Wednesday, December 4, 2024
முகப்புசெய்திபற்றி எரிகிறது காஷ்மீர் !!

பற்றி எரிகிறது காஷ்மீர் !!

-

டந்த ஒரு மாதமாக காஷ்மீரில் மக்கள் போராட்டம் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் பதினைந்து மக்கள் போலீசின் துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த அடக்குமுறை காஷ்மீருக்கு புதிதல்ல.

ஏப்ரல் 30ஆம் தேதி எல்லைக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள மச்சீல் செக்டர் எனும் பகுதியில் ஒரு வீட்டை சுற்றி வளைத்த இந்திய ராணுவம் அப்பாவி மக்கள் மூவரை சுட்டுக் கொன்றது. ஆரம்பத்தில் இவர்கள் மூவரும் பாக் தீவிரவாதிகள் என்ற கட்டுக்கதை பரப்பப்பட்டது. பின்னர்தான் இவர்கள் ரபியாபாத் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட அப்பாவிகள் என்பதும், பதவி உயர்வுக்காக ராஜ்புத் ரைஃபிள்ஸ் 4 படையின் ராணுவ மேஜர் உத்தரவின் பேரில் அவர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.

மக்கள் போராட்டத்தால் இந்த கொலை பின்னர் அரசாலேயே ஏற்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள், ஆள்காட்டிகள் எல்லாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான மேஜர் உபேந்தர் தலைமறைவாகிவிட்டார். இதன் பின்னர் ஜூன் 11ஆம் தேதி பாராமுலா, ஸ்ரீநகரில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவன் துஃபைல் கொல்லப்பட்டார்.

ஜூன் 25ஆம் தேதி சுபோரில் மீண்டும் ராணுவம் நடத்திய போலி என்கவுண்டரில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இர்ஷத் அகமத் என்ற ஒன்பது வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

இதைக் கண்டித்து ஹூரியத் மாநாடு உட்பட பல அமைப்புகள் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. இதிலும் துப்பாக்கி சூடு நடந்தது. மீர்வாஜ் உமர் ஃபாரூக் உட்பட பல ஹூரியத் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் போன்றோரை காஷ்மீர் அரசு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டததில் கைது செய்து இருக்கிறது. ஆனாலும் மக்கள் போராட்டம் நிற்கவில்லை.

போராட்டம் வீச்சாக நடைபெறுவதைக் கண்டு அஞ்சிய அரசு கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவை பல பகுதிகளில் அறிவித்து அடக்கி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு உத்திரவை மீறி மக்கள் தெருக்களில் இறங்கி துணிச்சலுடன் போராடிவருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் போலீசின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு 70பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இப்போது போலீசுக்கு துணையாக இராணுவத்தை இறக்கவும் அரசு முனைந்திருக்கிறது. காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும், மத்திய உள்துறை அமைச்சரும் இந்த போராட்டங்கள் பாக் ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் தூண்டிவிடப்படுவதாக கூசாமல் புளுகி வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயரை மயிர் போல அலட்சியப்படுத்துவதற்காக இப்படி திசை திருப்ப முயல்கின்றனர்.

ஐந்து இலட்சம் இராணுவத்தினர், பல்லாயிரம் மத்திய துணை இராணுவ போலீசார்.. என காஷ்மீர் முழுவதும் இந்திய அரசின் பயங்கரவாத இராணுவம்தான் கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இதை அறுவடை செய்ய நினைக்கும் பாக் அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த பகடையாட்டத்தை புறந்தள்ளி காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு பத்தாண்டுகளாக காஷ்மீரின் இளைய சமுதாயம் இந்த போராட்டத்தினூடாகவே வளர்ந்து வருகிறது. “இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற முழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் பலியான உடல்களைக் கண்டு மக்கள் அஞ்சவில்லை. உடல்களை ஆயுதமாக்கி அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகின்றனர். ஆப்பசைத்த குரங்காய் இந்திய இராணுவம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது.

இருபது, முப்பது  ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் துப்பாக்கி நிழலில்தான் காஷ்மீர் மக்கள் வதைபட்டு வாழ்கின்றனர். துப்பாக்கியின் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வாழும் அவர்களது அன்றாட வாழ்க்கை சொல்லணாத் துயரம் கொண்டது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ஆயிரத்தெட்டு சோதனைச் சாவடிகள், விசாரணைகள் என்று தினமும் அரசு பயங்கரவாதத்தின் ஆட்சியில்தான் காலம் தள்ளி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிறகும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவை போல அந்த போராட்டம் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது.
துணைக்கண்டத்தில் மிகப்பெரிய இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு காஷ்மீர் மக்கள் நடத்தும் இந்த போராட்டம் ஒரு காவியம் போல காலத்தை வென்று வருகிறது.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம். இந்திய இராணுவத்தை வெளியேற்ற தோள் கொடுப்போம்.


 

  1. காஷ்மீரின் வரலாற்றை அறிந்துகொள்ள மேலே தொடர்புடைய பதிவுகிள் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் சசியின் பதிவை அவசியம் படிக்கவும்
    http://blog.tamilsasi.com/2006/10/blog-post.html

  2. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம். இந்திய இராணுவத்தை வெளியேற்ற தோள் கொடுப்போம்.//////
    Repeat..Repeat

  3. உண்மையான பதிவு வினவு ………..காஷ்மீர் இந்திய தேசியம் என்று உணர்சிகளை கிளப்பிவிட்டு
    வாக்கு கட்சிகள் , இதற்கு என்ன சொல்கின்றனர் ………??????

  4. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி.அதிலிருந்து சுதந்திர நாடாக காஷ்மீரை பிரிக்க முடியும் என்பது பகல் கனவு.இன்று உலக நாடுகளிடையே சுதந்திர காஷ்மீர் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் தவிர எந்த நாடாவது மதிக்கிறதா.ஐரோப்பாவும்,அமெரிக்காவும் அதில் தலையிடா. எனவே இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி மாநில அரசுக்கு அதிக அதிகாரங்களை பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமான செயல்.அதை நோக்கில் சில இயக்கங்கள் விரைவில் நகரும்.வினவின் விருப்பம் நிறைவேறாது.

    • காஷ்மீர் பிரச்சினையை நமது விருப்பத்திலிருந்து அணுகுவது தவறு. அது அந்த மக்களின் விருப்பம் என்பதை விட அடிப்படை வாழ்வுரிமை பற்றியது. துப்பாக்கியின் நிழலில் வாழும் அந்த மக்களது துயரை முதலில் அறியலாமே?

  5. தள வடிவமைப்பு பின்னூட்டம் இடுவதற்கு குறுகிய இடத்தை மட்டுமே அளிக்கிறது! முன்பிருந்ததே சரியாக இருந்ததே!

  6. காஷ்மீர் மக்கள் விருப்பபடி வாழ இந்திய அரசு அனுமதித்தால் ஈழ மக்களின் போராட்டம் நியாயமானதாகிவிடும், அதன் பிறகு வரும் கேள்விகளுக்கு இந்தியசொறியாண்மையால் பதில் சொல்ல முடியாது!, அதுனால முடிந்தவரை விசயம் வெளி வராமல் இருக்கவே பார்ப்பார்கள்!

    மக்கள் போராட்டம் காலத்தை வெல்லட்டும்!

  7. அவசியமான கட்டுரை. காந்தியம் பேசிக்கொண்டு இந்தியா புரியும் அழிவு வேலைகள் நீண்ட காலம் தொடர முடியாது.

  8. ///// ஐந்து இலட்சம் இராணுவத்தினர், பல்லாயிரம் மத்திய துணை இராணுவ போலீசார்.. என காஷ்மீர் முழுவதும் இந்திய அரசின் பயங்கரவாத இராணுவம்தான் கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது //////

    மிக சரியாக சொன்னீர்கள் இதுதான் நிதர்சனமான உண்மை

  9. you bullshit indian army first you get out from kashmir. thanks vinavu, and try to bring a brief history of kashmir here, because much youngster are believing their school lessons that kashmir is one of the india’s state.

  10. இந்த புதிய வடிவமைப்பு மொபைலில் படிக்கும் எனக்கு வசதியாக இருக்கிறது.நன்றி

  11. காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரத்தைப் படம் பிடித்து காட்டுகின்றது. ஆனால், வெகுஜனப் பத்திரிக்கைகளில் இது கொஞ்சம் கூட அம்பலப்படுத்தப்படவில்லை. பார்ப்பனியர் அல்லாத பத்திரிக்கைகள் கூட இது பற்றி பாராமுகமாகவே இருக்கின்றன. காஷ்மீர் மக்கள் ஒன்றுபட்டுப் போராடும் வரை அவர்களுக்கோ அவர்களின் போராட்டத்திற்கோ அழிவில்லை.

    சசியின் பதிவும் நன்றாக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையின் மூல காரணம் 1987 தேர்தல்தான் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். ராஜீவ் மற்றும் காங்கிரஸ் கும்பல்கள் பற்றிய நிறைய பதிவுகள் படித்துள்ளேன். ஏன் வினவிலேயே படித்துள்ளேன். ஆனால் இந்த விடயம் எதிலும் வெளிப்ப்படுத்தப்படவில்லை என்னும் போது அதிர்ச்சியாக உள்ளது.

  12. முன்பு இருந்த பதிவு வடிவமைப்பே நன்றாக இருந்தது. எல்லா தளங்களிலும் உள்ளது போல மொபைலுக்கு தனியாகவும், இணையத்திற்கு தனியாகவும் வடிவமைப்பு வைக்க முடியாதா ?. வினவு பதிலளிக்கவும்

    • தோழர் ஆதவன், சேலம்ஆனந்த் வினவை அலைபேசியில் வாசித்து பார்த்து சரியாக வேலை செய்கிறதா என்று சொல்ல முடியுமா?

  13. நேரு என்ற நயவஞ்சக நரியின் ஆசைக்கேற்ப்ப அபகரிக்கப் பட்டதுதான் காஸ்மீர்…! இன்றும் மற்றைய நாடுகளில் உள்ள இந்திய வரைபடத்தில் காஸ்மீர் கான்பிக்கபடுவதில்லை…இதெல்லாம் மறைத்து, இனம் ஒன்றுதான் குணம் ஒன்றுதான் நம் இந்திய ஒன்றுதான் என்று வைரமுத்து வேண்டுமானால் பாட்டேளுதலாம் மணிரத்தினம் படத்திற்கு…..உண்மை நிலை வேறு, அன்றிலிருந்து இன்று வரையில்….காஸ்மீர் மட்டுமல்ல….நாகலாந்தும் கூட நயவஞ்சக அபகரிபுகாட்படவையே….முடிந்தால் அங்கு நடக்கும் கொடூரமும் வெளியில் வர தோள் கொடுக்கலாம் தோழர்களே…தோழர்களுக்கு தெரியுமா என்ன என்று தெரியாது இருந்தாலும் பகிர்ந்து கொள்கிறேன்….இலங்கையில் நடக்கும் கொடூரத்தை விட இந்திய ராணுவம் அரகேற்றும் கொடுரம் மிக அதிகம் …குறிப்பாக கொல்கத்தாவில் தொடங்கி ஹிமாச்சலப்ரதேசம் வரையில் இவர்களின் ஆட்டம் சொல்லிலடங்காது…..ஆனால் சமாதான புறா….வல்லரசு என்று மேல்பூச்சு பூசி மொளிகிக் கொண்டிருக்கிறது இந்திய வேசி மகன்களின் அரசு…..இன்றும் இந்திய கூட்டமைப்பின் மற்றைய நாடுகளில்(மாநிலங்கள்) உள்ள பொதுமக்கள் யாரும் அவ்வளவு எளிதாக நாகலாந்திர்க்குள் செல்ல முடியாது….இரும்பு வேலி இலங்கையில் மட்டுமல்ல இந்திய கூட்டமைப்பிலும் உண்டு.

  14. மக்கள் இணைந்திருக்கும் இப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அரசின் அரசியல் சாயங்கள் வெளுக்கத் தொடங்க வேண்டும். இராணுவ அடக்கு முறைகள் முறியடிக்கப் பட வேண்டும். அனைவரும் ஆதரிப்போம்

  15. Vinavu, You have grossly misunderstood the problem and you have analysed only the symtoms and not the root cause. Kashmir msulims are continiously provoked and armed by pakistan for their vested interests. DO YOU KNOW THOUSANDS OF KASHMIRI HINDUS WERE SYSTEMATICALLY DRIVEN OUT OF KAHMIR ? And living in refugee camps in our own country. The successive governments spineless half hearted efforts have resulted in this? They want freedom and it is such a small state where even the livelihood items have to be brought from other states… Knowingly or unknowingly Vinavu you have martyered these terrorists.. And I knew very well that you are fond of GLORIFYING MUSLIM TERRORISTS ! Pl STOP THIS

    • பஞ்சாப் ரவி,
      காஷ்மீர் பிரச்சினை பற்றி வரலாற்று நோக்கில் நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. புதிய ஜனநாயகம் சார்பில் கூட ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதை படிக்குமாறு கோருகிறோம். உடனடியாக பதிவின் முடிவிலுள்ள சுட்டிகளை படித்துப் பார்க்கவும்.

      காஷ்மீர் மக்கள் அடிப்படையில் மதச்சார்பின்மை உடையவர்கள். அவர்களிடையே மதவாக இசுலாமிய இயங்கங்களை திட்டமிட்டு உருவாக்கி மதசார்பற்ற ஜம்மு காஷ்மீர் விடுதலைமுன்னணி போன்ற தேசிய விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்துவதில் இந்திய அரசின் உளவுத் துறை முக்கிய பாத்திரம் ஆற்றியது. அதே போல பாக்கிஸ்தானும் செய்திருக்கிறது. மற்றபடி காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதெல்லாம் இதன் தொடர்ச்சிதான். அதை விட அந்த மாநில மக்கள் துப்பாக்கிகளின் அடக்குமுறையில்தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள். பலநூறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

      நீங்கள் மணிரத்தினத்தின் ரோஜா படத்தை மனதில் வைத்து காஷ்மீர் பிரச்சினையை அணுகினால் மிகதவறான முடிவுகளுக்குதான் வரமுடியும். உண்மையை தெரிந்து கொள்ள குறைந்த பட்சம் தொடர்புடைய இடுகைகளை படிக்கவும். அதில் தமிழ் சசியின் கட்டுரை முழுமையான வரலாற்றோடு எடுத்து சொல்கிறது. நன்றி

  16. இன்னொரு ஈழமாக காட்சியளிக்கிறது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம். இந்திய இராணுவத்தை வெளியேற்ற தோள் கொடுப்போம்.

  17. This is not related to this article but related to this article’s subject and object. Yesterday a tamil fisherman killed by Srilankan Army. We should protest at least by a 48 hours strike/ bandh. I request by this message to the tamil and left movements and parties to call for a bandh to express our emotions and support tamil fishermen and ealam people.

  18. இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களை என்ன செய்ததோ அதே தான் செய்து கொண்டிருக்கிறது ” நம் ” இந்திய ராணுவம்.

    வெளிய சொன்னா வெக்க கேடு

  19. முண்டம் வினவு,
    பற்றி எறிகிறதென்றால் போய் அணைக்க வேண்டியது தானே முண்டங்களா?இங்கே எனன குப்பை கொட்டிக்கொண்டு?முண்டம் முண்டம்.

  20. அய்யா பஞ்சாப் ரவி,
    இந்திய எருமைப்பாட்டு பார்வையில் பார்த்தால் பாதுகாப்பு படை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன் கூட உமக்கு பாகிஸ்தான் தீவிரவாதியாகத்தான் தெரிவான். ”INDIAN ARMY- RAPE US” என மணிப்பூர் பெண்கள் போராடியது பங்களாதேஷ் இராணுவத்தை எதிர்த்து அல்ல, இந்திய இராணுவத்தை எதிர்த்துதான். இந்திய இராணுவம் பிடித்துக்கொண்டு போன 30,000 க்கு அதிகமான காஷ்மீர் இளைஞர்கள் இன்னும் காணாமல் போனோர்கள் பட்டியலில்தான் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். முஃஸ்லிம் பயங்கரவாதிகள் முஃஸ்லிம் பயங்கரவாதிகள் என்று கூவவேண்டாம். இப்போது காஷ்மீரில் நடப்பது இந்திய ஆட்சியாளர்களின் பயங்கரவாதம்தான்.

  21. நம் இந்திய சுதந்திர போரில் வெள்ளையன் எப்படி நம்மை மதத்தை கொண்டு சூழ்ச்சி செய்தானோ அதே வழிமுறைகளை இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்தில் கையாளுகின்றன. ஹும்….. அரசாங்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியே சிந்திக்கின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க