடுவார்கள்!.ஆனால்,”தமிழ் இளைஞர்கள்” சிங்கமென(புலி……..) “ஆயுதத்தை தூக்கி” கோவணத்துடன் “நந்திக்கடலில் சங்கமமாவது” பிராமணர்களின் குற்றமா?,அல்லது பிராமண எதிர்ப்பை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களின் குற்றமா??.— ஒரு “இனியொரு.காம் பின்னோட்டம்”.

    • …….…பிரடெரிக் ஏங்கல்ஸ் அல்ல, Georg Wilhelm Friedrich Hegel (August 27, 1770 – November 14, 1831) என்று இருக்க வேண்டும்!.

  • தாங்கள் சிலவற்றை நேரில் கண்டவரில்லை, ஆயினும் புலிகளை பாசிச வாதிகள் என்பதை ஏற்க இயலாது. அவர்கள் அவர்களின் குடும்பத்திற்காக போராடவில்லை, உனக்காகவும் தான். அனால் உன்னை போன்ற வாய்சொல் வீரர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும்போது சர்வதிகாரம் தான் விடுதலைக்கு தீர்வாக முடியும். அவர்கள் பாசிச வாதிகள் என்றால், தமிழ் செல்வன் அவர்கள் உனக்காக போராட வேண்டியதில்லை, உனக்காக உலகத்தின் கதவுகளை தட்டும் பொது நீ கொல்லைப்புறமாக வெளியேறினால் உன்னை என்ன செய்வதாம்? அவர்கள் சொகுசு பங்களாவில் வாழ வரி கேட்கவில்லை, உன்னை போன்ற பலருக்கும் சேர்த்து போராடவும் மொழி காகவும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வரி தேவை என்பதாலும் தான்.

 26. ராஜீவ் காந்தி என்ற கத்துக்குட்டி அரசியல்வாதி ஜெயவர்தன எனும் கிழ நரியின் வஞ்சபுகழ்ச்சிக்கு மயங்கியதும் கல்லூரி பருவத்தில் இந்தியர் அல்லாத பெண்ணிடம் காதலில் மயங்கியதும் தமிழர்க்கென ஒரு நாடு உருவாகாமல் தடுத்துவிட்டது.

 27. ஈழத்தில் ஒரு பழமொழி வழக்கில் உண்டு. ” சொல்லுவார் சொல்வார், கேட்பார்க்கு என்ன மதி?” என்று. நம்மை விட சற்று மாற்றுக் கருத்தையோ, அணுகுமுறையையோ கொண்டவர் எல்லாம் துரோகி என்று பட்டம் சூட்டினால் இப்போதோ விரைவிலோ நாம் எல்லாரும் துரோகிகள்தான். யாகாவார் ஆயினும் நாகாக்க – காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

 28. யாரைத்தான் நம்புவதோ இதுதான் தமிழனின் நிலையா .ஒரு மத்திய அரசாங்கம் அன்று போபால் யூனியன் கார்பைடு பீட்டர் அன்டேர்சன்ஐ தப்பிக்க வைத்தது இன்று ஒரு தேடப்படும் குற்றவாளி டௌக்லஸ் தேவானந்தாவை பிரதம மந்திரியோட கைகுலுக்க வைத்து அரசு விருந்தினராக வரவேற்கிறது தமிழக போலிசும் டெல்லி போலிசும் நீதிமன்றமும் சேர்ந்து நாடகமாடுகிறது .கண்டிப்பாக ராஜபக்ஷேவும் டௌக்லஸ் தயனந்தவும் இலங்கைக்கு சென்றவுடன் இந்தியவபற்றி பேசி பேசி சூத்தால் சிரித்திருப்பார்கள் சிங்களமக்களுடன் .நமக்கே நாக்க பிடிங்கிக்கனும்னு தோணுதே .சோனியா மன்மோகன் சிதம்பரம் கருணாநிதி பொதுநல வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி……யாருக்கும் வெட்கமில்லை .த்தூ மானகெட்ட இந்தியாவே ……..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க